Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்17Points33600Posts -
உடையார்
கருத்துக்கள உறவுகள்12Points23926Posts -
மல்லிகை வாசம்
கருத்துக்கள பார்வையாளர்கள்10Points1662Posts -
ஜெகதா துரை
கருத்துக்கள பார்வையாளர்கள்10Points802Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/22/21 in all areas
-
சுதந்திரம் எம் சுவாசம்.
8 pointsசுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா ஓ ....வீரனே ...... திறந்திருக்கும் உன் விழிகளில் இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி விழுந்து கிடக்கும் உன் உடல்கூட முட்களையும், கற்களையும் ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.........!8 points
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
4 points4 points
- இரசித்த.... புகைப்படங்கள்.
4 points4 points- மாஸ்க் எடுத்தாச்சே
3 pointsநீண்ட நாட்களின் பின்பு முருகனிட்ட விசிட் பண்ணினேன்.கொரானாவை சாட்டாக வைத்து அவரிட்ட போகாமால் காலம் கடத்திக்கொண்டுவந்தேன்.மனைவி முருகன் கோவிலுக்கு போக கேட்டாலும் முருகன் ஒன்லைனில் என்னிட்ட வாரார் ஏன் நான் போக வேண்டும் என்று கேட்டு கடத்தி வந்தேன் .இனிமேலும் காலம் கடத்தினால் எம்பெருமான் ஆத்திரமடைந்து என்னை மறந்து விடுவார் பயம் காரணமாக 2021 இங்கிலிஸ் வருடப்பிறப்புக்கு சென்றேன் .முருகன் தமிழ் கடவுள் ,நான் சைவதமிழன் ஏன் போக வேண்டும் என்று மனசு கேள்வி எழுப்ப "டேய் அவங்கன்ட லீவுகளை வீட்டிலிருந்து உற்சாக பாணம் அடிக்க பாவிக்க முடியும், என்னிடம் வாரது என்றால் மட்டும் நீ சைவம் /தமிழ் என்று எஸ்கியுஸ்களை தெடுகின்றாய் என்ன ?"அதே மனசு மல்டிபல்பெசனல்டிக்கு மாறி கேள்வி கேட்க நான் பயந்து வருடப்பிறப்புக்கு விசிட் பண்ண முடிவெடுத்தேன். "மாஸ்க் எடுத்தாச்சே" அர்ச்சனைக்கு சாமாங்களை எடுத்தாச்சே என்ற காலம் போய் மாஸ்க் எடுத்தாச்சோ என்று வந்திட்டு என புறுபுறுத்தபடி "போட்டாச்சு" என்றேன் "வெள்ளை வேஸ்டி நீல சேர்ட் போட்டுவிட்டு ஏன் கறுப்பு மாஸ்க் போட்டிருக்கிறீங்கள் ,நீல மாஸ்க் புதுசு வாங்கி காரில் வைத்திருக்கிறேன் போய் போடுங்கோ" ரொம்ப முக்கியம் என்ற படி "சரி கோவிலுக்கு கிட்ட போய் போடுவோம்" "என்ன புறுபுறுக்கிறீயள் ,காரில் கான்ட் சனிட்டைசர் இருக்குத்தானே" "முடியப் போகின்றது நாளைக்கு புதுசு வாங்குவோம்" "என்னை மட்ச் பண்ணுகிற மாஸ்க் போட சொல்லி போட்டு ,நீர் மல்டி கலர் மாஸ்க் போட்டிருக்கிறீர்" "பிளவுஸின்ட கலர் இந்த மாஸ்கில் இருக்கு ,உங்களுக்கு இந்த லெடஸ்ட் வசயன்கள் ஒன்றும் தெரியாது" "வழமையா பிரசாதம். எதாவது கொண்டு போவீர் இன்றைக்கு எங்க ஒன்றையும் காணவில்லை" "கொரானாவால் பிரசாதம் கோவிலில் கொடுக்க கூடாதாம் அரசாங்க சட்டமாம்" "அரசாங்க சட்டங்களை சுழிச்சு ஒடுறதில் நாங்கள் கில்லாடிகள் ஆச்சே" "உண்மைதான் ஆனால் உந்த கொரானா எங்களுக்கு நல்ல பாடம் கற்று தந்துவிட்டது" கோவிலுக்கு முன்னாலயே வாகன தரிப்பதற்க்கு இடமிருந்தது, வழமையாக இப்படி இலகுவாக கார் பார்க் பண்ணகூடியதாக இருப்பதில்லை கொரணா காரணமாக முருகனிட்ட வருகின்ற விசிட்டர்கள் குறைந்து விட்டார்கள் . கார்கள் குறைவாக இருந்தது ஆனால் முருகனின் வாசல்படியில் வரிசையாக மக்கள் நின்று கொண்டிருந்தார்கள்.நானும் போய் வரிசையில் நின்றேன் .முருகனை கொள்ளையடிக்க வந்தமாதிரி எல்லோரும் முக கவசம் அணிந்திருந்தார்கள் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் ,மனைவிக்கு பின்னால் யார் நிற்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.தொண்டர் ஒருவர் நெற்றிக்கு அருகாண்மையில் துப்பாக்கி மாதிரி ஒன்றை கொண்டுவந்தார் நான் திடுக்கிட்டு போனேன் பிறகு சுதாகரித்து கொண்டு "முபத்தாறோ,முப்பதேழே என்றேன் " "35 நல்ல கூலா இருக்கிறீயள் போல " "முருகனிட்ட வந்தா கூல் தானே அவனே கூலானவன் தானே" மனிசி பின்னுக்கு நின்று கிள்ளி முழிசி பார்த்த படியே ,மாஸ்க் போட்டபடி முழிசினால் எப்படியிருக்கும் "கோவிலுக்குள்ள வந்தாலும், உந்த லொள்ளு நக்கல் கதையை விடாமாட்டியள் என்ன ?" "டேய் உங்கன்ட தொல்லை தாங்க முடியாமல் தான் இதை செய்தன் ஆனால் நீங்கள் என்னடா என்றால் மாஸ்க்,சனிட்டைசர் எல்லாம் போட்டு கொண்டு வந்து என்னை தொல்லை படுத்துறீங்களேயடா?" "எல்லாம் உன் மீது கொண்ட அன்பு " " அன்போ? வார கோபத்துக்கு தும்மி விட்டன் என்றால் தெரியும்" " முருகா முருகா முருகா ஏன் இந்த ஆவேசம்" " பின்ன ? கொரனா என்று கொஞ்சம் நிம்மதியா இருப்பம் என்றால் நீங்கள் உங்கன்ட வழமையான பிரச்சனை கொண்டு வந்து மூட்டை மூட்டையாக கொட்டுறீயள்" முந்தி மாஸ்க் போடாமல் நீங்கள் சொல்லுறதையே கேட்கிறதே கஸ்டம்,மாஸ்க் போட்டுகொண்டு நீங்கள் கேட்கிற இந்த கேள்விகள் எனக்கு புறியப்போகுதே? எப்ப பிளைட் ஓடும் எப்ப கொமிட்டி கூடும் எப்ப தேர் கட்டலாம் எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா? oh my dad lord Siva முருகன் புலம்ப தொடங்க நான் நடுங்கிபோனேன்3 points- பரிசு.
