Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  2. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    9976
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/24/21 in all areas

  1. சுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா ஓ ....வீரனே ...... திறந்திருக்கும் உன் விழிகளில் இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி விழுந்து கிடக்கும் உன் உடல்கூட முட்களையும், கற்களையும் ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.........!
  2. நாட்டுக்கு போக வெளிக்கிட்டார்கள் இருவரும் பயணம் தயாரானது விமானம் வெளிக்கிடுகிறது மாஸ்க போடுங்கள் , நீ என்ன சாறி கட்டாமல் ரவுசரோட வாரநீ? ஊருக்க போய் சாரியை கட்டுறன் போதுமா? நீங்க அங்க போனதும் கைக்கு குளவுஸ்சோடதான் திரிய வேண்டும் ம்ம் பயணம் முடிந்து நாட்டை வந்தடைகிறார்கள் இருவரும் .சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா என்பது போல திறந்த வெளிச்சிறைச்சாலையானாலும் அங்கே முழுமூச்சை இழுத்து விடும் போது அந்த மூச்சின் சுதந்திரத்தை அனுபவிக்கிறார் மாணிக்கவாசகர். இலங்கை போரின் பின்னர் புதிய கண்ணாடிக் கட்டிடங்கள் மெதுவாக நகர்புறங்களில் முளைத்து வளர்ச்சியடைவதையும் பாதைகள் சீராக இருப்பதை பார்த்தவாறே மட்டக்களப்பு விரைகிறார்கள். ஆனாலும் இலங்கையென்பது எத்தனை யுகங்கள் ஆனாலும் தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடாது என்று என்று அவர் மனத்துக்குள் ஓர் விம்பம் திரைவிரித்து செல்கிறது .மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது எனும் பெயர் பலகையைப்பார்த்த பின்னர் தான் தன் கால்களுக்கு ஓர் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மூட்டுவலி வந்த முழங்கால் வலி இல்லாமல் ஓடித்திரியவும் புழுதியில் நடக்கவும் புதிதாக நடை பழக எண்ணிய குழந்தைபோல தான் வளர்ந்த ஊரை சுற்றிப்பார்க்க துடிக்கிறது மாணிக்கவாசகர் மனது ஊரை( கல்லடி) வந்தடைகிறார்கள் ஊரில் மாணிக்கவாச்காரின் அக்காவின் வீடு மேல்மாடி இவர்களுக்காக தயாராக இருந்தது வீடு வந்தவர்களை பொது சுகாதார பரிசோகதருக்கு அறிவிக்கிறார் அக்கா. அவர் வந்து பி சி ஆர் பரிசோதனையெல்லாம் முடிந்ததா? ஓம் எல்லாம் கொழும்பில முடிச்சிட்டம் சரி இருந்தாலும் வெளியில் அதிகமாக நடமாடாதீர்கள்.. சரி என உறுதி வழங்கிய பின்னர் அவர் நகர்கிறார். நலன் விசாரிப்புகள் தொடர்ந்த பின்னர் மாணிக்க வாசகர் குளிக்க செல்கிறார் குளித்து முடிந்து வந்த அவர் சரத்தை கட்டிக்கொண்டு காலில் செருப்பை மாட்டிக்கொண்டு ஓடத்தயாராகிறார் அந்த கல்லடி பாலத்துக்கு எங்க போறீங்க அவசரமாக?? இந்த கல்லடி பாலத்துக்குத்தான் போயிட்டு வாரன் ஒரு டீ , சாப்பாடு ஏதாவது சாப்பிட்ட்டு போகலாமே? வேனில வரக்குள்ள சாப்பிட்டது இன்னும் சமிக்கல நான் நடந்து போய் வந்தால் சமிச்சிடும் என்று சொல்லிவிட்டு போகிறார் பசியும் மறந்து ஊர் நினைவும் நண்பர்களுடன் கூடி ,மகிழ்ந்த நினைவும் யாரைத்தான் விட்டு வைத்தது. போய் வந்த பிறகே பல நினைவுகளை பாலம் இன்னமும் சுமந்து நிற்பதை அறிகிறேன். என்னைப்போன்றவர்களின் பலநினைவுகளைசுமந்து பழைய பாலமும். எப்போதும் புதிதை கண்டால் மனிதன் பழையதை