ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நனவாகாத கனவு தமிழீழம் என்றால், அவர் இலங்கையில் அல்லாமல் இந்தியாவில் அதை உருவாக்குவதற்கு பாடுபட வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுகூறினார். ‘இலங்கையிலுள்ள தமிழ் மக்களைவிட இந்தியாவில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அவர் ஈழத்தை உருவாக்குவதற்காக இலங்கைக்கு வரக்கூடாது. இது இறைமையுள்ள ஒருநாடு. ஈழம் பற்றி பேசுபவர்களை நாம் துரோகிகளாக கருதுகிறோம்’ என கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். இலங்கையில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நாவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என கருணாநிதி கூறியமைக்கு பதிலளிக்கும் முகமாகவே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். ‘இலங்கையி…
-
- 11 replies
- 990 views
-
-
Published By: DIGITAL DESK 3 15 JAN, 2025 | 10:39 AM தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்க விட்ட…
-
-
- 11 replies
- 924 views
- 1 follower
-
-
தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளி யானது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்…
-
- 11 replies
- 7.9k views
-
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நோர்வேயில் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், மீண்டும் புலிகள் புத்துயிர் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் இதனை மறுக்கும் பொன்சேகா போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என கேட்டுள்ளார். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். “நாங்கள் பொட்டு அம்மான…
-
- 11 replies
- 1.6k views
-
-
இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு உலமாக்களின் முஸ்லிம் கட்சி உரிமை கோருகிறது [05 - June - 2007] இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான மண் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறி வருவது அப்பட்டமான பொய். அது மிகவும் கண்டிக்கத்தக்க கூற்றாகும். முதல் மனிதன் தோன்றிய வரலாற்றை நோக்குகின்றபோது இந்த மண் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகுமென உலமாக்களின் முஸ்லிம் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய `முஸ்லிம் பூர்வீகம்' நூலின் நான்காவது அறிமுக விழா அண்மையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துரை வழங்கும்போதே அவர் இதனைக் கூறினார். `எழுவான்' வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் அதன…
-
- 11 replies
- 2.4k views
-
-
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை! பிரதமர் முன்மொழிவு தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கு முன்மொழிவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) தெரிவித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடல் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடல் தொடர்பில் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 2020-2024 இற்கான தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடலுக்கு அமைய தேர்தல் சட்…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு? மன்மோகன் சிங் கலைஞரை கேட்டுள்ளார்!!!!! முக்கிய-செய்திஉப-கண்டம்இணைய-பதிப்புமலேசிய நிருபர் வெள்ளிக்கிழமை, யூலை 16, 2010 இலங்கையில் உள்ள தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கருணா நிதியினை ஆலோசனை வழங்குமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். கருணா நிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு தேவை. அவர்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும் வாழ ஓர் தீர்வு கிடைக்க நாம் விரும்புகின்றோம் இது தொடர்பாக உங்கள் ஆலோசனையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் மன்மோகன் சிங். கடந்த மூன்றாம் திகதி கலைஞருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. . Eelana…
-
- 11 replies
- 1.5k views
-
-
வெள்ளவத்தையில் இரு கிளேமோர் குண்டுகள் மீட்பு வீரகேசரி இணையத்தளம் வெள்ளவத்தை சவோய் தியட்டரிற்கு அமைந்த பகுதியில் விடிதியயான ஜடில் இன் பொலிஸார் தீடீர் தேடுதல் இரு கிளேமோர்கள் 3 குண்டுகள் மற்றும் ஒரு டெட்டனேட்டன மீட்டுள்ளதாக வெள்ள்வதை பொலிஸார் தெரிவித்தனர் சந்தேகத்திடமான நபரொருவர் நடமாடுவதாக கிடைத்த தகவல்லையடுத்து இன்று முற்பகல் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலேயே இவ் வெடிபொருட்கள் கண்டுபீடிகக்பட்டுள்ளதாக மீட்கப்பட்ட கிளேமோர் குண்டு முறையே 9 கிலோ கிராம் 5 கிலோகிராம் நிறையுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர் இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு
-
- 11 replies
- 1.8k views
-
-
மஹிந்த அரசின் அமைச்சர் மேவின் சில்வா அரலங்கன்வில என்னுமிடத்தில் வீதி விபத்தில் காயமடைந்துள்ளார். அவ்விபத்தில் அவருடன் சென்ற பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா
-
- 11 replies
- 1.9k views
-
-
புலிகளைப் போன்று ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கும் புனர்வாழ்வு! [Friday 2016-01-15 19:00] விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டதை போல ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்களுக்கும் பயிற்சியளித்து சமூகத்துடன் இணைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை கூறினார். தற்போது இராணுவத்தில் ஓய்வு பெறும் நிலையில் பெருமளவான இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்று சமூக நீரோட்டத்துக்கு செல்லும்போது அவர்களுக்கு பயிற்சி அளித்து சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறினார்…
-
- 11 replies
- 981 views
-
-
"வடமாகாணத்தைக் சிங்களமயம் ஆக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் படையினர் நிலை நிறுத்தப்பட்டு உள்ளனர்" 'எமது பெண்கள்; பாலியல் பலாத்பாரங்களுக்கு உட்படுத்தப்படகின்றனர் இவற்றை காவற்துறையினர் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்கிறது' என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன், 'அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை சட்ட விரோதமாக எங்கள் மக்கள் அங்கு செல்வதேயாகும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதனை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 1) முதலில் எங்கள் வடமாகாணம் இராணுவக் கட்டுப்பாட்ட…
-
- 11 replies
- 873 views
-
-
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 26, 2010 மஹிந்த அரசாங்கத்தில் பலர் விரக்தியுற்ற நிலையில் உள்ளனர். இதன் ஒருகட்டமாக பலர் ஆங்காங்கே தம் உள்ளக்கிடக்கையினைகொட்டி தீர்க்கின்றனர். நேற்று முந்தினம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலரும் மூத்த அமைச்சருமாகிய மைத்திரிபால சிறிசேனா தமது அரசாங்கம் இரண்டு மூன்று வருடங்களில் கவிழ்ந்துவிடும் எனக்கூறியுள்ளார். லேக்கவுஸ் வட்டாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் உளறியமை மஹிந்த குடும்பத்தினை உலுப்பியுள்ளது. ஒருவரும் எமது அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ய தேவை இல்லை அது தன் பாட்டிலேயே கவிழ்ந்துவிடும் என கூறியுள்ளார் மைத்திரிபால சிறிசேனா. இதே வேளை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைய 20 பிரதி அமைச்சர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. மஹிந்த அரசில் இந்த …
-
- 11 replies
- 1.6k views
-
-
கள நிர்வாகம் இச்செய்தியை நீக்காதென்ற நம்பிக்கையில் இங்கே பதிவிடுகிறேன். நேற்று ஊர்ப்புதினம் பகுதியில் "செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சிறையிலிருந்து எழுதிய கடிதம்" என்ற தலைப்பில் செய்தியொன்றினை இணைத்திருந்தேன். அதன் இணைப்பு வருமாறு :- http://www.yarl.com/forum3/index.php?showtopic=94340 சில இணையங்கள் இச்செய்தியை தங்கள் இணையங்களில் வெளியிட்டுள்ளார்கள். மேற்படி பிள்ளைகளுக்கான உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்பதற்கான நேசக்கரம் தொடர்பு விபரங்களையும் சேர்த்து போட்டிருந்தார்கள். ஆனால் பதிவு , சங்கதி போன்ற தளங்கள் வெலிக்கடைச் சிறையிலிருந்து பெண்கைதிகள் எழுதிய கடிதத்தின் மேல் தலையையும் கீழ் குறிப்புகளையும் வெட்டி விட்டு ஏதோ உத்தியோக ப…
-
- 11 replies
- 2.4k views
-
-
"தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது." இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். தெரிவித்துள்ளார். இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமி…
-
- 11 replies
- 1.3k views
-
-
தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவுகள் தாங்கி, தாயக உறவுகளுக்காய், செப்டெம்பர் மாதம் 26ம் திகதி மாலை 4 மணிக்கு ஆரம்பமான தமிழ் இளையோரின் உண்ணா நோன்பு 30மணித்தியாலங்கள் கழித்து சனி இரவு 10 மணிக்கு வெற்றியாகவும், மிகவும் உணர்ச்சிகரமாகவும் முடிவுற்றது. வெள்ளிக்கிழமை மாலை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தி, அவரது நினைவுகள் தாங்கிய ஒளித்தடம் ஓளிபரப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து உண்ணா நோன்பிருந்த இளையவர்கள், மற்றும் பெரியவர்கள் தங்களது உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டனர். பல இளையவர்கள் பேசும் பொழுது தாங்கள் இந்த 30 மணித்தியாலங்கள் செய்வது ஒரு பெரியவிடயமல்ல. திலீபன் அண்ணாவின் தியாகத்தினோடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒரு பொருட்டல்ல …
-
- 11 replies
- 2.2k views
-
-
பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரின் வெற்றிடத்துக்கு இலங்கை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 85 வயதுடைய அவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரின் வெற்றிடத்துக்கு இலங்கை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=2994
-
- 11 replies
- 673 views
-
-
