நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
"மீன் கட்லட்" செய்முறை தேவை. கன நாட்களின் பின், மீன் கட்லட் சாப்பிட வேண்டும் என்று... ஆசை வந்து விட்டது. ஆனால்... அதன் செய்முறை அரைகுறையாகத் தான் ஞாபகம் உள்ளது. முழுமையான செய்முறையையும், எந்த ரின் மீன் (சார்டினன் / தூண் பிஷ்) போடலாம் என்பதையும் அறியத் தாருங்களேன்.
-
- 15 replies
- 6.1k views
-
-
மூக்கறுந்த சூர்ப்பனகைகளையும், ரொக்கற்லோஞ்சர்க் குண்டையும் சேர்த்து வைத்த கமகமக்கும் கறி. ரொக்கற் லோஞ்சர் குண்டு (வாழைப்பூ) 1 மூக்கு நறுக்கிய சூர்ப்பனகை (சுத்தம் செய்த இறால்) 10 சின்ன அழுகுணி (வெங்காயம்) 5 பசுமை உறைப்பு (பச்சை மிளகாய்) 2 மாநல அகம் (பெருஞ்சீரகம்) அரைத் தேக்கரண்டி தே.பா.ப (தேங்காய்பால் பவுடர்) 2 தேக்கரண்டி வாசவேம்பு இலை (கருவேப்பிலை) சிறிதளவு சூரியக்கிழங்கு (மஞ்சள்) சிறிதளவு கடல்த்தண்ணீ (உப்பு) தேவையான அளவு பச்சைப் புளி (எலுமிச்சை) …
-
- 15 replies
- 4k views
-
-
Uploaded with ImageShack.us அவகாடோ என்னும் ஒரு வகை பழம் நல்ல கொலஸ்ரரோல் உண்டாக்கக் கூடிய பழம்.இதை நாங்கள் மீன் ரின் சம்பல் மாதிரி சம்பல் போடுவோம்.ஒரு அவகாடோ சம்பல் செய்தால் 5 பேர் வரை நன்றாக போட்டு சாப்பிடலாம்.மிகுதி இருந்தால் கொட்டி கழுவி கவிழ்க்க வேண்டும் என்று அல்ல.குளிர் சாதனப் பொட்டியில் வைத்து 4 5 நாட்களுக்கு சாப்பிடலாம். இதை எந்த நேர உணவுடனும் சாப்பிடலாம்.சான்விச் மாதிரி செய்து ஒரு வாழைப்பழமும் சேர்த்து சாப்பிட சுவை நன்றாக இருக்கும். சரி இதை எப்படி செய்யலாம் என்பதைப் பார்போம். அவகாடோவின் தோல் பகுதியில் இருக்கும் மெழுகை பட்டும் படாமலும் சுரண்டி எடுக்கவும். கரட் சுரண்டும் கருவியால்(விதை எடுக்கத்தேவை இல்லை)கரட் சுரண்டுமாப் போல் சுரண்டவும். ச…
-
- 15 replies
- 2.3k views
-
-
please subscribe to my channel. Thanks https://youtu.be/fuqajaOQTfs
-
- 15 replies
- 1.3k views
-
-
இது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபி, உண்மையிலேயே மிகவும் சுவையானது. மனைவியும் மகனும், ஒவ்வொரு கிழைமையும் செய்து தரச்சொல்லி கேட்பார்கள், எனவே அடிக்கடி செய்வதுண்டு. என்ன இந்த மீனின் விலைதான் கொஞ்சம் கையை கடிக்கும். முதலில் Youtubeஇல் சும்மா மேயும் போது பார்த்து செய்தேனா அல்லது இங்கு யாராவது இணைத்ததை பார்த்து செய்தேனா என்று நினைவில்லை. இங்கு யாரவது இதை முதலில் இணைந்திருந்தால் மன்னிக்கவும். இதில் White Wine இற்கு பதிலாக Chicken Broth போடலாம் என்று வேறு எங்கோ பார்த்துவிட்டு, Chicken Broth தான் நான் பாவிப்பதுண்டு, நன்றாகவே இருக்கும். செய்முறை கீழே உள்ளது:
