Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    16
    Points
    46808
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87997
    Posts
  4. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    13683
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/03/21 in all areas

  1. அம்மா! உங்கள் கையால் செம்பு தண்ணீர் குடித்தால் கூட சுவையாகத்தான் இருக்கும். சாப்பாடுகள் என்றாலும் சரி சிற்றுண்டி ஆனாலும் சரி எல்லாமே சொர்க்க உணவுகளாய் இருக்கும். சுவை கூட சொல்லி வர்ணிக்க முடியதம்மா.சும்மா ஒரு சட்டியில் நாலு வெங்காயதையும் பச்சைமிளகாயையும் போட்டு சொதி வைத்தால் கூட அது அமிர்தமாக இருந்ததே அம்மா. அந்த சுவை ஏன் என் மனைவி சமைக்கும் போது வரவில்லை? எத்தனை உணவுகளை எந்தெந்த விதமாக எல்லாம் சமைத்தீர்கள். அந்த பக்குவம் உங்கள் பேரப்பிள்ளைகளிடம் வரவே வராதம்மா. காலம் மாறி விட்டது என்கிறார்கள். நாமும் மாறுகின்றோம் என்கிறார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்கிறார்கள். கடைசியில் கைக்குள் பிடிக்குது காலுக்குள் பிடிக்குது என்கிறார்கள்.நெஞ்சுக்குள் இழுக்குது என்கிறார்கள் அம்மா. சென்ற கிழமை சின்னம்மாவுக்கு ரெலிபோன் எடுத்தேன் அம்மா. சுக நலம் விசாரித்தேன். அவ என்னை எதுவும் விசாரிக்க வில்லை. மாறாக பணம் வேண்டும் என்றார். ஏன் என நான் கேட்டேன். தனது பேரப்பிள்ளைக்கு வீடு கட்டவாம். இப்போது இருக்கும் வீடு யாருக்கு என நான் கேட்க அது தனக்கு மட்டும் என்றார். அது மட்டுமில்லாமல் எனது பெயரில் இருக்கும் காணிகளை தனது பெயருக்கு மாற்றி தரும் படியும் கட்டளையிட்டார். அம்மா நீங்கள் இருக்கும் மட்டும் வாய் மூடி இருந்தவர்கள் எல்லாம் வாய் திறக்க ஆரம்பித்து விட்டார்கள். அம்மா! உங்கள் காலத்தில் இருந்த சகோதர பாசம் குடும்ப பாசங்கள் இன்றில்லை.சில நேரம் கடமைக்கு பழகுவது போல் இருக்கின்றார்கள். சகோதரங்கள் குடும்பங்களுக்குள் கூட எரிச்சல் பொறாமைகள் கூடி விட்டதம்மா.சந்ததிகள் குடும்பங்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் பார்கின்றார்கள். பணத்தை வைத்து சரிசமம் பார்க்கின்றார்கள் அம்மா. நான் கார் வாங்கினால்....நான் வீடு வாங்கினால் அதை விட இன்னும் பெரிய கோணத்தில் தாங்கள் வாங்க வேண்டும் என அல்லல் படுகின்றார்கள்.எதை கொண்டு வந்தார்கள் எதை கொண்டு போகப்போகின்றார்கள் அம்மா? அம்மா என்ரை புறணி இன்னும் வரும்.
  2. நாம் பெற்ற பிள்ளைகள் உண்மையிலேயே நல்ல முற்போக்கான சிந்தனைகளுடன் வளர்க்கப் படுகிறார்கள்.எங்களைப்போல் புறங்கூறுதல் வஞ்சனை பொருளாசை போன்ற தீய குணங்களற்றவர்களாகவும் சாதி சமயம் குலம் கோத்திரம் போன்றவற்றிற்கு மதிப்பு கொடுக்காதவர்களாகவும் எதையும் துணிவுடன் நேருக்கு நேர் பேசக்கூடியவர்களாகவும் பிள்ளைகள் வாழ்விற்காய் தம்மையே தியாகம் செய்த எம் பெற்றவர்களைப்போல் நாம் இருக்கக்கூடாது என அறிவுரை கூறுபவர்களாகவும் சில சமயம் எமக்கு ஆசானாகவும் இருக்கிறார்கள். அவர்களது பார்வையும் பக்குவமும் பலமுறை எம்மை பிரமிக்க வைப்பதாய் இருக்கும். கனடாவில் மூன்றாம் வகுப்பு சமயப் புத்தகத்திலேயே குழந்தை உருவாவது பிறப்பது குடும்ப உறவு போன்ற பாடங்களை பார்த்து திகைத்த காலம் ஒன்றுண்டு. எமது காலத்தில் பெரியவர்கள் பேசுமிடத்தில்கூட எமக்கு இருக்க அனுமதி கிடைப்பதில்லை. ஆனால் இன்றோ எமது பிள்ளைகள் வளரும் காலத்தில் எதைப்பற்றியும் வெளிப்படையாக பெற்றவர்களுடனும் சகோதரர்களுடனும் பேசுவதைப்பார்க்க வியப்பாயிருக்கும். அவர்களது சிந்தனைகளும் செயற்பாடுகளும் வித்தியாசமானவை. அதற்கேற்ப நாம் மாறினால்தான் எம்மால் சந்தோசமாக வாழமுடியும். அவர்களை எம்மைப்போல் மாற்ற முயற்சித்தால் எமது வாழ்க்கையின் சந்தோசங்களை இழக்கவேண்டி ஏற்படலாம். வளர்ந்த பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு விளங்கும். தலைப்பிற்கு நன்றிகள் விசுகு
  3. கைக்குழுந்தைகளாக எம் பிள்ளைகள் எம் கையில் தவளத்தொடங்குவதாலோ என்னவோ அவர்களை என்றும் அவ்வாறே நாம் கணக்கிடுகின்றோமா?? அவர்களுக்கான படிப்பு சார்ந்து அல்லது அவர்களின் வயது சார்ந்து அல்லது எமது கல்வி அல்லது கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள் மேல் செலுத்துவது சார்ந்து அதை நாமும் அவர்களும் எவ்வாறு கிரகிக்கக்கூடும் என்று நாம் எந்தளவுக்கு கரிசனை கொள்கின்றோம் அதிலும் உடலின் சில அந்தரங்க உறுப்புக்கள் அல்லது உடலுறவு சார்ந்து எமக்கும் அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்?? அநேகமான பெற்றோர் பிள்ளைகளின் முன் முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில் அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது??? ஆனால் பிள்ளைகளுடன் நண்பர்களாக பழகும் போது அவர்களிடமிருந்து வரும் சில விடயங்கள் எம் அனுபவங்களை அவர்கள் பற்றிய எமது அளவுகோளை பொய்யாக்கி நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை மற்றும் கூச்சமற்ற தெளிவு எம்மை தலைகுனிய செய்து விடும் ஒர் இனச்சேர்க்கை சார்ந்து வயது கூடியவர்களை திருமணம் செய்வது சார்ந்து கூடி வாழ்தல் சார்ந்து தனியே வாழ்தல் சார்ந்து....... அவர்களது பார்வையும் கல்வியும் பக்குவமும் எமது பார்வையும் கல்வியும் அனுபவங்களும் ஒட்டாத தண்டவாளங்களின் நிலை தான். அந்தவகையில் என் பிள்ளைகளிடம் ஆரம்பத்திலிருந்தே நண்பனாக பழகுபவன் என்றரீதியில் இப்படியான நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு எனது மகளது பிறந்த நாள் அன்று அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் சாதாரணமாக சொன்னாள் அப்பா என்னை அம்மாவிடம் தை முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று) நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் அதனால் தான் நான் புரட்டாதி ஒன்றில் பிறந்தேன் என. எனக்கு உடம்பெல்லாம் குறுகி விட்டது ஏனெனில் இதை சொல்லும்போது அவளுக்கு அன்று தான் 12 வயது. முற்றும்.
