Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. அம்மாவின் சின்ன கோபம் ......... அந்த புலம் பெயர் நாட்டின் பாடசாலைகளும் கலாசாலைகளும் ஆரம்பமாக போகும் முதல் வார இறுதி . அன்று ஜமுனன் முதல் தடவையாக கலாசாலை போக போகிறான் ,அவர்களது வீடிலிருந்து மூன்று மணி நேர கார் சவாரியில் செல்ல வேண்டும் ,படுக்கைக்கான ஆயத்தங்கள் ,உடுப்புகள் ,தேவைப்படும் கொப்பி பேனா வகைகள் யாவும் பார்சல் செய்ய பட்டு ,செல்ல்வத்ர்கான வாகனமும் வந்து விட்டது . சென்ற வாரம் முழுக்க அம்மாவின் ,ஆயத்தங்கள் .தங்கை நீலுவும் இனி அண்ணாவின் சண்டை சச்சரவு இல்லை என்றாலும் முதல் தடவையாக தன்னை விட்டு போகிறான் என்ற ஏக்கம் . ஜமுனன் ,நீலு அப்பா அம்மா வான் கார சுப்பண்ணா எல்லோரும் ஏறிக்கொண்டார்கள் / கடவுள் வேண்டுதலுடன் அவர்கள் பயணம் .ஆரம்பமாகியது .ஜமுனன…

  2. Started by Nalim,

    நேற்று பார்க் ஒன்றின் அருகில் இருக்கும் மர நிழழின் கீழ் அமைதியாக படுத்து கண்கள் மூடிய போது.....கல்யாண வயசின் கற்பனைகளினூடு என் எதிர்கால உறவை நினைத்தபோது.....இதோ....நீங்களே பாருங்கள்.....என்ன தோன்றியது என்மனதில் என்று..... அவள்....... கண்கள் ஆயிரம் கவிதை சொல்லும்...... ஆனந்த கூத்தாடி மின்னும்....... புருவம் வேலை வெல்லும்..... புன்னகை என்மனதை கொல்லும்.... ஆறடிக் கூந்தல் தழுவ........ ஆசையில் விரல்கள் துடிக்கும்..... அவளை கொள்ளை கொள்ள என் உயிரே இன்று தகிக்க தினமும் அவளின் நினைவில்.... விடியும் எந்தன் நாட்கள்.... என் விடலை பருவ உணர்வை.... தீண்டி விட்டு இரசிக்கும்.... விழியாலே கொள்ளும் என்.... கிளியே...... உன்னை எந்தன் விழிக்குள்ளே மெதுவாய் …

  3. Started by Selvamuthu,

    அப்பா எங்கே? எனது அப்பா எங்களுடன் இல்லையே என்ற கவலை என் மனதை எப்போதும் வாட்டிக்கொண்டிருந்த போதும் இன்று எனது நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று வந்ததிலிருந்து எனக்கு அப்பாவை உடனே காணவேண்டும்போல இருந்தது. எனது மனவாட்டத்தைக்கண்ட அம்மாவின் முகத்திலும் சோகத்தில் சாயல் பரவத்தொடங்கியது. "அம்மா, எனக்கு அப்பாவைப் பாரக்கவேண்டும்போல் இருக்கிறது" என்று கூறினேன். அம்மா பதில் எதுவும் சொல்லாமல் தனது வேலைகளிலேயே கவனமாக இருந்தார். மீண்டும் நானே அம்மாவின் அருகில் சென்று "இன்று எனக்கு அப்பாவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது என்றேன்" என்றேன். "அப்படிப்பார்க்க முடியாது என்று உனக்குத் தெரியும்தானே, பிறகு ஏன் என்னைக்கேட்கிறாய்?" என்றார். அம்மா கூறியது சரிதான். …

  4. துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன் 1 இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன், எல்லா TV காரரும் தங்களின்ர தலைப்புச் செய்தியில பிரபாகரனின்ர சடலத்தையும், மூளையையும் தகட்டையும், பிஸ்டலையும் பல்வேறு கோணங்களில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி குறைந்தது ஐந்து பத்து நிமிடங்கள் நீடித்தது. இதற்கு அடுத்ததாக, பிரபாகரனது மகன் சாள்ஸ் அன்ரனியினது உடலைக் காண்பித்தார்கள். மூன்றாவதாக பிரபாகரனது மகள் துவாரகா என ஒரு உடலைக் காண்பித்தார்கள். இவ்வளவு சங்கதிகளையும் எங்கட தமிழ் ஆக்கள் TV-யில பார்த்துக்கொண்டிருக்கினம் - என்ன செய்யிறதென தெரியாத பதகளிப்புடன். கொஞ்சப் பேருக்கு சந்த…

  5. இரண்டாவது தலைவர் Friday, March 25th, 2011 -யோ.கர்ணன்- நானூற்றுச் சொச்சப்பேர் இருக்கிற இந்த வரிசையில எங்கட ஆள் இருநூற்று எழுபத்தேழாவது ஆளாக இருக்கிறார். ஒவ்வொருத்தரின்ர கையிலயும் விடுதலைப் பத்திரத்தை ஆமிக்காரர் குடுத்துக்கொண்டு வருகினம். பத்திரம் கையில கிடைச்ச ஆக்களின்ர முகத்தைப் பார்க்க மாட்டியள். அவ்வளவு பூரிப்பு. அடுத்தடுத்த நிமிசத்தில பத்திரம் தங்களின் கையிலயும் கிடைத்துவிடும் என்று தெரிந்தும், இன்னும் பத்திரம் கிடைக்காதவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில ஏதும் பிசகுவந்து தங்களை மறிச்சுப் போடுகினமோ என்று அவையள் பயப்படுகினம். பத்திரம் கிடைத்த ஆக்களிற்கு நிம்மதிதானே. அவையள் பக்கத்தில இருக்கிற ஆட்களை சுரண்டி கதைக்கத் தொடங்கி விட்டினம். என்னயிர…

    • 8 replies
    • 2.3k views
  6. கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி முற்றத்தின் மத்தியில் பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம் எப்போதாவது எனைச் சந்தித்து சில மொழிகள் பேசும் இரு விழிகள் 0 0 0 சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி மனதை அலைக்கழிப்பதுவும் படத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு கவிதையைப் போல் பயணித்திருக்கும் நாயகியின் விழிகளும் அதன் மொழிகளும்தான். படம் நிகழ்வதென்னவோ எண்பதுகள் எனினும் அந்தக் கண்கள் மட்டும் என் கனவுகளில் தொன்னூறுகளை இழுத்து வந்து நிறைத்து விடுகின்றன. சட்டென விழிப்பு வருகையில் ஏமாற்றமுறுகின்றேன் நான். மீளவும் கனவுக்குள் நுழைதல் குறித்து அவாவுகிறது மனம். சட்டெனச் சந்தித்து வி…

  7. Started by Kavallur Kanmani,

    அப்பாச்சி கை விளக்கு நெருப்புப் பெட்டி சுங்கான் புகையிலைப்பெட்டி தனக்கே உரியதான தடித்த தலையணை தலையணையின் கீழ் வைக்க வாங்குப்பலகை தண்ணீர்ச் செம்பு முதுகுக்கு விரிக்கும் பழைய சேலை வியர்வை துடைக்க துவாய் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை நோட்டமிட்டவர் ஏதோ ஒரு பொருள் குறைவது கண்ணில்பட அவசரமாக முற்றத்துக்குச் சென்று வேலியோர மறைவில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த எச்சில் படிக்கத்தை எடுத்து மண் அரைவாசிவரை நிறைத்துக் கொண்டுவந்து தலைமாட்டின் பக்கத்தில் வைத்தபின் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அரச கொலுமண்டபத்துக்கு விஜயம் செய்யும் மன்னனின் கம்பீரத்துடன் கால்களை நீட்டிப் போட்டபடி அமர்ந்த அப்பாச்சி புகையிலைத் துண்டங்களை அளவாகப் பிய்த்து சுங்கானில் அடைக்கத் தொடங்கினார். …

