Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    20
    Points
    15791
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    23926
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  4. பசுவூர்க்கோபி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    505
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/28/21 in all areas

  1. முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ்வே மாயம் படத்தில் கமலஹாசன் இருமின பின் இரத்தம் வெளியேறிய சீனை தன் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தார். இது புற்று நோயாக இருக்குமோ அல்லது வேறு ஏதும் பாரதூரமான பிரச்சனையோ என்று ஒரு கையால பிடிச்சபடியே யோசிச்சுக் கொண்டு இருந்த ராசுக்குட்டியை, "என்னப்பா இவ்வளவு நேரம் என்ன செய்றீஙள்..." என்று கேட்ட மனைவியின் குரல் தான் மீண்டும் தன் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனாலும் பயம் விடவில்லை ராசுக்குட்டிக்கு. வீட்டில் நண்பர் குடும்பம் வந்து கதைத்து கொண்டு இருக்கும் போது தான் இது நிகழ்ந்து இருந்தது. ராசுக்குட்டி அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த விடயத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாலும் மனசில் சிவப்பாக பயம் மிதந்து கொண்டுதான் இருந்தது. எப்படியும் இது என்ன என்று அறியாவிடின் தலை உடனே சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டு இருந்தார். எப்ப நண்பர் குடும்பம் போகும், எப்ப கூகிள் ஆண்டவரிடம் போய் என்ன விடயம் என்று அறியலாம் என்ற நினைப்பிலேயே இருந்தமையால் சரியாக அவரால் கதைக்க கூட முடியவில்லை. நண்பர் குடும்பம் அரை மணி நேரம் மேலும் கதைத்து விட்டு போன மறுகணம், ஓடிப் போய் தன் மொபைலில் இணையத்தில் கூகிள் ஆண்டவரை கூப்பிட்டு "blood in the urine" (சிறு நீரில் இரத்தம்) என்று டைப் செய்து தேடு பொறியை தட்டி விட்டார். கூகிள் ஆண்டவரும் வஞ்சகம் இல்லாமல் பின்வருவன ஒன்று காரணமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களோ காரணஙள் என்று பட்டியலிட்டார்: 1. தொற்று - Urinary tract infections 2. சிறு நீர்ப்பையில் கல்லு -A bladder or kidney stone 3. சிறு நீரகத்தில் தொற்று Kidney infections (pyelonephritis). 3. புரஸ்ரேட் பெரிசாவது -Enlarged prostate. 4. புற்றுநோய் - Cancer 5. சீறு நீரக காயங்கள்- Kidney injury என்று வகை வகையாக பட்டியலிட்டார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. முதல் வேலையாக உடனடியாக உயில் எழுதி வைக்க வேண்டும் என நினைத்தார். பின் அப்படி உயில் எழுதும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்லையே என அங்கலாய்த்தார். சொத்து கித்து சேர்த்து வைக்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் விடப்போகின்றேனே என தழுதழுத்தார். ஆயுள் காப்புறுதியில் கிடைக்கும் சில இலட்சங்கள் குடும்பத்துக்கு போதுமாக இருக்குமா என கணக்குப் போட்டார். தான் செத்த பின் எப்படியும் மறுமணம் செய்து கொள் என்று மனிசியிடம் சத்தியம் வாங்க வேண்டும் என உறுதி பூண்டார். புரண்டு புரண்டு படுத்தார், நடுக் கட்டிலில் எழும்பி இருந்து தன்னை தொட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்குதோ என்று செக் பண்ணினார். இறுதியில் அடுத்த நாள் எழும்பியவுடன் குடும்ப மருத்துவருக்கு போன் போட்டு விடயத்தை சொல்லி உடனடியாக மருத்துவம் செய்ய தொடங்க வேண்டும் என்று நினைத்தார். எந்த நோயும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் அதில் இருந்து பிழைக்கலாம் என எங்கோ வாசித்ததை பல தரம் மீள மனக்கண் முன் கொண்டு வந்து வாசித்தார். அப்படி நினைத்தது கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் கொடுக்க படுக்க போனார். நித்திரையானார். தான் செத்துப் போன பின் நண்பர்கள் எல்லாம் பியர் அடிச்சு அதைக் கொண்டாடுகின்றனர் என கனவு ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு எழும்பினார். உலகமே இப்படித்தான் போலியானது என்று கவலைப்பட்டார். சுருண்டு படுத்தார். அடுத்த நாள் மருத்துவரிடம் கதைக்க, மருத்துவர் இவர் சொல்வதை பெரிசாக கணக்கெடுக்கவில்லை போலிருந்தது. கொரனா காலத்தின் முதல் மாதம் என்பதால், மருத்துவர் கடும் யோசனையின் பின் இவர் கொடுத்த ஆக்கினையால "சரி வா வந்து சிறுனீரில் ஒரு டெஸ்ட் எடு... அதுக்குப் பிறகு பார்ப்பம் ": என்று சொல்லிய அடுத்த அரை மணி நேரத்தில் கிளினிக்கு போய் விட்டார். சிறு நீர் டெஸ்ட் செய்தார், 10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. (தொடரும்....)
