Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Prabhakaran has betrayed the Tamil population: Anita Pratap

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:( பிரபாகரன் தப்பமுடியாத சூழ்நிலைக்குள் தன்னைத்தானே ஆட்படுத்திக்கொண்டார் என்றும், இறுதியில் எந்த இனத்துடன் தமிழர்கள் கடந்த அரை நூற்றாண்டு காலமாகப் போராடி வந்தனரோ அந்த இனத்தின் தீவிரவாதத் தலைவரான மகிந்தவைன் தயவிலேயே தமிழர்கள் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலமையையும் பிரபாகரன் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். ஏகபிரதிநிதிகள் என்கிற கோட்பாட்டுடன் இருந்து வந்த புலிகளின் தலமை அழிக்கப்பட்ட பின்னர் இன்று தமிழர்கள் அநாதைகளாகத் தவிக்க விடப்பட்டுள்ளனர் என்பதையும் கூறியிருக்கிறார்.

2007 மற்றும் 2008 இன் ஆரம்பப் பகுதியில் புலிகளியக்கம் ஒரு சமாதானத் தீர்வுக்கு முன்வருவதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என்று தாங்கள் எதிர்பார்த்ததாகவும் ஆனால் இறுதிவரை பிரபாகரன் பிடிவாதமாக இருந்த படியினால் மீளமுடியாப் பொறிக்குள் அவர்கள் தள்ளப்பட்டனர் என்றும் கூறியிருக்கிறார்.

பிரபாகரனின் சுய சரிதையை வாழ்க்கை நூலாக எழுதுவதற்கு தான் திட்டமிட்டிருந்ததையும் ஆனால் இன்று பிரபாகரனும் அவரின் நெருங்கிய சகாக்களும் இறந்து போனபடியினால் தனது திட்டத்தை முழுமையாகக் கைவிட்டு விட்டதாகவும் கூறுகிறார்.

தமிழரின் நியாயமான கோரிக்கைகள் அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும்வரையிலும் ஆயுதப் போராட்டத்திற்கான அல்லது இன்னொரு கிளர்சிக்கான தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சேகுவேராவுக்குப் பின்னர் உலகிலின் சிறந்த கெரில்லாத் தலைவர் பிரபாகரந்தான் என்றும் கூறியிருக்கிறார்.

....ஏதாவது சமாதானத்துக்கான தீர்வொன்றுக்குச் சென்றிருந்தால் இன்று மக்களையும், போராளிகளையும், தமைத்துவத்தையும் காப்பற்றியிருக்கலாம் என்று சாரம்படச் சொல்லியிருக்கிறார். ஒருவகையில் அது சரியாகத்தான் இருக்கிரது. என்ன செய்வோம், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ண முடியுமா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலருக்கும் மணி கட்டின மாடுகள் சொல்லும்போது அது இசையாகவும், மற்றவார்கள் சொல்லும்போது அது இரைச்சலாகவும் இருக்கிறது. எனக்கு ஞாபகம் இருக்கிறது, பிரபாகரன் இறந்தது என்று KP அறிவித்த நாள், கனடாவில், CMR இல் ஒலி பரப்பியவர்கள். துக்கம், அந்தநேரத்தில், இந்தளவிற்கு KP கள்ளன், துரோகி என்று பிரிந்து பேசாதபடியால் பலரும் - ஆகக்குறைந்தது எனக்கு தெரிந்த கூட்டங்கள் நம்பின காலம், அந்த நேரத்தில், ஒரு பிள்ளை/ கேர்ள் உடன் கதைத்தபோது சொன்னா " நான் நம்பமாட்டன், அப்படி பிரபாகரன் இறந்திருந்தாலும், தனக்கு பிறகு யார் என்பதையெல்லாம் செய்து போட்டுத்தான் போயிருப்பார்" என..ஏனோ நான் ஒன்றும் சொல்லவில்லை..இன்றுள்ள நிலைமைகளை பார்கையில், பிரபாகரன் ஒரு தோற்றுப்போன தலைவன் என்பதை முழு உலகமும் ஏறுக்கொள்ள வேண்டும் என்பதர்க்க நாம் எல்லோரும் செயல் படுவதுதான் வேதனையளிகிறது.

