Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 31 Oct, 2025 | 04:40 PM திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து பெண் ஒருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா இலட்சம் பெற்றுக்கொண்ட போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிலாவெளியில் உள்ள காணியில் ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக காணி உரிமையாளர் காணிக்கான அனுமதிப்பத்திரம் பெற முயற்சித்தபோது அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக்கூறி காணி உரிமையாளரான பெண்ணிடமிருந்து குச்சவெளி பிரதேச தவிசாளரான ஏ.முபாரக் இலஞ்சம் கோரியதாகவும் இரண்டு இலட்சத்தில் இருந்து பேரம்பேசப்பட்டதாகவும் இறுதியில் ஐந்து இலட்சத்திற்கு உடன்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறத…

  2.  உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடுகள் இடித்தழிப்பு -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில், தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள வீடுகளை, இராணுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர். கட்டுவன் மற்றும் குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு கிராமங்களினதும் பகுதியளவு பிரதேசங்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விடுவிக்கப்படாத காணிகளில் உள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு…

  3. நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கு: இன்று தீர்ப்பு -எம்.றொசாந்த் நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பு, இன்று வெள்ளிக்கிழமை (07) வழங்கப்படவுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றார். இதன்போது, அச்சிறுமி கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன்…

  4. கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் இராணுவ உளவாளிகளா? [saturday, 2014-04-12 08:40:33] விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் புளியங்குளம் இராணுவ முகாமில் பல காலமாக இராணுவ உளவாளிகளாக செயற்பட்டு வந்தவர்கள் என சிங்கள இணையத்தளத் தகவல் ஒன்று கூறுகிறது. இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த செல்வராஜா கமலராஜா ( இலக்கம் 776927) என்பவருக்கு கீழ் பணியாற்றி வந்துள்ளனர். கமலராஜா மற்றும் ஏனைய மூவரும் நண்பர்கள். கமலராஜாவே தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரை இராணுவத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவர்களின் கொலை மற்றும் சூழ்ச்சி நாடகம் பற்றிய உண்மை வெளியாகிவிடும் என்பதால் கமலராஜா என்ற இராணுவ புலனாய்வாள…

    • 6 replies
    • 1.2k views
  5. வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பிரபாகரனே அழித்தார் -நீதியமைச்சர் குற்றச்சாட்டு வடக்கு மாகாண மக்களின் விவசாயம் உள்ளிட்ட வளங்களை அரசாங்கம் அழிக்கவில்லை என்றும் பிரபாகரனே அனைத்தையும் அழித்தொழித்தார் என்றும் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ, தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிபரின் கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பிரபாகரனே அழித்தார் வடக்கு மாகாண விவசாயத்தை, வளங்களை அரசாங்கம் இல்லாதொழிக்கவில்லை என்றும் பிரபாகரன், வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறையும், மக்களின் வாழ்க்கையையும் அழித்தொழித்தார் என்றும் தெரிவித்த அவர், காங்கேசன்துறை சீமெந்து…

  6. துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடார்புபட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றத்தின் ஊடாக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார்;. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் மீள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் ஏற்பட இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (26) காலை யாழ்ப்பாணத்திற்கு திடீரென மேற்கொண்ட விஜயத்தின்போது வடமாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்தபோதே இவ்வாறு வலியூறுத்தினார். இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வட மாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்து உரையாடினார். சுமார் 17 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொ…

  7. திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2024 மார்ச் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்தது. 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது. 31 – 60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளது. 60 – 90 அ…

  8. கிட்டத்தட்ட 20 ஊர்களையும் 51 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதே காத்தான்குடி பொலீஸ் பிரிவு! சமூக அரசியல் உரிமைகளிற்கான அமைப்பு (OSPR) ஊடகங்களுக்கு விளக்கம்! அண்மைக் காலமாக நாடு முழுவதும் போதைப் பொருள் பாவனை, கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சுற்றி வளைத்து கைது செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் செய்து வருகின்றது. அந்த வகையில் காத்தான்குடி பொலீஸ் பிரிவும் தங்கள் எல்லைகளிற்கு உற்பட்ட பிரதேசங்களில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு பலரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தி வருகின்றனர். அவ்வாறு கைதுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பட்சத்தில் குறித்த செய்திகளினை பிரசுரிக்கும் சில ஊடகங்கள் கைதுகள் அல்லது சம்பவங்கள் நடைபெறும் ஊரைக் குறிப்பிடாம…