  8. மதங்களால் பிரிந்த மனங்கள்....... சிறு கதை அன்று இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு தொடக்கத்தின் முதல் நாள் கார்த்திக் தனது நேர அட்டவணையைப் பார்த்தபடி அவனின் வகுப்பு அறைக்கு வந்து சேர்ந்த போது பேராசிரியர் இன்னும் வந்து சேரதபடியால் எல்லா மாணவர்களும் அறைக்கு வெளியிலே கல கலப்பாக கதைத்தவண்ணம் காத்திருந்தனர். கார்த்திக் வந்ததை கண்டதும் அவனுடன் இரசாயனத்துறையில் முதலாம் ஆண்டு படித்த மாணவர்கள் ''கி, கெல்லொ'' என்றெல்லாம் சொல்லிவிட்டு அமைதியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் நின்ற அந்த இடத்துக்கு ரோஜா ஒன்று பளிச்சென்று வந்து நின்றுகொண்டது, தலை மட்டும் கருப்புத்துணியால் போர்திருந்தது. ஆம் ! அவள் முஸ்லீம் அழகி எல்லோரும் ஒருதடவை அவளைப் பார்த்துவிட்டு பின்னர் தங்கள் பேச்சுக்களை …

  9. கடந்த வாரம் 'ஒரு பேப்பரில்" பிரசுரமான சிறுகதைக்கும், குறுங்கதைக்கும் இடைப்பட்ட ஓர் வடிவம் மர்ம மயானம். எங்கள் எட்டுப்பேர்களுக்குள்ளும் இன்னும் கருத்தாடல்களும், கலக்கங்களும், கடந்த கால ஏக்கங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருந்தன. அந்த வேர் முட்டிய இலுப்பை மரம் நூற்றாண்டு தாண்டிய முதிர்ச்சியுற்றிருந்தாலும் அந்தக் கானல் பிரதேசத்தில் வேரூன்றிய காரணத்தால் வளர்ச்சியில் செழுமை குன்றி குற்றவாளியைப்போல் குறுகி நின்றது. அதன் அடிப்பரப்பு வேர்த்திட்டுக்களில் அமர்ந்தபடி அலறலாய் வெளிவந்த எங்கள் புலம்பல்களை இந்த மரம் எத்தனையோ தடவைகள் கேட்டாயிற்று. இருந்தாலும் மனதிற்குள் வெம்பியபடி இன்னும் மௌனமாகவே நிற்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. 'ஏய் மரமே! உனக்குக் கூடவா…

  10. Started by கிருபன்,

    கொட்டியா அவ‌ர்க‌ள் அப்ப‌டி அவ‌னைப் பிடித்து எழுப்பிய‌போது அதிர்ச்சியாக‌ இருந்த‌து. அதிர்ச்சியை விட அருவ‌ருப்பாய் இருந்த‌து என‌த்தான் சொல்ல‌வேண்டும். அதிர்ச்சி அருவ‌ருப்பு இர‌ண்டும் திர‌ண்டு கோப‌மாய்ப் பொங்க‌த் தொட‌ங்கிய‌போது, அதை நேர‌டியாக‌க் காட்ட‌முடியாதத‌ற்கு அவ‌ர்க‌ளின் தோள்க‌ளில் தொங்கிய‌ துப்பாக்கிக‌ள் ஒரு கார‌ண‌மாய் இருந்த‌து. ச‌ருவ‌ச்ச‌ட்டியைக் க‌விழ்த்துப் போட்டாற்போல‌ இரும்புக் க‌வ‌ச‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌லைக‌ளில் தொங்கிக்கொண்டிருந்த‌ன‌. இரு காதுக‌ளையும் இணைத்து நாடியைச் சுற்றியோடிய‌ க‌றுப்பு நாடா 'ச‌ருவ‌ச்ச‌ட்டி' த‌லையில் இருந்து விழாது தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த‌து. அந்த‌க் க‌றுப்பு நாடாவை அறுத்து, க‌ழுத்தில் இறுக்கி அவ‌ர்க‌ளைக் கொன்றால் என்ன‌ என்ற‌ எண…

