Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்15Points87997Posts -
உடையார்
கருத்துக்கள உறவுகள்15Points23926Posts -
Kavallur Kanmani
கருத்துக்கள உறவுகள்14Points1061Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்11Points15791Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/05/21 in all areas
-
காவலூர்க் கனவுகள்
13 pointsகாவலூர்க் கனவுகள் கடலோரம் அலைவந்து கரைமீது மோதும் காதோரம் ஆலய மணி வேதம் ஓதும் இனிதான தென்றலும் இடை வந்து வீசும் எங்கெங்கு நோக்கினும் தெய்வீகம் பேசும் இல்லங்கள் எங்குமே இறை புகழ் பாடும் இயம்பிடும் செபமாலை தினம் சாரல் தூவும் அதிகாலைத் திருப்பலி அரங்கேறும் நேரம் அற்புத கானங்கள் அகமெங்கும் மோதும் நிலவோடு கடல் வந்து நிதம் சங்கமிக்கும் கடலோடு மேகங்கள் தலை கோதிச் செல்லும் செம் பருத்திப் பூக்கள் வேலியில்; ஆடும் செவ்வந்திப் பூக்களும் பொன் அள்ளித் தூவும் அதி காலைச் சேவல்கள் அறை கூவிப் பாடும் அதை மிஞ்சும் திருந்தாதி மணி நாதம் கேட்கும் வான் முட்டும் ஆலய கோபுரம் நான்கும் ஆன்மீக தாகங்கள் தீர்த்திடும் பாங்கும் அறிவூட்டும் அதிசய கலைக்கூடம் எங்கள் அறிவுக்கண் திறந்திடும் அற்புதம் செய்யும் குயிலோசை காதிலே இன்னிசை பாடும் அலையோசை காற்றோடு சுதிதாளம் போடும் வெள்ளிக் கொலுசொலி வீதியில் சிந்தும் துள்ளும் வனிதையர் சிரிப்பொலி மிஞ்சும் காலைச் சந்தையும் களைகட்டிக் கூடும் காவலூர்த் துறைமுகம் கலகலப் பூட்டும் மாலைச் சூரியன் மறைந்திடும் வேளை மஞ்சள் குளித்திடும் கடல் மகள் நாணம் கண்டு களித்திட காளையர் கூடும் கடற்கரை பொன்மணற் பரப்பென மின்னும் பூவரசம் பூக்கள் சாமரம் வீசும் மாமரக் காற்றிலும் தமிழ் மணம் வீசும் காவலூர்க் கனவினைக் கண்களில் சுமக்கும் கண்மணிகள் வாழ்வில் வசந்தமே வீசும் --13 points
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
இறுதிப்பகுதி. சாலை எங்கும் பனிக்காலத்தின் முடிவுரையை சிறு சிறு பனித்துளிகள் எழுதி கொண்டு இருந்தன. காற்று கடுமையாக வீசி குளிர்காலத்தினை அகற்றி அந்த இடத்தில் இலையுதிர்காலத்தை விதைத்துக் கொண்டு இருந்தது. இனி கொஞ்ச காலத்துக்கு காற்று பெரிசாக வீசாது. இலைகளை உதிர்த்து கொட்ட வைப்பதற்காக செப்ரம்பர் இறுதியில் மீண்டும் வரும். குளிர் மறை இரண்டில் இருந்தது. ராசுக்குட்டி ஸ்கார்புரோவில் எல்ஸ்மியார் எனும் வீதியில் இருக்கும் ஆஸ்பத்திரியின் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். இந்த ஆஸ்பத்திரிக்கு தமிழர்கள் பலர் இணைந்து பெரியளவு கொடை கொடுத்து இருப்பதால் மனசுக்குள் ஒரு மிதப்புடன் தான் நின்று கொண்டு இருந்தார். கொரனா காலம் என்பதால் ஒவ்வொருவராக விசாரித்தே உள்ளே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். குளிர் காற்று வேகமாக வீசி முகத்தில் அறைய, மூக்கு விறைத்தவாறு நின்று கொண்டு இருக்கும் போது அவர் முறையும் வந்தது. முன்னுக்கு இருந்த தாதி ராசுக்குட்டியிடம், "நீ எப்ப கடைசியாக வெளிநாடு போனாய், காச்சல் இருக்கா, கொரனா வந்த எவருடனாவது தொடர்பில் இருந்தாயா" போன்ற கேள்விகளை கேட்டு விட்டு "இந்த முககவசத்தை அணிந்து கொண்டு உள் பகுதிக்கு செல்" என்று ஒரு முகக்கவசத்தை கொடுத்தார். ராசுக்குட்டி ஏற்கனவே வீட்டில் இருந்து முகக்கவசம் ஒன்றை கொண்டு சென்று இருந்தாலும், ஓசியாக கிடைக்கும் எதையும் மறுத்து பழக்கமில்லாத அற்(ப)புத குணத்தால் அந்த முக்கவசத்தை வேண்டாம் என்று சொல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டு உள்ளே சென்றார். போன கிழமையும் இதைத்தான் செய்தவர். ஏற்கனவே முதல் கிழமையும் இங்கு வந்திருந்தார். அல்றா ஸ்கானிங்கில் சிறுநீரகப் பாதையில் கல்லு கில்லு இல்லையென்று ரிசல்ட் வந்த பின்னர், சிறு நீரகத்தில் வேறு ஏதும் பிரச்சனை இருக்கா என்ரு பார்க்க CT scan எடுக்க வந்திருந்தார். வெறு வயிற்றில் போனவரை மூன்று கிளாஸ் தண்ணீர் கொடுத்து விட்டு, மல்லாக்க படுக்க வைத்து, ஒரு உருளை வடிவ ஸ்கானருக்குள் அனுப்பும் போது விழி பிதுங்கி, நெஞ்செல்லாம் பாரமாக, ஆள் பயந்து கொண்டு தான் உள்ளே போனவர். அந்த பயத்திலும் கூட அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. CT scan முடிந்த பின் "எப்ப ரிசல்ட்ஸ்" வரும் என்று கேட்க அந்த அழகி, "அடுத்த கிழமை உனக்கு இருக்கும் மற்ற டெஸ்ட் இன் பின் தான் டொக்டர் இதன் முடிவையும் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். மீண்டும் அந்த இறுதி பரிசோதனைக்கு வந்திருக்கின்றார். இன்று அப்படி எந்தப் பெண்ணுமே அறைக்குள் இருக்க கூடாது, எல்லாரும் ஆண்களாக இருந்து விட்டால் நல்லா இருக்கும் என்று மனசுக்குள் என்ணியபடி வரவேற்பறையில் இருந்த பெண் குறிப்பிட்ட அறைக்குள் சென்றார் ராசுக்குட்டி. ஆனால் அங்கு 25 வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த வேறு ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார். ராசுக்குட்டிக்கு கொஞ்சமே கொஞ்சமாக வெட்கம் எட்டிப் பார்த்தது. ராசுக்குட்டியின் மனவோட்டத்தை புரிந்து கொண்ட அந்த தாதி நான் தான் டொக்டருக்கு உதவப் போகின்ற பிரதான தாதி என்று சொல்லி, பக்கத்தில் இருக்கும் ஆண் தாதியைக் காட்டி இவர் உதவியாளர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். ராசுக்குட்டி வந்திருப்பது cystoscopy எனும் பரிசோதனைக்கு. அது எப்படி இருக்கும் எந்தளவுக்கு வலி இருக்கும் என்பதை மூன்று நாட்களாக வாசிச்சு வாசிச்சு மனசுக்குள் தன்னை தயார்படுத்தி வைத்திருந்தார். இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் போது இருந்த பயத்தின் அளவு நல்லா குறைந்து இருந்தது ராசுக்குட்டிக்கு. மனுச மனம் எப்பவுமே இப்படித்தான். என்ன ஏது நோய் என்று அறிய முதல் போது பயந்து சாகும், பிறகு மெல்ல மெல்ல பயத்தில் இருந்து வெளியே வரப் பார்க்கும், பின் எது வந்தாலும் சரி என்று ஏற்கத் தொடங்கி தன்னை தயார்படுத்தி வைக்கும். ராசுக்குட்டிக்கும் கொஞ்சம் தைரியம் இந்த 4 மாதங்களுக்குள் வந்து இருந்தது. என்ன நடந்தாலும் குடும்பம் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்து இடைப்பட்ட காலத்தில் தன் ஆயுள்காப்புறுதி தொகையையும் கூட்டி விட்டிருந்தார். ஒருவிதமான அமைதியும் மனசுக்குள் குடிவந்து இருந்தது அவருக்கு. prostate இல், Bladder இல், சிறு நீரக பாதையில் (urethra ) புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு ஏதும் பிரச்சனை உள்ளதா என அறிவதற்காகவே cystoscopy செய்வினம். ராசுக்குட்டிக்கு ஏற்கனவே செய்த பரிசோதனைகளில் பிரச்சனை ஏதும் இல்லை என முடிவு வந்தமையால் இறுதிப் பரிசோதனையாக cystoscopy செய்யச் சொல்லியிருக்கினம். சின்னஞ் சிறு கமரா, அந்த. கமராவுக்கு வெளிச்சம் பாச்ச சிறு லைட்டுகள், இவை எல்லாவற்றையும் கொண்ட ஒரு சிறு டியூப். ஆணுக்கு எனில் அந்த சிறு டியூப்பை ஆண்குறியின் சின்னஞ் சிறு துவாரதின் வழியே உள்ளே சிறுக சிறுக Bladder வரைக்கும் அனுப்பி கமராவின் மூலம் அதை வீடியோ எடுத்து டியூப்பின் மறுமுனையில் இணைக்கப்பட்டு இருக்கும் திரையில் டொக்டர் பார்ப்பார். இதன் மூலம் அவரால் பிரச்சனை ஏதும் இருப்பின் கண்டு பிடிக்க முடியும். அத்துடன் biopsy செய்வதற்காக உள்ளே அனுப்பிய டியூப்பில் பொருத்தி உள்ள கருவி மூலம் சின்னஞ் சிறு பகுதி (துணிக்கை) ஒன்றை ஒன்றை கிள்ளி பின் அதை வெளியே எடுத்து பரிசோதித்து பார்ப்பர். "இப்படித்தான் மச்சான் நடக்கப் போகுது எனக்கு நாளைக்கு" என்று ராசுக்குட்டி தன் நண்பனுக்கு முதல் நாள் சொல்லும் போதே அவனுக்கு வேர்த்து விட்டது. "எப்படியடா...