  4. மதுரை மல்லி மணக்குது அள்ளி..☺️
  5. காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
  6. கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன். நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர். சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத் தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ? இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய் பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம். 24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும். கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார். வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”. - சுப. சோமசுந்தரம்
  7. அதையேன் பேசுவான்! உந்த மேக்கப்காரர் வருவினம் பாருங்கோ.... சொல்லி வேலையில்லை. ஒரு பொம்புளைக்கு மேக்கப் பண்ண நாலைஞ்சு சூட்கேஸ் கொண்டுவருவினம்.மக்கு தப்புற மாதிரி அள்ளி தப்பு தப்பபெண்டு தப்பி உள்ள வடிவையும் கெடுத்துப் போட்டு போவினம்.😁 உந்த மேக்கப் எண்டது சொந்த செலவிலை சூனியம் செய்யிற மாதிரி...
  8. பெருக்கலாம் தான் சுவியர்...! கன காலமாய்க் கராச்சுக்குள்ள, பார்க் பண்ணியிருந்த காரை வெளியால எடுத்துக் கொஞ்சம் எண்ணெய், தண்ணியைக் காட்டிப் போட்டு....கை வேயில ஓடக் கொஞ்சம் பயமாய்க் கிடக்குது! யாழ் களம் முந்தி மாதிரி இல்லை! மிகவும் தரமான கவிதைகளும், கவிதைகளும் இப்போது அதில் பதியப் படுகின்றன..! மிக்க நன்றி, விசுகர்....! பேத்தி தான் வந்து தட்டினாலும்.....தட்டுவா!😜 வரவுக்கும், கருத்துக்கும் நன்றி, உடையார்...! ஆட்டுவித்தால்.....யாரொருவர் ஆடாதாரோ......கண்ணா...! ஆனால்....இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு...! 😄
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, மாசி 2015 அம்பாறையில் செயற்பட்டுவரும் அரச ராணுவக் கொலைக்குழுவிற்கெதிராக நடவடிக்கையெடுங்கள் - அரசைக் கோரும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகள் - கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இனியபாரதி எனப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் மிக முக்கிய ஆயுததாரியுமான இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமாரை உடனடியாகக் கைது செய்து, தண்டனை வழங்குமாறு அம்பாறை மாவட்டத்தில் இவனால் வலிந்து காணமலாக்கப்பட்ட பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளின் பெற்றோர் அரசை வேண்டிக்கொண்டுள்ளனர். 2007 இற்குப் பின்னர் ஆக்கிரமிப்பு ராணுவத்தால் அம்பாறை மாவட்டம் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து இனியபாரதியால் இதுவரையில் குறைந்தது 200 இளைஞர்களும் யுவதிகளும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டிருப்பதாக பதிவுசெய்யப்பட்டிருக்கும் முறைப்பாடுகளிலிருந்து தெரியவருகிறது. மேலும், புலிகளிடமிருந்து பிரிந்து பொதுவாழ்க்கைக்கு திரும்பிய பல முன்னாள்ப் போராளிகளும் இவனது குழுவினரால் காணாமலாக்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் பற்றிய பதிவுகள் தொடர்ச்சியாக மறைக்கப்பட்டே வந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அம்பாறை மாவட்டத்தில் ராணுவப் புலநாய்வுத்துறையினரின் வழிகாட்டலில் இனியபாரதி தனக்கென்று தனியான கொலைக்குழுவொன்றினை நடத்திவருவதாகத் தெரிகிறது. சுமார் 700 ஆயுதம் தரித்த கொலைக்குழுவினர் இவனது கட்டுப்பாட்டில் இயங்குவதோடு, கடத்தல்கள், காணாமற்போதல்கள், கப்பம் உட்பட மிகக் கொடூரமான வன்முறைகளில் இவனும் இவனது குழுவும் அம்பாறை மாவட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பல சர்வதேச அமைப்புக்கள் உட்பட பல மனிதவுரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியிருந்ததோடு, மகிந்தவின் அரசுக்கும் இவனுக்குமான நெருக்கம் பற்றியும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியிருந்தன. இனியபாரதி ஆரம்பத்தில் செய்த கொலைகளில் குறிப்பிடத் தக்கது கிழக்கின் அனுபவம் மிக்க செய்தியாளரான ஐய்யாத்துரை நடேசன் என்பவரது படுகொலையாகும். 2004 இல் அவரது இல்லத்திற்கு மிக அருகே இனியபாரதியால் பலதடவைகள் தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நடேசனின் மரணத்தில் தற்போது ஜனாதிபதியாகவிருக்கும் மைத்திரிபால சிரிசேனவின் பங்களிப்பும் இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. இனியபாரதியால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஐய்யாத்துரை நடேசனின் இறுதி நிகழ்வு ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரி அபயரட்ணவின் நேரடி வழிகாட்டலில் செயற்படும் இனியபாரதியின் கொலைக்குழு, கருணா கொலைக்குழு அங்கத்தவர்களையும், ஈ என் டி எல் எப் எனும் இந்தியாவின் துணையுடன் இயங்கும் துணைப்படையின் உறுப்பினர்களையும், சில முஸ்லீம் ஆயுதக் குழு உறுப்பினர்களையும் கொண்டு அமைக்கப்பட்டது. பெரும்பாலும் கடத்தல்கள், காணாமலாக்குதல்கள், படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் இக்கொலைக்குழு அவ்வப்போது தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையேயான பிணக்கினை பெரிதுபடுத்தவும் மகிந்த அரசினால் பாவிக்கப்பட்டு வந்தது, இன்றும் நிலை அப்படித்தான். 