Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    23
    Points
    46808
    Posts
  2. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    11531
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    23926
    Posts
  4. இசைக்கலைஞன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    22135
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/08/21 in all areas

  1. பெ ண்மை எனும் நல் மனையாள் . பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும் எல்லா விதத்திலும் கரிசனை கொள்ள வந்த தாரமானவள். என் மனைவி , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். என் உயிர் தாங்கி பத்து மாதம் சுமந்து வலி தாங்கி என் மகவை பெற்றவள் . செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன் பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) என் பசியாற்றுபவள் என் வாரிசுகளுக்கு அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும் வேலி தாங்கி எனக்காக வாழ்பவள். தன பசி மறந்து நம் பசி போக்கியவள். உதிரத்தை பாலாக்கி உணவூட்டியவள். விலையில்லாதவள் . என் தாய்க்கு மகளாக என்தந்தைக்கு மறு மகளாக (மரு மகளாக ) என் மக்களுக்கு தாயாக வாழ்ந்தவள் . ஆண்மைக்கு உயிர் கொடுத்தவள் தனக்கு நிகராக என்னையும் மக்களையும் நேசித்தவள் சபையிலே எனக்கு கெளரவம் தந்தவள் . மக்கள் பேற்றின் மூலம் உலகை உருவாக்கியவள் . என் குடும்ப நிர்வாகி , நல்ல வழி காட்டி. தாய்மையை போற்று வோம் . சகல பெண்களுக்கும் இன்றைய தினத்தில் சமர்ப்பணம். இப்படிக்கு ஆண்மை (ஆண்மக்கள் )
  2. உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது.. செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது. செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்) நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்.. நாட்பட்ட நோய் கண்டவர்கள்.. தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்.. நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்.. நீரிழிவு நோய் கண்டவர்கள்.. தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்.. உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்.. விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்.. போதிய உணவின்மை.. போதிய ஊட்டச்சத்தின்மை.. வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை.. போதிய சுகாதார வசதிகள் இன்மை.. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்.. போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை.. இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன.. 1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும் 2. உடற்சோர்வு 3.சிறுநீர் உற்பத்தி குறைவு 4.மயக்க நிலை 5. அதிகரித்த இதயத்துடிப்பு 6. வாந்தி மற்றும் பேதி 7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல் 8. குறை குருதி அழுத்தம் சுவாசத்தொற்று எனில் சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்.. அம்மாவின் விடயத்தில்.. அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன. அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??! இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை. சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை. செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock) என்பது.. குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன. குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது. அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம். ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும் Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை. அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும் Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும். அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை. உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்.. இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம். தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். உசாத்துணை: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/ (யாழிற்கான சுய ஆக்கம்)