  2. இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி-
  3. 31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ? நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ? இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ? ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது. அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது. அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான். அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ? பிள்ளைகள் கொண்டு வந்து தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம். அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது. எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன். கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி. நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக. நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ? இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம். இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம். நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான். என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன். தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன். ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான். என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது. அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன். பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான். ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது. மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான். எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி. 2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது. என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது. அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும். ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ? அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா. என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது. எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது. கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில் இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன். என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47. அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான். இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான். கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை. 08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம். காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன். அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன். 02.05.2020 சாந்தி நேசக்கரம்
  4. நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வரைகூட அம்மாவுக்கு பக்கத்திலதான் பூனைகுட்டி போல நித்திரை கொண்டிருக்கிறேன். வாசிக்கும் பழக்கும் எனது தாயாருக்கு அதிகமாக இருந்ததினால் பக்கத்தில் படுத்திருக்கும்போது அவ சொன்ன புராண கதைகளை கேட்டே சாதாரணதர பரீட்சையில் மகா பாரதம் கம்ப ராமாயணம் பகுதிகளில் அதிக பெறுபேறுகள் பெற்றிருக்கிறேன். எங்காவது ஊர் விழாக்களுக்கு போனாலும் கிப்ஸ் சாரம் அணியும் வயசிலும் அம்மா பக்கதிலயே போயி குழந்தை போல உக்காந்திருக்கிறேன். ஆக்கினை தாங்காமல் , போய் பொடியளோட விளையாடேன்டா.. எதுக்கு அம்மா அம்மா எண்டு பின்னால திரியுறா? அம்மா செத்து போனால் என்ன செய்வா எண்டு என்ர பாசத்தின் லெவலை அளவிட சும்மா ஒரு கோப கேள்வி பலமுறை கேட்டிருக்கிறா. அப்போ நான் சொன்னதெல்லாம் ’நீ செத்துபோனா நானும் செத்துபோவேன்’. சொன்னபடியே அவ செத்து போயிட்டா... ஆனால் நான் இன்னும் வாழ்கிறேன். வலி தரும் பதிவு குமாரசாமியண்ணா.