  9. பிரதமரின் 67 ஆவது பிறந்ததினம் இன்று (படங்கள் இணைப்பு ) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 67 ஆவது பிறந்த தினத்தை இன்று அலரிமாளிகையில் கொண்டாடினார். http://www.virakesari.lk/article/4524

  10. மும்பையில் தீவிரவாதிகள் மூன்று நாட்களாக நடத்திய தாக்குதலில் நிலைகுலைந்து கிடக்கிறது, மத்திய அரசு! பாகிஸ்தானில் இருந்து கப்பலில் வர்த்தக நகரமான மும்பையில் வந்திறங்கி இந்தியா மீது கிட்டத்தட்ட போர்த் தொடுத்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் இவர்கள் என்று வழக்கம்போல் மத்திய அரசு சொல்லிவிட்டது. அமெரிக்காவில் செப்டம்பர் 11 நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ஒசாமாபின் லேடனைக் கொல்வதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய உக்கிரத் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. அதற்கு உலக நாடுகள் மத்தியில் பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று கிளம்பியது, அமெரிக்கா. இந்தியாவும் வல்லரசு ஆகும் …

  11. சிங்கப்பூரில் பெண் ஒருவரை மணந்து, குடும்பம் நடத்தி, ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி, ஒரு வயதாக மகள் இருக்கும் போது, தாயகம் போய் வருவதாக 1991ம் ஆண்டு இலங்கை சென்று திரும்பியே வராத தந்தையை தேடுகிறார் 28 வயது மகள், துர்கா கேசவ். யுத்தத்தில் மாண்டு போய் இருப்பார் என எண்ணி இருந்து, யுத்தம் முடிந்த பின்னர் தந்தையினை தேடி பல தகவல்களை திரட்டி உள்ளார் துர்கா. 27 ஆண்டுகளுக்கு முன் தன்னையும், தாயையும் விட்டுச்சென்ற, இன்று 60 வயது ஆகக் கூடிய இலங்கைத் தமிழரனான கனகசுந்தரம் சோமசுந்தரம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்கிறார் துர்க்கா. தனது தாயார் மறுமணம் செய்யவோ, வேறு யாருடனும் தொடர்பிலோ இல்லாமல், தந்தை நினைவுடனே தன்னை வளர்த்து எடுத்தார் என்கிறார் துர்க்கா. எமது பல கேள…

  12. பொதுபல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களினால் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இருந்துள்ளது என சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் ஐ.நா.மனித உரிமை மாநாட்டில் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது வருடாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் மத சுதந்திரத்திற்கான உப குழுக் கூட்டம் அதன் விசேட தூதுவர் ஹைனர் பீல்ட்பெல்ட் தலைமையில் நேற்றுமுன்தினம் ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்றது. …

  13. புலிகளை ஜெனிவாவுக்கு கூட்டிச் செல்லாது வடக்கை நோக்கி உடன் படையயடுங்கள்! நாடாளுமன்றில் விமல் வீரவன்ஸ வீராவேசம் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றி அங்கிருந்து விடுதலைப்புலிகளை விரட்டியடித்து அரசு வெற்றிவாகை சூடியிருக்கின்றது. அதேபோன்று வடக்கையும் கைப்பற்றுவதற்கு உடனடியாகப் படையெடுங்கள்! விடுதலைப்புலிகளை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்கு முயற்சிப்பதைத் தவிர்த்து, படையினரை வன்னி நோக்கி நகர்த்துங்கள்! இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் விராவேசமாகப் பேசினார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசிய அவர் வன்னி நோக்கிப் படை எடுப்பதைத் தவிர்த்து, விடுதலைப் புலிகளை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்குமானால் அதற்கு எதிராக எமது கட…