  3. ஊர் வம்பும், கைபேசியும்..! ********************* அந்தக்காலம்.. நல்லதண்ணிக் கிணத்தில நாலுபேர் கூடுமிடத்தில பக்கத்து வீட்டு பழசுகள்-2 பவ்வியமாய் வந்தாலே குலநடுங்கி போகுமாம் குடும்பங்கள் எல்லாம். மூல வீட்டுப் பெட்ட முளங்காலுக்கு மேல போடுது சட்ட ஓல வீட்டுப் பொடியன் ஒருத்தியோட ஓடிட்டான். வேலைக்கு அவன் போக-வீட்ட வேறொருவன் நிக்கிறான் காலக் கொடுமையென கதிராச்சி முடிக்க முன்ன.. குப்பத்தொட்டியில ஒரு குழந்த கிடந்தது-அது பக்கத்து வீட்டு பணக்காரச் சமாச்சாரம். எண்டு தொடங்கி எல்லா வரலாறும் சொண்ட நெளிச்சு சொல்லி முடிக்குமாம் மற்றது.. கடுகளவு உண்மையை மடுவளவு பெரிதாக்கி வதந்திய பரப்பிவிட்டு வாயமூடு நமக்கேன்-ஊர் வம்பு என்று சொல்ல.. வந்த சனமெல்லாம் வாயும் காதும் வைத்து சொந்தங்களுக்குள்ளே சொறிநாயாய் கடிபட்டு வெட்டுக்குத்தில போய்-ஊரே வெடிச்சு பிளந்து உண்மை பொய் தெரியாமல் ஓராயிரம் பிரச்சனைகள். கலியாணக்குளப்பமும் கருமாரியும்-வதந்தி கதை பேச்சால் நடந்த அந்தகாலம். இன்றும் வேறு வடிவில வீட்டுக்குள்ள திரியுதாம் எச்சரிக்கை.. கையில இருக்கிற கை பேசியை நம்பிறதால் பொய் வதந்தியெல்லாம் பொட்டளமாய் கொட்டி குடுப்பத்தை குலைத்து கொடுமை நடக்கிறது. கணவனுக்கு போண் வந்தால் மனைவிக்கு தூக்கமில்லை மனைவிக்கு மெசேச் வந்தால் கணவனுக்கு வாழ்க்கையில்லை. உள்ளத்து தூய்மையில்லா உணர்வு எமக்கிருந்தால் கள்ளப் போண் வருகுதென்று கணவன் மனைவிக்கே கை பேசி மூட்டி விட்டு-பல கலவரங்கள் அது பார்க்கும். பிள்ளைகளை வழி நடத்த முதலில்.. பெற்ரோரே முடிவெடுங்கள் இல்லையேல் ஒவ்வொரு மூலையாய் உங்களைப் போல் பிள்ளைகளும். குரோதம் தவிர்த்து குடும்பத்துக்குள்ளே திறந்த மனதுடன் திறப்பின்றிப் “போணை” அனைவரும் பார்க்க அனுமதித்தாலே வதந்திகள் பயப்படும் வாழ்வே ஒளி பெறும். அன்புடன் -பசுவூர்க்கோபி- 07.03.2021
  4. காவலூர்க் கனவுகள் கடலோரம் அலைவந்து கரைமீது மோதும் காதோரம் ஆலய மணி வேதம் ஓதும் இனிதான தென்றலும் இடை வந்து வீசும் எங்கெங்கு நோக்கினும் தெய்வீகம் பேசும் இல்லங்கள் எங்குமே இறை புகழ் பாடும் இயம்பிடும் செபமாலை தினம் சாரல் தூவும் அதிகாலைத் திருப்பலி அரங்கேறும் நேரம் அற்புத கானங்கள் அகமெங்கும் மோதும் நிலவோடு கடல் வந்து நிதம் சங்கமிக்கும் கடலோடு மேகங்கள் தலை கோதிச் செல்லும் செம் பருத்திப் பூக்கள் வேலியில்; ஆடும் செவ்வந்திப் பூக்களும் பொன் அள்ளித் தூவும் அதி காலைச் சேவல்கள் அறை கூவிப் பாடும் அதை மிஞ்சும் திருந்தாதி மணி நாதம் கேட்கும் வான் முட்டும் ஆலய கோபுரம் நான்கும் ஆன்மீக தாகங்கள் தீர்த்திடும் பாங்கும் அறிவூட்டும் அதிசய கலைக்கூடம் எங்கள் அறிவுக்கண் திறந்திடும் அற்புதம் செய்யும் குயிலோசை காதிலே இன்னிசை பாடும் அலையோசை காற்றோடு சுதிதாளம் போடும் வெள்ளிக் கொலுசொலி வீதியில் சிந்தும் துள்ளும் வனிதையர் சிரிப்பொலி மிஞ்சும் காலைச் சந்தையும் களைகட்டிக் கூடும் காவலூர்த் துறைமுகம் கலகலப் பூட்டும் மாலைச் சூரியன் மறைந்திடும் வேளை மஞ்சள் குளித்திடும் கடல் மகள் நாணம் கண்டு களித்திட காளையர் கூடும் கடற்கரை பொன்மணற் பரப்பென மின்னும் பூவரசம் பூக்கள் சாமரம் வீசும் மாமரக் காற்றிலும் தமிழ் மணம் வீசும் காவலூர்க் கனவினைக் கண்களில் சுமக்கும் கண்மணிகள் வாழ்வில் வசந்தமே வீசும் --
  5. இரவில் டோர்ச் லைட் டின் வெளிச்சம் கூட தயங்கி தயங்கி நகரும் கடும் இருள் நிறைந்த வளவு. இலுப்பை மரங்களின் உச்சியில் தங்கி தூங்கும் வெளவால்களின் எச்சங்களால் நிறைந்திருக்கும் சிறு காடு போன்றது இந்த வளவு. பகலில் ஆடுகளுக்கு குழை வெட்டுவதற்காக மட்டும் சிலர் வந்து போனாலும், பலர் உள் நுழையவே அஞ்சும் தோற்றத்துடன் உள்ள இந்த வளவின் மண்ஂணுக்குள் புதைக்கப்பட்ட பெண் போராளிகளின் ஆவிகள் இரா காலங்களில் நாவல்மரங்களில் மீதேறி இருந்து தமக்குள் அரட்டுவதை கேட்ககூடியதாக இருப்பதாகவும் திகில் நிறைந்ததாகவும் சப்தங்களால் நிறைந்து இருப்பதகாவும் அயல் சனங்களால் சொல்லப்படும் பெரும் வளவு இது. அதன் மூலையில் என் சிறு குடில் . கொழும்புத்துறை வீதியில், கணக்கர் சந்திக்கு அருகில் இருக்கும் இந்த வளவுக்குள் நீண்டு செல்லும் ஒழுங்கையின் முடிவில் இருக்கும் இந்த காட்டு வளவின் மூலைக்குள் இரவில் நான் மட்டும் தனியாக நடந்து என் குடிலுக்குள் வரும் போது ஒரு போதும் நான் ஆவிகளின் சத்தங்களையோ அல்லது அயல் சனங்களால் சொல்லப்படும் எந்த பேய்களையுமோ பார்த்ததில்லை. இலுப்பை மரங்களின் இலைகளை சாப்பிட்டு விட்டு மந்தமாக அதே வளவுக்குள் படுத்து கிடக்கும் சில ஆடுகளை மட்டும் எப்பவாவது சில நாட்கள் பார்த்து இருக்கின்றேன். மற்றப்படி இந்த வளவு என் வாழ்வு. என் பெயர் கோசலை. எனக்கு வயது எத்தனை என்று தெரியாது. எப்ப பிறந்தேன், எங்கு வளர்ந்தேன் என்று நினைவில்லை. மஸ்கெலியாவில் இருந்து ஆத்தையுடன் இந்த ஊருக்குள் வந்த எனக்கு கோசலை என்று பெயர் மட்டுமே சொந்தமாக இருந்தது. பின் 5 பிள்ளைகள் ஒவ்வொருவரால் பிறந்து எனக்கு என்று ஒரு குடும்பம் ஆனது. பின் அந்த ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொரு வீடுகளில் வேலைக்கு வீட்டுக்கார முதலாளிகாளால் கவரப்பட எஞ்சியது இந்த குடிலும் இரவில் சத்தம் போடும் வெளவால்களும் மட்டுமே நான் நல்ல கறுப்பு, என்னை தொட்டு நெற்றியில் வைத்தால் போதும் கருப்பு பொட்டு உன் கலரில் இருந்தே வந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு நான் கருப்பு. ஆனால் நெற்றியில் ஒரு சிவப்பு பொட்டு வைத்து விட்டால் "அடியே உன்னை அடிக்க இந்த ஊரில் ஒரு அழகியும் இல்லையடி' என்று ஊரில் இருக்கும் பெண்கள் தம் வாயாலேயே சொல்லும் அளவுக்கு என் அழகு கூடிவிடும். இந்த அழகில் விழுந்தவர்கள் எல்லாம் ஒரு சில மணித்தியாலங்களில் தம் பசி தீர்த்த பின் சில சில்லறைகளை வீசி விட்டு விலகிச் சென்று விட மீண்டும் எனக்காக காத்திருப்பது இந்த வளவும் என் குடிலும் தான். சிவனே என்று இரவில் வந்து ஒரு தலையணையை என் குடிலில் இருக்கும் மண் நிலத்தில் போட்டு விட்டு படுத்தால் அப்படி ஒரு நித்திரை வரும். நான் நித்திரை கொண்டால் எவராலுமே எழுப்ப முடியாது. ஆனாலும் இக் குடிலில் இருந்து ஐந்து நூறு அடிகள் எடுத்து வைத்தால் இருக்கும் பெரிய வீட்டில் இருந்து வேலைக்காரியாக இருக்கும் என் பத்து வயது மகள் அடி வாங்கி அலறும் சத்தத்தில் மட்டும் எப்படி விளிக்கின்றேனோ தெரியவில்லை. நாளைக்கு காலையில் எழும்பி வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நினைவுடன் படுத்து விடியவே எழும்புகின்றேன்.