ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இலங்கையில் பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் அரச தலைவர் தொப்பி முசாரப் [வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2006, 14:31 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் பிரிவினைவாதத்தை பாகிஸ்தான் எதிர்ப்பதாக அந்நாட்டு அரச தலைவர் பர்வேஸ் முசாரப் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச ஊடகமான "டெய்லி நியூஸ்" நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: இலங்கையில் பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்கிறோம். சிறிலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒற்றுமையும் மதிக்கப்பட வேண்டும். சிறிலங்கா தலைவர்களது எந்த ஒரு பயணத்தையும் பாகிஸ்தான் மகிழ்வோடு வரவேற்கிறது. சிறிலங்கா நாட்டவரையும் சிறிலங்காவின் தலைவர்களையும் எமது உண்மையான நண்பர்களாக நாம் எண்ணுகிறோம். சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. மக்களால்…
-
- 12 replies
- 2.1k views
-
-
மக்கள் போராட்டங்களின் பின்னர் கரை ஒதுங்கிவரும் சடலங்களால் கொழும்பில் அச்ச நிலை ( எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக கரை ஒதுங்கும் அடையாளம் தெரியாத சடலங்களால் அச்ச நிலை உருவாகியுள்ளது. கொழும்பு நகரில் காலி முகத்திடலை மையப்படுத்தி பாரிய மக்கள் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், கடந்த ஜூலை 22 ஆம் திகதி இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து அப்போராட்டங்கள் அடக்கு முறைமை ஊடாக கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக பரவாலக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான பின்னணியில், வெள்ளவத்தை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் கரை ஒதுங்கிய சடலங்கள் தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் திகதி வெள்ளவத்தை …
-
- 12 replies
- 828 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அபிவிருத்தியில் உச்சமடைந்த மாகாணங்களாக மாற்றுவேன் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் இன மத பேதம் இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் வாழும் அமைப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் புங்காவில் இடம்பெற்றபோதே அவர் இததைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் ப…
-
- 12 replies
- 1.6k views
-
-
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்! ஆங்கிலநாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தேன். கடந்த வார இறுதியில் அது சாத்தியமாயிற்று. பிரித்தானிய தமிழ் மன்றம் (இழ்ண்ற்ண்ள்ட் பஹம்ண்ப் எர்ழ்ன்ம்) வெளிக்கொணர்ந்த "விடுதலைப் போராட் டத்தின் சுருக்கமான வரலாறு' ஆங்கில ஆக்கத்தை அவரிடம் கொடுத்தேன். அனைத்து பக்கங்களையும் வேகமாகப் பறவைப் பார்வையில் புரட்டியவர், "மிக நன்றாகச் செய்திருக்கிறார்களே... இதுபோன்ற ஆக்கங்களை முன்பே ஏன் வெளியிடவில்லை? என் போன்ற பலருக்குப் பயன்பட்டிருக்குமே...' என்றார். என்னைப் பேசச் சொல்லி சுமார் அரை மணி நேரம் பொறுமையாகக் கேட்டார். அடிப்படையில் ச…
-
- 12 replies
- 2.9k views
-
-
ஜெனிவா மாநாட்டில் தமக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசு என்றுமில்லாதவாறு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முழுவீச்சுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், கொழும்புக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு 22 நாடுகள் அமெரிக்காவிடம் கூட்டாக இணக்கம் தெரிவித்துள்ளன என அறியமுடிகின்றது. ஜெனிவாவில் அமெரிக்கா முதல்கட்டமாக முன்னெடுத்த இராஜதந்திர நகர்வுகளில் இதுவரை 22 உறுப்பு நாடுகள் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று ஜெனிவாவில் இரண்டாம் கட்டமாக நடைபெறவிருக்கும் இராஜதந்திர சந்திப்புகளில் மேலும் பல நாடுகள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் என நம்பப்படுகின்றது. இதனால், இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட…
-
