Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88007
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    23926
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/08/21 in all areas

  1. உலக ஒழுங்கு என்று வரும் பொழுது இன்றும் பழைய வலது/இடது அணி தான் அச்சாணி யாக இருக்கிறது .. அணிசேரா நாடுகள் என்ற அமைப்பும் இருந்தது ஆனால் அந்த அணி நாடுகள் உடைந்து போனது அல்லது வலது/இடது கூட்டணிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டது எனது பார்வையில்... ஆசிய பிராந்தியத்தில் இரண்டாம் உலக போரின் பின்பு இரு பெரும் இடதுசாரி (??)நாடுகள்(சோவியத் சீனா)ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதை உலக போரை முடிவுக்கு கொண்டு வந்த தரப்பு விரும்பவில்லை. வலது நாடுகளின்(வநா) கூட்டு தங்களது வசதிக்கும் தங்களது செல்வாக்கை செலுத்துவற்குமாக சில தீவுகளை நாடுகளாக உருவாக்கி அல்லது குத்தகைக்கு எடுத்து தங்களது வலது/ஜனநாயக/பல்கலாச்சார கொள்கைகளை வகுத்து சென்றன.....மதங்களை மையப்படுத்தி நாடுகளின்எல்லைகளையும் வகுத்து சென்றனர். பிரித்தானியா தனது காலனித்துவத்திலிருந்த நாடுகளை ஒரு அணியின் கீழ் பொதுநலவாய நாடுகள் என உருவாக்கினர் இந்த பொதுநலவாய நாடுகள் தங்களது செல்ல பிள்ளைகளாக தங்களால் அறிமுகம் செய்யப்பட்ட பல் கலாச்சார,மற்றும் ஜனநாயக மரபுகளை மதித்து நடப்பார்கள் என நினைத்தார்கள்.அத்துடன் தங்களது மொழி,மற்றும் மத பண்பாடு (கிறிஸ்தவம)தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என நம்பினார்கள் . அரசியல் லாபங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நாடுகளை உபயோகிக்கலாம் என்ற தூர நோக்கு சிந்தனை யுடன் உடன் செயல் பட்டார்கள். அப்படி உருவான நாடு தான் சிலோன்..... பல பொதுநலவாய நாடுகள் பிரித்தானியாவை சுழிச்சு விளையாட தொடங்கின ,அதில் ஒன்று சிலோன். இதை அறிந்த வ/நா கூட்டு ஆசியா பிராந்திய நாடாகிய ஜப்பான் ஊடாக பல நிதியுதவிகளை செய்து தம் பக்கம் வைத்து கொள்ள முடிவு செய்தது. ஜப்பானும் சிறிலங்காவும் பாரம்பரிய நட்பு நாடுகளாக மாறியது. . அதே சமயம் சிலோன் தனது நாட்டை(இறையாண்மை) பாதுகாத்து கொள்ளவும்,அரசியல் வாதிகள் தங்களது அரசியல் /பணம் பலத்தை பெருக்குவதற்கு பல உத்திகளை பயன்படுத்தினார்கள். சிலோன் முழுவதும் ஒரே இனம் ,ஒரே மொழி, ஒரேமதம் பேசும் மக்கள் வாழ வேண்டும் .உலகில் சிங்கள பெளத்தம் இந்த நாட்டில் மட்டும் உள்ள காரணத்தால் இதை பாதுகாக்க நினைத்த‌ சிங்கள பெளத்த தேரர்கள் இனவாத்தை கையில் எடுத்தார்கள் .கிறிஸ்தவ சிங்கள அரசியல்வாதிகளும் இதைபயன்படுத்தி பெளத்தர்களாக மாறி அரசியல் செய்ய தொடங்கினார்கள். அரசியல் யாப்புக்களை மாற்றுவதும் இனவாதம் பேசுவதுமாக நாட்டை நடத்த தொடங்கினார்கள். வாக்குரிமை பறிக்கப்பட்டமை,சிங்களம் மட்டும் சட்டம்,பாத யாத்திரைகள் ,ஒப்பந்த்ங்கள் கிழித்தெறிதல் என்பன உள் நாட்டில் நடந்து கொண்டிருக்க மறுபக்கத்தில் சர்வதேச மட்டத்தில் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா குடியரசு என மாற்ற அரசியல் யாப்பை மாற்றினார்கள் . ஜெ.வி.பி (சேகுவார புரட்சி)இடது சாரி கொள்கையை புரட்சி மூலம் உருவாக்க போராடினார்கள். இந்த போராட்டம் இந்தியா இராணுவத்தின் உதவியுடன் சிலோன் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. (தற்பொழுது சீனா பணத்தை காட்டி நேரடியாக ஆட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்றனர்,முன்பு போல மாவோ யிஸ்ட்க்களை உருவாக்க வேண்டிய தேவையில்லை.) சிறிலங்காவில் ஆட்சிக்கு வருபவர்கள் யாவரும் தங்களது கட்சி தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அரசியல் யாப்பில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றனர் . ஜெ.ஆர் ஆட்சிக்கு வந்தார் சிறிலங்கா குடியரசு என்ற பெயரை சிறிலங்கா சோசலிச ஜனநாயக குடியரசு என மாற்றி அரசியல் யாப்பையும் மாற்றினார் தனது கட்சி தொடர்ந்து 17 ஆண்டுகள் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது. தமிழ்மக்களின் ஆயுத போராட்டம் சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் ஆசைக்கும் விருப்புக்கும் நன்றாக தீனி போட்டது.திறமையாக கையான்டார்கள் சிங்கள ஆட்சியாளர்கள் நாட்டில் அக்கறை கொள்வதை விட அதிகாரத்தை அலங்கரிப்பதிலயே கவனம் செலுத்தினர் சந்திரிக்கா ஆட்சி அமைத்தார் அவரும் அரசியல் யாப்பை மாற்றுவதாக சொல்லித்தான் ஆட்சி ஏறினார் ... ஐக்கிய தேசிய கட்சி ஆளுமை குறைய தொடங்க சிறிலங்கா சுதந்திரக‌ட்சி ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது .சந்திரிக்காவின் பதவிக்காலம் முடிய ராஜபக்சா ஆட்டம் தொடங்குகிறது .இதுவரை காலமும் மேற்குலகு, சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் சுளிச்சு ஓடிய ஒட்டம் ஒரு முட்டுக்கட்டை நிலைக்கு வந்து பகிரங்கமாக சீனாவுடன் உறவாட வேண்டிய நிலைக்கு சிறிலங்கா வந்து நிற்கின்றது .புதிய கட்சி நீண்ட நாள் ஆட்சி செய்ய வேண்டும் அத்துடன் இது குடும்ப கட்சியாகவும் நீண்டநாட்கள் பயணம் செய்ய‌ வேண்டியுள்ளது.இந்த குடும்ப கட்சியில் ஒரு சிக்கல் உண்டு சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகள் எல்லோரும் ஜனாதிபதி ,பிரமதர் ஆக வரும் தகுதியுடையவர்கள். மீண்டும் சிறிலங்கா யாப்பு மாற்றப்படுவதன் மூலம் அதன் பெயர் சிங்கலெ ஆக மாறும் .சீனா சகல அபிவிருத்தியையும் செய்யும் நாட்டின் பெரும் பகுதி சீனாவுக்கு சொந்தமாகும்.....சிங்கள மக்கள் சிங்கலெ என்ற பெயர் கிடைத்தது மற்றும் தமிழர்கள்,இஸ்லாமியர்கள் நாட்டின் சொத்தை அபகரிக்கவில்லை என பெரும் மூச்சு விடுவார்கள் ஆனால் ட்ரகன் விழுங்கிய சிங்கத்தை மறந்துவிடுவார்கள் வலதுசாரி பின்னனி கொண்ட கூட்டு ஐ.நா சபையில் மனித உரிமை மீறல் என்ற குற்றசாட்டை போட்டு சிறிலங்காவை சீனா பக்கம் சாயாமல் தடுக்க முயற்சி செய்து பார்கின்றது ஆனால் வலது சாரிகளின் நன்கொடையை விட சீனாவின் நன்கொடை பல மடங்கு அதிகம் அதனால் அரசியல்வாதிகளின் பணப்பையும் பெரிதாகும்... நீண்ட நாட்கள் அரசியல் எழுதவில்லை அதுதான் இந்த சின்ன கிறுக்கல்