எனக்கென்று மன்றாட ஒன்றும் இல்லையென்றாலும் என் ஐந்து பிள்ளைகளும் இப்படியே அடி வாங்கி சாகாமல் என்றாவது ஒரு நாள் கலியாணம் கட்டி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நேர்த்தி வைக்கவாவது நான் ஒவ்வொரு செவ்வாயும் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு போகின்றவள். ஒரு நாளாவது அம்மன் எண்ட நேர்த்தியை காதால கேட்காமலா விடுவாள். விடியவே எழும்பிட்டன். வளவின் இன்னொரு மூலையில் இருந்து காட்டுக் கிணற்றில் வாளி போட்டு குளித்து விட்டு காலம்பற 6 மணிக்கு போய் கணக்கர் சந்தியில் நிற்கின்றேன். கொஞ்ச நேரத்தில் வான் பஸ் வரும். இந்த காலையில் சைக்கிளில் ரியுசன் கிளாசுக்கு சில பிள்ளைகள் சைக்கிளில் போய்க் கொண்டு இருக்கின்றனர். அதில் கொஞ்சம் வளர்ந்த பெடியங்களும் போவதால் அந்த பெடியன் எனக்கு அருகில் வரும் மட்டும் அவனை நான் கவனிக்கவில்லை. கிட்ட வருகின்றான். அவனை எங்கோ பார்த்து இருக்கின்றேன் என யோசித்து அவன் யார் என்றதை நினைவுபடுத்த முன் அவன் என்னை நெருங்கிவிட்டான். அவன் யார் என நினைவுக்கு வருகின்றது. இனி ஓட முடியாது. ஏதாவது சொல்லி அனுப்பிவிடலாம். அம்மாளாச்சி மேல அடிச்சு சத்தியம் செய்தால் என்னை விட்டு விடுவான். அவன் விடவில்லை அருகில் வந்தவன் "நீங்கள் எவ்வளவு சொல்லியும் திருந்தவில்லை" என்று சொல்கின்றான். பிஸ்டலை இடுப்பில் இருந்து எடுக்கின்றான். என் நெற்றியில் வைக்கின்றான். எனக்கு நல்ல வடிவாக இருக்கும் பொட்டில் துப்பாக்கி முனை அழுத்துகின்றது வெடி வைக்கின்றான் என் தலை சிதறுகின்றது பின் மண்டை வழி வெளியே வந்த மூளை சிதறி சின்னஞ்சிறு துண்டுகளாக அருகில் இருக்கும் வேலிக் கதியால் எங்கும் மஞ்சளும் வெளுப்பும் நிறைந்த நிறத்தில் போய் ஒட்டிக் கொள்கின்றது. மண்டையில் இருந்து வெளியேறிய இரத்தம் ஒரு சிறு தீவென விரைய, அதில் கிளைத்த இன்னொரு சிறு இரத்த தீவு எதையோ தேடி அலைந்தவாறு நீள்கின்றது. தன்னை கொல்ல சொன்ன அறம் ஏன் தன்னை மட்டும் ஏன் கொல்கின்றது என்று நியாயம் கேட்பதற்காக அது விரைகின்றது போல... என் இறுதி மூச்சு நிற்கும் முன்னர் என்னைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல கிடக்கு. அது எனக்காக அல்ல... நியாயம் தேடி விரைந்து கொண்டு இருக்கும் என் இரத்தத்தின் நீட்சி அமைதியடைய. -தொடரும்
  6. அம்மா! உங்கள் கையால் செம்பு தண்ணீர் குடித்தால் கூட சுவையாகத்தான் இருக்கும். சாப்பாடுகள் என்றாலும் சரி சிற்றுண்டி ஆனாலும் சரி எல்லாமே சொர்க்க உணவுகளாய் இருக்கும். சுவை கூட சொல்லி வர்ணிக்க முடியதம்மா.சும்மா ஒரு சட்டியில் நாலு வெங்காயதையும் பச்சைமிளகாயையும் போட்டு சொதி வைத்தால் கூட அது அமிர்தமாக இருந்ததே அம்மா. அந்த சுவை ஏன் என் மனைவி சமைக்கும் போது வரவில்லை? எத்தனை உணவுகளை எந்தெந்த விதமாக எல்லாம் சமைத்தீர்கள். அந்த பக்குவம் உங்கள் பேரப்பிள்ளைகளிடம் வரவே வராதம்மா. காலம் மாறி விட்டது என்கிறார்கள். நாமும் மாறுகின்றோம் என்கிறார்கள். கண்ட கண்ட உணவுகளை உண்கிறார்கள். கடைசியில் கைக்குள் பிடிக்குது காலுக்குள் பிடிக்குது என்கிறார்கள்.நெஞ்சுக்குள் இழுக்குது என்கிறார்கள் அம்மா. சென்ற கிழமை சின்னம்மாவுக்கு ரெலிபோன் எடுத்தேன் அம்மா. சுக நலம் விசாரித்தேன். அவ என்னை எதுவும் விசாரிக்க வில்லை. மாறாக பணம் வேண்டும் என்றார். ஏன் என நான் கேட்டேன். தனது பேரப்பிள்ளைக்கு வீடு கட்டவாம். இப்போது இருக்கும் வீடு யாருக்கு என நான் கேட்க அது தனக்கு மட்டும் என்றார். அது மட்டுமில்லாமல் எனது பெயரில் இருக்கும் காணிகளை தனது பெயருக்கு மாற்றி தரும் படியும் கட்டளையிட்டார். அம்மா நீங்கள் இருக்கும் மட்டும் வாய் மூடி இருந்தவர்கள் எல்லாம் வாய் திறக்க ஆரம்பித்து விட்டார்கள். அம்மா! உங்கள் காலத்தில் இருந்த சகோதர பாசம் குடும்ப பாசங்கள் இன்றில்லை.சில நேரம் கடமைக்கு பழகுவது போல் இருக்கின்றார்கள். சகோதரங்கள் குடும்பங்களுக்குள் கூட எரிச்சல் பொறாமைகள் கூடி விட்டதம்மா.சந்ததிகள் குடும்பங்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் பார்கின்றார்கள். பணத்தை வைத்து சரிசமம் பார்க்கின்றார்கள் அம்மா. நான் கார் வாங்கினால்....நான் வீடு வாங்கினால் அதை விட இன்னும் பெரிய கோணத்தில் தாங்கள் வாங்க வேண்டும் என அல்லல் படுகின்றார்கள்.எதை கொண்டு வந்தார்கள் எதை கொண்டு போகப்போகின்றார்கள் அம்மா? அம்மா என்ரை புறணி இன்னும் வரும்.
