நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சமையல் என்பது முறை அல்ல, .தொழில் அல்ல..அது ஒரு கலை... என்றுமே எவருக்கும் அம்மாவின் சமையல் சுவைக்கும். உலகம் முழுதும் சுற்றினாலும், பல் நூறு உணவு உண்டாலும், நாக்கின் அடியில் அம்மாவின் உணவின் சுவை என்றுமே ஒட்டியிருந்து, நினைக்கும் நேரத்தில் இனிமை தரும். நான் பல இடங்களில் கை கழுவினாலும் இன்றும் அம்மாவினதும் யாழ்ப்பாண உணவினதும் சுவை என் நாக்கு முழுதும் ஒட்டியிருக்கு. சமையல் கலையில் ஈடுபாடு இருப்பதால், அம்மா எப்படி யாழ்ப்பாண முறையில் சமைத்தார் என்ப்தை அறிய ஆவலாக இருக்கின்றேன் உங்களில் யாருக்கேனும் பின்வரும் உணவை யாழ்பாண முறையில் தயாரிக்கும் முறை தெரிந்தால் தரவும்....வீட்டில் வார இறுதி நாட்களில் சமைத்து பார்க்க ஆவலாக இருக்கின்றேன் 1. மீன் பொரியல் (மிக இலகுவானது …
-
- 25 replies
- 11.7k views
-
-
இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி இராசவள்ளிக் கிழங்கு - 1 தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/2 கப் தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) - 2 கப் சீனி - 1 - 11/2 கப் உப்பு - 1 சிட்டிகை இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் - ~2 கப் வர வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும். கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும். சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும். பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும். ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல…
-
- 25 replies
- 11.1k views
-
-
வாழைப்பூ வடை தேவையானவை : வாழைப்பூ - சிறியது ஒன்று கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு இஞ்சி - ஒரு சிறுத் துண்டு பூண்டு - 3 பல் பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி தழை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரித்தெடுக கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி கடலை பருப்பை தனியே எடுத்து வைத்து விட்டு, மீதி பருப்பை இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும். அரைத்த கடலைப்பருப்பு, முழு கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந…
-
- 25 replies
- 4.1k views
-
-
அசைவ உணவுப்பிரியர்கள் பலருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு என்றால் அது மீன் பொரியல் என சொல்லலாமா? என்ன தான் சுவையாக கறி வைத்தாலும், அதோடு சாப்பிட மீன் பொரியல் இல்லை என்றால் கொஞ்சம் கஸ்டம் தான். அதுவும் படகிலேயே போய் மீனை பிடித்து பொரித்தால்?! யம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இத்தனை அருமை பெருமைகளை தனக்குள் அடக்கிய மீன் பொரியலை செய்வதொன்றும் பெரிய வேலை கிடையாது. மிகவும் எளிதான செய்முறை தான். தேவையானவை: உங்களுக்கு பிடித்த மீன் 5 துண்டுகள் (சின்ன மீன் என்றால் 5 மீன்கள்) மிளகாய் தூள் 1 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மல்லி தூள் 1/2 தே.க கரைத்த புளி 1 தே.க உப்பு தேவைக்கேற்ப பொரிக்க எந்த எண்ணெய் பயனடுத்துவீர்களே, அது கொஞ்சம் செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை வி…
-
- 25 replies
- 4.5k views
-
-
தமிழனுக்கு என்றொரு தனி குணமுண்டு அது // மற்றவன் வயிறு புகையிறதை பார்த்து சந்தோசப்படுவது நான் சுத்த தமிழனடா