  5. மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன், அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்.... அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரிய வீடு 🏡 ஒன்றை, அந்த வீட்டின் பெறுமதியில்... பாதிப் பணம் கொடுத்து, மிகுதியை... ஒவ்வொரு மாதமும்... வங்கியில் கட்டுவதாக, 🖋️ ஒப்பந்தம் எழுதி வாங்கினான். 🧐 நல்ல வீடு இருந்தால்... முற்றத்தில் பெரிய கார் இருக்க வேண்டும் என்பது, எழுதப் படாத, சட்டம் என்றாலும்... மிஷேல் வீட்டு முற்றத்திலும்... அவன் ஆசைப் பட்ட கார் நின்றது. 🚘 அதற்கிடையில்... அவன், வேலையை விட்டு வரும் போது... தனது பழைய முதலாளிக்கு, "தினாவெட்டாக"... சொல்லி விட்டு வந்த வாக்கியங்களை மறக்காமல்... 🤨 தான்... பார்த்த வேலை அனுபவத்தை, வைத்து... தன்னுடைய, நான்கு நண்பர்களை சேர்த்து... சிறிய 🛠️ தொழிற்சாலையை ஒன்றை ஆரம்பித்தான். 😜 இடைவேளை... !!! ??? இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில், மீண்டும் தொடரும்.... 🤣
  6. அன்புள்ள அம்மா அறிவது! நான் நல்ல சுகம். அது போல் நீங்களும் நீங்கள் விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம். சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா. உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும் விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா. அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா. என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா. இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......
  7. பகுதி 2: சிறு நீர் தொற்று என்று தான் முடிவு வரும், டொக்டர் அன்ரி பயோடிக் பத்து தருவார், அதை தவறாமல் எடுப்பன், பார்மசியில் மருந்து தரும் போது வார இறுதியில் பிரண்டி அடிச்சால் அன்ரி பயோடிக் பிரச்சனை கொடுக்குமா என்றும் கேட்க வேண்டும், பத்து நாட்களில் எல்லாம் சரியாகி விடும், மீண்டும் கும்மாளம் அடிக்கலாம் என்று மனக்கணக்குகள் நிறைய போட்டு கொண்டு "ரிசட்ல் என்ன டொக்டர்" என்று ராசுக்குட்டி கேட்டார். "ஒரு தொற்றும் இல்லை... எல்லாம் கிளியராக இருக்கு" என்று டொக்டர் கொஞ்சம் யோசனையுடன் சொல்ல ராசுக்குட்டி மீண்டும் சுருண்டு போனார். தொற்று என்றால் சிம்பிளா எல்லாம் முடிஞ்சிடும், பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி விட்டது. ஒருவேளை உந்த கிளினிக்கில் உடனே செக் பண்ணி சொல்வது பிழையாகுமோ தெரியாது என்று விட்டு, "அப்ப ஏன் டொக்டர் அப்படி வந்தது " என்று கேட்க," எதுக்கும் ஒருக்கால் இதற்கென்று இருக்கும் ஒரு Lab இற்கு போய் Urinalysis எனும் இன்னும் கொஞ்சம் ஆழமான செக்கப் ஒன்று செய்து பார்ப்பம் சொல்லி ஒரு சீட்டில் எழுதி தர அடுத்த நாளே காலைமை எழும்பி lab இற்கு ஓடிப் போய் - 12 மணித்தியாலம் எதுவும் சாப்பிடாமல் போய்- எடுத்து கொடுக்க, ரிசல்ட்ஸ் வர நாலு நாளாகும். கொரனா காலம் என்பதால் இன்னும் கொஞ்ச நாட்கள் கூட எடுக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டனர். ராசுக்குட்டி தான் ஒரு பெரிய இரும்பு மனிசன், எதுக்கும் கலங்காதவன் என்ற ஒரு பில்டப்பை மனிசிக்கும், பிள்ளைகளுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் கட்டி வைத்திருந்தவர். (ஆனாலும் மனிசிக்கு தெரியும் இது இரும்பு மனிசன் இல்லை, எல்லாம் சும்மா வெறும் பில்டப்பு என்று, ஆனாலும் நம்பினமாதிரி பாவனை செய்வதை உண்மை என்று தான் ராசுக்குட்டி நம்பிக் கொண்டு இருந்தவர்.). தான் இப்படி வருத்தத்துக்கு பயந்ததை வெளியே காட்டினால் தான் கட்டின பில்டப்பு உடைந்து விடும் என்று "இது எல்லாம் எனக்கு ஜுஜுப்பி என்ற மாதிரி முகத்தை வைச்சுக் கொண்டு நடந்து திரிந்தாலும் முகம் என்னவோ பேயறைந்த மாதிரி இருந்ததை மனிசி கவனிக்க தவறவில்லை. இதில வேற "உங்களுக்கு ஒன்றும் இல்லை....