ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
எனது சேவையை அன்று செய்ய முடியாமல் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தினர். அதேபோல் இன்றும் அச்சுறுத்துகின்றனர் என யாழ்.அரச அதிபர் இமெல்டா ஹத்துருசிங்க தெரிவித்தார். பயங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலமாக இராணுவத்தினர் கற்றுக்கொண்ட அனுபவங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்துகொண்ட மூன்று நாள் கருத்தரங்கு நேற்றுமுன்தினம் முடிபடைந்துள்ளது. இறுதிநாள் கருத்தரங்கில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டபோதே யாழ். மாவட்ட அரச அதிபர் மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், உண்மைகளை உள்ளபடி உலகிற்கு எடுத்துக் கூறுவதால் பல பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுக்கிறேன். இப்போதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் மத்தியிலே நாள் வாழ்கிறேன். இருந்த போதிலும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பி…
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாமல் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத் தமிழ் யுவதியொருவரை மணமுடிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார் ஐதேக எம்.பி விஜயகலா மகேஸ்வரன். நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ என்றாலே வடக்கில், யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகள் அதீத அபிமானம் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் எங்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் யுவதியை மணமுடித்தால் இந்த இனப்பிரச்சினை விவகாரமும் முடிந்து விடும். தேசிய நல்லிணக்கமும் உறுதிப்படுத்தப்படும். அவ்வாறு எண்ணம் இருந்தால் சொல்லுங்கள், நான் நல்ல மணப்பெண் பார்த்துத் தருகிறேன் என்று விஜயகலா தெரிவித்துள்ளார்.அதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, நான் இப்போதைக்கு திருமணம்…
-
- 12 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்துக்கு வருகைதந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் விடைபெற்றுச் செல்லும்போது அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல் அனைவரையும் வெகுவாக உணர்ச்சிமேலிடச்செய்தது. வந்தாறுமூலையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வினை முடித்துவிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேடையில் இருந்து விடைபெற்றுச்செல்லும்போது தோல்வி நிலையென இருந்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்னும் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்டது. அவ்வேளை அவ்விடத்தில் கூடியிருந்த பலரும் உணர்ச்சி வசப்பட்டார்கள். தமிழ் இனம் தோல்வியை தழுவி, விடுதலைப்போராட்டம் சிதைக்கப்பட்டு, தமிழீழ மண்ணை பறிகொடுத்து, இன்று மற்றவர்களின் அடிமைத்தனத்திற்கும், கூட்டிக்கொடுப்பிற்கும் இரையாகிப்போயிருக்கு…
-
- 12 replies
- 903 views
-
-
உலங்கு வானூர்தியில் மன்னாரை வந்தடைந்தார் இராயப்பு ஜோசப் ஆண்டகை மன்னார் மாறைமவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இன்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று நாடு திரும்பியுள்ளார். இன்று காலை பண்டாரநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த ஆயர். அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் ஏ32 வீதியில் அமைந்துள்ள மன்னார் தள்ளாடி விமானதளத்தை வந்தடைந்தார். ஆயருடன் ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன் மற்றும் அருட்தந்தை எமில் எழில்ராஜ் ஆகியோரும் சிங்கபூரில் இருந்து வருகை தந்திருந்தனர். …
-
- 12 replies
- 1.2k views
-
-
[size=4]முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவுக்கும் இடையில் 1987 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இலங்கை - இந்திய உறவில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. த டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தோடு உள்ள பலரும் அரசியலாமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ள நிலைமையில் இலங்கை அரசாங…
-
- 12 replies
- 1.8k views
-
-
-
- 12 replies
- 1.4k views
-
-
நடந்தது இது தான் .... சம்பவம் தொடர்பான எனது வாக்கு மூலம் .. கடந்த வெள்ளிக்கிழமை, ஊடக பயிற்சி நெறிக்கு ஒன்றுக்காக கொழும்பு செல்லவேண்டும் மாலை 5.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தில் இருந்து வாகனம் வெளிக்கிடும் 5.30 மணிக்கு எல்லோரும் ஊடக அமையத்தில் நிற்குமாறு அறிவித்தல் தரப்பட்டது. அதன் படி நானும் அங்கே நின்றேன். ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும் மாலை 6.30 மணியளவில் எமது நண்பர் குழாம் 6 பேர் ஒரு வாகனத்திலும் ஏனையவர்கள் 6 பேர் மற்றுமொரு வாகனத்திலுமாக அங்கிருந்து கிளம்பினோம். எம் வாகனம் மற்றைய வாகனம் கிளம்பி 10 நிமிடங்களுக்கு பிறகே அங்கிருந்து கிளம்பியது. நாம் கச்சேரியடியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எமது வாகனத்தை இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்ததை அவதானித்தோம். அவ…
