Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க போவதில்லை: கனடியப் பிரதமர் உறுதி! [Wednesday, 2013-02-27 07:48:15] இந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவில் இருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் அறிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலைமைகள் முன்னேற்றமடையாது போனால், அங்கு நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்தேன். அந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவலையளிக்கிறது. அந்த நாடு மோசமான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவ…

  2. இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ள கனடா அரசாங்கம், முடிந்தளவு வேகமாகச் செயற்படும்படி ஐ.நா.வைக் கோரியுள்ளது. பிரச்சினைக்குட்பட்டுள்ள இந்தத் தெற்காசிய நாட்டில் போர்நிறுத்தம் செய்துகொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை தாம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனன் வியாழனன்று தகவல் வெளியிட்டுள்ளார். "உடனடிப் போர்நிறுத்தத்துக்கு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஏற்பட்டுவரும் இழப்புக்கள் குறித்து நாம் மிகவும் கவலையடைந்துள்ளளோம். குறிப்பாக மோதல் பிரதேசத்திலிருக்கும் பொதுமக்கள் குறித்து அதிக கவலையடைகிறோம்'' என்றார் கனன். "பொதுமக்கள் அங்கிரு…

    • 6 replies
    • 1.5k views
  3. கிழக்கு மாகாண முதல்வரும் பிள்ளையான்குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் இலங்கையில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் இலங்கை அரசின் அமைச்சரும் கருணாகுழுவின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனும் சிங்கள அமைச்சர்கள் சிலரும் இணைந்து பிள்ளையானுக்கு எதிரான திட்டம் தீட்டிய நிலையிலேயே அவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையான் நாட்டில் இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்தி பிள்ளையானின் கட்டுப்பாட்டில் உள்ள அவரது அலுவலகங்களை தமது பொறுப்பில் கொண்டுவர முரளிதரன் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன் அங்கமாக பிள்ளையான் இல்லாத நிலையில் பிள்ளையானின் தீவிர ஆ…

  4. நாட்டை வந்தடைந்தார் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமைய பாரதீஜ ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அவரின் நண்பர் ஜெகதீஷ் ஷெட்டி ஆகியோர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது குடும்பத்தினரின் நவராத்திரி விழாவில் பங்கேற்குமாறு விடுத்த அழைப்பிற்கமையவே இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக்க தினுஷான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆ…

  5. ஈழத் தமிழர் மூன்று தசாப்தங்களாக அறவழிப்போராட்டத்தின் மூலமாக வெல்லமுடியாத அரசியல் அபிலாசைகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரத் தேவைப்பட்ட ஒரே ஆயுதம் பல ஈழத் தமிழ் போராளிகளை வளர்த்து தமக்குள்ளே அடிபட்டு தமிழீழத் தாயகக் கோட்பாட்டை மழுங்கடிக்க அயராது உழைத்த நாடு தான் இந்தியா. விடுதலைப் புலிகளினால் பிற தமிழ் ஆயுதக் குழுக்கள் தோற்கடிக்கப்பட்டு பின்னர் புலிகளே ஈழத் தமிழரின் தேசியத் தலைமை என்கின்ற அளவு அபார வளர்ச்சி பெற்று நின்ற வேளை இந்தியாவினால் அதனை சகித்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. புலிகளை பலம் இழக்கச் செய்து அவர்களின் ஆயுதப் போராட்டத்தை மழுங்கடிக்க ஒரே வழி அந்த அமைப்பைத் தடை செய்வது ஒன்றுதான் வழி என்று எண்ணிய இந்தியா குறிப்பாக 80 மற்றும் 90-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டு மக்…

  6. யாழ்.பல்கலைக்கு... இந்தியத்துணை தூதுவர், விஜயம்! யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் நேற்று(புதன்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் தொடர்பிலும் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280170

    • 6 replies
    • 549 views
  7. புலிகளுடன் முரண்படக்கூடாதென்று தீர்மானித்திருந்தோம். பேச்சுவார்த்தைகளை நீண்ட காலத்திற்கு இழுத்து அதன்மூலம் அவர்களின் இராணுவக் கட்டுமானத்தை பலவீனமாக்க முடியுமென்பதால் அவர்களுடன் முரண்படாமலிருப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் விடுதலைப்புலிகள் பிளவுபடுவதற்கும் யுத்த நிறுத்தம் சிறப்பாகப் பயன்பட்டது. புலிகளை விடுமுறையில் சென்று தமது பெற்றோரையும் உறவினர்களையும் சந்திக்க அனுமதித்தமை, அவர்கள் பெண் சிநேகிதிகள், ஆண் சிநேகிதர்களை வைத்திருப்பதற்கும் திருமணம் செய்வதற்கும் அனுமதிப்பதன் மூலம் அவர்களுடைய வலுவான அத்திவாரம் பலவீனமடைந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்டோர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தனர், மரணங்களை எதிர்நோக்கினர். எனினும் விடுதலைப்புலிகள்…