-
- 25 replies
- 2.7k views
-
-
சிக்கன் புரியாணி தேவையான பொருட்கள்: பக் ப்க் - 1 கிலோ பசுமதி அரிசி - 1 கிலோ வெங்காயம் - 2 தயிர் - 1 கப் இஞ்சி+உள்ளி(வெள்ளைபூண்டு)) விழுது - 1 தே.க மஞ்சள் தூள் - 1 தே.க மிளகாய் தூள் - 1 மே.க கஸு நட்ஸ் - 15 தேங்காய் பால் - 1 கப் தேங்காய் தூள் - 1 மே.க சின்ன சீரகம் -- 1 தே.க ஏலக்காய் - 3 கராம்பு - கொஞ்சம் கராம் மசாலா தூள் - 1 தே.க பே இலைகள் - 5 (அது பேய் அல்ல) மல்லி தளை - 1 கப் எண்ணெய்/ வெண்ணெய் (யாரையும் குறிப்பிடவில்லை) உப்பு தேவைக்கேற்ப(வெட்கம், ரோசம் குறைந்தவர்கள், அதிகமாக சேர்க்கலாம், தப்பில்லை) செய்முறை: * இறைச்சியை சுத்தம் செய்து, தயிர், உப்பு, தூள்கள் போட்டு கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும். 1. …
-
- 24 replies
- 6.2k views
-
-
இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... "பரோட்டா" செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக... ✅ வர, நீங்களும், ஆண்டவனை 🙏 பிரார்த்தியுங்கள் என்று, வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து 👏 இருக்கிறார்கள் போலுள்ளது. நான் செய்த, பரோட்டா.... கடையில் வாங்குவதை விட, நன்றாக இருந்தது என்று, வீட்டில்... எல்லோரும், 💕 விரும்பி சாப்பிட்டார்கள். ஓகே... இனி, நான் "பரோட்டா" செய்த முறையை, பார்ப்போம்... வீட்டில், ஐந்து பேர் இருந்தால்.... மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு தேவையான பொருட்கள். 🧐 இவை.... "பரோட்டா" மாவை, குழைக்க தேவையான பொருட்கள். கோதுமை மா. --…
-
- 24 replies
- 2.2k views
-
-
சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட் தேவையான பொருட்கள் :மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம் தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டிஉப்பு - 1 டீஸ்பூன்தேன் - 3 மேஜைகரண்டிதண்ணீர்- தேவையான அளவுசெய்முறை :கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல்ரூ தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.குறிப்பு :உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம் …
-
- 24 replies
- 1.5k views
-
-
ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு புளிச்சக்கீரை மட்டன் குழம்பு மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புளிச்சக்கீரை - 1 கட்டு மட்டன் - 1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கரம் மசாலா - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 3-4 கிராம்பு - 2-3 பட்டை - 1 இன்ச் எண்ணெய…
-
- 24 replies
- 4.6k views
-
-
தேவையான பொருட்கள்- காஸ் அடுப்பு இல்லாவிடில் விறகு அடுப்பு,பப்படம் ஒரு பைக்கற்,எண்ணேய் தேவையான அளவு,தாச்சி,கண் கரண்டி. செய்முறை-தாச்சியை முதலில் நன்கு கழுவி அடுப்பில் வைக்கவும் பின் அடுப்பை பற்ற வைக்கவும் சிறிது நேரத்தின் பின் எண்ணேய் போத்தல் மூடியை களற்றி எண்ணேயை கவிட்டு தாச்சிக்குள் ஊற்றவும்.ஊற்றிய பிறகு எண்ணேய் போத்தலை நன்றாக மூடி இருந்த இடத்தில் வைக்கவும்.எண்ணேய் நன்றாக கொதித்தவுடன் பப்பட பையை வாயால் பிக்காமல் கத்தியால் வெட்டி ஒவ்வொரு பப்படமாக தாச்சியுள் போடவும்.நன்றாக பொங்கி வந்தவுடன் பப்படத்தை கண் கரண்டியால் எடுத்து ஒரு பழைய பேப்பரில் போடவும்.பத்திரிகையில் எண்ணேய் ஊறியவுடன் மரக்கறி சோற்றோடு சேர்த்து உண்ணவும்........