அதுவும் அந்த சின்ன துவாரத்துக்குள் கமரா எல்லாம் அனுப்பி...செரியாக வலிக்க போகுது பார் " என்று அவன் திருப்பி திருப்பி அதையே ரிப்பீட் மோட்டில் ராசுக்குட்டியிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். ராசுக்குட்டியை சிறு கட்டிலில் (வாங்கில்) மல்லாக்க படுக்க வைத்த பின் டொக்டர் ஆரம்பிக்க முன்னரே, "என்னால் உனக்கு வலி ஏற்படுவதற்கு முதலில் என்னை மன்னித்துக் கொள், இது ஆளை மயக்கி செய்யும் பரிசோதனை அல்ல... கொஞ்சம் வலிக்கும்.. முக்கியமாக Bladder இனை டியூப் சென்று அடைந்த பின் சிறு பகுதியை கிள்ளி எடுக்கும் போது வலி கூடியளவு இருக்கும், ஆனால் தாங்க கூடியது... என்னை மன்னித்துக் கொள்" என்று கூறியபின் தான் பரிசோதனையை ஆரம்பித்தார். "இவ்வளவு படிச்ச மனுசன்... எவ்வளவு தன்மையா கதைக்கின்றார்..அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்கின்றார்" என்று எண்ணிய ராசுக்குட்டி 'என்ன வலி வந்தாலும் தாங்கத்தான் வேண்டும்... அழுது கிழுது பக்கத்தில் நிற்கும் பெண் தாதி தன்னை ஒரு கோழை என்று நினைக்க வைக்க கூடாது என்பதில் உறுதியாக கிடந்தார். அவருக்கு இந்த ரணகளத்திலும் அருகில் நிற்கும் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நினைப்பு. டொக்டர் சொன்னது போலவே, நண்பன் அரண்டது போலவே ராசுக்குட்டிக்கு வலி இருந்தது. முதலில் உள்ளே நுழைக்கும் போது, உடனடியாக எழும்பி சுச்சு போக வேண்டும் போல உணர்வு வந்தது அவருக்கும் பின் வலி மெது மெதுவாக ஆரம்பித்து உச்சத்துக்கு போனது.அதுவும் Bladder இனை அந்த டியூப் அடைந்த அந்தக்கணமும் கிள்ளி எடுத்த வினாடியும் அவரை அறியாமலே இரண்டு சொட்டு கண்ணீர் துளி கடைக்கண்ணால் வழியுமளவுக்கு வலி வந்து போனது. பதினைந்து நிமிடங்கள் டியூப் அங்கும்மிங்கும் அலைந்து திரிந்தது. இது வரைக்கும் உடலில் ஒரு போதுமே தொடுகை உணரப்படாத இடத்தில் எல்லாம் நின்று நிதானித்து தொடுகையை உணர்த்திச் சென்றது. அந்த டியூபின் பின்னாலேயே ராசுக்குட்டியின் தன்னுணர்வும் பின் தொடர்ந்தது. அதன் கமரா பார்க்கும் இடமெல்லாம் ராசுகுட்டியின் மனமும் தொட்டுப் பார்த்தது. இதுவரைக்கும் இந்த இடமெல்லாம் தன் உடலில் உள்ளதா என்பதையே அறியாத மனம் அந்த டியூபின் வழி சென்று அறிந்து கொண்டது. வலியும் தன்னை அறியும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் மேவியும் உரசியும் சமாந்தரமாகவும் சென்றன. எல்லாவற்றிலும் புதினம் பார்க்கும் ராசுக்குட்டியின் மனசும், எல்லாவற்றையும் அனுபவித்தே சாகும் என்ற ராசிக்குட்டியின் இயல்பும் அந்த டியூபின் வழி பயணித்து களித்தது. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே என்ற பாடலை திடீரென ராசுக்குட்டியின் மனசு பாடியது எல்லாம் முடிந்த பின் டொக்டர் "உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாமே மிக நல்லா இருக்கு.. உன் CT scan முடிவிலும் ஒரு பிரச்சனையும் இல்லை." என்று சொல்லும் போது "அப்படியென்றால் ஏன் டொக்டர் அன்று கொஞ்சம் இரத்தம் வந்தது...அதன் பின் மூன்று நாட்கள் கழிந்த பின்னும் ஏன் மீண்டும் வந்தது" என்று ராசுக்குட்டி கேட்க.. "சிலருக்கு எப்பவாவது ஒரு நாள், சில நாட்கள் இப்படி வரும். சிவப்பாக இருப்பினும் அது இரத்தம் அல்ல. சிறு நீரில் எத்தனையோ விசயம் வெளிவரும், அதில் சிலது இப்படி மங்கலான சிவப்பு நிறத்திலும் இருக்கும்" என்றார். டொக்டருக்கு நன்றி சொல்லி வெளியே வந்த ராசுக்குட்டி முதலில் மனுசிக்கு போன் போட்டார். "எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" "நான் அன்றைக்கே சொன்னனான் தானே...நீங்கள் தான் எல்லாத்துக்கும் கூகிளை நோண்டி தேவையில்லாமல் பயப்பிடுகின்றீர்கள்... " என்று சொன்ன அவரது மனிசி மேலும் "ஆஸ்பத்திரியில் இருந்து வரும் போது அதுக்கு கிட்ட இருக்கின்ற இரா சுப்பர் மார்கெட்டில் புளியும் சின்ன வெங்காயமும், உள்ளியும் வாங்கிட்டு வாங்கோ: என்று சொல்ல, ராசுக்குட்டி தன் காரை இரா சுப்பர் மார்க்கெட் பக்கம் திருப்ப, அவரது இந்தக் கதையும் இத்துடன் முடிகின்றது.8 points
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
விழுந்த லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை, ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும், அவன்... ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே விட்டு விடுவான். அவனிடம் அதிக பணம் கையில் இருந்ததை கண்டு, பல புதிய நண்பர்கள், சேரத் தொடங்கிய பின்.. அவனது மிகுதிப் பணம் கரையத் தொடங்கியது. மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும், அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்... வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. "ஒரு தொழிற்சாலைக்கு, பொருட்களை... வாங்குபவர்கள் தான், முதலாளி" என்ற.. கோட்பாட்டை.. அவன் அறிந்திருக்கவில்லை. ஒரு வாடிக்கையாளர்... திருப்திப் படவில்லை என்றால், பத்து வாடிக்கையாளரை... இழந்ததுக்கு சமன் என்று சொல்வார்கள். ஏனென்றால்... தனது அதிருப்தியை, இரண்டு பேருக்கு சொன்னாலே... பத்துப் பேருக்கு... அந்தச் செய்தி போய்ச் சேர்வது இயல்பு. அதன் படி... அவனது தொழிற்சாலையை, இழுத்து மூட வேண்டி வந்து விட்டது. வாங்கிய புதுக் காரை... புது நண்பன், இரண்டு நாள் இரவலாக... கொண்டு போய், திருத்த முடியாத அளவுக்கு, விபத்துக்குள்ளாகி விட்டதை அறிந்து... மிஷேல்... மேலும் இடிந்து, போனான். வருமானம்.... சுத்தமாக, நின்று போன நிலையில்... வங்கியில்... கடனாக வாங்கிய வீட்டை, குறிப்பிட்ட தவணையில், கட்டவில்லை என்று... வங்கி அதனை... திருப்பி எடுத்து, ஏலத்தில் விற்று விட்டது. இதற்கு மேல்.... இந்த மனிதனுடன், வாழ முடியாது என்று, மனைவி... பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிரிந்து போய் விட்டார். மிஷேலுக்கு... 🌠 வெள்ளி திசை 🌟 அடித்து, 🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று.... எல்லாம் போன பின்தான்... மெல்ல புரிய ஆரம்பித்தது. 😎 ➡️ ➡️ ➡️ தொடரும்.... ✍️7 points
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!4 points
-
சிந்தனைக்கு சில படங்கள்...
