Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அர்ச்சுனா எம்.பி. அரசியலில் இருந்து ஓய்வா? January 30, 2025 11:50 am அரசியலில் அதிக காலம் இருப்பதற்கு தான் எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று (29) மதியம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் ஒரு மருத்துவர் என்றும், கடந்த காலங்களிலிருந்து அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டார். இந்த முறை மக்களுக்காக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தனக்கு மிகவும் பிடிக்காத துறை…

  2. தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் ஐ.நா மனித உரிமையாளர் கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று காலை 11 மணியளவில் நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் அமைச்சர் ஹக்கீம் ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்திருந்தார். அதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுயாதீனமாக செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. பொதுவான விடயங்களை பலவற்றை நாம் பேசி…

  3. தன்னைப் பதவி நீக்கியதை எதிர்த்து டெனீஸ் வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று அல்லது 4ஆம் திகதி விசாரிக்கப்படலாம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று ரிட் மனுத் தாக்கல் செய்தார். எனவே தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும் குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்கும்படியும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே…

    • 6 replies
    • 569 views
  4. வன்னியில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை மார்ச்சில் இலங்கை அரசாங்கம் வன்னியில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை எதிர் வரும் மார்ச் மாதம் முலாம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இந்த விசாரணையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தடுக்கும் நோக்கிலேயே மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்…

    • 6 replies
    • 1.3k views
  5. குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீடு: வைகோ குற்றச்சாட்டு குமரி மீனவர்கள் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்கள் தலையீட்டிருப்பதாக ஊகமான செய்திகள் வருகின்றன என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த நேர்காணல்: சிறிலங்கா கடற்படையினர் கடந்த 30 ஆண்டு காலத்தில் ஏராளமான முறை தமிழக மீனவர்களை தாக்கி உள்ளனர். ஏறத்தாழ 500 தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீனவர் படகுகளும், வலைகளும் நாசமாக்கப்பட்டுள்ளன. இதனை நான் எண்ணற்ற முறை இந்திய நாடாளுமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று பேசி உள்ளேன். பிரதமர்களிடத்திலும் வா…

  6. நல்லிணக்கத்திற்கு அருமையான வாய்ப்பு: சந்திரிகா[ அரசியலிலிருந்து 6 வருடங்களுக்கு முன்னர் இளைப்பாறிய முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளார். இந்த அமைப்பின் முதலாவது வருடாந்த மாநாட்டை புதுடில்லியில் ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அவர் தான் முன்பு மட்ரிட் கிளப், கிளின்டன் பூகோள முன்னெடுப்பு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்ததாகவும் இப்போது தனது சொந்த பவுன்டேஷனை தொடங்கியுள்ளதாகவும் கூறினார். இந்த தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய உபகண்டம் தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் எடுக்கும். இவற்றை ஆராய்வதற்கு உலக அளவில் ஆராய்ச்சி நிபுணர்கள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்…

  7. நிஷா பிஸ்வால் இலங்கைக்கு திடீர் பயணம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் மீண்டும் இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவர் இன்று இலங்கை நேரப்படி அதிகாலை 5மணிக்கு இலங்கையை சென்றடைந்தார். திடீரென நிஷா பிஸ்வால் விஜயம் மேற்கொண்டிருப்பது அரசியல் ரீதியான முக்கிய சந்திப்பிற்காகவே என்று தெரிவிக்கப்படுகிறது. அவரை வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். இலங்கை சென்றுள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இவர் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு ச…

  8. சென்னை (ஏஜென்சி) சனிக்கிழமை 'கச்சத்தீவை மீட்க, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் சுட்டுக்கொல்லப்படுவதை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இ‌ன்று ‌உ‌ண்ணா‌விரத‌‌ப் போராட்டத்தை தொடங்கி வைத்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசியதாவது: இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, திரும்பி வராமல் போவதற்கு இலங்கை ராணுவம் அவர்களை கொன்று குவிப்பதே காரணம். இதனை தடுத்து நிறுத்த நாம் எடுத்த முயற்சிகள் ஒன்று, இரண்டு அல்ல. மீனவ…

  9. நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் – சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரத்தியேக சந்திப்பு ஆகியவை தொடர்பாக முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் குறித்து தமிழ் பத்திரிகைக்கு பதிலளிக்கையில் நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.ஆகவே எமது செயற்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அப்பால் அவைபற்றிய சரியான புரிதல் பொதுமக்களுக்கு உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள அத்தனை தமிழ் கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதையே பிர…

