Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்! புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், இன்று காலமானார். எழுத்தாளர் பிரபஞ்சன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதியன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் பத்திரிகையுலகில் நுழைந்தார். தமிழில் உள்ள பிரபலப் பத்திரிகைகளில் பணியாற்றினார். இவரது முதல் சிறுகதை 1961ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் தொடர்ந்து படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தார் பிரபஞ்சன். சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்கி வந்தார். இதனால் பத்திரிகையுலகை விட்டு விலகி எழுத்துலகில் பயண…

  2. Published By: NANTHINI 02 AUG, 2023 | 10:46 AM மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். இலண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர், தான் எழுதிய 'லண்டனிலிருந்து விமல்' என்ற நூலை அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டிருந்தார். அதன் பின்னர், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீதின் 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பில் நடைபெற்றபோது, அந்நிகழ்வினை விமல் சொக்கநாதன் தலைமையேற்று நடத்தியதோடு, நூல் வெளியீட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …

  3. ஆரம்ப கால பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளரும் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான மனோ அண்ணாவின் துணைவியார் மனோ அண்ணி இன்று 13.03.2021 சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்து விட்டார் என்று அறியப்படுகிறது. பொது வாழ்வில் உள்ள தலைவர் ஒருவரின் துணைவிகளில் துணைவரின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாகவும் …

  4. தமிழ்சினிமாவின் எண்பதுகள் இளையராஜா என்ற பேரரசனின் இசையாட்சி நடந்துகொண்டிருந்த போது அவரின் எல்லைக்குள் வர முடியாத தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்த சிற்றரசர்களில் முதன்மையானவர் சந்திரபோஸ். குறிப்பாக பெருந் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிவரும் ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக அமரும் அளவுக்கு சந்திரபோஸ் ஆசீர்வதிக்கப்பட்டார். இதற்கெல்லாம் வெறும் பரிந்துரைகள் மட்டும் பலனளிக்காது, அதற்கும் மேல் தன்னை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என்ற இலட்சியமும் வேகமும் இருக்கவேண்டும், அதுதான் சந்திரபோஸின் உயரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழகத்து நண்பர்களோடு பேசும் போது அடிக்கடி சொல்லிக்கொள்வேன், "பாடல்களைக் கேட்கும் ரசனையில் ஈழத்தவர்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இருக்க…

  5. முன்னாள் மகாஜானக்கல்லூரி அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் இறைபதம் அடைந்தார்

  6. மரண அறிவித்தல் . செல்வி அனுஜா பாஸ்கரன் மறைவு 11-08-2012 குப்பிளானைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை பாஸ்கரனின் மகள் 11-8-2012 அன்று அகால மரணமானார். அன்னாரின் இறுதிக் கிறிகைகள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் லோகநாதன் டென்மார்க்

  7. மெல்பேர்னில் வெள்ளிக்கிழமை(29.05.2020) காலமான தமிழ் சமூக செயற்பாட்டாளர் சபேசன் சண்முகம் குறித்த நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்வில் பங்கேற்றோர் மெல்பேர்னிலிருந்து Dr.நடேசன் மற்றும் சிட்னியிலிருந்து A.ரஜீவன் ஆகியோர். https://www.sbs.com.au/language/tamil/audio/a-eulogy-for-sabesan-shanmugam

    • 10 replies
    • 1.6k views
  8. பிரபல எழுத்தாளர் பூநகரான் குகதாசன் மாரடைப்பால் மரணம்! [Tuesday 2015-04-28 20:00] பூநகரான் என்னும் புனைபெயரில் ஊடகங்களில் சமுக மற்றும் அரசியல் ஆய்வு கட்டுரைகளை எழுதிவந்த குகதாசன் பொன்னம்பலம் அவர்கள் கனடாவில் மாரடைப்பால் காலமானார். ஏயர் கனடா(Air Canada ) விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றியவரும், இலங்கையில் தபால் அதிபராக தபால் திணைக்களத்தில் பணியாற்றியவரும், எழுத்தாளரும் கவிஞருமாக சமூகத்தில் நன்கு அறியப்பட்டவரும் கனடா உதயன் பத்திரிகையின் தொடர் எழுத்தாளருமான “ பூ ந க ரா ன் கு க தா ச ன்” நேற்று கனடாவின் மேபிள் ( Maple) நகரில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைத்து நண்பர்களுக்கும் அறியத்தருகின்றோம். …