2005 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற நடவடிக்கையொன்றில் சரணடைந்த இரு இனியபாரதி கொலைக்குழு உறுப்பினர்களின் தகவல்களின்படி இனியபாரதி மைத்திரிபால சிரிசேன, டக்கிளஸ் தேவானந்தா மற்றும் அதாவுள்ளா அக்கியோருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்திருந்தான் என்று தெரியவந்திருந்தது. இவ்வாறு புலிகளிடம் சரணடைந்த இனியபாரதியின் கொலைக்குழு உறுப்பினர்கள், தாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும், தாம் இனியபாரதியுடன் சேர்ந்தது அவனைக் கொல்வதற்காகவே என்றும், தாம் தப்பி வருமுன்னர் இனியபாரதியையும், அவனது சகாக்கள் சிலரையும் கொன்றுவிட்டுத் தப்பிவந்ததாகவும் கூறியிருந்தனர். ஆனால், இனியபாரதி அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டான் என்பது நாம் அறிந்ததே. கடந்த புதனன்று, திருக்கோயில் பிரதேச செயலகத்தின்முன்னால் கூடிய ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோயில் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 70 உறவினர்கள் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்று கொன்றுபோட்ட இனியபாரதியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இனியபாரதியின் கொலைக்குழு முகாம் அமைத்திருந்த பகுதியில் அகழ்வுகளை மேற்கொண்டு தமது சொந்தங்களின் எச்சங்கள் இருக்கின்றதா என்று கண்டறியப்படவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர். இனியபாரதியின் கொலைமுகாமிலிருந்து தப்பிவந்த ஒரு சிலரின் தகவல்ப்படி இனியபாரதியால் கடத்திக் கொண்டுவரப்பட்ட பல இளைஞர்கள் இம்முகாமிலேயே கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறியிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அத்துடன், தம்பிலுவில் பகுதியில் அமைந்துள்ள மத்திய சந்தைப் பகுதியில் இனியபாரதி அமைத்திருக்கும் அவனது "பாதுகாப்பு வீடு" உடனடியாகச் சுற்றிவளைக்கப்பட்டு அவன் கைதுசெய்யப்படவேண்டும் என்றும் கோரியிருந்தனர். இனியபாரதி இப்போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் கூறுகையில் 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையான காலப்பகுதியில் ஆலையடிவேம்பு, திருக்கோயில், காரைதீவு, நாவிதான்வெளி, அக்கரைப்பற்று, சம்மாந்துரை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் குறைந்தது 5000 தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் காணாமற்போயுள்ளனர் என்றும், இவர்களுள் பலநூற்றுக்கணக்கானவர்களின் காணாமற்போதல்களோடு இனியபாரதி நேரடியாகத் தொடர்புபட்டிருக்கிறான் என்றும் கூறினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் அம்பாறை மாவட்டத்தின் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவும் பங்கெடுத்திருந்தார்.
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 08, தை 2015 மட்டக்களப்பில் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிய பிள்ளையான் மற்றும் கருணா கொலைக்குழுக்கள் மகிந்த அரசாங்கத்தினால் முன்னர் பதவியில் அமர்த்தப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும், இன்றைய மகிந்தவின் கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவொன்றினை நடத்துபவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் ஆயுததாரி பொது எதிரணியினரால் மட்டக்களப்பில் இடம்பெறும் தேர்தல்களைக் கண்காணிக்கவென நியமிக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு உத்தியோகத்தர்களை மிரட்டிவருவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சித்தாண்டிப் பகுதியில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்க்களில் கண்காணிப்பாளர்களாக நிறுத்தப்பட்ட பலர் பிள்ளையான் கொலைக்குழுவினரால கொலைப்பயமுருத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவருகிறது. இதேவேளை அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பகுதியில் இயங்கிவரும் இன்னொரு கொலைக்குழுவான கருணா குழுவின் பிரதான ஆயுததாரி, "தேஷமான்ய" இனியபாரதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதேச செயலகத்தின் உறுப்பினர் ப. விஜயராஜா என்பவரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறார். காயப்பட்ட உறுப்பினர் திருக்கோயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. சித்தாண்டிப் பகுதியில் குறைந்தது 3 வாக்குச் சாவடிகளை சுற்றி பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள் வலம்வருவது அவதானிக்கப்பட்டிருப்பதுடன், அப்பகுதியில் பணியாற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தொடர்ச்சியாக இக்குழுவினரால மிரட்டப்பட்டுவருகின்றனர் என்றும் தெரியவருகிறது. இப்பகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராகச் செயற்பட்டுவரும் தவராசா ஜெயசிறியின் வீட்டிற்குச் சென்ற பிள்ளையான் கொலைக்குழு அவரது தங்கையை மிரட்டி, "உனது சகோதரன் தொடர்ந்தும் தேதல் கண்காணிப்பில் ஈடுபட்டால், பாரிய விளைவுகளைச் சந்திப்பீர்கள், உனது சமுர்தி வேலை இல்லாமல்ப்போவதோடு வேறு பல கடுமையான விளைவுகளும் ஏற்படும் " என்று மிரட்டிவிட்டுச் சென்றதாகத் தெரியவருகிறது. இதுவரையில் பிள்ளையான் கொலைக்குழுவினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 44 தேர்தல் வன்முறைகள் அரங்கேற்றப்படுள்ளதாக தேர்தல் கண்காணிப்பகம் முறையிட்டிருக்கிறது.