சும்மா உந்த கூகிளை பார்த்து பயப்பட வேண்டாம் " என்று மனிசி சொல்லி தன் பாட்டுக்கு சந்தோசமாக இருந்ததை பார்த்து ராசுக்குட்டிக்கு விசர் ஏறிக் கொண்டு இருந்தது. அடுத்த எட்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் கூகிளை நோண்டுவதும் அதில் சொல்லப்பட்டு இருக்கும் அறிகுறிகள் எல்லாம் தனக்கும் இருக்கு என்று கற்பனை பண்ணுவதும், குடும்ப வைத்தியருக்கு போன் அடிப்பதுமாக இருந்தார். இரண்டு வகையானவர்கள் உள்ளனர். ஒன்று வைத்தியர் சொல்லுவதைக் கேட்டு பயப்படுகின்றவர்கள். மற்றது, வைத்தியரையே பயப்பட வைப்பவர்கள். இதில் ராசுக்குட்டி இரண்டாம் வகை என்று இவ்வளத்தையும் வாசிக்கும் உங்களுக்கும் புரிந்து இருக்கும். அறப்படிச்ச குணம் உள்ளவர்ளுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் ஒரு வகையில் பாவம் செய்வதர்கள் போலும். சரியாக எட்டாவது நாள், குடும்ப வைத்தியர் தொலைபேசியில் அழைத்து Urinalysis சிலும் ஒன்றும் வரவில்லை...எல்லாம் சரியாக இருக்குது என்று சொல்ல, "இனி என்ன செய்வது டொக்டர்... ஏன் அப்ப அண்டைக்கு இரத்தம் வந்தது " என்று குடல் உடைந்து கேட்க வைத்தியரும் "ஒரு ஸ்பெசலிஸ்ட் இடம் உன்னை அனுப்புறன், அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக டெஸ்ட் செய்யச் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். அப்பொயிண்ட்மெண்ட் உடனே கிடைக்குமா டொக்டர் என்று கேட்க.. "இல்லை நாளேடுக்கும்... உன்னை மாதிரி கனக்க பேர் காத்திருப்பர் என்பதால் மூன்று மாதமாவது எடுக்கும்" என்று சொல்ல ராசுக்குட்டி மனசுக்குள் போட்ட சின்ன அலறலை அவர் கவனிக்கவில்லை. உந்த கனடவில் எல்லாத்துக்கு லைனில் தான் நிற்க வேண்டும். ஜஸ்ரின் ருடோவாக இருந்தாலும் சரி, ராசுக்குட்டியாக இருந்தாலும் சரி, வரிசையில் தான் நிற்க வேண்டும். ஊரில் என்றால் காசு கூடக் கொடுத்து உடனே எல்லா பரிசோசதனைகளையும் செய்து பார்க்கலாம்...ஆனால் கனடாவில் நாளெடுக்கும். ராசுக்குட்டியின் நேரம் கொரனா காலமாக வந்து சேர்ந்ததால் காத்திருப்பு நீளுமோ என்று பயந்து போயிருக்கும் போது மூன்றாம் நாளே ஸ்பெசலிஸ்ட் இடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "முதலில் அல்ரா சவுண்ட் எடுத்துப் பார்ப்பம். சிறு நீரகத்தில் கல் என்றால் அது காட்டிக் கொடுக்கும். அனேகமாக உனக்கு அதுதான் பிரச்சனை என்று சந்தேகின்றேன் என்று கூறி மூன்று நாட்களில் அல்றா சவுண்ட் இற்கு அனுப்பி வைத்தார். இக்காலப்பகுதியில் கொரனா கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு Lab உம் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். ராசுக்குட்டி மூன்றாம் நாள் உள்ளே போகும் போது அங்கிருந்தவர்கள் உடல் முழுதும் மூடிய ஆடையுடன் இருந்ததை பார்த்து லைட்டாக பயந்து விட்டார். அந்தப் பயத்தில் அரண்டு இருந்தவர். அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார். பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை. - தொடரும்;
