Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத்தின் தலையிடா கொள்கை... ஈழத்தின் திற்வு கோல்......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத்தின் தலையிடா கொள்கை... ஈழத்தின் திற்வு கோல்......

theelepan.jpg

* ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர் திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதம் தேவையற்றது.

* தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் இறந்த விடுதலைப்புலிகளையும் மதிக்காமல் அவர்கள் மேடையிலேயே இறந்த போதும் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அதை உதாசீனப்படுத்தி ஈழத்திற்கு படைகளை அனுப்பியது சரியான நடவடிக்கை தான். இதுதான் நாங்கள் காந்திக்கு செய்யும் மரியாதையாகும்..

* அங்குள்ள தமிழ் பெண்களை இந்திய இராணுவம் வல்லுறவு செய்ததும் இளைஞர்களை கொன்று குவித்ததும் சரியே.

* இந்திய இராணுவம். தமிழ் பெண்களை பாலியல் சித்தரவதைக்குள்ளாக்கி, அவர்களை பாலியல் வல்லுறவுகான தடையங்கள் சிக்கிவிடக் கூடாதென, அவர்களது பிறப்புறுப்பிலும் துப்பாக்கியால் சிதைத்த கொடூரங்கரளும் மிகச்சிறந்த நடவடிக்கை..

* வடமாரடாட்சிக் கோட்டம் உடுப்பிட்டி என்ற இடத்தில் கலைவிழி என்ற பெண் குழந்தை பெற்று 24 நாட்களே ஆன நிலையில் வீட்டில் இருக்க அவளைப் கணவன் முன்னே அவளின் தம்பியை விட்டே வல்லுறவு செய்து உலகில் எந்த அமைதி படையாலும் செய்யமுடியாத மிகச்சிறப்பான அமைதி நடவடிக்கையாகும்.

* விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்த அப்பாவி மக்களை கட்டி இழுத்து வந்து தரையில் வரிசையாக படுக்க வைத்து யுத்த டாங்கியை ஏற்றிப்படுகொலை மிக மிக நியாயமானே செயல் பாடே.

* ஈழத்தமிழர்கள் எங்கள் தலைவரை என்ன காரணத்துக்கு என தெரியாமலேயே கொன்று விட்டனர். அவர் ஒரு அப்பாவி. எனவே அம்மக்கள் இனி செத்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

* தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை 'இந்தி'யனிடம் அடகு வைத்ததை போல, சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க வேண்டும்..

* ஓட்டு மொத்த உலகளாவிய தமிழர்களையும் தமிழ்நாட்டு எனும் ஒன்றினை காட்டியே நாங்கள் ஓல் சேலில் வாங்கிவிட்டோம்..அவர்கள் எங்கள் அடிமைகள்..

* பேச்சுவார்த்தைக்கு ஒருவரை அழைத்து பின் அவரை அந்த அறையிலேயே பூட்டி சிறை வைத்துவிட்டு பின்பறமாக ஒடிச் சென்று ஈழ தமிழர்கள் சார்ப்பாக இந்தியத்தின் பிரதமர் இலங்கை அதிபருடன் கையெழுத்திட்டதுதான் உலகத்திலேயே இது வரை கடைபிடித்த ராஜத்ந்திரத்தின் உச்சகட்டமாகும். இனி இதை யாராலும் செய்யவே முடியாது..

m7c5g5.jpg

* பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் 'இந்தி'யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையும் பாயாது... வேண்டுமானால் தமிழ்நாட்டில் இருப்பவர்களும் இந்தியன் என்று சொல்லி கொள்ளலாம்.. ஆனாலும் அதுவே அதிகம்..

IndianArmyRapeUs.jpg

* நாங்கள் எங்களுக்கு சமமான யாருடனும் சண்டை போட மாட்டோம்.. அவர்களுடைய காலில் அவர்கள் சொல்லமலே டமாரென விழுந்து விடுவோம்...எங்களுடைய இலக்கு எங்களுக்கும் கீழூள்ளவர்களை இம்சிப்பதையெ அதையே நாங்கள் அக்கம் பக்கம் மற்றும் உலகளாவிய ரீதியில் செய்துவ்ருகிறோம்...

* நாங்களே இந்த பிராந்தியத்தின் ரவுடிகள்.... எந்த முடிவும் விடுதலை போராட்டமும் எங்களின் அனுமதி இல்லாமல் நடந்துவிட முடியாது.... எங்களுக்கு மேல் உள்ளவர்களிடம் சில நேக்கு போக்குகளை கடைபிடிப்போம்...

* கைபர் போலன் வழியாக ஆடுமாடு ஓட்டி கொண்டு வந்த எங்களுக்கு..உண்மையில் எங்களுக்கு என்று ஒரு (இனம்/மொழி) மாநிலமும் இல்லை ...டெல்லியில் குந்தி கொண்டு கோலாச்ச எங்களுக்கு எல்லா மாநிலங்களிலும் வேண்டியதாக உள்ளது அதனால் இந்த பொந்தியா எங்கள் கைவசம் இருப்பது முக்கியமான தேவையாக உள்ளது...

* ஈழபிரச்சனையா ? போர் தொடங்கும் போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் அவர்களை குறை சொல்லனும்.... பிஜிபி இருந்தால் அவர்களை குறை சொல்லனும்... வேறு யாராவது இருந்தால் அவர்களை குறை சொல்லணும்.... தவிர இந்திய மக்களை அல்ல.... அவர்கள் பண்புள்ளவர்க்ள்..காசு கொடுத்தால் வாங்கி கொண்டு சுயமாக சிந்தித்து வாக்களிக்க கூடியவர்கள்..அனைவரும் ரத்த கண்ணீர் வடித்தார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..

* ஈழம் குறித்து பேசுபவர்கள் இந்தியாவின் 110 கோடி பேரையும் தனித்தனியே சந்தித்து ஈழ விடுதலை குறித்து எடுத்துரைக்க வேண்டும்....அதன் மூலம் லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இருந்து தமிழர்களுக்கு எதிராக இருந்த வெளியுறவு கொள்கையை படாரென மாற்றம் செய்ய இயலும் .. அதுவரை குறைந்தபட்சம் தலாய்லாமா கோஸ்டியை போல ஒரு 2000 வருடம் வரை... ஈழ தமிழர்கள் காத்திருக்கவேண்டும்... அதுவரை இனகலப்பு நடக்காது எதற்கு இந்தியத்தின் சார்ப்பில் சிங்களத்திற்கு வாய்மொழி உத்தரவு ஒண்று வழங்கபடும்..

* நாங்களெ இங்கு வல்லரசு கில்லரசு என்று புளுகி கொண்டு உள்ளோம்... இந்த லட்சணத்தில் அருகில் எவனாவது சிங்கபூர் போல வலிமையோடு எழுந்தால் விட்டு விடுமோ?? அப்புறம் சர்வதேசத்தில் எவன் எங்களை சீண்டுவான்....

* மீண்டும் மீண்டும் இந்தியதின் அடிமையாக இருந்து பாருங்கள் முள்ளிவாய்க்கால் போய் கிள்ளி வாய்க்கால் காட்டபடும்...

* சல்மான் கானும் சாருக்கானும் இலங்கையில் சினிமா விழாவில் பங்கேற்பது தமிழ்நாட்டு தமிழர்களின் அதாவது இந்தியர்களின் கருத்துக்கு மதிப்பளித்தே.....

* முதலில் தமிழ்நாட்டுக்கு விடுதலை குறித்து தேர்தல் நடத்துவதை விட ஐ.நா சபை எப்போவோ இது போல நடத்துமாறு அறிவித்துவிட்ட காஸ்மீருக்கான விடுதலை குறித்து தேர்தலை நடத்தட்டும்... பாவப்பட்ட மக்கள் அவர்கள்...

* இப்படியும் செய்யலாம் தமிழ்நாட்டின் விடுதலைக்கான தேரதலில் இந்திய தேசியம் பேசும் அனைவரும் அனைத்து கட்சிகளும் நேர்மையாக தூய்மையாக ..... ஒர் அணியாகவும்... தமிழ் தேசியம் பேசுபவர்க்ள்... குவாட்டர் கோழிபிரியாணி முதற்கொண்டு வழங்கிடவும் சகல அனுமதியும் வேண்டும் ஏனேனில் காலதிகாலம்... இப்படித்த்தானே இவர்க்ள் தேர்தலை நடத்தினார்கள்... இந்த தேர்தலில் மட்டும் அகிம்சை ... நீதி நேர்மை பேசி கொண்டு ஓரமாய் நிண்று வாக்கு கேட்கட்டும்.. அப்போது தெரியும் இந்தியாவா தமிழ்நாடா என?