சுகன் இணைத்திருந்த ? நாடுகடந்த அரசின் "யனநாயக" அணிக்கான விரிகள் சலப்பொருந்தமானது...என்ன அதையும் குழுவாக பிரிந்து பரிசகிக்க கூட்டமாய் உள்ளோம்...

இன்று ஒரு சிங்கள நேவி என்கினியர்ஐ சந்தித்தேன், எதோ ஒருவித உணர்வு, கேட்ட தோன்றியது, "என்னவென்று உன்னை இந்த நாடுகளுக்கு அனுமதித்தார்கள் என்று"...அவன் என்ன நினைத்தானோ தெரியாது..."நீ இப்பவும் கோட்டு சேட்டு போட்டுகொண்ட்டோ இருக்கிறாய் என" ....

நேரம் கிடைத்தால் மீள வருவேன்...

Edited by Volcano

அனிதாப் பிரதாப் தன்னிடம் வட இந்திய பயங்கரவாதிகளின் வாடை ஒட்டியுள்ளதை உளறியுள்ளார்.

காலம் பதில் சொல்லும்!!!

தமிழன் அழிந்ததே உந்த ஏகப்பிரநிதித்துவம் என்ற ஒன்றால்தான்.இன்று கூட்டமைப்பும் இதே பாணியில் பழைய தமிழரசாக வர முயற்சிப்பதும் இதற்காகத்தான்.

தன்னைதவிர மற்றவன் எவனையும் நம்பாத இனம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் அழிந்ததே உந்த ஏகப்பிரநிதித்துவம் என்ற ஒன்றால்தான்.இன்று கூட்டமைப்பும் இதே பாணியில் பழைய தமிழரசாக வர முயற்சிப்பதும் இதற்காகத்தான். தன்னைதவிர மற்றவன் எவனையும் நம்பாத இனம்.

அர்ஜூன், உங்கள் பதிவுகளை பார்க்கும்போது சங்கப் புலவர் நக்கீரன் ஞாபகம் தான் வருகிறது.. போகட்டும்..

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பதிவில் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பு, ஈழத்தமிழர்களுக்கு காத்திரமான அரசியற் செயற்திட்டம் தீட்டி தயாராக வைத்துள்ளதாக் கூறினீர்களே.. வீணாக சென்ற காலத்தை பேசுவதை தவிர்த்து அதன் மாதிரி வடிவத்தை நீங்கள் சிறிது இங்கே கோடிட்டு காட்டலாமே..! இவர்களாவது உங்களை புரிந்து கொள்ள்கிறார்களா என பார்க்கலாமே?

தமிழ்நாட்டு தமிழன், உனக்கேன் இந்த வம்பு? என உங்களுக்கு தோன்றினால் அதையும் சொல்லிவிடுங்கள்... :lol::D

9/11 க்கு பிறகு பல "பயங்கரவாத நிபுணர்கள்" காளான்கள் போன்று முளைத்தனர். எமக்கு பரிச்சயமானவர் ரோகன் குணவர்த்தன. அல்கைடாவை பற்றி முதலில் புத்தகங்கள் எழுதினார். உலக தொலைக்காட்சிகளில் தோன்றினார். இலட்சக்கணக்கில் பணம் பெற்றார். பின்னர் தமிழனத்தை அழிக்க முன்னின்றார், நிற்கிறார்.

தமிழர்கள் வாழும் நாடுகள் எல்லாம் இவ்வாறான ஆசாமிகள் தோன்றினர். கனடாவில் ஸ்ரூவாத் பெல் (Stewart Bell) என்ற ஊடகவியலாளர் பெரும்பங்கு ஆற்றினார். இவரும் புத்தகங்கள் எழுதினார். தமிழர் விடிவுக்கு எதிராக இரவு பகலாக செயல்பட்டார். சிங்கள இராணுவத்துடன், அரசுடன் தொடர்புகளை வைத்திருந்தார். பலாலிக்கு சென்று வந்திருந்தார். முள்ளிவாய்க்கால் அவல நேரம் கூட அங்கு சென்று வந்திருந்தார்.