- 12 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக பிள்ளையான் குழு உறுப்பினர்கள் இருவரும் தற்கொலைதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் களுவாஞ்சிகுடியில் மட்டக்களப்பு – கல்முனை வீதியின் அற்புதப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பிள்ளையான் குழு அலுவலகத்தில் கடமையாற்றும் ரொகான்,ஜெகன் என்பவர்களே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் களுவாஞ்சிகுடியில் இருந்து கல்லாறு முகாமுக்கு சென்றுகொண்டிருந்தபோது துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் இவர்கள் மீது தற்கொலை…
-
- 12 replies
- 2.9k views
-
-
தமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது – பொ.ஐங்கரநேசன் நாடளாவிய ரீதியில் தேர்தல் முடிவுகள் ஒருபுறம் சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெற்று ராஜபக்ஷ சகோதரர்கள் அசுரப்பலம் பெற்றிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இன்னொருபுறம் தமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வீழ்ச்சி, அதில் வெற்றி பெற்றுள்ளவர்களின் விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்து நிலைப்பாடு, பேரினவாதக் கட்சிகளின் ஒத்தோடித் தமிழ்க்கட்சிகள் மற்றும் பேரினவாதக் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குப்பலம் வருங்காலத்தில் தமிழ்த் தேசியம் பன்முகத் தாக்குதலுக்கு…
-
- 12 replies
- 1.3k views
-
-
பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4ஐ முடக்க சிறீலங்கா அரசு சதி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் பிரிட்டன் தொலைக்காட்சி சனல் 4 ஒளிபரப்பிய சிறீலங்கா இராணுவத்தின் படுகொலைக் காட்சிகளின் பின்னர், அது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்துத் தொலைக்காட்சிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் நிறுவனமாக விளங்கும் 'ஆப்காம்' (OFCOM)திடம் இலங்கை பல முறையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன். எந்தக் காட்சிகளை மக்கள் பார்க்கலாம் அவை பயங்கரவாதத்தை துண்டுகின்றனவா என்பது போன்ற ஒளிபரப்புக்களை நெறிப்படுத்தும், ' ஆப்காம்' நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் நினைத்தால்…
-
- 12 replies
- 1.5k views
-
-
திஸ்ஸராமகமவில் மேலும் இரு சடலங்கள் மீட்பு [ த.இன்பன் ] - [ நவம்பர் 08, 2007 - 09:05 AM - GMT ] சிறிலங்காவின் திஸ்ஸராமகம காட்டுப்பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. ரன்மினிதென்னவிலிருந்து ஆறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒசுவின்ன காட்டுப்பகுதியிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் வீரகென பகுதியைச் சேர்ந்த அபயவர்த்தன(55) மற்றும் பத்மசிறி(54) ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தையடுத்து சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை அப்பகுதிகளில் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை தமது தேடுதல் நடவடிக்கை…
-
- 12 replies
- 2.4k views
-
-
பொய் சொல்லாதவன் என பெயர் எடுத்தவன் நான்-எம்.ஏ.சுமந்திரன் எம்.பி எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது.மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவது என்பது பலருக்கு பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில் சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயர் எடுத்தவன் நான் ஆகவே அரசியலில் …
-
- 12 replies
- 1.6k views
- 1 follower
-
-
”அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்” தமிழ் அரசியல் கட்சிகளின் இணப்பாட்டுடன் அழைப்பு விடுக்கப்படுமாயின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக பொது வேட்பாளரை நிறுத்துவது மிக சிறந்தது. அப்படியான தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றால், தானே அதற்கு பொருத்தமானவர் எனவும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற பெரிய ஆசை தனக்கு இருக்கவில்லை எனவும் ஜனாதிபதி…
-
- 12 replies
- 1.2k views
-
-
சுதந்திர தமிழீழத்தை முன்னிறுத்திய நியூ யோர்க் பொங்குதமிழ் பிரகடனம் ! சுதந்திர தமிழீழத்தை முன்னிறுத்தி நியூ யோர்க் ஐ.நா தலைமையகத்திற்கு முன்னால் வட அமெரிக்க தமிழர்களின் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை, ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் உரையாற்றிய வேளை, பொங்குதமிழர்காக எழுச்சிபூண்ட தமிழர்கள், மகிந்த ராஜபக்சவின் தமிழின அழிப்பு முகத்தை கொட்டொலிகளாலும், பதாதைகளாலும் அம்பலப்படுத்தினர். ஈழவிடுதலைப் போராட்டத்தில், மக்கள் எழுச்சியின் குறியீடாக உள்ள பொங்குதமிழ் பெருநிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. கொட்டு மழைக்கு மத்தியில் இடம்பெற்ற பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வில் அமெரிக…