2 pointsபரிசு. விழியில் விழுந்து இதயம் கலந்த உறவு. அன்று எனது பிறந்தநாள் நிறைய நண்பர்கள், நண்பிகள் ஏராளம் ! வாழ்த்துக்கள்,பரிசுகள் தங்க ஆபரணங்கள் தங்கி விட்டன தந்தப் பேழையில் வெள்ளிப் பாத்திரங்கள் படுத்திருக்கின்றன பரண்மேல் எதுவும் என் இதயத்தில் தங்கவில்லை ! தங்கியது பாவையவள் பரிசளித்தாள் வாசமுள்ள ரோஜா மலர் மலரின் மணம் நாசிகளில் மங்கை முகம் மனக்கண்ணில் இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது விலை மதிப்பற்ற அம் மலரை மட்டும் இன்று --- அவள் சங்கு கழுத்தில் முகம் புதைக்க மூச்சின் சுவாசம் சீராகியது செவ்விதழில் முத்தமிட செவ்வாயில் அமிலம் சுரந்தது பிடியிடை தழுவிட மூலாதாரம் முழுதும் துடிக்குதடி கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் கண்களுக்குள் நிறைந்து நின்றாய் கண்களுக்குள் உன்னைப் பார்த்து யானை பார்த்த குருடனானேன்......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.......!2 points- லொக்டவுண்
2 pointsலொக்டவுண் வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொண்டனர். வதனியும் வீட்டில் வேலை செய்தாலும் இப்பவெல்லாம் விதவிதமாகச் சமையல் செய்வதும் பழைய நண்பிகளையெல்லாம் தேடிப்பிடித்து கதைப்பதுமாக ஒன்லைன் வட்ஸ்அப் என்று ஒருமாதிரி பொழுதைப் போக்கிக் கொண்டாள். இந்த வருடம் நந்தனின் 50வது பிறந்த நாளை பெரிய மண்டபம் எடுத்து விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற அவளது கற்பனைகளெல்லாம் கனவாகிப் போகுமென்று யார் நினைத்தார்கள். இத்தனை வருடமாக அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்தபோதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடிக்கும்வரை தம் பொறுப்புக்களை உணர்ந்து தம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவர்களது இத்தனை ஆண்டுகளும் கழிந்து விட்டன. நேற்று நந்தனுக்கு 50வது பிறந்தநாள். நாள் முழுவதும் தொலைபேசியிலும் வட்ஸ்சப்புக்களிலுமாக வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன. வதனியும் தன் பங்கிற்கு கேக் இனிப்புவகைகள் பிரியாணி என்று செய்து அசத்தியிருந்தாள். இருந்தாலும் வதனி நந்தனுக்குத் தெரியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து நந்தனின் பிறந்தநாளை வீட்டிலாவது பெரிதாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டாள்;. அந்த திட்டத்திற்கு ஆப்பு வைப்பதுபோல் “வீட்டிற்குள் இருங்கள் வெளியே திரியாதீர்கள்” என்று மேஜர் முதல் பிரதமமந்திரி வரை தொலைக் காட்சிகளில் அறிவித்து மக்களின் நலனைப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமன்றி வீட்டிலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வதனிக்கோ எப்படியாவது சேப்பிரைஸ் பாட்டி வைத்து நந்தனை பிரமிக்க வைக்க வேண்டுமென மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. புது வீடு வாங்கியபின் வீட்டில் எந்த கொண்டாட்டமும் வைக்க அவளுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உறவுகளைச் சந்தித்தும் பல மாதங்களாகி விட்டன. எனவே நெருங்கிய உறவுகளை நந்தனுக்குத் தெரியாமல் ரகசியமாக சனிக்கிழமை வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள். அத்துடன் நந்தனை மகிழ்விப்பதற்காக அவனது நண்பர்கள் தனது நெருங்கிய நண்பிகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி 20-25 பேர் ஆகி விட்டது. சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் எந்த மாறுதலும் தெரியாதபடி ரகசியமாகவே அனைத்து ஆயத்தங்களும் நடந்தன. வீடும் என்றும் போல் அமைதியாக இருந்தது. மத்தியானத்துக்கு மேல் ஒரு நண்பன் மூலம் நந்தனை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தபடி அனைத்து திட்டங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கவும் வதனி பூரண திருப்தியுடன் மளமளவென்று காரியங்களை மேற்கொண்டாள். அவசர அவசரமாக வீட்டை அலங்கரித்து ஓடர் பண்ணியிருந்த கேக்கை மேசையில் வைத்து அலங்கரித்து மற்றைய ஒழுங்குகளையெல்லாம் சரிவர செய்து முடித்தாள். திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. மத்தியானத்துக்குமேல் ஒரு நண்பனின் மூலம் நந்தனை வெளியே வெளியே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தாள்; நீண்ட நாட்களின் பின் சந்தித்த நெருங்கிய நண்பனுடன் தத்தமது 50 வயது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சுற்றியதில் நேரம் போனது தெரியவில்லை. மாலை மங்கத் தொடங்கியதும் வீட்டிற்கு போகலாம் என நந்தன் கேட்கவும் சரி என்ற நண்பனும் வதனிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு நந்தனுடன் வீட்டிற்கு வந்தான். வீடு அமைதியாகத்தான் இருந்தது. தன்னுடன் வந்த நண்பனை வீட்டிற்குள் அழைப்பதா விடுவதா என நந்தன் சிந்தித்த மறுகணம் நந்தன் தன்னை பின் தொடர்வதைக் கவனித்து “ வா வா வந்து ரீ குடிச்சிற்றுப் போகலாம்” என அழைத்தான். வீட்டின் கதவைத் திறக்கவும் “சேப்பிரைஸ்” என்று அனைவரும் கூக்குரலுடன் கைதட்டி நந்தனை வரவேற்கவும் நந்தன் திகைப்பில் திக்குமுக்காடிப் போனான். என்ன இது? லொக்டவுண் காலத்தில் இப்படிச் செய்கிறார்களே என மனம் அங்கலாய்த்தாலும் நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பர்களையும் உறவுகளையும் சந்தித்த சந்தோசத்தில் மனம் குதூகலமாகி மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். வீட்டிற்குள் கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. எங்கட ஆக்களின்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? ஏல்லோரும் வண்ண வண்ண உடைகளுடனும் விதவிதமான அலஙகாரங்களுடனும் வந்து இறங்கி வீட்டிற்குள் செல்வதையும் வீட்டிற்குள் நடந்த குதூகலத்தையும் அவதானித்த யாரோ காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டார்களோ அல்லது தற்செயலாக அந்த வீதியில் பயணித்த காவல் துறையினருக்கு மூக்கில் வியர்த்து விட்டதோ யாரறிவார்? மக்களின் நலனுக்காகத்தானே சட்டங்களும் ஒழுங்குகளும் என்று சிந்திக்காமல் மனம் போல திட்டமிட்ட வதனி கதவைத் தட்டிய காவல் துறையினரைக் கண்டதும் திகைத்து விட்டாள். வீதியில் நிறைய வாகனங்களைக் கண்ட காவல் துறையினர் சந்தேகத்தில் ஒவ்வொரு வீடாக தட்டி சோதித்ததில் இவர்கள் வீட்டில் அதிகம் பேர் நின்றது கையும் மெய்யுமாக பிடிபட்டு விட்டது. என்ன செய்வது என்ற தெரியாமல் சிலர் மேல் அறைகளுக்குள்ளும், சிலர் நிலக்கீழ் அறைகளுக்குள்ளும் ஓடி ஒழிந்தனர். இருந்தும் யாராலும் காவல் துறையினரை ஏமாற்ற முடியவில்லை. அனைவருக்கும் குற்றப் பணமாக ஆளுக்கு ஆயிரம் டொலர் ரிக்கற் எழுதி கொடுக்கப்பட்டது. உறவுகள் நட்புக்கள் அனைவரும் திகைத்து என்ன செய்வது என்று அறியாது வருத்தத்துடனும் ஏமாற்றத்தடனும் நிற்க வதனியோ பலமுறை காவல் துறையினரிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை. தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான். காவல் துறையினர் தமது கடமையை முடித்து விட்டு வெளியே போய் நின்று அனைவரையும் வெளியேறும்படி பணித்து விட்டு தம் வாகனத்தினுள் காத்திருந்தனர். நந்தன் வதனியை திரும்பிப் பார்த்த பார்வையில் வதனி எரிந்து போகாத குறை. வந்திருந்த அனைவரும் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேற வதனியோ கையைப் பிசைந்தபடி கண்கலங்க பார்த்துக்கொண்டு நின்றாள். உறவுகள் சிலர் “அவள் வதனிதான் கூப்பிட்டாள் என்றால் எங்களுக்கு எங்கே அறிவு போனது” என்று தம்மை நோவது போல வதனியை திட்டியபடி வெளியேறினர். ஆசைஆசையாக பார்த்துப் பார்த்து செய்த அலங்காரங்கள் கேக் இனிப்பு பலகாரங்கள் உணவுகள் அனைத்தும் தேடுவாரற்று கிடந்தது. இத்தனை ஆண்டு வாழ்வில் இதுவரை நந்தனின் இந்தமாதிரியான கோபத்தைப் பார்த்தறியாத வதனிகூட ஒருகணம் திண்டாடிப் போனாள். மெதுவாக பக்கத்தில் போய்” என்ன நந்தன் நான் உங்கட பிறந்தநாளை வடிவாகக் கொண்டாட வேணுமெண்டுதானே இப்படிச் செய்தனான்” என்ற ஆரம்பிக்கவும் நந்தன் கட்டுக்கடங்காத கோபத்துடன் “உன்னை நான் கேட்டனானா பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி அறிவு கெட்ட ஜென்மம்”என்று ஆவேசத்துடன் அவளைப் பிடித்து தள்ளி விட்டான். இந்த தாக்குதலை எதிர் பார்க்காத வதனி நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மேசையைப் பிடிக்க முயற்சித்தும் பிடி நழுவிப் போக அவளுக்கிருந்த மனக் குழப்பமும் சோர்வும் அவளை பெலவீனப்படுத்த தட்டுத் தடுமாறி அருகிலிருந்த சுவரில் மோதி கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். நந்தனும் ஒருகணம் திகைத்தாலும் ஆத்திரம் அடங்காமல் விறைப்புடன் நின்றான். வதனியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதை கண்ட பின்தான் நந்தனுக்கு நிலமையின் தீவிரம் மனதை உறுத்தியது. உடனடியாக அவளைத் தூக்கி செற்றியில் படுக்கவைத்துவிட்டு அம்புலன்சுக்கு அழைத்தனர். இந்த கொரோனா காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அதிக வேலைப் பழுவுடன் இருப்பதால் சிறிது தாமதித்தே உதவி கிடைத்தது. வதனியை அம்புலன்சில் ஏற்ற, நந்தனை கைது செய்து பொலிஸ் விசாரணைக்காக கொண்டு சென்றனர். நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை. நந்தன் திட்டமிட்டு எதுவும் செய்யா விட்டாலும் குற்றவாளியாகத்தான் பார்க்கப்பட்டான். நந்தன் பயத்திலும் திகைப்பிலும் உறைந்து போனான். தன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு வதனிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேதனையில் துவண்டு போனான். நிறைய இரத்தம் இழந்து விட்டதால் வதனியும் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். நந்தனையும் விசாரணை முடியும்வரை பொலிஸ் காவலில் வைத்து விட்டார்கள். பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் . இதில் யாரை நோவது? கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா? ஆத்திரப்பட்ட நந்தனையா? அல்லது அவனது 50வது பிறந்த நாளையா? லோக்டவுணையா? எதை?2 points- சுதந்திரம் எம் சுவாசம்.