  8. இது தான் பல குடும்பஸ்தர்களிடம் இருக்கும் பெரிய பயம். சாதுவாக தோள் மூட்டில் அல்லது இடப்பக்கம் ஏதாவது சுளுக்கு ,வலிகள்,நோவுகள் வந்தால் சிந்தனைகள் மனைவி பிள்ளைகளை நோக்கியே இருக்கும். கற்பனைகள் யமலோகம் வரைக்கும் சென்று விடும். மரணம் என்பது மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் கடமைகள் முடிந்த பின் மரணத்தை நான் வரவேற்பேன். ஒரு சிறிய செய்தி. பீற்றூட் கறி சாப்பிட்டவர்கள் ஐயோ யூரினிலை இரத்தம் என அலறியடித்துக்கொண்டு அவசர சிகிச்சை நிலையங்களுக்கு ஓடியவர்களும் உண்டு.
  9. கேத்தலின் ஓகாசி .......! 👍
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஐப்பசி 2014 தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் அம்பிடிய சுமனரத்ன தேரருக்கு ஆதரவாக நிற்கும் காவல்த்துறையும் கருணாவும் தமிழ் அரச அதிகாரிகளைத் தாக்கும் சுமனரத்ன பிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லையோரத் தமிழ்க் கிராமங்களை அபகரித்து சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன எனும் பிக்குவே தலைமைதாங்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். பிக்குவின் தலைமையில் அபகரிக்கப்பட்ட தமது நிலங்கள் தொடர்பாக மக்கள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவுசெய்தபோது, பிரதேச செயலகத்தினால் அம்முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மக்கள் கூறுகின்றனர். தமிழரின் நிலங்களை அபகரிக்கும் இனவாதப் பிக்குவுடன் சமரசம் செய்யும் கருணா ஆனால், பிரதேச செயலாளரின் துணையோடு மக்களால் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டவேளையில், வெள்ளாவெளிப் பொலிஸார் அதனை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தப் பிக்குவின் தலைமையில் அண்மையில் சிங்களவர்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி படுவான்கரையின் சின்னவத்தை எனும் கிராமம் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் ஊடகவியலாளருக்கு பகிரங்க அச்சுருத்தல் விடும் பிக்கு வெள்ளாவெளி பொலீஸ் நிலையத்தில் தமது காணிகளில் அத்துமீறி சிங்களவர்கள் விவசாயம் செய்துவருவதாக லக்ஷ்மணன் நாகமுத்து, கமலலக்ஷ்மி நாகமுத்து, ராசமணி காத்தமுத்து, ராஜலக்ஷுமி காத்தமுத்து ஆகிய காணி உரிமையாளர்கள் முறையிடச் சென்றபோது பெளத்த பிக்குகளுக்கு எதிராக இலங்கையின் காவல்த்துறை ஒருபோதுமே செயற்படாது , ஆகவே உங்களின் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி அவர்களை விரட்டியடித்ததாக அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான சுமார் 4 ஏக்கர் காணிகளை அடாத்தாகப் பிடித்துவைத்திருக்கு உள்ளூர் பிக்கு, மட்டக்களப்பு விகாரையின் சுமனரத்ன தேரரின் பணிப்பின்பேரிலேயே செயற்படுவதாக மேலும் இந்த உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்த அடாத்தான காணி ஆக்கிரமிப்புப் பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிவருவதாகக் கூறப்படுகிறது. கிழக்கில் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசின் முகவர் பிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டம் முற்றான சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய தோழரான சுமனரத்ன