  11. ஒரு பொம்பிளையா.....நீங்கள் ரொம்ப அப்பாவியாய் இருக்கிறீர்கள்.... பொம்பிளையோடு அவவின் நண்பர்கள், உறவுக்காரர்கள்,பிள்ளைகள், குஞ்சு குருமான் என்று ஒரு முப்பது நாப்பது தேறும்.....இதில் எழுதப்படாத விதி அவரவர்கள் மேக்கப்புக்கான செலவை அவரவர்களே குடுக்க வேண்டும்.....ஒருமுறை மகள் மேக்கப் செய்து கொண்டு வர (அவதான் பொம்பிளைத்தோழி ) கடைசி கிட்டவே போகவில்லை. தாயென்று நம்பவே மாட்டன் என்று.அவளும் தாத்தாவோடயே இரு என்றுட்டுப் போட்டாள் .....! 😂
  12. 31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ? நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ? இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ? ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது. அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது. அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான். அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ? பிள்ளைகள் கொண்டு வந்து தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம். அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது. எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன். கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி. நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக. நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ? இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம். இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம். நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான். என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன். தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன். ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான். என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது. அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன். பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான். ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது. மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான். எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி. 2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது. என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது. அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும். ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ? அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா. என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது. எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது. கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில் இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன். என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47. அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான். இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான். கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை. 08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம். காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன். அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன். 02.05.2020 சாந்தி நேசக்கரம்
  13. வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல...! மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை..!! மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்...! ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை..!!
  14. காலத்துக்கு ஏற்ற ஒரு பதிவு....! நாங்களும் கால மாற்றங்களுடன் பயணிக்காதவிடத்துக்....காலம் நம்மை விட்டு விட்டு வெகு தூரம் பயணித்து விடும்...! கூனிக் குறுக இங்கு எதுவுமே இல்லையே! ஒரு வேளை வருசப் பிறப்பு அண்டைக்குக் கொஞ்சம் ஆசாரமாக இருந்திருக்கலாமோ....என்னமோ?🤣
  15. வீட்டுக்கு வீடு வாசல்படி. இது கனடாவில ரொம்பவும் மோசம் என்கிறார்கள்.
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 19, தை 2015 மட்டக்களப்பில் துணை ராணுவக் கொலைக்குழுக்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துங்க்கள் - உள்ளூர் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரசரட்ணம் சசிதரன் விடுத்துள்ள வேண்டுகோளில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கிழக்குமாகாணத்தில் பல படுகொலைகள், கடத்தல்கள், காணாமற்போதல்கள் ஆகியவற்றில் ஈடுபட்ட துணைராணுவக் கொலைக்குழுக்களின் உறுப்பினர்களை புதிய அரசாங்கத்தின் எந்தப் பதிவிகளிலும் அமர்த்தக் கூடாது என்று கோரியிருக்கிறார். மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சிக் கிளையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தில் நான்கு முக்கிய துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இவர்கள் புதிய அரசின் எந்தப் பதவியிலோ அல்லது அரசின் ஆதரவுக் கட்சிகளினூடாக எந்தப் பதவிகளிலுமோ அமர்த்தப்படக் கூடாதென்று கோரப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்க ரணிலோ அல்லது மைத்திரியோ உண்மையாகவே விரும்பினால் இக்கொலைக்குழுக்களை மட்டக்களப்பிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்றும் கோரியுள்ளனர் மட்டக்களப்பு ஐக்கியதேசியக் கட்சியினர். "விலைபோன" பியசேன இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் பாராளுமன்றம் சென்றுவிட்டு பின்னர் பெருந்தொகைப் பணத்திற்காக மகிந்தவின் கட்சிக்குக்குத் தாவிய பியசேனவுக்கு எதிரான போராட்டம் ஒன்று அம்பாறை மாவட்ட தமிழ் மக்களால் நடத்தப்பட்டிருக்கிறது. கொலைக்குழு ஆயுததாரி "தேஷமான்ய" இனியபாரதி அத்துடன், மகிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கருணா கொலைக்குழுவின் பிரதான ஆயுதாரியுமான "தேஷமான்ய" இனியபாரதிக்கெதிரான போராட்டங்கள் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆம் திகதி திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஆயுததாரி இனியபாரதியின் வீட்டைச் சூந்துகொண்ட சுமார் 3000 தமிழர்கள் அவனை பிடிக்க எத்தனித்தபோது பொலீஸாரின் உதவியோடு அவன் பாதுகாப்பாகத் தப்பிவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். இத்தீர்மானத்தின்படி, முன்னாள் துணையமைச்சரும் துணைராணுவக் குழுவொன்றின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதி அலி சாகீர் மெளலானா, பிள்ளையானின் நெருங்கிய ஆயுததாரி கணபதிப்பிள்ளை மோகன் ஆகியோர் அப்புறப்படுத்தப்படவேண்டிய மக்களுக்கு எதிரான சக்திகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏறாவூர் உள்ளூராட்சிச் சபையின் தலைவராக இருக்கும் அலி சாகீர் மெளலானா புதிய அரசாங்கத்தின் ஆதரவாக செயற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, 2004 இல் புலிகளிடமிருந்து கருணா போலியான பிரதேசவாத காரணங்களை முன்வைத்து பிரிந்துசென்று அரச ராணுவத்துடன் இணைவதற்கு உதவிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அலி சாகீர் மெளலானா தனது தோழனும், ஆயுததாரியுமான கருணா பற்றிக் கூறியது அத்துடன், தற்போது மகிந்தவின் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருக்கும் கொலைக்குழு தலைவன் பிள்ளையானும் புதிய அரசிடமிருந்து தனக்கு ஆதரவையும், பாதுகாப்பையும் கேட்டிருப்பதாகத் தெரியவருகிறது. கொலைக்குழு ஆயுததாரிகளின் தலைவன் - பிள்ளையான் அதேவேளை, துணைராணுவக் கொலைக்குழுவின் ஆயுததாரி கருணா தனது துணையமைச்சர் அதிகாரங்களை இன்னமும் மீளக் கையளிக்காத நிலையில், புதிய அரசாங்கத்திற்கு தனது ஆதரவு இருக்கும் என்று தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. கொலைக்குழு ஆயுததாரிகளின் தலைவன் - கருணா ரணிலும், அமெரிக்காவும், அவர்களது புலிகளுக்கெதிரான சர்வதேச வலையமைப்பும் 2004 இல் ரணில் தலைமையிலான அரசே கருணாவைப் புலிகளிடமிருந்து பிரித்து, புலிகளைப் பலவீனமாக்கி இறுதியில் அழிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக தெற்கில் மார்தட்டி வந்த நிலையில் கருணாவின் இந்த ஆதரவுக்கரம் ரணிலின் புதிய அரசிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ரணில் அண்மையில்க் கூட வெளியிட்ட அறிக்கையொன்றில் தனது அரசாங்கத்தின் காலத்தில், கருணாவைப் பிரித்து, புலிகளைப் பலவீனமாக்கி, அமெரிக்காவின் உதவியுடன் "பாதுகாப்பு வலைப்பின்னலை " உருவாக்கி, இறுதியில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை மகிந்த முற்றாக அழித்துமுடிக்க தாமே ஏற்பாடு செய்ததாகக் கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.
  17. நன்றி ரன்சித் உங்கள் அருமையான நேரத்துக்கும் இந்த ஆக்கத்துக்கும் .
  18. நம்ம லெவல் வேற லெவல்... இந்த பாக்கியம் ஒருத்தருக்கும் வராராது.
  19. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்கழி 2014 மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் கேள்விகேட்ட இளைஞனைத் தாக்கிய பிள்ளையான். களுதாவளையில் இடம்பெற்ற மகிந்தவுக்கான ஆதரவுப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கேள்விக்கேட்டதற்காக இளைஞர் ஒருவர் அவ்விடத்திலேயே பிள்ளையானினாலும், அவரது ஆயுததாரிகளாலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். "தமிழினத்தை அழித்த இனக்கொலையாளி மகிந்தவைப்பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும், அதில் உங்களின் பங்குபற்றியும் கூறுங்கள்" என்று களுதாவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட 23 வயது இளைஞர், மகிந்தவைப் போற்றித் துதிபாடிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கிக் கேட்டதற்காவே அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது. தாக்கப்பட்ட இளைஞரான அந்தோணிப்பிள்ளை அற்புதராசா கடுமையான காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகச் செயற்பட்டுவரும் பிள்ளையான் மகிந்தவுக்குச் சார்பான பிரச்சாரக் கூட்டங்களை தனது ஆயுதக் குழுவினதும் பொலீஸாரினதும் பிசன்னத்தோடு நடத்திவருகிறார். ஆவ்வாறானதொரு பிரச்சாரக் கூட்டத்திலேயே மகிந்தவிற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்த பிள்ளையானை நோக்கி அவரது படுகொலைகள்கள், கடத்தல்கள் தொடர்பாகக் கெள்வியொன்றினை அந்தோணிப்பிள்ளை அற்புதராசா என்னும் இளைஞர் பலர் முன்னிலையில் கேட்டிருக்கிறார். அவ்விளைஞன் கேள்விகேட்டு அமருமுன்னமே, தனது சகாவான பிரசாந்தனை பார்த்து, "அவனைப் பிடியுங்கள்" என்று கூறிய பிள்ளையானும், அவரது சகாக்களும் அந்த இளைஞரை மேடையின் அருகில் வைத்துத்க் கடுமையாக தாக்கியிருக்கிறர்கள். மக்கள் திகைத்துப்போய் பார்த்திருக்க, பிள்ளையானுக்குக் காவலாக நின்ற பொலீஸார் வேடிக்கை பார்க்க அந்த இளைஞன் துணைராணுவக் கொலைக்குழுவினரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இது இவ்வாறிருக்க, மகிந்த கிழக்கு மாகாண ஆலோசகரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு அலுவலகம் ஒன்றிற்குத் தீவைத்திருக்கிறார். ஏறாவூர் பொலீஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி, சந்திவெளியில் அமைந்திருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆதாரவு அலுவலகத்திற்கு உந்துருளிகளில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் அவ்வலுவலகத்தின்மீது பெற்றோல்க் குண்டுகளை எறிந்து தீமூட்டியதாக அயலவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தீவைக்குமுன்னர், அலுவலகத்தினுள் நுழைந்த பிள்ளையான் கொலைக்குழுவினர் உள்ளிருந்த தளபாடங்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினாலும், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கினாலும் அல்லற்பட்டு வரும் மக்களுக்கான நிவாரணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கும் மகிந்தவின் ஆலோசகர் பிள்ளையான், மகிந்தவுக்கு வாக்களித்தால் ஒழிய நிவாரணங்களை தாம் வழங்கப்போவதில்லையென்று பகிரங்கமாக மக்களுக்குத் தெரிவித்துவருகிறார் என்று பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் முறையிட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடுமையான வெள்ளப்பெருக்கினைச் சந்தித்திருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தின் சுமார் 150,000 மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 60,000 ஏக்கர்கள் விவசாய நிலமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கும், தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவான நிலைப்பாடுடைய இம்மக்களின் அவலங்களில் அரசியல் செய்யும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையான் மக்களின் அவலங்களை தனது எஜமானர்களின் வெற்றிக்குத் தூண்டிலாகப் பாவிப்பதாக இம்மக்கள் விசனப்படுகிறார்கள்.