அனிதா பிரதாப் கூட ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் "பயங்கரவாதம்" பற்றி புத்தகம் எழுதுவதில் தான் கண்ணாக உள்ளார். மாறாக மக்கள் அவலத்தையோ தமிழரின் நீதியான துயரத்தை உலகிற்கு சொல்வதையோ முக்கிய எண்ணக்கருத்தாக கொள்ளவில்லை.

  • தொடங்கியவர்

அர்ஜூன், உங்கள் பதிவுகளை பார்க்கும்போது சங்கப் புலவர் நக்கீரன் ஞாபகம் தான் வருகிறது.. போகட்டும்..

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பதிவில் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பு, ஈழத்தமிழர்களுக்கு காத்திரமான அரசியற் செயற்திட்டம் தீட்டி தயாராக வைத்துள்ளதாக் கூறினீர்களே.. வீணாக சென்ற காலத்தை பேசுவதை தவிர்த்து அதன் மாதிரி வடிவத்தை நீங்கள் சிறிது இங்கே கோடிட்டு காட்டலாமே..! இவர்களாவது உங்களை புரிந்து கொள்ள்கிறார்களா என பார்க்கலாமே?

தமிழ்நாட்டு தமிழன், உனக்கேன் இந்த வம்பு? என உங்களுக்கு தோன்றினால் அதையும் சொல்லிவிடுங்கள்... :lol::D

:lol: :lol: :lol:

cow-scratching-head-2.jpg:lol::lol::lol:

தமிழன் அழிந்ததே உந்த ஏகப்பிரநிதித்துவம் என்ற ஒன்றால்தான்.இன்று கூட்டமைப்பும் இதே பாணியில் பழைய தமிழரசாக வர முயற்சிப்பதும் இதற்காகத்தான்.

தன்னைதவிர மற்றவன் எவனையும் நம்பாத இனம்.

ஏன் ஏக பிரதிநிதித்துவம் எண்ட சொல் வர வேண்டிய தேவை வந்தது எண்டதை ஒருக்கா சொல்லுங்கோவன் ....??

பிரபாகரன் கஸ்ரப்பட்டு கட்டுப்பாட்டுக்கை நிலங்களை கொண்டு வருவார், போரளிகளை குடுத்து பாதுக்காப்பார்... நீங்கள் அங்கை நிண்டு அரசியல் செய்ய வேணும் எண்டு எதிர்ப்பார்த்தீர்களோ....??

பிரபாகரனின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை தவிர வெளியிலை உங்களாலை என்ன அண்ணை செய்ய முடிஞ்சுது....??? ஒண்டு அமெரிக்கனுக்கு வளைஞ்சியள் பிறகு இந்தியனுக்கு குனிஞ்சு குடுத்தியள், இல்லை சிங்களவனுக்கு தூக்கி குடுத்தியள்..... இப்படி ஒட்டுண்ணியாக வாழ்வதை பிரதிநிதித்துவம் எண்டு சொல்ல முடியுமா.... ???

இதை தாண்டி குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம், எண்டு கன தலைமைகள் புலிகளை தாண்டி இருந்தது உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை....

Edited by தயா

  • தொடங்கியவர்

... எல்லாவற்றுக்கும் அப்பால் பிரபாகரன் எம்மை அனாதைகள் ஆக்கி விட்டு சென்று விட்டார்!

... எல்லாவற்றுக்கும் அப்பால் பிரபாகரன் எம்மை அனாதைகள் ஆக்கி விட்டு சென்று விட்டார்!

பிரபாகரனை மட்டும் போராட விட்டு போட்டு அவர் உங்களுக்கு சுந்தந்திரம் வாங்கி தரவேண்டும் எண்ட மன நிலை தோல்வியை தழுவியது.... அதுதான் உண்மை....

இப்படி மற்றவனிலை தங்கி இருக்கும் குணம் தமிழனுக்கு புதுசு இல்லைதான்.... யாரிலை தங்கி இருந்தாலும் இது ஒட்டுண்ணி குணம் மட்டும் தான்...