தேரர் எனும் இந்தப் பிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்களை ராணுவத்தினரின் உதவியோடும், பொலீஸாரின் காவலோடும் , பிரதியமைச்சரும், மகிந்தவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரான கருணாவின் துணையோடும் தொடர்ச்சியாகச் செய்துவருவதாகக் கூறுகிறார். அரசிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கும், சிங்களக் குடியேற்றங்களுக்கான அரசின் முயற்சிகளும் கருணாவின் துணையோடு பிக்குவினால் தடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அம்பாறை - மட்டக்களப்பு மற்றும், பொலொன்னறுவை - மட்டக்களப்பு ஆகிய எல்லையோரங்களில் தற்போது நடந்துவரும் இந்தப் பிக்குவின் தலைமையிலான நில அபகரிப்பு தமிழர் மீதான அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் ஒரு அங்கம் என்பதில் சந்தேகமில்லையென்றும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 2013 இல் திருமதி வில்வரட்ணம் எனும் பிரதேச சபை அதிகாரியுடன் பட்டிப்பளையில் விவாதத்தின் ஈடுபடும் இனவாதப் பிக்கு சுமனரத்ன தேரர். சில மாதங்களுக்குப் பின்னர் பொலீஸாரைக் கூட்டிவந்து பிரதேச செயலாளருக்குக் கொலைமிரட்டல் விடுக்கும் தேரர். தேரருக்கு ஆதரவாக காவல் நிற்கும் சிங்களக் காவல்த்துறை. சிங்கள அரசாங்கம் தமிழர் பகுதிகளில் தான் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினை, அபிவிருத்தி எனும் போர்வைக்குள் மறைத்து அரங்கேற்றிக்கொண்டு வருகிறது. உள்ளூர் அரச அதிகாரிகளால் தலையீடு செய்யப்பட்டபோதும் , அரசின் காவல்த்துறையும், ராணுவமும் அரச அதிகாரிகளை உதாசீனம் செய்து பிக்குவின் தலைமையிலான ஆக்கிரமிப்பினை ஆதரித்து, துணையாகவும் நிற்பது அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. சலுகைகளுக்காக சிங்கள ஆக்கிரமிப்பிற்குத் துணைபோகும் தம்பிமுத்து, கருணா மற்றும் பிள்ளையான் இதற்கு மேலதிகமாக கிழக்குத் தமிழர்களின் சுபீட்சமான வாழ்வுக்காக அரசுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறிக்கொள்ளும் கருணாவும் பிள்ளையானும் பிக்குவிற்கு உதவியாக தமது இனத்தின் நிலங்களை ஆக்கிரமிக்க துணைநிற்பதாக மக்கள் விசனப்படுகின்றனர். இதேவேளை, தமிழர்களின் நிலங்களை வெளிப்படையாகவே சிங்களவர்களது என்று அபகரித்துவரும் சுமனரத்ன எனும் பிக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழருக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான விரிசலினை பெரிதாக்க முயன்றுவருவதாகத் தெரிகிறது. முஸ்லீம்களை தமிழருக்கும் சிங்களவர்களுக்குமான பொதுவான எதிரியென்று அடையாளப்படுத்தும் பிக்கு, தமிழர்கள் சார்பாக முஸ்லீம்களுக்கெதிராகத் தான் போராடுவதாகக் காட்டிக்கொண்டு, தமிழரின் நிலங்களைத் தொடர்ச்சியாக அபகரித்துவருகிறான் என்று பாதிக்கப்பட்டுவரும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
  11. சுவியர், மிளகாய்த் தூள் லெவல் வரையும் போயிருக்கு...!😡 ஆனால்...அவையடக்த்தால்...எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள் போல கிடக்குது....!😜
  12. உண்மை தோழர்.. போர்வெல் 1000 கீழே தண்ணீர் போயாச்சு..😢 அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றி தோழர்..👍
  13. இயற்கை சூழ்நிலைக் கவிதை மிக நன்றாக இருக்கு.....கோபி.....! 👍 (நீங்கள் விரும்பினால் 23 அகவைக்கு மாற்றும்படி கோரலாம்).