பின்குறிப்பு :

இந்த பதிவு இந்தியத்தின் உதவியோடு ஈழம அமைக்கலாம் என வாதிடுபவர்களுக்காக எழுதபட்டது...

மீண்டும் இந்தியத்தின் உதவியோடு ஈழம் அமைக்கலாம் என வாதிடுபவர்கள் முதலில் தங்கள் வீட்டு பெண்களை இந்திய ராணுவத்திடம் பாலியல் வல்லுறவுக்கு அனுப்பிவிட்டு... பிற்கு இந்தியத்தின் உதவியோடு ஈழம் அமைப்பதை பற்றி பேசலாம்...

Edited by நிழலி
கற்பழிப்பு என்ற சொல்லை, பாலியல் வல்லுறவு என்ற சொல்லாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிப் போடுங்க அரிவாளை..! :lol:

சபாஷ். சரியான போட்டி :lol:

எம்மைப் பொறுத்தவரை எமது இரத்த உறவுகளான தமிழ் நாட்டவரை (ஏன் மாராட்டியரை, கன்னடத்தவரை, தெலுங்கரை, வங்க தேசத்தவரை) இந்தியன் என்ற இழிமக்கள் கூட்டத்தில் ஒருவராக, இந்திய பிணம் தின்னி நாய்களில் ஒருவராக நாம் பார்க்கவில்லை. இந்தியா என்ற மாயையில் இருந்து இவர்கள் விடுபடவேண்டும்.

இந்தியாவை தமது உறவாக கருதிய எமது இலட்சக் கணக்கான சகோதர்களை, சகோதரிகளை படுகொலை செய்த, செய்ய உதவிய இந்திய பிணம் தின்னி நாய்களை , இந்திய பயங்கரவாதிகளை ஈழத் தமிழன் மன்னிக்க, மறக்கவேண்டிய தேவை இல்லை. இந்திய பிணம் தின்னி நாய்களின் வல்லரசுக் கனவுக்கு எமது எமது இலட்சக் கணக்கான சகோதரர்களை, சகோதரிகளை படுகொலை செய்வதை, செய்ய உதவுவதை மானமுள்ள எந்த ஈழத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஒரு சில கைக்கூலிகள் வக்காலத்து வாங்கலாம்.

எம்மைப் பொறுத்தவரை எமது இரத்த உறவுகளான தமிழ் நாட்டவரை (ஏன் மாராட்டியரை, கன்னடத்தவரை, தெலுங்கரை, வங்க தேசத்தவரை) இந்தியன் என்ற இழிமக்கள் கூட்டத்தில் ஒருவராக, இந்திய பிணம் தின்னி நாய்களில் ஒருவராக நாம் பார்க்கவில்லை. இந்தியா என்ற மாயையில் இருந்து இவர்கள் விடுபடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு எதிரான இந்திய வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து உலகத்தமிழ்மக்கள் போராட வேண்டும்.

நாங்கள் சிங்கள மக்களுக்கு எப்படி எதிரியாக இல்லையோ அப்படியே இந்திய மக்களுக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல.

மக்களைத் தூண்டிவிடும் இன வெறியர்களும் அரசியலுக்காக, பதவிக்காக எதுவும் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளும் இனம் காணப்பட்டு மக்களால் தூக்கியெறியப்பட வேண்டும்.

சோனியா, கருணா நிதி,சிதம்பரம் ம.ச.ஐய்யர்,சு.சுவாமி போன்றவர்கள் நாட்டையும் இனத்தையும் காட்டிக் கொடுக்கும் ஈனப்பிறவிகள். இவர்கள் இந்திய அரசியலில் இருந்து ஒதுக்கப் பட வேண்டும்.

வாத்தியார்

..............

முன் அறிவிப்பு

நான் எழுதிய கட்டுரைக்கு பதிலாக இந்த கட்டுரையை பதிலாக நண்பர் எழுதியுள்ளார்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72081

இந்த கட்டுரைக்கு கருத்து எழுத மனமில்லை . காரணம் பல .

1.எதிர்காலம் பற்றி எழுதிய கட்டுரைக்கு கடந்த கால நிகழ்வுகளை எழுதி நேரம் வீணடிப்பும்

2.செய்த தவறுகளை திரும்ப செய்ய சொல்வதும் ( பின் விளைவுகளை அனுபவித்த பின்னும் )

3.நடந்த கொடுமைகளை மெருகூட்ட கட்டுரையில் சித்தரிப்பு தனம் அதிகமாகி கட்டுரையின் உண்மை தன்மையை கேலியாக்கி கேள்விக்குறிகள் அதிகமாகி விட்டதாலும்

4.கட்டுரையில் அவருக்கு தெரியாமலேயே ஈழ மக்கள் குணங்களை / அந்த மக்களை இழிவு செய்து செய்து இருப்பதாலும்

5.என்ன செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாமல் விட்டேற்றியாக இருப்பதாலும்

6.கட்டுரை நோக்கு ஈழ விடுதலையை விட இந்திய விரோதம் அதிகம் காணப்படுவதாலும்

7.நடுநிலை பதில்கள் எழுதினால் கூட துரோகி பட்டம் சுமத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாலும்

எனினும் எனினும் எனினும்

1.எழுதவில்லை என்றால் ஓடி ஒளிந்து கொண்டதாக கூறிவிடுவார்கள் என்ற காரணத்தினால்

2.பதில் எழுதவில்லை என்றால் இவர் எழுதிய அனைத்தும் உண்மை என்றாகி விடும் என்பதால்

3.தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு என்பதற்கேற்ப சில கருத்துகள் என்னை குத்தியதாலும்

மனத்தை கல்லாக்கிக்கொண்டு எழுதுகிறேன் .

ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர் திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதம் தேவையற்றது. அன்று அனுப்ப வில்லை என்றாலும் வேறு எதோ ஒன்றை சொல்லி தூற்றியிருப்பார் என்பது வேறு கதை .

---------------------

* தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் இறந்த விடுதலைப்புலிகளையும் மதிக்காமல் அவர்கள் மேடையிலேயே இறந்த போதும் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அதை உதாசீனப்படுத்தி ஈழத்திற்கு படைகளை அனுப்பியது சரியான நடவடிக்கை தான். இதுதான் நாங்கள் காந்திக்கு செய்யும் மரியாதையாகும்..

ஒரு பக்க சார்பான கருத்தை எழுதி மக்களை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம் . நடந்தது மொத்தம் எழுதவும்

---------------------

* அங்குள்ள தமிழ் பெண்களை இந்திய இராணுவம் வல்லுறவு செய்ததும் இளைஞர்களை கொன்று குவித்ததும் சரியே.

நடந்த உண்மைகளை இல்லை என சொல்ல நான் ஒன்றும் ஒருபக்கம் சார்பு சிந்தனையாளன் அல்ல. இங்கு இந்திய ராணுவம் தவறு செய்துள்ளது என்பதை ஏற்றுகொள்கிறேன்

---------------------

* இந்திய இராணுவம். தமிழ் பெண்களை பாலியல் சித்தரவதைக்குள்ளாக்கி, அவர்களை பாலியல் வல்லுறவுகான தடையங்கள் சிக்கிவிடக் கூடாதென, அவர்களது பிறப்புறுப்பிலும் துப்பாக்கியால் சிதைத்த கொடூரங்கரளும் மிகச்சிறந்த நடவடிக்கை..

ஆயிரம் துப்பாக்கிகளால் சிதைத்தாலும் பாலியல் வல்லுறவுக்கான ஆதாரம் மறைய வாய்ப்பில்லை என்பது எல்லா ராணுவத்திற்கும் தெரியும் எனக்கும் தெரியும் . உமக்கு தெரிந்து இருந்தாலும் நீர் தான் எழுத்து ஜாலத்தில் உண்மையை மறைத்து உசுப்பேத்தி ஒழிக்கும் கொள்கை உடையவர் ஆயிற்றே

---------------------

* வடமாரடாட்சிக் கோட்டம் உடுப்பிட்டி என்ற இடத்தில் கலைவிழி என்ற பெண் குழந்தை பெற்று 24 நாட்களே ஆன நிலையில் வீட்டில் இருக்க அவளைப் கணவன் முன்னே அவளின் தம்பியை விட்டே வல்லுறவு செய்து உலகில் எந்த அமைதி படையாலும் செய்யமுடியாத மிகச்சிறப்பான அமைதி நடவடிக்கையாகும்.