  8. யுத்தம் நிறைவடைந்து எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூர்ந்தும் அந்த யுத்தத்தில் பலியான இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இராணுவ நினைவு தூபிக்கு முன்பாக இன்று நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையிலேயே இந்த வைபவம் நடைபெற்றது. (படங்கள்: வன்னி ரொமேஷ் மதுசங்க) tamilmirror

  9. வடகொரியா, சிரியா, ஈரான் வரிசையில் இணைய விரும்புகிறதா இலங்கை? - அமெரிக்க அதிகாரி கேள்வி [Tuesday, 2014-06-24 09:51:30] ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை நிராகரிப்பதாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக. ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் துணை பிரதி ராஜாங்கச் செயலாளர் அடுல் காசியப் தெரிவித்துள்ளார். ஈரான், வடகொரியா, சிரியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளை திட்டவட்டமாக நிராகரித்திருந்தன. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். நீண்ட கால ஜனநாயக வரலாற்றைக் கொண்ட இலங்கை, பாரிய மனித …

    • 6 replies
    • 1.3k views
  10. கௌதாரிமுனையில் ஒரு உண்மைக் கஜினி! [Friday 2014-08-29 09:00] நிரப்ப முடியாத பல இழப்புக்களை போர் எங்கள் சமூகத்திற்கு தந்து விட்டுப் போயுள்ளது. அப்படி போரால் குதறப்பட்ட சிறுவர்களின் ஒருவன் தான் கௌதாரிமுனையைந் சேர்ந்த சுயன். படிப்பில் படு சுட்டியாகவும், துடிதுடிப்போடும் இருந்த சுயனின் வாழ்வை போர் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. செல் ஒன்று அவன் தலையை பிளந்ததில் அவன் உயிர் தப்பியதே அதிசயம் தான் என்றாலும், இப்போது அவனை அங்கவீனமும், இயலாமையும் துரத்திக் கொண்டே இருக்கின்றன. கஜினி என்ற திரைப்படத்தில் நினைவை அடிக்கடி மறக்கின்ற பாத்திரத்தை போல, இவனும் அடிக்கடி மறதி வியாதியால் அவதிப்படுகிறான்.http://www.seithy.com/breifNews.php?newsID=115786&category=TamilNews&language=t…

  11. யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி. யாழ் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எமது யாழ் பெரிய பள்ளிவாசல் 1967 ஆம் ஆண்டு சாதாரண ஒரு கொட்டகையாக அமைக்கப்பட்டு அதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினார்கள். 1990 ஆம் ஆண்டு வெளியற்றப்பட்டு மீண்டும் 2002இல் மீண்டும் மீள்குடியேறி வந்து பார்த்தபோது பள்ளிவாசலை உடைந்த நிலைமையில் கண்டோம். பின்னர் அதனை பெரிய கஷ்டத்தின் மத்தியில் ஒவ்வொரு தனவந்தர்களிடமும் பண உதவி …

    • 6 replies
    • 1k views
  12. புதிய அரசியலமைப்புக்கு அவசியமில்லை: பௌத்த பீடாதிபதிகள் கருத்து தற்போதைய சூழலில் புதியதொரு அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களோ தேவை இல்லை என பௌத்த தலைமைப் பீடங்கள் தெரிவித்துள்ளன. பௌத்த சமயத்தின் முக்கிய பிரிவுகளான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை என்பவற்றின் பீடாதிபதிகளே மேற்படி கருத்து வெளியிட்டுள்ளனர். புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று (18) புனித தலதா மாளிகையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளையும் சார்ந்த பிரமுகர்கள் - முக்கியமாக சட்டத் துறை சார் வல்லுனர்கள் - இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். கலந்துரையாடலின் முடிவில், தற்போது நாடு இருக்கும் சூழலில் புதிய அரசியலமைப்புக்கான தேவை எதுவும் இல்லை என்…