-
- 15 replies
- 1.3k views
-
-
-
ஒடியல் புட்டு செய்முறை தேவையான பொருட்கள் : ஒடியல் மா தேங்காய்ப் பூ தண்ணீர் உப்பு (சிறிதளவு ) விரும்பினால் கத்தரிக்காய் கீரை பச்சை மிளகாய் நெத்தலி செய்முறை ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும். மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும். பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும். இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அ…
-
- 15 replies
- 2.2k views
-
-
-
- 15 replies
- 968 views
-
-
தாய்லன்ட் கார்லிக் சிக்கன் (தாய்லாந்து முறையில் உள்ளியுடனான கோழி) தேவையானப் பொருட்கள் சிக்கன் லெக்ஸ்- பத்து வெங்காயம்-இரண்டு பூண்டு-ஆறு பற்கள் காய்ந்தமிளகாய்-நான்கு லெமன் கிராஸ்- ஒன்று எண்ணெய்-கால்க்கோபை கொத்தமல்லி-ஒரு பிடி சின்னமன் பவுடர்-கால் தேக்கரண்டி சிக்கன் ஸ்டாக்-ஒன்றரை கோப்பை உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி மிளகுத்தூள்-ஒரு தேக்கரண்டி புளி பேஸ்ட்-இரண்டு தேக்கரண்டி மீன் சாஸ்-இரண்டு மேசைக்கரண்டி வறுத்த வேர்க்கடலை-கால்க்கோப்பை பீனட் பட்டர்-ஒரு மேசைக்கரண்டி செய்முறை சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும். காய்ந்தமிளகாயை சுடுதண்ணீரில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும். லெமன் கிராஸ்ஸை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்…
-
- 15 replies
- 3.9k views
-
-
வெள்ளை, தமிழ் பாட்டு, கொழும்பு தெரு உணவு
-
- 15 replies
- 4.1k views
-
-
குறைந்தவிலையில் தசை ஏறுவதற்கான உணவுபாணம். 1 வாழைப்பழம், 1 முட்டை, 1 கப் முளை விட்ட கொண்டல், 500மில் கின்னஸ் அல்லது சுப்பர் மோல்ட். இவையனைத்தயும் மிக்ஸியில் நன்றாக அடித்து மூக்கை பொத்திக்கொண்டு காலையில் குடிக்கவும். ஒரு மாதத்தில் பெரிய வித்தியாசம் தெரியும். குறிப்பு... கண்டபாட்டுக்கு தசை வைக்கும்... இரவில் சோற்றை சுத்தமாக் தவிர்க்கவும் (நைட் வேலை எண்டா ஓகே!) வயிற்றுக்கான கடின எஸ்ஸர்ஸைஸ் மிக முக்கியம். (செய்யாவிட்டால் ஸிக்ஸ் பக்ஸுக்கு பதிலா ஸிங்கில் அப்ரைட் பக் வரும் பாத்து............... ) (முளை விட்ட கொண்டல்) ----- ஓர்கானிக் கொண்டலை இரண்டு நாள் ஊறவைத்தால் முளைவிடும். குட்லக்குங்கோ!