-
- 12 replies
- 1.1k views
-
-
உதயனுக்கு சர்வதேச விருது:- இலங்கையில் பெறும் முதலாவது பத்திரிகை. உதயனுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ""நில எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு'' வருடாந்தம் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளருக்கும் ஊடகங்களுக்கும் சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றே உதயனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. செய்திகளைத் தெரிவிப்பதற்கான ஊட கங்களின் உரிமைக்கும், செய்திகளை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமைக்குமாக உதயன் போராடி வருவதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவில் மொத்தம் நான்கு நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று உதயன். மற்றைய மூன்றும் பர்மா, லெபனான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்…
-
- 12 replies
- 2.6k views
-
-
தாயக விடுதலைவேட்கை கொண்ட மனிதர்கள், மகாத்மாக்கள் சிந்திய இரத்தம் இன்னமும் காயவில்லை. சுதந்திர எண்ணத்தோடு அவர்கள் நடந்து சென்ற பாதையில் காலடித்தடங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள், வெடிகுண்டுகள் உடல் கிழித்தபோது வான்முட்ட அவர்கள் போட்ட கூச்சல் இன்னமும் காதோடு நிற்கின்றது. போர் சென்று வரச்சொன்னவர்கள் அவர்களின் கல்லறைகளை கூட தொலைத்துவிட்டு நிற்கின்றோம். ஒரு நிமிடம் வெயிலில் நின்று பழகாதவர்கள், துப்பாக்கியின் கனமறியாதவர்கள், சொகுசு பங்களாவில் வாழ்ந்தவர்கள் இன்று எங்கள் மகாத்மாக்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஊமயாய், குருடராய், செவிடராய் இருந்துவிட்டு வருகின்றோம். என்னே மனிதர்கள் நாங்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா கடந்த 30வருடம் போராடினார்…
-
- 12 replies
- 1.5k views
-
-
இந்தியப் பிரதமர் சந்திப்பு விவகாரம்: மகிந்த - பிள்ளையான் முறுகல் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:42 பி.ப ஈழம்] [க.நித்தியா] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தன்னை சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீது துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையான் சீற்றமடைந்திருக்கின்றார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் தெரியவருவதாவது:- சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்றுள்ள இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்கு எப்படியும் ஏற்பாடு செய்யுமாறு துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையான், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரியிருந்தார். இதன் பிரகாரம், அரச தலைவர் மகிந்தவும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு,…
-
- 12 replies
- 2k views
-
-
பாராளுமன்ற சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முப்படைதளபதிகள் சார்பில் சவேந்திரசில்வா சபாநாயகரை கோரினார்!
-
- 12 replies
- 561 views
-
-
கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக் கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. ந…
-
- 12 replies
- 677 views
- 1 follower
-
-
கவிழ்ந்தது கூட்டமைப்பின் வலி.கிழக்கு பிரதேசசபை!! தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமுள்ள வலி.கிழக்கு பிரதேசசபையின் வரவு-செலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பிற்குள்ளாக்கப்பட்ட நிலையில் ஆதரவாக தற்போதைய தவிசாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் வாக்களித்திருந்தனர். எதிராக கூட்டமைப்பு உறுப்பினர்கள் எழுவரும் ஈபிடிபி சார்பு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜந்து உறுப்பினர்களுமாக பன்னிருவர் எதிராக வாக்களித்திருந்தனர். முன்னதாக வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையினில் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்களிப்பினை எதிர் தரப்புகளிற்கு அழைப்பிதழ் ஏதும் அனுப்பாது நடத்தியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களையடுத்து இன்று …
-
- 12 replies
- 769 views
-
-
Published By: VISHNU 04 JUN, 2024 | 08:59 PM நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர். https://www.virakesari.lk/article/185328
-
-
- 12 replies
- 962 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் மூதறிஞர் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, “தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி, அரசின் அடிவருடி, துரோகியை வெளியேற்ற வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்போது தந்தை செல்…
-
- 12 replies
- 1.4k views
-
-