  7. நாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார். சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள் போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்.. கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம். அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா. கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???
  8. விரலில் ஈரம், கைரேகை கொண்டு என்னால் போனை லொகின் பண்ண முடியுது இல்லை. திடீரென்று பாஸ்வேர்ட் டும் மறந்து போயிட்டு. "என்ற போன் பாஸ்வேர்ட் என்ன" என்று நான் கேட்க மனுசி, மகள், மகன் என்று மூன்று பேரும் என் போனின் பாஸ்வேர்ட் டினை சொல்கின்றார்கள். பசுவூர்கோபி, நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒளிவுமறைவு இன்று குடும்பத்தில் ஒருவரது போனை இன்னொருவர் பயன்படுத்தும் சூழல் இருக்குமாயின் குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் போனால் வராது. முக்கியமாக வளர்ந்த, பதின்ம வயது பிள்ளைகள் எனில், அவர்கள் 18 வயதை அடையும் வரைக்கும் அவர்களது கைபேசியின் பாஸ்வேர்ட் டினை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது. கவிதைக்கு நன்றி
  9. அம்மா! ஒரு முற்றத்தில் விளையாடிய உங்கள் பிள்ளைகளாகிய எங்களுக்குள் பல பிரிவுகள் வந்து விட்டதம்மா..பாசத்தை விட சொந்த உறவை விட சொத்துக்கள் பெரிதாகி விட்டது. எங்கடை தூரத்து சொந்த தம்பு வாத்தியார் என்ரை பனங்காணி எல்லாத்தையும் தன்ரை காணியோடை சேர்த்து வேலிபோட்டு அடைச்சு போட்டார். நீங்கள் இல்லாதது அவருக்கு பயம் விட்டு போச்சுது.கேட்டால் சண்டித்தனத்துக்கு வாறார். நீ வெளிநாட்டிலை செற்றிலாகிட்டாய் உனக்கு என்னத்துக்கு இஞ்சை காணி பூமி எண்டு கேக்கிறார்? என்ரை பிற்காலத்துக்கு வேணுமெண்டால் வரேக்கை தல்லாமாம். அம்மா நீங்கள் இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமோ ? எங்கடை சின்னம்மா குடும்பம் இப்ப சரியான கஷ்டத்திலை இருக்கினம். அவையள் செய்த பாவங்கள் இப்ப சூனியமாய் வந்து சேர்ந்து கொண்டிருக்கு.வட்டிக்கு காசு குடுக்காதேங்கோ எண்டு நீங்கள் சொல்லச்சொல்ல எதையுமே கேக்காமல் நடந்த அவைக்கு நோய் நொடிகள் தான் மிச்சம். அவையளுக்கு இப்ப ஒரே வருத்தம் துன்பங்கள்.சேர்த்து சேர்த்து வைச்சிருக்கிற காசெல்லாம் ஒரு பிரயோசனத்துக்கும் இல்லை. அவையாலை இப்ப விரும்பின சாப்பாட்டை கூட சாப்பிடேலாது.நாலு இடத்தை பார்க்க கூட நடந்து திரியேலாது.அம்மா நீங்கள் அடிக்கடி சொல்லுற மாதிரி மனிசரை மதித்து பாவ புண்ணியங்கள் நினைச்சு வாழப்பழகோணும் எண்டது தெய்வவாக்கு மாதிரி அம்மா. அம்மா! நீங்கள் உங்களுக்கென என்னிடம் எதையுமே கேட்கவில்லை. அதே போல் நானும் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கவும் இல்லை. அந்த சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் அமையவில்லை. ஏன் எமது இருவருக்கும் இடையில் அந்த அவசியமும் தேவைப்படவில்லை. இருந்தாலும் இங்கு என்னோடு வாழ்ந்தவர்கள் பலவற்றை தமது தாய் தந்தையர்களுக்கு செய்யும் போது நான் ஏன் அவர்கள் போல் செய்யவில்லை என்ற ஆதங்கம் இன்றும் முள்ளாய் மனதில் குத்துகின்றது.கேட்காமலே தேவையில்லா விட்டாலும் ஊர் பகட்டுக்கு செய்திருக்க வேண்டும் என்ற மனநிலையை எற்படுத்தி விட்டார்கள். அம்மா நாங்கள் இருவரும் செல்வச்சன்னதியில் கந்தசஷ்டி உபவாசம் இருந்தோம் ஞாபகம் இருக்கா...? எம்முடன் சேர்ந்து உபவாசம் இருந்த பாக்கியம் அக்கா ஞாபகம் இருக்கா? அவவை பற்றியும் சொல்லுறன் அம்மா.
