ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
இந்தியா, அயர்லாந்துப் பிரதிநிதிகள் வருகை: திசைமாறுகிறதா இலங்கை அமைதி முயற்சிகள்? இலங்கை அமைதி முயற்சிகள் மற்றொரு திசையை நோக்கி நகருவதைப் போல் இந்தியா மற்றும் அயர்லாந்து தூதுவர்களின் வருகை இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் திடீர் கரிசனை, அயர்லாந்தின் நுழைவு மற்றும் மகிந்தரின் நேரடிப் பேச்சுக்கான இரகசிய செயற்பாடு ஆகியவை அமைதி முயற்சிகளின் அடுத்த கட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விடயங்களுக்குச் செல்லும் முன்பாக கடந்த 4 ஆண்டுகாலம் நடந்த "அமைதி" முயற்சிகள் தொடர்பாக ஒரு பார்வையை செலுத்துவோம். 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் ஆறு சுற்றுப் பேச்சுக்கள் ஒரே மூச்சாக ஓடி விடுதலைப் பு…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழர்கள் கொல்லப்பட்ட போது பால் சோறு கொடுத்து கொண்டாடிய வரலாறும் உள்ளது: வியாளேந்திரன் கடந்த கால அரசாங்கத்தினால் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அதை வரவேற்று பால் சோறு கொடுத்து, தேசியக் கொடியை பறக்கவிட்டு கொண்டாடிய வரலாறும் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பொதுபலசேனா, ராவணாபலய போன்ற பௌத்த அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கியதால்தான் இந்த நாட்டின் சிறுபான்மை இனமான தமிழ், முஸ்லிம் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி நல்லாட்சிக்கு வாக்களித்தனர். இந்த நல…
-
- 5 replies
- 686 views
-
-
வெள்ளி, 03 ஜூன் 2011 15:50 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது குறிப்பிடத்தக்க யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இராணுவம் பொது மக்கள் எவரையும் கொல்லவில்லை. ஆனால் யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் உரிமை மீறல்கள் ஏதாவது இடம் பெற்றிருந்தால் அது பற்றி விசாரிக்கத் தயார். குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நாம் தயாராக உள்ளோம் என்று அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போது தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை இலங்கை அனுபவம் என்ற சர்வதேச இராணுவக் கருத்தரங்கின் இறுதியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போதே அவர் இப்படிக் க…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
19வது திருத்தம் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும்!– இரா.சம்பந்தன் [ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 08:58.41 AM GMT ] அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஸ்தாபிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைகின்றது. நாடாளுமன்ற அதிகாரங்களை கவனத்தில் கொள்ளாது கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எ…
-
- 5 replies
- 533 views
-
-
முப்படையினரின் குழந்தைகளுக்கான சலுகை கருணா, டக்ளஸ் அணியினரின் பிள்ளைகளுக்குமா? நாடாளுமன்றில் மகேஸ்வரன் கேள்வி பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும்போது முப்படையின ரின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகை, கருணா அணியினரினதும் டக்ளஸ் அணியினரினதும் பிள்ளைகளுக்கும் வழங் கப்படுமா? ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் இவ்வாறு நேற்று நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பினார். அரச பாடசாலைகளில் முதலாம் தரத் திற்கு மாணவர்களைச் சேர்ப்பது தொடர் பாக கிளப்பப்பட்ட சர்ச்சையின் போதே மகேஸ்வரன் எம்.பி. இவ்வாறு ஒரு கேள் வியை எழுப்பினார். மாணவர்கள் சேர்க்கப்படும் போது முப் படைகளின் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு விசேட சலுகை…
-
- 5 replies
- 2k views
-
-
வன்னி மக்களுக்கு சொந்தமான பணத்தையும் சொத்துக்களையும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். இந்த சொத்துக்கள் யாவும் அரச மாளிகையில் வசிக்கும் கே.பி.யிடமே உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களது மனைவியர் மற்றும் அவர்களது சகோதரிகளுக்கென ஐக்கியதேசியகட்சியின் ஐக்கிய மகளிர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில், மத்திய வகுப்பினரது வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக விளங்குகின்ற திட்டங்களை முடக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களே அதி…
-
- 5 replies
- 530 views