-
- 12 replies
- 1.1k views
-
-
மெல்பேன் நகரில் இன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது இதில் ஏறத்தாள 700-800 வரையிலான மக்கள் பங்கு பற்றினர்.இந்த ஊர்வலத்தை அவுஸ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நகரின் இதயத்தில் இருக்கும் பெடரேசன் சதுக்க்கத்தில் இருந்து விக்ரோரியா பாராளமன்று வரை ஊர்வலமாக சென்ற மக்கள் பாராள மன்றுக்கு முன்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் பெடரேசன் சதுக்கத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.பின் அங்கு சிறப்பு உரைகள் ஆற்றப்பட்டன. இளையோர் அமைப்பினரின் தொண்டர்களால் சனக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு நகரின் வழமையான செயற்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காமலும் எமது மக்களின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டது தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழகத்தில் வெ…
-
- 12 replies
- 1.6k views
-
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் தமிழர்களின் உரிமைக்காக தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றன. சுமார் 8 ஆண்டுகளின் பின்னர் இந்த ஆண்டே மாவீரர் வாரம் தாயக மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் சுடர்விட ஆரம்பித்துள்ளது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கா லில் மௌ னித்த பின்னர் மாவீரர் நினைவேந்தல் வாரத்தை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பகிரங்கமா…
-
- 12 replies
- 2.5k views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியும்... பின்னணியில் நடப்பவையும்...? செவ்வாய்க்கிழமை, 21 டிசம்பர் 2010 19:09 இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்களா? என இந்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளை மேற்கொள்ளத்தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளால் இந்திய தலைவர்களுக்கு ஆபத்து என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் இந்தச் செய்தி வெளிவிடப்பட்டதன் உள்நோக்கத்தை மக்களுக்கு சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டதன் விளைவால் அச்செய்தி வெளியிட்டோரின் நோக்கம் நிறைவேறாமல் போகும்…
-
- 12 replies
- 1.1k views
-
-
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது adminNovember 4, 2025 பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியை சேர்ந்த தவில் வித்துவானை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , படுகொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தவில் வித்தவானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழக்கம் ஏ…
-
-
- 12 replies
- 1.2k views
-
-
இன்று காலை சில மாணவர்களால் ரொறன்ரோவிலுள்ள இலங்கை துணைதூதரகத்துக்கு முன்னால் ஆரம்பித்த போராட்டம் மிகுந்த மக்கள் ஆதரவை பெற்று ஒரு பாரிய மக்கள் போராட்டமாக வெடித்திருக்கின்றது. ரொரன்ரோ பெரும்பாகத்தில் ஏற்பாடு செய்திருந்த சிறிய அளவினாலான கவனயீர்ப்பு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரையும் தூதரகத்துக்கு முன்னால் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊடகங்களும் அங்கே வந்து செய்தி சேகரித்துக்கொண்டுள்ளனர். அனைவரும் கட்டாயம் வாருங்கள். இடம்: 40 St Clair Ave W (St Clair Ave and Young St)
-
- 12 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். புனர்வாழ்வை நிறைவு செய்துகொண்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள…
-
- 12 replies
- 2k views
-
-
ஆண்டிறுதிக்குள் பலாலியில் அன்டனோவ் இரு நாட்டு அதிகாரிகளும் நடவடிக்கைகளில் மும்முரம் இந்த ஆண்டு இறுதிக்குள் பலாலி வானூர்தித் தளத்தில் அன்டனோவ் தர வானூர்தி தரையிறங்கும். தமிழகத்தின் திருச்சி அல்லது மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து புறப்படும் வானூர்தியே முதலாவதாகத் தரையிறங்கும் என்று தெரியவருகின்றது. இதேவேளை, இந்த வானூர்திச் சேவையில் எழுந்துள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இலங்கை சிவில் வானூர்திகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான மிக முக்கிய உயர் மட்டச் சந்திப்பு நாளை வியாழக் கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. பலாலி வ…