மறந்துவிடுவார்கள் ஆனால் பழையது பழையதுதான் காதலாகட்டும் , கடந்த கால நினைவுகளாகட்டும் மனதில் நின்றுகொண்டே பயணம் செய்யும் மரணிக்கும் வரை. அந்த நினைவுகளுடன் விடு வருகிறார் மாணிக்க வாசகர் அன்றிரவே எந்த குழுசையும் இல்லாமல் நிம்மதியான நித்திரையை அணைத்துக்கொள்கிறார். அடுத்த நாள் காலை பரிமளம் சொன்ன பிள்ளையின் வீட்டுக்கு இருவரும் செல்கிறோம் வேகம் கூடிய மோட்டார் சைக்கிளும் ,அதிக வாகனங்களும் கொஞ்சம் கூட பொறுமைஇல்லாத சாரதிகளும் , பெரிய மதில் சுவர்களும் யாரும் எட்டிப்பார்க்க முடியாத மதில் சுவர்கள் ஒரு மாடி வீடு ஒரு கார் என்றும் தானும் தன்ற குடும்பமும் என்ற சுவரை மனதில் எழுப்பி காலத்தின் மாற்றத்தில் நகர்புறங்களில் நாகரீகத்திலும் வாழ்வதைக்காணக்கூடியதாக இருந்தது . அவர்கள் வீட்டை அடைகிறோம் பிள்ளையை பார்த்ததும் மனிசிக்கு பிடித்து போகிறது. சீதனம் வேண்டுமென்றவள் சீதனம் கீதனம் ஒன்றும் வேண்டாம் பெண்னை மட்டும் கொடுங்கள் என்றதும் எனக்கும் அவளை மருகளாக ஏற்றுக்கொள்ள மனம் ஏங்கியது . மகனும் கதைத்ததா உங்கள் நம்பர், பேஸ்புக் ஐடி எல்லாம் கொடுத்தேன் அவனிட்ட கோல் எடுக்கலயா? என்று கேட்க அவள் தலையை அசைத்தும் அசைக்காமலும் இருந்தாள் . அந்த அசைவில் நான் புரிந்து கொண்டேன் அவன் இவளும் கதைக்கவில்லையென . என் மனைவி லண்டனைப்பற்றிப் புழுக ஆரம்பித்தாள் அவளுக்கு அவள் மனதில் ஓர் மாய‌விம்பத்தை ஏற்படுத்துகிறாள் ஆனால் அவை வெளியுலக வாழ்க்கையே ஆனால் கல்யாண வாழ்க்கை இருமணம் இணைந்து வாழும் உள்ளக வெளியக வாழ்க்கை என்பது எனக்கு மட்டுமே தெரிந்தது . நலன் விசாரிப்புக்களும். தேநீர் உரையாடல்களுடன் அவளுடைய ஜாதகம் வாங்கி விடைபெறுகிறோம். மனைவி ஐயரை தேடிச்செல்கிறாள் நானோ மீண்டும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ மீண்டும் நாட்டுக்கு வர எண்ணி மாமாங்கேஸ்வரயும், கொக்கட்டிச்சோலையானையும் ,களுதாவளை பிள்ளையாரையும் , வெளிச்சவீடு, கச்சேரி இருக்கும் கோட்டை பகுதியியையும் , முகத்துவார கடற்கரையும் காணச்செல்கிறேன் ஓர் ஆட்டோவைப்பிடித்து. நாட்கள் கரைகின்றது விடுமுறை முடியும் தறுவாயில் அந்த பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறேன் . வாங்கோ அண்ணா என அந்த பிள்ளையின் அம்மா உள்ளே அழைக்கிறாள் என்ன நீங்கள் மட்டும் தனிய வந்திருக்கிறியள்? ஒன்றும் இல்லை மனிசி ஐயருட்ட போய்ட்டா நான் பிள்ளையோட கொஞ்சம் கதைக்க வேணும் அதுதான் வந்தேன் ஓஅப்படியா! இனி வந்துடுவா என்றது பிள்ளையும் வருகிறது வாங்கோ மாமா எப்ப வந்த நீங்கள் இப்பதான் மகள் ஓ சாப்பிட்ட நீங்களா ஓம் சாப்பிட்டன் உங்களுடன் மகள்கொஞ்சம் கதைக்க வேண்டும் ஓ கதைக்கலாமே. தொடரும்
  3. புரட்டாதி 2020 ஐரொப்பா எங்கும் கொரோனா பயங்கரமாக தலைவிரித்தாடிய மாதம் ஐரொப்பிய நாடுகள் தம்மிடையேயும் பிற நாடுகளுக்கிடையேயும் எல்லைகளை மூடியும் விமானப்பறப்புக்களை புறக்கணிக்கவும் தொடங்கிய நேரம். பிள்ளைகளுடன் ஆவணி மாத விடுமுறை முடியும் வேளை நான் 10 நாள் வேறு ஒரு பயணம் போகப்போறேன் என்றேன் அதிசயமாகப்பார்த்தார்கள் (ஆனால் ஆவணி மாதமே வழமையாக பூட்டப்படும் எனது தொழில் புரட்டாதி மத்திவரை பூட்டப்பட்டது அவர்களுக்கு ஏற்கனவே கேள்விக்குறி ஒன்றை