  11. நனி நாகரிகம் எளியவர்களிடமிருந்து மிக இயல்பாக போகிற போக்கில் நிதானமாகத் தெறித்து விழும் வார்த்தைகளில் இருக்கும் வலிமையை, தெளிவை, அதில் குறும்புடன் எட்டிப் பார்க்கும் அழகியலை உணர்ந்து ஒரு கணம் ஆடி அசந்து போயிருக்கிறீர்களா? தாம் சொல்வது எவ்வளவு பெரிய விஷயம் என்ற பிரக்ஞையோ அலட்டலோ அதிகப்பிரசங்கித்தனமோ இல்லாமல் ‘இவ்ளோதாங்க வாழ்க்கை…’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போகிறவர்களின் அருகில் போதி மரங்களே போன்சாய்களாக மாறிப் போகும் அதிசயத்தைக் காணப் பெற்றிருக்கிறீர்களா? …

  12. தமிழ்த் துரோகி — பூ அரசு கையை பிளேட்டால் வெட்டி, கூட்டணிக்காரரிற்கு பொட்டு வைத்து விட்டு தமிழீழம் கிடைக்கும் வரை கலியாணம் கட்ட மாட்டேன் என்று அறுவைதாசன் சபதம் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அவனுக்கு வயது வட்டுக்குள்ளே போன பிறகும் கலியாணம் நடக்கவில்லை. எந்தப் பெட்டையும் அவனை ஏறெடுத்து பார்த்ததில்லை. "தும்பிக்கையான் துணை" திருமண சேவை நடத்தும் சுந்தரம் சித்தப்பா காட்டும் பெட்டைகளின் படங்களை இவனுக்கு பிடிக்கவில்லை. அவனின்ரை தாய் தான் எங்கடை பரம்பரையின்ரை பேர் உன்னோடை முடியிறதோ எண்டு அழுது குழறி விடாமல் தொடர்ந்து பொம்பிளை பார்த்துக்கொண்டு இருந்தாள். சலரோகம், ரத்தக்கொதிப்பு தான் உங்கடை பரம்பரைச் சொத்து. இதுவெல்லாம் ஒரு பரம்பரை என்று அறுவை தாயிடம் எரிந்து விழுந்தாலும் யா…

  13. ஒன்றே ஒன்று ........தாங்கோவன் அன்று அதி காலை ஜானகி அம்மாள் வழமைக்கு மாறாக பர பரப்பாய் இருந்தாள். .வேலைகள் எல்லாம் முடித்து மணியை பார்த்து அது இரண்டு என்று காட்டியது . ஆவல் மிகுதியால் முன் படலை வரை போய் வீதியை எட்டி பார்த்தாள் . இருமிக்கொண்ட ராமசாமியார் அவர்கள் வாற நேரம் வருவினம் தானே ஏன் அம்மா பறந்து கொண்டு இருகிறாய் . என்று கூற அதை ஆமோதிப்பது போல வேப்பமர காகமும் மூன்று முறை பறந்த பறந்து கத்தியது . ஒருவாறு இரண்டு மணி போல வாயிலில் டாக்ஸி (வாடகை வண்டி )வந்து நிற்கும் சத்தம் கேட்டது . ராகவனும் மனைவி ரம்யாவும் ,பேரபிள்ளைகள் அமுதினி , அமுதன் எல்லோரும் வந்து இறங்கினர் . வந்த களை தீர முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சொக்கனை கொண்டு இறக்கி வைத்த இளந…

  14. அதிகாலை ஆஸ்பத்திரி கூச்சலும் குக்குரலுமாக பதறிக்கொண்டிருந்தது பிறப்பு , இறப்பை தீர்மானிப்பதல்லவா இந்த ஆஸ்பத்திரி பிரசவத்திற்காக சர்மிதாவும் தனது முதல் பிரசவத்திற்காக அலறியே துடிதுடித்துக்கொண்டிருந்தாள் அவளுடனும் பல பெண்கள் அன்றைய‌ நாள் பிரசவத்திற்க்காக கையில் கட்டப்பட்ட இலக்க மட்டைகளை அணிந்து படுத்திருந்தனர் அவளின் முதல் பிரசவம் அவளை கட்டிலில் உளத்த செய்தது அவளோ ஐயோ ஐயோ அம்மா என துடிதுடித்துக்கொண்டிருந்தாள். அவள் கணவனோ ஆறுதல் சொல்ல முடியாமல் அவள் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டிருந்தான் வலி அதிகரிக்கும் போது அவளோ அவன் கைகளை கடிக்க தொடங்கினாள் வலியின் வேதனையால் பிரசவ விடுதியின் முன்பு அவளை அழைத்து செல்ல ஆயத்தமாக அவனோ ஆயிரம் கடவுள்களை வேண்டி நின்றான் அவளுக்காகவும் அவள…

