ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
By M.D.Lucias 2013-01-01 13:17:13 பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமானது 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத் தளமாக இலங்கையை பெயரிட்டுள்ளது. இலங்கையில் பல வரலாற்று தளங்கள், இயற்கை அழகுகள் மற்றும் விருந்தோபலுக்கு ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டே இலங்கைக்கு முதலிலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை சுற்றுலாத்துறையானது 2016 ஆண்டிற்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2344
-
- 5 replies
- 594 views
-
-
நீதி அமைச்சர் என்ற ரீதியில் நவனீதம்பிள்ளைக்கு விளக்கமளிக்கத் தயார்: ரவூப் ஹக்கீம் [Tuesday, 2013-08-13 09:32:46] எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, நாட்டின் நீதி அமைச்சர் என்ற ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக நியாயமான முறையில் விளக்கமளிப்பேன். இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. எனினும், நாட்டின் நீதியமைச்சர் என்ற ரீதியில் கடமைகளிலிருந்து விலகிச் செயற்பட மாட்டேன். என்னிடம் சில பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றின் சுயாதீனத்தன்மை, வழக்கு விசாரணைகள் கால தாமதமாக…
-
- 5 replies
- 513 views
-
-
மஹிந்தவின் அடுத்த திட்டம் அம்பலமானது! எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர்கள் கோரலாம் என்று கூறப்படுகின்றது. புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிப் பக்கத்தில் சுயாதீன அணியாக இருந்து புதிய பிரதமரை ஆதரிப்பதற்கே சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சரவையில் பதவிகளை வகித்தாலும் அவர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக இருந்தே பதவிகளை வகிக்கவு…
-
- 5 replies
- 550 views
-
-
சீனாவுடனான உறவால் இலங்கையை மற்றநாடுகள் தனிமைப்படுத்திவிட்டன – அமைச்சர் விஜேதாச ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையினால் பல நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தியுள்ளன விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே சர்வதேச நாணய நித்தியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனறும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் உறவுகளை தொடர்ந்தும் பேணுவதற்கு விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து தாம் விமர்சித்தமையால் அமைச்சர் பதவியில் இருந்…
-
- 5 replies
- 364 views
-
-
01 OCT, 2023 | 11:52 AM முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (01) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தினரது போராட்ட இடத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது?', 'சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு', 'கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’, ‘குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?’, 'தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?', 'சின்னஞ்சிறு சிறார்களும் …
-
- 5 replies
- 379 views
- 1 follower
-
-
நல்லூர் தேர்பவனியில் திருடர்களின் கைவரிசை: ரூபா 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் அபகரிப்பு. நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று நடைபெற்ற வேளை சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெண்களின் தங்கச் சங்கலிகளை அபகரிக்க முற்பட்ட பெண்கள் இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பொலிஸாரும் தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தோரும் ஆலய சுற்றாடலில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அதிகமானோர் சிவில் உடைகளில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் நான்குக்கும் மேற்பட்ட தாலிக…
-
- 5 replies
- 1.2k views
-
-
மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமைக்கு ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜயரத்ன, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 5 replies
- 3.2k views
-
-
இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே என்றும் அவர்கள் புத்தபிரான் பிறக்கமுதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர், முன்னாள் முதலமைசசர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌத்த மதமானது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மதத்தை தமிழர்கள் தான் முதன்முதலில் தழுவினர். தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன். சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள். அந்த காலத்தில் வழக்கில் இருந்த தொல்லியல் பௌத்த எச்சங்களே இன்ற…