  13. றோ”விடம் போர்க்குற்ற ஆதாரங்கள் [10 டிசம்பர் 2010, வெள்ளிக்கிழமை 10:25 பி.ப இலங்கை] ”கிரவுண்ட் றிப்போர்ட்”என்ற இணையத் தளத்தில் விசுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின்தமிழாக்கம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் புதுடில்லியின் தென்தொகுதியின் (South Block) ஈடுபாடு தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. இங்கு தென்தொகுதி என்பது வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றையே குறிக்கிறது. தற்போது காத்திரமான போர்க் குற்ற ஆதாரங்கள் வெளிவருவதானது புதுடில்லிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புகளை தடுத்து நிறுத்திய சோனியாவின் அதிகாரம் பெற்ற புதுடில்லி முகவரது செயற்பாடுகளை இ…

  14. நோர்வே "கல்யாண தரகர்" வேலை மட்டும்தான் பார்க்க வேண்டும்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களுக்கான "கல்யாண தரகராக" உள்ள நோர்வே அந்த வேலையை மட்டும்தான் பார்க்க வேண்டும்- கல்யாண நாள் மற்றும் இடம் பார்ப்பது அதன் வேலை இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க சாடியுள்ளார். இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: அமைதியை உருவாக்க வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினால் இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் நேரடியாக பேச்சுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகள் வலு இப்போது குறைந்துவிட்டது. இதற்கு முன்னைய காலங்களிலிருந்து நாம் பாடங்களைப் பெற்றுள்ளோம…

  15. இப்படியும் நடக்கிறதாம் ! ஐநாவில் சிங்களத்தின் உதவித் தூதுவராகக் கடமையாற்றும் முன்னால் ராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியுமான சவீந்திர சில்வாவுக்கெதிராக அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டு அறிக்கையொன்றை அதன் புலநாய்வுத்துறை மூலம் தயாரித்து வருகிறதாம். வன்னிக் கொலைக்களத்தில் அப்பாவிகள் மேல் நடத்தப்பட்ட படுகொலைகளின் ஓளிப்படத்தொக்குப்புகளின் ஒரு பகுதி வெளிநாட்டுச் செய்திப் பிரிவுகளுக்குப் போய்ச் சேர உதவிய ரூபவாகினியின் ஒளிப்படப் பிரிவின் அதிகாரியொருவருக்கும் சவீந்திரவுக்கும் தொடர்பிருப்பதாகவும், இதன்போது பெருந்தொகையான பணம் கைமாறப்பட்டதாகவும் இவர்மேல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஐ. நா வில் கடமையாற்றும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் இவர் தனது முதல…

    • 6 replies
    • 1.5k views
  16. சிங்கள விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 யுத்த விமானமொன்று புத்தளம் மாவட்டத்தின் தும்மலசூரிய பொலிஸ் பிரிவிலுள்ள ஹெவன பகுதியில் சற்றுமுன் வீழ்ந்துள்ளது. விமானம் வீழ்வதற்கு முன்னர் விமானத்திலிருந்து விமானி வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளார் என விமானப்படை பேச்சாளர் குறூக் கப்டன் அன்டி விஜேசூரிய தெரிவித்தார். ரஷ்ய தயாரிப்பான இவ்விமானம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு வழக்கமான பயிற்சிநடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விமானம் வீழ்ந்தமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் தொழில்நுட்ப கோளாறினால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. http://www.tamil.dailymirror.lk/…

  17. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவது குறித்து தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் எனினும் அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக தனது கட்சி தமிழ் முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கும் என தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய…

  18. மஹிந்தவிடம் கோடிக்கணக்கான பணத்தைப் பெற்ற டக்ளஸ் - சுப்பையா பொன்னையா குற்றச்சாட்டு! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்களை இராணுவ வீரர்களாக அடையாளப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுப்பையா பொன்னையா குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவின் காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா பணத்தைப் பெற்றுக்கொண்டார். ஆனால் எங்களுக்கு 10,000 அல்லது 15,000 ரூபாய் வரையில் வேதனம்…

    • 6 replies
    • 652 views
  19. மட்டக்களப்பு செங்கலடியில் ஈ.பி.டி.பியை வெளியேறுமாறு பிள்ளையான் குழு ஆர்ப்பாட்டம்? மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலிருந்து ஈ.பி.டி.பி.யை உடனடியாக வெளியேறுமாறு கோரி பிரதேச மக்கள் கடந்த 23ம் திகதி முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தொடங்கியுள்ளனர். அண்மையில் மூன்று பேர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்