2 pointsவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன்.....! இங்கு நான் தனியாக எந்த இயக்கத்தின் வீரனையும் குறிப்பிடவில்லை.அதில் நான் மிகக் கவனமாக இருந்தேன்......! அன்று அநேகமாக பல இயக்கத் தலைவர்களும் போராளிகளும் ஒற்றுமையாகவே இருந்தார்கள். அதிகம் ஏன் கோட்டையில் இருந்து இராணுவத்தை வெளியேற விடாமல் தடுத்ததில் அத்தனை இயக்கங்களின் பங்கும் இருக்கு..... பின்பு தலைவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்தபோது அவர்களும் பிரிந்தார்கள்.....! ஆனால் அன்று ஒவ்வொரு போராளியும் எமக்கு ஒரு நாடு கிடைக்கும் என்னும் உத்வேகத்தில்தான் சென்றிருந்தார்கள்.ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் பெயர் தெரிந்த / தெரியாத பல வீரர்கள் விதையாகி இருக்கிறார்கள்......! ஒரே வீட்டில் இருந்த ஒரு தாய் பெற்ற சகோதரங்கள் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து போராடியிருக்கின்றார்கள்.....இதுக்குமேல் சொல்ல ஒன்றுமில்லை..... எனக்கு எல்லோரையும் பிடிக்கும்......! அவர்களுக்கானதே இந்தக் கவிதை....! (உங்களுக்கு புலிகள் மட்டும் நினைவுக்கு வருகின்றனர், எனக்கு எல்லோருமே நினைவுக்கு வருகின்றனர்).2 points- லொக்டவுண்
2 pointsகண்மணி உங்கள் சிறுகதை போல யேர்மனியில் ஒரு நகரில் துருக்கியர்கள் வீட்டிலும் டிசம்பர் மாதம் நடந்தது. கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த மனைவி மீது கணவர் சுடுநீரால் ஊற்றி விட்டார். கொரோனா என்பது உலக அரசியல் சும்மா சனத்தை அடக்கும் தந்திரம் என்றெல்லாம் எம்மவர் பலரும் கருதுகின்றனர். இதுவே பேராபத்தான சிந்தனை. அரசு விதித்துள்ள தடைகள் விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எங்களை மட்டும் அல்ல மற்றவர்களையும் பாதுகாப்பதற்கான உதவியாக எல்லோரும் உணர வேண்டும்.2 points- தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
ஏன் என்ன ஆச்சு பிரசர் கூடிட்டுது போல இருக்கு எதுக்கு இந்த கோதாரி பிடிச்ச வீடியோக்களை பார்க்குறீங்க நீங்க??. எனக்கென்ன விருப்பமா நாட்டில இருந்து அனுப்பிவிடுறாங்கள் சரி சரி அந்த சோபாவில இருங்க முதலில் ம் ம் . அப்பாடா நீ என்ன சொன்ன?? சைக் லண்டனா? அடியேய் நான் உன்ன இங்க கல்யாணம் கட்டி எடுக்காட்டி நாட்டில கருவாடு வித்திட்டு இருந்திருப்ப . நான் எதுக்கு கருவாடு விற்கபோறன் என்ற படிப்பிக்கு நான் வேலை எடுத்திருப்பன் ம்கூம் உன்ற படிப்புக்கு வேலை வேறா அடகடவுளே என்று இழுத்தார் மாணிக்கவாசகர் . நான் உங்களை கல்யாணம் கட்டாட்டால் நீங்கள் வெள்ளைக்காரியத்தான் கல்யாணம் கட்டி இருக்கணும் உங்க அரியெண்டம் தாங்க முடியாமல் அவளே உங்கள விட்டுட்டு ஓடியிருப்பாள். நானெண்டபடியால் உங்கள தாங்கிக்கொண்டு இருக்கன். அட பார்ரா புதுனத்தை ........... சரி சரி மகள் யமுனா எங்க? அவள் ஏதோ வகுப்பாம் என போயிருக்கா இனி வருவா. ம்ம் உன்ற புதல்வன் எங்க அதோ வாரான் . மகன் இஞ்ச வாங்க என்று அம்மா கூப்பிட மகனோ என்ன சொல்லுங்க நேரம் இல்ல எனக்கு மாணிக்க வாசகர் மனதுக்குள் (ஒரு வேலைக்கு போக துப்பில்லை இவனுக்கு நேரம் வேற போகுதாம்) ஒன்றும் இல்லை ஊரில ஒரு பெண் பார்த்திருக்கம் உனக்கு கல்யாணம் கட்டி வைக்க எதுக்கு அவசரம்? எனக்கு கல்யாணம் கட்ட இஸ்டம் இல்ல உன்ற மனுசருக்கு இன்னொன்றை பார்த்து கட்டி வையும் ( மாணிக்கவாசகர் மனதுக்குள் சிரிக்கிறார் நான் என்ன வேணாம் என்றா சொல்ல போறன்) காலம் முழுவதும் ஒருவளைக்கட்டிக்கொண்டு இழுத்துக்கொண்டு திரிய என்னால் முடியாது என்றான் அவன். அப்படி சொல்லாத மகன் நம்மட கலாச்சாரத்துக்கு ஏற்றமாதிரித்தான் நாம வாழணும் நாட்டை விட்டு வந்தாலும் நீங்கள் ரெண்டு பேரும் இங்க பிறந்தாலும் நாம் தமிழர்கள் தெரியுமோ? அதுக்கு என்ன இப்போ என மாறி கேட்கிறான் அவன் நாங்கள் இந்த நாட்டு பிரஜைதான் வேணுமென்றால் நீங்கள் இருவரும் உங்கட நாட்டுக்கு போங்க என்றான் அவன் மாணிக்க வாசகர் நடப்பதை பார்த்தும் கேட்டுக்கொண்டிருந்தார் ஒன்றும் பேசாமல். ஏனென்றால் அவர் அவன் விருப்பத்துக்கு நடப்பதால் அவனிடம் கதைப்பது குறைவு. என்பதை கதைத்து பல ஆண்டுகள் மாணிக்க வாசகர் ஒரு செருமலை கொடுக்க இருவரும் அமைதியானார்கள் அவர் எழுந்ததும் அவன் வெளியே சென்றுவிட்டான் . அடுத்த நாள் காலை இஞ்சாருங்க அவனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்தால் திருந்திடுவான். நீ நம்புறயா? ஓம். சரி அந்த பிள்ளையிட போட்டோவ காட்டு இப்ப எல்லோரும் பேஸ்புக், வட்ஸ் அப் அது இது எண்டு எல்லாம் வச்சிருக்கு பேசிப்பழகினால் சந்தோசம் ஆனால் எனக்கு இதில் துளியும் நம்பிக்கை இல்லை என்றார் மாணிக்கவாசகர். சரி நீங்கள் டிக்கட்ட போடுங்கள் போவோம் நாட்டுக்கு போய் அந்த பெண் வீட்டாருட்ட ஜாதகம் எல்லாம் வாங்கி ஐயரிட்ட காட்டி பொருத்தம் எல்லாம் பார்த்து சீதனம் பற்றி பேசணும் எதுக்கு சீதணம்? பின்ன ? அதை வேண்டித்தான் அங்க கல்யாண செலவை முடிக்கணும் சீதணம் வேண்டக்கூடாது... சீதணம் வேண்டாட்டி எப்படி கல்யாணம் முடிக்கிற ? என்றாள் மனைவி அங்க போய் பார்ப்போம் குடும்பம் வசதியென்றால் பேசிப்பார்ப்போம் இருந்தாலும் நாம சீதனம் வேண்டுவது அழகில்லை ம்ம் என்றாள் மனைவி யமுனாவை (மகளை) என்ன செய்வது அவளைக்க்கூட்டிக்கொண்டு போக இயலாது அவள உங்க அக்காவீட்டில விட்டுட்டு போவோம் என்ன ?? ம்ம் தொடரும்...........2 points- மாஸ்க் எடுத்தாச்சே
2 pointsசிங்கம்! எங்கை வந்து நிக்குது பாருங்கோ...?😀 கதையிலை கூட மாஸ்கை கவனிக்கேல்லை. புக்கை மோதகத்திலை வந்து நிக்குது. நான் கோயிலுக்கு போகேக்கை கடவுளே இண்டைக்கு சனம் கனக்க வரக்கூடாது எண்டு வேண்டிக்கொண்டு போறது. ஏனெண்டால் சனம் கனக்க வந்தால் ஒரு மோதகம் ஒரு வாழைப்பழத்துக்கு பதிலாய் ஆளுக்கு பாதி வாழைப்பழம் பாதி மோதகம் எண்ட கணக்கு வந்திடுமெல்லோ😎2 points- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்" ஒரு குடும்பத் தலைவன். 👨🦰 சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன் அவனுக்கு... அன்பான மனைவியும், 💖 பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும் உண்டு. 💗 வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை. ☹️ தனது வருமானத்தால், தன் குடும்பத்திற்கு, சொந்தமாக... ஒரு வீடு 🏦 வாங்க வேண்டும் என்று, கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம். 🎰 நல்ல மனிதர்களுக்கு... 🙏"கூரையை... பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்" 🙏 என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது. தான்... கும்பிட்ட தெய்வம், தன்னை கைவிட வில்லை என்று.... ஆனந்தப் பட்டு, தன்னிடம் அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த, முதலாளிக்கு... "நடு விரலை காட்டி", 🖕 போய்யா... நீயும், உன் சம்பளமும்... நானும், உன்னை மாதிரி... முதலாளி ஆகி காட்டுறேன் என்று... "சணல் பறக்க" பேசி விட்டு... வந்து விட்டான். 😎 மிகுதி... அடுத்த... வெள்ளிக் கிழமைக்குள், தொடரும்... யாழ். களத்தின், சுய ஆக்கத்திற்காக.. தமிழ் சிறி. 🤣1 point- பயணம்???