உலகில் எந்த மனிதனும் தன் அக்காவை _____ முடியாது . அதுவும் அவள் கணவன் முன்னே . துப்பாக்கி முனையில் . ஈனத்தனமாக யோசிக்காதே . அப்படி ஒரு நிலை வரும்போது ஈழ தமிழன் செத்து போயி இருப்பான் . என்னை விட உன்னை விட ஈழ தமிழன் மானத்தில் உயர்ந்தவன் . உயிருக்கு பயந்து உன் சாக்கடை கற்பனை போல செய்து இருக்க மாட்டான் . தேவையின்றி உமது கட்டுரை மெருகூட்ட ஈழ மக்கள் குணாதிசயங்களை பற்றி தவறாக எழுதாதே . ஈழ மக்கள் தோற்றால் கூட அவர்கள் கொள்கைகளில் உறுதி கொண்டவர்கள் .

---------------------

* விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்த அப்பாவி மக்களை கட்டி இழுத்து வந்து தரையில் வரிசையாக படுக்க வைத்து யுத்த டாங்கியை ஏற்றிப்படுகொலை மிக மிக நியாயமானே செயல் பாடே.

இது அப்பட்டமான புழுகல் . இது போன்ற புழுகல் இந்திய ராணுவம் உண்மையில் செய்த தவறுகளை கூட நம்ப முடியாத அளவு இந்த புழுகல் உள்ளது

---------------------

* ஈழத்தமிழர்கள் எங்கள் தலைவரை என்ன காரணத்துக்கு என தெரியாமலேயே கொன்று விட்டனர். அவர் ஒரு அப்பாவி. எனவே அம்மக்கள் இனி செத்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

அவன் அப்பாவியா இல்லையா என்பது கேள்வியே இல்லை . அவன் செய்த தவறுக்கு கொலைதான் தண்டனையா ??? அவனை கொலை செய்த போது பின் விளைவுகள் ஏன் கருத்தில் எடுக்க படவில்லை என்பது தான் கேள்வி . அவன் ஒன்னும் இரண்டு கோடி பிஸ்கோத்து ஸ்ரீலங்கா தலைவன் இல்லை . ஆட்சியில் இல்லாதபோதும் குறைந்தது இருபது கோடி காங்கிரஸ் காரர்களின் தலைவன் . இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்த ஒரு மாபெரும் கட்சியின் தலைவன் . அவனை பின் பற்றுவோரில் தமிழர்களும் அடக்கம். இது துரதிர்ஷ்ட வசமானது என ஆண்டான் பாலசிங்கம் அவர்களே சொல்லி விட்டார் . இதை வைத்து நீயும் அரசியல் செய்ய நினைக்காதே . ஏற்கனவே காங்கிரஸ் அடி வருடிகள் இதை வைத்து தான் பிழைப்பு நடத்துகிறார்கள்.

---------------------

* தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை 'இந்தி'யனிடம் அடகு வைத்ததை போல, சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க வேண்டும்..

இந்த கருத்து பைத்திய கார தனமாக இருக்கிறது . எவன் சொன்னான் சிங்களனிடம் அடகு வைக்க சொல்லி . நீர் தான் இப்போது புதுசா சொல்கிறீர். மக்களை உசுப்பேற்றி விட்டு சாகடித்து அப்படி ஒரு நிலை ஏற்படுத்த நீர் நினைத்தால் அதற்கு பிறர் பொறுப்பல்ல . இந்தியனிடம் தமிழகத்தை அடகு வைத்ததாகவே வைத்து கொண்டாலும் அதே சரி . இல்லையேல் உம்மைப்போல ஆயிரம் குழுக்கள் தமிழ் நாட்டில் தோன்றி உள்ளுக்குள் அடித்து கொண்டு / மக்களை கொன்று மண்ணோடு மண்ணாக தமிழன் என்ற இனமே அழிந்து போயிருக்கும்

---------------------

* ஓட்டு மொத்த உலகளாவிய தமிழர்களையும் தமிழ்நாட்டு எனும் ஒன்றினை காட்டியே நாங்கள் ஓல் சேலில் வாங்கிவிட்டோம்..அவர்கள் எங்கள் அடிமைகள்..

இப்படியெல்லாம் யாருமே சொல்லவில்லை . நீர்தான் தேவையில்லாமல் சொன்னது போல சித்தரிக்கிறீர்

---------------------

* பேச்சுவார்த்தைக்கு ஒருவரை அழைத்து பின் அவரை அந்த அறையிலேயே பூட்டி சிறை வைத்துவிட்டு பின்பறமாக ஒடிச் சென்று ஈழ தமிழர்கள் சார்ப்பாக இந்தியத்தின் பிரதமர் இலங்கை அதிபருடன் கையெழுத்திட்டதுதான் உலகத்திலேயே இது வரை கடைபிடித்த ராஜத்ந்திரத்தின் உச்சகட்டமாகும். இனி இதை யாராலும் செய்யவே முடியாது..

ஆமாம் . சிக்கல் எடுக்கும் பொது மேலும் சிக்கல் ஆகும் . சிக்கல் எடுப்பவன் கை கிழிய கூட வாய்ப்பு உண்டு . நடுநிலை வகிப்பவன் யாரோ ஒருவனுக்கு எதிரியாக வேண்டி வரும் என்ற உண்மை தெரிந்து இருந்தும் ராஜீவ் எதோ ஒரு முடிவுக்கு அப்போது முயற்சி செய்தார் என்பதே உண்மை . அவர் செய்ததை குறை கூறும் நண்பனே . அதைவிட சிறந்தது பல உண்டு . ஆனால் எவனாலும் அதைவிட சிறந்ததை கிழிக்க முடியவில்லை என்பது உனக்கு தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன் . இன்று அது கூட இல்லை என்பதும் உனக்கு தெரிந்து இருக்கும் என நம்புகிறேன் .ஒன்றை பிரிக்கும் போது பக்குவமாக ஒன்று ஒன்றாக பிரிக்க வேண்டும் . அதன் முதல் படி தான் அவர் செய்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக புரிந்துணர்வு இல்லாததால் அது வெற்றி பெறவில்லை

---------------------

* பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் 'இந்தி'யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையும் பாயாது... வேண்டுமானால் தமிழ்நாட்டில் இருப்பவர்களும் இந்தியன் என்று சொல்லி கொள்ளலாம்.. ஆனாலும் அதுவே அதிகம்..

இந்திய தோட்டா பாய்வது இருக்கடடும் . தமிழ் நாட்டில் உம்மைபோன்ற பலர் இருக்கிறார்களே . அவர்களால் எதுவும் இந்த பிரச்சினையில் புடுங்க முடியாமல் போனதற்கு தேவையின்றி ஏன் இங்கு இந்திய தோட்டாவை இழுக்கிறாய் ??? விளக்கம் அளிக்கிறேன் பேர்வழி என எதையாவது உளற வேண்டாம் . இந்த விஷயத்தில் பல பிற விஷயங்களும் இருக்கிறது . ஏன் இனம் மீது நானே தூற்ற விரும்பவில்லை . அதனால் இந்த விஷயத்தை விட்டு விடவும்

---------------------

* நாங்கள் எங்களுக்கு சமமான யாருடனும் சண்டை போட மாட்டோம்.. அவர்களுடைய காலில் அவர்கள் சொல்லமலே டமாரென விழுந்து விடுவோம்...எங்களுடைய இலக்கு எங்களுக்கும் கீழூள்ளவர்களை இம்சிப்பதையெ அதையே நாங்கள் அக்கம் பக்கம் மற்றும் உலகளாவிய ரீதியில் செய்துவ்ருகிறோம்...

எதற்கெடுத்தாலும் / தேவையின்றி சண்டை போட இந்தியா ஒன்றும் சொறி பிடித்த அல்லது காட்டு மிராண்டிகள் கூட்டம் அல்ல . கீழுள்ளவர்களை இது வரை இம்சிக்க இல்லை . பங்களாதேஷ் சுதந்திரம். ஆப்கானிஸ்தான் மீள் கட்டுமானம் . நேபாளத்திற்கு பல உதவிகள் . ஈழ மக்களுக்கு இது வரை மூன்றாயிரம் கோடிக்கு மேல் . இதற்கு பேர் இம்சிப்பதென்றால் எமக்கு தெரியாது

---------------------

* நாங்களே இந்த பிராந்தியத்தின் ரவுடிகள்.... எந்த முடிவும் விடுதலை போராட்டமும் எங்களின் அனுமதி இல்லாமல் நடந்துவிட முடியாது.... எங்களுக்கு மேல் உள்ளவர்களிடம் சில நேக்கு போக்குகளை கடைபிடிப்போம்...