-
- 24 replies
- 6.4k views
-
-
-
- 24 replies
- 1.3k views
- 1 follower
-
-
பேப்பர் தோசை. தேவையான பொருட்கள்: அரிசி - 3 கப் உளுத்தம் பருப்பு - 1 கப் சாதம் - 1 கப் சுவைக்கேற்ற உப்பு. தோசைக்கல்லுக்கு பூச எண்ணை. செய்முறை: அரிசி, உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைத்து, நைசாக அரைக்கவும். தனித்தனியே அரைத்த மாவை, ஒன்றாக கலக்கவும். சாதத்தை... ஊறவைத்த பருப்புடன் சேர்த்தும் அரைக்கலாம். உப்பு தேவையான அளவு போட்டு, முதல் நாளே... தோசை மாவை தயார் செய்து விடவும். மறு நாள் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, அரைத்த மாவை 2கரண்டி எடுத்து... தோசைக்கல்லில் ஊற்றி, வட்டம்... வட்டமாக, தேய்க்கவும். முறுகலாக தோசை வந்ததும், எடுத்து சாப்பிடவும். டிஸ்கி: அவள் விகடனில், வந்த சமையல் குறிப்பு இது. நாங்கள் இன்னும் செய்து பார்…
-
- 24 replies
- 7.3k views
-
-
https://youtu.be/0n-MUwy9Uw8
-
- 24 replies
- 2.9k views
- 1 follower
-
-
கொழும்பில் இருக்கும் போது அடிக்கடி Tuna மீன் பொரியல் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு இருக்கின்றேன். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் பொரியல் சுவையாக இருக்கும். இந்த மீனைக் கறி வைத்தால் பலருக்கு பிடிப்பதில்லை. சுனைக்கும் தன்மை இருக்கும் மீன்; ஆனால் பொரித்தால் நன்றாக இருக்கும் யாருக்காவது இதை எப்படி பொரிப்பது என்று தெரியுமா? அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?
-
- 24 replies
- 10.8k views
-
-
தேவையான பொருட்கள் ரவை - 2 கப் தயிர் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 1 இஞ்சி - 1 துண்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க உப்பு - சிறிது பெருங்காயம் - 1 சிட்டிகை எண்ணை - சிறிது செய்யும் முறை ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையைக் கொட்டி அதில் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணைய் ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும். இதனை ரவையில் கொட்டவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கரைத்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். ஊ…
-
- 24 replies
- 3.9k views
-
-
எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி. வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த முட்டையுடன் ஒரு கறி. ரெசிபி கீழே...
-
- 24 replies
- 2.3k views
-
-
தேவையான பொருட்கள் கழுவி ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டிய வெண்டிக்காய் - 10 அல்லது 12 காய்கள் உரித்து, கழுவி, வெட்டிய சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடிகருவேப்பிலை கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் - 4 அல்லது 5 உடைத்து, சிறிதாக வெட்டிய உள்ளி - 10 பல் வெந்தயம் - ஒரு கைப்பிடி பெருஞ்சீரகம் - தாளிப்பதற்கு சிறிதளவு கடுகு - தாளிப்பதற்கு சிறிதளவு தேங்காய் - பாதி ( முதல் பால் , இரண்டாம் பால் ஆகியவற்றை பிழிந்து எடுத்து வைக்கவும் ) புளி - ஒரு பாக்கு அளவு ( மூன்றாம் தேங்காய்ப்பாலில் கரைத்து வைத்துக்கொள்ளவும்) கருவேப்பிலை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் - காரத்திற்கு ஏற்ற அளவு செய்முறை 01) ஒரு தாச்சியை…
