Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிர்சியில் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமகால அரசியல் ஆபத்து எப்போதும் தூரத்தில்தான் இருக்கும் என்பதில்லை. நம் நிழலுக்கு அடியிலேகூட இருக்கக் கூடும். உதாரணத்துக்கு... சீனா!

'சீன ராணுவம் வலுவாக வளர்ந்து வருகிறது. எல்லை-யில் பெருமளவில் ராணுவத்தைக் குவித்து வரு-கிறது. பாகிஸ்தானைவிட சீனா பெரிதும்நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதைச் சமாளிக்க நமது விமானப் படையிலும் அதிநவீன விமானங்கள்வழங்கப் பட வேண்டும்' என்று அலறியவர் இந்தியாவின் விமானப் படை தலைமை மார்ஷல் பாலி ஹோமி மேஜர்.

அமெரிக்காவுக்கு இணையான ராணுவ மற்றும் பொருளாதார பலத்துடன் சீனா உருவாகி வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறையின் சமீபத்திய அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவையே சீனா பயமுறுத்துகிறது என்றால், இந்தியாவுக்கு?

சமீபத்தில் ஹைனன் தீவில் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல் தளத்தை சீனா அமைத்தது. சீனப் பத்திரிகை ஒன்று இது குறித்த தகவலைப் பெருமையாக வெளியிட்டபோது, இந்தியாவுக்குப் பேயறைந்தது போல் இருந்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 20 கப்பல்-களைமறைத்து வைக்க முடியும்.

உலக அளவில் அணு ஆயுதம் மற்றும் பயங்கர ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவிஞ் ஞானிகளின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்) எடுத்த செயற்கைக்கோள் புகைப் படத்தில் இந்தியாவுக்கு இன்னும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி உட்பட இந்திய நகரங்களைக்குறி வைத்தபடி சீனா ஏவுகணைகளை நிறுவியிருப்பது தெரிய வந்திருக்கிறது. சீனாவின் கிங்கை மாகாணத்தில் டெலிங்கா அருகே 2,000 சதுர கி.மீ பரப்பளவில் கிட்டத் தட்ட 60 ஏவுகணைத் தளங்களை சீனா அமைத் துள்ளது.

ஒரு பட்டனைத் தட்டினால் போதும், ஒரு சில நிமிடங்களில் டி.எஃப்-21 ரக ஏவுகணைகள் விண்ணில் சீறிப் பாய்ந்து தாக்கும். இந்த ஏவுகணைகளில் அணு குண்டுகளையும் ஏற்றி அனுப்ப முடியும்!

தனது நாட்டுக்குள் இருந்து இந்தியாவைக் குறி-வைப்பதற்கு அடுத்ததாக, அண்டை நாடுகளுக்குள் புகுந்து, தனது தளங்களை நிறுவி வருகிறது சீனா. இதில் முக்கியமானவை, துறைமுகங்கள். சரக்குகளைக் கொண்டுசெல்வதற்காக என்று நொண்டிச்சாக்கு சொன்னா-லும், துறைமுகம் அமையும் இடங்களில் எல்லாம் விரைவில் கடற்படைத் தளத்தை சீனா அமைக்கும் என்று தகவல். உலக அளவில் கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்கு-மதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு சீனா.

வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டுசெல்கிறது. இந்தக் கப்பல்களின் பாதுகாப்புக்கு எனக் கூறிக்கொண்டு பாகிஸ்-தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்பன்தோடா ஆகிய இடங்களில் துறைமுகங்களை அமைத்துள்ளது சீனா.

இந்தத் திட்டத்துக்கு சீனா வைத்துள்ள பெயர், 'முத்து மாலை'. முத்துக்களைக் கோத்தால் முத்துமாலை கிடைப்பது போன்று, இந்தத் துறைமுகங்களை இணைப்பதுதான் சீனாவின் பகீர் பாதுகாப்புத் திட்டம். கண்ணை மூடிக்கொண்டு யோசித்தால், இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் சீனாவின் இரும்பு வளையம் அமைக்கப்பட்டு-விட் டது. ஒருவிதமான சுழலில் சிக்கி இருக்கிறது இந்தியா.

