Jump to content

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்

Recommended Posts

பதியப்பட்டது

விதிமுறைகள்:

1-ஒருவர் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் ஒரு கருத்தாளரை மாத்திரமே பிரேரணை செய்ய முடியும்.

2-பிரேரணை செய்யும் போது குறிப்பிட்ட மாதத்தில் பிரேரிக்கப்படும் கருத்தாளர் எழுதிய ஆகக்குறைந்தது 3-மூன்று சிறந்த கருத்துக்களினை இங்கு இணைக்க வேண்டும். அல்லது அதன் லிங்குகளை இணைக்கலாம்.

கருத்துகள் கவிதையாகவோ, கதையாகவோ, பாடலாகவோ, சொல் நடையாகவோ எப்படியான வடிவத்திலும் அமையலாம்.

4-ஒவ்வொரு மாதமும் இறுதி ஏழு நாட்களில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் மாத்திரம் ஏற்று கொள்ளப்படும். (உ+ம் சனவரி 2012 திகதி 25 தொடக்கம் 31 வரை)

சிறந்த கருத்தாளர் தெரிவு:

மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் முன்னைய மாதத்திற்கான சிறந்த கருத்தாளர் அறிவிக்கப்படுவார் (உ+ம் 2012 Feb முதல் வாரம் Jan 2012 இன் சிறந்த கருத்தாளர் அறிவிக்கப்படுவார்).

இறுதி முடிவு: போக்குவரத்து

வெகுமதி:

50 டாலர் அன்பளிப்பு சான்றிதழ் (அனுசரணை : போக்குவரத்து - 2012ம் ஆண்டு சனவரி தொடக்கம் 2012 டிசம்பர் வரை).

ஏதாவது காரணத்தின் நிமித்தம் குறிப்பிட்ட ஒரு மாதத்திற்கு சிறந்த கருத்தாளராக ஒருவரும் தெரிவு செய்யப்படாவிட்டால் அல்லது ஏதாவது காரணத்தின் நிமித்தம் வெகுமதியை சிறந்த கருத்தாளரினால் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் தொடர்ந்து வரும் அடுத்த மாதத்திற்கான வெகுமதியுடன் முன்னைய மாதத்தின் அல்லது மாதங்களின் வெகுமதி சேர்க்கப்படும்.

வெகுமதி மின்னஞ்சல் ஊடாக சிறந்த கருத்தாளருக்கு அனுப்பி வைக்கப்படும். தாம் வாழும் நாட்டில் உள்ள வியாபார நிறுவனத்தில் (உ+ம் எரிபொருள் நிரப்பு நிலையம், பல்பொருள் அங்காடி, உணவகம், ஏனையவை) பயன்படுத்தும் வகையில் அன்பளிப்பு சான்றிதழ் ( Gift Certificate ) அனுப்பபடும்.

யாழ் கருத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், யாழ் கருத்து கள பொறுப்பாளர் விரும்பும் வகையில் வியாபார ரீதியாக யாழ் இணையத்தை முன்னேற்றும் வகையிலும் எமது நிறுவனம் சார்பாக இந்த முயற்சியை செய்கின்றோம். இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு யாழ் கருத்து களத்தில் எழுதுகின்ற உங்கள் ஆதரவு தேவை. நன்றி

முக்கியகுறிப்பு-கருத்தாளர்கள் எழுதிய கருத்து அல்லது ஆக்கம் யாழ் கருத்து களத்தில் தனித்துவமாக அவர்கள் எழுதிய சொந்த கருத்தாக/ஆக்கமாக அமைய வேண்டும். தங்கள் அல்லது வேறு வலை தளங்களில் நகல் செய்யப்பட்ட ஆக்கங்கள், கருத்துக்கள் சேர்க்கபட மாட்டாது.

பிழை திருத்தம்-முக்கியகுறிப்பு எனும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

  • Replies 306
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது சிறந்த கருத்தாளர் தை மாதம் 2012- சாந்தி (மூன்று கருத்துக்கள் சிவப்பினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96373

shanthy

முல்லைமண்

  • photo-thumb-67.jpg
  • கருத்துக்கள உறவுகள்
  • bullet_black.pngbullet_black.pngbullet_black.png
  • 2,251 posts

  • Gender:Female
  • Location:Germany

Posted 05 January 2012 - 04:28 AM

கருத்திட்ட நிலாமதி , கோமகன் ,கவிதை , கல்கி நன்றிகள்.

snapback.pngkomagan, on 04 January 2012 - 06:33 PM, said:

இதுதான் எமது வாழ்வியல் நிஜம் . மிக்க நன்றிகள் சாந்தி உங்கள் தட்டி எழுப்பலுக்கு :( :( :( 1 . தட்டிக்கொண்டேயிருக்கிறார்கள் சிறைகளிலும் சித்திவதைக் கூடங்களிலிருந்தும் கருணாயாளர்களின் கண்கள் திறக்குமென்று ஆனால் கதவுகள் திறக்கிற வழிகளைத்தான் காணோம்.

Posted 05 January 2012 - 04:37 AM

snapback.pngகவிதை, on 05 January 2012 - 02:37 AM, said:

சிறைச்சாலைகள் என்பது, உடல்ரீதியிலான சித்திரவதைகள் என்பதையும் தாண்டி..... மனரீதியாக எவ்விதமான மனநிலையினை உருவாக்கி வதைக்கும் என்பதனை... இந்தக் கதையிலும் உணர்ந்தேன்.

இப்படியான பல கதைகளினை மனதுள் சுமந்து கொண்டு... அவர்கள் பாடுபட, நாமோ வெளியில் ஆடிப்பாடிக்கொண்டு திரிகின்றோம். :(

மனதினை நெருடிய கதை. மிக்க நன்றி அக்கா! விதை வேதனையிலும் வேதனை என்னவென்றால் தங்களுக்கு ஒரு நல்ல உணவைத் தாருங்கள் எனக்கேட்டுத்தான் பெறவேண்டிய நிலமையில் இருக்கிறார்கள். மாதம் ஒரு நாள் நல்ல உணவை வழங்கினாலே அவர்கள் மகிழ்வார்கள். புலம்பெயர்ந்த நாம் மனம் வைத்தால் அவர்கள் நிம்மதியை அடைய முடியும். யுத்தம் முடிந்ததோடு மறக்கப்பட்ட ஆயிரம் தமிழ் அரசியல் கைதிகளின் மறுவாழ்வுக்கு கொடையாளர்கள் முன்வந்து உதவினால் அவர்கள் வாழ்விலும் ஒளிபிறக்கும்.

(சோறுதான் தேவையென்றால் மகிந்தவுடன் டக்கண்ணாவுடன் கூட்டு வைக்கலாம் என்ற ஆலோசகர்கள் இங்கே ஓடிவந்து இலவச ஆலோசனைகளை அள்ளிக் கொட்ட வேண்டாமென்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்)

snapback.pngகல்கி, on 05 January 2012 - 03:35 AM, said:

உண்மைதான் . இக்கதையில் தொக்கி நிற்பவை துன்பமயமான அழுத்தங்கள்.