-
-
இந்தியாவுடன் கோபமோ, பகையோ எமக்கு இல்லை - இலங்கை இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், இலங்கை - இந்திய உறவுகளில் விரிசல் இன்றி சுமூக நிலை காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது என்பதை அவதானித்து அதற்கு ஏற்றாற்போல் பரிமாணமாக நகர விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான உறவு குறித்து பாராளுமன்றில் இன்று (05) எதிர்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், இந்தியாவுடன் இலங்கைக்கு கோபமோ, பகையோ இல்லை என கூறியுள்ளார். மேலும் இலங்கை - இந்திய உறவை சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்து கட்சி பாராளுமன்ற உறு…
-
- 5 replies
- 728 views
-
-
'கோட்டா வெற்றியடைந்தால் 30 வருடங்களுக்கு கடினம்' “ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால் இன்னும் 25 அல்லது 30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை காண முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால் இன்னும் 25 அல்லது 30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை காண முடியாது. எமது வாழ்க்கையில் அத…
-
- 5 replies
- 707 views
-
-
24 FEB, 2025 | 04:52 PM தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (2) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம். அவர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும் பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம். அதற்கு எமக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது தேவை. அதற்குள் அரசியல் செய்ய முயன்று அதனை யாரும் குழப்ப வேண்டாம் என கோருகிறோம்…
-
-
- 5 replies
- 489 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் அாியாலை, நாவலடி பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கள்ளு தவறணையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வாள்வெட்டுக்கு உள்ளான நபர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவரை தேடி வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஊரடஙக-நரததல-யழல-வளவடட/175-247310
-
- 5 replies
- 687 views
-
-
சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி டி பி விஜதுங்கா காலமானார். இவர் சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததை அடுத்து சிறீலங்காவின் ஜனாதிபதியானார். சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா ஜனாதிபதி ஆகும் வரை இவரே ஜனாதிபதியாக அமர்ந்திருந்தார். தமிழ் மக்களை சிங்களப் பெரு விட்சத்தைப் பற்றிப் படரும் சிறுகொடிகள் என்று வர்ணித்ததுமின்றி.. புலிகள் அமைக்கப் போகும் தமிழீழத்தில் என்ன வளம் இருக்கிறது என்று கேள்வியும் கேட்டவர். இவருடைய ஆட்சிக்காலத்திலும் இவரும் சில இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு தோல்விகளை சந்தித்தவர் ஆவார். 1922 மாசித் திங்கள் 15 ம் நாள் பிறந்த இவர்.. சிறீலங்காவின் பிரதமராகவும் கடமையாற்றியுள்ளார…
-
- 5 replies
- 1.5k views
-
-
இராணுவத்தின் கொடுந்தாக்குதலைச் சந்தித்துவரும் இலங்கைத் தமிழர்களின் இன்னலைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மேலும் அக்கறை காட்ட வேண்டும், இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்றவற்றை உடனடியாக அனுப்பி உதவ வேண்டும், இதற்குத் தடங்கல்கள் வருமானால் மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும் என்று தமிழ்நாட்டின் 10 பெரிய நகரங்களில் நடத்திய கருத்துக் கணிப்பிலிருந்து தெரிகிறது. சென்னை, கோயமுத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இம் மாதம் 6 முதல் 11 வரையில் 1,031 பேர்களிடம் கருத்து கேட்டபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமம் சார்பில், சமூகத்தின் அனைத…
-
- 5 replies
- 1.4k views
-
-
குமுதம் ரிப்போட்டர் 11.12.2008ல் திரு.சோலை 'பயங்கரவாத கோரமுகம்' என்ற தலைப்பில் மும்பாயில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய கருத்துக்களை எழுதும் போது இவ்வாறு கேட்டிருக்கிறார். விடுதலைப்புலி களுக்கு வெங்காயம் போகிறதா வெடிகுண்டு போகிறதா என்பதனை இராமேஸ்வரம் கடற்பரப்பை கடலோரக் காவல்படை கண்காணித்து வருகிறது. அதேபோல கராச்சியிலிருந்து மும்பை வரையுள்ள கடற்பரப்பை கடலோரக் காவல்படை கண்காணிக்கவில்லையா? விடுதலைப்புலிகளின் மையங்களை இந்திய செயற்கைக்கோள் துல்லியமாகப் படம்பிடித்துத் தருகிறது. அந்தப் படங்கள் சிங்கள ராணுவத்திற்குச் சென்று சேருகின்றன. அதே போல் அரபிக் கடல் அலை அடிக்கும் நமது கடற்கரையை செயற்கைக் கோள்கள் படம் பிடிப்பது இல்லையா? இதே குமுதம் ரிப்போட்டரில் வந்த வம்பான…
