கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம். அம்மா அழுது கொண்டேயிருந்தாள். யுகங்களுக்கும் ஆறாத துரங்களும் வலிகளும் அம்மாவின் நெஞ்சுக்குளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. மூத்தவன் பற்றி இளையவன் பற்றி நடுவிலான் பற்றி அம்மா ஆயிரம் கதைகளைத் தனது ஞாகபச்சேமிப்பிலிருந்து மீட்டுக் கண்ணீரால் வெளியேற்றிக் கொண்டிருந்தாள். ஒண்டெண்டாலும் மிஞ்சியிருந்தா நான் எப்பன் நிம்மதியா இருந்தருப்பனெல்லோம்மா….? உழைக்கிற வயதுப்பிள்ளையளை சாகக்குடுத்திட்டு நானிப்ப தனிச்சுப் போனன் தாயே….! என்ரை சின்னப்பிள்ளையும் நானும் கடைசியானெண்டாலும் வருவனெண்டுதான் காத்திருந்தமம்மா….! என்ர குஞ்சு அவனும் வரேல்ல….! நானென்ன செய்வன் இந்தப்பிள்ளைக்கும் நஞ்சைக்குடுத்து நானும் சாவமெண்டு கூட ஒருத…
-
- 7 replies
- 4.2k views
-
-
"பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!" *************************************** குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்... நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சம…
-
- 25 replies
- 4.2k views
- 1 follower
-
-
ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் என்று ரீவிக்குள்ளே நின்று நெஞ்சை முன்னுக்குத் தள்ளித்தள்ளிக் கத்திய இளம்பெடியனை எங்கேயோ கண்டதாக அகதித்தஞ்ச விசாரணை தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் விரலைத் தலையில் தேய்ச்சுக்கொண்டே யோசித்தார். இளம்பெடியன் சேட்டில் புலியை வைத்திருந்தான். தொப்பியில் புலியை வைத்திருந்தான். மிதமான குளிரைத்தாங்கும் சால்வையிலும் புலிதான் படுத்திருந்தது. கன்னங்களில் கறுத்தக் கோடிழுத்திருந்தவனும் குஞ்சுத் தாடியும் சொக்கிலேற்றுக்கும் குங்குமக் கலருக்கும் இடைப்பட்டை கலரில் தலைமயிரின் முன்பக்கத்தைக் கொஞ்சம் வைத்திருந்தவனுமாகிய இளம்பெடியனை குமாரசூரியர் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமாவென்று திரும்பவுமொருக்காத் தேய்ச்சார். கிட்டத்தட்ட பதின்மூண்டு பதின்நாலு வருச அவர…
-
- 37 replies
- 4.2k views
-
-
தண்ணீர்... தண்ணீர்... வீட்டு ஜன்னலிலிருந்து சாரா எட்டிப் பார்த்தாள். தண்ணீருக்காக பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் தெருவில் நிறைந்து கிடக்க... வாகனப் போக்குவரத்துக்காக இடம் விட்டு தண்ணீர் லாரிக்காகக் காத்து நிற்கும் பெண்கள்... அக்கம் பக்க கதைகள் பேசுவது ஒருபுறம் என்றால், சீரியல் கதைகள் பேசுவது மற்றொரு புறம். தண்ணீர் லாரி எந்த நேரத்திலும் வந்துவிடலாம். ஆனால் சரியான நேரத்திற்கு முன்பாக ஆஜராகிவிடும் அவர்கள் வீட்டு வேலைக்காரி மகேசுவை இன்னும் காணவில்லை. சாராவின் கணவர் ஜான்சன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சாராவும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவள். அவர்கள் வீடு நல்ல வசதியுடன் மிக முக்கியமான இடத்தில் இருந்தபோதும், தண்ண…
