Jump to content

தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு,

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு,

arianabartwed1yu0.jpg

தழுவும் சேலை முகட்டில் விம்மி

விழட்டும் அதுவரை தயங்கு.

பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி

உணர்வினைக் கிளறி இயங்கு.

குறி நகம் பதித்து குவித்து அணைத்து

கொஞ்சிக் கெஞ்சி முயங்கு.

உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும்

இணையின் அணைவில் மயங்கு.

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தயங்கி இயங்கி முயங்கி மயங்கி

அடுத்து கலங்கி குலுங்கி முனங்கி

இறுதியில் பிணங்கி விழி பிதுங்கி பதுங்கி

உணர்வினை விழுங்கி

அடங்கி ஒடுங்கி மூச்சடங்கி

எல்லாமே மொத்தத்தில் முடங்கி

பனிக்காலம் முடிந்து

பாலைவனம் பூப்பூக்குதா?

Posted

?????

வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு மேல போட்டு இருக்கிது. கவனிக்கவில்லையோ? :lol:

-------------------------------

சகீரா முயங்கு எண்டால் என்ன அர்த்தம்? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அருமையான வரிகள் , தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு, இந்த சொற்கள் எதுகை மோனைக்காக போடப்பட்டு இருப்பினும் முயங்கு, என்னும் சொல்லை நான் கவிதைகளில் இன்று இரண்டாவது முறையாக கேள்விப்படுகிறேன். முதலாவது முறை புதுவைரத்தினதுரையின் கவிதையில், சிங்களரானுவத்தின் தமிழ் பெண்கள் மீதான வன்புனர்வுக்கு பாவிக்கப்பட்டது, இப்போது இங்கு பாவிக்கபடுகிறது. குளிர்காலமுடிவு என்பதால் இது ஏற்புடையதே. கவிஞரின் வசந்தகால வாழ்விற்கு எமது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு கோழிக்குஞ்சு என்றா ரெம்பப் பிரியம். ஒரு தடவை உறவினர் வீட்டிலிருந்து ஒரு அழகிய கோழிக்குஞ்சை வாங்கி வந்து வளர்த்தேன். அது வளர்ந்து பெரிய சேவலாகிச்சுது. நல்ல அழகான சேவல். நாலு மதிலுக்குள் வளர்ந்த சேவல் என்பதால்.. அதனிடம் நல்ல பழக்கங்களையே எதிர்பார்த்தேன். ஆனால்.. ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு வரும் போது எனது அருமைச் சேவல் மதில் தாண்டி வந்து.. அடுத்த வீட்டு பேட்டுக்கோழியோடு.. தயங்கி.. துரத்தி.. பதுங்கி..இயங்கி.. முயங்கி.. மயங்கி நின்ற போது.. வெறுப்படைந்தேன்..!

அப்புறமென்ன.. அதுக்கு.. ஆடித் தூக்கம் வந்த போதும்.. நான் மருந்து பருக்கல்ல...! அவ்வளவு கோபம்..! என்னைக் கேட்டிருந்தா நானே ஒரு கலியாணத்தைக் கட்டி வைச்சிருப்பன்.. இப்படித்தான் பல பெற்றோரும்.. பிள்ளைகளை பலத்த எதிர்பார்ப்போட பெற்று வளர்ப்பினம்.. இறுதியில்.. அதுகள்.. எங்கினையன்.. தயங்கி.. இயங்கி.. முயங்கி.. மயங்கிக் கிடக்குங்கள்.. ரெம்ப சாட்...! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தயங்கி இயங்கி முயங்கி மயங்கி அடுத்து கலங்கி குலுங்கி முனங்கி

இறுதியில் பிணங்கி விழி பிதுங்கி பதுங்கி உணர்வினை விழுங்கி

அடங்கி ஒடுங்கி மூச்சடங்கி எல்லாமே மொத்தத்தில் முடங்கி

பனிக்காலம் முடிந்து பாலைவனம் பூப்பூக்குதா?

மூச்சடங்கிய பின் எப்படித் தோழி????? :icon_mrgreen:

பாலையில் பூக்களா?

இதை எட்டாவது உலக அதிசயமாக சேர்த்துக் கொள்வோமா? :icon_mrgreen:

?????