காதல், குழந்தை என அந்த பெண் அடைந்த துயரங்கள் மனதை நிச்சயம் வருத்தும். உண்மையில் நீங்கள் யாதர்த்தத்தை உரைக்கும் பாங்கு மிக நன்று. தொடரட்டும் உங்கள் நிஜங்களின் வரவுகள். வாசிக்கக் காத்திருக்கிறோம். உண்மையில் புலம் பெயர்ந்து வாழும் பலருக்கு அங்கு நடந்த பல உண்மைச்சம்பவங்கள் தெரியாது. அவர்களின் அவல வாழ்வு எமக்குப் புரியாது. இவைகளை அறியப்படுத்துவது நல்லது.

கல்கி அவர்களுக்கான விடுதலைக்கும் வாழ்வுக்கும் வழியமைத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களிடம் அதாவது புலம்பெயர் தமிழர்களிடமே உள்ளது.அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகருமாம் அசைத்துப் பார்ப்பதென்ற முடிவை 2012இல் எடுத்திருக்கு. பார்ப்போம் ஆயிரம் தமிழ் அரசியில் கைதிகளின் வாழ்வை காப்போமா இல்லை கைவிடுவோமா ?

Posted

இந்த பகுதியை நடத்துவதற்கு அனுமதி தந்த நிர்வாகத்திற்கு முதற்கண் நன்றி.

முக்கிய குறிப்பு எனும் பகுதி தற்போது மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு;

முக்கியகுறிப்பு-கருத்தாளர்கள் எழுதிய கருத்து அல்லது ஆக்கம் யாழ் கருத்து களத்தில் தனித்துவமாக அவர்கள் எழுதிய சொந்த கருத்தாக/ஆக்கமாக அமைய வேண்டும். தங்கள் அல்லது வேறு வலை தளங்களில் நகல் செய்யப்பட்ட ஆக்கங்கள், கருத்துக்கள் சேர்க்கபட மாட்டாது.

உங்கள் பிரேரணைக்கு நன்றி உடையார். பிரேரணைகள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஏழு நாட்கள் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். இனிமேல் விதி முறையில் உள்ளவாறு பிரேரணை செய்யுங்கள். இம்முறை நீங்கள் சமர்ப்பித்த உங்கள் பிரேரணை ஏற்று கொள்ளப்பட்டு உள்ளது. நன்றி

சிறந்த கருத்துக்களை எழுதிய கருத்தாளர்களை பிரேரணை செய்ய விரும்புவர்கள் விதி முறையில் கூறப்பட்டவாறு செய்யுங்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல ஒரு முயற்ச்சி தொடருங்கள்...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு முயற்சி.

இம்முயற்சியின் மூலம் நிறைய வளர்ச்சியை இந்தக்கருத்துக்களம் காணும் என்பதில் ஐயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆர்வமூட்டக் கூடிய.. பாராட்டத்தக்க நல்ல முயற்சி. இதில் வெற்றி பெறவும்.. வெற்றியடையவும் எல்லோருக்கும் நல் வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு முயற்சி

ஆமா

நான் 5 பெயரில் வந்தா எனக்குத்தானே தொடர் வெற்றி???

Posted

யாழ் கருத்துக் களத்தில் கருத்துபகிரும் கள உறவுகள் வெறும் வேலைவெட்டி இல்லாமல் வந்து கருத்துப் பகிருவதில்லை . தங்கள் சிந்தனைகளில் உதிக்கின்ற சிந்தனைகளை கருத்துக்களம் சிறக்கப் பதிக்கின்றனர் . அந்தவகையில் ஒவ்வொரு கருத்துப்பதிவாளருமே முக்கியமாகின்றனர் . இதில் தரம் பிரிப்பது கருத்துக்களத்தில் விரிசல்களையே உருவாக்கும் என்பது வெள்ளிடைமலை . கருத்துக்கள உறவுகளை ஊக்குவிக்கும் முகமாக 2011ல் யாழ் கள உறவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது போக்குவரத்திற்குத் தெரியாதோ????? மேலும் இங்கு யாரும் காசுகளுக்காகத் தங்கள் கருத்துகளை விற்பதற்கு வரவில்லை . யாழ் கருத்துக்களத்தின் ஒற்றுமைகளை போக்குவரத்து செப்பனிட வேண்டுமே ஒழிய , விசக்கிரிமிகளைப் பரவ விடக்கூடாது . நண்பர் விசுகு பதிந்த கருத்தான < ஒருவர் பத்து வேறு முக அடயாளத்துடன் கருத்துக்களத்தில் கருத்துப் பதிந்தால் அவரே தொடர்ந்து வெற்றி ஈட்டுவாரா > என்ற கேள்வியையும் தட்டிக்களிப்பதற்கு இல்லை <_< <_< ^_^ ^_^ .

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்தாளர்களுக்கு வழங்கப்படுகின்ற அந்த 50 டொலர்களையும் கருத்தாளர்கள் நிச்சயமாக அவர்கள் எடுத்துக்க போவதில்லை தை யாழ் களத்திற்கோ இல்லை மக்கள் நலவாழ்விற்கோ தான் கொடுக்க போகின்றார்கள் சோ...ஒருவர் 5 தரம் 50 டொலர்ஸ வாங்கினாலும் அது யாழுக்கோ இல்லை மக்களுக்கோ தான் போகபோது......அப்பிடினு நான் நினைக்கிறன்......நீங்க?

Posted

எமது நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம்/ஆர்வம் இல்லாதவர்கள் கலந்து கொள்ள தேவை இல்லை.

சிறந்த கருத்தாளரிற்கு அன்பளிப்பு தொகையாக $ 50 பெறுமதியான Gift Certificate வழங்கப்படும். அதை பெற்று கொள்ள அவர் முன் வராவிட்டால் அந்த தொகை அடுத்த மாதம் சிறந்த கருத்தாளராக தெரிவு செய்யபடுவரிற்கு கொடுக்கப்படும் அன்பளிப்பு தொகையுடன் சேர்க்கப்படும்.

அன்பளிப்பு சான்றிதழ் சிறந்த கருத்தாளராக தெரிவு செய்யப்படுபவர் வழங்கும் மின்னஞ்சலிற்கு அனுப்பப்படும். வேறு வகையில் உ+ம் பணமாக குறிப்பிட்ட வெகுமதி சிறந்த கருத்தாளராக தெரிவு செய்யப்படுபவரிற்கோ அல்லது வேறு அமைப்புகளிற்கோ கொடுக்கப்பட மாட்டாது.

ஒருவர் பத்து அல்லது ஆயிரம் ஐடியில் கருத்துக்களை இங்கு எழுதினால் அது அவரவர் திறமை, அவரவர் சொந்த நேரம். இங்கு மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்துக்களை எழுதியவர் தெரிவு செய்யப்படுவார்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கருத்துக் களத்தில் கருத்துபகிரும் கள உறவுகள் வெறும் வேலைவெட்டி இல்லாமல் வந்து கருத்துப் பகிருவதில்லை . தங்கள் சிந்தனைகளில் உதிக்கின்ற சிந்தனைகளை கருத்துக்களம் சிறக்கப் பதிக்கின்றனர் . அந்தவகையில் ஒவ்வொரு கருத்துப்பதிவாளருமே முக்கியமாகின்றனர் . இதில் தரம் பிரிப்பது கருத்துக்களத்தில் விரிசல்களையே உருவாக்கும் என்பது வெள்ளிடைமலை . கருத்துக்கள உறவுகளை ஊக்குவிக்கும் முகமாக 2011ல் யாழ் கள உறவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது போக்குவரத்திற்குத் தெரியாதோ????? மேலும் இங்கு யாரும் காசுகளுக்காகத் தங்கள் கருத்துகளை விற்பதற்கு வரவில்லை . யாழ் கருத்துக்களத்தின் ஒற்றுமைகளை போக்குவரத்து செப்பனிட வேண்டுமே ஒழிய , விசக்கிரிமிகளைப் பரவ விடக்கூடாது . நண்பர் விசுகு பதிந்த கருத்தான < ஒருவர் பத்து வேறு முக அடயாளத்துடன் கருத்துக்களத்தில் கருத்துப் பதிந்தால் அவரே தொடர்ந்து வெற்றி ஈட்டுவாரா > என்ற கேள்வியையும் தட்டிக்களிப்பதற்கு இல்லை <_< <_< ^_^ ^_^ .