-
- 0 replies
- 4.2k views
-
-
[size=5]ஒரு பேப்பருக்காக கோமகன் .[/size] http://news.bbc.co.u...francs2_300.jpg பாரிஸின் நெரிசலான கட்டிடத் தொகுதி ஒன்றின் நாலாம் மாடியில் இருந்தது அந்த அறை . வெறும் முப்பது சதுர மீற்றரில் ரொயிலட் குளிக்கும் அறை என்று சகலதையும் அடக்கியிருந்தது அந்த அறை . அந்த அறையின் மூலையில் குசினி இருந்தது . அறையின் கீழே கார்ப்பெற்றில் கிழங்கு அடுக்கியமாதிரி இருபது மனித உடல்கள் குறட்டைப் போட்டி நடத்திக் கொண்டிருந்தன . இரவு குடித்த வைன் போத்தில்களும் , ஜே பி போத்தில்களும் அவர்கள் அருகே சிதறிக்கிடந்தன . அறையின் இன்னொரு மூலையில் இருந்த ரீவியில் , நீலப்படமொன்று வெக்கமின்றி ஓடிக்கொண்டிருந்தது . அறையின் சுவர்களில் கரப்பான் பூச்சிகள் பரவலாக ஓடி அறைக்கும் சுகாதாரத்திற்கும் வெகு…
-
- 26 replies
- 4.2k views
-
-
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார். அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர். கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை எ…
-
- 0 replies
- 4.2k views
-
-
[01] அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்! பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை. அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்சம்…
-
- 14 replies
- 4.2k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பேரம் காரிலிருந்தபடியே நடமாடும் காய்கற…
-
- 1 reply
- 4.1k views
-
-
கூடுகள் சிதைந்தபோது......... ---------------------- கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்க…
-
- 6 replies
- 4.1k views
-
-
அகாலத்தில் வந்து யாரோ வெளிநடைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. தோட்டத்து வீட்டின் ஆசாரத்துத் திண்ணையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுக் கண்விழித்தேன். தோக்குருவிகள் ஊடுருவி முகட்டுவளையோரம் சடசடத்தபடி குறுக்கும் நெடுக்குமாகப் பறந்துகொண்டிருந்தன. மேல்விட்டத்தில் ஊர்ந்த பல்லி கணிக் கணிரென சகுனித்தது. அதற்குள் கதவு மீண்டும் தட்டப்பட்டது. நான் உள்ளுக்குள் பயந்துபோனேன். அவசரமாக எழுந்து காவி வேட்டியை இறுக்கிக் கட்டினேன். நடையை நோக்கிச் சென்றேன். ஒற்றை மாடவிளக்கு ஒளியில், சுவரில் அசைந்த என் நிழல் கூடவே வந்தது. தாழ் விலக்கிப் பார்த்தபோது வாசற்படியில் கலவரத் துடன் அப்புச்சி நின்றிருந்தார். கையில் தீப்பந்தம். ‘‘பெருமாள் போயரைப் பூச்சி தொட்டிருச்சு...’’ …
-
- 0 replies
- 4.1k views
-
-
கணக்குப் புத்தகமும் காதலும் இந்தவார ஒரு பேப்பரில் காதலும் கணக்குபண்ணிறதும் இரண்டும் ஒண்டுதானே என்று நீங்கள் யோசிக்கிற கோணத்திலை யோசித்தாலும் சரிதான் ஆனால் என்ரைவாழ்க்கையிலை இந்த காதல் கணக்குப்பாடம் இரண்டும் ஒண்டுதான் ஏணெண்டால் இரண்டிலையும் நான் அடிக்கடி கோட்டைவிட்டிருக்கிறன்.படிக
-
- 21 replies
- 4.1k views
-
-