  2. இந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் சொல்வார். பன்றி வேட்டையாடியது, வயலில் சூடு அடிக்கும்போது யானை வந்தது, சகோதரங்களுடன் முரன்பட்டு வேறு ஊர் சென்று கடின உழைப்பால் முன்னேறியது போன்ற பல கதைகள் சொல்வார். அன்று ஆவற்றைப் பெரிதாகக் காதில் வாங்கியதில்லை. அவர் சொன்னவற்றில் நினைவில் இருந்த சிலவற்றை பல வருடங்கள் கழித்து மீட்டபோது அவரைப்போல் எனக்கு சொல்லத்தக்கவாறு அனுபவங்கள் எதுவும் இல்லையே என்று தோன்றும். இப்போது அந்த ஏக்கம் இல்லை. இப்போது என்ன நிலையில் உள்ளேனோ அதைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டு அதனை மேம்படுத்தி எதிர்காலத்தைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்பதில் உறுதியாக உள்ளேன். வாழ்வதற்கு வாழ்க்கை இன்னும் ஏராளம் உள்ளது. அதற்கு எனது உடல் ஆரோக்கியம் முக்கியம். என்னுடைய உடலைக் கவனமாகப் பார்க்காவிட்டால் உள்ளத்தால் என்னை நிறைவாக உணர முடியாது. எனது இனம் நிலைக்க வேண்டுமானால் முதலில் நான் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனது இனத்தில் நானும் ஒரு அங்கம். *** முன்பு ஒரு திரியில் ஓட்டப் பயிற்சி செய்வதாக எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் - 2 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். ஓடி முடிந்ததும் மிகக் களைப்பாக இருக்கும். அதன்பின்னர் இன்னும் தூரம் ஓட வேண்டும் என்பதற்காக 3 கிலோமீற்றராக மாற்றிக் கொண்டேன். அது காலப்போக்கில் கடினமான பிரயத்தனத்துடன் 35-40 நிமிடங்களில் 5 கிலோமீற்றர்களாக ஆக மாறியது. அதுவே எனது அதி உச்ச எல்லை என்று நினைத்திருந்தேன். சில காலங்களின் பின்னர் படிப்படியாக நின்று ஓய்வெடுத்து ஒரு மணி நேரம் 7 கிமீ வரை ஓட முடிந்தது. இப்படியே சுமார் ஒரு வருடம் சென்றது. நான் இருக்கும் ஊரில் ஒரு உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஓட்டப் பயிற்சி செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று உற்சாகப் படுத்தினார்கள். அது நகரசபையால் நடத்தப்படுவதால் வருடத்துக்கு 75 யூரோ, முயற்சித்தும் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். வாரத்தில் 3 நாள் பயிற்சி. மாலை 6.30 க்கு ஆரம்பிக்கும். வேலை காரணமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே பங்குபற்ற முடியும். 6 மாதப் பயிற்சியின் பின் 10 கிமீ ஓட்டப் போட்டி ஒன்றில் பங்குபெற முடிந்தது மட்டுமல்லாது சில மாதங்களுக்குப் பின்னர் அரை மரதன் ஓடும் அளவுக்கு வந்துவிட்டேன். முதலாவது 10 கிமீ போட்டி சரி, 50 வயதாகிறது ஒரு தடவை மரதன் ஓடினால் என்ன என்று தோன்றியது. மரதன் ஓடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஓடியோ நடந்தோ தவழ்ந்தோ முடிவு எல்லை ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த எல்லையைத் தாண்டுவதென்பது விவரிக்க முடியாத இனிய அனுபவம் என்று ஓடி முடித்தவர்கள் கூறிக் கேட்டுள்ளேன். சிலர் எல்லையில் காத்திருக்கும் தமது பிள்ளைகள், மனைவி அல்லது உறவினர்களைக் கட்டி அணைத்துக் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் காணொலிகளில் கண்டிருக்கிறேன். ஆகவே கால்கள் சரியாக இயங்கும்போதே வாழ்க்கையில் ஒரு தடவை ஓடிப் பார்க்க முடிவு செய்தேன். எனக்குப் பயிற்சி தருபவராகிய ஸாஹிர் என்பவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியாக உற்சாகப்படுத்தினான். ஆனால் கடுமையான பயிற்சியைப் பின்பற்றினால் நான் நிர்ணயித்த இலக்கை விட நன்றாக ஓடலாம் என்றான். அதன்படி பரிசில் ஏப்ரல் 2020 இல் நடக்கவிருந்த சர்வதேச மரதன் போட்டியில் பதிவு செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இது மரதன் வரலாற்றில் உலகில் அதிகம் பேர் பங்குகொள்ளும் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்பட்டது. போட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடுமையான பயிற்சி ஆரம்பமாகியது. மழை குளிர் காற்று என்று எதையும் பார்க்க முடியாது. ஓட வெளிக்கிட்டால் ஓட வேண்டியதுதான். கிளப் உறுப்பினர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலாவது குழு முயல் வேகத்தில் ஓடக் கூடியது. நான் 3 ஆவது ஆமை வேகக் குழு. நான் ஒரு தடவை முதல் முழுவோடு சேர்ந்து ஓடி ஆவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால் அவர்களோடு சேர்வதில்லை. மழையிலும் பனி உறைந்த குளிரிலும் கொட்டும் வியர்வையுடன் அன்றொருநாள் மார்கழி மாதம் குளிர் மழை தூறிக்கொண்டிருந்தது, சிலர் பயிற்சிக்கு வரவில்லை. வேகமாக ஓடுபவர்களே அதிகமாக இருந்தனர். பழைய உறுப்பினர் ஒருவவன் அன்று வந்திருந்தான். அவன் பெயர் பிரெடெரிக், கரிபியன் தீவைச் சேர்ந்தவன். தனது ஊரில் சில காலம் தங்கிவிட்டு பிரான்சுக்குத் திரும்பியிருந்தான். அன்றைய இருளில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அதிகம் நின்று பேசிக் கொண்டிருந்தால் குளிரில் நடுங்கத் தொடங்கும் ஆகவே மெதுவாக ஓட்டத்தை ஆரம்பிப்போம் என ஸாஹிர் கூறிவிட்டு பிரெடெரிக்கை அறிமுகப்படுத்தி நீங்கள் இருவரும் மட்டுமே இரண்டாவது முழுவில் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று கூறி நாங்கள் ஓட வேண்டிய பாதையையும் வேக மாற்றங்களையும் அவசரமாக் விளக்கிவிட்டு முதல் குழுவுடம் பறந்துவிட்டான். நானும் பிரெடெரிக்கும் தனியே நின்றிருந்தோம். ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். வீதியின் மின் வெளிச்சத்தில் சில நிமிடங்கள் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தோம். பிரெடெரிக் மெதுவாக ஓடுவதற்கே சற்றுச் சிரமப் படுவதாகத் தோன்றியது. 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகத்தைச் சற்றே அதிகரிக்க வேண்டும் ஆனால் வேகம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. 30 நிமிடத்தின் பின் வேகம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். ஆனால் அவன் கொஞ்சம் மூச்சு வாங்குவது தெரிந்தது. பேசாமல் முதல் குழுவோடு ஓடியிருக்கலாம் என்று தோன்றியது. பேச்சு வாக்கில் உனக்கு எத்தனை வயது என்று கேட்டேன். 