  10. முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ்வே மாயம் படத்தில் கமலஹாசன் இருமின பின் இரத்தம் வெளியேறிய சீனை தன் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தார். இது புற்று நோயாக இருக்குமோ அல்லது வேறு ஏதும் பாரதூரமான பிரச்சனையோ என்று ஒரு கையால பிடிச்சபடியே யோசிச்சுக் கொண்டு இருந்த ராசுக்குட்டியை, "என்னப்பா இவ்வளவு நேரம் என்ன செய்றீஙள்..." என்று கேட்ட மனைவியின் குரல் தான் மீண்டும் தன் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனாலும் பயம் விடவில்லை ராசுக்குட்டிக்கு. வீட்டில் நண்பர் குடும்பம் வந்து கதைத்து கொண்டு இருக்கும் போது தான் இது நிகழ்ந்து இருந்தது. ராசுக்குட்டி அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த விடயத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாலும் மனசில் சிவப்பாக பயம் மிதந்து கொண்டுதான் இருந்தது. எப்படியும் இது என்ன என்று அறியாவிடின் தலை உடனே சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டு இருந்தார். எப்ப நண்பர் குடும்பம் போகும், எப்ப கூகிள் ஆண்டவரிடம் போய் என்ன விடயம் என்று அறியலாம் என்ற நினைப்பிலேயே இருந்தமையால் சரியாக அவரால் கதைக்க கூட முடியவில்லை. நண்பர் குடும்பம் அரை மணி நேரம் மேலும் கதைத்து விட்டு போன மறுகணம், ஓடிப் போய் தன் மொபைலில் இணையத்தில் கூகிள் ஆண்டவரை கூப்பிட்டு "blood in the urine" (சிறு நீரில் இரத்தம்) என்று டைப் செய்து தேடு பொறியை தட்டி விட்டார். கூகிள் ஆண்டவரும் வஞ்சகம் இல்லாமல் பின்வருவன ஒன்று காரணமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களோ காரணஙள் என்று பட்டியலிட்டார்: 1. தொற்று - Urinary tract infections 2. சிறு நீர்ப்பையில் கல்லு -A bladder or kidney stone 3. சிறு நீரகத்தில் தொற்று Kidney infections (pyelonephritis). 3. புரஸ்ரேட் பெரிசாவது -Enlarged prostate. 4. புற்றுநோய் - Cancer 5. சீறு நீரக காயங்கள்- Kidney injury என்று வகை வகையாக பட்டியலிட்டார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. முதல் வேலையாக உடனடியாக உயில் எழுதி வைக்க வேண்டும் என நினைத்தார். பின் அப்படி உயில் எழுதும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்லையே என அங்கலாய்த்தார். சொத்து கித்து சேர்த்து வைக்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் விடப்போகின்றேனே என தழுதழுத்தார். ஆயுள் காப்புறுதியில் கிடைக்கும் சில இலட்சங்கள் குடும்பத்துக்கு போதுமாக இருக்குமா என கணக்குப் போட்டார். தான் செத்த பின் எப்படியும் மறுமணம் செய்து கொள் என்று மனிசியிடம் சத்தியம் வாங்க வேண்டும் என உறுதி பூண்டார். புரண்டு புரண்டு படுத்தார், நடுக் கட்டிலில் எழும்பி இருந்து தன்னை தொட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்குதோ என்று செக் பண்ணினார். இறுதியில் அடுத்த நாள் எழும்பியவுடன் குடும்ப மருத்துவருக்கு போன் போட்டு விடயத்தை சொல்லி உடனடியாக மருத்துவம் செய்ய தொடங்க வேண்டும் என்று நினைத்தார். எந்த நோயும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் அதில் இருந்து பிழைக்கலாம் என எங்கோ வாசித்ததை பல தரம் மீள மனக்கண் முன் கொண்டு வந்து வாசித்தார். அப்படி நினைத்தது கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் கொடுக்க படுக்க போனார். நித்திரையானார். தான் செத்துப் போன பின் நண்பர்கள் எல்லாம் பியர் அடிச்சு அதைக் கொண்டாடுகின்றனர் என கனவு ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு எழும்பினார். உலகமே இப்படித்தான் போலியானது என்று கவலைப்பட்டார். சுருண்டு படுத்தார். அடுத்த நாள் மருத்துவரிடம் கதைக்க, மருத்துவர் இவர் சொல்வதை பெரிசாக கணக்கெடுக்கவில்லை போலிருந்தது. கொரனா காலத்தின் முதல் மாதம் என்பதால், மருத்துவர் கடும் யோசனையின் பின் இவர் கொடுத்த ஆக்கினையால "சரி வா வந்து சிறுனீரில் ஒரு டெஸ்ட் எடு... அதுக்குப் பிறகு பார்ப்பம் ": என்று சொல்லிய அடுத்த அரை மணி நேரத்தில் கிளினிக்கு போய் விட்டார். சிறு நீர் டெஸ்ட் செய்தார், 10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. (தொடரும்....)
  11. ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!
  12. அன்புள்ள அம்மா அறிவது! நான் நல்ல சுகம். அது போல் நீங்களும் நீங்கள் விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம். சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா. உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும் விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா. அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா. என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா. இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......
  13. எங்கள் வீட்டிலும் இதையே பின்பற்றுகிறோம்
  14. தக தகிட... தக தகிட... இதே தாள நடையோடு உங்கள் கவிதையை வாசித்து பூரித்துப் போனேன் அக்கா. அழகுமலர் ஆட அபிநயங்கள் சூட இந்த பாடலின் தாளம், காலப் பிரமாணம் உங்கள் கவி வரிகளோடு ஒத்து வருகிறதே..👌 தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமை... தொடர்ந்தும் எழுதுங்கள்.