காதல் வானம் - தொடர்கதை 01 “சக்தியை நோக்க சரவணபவனார் திஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிங்கினியாட…” பக்தி மயமாக கந்தசஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருந்தது. “திக்கற்றோருக்கு தெய்வமே துணை… முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால் எங்களுக்கு ஆரப்பா துணை” செண்பகம் கண்கள் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள். தன்னுடைய குடும்ப குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுட…
-
- 19 replies
- 4.1k views
-
-
தவிர்க்க முடியாத திடீர் விஜயம். கடத்தல்கள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருந்தது. லண்டனில் இருந்து போவர்கள் கட்டுநாயக்காவில் விசாரிக்க படுகிறார்கள். நான் நேராக கொழும்பு செல்லாமல் ஒரு மத்திய கிழக்கு ஆசியா நாடு ஊடாக எனது பயணத்தை தொடர்ந்தேன். கொழும்பு செல்ல அதிகாலை நேரமாக இருந்த படியால் பலர் கடமையில் இல்லை. என்னை விசாரித்தவர் சில சாதாரண கேள்விகளை கேட்டார். எனது பதில்கள் அவரை திருப்தி படுத்தியதால் என்னை உள்ளே அனுமதித்தார். இதிலிருந்து வெளியே வரும் வரைக்கும் பல கழுகு கண்கள் வரும் பயணிகளை நோட்டம் இட்ட படி இருந்தது. நான் ஒருவாறு வெளியில் வந்து எனது பயணத்தை நான் பிறந்த ஊருக்கு தொடர்ந்தேன். பகல் பயணம் ஓமந்தையில் எனது அடையாளத்தை காண்பித்துவிட்டு வன்…
-
- 35 replies
- 4.1k views
-
-
அவளும் அவளும்! - வி.சபேசன் நன்றி : www.webeelam.com நெடுநேரமாகியும் மகள் வீடு திரும்பவில்லை. பொதுவாக இருட்டுவதற்கு முன்பே மகள் வீட்டிற்கு வந்து விடுவாள். ஆனால் இப்பொழுது நேரம் இரவு 10 மணியாகி விட்டது. மகளைக் காணமால் அவள் தவிக்கத் தொடங்கினாள். மெது மெதுவாக அச்சம் அவளைப் பற்றிக்கொண்டது. ஒரு சந்தேகத்தோடு மகளின் அறைக்குப் போனாள். மேசையில் ஒரு கடிதம்.. அம்மா, நான் இனிமேல் வீட்டுக்கு வரப் போவதில்லை. என்னுடைய வாழக்கையை நானே தீர்மானித்துக் கொள்ள முடிவு செய்து விட்டேன். என்னுடைய வாழ்க்கைத் துணையை நீங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அந்த அங்கீகாரத்திற்காக போராடுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், அவ்வாறான போராட்டம் பெரும் கண்ணீரையும் வேதனையையும், இழப்ப…
-
- 21 replies
- 4.1k views
-
-
என் கைபிடித்தவன் - புதிய தொடர்கதை -------------------------------------------------------------------------------- -மோகன் கோடம்பாக்கம் பாலத்தை கடந்து சட்டென்று ஒரு வளைவு எடுத்து சேகர் எம்போரியத்தின் முன் தனது யமாஹாவை நிறுத்தினான் ரிஷி. பிசிஏ, எம்சிஏ முடித்த கையோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கணினி துறையில் முப்பதாயிரம் சம்பளத்தோடு முதல் வேலையில் அமர்ந்தான் ரிஷி. வண்டியை அணைத்து காலை பின் பக்கமாக தூக்கி நின்றபோது எதோ மென்மையாக படவே திரும்பி பார்த்தான். பத்திரகாளியாக மாறி நின்றிருந்தாள் ரம்யா. இளங்கலை கடைசி ஆண்டு. கோடம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில். அழகாக இருந்தாள். ஆத்திரத்தில் இருந்தாள். ரிஷி காலால் எட்டி உதைத்தபோது இடர்பட்டவள் தான் ரம்ய…