71 என்றான். ஒரு கணம் எனது நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து அதிர்ச்சியிலிருந்து மீழ சில வினாடிகள் ஆனது. வாயிலிருந்து அப்படியா, நன்றாக ஓருகிறாய் என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஓடுவதற்கு வயது எல்லை கிடையாது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். இன்றுவரை பிரெடெரிக் எனக்கு மரியாதைக்குரிய நண்பனாகவும் அறிவுரை கூறும் ஆசானாகவும் இருக்கிறான். படத்தில் இடது பக்கத்தில் பிரெடெரிக் பயிற்சி தொடர ஆர்வம் அதிகரிக்க இலக்குகளும் மாறிக்கொண்டிருந்தன. மரதன் ஆரம்பமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. *** ஓட்டப் பயிற்சியோ போட்டியோ ஏனைய விளையாட்டுகள் போல் போட்டி மனப்பான்மையுடன் அமைவதல்ல. ஒவ்வொருவரும் தமது தகமைக்கேற்ப தாங்களே ஒரு வரயறையை அல்லது தமது சொந்த இலக்கை வைத்து ஓடுவதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னொருவர்போல் ஓடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படாது. மரதன் போட்டியிலும் 50 ஆயிரம் பேர் ஓடினால் அதில் முதல் 100 பேருக்குள்தால் சரியான போட்டி இருக்கும். ஏனையவர்கள் தமது சொந்த இலக்கை வைத்தே ஓடுவார்கள். ஆகவே 5கிலோமீற்றர் ஓடும் ஒருவர் ஒருவர் தன்னால் 10 கிலோமீற்றர் ஓட முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை. உடல் அமைப்பும் இவ்வாறுதான். எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது. என்னை விட உயரம் மிகக் குறைந்த ஒருவர் என்னைவிட மிக வேகமாக ஓடுகிறார். அதேபோல் என்னைவிட எடை கூடிய ஒருவர் என்னைவிட வேகமாக ஓடுகிறார். அதற்காக நான் இந்த இருவரையும் விட வேகமாக ஓட முடியவில்லையே என்று ஏங்க முடியாது. ஓடுவதால் உள்ள நன்மைகளில் முக்கியமானவை சில வேக ஓட்டத்தின்போது இதயம் அதிகமான இரத்தத்தினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இதயத் தசைகள் வலுவடைந்து இதயம் விரிவடைந்து ஒரே இதயத்துடிப்பில் அதிகமான இரத்தைதை உடலுக்கு வழங்கம் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இதயத்துக்கும் வேலைப்பழு குறைந்து நீண்ட காலம் இயங்கும் ஓடும்போது கால்கள் தரையில் படும்போது ஏற்படும் மைக்க்ரோ அதிர்வுகளால் தசைகளும் எலும்பும் சிறிய சிதைவுகளுக்குள்ளாகொன்றன. பின்னை ஓய்வின்போது சிதைவுகள் மறுசீரமைக்கப்பட்டு தசைகளும் எலும்புகளிம் புத்துயிர் பெறுகின்றன இரத்தத்தில் மேலதிக சீனியும் கொலஸ்ரரோலும் சக்தியாக எரிக்கப்படும் போட்டி மனப்பான்மையற்ற பயிற்சியாதலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடும்போது ஏற்படும் களைப்பு சோர்வு ஏக்கம் தளர்வு அவஸ்தை எல்லாவற்றையும் ஓட்ட முடிவில் மறந்து வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை உணர முடியும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல உடலை அசைத்து அதிக நேரம் வேலை செய்கிறேன், ஆகவே உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைப்பது தவறு. இரண்டும் ஒன்றல்ல. 1 மணி நேர உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் உடலை வருத்திச் செய்யும் வேலையால் கிடைக்காது. *** ஆரம்ப ஓட்டப் பயிற்சி இது ஓட விருப்பம் இருந்தாலும் தயங்குபவர்களுக்கும் நாளைக்கு ஓடலாம் என்று இன்றுவர ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கும். முக்கிய குறிப்பு : உடல், இதயம் பலவீனமானவர்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னர் இதனைப் பின்பற்ற வேண்டும். சரியான சப்பாத்து உடை மற்றும் இதர உபகரணங்கள் இருந்தால்தான் ஓடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். முதலில் இருப்பவற்றை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். எப்போது உங்கள் வயது, உயரம், நிறை, உருவம் எல்லாவற்றையும் விட்டு ஓட முன்வருகிறீர்களோ அதுவே உங்களது முதல் வெற்றி. உங்கள் உடையையோ உடலையோ ஓட்டத்தையோ பார்த்து யாராவது சிரிப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம். எல்லா அனுகூலங்களும் இருந்தும் ஓட்டத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் புறக்கணித்து ஓடாதிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நீங்கள் ஓட முன்வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எடுத்த உடனேயே ஓட முயற்சிக்க வேண்டாம். தசைகளையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். படிப்படியாகப் பயிற்சியை ஆரம்பிப்போம். நாள் 1 15 நிமிட வேக நடை அதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு மெதுவாக ஓட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓடுங்கள். அது வேகமாக நடப்பதை விட வேகம் குறைந்ததாகக் கூட இருக்கலாம். இந்த 10 நிமிடங்களை எட்ட முடியாமல் போனல் நீங்கள் மெதுவாக ஓடவில்லை என்று அர்த்தம். 10 நிமிடம் சாதாரண நடை நன்றாகச் சாப்பிட்டு நிறைய நீர் அருந்தி நன்றாகத் தூங்குங்கள். நாள் 2 பயிற்சி இல்லை நாள்3 1 மணி நேர வேக நடை நாள் 4 பயிற்சி இல்லை நாள் 5 15 நிமிட வேக நடை 30 நிமிட ஓட்டமும் நடையும். 1நிமிட மெதுவான ஓட்டம், 30 விநாடிகள் நடை என்பதைச் சுழற்சியாகச் செய்யுங்கள் 15 நிமிட நடை நாள் 6 பயிற்சி இல்லை நாள் 7 10 நிமிட வேக நடை விரும்பிய அளவு நேரம் மெதுவான ஓட்டம். கடைசி 1 நிமிடத்தை உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுங்கள். 10 நிமிட நடை மெதுவாக ஓடும்படி வற்புறுத்தக் காரணம் அதிகமாகக் களைத்து அரைவாசியில் பயிற்சியை முடிக்கக் கூடாது என்பதற்காக. அத்துடன் மெதுவான ஓட்டம் என்பது ஓட்டப் பயிற்சியில் முக்கியமான அங்கம். மெதுவாக ஆரம்பிப்பது படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கு. சடுதியாக ஆரம்பித்தால் 10 நிமிடத்தில் களைப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடர முடியாமல் போய்விடும். தொடரும் நாட்களில் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். *** வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி இதும் ஏற்கனவே ஓரளவு ஓட முடியுமானவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் ஓடுபவர்களும் தாராளமாகச் செய்யலாம். பயிற்சியின் அங்கங்கள். A. Warm up : மிக மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரித்து அதிக வேகம் எடுக்காமல் அதிக களைப்பு இல்லாமல் ஓடுவது. இது இதயத்தை சாதாரண நிலையில் இருந்து வேகத் துடிப்பிற்குத் தயார் படுத்துவது மட்டுமே. உங்கள் அதிகபட்ச வலுவில் 50-60% போதுமானது. B. மெதுவான ஓட்டம் : ஓட்டப் பயிற்சியில் இதுவும் மிக முக்கியமானது. இதயத் துடிப்பைக் குறைத்து தொடர்ச்சியாக சக்தியை உடலுக்கு வழங்குவது. மெதுவான ஓட்டத்தின் இறுதியில் களைப்பு உண்டாகக் கூடாது. C. தயார்படுத்தல் 1 - கால்களைப் பின்னால் மடித்து ஓடுதல். முன்னர் குறிப்பிட்டது போல இந்தத் தடவை கால்களை எந்த அளவு பின்னால் மடிக்க முடியுமோ அவ்வளவு மடித்து வேகமாகக் கால்கள அசைக்க வேண்டும். ஒவ்வொர அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். D. தயார்படுத்தல் 2 - முழங்கால்களை உயர்த்தி ஓடுதல். முழங்கால்களைச் சமாந்தரமாக மேலே தூக்கி வேகமாக ஓடுதல். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். ஏறத்தாள நின்ற இடத்திலேயே ஓடுவது போன்றது. E. தயார்படுத்தல் 3 - கால்களை மடிக்காமல் ஓடுதல். முழங்கால்களை மடிக்காமல் கால்களை முன்னே மட்டும் உயர்த்தி வேகமாக ஓட வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். கிட்டத்தட்ட நின்ற இடத்திலேயே ஓடுவது போன்று இருக்கும். இந்த 3 பயிற்சிகளும் (C, D, E) இந்த வீடியோவில் 1:22 முதல் 2:18 வரை உள்ளது. F. Jamping jack - இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். G. ஓய்வு : கை கால்களைத் தளர விட்டு ஆழமாகச் சுவாசித்தல். நீர் அருந்தலாம். H. Stretching - அவசியமில்லை. செய்வதாக இருந்தால் 2 மணி நேரத்துக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் செய்யலாம். இனி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாக ஓடுவதால் நேரடியாகவே இரண்டாவது நிலை பயிற்சிக்கே போகலாம். 1 வாரத்தில் 4 நாட்கள் செய்ய வேண்டியவை. பயிற்சி 1 15 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் C 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் D 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் E 30 வினாடிகள் ஓய்வு. நீர் அருந்தலாம். மேலே குறிப்பிட்ட 15 வினாடிப் பயிற்சிகளை மீண்டும் 2 தடவை செய்யுங்கள் மிகவும் களைப்பாக இருக்கும். 15 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் கால்களில் வலி இருக்கும். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 2 10 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 30 நிமிட ஓட்டம். முதல் 10 நிமிடங்கள் உங்கள் உச்ச வலுவில் 60 வீதமாக இருக்க வேண்டும். அடுத்த 7 நிமிடங்கள் 70 வீதமாக அதிகரியுங்கள். அதற்கடுத்த 7 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓட வேண்டும் ஆனால் களைத்து ஓட்டத்தைக் கைவிடும்படியாக ஓடக் கூடாது. மீதி நேரத்தை மெதுவாக ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 3 interval running 20 நிமிட Warm up (A) 30 வினாடிகள் ஓய்வு. 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். வேகமான ஓட்டத்தின்போது 80-90 வீதமான உச்ச வலுவுடன் ஓடலாம். 10 தவடவை ஓடி முடிக்க முடியாது போனால் நீங்கள் 90 வீதத்துக்கு மேலான வலுவுடன் ஓடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடி இன்னொரு தடவை 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். 5 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. மிகவும் களைப்பாக இருக்கும், அடுத்த 1 அல்லது 2 நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 4 விரும்பியபடி ஓட்டம் உங்க விருப்பத்திற்கேற்ப நேர எல்லை வைத்தோ தூர எல்லை வைத்தோ விரும்பிய வேகத்தில் ஓடலாம். இந்த 4 பயிற்சிகளையும் சுழற்சியாகச் செய்யுங்கள். *** ஐம்பதுக்கு வருவோம். பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். ஊரில் இருந்திருந்தால் பிள்ளைகளின் படிப்பு முடிந்தால் அவர்களுக்கான வேலை, திருமணம், செலவு பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும். இங்கு அதொன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக சாதாரனமாக வாழ்வதற்கான தன்நிறைவை அடைந்துவிட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் எல்லை தொலைவில் தெரிகிறது. எனக்கான எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட்டேன். என்மேலுள்ல அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் உணர்வு. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மனதில் இளமையுடனும் வாழ்க்கையைத் தொடர இதுவே பொற்காலம். நீங்களும் வாருங்கள் ஓடி வாழ்ந்திடலாம்.
  3. விசுகர் அவர்களே! இதையும் பார்த்தால் விருப்பம் இன்னும் அளவுகடந்து வருமே.. 🏃‍♀️🏃‍♂️
  4. இலங்கை செய்யும் அரசியலில் எந்தவிதமான தூர நோக்குகள் எதுவுமில்லை....! ஒரு அழகிய இயற்கை வளம் கொழிக்கும் ஒரு தேசம், வெறும் மதம், மொழி என்ற ஒரு கோட்பாட்டுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, மனித வளத்தையும்.....இயற்கை வளத்தையும் வீணே அழித்துக் கொண்டிருக்கின்றது! ஒரு காலத்தில்...சிங்கப்பூர் இலங்கையை அண்ணார்ந்து பார்த்த காலமொன்றிருந்தது! இன்று மிகவும் வேகமாக இந்தியா போன்ற ஒரு நிலைக்கு இலங்கை என்னும் தேசம் சென்று கொண்டிருக்கின்றது! இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று எல்லாமே நன்றாகத் தானிருந்தது! பௌத்தம் இலங்கையைத் தின்று விட்டது! பௌத்தமதத்தை உலகுக்கு அளித்தவன்...காசியில்..இரந்து சாப்பிட்ட விஷ உணவால் இறந்து போனான்! எனினும் இலங்கையில் பௌத்த மதத்தை வளர்ப்பதாகக் கூறுபவர்களைப் பார்த்தால்...பிச்சை எடுப்பவர்களாகத் தெரியவில்லை! கொழுப்பேறிய உடம்புகளுடன் தான் திரிகின்றார்கள்! பௌத்தம் வளருதோ இல்லையோ, நிச்சயமாக அவர்களும்...அவர்களுக்குத் தினவேத்தும் அரசியல் வாதிகளும் மட்டும் வளர்ந்து வருகின்றார்கள்..!கொழுத்துப் போன உடல்களில் உண்மையான பௌத்தம் ஒரு நாளும் வளரப் போவதில்லை! நல்ல சிந்தனைகளும் வளரப் போவதில்லை! இது தான் வரலாறு கற்பிக்கும் பாடம்! ஒரு விபச்சாரியின் நிலையில்.. சிங்கள தேசம் இப்போது இருக்கின்றது! எவர் அதிக விலை கொடுக்கின்றார்களோ...அவர்கள் சிங்களத்தை வாங்க முடியும்! ஒய்யாரக் கொண்டையாம்... தாழம் பூவாம்...உள்ளே இருப்பது, ஈரும் பேனும்...! இது தான் இலங்கையின் உண்மையான நிலை..!
