அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
தமிழர்களால் ஒரு பலமாக திரட்சிபெற முடியுமா -யதீந்திரா தமிழ் தேசிய அரசியல் தொடர்ந்தும் தோல்வியின் பாதையிலேயே செல்கின்றது. இது தொடர்பில் பல்வேறு சந்தர்பங்களில் விவாதித்திருக்கின்றேன். தமிழர்களின் அரசில் பயணத்தை எடுத்து நோக்கினால், அதனை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, செல்வாநாயகம் காலகட்டம். இரண்டாவது, பிரபாகரன் காலகட்டம், மூன்றாவது, 2009இற்கு பின்னரான சம்பந்தன் காலகட்டம். இந்த மூன்று கட்டங்களும் தோல்வியில் முடிந்தமை தொடர்பில் நான் முன்னைய கட்டுரை ஒன்றில் விரிவாக எழுதியிருக்கின்றேன். நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றேன். ஆனால் முன்னேற்றங்களைத்தான் காணவில்லை. எனி…
-
- 2 replies
- 410 views
-
-
இலங்கை விடயத்தில் தெற்காசியாவின் பிராந்திய சக்தி என்னும் தகுதி நிலையை இழந்து வருகிறதா இந்தியா? - யதீந்திரா 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது அல்லது அதன் பெறுமதியை வலுவிழக்கச் செய்வது தொடர்பான முஸ்தீபுகள் தீவிரமடைந்திருக்கின்ற சூழலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்திருக்கின்றது. யூலை மாதத்தின் ஆரம்பப்பகுதியில், இந்தியா செல்வதற்கான திட்டமொன்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏலவே இருந்தது. எனினும் தற்போது புதுடில்லி கூட்டமைப்பை அவசரமாக அழைத்துள்ளதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பான விடயங்கள் தொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிசிடம்…
-
- 2 replies
- 978 views
-
-
ஜெயலலிதாவின் கூற்றை விட, முரளியின் கூற்று மோசமானதா? -எம்.எஸ்.எம். ஐயூப் கிரிக்கெட் விளையாட்டின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றி, தமிழகத்தில் ‘800’ என்ற பெயரில் தயாரிக்கப்படவிருந்த திரைப்படம் தொடர்பாக, அங்கு எழுந்திருக்கும் சர்ச்சை, இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினையே தவிர வேறொன்றும் அல்ல! ‘டெஸ்ட்’ போட்டிகளில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி, முரளி சாதனை படைத்தமையால் இந்தப் படத்துக்கு, அதன் தயாரிப்பாளர்கள் ‘800’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தலைமை தாங்கும் அரசாங்கத்தை, முரளி ஆதரித்தார், ஆதரிக்கிறார் என்ற அடிப்படையிலேயே இந்தத் திரைப்படத்துக்கு எத…
-
- 2 replies
- 1.2k views
-
-
அகதி தஞ்சம் கோரும் இலங்கை தமிழர்கள் தஞ்சம் மறுக்கப்பட்டும் பயண வழியில் சிக்கியும் அவதியுறும் தமிழ் அகதிகளின் அவலம் ‘வீரகேசரி’ வாசகர்களுக்காக விசேடமாக எழுதப்பட்ட இந்த ஆய்வில், தஞ்சம் கோரும் நோக்குடன் புறப்பட்டு, வேண்டிய நாட்டிற்குப் போய்ச்சேர முடியாமல் இடை வழிகளில் சிக்குண்டு அவலத்தில் வாழும் பல ஆயிரம் தமிழ் அகதிகள் பற்றியும் பல நாடுகளில் அகதி தஞ்சம் கோரி மறுக்கப்பட்ட நிலையிலும் வாழும் தமிழர்கள் நிலை பற்றியும் சர்வதேச சட்டங்களின்படி எவ்வாறு தஞ்சம் கோருவது என்பது பற்றியும் இலங்கைத் தமிழ் அகதிகள் தற்போது தஞ்சம் கோரிச்செல்லும் முக்கிய நாடான அவுஸ்திரேலியா பற்றியும் மற்றைய நாடுகளில் தஞ்சம் பற்றியும், …
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துச் செல்கிறதா? - யதீந்திரா இலங்கையின் மீதான மூன்றாவது பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணையை அரசாங்கம் எதிர்ப்பதில் ஆச்சரியம் கொள்ள எதுவுமில்லை. ஆனால் குறித்த பிரேரணையை, தமிழ் தரப்பினரில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதுதான் ஆச்சரியமானது. அமெரிக்க பிரேரணையை ஒரு தேவையற்ற தலையீடாக அரசாங்கம் கருதுகிறது. இதனை ஒருவர் விளங்கிக் கொள்ளலாம். அவ்வாறாயின் குறிப்பிட்ட புலம்பெயர் தரப்பினரும் தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏன் எதிர்க்கின்றனர். பதில் மிகவும் இலகுவானது. தாங்கள் விரும்பிய விடயங்கள் குறித்த பிரேரணையில் இல்லை என்பதாலேயே அவர்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத…