  20. த‌னிமையில் இருக்கும் போது கைபேசியில் இருந்து தாய‌க‌ப் பாட‌ல்க‌ளை அதிம் கேட்பேன் உடையார் அண்ணா ? சாத‌னை செய்து விட்டு க‌ண் மூடி தூங்கும் க‌ரும்புலிம‌ற‌வ‌ர்க‌ள் மாவீர‌ செல்வ‌ங்க‌ளின் நினைவுக‌ள் அதிக‌ம் வ‌ரும் ? இவ‌ள‌வு தியாக‌ம் செய்த‌து இந்த‌ நிலையில் வாழாவா என்று ப‌ல‌த‌ட‌வை யோசித்த‌தும் உண்டு ? ஏதோ விடிவு கால‌ம் பிற‌க்கும் என்று எம் த‌மிழீழ‌ ப‌ய‌ண‌ம் தொட‌ர்கிற‌து ? எல்லாம் அவ‌ர் கையில் 🙏
  21. ஓ....தம்பியர் ஊர் பாக்க போன இடத்திலையும் நூல் விட்டு பாத்திருக்கிறார்....😎 மற்றது ராசன் நைனாதீவு இல்லை நயினாதீவு. நீங்கள் டெய்லி காத்தான்குடியை ஊடறுத்து போய் வாறதாலை நைனாவிலையே நிக்கிறியள்.😜 ஆகா.......சிங்கன் வசமா மாட்டி. இதை வைச்சே ஆளை கொஞ்ச நாளைக்கு வறுத்தெடுக்கலாம்.
  22. நீங்கள் யோசிக்க வேண்டாம் அக்னீ இதையெல்லாம் போய் சொல்ல மாட்டார் ......! 😂
  23. உலக சாதனைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.......! 👍
  24. வணக்கம் வாத்தியார்......! எதுக்காக கிட்ட வந்தாளோ? எத தேடி விட்டு போனாளோ? விழுந்தாலும் நா ஒடஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிர்ந்திடுவேனே நானும் அட காதல் என்பது மாய வலை சிக்காமல் போனவன் யாரும் இல்லை சிதையாமல் வாழும் வாழ்கையே தேவையில்லை தேவையில்லை, தேவையில்லை அட காதல் என்பது மாய வலை கண்ணீரும் கூட சொந்தம் இல்லை வலி இல்லா வாழும் வாழ்க்கையே தேவையில்லை (தேவையில்லை, தேவையில்லை)........! ---என்னை மாற்றும் காதலே---
  25. கிராமத்து சந்தோசங்கள் பட்டினங்களில் வரவே வரராது. தாய்க்குலங்களின் கபடி கபடி...
  26. அதைதான் முதலே சொல்லிவிட்டேனே விசுகு அண்ணா. “””இது நடைமுறை வாழ்வில் கண்டதைதான் பகிர்கிறேன், உங்கள் கருத்தை முற்று முழுதாக மறுதலிப்பதாய் அர்த்தமல்ல.””””
  27. நல்ல பொறுப்பான அம்மா அப்பாவாக இருந்து ஆளாக்கிவிட்டும் பொண்டாட்டி/புருஷன் மயக்கத்தில் அம்மா அப்பாவை பேஸ்மண்டில் அடைத்து வாழவிட்ட பிள்ளைகளும் உண்டு. நல்ல பொறுப்பான கணவனாக மனைவியாக வாழ்ந்திருந்தும், வெளி தோற்றத்தில் மயங்கி பெற்ற குழந்தைகளைகூட மறந்து அடுத்தவர்கூட ஓடிபோன மனைவியும் கணவனும் உண்டு. நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக வாழ்பவர்களைதான் இந்த சமூகம் தமது தேவைக்கு மட்டும் பாவித்துவிட்டு அடிக்கடி ஏமாற்றும். வெட்டி பந்தா காட்டுபவர்களுடன் கூட்டு சேர்ந்து உதவி செய்தவர்களுக்கே வித்தை காட்டும். இது நடைமுறை வாழ்வில் கண்டதைதான் பகிர்கிறேன், உங்கள் கருத்தை முற்று முழுதாக மறுதலிப்பதாய் அர்த்தமல்ல.