-
- 5 replies
- 922 views
-
-
யாழ்.மண்ணின் சாதனையாளர்கள் கௌரவிப்பு மத்தி.மாணவனுக்கு தங்கம் நடப்பு வருடத்தின் பொதுநலவாயப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் நடைபெற்று வருகின்றன. 64 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்தப் போட்டியில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற 17வயதுக்கு உட்பட்ட பளுதூக்கலில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.விஸ்ணுகாந் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிச் சாதனை படைத்து யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவனுக்கு இன்றைய தினம் பாடசாலை ரீதியாக கௌரவிப்பு இடம்பெற்றது. ஒட்டுமொத்தமாக 227 கிலோ பளுவைத்தூக்கியே விஸ்ணுகாந் இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். பொதுநலவாயப் போட்டிகளில் கனிஸ்ட பிரிவு பளுதூக்கலில் இலங்கையின் உயர்மட்டப் பெறுபேறாக இருந்த 225 கிலோ விஸ்ணுகாந் மூலமாக 227 கிலோவ…
-
- 5 replies
- 1.9k views
-
-
வவுனியா சிங்களப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு உலர் உணவுகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க பொதுபல சேனா அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியா தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் மற்றும் தமிழ் பேசும் அதிகாரிகள் கடும் பாரபட்சம் காட்டுவதாக பொதுபல சேனா அமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. குறித்த, பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு குறைந்த பட்சம் சுகாதார வசதிகள் கூட தமிழ் அதிகாரிகளால் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியிருந்தது. இந்த நிலையில், வவுனியா தெற்கில் வாழும் சிங்கள மக்களுக்கு பொதுபல சேனா முன்னின்று சேகரித்த உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இன்று விநியோகம் செய்ய உள்ளனர். அதற்கான ஏ…
-
- 5 replies
- 637 views
-
-
வட மாகாண முதலமைச்சர் பதவிக்காக, அமைச்சர் பதவியைத் துறக்கத் தயார் – டக்ளஸ் 31 ஜனவரி 2013 வட மாகாண முதலமைச்சர் பதவிக்காக, அமைச்சர் பதவியை துறக்கத் தயார் என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், தேர்தலின் போது முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடுவதனை ஜனாதிபதி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் அமைச்சராக நீடிக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி நடாத்தும் உள்ளுராட்சி மன்றங்க…
-
- 5 replies
- 738 views
-
-
சர்வதேச நாடுகள் தலையிடுவது விதிமுறை மீறலாம்- ராஜபக்ச சொல்கிறார் செவ்வாய், 5 பிப்ரவரி 2013( 09:05 IST ) ''இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிடுவது விதிமுறைகளை மீறிய செயல்'' என அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் 65 வது சுதந்திர தின விழாவில் பங்கேற்று பேசிய அதிபர் ராஜபக்சே, ஐ.நா. அவையின் விதிமுறைகளை மேற்கோள் காட்டி பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்த ஒரு நாட்டுக்கும் உரிமை இல்லை என கூறினார். இம்மாத இறுதியில் ஐ.நா. அவையின் மனித உரிமைகள் ஆணையக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் ராஜபக்ச இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நடை…
-
- 5 replies
- 610 views
-
-
சர்வதேச பாடசாலைகளில் தாய்மொழி, சமயம் மற்றும் வரலாறு போன்ற பாடங்களை கற்பிக்கும் வகையில் சட்டங்களை இயற்றுமாறு கல்வியமைச்சருக்கும் கல்வியதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். நாட்டிற்கு பொருத்தமான மற்றும் எதிர்கால் வேலைவாய்ப்புக்கு பொருத்தமான கல்விமுறையை ஏற்படுத்தும் வகையிலேயே சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார். கல்வியமைச்சின் செயற்றிடங்களை ஆராயும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிள்ளைகள் இருப்பதனால் தான் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.அதேபோல பிள்ளைகளும் ஆசிரியர்களுக்காகவே இருக்கின்றனர். ஆகையால், நல்ல கல்வியை இந்நாட்டு பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்காக கல்வித்துறையில் இரு…
-
- 5 replies
- 568 views
-
-