தந்திருந்தது) விமானம் ஓடாது என்றார்கள் விமான ரிக்கற் ஏற்கனவே எடுத்தாச்சு என்றேன். விமானம் ஓடாவிட்டால் என்றார்கள் காரில் போவேன் என்றேன் (அப்பா 1400 கிலோமீற்றரை 9 மணித்தியாலத்தில் போவார் என்பதால் எதிர்ப்பில்லை) அப்போ அங்க நீங்கள் சந்திக்கப்போறவரின் வயது கருதி உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யணும் என்றார்கள். அதற்கென்ன செய்தாப்போச்சு என்றவுடன் மலைப்பகுதியிலேயே பரிசோதனைக்கு நேரம் எடுத்து தந்தார்கள் கொரோனா தொற்று இல்லை என்று வைத்தியர் தந்த அந்த பத்திரத்தை கவனமாக என்னுடன் வைத்துக்கொண்டேன் (விமான நிலையத்தில் உதவலாம் என்பதற்காக) ஓய்வு முடித்து வந்த அடுத்த நாள் விமானநிலையத்தில் விட்டு விட்டு சென்றார்கள் (அவர்களுக்கு நம்பிக்கையில்லை நான் பறப்பேன் என்று) விமான நிலையத்தில் எந்த எதிர்ப்புமில்லை. தொடர்ந்து ஒவ்வொரு வாசலாக முன்னேறிக்கொண்டிருக்கின்றேன். விமானம் ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன் நீண்ட வரிசையில் நிற்க வைத்து துப்பாக்கி போல் எதையே நெற்றியில் வைக்கிறார்கள். ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு சூடாக இருக்கு அது வேற நெற்றியை சூடாக்கிக்கொண்டிருக்கு அதைவிட வெய்யில் வேற??? நெற்றியை தொட்டுப்பார்க்கிறேன் சூடாகத்தான் இருக்கு அடப்பாவிகளா அவ்வளவு தானா??? ஆனால் அடிக்கடி பிரெஞ்சு அரசாங்கம் சொன்னபடியே உள்ளது வயதானவர்களை இந்த நேரத்தில் அரவணையுங்கள் சென்று பாருங்கள் அவர்களை தனிமையில் விட்டு விடாதீர்கள்... அது ஒன்று மட்டுமே எனது மனதில் ஓடியபடி???? தொடர்வோம்
  4. மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔 நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪
  5. சொல்லுங்கள் மாமா .........இங்க பார் மகள் எனக்கும் ஓர் பெண் பிள்ளை இருக்குறா நான் பெய்ய சொல்ல விரும்பல உண்மைய சொல்கிறன் நீ என்ற மகனுடன் கதைச்ச நீயா ? தயங்கியவள் இல்ல மாமா நான் கோல் எடுத்த நான் ஆனால் அவர் ஆன்சர் பண்ணல. ம்ம் தெரியும் அவனுக்கு கல்யாணம் கட்டுற ஐடியா இல்ல. என்ற மனிசி சொன்னது எல்லாம் பொய் அவன் உன்ற வாழ்க்கைக்கு சரிவரமாட்டான். அவன் அந்த நாட்டு வாழ்க்கை வாழ்கிறான் உன் வாழ்வை கெடுத்துக்கொள்ளாதே நல்லா இரு மகள் உனக்கும் கையில் வேலை இருக்கிறது நல்ல பெடியனா பார்த்து கல்யாணம் கட்டு என ஏக்கத்துடன் . சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.மாணிக்கவாசகர் வரும் வழியில் தான் வெளிநாட்டு வாழ்கையில் தன் பிள்ளையைக்கூட ஒழுங்காக வளர்க்க முடியாத நாட்டில் வாழ்ந்து தொலைக்கிறோமே என் எண்ணியும். தனக்கும் ஓர் பெண் பிள்ளை இருப்பதை எண்ணியும். தன் காலில் உள்ள தடத்தையும் எத்தனை கண்டிப்பு எத்தனை அடி தன் தகப்பனின்ற வாங்கி நான் வளர்திருப்பேன். ஆனால் தற்போத்ய வாழ்வில் தங்கள் பேச்சைக்கூட கேட்காத பிள்ளையை வளர்த்த என்னிடம் எந்த பிழையும் இல்லை. நாடும் சட்டமும் நாகரிகமும் நம்மை நமது வாழ்வையும் தொலைத்து தொலைவில் கொண்டுபோய் விடுகிறது என எண்ணி வீடு செல்கிறார். அடுத்த நாள் கொழும்பு விமான நிலையம் வருகிறோம் ஐயர் என்ன சொல்கிறார்? ஐயர் கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்கிறார் ஓ அப்படியா மனிசி