சீனாவின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் வழிக்கும், வங்க தேசம் மற்றும் மியான்மர் துறைமுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதனால், இந்தத் துறைமுக அபி விருத்திப் பணி மேற்கொள்வது இந்தியா-வுக்கு நெருக்கடி தருவதற்காகத்தான் என்று சந்தேகிக்கப்படு கிறது.

தவிர, சீனா கமுக்கமாக இந்திய எல்லையில் இது-வரை கிட்டத்தட்ட 3 லட்சம் வீரர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் சீனா படுகில்லாடி. ஆனால், நாமோ படு லேட்! இப்போதுதான் அலர்ட் ஆன இந்தியா, இன்னும் சில ஆண்டுகளில் சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்காக இரண்டு புதிய பிரிவுகளைத் தொடங்கி, மொத்தம் 40 ஆயிரம் வீரர்-களை அனுப்ப உள்ளது. பல்வேறு ராணுவ அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள என அதிரடியாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா செலவிட உள்ளது.

இந்தியாவை இவர்கள் எதிரியாக நினைக்க என்ன காரணம்?

இந்தியா - சீனா இடையே 3,500 கி.மீ-. நீளம் எல்லை உள்ளது. இதில் சீனா - காஷ் மீர் பகுதியில் 38 ஆயிரம் சதுர கி.மீ. தூரத்தை ஆக்கிர-மித்து வைத்துள்ளது. இந்தியா-வின் கிழக்குப் பகுதியில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பைத் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறது. அதாவது அருணாச்சலப் பிரதேசம்... சீனாவுடையதாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்று வந்த அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷ் கோயு உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகள் சீனா செல் வதாக இருந்தது.

அனைவருக்கும் விசா கொடுத்த சீன தூதரகம், கணேசுக்கு மட்டும் விசா தரவில்லை. இதற்கு அவர்கள் கூறிய காரணம், கணேஷ் ஒரு சீனப் பிரஜை. சொந்த நாட்டுக் குள் செல்ல விசா தேவை இல்லை என்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து, கடைசியில் அந்தப் பயணத்தையே இந்தியா ரத்து செய்தது.

கணேஷ் என்ற தனிப்பட்ட இளைஞ-னுக்கு ஏற்பட்டதல்ல அந்தச் சிக்கல். அது மொத்த இந்தியனுக்கும் வரப்போகிற ஆபத்து.

''பாகிஸ்தானால் ஆபத்து'' என்று சும்மா பேசு பவர்கள், அக்கறையுடன் அலற வேண்டியது இப்போது சீனாவையும் பார்த்துதான்!

இதுக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?

நீங்களே சண்டை பிடிப்பது கூடாது அது தீவிரவாதம்

சீனாவுடன் சமாதானமாக போகவேண்டும்... இந்தியா ஏற்றுக்கொள்ளும் ஒரு அதிகாரப்பகிர்வை சீனா நிச்சயமாக தரும்.

இது எனது தனிப்பட்ட அறிக்கை.

சீனாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இந்தியா இருப்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா என்ற பயங்கரவாத நாட்டை தோற்கடித்து ஆசியாவில் ஜனனாயகத்தை நிலைநாட்ட எனது ஆதரவை சீனாவுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். (சீனாவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்...உங்களுடைய ஏவுகணை எதையும் பரீட்சித்து பார்க்க விரும்பினால் கோபாலபுரம் சென்னையில் இருக்கும் கருநா கிழவனின் வீட்டுக்கு ஏவவும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வேளை மகிந்தா என்னை அளைத்து, உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டுப் பெற்றுக் கொள் என்று சொன்னால் எனக்கு தமிழீழம் தா என்று கேட்க ஆசைதான் ஆனால், அதை விடப் பெரிய ஆசை இருப்பதால் அதை கேட்க மாட்டேன், நான் கேட்க போவது சைனாவின் படைகளைக் கொண்டுவந்து இந்தியாவை முறைத்து பார்த்துக் கொண்டு எமது மண்ணில் நிற்கவை என்றுதான் கேட்பேன். அதில் இருவருமே ஒரு கருத்தாவோம் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