  5. பசுவூர்க்கோபியின் படம்சொல்லும் வரிகள்-03 ********************************** கூட்டுக்குடும்ப வாழ்வை விட்டு குடத்து நீரை இடுப்பில் அணைத்து பிரிவின் துயரை மனதில் சுமந்து ஒற்றையடி பாதையிலே ஓரமாய் வந்தேன் அப்போது.. கும்பலாய் கிடந்த நெருஞ்சி முற்கள் குத்திச் சொன்னது. இயற்கையின் விதியை தனியே வாழ ஆசைப்படுகிறோம் தாயே எடுத்து தூர எறியுங்கள். உதிரம் வடிந்த காலின் வலியால் ஒளிமயமானது எங்களின் வாழ்வும். -பசுவூர்க்கோபி- 08.04.2021
  6. இணையவன் சாப்பிடுவது: கிவி பழம், இலை குலை, முளைக்க வைத்த பயறு. முட்டை, அவித்த உணவுகள், (பொரித்த உணவு கண்ணில் காட்ட கூடாது), பிகு - பிம்மச்சாரியம் முக்கியம் & கோபப்படுதலை தவிர்த்தல்
  7. புத்தனின் அலசல் உண்மையிலேயே ஒரு பாமர மனிதனுக்கும் விளங்கும் நடையில் இருப்பதே இங்கு சிறப்பானது இறுதியில் சீவினாவிடம் எல்லாவற்றையும் இழக்கும் இலங்கையை காப்பாற்றப்போவது........ நாம் தமிழர் தான்
  8. வாணி , அவனது சக வணிகப்பிரிவு வகுப்பு மாணவி , வாணி என்பதற்கு பதில் வாயாடி என்று பெயர் வைத்திருக்கலாம், தப்பித்தவறி வாயை கொடுத்தால் கூட திருப்பி வாங்கமுடியாது,தொட்டால் சிவந்து விடும் தோல் கொஞ்சம் குட்டையான பருமனான உடல் கிட்டத்தட்ட நித்தியா மேனன் போல இருப்பாள், அவனது வகுப்பு கனவுக்கன்னிகளில் ஒருத்தி, சுலக்சன் ஒரு பிஞ்சில் பழுத்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே வாணியில் கண்ணை போட்டுவிட்டான், தடித்தாண்டவராயன் என்றாலும் மண்டைக்காய் அது ஒன்று போதுமே பெண்களை இழுத்தெடுக்க, சகட்டு மேனிக்கு பெண்களிடம் வழியும் பழக்கமும் உண்டு, உயர்தரத்திற்கு வந்ததும் சாடை மாடையாக வாணியின் காதில் போட்டுவிட்டான், அவள் அதைக்கேட்டும் கேட்காதவள் போல் எந்த சலனமும் இல்லாமல் இருந்துவிட, பயப்பிள்ளை வாட்டியெடுப்பது அவனது நண்பர் குழாமைத்தான் ஒவ்வொருத்தராக தூது போயும் வேலைக்காகவில்லை,நண்பர் குழாமை விட அதிகமாக மாட்டுவது மைதிலி, அவனது வகுப்பு சகமாணவி, வாணியின் உற்ற நண்பி எப்போதும் சுலக்சனிடம் அவளுக்கு ராஜமரியாதை, பாடசாலை இடைவேளைகளில் விசேட தீன்பண்ட உபசரிப்பும் நடக்கும், ஒரே வகுப்பு என்பதால் முழு நண்பர் குழாமின் வீடுகளுக்கும் மைதிலி நன்கு பரீட்சயம், இப்படி வாணியின் நண்பியை கைக்குள் போட்டும் சொல்லிக்கொள்ளக்கூடியவாறு எதுவுமே நடக்கவில்லை, நிலைமை இப்படியிருக்க இன்று சுலக்சன் புது கதை ஒன்றை சொல்கிறான். அவனுக்கோ இருப்பு கொள்ளவில்லை, சரியாக இரவு ஏழுமணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டு பாடசாலையை நெருங்க அங்கே என்றுமில்லாதவாறு சுலக்சன் இவனுக்கு முதலிலேயே வந்து பாடசாலை நுழைவாயிலில் இருந்த படி ஒன்றில் உட்கார்ந்து கொண்டு அவனுக்காக காத்துக்கொண்டிருந்தான். "என்னடா நேரத்தோடை வந்திட்டபோல " "ம்ம் ...உனக்காகத்தான் வெயிட்டிங், வா மண்டபத்திற்குள் போவோம், நிறைய கதைக்கவேண்டியிருக்கு " "வாணியை மடக்கிட்ட இனியென்ன" "உன்னோட ஐடியா வேணும் மச்சி " "சரி நடந்ததை சொல்லு அப்புறம் ஐடியா தறாதா இல்ல உன்னை போட்டு மிதிக்கிறதா என்று நான் சொல்றன்" என்று அவன் சொல்லவும், அவனை ஒரு முறை முறைத்துவிட்டு நொண்டிக்கொண்டே முன்னோக்கி நடக்கத்தொடங்கினான், உள்ளே வந்ததும் இருவரும் தங்களது படுக்கை விரிப்புகளை விரித்து விட்டு அதில் தங்களை கிடத்திக்கொள்ள முதலில் சுலக்சன் ஆரம்பித்தான். "மச்சான் வாணி வீட்டடியால தானே பள்ளிக்கு வாறவள், உனக்கும் தெரியும்தானே டெயிலி அவளை முன்னால விட்டு தானே நான் பின்னால வரானான், நேற்று வாணி வார டைமில நானும் வந்து கேட் பக்கம் நின்டானான் ,எப்போதும் ஒரு அசிப்பும் காட்டாமல் போறவள் நேற்று ஒரு இரக்கத்தோட ஒரு பார்வை பார்த்துவிட்டு காலில் என்ன என்று சைகையில் கேட்டாள்ரா" "பார்ரா ...பிறகு " " நானும் போத்தல் ஓடு கிழிச்சிப்போட்டு என்று மெதுவாக சொல்ல, எதோ சொல்ல வந்தவள் அம்மாவை காணவும் அப்படியே போய்ட்டாள் , பின்னேரம் அம்மா டேய் சுலக்சன் உன்னை தேடி மைதிலி வந்திருக்கிறாள் நோட்ஸ் கொப்பியை தர வேணுமாம் என்று எழுப்பவும் போய் ஒரு லூசுவேலை பார்த்துவிட்டேன், பெரிய சத்தமாக எந்த நோட்ஸ் கொப்பிடீ...? என்று கேட்க அவளோ மெதுவாக என்று சைகை காட்டிவிட்டு, அவள் கையிலிருந்த கொப்பியை தருவது போல் அருகில் கூப்பிட்டு வாணி உன்னை விசாரித்தவள், ஆளுக்கு உன்னோட செம லவ் டா, அமசடக்கு வெளியில காட்டவில்லை, உனக்கு காலில வெட்டு என்று என்னை இருக்க விடுறாளில்லை,போய் விசாரித்து விட்டு வரட்டுமாம், அதுதான் வந்தனான் அவளுக்கு என்ன சொல்ல என்று கேட்டாள் " "டேய் ..நீ கேடி டா சரி என்ன சொல்லி அனுப்பின நீ " " அவளை கேட்ட என்றும் , நானும் அவள் ஞாபாகமாக தான் இருக்கிறன், கால் சுகமாகினதும் எங்க மீட் பண்ணலாம் என்று கேட்க சொல்லி அனுப்பினனான் " "சரி...