-
- 5 replies
- 1.8k views
-
-
பிரித்தானிய பிரதமர் யுத்தத்iதை நிறுத்தக் கோரி இலங்கை ஜனாதிபதிக்கு நேரடிக் கடிதம் அனுப்பியுள்ளார் : பிரித்தானிய பிரதமர் கோல்டன் பிரவுன் இலங்கை ஜனாதிபதிக்கு யுத்தத்தை நிறுத்துமாறு கோரி நேரடியாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வன்னியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கையால் பொதுமக்கள் பெருமளவு இன்னல்களை எதிர்கொள்வதாகவும் அதனால் யுத்தத்தை நிறுத்தி போர்நிறுத்தம் ஒன்றுக்கான வழியை ஏற்படுத்துமாறும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் இதனால் மிகவும் வேதனையடைந்து தமக்கு தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கை அரசாங்கம் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரை அழைத…
-
- 5 replies
- 805 views
- 1 follower
-
-
கல்முனை தமிழ் பிரதேச தரமுயர்விற்கு தமிழ் தேசிய வாதிகள் சிலரே தடை ஏற்படுத்தினர் - இனிய பாரதி பாறுக் ஷிஹான் கல்முனை தமிழ் பிரதேச தரமுயர்விற்கு தமிழ் தேசிய வாதிகள் சிலரே தடை ஏற்படுத்தினர் என உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் அம்பாறை ஊடக அமையத்தில் திங்கட்கிழமை(25) இரவு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயமானது கனிந்து வந்த பழத்தை தட்டி எறிந்தவர்கள் சிலர்.இந்த …
-
- 5 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகள் - கருணா பிளவு: நடந்தது என்ன என்று கூறுகிறார் அலிஸாஹிர் மெளலானா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயத்தில் நான் செய்த பங்களிப்பை தாய்நாட்டுக்கு செய்த கடமையாக எண்ணுகிறேனே தவிர, அதனை வாழ்த்துக்கும் விருதுக்கும் உரிய செயலாக பார்க்கவில்லை" - என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரமுகரும் தற்போது அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வருபவருமான அலிஸாஹிர் மெளலானா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலக்கப்பட்ட விடயம் தொடர்பாக அப்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அளித்த விசேட செவ்வி ஒன்றில் அவர் மேலும் தெரிவித்ததாவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஓர் உரைக்கு 2 நிமிடங்களே வழங்கப்படும் நிலையில், தனது முதலாவது உரையில் சிறுவர் தொடர்பான விடயங்களை அனந்தி சசிதரன் ஐ.நா மனித உரிமை அவையில் ஆங்கில மொழியில் முன்வைத்தார். பலரும் அதிசயிக்கும் வகையில் ஒரு சில நிமிடங்களில் வேறொரு அரச சார்பற்ற நிறுவனத்தின் பெயரில் தனது இரண்டாது உரையையும் ஒரே நாளில் அனந்தி முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. இறுதிவரை அமைதியாக இருந்து தனது உரையை அவர் முன்வைத்தமையால் சிறிலங்கா அரசால் அதைக் குழப்பமுடியாது போயிற்று. ஒரே நாளில் இரண்டு உரைகளை தனக்கெட்டிய ஆங்கில அறிவுடன துணிகரமாகவும் கச்சிதமாகவும் அவர் முன்வைத்திருந்தமை சபையில் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் மனதையும் தொட்டிருந்தது. தனது இரண்டாவது உரையில் இன அழிப்புக்கான நியாயம் கோரும் சர்வ…
-
- 5 replies
- 701 views
-
-
தமிழகத்தில் இருந்தான ஒரு பார்வை.................. ஈழப் பிரச்சனையை கையிலெடுக்கும் அதிமுக...சும்மா இருக்குமா திமுக? சென்னை: காட்சிகள் வேக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என்ற ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வர். ஈழப் படுகொலைகளுக்காக ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிப்பேன் என முதல் நாளே அறிவித்துள்ளார். தமிழுணர்வாளர்கள் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள்! ஈழப் படுகொலைகளுக்கு உற்ற துணைவர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தயாராக இல்லாத நிலையில், இதில் மாநில முதல்வரான ஜெயலலிதா முயற்சி என்னவாக இருக்கும்... எந்த அளவு பலன் தரும்... எந்த அளவு உண்மையாக …
-
- 5 replies
- 2.1k views
-
-
03 SEP, 2023 | 10:09 AM மத்திய, சப்ரகமுவ, மேல்,தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமெனவும் சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும…
-
- 5 replies
- 665 views
- 1 follower
-
-