-
- 7 replies
- 4.1k views
-
-
. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை .............பிறக்கும். டிரிங் .........டிரிங் .......என்ற மணியோசை அவள் தூக்கத்தை கலைக்க ........எழுந்து தெலிபோனை எடுத்தால் .மறுமுனையில் அவள் தங்கை சாந்தி .........அக்கா என்ன இன்று இவ்வளவு நேரம் படுகிறாயா .............இல்லையாடியம்மா .நேற்று அம்மாவை கனாக்கண்டேன் அது தான் ....இரவு முழுக்க நித்திரையில்லை விடிந்தது தெரியாமல் தூங்கி விடேன் . இப்போது எத்தனை மணி உங்க நாடில்.? .காலை எட்டு மணியாகிறது . அக்கா வார ஞாயிறு ஆவணி இருபத்திநாலு ........அம்மாவின் இறந்த நாள் .........என்று அவர்கள் சம்பாஷனை போனது .........அத்தொலைபேசி உரையாடல் முடிந்தாலும் அவள் நினைவு மட்டும் தாயகதை நோக்கி பறந்தது ........ தமிழ் ஈழத்தின் தீவக பகுதியில் அவள் வா…
-
- 8 replies
- 4.1k views
-
-
சர்வதேச ராணுவ ரகசியங்கள், உள் நாட்டு அரசியல் ரகசியங்கள் என்பவை 30 ஆண்டுகளின் பின் காலாவதியானவை என அறிவிக்கப்பட்டு அந்த ரகசியங்கள் வெளிவருவது போலத் தான் இந்தக் கதையும். ஏறக்குறைய 33-34 வருடங்களுக்கு முன்னான ரகசியம் இது. இன்று வரை பகிரப்படாத கதை. இனி இது ரகசியமில்லை. கதைக்குப் போவோம் வாருங்கள்..... காலம்: 1977ம் அல்லது 1978ம் ஆண்டு. இடம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே அழகான மட்டக்களப்பு நகரமும், என் பாடசாலையும், அங்கிருந்த விடுதியும், ஆனைப்பந்தி கோயிலும், ஆனைப்பந்தி பாடசாலையின் பெண்கள் விடுதியும். பாத்திரங்கள்: 33 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நானும், அந்த வெள்ளைச்சட்டை, வெள்ளைப்பாவாடைத் தேவதையும். எனது பால்யக் காலங்கங்களில் பல ஆண்டுகள் விடுதி வாழ்க்கை என்று…
-
- 24 replies
- 4.1k views
-
-
பாடசாலை மாறி போயிருந்த காலம். அறிமுகங்களும் பலவகை கெடுபிடிகளுடன் பகிடி வதைகளும் அமர்க்களமாய் இருந்தநேரம். நான் போன போது அந்த சி வகுப்பு என்றால் ஒரு படி கீழே தான் இருந்தது. குளப்படியில பாடசாலையில் முதல் ரகம். ஏதாவது ரிப்போட் செய்யப்போனால் அதிபர் கூட எட்டடி தள்ளி நிற்பார். பயம் வரும் வகையில் இருந்தது படிப்பு விடயம். ஒரு நாளைக்கு ஒருவர் என்றாலும் தண்டிக்கப்பட்டு மைதானத்தில் வெய்யிலில் காயாத நாளில்லை. படிப்பிக்க வந்த புது வாத்திமாரெல்லாம் இந்த வகுப்புக்கு போகமாட்டோம் என ஒப்பாரி வைக்கத்தொடங்கிவிட்டனர். அதிலும் பெண் ஆசிரியைமாருக்கு விசேச கவனிப்பு. பொருளியல் பாடத்தில் சரக்கு வந்தடைடந்தது என்று அவர் சொன்னதற்காக போட்ட கூச்சலில் அந்த ஆசி…
-
- 39 replies
- 4.1k views
-
-