நன்றி வணக்கம்

கோமகன் உங்களுடைய கவலை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இருந்தாலும் அதற்கு அப்பாலும் நாம் கவனித்துத்தான் ஆகவேண்டும். நாம் எமக்குள்ளேயே எம்முடைய படைப்புகளை அதன் தராதரத்தை அறியவேண்டுமென்றால் அதற்கு எமக்கு ஒரு திறந்த களம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தளத்தைக் கொடுத்தாலும் எங்களுக்குள்ளேயே இருக்கக்கூடிய... இத்தகைய களங்களில் பயணித்துப் பண்படாத ஒரு தன்மை எங்களால் இந்தத்தளத்தை சரிவரப்பயன்படுத்த முடியாமல் செய்துவிடுகிறது. ஆதலால் எமக்குள் இருக்கக்கூடிய பல எழுத்தாளர்கள் திறமை இருக்குமளவுக்கு அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையை மாற்றவேண்டும் என்றால் இத்தகைய களம் அமைவது அவசியமாகிறது. இந்தக்களத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பாருங்கள். ஒரு பதிவு அதன் தரம் என்பது சும்மா எழுந்தமானத்தில் போட்டுவிடமுடியாதபடி ஒரு விதப்பொறுப்புணர்வுடன் பதியப்படும் நிலையைத் தோற்றுவிக்கும். அந்தப்பதிவை இடப்போகும் படைப்பாளிக்கு வெற்றி, தோல்வி என்ற இரண்டு வகையான உணர்வுகளுக்கும் ஈடுகொடுத்து பயணிக்கக்கூடிய மனோவலிமையை வழங்கும். ஒரு முறை தோற்றால் மறுமுறை வெல்வேன் என்ற நம்பிக்கையை ஊட்டும். அத்தோடு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பிற்குள்ளும் அந்தப்படைப்பாளிக்குள் உறக்க நிலையில் இருக்கக்கூடிய திறமைகள் விழித்துக்கொண்டேயிருக்கும். இது படைப்பாளிக்கு..

இனி அதற்கு கருத்திடுபவர்களின் கருத்துகளுக்கு...

இந்தக்கருத்துக்களத்தில் நன்றாக கருத்துகளை எழுதத் தெரிந்தவர்களும் வெறுமனே ஒற்றை வரியுடன் ஒரு பதிவை பாராட்டிவிட்டு நகர்ந்துவிடுகின்றனர். இங்கு நான் பார்த்த வரைக்கும் சிலபேர் விதிவிலக்கு அப்படிப்பட்ட விதிவிலக்கானவர்களில் நீங்களும் ஒருவர்.. நிற்க

இங்கு ஒரு பதிவை பார்க்கும்போது எல்லோருக்கும் ஒரேமாதிரியான கருத்துகள் தோன்றும் என்று கூறிவிடமுடியாது எனக்குத் தோன்றுவது உங்களுக்கோ...உங்களுக்குத் தோன்றுவது வேறொருவருக்கோ... தோன்றாது ஆனால் கருத்துப்பதிவு என்று வரும்போது எமக்கு புரிவதைக்கூட எழுதத் தயக்கம் காட்டும் மனோபாவம் பொதுவாக நம்மிடையே இருக்கிறது.. காரணம் நாம் சொல்லும் கருத்தை மற்றவர்கள் ஏளனிப்பார்களோ அல்லது மற்றவர்களுக்குப் புரியாததை நாம் எப்படி வெளிப்படுத்தினாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற தம்மைத் தானே தாழ்த்திக் கொள்ளும் நிலைகள் கூட கருத்துப்பகர்வை எழுதுவதற்கு தடையான காரணிகளாக அமைந்து விடுகின்றன.

'சிறந்த கருத்தாளர்" என்ற இந்தப்பகுதி திறமைகளை தமக்குள்ளேயே முடக்கி கொண்டு இருக்கும் பலரை எழுதத்தூண்டும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை.

கருத்தெழுதுவது பணத்திற்காகவே இருக்கட்டும் அதுகூட நமக்குள் சிறந்த பதிவாளர்களையும் கருத்தாளர்களையும் வளர்க்கும் அல்லவா...சிந்தித்துப் பாருங்கள் கலை இலக்கிய ரீதியாக எமது படைப்பாளிகள் எத்தனைபேர் நல்ல வருமானத்தோடு எழுத்துலகில் வலம் வருகிறார்கள்? நாங்கள் வளர்க்கப்படவில்லை என்றும் வளரும் வாய்ப்புகள் இல்லை என்றும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தத் தெரியாதவர்களாக இருந்து கொண்டு குமுறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. எங்களுடைய கதையைத் திரைப்படமாக்குவதற்கும் தமிழ்நாட்டுக்கலைஞர்களை தேடிக்கொண்டே இருக்கிறோம். சிறந்த பேச்சாளர்களை எமக்குள் வளர்க்காமல் இன்னும் இரவல் பேச்சாளர்களுக்காக அலைகிறோம். இது ஒரு உதாரணமாகத்தான் சொல்கிறேன் இன்னும் ஆழமாகப் போகலாம்.

கோமகன் ஒன்று சொல்லட்டுமா...

புண்பட்டுப் புண்பட்டுத்தான் பண்படவேண்டும் அதுதான் நிலைக்கும்..... இருந்து பாருங்கள் இந்தக்களத்திற்குள்ளேயே எத்தனை திறமையானவர்களை இனிவரும் காலங்களில் நீங்கள் அடையாளங்காணப்போகிறீர்கள் என்று...

Posted

பெரிய பெரிய நிறுவனங்களில் ஒவ்வொரு மாதமும் சிறந்த தொழிலாளி 'Employee of the Month' என்று கொடுக்கிறார்கள். இது அந்த மாதத்துக்கு உரிய Employee of the Month தவிர, மற்றைய தொழிலாளர்கள் வேலை செய்யவில்லை சோம்பேறிகளாக இருந்தார்கள் என்று அர்த்தப்படுவது இல்லை. பொதுவாக சக தொழிலாளர்களினால் காரணங்களை பட்டியலிட்டு பிரேரணை செய்யப்படும் தொழிலாளர்களில் ஒருவரே 'Employee of the Month' ஆக Human Resources மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். 'Employee of the Month' எனும் முறை நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கும், தனிப்பட்ட தொழிலாளர்களின் முன்னேற்றங்களிற்கும் பல அனுகூலங்களை ஏற்படுத்தி கொடுக்கிறது, ஊக்குவிப்பாக அமைகிறது. ஏறக்குறைய அப்படியான ஒரு திட்டத்தை ஒத்ததே எமது நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன், உங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி ஆகும்.