-
- 24 replies
- 7.4k views
-
-
கொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல்(வறை) தேவையானப் பொருள்கள்: வெள்ளைக் கொண்டைக்கடலை_1/2 கப் புரோக்கலி_1 சின்ன வெங்காயம்_2 பூண்டு_2 பற்கள் மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்து சீரகம் பெருஞ்சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை செய்முறை: கடலையை முதல் நாளிரவே ஊற வை.அடுத்த நாள் கழுவிவிட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்து விடவும் புரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும் வெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்ற…
-
- 23 replies
- 3k views
-
-
ஒரு கிண்ணத்தில் விட்டு ஒரு துண்டு தேங்காய் சொட்டும் எடுத்து கடித்து கடித்து குடித்துக் கொண்டிருங்கோ.செய்முறையை ஆறுதலாக எழுதுகிறேன்.இது மச்சக் கூழு; சைவக்காரர் கையை வைத்திடாங்தோங்கோ. தேவையான பொருட்கள். ஒடியல் மாவு மீன் நண்டு(சிறியது) இறால் மரவள்ளிகிழங்கு பயிற்றங்காய் பலாக்கொட்டை சோழன் பச்சைமிளகாய் பழப்புளி உப்பு செத்தல்மிளகாய் செய்முறை பெரிய சட்டி அல்லது குண்டானில் முக்கால்வாசி தண்ணீர் நிரப்பி மரக்கறி மீன் வகைகளைப் போட்டு கொதித்த பின் செத்தல்மிளகாய் அடித்து(உறைப்பு கூடுதலாக இருந்தால் நல்லது)போட்டு நன்றாக கொதித்து அவிந்த பின் பழப்புளியை கரைத்து விடவும்.கடைசியில் ஒடியல் மாவைக் கரைத்து விடவும்.இறக்க முதலே உப்பு புளி உறைப்பு உங்க…
-
- 23 replies
- 3k views
-
-
அடிப்பிடித்த சட்டியை... இலகுவாக கழுவ வேண்டுமா? சமைத்துக் கொண்டு இருக்கும் போது.... தொலைபேசி அழைப்பு, வீட்டு வாசலில் திடீரென்று தபால்காரன் அல்லது வேறு ஒருவர் மணியடிப்பது, சுவாரஸ்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்.... கவனம் சிதறுப் பட்டுப் போகும் போது.... எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்த சட்டி அடிப்பிடித்தால்..... இலகுவாக நீக்க இந்த முறையை பின் பற்றுங்கள்.
-
- 23 replies
- 2.1k views
-
-
தோசைக்கறி . இந்தப் பக்குவத்திற்கு திருமதியிடம் மல்லுக்கட்ட வேண்டியதாகிவிட்டது . இந்தப் பக்குவம் பருத்தித்துறையின் பாரம்பரியம் . பரம்பரை பரம்பரையாக சொல்லப்படுகின்ற ஒரு பக்குவம் . தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் அரை கிலோ 500 கிறாம் . சின்னவெங்காயம் 200 கிறாம் . பச்சைமிளகாய் 200 கிறாம் . வெந்தயம் 2 மேசைக்கறண்டி . பழப்புளி எலுமிச்சம்பழம் அளவு . தனிமிளகாய் தூள் உறைப்புக்கு ஏற்றவாறு . உப்பு மஞ்சள் தேவையான அளவு . பக்குவம் : கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி தண்ணியில் போடவும் . பச்சை மிளகாய் , சின்ன வெங்கயத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டிவைக்கவும் . வெட்டிய கத்தரிக்காயை வெதுப்பியில் உள்ள ட்றேயில் சிறிது எண்ணையை பூசி , வெட்டிய கத்தரிக்காயை …
-
- 23 replies
- 4.6k views
-
-