1 pointபுரட்டாதி 2020 ஐரொப்பா எங்கும் கொரோனா பயங்கரமாக தலைவிரித்தாடிய மாதம் ஐரொப்பிய நாடுகள் தம்மிடையேயும் பிற நாடுகளுக்கிடையேயும் எல்லைகளை மூடியும் விமானப்பறப்புக்களை புறக்கணிக்கவும் தொடங்கிய நேரம். பிள்ளைகளுடன் ஆவணி மாத விடுமுறை முடியும் வேளை நான் 10 நாள் வேறு ஒரு பயணம் போகப்போறேன் என்றேன் அதிசயமாகப்பார்த்தார்கள் (ஆனால் ஆவணி மாதமே வழமையாக பூட்டப்படும் எனது தொழில் புரட்டாதி மத்திவரை பூட்டப்பட்டது அவர்களுக்கு ஏற்கனவே கேள்விக்குறி ஒன்றை தந்திருந்தது) விமானம் ஓடாது என்றார்கள் விமான ரிக்கற் ஏற்கனவே எடுத்தாச்சு என்றேன். விமானம் ஓடாவிட்டால் என்றார்கள் காரில் போவேன் என்றேன் (அப்பா 1400 கிலோமீற்றரை 9 மணித்தியாலத்தில் போவார் என்பதால் எதிர்ப்பில்லை) அப்போ அங்க நீங்கள் சந்திக்கப்போறவரின் வயது கருதி உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யணும் என்றார்கள். அதற்கென்ன செய்தாப்போச்சு என்றவுடன் மலைப்பகுதியிலேயே பரிசோதனைக்கு நேரம் எடுத்து தந்தார்கள் கொரோனா தொற்று இல்லை என்று வைத்தியர் தந்த அந்த பத்திரத்தை கவனமாக என்னுடன் வைத்துக்கொண்டேன் (விமான நிலையத்தில் உதவலாம் என்பதற்காக) ஓய்வு முடித்து வந்த அடுத்த நாள் விமானநிலையத்தில் விட்டு விட்டு சென்றார்கள் (அவர்களுக்கு நம்பிக்கையில்லை நான் பறப்பேன் என்று) விமான நிலையத்தில் எந்த எதிர்ப்புமில்லை. தொடர்ந்து ஒவ்வொரு வாசலாக முன்னேறிக்கொண்டிருக்கின்றேன். விமானம் ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன் நீண்ட வரிசையில் நிற்க வைத்து துப்பாக்கி போல் எதையே நெற்றியில் வைக்கிறார்கள். ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு சூடாக இருக்கு அது வேற நெற்றியை சூடாக்கிக்கொண்டிருக்கு அதைவிட வெய்யில் வேற??? நெற்றியை தொட்டுப்பார்க்கிறேன் சூடாகத்தான் இருக்கு அடப்பாவிகளா அவ்வளவு தானா??? ஆனால் அடிக்கடி பிரெஞ்சு அரசாங்கம் சொன்னபடியே உள்ளது வயதானவர்களை இந்த நேரத்தில் அரவணையுங்கள் சென்று பாருங்கள் அவர்களை தனிமையில் விட்டு விடாதீர்கள்... அது ஒன்று மட்டுமே எனது மனதில் ஓடியபடி???? தொடர்வோம்1 point- தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
இஞ்சாருங்கோ!! இஞ்சாருங்கோ! பிரித்தானிய பிரஜைகளுக்கான பயணத்தடையை இலங்கை அரசு விலத்தி இருக்கிறதாம் இலங்கைக்கு போவமே!! என்றாள் சாரதா ஏன்? எதற்கு? இப்ப என்ன அவ்வளவு அவசரம் என்றார் மாணிக்கவாசகர். இல்லங்க போனவருசம் போக இருந்தம் இந்த பாழாய் போன கொரானா வந்ததால ஊருக்கும் போகமுடியல நம்ம மகனுக்கும் வயசாகிறது. கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டுமே . ம் அங்க போனால் வெளிநாட்டு சனம் வந்துட்டுது என்று அங்க சனம் ஓடுதாம் கொரானா பயத்தால். அதுமட்டும் இல்லாமல் தனிமைப்படுத்தி விடுவாங்களாம். நாமதானே இங்க ஊசி போட்டுட்டம் அங்க போய் ஊசி போட்டதை காட்டினால் உள்ள விடுவாங்களாம் என்று சொல்லுறாங்களே? அதுமட்டும் இல்லாமல் இலங்கையில இறப்பு வீதம் கூட இங்கத்தயமாதிரி இல்ல குறைஞ்சிட்டுது . நீ ஊருக்க போக பிளான் பண்ணிட்ட சரி நடக்கட்டும் என்றவர். ஊரில உன்ற மகனாருக்கு ஆர் பொண் கொடுப்பார்கள் நான் பரிமளம் அக்காகிட்ட சொல்லிட்டன் அவா பார்த்திருக்கா ஒரு பெண். ஆரு நம்ம குமாரசாமியின்ற மனிசியோ ஓம் ஓம் அவதான் . உன்ற மகன் இங்க திரியுற திரிச்சலுக்கு நாள் தோறும் போதை , கிளப் அது இது என்று இவன் கிடக்குறான் சேருர கூட்டமும் அவனுகள் பழக்க வழக்கத்திற்கும் . ஊரில யாரும் பொண்ணு கொடுப்பாங்களோ? லண்டன் என்று சொன்னால் கொடுப்பாங்கள் தானே!. உனக்கு விசயம் தெரியாதுடி இப்ப அங்குள்ள சனம் வெளிநாடுகள பற்றி நல்லா படிச்சிட்டுதுகள் அதுமட்டும் இல்லாமல் அக்குவேர் ஆணிவேரா எல்லாம் துருவி ஆராய்ஞ்சும் வச்சிருக்குதுகள். நீ என்ன கல்யாணம் கட்டக்க துள்ளிக்குதிச்ச நீதானே இதானா? லண்டன் சைக் இந்த நாட்டில ஆர் இருப்பாங்கள் கதைக்க கூட ஆட்கள் இல்ல கறிவாங்கயும் ஆட்கள் இல்ல என ஞாபகம் இருக்கா?. ஓ அதெல்லாம் நாளாக நாளாக பழகிட்டுதானே .ம் பிள்ள என்ன செய்யுதாம் பிள்ள கிறயுவேற்றாம் ஓ.... ! பிள்ளையும் நல்ல பிள்ளையாம் ஓ! இப்ப ரீச்சிங் கிடைச்சிருக்காம் அது மட்டும் இல்ல நம்ம சாதிதானாம் ஓ! சாதி வரைக்கும் விசாரிச்சு இருக்கிற........... பின்ன நம்ம பிள்ளைக்கு நல்ல இடம் தானே பார்க்கணும் .ம்ம் சரி ஒன்லைனில ரிக்கட் விலையையும் நாட்டில என்ன மாதிரி நிலமையென பார்க்க போணை எடுத்தவருக்கு நாட்டில இருந்து முகநூலில் ஒரு நண்பர் மூலமாக மெசேச் வீடியோவாக வருகிறது அதைப்பார்த்ததும் மாணிக்க வாசகர் அடியேய் அந்த பிரசர் குளிசையை எடுத்துட்டு ஓடிவாடியென அலறினார். இந்த பிக்குவின் வீடியோ தான் முற்று முழுதாக இனவாததை கக்கிய வீடியோவே அது ........... தொடரும் ...😄1 point- முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ...
முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ... அண்மையில் பிள்ளைகளுடன் எனது பெயர் பற்றிய உரையாடல் வந்தது. அவர்களுக்கு எனது முதற்பெயர் என்ன என்பதில் குழப்பம். ஆனால் அதை தெளிவாக்க முயன்று இன்னும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.🥴 இந்தப் பெயர்ச் சிக்கல் தமிழர்களுக்கு நிறையவே உண்டு. புலம்பெயர்ந்து வரும்வரை பிரச்சினை தராத பெயர், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து இறங்கியதும் பிரச்சினையாகி விட்டது. சகாரா பாலைவனத்தின் வெம்மையை பல்லாயிரம் அடிகளுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த விமானத்தில் உணர்ந்தபோதே விமானத்தின் ரொய்லட்டில் பாஸ்போர்ட்டை, அதை வெட்டிக்கிழிக்க என்று முன்னேற்பாடாக எடுத்துச்சென்ற சின்னக்கத்தரிக்கோலால் வெட்டி ஃபிளஷ் பண்ணிவிட்டேன்! ஆனால் எங்கிருந்து விமானம் வந்தது, பாஸ்போர்ட் கிழித்தது எல்லாம் “ரூட்” அடிபடக்கூடாது என்று குடிவரவு அதிகாரிகளுக்குச் சொல்லவில்லை. ஆவணங்கள் இல்லாமல் வந்து இறங்கியவர்களை விசாரித்து அனுபவப்பட்டவர்கள். வழமையான முதலாவது கேள்வியாக பெயரைக் கேட்டபோது எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அது போதாது இரண்டு பெயர்களையும் சரியாகச் சொல்லுங்கள் என்றபோது, எனக்கு “திக்” என்றது. எனக்கு இரண்டு பெயர்கள் இருப்பதை (பெயர் இடையில் மாற்றப்பட்டது தனிக்கதை) என்னுடன் கூட வந்தவர்களே அறியாதபோது எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று ஆடிப்போய் முழியைப் பிதுக்கினேன். இரண்டு பெயர்கள் வந்த கதையைச் சொல்லும் அளவுக்கு ஆங்கில அறிவும் இல்லை, தவிர அதைச் சொல்லும் நோக்கமும் துளியும் இல்லை என்பதால் திரும்பவும் எனக்கு ஒரு பெயர்தான் என்று எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அவர்களின் பார்வை அப்பன் பெயர் தெரியாத அனாதைப்பயலைப் பார்க்கிற மாதிரித் தெரிந்தது. தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கொஞ்சம் மிரட்டுவதுபோல எனது முழுப்பெயரை எழுதச் சொன்னார்கள். குடும்பப்பெயரையும் அடிக்கோடிடவேண்டும் என்றார்கள். முழுப்பெயர் விளங்கியது. அது என்ன குடும்பப்பெயர்? இப்படி ஒன்றும் எங்கள் குடும்பத்தில் இல்லையே! தமிழர்களின் முழுப்பெயர்கள் இன்னாரின் பிள்ளை இவன்/இவள் என்று இருக்கும் அல்லது இன்னாரின் மனைவி இவள் என்று இருக்கும். தந்தை அல்லது கட்டிய கணவன் பெயர் முன்னுக்கும் பிள்ளைகளினதும் மனைவியினதும் பெயர் பின்னுக்கும் எழுதுவதுதான் மரபு. உதாரணமாக செல்லையாவின் செல்லமகள் சிவகாமி என்றால் முழுப்பெயர் “செல்லையா சிவகாமி” என்று இருக்கும். அதுவே சிவகாமி செந்தூரனைத் திருமணம் செய்தால் “செந்தூரன் சிவகாமி” என்று மாறிவிடும். இப்படி முழுப்பெயர் எழுதும்முறை தெரிந்திருந்தாலும், எனது பெயரை எண்சோதிடப்படி பாட்டனார், தந்தையாரின் முதலெழுத்துக்களுடன் பாவிக்கவேண்டும் என்று பெயர் மாறியபோது வீட்டில் சொல்லியிருந்ததால் பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் எனது பெயரையும் எழுதினேன். இடமிருந்து வலமாக மூன்றாவதாக இருந்த எனது தனிப்பெயருக்கு அடிக்கோடிட்டேன். இப்படியாக, எனது தனிப்பெயர் குடும்பப்பெயராகியது! அப்படியே