பிழை திருத்தம்: எழுத்து ஒழுங்கு அமைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். ஒருவரின் ஆற்றல் வெளிப்படுகிறது ஊக்கம் தருகிறது .பொழுது போக்குமட்டுமன்றி காத்திரமான கருத்துக்களையும் எழுதவேண்டுமென எண்ண தோன்றும். இத்தகைய முயற்சி வரவேற்க வேண்டியதே.....

Posted

பணத்தை மட்டுமல்ல பச்சையையும் நிறுத்திவிட்டால் இயல்பான கருத்துகள் தோன்றும். இல்லையேல் பணமும் பச்சையும் தான் என்ன எழுதவேண்டும் என்பதை தீர்மானிக்கும்.

Posted

மாற்றங்கள் வரும் போது அதற்கு எதிர்ப்பு காட்டுவது மனித இயல்பு. ஆனால், மாற்றங்கள் முன்னேற்றத்தை குறிக்கலாம். மாற்றங்கள் இல்லாமல் முன்னேற்றம் ஏற்படாது.

வளர வேண்டிய ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படாமல் அது தொடர்ந்தும் மாற்றம் இன்றி ஒரேமாதிரியாகவே இருந்தால் அதை நாம் ஒரு குறைபாடாகவே பார்க்கிறோம். அந்த குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்யலாம் என மருத்துவ ஆலோசனைகளை நாடுகிறோம். வளர்ச்சி ஏற்படும் போது மாற்றங்கள் உண்டாவதை தவிர்க்க முடியாது.

குழந்தை சிறிது காலத்தில் வளர்ந்து ரீன் ஏஜை அடைகிறது. பின் திருமணம் செய்கிறது. இவை எல்லாம் வளர்ச்சி மாற்றங்களின் படிமுறைகள் ஆகும். ஆனால், குழந்தையில் ஏற்படும் மாற்றங்களை வளர்ச்சிகளை விரும்பாது எப்போதும் அது ஒரே மாதிரியாகவே காணப்படவேண்டும் என நினைப்பது குறைபாடு எமக்குள் உள்ளதையே காட்டுகிறது.

தனது கருத்தியல் நிலைப்பாட்டில் தெளிவு கொண்டவருக்கு பணமோ பச்சை வாக்குகளோ அவரது கருத்தியல் நிலைப்பாட்டில் அதிக ஆதிக்கம் செலுத்த முடியாது.

பயம் இங்கு பலவீனத்தையே குறிக்கிறது.

பிழை திருத்தம்: குறிக்கின்றன - குறிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பணத்தை மட்டுமல்ல பச்சையையும் நிறுத்திவிட்டால் இயல்பான கருத்துகள் தோன்றும். இல்லையேல் பணமும் பச்சையும் தான் என்ன எழுதவேண்டும் என்பதை தீர்மானிக்கும்.

இதை நாம் நிஜத்தில் இங்கு காண்கிறோம். சிவப்பு கண்டு பயந்து ஓடினவங்க போக.. இப்ப பச்சையை கண்டு பிரமிக்கிறவங்க.. நாளை பணத்தைக் கண்டு மிரளப் போறாங்க..!

எதுஎப்படி இருந்தாலும்.. இவற்றிற்கிடையே ஒரு சமநிலையை பேணிக் கொண்டு.. யாழின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய தன்மையை கருத்தில் கொண்டு நாம் ஒரு மாற்றம் உள்ள பாதையில் பயணிக்க வேண்டியதும் கட்டாயம். அப்போதுதான்.. புதிய வழிகள் தெரியும். இன்றைய பழகிப் போன.. பழைய வழிகளும் கூட..முன்னொரு காலத்தின் புதிய வழிகள் என்பதை நாம் மறந்து விடலாகாது. :):D:icon_idea:

Posted

"வளர வேண்டிய ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படாமல் அது தொடர்ந்தும் மாற்றம் இன்றி ஒரேமாதிரியாகவே இருந்தால் அதை நாம் ஒரு குறைபாடாகவே பார்க்கிறோம். அந்த குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்யலாம் என மருத்துவ ஆலோசனைகளை நாடுகிறோம். வளர்ச்சி ஏற்படும் போது மாற்றங்கள் உண்டாவதை தவிர்க்க முடியாது.

குழந்தை சிறிது காலத்தில் வளர்ந்து ரீன் ஏஜை அடைகிறது. பின் திருமணம் செய்கிறது. இவை எல்லாம் வளர்ச்சி மாற்றங்களின் படிமுறைகள் ஆகும். ஆனால், குழந்தையில் ஏற்படும் மாற்றங்களை வளர்ச்சிகளை விரும்பாது எப்போதும் அது ஒரே மாதிரியாகவே காணப்படவேண்டும் என நினைப்பது குறைபாடு எமக்குள் உள்ளதையே காட்டுகிறது"

இது வெறும் ஊகம். தரமில்லாத புயத்தல். இவ்வளவுக்கு தரமோ பெரும்தன்மையோ இல்லாமல் எழுதுபவர்கள் மற்றவர்களை தரம் அளந்து பரிசளிக்க விழைவது நகைபுக்கிடம்.

பிள்ளை வளர்வதை இங்கே உதாரணமாக காட்ட முயல்வதில் அதன் பின் உள்ள தத்துவம் விளங்கவில்லை என்பதுதான் அர்த்தம்.

  1. குழந்தை வளர்வதை உதாரணம் காட்டி நேர்மையான கருத்துக்களை எழுத தேவையான மனச்சாட்சியைப் பணத்தால் வளர்க்க முடியும் என்பது இங்கே கூறப்படுகிறதாயின் அதை நம்புவது, யாரோ தன்னைத்தான் பணத்திற்கு விற்க முயலும் பாவியாகத்தான் இருக்க முடியும். மற்றயபடி தன் மனத்தில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிட எந்த மேதையாகவும் இருக்க வேண்டியதில்லை. இங்கே பரிசளிக்க தக்க இயல்பொன்றும் பிரசன்னமில்லை.
  2. இல்லை யாழின் வளர்ச்சியை இங்கே குறிப்பிட்டு, யாழ் வளர்வதை நான் எதிர்க்கிறேன் என்ற மறைமுகமான சாடலென்றால் அது பணத்தால் வளர்ந்தும் குணத்தால் வளரமுடியாமல் போய்விட்ட தாழ்ந்த மனபக்குவத்தைத்தான் காட்டுகிறது. யாழ் வளரவும் நிலைக்கவும் பணம் வேண்டுமாயின் சந்தா முதல், விளம்பரம் சேகரிப்போருக்கு உதவுவது வரை எதற்கும் நிபந்தனை அற்ற என் சம்மதம் நானும் எழுதிய திரிகளில் காணப்படுகிறது.
  3. பெற்ற தாய் தகப்பன் பார்த்துகொண்டிருக்க, வீட்டுக்கு வந்து சில நிமிடங்களில் யாழை வளராத பிள்ளையாகப் பெயர்கட்டி, அவசர சிகிச்சைக்கு இட்டு செல்வதாக நினைப்போர், விரும்பாத வளர்ச்சி என்று ஒன்று இருப்பதையும் அதைக் குறைப்பதற்கும் மருத்துவ உதவிகள் வேண்டபடுவதென்பதையும் அறிந்திராமல் இந்த உதாரணத்தை எடுத்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. வளராத பிள்ளைகளுக்கு மருத்துவத்தில் கொடுக்கும் மருந்து உலகில் எல்ல நாடுகளிலும் மிகவும் கட்டுப்பாடாக வைத்திருக்கும் மருந்தாக இருக்க அதை இவ்வளவு அவசரமவசரமாக முன் பின் யோசியாமல் யாரவது யாழுக்கு கொடுக்க வேண்டுமென்று மிரண்டு பிடித்து வெற்றியும் கணடால் அது தனிபட்ட வியாபாரங்களுக்கு யாழ் பலியாக்கி போய்விடத்தான்போகிறது.