இப்படியா அதிர்ச்சி அடைவது வல்வை மைந்தன்? சும்மா ருசிக்கும் தமிழை கொஞ்சம் தெளித்தேன் அவ்வளவுதான். :lol:

வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு மேல போட்டு இருக்கிது. கவனிக்கவில்லையோ? :)

-------------------------------

சகீரா முயங்கு எண்டால் என்ன அர்த்தம்? :(

வயதுக்கு வந்தவர்களுக்கு என்று போட்டிருக்கும் அறிவித்தலை வாசித்து விட்டும் முரளி இதற்குப் பொருள் கேட்கலாமோ? :D

அருமையான வரிகள் , தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு, இந்த சொற்கள் எதுகை மோனைக்காக போடப்பட்டு இருப்பினும் முயங்கு, என்னும் சொல்லை நான் கவிதைகளில் இன்று இரண்டாவது முறையாக கேள்விப்படுகிறேன். முதலாவது முறை புதுவைரத்தினதுரையின் கவிதையில், சிங்களரானுவத்தின் தமிழ் பெண்கள் மீதான வன்புனர்வுக்கு பாவிக்கப்பட்டது, இப்போது இங்கு பாவிக்கபடுகிறது. குளிர்காலமுடிவு என்பதால் இது ஏற்புடையதே. கவிஞரின் வசந்தகால வாழ்விற்கு எமது வாழ்த்துக்கள்.

அப்பனே சித்தா! கவிதையை யாத்தவர் வசந்தத்தைக் கடந்து இலையுதிர் காலத்தில் உலவுபவர். இப்படி ஒரு வசந்தகால வாழ்த்துச் சொல்லி வழி மாற்றிவிடாதீர்கள். :)

எனக்கு கோழிக்குஞ்சு என்றா ரெம்பப் பிரியம். ஒரு தடவை உறவினர் வீட்டிலிருந்து ஒரு அழகிய கோழிக்குஞ்சை வாங்கி வந்து வளர்த்தேன். அது வளர்ந்து பெரிய சேவலாகிச்சுது. நல்ல அழகான சேவல். நாலு மதிலுக்குள் வளர்ந்த சேவல் என்பதால்.. அதனிடம் நல்ல பழக்கங்களையே எதிர்பார்த்தேன். ஆனால்.. ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு வரும் போது எனது அருமைச் சேவல் மதில் தாண்டி வந்து.. அடுத்த வீட்டு பேட்டுக்கோழியோடு.. தயங்கி.. துரத்தி.. பதுங்கி..இயங்கி.. முயங்கி.. மயங்கி நின்ற போது.. வெறுப்படைந்தேன்..!

அப்புறமென்ன.. அதுக்கு.. ஆடித் தூக்கம் வந்த போதும்.. நான் மருந்து பருக்கல்ல...! அவ்வளவு கோபம்..! என்னைக் கேட்டிருந்தா நானே ஒரு கலியாணத்தைக் கட்டி வைச்சிருப்பன்.. இப்படித்தான் பல பெற்றோரும்.. பிள்ளைகளை பலத்த எதிர்பார்ப்போட பெற்று வளர்ப்பினம்.. இறுதியில்.. அதுகள்.. எங்கினையன்.. தயங்கி.. இயங்கி.. முயங்கி.. மயங்கிக் கிடக்குங்கள்.. ரெம்ப சாட்...! :)

நெடுக்கால போவாரே, அடக் கடவுளே எப்ப பார்த்தாலும் இந்தப் புலம்பல்தானா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு மேல போட்டு இருக்கிது. கவனிக்கவில்லையோ? :)

<<<

கலைஞா,,

எந்த வயது வந்தவர்களுக்கு மட்டும் என்றும் குறிப்பிடப்படவில்லையே ? :icon_mrgreen::(:lol:

-------------------------------

சகீரா முயங்கு எண்டால் என்ன அர்த்தம்? :icon_mrgreen:

Posted

குறி நகம் பதித்து குவித்து அணைத்து

கொஞ்சிக் கெஞ்சி முயங்கு.

பெண்களை நம்பேலாது பிறகு விறாண்டிப்போட்டான் எண்டு பொலிசிலை கேசைப் போட்டால் நாங்கள் என்ன செய்யிறது பலாத்கார கேசிலை 6 மாதமோ ஒரு வருசமோ இந்த விழையாட்டுக்கு நான் வரேல்லை :icon_mrgreen::icon_mrgreen::(

Posted

வயதுக்கு வந்தவர்களுக்கு என்று போட்டிருக்கும் அறிவித்தலை வாசித்து விட்டும் முரளி இதற்குப் பொருள் கேட்கலாமோ? :icon_mrgreen:

ஓம் பிழைதான்... மன்னிச்சுகொள்ளுங்கோ..

கலைஞா,,

எந்த வயது வந்தவர்களுக்கு மட்டும் என்றும் குறிப்பிடப்படவில்லையே ?