ஆநதி ஒரு முன்னாள் பெண் போராளி. அவர் எழுதிய உயிரே உயிரே! என்ற நாவல் தினமணியின் கதிர் இணைப்பில் வாரம் தோறும் வெளிவருகிறது. அதை தொடர்ந்து இங்கே இணைக்கலாம் என நினைக்கிறேன். இணைக்கலாந்தானே?! நான் எழுதிய நாவல்களில், வெளிவரும் முதலாவது நாவல். சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் இதை எழுதினேன். என் போர்க்கால வாழ்க்கையில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறேனே தவிர நாவலெதுவும் எழுதவில்லை. மனசுக்குள் நாவலுக்கான வடிவங்கள் இருந்தாலும் ஆற அமர்ந்து எழுத நேரமிருக்கவில்லை. அடிப்பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த இந்நாவலை அவனிக்குத் தர இப்போதும் எனக்குத் தயக்கம்தான். காரணம் நான் எழுத வேண்டிய கதைகள் இன்னும் இருக்கின்றன. அதற்க…
-
- 29 replies
- 4.1k views
-
-
தோழர் விஜய் ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட். பார்க்கும் பிகர்களை எல்லாம் தன்னுடைய பிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதி. நண்பர்களின் பிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவருக்குண்டு. முந்தையப் பதிவொன்றில் நான் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் என்னுடன் பணியாற்றிய சகப்பணியாளர். வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் Aய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளர். அவருக்கு அப்போது 35 வயதிருக்கலாம். காதல் திருமணம் செய்து அதன் விளைவாக அழகான ஒரு மகளை ஈன்றெடுத்திருந்தார். என்னைப் போன்ற இளைஞர்கள் எப்போதும் "சாட், சாட்" என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட நண்பருக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு சாட்டிங்கில் மாட்டியவர்கள் நிறையப் பேர் அமெர…
-
- 4 replies
- 4.1k views
-
-
சின்னனில மாட்ச் கொழுவிறதண்டால் பெரிய விடயம்.கோயிலடியில ஒரு டீமை தொடங்கிபோட்டு பிறகு எதிர்த்து மாட்ச் விளையாட வேறுடீமை தேடி அலையிறது.அதே ஊரிலே பிறகு வடக்கு ,கிழக்கு என்று எங்கட சைசில இருக்கின்ற பெடிகளை தேடிப்போய் வாற சனி மாட்ச் விளையாடுவமோ என கேட்கின்றது ,ஒமேன்று பதில் வந்தால் பிறகு பதினோன்றை சேர்க்க பெரும்பாடு படவேண்டும்.ஆறு அல்லது ஏழு பேர்கள் தான் ஒழுங்காக விளையாடும் மிச்சம் எண்ணுக்கணக்குத்தான்.பிறகு சனி வர இரண்டு மணிபோல் ஒவ்வொன்றாய் போய் பிடித்து கோயிலடிக்கு கொண்டுவர மூன்று மணியாகிவிடும்.மற்ற டீம் வரமட்டும் களைக்ககூடாது என்று பந்த்தை தட்டிக்கொண்டு நிக்கிறது.அவர்கள் வந்து சேர பெரிய சந்தோசம்.நடுவர்கள் இல்லை, எனவே முதலே லைன் எல்லாம் காட்டி அளா ப்பக்கூடாது என்ற வாய்வழி ஒப…
-
- 42 replies
- 4.1k views
-
-