பாரதீய ஜனதா துணைத் தலைவரும் டெல்லி மேல் சபை எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் தலைமையில் 3 பேர் கொண்ட குழு இலங்கை செல்கிறது. வருகிற ஜூன் 4-ந்தேதி அவர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்கிறார்கள். அங்கு அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே, ராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கை மந்திரிகள் அதிகாரிகளை சந்திக்கிறார்கள். இலங்கையின் வடக்கில் உள்ள தமிழர் பகுதிகளுக்கும் சென்று பார்வையிடுகிறார்கள். தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளையும் பார்வையிட திட்டமிட்டுள்ளனர். இது பற்றி வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் கேட்டபோது, பாரதீய ஜனதா குழு வருகை பற்றி தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றார். இதே போல் இந்திய தூதரக அதிகாரி…
-
- 5 replies
- 715 views
-
-
வன்னியில் முல்லைத்தீவில் மீளக்குடியேறிய தமிழ்மக்கள் எதுவுமே இல் லாத வெறுமையுடன், அநாதைகள் போல் அல்லாடுகின்றனர். எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கணவனை இழந்த விதவைகளும், பிள்ளை களை இழந்த பெற்றோருமாக உதவி செய்ய எவரும் இன்றி அவதிப்படுகிறார்கள். முல்லைத்தீவு,மே22 வன்னியில் முல்லைத்தீவில் மீளக்குடியேறிய தமிழ்மக்கள் எதுவுமே இல் லாத வெறுமையுடன், அநாதைகள் போல் அல்லாடுகின்றனர். எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கணவனை இழந்த விதவைகளும், பிள்ளை களை இழந்த பெற்றோருமாக உதவி செய்ய எவரும் இன்றி அவதிப்படுகிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளுக்கும் சென்று மீளக்குடியேறிய மக்களை நேரில் சந்தித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் தமது அவலங்களை…
-
- 5 replies
- 636 views
-
-
திருமணமாகாத லெப்.ஜெனரல் பாரமி குலதுங்கவின் மனைவி, பிள்ளைகளுக்கு பிரதமர் அனுதாபம் [03 - July - 2006] [Font Size - A - A - A] பன்னிப்பிட்டியவில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியான திருமணமாகாத லெப். ஜெனரல் பாரமி குலதுங்கவின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். லெப். ஜெனரல் பாரமி குலதுங்கவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு, அவரது வீட்டிற்குச் சென்ற பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, பிரதமர் என்பதற்காக தனது அனுதாபக் கடிதத்தை அங்கு கையளித்தார். அக் கடிதத்தில் இராணுவ அதிகாரியின் பிரிவால் துயருறும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்…
-
- 5 replies
- 2.3k views
-
-
யாழில் எம்.ஜி.ஆர். சிலைக்கு தார்பூசி சேதப்படுத்தியது சிங்கள இராணுவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவச்சிலைகளை சிங்கள இராணுவத்தினர் தார்பூசி அடித்து சேதப்படுத்தியுள்ளனர். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க பெரும் பங்காற்றிய எம்.ஜி.ஆருக்கு மதிப்பளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களால் அவருக்கு உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டது. இந்தச் சிலை கடந்த ஆண்டு இந்திய சிற்பக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. யாழில் ஊரடங்குச் சட்டத்தினை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிங்கள இராணுவத்தினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த ஊர…
-
- 5 replies
- 1.8k views
-
-
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் படையினரால் ஒட்டப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்தாவின் சுவரொட்டிகளுக்கு மாட்டு சாணகம் வீசப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் 'தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்தா', 'மகத்துவம் மிக்க ஜனாதிபதி மஹிந்தா' என குறிப்பிட்ட சுவரொட்டிகள் நீலம், சிவப்பு, பச்சை நிறங்களில் வடக்கு எங்கும்; நேற்று முன்தினமிரவு ஓட்டப்பட்டுள்ளது. இதில் வவுனியா, வைரவபுளியங்குளம், பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் பெயர் பலகையில் ஒட்டப்பட்டிருந்த மஹிந்தாவின் சுவரொட்டிகள் மீதே சாணகம் வீசப்பட்டுள்ளது. இதே வேளை யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தாய் நாட்டின் தீர்ப்பு மகிந்த என்று எழுதப்பட்ட வர்ண சுவரொட்டிகள் படையினரால் அதே போன்று இரவோடிரவாக ஒட…
-
- 5 replies
- 916 views
-
-