கோல் எடுக்கிறா அந்த பிள்ளையின் வீட்டுக்கு ஹலோ ரம்யாவா ஓம் சொல்லுங்க மாமி ஐயர் வந்து கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்லுறார் நான் இங்குள்ள ஐயரிட்ட காட்டியும் உங்களுக்கு கல்யாணம் வைக்கிற தேதிய‌ சொல்லுறன் சரியோ சரி மாமி கவனமாக போய்வாருங்கோ ஓம் நான் வைக்கிறன் . சரி லண்டன் வந்த அவர்கள் மீண்டும் அவர்கள் வந்திறங்கியதை அறிவிக்க அழைப்ப்பு எடுக்கிறார் சாரதா. ரம்யாவின் போண் நிறுத்தப்பட்டு இருந்த்து . இஞ்சாருங்கோ போண் வேலை செய்யுதில்லை பரிமளத்த்க்கு எடுத்து பாரேன் என நான் சொல்ல. பரிமளம் அக்கா ரம்யா போண் வேலைசெய்யுதில்ல ஏன்? ஓ அதுவா அவளுக்கு லண்டன் வர விருப்பம் இல்லையாம் ஏனாம் அவளுக்கு விருப்பம் இல்ல? அவளுக்கு யாரோ என்னவோ சொல்லி இருக்காங்கள் போல கல்யாணத்துல விருப்பம் இல்லெண்டு சொல்லுறாள் . நாம பாவம் என்று பார்த்து வெளிநாட்ட்டுக்கு எடுத்து விடுவோம் என பார்த்தால் கழுதைக்கு விருப்பம் இல்லையாமா? அவள் இல்லாட்டி ஆயிரம் பொட்டைகள் கிடைப்பாள் என கடுங் குரலுடன் போணை வைத்தாள் சாரதா . இஞ்சாருங்க அந்த பெட்டை கல்யாணம் வேணாம் என்று சொல்லுதாம், அவளுக்கு இங்கு வந்து வாழ கொடுத்து வைக்கல ஆரோ என்னவோ சொல்லி இருக்காங்களாம். நீங்கள் ஏதும் சொன்ன நீங்களோ? நான் என்ன சொல்ல போறன் நான் சில இடங்களை பார்க்கல எண்டு இருக்கன் நீ வேற.... ஓ உங்களுக்கு இடம் பார்க்கிரதுதான் முக்கியம் போல? சரி சரி விடு வேற யாரையெண்டாலும் பார்ப்போம் என மாணிக்கவாசகரும்... என் மனதிற்குள் நான் செய்தது நன்மையா , தீமையா, நல்லதா, கெட்டதா என என்மனம் ஆயிரம் கேள்விகள் கேட்டு உறுத்திக்கொண்டே இருக்கிறது உறுத்துகிறது நல்லது என நினைத்தால் நல்லது கெட்டது என நினைத்தால் கெட்டது நல்லதுதான் செய்திருக்கிறேன் என உறுதிகொள்கிறார். மகளை வீட்டுக்கு அழைக்க போணை எடுக்கிறார். அப்போது அடுத்த மெசேஞ் வருகிறது காணொளியாக அதை திறந்த போது அங்கு P2P பேரணி சுமந்திரனும் , சாணாக்கியரும் பேரணி நடத்துகிறார்கள். சாரதா அந்த குளிசைப்போத்தல எடுத்துவா பிரசர் கூடுனமாதிரி இருக்கு என்று கூறி போணை ஓவ் செய்கிறார் மாணிக்கவாசகர். முற்றும் கற்பனையும் உண்மையும் சேர்த்து நன்றி உடையார் உங்கள் கருத்துக்கு
  6. இந்த பூமி எங்களுக்குமானதுதான் ....... இப்படிக்கு 🦢
  7. ஏன் என்ன ஆச்சு பிரசர் கூடிட்டுது போல இருக்கு எதுக்கு இந்த கோதாரி பிடிச்ச வீடியோக்களை பார்க்குறீங்க நீங்க??. எனக்கென்ன விருப்பமா நாட்டில இருந்து அனுப்பிவிடுறாங்கள் சரி சரி அந்த சோபாவில இருங்க முதலில் ம் ம் . அப்பாடா நீ என்ன சொன்ன?? சைக் லண்டனா? அடியேய் நான் உன்ன இங்க கல்யாணம் கட்டி எடுக்காட்டி நாட்டில கருவாடு வித்திட்டு இருந்திருப்ப . நான் எதுக்கு கருவாடு விற்கபோறன் என்ற படிப்பிக்கு நான் வேலை எடுத்திருப்பன் ம்கூம் உன்ற படிப்புக்கு வேலை வேறா அடகடவுளே என்று இழுத்தார் மாணிக்கவாசகர் . நான் உங்களை கல்யாணம் கட்டாட்டால் நீங்கள் வெள்ளைக்காரியத்தான் கல்யாணம் கட்டி இருக்கணும் உங்க அரியெண்டம் தாங்க முடியாமல் அவளே உங்கள விட்டுட்டு ஓடியிருப்பாள். நானெண்டபடியால் உங்கள தாங்கிக்கொண்டு இருக்கன். அட பார்ரா புதுனத்தை ........... சரி சரி மகள் யமுனா எங்க? அவள் ஏதோ வகுப்பாம் என போயிருக்கா இனி வருவா. ம்ம் உன்ற புதல்வன் எங்க அதோ வாரான் . மகன் இஞ்ச வாங்க என்று அம்மா கூப்பிட மகனோ என்ன சொல்லுங்க நேரம் இல்ல எனக்கு மாணிக்க வாசகர் மனதுக்குள் (ஒரு வேலைக்கு போக துப்பில்லை இவனுக்கு நேரம் வேற போகுதாம்) ஒன்றும் இல்லை ஊரில ஒரு பெண் பார்த்திருக்கம் உனக்கு கல்யாணம் கட்டி வைக்க எதுக்கு அவசரம்? எனக்கு கல்யாணம் கட்ட இஸ்டம் இல்ல உன்ற மனுசருக்கு இன்னொன்றை பார்த்து கட்டி வையும் ( மாணிக்கவாசகர் மனதுக்குள் சிரிக்கிறார் நான் என்ன வேணாம் என்றா சொல்ல போறன்) காலம் முழுவதும் ஒருவளைக்கட்டிக்கொண்டு இழுத்துக்கொண்டு திரிய என்னால் முடியாது என்றான் அவன். அப்படி சொல்லாத மகன் நம்மட கலாச்சாரத்துக்கு ஏற்றமாதிரித்தான் நாம வாழணும் நாட்டை விட்டு வந்தாலும் நீங்கள் ரெண்டு பேரும் இங்க பிறந்தாலும் நாம் தமிழர்கள் தெரியுமோ? அதுக்கு என்ன இப்போ என மாறி கேட்கிறான் அவன் நாங்கள் இந்த நாட்டு பிரஜைதான் வேணுமென்றால் நீங்கள் இருவரும் உங்கட நாட்டுக்கு போங்க என்றான் அவன் மாணிக்க வாசகர் நடப்பதை பார்த்தும் கேட்டுக்கொண்டிருந்தார் ஒன்றும் பேசாமல். ஏனென்றால் அவர் அவன் விருப்பத்துக்கு நடப்பதால் அவனிடம் கதைப்பது குறைவு. என்பதை கதைத்து பல ஆண்டுகள் மாணிக்க வாசகர் ஒரு செருமலை கொடுக்க இருவரும் அமைதியானார்கள் அவர் எழுந்ததும் அவன் வெளியே சென்றுவிட்டான் . அடுத்த நாள் காலை இஞ்சாருங்க அவனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்தால் திருந்திடுவான். நீ நம்புறயா? ஓம். சரி அந்த பிள்ளையிட போட்டோவ காட்டு இப்ப எல்லோரும் பேஸ்புக், வட்ஸ் அப் அது இது எண்டு எல்லாம் வச்சிருக்கு பேசிப்பழகினால் சந்தோசம் ஆனால் எனக்கு இதில் துளியும் நம்பிக்கை இல்லை என்றார் மாணிக்கவாசகர். சரி நீங்கள் டிக்கட்ட போடுங்கள் போவோம் நாட்டுக்கு போய் அந்த பெண் வீட்டாருட்ட ஜாதகம் எல்லாம் வாங்கி ஐயரிட்ட காட்டி பொருத்தம் எல்லாம் பார்த்து சீதனம் பற்றி பேசணும் எதுக்கு சீதணம்? பின்ன ? அதை வேண்டித்தான் அங்க கல்யாண செலவை முடிக்கணும் சீதணம் வேண்டக்கூடாது... சீதணம் வேண்டாட்டி எப்படி கல்யாணம் முடிக்கிற ? என்றாள் மனைவி அங்க போய் பார்ப்போம் குடும்பம் வசதியென்றால் பேசிப்பார்ப்போம் இருந்தாலும் நாம சீதனம் வேண்டுவது அழகில்லை ம்ம் என்றாள் மனைவி யமுனாவை (மகளை) என்ன செய்வது அவளைக்க்கூட்டிக்கொண்டு போக இயலாது அவள உங்க அக்காவீட்டில விட்டுட்டு போவோம் என்ன ?? ம்ம் தொடரும்...........
  8. பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்" ஒரு குடும்பத் தலைவன். 👨‍🦰 சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன் அவனுக்கு... அன்பான மனைவியும், 💖 பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும் உண்டு. 💗 வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை. ☹️ தனது வருமானத்தால், தன் குடும்பத்திற்கு, சொந்தமாக... ஒரு வீடு 🏦 வாங்க வேண்டும் என்று, கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம். 🎰 நல்ல மனிதர்களுக்கு... 🙏"கூரையை... பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்" 🙏 என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது. தான்... கும்பிட்ட தெய்வம், தன்னை கைவிட வில்லை என்று.... ஆனந்தப் பட்டு, தன்னிடம் அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த, முதலாளிக்கு... "நடு விரலை காட்டி", 🖕 போய்யா... நீயும், உன் சம்பளமும்... நானும், உன்னை மாதிரி... முதலாளி ஆகி காட்டுறேன் என்று... "சணல் பறக்க" பேசி விட்டு... வந்து விட்டான். 😎 மிகுதி... அடுத்த... வெள்ளிக் கிழமைக்குள், தொடரும்... யாழ். களத்தின், சுய ஆக்கத்திற்காக.. தமிழ் சிறி. 🤣