நோ துறூ ஒழுங்கை- No Through Road" 2000 ஆண்டு நாங்கள் அப்ப A/L படிச்ச காலம். பள்ளிக்கூட காதலுக்காக பெட்டையளுக்கு பின்னால திரிஞ்ச காலம். O/L ஓட எங்கட வயது பெட்டைகளுக்கு பின்னால திரியுற வேலையை நிறுத்தி எங்கள விட வயது குறைஞ்ச பெட்டையளுக்கு பின்னால திரியும் "ஒப்பிறேசனை-operation love" ஆரம்பிச்ச காலம். பருத்துறையில இருந்து நெல்லியடி, யாழ்ப்பாணம், அச்சுவேலி எண்டு கொஞ்சம் எங்கட நடவடிக்கைகளை விரிவு படுத்திய காலம். இயக்கம் காம்(camp) அடிக்க போறதுக்கு ஆயத்தப்படுத்துறதை விட அதிகமாக பிளான்(plan) போட்ட காலம். வேவு நடவடிக்கையில மூன்று படிநிலை இருக்கு, 1.முதல்ல லவ் பண்ணுற பெட்டை எந்த ரியூசனில படிக்கிறாள் எண்டு ரெக்கி எடுப்பம் 2.அவள…
-
- 8 replies
- 4.1k views
-
-
"இருந்தால்" இல்லாமல் ஆன கதை "பெத்தவள் மேல் கொஞ்சமாவது அன்பு இருந்தால், உடனே புறப்பட்டு வா.." - அம்மாவின் கடிதம். இந்த கல்யாணத்திற்கு போனால் தான் எனக்கு அம்மாவின் மேல் இருக்கும் அன்பு வெளிவருமா?அல்லது நிரூபணமாகுமா? அம்மா எப்பொழுதும் இப்படி தான். நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்து இருக்கிறேனே. சரி வீட்டிற்கு போயும் கனநாட்கள்...அல்ல வருடங்கள் ஆகிவிட்டது. 5 வருடங்களாக அதிகமாக வேலைகள் இருந்ததால் , எதற்கும் இடமில்லாமலே இருந்தது. இப்பொழுதுதான் கொஞ்சம் பரவாயில்லை. கல்யாணமும் வேற்று மனிதருக்கு அல்லவே. என் கூட பிறந்த சகோதரிக்கு தானே.சரி போகலாம் என நினைத்து வந்தது தவறோ என தோன்றியது. நினைவில் ஆழ்ந்திருந்த போது பக்கத்தில் படுத்திருந்த குழந்தை சிணுங்கி…
-
- 24 replies
- 4.1k views
-
-
யாழ்பாணத்தில் பெரும்பாலும் எல்லோர் வீட்டுவளவுகளும் சோலையாக இருந்தது……..நிலம் கண்ட இடமெல்லாம் மரங்களும், பூமரங்களும் கண்டமேனிக்கு செழித்து வளர்ந்திருந்தன…….முன்பெல்லாம் ஒரு பூச்செடியை நட்டுவிட்டு அடிக்கடி தண்ணீர் ஊற்றி...ஊற்றி...அதிக கவனம் எடுத்து வளர்த்தாலும் வளராத பூமரங்கள்…….நன்றாக செழித்து வளர்ந்திருந்தன……...மல்லிகை, அடுக்கு மல்லி, முல்லை, பாரிஜாதம், மந்தாரை (இந்த பூவை இம்முறை தான் முதல் தடவை கண்ணால் பார்த்தேன்), மயிர் கொன்றை சிவப்பு,றோஸ் வர்ணங்களில், முசண்டாஸ், பாதிரிப்பு மஞ்சள், பிங்க், வெள்ளை...எக்சோறாவில்...சிகப்பு., றோஸ், மஞ்சள் நிறங்களில்…..நீலபூக்கொடி, கறுத்தபூக்கொடி (இது violet color), மஞ்சள், வெள்ளை நந்தியாவட்டை, திருவாத்தி…..(இதன் மஞ்சள்..வெள்ளை பூக்களை பார்த…
-
- 3 replies
- 4.1k views
-
-
பொம்மை - சிறுகதை பாலகுமாரன் - ஓவியங்கள்: செந்தில் மழை பெய்து நெகிழ்ந்திருக்கும் மண் சாலை, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஓவியத்தில், புகைப்படத்தில் இன்னும் கூடுதல் அழகாக இருக்கும். ஆனால், நடப்பதற்குத் தோதாக இல்லை. ஸ்ரீனிவாசன், மிகுந்த கவனத்தோடு அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு அது பழக்கம் இல்லை. ``எழுத்தாளரே, இன்னும் கொஞ்சம் விரச நடக்கலாம். கேரளம், பத்து நிமிஷத்துக்கு ஒரு மழை பெய்யும். ஒரு மேகம் வந்து தழைஞ்சு, கரைஞ்சு சற்றுப் பொறுத்து இன்னொரு மேகம் தழையும். மழையாய்க் கரையும். எனவே, விரைந்து வாரும்” என்பதாக மலையாளத்தில் கூச்சலிட்டார். அவர் சந்திரமோகன். எழுத்தாள ரான ஸ்ரீனிவாசனின் வாசகன்.…
-
- 0 replies
- 4k views
-