சிறிலங்கா கடற்படைக்கு தாய்லாந்திடம் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கொள்வனவு? சிறிலங்கா கடற்படைக்கு தாய்லாந்திடம் இருந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில் இயங்கும், அரசுத் துறை நிறுவனமான, பாக்கொக் டொக் நிறுவனத்திடம் இருந்தே ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கொள்வனவு செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. பாங்கொக் டொக் நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவொன்று, கடந்த 13ஆம் நாள் .சிறிலங்கா கடற்படைக்கு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வழங்குவதற்கான தமது திட்ட முன்மொழிவையும், அது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையையும்…
-
- 5 replies
- 562 views
-
-
உலகின் புராதன ஆவணங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோவின்கலாசாரப் பட்டியலில் இந்துக்களின் `இருக்குவேதம்' [21 - June - 2007] கிறிஸ்துவுக்கு முன்னர் 1800-1500 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்ட இந்துக்களின் புராதன இருக்கு வேதத்தின் 30 கையெழுத்துப் பிரதிகளை ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) கலாசாரப் பட்டியலில் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கு உதவும் முகமாக மரபுரிமைப் பொக்கிஷங்களை பாதுகாக்கும் ஐ.நா.வின் இப் பட்டியலில் இவ்வருடம் உலகின் முதலாவது முழு நீளத் திரைப்படம், சுவீடன் தொழிலதிபர் அல்பிரட் நோபலின் சரித்திர ஆவணங்கள் மற்றும் நாட்டின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் வழக்கு …
-
- 5 replies
- 2k views
-
-
சிறீலங்கா இராணுவத்தினர் இன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டும் ஒரு குழந்தை படுகாயமடைந்துள்ளது. இந்த தாக்குதல் இன்று மாலை 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தமிழீழ காவல்துறையினர் அறிவித்துள்ளனர். http://www.tamilseythi.com/tamileelam/kili...2008-09-27.html
-
- 5 replies
- 1.4k views
-
-
‘மிதவாத நோக்குடன் செயற்பட்டு தென்னிலங்கை அரசியல்வாதிகளை வெற்றி கொள்ள முடிந்தது என்று சரித்திரமே இல்லை. பண்டாரநாயக்கா – செல்வா உடன்பாடு, டட்லி சேனாநாயக்கா – செல்வநாயகம் உடன்பாடு போன்றவை இரு தரப்பு மிதவாதப் போக்குடன் தான் தயாரிக்கப்பட்டன. ஆனால் அவை ஈற்றில் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் கைவிடப்பட்டன. ஆனால் தீவிரவாதிகள் எனக் கருதப்படும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது பலதையுந் தருவதாகக் கூறினார்கள். இளைஞர்கள் ஏற்பதாகக் கூறியிருந்தால் அதைத் தந்துமிருப்பார்கள். ஆனால் ஆயுதங்கள் மௌனித்த நிலையில் அவற்றைத் தர மறுக்கின்றார்கள்.’ என்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண செய்தியாளர் ஒருவருக்கு முதல்வர் அவர்கள் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் மேலும…
-
- 5 replies
- 558 views
-
-
19 Mar, 2026 | 01:45 PM வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம் | …
-
-
- 5 replies
- 410 views
-
-
உருத்திரகுமாரனின் சகாவிற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி! ஜன 16, 2013 கே.பியால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் விசுவநாதன் உருத்திரகுமாரனின் சகாவான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 1952ஆம், 1956ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 1959ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை அணியின் தடகள வீரராகக் கலந்து கொண்ட எதிர்வீரசிங்கம் பின்னர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக தமிழ் மக்களிடையே வெளிப்பாட்டார். கே.பியின் தலைமையில் அனைத்துலக செயலகம் இயங்கிய 1990களில் இவரையும், உருத்திரகுமாரனையும் தமிழீழ விடுதலைப் ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் வண்ணம் ஊடகங்கள் செயற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஊடகங்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த அவர், இளைய சமூகத்துக்கு ஊடகங்கள் பிழையான அர்த்தங்களை வழங்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கையில் தற்போது ஊடக சுதந்திரம் உள்ளது. யாரையும் விமர்சனம் செய்யமுடியும்.எனினும் நல்லிணக்கம் போன்ற விடயங்களை பரிகாசம் செய்யும் வகையில் ஊடகங்கள் செயற்படக்கூடாது என்று அவர் கோரியுள்ளார். நல்லிணக்கம் என்பது சர்வதேச சூழ்ச்சியின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் இதனால் நாடு பிளவுப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், உண்மையான நல்லிணக்கத்தை பாதிக்கும். …
-
- 5 replies
- 478 views
-