  9. இஞ்சாருங்கோ!! இஞ்சாருங்கோ! பிரித்தானிய பிரஜைகளுக்கான‌ பயணத்தடையை இலங்கை அரசு விலத்தி இருக்கிறதாம் இலங்கைக்கு போவமே!! என்றாள் சாரதா ஏன்? எதற்கு? இப்ப என்ன அவ்வளவு அவசரம் என்றார் மாணிக்கவாசகர். இல்லங்க போனவருசம் போக இருந்தம் இந்த பாழாய் போன கொரானா வந்ததால ஊருக்கும் போகமுடியல நம்ம மகனுக்கும் வயசாகிறது. கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டுமே . ம் அங்க போனால் வெளிநாட்டு சனம் வந்துட்டுது என்று அங்க‌ சனம் ஓடுதாம் கொரானா பயத்தால். அதுமட்டும் இல்லாமல் தனிமைப்படுத்தி விடுவாங்களாம். நாமதானே இங்க ஊசி போட்டுட்டம் அங்க போய் ஊசி போட்டதை காட்டினால் உள்ள விடுவாங்களாம் என்று சொல்லுறாங்களே? அதுமட்டும் இல்லாமல் இலங்கையில இறப்பு வீதம் கூட இங்கத்தயமாதிரி இல்ல குறைஞ்சிட்டுது . நீ ஊருக்க போக பிளான் பண்ணிட்ட சரி நடக்கட்டும் என்றவர். ஊரில உன்ற மகனாருக்கு ஆர் பொண் கொடுப்பார்கள் நான் பரிமளம் அக்காகிட்ட சொல்லிட்டன் அவா பார்த்திருக்கா ஒரு பெண். ஆரு நம்ம குமாரசாமியின்ற மனிசியோ ஓம் ஓம் அவதான் . உன்ற மகன் இங்க திரியுற திரிச்சலுக்கு நாள் தோறும் போதை , கிளப் அது இது என்று இவன் கிடக்குறான் சேருர கூட்டமும் அவனுகள் பழக்க வழக்கத்திற்கும் . ஊரில யாரும் பொண்ணு கொடுப்பாங்களோ? லண்டன் என்று சொன்னால் கொடுப்பாங்கள் தானே!. உனக்கு விசயம் தெரியாதுடி இப்ப அங்குள்ள சனம் வெளிநாடுகள பற்றி நல்லா படிச்சிட்டுதுகள் அதுமட்டும் இல்லாமல் அக்குவேர் ஆணிவேரா எல்லாம் துருவி ஆராய்ஞ்சும் வச்சிருக்குதுகள். நீ என்ன கல்யாணம் கட்டக்க துள்ளிக்குதிச்ச நீதானே இதானா? லண்டன் சைக் இந்த நாட்டில ஆர் இருப்பாங்கள் கதைக்க கூட ஆட்கள் இல்ல கறிவாங்கயும் ஆட்கள் இல்ல என ஞாபகம் இருக்கா?. ஓ அதெல்லாம் நாளாக நாளாக பழகிட்டுதானே .ம் பிள்ள என்ன செய்யுதாம் பிள்ள கிறயுவேற்றாம் ஓ.... ! பிள்ளையும் நல்ல பிள்ளையாம் ஓ! இப்ப ரீச்சிங் கிடைச்சிருக்காம் அது மட்டும் இல்ல நம்ம சாதிதானாம் ஓ! சாதி வரைக்கும் விசாரிச்சு இருக்கிற........... பின்ன நம்ம பிள்ளைக்கு நல்ல இடம் தானே பார்க்கணும் .ம்ம் சரி ஒன்லைனில ரிக்கட் விலையையும் நாட்டில என்ன மாதிரி நிலமையென பார்க்க போணை எடுத்தவருக்கு நாட்டில இருந்து முகநூலில் ஒரு நண்பர் மூலமாக‌ மெசேச் வீடியோவாக வருகிறது அதைப்பார்த்ததும் மாணிக்க வாசகர் அடியேய் அந்த பிரசர் குளிசையை எடுத்துட்டு ஓடிவாடியென அலறினார். இந்த பிக்குவின் வீடியோ தான் முற்று முழுதாக இனவாததை கக்கிய வீடியோவே அது ........... தொடரும் ...😄
  10. சுதந்திரமாய் வாழ நினைத்ததாலும், சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற ஒரேயொரு குற்றத்தினாலும்தான் எம் தலைமை எம்மைவிட்டு தொலைந்து போனது சுவியண்ணா.