இந்தியா அருணாச்சல பிரதேச மக்களை மனித கேடயங்களாக வைத்திருப்பதை கண்டிக்கிறோம் - சீனா

இந்தியா அருணாச்சல பிரதேச மக்களை மனித கேடயங்களாக வைத்திருப்பதை கண்டிக்கிறோம் - சீனா

அத்தோடு இந்தியாவால் கைது செய்யப்பட்ட கனேஸ் என்னும் சீன இளைஞரையும் விடுதலை செய்யவேண்டும்.

அவர் கைதுதான் செய்யப்பட்டார், அதைப்பற்றி கருத்துக்கூற அவருக்கே உரிமை கிடையாது.

விசாரணைகள் முடியும் வரை அவரை தடுப்புமுகாமில் இடவும் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்னப்பா சொல்றீங்க? எனக்கு ஒன்னுமே புரியல்லையப்பா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா... நீ எங்களுக்குச் செய்த அநியாயத்திற்க்கு உனக்கு சீனாவின்ர வடிவில இருக்கடி.. அப்ப தெரியும்.

எந்த மகிந்தவுக்கு பல்லக்கு தூக்கிறியோ அதே மகிந்த உன்னை தூ நாயே எண்டு துரத்திக் கலைக்கிற நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆனா ஒண்டு மகிந்த நாராயணனை நாய் மாதிரி கொழும்பில நடக்கவிட்டாலும், அது நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு போகேல்லையா? அது மாதிரி இலங்கை என்னத்தை துப்பினாலும் துடைச்சுப்போட்டு, அவனுக்கு பின்னாலையே போகுங்கள். மானம் கெட்ட ஜென்மங்கள்.

சீனாவே வெறிபிடித்த இந்தியாவை போட்டுத் தள்ளு நாங்களும் ஆதரவு தாரம்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை இரும்புத்திரை நாடு என்று முன்பு அழைத்தார்கள். அது திரை மறைவலிருந்தே தன்னை முன்னேற்றிக்கொண்டுவிட்டது. பொருளாதாரம் மற்றும் இராணுவ பலத்தை கட்டியெழுப்புவதில் இந்தியா ஆமை என்றால் சீனா முயல். அதுவுமல்லாமல் இந்தியாவிடமில்லாத ஒன்று சீனாவிடமுள்ளது. அது தான் ஐ.நா தோன்றியபோது சீனாவுக்கு வழங்கப்பட்ட "வீட்டோ" உரிமை. இதை சீனா எத்தனையோமுறை தனக்குச் சாதகமாகப் பாவித்துவருகிறது. இந்தியா காலாதி காலத்துக்கு இனி சீனாவை அசைக்கமுடியாது. அமெரிக்காவாலேயே அசைக்கமுடியாத திடமான சர்வதேச பாதுகாப்பு கட்டுமானங்களை படிப்படியாக பரந்தளவில் நிறுவிவரும் சீனாவால் இந்தியாவின் இஸ்த்திரத்தன்மை குறிவைக்கப்பட்டு அதன் நாட்கள் எண்ணப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை. மிளகை விட்டு கடுகை தேடி எடுப்பதில் இந்திய ஆளும்வர்க்கத்தினர் சுராதி சூரர்கள்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

சீன - இந்திய எல்லையில் உள்ள பதட்டத்தை தணிக்க , ஒசாமா பின் லாடன் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவை விரைவில் அனுப்பவேண்டும் .