ஆமாம் . அப்படித்தான் . ஆங்கிலேயன் xxx கழுவும் புத்தி இருந்தால் அவனுக்கு போய் கழுவவும் . நீக்கு நேக்கு கண்டிப்பாக கடை பிடிப்போம் . அப்போது தான் இந்தியா முன்னுக்கு வரும் . தமிழர்களாகிய நாங்களும் ஒரு வல்லரசின் அங்கம் என பெருமை படுவோம். எங்களை மதிக்காத யாரையும் நிம்மதியாக இருக்க விட மாட்டோம் . இத அமெரிக்காவும் இங்கிலாந்தும் செய்தால் அறிவு . நாங்க செஞ்சா தப்பா .??? போங்கய்யா நீங்களும் உங்க வியாக்கியானமும் . உம்மை போல சிலரால் தான் எப்போதோ முன்னேற வேண்டிய நாங்கள் இன்னும் முன்னேறி கொண்டு இருக்கிறோம்

---------------------

* கைபர் போலன் வழியாக ஆடுமாடு ஓட்டி கொண்டு வந்த எங்களுக்கு..உண்மையில் எங்களுக்கு என்று ஒரு (இனம்/மொழி) மாநிலமும் இல்லை ...டெல்லியில் குந்தி கொண்டு கோலாச்ச எங்களுக்கு எல்லா மாநிலங்களிலும் வேண்டியதாக உள்ளது அதனால் இந்த பொந்தியா எங்கள் கைவசம் இருப்பது முக்கியமான தேவையாக உள்ளது...

பழங்கதை பேசி பேசியே தமிழனை காலி பண்ணிட்டிங்களே . இன்னும் என்ன வாழுது திருப்பி திருப்பி பேச .

---------------------

* ஈழபிரச்சனையா ? போர் தொடங்கும் போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் அவர்களை குறை சொல்லனும்.... பிஜிபி இருந்தால் அவர்களை குறை சொல்லனும்... வேறு யாராவது இருந்தால் அவர்களை குறை சொல்லணும்.... தவிர இந்திய மக்களை அல்ல.... அவர்கள் பண்புள்ளவர்க்ள்..காசு கொடுத்தால் வாங்கி கொண்டு சுயமாக சிந்தித்து வாக்களிக்க கூடியவர்கள்..அனைவரும் ரத்த கண்ணீர் வடித்தார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..

இதெல்லாம் நீங்களும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும் செய்வது . நான் சொல்ல வருவது ஈழ பிரச்சினையில் இந்தியா முழுதாக ஒதுங்கி கொள்ள வேண்டும் இல்லையேல் சிங்களனுக்கு உதவி செய்யாது இருக்க வேண்டும் . அவ்வளவு தான்

---------------------

* ஈழம் குறித்து பேசுபவர்கள் இந்தியாவின் 110 கோடி பேரையும் தனித்தனியே சந்தித்து ஈழ விடுதலை குறித்து எடுத்துரைக்க வேண்டும்....அதன் மூலம் லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இருந்து தமிழர்களுக்கு எதிராக இருந்த வெளியுறவு கொள்கையை படாரென மாற்றம் செய்ய இயலும் .. அதுவரை குறைந்தபட்சம் தலாய்லாமா கோஸ்டியை போல ஒரு 2000 வருடம் வரை... ஈழ தமிழர்கள் காத்திருக்கவேண்டும்... அதுவரை இனகலப்பு நடக்காது எதற்கு இந்தியத்தின் சார்ப்பில் சிங்களத்திற்கு வாய்மொழி உத்தரவு ஒண்று வழங்கபடும்..

இணைய தளத்தில் கட்டுரை எழுதும் அன்பர் எழுதக்கூடிய கருத்தா இது ??? இணைந்து பரப்பினால் இரண்டு மாதம் கூட ஆகாத வேலைக்கு 2000 ஆண்டுகள் என்கிறார் . உண்மையில் நம்மால் ( இந்திய தமிழனால் ) ஈழத்திற்கு செய்ய முடிந்தது இது ஒன்றுதான்

---------------------

* நாங்களெ இங்கு வல்லரசு கில்லரசு என்று புளுகி கொண்டு உள்ளோம்... இந்த லட்சணத்தில் அருகில் எவனாவது சிங்கபூர் போல வலிமையோடு எழுந்தால் விட்டு விடுமோ?? அப்புறம் சர்வதேசத்தில் எவன் எங்களை சீண்டுவான்....

இங்க வந்து கட்டுரை மட்டும் எழுதாம நேரம் கிடைக்கு போதெல்லாம் புள்ளியல் தளங்களுக்கு சென்று உண்மை அறிந்து எழுதுக . சும்மா வரலாற்றை மட்டும் படித்து காலம் கடத்த வேண்டாம்

---------------------

* மீண்டும் மீண்டும் இந்தியதின் அடிமையாக இருந்து பாருங்கள் முள்ளிவாய்க்கால் போய் கிள்ளி வாய்க்கால் காட்டபடும்...

இல்லை . இந்தியாவை சீண்டினால் மீண்டும் அந்த நிலை வர வாய்ப்பு உண்மையாகவே இருக்கிறது . மேலும் முள்ளி வாய்க்கால் நிலைக்கு பல காரணம் உண்டு . இந்தியாவின் மேல் பழி போட்டு தப்பித்து கொள்ள நினைக்க வேண்டாம்

---------------------

* சல்மான் கானும் சாருக்கானும் இலங்கையில் சினிமா விழாவில் பங்கேற்பது தமிழ்நாட்டு தமிழர்களின் அதாவது இந்தியர்களின் கருத்துக்கு மதிப்பளித்தே.....

அமிதாப் பச்சன்/ கமல ஹாசன் / ஐஸ்வர்யா ராய் பங்கேற்காததை என் இங்கே நீர் கூற வில்லை ??? நல்லதெல்லாம் தள்ளி விட்டு கெட்டதை மட்டும் பரப்பும் எதோ ஒன்று போல நீர் எனக்கு இப்போது தெரிகிறீர்

---------------------

* முதலில் தமிழ்நாட்டுக்கு விடுதலை குறித்து தேர்தல் நடத்துவதை விட ஐ.நா சபை எப்போவோ இது போல நடத்துமாறு அறிவித்துவிட்ட காஸ்மீருக்கான விடுதலை குறித்து தேர்தலை நடத்தட்டும்... பாவப்பட்ட மக்கள் அவர்கள்...

அது அடுத்தவன் பிரச்சினை. தேவையில்லாமல் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய் ???. கொல்லப்பட்ட பல்லாயிரம் காஷ்மிரி பண்டிட் உயிர்களுக்கு பதில் சொல்லிவிட்டு/ பிடுங்கப்பட்ட காஷ்மிரி மக்களின் காணிகளுக்கு பதில் சொல்லிவிட்டு / ஈழ தமிழரை போலவே தன் மண்ணை விட்டு விரட்டபட்ட காஷ்மிரி இந்து மக்களுக்கு பதில் சொல்லிவிட்டு ஓட்டெடுப்பு பற்றி வக்காலத்து வாங்கு

---------------------

* இப்படியும் செய்யலாம் தமிழ்நாட்டின் விடுதலைக்கான தேரதலில் இந்திய தேசியம் பேசும் அனைவரும் அனைத்து கட்சிகளும் நேர்மையாக தூய்மையாக ..... ஒர் அணியாகவும்... தமிழ் தேசியம் பேசுபவர்க்ள்... குவாட்டர் கோழிபிரியாணி முதற்கொண்டு வழங்கிடவும் சகல அனுமதியும் வேண்டும் ஏனேனில் காலதிகாலம்... இப்படித்த்தானே இவர்க்ள் தேர்தலை நடத்தினார்கள்... இந்த தேர்தலில் மட்டும் அகிம்சை ... நீதி நேர்மை பேசி கொண்டு ஓரமாய் நிண்று வாக்கு கேட்கட்டும்.. அப்போது தெரியும் இந்தியாவா தமிழ்நாடா என?