வங்கி, கல்லூரி, பல்கலைக்கழகம், வேலை என்று எல்லா ஆவணங்களிலும் முழுப்பெயர் மூன்றாகவும், எனது பெயர் குடும்பப்பெயராகவும் வருமாறு பார்த்துக்கொண்டேன். எனினும் விமானப் பயணச் சீட்டுக்கள் பதிவு செய்யும்போதும், விசா எடுக்கப் போகும்போதும் படிவங்கள் நிரப்புவதில் குழப்பங்கள் வரும். நான் மூன்று பெயர்களை வேறு வைத்திருப்பதால் படிவங்களில் உள்ள கட்டங்கள் கூட போதாமல் இருக்கும். எனது முழுப்பெயரை ஆங்கிலத்தில் எழுத இரண்டு இடைவெளிகளுடன் 31 கட்டங்கள் வேண்டும்! நண்பன் ஒருவனின் பாட்டன் தனது தமிழ் மீதான பற்றைக்காட்ட நச்சினார்க்கினியனார், பரிமேலழகனார் என்று அதி நீளமான பெயர்களை வைத்ததுபோல, எனது பாட்டனார் செய்யவில்லை. என்றாலும் தனது முப்பாட்டன் முருகன் மேல் கொண்ட பக்தியால் முருகனின் பெயர்களையே மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் வைத்திருந்ததால் கடைக்குட்டியான தந்தையாருக்கு ஒரு முருகனின் பெயர்! அது எனது முழுப்பெயரின் நடுவில் உள்ளது. சிங்களவர்களில் சில பிரபலங்களின் பெயர்கள் இன்னும் நீளமாக இருப்பதால், உதாரணமாக வர்ணகுலசூரிய பத்தபெந்திகே உஷாந்த ஜோசேஃப் சமிந்த வாஸ், அவர்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று சமாதானம் அடைந்துவிடுவேன். பிச்சைக்காரன் தன்னைவிட வசதிகுறைந்த பிச்சைக்காரனைப் பார்த்துத்தானே திருப்தியடைய முடியும். அதிலும் இவர்கள் சிங்களவர்கள் வேறு!😊 முன்னைய காலங்களில் தமிழின் மீதான பற்றினால் பொதுவாக நீளமான பெயர்களைத் தமிழர்கள் விரும்பி வைப்பதுண்டு. எனினும் பெயர்களின் நீளங்கள் சமூகக்கட்டமைப்பின் பிரமிட் நிலையையும் காட்டும் குறிகாட்டிகளாகவும் கருதப்பட்டதுண்டு. சமூகப்படிநிலையில் கீழே இருப்பவர்கள் நீளமான பெயர்களை வைக்க விரும்பி விண்ணப்பித்தவேளைகளில், பதிவாளர்களாக இருந்த உயர்குடியினர் கந்தன், செல்லன் என்று சுருக்கிவிட்ட வரலாறும் தமிழ் சமூகத்தில் உண்டுதானே. இப்படியாக நீளமான பெயர் ஒருபக்கம் பிரச்சினையாக இருந்தாலும் முக்கியமாக குடும்பப்பெயர் என்று ஒன்றில்லாதது பொதுவாக தமிழர்களுக்கான பிரச்சினையாக இருக்கின்றது போலுள்ளது. இணையத்தில் தேடினால் தமிழர்களைப் போலவே வேறு இனங்களிலும் குடும்பப்பெயர் எழுதுவது ஒரு சிக்கலாக இருப்பதாகத் தெரிகின்றது. சிங்களவர்களும், வட இந்தியர்களும், ஐரோப்பியர்களின் கொலனியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு சேவகம் செய்தவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் குடும்பப் பெயர்களைப் பாவித்து வருகின்றார்கள். தமிழர்களுக்குத்தான் இந்த Last name/Surname/Family name என்று ஒன்றில்லை. அதனால் தமிழருக்கு இந்த குடும்பப்பெயர் விடயம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கும் சிக்கலாக இருக்கின்றது! எனக்குத் தெரிந்து தமிழ் மக்கள் எல்லோருக்குமே ஒரேயொரு பெயர்தான். சுருக்கியபெயர், செல்லப்பெயர், பட்டப்பெயர், புனைபெயர், இயக்கப்பெயர் இதெல்லாம் கணக்கில் எடுப்பதில்லை. இலங்கையில் பிறந்திருந்தால் சட்டபூர்வமாக பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கும் Given name என்பதுதான் எங்களைக் குறிக்கும் தனிப்பெயர். ஆறுமுகம், கந்தசாமி என்று எதுவானாலும் ஒரே ஒரு பெயர்தான். நாங்கள் பெயர் எழுதும் முறையில் எங்கள் தனிப்பெயர் குடும்பப்பெயராக வருவதும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. மேற்கத்தையரின் வழக்கப்படி ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் குடும்பப்பெயர் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் தனிப்பெயரை தமிழ் மரபுப்படி பின்னுக்கு எழுதி குடும்பப்பெயராகப் பாவிக்கும்போது கணவன், மனைவி பிள்ளைகளுக்கு வேறு வேறு குடும்பப்பெயர்கள் வந்துசேர்கின்றது. மேற்கத்தையர் ஒரு மாதிரி மேலேயும் கீழேயும் எங்களைப் பார்க்கவைக்கின்றது. சகோதரர்களுக்கு ஸ்பொன்சர் கடிதம் எழுதும்போது அவர்கள் தங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராகப் பாவித்தால், குடும்பப்பெயர் ஏன் வேறாக இருக்கின்றது என்பதற்கு கூடுதலாக விளக்கம் வேறு கொடுக்கவேண்டும். இதை நான் கவனமாகச் செய்ததுண்டு. அதிலும் சகோதரர்கள் என்னைப்போல மூன்று பெயர்களைப் பாவிக்காமல் தந்தை, தமது பெயர் என்று இரண்டுடன் உள்ளதால் (எதை குடும்பப்பெயராகப் பாவிக்கின்றார்கள் என்பதே இன்னமும் குழப்பம்தான்) விலாவாரியான விளக்கங்கள் கொடுத்திருக்கின்றேன்! புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஒருவர் தனது தந்தையின் பெயரை குடும்பப்பெயராக வைத்திருந்தால், அவர் இலங்கைசென்று திருமணம் முடித்து வரும்போது, கட்டிய மனைவி தனது மாமானாரின் பெயரைத் தனது குடும்பப்பெயராக வைத்திருக்க சங்கடப்படுவதும் உண்டு. உதாரணமாக கந்தசாமி மகன் கேதீஸ்வரன் குடும்பப்பெயராக கந்தசாமி என்று பாவித்தால் அவர் சுப்பிரமணியம் மகள் வதனாவை திருமணம் செய்த பின்னர், வதனா குடும்பப்பெயரை மாற்றினால் “வதனா கந்தசாமி” என்று வரும். இதில் கேதீஸ்வரன் பெயரே காணாமல் போய்விடும்! வதனா மாமனாரின் பெயரை தனது குடும்பப்பெயராக எழுதுவதை விரும்பாமலும் இருக்கலாம்! அதே போல பிள்ளைகள் பிறக்கும்போது பிள்ளைக்கு வைக்கும் பெயரை முதற்பெயராகப் பாவிப்பதா அல்லது குடும்பப்பெயராகப் பாவிப்பதா என்பதிலும் குழப்பங்கள் உண்டு. தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக வைத்தால் ஒவ்வொரு தலைமுறைக்கும் குடும்பப்பெயர் மாறிக்கொண்டிருக்கும். இது குடும்பப்பெயரின் நோக்கமாகிய பரம்பரையை இலகுவாக அறிவதையே இல்லாமல் ஆக்கிவிடும். மறுவளமாக எங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றியதுபோல, பிள்ளைகளின் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றினாலும் நிலைத்த குடும்பப்பெயர் உருவாகாது. அதுவே பெண்பிள்ளையாக இருந்தால் அவரின் தனிப்பெயரை குடும்பப்பெயராகவும் வைப்பதும் சிக்கல்தான். ஏனெனில் பெண்பிள்ளைகளின் பெயரை குடும்பப்பெயராகப் பாவிக்கும் நடைமுறை இல்லை. உதாரணத்திற்கு ஞானவேல் மகன் எழில்வேந்தன் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராகக் கொண்டிருக்கின்றார் என்று வைப்போம். அவருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த மகனுக்கு அர்ஜுன் என்று பெயர்சூட்டி, பிள்ளையின் தனிப்பெயரையே குடும்பபெயராகவும் பதிந்துவிட்டார். பின்னர் பெண்பிள்ளை பிறந்தபோது சஹானா என்று பெயரைவைத்து பெண்பிள்ளை என்பதால் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராக வைத்தால் பிள்ளைகள் இருவருக்கும் வேறு வேறு குடும்பப்பெயராகிவிடும். இவ்வாறு பல வேறுபட்ட குழப்பங்கள் நம்மவரிடையே உண்டு. கணணிமயமாக்கப்பட்ட இக்காலத்தில் பெயர்களில் குடும்பப்பெயர்தான் தரவுத்தளங்களில் முதன்மைத் திறவியாக (primary key) உள்ளது. எனவே, குடும்பப்பெயர்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதில் கவனம் தேவை. முழுப்பெயர் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முழுப்பெயர் மூன்று பகுதிகளாக எழுதும்போது இப்படி வரும்: [முதற்பெயர்] [நடுப்பெயர்] [குடும்பப்பெயர்] முழுப்பெயர் இரண்டு பகுதிகளாக எழுதும்போது நடுப்பெயர் இல்லாது வரும்: [முதற்பெயர்] [குடும்பப்பெயர்] ஆங்கிலத்தில் First name, Forename, Given name, Christian name என்று விதம்விதமாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஒருவரை அழைக்கும் முதற்பெயரைத்தான் குறிக்கின்றன. அதேபோல Last name, Second name, Surname, Family name என்று சொல்லபடுபவை எல்லாம் குடும்பப்பெயரைத்தான் குறிக்கின்றன. Middle name கிறீஸ்த்த மதத்தினர் ஞானஸ்நானத்தின்போது பெற்றுக்கொள்ளும் பெயர். எனினும் வேறு வகைகளிலும் இதனைப் பாவிக்கலாம். அவை பற்றியும் பின்னர் சுருக்கமாகப் பார்க்கலாம். அத்துடன் குடும்பப்பெயரைத் தவிர மற்றைய பெயர்கள் அனைத்தையும் முதற்பெயர் என்றும் கொள்ளலாம்! இப்படி பெயர் என்பதே ஒரே குழப்பம் நிறைந்து இருக்கின்றது! இந்த முழுப்பெயர் எழுதும் முறை வந்த வரலாற்றைப் பார்ப்போம். ரோமானிய ஆண்கள் மூன்று