நாங்கள் இப்படியே இந்த கட்டுரைகளை வாசித்து எங்களுக்குள்ளேயே சிரிச்சு சந்தோசப்பட்டு கொண்டிருக்க வேண்டியது தான். ஆனால் அவனவன் மாதாமாதம் சேர்ந்து கூட்டு இராணுவ ஒத்திகை செய்யிறான் . கடந்த வாரஅம் கூட சீனாவில் நடந்த சீனக்கடற் படையின் 60வது ஆண்டு நிறைவு விழாவிலும் இந்திய மற்றும் கியூபா கடற்படை தான் முக்கிய பங்கு வகித்தது. நான் கடந்த 5 6 வருடங்கள் சீனாவில் வசித்து வருகிறவன் என்ற வகையில் சொல்லுகிறேன். சீனா இன்னும் குறைந்தது 10 , 20 வருடங்கள் யாருடனும் சண்டைக்கு போகாது. இராணுவத்தை சோர்வு நிலையில் வைத்திருக்காமல் , அடிக்கடி எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இராணுவவீரர்களை உசார் நிலையில் வைத்திருக்க வேண்டியது முக்கியமாகும் . இல்லாவிட்டால் ஒரு வெள்ளப்பெருக்கு அல்லது ஒரு பூகம்பம் ஏற்பட்டால் தான் சீன இராணுவத்துக்கு வேலை. இதை விட சீனாவில் பலகோடிக்கணக்கான ஏழைமக்கள் இருக்கிறார்கள் . தெற்கு மற்றும் மத்திய மேற்கு சீனாவில் பெரும்பாலான கிராமங்களில் வன்னியில் உள்ளது போன்ற கிரவல் பாதைகள் கூடக்கிடையாது. இப்போது சீன அரசு அந்த அடித்தள மக்களின் தேவையை நிவர்த்தி செய்வதிலேயே குறியாக இருக்கிறது, அதை விடுத்து ஒரு போரை ஏற்படுத்தி தனது பொருளாதாரத்தை சீரழிக்க சீனா ஒரு போதும் முயலாது. என்றாலும் சீன இராணுவத்தின் வலிமையை எங்களுக்கு சாதகமாக திருப்ப வேண்டியது எமது முக்கிய கடமையாகும். எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லைஎதிரிக்கு(இந்தியா

Edited by mullaiman

சீனாவும் இந்தியாவும் இருந்தாப்போல நாளைக்கே அடிபடதொடங்க மாட்டார்கள் என்பது எங்களுக்கும் தெரியும் தான்.

அவ்வாறான ஒரு நிலை வருமானால் தனால் நாங்களும் பாதிப்படைவோம்.

இந்த செய்தி தந்த பரபரப்புக்கு ஏற்றமாதிரித்தான் நாங்களும் எங்கள் எண்ணங்களை கொட்டிக்கொள்கிறோம்.

ஆனாலும் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்... இன்ரு சீனாவின் பலத்துடன் எந்த ஒரு நாடும் உரசிப்பார்க்க விரும்பாது

அது இந்தியாவுக்கும் தான் பொருந்தும். நாளைக்கே அப்படியான ஒரு முருகல் நிலை வந்தாலும் அதனை எவ்வாறு நாம் பயன்படுத்தலாம்?

சீனப் படைத்துறையின் பலம் பொருந்திய படங்களை இங்கே பாருங்கள்.......

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் செந்தில் அவர்களே இக்கட்டுரை இவ்வார ஆனந்தவிகடனில் வந்தது அதைப்பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே!

சபாஷ் சரியான போட்டி...

சைனாக்காறாரே... இந்தியாவை நம்பமுடியாது... தற்காப்பு தாக்குதல் ஒண்டு நடத்தி பாக்கிரது நல்லம்.

நாளைக்கே அப்படியான ஒரு முருகல் நிலை வந்தாலும் அதனை எவ்வாறு நாம் பயன்படுத்தலாம்?

நாம் பாகிஸ்தானைநோக்கி எமது நட்புக்கரங்களை நீட்டி வழக்கம்போல எதாவது குண்டக்கமண்டக்க பண்ணாலாம்.. :(

மகிந்தாவால் இந்த பிரச்சனை திர்த்து வைக்க முடியும்.