தமிழருடன் முஸ்லிம்கள் இணைந்து வாழ முடியாவிடின் கிழக்கு பறிபோவது திண்ணம்-சம்பந்தன் எச்சரிக்கை தமிழ் மக்களுடன் இணைந்து வாழ முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள சம்பந்தன் இது நிறைவேறாவிட்டால், கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களிடமிருந்து பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே தமிழ் பேசும் மக்களின் ஏராளமான காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடி யேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் திருகோணமலைத் துறைமுகத்தை மைய ப்படுத்தி அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பாரிய அபிவிருத்திக்காக பல்லா யிரக்கணக்கான சிங்கள மக்கள் திருகோணமலையில் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர்…
-
- 11 replies
- 663 views
-
-
-
- 11 replies
- 767 views
- 1 follower
-
-
புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதியதிட்டம் உருவாக்கப்படுகின்றது – முதலீட்டுச்சபை புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் இலங்கை முதலீட்டுச்சபை ஈடுபட்டுள்ளது. இலங்கையில் முதலீடுசெய்யும் புலம்பெயர்ந்தவர்களிற்கு விசேட ஊக்குவிப்பு திட்டங்களை உள்ளடக்கியதாக புதிய திட்டம் காணப்படும். இது புதிய யோசனை என தெரிவித்துள்ள இலங்கை முதலீட்டுசபை வட்டாரங்கள் ஜனாதிபதிதனது சுதந்திர தின உரையில் புலம்பெயர் இலங்கையர்களை இலங்கையின் அபிவிருத்தியில் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்ததன்பின்னணியில் இந்த திட்டம்…
-
- 11 replies
- 722 views
-
-
அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச அறிவிப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 17:01 ஈழம்] [ப.தயாளினி] அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இயலாத சிறிலங்கா அரசாங்கத்துக்கு பிரித்தானிய நிதி உதவியை இடை நிறுத்தி உள்ளது. அதேபோல் அமெரிக்காவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மகிந்த கூறியுள்ளதாவது: தாமாக முன்வந்து விருப்பத்தின் பேரில் கொடுக்கப்படும் நிதி உதவியை நாம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் அதனை நாம் மறந்துவிட்டு நமது வேலையைச் செய்ய வேண்டும். நாம் உதவ…
-
- 11 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவில் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆவதாக உயர்புள்ளி பெற்ற மாணவிக்கு தமிழர் என்ற காரணத்தினால் பாடசாலையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 2.8k views
-
-
ஐ நா மனித உரிமை குழுவில் இருந்து இலங்கையின் நீக்கமும் அதன் பின்புலக்காரணிகளும். 21/5/2008 ஜெனீவா சிறப்பு கூட்டத்தொடரில் இரண்டாம் அமர்வில் ஐ நா மனித உரிமை குழுவின் உறுப்புரிமைக்காக போட்டியிட்ட இலங்கை தோல்விகண்டிருக்கின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் இங்கே இரு தோல்வியாளர்களை காணலாம். ஒன்று இலங்கை மற்றது இந்தியா. முதலாம் அமர்வில் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட இந்தியா இரண்டாவது அமர்வில் பாகிஸ்தானை வெளியேற்ற முனைந்தது, யப்பான், தென் கொரியா, பகரேன்(?) ஆகிய நாடுகள் உண்மையிலே மனித உரிமை விடயத்தில் சிறந்து விளங்குகின்றன ஆகையால் போட்டி இலங்கை, பாகிஸ்தான், கிழக்கு திமோர் இடையே தான், நீதியின் பிரகாரம் அந்த ஆசனம் கிழக்கு திமோருக்கே. ஆயினினும் சன நாயகத்தில…
-
- 11 replies
- 1.7k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வு என்பது ஒரு அரசியல் மயப்பட்ட விடயம் மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட…
-
- 11 replies
- 1.5k views
-
-
கொழும்பு: இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் நானே முதல் ஆளாக களத்தில் நிற்பேன். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசியதாவது: பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை தமிழர்கள் இருக்கின்றனர். புலிகள் வேறு தமிழர்கள் வேறு அல்ல. நாங்கள் வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல. எது வன்முறை, எது உரிமை என்று பிரித்துப் பார்க்க வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தி போராடியபோது அதை ஆதரித்தனர். புலிகள் துப்பாக்கி ஏந்தினால் தவறு என்கின்றனர். இலங்கைக்கு …
-
- 11 replies
- 2.7k views
-
-
வட மாகாண சபை குழப்பங்களுக்கும் தெற்கு அரசியலுக்கும் தொடர்பு: விக்னேஷ்வரன் அறிக்கை தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே வட மாகாண சபையைக் குழப்ப முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையில் இடம்பெறும் விடயங்களுக்கும் தெற்கு அரசியலுக்குமிடையிலான தொடர்பு குறித்து முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். வட மாகாண சபையையும் அதன் செயற்பாடுகளையும் திட்டமிட்ட வகையில் குழப்புவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தினைத் திசை திருப்புவதற்கு, அரசாங்கமும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் முனைந்து வருகின்றார்களோ…
-
- 11 replies
- 546 views
-