  14. படம் : சுபதினம்(1969) இசை : KV மகாதேவன் வரிகள் : வாலி பாடியவர் : சீர்காழி ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம் அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம் (ஆண்டுக்கு) நிறைக்குடம் போல் ஒரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கதுதான் சுபதினம் உழுதுண்டு வாழும் மக்களுக்கு எல்லாம் அறுவடை நாளே சுபதினம் வள்ளுவன் பிறந்து குறளை சொன்னான் அறிவுக்கு அதுதான் சுபதினம் புத்தன் பிறந்து போதனை செய்தான் அன்புக்கு அதுதான் சுபதினம் காந்தி பிறந்து விடுதலை தந்தான் உரிமைக்கு அதுதான் சுபதினம் ஒருவன் துணிந்து தியாகம் செய்தால் உலகுக்கு அதுதான் சுபதினம் லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால் கிடைத்தவர்க்கே அது சுபதினம் வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால் எளியவர்க்கு எல்லாம் சுபதினம் (ஆண்டுக்கு)
  15. எமது சமய நம்பிக்கைகளில் மிக முக்கியமானது ஒன்றைக் கூறுகின்றேன், சாந்தி...! மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், மனதின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதே அதுவாகும்! மனம் தளர்ந்து போகாத வரையில்....நீங்கள் எவ்வளவு துன்பங்களையும்...கடந்து மீண்டு வரலாம்! பார்த்திபன் பழைய நிலைக்குத் திரும்பியதற்கும் இதுவே, காரணமாக இருந்திருக்க வேண்டும்! வாழ்க்கையின் அதிக சோதனைகள் வரும்போது, ஆண்டவன் சோதிக்கின்றான் என்று கூறுவார்கள்! நல்லவர்களைத் தான் அவன் அதிகம் சோதிக்கிறான் .....! இவையும் கடந்து போகட்டும்....!
  16. விலைக்கு மேனியில் திருக்கோணமலை கந்தன் திருநீரணிந்தால்
  17. புதுயுகம் பிறந்தது கிறிஸ்துவில். கருணைக் கடலே வா.
  18. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 திரு நபி வழியில் தினம் நடந்தே தமிழகத்து தர்காகளை காண வருவோம்
  19. வீட்டுக்கு போய் செத்தான் நாய்ச்சேகர்.🤣
  20. இணைய வெளியில் 23 வருடங்கள் ஒரு யுகம்.
  21. கவலைப்படாதீர்கள் அக்கா இதுவும் கடந்து போகும்
  22. இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. உண்மை உண்மை
  23. வாழ்க்கை போராட்டமா அல்லது போராட்டமா வாழ்க்கை எனும் கேள்வி எழும் போது போராடித்தான் வாழவேண்டிய கட்டாயம் எழுகிறது சூழலாலும் சுற்றத்தாருடனும் இதில் கொரோனாவும் சேர்ந்து கொடுமப்படுத்துகிறது மீண்டு வருவார்கள் பிள்ளைகள் கவலை வேண்டாம் உங்கள் குழதைகள் ஆச்சே மனதை தளரவிடாதீர்கள் அக்கா
  24. வாழ்க்கையில் அடிகள் விழலாம் வாழ்க்கையே அடி வாங்கினால்??? உங்களது வாழ்க்கையும் அதிலிருந்து நீங்கள் ஒவ்வொரு முறை மீள்வதும் வாழ்வில் மீளாத துன்பத்திலிருப்போருக்கு ஒரு வழி காட்டும் எத்தனை முறை வீழ்ந்தோம் என்பதல்ல கணக்கு அத்தனை தரமும் எழுந்த நின்றோமா என்பதே வரலாறாகிறது வாழ்க நலமுடன்
  25. எல்லாம் கடந்து போகும். இதுதான் மனித வாழ்க்கை. மனத்தைரியம் மிக அவசியம்.