அம்பாந்தோட்டை சீன கடைப்படை தளம் செயற்பாட்டுக்கு வந்தால் திருகோண மலை துறைமுகத்தை கையகப்படுத்தி சீனா பயன் படுத்துவதை இந்தியா கடவுளாலையும் தடுக்க முடியாது...

நாளைக்கே அப்படியான ஒரு முருகல் நிலை வந்தாலும் அதனை எவ்வாறு நாம் பயன்படுத்தலாம்?

நாம் பாகிஸ்தானைநோக்கி எமது நட்புக்கரங்களை நீட்டி வழக்கம்போல எதாவது குண்டக்கமண்டக்க பண்ணாலாம்.. :lol:

:D :D

Edited by வசி_சுதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் செந்தில் அவர்களே இக்கட்டுரை இவ்வார ஆனந்தவிகடனில் வந்தது அதைப்பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே!

தகவலுக்கு நன்றி எழு ஞாயிறு. இந்த செய்தி Facebook தளத்திலிருந்து சுடப்பட்டது. அதனால் மூலம் தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளாளுக்குரோம்ப ஜோராத்தான் எழுதியிக்கிறியள்.

நடந்ததையே நினைத்து நினைத்து மன அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க

இப்படியான சின்ச்சின்ன தமாசான கற்பனைகள்கூட உதவும்.

சு}றாவளி, நெப்போலியன், வசி-சுதா................. & co வழங்கும் லொள்ளுசபா நன்றே தொடரட்டும். :lol:

Edited by naanal

சீன - இந்திய எல்லையில் உள்ள பதட்டத்தை தணிக்க , ஒசாமா பின் லாடன் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழுவை விரைவில் அனுப்பவேண்டும் .

1112.gif

  • கருத்துக்கள உறவுகள்

மாறிவரும் அனைத்துலக அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்ததன் விளைவாகவே எமது தேசியத் தலைவரவர்கள் 2008 மாவீரர் தின உரையிலே தெளிவாகச் சில முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். புதிய உலக ஒழுங்கானது அமெரிக்க - ரஸ்யா என்ற பாதையிலிருந்து விலகி நீண்டகாலமாக ஒற்றைத் தன்மையுடைய உலக ஒழுங்கமைப்பொன்று உருவாகியிருந்த சூழலில், மெதுவாக நகர்ந்த சீனா சடுதியான, அமெரிக்க - சீன ஒழுங்கமைவொன்றைத் தோற்றம் பெற வைத்தள்ளது. சீளாவிற்கு, அதனை சற்று இறுக்கமாகக் கையாளும் வாய்ப்பினை, உலகளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவானது துணையாகியுள்ளது. இந்தத் தவிர்க்கவியலாத சூழலமைவினை தமிழீழ விடுதலைப்போரும் எதிர்கொண்டு நிற்கிறது என்பதே யதார்த்தமானது. எனவே கிந்திய - சீன யுத்தமானது இன்றைய பொருளாதாரச் சரிவில் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே. ஆனால் சிறிலங்கா - கிந்தியா தேன்நிலவு நீடிக்கப்போவதில்லை. தமிழினத்தினது விடிவு தனக்குத் தொல்லையென்ற கிந்தியாவுக்கான சீனாவின் "ஆப்பு" அது சிறிலங்காவேதான் என்பதை சிலகாலத்தில் புரிந்து கொள்ளும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அதிர்ச்சியை தொடர்ந்து பதட்டமடைந்த இந்தியா - சீன மற்றும் பாகிஸ்தானுடான - இந்தியாவின் காஷ்மீர், அருணாச்சல் பிரதேஷ் எல்லைகளில் பாரிய அளவிலான மண் அரண்களை அமைப்பதற்கான திட்டத்தை மேற்கொண்டு உள்ளது. "Operation E-மயம்" என்ற பெயரில் இந்த அதி உயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது!

அத்துடன் தனது ஏவுகணைகளை வாலைச் சுருட்டிக்கொண்டு நமக்கேன் வம்பென்று சிறிலங்காவிற்கு விற்றுவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.