3 points3 points
- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ்வே மாயம் படத்தில் கமலஹாசன் இருமின பின் இரத்தம் வெளியேறிய சீனை தன் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தார். இது புற்று நோயாக இருக்குமோ அல்லது வேறு ஏதும் பாரதூரமான பிரச்சனையோ என்று ஒரு கையால பிடிச்சபடியே யோசிச்சுக் கொண்டு இருந்த ராசுக்குட்டியை, "என்னப்பா இவ்வளவு நேரம் என்ன செய்றீஙள்..." என்று கேட்ட மனைவியின் குரல் தான் மீண்டும் தன் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனாலும் பயம் விடவில்லை ராசுக்குட்டிக்கு. வீட்டில் நண்பர் குடும்பம் வந்து கதைத்து கொண்டு இருக்கும் போது தான் இது நிகழ்ந்து இருந்தது. ராசுக்குட்டி அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த விடயத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாலும் மனசில் சிவப்பாக பயம் மிதந்து கொண்டுதான் இருந்தது. எப்படியும் இது என்ன என்று அறியாவிடின் தலை உடனே சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டு இருந்தார். எப்ப நண்பர் குடும்பம் போகும், எப்ப கூகிள் ஆண்டவரிடம் போய் என்ன விடயம் என்று அறியலாம் என்ற நினைப்பிலேயே இருந்தமையால் சரியாக அவரால் கதைக்க கூட முடியவில்லை. நண்பர் குடும்பம் அரை மணி நேரம் மேலும் கதைத்து விட்டு போன மறுகணம், ஓடிப் போய் தன் மொபைலில் இணையத்தில் கூகிள் ஆண்டவரை கூப்பிட்டு "blood in the urine" (சிறு நீரில் இரத்தம்) என்று டைப் செய்து தேடு பொறியை தட்டி விட்டார். கூகிள் ஆண்டவரும் வஞ்சகம் இல்லாமல் பின்வருவன ஒன்று காரணமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களோ காரணஙள் என்று பட்டியலிட்டார்: 1. தொற்று - Urinary tract infections 2. சிறு நீர்ப்பையில் கல்லு -A bladder or kidney stone 3. சிறு நீரகத்தில் தொற்று Kidney infections (pyelonephritis). 3. புரஸ்ரேட் பெரிசாவது -Enlarged prostate. 4. புற்றுநோய் - Cancer 5. சீறு நீரக காயங்கள்- Kidney injury என்று வகை வகையாக பட்டியலிட்டார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. முதல் வேலையாக உடனடியாக உயில் எழுதி வைக்க வேண்டும் என நினைத்தார். பின் அப்படி உயில் எழுதும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்லையே என அங்கலாய்த்தார். சொத்து கித்து சேர்த்து வைக்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் விடப்போகின்றேனே என தழுதழுத்தார். ஆயுள் காப்புறுதியில் கிடைக்கும் சில இலட்சங்கள் குடும்பத்துக்கு போதுமாக இருக்குமா என கணக்குப் போட்டார். தான் செத்த பின் எப்படியும் மறுமணம் செய்து கொள் என்று மனிசியிடம் சத்தியம் வாங்க வேண்டும் என உறுதி பூண்டார். புரண்டு புரண்டு படுத்தார், நடுக் கட்டிலில் எழும்பி இருந்து தன்னை தொட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்குதோ என்று செக் பண்ணினார். இறுதியில் அடுத்த நாள் எழும்பியவுடன் குடும்ப மருத்துவருக்கு போன் போட்டு விடயத்தை சொல்லி உடனடியாக மருத்துவம் செய்ய தொடங்க வேண்டும் என்று நினைத்தார். எந்த நோயும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் அதில் இருந்து பிழைக்கலாம் என எங்கோ வாசித்ததை பல தரம் மீள மனக்கண் முன் கொண்டு வந்து வாசித்தார். அப்படி நினைத்தது கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் கொடுக்க படுக்க போனார். நித்திரையானார். தான் செத்துப் போன பின் நண்பர்கள் எல்லாம் பியர் அடிச்சு அதைக் கொண்டாடுகின்றனர் என கனவு ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு எழும்பினார். உலகமே இப்படித்தான் போலியானது என்று கவலைப்பட்டார். சுருண்டு படுத்தார். அடுத்த நாள் மருத்துவரிடம் கதைக்க, மருத்துவர் இவர் சொல்வதை பெரிசாக கணக்கெடுக்கவில்லை போலிருந்தது. கொரனா காலத்தின் முதல் மாதம் என்பதால், மருத்துவர் கடும் யோசனையின் பின் இவர் கொடுத்த ஆக்கினையால "சரி வா வந்து சிறுனீரில் ஒரு டெஸ்ட் எடு... அதுக்குப் பிறகு பார்ப்பம் ": என்று சொல்லிய அடுத்த அரை மணி நேரத்தில் கிளினிக்கு போய் விட்டார். சிறு நீர் டெஸ்ட் செய்தார், 10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. (தொடரும்....)2 points- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
தொடருங்கள் நிழலி அவர்களே.! கற்பனைக்கு வாழ்த்துக்கள்..!! பாவம் ராசுக்குட்டி ஆர் பெத்த பிள்ளையோ..?? நாங்கள் களத்தில் கருத்தெழுதி உங்களிடம் மாட்டுப்படுவதுபோல் அவரும் கூகுள் ஆண்டவரைத் தரிசிக்கப்போய் மாட்டிக் கொண்டாரே.!! ஆனாலும் பிறவிக் குணம் யாரைவிட்டது..! மனைவி சொன்ன புளி, சின்ன வெங்காயம், உள்ளி வாங்குவதற்கும் கூகுள் ஆண்டவரைத் தரிசித்த பின்புதான் கொள்முதல் செய்தாராம். சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தை வாங்கும்போது தெளிவான, திரட்சியான, ஒரே அளவிலான சீரான நிறத்துடன் ஈரப்பதமில்லாதவற்றை வாங்க வேண்டும். மிருதுவான, ஈரப் பதமுள்ள, மேற்தோலில் கரும்புள்ளிகள் உடையவற்றையும், முளைவிட்டதையும் தவிர்க்க வேண்டும். புளி புளி இதயத்திற்கு நல்லது. ஏனெனில் இது கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். சிறிது எடை குறைக்க விரும்புவோருக்கு புளிச் சாறு ஏற்றது. லேசான டையூரிடிக் பண்புகளையும் கொண்டுள்ளது, உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும். உடலை உள்ளே இருந்து சுத்தம் செய்ய உதவும். உள்ளி நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.2 points- யாழ் எனும் கைத்தடி..