பெயர்களைக் கொண்டிருந்தார்களாம். ஒருவரை அடையாளப்படுத்தும் தனிப்பெயர் (praenomen); அவரது குடும்பப்பெயர் (nomen); அவரது குடும்பக்கிளைப் பெயர் (cognomen). அதிகமான குடும்பக்கிளைப் பெயர்களைக் கொண்டு ஒருவரின் பெயர் மிக நீளமாக அமைந்திருந்தால் அவரின் சமூக மதிப்பு கூடியிருக்கும். ஏனெனில் நீளமான பெயர் வம்ச விருட்சத்தை (family tree) இலகுவாக அடையாளம் காண உதவும். ஆனால் பெண்களுக்கு அவர்களது தனிப்பெயரும் குடும்பப்பெயரும் மட்டும்தான் இருந்தன. அடிமைகளுக்கோ வெறும் தனிப்பெயர்தான்! இப்படிப் பெயரானது பல பெயர்களின் தொடராக குறிப்பிடப்படும் மரபு 17-18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளுக்கும் பரவியது. அதிகாரம் மிக்க பிரபுத்துவ வம்சத்தினர் தமது குழந்தைகளுக்கு மிக நீளமான பெயர்களைச் சூட்டி சமூகத்தில் தமது உயர்நிலையை உறுதிப்படுத்தினர். அது இன்றளவும் தொடர்கின்றது. பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் மகன் இளவரசர் ஜோர்ஜின் முழுப்பெயர் George Alexander Louis Mountbatten-Windsor என்றுள்ளது. ஸ்பானியர்களும், அரேபியர்களும் தமது குழந்தைகளின் பெயர்களில் தந்தைவழியோடு, தாய்வழி பரம்பரைப் பெயர்களையும் சூட்டி வம்ச விருட்சங்களை பெயர்களிலேயே நிலைநிறுத்தினர். எனினும் ஐரோப்பியர்கள் இடைப்பெயராக (Middle name) எதைச் சூட்டுவது என்பதில் ஆரம்பத்தில் சற்றுக் குழம்பியதாகத் தெரிகின்றது. குடும்பக் கிளைப்பெயரையா அல்லது புனிதர்களின் (saint) பெயரையா சூட்டுவது என்று தீர்மானிக்க முடியாமல், பின்னர் ஞானஸ்நானப் பெயரை இடைப்பெயராகச் சூட்டினர். இவ்வாறு முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று பெயர் வைக்கும் மரபு அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகளுக்கும், ஐரோப்பியர்களின் கொலனிகளுக்கும் பரவியது. எனினும் இக்காலத்தில் பலர் இடைப்பெயரை சுத்தமாகப் பாவிப்பது இல்லை. அத்தோடு பலர் மதம் சார்ந்த இடைப்பெயரைத் தவிர்த்து வேறு புதுமையான முறைகளில் இடைப்பெயர்களைச் சூட்டிக்கொள்கின்றார்கள். பொதுவாக தாயின் கன்னிப்பெயரை (Maiden name) இடைப்பெயராக பாவிக்கும் வழக்கம் அதிகரித்து வருகின்றது. திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்வது வழமை. ஆனாலும் பெண்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பாத தற்காலத்தில் கன்னிப்பெயரை தொடர்ந்தும் குடும்பப்பெயராக பாவிப்பதும், அல்லது கன்னிப்பெயரை இடைப்பெயராகப் பாவிப்பதும் உண்டு. உதாரணமாக முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதியின் முழுப்பெயர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என்றுள்ளது. இதில் அவரின் கன்னிப்பெயர் இடைப்பெயராக அமைந்துள்ளது. பெயர் வைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் என்பதை தமிழர்கள் அறிந்திருக்கவில்லை போலிருக்கின்றது. ஏற்கனவே வேறு எவருக்குமில்லாத பெயராக இருக்கவேண்டும், பிறந்த நேரத்துக்கான நட்சத்திரப்படி பஞ்சாங்கத்தில்/சாதகத்தில் உள்ள எழுத்துக்கள் வரத்தக்கதாக பெயர் இருக்கவேண்டும், ஆங்கிலத்தில் எழுதும்போது எண்சாத்திரத்திற்கு அமைவாக இருக்கவேண்டும் என்று ஒருவரைச் சுட்டும் தனிப்பெயரான முதற்பெயருக்கே மூளையைக் கசக்குகின்றவர்கள், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று இன்னும் பலவற்றை ஆராயவெளிக்கிட்டால் கதிகலங்கித்தான் போயிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இந்தப் பெயர்ச்சிக்கலைக் கையாளுகின்றார்கள். சில ஐரோப்பிய நாடுகளில் தந்தையாரின் பெயர் அல்லது கணவனின் குடும்பப்பெயராக விளங்கும் கணவனின் தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக்க கட்டாயப்படுத்துகின்றார்கள். இதுவே இப்போது தமிழர்களிடையே பொதுவான நடைமுறையாக உள்ளது. எனினும் பிரித்தானியாவில் எதுவிதமான கட்டாயப்படுத்தல்களோ, வழிமுறைகளோ இருப்பதாகத் தெரியவில்லை. நான் எனது தனிப்பெயரை குடும்பப்பெயர் (Surname) ஆகவும், எனது தந்தையின் பெயரை இடைப்பெயராகவும் (Middle name) ஆகவும், பாட்டனாரின் பெயரை முதற்பெயர் (First name) ஆகவும் ஆரம்பத்தில் பாவித்தேன். இது ஒன்றும் திட்டம்போட்டுச் செய்ததில்லை. தமிழர்கள் வலமிருந்து இடமாக தந்தை பெயர், எம்மைச் சுட்டும் தனிப்பெயர் என்று எழுதும் பழக்கத்தால் வந்தது. கூடுதலாக பாட்டனாரின் பெயரும் இருப்பதால் அது முதலாவதாக வந்துவிட்டது! ஆனாலும் இடைப்பெயர் குழப்பமாக இருந்ததால், இடைப்பெயரைக் கைவிட்டு பாட்டனாரினதும் தந்தையாரினதும் பெயர்களையே முதற்பெயராக இப்போது எழுதுகின்றேன். இந்த மூன்றையும் சேர்த்து எழுத நீளமாக வரும் என்பது வேறு ஒரு பிரச்சினை! ஐரோப்பிய நாட்டில் இருப்பதாலும், எனது பெயர் நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கவேண்டும் என்ற சிறிய ஆசை உள்ளதாலும் எனக்கு இடையில் வைத்த பெயரையே எனது குடும்பப்பெயராக்கி உள்ளேன். அதற்காக குடும்பப்பெயரை சுருக்கி/வெட்டி, ஆங்கிலப் பெயர் மாதிரி உச்சரிப்பு வரும்மாதிரிச் செய்ய எல்லாம் விருப்பமில்லை. பிறநாட்டவரின் நாக்கு சுளுக்கிக் கொண்டாலும் இதுவே தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கட்டும்! ஆயினும் முழுப்பெயர் கட்டாயமாகக் கொடுக்கவேண்டி ஏற்படாத இடங்களில் எல்லாம் முதற்பெயராக இருக்கும் பாட்டனாரின் பெயரை பாதியாகக் கத்தரித்து பாவிக்கின்றேன்!. தந்தையாரின் பெயர் எனது சுருக்கிய முதற்பெயரில் இருந்து சுத்தமாக நீங்கிவிட்டது! மேற்கத்தேயரின் வழக்கப்படி பொதுவாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் கட்டாயம் சொல்லி மரியாதை செய்யவேண்டும். முதற்பெயரை மிக நெருங்கியவர்கள்தான் அழைப்பதற்குப் பாவிப்பார்கள். நமது முதற்பெயரை (அதையும் நாம் சுருக்கி ஓரசை, ஈரசை என வைத்திருந்தாலும்) சொல்லவே பிறநாட்டவருக்கு நாக்கு சுளுக்கிவிடுகின்றது. இதற்குள் பல அசைகள் (syllables) உள்ள எங்கள் குடும்பப்பெயரை சொல்ல அவர்கள் முயலும்போது நமக்கே கேட்கச் சிரமமாக இருக்கும். எனது ஆஸ்திரிய நண்பர் ஒருவர் என்னுடைய நீண்ட குடும்பப்பெயரை மிகவும் எளிதாகச் சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி கற்றுக்கொண்டாய் எனக்கேட்டபோது, எனது நண்பர் சொன்னபதில் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவர் எனது குடும்பப்பெயரை எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் இன்றி எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் அரைமணி நேரத்துக்கும் மேலாக பயிற்சியில் செலவளித்தாராம். முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் மரியாதையுடன் சொல்லவேண்டும் என்பதற்காகவே ஐரோப்பியர் இப்படியும் கஸ்டப்படுகின்றார்கள். தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். எனினும், சரியான பெயர் எழுதும் முறை எதுவென்று இலகுவாகச் சொல்லமுடியாது. தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் வகையிலும், பரம்பரையை அடையாளம் காணும் வகையிலும் ஒரு பெயர் வைக்கும் பொறிமுறையை உருவாக்குவது பற்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஆகவே, பெயர்க் குழப்பங்கள் தொடர்கதையாகவே இருக்கும். குறிப்பு: எனது பெயர் மாறிய கதையை எழுதவேண்டுமென்றால் பெயர்களை வெளிப்படுத்தாமல் எழுதுவது இலகு அல்ல! ——1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointநன்றி அக்கா. வித்தியாசமான நல்ல படங்களை இங்கு இணைக்கிறீர்கள். மேலே மாங்காய்க்குத் தான் பகிடியாய் ஏதோ எழுதினேன். உங்களுக்கல்ல. தவறாக நினைக்க வேண்டாம் அக்கா. ஆனாலும் அதன் வளர்ந்து முன்னேற வேணும் என்ற துடிப்பு எனக்குப் பிடிச்சிருக்கு!1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கூண்டுக்குள் நிக்கும் குரங்கானாலும் குரைக்கும் நாயானாலும் கர்ப்பத்தை காதலிக்கவே செய்கின்றன.....! 👍1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointஎவ்வளவு அழகாக சோளப்பொரி செய்கின்றார். நீங்களும் செய்யலாம்......! 👍1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- லொக்டவுண்