  14. அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் இன்று புதன்கிழமை மெல்பேர்ண் நகர சதுக்கத்தில் கறுப்பு ஜூலை கவன ஈர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. விக்டோரிய ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் இந்த கறுப்பு ஜூலை கவன ஈர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை தமிழின அழிப்புக் கொடூரங்களை நினைவு கூர்ந்தும், ஈழத்தமிழர் மீது தொடரும் தமிழினப் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்தும் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு அகவணக்க நிகழ்வில் பல நூற்றுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தமிழீழ உறவுகள் உணர்வுபூர்வமாக அணிதிரண்டிருந்தனர். இந்த நிகழ்வுக்கு விக்டோரிய மாநிலத்தின் அனைத்துப் பிராந்தியங்களிலிருந்தும் வயது வேறுபாடின்றி கலந்துகொண்ட புலம்பெயர…

  15. மட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியத் தீவிரவாதக் குழு ஒன்றுக்கும் இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாமா என்கின்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதும், இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஆங்காங்கு முஸ்லிம் இனத்தவர்களே கைதுசெய்யப்பட்டு வருவதும், இந்தச் சம்பவத்தை முஸ்லிம் குழு ஒன்றை நோக்கிய நிலையில் பார்த்தேயாகவேண்டிய நிர்ப்பந்தத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகின்றது. மட்டக்களப்பு தற்கொலைத்தாக்குதல் நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு காத்தான்குடி பாலமுனை பகுதியில் ஒரு பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.…

  16. அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகளும், தமிழீழ போராட்ட ஆதரவுத் தளங்களும் - கீரன் மக்கள் மயப்படாத, மக்கள் வழி செல்லாத அரசுகளும் அரசியல்வாதிகளும் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படுதல் இயற்கையின் நியதி என அண்மைய அவுஸ்திரேலிய முடிவுகள் மீண்டும் உரத்துக் கூறியுள்ளன. மக்களால் தோற்கடிக்கப்பட்ட அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹாவாட் இன் கைகள் ஒன்றும் சுத்தமானவையல்லை. அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக கூறிக் கொண்டு அவர் தம் உரிமைகளை பறித்தவர். தொழிற்துறை உறவுகள் என்ற பெயரில் தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளை முதலாளிகளுக்கு தாரை வார்த்தவர்,அமெரிக்காவின் நட்பை ஏற்படுத்த உலக நாடுகளின் மீதான “பயங்கரவாதம் மீதான போர்” என்ற போர்வையில் படையெடுத்தவர், சுற்றுச் …

    • 6 replies
    • 2.9k views
  17. [size=4]பருத்தித்துறை தம்பசிட்டி கட்டப்பாதி ஒழுங்கையில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த ஹாட்லிக் கல்லூரி உயர்தர உயிரியல் பிரிவு மாணவன் மு.கலாகரன் (வயது 17) உயிரிழந்துள்ளார். மின்சார சபையின் பொறுப்பற்ற தன்மையாலேயே இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதிகாலை தொடக்கம் பெய்த கடும் மழை காரணமாக இந்த வீதியில் மின்கம்பியொன்று அறுந்து தொங்கியது. இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கரவெட்டியிலுள்ள பிரதேச அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அது சீர்செய்யப்படவில்லை. இந்நிலையில் மாலை 6 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுவிட்டு இந்த …

  18. தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான sridaladamaligawa.lk மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தலதா மாளிகையின் முகப்புத்தகபக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதுடன், குறித்த இணைத்தளம் முடக்கப்பட்டுள்ளது. Share https://www.virakesari.lk/article/89065

  19. வந்தித்தாயா..வந்திட்டான் ...புதுக்குடியிருப்பு என்பது, ரஜரட்ட ராஜ்ஜியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் காணப்பட்ட பண்டைய கால நகரம் ‐ ஹெல உறுமய விடுதலைப்புலிகளின் இறுதி கட்டத்தில், அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்கி கைகளை சுட்டுக்கொள்ள வேண்டாம் என ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு என்பது, ரஜரட்ட ராஜ்ஜியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் காணப்பட்ட பண்டைய கால நகரம் எனவும் இதனை மீட்டமை தொடர்பில் படையினருக்கு கௌரமளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு தற்போது இருப்பது, போர் தவிர்ப்பு வலயமான ஒரு சிறிய பகுதி மாத்திரமே. 30 வருடங்களாக தீரக்கப்படாத பிரச்சினையாக அரசியல்வாதிகள் மாற்றிக் கொண்ட விடுதலைப்புலிகள் தொடர்பா…