  26. போன புரட்டாதிச்சனிக்கு எள்ளெண்ணை எரிச்சிருந்தால் கொரோனா இவ்வளவுக்கு முன்னேறி இருக்குமா? 😎
  27. அம்மையும் நீயே அப்பனும் நீயே! ஆறு படை வீடுகளின் அழகோவியம்
  28. ஞானம் நிறை கன்னிகையே மாதா இயேசுவே... உயிராய் வா... உணவாய் வா.... உணர்வாய் வா..... உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன் -2 மார்பினில் சாய்ந்து உன் உணர்வுகளை மன்னவன் நேசத் துடிப்புகளை அனுதினம் நானும் உணர்ந்திட செய்திடும் இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா - 2 உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 1) இரவும் பகலும் பேசிடும் என் தெய்வமே இணையில்லா அருளை என்றென்றும் நான் சொல்வேன் -2 பாறையில் வழிந்தோடும் நீர் ஊற்றாய் உன் பரிவினால் என்னை முழுமையாய் நிரப்பிட இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 2) வாழ்வென்றால் எனக்கு எல்லாமே நீர்தானையா வானத்துப் பறவை போல் மகிழ்வோடு வாழ்ந்திடுவேன் -2 உன்னோடு வாழ்ந்திடும் தருணங்களை நான் பிறரோடு பகிர்ந்திட உன்னருள் தந்திட இயேசுவே உயிராய் வா உறவாய் வா என் உணர்வாய் வா.
  29. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அருள்மழை பொழிவாய் ரஹ்மானே. ஈச்சை மரத்து இன்ப சோழையில்
  30. அய்யய்யோ.... சுவியர், உண்மையாகவா... சொல்கிறீர்கள். களத்தில்... வேறு பதிவுகளை, பார்த்துக் கொண்டு இருந்ததால்... இன்னும்.. எழுதுற மூடு, வரவில்லை. சம்பந்தன் ஐயா... பத்து வருசமாய் சொன்ன மாதிரி, தீபாவளிக்கும், பொங்கலுக்கும் தீர்வு வரும் என்று பொய் சொல்ல மாட்டேன். என்ன... நான், சொன்ன மணித்தியாலாக் கணக்கில்.. கொஞ்சம் பிந்தலாம். ஐயோ... ஏற்கெனவே பிந்தி விட்டது.. ஐயா.
  31. இன்னும் 55 நிமிடங்களுக்கு பின் வருகின்றேன்.......! 😂
  32. நல்ல பெற்றோர் ,நல்ல சகோதரங்கள்,நல்ல கணவன்/மனைவி நல்ல உறவுகள் ,உற்ற நண்பர்கள் கிடைக்க போன ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும்
  33. பொழியும் மழையிலும் குடையாக நிற்கிறது தாய்மை
  34. ஓ வீரனே எங்கள் மண்ணில் ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா ஓ வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை வெடி குண்டு நடுவில் நின்ற உன் தோளை விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை வெடி குண்டு நடுவில் நின்ற உன் தோளை அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ அடைந்த சாவு இங்கே உயிரானது நீ எரிந்த உயிர் விதை பயிரானது நீ அடைந்த சாவு இங்கே உயிரானது நீ எரிந்த உயிர் விதை பயிரானது தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது வீரனே உனது முகம் தெரிகின்றது தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது வீரனே உனது முகம் தெரிகின்றது ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய் கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய் காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய் கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய் பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர் போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர் பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர் போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா
  35. மாவீரர் யாரோ என்றால்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.