இல்லை நான் காசை குடுத்தனான் அப்பரின் கோவணத்தை குடுத்தனான் எண்ட ஒப்பாரிகள் எல்லாம் தமிழனுக்கு புதுசு இல்லை... !

பிரபாகரன் போராடினார் ... அவரை தமிழீழம் பெற்று தரவேணும் எண்டு கேட்டத்துக்கு பதிலாக அவருடன் சேந்து நிண்டு தமிழீழம் கேட்டு இருக்க வேண்டும்.. அதை விட்டு போட்டு பிரபாகரன் போராடினார் நாங்கள் விடுப்பு பாத்தம் எண்டு கொண்டு...

பிரபாகரன் வளியை மட்டும் தான் போட்டு தருவார் உங்கட சுத்ந்திரத்தை நீங்கள் தான் பெற்றுக்கொள்ள வேணும்... மற்றவன் உங்களுக்கு தாறதுக்கு பெயர் சுத்ந்திரம் இல்லை...

Edited by தயா

  • தொடங்கியவர்

....ஏதாவது சமாதானத்துக்கான தீர்வொன்றுக்குச் சென்றிருந்தால் இன்று மக்களையும், போராளிகளையும், தமைத்துவத்தையும் காப்பற்றியிருக்கலாம் என்று சாரம்படச் சொல்லியிருக்கிறார். ஒருவகையில் அது சரியாகத்தான் இருக்கிரது. என்ன செய்வோம், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ண முடியுமா??

... எல்லாவற்றுக்கும் அப்பால் பிரபாகரன் எம்மை அனாதைகள் ஆக்கி விட்டு சென்று விட்டார்!

பிரபாகரன் அனாதைகளாக்கி விட்டு செல்லவில்லை.

2009 மே 19 இன் பின்பு, புறப்பட்ட புதிய தலைமைதான்.

நீங்கள், உங்களை அனாதை என்று உணரும் நிலையை ஏற்படுத்தியவர்கள்.

நான், நாம் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம் என உணரவில்லை.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

:( ஏதாவது நாடகமாடியாவது கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்களையும், ஆயிரக்கனக்கான போராளிகளையும், தலமைத்துவத்தையும் காப்பாற்றியிருக்கலாம் என்றால் நிச்சாயம் அதைச் செய்திருக்கலாம். ஒட்டுமொத்த தற்கொலைக்கும், ஒட்டுமொத்த சரணாகதிக்கும் எமதினம் ஆட்பட்டதைக் காட்டிலும் ஏதாவது ஒரு பொய்த்தீர்விற்காவது உடன்பட்டு எமது மக்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. ஒரு இனத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் ஒரே நாளில் கவு கொடுத்துவிட்டு இங்கு வந்து நியாயம் பேசுவதில் எந்தப்பயனுமில்லை.

சில இடங்களில் மக்களின் நண்மைக்காக, அவர்களின் இருப்பிற்காக சுய கவுரவங்களையும், பிடிவாதங்களையும் விட்டுக்கொடுப்பது நல்லதென்றால் அதைச் செய்ய வேண்டும்.

வெளிப்படையாகவே பேசுவோமே, இங்கு எத்தனை பேர் மக்களையும் போராளிகளையும், தலமையையும் காப்பாற்றும் தீர்வொன்று வந்திருந்தால் ஆதவளித்திருப்பீர்கள்?? ஆயிரக்கணக்கில் போராளிகளையும் லட்சக்கணக்கில் மக்களையும் சிங்களத்திடன் தாரை வார்ப்பதை விடவும், தீர்வொன்றுக்கு உடன்பட்டு காப்பாற்றியிருக்கலாம் என்றால் நிச்சயம் செய்திருக்கலாம் அல்லவா?? சிங்களம் செய்ததுபோல நாமும் பேச்சுவார்த்தை நாடகத்தை தொடர்ந்தும் நடித்திருக்கலாம் அல்லவா?? நாமே முறித்துக்கொண்டதால் என்ன நண்மை ஏற்பட்டு விட்டது?? இன்று அந்த மக்களும், போராளிகளும் எமது தலமையும் காப்பற்றப்பட்டிருக்கலாம் அல்லவா??