அப்படிஎன்றால் குவார்டர் குடுத்து தமிழனை மடக்கி விடலாம் என நீரே கூறுகிறீர் . பின்ன என்னய்யா மானம்??? பின்ன என்னய்யா மரியாதை??? பின்ன என்னய்யா உண்மை ??? பின்ன என்னய்யா நீதி ??? இந்த கட்டுரையின் நோக்கம் பிரியாணி மற்றும் குவார்ட்டர் என்றால் நானே வாங்கி கொடுத்து இருப்பேனே உமக்கு . அதற்காக என் தமிழ் நாட்டு மக்களை என் நண்பர்களை காசுக்காக ஒட்டு போடுபவன் என்று கேலி உமக்கு என்ன அருகதை இருக்கு ??? நாங்கள் காசு வாங்கி கொண்டு ஓட்டும் போடுவோம் . அப்பப்ப ஓட்டையும் போடுவோம் . பார்த்து நீர் அதில் விழுகாம இருந்தா சரிதான்

---------------------

பின்குறிப்பு :

இந்த பதிவு இந்தியத்தின் உதவியோடு ஈழம அமைக்கலாம் என வாதிடுபவர்களுக்காக எழுதபட்டது...

மீண்டும் இந்தியத்தின் உதவியோடு ஈழம் அமைக்கலாம் என வாதிடுபவர்கள் முதலில் தங்கள் வீட்டு பெண்களை இந்திய ராணுவத்திடம் பாலியல் வல்லுறவுக்கு அனுப்பிவிட்டு... பிற்கு இந்தியத்தின் உதவியோடு ஈழம் அமைப்பதை பற்றி பேசலாம்...

1.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்

என்ற அய்யன் வள்ளுவர் வாக்கினை நான் பெரும்பாலும் பின்பற்றுவதாலும்.................

2.எதிரியின் தங்கை எனக்கும் தங்கை , எதிரியின் தாய் எனக்கும் தாய் என்ற உயரிய என் தமிழ் மரபுக்கு இணங்க...........

3.கருத்து மோதலின் போது எதிர்கருத்து எப்படியாயினும் கருத்தாளரின் வீட்டு பெண் உறுப்பினர்களை இழிவு படுத்தும் நோக்கோடு எழுதும் அளவு எனக்கு தகுதியும் திறமையும் அறிவும் எனக்கு இல்லாததாலும் .................

4.அப்படி இழிவு படுத்தினால் எனக்கு நல்லெண்ணம் சொல்லிகொடுத்த ஆசான்களையும் பெற்றெடுத்த அன்னையையும் வளர்த்த தந்தையையும் இழிவதற்கு சமம் என்ற கருத்திற்கு இணங்க இந்த கருத்துக்கு பதில் எழுத விரும்பவில்லை.

* விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்த அப்பாவி மக்களை கட்டி இழுத்து வந்து தரையில் வரிசையாக படுக்க வைத்து யுத்த டாங்கியை ஏற்றிப்படுகொலை மிக மிக நியாயமானே செயல் பாடே.

இது அப்பட்டமான புழுகல் . இது போன்ற புழுகல் இந்திய ராணுவம் உண்மையில் செய்த தவறுகளை கூட நம்ப முடியாத அளவு இந்த புழுகல் உள்ளது

அது புழுகள் இல்லை... யாழ்ப்பாணத்தில் பிரம்படிவீதியில் நடந்த உண்மைச்சம்பவம்.... யாராலும் தாக்கியழிக்க முடியாது எண்று இறுமாப்பு கொண்ட T-72 வகை இந்திய தாங்கியை சோதியா அக்கா தலைமையிலான பெண் போராளிகள் தாக்கி அழித்த கோபத்தில் இந்திய இராணுவம் செய்த கொடூரம் அது...

இருக்கலாம் .நம்புகிறேன் . நடந்ததை நடக்கவில்லை என கூறியதற்கு மன்னிப்பு கோருகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தமிழ் வித்தகரே வார்த்தையில் வல்லவரே.... மானமுள்ள ஈழ தமிழர் சாவது/சாகாதது.... பிற்கு இருக்கட்டும்.... மானங்கெட்ட ராணுவத்தின் செயலுக்கு பதில் சொல்லும்..அதற்காக போட்டோ ஆதாரம் எல்லாம் கேட்காதையும்....

இந்தியப் பேராயக்கட்சியினர் அதாவது காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தில் வந்தவர்கள் இந்திய விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களை செய்தவர்கள் என்றெல்லாம் இன்னமும் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தகுதியை இவர்கள் இழந்து நீண்ட நாட்களாகிவிட்டது.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில்; யுலியன் வாலாபாக் படுகொலை பிரித்தானிய முடியாட்சியின் கொடுரத்தனத்துக்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டு வருகிறது.அப்பாவி மக்களை நாயை சுடுவதைப் போல சுட்டுக் கொன்ற பிரித்தனிய படையினரின் கொலை வெறியை இந்திய வரலாற்றாளர்கள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியினர் இந்தகைய கொடுமைமிக்க அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி அளப்பரிய தியாகம் செய்து இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததாக மார் தட்டிக் கொள்கிறார்கள்.

ஆனால் அதே காங்கிரஸ் அரசால் வழி நடத்தப்பட்ட இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பேரில் ஈழத்தில் என்ன செய்தது?

யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குள் புகுந்து அப்பாவி நோயாளர்கள் மருத்துவர்கள் மருத்துவ தாதிகள் என்று 20 க்கும் மேற்பட்டவர்களைவ ஈவிரக்கமின்றி சுட்டுப்படுகொலை செய்ததை சொல்லவா?…..

விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்த அப்பாவி மக்களை கட்டி இழுத்து வந்து தரையில் வரிசையாக படுக்க வைத்து யுத்த டாங்கியை ஏற்றிப்படுகொலை செய்த வெறித்தனத்தை செல்லவா?

வடமாரடாட்சிக் கோட்டம் உடுப்பிட்டி என்ற இடத்தில் கலைவிழி என்ற பெண் குழந்தை பெற்று 24 நாட்களே ஆன நிலையில் வீட்டில் இருக்க அவளைப் பார்ப்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அவளது சொந்தத் தம்பி வந்திருந்தான்.

அவளது கணவன் அன்றைய சமையலுக்கு வேண்டிய பொருட்களை வாங்க சந்தைக்குச் சென்றிருந்தான்.

அந்த நேரம் பார்த்து இந்திய காங்கிரசின் அமைதிப்படை அந்த இடத்தை சுற்றிவழைத்த தேடுதல் நடத்தியவாறு அவளது வீட்டுக்கு வந்தது.

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகள் அல்லது அவர்களை ஆதரிப்பவர்கள் என்று இந்திய படை கருதுகிறது என்பதையும் பல மாணவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது என்பதையும் பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்திருந்த அந்தப் பெண் தனது சொந்தச் சகோதரனை காப்பாற்றுவதற்காக அவனை தனது கணவன் என்று கூறிவிடுகிறாள்.

அந்த நேரம் பார்த்து அவளது கணவன் விடு திரும்ப அவன் மூலமாக உண்மையைத் தெரிந்து கொண்ட இந்திய படை “உனக்கு யார் உண்மையான கணவன் என்பதை நிருபிக்க அவளது சொந்தத் தம்பியுடன் அவளது கணவன் மற்றும் தங்களின் (16 பேர்) முன்பாக உடலுறவு கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டி அசிஙப்படுத்துகிறது.

அவளது 24 நான்கு நாள் குழந்தையினதும் அவளது கணவனதும் தலையில் துப்பாக்கியை வைத்து அந்த கொடூரத்தனத்தை அரங்கேற்ற வைத்த அதைப் பார்த்து இரசிக்கிறது.இறுதியில் அந்தப் பச்சிளம் குழந்தை உட்பட அந்த நால்வரையும் சுட்டு விட்டு செல்கிறது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் அந்தப் பெண் அவளது குழந்தை அவளது தம்பி அனைவரும் கொல்லப்பட அவளது கணவன் உயிர் தப்பி இதற்கான சாட்சியாக இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான்

குழந்தை பெற்று 24 நாட்களே ஆன ஒரு பெண்ணை அவளது தம்பியைக் கொண்டே பலர் முன்னிலையில் வல்லுறவுகொள்ள வைத்து ரசித்த கொடூரத்தை பிரித்தானிய காலணி இராணுவம் இந்திய சுந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் செய்ததாக வரலாறே இல்லை?

பிரித்தானிய காலணி அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி மேற்கொண்ட உண்ணா நோன்புப் போராட்டங்களைப் பற்றி பெருமை பேசும் காங்கிரசார் அதை வழியை பின் பற்றி உண்ணா நோன்பிருந்த தியாகி திலீபனுக்கும் அன்னை புபதிக்கு என்ன செய்தார்கள்?