-
- 12 replies
- 2.2k views
-
-
28 NOV, 2024 | 08:07 PM (நா.தனுஜா) இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். …
-
-
- 12 replies
- 873 views
- 1 follower
-
-
இலங்கையில் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக தனது இயக்கத்தின் 21,000 பேரை பலிகொடுத்த விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல. அவர்கள் மீதான தடையை இந்திய அரசு உடனே நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர் சீமான். இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்து சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில், விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டுஉள்ளது. 86 சதவீதம் மக்கள் அவர்களை தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர். ஆட்சியையே மக்கள்தான் தீர்மானிக்கிறார்…
-
- 12 replies
- 2k views
-
-
காணாமல்போனோர் உயிருடன் உள்ளனர் எனும் உணர்விலேயே உறவுகள் : அரசுக்கு கடப்பாடு உள்ளது என்கிறார் பிரதமர் யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும் காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர் என்ற உணர்விலேயே அவர்களது உறவினர்கள் இருந்து வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பிலும் அது குறித்து கண்டறிய வேண்டியதன் கடப்பாடு தொடர்பிலும் நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விகிதாசார தேர்தல் முறைமையில் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமுகமான அர…
-
- 12 replies
- 805 views
-
-
ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்கள் முற்கூட் டியே நடத்தும் முடிவுக்குத் தாம் வந்தமைக்கான காரணம் என்ன என்பதை நேற்று அலரிமாளிகையில் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் போன்றவற்றின் வெளியீட்டா ளர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கியிருக்கின்றார். "கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு, கிழக்கில் கணிசமான மக்கள் அதில் பங்குபற்ற விடாமல் தடுக்கப்பட் டனர் என்றும், அவர்கள் தங்களின் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய இயலாமல் போய்விட்டது என்றும் அப்போது முதல் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. அந்தக் குற்றத்தைக் களைவதற்காக எனக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் வந்தவுடன் இரண்டு ஆண்டு கள் முற்கூட்டியே மீண்டும் அத் தேர்தலை நடத்துகிறே…
-
- 12 replies
- 789 views
-
-
இலங்கை மீதான பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா வேவு - 09 ஆகஸ்ட் 2011 படைகளை தயார் நிலையில் வைக்குமாறு குணதாஸ அமரசேகர கோரிக்கை இலங்கை மீதான பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா இலங்கையை வேவு பார்ப்பதாகவும், எனவே, அரசாங்கம் படைகளுடன் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமன்றி, உள்ளூர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் இராஜதந்திரத் தொடர்புகளை அவசரமாக கையாள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிடுகின்றார். அமெரிக்காவின் பத்து போர் விமானங்கள் இலங்கை வான்பரப்பில் அத்து மீறி ஊடுருவியது தற்செயலாக இடம…
-
- 12 replies
- 1.8k views
-
-
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் காணாமல் போன பலரை அவர்களது உறவுகள் தேடியலையும் நிலையில் காணாமற் போனதாக தேடப்படும் ஒருவரை இராணுவம் படுகொலை செய்துள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவரின் தலையை துண்டித்து படுகொலை செய்து புகைப்படம் எடுத்த கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. கிளிநொச்சி 8 ஆம் வாய்க்கால் பகுதியில் 1998 ஆம் ஆண்டு மார்கழி இறுதி வாரத்தில் சிறிலங்கா படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் ஒருவரின் புகைப்படமே இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. மிகுதி 21 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை. காந்தன் என்று அழைக்கப்படும் நாகலிங்கம் ஸ்ரீறிஸ்கந்கராசா தனது சகோதரியின் கணவன் பரமேஸ்வரனுடன் வீடுபார்ப்பற்காக கிளிநொச…
-
- 12 replies
- 2.5k views
-