சிலவேளை சிந்திக்கும்போது வேதனையும் வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. என்ன செய்வோம், எல்லாமே நாம் நினைத்ததற்கு மாறாக நடந்து முடிந்துவிட்டன. சரி, பரவாயில்லை, இனி நடப்பதையாவது சரியாகச் எய்வோமென்றால், அதற்குள்ளும் எமக்குப் போட்டிகள், கவுரவப் போராட்டங்கள்.

மீள முடியாத அளவிற்கு எல்லாமே நடந்து முடிந்து விட்டது.

அழிவு நான் எதிர் பார்த்தவிடயம். பின்னர் நல்ல முடிவு அமையுமென எதிர்பார்த்தேன்!

ஆனால் இவ்வளவு பேரழிவு வருமென நான் எதிர்பார்க்கவேயில்லை. :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தலைவர் பிரபாகரன் இருக்கும் வரை வலிய இனமாகவே தங்களைக் கருதியிருந்தனர். அவர் இல்லாத காலத்தில் எல்லாவற்றையும் இழந்து வெறும் தூசின் நிலைக்கு வந்துள்ளோம். உதாரணத்திற்கு முன்னாள் பெண்புலிகள் சிலர் அவர்களது குடும்பத்தாலேயே ஒதுக்கப்பட்டு, போக்கிடம் இல்லாத நிலையில் இராணுவ முகாமில் தஞ்சம் கோரிய செய்தியும் வந்திருந்தது. இப்படியான ஒரு நிலையை உருவாகுவதைத் தடுக்கவாவது "கவரிமான்" மாதிரி இருக்காமல் இருந்திருக்கலாம்.

இன்று நாம் ஒரு பின்தங்கிய நிலையில் உள்ளோம். ஆனால் நாம் நம்பிக்கையை இழக்கவில்லை. காலங்கள் மாறிய வண்ணம் உள்ளது.

சிங்களம் கூட ஒரு பலமான நிலையில் இல்லை. பல சவால்களுக்குள் உள்ளார்கள்.

தொடர்ந்து விடுதலை வரும்வரை போராடுவோம், வெல்வோம்.

  • தொடங்கியவர்

:( ஏதாவது நாடகமாடியாவது கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்களையும், ஆயிரக்கனக்கான போராளிகளையும், தலமைத்துவத்தையும் காப்பாற்றியிருக்கலாம் என்றால் நிச்சாயம் அதைச் செய்திருக்கலாம். ஒட்டுமொத்த தற்கொலைக்கும், ஒட்டுமொத்த சரணாகதிக்கும் எமதினம் ஆட்பட்டதைக் காட்டிலும் ஏதாவது ஒரு பொய்த்தீர்விற்காவது உடன்பட்டு எமது மக்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. ஒரு இனத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் ஒரே நாளில் கவு கொடுத்துவிட்டு இங்கு வந்து நியாயம் பேசுவதில் எந்தப்பயனுமில்லை.

சில இடங்களில் மக்களின் நண்மைக்காக, அவர்களின் இருப்பிற்காக சுய கவுரவங்களையும், பிடிவாதங்களையும் விட்டுக்கொடுப்பது நல்லதென்றால் அதைச் செய்ய வேண்டும்.

வெளிப்படையாகவே பேசுவோமே, இங்கு எத்தனை பேர் மக்களையும் போராளிகளையும், தலமையையும் காப்பாற்றும் தீர்வொன்று வந்திருந்தால் ஆதவளித்திருப்பீர்கள்?? ஆயிரக்கணக்கில் போராளிகளையும் லட்சக்கணக்கில் மக்களையும் சிங்களத்திடன் தாரை வார்ப்பதை விடவும், தீர்வொன்றுக்கு உடன்பட்டு காப்பாற்றியிருக்கலாம் என்றால் நிச்சயம் செய்திருக்கலாம் அல்லவா?? சிங்களம் செய்ததுபோல நாமும் பேச்சுவார்த்தை நாடகத்தை தொடர்ந்தும் நடித்திருக்கலாம் அல்லவா?? நாமே முறித்துக்கொண்டதால் என்ன நண்மை ஏற்பட்டு விட்டது?? இன்று அந்த மக்களும், போராளிகளும் எமது தலமையும் காப்பற்றப்பட்டிருக்கலாம் அல்லவா??