காங்கிரஸ் காரர்களால் கொடுமையான பிரித்தானிய அரசு என்று வர்ணிக்கப்படும் அந்த அரசு மகாத்தா காந்தியை சாக விடவில்லையே. திலீபனையும் அன்னை புபதியையும் சாகவிடாமல் தடுத்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு உண்ணா நோன்பு அகிம்சை பற்றி பேசுவதற்கு தகுதி இருந்திருக்கும்.

இன்றைக்கு தமிழகத்தில் வீச்சருவாள் வெட்டுக்கம்பு அடிதடி கலாச்சார அரசில் நடத்தும் காங்கிரசார் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வாச்சவமால்களை விடும் காங்கிரசார் தங்களது ஆட்சிக்காலத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு தயாரா?

ஆல்லது இந்திய மட்டத்திலேயாவது நேர்மையான நீதியாளர்களைக் கொண்டு நீதியான ஒரு விசாரணையை நடத்த தயாரா?

இதைச் செய்வதற்கு நீங்கள் தயாராக இல்லை என்றால் தயவு செய்து தியாகம் விடுதலை அகிம்மை என்பதைப் பற்றி எல்லாம் பேசாதீர்கள்.

இந்திய நலன் என்று செல்லிக் கொண்டு மேற்குலக ஏகாதிப்பத்தியங்களுக்கு அப்பாவி இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை விற்காதீர்கள்

நன்றி தோழர்: சிவா சின்னபொடி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப்படையின் யாழ் வைத்தியசாலைப் படுகொலை பற்றிய பதிவு..!

http://en.wikipedia.org/wiki/Jaffna_hospital_massacre

JH1021_01_46799_435.jpg

முத்தமிழ் வித்தகரே வார்த்தையில் வல்லவரே.... மானமுள்ள ஈழ தமிழர் சாவது/சாகாதது.... பிற்கு இருக்கட்டும்.... மானங்கெட்ட ராணுவத்தின் செயலுக்கு பதில் சொல்லும்..அதற்காக போட்டோ ஆதாரம் எல்லாம் கேட்காதையும்....

நன்றி தோழர்: சிவா சின்னபொடி

நான் கூறிய கருத்துகள் வேறு . நீங்கள் எழுதுவது வேறு . விதண்டாவாதம் பிடித்து கவனத்தை திசை திருப்ப நடந்து முடிந்ததை எல்லாம் நீங்கள் திரும்ப திரும்ப சம்மந்தம் இல்லாமல் கூட்டம் கூடி எழுதுவீர்கள் . மேலும் பலவந்தமாக தன் கருத்துகளை பிறர் மீது திணிக்க முற்படுவீர்கள் . இதையெல்லாம் கண்டு பயந்து ஓட நான் ஒன்றும் வேடதாரி இல்லை . நடந்ததை எனக்கு நினைவு படுத்த தேவையில்லை . இவை எல்லாம் நடக்கவில்லை என நான் கூறுவதும் இல்லை . தேவையின்றி திரும்ப திரும்ப உளற வேண்டாம் . இந்திய படைக்கு நான் வக்காலத்து வாங்கவே இல்லாத போது இவையெல்லாம் எனக்கு காட்ட தேவையில்லாத விடயங்கள் . மீண்டும் இணைக்கிறேன் . நல்ல படியாக மனதை ஒரு நிலை படுத்தி நான் எழுதிய கருத்தை மட்டும் படித்து அதிலுள்ள கருத்துக்களை மட்டும் விமர்சிக்கலாம் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72081

நேரடியாக நான் எழுதிய கருத்துகளை விமர்சிக்க முடியாமல் பதில் கூற முடியாமல் எப்போதோ நடந்ததை மட்டும் மீண்டும் மீண்டும் தோண்டி காட்டி மழுப்பிவிட்டே காலத்தை ஒட்டி எதிர்கால சிந்தனை இல்லாத கூட்டங்களுக்கு பதில் சொல்ல நான் தயார் இல்லை. எனினும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஏனெனில் எனக்கு அந்த பொறுப்பு இருக்கிறது . இவர்கள் எது வேண்டுமானாலும் சொல்வார்களாம் . கேட்கிறவன் கேனையனாட்டம் கேட்டுகிட்டே இருக்கனுமாம். உண்மை அறிய முற்பட்டால் இன விரோதியாம் / துரோகியாம் . நீங்கள் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் சாமி போட நான் முட்டாளும் இல்லை . அனைத்தையும் ஒரே அடியாக மறுக்க நான் அதிமேதாவியும் இல்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் கூறிய கருத்துகள் வேறு . நீங்கள் எழுதுவது வேறு . விதண்டாவாதம் பிடித்து கவனத்தை திசை திருப்ப நடந்து முடிந்ததை எல்லாம் நீங்கள் திரும்ப திரும்ப சம்மந்தம் இல்லாமல் கூட்டம் கூடி எழுதுவீர்கள் . மேலும் பலவந்தமாக தன் கருத்துகளை பிறர் மீது திணிக்க முற்படுவீர்கள் . இதையெல்லாம் கண்டு பயந்து ஓட நான் ஒன்றும் வேடதாரி இல்லை . நடந்ததை எனக்கு நினைவு படுத்த தேவையில்லை . இவை எல்லாம் நடக்கவில்லை என நான் கூறுவதும் இல்லை . தேவையின்றி திரும்ப திரும்ப உளற வேண்டாம் . இந்திய படைக்கு நான் வக்காலத்து வாங்கவே இல்லாத போது இவையெல்லாம் எனக்கு காட்ட தேவையில்லாத விடயங்கள் . மீண்டும் இணைக்கிறேன் . நல்ல படியாக மனதை ஒரு நிலை படுத்தி நான் எழுதிய கருத்தை மட்டும் படித்து அதிலுள்ள கருத்துக்களை மட்டும் விமர்சிக்கலாம் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72081

நேரடியாக நான் எழுதிய கருத்துகளை விமர்சிக்க முடியாமல் பதில் கூற முடியாமல் எப்போதோ நடந்ததை மட்டும் மீண்டும் மீண்டும் தோண்டி காட்டி மழுப்பிவிட்டே காலத்தை ஒட்டி எதிர்கால சிந்தனை இல்லாத கூட்டங்களுக்கு பதில் சொல்ல நான் தயார் இல்லை. எனினும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஏனெனில் எனக்கு அந்த பொறுப்பு இருக்கிறது . இவர்கள் எது வேண்டுமானாலும் சொல்வார்களாம் . கேட்கிறவன் கேனையனாட்டம் கேட்டுகிட்டே இருக்கனுமாம். உண்மை அறிய முற்பட்டால் இன விரோதியாம் / துரோகியாம் . நீங்கள் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் சாமி போட நான் முட்டாளும் இல்லை . அனைத்தையும் ஒரே அடியாக மறுக்க நான் அதிமேதாவியும் இல்லை .

* வடமாரடாட்சிக் கோட்டம் உடுப்பிட்டி என்ற இடத்தில் கலைவிழி என்ற பெண் குழந்தை பெற்று 24 நாட்களே ஆன நிலையில் வீட்டில் இருக்க அவளைப் கணவன் முன்னே அவளின் தம்பியை விட்டே வல்லுறவு செய்து உலகில் எந்த அமைதி படையாலும் செய்யமுடியாத மிகச்சிறப்பான அமைதி நடவடிக்கையாகும்.

----------------------------------------------------------------------

உலகில் எந்த மனிதனும் தன் அக்காவை _____ முடியாது . அதுவும் அவள் கணவன் முன்னே . துப்பாக்கி முனையில் . ஈனத்தனமாக யோசிக்காதே . அப்படி ஒரு நிலை வரும்போது ஈழ தமிழன் செத்து போயி இருப்பான் . என்னை விட உன்னை விட ஈழ தமிழன் மானத்தில் உயர்ந்தவன் . உயிருக்கு பயந்து உன் சாக்கடை கற்பனை போல செய்து இருக்க மாட்டான் . தேவையின்றி உமது கட்டுரை மெருகூட்ட ஈழ மக்கள் குணாதிசயங்களை பற்றி தவறாக எழுதாதே . ஈழ மக்கள் தோற்றால் கூட அவர்கள் கொள்கைகளில் உறுதி கொண்டவர்கள் .

அப்ப இத நீங்க எழுதலையா???

