ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
யாழ்.நெல்லியடி பகுதியில் அநாவசியமாகவீதிகளில் கூடி நின்று பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்களுக்கு செல்லும் மாணவிகள், மற்றும் வீதியால் செல்லும் பெண்களுடன் சேஷ்டை புரிந்தவர்கள் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தவர்கள் என 23 இளைஞர்களை புதன் கிழமை மாலை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிசார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இளைஞர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்கள் முன்னையில் இளைஞர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தனர். அதன் போது காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2 க்கு பொறுப்பான பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பி,ஜவ்வர் பெற்றோருக்கும் இளைஞர்களுக்கும், அறிவுரைகளும் வழங்கி இருந்தார். அவர் பின…
-
- 4 replies
- 498 views
-
-
வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை சீரமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன. போரினால் அழிக்கப்பட்ட வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை 150 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்புச் செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்கா தொடருந்து திணைக்களமும், இந்தியாவின் இர்கோர்ன் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கையெழுத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கமைய பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதை இந்தியாவின் உதவியுடன் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே ஓமந்தை தொடக்கம் பளை வரையிலான தொடருந்துப் பாதையை புனரமைப்பதற்கான புர…
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது உறவினர்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம், தனி மனித உரிமை, நாடாளுமன்ற சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும், என அறிக்கை விடும் சர்வதேச அமைப்புகள் இதனை செய்ய முடியா விட்டால் இந்தியா உட்பட சர்வதேச அமைப்பபுகள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமாக கூறினார். நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்:- வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பனர்களின் உறவினர்களை கடத்தி வாக்கெடுப்பில் கலந்து கொள…
-
- 4 replies
- 2.2k views
-
-
அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் பிரபாகரனை நான் எவ்வாறு விளங்கிக் கொண்டேன் என்பதனைக்கூறுமாறு என்னை நிர்ப்பந்தித்தன. பிரபாகரன் என்று சொல்லாமல் தேசியத் தலைவர் என்று அவரை அழைக்கவே விரும்புகிறேன். என் புரிதலில் பிரபாகரன் அவ்வாறானவர் தான். மேலும், தேசியத்தலைவரை மெச்சுவதனாலும்இ தேசிய விடுதலைப் போராட்டம் மீதான ஆர்வத்தினாலும் என் வாழ் நாளை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாது இடர்ப் படுகின்றேன். அது வெறும் அல்லது ‘சும்மாவான’ இடர்ப்பாடு அல்ல. ஆனால், “அண்ணை கவனம்! அண்ணையை கவனமாகப் பாருங்கோ!” என்று எழுதிவைத்துவிட்டு அனுராதபுரம் விமானப் படைத்தள தாக்குதலில் களப்பலியான லெப்.கேணல்.இளங்கோவனுக்கு முன்னாலேயோ அல்லது ‘அண்ணை’ பெயர் சொல்லி தம்மை கொடையாகக் கொடுக்கின்ற கரும்புலிகள் முன்னாலேயோ என் இ…
-
- 4 replies
- 2.4k views
-
-
தனது அனுமதி இன்றி சிறிலங்கா ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை சந்திக்க கூடாது என சோனியா கடுமையான கட்டுப்பாட்டினை விதித்துள்ளார்.இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தியின் அனுமதியின்றி, இலங்கையின் அரசியல் வாதிகளைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இந்திய உயர்மட்டத் தலைவர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பீடத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் இலங்கையில் நடைமுறைக்கு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகள், உயர்மட்ட அரசியல் தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் போன்றோரைச் சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்படு மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அர…