  28. நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை? *நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?* *தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க ஒரு நண்பன் தேவை* *தடம் மாறும் போது தடம் மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை* *ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை* *அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை* *அவ்வப்போது அரவணைத்துச் செல்ல சில நண்பர்கள் தேவை* *அதட்டி உருட்டி மிரட்டி நம்மைக் காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை* *துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை* *ஊர் சுற்றி வர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை* *நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக் கொள்ள சில நண்பர்கள் தேவை* *எதிர்த்துப் பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை* *இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிடச் சிறந்தது ஏதும் இல்லை* *அந்த சிலரைத் தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !* ======================================= உடம்பின் நடுப்பகுதி வயிறு. அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி ஐம்பது இந்த ஐம்பதாவது வயது ஆரம்பத்தில், நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள். 😊 தொந்தி கனக்க விடாதீர்கள். தொந்தரவு வரும். மனம் கனக்க விடாதீர்கள் மரணம் வரும். 😊 ஒரு மனிதன் வியாதியுடன் வாழப்போகிறானா, வீரியமுடன் வாழப்போகிறானா, நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான் இந்த ஐம்பது 😊 நிறைய வேலை செய்வதால் நமக்கு நிம்மதி போவதில்லை. உடம்பு உருக்குலைவதில்லை. 😊 என்ன நடக்குமோ என்ற பயமும் கவலையும்தான் மனிதன்மீது பாரமாக இறங்கி அவனை நொறுக்கிவிடுகின்றன. 😊 பரபரப்பின்றிச் செயல்படுங்கள். கோபப்படாமல் காரியமாற்றுங்கள். நிதானத்தைக் கடைபிடியுங்கள். ஆரவாரம் வேண்டாம். அலட்டிக் கொள்ளாதீர்கள். பொறுப்புக்களை சீராக நிறைவேற்றுங்கள். 😊 அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள். அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். 😊 தினசரி மத்தியானம் ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள். இரவு பன்னிரண்டு மணிக்குமேல் எக்காரணத்தை முன்னிட்டும் விழித்திருக்காதீர்கள். 😊 பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம். அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள். 😊 ஆண்டவனை நினையுங்கள். இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா. நான் தப்பு பண்ண விடாதே அப்பா." என்று வேண்டிக் கொள்ளுங்கள். 😊 முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம். 😊 டென்ஷன் இல்லாமல் இருங்கள். பென்ஷன் வாங்கலாம். 😊 ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால், அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள். 😊 அதனால்தான் சொல்லுகிறேன். கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் ... ================================================= வியந்து போன வரிகள் "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே..., புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை..., ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌 வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு..., அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!! 👌👌👌👌👌👌👌👌 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்" 👌👌👌👌👌👌👌👌 திருமணம் - ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்..., ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!! 👌👌👌👌👌👌👌👌 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்..., பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும். 👌👌👌👌👌👌👌👌 மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும் என்ற ஒரு காரணத்திற்காகவே, நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...! 👌👌👌👌👌👌👌👌 நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை. 👌👌👌👌👌👌👌👌 இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட..., வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............! 👌👌👌👌👌👌👌 பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........! 👌👌👌👌👌👌👌👌 துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 👌👌👌👌👌👌👌 தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*
  29. ஒரு பதிவில் மாற்றங்கள் 12 மணித்தியாலத்திற்குள் செய்து கொள்ள முடியும். அதன் பின்னர் மாற்றங்கள் செய்யவேண்டியிருப்பின் நிர்வாகம் மூலமே செய்ய முடியும்.