* வடமாரடாட்சிக் கோட்டம் உடுப்பிட்டி என்ற இடத்தில் கலைவிழி என்ற பெண் குழந்தை பெற்று 24 நாட்களே ஆன நிலையில் வீட்டில் இருக்க அவளைப் கணவன் முன்னே அவளின் தம்பியை விட்டே வல்லுறவு செய்து உலகில் எந்த அமைதி படையாலும் செய்யமுடியாத மிகச்சிறப்பான அமைதி நடவடிக்கையாகும்.

----------------------------------------------------------------------

அப்ப இத நீங்க எழுதலையா???

விதண்டாவாதம் வேண்டாம் .

நான் எழுதிய கருத்தின் திசை திருப்ப நீர் எழுதியதற்கு தான் பதில் எழுதியுள்ளேன் .

இவ்விடயம் துளியும் தேவையின்றி முதலில் நுழைத்தது நீரே தவிர நானல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஆக்கபூர்வமான வழி என ....உம்மை போல எனக்கு இந்தியத்திற்காக் கூவ முடியாது தோழரே.....

http://www.youtube.com/watch?v=QD8LkTA-hvc

000202ED.gif

நான் முதலில் தமிழன்... பிறகும் தமிழன் தான்....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

உம்மை போல எனக்கு இந்தியத்திற்காக் கூவ முடியாது தோழரே.....

நான் முதலில் தமிழன்... பிறகும் தமிழன் தான்....

உம்மை கூவ சொல்ல வில்லை . கூவி புகழ் பாட வேண்டிய தேவை இந்தியாவிற்கு இல்லவே இல்லை . ஏனெனில் பல இன மக்கள் , பன்மொழிகள் , பல முரண்பாடுகளையும் கடந்து ஒற்றுமை என்றால் என்ன என்பதை உலகிற்கு பறை சாற்றும் ஒரே உதாரணம் .

நானும் தமிழன் தான் . இந்தியா எனும் மிகச்சிறந்த நாட்டில் வாழும் மிகச்சிறந்த இனங்களில் ஒன்றான தமிழினத்தின் தமிழன் நான் . நான் மீண்டும் பிறக்க ஆசைபடுவது இந்தியாவில் அதுவும் தமிழனாக மட்டுமே .

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட நிலமை இப்படி ஒரு பட்டிமன்ற பொருளாகிப்போச்சு.எல்லாம் காலம்தான்.நன்பர்களே உங்களைச்சொல்லி குற்றம் இல்லை.எங்கடை இனத்தில பிறந்த துரோகிகளும் சுயநலவாதிகளுமே காரனம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட நிலமை இப்படி ஒரு பட்டிமன்ற பொருளாகிப்போச்சு.எல்லாம் காலம்தான்.நன்பர்களே உங்களைச்சொல்லி குற்றம் இல்லை.எங்கடை இனத்தில பிறந்த துரோகிகளும் சுயநலவாதிகளுமே காரனம். :D

ஆப்ப நாங்கள் உங்க தமிழினம் கிடையாதா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உம்மை கூவ சொல்ல வில்லை . கூவி புகழ் பாட வேண்டிய தேவை இந்தியாவிற்கு இல்லவே இல்லை . ஏனெனில் பல இன மக்கள் , பன்மொழிகள் , பல முரண்பாடுகளையும் கடந்து ஒற்றுமை என்றால் என்ன என்பதை உலகிற்கு பறை சாற்றும் ஒரே உதாரணம் .

நானும் தமிழன் தான் . இந்தியா எனும் மிகச்சிறந்த நாட்டில் வாழும் மிகச்சிறந்த இனங்களில் ஒன்றான தமிழினத்தின் தமிழன் நான் . நான் மீண்டும் பிறக்க ஆசைபடுவது இந்தியாவில் அதுவும் தமிழனாக மட்டுமே .

அய்யா மாநிலங்கு இடையே ஆன தண்ணீர் பிரச்சனையை கூட சரி கட்ட முடியவில்லை? அப்புறம் எங்கிருந்து வந்தது வேற்றுமையில் ஒற்றுமை??

நீங்கள் ஆசைப்பட்டது தமிழகத்தில் தமிழனாக பிறக்க வேண்டும் என்று, அதுவே எங்கள் ஆசை தனி தமிழ் தேசத்தில் பிறக்க வேண்டும் என்பது, இதில் என்ன தப்பு????

கொஞ்சம் உயர்வாக சிந்தியுங்கள் அன்பரே .

தமிழ், தமிழினம், தமிழ் பண்பாடு, தமிழ் கலாசாரம், திராவிடம், திராவிடர், திராவிட பண்பாடு, திராவிட கலாசாரம், இந்தியம், இந்தியர், இந்திய பண்பாடு, இந்திய கலாச்சாரம் இவையாவுமே ஒன்டில்லையேல் மற்றொன்று இல்லை , ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது, இதை பிரிப்பதென்பது முடியாத காரியம் .

அரை வேக்காடுகளுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று . அது என்ன வென்றால் இந்திய நிலப்பரப்பு மொத்தமும் திராவிடனுக்கு சொந்தமானது . ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழனுடையது . இதுவும் வரலாறே . இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டை பிரிப்பது என்பது கேலித்தனம் . எனது நாடு ( தமிழர் நாடு ) என்பது இமயம் குமரி வரை . இதில் தமிழனை / திராவிடனை / அனுசரித்து இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம் . முடியாதவர்கள் தனியாக பிரிந்து ஓடலாம் . என் நாட்டை விட்டு நான் ஏன் பிரிய வேண்டும் ??? இந்தியாவே தமிழனுடையது தானடா டுபுக்குகளா . இந்த நிலைமை இப்போது இல்லை என வாதிடுபவர்கள் அந்த நிலைமைக்காக உழைக்கலாம் . படித்து, உழைத்து, கஷ்டப்பட்டு, கொஞ்சம் அரசியல் சித்து விளையாட்டெல்லாம் மலையாளி சிலர் போல ஆடி, எவனை எல்லாம் வஞ்ச புகழ்ச்சி செய்து ஒழிக்க முடியுமோ அனைவரையும் ஒழித்து தமிழன் வைத்தது தான் சட்டம் எனும் நிலைக்கு இந்தியாவை கொண்டு வாருங்கள் . பின் சிங்களனாவது வேறு எந்த xxராலையும் தமிழனை ஒன்றும் புடுங்க முடியாது . உண்மையில் இனப்பற்று இருக்கும் தமிழன் செய்ய வேண்டியது இது தானே தவிர மேடை போட்டு காதை செவிடாக்குவது இல்லை

அது புழுகள் இல்லை... யாழ்ப்பாணத்தில் பிரம்படிவீதியில் நடந்த உண்மைச்சம்பவம்.... யாராலும் தாக்கியழிக்க முடியாது எண்று இறுமாப்பு கொண்ட T-72 வகை இந்திய தாங்கியை சோதியா அக்கா தலைமையிலான பெண் போராளிகள் தாக்கி அழித்த கோபத்தில் இந்திய இராணுவம் செய்த கொடூரம் அது...

ஆமாம். இதில் எனது நண்பன் ஒருவனையும் இழந்தோம். மனித இனம் நினைத்தும் பார்க்க முடியாத கேவலங்கள் எல்லாம் அரங்கேறின.

ஆமாம். இதில் எனது நண்பன் ஒருவனையும் இழந்தோம். மனித இனம் நினைத்தும் பார்க்க முடியாத கேவலங்கள் எல்லாம் அரங்கேறின.

எம் உறவுகளில் மாம்பழம் அக்கா என்று ஒருவர் இருந்தா, அவவும் அவவின் மகனும் செரியான உயரம். இருவரும் ஆறு அடிக்கும் மேல் இருப்பினம். மிகவும் கடின உழைப்பாளிகள்..மாம்பழம் அக்காண்ட முகத்தில் எப்பவுமே ஒரு மந்தகாசச் சிரிப்பு இருக்கும். கடும் சோகத்துடன் இருக்கும் ஒருவர் மாம்பழம் அக்காவின் முகத்தை பார்த்தால் போதும், அவர்களின் மனசு லேசாகிவிடும்.

அவவும் அவவின் மகனும் இதே பிரம்படி வீதி சம்பவத்தில் நிலத்தோட நிலமாய் அரைக்கப்பட்டு வெறும் சதைக் குவியலாக போனார்கள்.