தங்களின் மனம் என்ற தாழ்வான அளவுகோலால் எல்லோரையும் அளக்கப் பார்ப்பது மனித குலத்திற்கு இதுதான் முதல்த் தடவை அல்ல. குருவுக்கு தட்ஷனை, வாத்தியாருக்கு சம்பளம், புததக ஆசிரியனுக்கு ரோயல்டி. ஆனால் கருத்தென்பது ஒவ்வொரு மனிதனிதும் ஆழ்மனத்திலிருந்து பிறக்கும் அதி உன்னதமாமான, நேர்மையான ஒரு தீர்ப்பு. அதை அவன் தனது சக்காக்களுக்கு கொடுக்கும் போது அவர்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்த்தால் அந்த தீர்ப்பை வழங்குவான். கருத்தாளனை கற்பனை படைப்பாளியாக்குவதோ அல்லது பணத்திற்கு அன்றாடம் செய்யும் தொழிலை கடமைக்கு செய்யும் தொழிளாளியுடனோ ஒப்பிடுவது அறியாமை.

"பயம் இங்கு பலவீனத்தையே குறிக்கிறது" இது கோழைத் தனமான, மட்டரக மிரடல் விடும் குணத்தைக் காட்டுகிறது. இப்படி மட்டரக மிரட்டல்களை விட்டு கஸ்பட்டவர்களை நிறைய விலைக்கு வாங்கினால் யாரையும் வாங்கலாம் என்ற மமதை மகிந்தா கூட்டத்திற்கு மாதிரி மற்றவர்களுக்கும் வரத்தான் செய்யும்.

போக்குவரத்தே போட்டியில் வெல்லத்தக்க கருத்துகள் எப்படி இருக்க வேண்டும் என்றுதானே வரையறுத்திருக்கு. அதற்கு அடிமையாகி பிச்சைக்கு கருத்து எழுதுபவர்கள் பணம் பண்ண வேண்டியதுதனே. ஆனால் அது தருமியின் தொழில். வாக்குக்காக அரசியல்வாதியும் பணத்திற்காக முதலாளியும் தங்கள் கருத்துகளை அர்ப்பணம் செய்துதான் வாழக்கை நடத்துகிறார்கள். இதில் எத்தனை வலிமையான வாதாட்டத்தை வைத்தாலும் உண்மையை மாற்ற முடியாது. தெளிந்த மனத்தில் பிறக்கும் கருத்துக்களை அப்படியே திறந்த மனத்துடன் எழுதும் ஒருவன் பணம் தான் இதய சுத்தியான கருத்தை தனக்கு பிறக்க வைத்தது என்று கூறுவானாயின் அவன் பணத்தினால்த்தான் தன் கற்பு வளர்கிறது என்று வாதாடும் விபச்சாரி. இருக்கும் திறமையை பணத்திற்கு விற்க முடியுமே தவிர பணம் எந்த திறமையையும் மனிதனுள் போடுவதில்லை. பணம் கடைசியாக வாங்கத் தக்கதுதான் ஒருவனின் மனச்சாட்சியான கருத்து.

மோகன் அண்ணாவின் இலவச சேவையில் யாழில் எழுதும் எமக்கு பணம் புதிதாக இருக்கலாம். ஆனால் பச்சை புதிதல்ல. யாழில் சில மதிப்புமிக்க அங்கத்தவர்கள் இதுவரை பச்சையை புறம்தள்ளிவிட்டுத்தான் தங்கள் சேவையை செய்கிறார்கள். (நான் சில பெயர்களை மட்டும் போடுவது அழகல்ல என்பதால் போடாது விடுகிறேன்). இவர்கள் பணத்தையும் புறம் தள்ளிவிட்டுத்தான் தங்கள் கடமைகளைத் தொடருவார்கள் என்பது எனது கருத்து.

யாழில் சில மெச்சத்தாக இயல்புகள் உள்ளன.

  1. சிலர் பல நல்ல சேவைகளை செய்து யாழுக்கு வருவோர் மனத்தில் விடுதலைப் போராடத்தை சோரவிடாமல் வளர்க்கிறார்கள்.
  2. சிலர் தொடர்ந்து வெளி இணையங்களில் இருந்து செய்திகளை கொண்டுவந்து பகிர்கிறார்கள்.
  3. சிலர் கதை கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தையும், கலையையும், ஆன்மீகத்தையும் பேணுகிறார்கள்.
  4. யாழ்த்தளம் தமிழீழம், தமிழ் நாடு, புலம் பெயர் நாடுகளில் எல்லாவற்றிலுமிருந்து ஒரு உறவாடல் தளமாகவும் இருக்கிறது.
  5. வேறு நான் கவனிக்காத சிறப்பம்சங்களும் யாழில் இருக்கலாம்.

கருதுகளுக்கு பரிசளித்து மற்றய இனிய இயல்புகளை வளரவிடாமல்த் தடுப்பது பலர் போகும் தோணியை ஒருபக்கத்தால் மட்டும் இழுத்து தோணியை நிலைசரியவைத்து தண்ணி கோல வைப்பது போலாகும்.

Posted

"வளர வேண்டிய ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படாமல் அது தொடர்ந்தும் மாற்றம் இன்றி ஒரேமாதிரியாகவே இருந்தால் அதை நாம் ஒரு குறைபாடாகவே பார்க்கிறோம். அந்த குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்யலாம் என மருத்துவ ஆலோசனைகளை நாடுகிறோம். வளர்ச்சி ஏற்படும் போது மாற்றங்கள் உண்டாவதை தவிர்க்க முடியாது.

குழந்தை சிறிது காலத்தில் வளர்ந்து ரீன் ஏஜை அடைகிறது. பின் திருமணம் செய்கிறது. இவை எல்லாம் வளர்ச்சி மாற்றங்களின் படிமுறைகள் ஆகும். ஆனால், குழந்தையில் ஏற்படும் மாற்றங்களை வளர்ச்சிகளை விரும்பாது எப்போதும் அது ஒரே மாதிரியாகவே காணப்படவேண்டும் என நினைப்பது குறைபாடு எமக்குள் உள்ளதையே காட்டுகிறது"

இது வெறும் ஊகம். தரமில்லாத புயத்தல். இவ்வளவுக்கு தரமோ பெரும்தன்மையோ இல்லாமல் எழுதுபவர்கள் மற்றவர்களை தரம் அளந்து பரிசளிக்க விழைவது நகைபுக்கிடம்.