  15. [size=6]நமக்கு வேண்டாம் கொலைத் தொழில் [/size] [size=2][size=4]கோடை வெயிலும் குளிர் காற்றும் குழைந்து கிடந்தன…[/size][/size] [size=2][size=4]அவசர உலகில் அவன் அவசரமாக நடந்து கொண்டிருந்தான்…[/size][/size] [size=2][size=4]” பொத் பொத் .. ” என்ற ஓசையுடன் அவன் சப்பாத்துக்கள் தரையில் மோதின.. அவசரம்..[/size][/size] [size=2][size=4]கீழே பார்த்தான்..[/size][/size] [size=2][size=4]ஒரு பூச்சி..[/size][/size] [size=2][size=4]சாணத்தின் நிறம்.. சிறக்கைகளில் கருமையாக கோலங்கள்..[/size][/size] [size=2][size=4]அதனுடைய அசைவு சாதாரணமாகப்படவில்லை… ஏராளம் பிரச்சனைகளை சுமந்து அந்தரப்படுவது தெரிந்தது..[/size][/size] [size=2][size=4]பூச்சிகளின் உலகில் அத…

    • 8 replies
    • 862 views
  16. தமயந்தியைத் தேடுகிறேன். அவளைச் சந்தித்ததும், அச்சந்திப்பு பின்பு தொடர்கதையாகியதும் அதுவே எனது இளமைக்காலத்தில் பல இராசாயண மாற்றங்களை என்னுள் கொண்டுவந்ததும் தற்செயலானதே ஆனால் அதன்பின்பான நினைவுகள் மட்டும் நிரந்தரமானவை . யாழ் மத்திய கல்லூரியின் விளையாட்டுமைதானத்தில் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டி நடக்கும்போது வேம்படிமகளிர் கல்லூரி உட்பட யாழ்நகரப்பகுதி தவிர குடாநாட்டின் முண்ணணிப்பாடசாலைகள் கலந்துகொள்ளும் போட்டியாதலால் எம்போன்ற இளவட்டப் பாடசாலை மாணவர்கள் அங்கு ஆயராவதில் தவறேதும் இருப்பதாக அப்போது மட்டுமல்ல இப்போதும் எனக்குத்தோன்றவில்லை. ஓரிரு நாள் நடைபெறும் பெண்களுக்கான விளையாட்டுப்போட்டியில் அவ்வேளைய ரோமியோக்கள் நாங்கள் அழையா விருந்தாளிகள…

    • 8 replies
    • 1.4k views
  17. மாட்டன்.. மாட்டன்.. பிரின்ட்.. அடிக்கமாட்டன்.. என்று அடம்பிடிக்கிறான்.. என்னடா இவனுக்கு பிரச்சனை. ஒருவேளை 8 வருசப் பழசாகிட்டான்.. எறிய வேண்டிய கேஸ் ஆகிட்டானோ.. மனசுக்குள் ஒரு எண்ணம். ச்சா.. இவ்வளவு காலம்.. எத்தனையோ வின்டோஸ்களை கண்டு கடந்தும் வேலை செய்யுறவனுக்கு என்னாச்சு.... பிடிச்சு பிடரியில் தட்டினன்.. அஃறிணையாயினும்.. அவன் செய்த சேவைக்கு.. அவனை பிடரியில் தட்டினது.. மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருந்தது. திரும்ப திரும்ப.. பிழை உன்னிலை தான்.. பரிசோதித்துத் துலையடா.. என்ற கணக்கா அவனும்.. எரர் சம்கிக்கை காட்டுக் கொண்டே இருந்தான்.. சரிதான் என்ன தான் நடந்து என்று.. உள்ள திறந்து பார்த்தால்.. உள்ளுறுப்புகள் எல்லாம் நல்லாக் கிடக்கு.. என்ன …