-
- 4 replies
- 762 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் இன்று (07) இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் குழப்ப நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அழைப்பு விடுக்கப்படாத நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அங்கு வந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்த நிலையில், சந்திரிகாவின் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, அவர் அங்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது. சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைப்பாளர்கள் அங்கிருந்து சென்றதாகவும், இறுதியில் சந்திரிகாவும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 4 replies
- 960 views
-
-
சிங்களப் படைகளிற்கு வன்னிப்பெருநிலப்பரப்பை புதைகுழியாக மாற்ற மக்கள் அனைவரும் அணிதிரள்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது பா.நடேசன் மேலும் தெரிவித்ததாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அரச பயங்கர வாதத்தினால் 53 மாணவிகள் குண்டுவீச்சினால் பலியெடுக்கப்பட்டனர். இப்படுகொலை தமிழினத்திற்கு மட்டுமல்ல பன்னாட்டுச் சமூகத்திற்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் முகத்தை வெளிப்படுத்தி நின்றது. சிங்களப் பயங்கர…
-
- 4 replies
- 2.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 32ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், இலங்கை தொடர்பில் பல்வேறு பட்ட வாத பிரதிவாதங்கள் ஐ.நா சபையின் வெளியிலும் உள்ளேயும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதில் இலங்கையின் நிலைபாடுகள் எப்படி இருக்கப்போகின்றன? இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு ஐ.நா சபையின் நிலைப்பாடு எப்படியான தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்பது பற்றி லங்காசிறி 24இன் செவ்வியில் ஆராயப்பட்டுள்ளது. மேலும் தமிழர் அரசியலில் ஐ.நா சபையின் பங்களிப்பு சரியானதாக இருக்கின்றதா? தமிழர் அரசியல் ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கம் செலுத்துகின்றதா? என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு பிரான்சஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும…
-
- 4 replies
- 492 views
-
-
சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தி, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற எடுத்த முயற்சி மீண்டுமொருமுறை தோல்வியடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச ரீதியாக சிறீலங்கா தொடர்ச்சியாக பின்னடைவுகளை சந்தித்து வருவதை இந்த சம்பவம் எடுத்து காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே சிறிலங்காவின் தரப்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வொசிங்டனில் உ…
-
- 4 replies
- 912 views
-
-
இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது – பெரமுனவை கடுப்பேற்றிய ஹூல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான இரட்ணஜீவன் ஹூல் நேற்று (05) யாழ்ப்பாண ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் தொடர்பில் பதிலளித்த அவர், ‘தேர்தலில் பலர் அளாப்புவது (ஏமாற்றுவது) வளமை. அந்த அளாப்பத்தை தடுப்பது எமது கடமை. எனவே அளாப்புபவர்கள் எங்களை மிரட்டினால், தாம் அளாப்புவதை தடுக்க மாட்டோம் என்று நினைக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் சில ஊடகங்கள் பச்சையாக பொய்களை எழுதி வருகின்றார்கள். இவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது. உங்களது வாக்கு…
-
- 4 replies
- 633 views
-
-
"ஹசித மடவலவின் கொலை என்னை சிக்க வைக்க ராஜபக்ஸவினர் மேற்கொண்டது" மேர்வின் சொன்னார்? சிங்கள இணையம் கூறுகிறது களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையானது தன்னை சிக்கவைக்க ராஜபக்ஷவினர் மேற்கொண்ட கொலை எனவும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்ட பின்னர், ராஜபக்ஷவினர் செய்த அனைத்தையும் வெளியிட போவதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கூறியுள்ளார். தனக்கு எதிராக களனி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை தூண்டி விடுவது கோத்தபாய ராஜபக்ஷ என தெரிவித்துள்ள அமைச்சர், அவர்கள் என்னுடன் இருந்தவர்கள், எனக்கு உதவியவர்கள், நான் அரசியல் மூலம் தாக்குவேன், ஆனால் ஒருபோதும் கொலை செய்ய மாட்டேன். கொலை செய்யப்பட்…