-
- 15 replies
- 4k views
-
-
உருளைக்கிழங்கு ரோல்ஸ் தேவையான பொருட்கள் உருளைகிழங்கு கறிக்கு உருளைகிழங்கு - 250 கிராம் சிறிய வெங்காயம்- 10 / Shallot வெங்காயம் - 1(இது கிட்டத்தட்ட சிறிய வெங்காய சுவையை தரும்) பச்சை மிளகாய் - 1 உப்பு- சுவைக்கு கறித்தூள் - உங்கள் உறைப்பு அளவுக்கு ஏற்ப மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டு ரோல்ஸ் உருட்ட ஸ்பிறிங் ரோல்ஸ் சீற் பக்கட் (frozen உணவு பகுதியில் இருக்கும்) முட்டை - 4 காய்ந்த பாண் நொருக்கல்?? - 250 க்ராம் பொரிக்க எண்ணேய் செய்முறை 1. உருளைகிழங்கை உப்பு போட்டு நன்கு அவித்து எடுத்து, தோல் உரித்து வைக்கவும் 2. ஸ்பிரிங்க் ரோல் சீட்ஸ் ஐ அதன் உறையின் பின்புறத்தில் சொல்லி உள்ளது போல் free…
-
- 15 replies
- 10.1k views
-
-
வெந்தயக்கீரை மீன் குழம்பு வெந்தயக்கீரையின் கசப்புத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்! தேவையான பொருட்கள்: வஞ்சிரமீன் - 1/2 கிலோ வெங்காயம் 200 கிராம் தக்காளி - 350 கிராம் தக்காளி பேஸ்ட் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன் தனியாத்தூள் 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன் உப்பு - ருசிக்கு தேவையான அளவு வெந்தயம் -…
-
- 15 replies
- 3.6k views
-
-
வட இந்தியாவில் பிரபலமான ஒரு அசைவ உணவு தான் தஹி கோஸ்ட். இதில் தஹி என்றால் தயிர், கோஸ்ட் என்றால் மட்டன். எனவே தயிரையும் மட்டனையும் முக்கியப் பொருளாக கொண்டு, தயாரிக்கப்பட்ட ஒரு கிரேவி தான் தஹி கோஸ்ட். இது மிகவும் சுவையுடன் இருக்கும். இந்த கிரேவியை சாதம் அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இதனை செய்துவது மிகவும் எளிது. சரி, இப்போது அந்த தஹி கோஸ்ட்டின் செய்முறைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: எலும்பில்லாத ஆட்டுக்கறி - 500 கிராம் தயிர் - 500 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன் கரம் ம…
-
- 15 replies
- 1.2k views
-
-
-
வெண்டைக்காய் புளி குழம்பு தேவையானவை வெண்டைக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 1/2 கறிவேப்பிலை பூண்டு - 5 பல் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் புளித்தண்ணீர் - 1/4 கப் உப்பு பெருங்காயத்தூள் - சிறிது தேங்காய்ப்பால் -1/4 கப் கடுகு வெந்தயம் உப்பு எண்ணெய் செய்முறை * வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கவும். * கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். * அதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , புளித்தண்ணீர், உப்பு சேர்…
-
- 14 replies
- 11k views
-
-
மிகவும் புதிதான ஓர் உணவு இது. இணையத்தில் அடிக்கடி எண்ணெய்கத்தரிக்காய் என பலர் பேச கேட்டு, என் கண்ணில் கிடைத்த ஒரு செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். கவனிக்கவும் "கொல்கிறேன்" அல்ல.. தேவையானவை: கத்தரிக்காய் 250 கிராம் புளி கரைசல் 2 மே.க எண்ணெய் 4 மே.க மஞ்சள் தூள் - 1 தே.க வற்றல் மிளகாய் 5 கடலை பருப்பு 1 தே.க துவரம் பருப்பு 1 தே.க உளுத்தம் பருப்பு 1 தே.க பெருங்காயம் 1/2 தே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. முதலில் தூளை செய்ய வேண்டும். ஒரு சட்டியை சூடாக்கி அதில் பருப்பு வகை, வற்றல் மிளகாயையும், பெருங்காயம், உப்பையும் சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள். 2. கத்தரிக்காயை சுத்தம் செய்து உங்கள் ஆட்காட்டி விரல…
-
- 14 replies
- 5.7k views
-
-
முட்டையில்லாத கேக் தேவையான பொருட்கள் 400 கிராம் றவை 100 கிராம் மா 500 கிராம் பேரிச்சம் பழம் 1 கப் கடும் தேயிலை சாயம் 2 ரின் மில்க் 500 கிராம் பட்டர் 1 பேக்கிங் பவுடர் கருவா தூள் அல்லது ஏலக்காய் தூள் (தேவைக்கு ஏற்ப) செய்முறை பேரிச்சம் பழத்தை சிறிய தூளாக வெட்டி தேயிலை சாயத்தில் பேக்கிங் பவுடரையும் கலந்து முதல் நாளே ஊறப்போட்டு வைக்கோணும். பட்டர் சீனி இரண்டையும் நன்றாக அடித்து கலந்து அதனுடன் மா றவை இவைகளை போட்டு கலந்து பழக் கலவை ரின் மில்க் சிம்ற் பவுடர் இவைகளையும் கலந்து முன்பே சூடாக்க பட்ட பேக் ஓவனில் பட்டர் தடவிய கேக் தட்டில் ஊற்றி பேக் பண்ணவும்.