  15. தொழிநுட்பம் வளர வளர வதந்திகளும் அதற்கேற்றால் போல் கடுகதியில் உலகெங்கும் பரப்பப்படுகின்றன. முன்னைய காலங்களிலாவது அந்தந்த ஊர்களுக்குள்ளேயே வதந்திகள் உலாவும். ஆனால் தற்போது உலகமே கைப்பேசியினுள் அடங்கிய நிலையில் இவ்வாறான வதந்திகள் சர்வதேசம் எங்கும் சில நொடி நேரங்களிலேயே பரப்பப்படுகின்றன என்பது வேதனையான ஒன்று. கிணத்தடி, கிடுகுவேலிப் பழக்கங்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மாறிவிடுமா என்ன! விழிப்புணர்வு தரும் நல்லதோர் கவிதைக்கு நன்றி பசுவூர் கோபி.
  16. நிகழ் கால நியத்தை கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பசுவூர்க்கோபி, இந்த தொலை பேசியால் பல பதிப்புகள் இருந்தாலும் நன்மைகள் இருக்கு, பாவிக்கும் விதத்தை பொறுத்து, பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்
  17. வணக்கம் தோழி. யாழின் 23வது வருட கொண்டாட்டம் நடக்குது. அதில் இந்த திரியை பதிந்தால் சிறப்பாக இருக்குமே! மட்டுறுத்துனர்களிடம் சொன்னால் மாற்றிவிடுவார்கள். https://yarl.com/forum3/forum/230-யாழ்-23-அகவை-சுய-ஆக்கங்கள்/
  18. ஆறு படை வீடுகளின் அழகோவியம் உனக்கும் எனக்கும்
  19. கவிதை நன்று . கை கால் வைத்த வதந்திக்கு பரவும் வேகமும் அதிகம். தொலை பேசி தொல்லைபேசியாய் போச்சு
  20. இதய அன்பை நினைந்து பாடுவோம் இன்ப கனவொன்று நான் கண்டேன் இறையாட்சி மலர கண்டேன்
  21. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 தாஹா ரசூலின் மகள் யாரம்மா. கண்டு வரலாம்... சென்று வரலாம்... கனிவுடனே மாமதீனா
  22. நல்லதண்ணி கிணத்தடியையும் கைத்தொலைபேசியையும் இணைச்சது மிக பிரமாதம்.
  23. இப்போ மட்டும் நம்மவர்கள் ஊர் வம்பு சும்மாவா இருக்கிறது..சில வேளைகளில் தொடர்ந்து போண் வந்தாலே அன்றைய நாள் தொலைஞ்சிடும்.இது உண்மை.
  24. ஆம்.. அம்மாவும் அப்பாவும் கொழும்பில் வாழ்ந்து பின் யுத்தம் முடித்த பின் ஊருக்கு போக விரும்பி போய் தங்கள் பரம்பரை இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். அது அவர்களின் சுய விருப்பமும் கூட. பிள்ளைகள் நாம் அதில் தலையீடு செய்யவில்லை. மாறாக அவர்களின் விருப்பத்திற்கு எம்மாலான ஒத்தாசை செய்தோம். அம்மாவுக்கு யாழில் நிலவிய கடும் மழை காலத்தின் பின் skin rash வந்தது. அதற்கு antibiotic cream பாவித்தே இருந்தார்கள். ஆனாலும்.. தன்னை அறியாமலே கையால் சொறிந்திருக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் பக்ரீரியா தொற்றுக்கு வாய்ப்புண்டு. சிறிய காயம் ஒன்றே போதும்... sepsis வருவதற்கு. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயோதிப வயதினரில்... இது ஒரு பெரும் பிரச்சனை. என்ன தான் கவனமாக இருந்தாலும். இதில் அம்மா தனக்கான நோய் அறிகுறி தென்பட்டதும்.. அப்பா குடும்ப வைத்தியரை அழைத்து சிகிச்சை வழங்கித்தான் இருந்தார். ஆனால்.. குடும்ப வைத்தியர் ஏதோ காரணத்தால்.. செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்யாமல் சாதாரண காய்ச்சல் போல் நிலைமையை கையாண்டது தான்.. பிரச்சனைக்கான தோற்றுவாய். இறுதியில் அம்மாவின் கடைசி 48 மணி நேரம்.. மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது. சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்துவிட்டன. குருதி அழுத்தம் குறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் குடும்ப வைத்தியர் வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில் அம்மா கன நாள் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொன்னது தான் மிகவும்.. கோபத்தை தூண்டியது. ஆனாலும்.. நாங்கள் சோரவில்லை. உடனடியாக குடும்ப நண்பராக உள்ள வைத்தியரின் உதவியோடு.. உடனடியாக.. தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு.. தேறிவிடுவார் என்று நம்பிக்கை வளர்ந்திருந்த நிலையில்.. மிதமான இதயத் தாக்குக்கு ( Minor heart attack) உட்பட்டார். இருந்தாலும்.. மீண்டும் வைத்தியர்கள் விடா முயற்சி செய்தார்கள். சுமார் 12 மணி நேரத்துக்குள் இரண்டு இதயத்தாக்கு ஏற்பட்டு.. ஒக்சிசன் அளவு குருதியில் ஆபத்தான அளவுக்கு குறைந்த நிலையில்.. மரணம் சம்பவித்துவிட்டது. அப்போதும் வைத்தியர்கள் கூடவே இருந்துள்ளார்கள். இதில்.. குடும்ப வைத்தியராக இருந்து அம்மாவை பாதுகாத்து வந்தவர்.. இறுதி நேரத்தில் நாட்டில்.. கொரோனா அதுஇதென்று சாட்டுச் சொல்லி.. அம்மாவை சரிவர கவனிக்காமல் விட்டதும்.. காய்ச்சல் வந்தும்.. அவருக்கு உரிய பரிசோதனைகளை செய்யாமல் விட்டதும்..தான்... அம்மாவின் இந்த திடீர் இழப்புக்கு முக்கிய காரணம் எனலாம். இது வழமையாக சோதனையில் பெயில் விட்டால் ஆசிரியர் மேல் பழிபோடுவது போன்ற நிலை அல்ல. ஏனெனில் அம்மா ஒரு high risk patient என்பதை அந்த வைத்தியர் நன்கு அறிந்திருந்தும்.. அவருடைய அலட்சியத்தன்மை ( negligence ) தான் அம்மாவுக்கு ஆபத்தும் ஆகிவிட்டது. அம்மாவின் போதாத காலமும் கூடச் சேர்ந்துவிட்டதோ என்னவோ. ஆனால்.. நிச்சயமாக.. அம்மா மனதளவில்.. இந்தப் பூமியில் இருந்து விடைபெற தயார் இல்லாத நிலையில்... தான் அவர் விடைபெற்றிருக்கிறார். அதுதான் மிகக் கவலையாக அமைந்துவிட்டது. அதனை நினைக்கும் போது வலிதான் அதிகமாகிறது.