  9. மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

    • 9 replies
    • 2.1k views
  10. யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் சிறிகாந்தலட்சுமி காலம் ஆனார்… December 25, 2019 யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பிரதம நூலகர் (chief Librarian), இலங்கை நூலகசங்க வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது தமிழ்தலைவர் (SLLA-Srilanka Library Association) திருமதி சிறிகாந்தலட்சுமி அருளானந்தம் தனது 59அவது வயதில் இன்று (25.12.19) மாரடைப்பு ( Heart Attack) காரணமாக காலமானார். இணுவிலில் பிறந்த சிறீகாந்தலட்சுமி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் பயின்று யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டதாரியானார். பெங்களுரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்ட பின்படிப்பினை மேற்கொண்டுள்ளார். பத்தி எழுத்தாளர், கவிஞர், நூல் விமர்சகர், என பலதுறைகளில் சிறந்…

  11. மாமனிதர் இராஐரட்னம் அவர்களுக்கு இறுதி வணக்கம்: [Friday, 2014-06-20 20:11:40] ஈழத்தமிழினத்தின் உரிமைப் போரை மனதில் நிறுத்தி நீண்டகாலம் அயராது உழைத்த மாமனிதர் இராஐரட்னம் தனது 89வது வயதில் அமெரிக்காவில் காலமானார். தமிழீழத்தின் வடமராச்சி அல்வாயில் பிறந்தவர் இவர். சிங்கர் இராஐரட்னம் என ஆரம்ப காலத்தில் பலராலும் அறியப்பட்ட இராஐரட்னம் அவர்கள் தமிழர் உரிமைப்போர் தீவிரமடையாத தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் விவகாரத்தில் அதீத அக்கறையும் நீண்ட தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக செயற்பட்டார் என்பது பலரும் அறியாத அதியுட்சசெயற்பாடு. அத்தகைய ஒரு நிலையை அவர் கடைசி வரை பேனினார் என்பதே ஒரு வரலாற்று அதிசயம். படம் போடுவதற்காவும் அறிக்கைகள் விடுவதற்காகவும் …

    • 9 replies
    • 1.3k views
  12. நடந்தால் இரண்டடி .. இருந்தால் நான்கடி.. படுத்தால் ஆறடி போதும் இந்த நிலமும் அந்த வானமும் அது எல்லோர்க்கும் சொந்தம் கண்ணீர் அஞ்சலிகள் 💐💐

  13. வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளின் செய்தியாளர்களில் ஒருவரும், T.R.T, I.B.C மற்றும் கனேடிய தமிழ் வானொலிகளில் செய்திகள் வாசிப்பாளரும், மனித உரிமைப் பேரவை அங்கத்தவருள் ஒருவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சாத்வீக வழிகளில் பெரும் பங்காற்றியும் வந்த விஜயரத்தினம் வரதராஜா (வீ ஆர் வரதராஜா) அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று யேர்மனியில் காலமானார். தற்போது சமகால நிகழ்வுகள்பற்றி எழுதிவரும் இவரது இழப்பு ஊடகத்துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்னாருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்!!

  14. எம்மால் உணவு அளிக்க முடியாமல் அல்லது அவர் வேலை செய்து சம்பாதிப்பதற்காக வேலையும் அளிக்க முடியாமல் அல்லது அவரின் பசிக்கு நாளைக்கு ஒருதரம் ஆவது உணவு கடனாகவோ பிச்சையாகவோ அளிக்க முடியாமல் போனதால் உயிர் இழந்த முதியவருக்கும் இங்கு நாங்கள் அஞ்சலியாவது செலுத்துவோம். முதியவரே உங்கள் பட்டினி மரணம் எங்களுக்கு வெறும் செய்தியாகவே கிடைத்தது. உங்கள் மரணம் கட்டாயம் எங்கள் ஒவ்வொருதரையும் பாதித்திருக்கிறது. இலங்கை அரசின் கொடுமையான பொருளாதார தடையால் உங்கள் மரணம் நிகழ்தாலும் அதற்கான பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது. இனியாவது எங்களது கடமைகளை உங்கள் பெயரால் செய்து தமிழ்ஈழத்தில் பட்டினி மரணங்களையாவது நிறுத்துவதற்கு முயற்சிக்கிறோம். அஞ்சலிகள் முதியவரே

  15. இன்று வசம்பு அண்ணாவின் பிறந்த நாள் என்று யாழ் பிறந்தநாள் பகுதியில் இருக்கு...... அரசியல் ரீதியில் வேறு கொள்கைகளை கொண்டாலும் நான் யாழ் களத்தில் இணைந்த நாட்களில் யாழ் களத்தின் அசைக்க முடியாத ஒரு கருத்தாளனாக ஒரு நகைச்சுவையாக எழுத கூடியவராக அனைவருடனும் அன்புடனும் பண்புடனும் பழக கூடியவராக யாழ் களத்தை கலகலப்பாக வைத்திருக்க கூடியவராக இருந்தார்..... இந்த உலகை விட்டு அவர் பிரிந்துவிட்டாலும் இன்றும் யாழ் களத்தில் அவர் நினைவு சொல்லும் கருத்துகளும் அவர் பேரும் இருப்பது ஆறுதல்....