சிலவேளை சிந்திக்கும்போது வேதனையும் வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. என்ன செய்வோம், எல்லாமே நாம் நினைத்ததற்கு மாறாக நடந்து முடிந்துவிட்டன. சரி, பரவாயில்லை, இனி நடப்பதையாவது சரியாகச் எய்வோமென்றால், அதற்குள்ளும் எமக்குப் போட்டிகள், கவுரவப் போராட்டங்கள்.

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் பார்க்கலாமா

பிரபாகரனும் எம்மைப்போல் சுழியனாக போரை நடாத்தியிருந்தால்....

நாம் பொறுப்பை உணர்ந்திருப்போமா...?

அவர் தனது கடமையை திறம்பட செய்ததால் நாம் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தோமா....?

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஜனநாக விரோதி ,கொடுங்கோலன்,முறையான அரசியல்வாதி அற்ற விட்டு கொடுக்காத குறுகிய கொள்கைவாதி போல் பல பல குற்றச்சாட்டு எதிர் தரப்பால் வைக்கப்படுகிறது.

இது உண்மையா?

எதோ ஒரு இனத்தில் இருந்த மெய் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டதற்காக அந்த்த இனத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவதை ஒரு பெரிய ஆலமரம் விழுந்ததால் அதன் அதிர்ச்சி எவ்வாறு இருக்கும் என்று தர்க்கிப்பதுதான் ஒரு தலைவரின் செங்கோலாட்சியா ?

ஜனநாஜகத்தின் காப்பாற்றும் ஜனாதிபதி தனக்கெதிராக செயற்படும் பத்திரிகையாளர்களை கொள்வது எந்த முறையில் வரும் ஜனநாயகம் .

அவரை குற்றச்சாட்டும் ஒரு சாரார் புலிகள் இயக்கத்திற்கு பிரபாகரன் அற்ற மாற்று தலைமை ஒன்று உருவாகப்ப்படுமிடத்தில் அவர்களுக்கு நிபந்த்தனை அற்ற ரீதியில் போராடத்திக்கு ஆதரவளிக்கப்படும், என்று மாத்தையாவிற்கு சொல்லப்படதாக கேள்விப்பட்டேன்.

சமாதான தீர்வுக்கு எதிரானவர் இப்போது இல்லை என்கிறார்கள் சமாதான தீர்வு எங்கே ?

தமிழரின் போராட்டம் என்பது பிரபாகரன் தான் அவர் இல்லாவிட்டால் போராட்டம் இல்லை என்பது தான் அவர்கள் கணக்கு, இப்போது பிளேட்டை திருப்பி போடுகிறார்கள்.

குற்றம் சாட்டும் குற்றவாளிகளின் குற்றங்கள் பல பல ,

பெரிய aala மரத்தின் வேர்களை மெல்லிய நீரோடை கரைத்து விழ்த்தி விடும்

"சமாதான தீர்வுக்கு எதிரானவர் இப்போது இல்லை என்கிறார்கள் சமாதான தீர்வு எங்கே ?"

நியாயமான கேள்வி.

எம்மில் சிலர் "புலிகள் அழிந்தால்" தீர்வு வரும் என சொன்னார்கள், "புலிகளின் அழிவு" என்பது "தமிழரின் அழிவு" என்பதை வெளிப்படையாக மறுத்தார்கள்.

முன்பு மனித உரிமை மீறல்கள், பயங்கரவாதங்கள் என குரல் கொடுத்தவர்கள் இப்பொழுதும் உள்ள ஆயுத குழுக்களின், அரச பயங்கரவாதத்தின் அநியாயங்களை காண்பதில்லை. ஆனால், இன்று அவர்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய நிலையில். அடுத்த எச்சில் துண்டை தேடி நகர்ந்துவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.