-
- 2 replies
- 1.1k views
-
-
பாரதி இராஜநாயகம் மூத்த பத்திரிகையாளர் (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் பார்வைகள். இவை பிபிசி தமிழின் பார்வை அல்ல - ஆசிரியர்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தத…
-
- 2 replies
- 874 views
- 1 follower
-
-
திறக்கப்படுகிறது கிழக்குப் பல்கலைக்கழகம்: உண்மையை சொன்னால் வெட்கம் யுத்தகாலத்தில்கூட, இந்த அளவுக்கு மோசமாகக் காலம் இழுத்தடிக்கப்பட்டதாக ஞாபகமில்லை. குண்டு வெடித்தால் ஒருசில வாரங்கள்தான், கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். பிறகு எப்படியோ திறக்கப்பட்டுவிடும். மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் பயந்து பயந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள். ஆனாலும், இப்போது மாதக்கணக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று வெளியில் சொல்வதற்குக் கூட, வெட்கமாக இருக்கிறது. பல்கலைக்கழக நடைமுறைகள் மாத்திரமல்ல, இலங்கையின் கல்விமுறையில் உள்ள இலவசத் தன்மைதான், இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற…
-
- 2 replies
- 597 views
-
-
எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்! May 10, 2024 — கருணாகரன் — வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! இலங்கையில் இனவாதச் சிந்தனையே அரசிடமும் பெரும்பாலான அரசியல், ஊடகத் தரப்பினரிடத்திலும் உண்டு. இனவாதச்சிந்தனை என்றாலே அது வன்முறையைக் கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். …
-
- 2 replies
- 392 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவுக்கு நன்றி, கனடாவை பின்பற்றி அவுஸ்திரேலியாவும் புலம் பெயர்ந்த தமிழர்களை அங்கீகரித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இவற்றின் மகுடமாக அவுஸ்திரேலியா தமிழை தேசிய மொழியாக அங்கீகரித்தமையை கொண்டாடலாம். வாழும் நாடுகளில் உடலும் வடகிழக்கு இலங்கையில் மனசுமாக எழுச்சி பெறும் புலம் பெர்ந்த இளம் தமிழர் சக்தியை அரசியல் தீர்வுமூலம் இலங்கை அரசு அரவணைத்துக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய கோரிக்கையாக உள்ளது. வடகிழக்கு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பலப்பட்டு வருகிறார்கள். இந்திய தமிழர்களதும் இந்தியாவினதும் கரிசனை ஈழத் தமிழர்களை மட்டுமன்றி மலையக தமிழர்களை உள்ளடக்கியதாகும். . …
-
- 2 replies
- 638 views
-
-
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்! அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஓர் அமைச்சருடைய இணைப்பாளர், அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக பிரதேச சபைகளில் போட்டியிட்டவர், அவ்வாறு பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகிறார். அதுதொடர்பாக அவர் சார்ந்த கடல் தொழில் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரை உத்தியோகபூர்வமாக மறுப்பு எதையும் தெரிவித்திருக்கவில்லை.. அரசாங்க அமைச்சரின் இணைப்பாளர் அவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாள், ஈழ மக்கள…
-
-
- 2 replies
- 339 views
- 1 follower
-
-
திமுக ஆட்சியமைக்க காங் நிபந்தனையற்ற ஆதரவு பாண்டிச்சேரியில் காங் ஆட்சிக்கு திமுக ஆதரவு மே 12, 2006 சென்னை: திமுக அமைக்கவுள்ள புதிய ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதையடுத்து பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக திமுக அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 96 இடங்களில் வென்றுள்ள அக்கட்சி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வராக கருணாநிதி நாளை பதவியேற்கவுள்ளார். திமுக ஆட்சியில் சேர மாட்டோம், வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம் என்று பாமக, கம்யூனிஸ் …