  11. நான் உங்களை நேரில் பார்த்ததில்லை சிறியர்.....இப் படத்தைப் பார்த்ததும் ஒரு கெத்தாகவும் அழகாகவும் இருக்கிறது.....கௌபாய் படங்களில் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுடன் கூட வருகின்றவர் போல் இருக்கின்றது......கவி அருணாசலம் சொல்லி வேல இல்ல ....அபாரமான திறமை ஐயா உங்களிடம்......! 🙏 💐
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, மார்கழி 2013 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின்னர் மட்டக்களப்பில் குடியேறிய தமிழர்களை வஞ்சித்த கருணா முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் உயிர்தப்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த சுமார் 1100 குடும்பங்கள் மீளவும் மட்டக்களப்பில் குடியேறியுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் உதவிகள் அனைத்துமே மறுக்கப்பட்டு மிகவும் அவலமான நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். 2004 இல் மட்டக்களப்பிலிருந்து வன்னிநோக்கி இம்மக்கள் இடம்பெயர்ந்தபொழுது, இவர்களின் வீடுகளிலிருந்த பெறுமதியான பொருட்களை அபகரித்துக்கொண்ட கருணாவும் அவரது குழுவினரும், மீதமிருந்த வீடுகளையும், ஏனைய சொத்துக்களையும் அழித்தது நினைவிலிருக்கலாம். இனவழிப்புப் போரின் பின்னர் இவர்கள் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்து குடியேறியபோது அரசசார்பற்ற நிறுவனங்களும், ஐ நா அமைப்புக்களில் சிலவும் இவர்களுக்கான தற்காலிக தங்கு கொட்டகைகளை வழங்கியிருந்தன. ஆனால், அதன்பிறகு இம்மக்களுக்கான அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரியவருகிறது. தமக்கு ஐ நா வினாலும், அரசாரா தொண்டர் நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட கொட்டகைகளைக் கொண்டே தாம் வேறுபடுத்தி அடையாளம் காணப்படுவதாகவும், இப்பகுதியில் பாதிக்கப்பட்ட ஏனைய மக்களுக்கு கொடுக்கப்படும் நிவாரணங்கள் தமது கொட்டகைகளை தாண்டிச் சென்றுவிடுவதாகவும், வன்னியில் புலிகளுடன் இருந்த காரணத்தினாலேயே தாம் இலக்குவைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்தியாவின் இலவச வீட்டுத் திட்டத்திலும் தாம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். கொடூரமான இனவழிப்பு யுத்தத்திற்கு முகம்கொடுத்து, அவலங்களைச் சுமந்து மீண்டும் தமது மாவட்டத்திற்குத் திரும்பியிருக்கும் இத்தமிழர்களுக்கான அனைத்து நிவாரணங்களையும் கருணா தனது அரசியல் பலத்தினைப் பாவித்து தடுத்து வருவதாகவும், தம்மை வந்து பார்ப்பதற்குக் கூட அரச அதிகாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 4000 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் இந்தியாவின் திட்டத்தின்படி, மட்டக்களப்பில் மாத்திரம் 2000 வீடுகள் கட்டப்படுவதாகவும். இவற்றுள் ஒரு வீடுகூட வன்னியிலிருந்து மட்டக்களப்பு திரும்பியிருக்கும் மக்களுக்கு ஒதுக்கப்படவில்லையென்றும், பெரும்பாலான வீடுகள் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்குமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் உயிர் தப்பி, ராணுவ தடுப்புமுகாம்களில் சித்திரவதைகளைச் சந்தித்து, முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு அல்லற்பட்ட இம்மக்கள் கோரளைப்பற்று வடக்கு - வாகரை, கோரளைப்பற்று தெற்கு - கிரான், வவுணதீவு, கோரளைப்பற்று, பட்டிப்பளை, போரதீவுப்பற்று மற்றும் மண்முனைப்பற்று ஆகிய பகுதிகளிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
  13. நிஜத்தை கவிதையில் தந்துள்ளீர்கள், எங்கள் உறவினர்கள் பலரும் ஒவ்வொரு இயக்கத்திலிருந்து எமக்காக மரணித்துவிட்டார்கள், அவர்களின் கனவு எமது விடுதலை, அது என்றோ ஒரு நாள் நடக்கும்
  14. உங்கள் எழுத்துநடை நன்றாக இருக்கு, பலர் இங்கு மாயையில் தான் வாழ்கின்றார்கள், நிஜத்தை தொலைத்துவிட்டு, தொடருங்கள்
  15. அண்மையில் இப்பாடலைக் கேட்க நேர்ந்தது. எனக்குப் பிடித்திருந்தது. சுவி அண்ணா ஏற்கனவே இப்பாடலை இணைத்திருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, புரட்டாதி 2013 முன்னாள்ப் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கத் தொடங்கியிருக்கும் கருணா மற்றும் பிள்ளையான் கிழக்கில் முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கும் கைங்கரியத்தில் கருணாவும் பிள்ளையானும் அரசாங்கத்தால் பணிக்கப்பட்டிருப்பதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆண்கள் மற்றும் பெண் போராளிகளை பலவந்தமாக இணைக்க ஆரம்பித்திருக்கும் இத் துணை ராணுவக் கொலைக்குழுக்கள் அவ்வாறு இணைய மறுக்கும் போராளிகளின் பெற்றோரை அல்லது குடும்பஸ்த்தவர்களைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டிவருகின்றனர் என்று இப்போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை, வெள்ளாவெளி, குடும்பிமலை, வேப்பவெட்டுவான் ஆகிய பகுதிகளில் முன்னாள்ப் போராளிகளின் வீடுகளுக்குச் செல்லும் துணைராணுவக் கொலைக் குழுக்கள் போராளிகளை மிரட்டி வருவதுடன் அவர்களைப் பலவந்தமாக ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தையும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. இறுதிப் போரின்பின்னர் ராணுவத்திடம் சரணடைந்து, புணர்வாழ்வு