2 pointsஅன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.2 points- கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன். நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர். சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத் தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ? இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய் பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம். 24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும். கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார். வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”. - சுப. சோமசுந்தரம்2 points- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
2 points- பாவத்தின் சம்பளம்
1 pointமீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது, மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிடந்த இரு நாய்களும் அந்த அரவம் கேட்டு கோரைப்பற்கள் வெளியே தெரிய வில்லிருந்து கிளம்பிய அம்பு போல் சீறிப்பாய்ந்தன, சபை பொறுப்பாளருக்கு விளங்கி விட்டது, இனி ஆட்டம் ஆரம்பம் என்று...... (தொடரும்) சொந்த அனுபவம், செவிவழி,கற்பனை கலந்து யாழின் 23 ம் அகவைக்காக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointநாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார். சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள் போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்.. கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம். அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா. கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???1 point- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்" ஒரு குடும்பத் தலைவன். 👨🦰 சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன் அவனுக்கு... அன்பான மனைவியும், 💖 பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும் உண்டு. 💗 வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை. ☹️ தனது வருமானத்தால், தன் குடும்பத்திற்கு, சொந்தமாக... ஒரு வீடு 🏦 வாங்க வேண்டும் என்று, கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம். 🎰 நல்ல மனிதர்களுக்கு... 🙏"கூரையை... பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்" 🙏 என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது. தான்... கும்பிட்ட தெய்வம், தன்னை கைவிட வில்லை என்று.... ஆனந்தப் பட்டு, தன்னிடம் அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த, முதலாளிக்கு... "நடு விரலை காட்டி", 🖕 போய்யா... நீயும், உன் சம்பளமும்... நானும், உன்னை மாதிரி... முதலாளி ஆகி காட்டுறேன் என்று... "சணல் பறக்க" பேசி விட்டு... வந்து விட்டான். 😎 மிகுதி... அடுத்த... வெள்ளிக் கிழமைக்குள், தொடரும்... யாழ். களத்தின், சுய ஆக்கத்திற்காக.. தமிழ் சிறி. 🤣1 point- சுதந்திரம் எம் சுவாசம்.
1 pointசுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா ஓ ....வீரனே ...... திறந்திருக்கும் உன் விழிகளில் இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி விழுந்து கிடக்கும் உன் உடல்கூட முட்களையும், கற்களையும் ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.........!1 point- லொக்டவுண்
1 pointலொக்டவுண் வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொண்டனர். வதனியும் வீட்டில் வேலை செய்தாலும் இப்பவெல்லாம் விதவிதமாகச் சமையல் செய்வதும் பழைய நண்பிகளையெல்லாம் தேடிப்பிடித்து கதைப்பதுமாக ஒன்லைன் வட்ஸ்அப் என்று ஒருமாதிரி பொழுதைப் போக்கிக் கொண்டாள். இந்த வருடம் நந்தனின் 50வது பிறந்த நாளை பெரிய மண்டபம் எடுத்து விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற அவளது கற்பனைகளெல்லாம் கனவாகிப் போகுமென்று யார் நினைத்தார்கள். இத்தனை வருடமாக அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்தபோதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடிக்கும்வரை தம் பொறுப்புக்களை உணர்ந்து தம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவர்களது இத்தனை ஆண்டுகளும் கழிந்து விட்டன. நேற்று நந்தனுக்கு 50வது பிறந்தநாள். நாள் முழுவதும் தொலைபேசியிலும் வட்ஸ்சப்புக்களிலுமாக வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன. வதனியும் தன் பங்கிற்கு கேக் இனிப்புவகைகள் பிரியாணி என்று செய்து அசத்தியிருந்தாள். இருந்தாலும் வதனி நந்தனுக்குத் தெரியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து நந்தனின் பிறந்தநாளை வீட்டிலாவது பெரிதாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டாள்;. அந்த திட்டத்திற்கு ஆப்பு வைப்பதுபோல் “வீட்டிற்குள் இருங்கள் வெளியே திரியாதீர்கள்” என்று மேஜர் முதல் பிரதமமந்திரி வரை தொலைக் காட்சிகளில் அறிவித்து மக்களின் நலனைப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமன்றி வீட்டிலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வதனிக்கோ எப்படியாவது சேப்பிரைஸ் பாட்டி வைத்து நந்தனை பிரமிக்க வைக்க வேண்டுமென மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. புது வீடு வாங்கியபின் வீட்டில் எந்த கொண்டாட்டமும் வைக்க அவளுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உறவுகளைச் சந்தித்தும் பல மாதங்களாகி விட்டன. எனவே நெருங்கிய உறவுகளை நந்தனுக்குத் தெரியாமல் ரகசியமாக சனிக்கிழமை வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள். அத்துடன் நந்தனை மகிழ்விப்பதற்காக அவனது நண்பர்கள் தனது நெருங்கிய நண்பிகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி 20-25 பேர் ஆகி விட்டது. சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் எந்த மாறுதலும் தெரியாதபடி ரகசியமாகவே அனைத்து ஆயத்தங்களும் நடந்தன. வீடும் என்றும் போல் அமைதியாக இருந்தது. மத்தியானத்துக்கு மேல் ஒரு நண்பன் மூலம் நந்தனை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தபடி அனைத்து திட்டங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கவும் வதனி பூரண திருப்தியுடன் மளமளவென்று காரியங்களை மேற்கொண்டாள். அவசர அவசரமாக வீட்டை அலங்கரித்து ஓடர் பண்ணியிருந்த கேக்கை மேசையில் வைத்து அலங்கரித்து மற்றைய ஒழுங்குகளையெல்லாம் சரிவர செய்து முடித்தாள். திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. மத்தியானத்துக்குமேல் ஒரு நண்பனின் மூலம் நந்தனை வெளியே வெளியே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தாள்; நீண்ட நாட்களின் பின் சந்தித்த நெருங்கிய