-
- 14 replies
- 13.4k views
-
-
குளுக்கோறச தேவயான பொருட்கள் சீனி : 1/4 கி. கிராம் ஜெலற்றீன் : 3 மே.கரண்டி / 20 கிராம் தேசிப்புளி: 3 மே. கரண்டி கொதிநீர் : 6 மே. கரண்டி தண்ணீர் : 10 மே. கரண்டி / 1/2 தம்ளர் கலரிங்: 1 தே. கரண்டி விரும்பியது கேசரி கலரும் பயன்படுத்தலாம் பெரிய சீனி : 4 மே. கரண்டி மாஜரின் : 1 தே. கரண்டி செய்முறை -ஜெலற்றீனைத் தம்ளரில் எடுத்து அதனுள் 6 மே.கரண்டி நன்கு கொத்தித்த நீரை விட்டு இத்தம்ளரைப் பிறிதொரு கொதி நீருள்ள பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்துக்கொண்டு ஜெலற்றீன் முற்றாக கரையும் வரை நன்கு கரைத்து அப்படியே கொதிநீருள்ள பாத்திரத்தினுள்ளேயே வைத்துக் கொள்க. - தாச்சியில் சீனியைப்போட்டு, 10 மே.கரண்டி தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சுக. …
-
- 14 replies
- 4k views
-
-
மொச்சை நெத்திலி கருவாட்டு குழம்பு நெத்திலி கருவாட்டு குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலி கருவாடுடன் மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும். தேவையான பொருட்கள் : மொச்சைப்பயறு - 100 கிராம் நெத்திலி கருவாடு - 1/2 கிலோ எண்ணெய் - 1 குழிக்கரண்டி சிறிய வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 1/4 கிலோ பூண்டு - 20 பல் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப புளி - எலுமிச்சம்பழ அளவு தாளிக்க : …
-
- 14 replies
- 3.2k views
- 1 follower
-
-
வீட்டில் அடிக்கடி செய்யும் பதார்த்த என்பதாலேயே என்னமோ சீனிசம்பல் செய்முறை எழுதணும் என தோணவேயில்லை. யாழில் சகோதரன் லீ கேட்டுக்கொண்டதிற்காக செய்முறையை எழுதியே ஆகணும் என தோன்றி எழுதுகின்றேன். சீனிசம்பல் என்றதும் “அடப்பாவிகளா சக்கரையிலுமா சம்பல்?” என என்னிடமே பலர் கேட்டதுண்டு. யாரோ பேர் வச்ச மகராசன் இப்படி வச்சிட்டான். நாங்க இப்ப பதில் சொல்லிட்டு இருக்க வேண்டியிருக்கு. சீனிசம்பல் என பெயர் இருந்தாலும் இதில் வெங்காயம் தான் முதன்மை வகிக்கின்றது. உச்சரிக்கும் போது “சீனிச்சம்பல்” என சொல்லலாம். பொதுவா எந்த வித வெங்காயத்திலும் சீனிசம்பல் செய்யலாம். ஆனால் சின்ன வெங்காயத்தில் செய்வது போல சுவை வேறெதெற்கும் கிடையாது என்றத ஒத்துக்கொண்டே ஆகணும். எங்க அண்டை நாட்டுக்காரங…
-
- 14 replies
- 7.1k views
-
-
-
சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி - 400 கிராம். பாசிப்பருப்பு - 50 கிராம் பால் - 250 மி.லி தேங்காய் - பாதி வெல்லம் - 1 கிலோ முந்திரிப்பருப்பு -15 கிராம் கிஸ்மிஸ் பழம் - 15 கிராம் ஏலக்காய் - 5 கிராம் நெய் - 50 மி.லி செய்முறை: 1. பாசிப்பருப்பை இலேசாக வறுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பாலைக் கலந்து அடுப்பில் வைக்கவும். 3. வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைத் தட்டிப்போட்டு சிறிது தண்ணீர் கலந்து இளம் பாகாய்க் காய்ச்சி கல் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். 4. நெய்யைக் காய வைத்து முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடிதாக நறுக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும். 5.…
-
- 14 replies
- 3.8k views
-
-
பாண்டிசேரி ஸ்பெசல் புறாக் கறி மசாலா.. தேவையான பொருட்கள்: புறா கறி : 1/4 கிலோ.. வெங்காயம் : 100 கிராம் கடலை எண்ணெய் : 50கிராம் இஞ்சி: சிறுதுண்டு மிளகாய் பொடி : 2 டீஸ்பூன் மஞ்சள் பொடி: அரை டீஸ்பூன் பூண்டு: உரித்தது.4 ஆப்ப சோடா மாவு +உப்பு தேவையான அளவு செய்முறை: புறாக்க றியை சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு மஞ்சள் பொடி மிளகாய் பொடியை போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும் .இஞ்சியை தோல் நீக்கி பூண்டு உரித்து பட்டை லவங்கம் சோம்பு ஆகியவற்றை தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் புறாக் கறி பாதிவெந்ததும் உப்பு ஆப்ப சோடாவை நறுக்கி வைத்த வெங்காயத்தில் பாதி போட்டு மூடி…
-
- 14 replies
- 7.3k views
-
-
தோசையோ தோசை.. இது ஒருவிதமான உடனடி தோசை...முதலில் யாரேனும் பதிந்தார்களோ தெரியாது. ஆனால் என்னை பொறுத்தவரையில் சத்தியமாய் நான்தான் கண்டு பிடித்தனான். 1 . 1 சுண்டு / ரின்பால் பேணி (ஹி ஹி) உளுத்தம் மா ( கவனம் வறுக்காதது) 2 . 1 சுண்டு / ரின்பால் பேணி அவித்த கோதுமை மா ( கவனம் அவித்தது). (ஒரே அளவு மாவும், உளுத்தம் மாவும் ) 3 . கொங்சம் வெந்தயம் பவுடர் ஆக்கினது ..1 - 2 தேக்கரண்டி போதும்..கூட போட்டால் கைக்கும், குறைய போட்டால் தோசை சுவது கடினம் ஒட்டும் 4 . தேவையான அளவு உப்பு, தண்ணீர்... 5 . master blaster .........ஈஸ்ட் மிக்ஸ்...தயாரிக்கும் முறை..ஹிஹி ..ஒரு பெரிய கிளாஸ் இல் ஒரு (பீர் கிளாஸ் மாதிரி) முக்கால் வாசிக்கு இளம் சூடான தண்ணீர் விட்டு, ( சயின்ஸ் படித்…
-
- 14 replies
- 9.3k views
-