-
- 4 replies
- 613 views
-
-
தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு லீற்றர் ''கள்ளு'' 40 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=13666
-
- 4 replies
- 792 views
-
-
(நா.தனுஜா) இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் பெரிதும் மோசமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன், போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதாக அளித்த வாக்குறுதியையும்மீறி, 2020 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சட்டத்தைப் பயன்படுத்தி வந்திருப்பதாகவும் பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் ச…
-
- 4 replies
- 736 views
-
-
2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உத்தியோகபூர்வ கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வழிமுறைகள் 2021 இறுதியளவில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 3 பில்லியனிற்கு மேலாகக் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் என்பதனை இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றின் பொருளாதாரத் தாக்கத்தினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கும் வெளிநாட்டுத் துறையின் பாதகமான அபிவிருத்திகளினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களுக்கும் மத்தியில் இலங்கைப் பொருளாதாரம் 2021 ஆண்டு முழுவதும் தாக்குப…
-
- 4 replies
- 479 views
-
-
இலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ் இந்தோனேஷிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 244 இலங்கை அகதிகளின் பேச்சாளராக முன்வந்த அவர் தமது கப்பலை சுற்றி ரோந்து வரும் படகுகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு வந்தார்.இதனால்தான் அவர் இந்தோனேஷிய அதிகாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது . அவர் படகில் இருந்து தப்பிசென்றுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. எனினும் படகை சுற்றிலும் பாரிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரால் தப்பிச்செல்வதற்கு ஏதுவான சூழ்நிலை …
-
- 4 replies
- 764 views
-
-
ஹர்ஷ டி சில்வாவின்... குற்றச்சாட்டை, மறுத்தார்... மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி! நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் குற்றச்சாட்டை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மறுத்துள்ளார். பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அதற்கான உதவிகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தானும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் இலங்கைக்கு உரிய திட்டங்கள் இல்லாததால் உலக நாடுகள் உதவிக்கு வர தயங்குவதாக மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com…
-
- 4 replies
- 263 views
-
-
ஜனாதிபதி மஹிந்தருக்கு மூளைப் புற்றுநோய்? வெள்ளி, 18 பெப்ரவரி 2011 00:52 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று மேற்குலக நாடு ஒன்றின் வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கடந்த மாதம் அமெரிக்காவுக்கு தனிப்பட்டவிஜயம் மேற்கொண்டு சென்று இருந்தார். அங்கு அவர் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றார் என்று செய்திகள் வெளியாகின. ஆயினும் அரசுத் தரப்பு இச்செய்திகளை மறுத்து வருகின்றது. ஆனால் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் கடந்த காலங்களில் சமாதான அனுசரணைப் பணியில் ஈடுபட்ட நாடு ஒன்று மஹிந்தர் மூளைப் புற்று நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார் என்றும் நோய் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கின…
-
- 4 replies
- 2k views
-
-
முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்தோட நிண்டு டிமான்ட் பண்ணி விசயங்களை முடித்துக் கொள்ளுற மாதிரி TNA யும் செய்யலாம் தானே, எண்டு சொல்லுறார் அம்மான். உண்மையில அம்மான், தடங்கல் இன்றி வடிவா சொல்ல வந்ததை சொல்லுறார்... குறை சொல்லக் கூடாது....