    • 6 replies
    • 781 views
  10. மனதை நெகிழச் செய்யும் கிளிநொச்சி வர்த்தகர்களின் சோகம் கிளிநொச்சி சந்தையில் இடம்பெற்ற தீ விபத்தானது கிளிநொச்சி நகரத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக வடமாகாண வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பா. டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர் டெனீஸ்வரன், பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள், பிரதேச சபையின் செயலாளர், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தீயை அணைப்பதற்கு உதவிய இளைஞர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்களும், புனர்வாழ்வு பெற்ற முன்…

  11. கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 174 தமிழர்களுக்கு என்ன நடந்தது? - இரா.துரைரத்தினம் கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்களும் செப்டம்பர் 23ஆம் திகதி 16பொதுமக்களும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற…

  12. டெங்கு ஒழிப்பு இறுதிநாளில் யாழ். கந்தர்மட பகுதி வீடொன்றில் கழிவுப்பொருட்கள் கண்டுபிடிப்பு டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ் கந்தர்மடம் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்ட நிலையில் அங்குள்ள வீடொன்றில் கழிவுப்பொருட்கள் கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிமனையால் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளாகிய இன்று யாழ் பொலிஸ் பிரிவிக்கு்ட்பட்ட கந்தர்மடம் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது . இதன் போது குறித்த வீடு ஒன்றை பார்வையிட்ட அதிகாரிகள் வீட்டினுள் ஒரு அறையினுள் கிடந்த போத்தல்கள் , கழிவுப் பொருட்கள் , குப்பைகளைக் கண்டு வியந்தனர…

  13. பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய யாழ்.பல்கலைக்கழக மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!! யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குறித்த கண்டபிடிப்புக்களை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான அங்கஜன் இராமனாதன், கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைகழக துணைவேந்தர் உட்பட பீடாதிபதிகள் பார்வை…

    • 6 replies
    • 852 views
  14. சுட்­டுக்­கொன்ற மாண­வ­னின் குடும்­பத்­துக்கு வீடு அமைச்­சர் சுவா­மி­நா­தன் இன்று அடிக்­கல் நடு­வார் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில் உயி­ரி ழந்த பல்­க­லைக் க­ழக மாண வ­னின் குடும்­பத்­தி­ன­ருக்கு அமைத்துக் கொடுக்­கும் வீட்­டுக்கு அடிக் கல் நடு­வ­தற்­காக, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் யாழ்ப்­பா­ணத்­துக்கு இன் றைய தினம் வருகை தர­வுள்­ளார். இந்த வீடு இரா­ணு­வத்­தி­ன­ரால் அமைத்­துக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. கடந்த ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 21ஆம் திகதி கொக்­கு­வில் பகு­தி­யில் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த இரண்டு மாண­வர்­கள் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர். இதன் பின்­…

  15. மட்டக்களப்பு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் அங்குள்ள செங்கலடி பேருந்து நிலையத்தில் கோட்டா கோ ஹோம் கம கூடாரம் அமைத்துத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். April 14, 2022 மட்டக்களப்பு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்தை விரட்டியடிப்போம்; அரசியல் முறையைக் கவிழ்ப்போம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்து செங்கலடி சந்திவரை சென்று அங்கு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்…

    • 6 replies
    • 1k views
  16. உடன்படாத சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டு வல்லுறவு! - தமிழ் பெண் சிப்பாய்களது நிலை இப்படி! [Tuesday, 2014-03-18 19:56:08] சிங்கள இராணுவத்தில் சேர்ந்த பின் 10ற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவப் படை அதிகாரிகளாலும் சாதாரன கோப்றல் தர ராணுவத்தாலும் தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் 23 வயதான இளம் தமிழ் இராணுவப் பெண். தான் இராணுவத்தில் சேர்ந்த பின் தன்னையும் தன்னைப் போன்ற மற்றைய தமிழ்ப் பெண்களையும் தவணை முறை வைத்து இரவில் உயரதிகாரிகளின் பாலியல் தேவைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் அதற்கு உடன்படாத சந்தர்ப்பங்களில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் தங்களில் சிலர் கருத்தரித்து பின்னர் அது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்…

  17. பாவனையாளர் பாதுகாப்புச் சபைகள்; அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை யாழ்ப்பாணம், நவ.19 குடாநாட்டில் பொருள் விநியோகத்தை சீர்செய்யும் நோக்கில் பாவனையாளர் பாது காப்புச் சபைகளை அமைக்க சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவ டிக்கை எடுத்துள்ளார். சமூக சேவைகள் மற்றும் சமூகநலத் துறை அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. அச்செய்திக்குறிப்பில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது: குடநாட்டு மக்களுக்கான உணவு மற் றும் அத்தியாவசிய பொருள்களுக்கான விநியோகத்தின் போது பொருள்களின் பாது காப்பு, உரிய நிறை, நியாயவிலை என்பவற் றுடன் அப்பொருள்கள் சரியான முறையில் மக்களைச் சென்றடைகின்ற னவா என்பவற்றை உறுதிப்படுத்தும் முக மாகவும் அதன் மூலம்…