இதில நான் என்ன ஐடியா தாரது " இது அவன் "முதல் முதலாக சந்திக்கும்போது கிப்ட் ஒன்று வாங்கி கொடுக்கணும் மச்சான் அதுதான் என்ன வாங்கி கொடுக்கலாம் என்று உன்னிடம் கேட்போம் என்று தோணிச்சு " "நானே இந்த விவகாரத்தில் தத்தி நீ என்னிடம் கேட்கிற..!, சரி எதுக்கும் அக்காவிடம் கேட்டு சொல்றன், அவவுக்கு தான் உந்த வயசு பிள்ளைகள் என்ன விரும்பும் என்று தெரிந்திருக்கும் " "டேய் நாசமாபோவானே வீட்டில என்னை மாட்டிகொடுத்திடாதடா" என்று சுலக்சன் கூவவும் அவனோ "நான் இன்னொரு ஆளுக்கு என்று சொல்லித்தான் கேட்பன், உன்ன மாட்டிக்கொடுக்கிறதென்றால் உண்டை வீட்டிலேயே மாட்டிக்கொடுக்க வேணும் லவ் பன்றாராம் ...லவ் " "உனக்கு பொறாமை " என்று விட்டு சுலக்சன் புத்தகத்தை கையிலெடுத்தான். இவனிருக்கும் குஷியில் இண்டைக்கு நன்றாகதான் படிப்பு இவனுடைய மண்டையில் ஏறப்போகிறது என்று நினைத்துக்கொண்டு அவனும் கையில் ஒருபுத்தகத்தை தூக்கினான், ஒரு அரைமணி நேரம் கடந்திருக்கும் முன்னாலிருந்த சுலக்சன் புத்தகத்தை விட்டு மண்டபத்தையே சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தான் என்னத்தடா அப்படி பார்க்கிற என்று அவன் கேட்கவும், மச்சி படிக்கிற மூடில்லையடா என்று விட்டு சுலக்சன் மண்டபத்தின் மூலையிலிருக்கும் களஞ்சிய அறையை நோக்கி நடக்க (நிற்க!) நொண்ட ஆரம்பித்தான், அந்த அறையை பாடசாலையின் வரலாறு என்று சொல்லலாம், கறையான் அரித்து இற்றுப்போன கதவிற்கு பின்னே வருடக்கணக்கான வரலாறு உறங்கிக்கொண்டிருக்கிறது, உண்மையில் அங்கே என்னென்ன தஸ்தாவேஜுகள், ஆவணங்கள்,புத்தகங்கள் ,பழைய பொருட்கள் இருக்கின்றன என்று அதிபருக்கே தெரியாது, தட்டு முட்டு பொருட்கள் என்று குவித்து குவித்து என்ன எங்கே இருக்கிறது, எப்படி உள்நுழைந்து உடலில் காயம் படாது திரும்புவது என்று யாருக்குமே தெரியாது, அதிபர் யாரையும் அந்த களஞ்சிய அறைக்குள் அனுமதிப்பதில்லை ஒருவரை தவிர, அந்த ஒருவர் யாருமல்ல சாட்சாத் சுலக்சனே தான், அவன் கூட அதிபரின் மேற்பார்வையுடன் மட்டுமே உள்ளே செல்ல முடியும், சுலக்சனின் வீடு பாடசாலைக்கு மிக அருகாமையில் நடை தூரத்தில் இருப்பதால், எல்லா அதிபர்களுடைய எடுபிடிக்கான முதல் தேர்வு அவனாகவே இருப்பது வழக்கம், இந்த நேரத்தில் எதற்கு அந்த அறையை நோக்கி செல்கிறான் இவன்...? "டேய் எதற்கு அந்த பக்கம் போறாய் ...?" என்று பதறினான் அவன், சுலக்சனோ சாவகாசமாக திரும்பி "மச்சான் அறைக்கு உள்ள ஒரு அயிட்டம் இருக்கு பொறு எடுத்துக்கொண்டு வாறன்", என்று சொல்லிவிட்டு கதவில் மாட்டியிருந்த பூட்டை இடது பக்கமும் வலது பக்கமும் இருமுறை அசைக்கவும் பூட்டு தன்னை விடுவித்துக்கொண்டு அவனது கையுடன் வந்துவிட்டது, அவனை நோக்கி திரும்பிய சுலக்சன் சிரித்துக்கொண்டே "இந்த பூட்டு சாட்டிற்குத்தான் எனக்கும் அதிபருக்கும் தான் இந்த விடயம் தெரியும்" என்று ஒற்றை கண்ணை அடித்துவிட்டு கதவை தள்ளித்திறந்தான், அப்படியெதனை சுலக்சன் அந்த அறையிலிருந்து லவட்டி கொண்டுவரப்போகிறான் என்று அறியும் ஆர்வம் அவனுக்கும் தொற்றிக்கொண்டது 1962, இலங்கை கிழக்கு மாகாணம் கார்த்திகை 8 மெல்லத்தெரிந்த கதவிடைவெளியூடு பார்வையை படர விட்ட உதவியாளர், விறைத்துப்போனார் வாயில் எச்சில் உலரத்தொடங்கியது, சரியாக அந்த அறையின் நடுவில் இருந்த விட்டத்தில் இறுகக்கட்டப்பட்டிருந்த கயிற்றில் பீலீக்சின் உயிரற்ற உடல் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது, கயிறு கழுத்தை மேல்நோக்கி இழுத்ததிலும் உடலெடை கீழ்நோக்கி இழுத்தத்திலும் பீலீக்சின் கழுத்துப்பிரதேசம் ஏகத்திற்கு நீண்டிக்க, வாயின் ஓரத்தில் துருத்திக்கொண்டிருந்த வெளிறிப்போயிருந்த நாக்கு, நாளங்களில் இரத்தஓட்டம் எப்போதோ நிறுத்தப்பட்டுவிட்டதை அறிவித்துக்கொண்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே சிலநிமிடங்கள் சுயநினைவற்று நின்ற உதவியாளர் நினைவிற்கு வந்தவராக அறையின் சுற்று முற்றும் நோட்டம் விட்டார், அறையின் ஓரத்திலிருந்த மேசை மேல் அவர் தேடிய பொருள் இருந்தது, அது பீலீக்சின் நாட்குறிப்பு, உடனடியாக அதனை நோக்கி பாய்ந்த அவர் வில்லி மரணமான அந்த நாளிலிருந்து இன்றைய தினம்வரை எழுதப்பட்டிருந்த அனைத்து பிரதிகளையும் கிழித்து தனது சட்டைக்குள் ஒழித்துக்கொண்டார், வடிந்த வியர்வையை துடைத்து தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டு அடித்தொண்டையிலிருந்து அவர் எழுப்பிய ஓலத்தில் ஒரு கணம் அந்த முழு இல்லமும் அதிர்ந்தது சற்று நேரத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள முழு இல்லமும் , ஆறு மாத இடைவெளியில் இரு ரெக்டர்களை பறிகொடுத்த சோகத்தில் பாடசாலையும் சோகமயமாகிவிட்டது, நடந்த துர் சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கே வந்த மக்களில் பலர் இந்த இல்லம் சபிக்கப்பட்ட இல்லமாக போய்விட்டது என்று பேசுவதையும் , பலர் இந்த இல்லத்தை இடித்துவிட்டு புதிய இல்லம் கட்டுவது சபைக்கு நல்லது என்று அவர்கள் கருத்தையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டிருந்தனர் சற்று நேரத்தில் பீலீக்சின் உடல் சகல சம்பிரதாயங்களையும் முடித்து மக்கள் அஞ்சலிக்காக கிடத்தப்பட பீலீக்சின் உதவியாளரோ எதுவுமே நடக்காதது போல் பீலீக்சின் பூதவுடலுக்கு அருகில் உட்கார்ந்து விசும்ப ஆரம்பித்தார், அன்றிலிருந்து இரண்டு நாட்களில் பீலிக்சின் உடல் நல்லடக்கம் செய்யப்பட, கொஞ்சம் கொஞ்சமாக வில்லி மற்றும் பீலீக்சின் ஞாபகங்கள் காலவோட்டத்தில் கரைந்து அப்படியே எல்லோரதும் நினைவிலிருந்து மறைந்து விட்டன (தொடரும்)