புலமைப்பரிசில் பரீட்சையில் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்த இருவர்! இலங்கையில் இன்று வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி இரண்டு மாணவர்கள் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளனர். காலி சங்கமித்த கல்லூரி மாணவி சியதி சந்துன்டி கருணாதிலக என்ற மாணவியும் பிறிதொரு பாடசாலையில் கல்விகற்கும் எம்.எப்.மொஹமட் அம்மார் ஆகிய மாணவனும் இந்த சாதனையை புரிந்துள்ளனர். இதேவேளை இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு இவ்வாறு மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றுச் சாதித்திருந்தமை குறிப்ப்டத்தக்கது. https://samugammedia.com/scholarship-exam-result-two-students/
-
- 12 replies
- 1.9k views
-
-
இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார். இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்…
-
- 12 replies
- 667 views
-
-
வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி - வாசுதேவ நாணயக்கார By T. SARANYA 01 SEP, 2022 | 09:10 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்த…
-
- 12 replies
- 1.1k views
-
-
குடிவரவுத் திணைக்களத்தின் 2021 அறிக்கையின்படி, 912 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக இலங்கையில் அகதிகளாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர். அவர்களின் எண்ணிக்கை 709 ஆகும். மேலும், 113 ஆப்கானிஸ்தான் பிரஜைகள், 24 ஈரானிய பிரஜைகள், 6 பாலஸ்தீனியர்கள், 4 சூடான் பிரஜைகள், 15 யேமன் பிரஜைகள், 35 மியான்மர் பிரஜைகள் மற்றும் பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த தலா ஒருவர் என அகதிகளாக இந்நாட்டில் தங்கியிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. அகதிகள் விவகாரப் பிரிவின் மேற்பார்வையிலேயே இந்தக் குழு இலங்கையில் தங்கியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 709 பேர் இலங்கையில் அகதிகளாக தஞ்சம்! | Virakesari.…
-
- 12 replies
- 600 views
-
-
http://www.channel4.com/news/cameron-vows-to-challenge-rajapaksa-over-human-rights
-
- 12 replies
- 1.1k views
-
-
Defence Secretary Liam Fox has resigned. He has been under pressure after a week of allegations over his working relationship with friend and self-styled adviser Adam Werritty. In a letter to David Cameron, Mr Fox said he had "mistakenly allowed" his personal and professional responsibilities to become "blurred". The BBC's political editor Nick Robinson said Mr Cameron concluded Mr Fox could no longer continue. The defence secretary has faced allegations about his links to his former flatmate Adam Werritty after it emerged that the lobbyist had accompanied him on 18 foreign trips despite having no official role. Mr Fox was being investigated …
-
- 12 replies
- 1.3k views
-
-
கஞ்சாவுடன் பூசாரி கைது -செல்வநாயகம் கபிலன் இளவாலை, பனிப்புலம் பகுதியில் 2 கிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த பூசாரி ஒருவரை, நேற்றுப் புதன்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். இரவு ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற பூசாரியை விசாரித்த போது, அவர் பயத்தில் முன்னுக்கு பின் முரணானத் தகவல்களை கூறியுள்ளார். இதனையடுத்து, அவரைச் சோதனை செய்தபோது கஞ்சா மீட்கப்பட்டது. 26 வயதுடைய பூசாரியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர். இது இவ்வாறு இருக்க, அல்வாய் முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் கஞ்சாவை ம…
-
- 12 replies
- 756 views
-
-
காலை 10 மணி நிலவரம் – தேர்தல் மீறல்களின் பட்டியலில் மொட்டுக் கட்சி முதலிடம் இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாக 39 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறித்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 11 மீறல்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தலா 04 தேர்தல் மீறல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இ…
-
- 12 replies
- 1.7k views
-
-
இங்கிலாந்தில் மணப்பெண் தேடும் யாழ்ப்பாண இளவரசர்.... இண்டைக்கு இரவு 10:30க்கு BBC 3 யில் நேரடி நிகழ்ச்சி..... எல்லா பத்திரிகைகளிலும் உள்ளது... LondonPaperஇல் விலாவரியாக உள்ளது..... பின்குறிப்பு.. இந்த செய்தி... ''முக்கியத்துவம்'' கருதி ஊர் புதினத்தில் இணைக்கபட்டுள்ளது..
-
- 12 replies
- 3.7k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் ஒன்றைத் தொடுத்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர், அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர். இராணுவத்தினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொக்காவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் வானூர்திக்குப் பயன்படுத்தப்படும் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் இராணுவ வட்டாரங்கள், தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் வேறு வானூர்திகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தன. செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட சிலின் - 143 ரக வானூர்திகளையே விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர். இந்த…
-
- 12 replies
- 1.7k views
-