தோல்வியுற்ற நாடுகளின் பட்டியலில் முதன்மை இடம் இலங்கைக்கே! ` போரழிவுகளினாலும், ஆழிப்பேரலை, மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தின் பேரழிவுகளினாலும் அல் லாடும் இலங்கைத் தீவை, பொருளாதாரச் சீரழிவு என்ற மற்று மொரு நெருக்கடி மோசமாகத் தாக்கி முடக்கும் ஏதுநிலைகள் தென்படுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருப்பதாக அரசியல் தலைவர்களும், அவர்களுக் குச் சார்பான புள்ளி விவரங்களை அள்ளி வெளியிடும் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினரும் வாய்வீச்சாக அறிவித்தாலும் கூட, களத்தில் என்னவோ மக்களின் பாடு திண்டாட்டமாகத் தான் இருக்கின்றது. வடக்கு , கிழக்கை தமிழர் தாயகத்தை பொறுத்தவரை போரழிவு மற்றும் ஆழிப்பேரலைப் பேரழிவுகளிலிருந்து அப் பகுதி மக்கள் இன்…
-
- 5 replies
- 2.7k views
-
-
முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ” ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் பற்றிய செய்திகள் அண்மையில் அம்பலமாகியுள்ள நிலையில், முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்ய உத்தரவிட்டவர், மற்றும் கொலையாளி யார் என்பது தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்துவேன்” என மனோ கணேசன் தெரிவித்தார். இந்நிலையில் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சைய ஏற்பட…
-
- 5 replies
- 604 views
-
-
இலங்கை அரசின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவரும் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கனடிய விஜயம் தொடர்பாக கனடியப் பாராளுமன்றத்தில் கனடிய குடிவரவு அமைச்சரிடம் கேள்விகள் நேரத்தில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் கோரும்படி ஜிம் கரிஜியானிஸ் பா.உறுப்பினரிடம் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கை அரசின் போர்க்குற்றங்களை நியாயப்படுத்திவரும் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கனடிய விஜயம் தொடர்பாக கனடியப் பாராளுமன்றத்தில் கனடிய குடிவரவு அமைச்சரிடம் கேள்விகள் நேரத்தில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் கோரும்படி கனடாவின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதியில் வாழும் தமிழ் அன்பர்கள் சிலர் மேற்படி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கனடிய லிபரல் கட்சியின் பல…
-
- 5 replies
- 1.4k views
-
-
குருணாகல் போதனா வைத்தியசாலைக்குள் ஸ்டெதஸ்கோப்புடன் நுழைய முற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் குருணாகல், பொத்துஹெர, ஹந்துகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என கூறப்படுகின்றது. அதோடு சந்தேக நபரிடம் இருந்து களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் வைத்திய அடையாள அட்டை மற்றும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://jvpnews.com/article/fake-doctor-caught-in-a-kurunegala-hospital-1736143845
-
- 5 replies
- 535 views
-
-
கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த மனோ கணேசன் போன்றோர் பொகவந்தலாவை முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வந்ததற்காக அவர்களை கேவலப்படுத்தி மாணவர்கள் முன்பாக பாடசாலையை விட்டு வெளியேற்றியவர்கள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயலை கண்டிப்பதற்கு கொஞ்சமும் அருகதையற்றவர்கள் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதாவது, ராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குள் சென்று அங்குள்ள குற்றவாளிகளைத்தான் அச்சுறுத்தினார். ஆனால் கடந்த அரசில் அமைச்சராக இருந்த மனோ கணேசன் போன்றோர் முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் சண்டித்தனம…
-
- 5 replies
- 454 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறான நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கின்றார்கள் என்பதனை ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும் என கூறியுள்ளார் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை. தங்களது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கடவுள் வழங்கியுள்ள அறிவைக் கொண்டு யார் இந்த நாட்டுக்கு தலைமை தாங்கப் பொருத்தமானவர்கள் என்பதனை மக்கள் தாமாகவே தீர்மானிக்கவேண்டு மென அவர் கூறியுள்ளார். தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமாக நடைபெறுவதற்கு அனைத்து வேட் பாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். செல்வந்தர்களுக்கும், ஏழைகள…
-
- 5 replies
- 641 views
-