-
- 2 replies
- 1.4k views
-
-
பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா? யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் “மின்னல்” என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவ…
-
- 2 replies
- 794 views
-
-
கம்பவாருதி ஜெயராஜ்
-
- 2 replies
- 787 views
-
-
https://www.youtube.com/watch?v=-oWSbkG8rF8
-
- 2 replies
- 892 views
-
-
தோல்வியடைந்த நாடாகுமா இலங்கை- பா.உதயன் தேனும் பாலும் ஓடும் என்று போட்டு விட்டோம் ஓட்டு எல்லாம் இப்போ தெருவில நிற்கிறோமே தெரியாம தெரிஞ்சு விட்டோமே நாங்கள் படும் பாடு இப்போ போரை விட மோசமாச்சு யுத்த வெற்றி எல்லாம் இப்போ செத்து போன கதையா போச்சு பாகற்காய் கூட இப்போ பவுண் விலையாய் போச்சு நாடு கூட தம்பி நாறும் கதையாச்சு கட்டி இருக்கும் கோவணமும் உருவிப் போட்டான்கள் கையை விரித்து கடனுக்காய் காக்க வைச்சாங்கள் பாவம் சனங்கள். இராஜதந்திரரீதியாக காய்களை நகர்த்தி எல்லா இராஜதந்திரத்திலும் பெரும் கெட்டிகாரர்கள் சிங்கள ஆளும் வர்க்க தலைவர்கள் எனவும் தமிழர்களை விட பெரும் கெட்டித்தனம் படைத்தவர்கள் என்று எம்மில் உள்ள அரசியல் ஆய்வளர்கள் பலர…
-
- 2 replies
- 754 views
-
-
முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப காணி இல்லை மரணித்த பிறகு, எல்லோருக்கும் அதிகபட்சம் ஆறடி நிலம்தான் சொந்தம். என்றிருந்தாலும், உலகத்தில் வாழ்கின்றபோது, தனிமனிதர்களும் குழுக்களும் அரசாங்கங்களும் நாடுகளும் நிலத்துக்காக நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சர்வதேச அளவில் மண்ணுக்காக நடந்த யுத்தங்கள்தான் அதிகம். காணிப் பிரச்சினையும் நிலப்பற்றாக்குறையும் உலக அளவில் பொதுவாக எல்லா நாடுகளிலும் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினை என்றாலும், இன, மத அடிப்படையிலோ அல்லது ஆளுகைக் கட்டமைப்பு ரீதியாகவோ வேறுபட்டுள்ள மக்கள் கூட்டத்தாரிடையே இந்நிலைமை தீவிரமாகக் காணப்படும். அந்த வகையில், இலங்கையிலும் காணிப்பிரச்சின…
-
- 2 replies
- 571 views
-
-
தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா? புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஒக்டோபர் 01 தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஹர்த்தாலையும் நடத்தி முடித்திருக்கின்றன. தமிழ்த் தேசிய கட்சிகள், வாக்கு அரசியல் ரீதியாகத் தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில், ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும் அதன் ஊடாகச் சர்வதேசத்துக்குச் செய்தி சொல்வதும் மாத்திரம், அரசியல் வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடுமா என்கிற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் எழுச்…
-
- 2 replies
- 1.2k views
-
-
”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” செல்லும் போராட்டம் சொல்லும் செய்தி என்ன? தி. திபாகரன் எங்கெல்லாம் அடக்குமுறை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் போராட்டங்கள் வெடிப்பெடுக்கும் என்பதை மனிதகுல வரலாறு பதிவாக்குகிறது. இன்று தமிழ் மண்ணில் அத்தகையதோர் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டம் வட கிழக்கு சிவில் அமைப்புக்களின் தலைமையில் ”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற கோஷத்துடன் வெடித்து கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி பொங்கி பிரவாகித்து ஓடத் தொடங்கிவிட்டது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிங்களப் பேரினவாத சக்திகளினால் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் மறுக்கப்படும் போதெல்லாம் தமிழ் தலைவர்களின் அழைப்பிற்கிணங்க எல்…
-
- 2 replies
- 638 views
-
-
வெடுக்குநாறி மலையை இனி விடமாட்டார்கள்!