நண்பனுடன் தத்தமது 50 வயது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சுற்றியதில் நேரம் போனது தெரியவில்லை. மாலை மங்கத் தொடங்கியதும் வீட்டிற்கு போகலாம் என நந்தன் கேட்கவும் சரி என்ற நண்பனும் வதனிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு நந்தனுடன் வீட்டிற்கு வந்தான். வீடு அமைதியாகத்தான் இருந்தது. தன்னுடன் வந்த நண்பனை வீட்டிற்குள் அழைப்பதா விடுவதா என நந்தன் சிந்தித்த மறுகணம் நந்தன் தன்னை பின் தொடர்வதைக் கவனித்து “ வா வா வந்து ரீ குடிச்சிற்றுப் போகலாம்” என அழைத்தான். வீட்டின் கதவைத் திறக்கவும் “சேப்பிரைஸ்” என்று அனைவரும் கூக்குரலுடன் கைதட்டி நந்தனை வரவேற்கவும் நந்தன் திகைப்பில் திக்குமுக்காடிப் போனான். என்ன இது? லொக்டவுண் காலத்தில் இப்படிச் செய்கிறார்களே என மனம் அங்கலாய்த்தாலும் நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பர்களையும் உறவுகளையும் சந்தித்த சந்தோசத்தில் மனம் குதூகலமாகி மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். வீட்டிற்குள் கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. எங்கட ஆக்களின்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? ஏல்லோரும் வண்ண வண்ண உடைகளுடனும் விதவிதமான அலஙகாரங்களுடனும் வந்து இறங்கி வீட்டிற்குள் செல்வதையும் வீட்டிற்குள் நடந்த குதூகலத்தையும் அவதானித்த யாரோ காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டார்களோ அல்லது தற்செயலாக அந்த வீதியில் பயணித்த காவல் துறையினருக்கு மூக்கில் வியர்த்து விட்டதோ யாரறிவார்? மக்களின் நலனுக்காகத்தானே சட்டங்களும் ஒழுங்குகளும் என்று சிந்திக்காமல் மனம் போல திட்டமிட்ட வதனி கதவைத் தட்டிய காவல் துறையினரைக் கண்டதும் திகைத்து விட்டாள். வீதியில் நிறைய வாகனங்களைக் கண்ட காவல் துறையினர் சந்தேகத்தில் ஒவ்வொரு வீடாக தட்டி சோதித்ததில் இவர்கள் வீட்டில் அதிகம் பேர் நின்றது கையும் மெய்யுமாக பிடிபட்டு விட்டது. என்ன செய்வது என்ற தெரியாமல் சிலர் மேல் அறைகளுக்குள்ளும், சிலர் நிலக்கீழ் அறைகளுக்குள்ளும் ஓடி ஒழிந்தனர். இருந்தும் யாராலும் காவல் துறையினரை ஏமாற்ற முடியவில்லை. அனைவருக்கும் குற்றப் பணமாக ஆளுக்கு ஆயிரம் டொலர் ரிக்கற் எழுதி கொடுக்கப்பட்டது. உறவுகள் நட்புக்கள் அனைவரும் திகைத்து என்ன செய்வது என்று அறியாது வருத்தத்துடனும் ஏமாற்றத்தடனும் நிற்க வதனியோ பலமுறை காவல் துறையினரிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை. தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான். காவல் துறையினர் தமது கடமையை முடித்து விட்டு வெளியே போய் நின்று அனைவரையும் வெளியேறும்படி பணித்து விட்டு தம் வாகனத்தினுள் காத்திருந்தனர். நந்தன் வதனியை திரும்பிப் பார்த்த பார்வையில் வதனி எரிந்து போகாத குறை. வந்திருந்த அனைவரும் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேற வதனியோ கையைப் பிசைந்தபடி கண்கலங்க பார்த்துக்கொண்டு நின்றாள். உறவுகள் சிலர் “அவள் வதனிதான் கூப்பிட்டாள் என்றால் எங்களுக்கு எங்கே அறிவு போனது” என்று தம்மை நோவது போல வதனியை திட்டியபடி வெளியேறினர். ஆசைஆசையாக பார்த்துப் பார்த்து செய்த அலங்காரங்கள் கேக் இனிப்பு பலகாரங்கள் உணவுகள் அனைத்தும் தேடுவாரற்று கிடந்தது. இத்தனை ஆண்டு வாழ்வில் இதுவரை நந்தனின் இந்தமாதிரியான கோபத்தைப் பார்த்தறியாத வதனிகூட ஒருகணம் திண்டாடிப் போனாள். மெதுவாக பக்கத்தில் போய்” என்ன நந்தன் நான் உங்கட பிறந்தநாளை வடிவாகக் கொண்டாட வேணுமெண்டுதானே இப்படிச் செய்தனான்” என்ற ஆரம்பிக்கவும் நந்தன் கட்டுக்கடங்காத கோபத்துடன் “உன்னை நான் கேட்டனானா பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி அறிவு கெட்ட ஜென்மம்”என்று ஆவேசத்துடன் அவளைப் பிடித்து தள்ளி விட்டான். இந்த தாக்குதலை எதிர் பார்க்காத வதனி நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மேசையைப் பிடிக்க முயற்சித்தும் பிடி நழுவிப் போக அவளுக்கிருந்த மனக் குழப்பமும் சோர்வும் அவளை பெலவீனப்படுத்த தட்டுத் தடுமாறி அருகிலிருந்த சுவரில் மோதி கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். நந்தனும் ஒருகணம் திகைத்தாலும் ஆத்திரம் அடங்காமல் விறைப்புடன் நின்றான். வதனியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதை கண்ட பின்தான் நந்தனுக்கு நிலமையின் தீவிரம் மனதை உறுத்தியது. உடனடியாக அவளைத் தூக்கி செற்றியில் படுக்கவைத்துவிட்டு அம்புலன்சுக்கு அழைத்தனர். இந்த கொரோனா காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அதிக வேலைப் பழுவுடன் இருப்பதால் சிறிது தாமதித்தே உதவி கிடைத்தது. வதனியை அம்புலன்சில் ஏற்ற, நந்தனை கைது செய்து பொலிஸ் விசாரணைக்காக கொண்டு சென்றனர். நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை. நந்தன் திட்டமிட்டு எதுவும் செய்யா விட்டாலும் குற்றவாளியாகத்தான் பார்க்கப்பட்டான். நந்தன் பயத்திலும் திகைப்பிலும் உறைந்து போனான். தன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு வதனிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேதனையில் துவண்டு போனான். நிறைய இரத்தம் இழந்து விட்டதால் வதனியும் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். நந்தனையும் விசாரணை முடியும்வரை பொலிஸ் காவலில் வைத்து விட்டார்கள். பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் . இதில் யாரை நோவது? கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா? ஆத்திரப்பட்ட நந்தனையா? அல்லது அவனது 50வது பிறந்த நாளையா? லோக்டவுணையா? எதை?1 point- வெண்பனித்தூறல்..!
1 pointநான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்து முதல்,முதல் கொட்டிப்பார்த்த.. வெண்பனித்தூறல் நான் பிறந்த மண்ணின்(ஈழம்) வாசனையே என்னுக்குள் வந்து எழுத வைத்தது. வெண்பனித்தூறல்..! ***************** மார்கழி தொடங்கிவிட்டால் வானம் மந்திரித்துக் கொட்டுமிந்த-வெண்மைநிற தேங்காய்த் துருவலோ? தேசமெல்லாம் பூத்திருக்கும் மல்லிகையோ!முல்லையோ! வெள்ளை நிற றோஜாவோ? வெண்தாமரை இதழ்தானோ-ஏன் கடல் களைத்து கரையொதுங்கும் நுரையலையோ.. கண்சிமிட்டிக் கொட்டுகின்ற விண்மீனோ.. வெட்டுக்களி எழுப்பும் வெண்புளுதிப் படலமோ வெற்றிலைக்கு போட்டுமெல்லும் வெண்நிறத்துச் சுண்ணாம்போ பாலாறு ஓடி தயிர் படிந்து உறைந்ததுவோ பருத்தி மரம் ஈன்ற பஞ்சினத்துக் குஞ்சுகளோ இலவம் காய் வெடித்ததுவோ இளம் பெண்கள் புன் சிரிப்போ முதுமை உலகத்து மூதாட்டி நரை முடியோ கொட்டிக் குவிந்துவிட்டால் கோபுரமும் தெரியாது-பின்பு பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம் எங்கும் சமாதானம் இது வேண்டும்,வேண்டும். அன்புடன்-பசுவூர்க்கோபி-1 point- அன்புள்ள அம்மா....