பிள்ளை வளர்வதை இங்கே உதாரணமாக காட்ட முயல்வதில் அதன் பின் உள்ள தத்துவம் விளங்கவில்லை என்பதுதான் அர்த்தம்.

  1. குழந்தை வளர்வதை உதாரணம் காட்டி நேர்மையான கருத்துக்களை எழுத தேவையான மனச்சாட்சியைப் பணத்தால் வளர்க்க முடியும் என்பது இங்கே கூறப்படுகிறதாயின் அதை நம்புவது, யாரோ தன்னைத்தான் பணத்திற்கு விற்க முயலும் பாவியாகத்தான் இருக்க முடியும். மற்றயபடி தன் மனத்தில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிட எந்த மேதையாகவும் இருக்க வேண்டியதில்லை. இங்கே பரிசளிக்க தக்க இயல்பொன்றும் பிரசன்னமில்லை.
  2. இல்லை யாழின் வளர்ச்சியை இங்கே குறிப்பிட்டு, யாழ் வளர்வதை நான் எதிர்க்கிறேன் என்ற மறைமுகமான சாடலென்றால் அது பணத்தால் வளர்ந்தும் குணத்தால் வளரமுடியாமல் போய்விட்ட தாழ்ந்த மனபக்குவத்தைத்தான் காட்டுகிறது. யாழ் வளரவும் நிலைக்கவும் பணம் வேண்டுமாயின் சந்தா முதல், விளம்பரம் சேகரிப்போருக்கு உதவுவது வரை எதற்கும் நிபந்தனை அற்ற என் சம்மதம் நானும் எழுதிய திரிகளில் காணப்படுகிறது.
  3. பெற்ற தாய் தகப்பன் பார்த்துகொண்டிருக்க, வீட்டுக்கு வந்து சில நிமிடங்களில் யாழை வளராத பிள்ளையாகப் பெயர்கட்டி, அவசர சிகிச்சைக்கு இட்டு செல்வதாக நினைப்போர், விரும்பாத வளர்ச்சி என்று ஒன்று இருப்பதையும் அதைக் குறைப்பதற்கும் மருத்துவ உதவிகள் வேண்டபடுவதென்பதையும் அறிந்திராமல் இந்த உதாரணத்தை எடுத்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. வளராத பிள்ளைகளுக்கு மருத்துவத்தில் கொடுக்கும் மருந்து உலகில் எல்ல நாடுகளிலும் மிகவும் கட்டுப்பாடாக வைத்திருக்கும் மருந்தாக இருக்க அதை இவ்வளவு அவசரமவசரமாக முன் பின் யோசியாமல் யாரவது யாழுக்கு கொடுக்க வேண்டுமென்று மிரண்டு பிடித்து வெற்றியும் கணடால் அது தனிபட்ட வியாபாரங்களுக்கு யாழ் பலியாக்கி போய்விடத்தான்போகிறது.

தங்களின் மனம் என்ற தாழ்வான அளவுகோலால் எல்லோரையும் அளக்கப் பார்ப்பது மனித குலத்திற்கு இதுதான் முதல்த் தடவை அல்ல. குருவுக்கு தட்ஷனை, வாத்தியாருக்கு சம்பழம், புததக ஆசிரியனுக்கு ரோயல்டி. ஆனால் கருத்தென்பது ஒவ்வொரு மனிதனிதும் ஆழ்மனத்திலிருந்து பிறக்கும் அதி உன்னதமாமான, நேர்மையான ஒரு தீர்ப்பு. அதை அவன் தனது சக்காக்களுக்கு கொடுக்கும் போது அவர்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்த்தால் அந்த தீர்ப்பை வழங்குவான். கருத்தாளனை கற்பனை படைப்பாளியாக்குவதோ அல்லது பணத்திற்கு அன்றாடம் செய்யும் தொழிலை கடமைக்கு செய்யும் தொழிளாளியுடனோ ஒப்பிடுவது அறியாமை.

"பயம் இங்கு பலவீனத்தையே குறிக்கிறது" இது கோழைத் தனமான, மட்டரக மிரடல் விடும் குணத்தைக் காட்டுகிறது. இப்படி மட்டரக மிரட்டல்களை விட்டு கஸ்பட்டவர்களை நிறைய விலைக்கு வாங்கினால் யாரையும் வாங்கலாம் என்ற மமதை மகிந்தா கூட்டத்திற்கு மாதிரி மற்றவர்களுக்கும் வரத்தான் செய்யும்.

போக்குவரத்தே போட்டியில் வெல்லத்தக்க கருத்துகள் எப்படி இருக்க வேண்டும் என்றுதானே வரையறுத்திருக்கு. அதற்கு அடிமையாகி பிச்சைக்கு கருத்து எழுதுபவர்கள் பணம் பண்ண வேண்டியதுதனே. ஆனால் அது தருமியின் தொழில். வாக்குக்காக அரசியல்வாதியும் பணத்திற்காக முதலாளியும் தங்கள் கருத்துகளை அர்ப்பணம் செய்துதான் வாழக்கை நடத்துகிறார்கள். இதில் எத்தனை வலிமையான வாதாட்டத்தை வைத்தாலும் உண்மையை மாற்ற முடியாது. தெளிந்த மனத்தில் பிறக்கும் கருத்துக்களை அப்படியே திறந்த மனத்துடன் எழுதும் ஒருவன் பணம் தான் இதய சுத்தியான கருத்தை தனக்கு பிறக்க வைத்தது என்று கூறுவானாயின் அவன் பணத்தினால்த்தான் தன் கற்பு வளர்கிறது என்று வாதாடும் விபச்சாரி. இருக்கும் திறமையை பணத்திற்கு விற்க முடியுமே தவிர பணம் எந்த திறமையையும் மனிதனுள் போடுவதில்லை. பணம் கடைசியாக வாங்கத் தக்கதுதான் ஒருவனின் மனச்சாட்சியான கருத்து.

மோகன் அண்ணாவின் இலவச சேவையில் யாழில் எழுதும் எமக்கு பணம் புதிதாக இருக்கலாம். ஆனால் பச்சை புதிதல்ல. யாழில் சில மதிப்புமிக்க அங்கத்தவர்கள் இதுவரை பச்சையை புறம்தள்ளிவிட்டுத்தான் தங்கள் சேவையை செய்கிறார்கள். (நான் சில பெயர்களை மட்டும் போடுவது அழகல்ல என்பதால் போடாது விடுகிறேன்). இவர்கள் பணத்தையும் புறம் தள்ளிவிட்டுத்தான் தங்கள் கடமைகளைத் தொடருவார்கள் என்பது எனது கருத்து.

யாழில் சில மெச்சத்தாக இயல்புகள் உள்ளன.

  1. சிலர் பல நல்ல சேவைகளை செய்து யாழுக்கு வருவோர் மனத்தில் விடுதலைப் போராடத்தை சோரவிடாமல் வளர்க்கிறார்கள்.
  2. சிலர் தொடர்ந்து வெளி இணையங்களில் இருந்து செய்திகளை கொண்டுவந்து பகிர்கிறார்கள்.
  3. சிலர் கதை கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தையும், கலையையும், ஆன்மீகத்தையும் பேணுகிறார்கள்.
  4. யாழ்த்தளம் தமிழீழம், தமிழ் நாடு, புலம் பெயர் நாடுகளில் எல்லாவற்றிலுமிருந்து ஒரு உறவாடல் தளமாகவும் இருக்கிறது.
  5. வேறு நான் கவனிக்காத சிறப்பம்சங்களும் யாழில் இருக்கலாம்.