  25. அம்மா! சென்ற இரு வருடங்களுக்கு முதல் பாக்கியம் அக்காவும் இறைவனடி சேர்ந்து விட்டார். அதில் கொடுமை என்னவென்றால் அவவுக்கு இவ்வளவு பிள்ளைகள் இருந்தும் சொத்துக்கள் இருந்தும் கடைசியில் அனாதை போலவே வாழ்ந்தார். அவ வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு தெரியாதல்ல. பிள்ளைகளுக்காக தனது சுக போகங்களை தியாகம்செய்து பிள்ளைகளை படிக்க வைத்தார். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் நல்ல நிலையில் தான் இன்றும் வாழ்கின்றார்கள். ஆனால் பாக்கியம் அக்காவை பெற்ற பிள்ளைகள் யாருமே கவனிக்கவில்லை.பிள்ளைகளுக்குள் அவர் பாக்கட்டும் இவர் பாக்கட்டும் என்ற மனப்பாங்கும்....அவர் என்னை விட நல்லாய் இருக்கிறார் இவர் என்னைவிட நல்லாய் இருக்கிறார் என்ற மனப்பாங்கும் ஒரு பெற்றதாயை நடுத்தெருவில் விட்டு விட்டதம்மா. கொள்ளி வைக்கக்கூட ஆக்கள் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் கொள்ளி வைத்ததாக கேள்விப்பட்டேன் அம்மா.ஆனால் பாக்கியம் அக்கா பெற்ற பிள்ளைகள் பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என நினைத்து விட்டார்கள். கொள்ளி வைத்தவருக்கு ஒரு லட்சம் ரூபா கொடுத்தார்களாம். இங்கே பாசத்திற்கு முதல் பணம் தான் முக்கியமாய் போய் விட்டதம்மா. இப்போது பாக்கியம் அக்காவின்ரை பெயரில் மணிமண்டபமும் பஸ் தரிப்பு நிலையமும் பிள்ளைகள் கட்டி குடுத்திருக்கினம். பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவும் பாக்கியம் அக்காவின்ரை பெயரிலை தான் செய்யினமாம். அது மட்டுமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு குழாக்கிணறு அடிக்க அரைவாசி பணம் குடுத்து விட்டு உபயம் அமரர் பாக்கியம் என எழுத்தும் படியும் வற்புறுத்தினார்களாம்.வலக்கை குடுக்கிறது இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஒரு கையுமே கொடுக்காமல் புகழ் மட்டும் தேடுகின்றார்கள் அம்மா. அம்மா ! வட்டி கனகசபை மாமா இஞ்சை ஜேர்மனியிலை தான் இருக்கிறார். அவர் இப்ப எப்பிடி இருக்கிறார் தெரியுமே?
  26. கவலையில்லாத மனிதன் சந்திரபாபு அவர்கள் முக்கியக் கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன். நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர். சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத் தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ? இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய் பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம். 24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும். கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார். வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”. - சுப. சோமசுந்தரம்
  27. ஓ....தம்பியர் ஊர் பாக்க போன இடத்திலையும் நூல் விட்டு பாத்திருக்கிறார்....😎 மற்றது ராசன் நைனாதீவு இல்லை நயினாதீவு. நீங்கள் டெய்லி காத்தான்குடியை ஊடறுத்து போய் வாறதாலை நைனாவிலையே நிக்கிறியள்.😜 ஆகா.......சிங்கன் வசமா மாட்டி. இதை வைச்சே ஆளை கொஞ்ச நாளைக்கு வறுத்தெடுக்கலாம்.
  28. 1943, ஆம்ஸ்டர்டாம் Wilheim Henricus Eijkman -- பிரித்தானிய சிலோனில் பிரதர் வில்லியம் என்று அழைக்கப்படப்போகும் கதையின் நாயகன், தன்னுடைய சைக்கிளை அம்ஸ்டர்டாமின் குச்சொழுங்கைகளிற்குள் புகுந்து வளைந்து நெளிந்து லாவகமாக செலுத்திக்கொண்டிருந்தார், ஒரு தடகள வீரனுக்குரிய மீயுயர் உடற்தகுதியும், ஆறடி ஆஜானுபாகுவான மாநிற தேகமும், அடர் செம்பட்டை நிற தலை முடியும் சைக்கிளை கையாளும் லாவகமும் தெருவில் நின்றிருந்த சகலருடைய கவனத்தையும் சற்றே ஈர்த்திருந்தது என்றால் மிகையில்லை, பேக்கரியினுள் வியன்னா ரோலினை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கிய அங்கிள் பிரிட்சின்(Fritz) நெஞ்சின் மீது வில்லியின் சைக்கிளின் கைப்பிடி உரசிக்கொண்டு போனது, அங்கிள் பிரிட்சிற்கோ ஒருகணம் இதயம் மேலேறி கீழிறங்கியது கையை உயர்த்தி கண்டபடிக்கு ஏசப்போன பிரிட்ஸ் அது வில்லி என்று தெரிந்ததும் தனது கையின் சைகையை டாட்டா காட்டுவதை போல மாற்றிக்கொண்டார், தன்னுடைய அருமை வில்லியை எப்படி கடிந்துகொள்வது கையிலிருக்கும் வியன்னாரோலிற்கே காரணம் அவனல்லவா, சாரி அங்கிள் உச்சஸ்தாயியில் கத்திய வில்லி வேகத்தை குறைப்பதாக இல்லை, பயல் ஏன் இப்படி புயல் வேகத்தில் செல்கிறான் வழமையாக சைக்கிளை ஒய்யாரமாக ஒட்டி வருவோர் போவோர் எல்லோரையும் பார்த்து ஒரு புன்னகை கூட செய்யாது போகமாட்டான் இப்படி போகிறான் என்று யோசித்துக்கொண்டே தெருவை கடந்தார். இன்னும் இரண்டு தெருதான் பாக்கி பிறகு அப்படியே சைக்கிளை ஒடித்து திருப்பினால் வீடுதான் என்று விட்டு தனது சட்டைப்பை கடிகாரத்தை எடுத்து பார்த்தார் வில்லி, வேகம் தாராளமாக கைகொடுத்திருந்தது அவரது அனுமானிப்பில் இன்னும் அரை மணிநேரம் மிச்சமிருந்தது ,வீடு சேர 5 நிமிடம் போதும் என்று நினைத்துக்கொண்டு இரண்டு தெருக்களையம் மின்னல் போல் கடந்து சைக்கிளை ஒடித்து திருப்பினார் ....அங்கே (தொடரும்)
  29. தான் பெற்ற பிள்ளை பேரப்பிள்ளை கண்டாலும்... தன் பிள்ளை தங்கம் என நினைக்குமாம் தாய் உள்ளம். பெற்ற பிள்ளை எந்த வயதாகினும் "அம்மா" என்று கூப்பிடும் போது அம்மாவின் அடி வயிறு உணர்வுகளை எழுத்திலும் சொல்லிலும் விபரிக்க முடியாது என அம்மா சொல்லுவார்.