-
- 2 replies
- 840 views
- 1 follower
-
-
சம்பந்தருக்குப் பிறகு? - நிலாந்தன் சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறாரோ அங்கிருந்துதான் அடுத்த கட்டம் தொடங்கும். சம்பந்தர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்? சம்பந்தர் சிதறிப்போன தன் பலத்தைத் தானே உணராத ஒரு தமிழ்ச் சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். சம்பந்தரின் வழி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதனை இரண்டு தளங்களில் ஆராயலாம். முதலில் அனைத்துலக அளவில். இரண்டாவதாக உள்நாட்டுக்குள். அனைத்துலக அளவில் சம்பந்தர் தமிழ்மக்களின் மெய்யான பலம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கவில்லை. தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் எது காரணமோ அதுதான் தமிழ் மக்களின் மெய்யான பலமும். அதுதான் தமிழ் மக்களின் புவிசார் அமைவிடம். அந்த அமைவிடம் காரணமாகத்தான…
-
- 2 replies
- 355 views
-
-
கோர்ட்டுக்கு இழுக்கப்படும் கட்சி? - நிலாந்தன் 2014ஆம் ஆண்டு மன்னாரில், முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்களின் சந்திப்பு அது. ஆயர் அப்பொழுது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் அழைப்பாளராகவும் இருந்தார். அச்சந்திப்பில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள். சந்திப்பின் முடிவில் சம்பந்தர் ஆயரைப் பார்த்து பின்வருமாறு சொன்னார்… ”பிஷப் நீங்கள் சொல்லுறதச் சொல்லுங்கோ, ஆனால் கடைசியா முடிவெடுக்கிறது நாங்கள்தான்” என்று. அப்பொழுது அப்படிச் சொல்லக்கூடிய பலம் சம்பந்தருக்கு இருந்…
-
-
- 2 replies
- 501 views
-
-
போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்" நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப…
-
- 2 replies
- 927 views
-
-
தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும் பிரதமர் ஹரினி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குத் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 1968 ஜூன் மாதம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வெற்றி பெற்ற கோவில் அது. அந்தப் போராட்டத்திற்கு கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது. ஆனால் இங்குள்ள முரண் என்னவென்றால் அந்தப் போராட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி போராடு…
-
-
- 2 replies
- 808 views
-
-
எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம். - நிலாந்தன் 28 ஜூலை 2013 அண்மையில் யாழ்ப்பாணத்தில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் யாழ். முகாமையாளர் அவையின் சந்திப்பு ஒன்று நடந்தது. இதில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ''நாங்கள் அபிவிருத்திக்கோ இணக்கப்பாட்டுக்கோ எதிரானவர்களில்லை. மாகாணசபைத் தேர்தலில் நாங்கள் வெற்றியடையும்போது அபிவிருத்தியை ஆரம்பிப்போம். மக்களுடைய தேவைகளை நாங்கள் மனதில் கொண்டிருக்கிறோம். பலரும் நினைக்கிறார்கள், நாங்கள் நெகடிவ் திங்கிங் உடையவர்கள் என்று. உண்மையில் நாங்கள் அப்படிச்சிந்திக்கவில்லை. பொஸிடிவ் திங்கிங்கில்தான் நாங்கள் பயணிக்க விரும்புகிறோம். நாங்கள் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. இப்போது…
-
- 2 replies
- 531 views
-
-
பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர்களுக்கு உண்டு. தமிழர்களை 'பாண்டி' என்று இழிசனர்களாக சுட்டும் இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது. மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிரதம் சேர்ந்து உருவான மொழி. அவர்கள் அதை சமஸ்கிரதத்தோடு தமிழி என்ன ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்றுதான் சொல்வார்கள். பண்டைய சேர நாடுதான் இன்றைய கேளரா என்பதைக்கூட சேர நாடு தமிழர்களுடைய நாடு என்று சொல்ல மாட்டார்கள். தமிழி என்ற தழிழுக்கு முந்திய மொழி பேசியவர்களின் நாடு என்றுதான் சொல்வார்கள். இத்தனைக்கும் பாண்டியர்களும் சோழர்களும் மோதிக்கொண்ட அளவுக்கு சேரர்களும் பாண்டியர்களும், சேரர்களும் சோழர்களும் மோதிக…
-
- 2 replies
- 2.2k views
-