கருதுகளுக்கு பரிசளித்து மற்றய இனிய இயல்புகளை வளரவிடாமல்த் தடுப்பது பலர் போகும் தோணியை ஒருபக்கத்தால் மட்டும் இழுத்து தோணியை நிலைசரியவைத்து தண்ணி கோல வைப்பது போலாகும்.

மல்லையூரானுக்கு முடிவற்ர பச்சைகள் :) 2 . இதுதான் எங்களைப் போன்ற மனதில் உறுதி கொண்டவர்களின் எண்ண வெளிப்பாடு . தேசியத்தையும் அதுசார்ந்த வெளிப்பாடுகளையும் , காத்திரமான படைப்புகளையும் , கருத்துகளையும் வெளிக்கொண்டு வருபவர்கள் எங்களின் பின்னால் அணிதிரளுங்கள் . மாறானவர்கள் தாராளமாக பணத்திற்காக போக்குவரத்து நெரிசலுடன் பயணிக்கலாம் . மல்லையூரானின் நிலைப்பாடே எனது நிலைப்பாடாகும் . யாழின் நிர்வாகச் செலவுகளுக்காக எம்மால் பரிந்துரை செய்யப்பட்ட விடையங்களில் முடிவுகளை எடுக்கவேண்டியவர் மோகன் அண்ணையே ஒழிய மற்றவர்கள் அல்ல :icon_idea::icon_idea: .

நன்றி வணக்கம்

Posted

எமது நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன், உங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில்,

Jan 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு மல்லையூரான் அவர்களையும், Feb 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு கோமகன் அவர்களையும் நடுவர்களாக கலந்து சிறப்பிக்குமாறு எமது நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கிறோம். விதி முறைகள் ஏற்கனவே மேலே கூறப்பட்டு உள்ளன. சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகளில் மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்தினை எழுதியதாக கருதும் கருத்தாளரை நீங்கள் தெரிவு செய்து இந்த முயற்சியை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

நன்றி

பிழை திருத்தம்: மல்லையூரன் - மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்போதுமே

சும்மா இருப்பதைவிட ஒன்றைச்செய்து பார்க்கவேண்டும் என்று முயற்சிப்பவர்களை எனக்குப்பிடிக்கும். அந்தவகையிலேயே

இதனையும் நல்ல முயற்ச்சி என்று வரவேற்றேன்.

ஆனால் எனக்குத்தெரியும் இதற்குள் நான் வரமாட்டேன் என்று.

பயங்கரவாதிகள் என்று தமிழனுக்கு முத்திரை குத்தியது போலத்தான் இதுவும்.

நல்ல எழுத்தாளன் என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் பிழையானது.

Posted

முற்றுமுழுதாக இந்த கருத்தை நான் நிராகரிக்கின்றேன்.

யாழ், வியாபாரம் செய்ய முடிவெடுத்தால் இப்படியான நிகழ்வுகளை தொடங்கலாம்.

Posted

முற்றுமுழுதாக இந்த கருத்தை நான் நிராகரிக்கின்றேன்.

யாழ், வியாபாரம் செய்ய முடிவெடுத்தால் இப்படியான நிகழ்வுகளை தொடங்கலாம்.

இதான் சொல்றது, சிந்திச்சு செயற்படணும் நம்ம, போக்குவரத்து எங்கிறது!

கண்ணைமூடிகிட்டே இந்த மாததின் சிறந்த கருத்தாளர் நம்ம அர்ஜுன் அண்ணாவேதான்னு முதலே அறிவிச்சு இருந்தா,,

இப்பிடி ஆவேசமா நிராகரிச்சிருப்பாரா எல்லாதையும்?

இப்போ எவ்ளோ கலவரமாச்சு! :unsure:

Posted

எமது நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன், உங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில்,

Jan 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு மல்லையூரான் அவர்களையும்,

Feb 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு கோமகன் அவர்களையும்

Mar 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு விசுகு அவர்களையும்,

Apr 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு Arjun அவர்களையும்

நடுவர்களாக கலந்து சிறப்பிக்குமாறு எமது நிறுவனம் சார்பில் அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். விதி முறைகள் ஏற்கனவே மேலே கூறப்பட்டு உள்ளன. சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகளில் மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்தினை எழுதியதாக கருதும் கருத்தாளரை நீங்கள் தெரிவு செய்து இந்த முயற்சியை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

நல்லாத்தான் செயற்படுகிறார்கள்

ஒரு பக்கம் சந்தோசமாகத்தான் இருக்கு

நாங்கள் முன்பு செய்த முறைமை இதுதான்

நிர்வாகக்கூட்டங்களில் வந்து கண்டபடி அதிகம் கதைப்பவர்களை நிர்வாகத்தெரிவின்போது ஆமோதித்து பதவியில் இருத்திவிடுவது.

அப்புறம் புரியும் அவருக்கு அதன் சுமையும் வலியும். :D:icon_idea: :icon_idea: :icon_idea:

Posted

எமது நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன், உங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில்,

Jan 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு மல்லையூரான் அவர்களையும், Feb 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு கோமகன் அவர்களையும் நடுவர்களாக கலந்து சிறப்பிக்குமாறு எமது நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கிறோம். விதி முறைகள் ஏற்கனவே மேலே கூறப்பட்டு உள்ளன. சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகளில் மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்தினை எழுதியதாக கருதும் கருத்தாளரை நீங்கள் தெரிவு செய்து இந்த முயற்சியை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

நன்றி

பிழை திருத்தம்: மல்லையூரன் - மல்லையூரான்

அண்ணோய்.............. போக்குவரத்து !! சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி எண்ட கதையாய் நல்லத்தான் பம்பல் அடிக்கிறியள் . அதோடை என்ரை எட்டாம் வகுப்பு கதை ஒண்டையும் ஞாபகப்படுத்திபோட்டியள் . அதென்னெண்டால் , எங்கடை வகுப்பிலை என்ரை கூட்டாளி ஒருத்தன் இருந்தவன் . ஆள் செரியான நெம்பல் பார்ட்டி கண்டியளோ . நாங்கள் லோக்கல் அடிபிடியளுக்குக் கூட்டாளியைத் தான் இறக்குவம் . ஒரு நாள் அடிபாட்டில அடிவாங்கின பெடிக்குக் காயம் வந்திட்டுது . விசையம் எங்கடை வகுப்பு வாத்திக்குப் போய் வாத்தி எங்களுக்குச் சம்பல் அடி கண்டியளோ . இது நடந்தது ஒரு வெள்ளிக்கிழமை . பேந்து நாங்கள் ரெண்டு நாள் லீவையும் முடிச்சு திங்கள் கிழமை வகுப்புக்கு வர , வகுப்பு வாத்தியார் டாப்புக் கூப்பிடேக்கை சொன்னார் < என்ரை நெம்பல் கூட்டாளியை வகுப்புக்கு மொனிற்ரறாய் போட்டிருக்கிறன் > எண்டு ( நீங்கள் என்னடா எண்டால் நான் எழுதி அரை மணித்தியாலத்துக்குள்ளை...............) . பேந்து என்ரை கூட்டாளி குளப்படியே விடேலை . எங்களுக்கும் ஒரு கை குறைஞ்சு போச்செண்டால் பாருங்கோவன் . அதோடை அண்ணை எனக்கு என்னமொரு பாட்டும் ஞாபகம் வந்து துலையுது , கேளுங்கோ < கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா................ :lol: :lol: :icon_idea: :icon_idea: > .