மேல வடிவா பார்க்க இல்லையோ? சைட்டில எழுதி இருக்கிது... :icon_mrgreen:

Posted

எனக்கு கோழிக்குஞ்சு என்றா ரெம்பப் பிரியம். ஒரு தடவை உறவினர் வீட்டிலிருந்து ஒரு அழகிய கோழிக்குஞ்சை வாங்கி வந்து வளர்த்தேன். அது வளர்ந்து பெரிய சேவலாகிச்சுது. நல்ல அழகான சேவல். நாலு மதிலுக்குள் வளர்ந்த சேவல் என்பதால்.. அதனிடம் நல்ல பழக்கங்களையே எதிர்பார்த்தேன். ஆனால்.. ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு வரும் போது எனது அருமைச் சேவல் மதில் தாண்டி வந்து.. அடுத்த வீட்டு பேட்டுக்கோழியோடு.. தயங்கி.. துரத்தி.. பதுங்கி..இயங்கி.. முயங்கி.. மயங்கி நின்ற போது.. வெறுப்படைந்தேன்..!

அப்புறமென்ன.. அதுக்கு.. ஆடித் தூக்கம் வந்த போதும்.. நான் மருந்து பருக்கல்ல...! அவ்வளவு கோபம்..! என்னைக் கேட்டிருந்தா நானே ஒரு கலியாணத்தைக் கட்டி வைச்சிருப்பன்.. இப்படித்தான் பல பெற்றோரும்.. பிள்ளைகளை பலத்த எதிர்பார்ப்போட பெற்று வளர்ப்பினம்.. இறுதியில்.. அதுகள்.. எங்கினையன்.. தயங்கி.. இயங்கி.. முயங்கி.. மயங்கிக் கிடக்குங்கள்.. ரெம்ப சாட்...! :icon_mrgreen:

நெடுக்காலை போவான் என்ன இருந்தாலும் உங்கடை குஞ்சு இப்படி சேவலாய் வளந்ததுக்கு பிறகு அது உங்களக்கு செய்தது துரோகம்தான் அதை ஆனாலும் ஆடித்தூக்க வருத்தம் வந்து வாந்தியெடுத்து சோர்ந்து போனால் பிறகும் அதுக்கு நீங்கள் கலியாணம் கட்டி வைச்சிருக்கலாம். பாவந்தானே?? :icon_mrgreen::(:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்காலை போவான் என்ன இருந்தாலும் உங்கடை குஞ்சு இப்படி சேவலாய் வளந்ததுக்கு பிறகு அது உங்களக்கு செய்தது துரோகம்தான் அதை ஆனாலும் ஆடித்தூக்க வருத்தம் வந்து வாந்தியெடுத்து சோர்ந்து போனால் பிறகும் அதுக்கு நீங்கள் கலியாணம் கட்டி வைச்சிருக்கலாம். பாவந்தானே?? :(:(:(

நீங்க என்ன சொல்ல வாறீங்க என்று எனக்குப் புரியல்ல..! :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனக்கு கோழிக்குஞ்சு என்றா ரெம்பப் பிரியம். ஒரு தடவை உறவினர் வீட்டிலிருந்து ஒரு அழகிய கோழிக்குஞ்சை வாங்கி வந்து வளர்த்தேன். அது வளர்ந்து பெரிய சேவலாகிச்சுது. நல்ல அழகான சேவல். நாலு மதிலுக்குள் வளர்ந்த சேவல் என்பதால்.. அதனிடம் நல்ல பழக்கங்களையே எதிர்பார்த்தேன். ஆனால்.. ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு வரும் போது எனது அருமைச் சேவல் மதில் தாண்டி வந்து.. அடுத்த வீட்டு பேட்டுக்கோழியோடு.. தயங்கி.. துரத்தி.. பதுங்கி..இயங்கி.. முயங்கி.. மயங்கி நின்ற போது.. வெறுப்படைந்தேன்..!

அப்புறமென்ன.. அதுக்கு.. ஆடித் தூக்கம் வந்த போதும்.. நான் மருந்து பருக்கல்ல...! அவ்வளவு கோபம்..! என்னைக் கேட்டிருந்தா நானே ஒரு கலியாணத்தைக் கட்டி வைச்சிருப்பன்.. இப்படித்தான் பல பெற்றோரும்.. பிள்ளைகளை பலத்த எதிர்பார்ப்போட பெற்று வளர்ப்பினம்.. இறுதியில்.. அதுகள்.. எங்கினையன்.. தயங்கி.. இயங்கி.. முயங்கி.. மயங்கிக் கிடக்குங்கள்.. ரெம்ப சாட்...! :lol:

என்ன இருந்தாலும் உங்கள் குஞ்சு செய்தது தப்புதான், ஆனால் நீங்கள் வளர்த்த உங்கள் குஞ்சை உங்களாலேயே கொன்றோல் பண்ண முடியவில்லை என்றால் என்னத்த சொல்லி என்னத்த பண்ண.