    • 6 replies
    • 1.9k views
  20. வட மாகாண சபைக்கான தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்பதை ஜனாதிபதி மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது தேர்தல் தொடர்பிலும் ஜனாதிபதி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு ஒருபடி மேலாகச் சென்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வட மாகாண சபைத்தேர்தலை எதிர்கொள்ள ‘நீல அலை’ திட்டத்தின் மூலம் அரசாங்கம் தயாராகவுள்ளது, எதிரணியினர் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றுக் காட்டட்டும் என்று சவால் விடுத்திருந்தார். எதிரணியினர் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறட்டும் என்று பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டதன் உள்ளர்த்தம் யாதெனில், வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பி…

  21. இலங்கையில் ஊடக சுதந்திரம் முடக்கப்படுவது குறித்து பான் கீ மூனுக்குத் தெரியாதாம்! – அவரது பேச்சாளர் சொல்கிறார். [sunday, 2014-03-02 08:32:51] இலங்கையில் ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார். இணைய ஊடகங்கள் மற்றும் சில ஊடக நிறுவனங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து, எழுப்பிய கேள்விக்கே அவர், ஊடகத் தணிக்கை பற்றித் தமக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திர உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ரெலிகிராப் இணைய தளம் முடக்கப்பட்டமை பற்றி தகவல் கிடைக்கவில…

  22. ஆட்சியைக் கவிழ்ப்பது எப்படி? - இந்தியாவிடம் பாடம் கற்கலாம் என்கிறார் சரத் பொன்சேகா. [saturday, 2014-05-17 09:14:33] மோசமான அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்பதை இந்தியாவிடமிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டுமென ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் மோசடியில் ஈடுபட்ட அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்பதனை இந்திய மக்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். ஊழல் மோசடி மிக்க இந்த அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டை காப்பாற்ற இலங்கை மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் மோசடிகளிலும், வினைத்திறனற்ற ஆட்சியையும் மேற்கொண்ட இந்திய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்ததன் மூலம் இந்திய மக்களின் பொறுப்புணர்ச்சி வெளிப்பட்டுள்ளது. நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்டவும், சட்டம் ஒழு…

    • 6 replies
    • 601 views
  23. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புகைப்பட தொகுப்பு http://www.alaikal.com/index.php?option=co...=92&catid=3

    • 6 replies
    • 3.2k views
  24. விசாரணை, விடுதலையை வலியுறுத்தி வெலிக்கடைக் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம். - பண்டார வன்னியன் Saturday, 10 March 2007 15:45 கொழும்பு வெலிக்கடைச் சிறையில் உள்ள 42 தமிழ்க்கைதிகள் இன்று காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளை துரிதமாக நடத்தி தம்மை விடுதலைசெய்ய வேண்டும் எனவும் தம்மீதான விசாரணைகள் தாம் கைதுசெய்யப்பட்ட மாவட்டத்திலேயே நடத்தப்படவேண்டும். என்ற இரு கோரிக்கைகள் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் தம்மீதான விசாரணைகள் நடத்தப்படும்போது சாட்சிகள் கொழும்புக்கு வருவதில் பெரும் இடர்பாடுகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இருப்பதை உண்ணாவிரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பாக சிறிலங்க…

  25. சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011 இந்தியர்கள் எல்லோரும் உறுதியாக ஈழத் தமிழர்களை ஆதரிக்கின்றோம் என்பதை உலகுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்'' என்று கூறியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜஸ்வன்சிங்ஹா. மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றம் முன்பாக நேற்று நடத்திய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழர் ஆதரவை வெளிப்படுத்தினார் சின்ஹா. சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டால் அதிலும் தான் கலந்துகொள்வார் என்று அவர் தெரிவித்தார். வைகோ தலைமையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான யஸ்வந் சின்ஹா, பீஹார் மாநிலத்தின் பலம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.