  9. "கர்ணன்" பைத்தியம் முத்திடுச்சு என்டா செவ்வாய் கிரகத்திலே "கற்அவுற்" வைப்பினம்..☺️..😊
  10. உண்மையை மறைக்காத சீவன்😀
  11. சிங்கலெ என்று பெயர் மாறுகின்றதோ இல்லையோ, சிங்களவர்கள் முழுத்தீவையும் சிங்கள மயமாக்கும் திட்டத்தை வேகமாக முன்நகர்த்துவார்கள். சிங்கள மக்கள் காலைச்சாப்பாடாக பாணையும், சம்பலையும் உண்ண வழியில்லாத போதும், அவர்களை எஞ்சி இருக்கும் தமிழர்களையும், முஸ்லிம்களையும் காட்டி பயம்காட்டி தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்வார்கள் ராஜபக்‌ஷக்கள். சிங்களவர்களின் பொருளாதாரம் மிகவும் மோசமாக மாற சீனாவும், மேற்கும், மேற்கின் கூட்டான இந்தியாவும் விடாது. மாறி மாறி உதவி வழங்கி தங்கள் பக்கம் இழுக்கப் பார்ப்பார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் தமது நிலப்பரப்பு சுருங்கினாலும் பார்வையாளர்களாக இருப்பார்கள்..
  12. நன்றி புத்தன் அரசியல் ஆய்விற்கு.👌 அவர்களின் அரசியல் நகர்வு மலையாளிகளுடன் ஒத்து போகின்றது
  13. சிங்களத்தின் நாட்டு பற்றிற்கும் தமிழரின் நாட்டு பற்றிற்கும் அல்லது அவர்கள் கனவு காணும் தேசத்துக்குமான கோடுகள் வேறு வேறானவை அவை எப்போதும் ஒட்டாதவை நன்றி புத்தர் கிறுக்கல்கள் தொடரட்டும்
  14. அலையாத்திக் காடுகள் ஒரு நாட்டின் எல்லைக்காவல் படை என்றால் மிகையாகாது.....அவற்றைக் காப்போம்.......! 👏
  15. எந்த பதப்படுத்தப்படாத (untreated) விலங்கின் கழிவும் மிகவும் ஆபத்தானது சுகாதாரத்திற்கும், மனித உடல் நலத்திற்கும். விலங்கின் கழிவுகள், குறிப்பாக மனித கழிவுகள், உரமாக்கும் முயற்சியை us இல் ஒருவர் ஆரம்பித்தார், US அதை ஆராய்ந்து, அதில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடுத்து விட்டது. மனித கழிவுகள், விலங்கின் கழிவுகளிலும், நோய்களை காவுவதில் முதன்மையானதும், கட்டுப்படுத்த மற்றும் எதிர்வு கூற முடியாததும். இங்கே மேற்றகில் விலங்கின் கழிவுகள் உரமாக்கபாடுவதில், ஒன்றை பொதுவாக எல்லோரும் கவனிக்க தவறி விடுகிறார்கள். அது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது (controlled), விலங்கு பிறப்பதில் இருந்து அது இறந்தொ அல்லது இறைச்சியாக பயன்பாட்டிலோ அதன் உடல் உரமாகும் வரையிலும். அதன் உணவு, மருந்து, வளரும் சூழல் இப்படியாக எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டதும், எதிர்வு கூறாக கூடியதும். இதுவே, மேற்கை பொறுத்தவரையில் உணவு உற்பத்தியிலும். மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. உதாரணமாக, EU இற்குள் பன்றி இறைச்சி (pork) EU இல் மட்டுமே உற்பத்தி/ ஏற்றுமதி/ இறக்குமதி செய்யப்படும், குறிப்பாக Northern Europe இல். ஏனெனில், EU இல் அதன் கட்டுப்படுத்தப்பட்ட தர ஒழுங்கு முறைகள், வட அமெரிக்காவில் கூட மிகவும் இறுக்கமானது. புதிதாக EU இநனைந்த நாடுகள், மிகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தபட்டு உள்ளது. இருந்தாலும், அங்கங்கே தரம் தாழ்வது இப்போதும் உள்ளது. உ.ம். போலந்து செய்த குதிரை இறைச்சி கலப்படம். பிரச்னை குதிரை இறைச்சி அல்ல. அவை இறைச்சிக்காக வளர்க்கப்படாத குதிரைகள். எந்த பதப்படுத்தப்படாத (untreated) விலங்கின் கழிவும் மிகவும் ஆபத்தானது சுகாதாரத்திற்கும், மனித உடல் நலத்திற்கும். விலங்கின் கழிவுகள், குறிப்பாக மனித கழிவுகள், உரமாக்கும் முயற்சியை us இல் ஒருவர் ஆரம்பித்தார், US அதை ஆராய்ந்து, அதில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடுத்து விட்டது. மனித கழிவுகள், விலங்கின் கழிவுகளிலும், நோய்களை காவுவதில் முதன்மையானதும், கட்டுப்படுத்த மற்றும் எதிர்வு கூற முடியாததும். இங்கே மேற்றகில் விலங்கின் கழிவுகள் உரமாக்கபாடுவதில், ஒன்றை பொதுவாக எல்லோரும் கவனிக்க தவறி விடுகிறார்கள். அது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது (controlled), விலங்கு பிறப்பதில் இருந்து அது இறந்தொ அல்லது இறைச்சியாக பயன்பாட்டிலோ அதன் உடல் உரமாகும் வரையிலும். அதன் உணவு, மருந்து, வளரும் சூழல் இப்படியாக எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டதும், எதிர்வு கூறாக கூடியதும். இதுவே, மேற்கை பொறுத்தவரையில் உணவு உற்பத்தியிலும். மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. உதாரணமாக, EU இற்குள் பன்றி இறைச்சி (pork) EU இல் மட்டுமே உற்பத்தி/ ஏற்றுமதி/ இறக்குமதி செய்யப்படும், குறிப்பாக Northern Europe இல். ஏனெனில், EU இல் அதன் கட்டுப்படுத்தப்பட்ட தர ஒழுங்கு முறைகள், வட அமெரிக்காவில் கூட மிகவும் இறுக்கமானது. புதிதாக EU இநனைந்த நாடுகள், மிகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தபட்டு உள்ளது. இருந்தாலும், அங்கங்கே தரம் தாழ்வது இப்போதும் உள்ளது. உ.