1 pointஅன்புள்ள அம்மா அறிவது! நான் நல்ல சுகம். அது போல் நீங்களும் நீங்கள் விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம். சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா. உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும் விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா. அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா. என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா. இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
குடும்பத்தை இழந்து... தனி மரமாகி நின்ற, மிஷேலுக்கு.... வாழ்க்கையை... இனி, எப்படி நகர்த்துவது என்று புரியாத மாதிரி இருந்த போது... அதனை... எப்படியும், வெல்ல வேண்டும்... என்ற ஓர்மம் அவனை... உந்தித் தள்ளியது. திரும்பவும்... பழைய வேலை இடத்திற்கு சென்று, தான்... நடு விரலைக் காட்டிய முதலாளியிடம், வேலை கேட்கலாம் என்ற... தெரிவைத் தவிர, அவனுக்கு, வேறு வழியே இருக்கவில்லை. ஆனால்... எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அந்த முதலாளியிடம், மீண்டும் வேலை கேட்பது? என்ற அச்சம் இருந்தாலும்... நேரடியாக... தொழிற்சாலைக்கு போய் வேலை கேட்பது, இலகுவான விடயம் அல்ல. அவன்... இழந்ததில், முதலாளியின் தொலை பேசி இலக்கத்தையும், இழந்தது... பெரும் சோகம். ஒரு இரவு முழுக்க... நித்திரை முழித்து யோசித்ததில், அவனுக்கு... புது "ஐடியா" பிறந்தது.... ➡️ ➡️ ➡️ ..... ✍️ ✍️ ✍️ 🤣1 point- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
நன்றி....காவலூர் கண்மணி..! வட துருவத்தில் பிறந்த துருவக் கரடிக்கு.....மைனஸ் மூன்று....பாகை தானே....கோடை காலம்...! தீவகத்தில் பிறந்தவனுக்குக் கடலின் அலைகள் எழுப்பும் சத்தம் தானே...சங்கீதம்?1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
நன்றி கதைக்கு?? தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் (அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. நிச்சயமாக இந்த ராசுக்குட்டி என் தம்பியாகத்தான் இருக்கணும்😜)1 point- கவலையில்லாத மனிதன் - சுப. சோமசுந்தரம்
இந்த மகத்தான கதைசொல்லியின் அற்புதமான மனித வாசிப்பில் உருவான இப் படைப்பு, யாழ் வாசகர்கள் முன்பு எழுத்து வடிவில் தரப்படும் முன்னரே, செவிவழியாக நேரில் கேட்கும் வாய்ப்புப் பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன்: எழுத்தாளரின் சொல்லோவியமும், எழுத்தோவியமும், கல்கியின் "பொன்னியின் செல்வன்" படைப்பாற்றலை நினைவூட்டியது.1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 மஹமூது நபிகள் பிரானே எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 01, ஆனி, 2015 சமூக ஆர்வலர் மதிசாயனின் கொலைமூலம் கிழக்கில் சமூக ஆதரவாளர்களைப் பயமுறுத்தியிருக்கும் கருணா மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மதிசாயன் சச்சிதானந்தத்தின் படுகொலை கிழக்கில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதாக கிழக்கிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மண்டூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்றுவரும் நிதிமுறைகேடுகள் தொடர்பாக மதிசாயன் மேற்கொண்டு வந்த தேடல்களும், வெளிப்படுத்தல்களும், அரசின் ஆசீருடன் இயங்கிவரும் ஆலய பரிபாலன சபைக்கும், அதன் பின்னணியில் இருந்து செயற்படும் துணையமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுத் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் தலையிடியாக மாறிவந்திருந்தன. அத்துடன் மண்டூர் பகுதியில் ஆற்றுப்படுக்கைக்கு அண்மையாக நிர்மானிக்கப்படவிருந்த உத்தேச விளையாட்டு மைதானம் ஒன்றினால் மக்களின் விவசாய நிலங்களுக்கு வரக்கூடிய பாதிப்புக்களை முன்வைத்து மதிசாயன் இந்த நிர்மானத்திற்கெதிராக மக்களிடையே விளிப்புணர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார் என்றும் அறியப்படுகிறது. இவ்விளையாட்டு மைதான நிர்மாணிப்பில் முன்னின்று செயற்பட்டுவந்த கருணாவுக்கு மதிசாயனின் சமூக விளிப்புணர்வு நடவடிக்கைகள் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்ததாக மண்டூர் மக்கள் தெரிவிக்கின்றனர். 2014 கார்த்திகை மாதம் நகுலேஸ்வரத்தில் இதேவகையான சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளால் மக்களை ஒருங்கிணைத்த சமூக ஆர்வலர் ஒருவர் ராணுவத் துணைக்குழு ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த மண்டூர் மக்கள் அவரின் கதியே மதிசாயனுக்கும் நேர்ந்திருக்கிறது என்று கூறுகின்றனர். அம்பாறை மாவட்டம், நாவிதான் வெளி பகுதியில் சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரியாகச் செயற்பட்டுவந்த மதிசாயன் சில நாட்களுக்கு முன்னர், சத்திர சிக்கிச்சையொன்றிற்காக ஓய்விலிருந்திருக்கிறார். தனது வீட்டில் ஓய்விலிருந்த வேளையில், உந்துருளிகளில் வந்திறங்கிய கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் அவரை அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொன்றிருப்பதாகத் தெரியவருகிறது. கொல்லப்பட்ட மதிசாயனின் நண்பர்களின் கூற்றுப்படி, கொலையாளிகள் முனைக்காடு நிர்வாக அதிகாரிகளினதும், அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்குவிக்கும் கருணாவினதும் கூலிகளே என்று கூறுகிறார்கள். மண்டூர் முருகன் ஆலய நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை விசாரித்து, அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, முன்னாள் ஆலய நிர்வாக சபையினை பதவி விலகப் பண்ணுவதில் மதிசாயன் மும்முரமாகச் செயற்பட்டுவந்தார் என்று மண்டூர் மக்கள் கூறுகின்றனர். மண்டூர் முருகன் ஆலயம் மிகப்பழமையான தமிழர் ஆலயம் என்பதுடன், தமிழர்களின் ஆதி வேடர்களின் வணக்க நிகழ்வுகளைத் தற்போதும் கடைப்பிடித்துவருவதாகக் கூறப்படுகிறது. தமிழர்களால் "சின்னக் கதிர்காமம்" என்றழைக்கப்படும் இவ்வாலயம் தனக்கேயுரிய வழிபாட்டு முறைகளுக்காகவும், சடங்குகளுக்காகவும் தமிழர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. கதிர்காமம் முருகன் ஆலயம் நோக்கி யாத்திரைகளை மேற்கொள்ளும் பக்தர்கள் மண்டூர் முருகன் ஆலயத்திற்கும் தவறாது வந்துசெல்வதாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். வருடாந்தம் காணிக்கைகளாலும், நன்கொடைகளினாலும் சுமார் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை சேரும் பணம் ஆலயத்தின் அபிவிருத்திக்கும், மேம்படுத்தலுக்கும், சுற்றுப்புற மக்களின் மக்களின் வாழ்வினை மேம்படுத்தவும் பாவிக்கப்படுதல் அவசியம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், சேர்க்கப்படும் பணத்திலிருந்து ஆலயத்தின் மேம்பாட்டிறென்று எதுவும் செய்யப்படாமலும், ஆலயத்தின் கட்டிடங்கள் அப்படியே பழமையானவையாக இருப்பதனாலும், சேர்க்கப்படும் பணத்தின் பெரும்பகுதி நிர்வாக சபையிலிருப்போரால் சூரையாடப்பட்டுவருவதாகத் தெரியவருகிறது. யுத்த காலத்தின் பின்னர் அரசுக்கும், ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கும் ஆதரவான நிர்வாக சபை இவ்வாலயத்தின் கணக்கு வழக்குகளை வேண்டுமென்றே நெறிப்படுத்தாது இருந்துவந்தது என்பது நிரூபணமாகியிருக்கிறது. 2007 ஆம் ஆண்டுவரை மண்டூர் ஆலயம் அமைந்திருக்கும் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்துவந்தது. மதிசாயனின் நண்பர்கள் இவ்வாலய முறைகேடுகள் பற்றிக் குறிப்பிடுகையில், இப்பகுதிக்கான நிர்வாக சபை அதிகாரியாக அமர்த்தப்பட்டவர் ஆலயத்தில் சேர்க்கப்படும் நிதி மற்றும் அந்த நிதியினைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சமூக அபிவிருத்தித் திட்டங்களை மேற்பார்வை செய்தல் ஆகிய பணிகளுக்காக அமர்த்தப்பட்டபோதிலும், , ஊழல் விரித்தாடிய ஆலய நிர்வாக சபையுடன் சேர்ந்து அவரும் செயற்பட்டுவந்தார் என்றும், நிர்வாக சபையினால் மேற்கொள்ளப்பட்டுவந்த நிதிக்கையாடலில் அரசால் அமர்த்தப்பட்ட இந்த நிர்வாக அதிகாரிக்கும் ஒரு பங்குபோய்ச் சேர்வதாககவும் குறிப்பிடுகிறார்கள். சமாதான நீதவானாகவும் செயற்பட்டு வந்த மதிசாயன் இந்த நிதிமுறைகேடுகளை கடுமையாகக் கேள்விகேட்டு வந்ததுடன் , மோசடிகளில் ஈடுபட்டுவரும் ஆலய நிர்வாகத்தினருக்கு பின்புலத்திலிருந்து செயற்பட்டுவந்த அரச அதிகாரிதொடர்பாகவும், துணையமைச்சர் கருணா தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உயர்தரப் பரீட்சையில் நான்கு பாடங்களிலும் "ஏ" அதியுயர் சித்திகளைப் பெற்றிருந்த மதிசாயன், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு பின்னர் ஆசிரியராக மண்டூர் 13 ஆம் கிராமத்தில் 1998 இலிருந்து 2 வருடங்கள் பணிபுரிந்தார் என்று தெரியவருகிறது. பின்னர் ஏறாவூர் பிரதேசச் சபையில் சமூக சேவைகள் அதிகாரியாகப் பதியேற்றுக்கொண்ட மதிசாயன் மண்முனைப்பற்று, மண்முனை, பட்டிப்பழை ஆகிய இடங்களிலும் பின்னர் கடந்த 18 மாதங்களாக அம்பாறை மாவட்ட நாவிதான் வெளியிலும் சமூக சேவைகள் அதிகாரியாகவும் சேவையாற்றிவந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. கிரமப்புற அபிவிருத்தியில் மிகுந்த ஈடுபாட்டுடன் சேவையாற்றி வந்த மதிசாயன், கிராம அபிவிருத்திக் குழுவில் இணைந்து செயற்பட்டுவந்ததுடன், மண்டூர் வைத்தியசாலையினை மேம்படுத்தும் செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார் என்றும் மக்கள் கூறுகின்றனர். ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களின் நலனுக்காக ஆலயம் இதுவரையில் தேவையான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டின்பெயரில் செயற்பட்டுவந்த மதிசாயன், தன்னால் முன்மொழியப்பட்டதும் தற்போதைய நிர்வாக சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான பக்தர்களுக்கான இளைப்பாறும் மண்டப நிர்மாணத்தினை தாமதமின்றி உடனேயே ஆரம்பிக்கவேண்டுமென்றும் கூறிவந்தார் என்று சொல்லப்படுகிறது. இதேவேளை இப்பகுதியில் கடந்தவருடம் மகிந்தவுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த துணையமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான கருணா மகிந்தவின் பணத்திலிருந்து பத்துலட்சம் ரூபாய்களை "விஷ்ணு விளையாட்டு மைதானம்" என்கிற பெயரில் இப்பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்றினை நிர்மாணிக்க ஒத்துக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் மைதானத்தினை சீரமைப்பதை விடுத்து, புதிதாக ஆற்றுப்படுக்கைக்கு அண்மையாக, நிலத்தினை உயர்த்தி நிர்மாணிக்கப்படவிருந்த இந்த மைதானம் பற்றிக் கடுமையான விமர்சனங்கள் கிராமத்தவர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. மதிசாயன் தலைமையிலான மண்டூர் சமூக ஆர்வலர்கள் அமைப்பு இந்த உத்தேச மைதான நிர்மாணம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை சமூக நலனைக் காரணமாக காட்டி முன்வைத்து வந்தது. மழை காலத்தில் ஆற்றின் நீர்மட்டம் இதனால் உயர்வதோடு, ஆற்றுவெள்ளம் கிராமத்திற்குள் உட்புகவும் இது ஏதுவாக்கும் என்று அவர்கள் கூறிவந்தார்கள். ஆகவே, கருணாவினால் தெரிவுசெய்யப்பட்ட பகுதிக்குப் பதிலாக, கிராமத்தின் வேறோர் இடத்தில் இந்த மைதானத்தை அமைத்துக்கொள்ளலாம் என்று மதிசாயன் தலைமையிலான சமூக அமைப்புக் கோரிவந்தது. இதனால், இந்த உத்தேச மைதான நிர்மாணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இது இவ்வாறிருக்க, மண்டூர் பொலீஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் கொலையாளிகள் ரிவோல்வர் ரக சுழல் கைத்துப்பாகியொன்றினைப் பாவித்தே மதிசாயனைக் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கொலையாளிகளை அடையாளம் காட்டக் கூடிய ஆதாரங்களை மண்டூர் பொலீஸார் தம்மிடம் வைத்திருப்பதாகக் கூறும் மண்டூர் மக்கள், அரச அழுத்தங்களாலும், துணைராணுவக் குழுவினரின் செல்வாக்கினாலும் அவற்றை வெளியிட்டு உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்வதில் பின்னடிப்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
செல்ல பிராணியில் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் அழுகையும் கண்ணீருமாய் ?1 point- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
நன்றி.... பசுவூர்க் கோபி..! சந்திரனை உங்களுக்குத் தெரியும் போல உள்ளதா? மிகவும் நல்லது! சந்திரன் அடுத்த முறை...அங்கு வரும்போது உங்களைக் கட்டாயம் சந்திக்கும் படி சொல்லி விடுகின்றேன்...! 😀1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும் உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும் தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா --- வேறெதுவும் தேவையில்லை---1 point- நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ? நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ? இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ? ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது. அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது. அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான். அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ? பிள்ளைகள் கொண்டு வந்து தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம். அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது. எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன். கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி. நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக. நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ? இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம். இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம். நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான். என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன். தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன். ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான். என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது. அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன். பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான். ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது. மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான். எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி. 2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது. என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது. அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும். ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ? அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா. என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது. எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது. கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில் இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன். என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47. அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான். இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான். கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை. 08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம். காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன். அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன். 02.05.2020 சாந்தி நேசக்கரம்1 point- நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??
1 pointகைக்குழுந்தைகளாக எம் பிள்ளைகள் எம் கையில் தவளத்தொடங்குவதாலோ என்னவோ அவர்களை என்றும் அவ்வாறே நாம் கணக்கிடுகின்றோமா?? அவர்களுக்கான படிப்பு சார்ந்து அல்லது அவர்களின் வயது சார்ந்து அல்லது எமது கல்வி அல்லது கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள் மேல் செலுத்துவது சார்ந்து அதை நாமும் அவர்களும் எவ்வாறு கிரகிக்கக்கூடும் என்று நாம் எந்தளவுக்கு கரிசனை கொள்கின்றோம் அதிலும் உடலின் சில அந்தரங்க உறுப்புக்கள் அல்லது உடலுறவு சார்ந்து எமக்கும் அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்?? அநேகமான பெற்றோர் பிள்ளைகளின் முன் முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில் அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது??? ஆனால் பிள்ளைகளுடன் நண்பர்களாக பழகும் போது அவர்களிடமிருந்து வரும் சில விடயங்கள் எம் அனுபவங்களை அவர்கள் பற்றிய எமது அளவுகோளை பொய்யாக்கி நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை மற்றும் கூச்சமற்ற தெளிவு எம்மை தலைகுனிய செய்து விடும் ஒர் இனச்சேர்க்கை சார்ந்து வயது கூடியவர்களை திருமணம் செய்வது சார்ந்து கூடி வாழ்தல் சார்ந்து தனியே வாழ்தல் சார்ந்து....... அவர்களது பார்வையும் கல்வியும் பக்குவமும் எமது பார்வையும் கல்வியும் அனுபவங்களும் ஒட்டாத தண்டவாளங்களின் நிலை தான். அந்தவகையில் என் பிள்ளைகளிடம் ஆரம்பத்திலிருந்தே நண்பனாக பழகுபவன் என்றரீதியில் இப்படியான நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு எனது மகளது பிறந்த நாள் அன்று அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் சாதாரணமாக சொன்னாள் அப்பா என்னை அம்மாவிடம் தை முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று) நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் அதனால் தான் நான் புரட்டாதி ஒன்றில் பிறந்தேன் என. எனக்கு உடம்பெல்லாம் குறுகி விட்டது ஏனெனில் இதை சொல்லும்போது அவளுக்கு அன்று தான் 12 வயது. முற்றும்.1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 pointதனிமையில் இருக்கும் போது கைபேசியில் இருந்து தாயகப் பாடல்களை அதிம் கேட்பேன் உடையார் அண்ணா ? சாதனை செய்து விட்டு கண் மூடி தூங்கும் கரும்புலிமறவர்கள் மாவீர செல்வங்களின் நினைவுகள் அதிகம் வரும் ? இவளவு தியாகம் செய்தது இந்த நிலையில் வாழாவா என்று பலதடவை யோசித்ததும் உண்டு ? ஏதோ விடிவு காலம் பிறக்கும் என்று எம் தமிழீழ பயணம் தொடர்கிறது ? எல்லாம் அவர் கையில் 🙏1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 pointஇது 1961ம் ஆண்டு இரண்டாம் பிரிவு அணி. இதில் நிற்பர்களில் இடமிருந்து வலமாக ஒன்பதாவதாக உமாமகேஸ்வரன் உமா மகேசுவரன் உதைபந்தாட்ட வீரராகவிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். 1962 ஆம் ஆண்டில் உதைப்பந்தாட்டக் குழுவின் இரண்டாவது பிரிவில் விளையாடிய மாணவர்களை உள்ளடக்கிய புகைப்படம்1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
தவறான மருந்தை தந்த மருந்தகம் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.அன்ரிபயோடிக் தரும் போது சாதரணமானவர்கள் தர மாட்டார்களே பார்மசிஸ்ட் விளக்கம் சொல்லித் தானே தந்திருப்பார்.தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டால் இப்படி எத்தனை உயிர்களோடு விளையாடுவார்கள்..🤔1 point- இயற்கையே மாறிப்போச்சு..!