  30. பகுதி 3: - தவறான மருந்து இப்ப வரும் திரைப்படங்களில் நேர்கோட்டில் (linear) இல் கதை போய்க்கொண்டு இருக்கையில் இடையே இன்னொரு குட்டிக் கதை (nonlinear) வந்து போகின்ற மாதிரித்தான் ராசுக்குட்டியின் இந்தக் கதையின் இடையில் இன்னொரு குட்டிக்கதை. இது அவர் உயிர் அருந்தப்பில் பிழைத்தது கூகிள் ஆண்டவரால் தான் என்று நம்பி கொண்டிருந்த கதை. பிறக்கும் போதே தனக்கு ஞானம் வந்துவிட்டது என்று தன் மனசுக்குள் நினைத்துக் கொண்டு இருந்த ராசுக்குட்டிக்கு கடவாயில் கொஞ்சம் லேட்டாகத்தான் ஞானப்பல்லு முளைத்தது. சும்மா எல்லா பல்லும் தன் பாட்டுக்கு ஒரு கரைச்சலும் இல்லாமல் அமைதியாக வந்து தன்ர இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்க, உந்த ஞானப்பல்லு மட்டும் ராசுக்குட்டிக்கு தன் சேட்டையை காட்டியது. முதலில் கொஞ்சமே கொஞ்சமாக வெளியே வந்து முரசை அணு அணுவாக பதம் பார்த்தது. அது வளர்ந்து வரும் மட்டும் வலி என்றால் அப்படி ஒரு வலி ராசுக்குட்டிக்கு . பிறகு திடீரென வேகமெடுத்து வளர, நல்லா சாப்பிட்டு உருண்டு திரண்டு இருந்த சொக்கையை உள் பக்கமாக கிழிக்க தொடங்கி ஞானப்பல்லு தன் அடுத்த கட்ட தாக்குதலை மேற்கொள்ள துடிச்சுப் போனார் ராசுக்குட்டி, சரி, இப்படி எல்லா வேதனையை அனுபவித்த பின் முழுமையாக வந்த ஞானப்பல்லு சும்மா இருக்கவில்லை. அது தன் பக்கத்தில் முரசில் ஒரு சிறு வெடிப்பை நிகழ்த்த, ஒரு நாளைக்கு இரண்டு தரம் பல்லுத்தீட்டும் போதும் நிகழும் தாக்குதலை சமாளிக்க பக்றீரியாக்கள் அந்த வெடிப்புக்குள் கவர் எடுத்து தங்கிட்டினம். வந்து தங்கின பக்றீரியாக்கள் தங்கள் வேலையை காட்ட, வெண் குருதிச் சிறுதுணிக்கைகள் அவர்களுடன் மல்யுத்தம் நடத்த, ராசுக்குட்டி வேதனையில் மீண்டும் துடி துடித்துப் போனார். ஒரு கட்டத்தில் வேதனையின் அளவு அதிகரிக்க பல்லு டாக்குத்தரிடம் ஒடிப் போக, "நீ ஏன் இவ்வளவே லேட்டாக வந்தனீ" என அவர் கோபப்பட்டு அன்ரி பயோடிக்கு (Antibiotic) மருந்தெழுதி தந்தார். முதலிலேயே போயிருந்தால், ஞானப்பல்லு தேவையற்றது என்று கழட்டி எடுத்து மனுசன் கொஞ்சம் காசு பார்த்து இருக்கும். அது நடக்காத கோபம் போலும். ராசுக்குட்டியும் பக்கத்தில் இருக்கும் பார்மசிக்கு போய் மருந்து வாங்கி அடுத்த நாள் காலையில் முதல் குளுசையை போட்டு விட்டு, மனிசிக்கு 'ரற்றா' சொல்லி வேலைக்கு செல்லும் போது (மனுசி "போயிட்டு வாங்கோ" என்று சொல்லி வழியனுப்பாட்டில் விபத்தில் சிக்கி விடுவேனோ என்ற பயம் ராசுக்குட்டிக்கு) ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார். ராசுக்குட்டிக்கு காரை ஒட்டு, போது லேசாக தலையை சுத்துற மாதிரி இருந்தது. பிறகு மூன்று விரல்கள் உணர்ச்சியற்று போனது போல இருக்க ஸ்ரியரிங்கை பிடிக்க கஷ்டப்பட்டுக் கொண்டே அலுவலகத்துக்கு ஒரு மாதிரி போய் சேர்ந்தார். அங்கு போன பின் தலைச்சுற்று அதிகரிக்க, மனிசிக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை சொல்ல, "நீங்கள் குடிச்ச மருந்து பிழை போல" என்று மனிசி குண்டைத் தூக்கி போட்டார். "எதுக்கும் மருந்தின் பெயரை படம் எடுத்து அனுப்புங்கோ" என்று சொல்லி, மருந்தின் லேபலை மனிசி படம் எடுத்து மொபைலில் அனுப்ப, ராசுக்குட்டி அதை பற்றி கூகிள் ஆண்டவரிடம் அபிப்பிராயம் கேட்க, "அது அன்ரி பயோடிக் இல்லை....இது புற்று நோயாளர்கள் ஹீமோ தெரபிக்கு பிறகு குடிக்கும் மருந்து" என்று விடை தந்தார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ஆடி போய் விட்டார் ராசுக்குட்டி. பல்லு டாக்குத்தரிடம் உடனே இது பற்றிக் கதைக்க, விடயம் தெளிவானது. அவர் எழுதித் தந்த மருந்தின் பெயருக்கும் பார்மசி தந்த மருந்தின் பெயருக்கும் இடையே இரண்டே இரண்டு எழுத்துகள் மட்டுமே வித்தியாசம். எனவே பார்மசிகாரர் பிழையாக மருந்து தந்து போட்டார். "நீ உடனடியாக அம்புலன்ஸ் இற்கு அடிச்சு எமர்ஜென்சிக்கு போ, அதற்குள் உன் வேலைக்கு அருகில் உள்ள ஹொஸ்பிடலுக்கு நான் தகவல் அனுப்புகின்றேன் என்று பரபரத்தார் பல்லு வைத்தியர். நம்மட ராசுக்குட்டிக்குத்தான் பொறுமை மருந்துக்கும் இல்லையே,.. எனவே தன்னால் காரில் உடனடியாக போய்ச் சேர முடியும் என நினைத்து அம்புலன்ஸை கூப்பிடாமல் தானே காரை செலுத்தி 30 நிமிடம் தாமதமாக ஹொஸ்பிடலின் எமர்ஜென்சி பிரிவில் தன்னை கொண்டு போய் தானே ஒப்படைச்சார். " நல்ல வேளை ஒரு தடவை மாத்திரம் நீ மருந்து எடுத்துள்ளாய் .. இன்னும் கொஞ்சம் எடுத்து இருந்தால் பாரதூரமாக போயிருக்கும்" என்று சொன்ன மருத்துவர்கள், " நீ உண்மையில் கெட்டிக்காரன், எப்படி இந்த மருந்து தவறு என்று கண்டுபிடித்தாய்" என்று ஆச்சரியப்பட்டு பாராட்டிக் கொண்டு இருக்கும் போது, ராசுக்குட்டி மனசுக்குள்"கூகிள் ஆண்டவரிடம் ஒரே அடியாக சரணாகதியாகிக் கொண்ரு இருந்தார். அன்று தொட்ட பழக்கம் கடைசியாக சிறு நீர் பிரச்சனையின் இறுதி பரிசோதனையில் அடைந்த அந்த ''கொடுமையான வலி'' வரை தொடர்ந்தது ராசுக்குட்டிக்கு. - தொடரும்
  31. நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வரைகூட அம்மாவுக்கு பக்கத்திலதான் பூனைகுட்டி போல நித்திரை கொண்டிருக்கிறேன். வாசிக்கும் பழக்கும் எனது தாயாருக்கு அதிகமாக இருந்ததினால் பக்கத்தில் படுத்திருக்கும்போது அவ சொன்ன புராண கதைகளை கேட்டே சாதாரணதர பரீட்சையில் மகா பாரதம் கம்ப ராமாயணம் பகுதிகளில் அதிக பெறுபேறுகள் பெற்றிருக்கிறேன். எங்காவது ஊர் விழாக்களுக்கு போனாலும் கிப்ஸ் சாரம் அணியும் வயசிலும் அம்மா பக்கதிலயே போயி குழந்தை போல உக்காந்திருக்கிறேன். ஆக்கினை தாங்காமல் , போய் பொடியளோட விளையாடேன்டா.. எதுக்கு அம்மா அம்மா எண்டு பின்னால திரியுறா? அம்மா செத்து போனால் என்ன செய்வா எண்டு என்ர பாசத்தின் லெவலை அளவிட சும்மா ஒரு கோப கேள்வி பலமுறை கேட்டிருக்கிறா. அப்போ நான் சொன்னதெல்லாம் ’நீ செத்துபோனா நானும் செத்துபோவேன்’. சொன்னபடியே அவ செத்து போயிட்டா... ஆனால் நான் இன்னும் வாழ்கிறேன். வலி தரும் பதிவு குமாரசாமியண்ணா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.