1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, ஆவணி 2013 ஐ நா மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருகைக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துணை ராணுவக் குழுக்கள் திருகோணமலை மாவட்டத்தில் ராணுவ ஆக்கிரமிப்பினால் இடம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்ற இலங்கை ராணுவமும் துணை ராணுவக் குழுவும் ஐ நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகைதொடர்பாக கவனயீர்ப்பு நிகழ்வுகளில் எவரையும் பங்குகொள்ளவேண்டாம் என்றும், அவ்வாறு பங்குகொண்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதேவேளை, நவிப்பிள்ளை தமிழ் மக்களுடன் கலந்துரையாடும் எந்த நிகழ்வினையும் வெளியிடக் கூடாது என்று தீர்மானித்துள்ள அரசு, உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் இந்தக் கலந்துரையாடல்கள் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதனை பொலீஸாரைக் கொண்டு தடுத்திருக்கிறது. இது இவ்வாறிருக்க, ராணுவ புலநாய்வுத்துறையினரால இயக்கப்படும் பிள்ளையான் மற்றும் கருணா கொலைக்குழுக்களை சேர்ந்தவர்கள் ஐ நா ஆணையாளரின் வருகையினையொட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்திருக்கிறார்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றும், அவர்களே தமிழர்களுக்கு இதுவரை பிரச்சினையாக இருந்தார்கள் என்றும், அரசு தமிழர்களைக் காத்து வருகிறதென்று எழுதப்பட்ட பதாதைகளை இத் துணைராணுவக் குழுவினர் தாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. துணைராணுவக் குழுக்களுக்கு பக்கதுணையாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சிகல உறுமய மற்றும் மக்கள் விடுததலை முன்னணி ஆதரவாளர்கள் பொய்யான சாட்சிகளை திருகோணமலை செயலகத்திற்கு அழைத்துவந்து நவிப்பிள்ளையின் முன்னால் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆர்ப்பாட்ட நாடகம் ஒன்றினை நடத்தியதாகவும் தெரியவருகிறது. ராணுவத்தினரினதும், கருணா பிள்ளையான் கொலைக்குழுக்களினதும் அச்சமூட்டும் மிரட்டல்களுக்கு மத்தியிலும்கூட சில தமிழர்கள் ஆங்காங்கே கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், காணாமற்போனவர்களுக்கான நீதிவழங்கல், அத்துமீறிய அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் மீள்குடியேற்றம் பற்றி பேசியதாகவும் தெரிகிறது. நவிப்பிள்ளையின் வருகையினையொட்டி முஸ்லீம்கள் பெரியளவில் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கவில்லையென்று தெரிகிறது. சம்பூர் பகுதியிலிருந்து ராணுவத்தால் விரட்டப்பட்ட அகதிகள் தங்கியிருந்த கிளிவெட்டி தங்கு முகாம் மற்றும் நாவலடி, வெருகல் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த தமிழர்களையும் சந்தித்ததாகத் தெரியவருகிறது. ஆணையாளரைச் சந்தித்த தமிழ் சமூக அமைப்புக்கள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட சைவக் கோயில்கள், சிங்களமயமாக்கப்படும் தமிழர் தாயகம், மீள்குடியேற்றத்தில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள், அகதிமுகாம்களின் இன்றைய அவலநிலை என்பன பற்றிய விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்ததாகத் தெரியவருகிறது. இதேவேளை, கடந்த 2 அல்லது 3 வருடங்களாக தமிழர்களுக்கு வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப்பொருட்களுக்கான அட்டைகளை அரச அதிகாரிகள் அவசர அவசரமாக வழங்கியதைக் காணமுடிந்தது என்று உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், ஆணையாளரின் வருகையினையொட்டி, இதுவரை காலமும் அகதிமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 400 தமிழர்களை ராணுவம் அவசர அவசரமாக கூனித்தீவில் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் குடியேற்றியிருப்பதாகவும் தெரிகிறது. சிங்கள ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுனர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் ஜயவிக்கிரம மற்றும் திருகோணமலை அரச அதிபர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டி டி ஆர் டி சில்வா ஆகியோர் ஆணையாளருடன் மேற்கொண்ட சந்திப்புக்களை உள்ளூர்பத்திரிக்கையாளர்கள் பார்வையிடுவதற்கு பொலீஸார் அனுமதிக்கவில்லை. இலங்கை ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளுடனான நவிப்பிள்ளையின் சந்திப்பிற்கு மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.1 point- கருத்து படங்கள்
1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, ஆவணி 2013 தமது மீள்குடியேற்றத்திற்காக புலம்பெயர் தமிழர்களிடம் உதவிகோரும் அரசாலும், அரச தூனைராணுவக் குழுக்களாலும் கைவிடப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் அமைப்புக்களும் இலங்கை அரசு ஊடாகவும், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மீள்குடியேற்ற அபிவிருத்தித் திட்டங்களைச் செய்துவருவதாக திரும்பத் திரும்பக் கூறப்பட்டாலும் கூட இந்த உதவிகள் எவையுமே பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை வந்தடையவில்லை என்று அம்பாறை மாவட்டத்தில் ராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து அவதியுறும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். அரச நிறுவனங்களிலிருந்து தமக்கு எதுவித உதவிகளும் கிடைக்கப்போவதில்லை என்று கூறும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள், தமது மீள்குடியேற்றத்திற்கு புலம்பெயர் அமைப்புக்களும், தனிநபர்களும் உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். திருக்கோயில், நாவிதான் வெளி, ஆலையடி வேம்பு, கல்முனைத் தமிழ்ப் பகுதி மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் சுமார் 6 வருடங்களுக்கு மேலாகியும் உறுதியளிக்கப்பட்ட மீள்குடியேற்ற உதவிகளை அரசோ அல்லது அரசின் மீள்குடியேற்றத்திற்கான துணையமைச்சராகவிருக்கும் துணைராணுவக்குழுத் தலைவர் கருணாவோ இதுவரையில் எதுவிதமான உதவிகளையும் தமக்கு வழங்கவில்லை என்றும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தால் இடம்பெயர்க்கப்பட்ட தமிழர்கள். இம்மாவட்டத்தின் அனைத்துத் தமிழ்க் கிராமங்களிலும் நன்னீருக்கான கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும், பெருமளவு பிள்ளைகள் போஷாக்கிண்மையினால் அல்லற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் இருக்கும் தாய்மார்கள் இதுபற்றித் தெரிவிக்கையில், தமது வீட்டிற்கான குடிநீருக்காக பல கிலோமீட்டர்கள் நடந்தே சென்றுவரவேண்டியிருப்பதாகவும், பல நேரங்களில் சுகயீனமுற்றிருக்கும் தமது குழந்தைகளை வீட்டில் தனியே விட்டிவிட்டே தாம் செல்வதாகவும் கவலைப்படுகின்றனர். மீள்குடியேற்றம் என்கிற பெயரில் இக்குடும்பங்கள் தற்காலிகக் கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், இம்மக்களின் வீடுகளும், விளை நிலங்களும் அழிக்கப்பட்டு காடுகளாக மாறிவருவதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள். இக்கிராமங்கள் யுத்த காலத்தில்கூட தன்னிறைவான நிலையில் இருந்ததாகவும், இப்பகுதியில் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட வாழ்வாதார அழிப்பினால் இன்று இந்த மக்கள் மற்றையவர்களிடம் கையேந்தும் நிலையினை அரசும் அரசின் ஏஜெண்டுக்களும் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. பலவிடங்களில் தனித்தனியாக தங்கவைக்கப்பட்டுள்ள இக்குடும்பங்கள் தமக்குள் ஒன்றாக இணைந்து தமது பகுதியை அபிவிருத்தி செய்வதையோ, தமது அடிப்படை வசதிகளை நிர்மாணிப்பதையோ அரசும் அரசின் துணைராணுவக் குழுக்களும் தடுத்துவிட்டதாக மேலும் இம்மக்கள் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள். அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் பிரதேசத்தில், தங்கவேலாயுதபுரம், காஞ்சிரங்குடா, கஞ்சிகுடிச்சியாறு மற்றும் உடும்பன்குளம் ஆகிய தமிழ்க் கிராமங்கள் அரசால் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும், மீள்குடியேற்றத் துணையமைச்சரான கருணா தமது அவலங்கள் பற்றி அக்கறை