  18. உயிர்க்கொல்லிப் பாம்பு - நோயல் நடேசன் கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும். வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன. வங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து செல்லப்படுவதை பலவருடங்களாக அறிந்தவர்கள் அவர்கள். ஏற்கன…

  19. Started by putthan,

    அவனின் வீடு மதவிற்கு பக்கத்தில் உள்ள ஒழுங்கையினுள் இருந்தது.அந்த மதவடி வீதியில் ஒரு பிலாமரம் அதில் பல பிலாக்காய்கள் காய்த்திருக்கும் இதனால் அந்த இடம் ஆயிரம் காச்சி பிலாவடி என்று ஊரார் அழைத்தனர்.அதற்கு அருகில் வாழும் மக்களையும் ஆயிரம்காய்ச்சி பிலாவடியார் என்று அழைப்பது வழக்கமாகிவிட்டபடியால் இவனையும் அந்த அடையாளம் தானாகவே ஓட்டி கொண்டது. பாடசாலையில் படிக்கும் பொழுது "டே பிலாவடி இங்கே வாடா" என்று வாத்தியார் கூப்பிடுவார் அதை இவன் பெரிதாக கண்டு கொள்வதில்லை,கண்டு கொள்வதிற்கு ஏற்ற மனபக்குவம் அப்போது அவனிற்கு இருக்கவில்லை. உயர்தர பாடசாலை மாணவர்களின் ஒன்றுகூடல் நடைபெற்றது பல பாடசாலைகளிளும் இருந்து மாணவர்கள் வந்து பங்குபற்றினார்கள் இவனுக்கு அருகில் இருந்த யாழகி (யாழ்பாணத்த…

  20. Started by கோமகன்,

    எனக்கு றொனியனின் ஞாபகம் இப்பொழுது தான் வந்தது . நான் வந்து இவ்வளவு நேரமாகியும் அதைக் காணவில்லை . அம்மாவின் அரவணைப்பில் , மரக்கறி உணவையே உண்டு வளர்ந்த சுத்த வீரன் றொனியன் . ஒழுங்கையில் யாரும் அவனுடைய அனுமதியில்லாமல் போகமுடியாது . மீறினால் வயிற்ருப்பிடி தான் ஆள் அரக்காது . தங்கைச்சி பகலில் பள்ளிக்கூடம் போனால் றொனியன் தான் அம்மாக்கு காவல் வீரன் . அம்மா என்னுடன் கதைக்கும்பொழுது , றொனியனப்பற்றி கதைக்காவிட்டால் அவாக்குப் பத்தியப்படாது . ஒருநாள் தங்கைச்சியைக் கொண்டு றொனியனைப் படம் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தா . அப்பொழுது தான் எனக்கு றொனியனின் ஆழுமை தெரிந்தது . அவன் மண்ணிற நிறத்தில் , நெடிய உருவத்தில் , அம்மாவின் ஊட்டத்தால் நல்ல செளிப்பாக இருந்தான் . நான் தங்கைச்சியைக் கூப்பிட்…

  21. அதிகாலை நேரம்.. சிறைக்கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டு கண்விழித்தான் குட்டிமணி. சிறைவாழ்க்கையில் சிறைக்கதவுகள் தட்டப்படுவதும் திட்டு விழுவதும் ஒன்றும் புதியவை அல்ல. ஆனால் அன்று அது வழமைக்கு மாறாக இருப்பதை குட்டிமணி உள்ளுணர்வால் உணர்ந்திருந்த போதிலும் வழமை என்றே எண்ணிக்கொண்டான். "அடோ.. பறத் தெமழ.. தம்ச ஒயா ஒக்கம கொட்டி நெய்த.." என்று சிங்களத்தில் திட்டிக்கொண்டு முகமூடிக் கும்பல் ஒன்று கொழும்பு வெலிகடையில் இருக்கும் சிறையின் சிறைக் கதவுகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு உட்புகுந்து கொண்டனர். "இங்க யாரடா குட்டிமணி" என்று ஒருவன் சிங்களத்தில் கத்த.. மாத்தையா.. "எயா மேக்க இன்னே.." என்று காவலுக்கு நின்ற சிங்களச் சிறைக்காவலன் காட்டிக் கொடுக்க குட்டிமணி, கொலைவெறியோடு அவனை தேட…