Posted

நெடுக்காலை போவான் என்ன இருந்தாலும் உங்கடை குஞ்சு இப்படி சேவலாய் வளந்ததுக்கு பிறகு அது உங்களக்கு செய்தது துரோகம்தான் அதை ஆனாலும் ஆடித்தூக்க வருத்தம் வந்து வாந்தியெடுத்து சோர்ந்து போனால் பிறகும் அதுக்கு நீங்கள் கலியாணம் கட்டி வைச்சிருக்கலாம். பாவந்தானே?? :lol::(:(

laughingmonkey.gif

  • 4 weeks later...
Posted

சாறி தலைப்பை பார்க்காமல் வந்துட்டேன் மன்னிக்கனும் தாத்தாமாரே :lol:

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆயிரம் பார்வைகளைக் கடந்திருக்கிறது இக்கவிதை?????

எப்போதுமே எங்குமே கவர்ச்சியே வெற்றி பெறுகிறது.

இக்கவிதைக்குக் கலகலப்பாகக் கருத்தெழுதிய நண்பர்களுக்கு நன்றிகள்.

தொடர்ந்தும் கவர்ச்சியாகவும், காரமாகவும் கவி வெளிகளில் பயணிப்போம் நண்பர்களே.

  • 1 year later...
Posted

நல்லதொரு கவிதை தந்தமைக்கு நன்றிகள் சகாரா :wub:

Posted

இப்பிடிச் சிலகவிதைகளும் இல்லாதுவிட்டால் யாழ்களம் வெறும் பாலையாகவே இருந்திருக்கும்.

இப்படி நிறைய கவிதைகள் வரவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அட வீடியோ போட்டெல்லாம் டெமோ காட்டுறாங்கப்பா..

நானும் ஒரு வீடியோ போடலாமோ.. :wub:

Posted

எனக்கு இருக்கும் கேள்வி இதுதான்

ஏன் மிகச் சில வரிகளில் இந்தக் கவிதையை முடித்தீர்கள்...? தமிழ் பெண்கள் தம் ஆடவருடன் செய்யும் கலவியை அதிகம் பாடக்கூடாது எனும் மரபியலாலா? அப்படி எனில், இந்தக் கவிதையையே படைத்திருக்க கூடாது. காமம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமன்.... கந்தகக் கவிதை பாடுபவர் அந்த வாழ்வியலின் அடிப்படையான காமத்தையும் தெளிவுற பாடவேண்டும். காமம் உணராத எவரும் சுதந்திரம் பற்றி உரைக்கும் உரிமை இழப்பர்.. தன் தாயும் தந்தையும் எவர் நிர்பந்தமும் இன்றி உடலுறவு கொண்டே தாம் பிறந்தோம் என உணராதவருக்கு விடுதலை என்பது வெறும் வாக்கியமே. தலைவருக்கு பிறந்த தின கவிதை எழுதுபவர் தன் பேரின்பத்தையும் பாடவேண்டும். கால அடுக்குகளில் இருந்து பீறிடும் பெண் கவியாய் சாகரா மாற வேண்டும்.

ஆணின் தொடுகையை விரும்பும் எந்தப் பெண்ணுக்கும் காமம் ஒரு அற்புதம்...

பெண்ணின் காமம் இன்றேல் உலகில் எந்த சீவனும் இல்லை என உயிரியல் அறிந்தவருக்கு பெண் காமம் என்பது வராலாற்றை கொண்டு செல்லும் ஜீவ நதி என புலப்படும்

மரபுகள் என்பது என்றும் மாற்றத்திற்கே

சாகரா இன்னும் பாடுங்கள்....

சாகரா இன்னும் பாடுங்கள்...

நிழலி இதை நீங்கள் தம்பி நெடுக்ஸ்சுக்கு சொல்லவில்லை தானே...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி இதை நீங்கள் தம்பி நெடுக்ஸ்சுக்கு சொல்லவில்லை தானே...

ivf.gif

IVF தொழில்நுட்பம் வளர்த்துவிட்ட இந்தக் காலத்திலும் போய்.. தயங்கு.. இயங்கு.. முயங்கு.. மயங்கு என்று கொண்டு நிற்க ஏலாது. கலியாணமே இந்தக் காலத்தில் ஒரு வேஸ்டு. வாடகைக்கு ஒரு அம்மா பிடிச்சமா.. குழந்தையை பெத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டமா.. காசக்கொடுத்தமா.. வாரிச எடுத்தமா.. வளர்த்தமா என்றிருக்கனும். ஒரே ஒரு வாரிசு என்றாலும் அம்மா என்றால் என்னென்று தெரியாமல் வளர்க்கனும்.. என்றதுதான் என்ர விருப்பம்..!

ஜஸ்டு ஒரு முட்டையும் விந்தும் சந்திக்க வைக்கிறதிற்கு.. இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம்.. கவிதை.. காதல்.. கலியாணம்.. நல்லா ஊரை ஏய்க்கிறாங்க..! :D:)

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.