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன் "ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" adminDecember 15, 2024 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார். உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் ஒரு சபை குழப்பி போல நடந்துகொண்டார். இவற்றைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு தமிழரும் அர்ஜுனாவை மட்டும் பார்த்துச் சிரிக்கவில்லை. தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான். தமிழரசியல், குறிப்பாக ஆயுதப் போராட்ட அரசியல் அதிகம் சீரியஸானது. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 15 ஆண்டு கால அரசியலிலும் சீரியஸ் அதிகம். கலகலப்பு, பம்பல்,சிரிப்பு குறைவு. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு அரசியலை சிரிக்கும் விடயமாக மாற்றும் கார்ட்டூனிஸ்டுகள் குறைந்த ஒரு தமிழ்த் தேசியப் பரப்பில் அர்ஜுனா ஒரு “கார்ட்டூன் கரெக்ராக”,  “கரிக்கேச்சராக” -(caricature) அதாவது கேலிச்சித்திரமாக மேலெழுந்துள்ளார். அவர் எல்லாவறையுமே கரிக்கேச்சர் ஆக்கிவிடுகிறார். தன்னையும் சேர்த்து. அவர் மருத்துவ நிர்வாகத் துறைக்குள் வேலை செய்தவர். ஒரு போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதென்றால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தெரியாதவராக இருக்க முடியாது. அதை அவர் மாகாண நிர்வாகத்துக்கு ஊடாக அணுகியிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்கூடாக அணுகியிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு மக்கள் அதிகாரம் கிடைத்திருப்பதாக அவர் கருதுகிறார். அது அதிகாரம் அல்ல. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் அரச அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அவற்றின் கனதியை இழக்கின்றன. அரச உயர் அதிகாரிகளும் திணைக்களங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. அர்ச்சுனா கேட்கும் கேள்விகளை ஒரு பகுதி மக்கள் ரசிக்கிறார்கள்; ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஆனால், அக்கேள்விகளை எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல, அர்ச்சுனா “மிஸ்ரர்.பீனின்” பாணியில் கேட்கும்போது அக்கேள்விகள் அவற்றின் சீரியஸ்தனத்தை இழந்துவிடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம், அவருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவர்,யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத ஒருவராகத் தன்னை கருதுகிறாரா என்று கேள்வி எழுகிறது. அர்ஜுனாவை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள,ஆங்கில ஊடகங்களும் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களைத்தான் மறைமுகமாக விமர்சிக்கின்றன. தென்னிலங்கையிலும் மேர்வின் டி சில்வாக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயேச்சைகள் அல்ல. கட்சித் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்கள். ஆனால் அர்ஜுனா யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத ஒருவரா? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அவருக்கு யார் கற்றுக் கொடுப்பது? அல்லது அவர் யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளத் தயாரா? ஒன்றில் சபை நாகரீகம் தெரிய வேண்டும். அல்லது வெட்கம்,அவையடக்கம் இருக்க வேண்டும். இவை எவையுமே இல்லாத ஒருவரை ஏன் தமிழ் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அல்லது அவரைப்போன்ற ஒருவரைத் தெரிந்தெடுக்கும் அளவுக்கு தமிழ்மக்களை நிர்பந்தித்த காரணிகள் எவை? அர்ஜுனா தற்செயலாக மேலெழவில்லை. விபத்தாக மேலெழவில்லை. அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான அகப்புற நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் உண்டு. தமிழ் அரசியல் சமூகம் அவற்றை ஆராய வேண்டும். தலைமைத்துவ வெற்றிடம்; தங்களுடைய சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சிந்தித்தமை; தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஐக்கியமின்மை, அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் வெறுப்பும் ; தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியமை ; சமூக வலைத்தளங்களால், யூரியூப்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிம்பங்கள்….போன்ற பல காரணங்களின் விளைவு அவர். அவருக்கு விழுந்த வாக்குகள் சுமந்திரன், கஜேந்திரகுமார் உட்பட முக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த வாக்குகளைவிட அதிகம். அவர் தன்னுடைய கலகத்தைத் தொடங்கியது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில். அந்த ஆஸ்பத்திரி வாசலில் இருந்து சிறிது தூரத்தில்தான் ரவிராஜின் சிலை உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவகச்சேரி மக்கள் ரவிராஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் நேரலைகளுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். ரவியின் சிலை கண்ணீர் விடுவதுபோல உங்களுக்கு தோன்றவில்லையா? என்று மனோகணேசன் என்னிடம் கேட்டார். அர்ஜுனாவின் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தது மொத்தம் 27,855 பேர். யாழ்ப்பாணத்தில் விழுந்த செல்லுபடியாகும் வாக்குகளின் தொகை மொத்தம் 358,079. இதில் 8.56விகிதத்தினர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். “அது ஒரு சிறிய தொகைதான். ஆனால் அந்தத் தொகை அடுத்தடுத்த தேர்தலில் பல மடங்காகப் பெருகும் ஆபத்தை எப்படித் தடுப்பது?” என்று மூத்த,ஊடகச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். தேசமாகத் திரட்டப்படாத மக்கள் எதிர்காலத்திலும் அர்ஜுனாக்களைத்தான் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன். சமூக வலைத்தள ஊடகச் சூழலும், குறிப்பாக யுரியுப்பர்களும் அந்தச் சிறிய தொகையை பெரிய தொகையாக மாற்றுவதை எப்படித் தடுப்பது? யூரியூப்பர்களின் காலத்தில் தேசத்தைத் திரட்டுவதற்கான புதிய, படைப்புத்திறன் மிக்க உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தி, தமிழ் மக்களைத் தேமாகத் திரட்ட முயன்ற தரப்புகளுக்கு எதிராக சில யூரியுப் வெறுப்பர்கள் (haters) தனிப்பட்ட தாக்குதல்களை நடாத்தினார்கள். தமிழக எழுத்தாளர் தொ.பரமசிவன் வெறுப்பர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்… ” இப்ப எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”. தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாத வெறுப்பர்கள் தொகை அதிகரித்து வருகின்றது. கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பர்கள் பெருகி வருகிறார்கள். இவ்வாறு கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெறுப்பர்களாலும் சிதறடிக்கப்படும் ஒரு மக்கள் கூடத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்? அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு தண்டனை. அதே சமயம் அர்ஜுனாவுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றியை எப்படிப் பார்ப்பது? அது தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிய தண்டனையா? நிலாந்தன்     https://www.nillanthan.com/7018/
    • முடிந்தால் முட்டையை ஆட்டையைப் போட்டுப் பார் . ........!  😂
    • இந்த பொது வெளியில் நான் எழுதிய அரசியல் கருத்தானது  புரிந்து கொள்ளும் ஆற்றல், அறிவு உடையவர்களுக்கானது மட்டுமே. 
    • சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.