தேவையான பொருட்கள் : மைதா-ஒரு கோப்பை கோதுமை மாவு-ஒரு கோப்பை எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி உப்புத்துள்- ஒரு சிட்டிகை துருவிய பனீர்- முக்கால் கோப்பை துருவிய தேங்காய்- அரைகோப்பை வெல்லம்-1/2 கோப்பை ஏலக்காய்-நான்கு பொடித்த முந்திரி -காலக் கோப்பை நெய்/எண்ணெய்- தேவைக்கேற்ப செய்முறை : 1.மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்திக்கு பிசைவதுப் போல் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும். 2.மிக்ஸியில் வெல்லதுடம் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும் 3.வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னிரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும் . 4.பின்பு அதே வாணலியில்…
-
- 23 replies
- 2k views
-
-
இது மிகவும் ருசியான செட்டிநாடு சைட் டிஷ்ஷாக அமைகிறது. சாம்பார் சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கும் உகந்தது. தேவையான பொருட்கள்; புடலங்காய்-2 சுமாரானன சைஸில்; துவரம்பருப்பு-100 கிராம்; மிளகாய்த்தூள்-3 டீ ஸ்பூன்; மஞ்சள் தூள்-1 டீ ஸ்பூன்; மல்லித்தூள்-1 டீ ஸ்பூன்; உடைத்த உளுத்தம்பருப்பு-1 டீ ஸ்பூன்; கடுகு-1 டீ ஸ்பூன்; எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்; கருவேப்பிலை; பெருங்காயத்தூள் மற்றும் உப்பு. செய்முறை: புடலங்காயை கழுவி சுத்தம் செய்து, உள்ளே உள்ள விதைக்ளை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 15 நிமிடம் ஊற வைக்கவும். அதிலுள்ள நீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு கழுவி நீரைப் பிழிந்தெடுக்கவும். இதுபோல மீண்டும் ஒ…
-
- 23 replies
- 2.3k views
- 1 follower
-
-
அலுவலகத்தில் வேலை நேரம் தவிர நண்பர்களுடன் அரட்டை அடிப்பதையும் மதிய உணவு நேரத்தில அவர்களுடன் வெளிய போய் சாப்பிடுறதையும் பொழுதுபோக்காக கோண்டவன்தான் இந்த மனிதன். என்னோட கூட்டாலிகளாக கொரியன், சைனீஸ், தாய்வானிஸ், வியற்நாமிஸ், பிலிப்பினிஸ், மொங்கோலியன், ரஸியன், ஜேமனியன், ஈரானியன், துருக்கியன், ஜப்பானியன், அமெரிக்கன், மெக்ஸிகன் எல்லாரும் இருக்காங்க. இப்படி எல்லா நண்பர்களோடயும் சுத்தித்திரிந்து எல்லா நாட்டு சாப்பாடுகளையும் ருஷி பாத்தனான். இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா சாப்பிடுவம்னு யோசித்தபடியே வியற்நாம் நண்பனை கேட்டன் எனக்கு இன்னைக்கு முற்றுமுழுதாக வியற்நாம் முறையில் செய்த உணவு கிடைக்குமிடம் ஒன்றுக்கு கூட்டி செல்லும்படி. சிரித்தபடியே நண்பன் சொன்ணான் நல்ல இடத்துக்கு கொண்டுபோறன் ஆ…
-
- 23 replies
- 2.5k views
-
-
ஆறு, குளங்களில் கிடைக்கும் நண்டைவிட கடல் நண்டில் சுவை அதிகம். எடுத்து உடைத்து சாப்பிட சற்று சிரமமான உணவு இது. இதனாலே பலர் இதனை தவிர்த்து விடுகின்றனர். அதிக மணம் கொண்டது. நண்டில் கால்சியம் அதிகம். அவை பெரும்பாலும் நண்டு ஓட்டில்தான் இருக்கின்றன. நாம் விரும்பி உண்ணக்கூடிய சதைப் பகுதிகளில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. நண்டினை உடைத்த உடன் சமைத்துவிட வேண்டும். உடைத்து நீண்ட நேரம் வைத்திருந்தால், நீர் விட்டு, வீணாகிவிடும். அமாவாசை காலங்களில் பிடிபடும் நண்டுகளில் சதை இருக்காது என்ற கருத்து உள்ளது. 100 கிராம் நண்டில் அடங்கியுள்ள சத்துக்கள் சக்தி (Energy) 59 கலோரிகள் ஈரப்பதம்/நீர் (Moisture) 83.5 கிராம் புரதம் (Protein) 8.9 கிராம் கொழுப்பு (Fat) 1.1 கிர…
-
- 23 replies
- 6.4k views
-