    • 9 replies
    • 1.3k views
  16. வணக்கம், கீழுள்ள செய்தியை நான் சீ.எம்.ஆர் வலைத்தளத்தில் தற்செயலாக கண்ணுற்றேன். எனக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், நீண்ட காலமாக இவரது நடிப்பை ரசித்து வந்து இருக்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்! +++ நடிகர் கொச்சின் ஹனீபா இன்று சென்னையில் மரணமடைந்தார். மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. மனைவி, இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களும் இரட்டைக் குழந்தைகள் ஆவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹனீபாவுக்கு கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மால…

  17. ********************************** தமிழோசையின் முன்னாள் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிர ுந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் ப…

  18. பருத்தித் துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட, தமிழ் உணர்வாளர் திரு நவனாயகம் லண்டனில் காலமானார். இவர் 'வோல்தம்ஸ்டோ தமிழ்ச் சங்கம்' தின் ஆரம்பகர்த்தாவும், 'Tamil Refugee Action Group' இன் முன்னாள் தலைவரும், வோல்தம்ஸ்டோ தமிழ் பாடசாலையின் முன்னாள் அதிபருமாவார். தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் செயற்பாட்டாளராகவும் இருந்தவர். அன்னாரிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

    • 9 replies
    • 988 views
  19. விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம் யாழ்ப்பாணம் - கச்சேரி - நல்லூர் வீதியில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர். புகையிரதம் வருவதை பொருட்படுத்தாமல் கச்சேரி - நல்லூர் வீதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் பொறியிலாளரான 41 வயதுடைய எஸ். சுதாகரன் ( Vilvarajah Suthahar ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஆதவன் (வயது 28), அரவிந்தன் (வயது 28), கம்பதாஸன் (வயது 23) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அ…

  20. மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணிப்பகுதியில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குகன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு இன்றாகும்.

    • 9 replies
    • 1.7k views
  21. மரண அறிவித்தல் திரு.கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) திரு.கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) மலர்வு : 7 மார்ச் 1983 — உதிர்வு : 20 ஓகஸ்ட் 2012 தெல்லிப்பளை மாத்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் முய்லிங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) அவர்கள் 20 -08 -2012 திங்கட்கிழமை அன்று அகால மரணமானார்- அன்னார் காலஞ்சென்றவர்களான முருகர் ,தெய்வானை மற்றும் வல்லியர் லட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும் முருகர் கந்தசாமி,ராசம்மா தம்பதியரின் அன்பு மகனும் ஆவார். சுதாகரன்,சுதர்சினி ,சுகேனினி,சுகம்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் பத்மவதனா,சுதாகரன் ஆகியோரின் மைத்துனரும் திசானனின் அன்புச் சித்தப்பாவும் ஆவர். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்ற…

  22. முதன் முதலாக.... தமிழ் எழுத்தை கணனிக்கு, கொண்டு வந்தவர் மறைவு! இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழே கணனிப் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த எழுத்துருவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அதற்குப் பின்புலமாக இருந்தவர் முன்னாள் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான கணிதமேதை சி.விஜயகுமார் அவர்கள் ஆகும். இவர் நேற்று ரொரன்ரோவில் காலமானார். 1980களின் இறுதியில் இந்திய இராணுவத்துதோடு புலிகள் உக்கிரபோரில் ஈடுபட்டிருந்தவேளை புலம்பெயர் நாடுகளில்; விடுதலைப் புலிகளின் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல தமது கிளைகள் ஊடாக புலிகள் செய்தி ஏடுகளை நடத்தி வந்தனர். போர் செய்திகளை உடனுக்குடன் வெளியிட முன்னைய அச்சமைப்பு வேகம் போதாமல் இருந்த காரணத்தால் புலிகள் புதிய முயற்சி…

  23. ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின் தந்தை காலமானார் 36 Views கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட போரில் தமிழீழ மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, குறித்த படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்து தன்னுயிர் ஈந்த ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின் தந்தை குமரேசன் ஐயா உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அன்னாரது இறுதி சடங்கு சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (20.5.2021) வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரேசன் ஐயாவின் மறைவுக்கு “இலக்கு செய்தி நிறுவனம்” தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது. https://www.ilakku.o…

    • 9 replies
    • 1.2k views
  24. கவிஞர் திருமாவளவன் இன்று (05.10.2015) காலை காலமானார் என்ற செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம். கவிஞர் திருமாவளவனுக்கு எங்கள் நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.