ம். போலந்து செய்த குதிரை இறைச்சி கலப்படம். பிரச்னை குதிரை இறைச்சி அல்ல. அவை இறைச்சிக்காக வளர்க்கப்படாத குதிரைகள். எந்த பதப்படுத்தப்படாத (untreated) விலங்கின் கழிவும் மிகவும் ஆபத்தானது சுகாதாரத்திற்கும், மனித உடல் நலத்திற்கும். விலங்கின் கழிவுகள், குறிப்பாக மனித கழிவுகள், உரமாக்கும் முயற்சியை us இல் ஒருவர் ஆரம்பித்தார், US அதை ஆராய்ந்து, அதில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடுத்து விட்டது. மனித கழிவுகள், விலங்கின் கழிவுகளிலும், நோய்களை காவுவதில் முதன்மையானதும், கட்டுப்படுத்த மற்றும் எதிர்வு கூற முடியாததும். இங்கே மேற்றகில் விலங்கின் கழிவுகள் உரமாக்கபாடுவதில், ஒன்றை பொதுவாக எல்லோரும் கவனிக்க தவறி விடுகிறார்கள். அது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது (controlled), விலங்கு பிறப்பதில் இருந்து அது இறந்தொ அல்லது இறைச்சியாக பயன்பாட்டிலோ அதன் உடல் உரமாகும் வரையிலும். அதன் உணவு, மருந்து, வளரும் சூழல் இப்படியாக எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டதும், எதிர்வு கூறாக கூடியதும். இதுவே, மேற்கை பொறுத்தவரையில் உணவு உற்பத்தியிலும். மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. உதாரணமாக, EU இற்குள் பன்றி இறைச்சி (pork) EU இல் மட்டுமே உற்பத்தி/ ஏற்றுமதி/ இறக்குமதி செய்யப்படும், குறிப்பாக Northern Europe இல். ஏனெனில், EU இல் அதன் கட்டுப்படுத்தப்பட்ட தர ஒழுங்கு முறைகள், வட அமெரிக்காவில் கூட மிகவும் இறுக்கமானது. புதிதாக EU இநனைந்த நாடுகள், மிகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தபட்டு உள்ளது. இருந்தாலும், அங்கங்கே தரம் தாழ்வது இப்போதும் உள்ளது. உ.ம். போலந்து செய்த குதிரை இறைச்சி கலப்படம். பிரச்னை குதிரை இறைச்சி அல்ல. அவை இறைச்சிக்காக வளர்க்கப்படாத குதிரைகள்.
  16. விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு மனமே மனமே
  17. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்
  18. ஆசை பொங்கும் அழகு ரூபம் .....அணைந்திடாத அமரதீபம் யாரோ.....! 💕
  19. புத்தா சிங்கள ஆட்சியாளர்களை வர்ணித்தது நன்றாக இருக்கிறது. தமிழ்கட்சிகளையும் கொஞ்சம் வர்ணித்திருக்கலாமே? நல்ல காலம் புத்தன் என்ற பெயரில் எழுதினது.சொந்தப் பெயரில் எழுதியிருந்தால் சகல பத்திரிகைகாரர்களும் ஐயா ஒவ்வொரு கிழமையும் எங்கள் பத்திரிகைக்கு நீங்க தான் கட்டுரை எழுத வேண்டும் என்று வரிசையில் நின்று அடம்பிடித்திருப்பார்கள்.
  20. பெரும்பான்மையின மக்களை திருப்திப்படுத்துவதற்காக சிறுபான்மையின மக்களை அழித்துக் கொண்டே தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்..ஆதங்கத்தைத் தரும் விசயமுள்ள கிறுக்கல் புத்ஸ் ........! 😎
  21. வீரம் தாய்மையில் விளைஞ்சது ........! 🦃
  22. சாமானியனின் பதிவு கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் உண்மையாக உள்ளது! எனக்கும் இந்தப் பிரச்சனை உள்ளது...! ஆராவது இந்தியாக்காரர் அல்லது சீனாக்காரர் கார் ஓடும் போது குறுக்காக வெட்டி ஓடினால் ...அல்லது அதி வேகப் பாதையில் வேகம் குறைத்து ஓடினால் எனக்குள் அவர்களைத் திட்டிய படி ஓடுவதுண்டு! இதற்காகப் பல தடவைகள் ஏச்சு வாங்கினாலும்....இந்தப் பழக்கம் இன்னும் தொடர்கின்றது...! தொடருங்கள், சாமானியன்!
  23. சாமானியன், வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற மாதிரி... சுவராசியமான ஒரு பதிவு. தொடருங்கள்... வாசிக்க ஆவலாக உள்ளோம். 👍
  24. வேண்டாம் தாயே, நடையே போதும், கொரோணா அதிர்விலிருந்து இன்னும் லண்டன் மீளவில்லை
  25. இறுகி இருப்பது போன்ற உணர்வு என்றால் ஸ்ட்ரெட்சிங் காணாது என்று நினைக்கிறேன்
  26. வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள். சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள். இரவு ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு தண்ணீர் குடியங்கள். காலையில் என்ன நிறை என்று நாளும் நெறுத்து பாருங்கள். ஒரு மாதத்துக்கு பிறகு நிறை குறைவதையும், உயர்இரத்த அழுத்தம் குறைவதையும் நன்கு தூங்க முடிவதையும் அவதானிப்பீர்கள். இந்த முறைகளில் இருந்து ஒரு வாரம் தவறினாலும் எல்லா பயனும் இழந்து போய் மீண்டும் நிறை கூடி, நோய்களும் வர தொடங்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.