எனும்பெயரில் கடுமையான உடல், உல சித்திரவதைகளுக்குப் பின்னர் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட பல போராளிகள் இன்னும் மன ரீதியிலான அழுத்தங்களுக்கு உட்பட்டே வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பலர் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே இப்போராளிகளை மிரட்டி ஆக்கிரமிப்பு ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தினை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கொலைக்குழுக்களான கருணாவும் பிள்ளையானும் செய்துவருகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் எஜமானர்களால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரையில் ஒவ்வொரு துணைப்படை உறுப்பினரும் குறைந்தது இரு போராளிகளையாவது ஒரு மாதத்தில் ராணுவத்தில் இணைக்கவேண்டும் என்றும், அப்படி இணைக்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படும் என்றும் கட்டளையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே கருணாவும் பிள்ளையானும், திருமணம் முடித்த அல்லது தனியே இருக்கும் ஆண் மற்றும் பெண் போராளிகளைக் கட்டாயப்படுத்தி இணைத்துவருவதாகத் தெரியவருகிறது. இந்த பலவந்த ஆட்சேர்ப்புப் பற்றி மனிதவுரிமை அமைப்புக்களிடம் தெரிவித்தால் தாக்குதலுக்கு உள்ளகலாம் என்கிற அச்சத்தில் இப்போராளிகள் வாழ்ந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ராணுவத்திடம் சரணடைந்து கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் நடைபிணங்களாக சமூகத்தில் உலவ விடப்பட்டிருக்கும் முன்னாள்ப் போராளிகளை ராணுவப் புலநாய்வுத்துறையும், துணைப்படைக் கொலைக் குழுக்களும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தனது வீட்டிற்கு வந்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் தனது வீட்டிற்கு வந்துபோகும் உறவினர்கள் பற்றிக் கடுமையாக விசாரணை செய்ததாக ஒரு பெண்போராளி கூறினார். அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னாள்ப் போராளிகளுக்கு வழங்கப்படும் ஒரு சில நிவாரணங்களைக் கூட ராணுவப் புல்நாய்வுத்துறையினரும், துணைப்படைக் கொலைக் குழுவினரும் சந்தேகிப்பதாகவும், இவ்வாறான அரச சார்பற்ற அமைப்புக்கள் போராளிகளைச் சந்தித்த மறு நிமிடமே புலநாய்வுத்துறையினரும், கொலைக்குழுக்களும் போராளிகளை விசாரணைகளுக்கு இழுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களைத் தம்மிடம் காண்பித்து கையொப்பம் இடும்படி தம்மைச் சித்திரவதை செய்யும் ராணுவப் புலநாய்வுத்துறை, ஒவ்வொருமாதமும் தம்மால் இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகப் பொய்யான ஆவணங்களைத் தயாரித்து போராளிகளின் ஒப்புதல் கையொப்பத்தினைப் பெற்றுக்கொள்வதாகவும், நிவாரணம் என்று இதுவரை அரசால் தமக்கு எதுவுமே வழங்கப்படவில்லையென்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
  17. வீரர்கள் இப்போது வரலாறாகிவிட்டனர். “எங்கள் தாத்தா ஒரு புலி வளர்த்தார்” என்ற நாடோடிக் கதை மட்டும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும்.
  18. இத்தனை வரிகளுக்குள்ளும் எமது போராட்டமே ஒழிந்திருக்கிறது.
  19. ஆச்சரியம் + ஆனந்தம்......! 😂
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சிறி அண்ணா
  21. லொட்டோவில் அதீத பணம் கிடைத்த இருவர் வாழ்வை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையான அன்புக்காக ஏங்கிக்கொண்டே விரக்தியுடன் காலம் கழிக்கிறார்கள். மனம் விட்டு என்னுடன் பேசுவார்கள். கிட்டத்தட்ட நான் ஒரு கவுன்சிலிங் செய்பவர்போல . அவர்களின் கதைகளைக் கேட்கும்போது தடாலடியாக இப்படி பணம் வரக்கூடாது என்று நினைப்பேன். பணத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு இல்லை.
  22. வழி இல்லாதபோது அடிமையாக பவ்வியமாக இருப்பதும், திடீரென்று பணக்காரனாகி பவிசு வந்ததும் விரலைக் காட்டுவதும் ஒரு நல்ல மனிதருக்கு அழகில்லை!
  23. “ And in the end, All I learned was how to be strong ..Alone. - Quote from quoteambition.com
  24. கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் ) ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை. ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர். கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது. சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன. இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது. இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்
  25. எனக்கு எப்பவும் இந்த லொட்டோவில் நம்பிக்கை இல்லை. கஸ்ரப்பட்டு உழைக்கும் காசுதான் எமக்கும் எமது பரம்பரைக்கும் நிலைக்கும். பல ஆண்டுகளுக்கு முன் எமது அயற் கிராமத்தில் ஒருவருக்கு சுவீப் ரிக்கற்றில் முதல் பரிசு கிடைத்தது. அவர் புதுக்கார் வேண்டி ஓடிக்கொண்டுபோய் பண்ணை வீதியில் மரத்துடன் மோதி அதிலேயே அவரது காருடன் அவரது உயிரும் சரி. தமிழ்சிறி உங்கள் கதையில் என்னென்ன திருப்பங்கள் வரப்போகுதென்று ஆவலுடன் எதிர்பார்ததிருக்கிறோம் தொடருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.