    • 8 replies
    • 2.9k views
  22. தண்டவாளத்தின் ஓரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன். என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன். இதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது. ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன். முழுமையாக பார்ப்பதற்காக கொ…

  23. இல்வாழ்வு தந்த இயலாமை கனமான அந்த அல்பத்தை தூக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு, அங்காலயும் இங்காலயும் சாய்ந்து சாய்ந்து மகள் ஜனனி ஓவர் ஆக்சன் வேற போட்டுக்கொண்டு, "அம்மா அம்மா பிடியுங்கோ" என்று சத்தம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மேனகாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. "இப்ப என்னத்துக்கு ஜனனி இதைத் தூக்கிக் கொண்டு வாறீங்கள்? அம்மாட்டா கேட்டா எடுத்துத் தந்திருப்பன்தானே?" "அம்மா நான் உங்கட கல்யாண வீட்டுப் படம் பார்த்துக் கனநாள்தானே.. வாங்கோ பார்ப்பம். நான்; அதில நிக்கிற ஆக்களெல்லாம் யார் யாரெண்டு சொல்லுவனாம் நீங்கள் நான் சொல்றதெல்லாம் சரியோ என்று பார்ப்பீங்களாம். சரியோ?" "ம்... மகாராணி சொன்னா அதுக்கு மறுபேச்சு இருக்கா? சரி சொல்லுங்கோ மகாராணி..."…

    • 8 replies
    • 1.9k views
  24. ஆனந்த குமாரசாமி முகாமின் K வலயத்தின் அந்த வீடுக்கு முன்னால் வரிசையாக சனம். அதில் ஒருவராக நானும் அக்காவும். ஏதோ நிவாரணத்துக்கான வரிசையோ, அல்லது இராணுவம் பதிவு செய்யும் வரிசையோ இல்லை. எல்லோருடைய கையிலும் ஒரு வெத்திலை. அந்த வெத்திலை கூட அந்த வீட்டுக்கு முன்னால் இருக்கும் கடையில் தான் வாங்கபட்டது. கொளுத்தும் வெய்யிலை பொருட்படுத்தாது சனம் வரிசையில் ஊர்ந்தபடி இருந்தார்கள். இது என்ன எங்களுக்கு புதுசே கிளிநொச்சியிலே இருந்து எதுகெடுத்தாலும் வரிசை தானே. "அக்கா எனக்கெண்டால் இதிலை கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை வா போவோம்." "கொஞ்சம் பொறுடா எல்லாரும் இந்த சாத்திரி உண்மை சொல்லுறான் என்று தானே இவ்வளவு கூட்டமா நிக்கிறாங்கள். கொஞ்சம் பொறு வந்தது தான் வந்தோம் ஒருக்கா கேட்டிட…

    • 8 replies
    • 1.9k views
  25. பருவத்தே செய்யும் பயிர் .............. அன்று ஞாயிறுமாலை ஆதவன் கடற்கரையோரமாய் அமர்ந்திருந்தான் .எண்ண அலைகள் தாயகம் நோக்கி செல்ல தொடங்கியது கல்வியின் உயர் தரம் முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருந்த நேரம் .ராணுவ அடகாசங்கள் கட்டு மீறி செல்ல தொடங்கியிருந்தது .. ஆதவனின் அப்பாவும் அம்மாவும் இவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தனர் .அதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே அங்கு இருந்த மாமாவால் செய்யபட்டு ,காணி பூமி ,அக்கா கெளசலா திருமணத்திற்கென வைத்திருந்த உடமை இ எல்லாம் பணமாகி ,அவன் லண்டனை அடைந்தான் . மூன்று மாதங்கள் மாமாவீடின் சுகம் பிரிவை கொஞ்சம் தணித்து .மெல்ல மெல்ல வேறிடம் பார்கவேண்டியதேவை ,மாமா உணர்த்த ,அவன் இடம் மாறினான் . சிலமாதங்கள் ஆக பெற்றவரிடமிருந்து இருந்து கடன் பத்…

    • 8 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.