  18. உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், சமஷ்டி குணாதிசயங்கள், ஒற்றையாட்சி குணாதிசயங்கள் இணைந்த அமைப்பே காணப்படுகின்றது என, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

  19. வவுனியாவில் இன்று நன்பகல் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில், இராணுவத்தினரால் பின்தொடரப்பட்ட ஒரு உந்துருளியில் சென்ற ஆயுததாரி தன்னைத்தானே வெடிக்கவைத்துள்ளதாக இராணுவ இணையத்தளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

    • 6 replies
    • 2.7k views
  20. பிரதேசம் முழுவதும் நிலை நிறுத்தப்பட்டுள்ள படையினரின் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தொந்தரவுகளுக்குள் இலங்கையின் வடபகுதி பெண்களை இரையாக்கி கொள்வதன் மூலம் படையினர் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி கொள்வதை காண முடிகிறது என போருக்கு பின்னர் கடந்துள்ள 6 வருடங்களில் தமிழ் பெண்கள் எதிர்நோக்கி வரும் நிலைமை குறித்து வெளியாகியுள்ள புதிய அறிக்கை ஒன்றின் இணை ஆசிரியர் கூறியுள்ளார். சதாகாலமும் பாதிக்கப்பட்டவர்கள்? போருக்கு பின்னர் இலங்கையின் தமிழ் பெண்கள்(The Forever Victims? Tamil Women in Post-War Sri Lanka) என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தரணி கேட் க்ரோனினுடன் நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் சமூகம் மற்றும் உலகமய தலைமைத்துவத்திற்காக கொலின் பவல் பீடத்தின் பேராசிரியர்…

  21. ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு மூலம் சிறையில் இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 15 படையினரை கொண்ட ஆளணி இன்று முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சிறையில் இருந்து விடுதலைப் பெற்ற பின்னர், டிரான் அலஸின் ஆலோசனையின் படி செயற்பட்டு வரும் பொன்சேக்காவின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு செயலாளரின் தீர்மானத்திற்கு அமைய இந்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டு வரவிருந்த பொன்சேக்காவின் உரிமைகளை மீள வழங்குமாறு கோரும் நாடாளுமன்ற யோசனையை பொன்சேக்கா எதிர்த்தமையானது அவரது சிறந்த நன்னடத்தை எனக் கருதியே இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. http://w…

  22. பிரதமர் மஹிந்தவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இந்தியாவுக்கு இலங்கை தரவேண்டிய 120 மில்லியன் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் என ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வாரம் இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, டெல்லியில் இடம்பெற்ற நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போதே இக்கோரிக்கையினை விடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே இந்திய அரசாங்கம் பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளிக்க முடியும். இந்தியாவிற்கு இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன் நிலுவை வ…

  23. சென்னையிலிருந்து யாழிற்கான விமான சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தினசரி விமான சேவையை மட்டுப்படுத்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் நான்கு பயணிகள் மாத்திரம் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் இந்திய விமான நிறுவனங்கள் யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கிடையேயான விமான சேவையை மறு அறிவிப்பு வரும் வரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. http://athavannews.com/சென்னையிலிருந்து-யாழிற்/

    • 6 replies
    • 548 views
  24. அவுஸ்திரேலியாவின் பால் தரும் பசுக்களை இலங்கையின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது எனவும் தரகுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் சுய நலத்திற்காகவே பல கோடி ரூபாயை செலவிட்டு, அரசாங்கம் 2 ஆயிரத்து 500 பசுக்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். ஜேர்சி ரக இனமான பசுக்களே இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்த பசுக்களை எமது நாட்டின் பல பிரதேசங்களில் வளர்க்க முடியாது. நாம் பிரேசில், ஆபிரிக்க, இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் உள்ள பசு இனங்களையே இறக்குமதி செய்ய வேண்டும். அந்த பசுக்களே நாட்டின் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும். இப்படியும் முட்டாள்தனமான அரசாங்கம். இது கொள்ளையிடும் நோக்கில் மேற்கொள்ளப்ப…

    • 6 replies
    • 824 views
  25. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nNpwtFzEv_Y

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.