அமைதிப்படை விவகாரத்தில் நான் எழுதிய பல கருத்துகள் ஏன் அனைத்து கருத்துகளையுமே எனது மிக நெருங்கிய நண்பர்கள் ( அவர்களுக்கு நான் இந்த பெயரில் எழுதுவது தெரியும் ) என்னை அழைத்து கடிந்து கொண்டனர் . மேலும் என் குணாதிசயங்களை தெரிந்த பால்ய பருவ நண்பர்கள். அவர்கள் உறுப்பினராக உள்ள கட்சிகளின் ( புரட்சி பாரதம் / தமிழர் தேசிய இயக்கம் / கம்யூனிஸ்ட் ) கொள்கைகள் எனது கொள்கைகள் பல முரண்பாடுகள் இருந்தாலும் நான் அவர்களை பல முறை கேலி செய்த போதும் புன்னகையோடு என் கருத்துகளை செவிமடுக்கும் பக்குவம் நிறைந்த என் மீது அன்பு கொண்ட நண்பர்கள். ஆதலால் அவர்கள் சொல்லை தட்டாமல் இருக்க முடியவில்லை . பல வேறுபாடுகள் எங்களுக்குள் இருந்தாலும் இன்றும் நாங்கள் நண்பர்களே . இந்திய பற்று உந்துதலில் நான் எழுதிய மேலும் நான் எழுதிய பல கருத்துகள் மிக முக்கியமாக அமைதிப்படை குறித்த கருத்துகளில் அவர்கள் முன் வைத்த வாதங்கள் நான் எதோ தவறாக எழுதி அவர்களின் மனதை புண்படுத்தியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அவர்கள் முன் வைத்த மிக முக்கியமான வாதங்கள் கீழே

1. சம்பவங்கள் நடந்தது வேறு மண்ணில் . உனது கொள்கை படி ஈழமும் வேறு மண்தானே . அமைதிப்படை விவகாரங்கள் நடந்தபோது சில விஷயங்கள் அந்த மண்ணை சார்ந்தவர்களே நடந்தது என சொல்லும் போது அந்த மண்ணில் வாழாத, அந்த மண்ணிற்கு செல்லாத அந்த மண்ணிற்கு தொடர்பு இல்லாத நீ எப்படி பொய் என்று கூறுகிறாய் ??? தேவையென்றால் எனக்கு தெரியாது என்றோ அல்லது என்னால் நம்ப முடியாது என்றோ ஒதுங்கி கொள்ள உனக்கு உரிமை உண்டே தவிர உனக்கே உருப்படியாக தெரியாத செய்தியை பொய் என்று எப்படி நீ மறுதலிக்கலாம் ???

2. கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து கருவை வெளியே வீசினான் சிங்களவன் என கூறும் போது இல்லை அவன் வயிற்றில் உதைக்க மட்டும் தான் செய்தான் வயிறு தன்னால் கிழிந்தது கருவும் தன்னால் விழுந்தது போல இருக்கிறது உனது கருத்துகள் . சிங்களவனால் கரு கலைந்ததா இல்லையா என்பது தான் இங்கு கருத்தே தவிர உதைத்தானா, கிழித்தானா என்பது நீ சொல்வது போல கவனத்தை திசை திருப்பும் செயலே.

3. இந்திய அமைதிப்படையால் நன்மை விளைந்தது என ஒருவர் கூட கூறவில்லை . அப்படியென்றால் கெட்டது தான் நடந்துள்ளது . எப்படி நடந்துள்ளது என்பது உனக்கு தேவையில்லாத விடயம் என்றால் விட்டு விடு . மெருகூட்டி எழுதப்பட்டது என ஏன் கூறுகிறாய் ??? இதைவிட வெளியில் சொல்ல முடியாத படு மோசமாகவும் நடந்திருக்கலாம் . அதை முடிந்த அளவு குறைத்து நாகரீகமாக கூட எழுதியிருக்கலாம் இல்லையா ??? அது உனக்கு மெருகூட்டலாக தோன்றலாமே???

4. திராவிடர் கழகத்தில் உன் தந்தை கொடிபிடித்து கத்தியதெல்லாம் பொய் என்று கூறுகிறாயா ??? ( எனது தந்தை திராவிடர் கழக பற்றுள்ளவர். அவரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாததால் வீட்டை விட்டே வெளியேறி சொந்த காலில் நிற்பவன் நான் . இப்போது தந்தை இல்லை ) அல்லது உன் தந்தையே புளுகன் என கூறுகிறாயா .

5. இணைய வாயிலாக நான் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக என்னுடன் நட்பாக இருக்கும் பரந்து விரிந்த முன் பின் பார்த்திராத ஈழ / தமிழ் நாட்டு நண்பர்கள் பலரும் ஈமெயில் மூலம் என்னை தொடர்ந்து வருத்தங்கள் ( திட்டினால் கூட கவலை பட மாட்டேன். ஆனால் உன்னிடம் இருந்து இது போன்ற அரைவேக்காடு கருத்துகள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என பலரும் எழுதியுள்ளனர் .)

6. உன் கட்டுரைக்கு நேரடியாக பதில் அளிக்கவும் என கூறியிருக்கும் நீ உனது கட்டுரைக்கு சம்மந்தம் இல்லாத கருத்தை யார் எதற்காக எழுதி இருந்தாலும் ஏன் அதற்கு பதிலும் / விமர்சனமும் அளிக்கிறாய் ???

எது எப்படியோ எனக்கு முழுதும் தெரியாத / என்னால் ஆராய முடியாத ஒரு செய்தியை ( அமைதிப்படை குறித்த செய்திகள் )தேவையின்றி விமர்சித்ததற்கு வருந்துகிறேன் . எனது எழுத்தால் பலர் மனம் புண் பட்டிருக்கலாம் . அவர்களிடம் எந்த வித நீக்கு போக்கு இன்றி தலை தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன்.

எனினும் கூர்ந்து கவனிக்கவும் நான் மன்னிப்பு கேட்பது கீழிருக்கும் ஒரே கருத்துக்காக மட்டுமே .

---------------------

* விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்த அப்பாவி மக்களை கட்டி இழுத்து வந்து தரையில் வரிசையாக படுக்க வைத்து யுத்த டாங்கியை ஏற்றிப்படுகொலை மிக மிக நியாயமானே செயல் பாடே.

இது அப்பட்டமான புழுகல் . இது போன்ற புழுகல் இந்திய ராணுவம் உண்மையில் செய்த தவறுகளை கூட நம்ப முடியாத அளவு இந்த புழுகல் உள்ளது

---------------------

ஒட்டு மொத்த எனது கட்டுரைக்காக நான் மன்னிப்பு கோர வில்லை . மற்றபடி நான் எழுதிய பிற கருத்துகளில் நான் இன்னும் ஆணித்தரமாகவே உள்ளேன். வேறு எதுவும் தப்பு கணக்கு என்னை பற்றி போட வேண்டாம் .

நான் சுருக்கமாக

ஈழத்தை ஆதரிக்கும் இந்திய தேச பற்று மிக்க ஒரு இந்தியன். இந்தியாவை வணங்கும் இனப்பற்று மிக்க ஒரு தமிழன்.

ஈழத்தை ஆதரிப்பவன் இந்தியனாக இருக்க முடியாது என்று சட்டம் ஏதும் நீங்கள் உங்களுக்குள் எழுதி வைத்து கொண்டிருந்தால் உங்கள் சட்டத்தை நான் மதிக்க தயார் இல்லை .

இனப்படுகொலையை வெளி உலகிற்கு சொன்ன என் தேசம், ஈழ விடுதலை போருக்கு வித்திட்ட என தேசம், என்றோ ஒரு நாள் ஈழமும் பெற்று தரும் .

அது வரை காந்தி தேசத்தின் மீது சேறு வாரி இறைக்காமல் காத்து இருப்பேன் .

வாழ்க பாரதம் !! வளர்க தமிழினம் !! பிறக்கட்டும் தமிழீழம் !!!

ஆரம்பத்தில் இந்திய படைகள் வந்த போது ஈழத்தின் சில பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மட்றாஸ் ரெஜிமண்ட் போர் தொடங்கி சில வாரங்களிலேயே நீக்கப்பட்டு மராத்தி ரெஜிமன்றும், பஞ்சாப் ரெஜிமன்றும் இறக்கப்பட்டனர்... உண்மையில் தமிழர்களை கொண்ட படையணியை இந்திய அரசு ஏன் ஈழத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை எண்ற கேள்வி, நீங்களே நிலைமையை புரிந்து கொள்ள உதவும் தமிழ் பைத்தியம்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.