-
- 4 replies
- 712 views
-
-
இலங்கையின் சுதந்திரதின விழாவில் 5 ஆயிரம் முப்படையினரே இம்முறை கலந்து கொள்வர் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த ஜயவீர தெரிவித்தார். இலங்கையின் 67 வது சுதந்திர தினவிழா வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படுகின்றது. பத்தரமுல்ல நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிப் பகுதியில் இடம்பெறும் இந்த நிகழ்வில் முப்படைகளையும் சேர்ந்த 101 அதிகாரிகளும் 2250 இராணுவ சிப்பாய்களும், 25 அதிகாரிகளும் 595 கடற்படை சிப்பாய்களும், 30 அதிகாரிகள் 470 விமானப் படையினரும் 975 பொலிஸாரும், 11 அதிகாரிகளும் 498 விசேட அதிரடிப் படையினரும் 450 இளைஞர் படையினரும் 5 ஆயிரம் வரையிலானோரே கலந்து கொள்வர். http://seithy.com/breifNews.php?newsID=125824&catego…
-
- 4 replies
- 508 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான அதிகாரப் பகிர்வை முஸ்லிம்கள் ஆதரிக்கின்றனர், ஆனால் குறிப்பாக 13வது திருத்தம் வேறு வகையிலும் திருத்தப்பட வேண்டும் என சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மாகாணங்களை இணைக்கும் அதிகாரத்தை நீக்கி அரசியலமைப்பின் 154A(3) பிரிவை ரத்துச் செய்யவேண்டும் எனவும் ‘நிலம் மற்றும் குடியேற்றம்’ தொடர்பான அதிகாரங்கள் முழுமையாக மத்திய அரசுக்கு வழங்கப்படல் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இலங்கை முஸ்லிம்கள் மற்றும் சிங்கள சமூகங்களின் பங்கேற்பு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான எந்த…
-
- 4 replies
- 511 views
-
-
மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு த.தே.கூ எதிர்ப்பு Editorial / 2018 நவம்பர் 03 சனிக்கிழமை, பி.ப. 01:26 Comments - 0 அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. "நடுநிலை"வகிப்பதென்பது, அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் எனவும், த.தே.கூ தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நேற்று (02) பிற்பகல் நடைபெற்றது. இது தொடர்பில் கூட்டமைப்பு வ…
-
- 4 replies
- 1k views
-
-
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள மக்களுடைய நிலங்களில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான கூட்டம் இன்றைய தினம் நடைபெறவிருந்து. இந்தநிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் இல்லாமையினால் அந்தக் கூட்டம் 8ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டம் கடந்த 27ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அன்றைய தினம் நடைபெறாமல் 29ம் திகதி இன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்றைய தினமும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்தக் கூட்டம் இடம்பெறவில்லை. எனவும் அது பின்னர் 8ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக இடம்பெற்ற மீள்குடியேற்றத்தின் ப…
-
- 4 replies
- 777 views
-
-
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம், செவ்வாய்க்கிழமை (6) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. உற்சவகால முன்னாயத்தமாக, திங்கட்கிழமை (5) மதியத்திலிருந்து 01 ஆம் திகதி நள்ளிரவு வரை, வீதி தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அறிவுறுத்தியுள்ளார். வீதித்தடையின் போது, வாகனப் போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள், கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், உற்சவ காலத்தில், சாதாரண காவடிகள், பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் என்பன, பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐ.நா. தீர்மானம் தொடர்பில் ஜி.எல்.பீரிஸ் சொன்னது அவர் தனிப்பட்ட கருத்து: லக்ஷ்மண் யாப்பா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே ஒழிய இலங்கை அரசாங்கத்தின் முடிவை அது எவ்வகையிலும் பிரதிபலிக்கவில்லை என இலங்கை அமைச்சரவை சார்பாகப் பேசவல்ல அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதில் அளித்திருக்கவில்லை என்றும் அதன் உத்தியோகபூர்வ பதில் இனிதான் தெரிவிக்கப்படும் என்றும் யாப்பா கூறினார். ஜெனீவாவில் தீர்மானம் நிற…
-
- 4 replies
- 1.1k views
-
-
எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி ஜெனீவாவிலிருந்தோ, நியூயோர்க்கிலிருந்தோ, வாஷிங்டனிலிருந்தோ எந்த அழுத்தம் வந்தாலும் அதை கையாளும் ஆற்றலுடன் தனது அரசாங்கம் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார். கொழும்பில் நடைபெற்ற அரச ஊழியர்களின் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சர்வதேச ரீதியாக நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்காக அரச ஊழியர்களும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களும் நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். நாடு எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கூறிய அவர், இத்தகைய சவால்கள் புதிதல்ல எனவும் தெரிவித்தார். இந்நாட்டை ஓர் ஒற்றையாட்சி நாடாக்குவதற்கான அர்பணிப்பு பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, ப…
-
- 4 replies
- 855 views
-