  30. ஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.
  31. மனைவி மீது அளவில்லாத பாசம்.. பிள்ளைகள் மீது அதை விட பாசம்... பேரப்பிள்ளைகள் மீது நிகரில்லா பாசம்... ஆனால் முதிர்ந்த வயதிலும் காலில் கல்லடி பட்டால் அம்மா என்றுதானே அலறுகின்றோம்.
  32. தமிழ்சிறியின் நகைச்சுவை உணர்வுக்கு இந்த ஆக்கம் கொஞ்சம் சுமார்தான். யாழ்கள உறவுகளை வைத்து நகைச்சுவையாக ஒரு ஆக்கம் உருவாக்குங்கள் எல்லோராலும் விரும்பபடும். அனைவருடனும் நட்பாக பழகும் உங்களை யாரும் கோவித்து கொள்ள மாட்டார்கள்.
  33. நான் இப்பவரைக்கும் எடுக்கிறன் கிடைத்தால் ஓர் வீடு மற்றும்படி கார் வாங்கணும் பந்தாவா வாழவேண்டுமென்ற ஐடியா எல்லாம் இல்லை ஆனால் விழுந்தபாடில்லை சிறியண்ணை இழுத்து வைக்க வேண்டாம் எழுதிடுங்கள்
  34. 1987 ஜனவரி 5ஆம் திகதி தேசியத்தலைவர் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பி இருந்தார், பெப்ரவரி மாதம் முற்பகுதியில் சாவகச்சேரி முகாமில் மதிய உணவை முடித்துக் கொண்டு யாழ் வடமராட்சி பொலிகண்டி கொற்றாவற்றையில் அமைந்திருந்த முகாமுக்கு இம்ரான், வாசு, அஜித் (பாம்பன்), பரன், றொபோட் (வெள்ளை) ஆகியோருடன் டெலிக்கா வானில் வந்திருந்தார். அதே நேரம் பொன்னம்மான் உடன் மேலும் சிலர் முகாமுக்கு வந்திருந்தனர். வடமராட்சி பொறுப்பாளர் தளபதி சூசை, வீமன் ஆகியோருடன் மேலும் பலர் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட கனரக இயந்திர துப்பாக்கியான30 கலிபர் பரிசோதிக்கப்பட்டது (zero setting) நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதல் நடவடிக்கைக்கு கிட்டத்தட்ட் 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த தயாரிப்பு நடவடிக்கை நடைபெற்றது. தேசியத் தலைவர் எப்போதும் கூறுவது போல் தாக்குதல் நடவடிக்கை வெற்றியளிக்க வேண்டும் என்றால் முன் தயாரிப்பு வேலை முழுமையடைந்திருக்க வேண்டும் என்பதற்கு அமைய அவரே கடுமையாக உழைத்த இந்த ஒளிநாடாவை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்று கடமையாகும்.
  35. நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வரைகூட அம்மாவுக்கு பக்கத்திலதான் பூனைகுட்டி போல நித்திரை கொண்டிருக்கிறேன். வாசிக்கும் பழக்கும் எனது தாயாருக்கு அதிகமாக இருந்ததினால் பக்கத்தில் படுத்திருக்கும்போது அவ சொன்ன புராண கதைகளை கேட்டே சாதாரணதர பரீட்சையில் மகா பாரதம் கம்ப ராமாயணம் பகுதிகளில் அதிக பெறுபேறுகள் பெற்றிருக்கிறேன். எங்காவது ஊர் விழாக்களுக்கு போனாலும் கிப்ஸ் சாரம் அணியும் வயசிலும் அம்மா பக்கதிலயே போயி குழந்தை போல உக்காந்திருக்கிறேன். ஆக்கினை தாங்காமல் , போய் பொடியளோட விளையாடேன்டா.. எதுக்கு அம்மா அம்மா எண்டு பின்னால திரியுறா? அம்மா செத்து போனால் என்ன செய்வா எண்டு என்ர பாசத்தின் லெவலை அளவிட சும்மா ஒரு கோப கேள்வி பலமுறை கேட்டிருக்கிறா. அப்போ நான் சொன்னதெல்லாம் ’நீ செத்துபோனா நானும் செத்துபோவேன்’. சொன்னபடியே அவ செத்து போயிட்டா... ஆனால் நான் இன்னும் வாழ்கிறேன். வலி தரும் பதிவு குமாரசாமியண்ணா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.