1 pointஇயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி-1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
பகுதி 2: சிறு நீர் தொற்று என்று தான் முடிவு வரும், டொக்டர் அன்ரி பயோடிக் பத்து தருவார், அதை தவறாமல் எடுப்பன், பார்மசியில் மருந்து தரும் போது வார இறுதியில் பிரண்டி அடிச்சால் அன்ரி பயோடிக் பிரச்சனை கொடுக்குமா என்றும் கேட்க வேண்டும், பத்து நாட்களில் எல்லாம் சரியாகி விடும், மீண்டும் கும்மாளம் அடிக்கலாம் என்று மனக்கணக்குகள் நிறைய போட்டு கொண்டு "ரிசட்ல் என்ன டொக்டர்" என்று ராசுக்குட்டி கேட்டார். "ஒரு தொற்றும் இல்லை... எல்லாம் கிளியராக இருக்கு" என்று டொக்டர் கொஞ்சம் யோசனையுடன் சொல்ல ராசுக்குட்டி மீண்டும் சுருண்டு போனார். தொற்று என்றால் சிம்பிளா எல்லாம் முடிஞ்சிடும், பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி விட்டது. ஒருவேளை உந்த கிளினிக்கில் உடனே செக் பண்ணி சொல்வது பிழையாகுமோ தெரியாது என்று விட்டு, "அப்ப ஏன் டொக்டர் அப்படி வந்தது " என்று கேட்க," எதுக்கும் ஒருக்கால் இதற்கென்று இருக்கும் ஒரு Lab இற்கு போய் Urinalysis எனும் இன்னும் கொஞ்சம் ஆழமான செக்கப் ஒன்று செய்து பார்ப்பம் சொல்லி ஒரு சீட்டில் எழுதி தர அடுத்த நாளே காலைமை எழும்பி lab இற்கு ஓடிப் போய் - 12 மணித்தியாலம் எதுவும் சாப்பிடாமல் போய்- எடுத்து கொடுக்க, ரிசல்ட்ஸ் வர நாலு நாளாகும். கொரனா காலம் என்பதால் இன்னும் கொஞ்ச நாட்கள் கூட எடுக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டனர். ராசுக்குட்டி தான் ஒரு பெரிய இரும்பு மனிசன், எதுக்கும் கலங்காதவன் என்ற ஒரு பில்டப்பை மனிசிக்கும், பிள்ளைகளுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் கட்டி வைத்திருந்தவர். (ஆனாலும் மனிசிக்கு தெரியும் இது இரும்பு மனிசன் இல்லை, எல்லாம் சும்மா வெறும் பில்டப்பு என்று, ஆனாலும் நம்பினமாதிரி பாவனை செய்வதை உண்மை என்று தான் ராசுக்குட்டி நம்பிக் கொண்டு இருந்தவர்.). தான் இப்படி வருத்தத்துக்கு பயந்ததை வெளியே காட்டினால் தான் கட்டின பில்டப்பு உடைந்து விடும் என்று "இது எல்லாம் எனக்கு ஜுஜுப்பி என்ற மாதிரி முகத்தை வைச்சுக் கொண்டு நடந்து திரிந்தாலும் முகம் என்னவோ பேயறைந்த மாதிரி இருந்ததை மனிசி கவனிக்க தவறவில்லை. இதில வேற "உங்களுக்கு ஒன்றும் இல்லை....சும்மா உந்த கூகிளை பார்த்து பயப்பட வேண்டாம் " என்று மனிசி சொல்லி தன் பாட்டுக்கு சந்தோசமாக இருந்ததை பார்த்து ராசுக்குட்டிக்கு விசர் ஏறிக் கொண்டு இருந்தது. அடுத்த எட்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் கூகிளை நோண்டுவதும் அதில் சொல்லப்பட்டு இருக்கும் அறிகுறிகள் எல்லாம் தனக்கும் இருக்கு என்று கற்பனை பண்ணுவதும், குடும்ப வைத்தியருக்கு போன் அடிப்பதுமாக இருந்தார். இரண்டு வகையானவர்கள் உள்ளனர். ஒன்று வைத்தியர் சொல்லுவதைக் கேட்டு பயப்படுகின்றவர்கள். மற்றது, வைத்தியரையே பயப்பட வைப்பவர்கள். இதில் ராசுக்குட்டி இரண்டாம் வகை என்று இவ்வளத்தையும் வாசிக்கும் உங்களுக்கும் புரிந்து இருக்கும். அறப்படிச்ச குணம் உள்ளவர்ளுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் ஒரு வகையில் பாவம் செய்வதர்கள் போலும். சரியாக எட்டாவது நாள், குடும்ப வைத்தியர் தொலைபேசியில் அழைத்து Urinalysis சிலும் ஒன்றும் வரவில்லை...எல்லாம் சரியாக இருக்குது என்று சொல்ல, "இனி என்ன செய்வது டொக்டர்... ஏன் அப்ப அண்டைக்கு இரத்தம் வந்தது " என்று குடல் உடைந்து கேட்க வைத்தியரும் "ஒரு ஸ்பெசலிஸ்ட் இடம் உன்னை அனுப்புறன், அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக டெஸ்ட் செய்யச் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். அப்பொயிண்ட்மெண்ட் உடனே கிடைக்குமா டொக்டர் என்று கேட்க.. "இல்லை நாளேடுக்கும்... உன்னை மாதிரி கனக்க பேர் காத்திருப்பர் என்பதால் மூன்று மாதமாவது எடுக்கும்" என்று சொல்ல ராசுக்குட்டி மனசுக்குள் போட்ட சின்ன அலறலை அவர் கவனிக்கவில்லை. உந்த கனடவில் எல்லாத்துக்கு லைனில் தான் நிற்க வேண்டும். ஜஸ்ரின் ருடோவாக இருந்தாலும் சரி, ராசுக்குட்டியாக இருந்தாலும் சரி, வரிசையில் தான் நிற்க வேண்டும். ஊரில் என்றால் காசு கூடக் கொடுத்து உடனே எல்லா பரிசோசதனைகளையும் செய்து பார்க்கலாம்...ஆனால் கனடாவில் நாளெடுக்கும். ராசுக்குட்டியின் நேரம் கொரனா காலமாக வந்து சேர்ந்ததால் காத்திருப்பு நீளுமோ என்று பயந்து போயிருக்கும் போது மூன்றாம் நாளே ஸ்பெசலிஸ்ட் இடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "முதலில் அல்ரா சவுண்ட் எடுத்துப் பார்ப்பம். சிறு நீரகத்தில் கல் என்றால் அது காட்டிக் கொடுக்கும். அனேகமாக உனக்கு அதுதான் பிரச்சனை என்று சந்தேகின்றேன் என்று கூறி மூன்று நாட்களில் அல்றா சவுண்ட் இற்கு அனுப்பி வைத்தார். இக்காலப்பகுதியில் கொரனா கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு Lab உம் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். ராசுக்குட்டி மூன்றாம் நாள் உள்ளே போகும் போது அங்கிருந்தவர்கள் உடல் முழுதும் மூடிய ஆடையுடன் இருந்ததை பார்த்து லைட்டாக பயந்து விட்டார். அந்தப் பயத்தில் அரண்டு இருந்தவர். அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார். பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை. - தொடரும்;1 point- சுதந்திரம் எம் சுவாசம்.
1 pointதொலைத்த இடத்திலேயே தேடவேண்டும் ஓசோவின் தத்துவ வார்த்தைகள். தொலைத்த இடத்தில் நாங்களும் இல்லை. தொலைந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தேடும் சக்தியும் இல்லை. தர்மம் வெல்லும் என்ற சொல்லைக்காட்டிலும் வல்லவன் வாழ்வான் என்ற சொல்லே இக்காலத்தில் மிளிர்ச்சியாக இருக்கிறது. சுவியண்ணா.1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point - ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
Important Information
By using this site, you agree to our Terms of Use.