  20. மட்டக்களப்பு, பாசிக்குடா இராணுவ முகாமுக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் 06 பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறையிலிருந்து பாசிக்குடாவுக்கு வான் ஒன்றில் பயணித்தவர்களே விபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் பயணித்த வான் பாதையினை விட்டு விலகி குறித்த இராணுவ முகாமுக்குள் நுழைந்து எதிரே இருந்த கட்டடத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த வான் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் அவரை நாளை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வான் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் கூறினர். http://www.seithy.com/breifNew…

  21. கல்முனையில் மூன்று கடலாமைகள் கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடலில் மூன்று கடலாமைகள் இன்று (19) கரை ஒதுங்கியுள்ளன. கடந்த மாதம் இலங்கை கடல்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற பாரிய இரசாயன கப்பல் தீப்பற்றி எரிந்ததை அடுத்து நாடளாவிய ரீதியில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கி வருகின்றன. குறிப்பாக கடலாமைகளே அதிகம் கரையொதுங்குகின்றன. அந்த வகையில் இன்றும் மூன்று கடலாமைகள் கரை ஒதுங்கியுள்ளன.http://www.battinews.com/2021/06/blog-post_212.html

  22. தேர்தல் வாக்குறுதிகளை கைவிட சிறீலங்கா முடிவு திகதி: 16.05.2010 // தமிழீழம் சிறீலங்கா அரசு தேர்தல் பரப்புரைகளுக்காக தெரிவித்த ஊதிய அதிகரிப்பு என்ற கவர்ச்சியான விளம்பரத்தை கைவிடுவதற்கு அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் அரச தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டது போன்று 2,500 ரூபாய் ஊதிய அதிகரிப்புக்களை அரச ஊழியர்களுக்கு வழங்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. அதனை எதிவரும் ஜுன் 29 ஆம் நாள் சமர்ப்பிக்க உள்ள குறுகிய வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்போவதில்லை என நிதி அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த ஊதிய உயர்வை வழங்குவதற்கு 1.5 பில்லியன் ரூபாய்கள் தேவைப்படும் ஆனால் ஏற்கனவே வரவு செலவு…

    • 6 replies
    • 950 views
  23. ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி ( உச்சரிக்க முடியாத கரடுமுரடான பெயர் ) யாழ்ப்பாணம் சென்ற போது இனந்தெரியாதவர்கள் தாக்கியதாக தலையில் கட்டுப்போட்டவாறு அவர் அண்மையில் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார். அவரை தமிழ் மக்கள் தான் தாக்கினார்கள் என்று அரசாங்கமும், இல்லை இல்லை அரசாங்க புலனாய்வு பிரிவினர்தான் தங்களை தாக்கினார்கள் என்றும் ஜே.வி.பியும் மாறி மாறி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஜே.வி.பியினரை யார் தாக்கினார்கள் என்பதை பற்றி நாம் யோசித்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது சிங்களவர்களுடைய பிரச்சினை. அதைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் ஜே.வி.பி தமிழ் மக்கள் தொடர்பாக அண்மைக்காலத்தில் வெளிய…

  24. மோதல்கள் தொடந்தாலும் பேச்சுகளிலிருந்து அரசு விலகாது - நிமால் சிறிபால டி சில்வா மோதல்களோ, தாக்குதல்களோ இடம் பெற்றாலும் சமாதான நடவடிக்கைகளிலிருந்தோ, பேச்சுவார்த்தைகளிலிருந்தோ அரசாங்கம் விலகப் போவதில்லையென திட்டவட்டமாக அறிவித்திருக்கும் அரச பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா, உத்தேசப் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டுமென எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஆராய நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌரின் வருகைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு செவ்வாய்க்கிழமை சென்று விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நோர்வேத்தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார், சுவிற்சர்லாந்தில் அக்டோபர் 28,29 இல் நிபந்தனையற்ற விதத்…

  25. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா லந்தர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றதுடன் அவரின் முதலாவது தேர்தல் பேரணி கம்பஹா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போது வெடிகுண்டு தாக்கப்பட்ட காரையும் அவர் தனது பேரணிக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது . Tamilmirror Online || வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.