கொண்டவராகத் தெரியவில்லையென்றும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 450 குடும்பங்கள் வசித்து வந்த தங்கவேலாயுதபுரத்தில் அரச துணை ராணுவக்குழுக்களினதும், தொடர்ச்சியான அரச ராணுவ அடக்குமுறையினாலும் பெருமளவு குடும்பங்கள் வெளியேறியுள்ள நிலையில் தற்போது 89 குடும்பங்கள் மட்டுமே இப்பகுதியில் பல சவால்களுக்கு மத்தியிலும் வசித்துவருவதாகத் தெரிகிறது. இதே வகையான அவல வாழ்வே இப்பகுதியில் பல கிராமங்களிலும் தொடர்வதாக மக்கள் மேலும் தெரிவித்தனர். ஐரோப்பிய அபிவிருத்தி நிலையத்தினால் கட்டப்பட்ட இரு நன்னீர்க் கிணறுகளைத்தவிர இப்பகுதியில் வேறு கிணறுகள் ஏதும் அரசால் இதுவரையில் அமைக்கப்படவில்லையென்றும் தெரியவருகிறது. அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இப்பகுதி மக்கள் தமது நன்னீர் தட்டுப்பாடு பற்றி மேலும் கூறுகையில், இப்பகுதியில் பாரிய கற்பாறைகள் இருப்பதால், இவற்றினைக் குடைந்து கிணறுகளை வெட்டுவதென்பது தமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் என்றும், இப்பகுதியில் குறைந்தது 30 அடிகள் வரை தோண்டினால் மட்டுமே நீரைப் பெறுதல் சாத்தியம் என்றும் தெரிவிக்கின்றனர். இப்பகுதிச் சிறார்கள் குறைந்தது 7 கிலோமீட்டர்கள் நடந்தே தமது பாடசாலைக்குச் செல்லவேண்டியிருக்கிறது. கஞ்சிகுடிச்சியாறு பாடசாலையில் இன்றுவரை இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வசித்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இப்பகுதியில் ஒவ்வொரு வீட்டின் நிர்மாணத்திற்கும் என்று தலா 320,000 ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக அரசு கூறினாலும், இதுவரை ஒன்று அல்லது இரண்டு வீடுகள் மட்டுமே பார்வைக்காகக் கட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகள் பற்றி அரசோ கருணாவோ பேசுவதில்லை என்று மக்கள் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இப்பகுதியில் உலவும் யானைகளினால் பல வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்க் கிராமங்களுக்கிடையே தொடர்பினை ஏற்படுத்தக்கூடிய தற்காலிகள் வீதிகளைக் கூட அரசு அமைத்துத்தர மறுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தமிழர்கள் சிங்கள அரசாலும், அரசின் துணைராணுவக் குழுக்களாலும் திட்டமிட்ட ரீதியில் வாழ்வாதார அழிப்பிற்கும், புறக்கணிப்பிற்கும் உட்பட்டு அவதிப்பட்டுவரும் அதேவேளை இக்கிராமங்களுக்கு அப்பாலிருக்கும் சிங்கள முஸ்லீம் கிராமங்கள் அரசினாலும், முஸ்லீம் அமைச்சர்களினாலும் வெகுவாக அபிவிருத்தி செய்யப்பட்டுவருவதாகத் தெரிகிறது. இதற்குமேலதிகமாக பல கரையோரத் தமிழ்க் கிராமங்கள் அபிவிருத்தி எனும்பெயரில் சிங்களவர்களால் குடியேற்றப்பட்டு வருகின்றன என்றும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய முகாம் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் தமது அவலம் பற்றிக் கூறுகையில், முன்னர் 300 குடும்பங்கள் வாழ்ந்துவந்த இக்கிராமத்தில் தற்போது வெறும் 150 குடும்பங்கள் மட்டுமே வசிப்பதாகவும், தமது கிராமத்தின் ஒருபகுதியில் மற்றைய இரு இனங்களையும் சேர்ந்த குடும்பங்கள் அரசால் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள்1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 வரவேண்டும் நபியே தருணம் எந்த துன்பம் வந்த போதும் துணிந்து நில்லு1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, ஆவணி 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான ஆதரவுக்காக மக்களை வஞ்சித்த கருணா உன்னிச்சைக் குளத்தின் இடப்புற வாய்க்கால் பகுதியிலிருக்கும் சுமார் 1830 ஏக்கர் விவசாய நிலம் நீரின்றி வறண்டு போகும் நிலையினை அடைந்திருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதற்காக இப்பகுதிமக்களைப் பழிவாங்க மகிந்தவின் கட்டளையின்பேரில் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இப்பகுதிக்கான நீர்வழங்கும் நீர்க்கதவுகளை முற்றாக மூடிவிடுமாறு பணித்துள்ளதால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளரை இது தொடர்பாக கண்டித்திருப்பதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ப. செல்வராசாவிடம் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றினையும் பதிவுசெய்துள்ளனர். மேலும், இந்தப் பழிவாங்கல் நடவடிகையில் தொடர்புபட்ட அதே பொறியியலாளர் மகிந்தவின் அரசுக்கு நெருக்கமானவர் என்று அறியவருவதுடன், கடந்த மாதம் கொழுவாமடு, வாகனேரி பொத்தானைப் பகுதியில் கமச்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதில் நேரடியாகப் பங்குபற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தத் தாக்குதலில் 22 விவசாயிகள் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து கருணாவின் நெருங்கிய சகாவான இந்தப் பொறியியலாளருக்கும், கருணாவுக்கும் எதிரான கண்டனப் போராட்டம் ஒன்றினை இப்பகுதி விவசாயிகள் நிகழ்த்தியதும் நினைவிலிருக்கலாம்.1 point- கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
கை குலுக்கும் கலாச்சாரம் போச்சு எமது கலாச்சாரம் எட்டி பார்க்குது.1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
இது நியாயம்... நன்றியுணர்வு இங்க தான் பிரச்சினை ஆரம்பம். பணம் கிடைச்சா மனம் என்னவெல்லாம் சொல்ல, செய்ய தூண்டும். கடவுளுக்கு நன்றியுணர்ச்சி, இதுவரை வேலை தந்த முதலாளிக்கு நடுவிரல். நல்ல ஆரம்பம் சிறி அண்ணா. தொடருங்கள்...1 point- மாஸ்க் எடுத்தாச்சே
1 pointஆக மொத்தத்தில மனுஷாள் யாரும் எப்ப கொறோனா ஒழியும் எண்டு கேட்கேல! வழமையான உங்கள் பாணியில் ஒரு நகைச்சுவைக் கதையைத் தந்தமைக்கு நன்றி புத்தன். மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.1 point- பரிசு.
1 pointநான் இத்தனை நாளா வாலி மட்டும் தான் வாலிபக் கவிஞர் என்று நினைச்சிட்டிருந்தன். இப்ப தான் விளங்குது சுவி அண்ணாவுக்குள்ளும் ஓர் வாலிபக் கவி இருக்கிறார் என்று. வயதாக ஆக வாலிபர்களாவது அபூர்வம். வீட்டில திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கோ. காதல் ரசமுள்ள கவிதைக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் அண்ணா.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointsiya (67 years old) தமிழ் சிறி (13 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி & சிவா......! 💐1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointதாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏1 point- மாஸ்க் எடுத்தாச்சே
1 point- மாஸ்க் எடுத்தாச்சே
1 pointகோவிலுக்குப் போனால் முதல் அலையவிடுவது எந்த எந்த சாமிக்கு முன்னால் தாம்பாளங்களில் இருப்பதை எண்ணாமலே கணக்கிட்டுவிடுவேன். இதுகளை பார்ப்பதெங்கே மாஸ்கை பார்ப்பதெங்கே?1 point- மாஸ்க் எடுத்தாச்சே
1 pointஅட உங்களுக்கு அந்தளவுதானும் வருகிது சந்தோசப்படுங்கோ . நமக்கும் ஐய்யர்வாளுக்கும் கீரியும் பாம்பும் தோஷம் .1 point- மாஸ்க் எடுத்தாச்சே
1 pointபுத்தன்.....என்று தணியும் இந்த முருகனின் தாகம்?😄 சிட்னி முருகன் ....எல்லோரையும் கவர்ந்து கொள்வதன் மர்மம் என்ன என்று பல தடவைகள் சிந்தித்தது உண்டு..! அடையாளங்களைத் தொலைத்த எமது இனத்துக்கு, அவன் ஒரு அடையாளமாக இருக்கிறான் என்று நினைக்கிறேன்...! கதையின் கருப்பொருள், காலத்தின் தேவை...! விண்ணை வென்று விட்டதாகப் புலம்பும் மனிதனை.....ஒரு கண்ணுக்குக் கூடத் தெரியாத கொறோனா வைரஸ் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது? கதை....அருமை....!!!1 point- மாஸ்க் எடுத்தாச்சே
1 pointசிட்னி முருகனை விட்டு வேறு எங்காவது மூவ் பண்ணி இருந்து பாருங்கள். வேறு கருப் பொருள் எழுதக் கிடைக்கும்.1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point- பரிசு.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- குட்டிக் கதைகள்.
1 pointதயவு செய்து மகிந்த கூட்டத்துக்கு இந்தக் கதையைச் சொல்லிப்போடாதீர்கள், தானாச் சீனா!🤭1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.