Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87997
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    11
    Points
    15791
    Posts
  3. நீர்வேலியான்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    538
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/28/22 in all areas

  1. நேற்று என் கனவில் கடல் வந்தது என் கடல் நீலமாய் இருக்கவில்லை அதன் அலைகள் கடும் சிவப்பிலும் ஆழத்தில் தொலைந்திருந்த எங்கோ புதைந்து கிடந்த என்றோ மறந்து விட்ட ரகசியங்களின் நிறமாகவும் இருந்தது. கரையே அற்ற பெருங்கடல் அது இரக்கமற்றவர்களின் பிரார்த்தனை போலவும் மரணங்களைக் கொண்டாடும் கடவுள்களின் துதிப்பாடலைப் போலவும் இரைச்சலாக இருந்தது. ஈரமற்ற நீர்ப்பரப்பாய் வானமற்ற நீர் வனமாய் உயிர்கள் அற்ற ஆழியாய் அது பரந்து சூழ்ந்தது அதன் அலைகளின் நுனிகளை பற்றி இருந்தேன் நுரைகளால் நிரம்பிக் கிடந்தேன் அதன் பெரும் இரைச்சலை எனக்குள் இறக்கிக் கொண்டேன் அலைக்கழிக்கும் ஒரு பெரும் துயரத்தின் ஆழத்துக்குள் அதன் சுழி என்னை இட்டுச் சென்றது மீள முடியாத பெரும் சுழி அது தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் சில கணங்களும் பின் விலகி எதிர் துருவங்களில் சில கணங்களுமாக நேர் கோட்டிலும் குறுக்குவாட்டிலும் பின் சிறுத்தும் பரந்தும் சுருங்கியும் விரிந்தும் என்னை இறுக்கி பிழிந்து உயிர் குடிக்கும் பெரும் சுழி அது மூச்சிழந்து கிடந்தேன் உடல் மரத்து வேர்வை ஆறாகி பெருக தப்ப வழியற்று தப்பும் ஆசையும் அற்று அதன் நெடிய கரங்களுக்குள் இன்னும் நெருக்கிக் கொண்டு அலைக்கழிந்தேன் ஈற்றில் முன்னை இட்ட தீ சுழிக்குள் தகித்து எரிய கடலில் சாம்பலாகி அலைகளில் துகள்களாகி கோடிக்கணக்கான அணுக்களாகி கரைந்தே போனேன். நேற்று என் கனவில் கடல் வந்தது இமைகள் திறந்த பொழுது அந்தக் கடல் வற்றிக் கொண்டது வற்றிப் போக முன் என் அறையெங்கும் சேற்று மணத்தை நிரப்பி விட்டுச் சென்றிருந்தது... March 27, 2022
  2. காலம்: டிசம்பர் 2026 இடம்: வெசாயில்ஸ், பிரான்சு அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது. மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா. ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான். எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்…ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான். என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு எடுத்து கொண்டு போட்டாங்கள். போன கிழமைஉப்பிடிதான் ஒரு தமிழ்பிள்ளை, பெற்றாருக்கு ஒரே மகள் - ரொமேனியா போடரில் நிக்கேக்க ரஸ்யண்டபொஸ்பரஸ் குண்டு பட்டு ஆள் அந்த இடத்திலயே அவுட். மகனுக்கு என்ன நடக்குமோ எண்டு நாங்கள் பயந்து கொண்டு கிடக்கிறம் மச்சான். தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை. லண்டன் பக்கம் நிலமை இன்னும் மோசம். லண்டனில அணுகுண்டு அடிச்ச பிறகு மிஞ்சின சனம் எல்லாம் ஸ்கொட்லாண்ட், வேள்ஸ் பக்கம் போய் வயல்களில நாட்கூலிக்கு நிக்குதாம். கோவில், கோபுரம் எண்டு இப்படி எங்கட தமிழ்ச் சனம் இருந்த ஊர் லண்டன்? இப்ப ஒரு புல் பூண்டு கூட இல்லையாம் மச்சான். கனடாவும் அதேநிலைமைதான். பார் மச்சான் எங்கட நிலமையை. ஊரில வந்து இருப்பம் எண்டால் ஐரோப்பிய அகதியளுக்கு இடம் இல்லைஎண்டு இலங்கை சொல்லி போட்டுது. இந்திய வம்சாவழி எண்டால் இந்தியா எடுக்குது. நாங்கள் என்ன செய்ய? எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான். ஊரில முதல் வெடிச்சத்தம் கேட்டதும் கிளம்பி ஐரோப்பா வந்த ஆள் நான். பிறகு சனம் அங்க சாகும் போதுகொஞ்சம் காசை அனுப்பி போட்டு, இரெண்டு போராட்டத்தில முகத்தை காட்டி போட்டு, மக்கள், போராளிகள்அழிவை ஏதோ கிரிகெட் ஸ்கோர் கேட்பது போல எல்லே கேட்டு கொண்டு இருந்ததான். இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேன் சனத்தின்ர சாவை கூடஇப்படிதானே “சணல் அடி” “நல்ல வெளுவை” எண்டு விசிலடிச்சு ரசிச்சனான். ரஸ்யா உக்ரேனை போட்டு வெளுத்த நேரம், வெளிநாட்டில் இருந்த உக்ரேன் சனம் எல்லாம் நாட்டுக்காக, இனத்துக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது. பொம்பிளையள், பிள்ளையளை போலந்துக்கு அனுப்பிபோட்டு, ஆம்பிளையள் நிண்டு சண்டை பிடிச்சவங்கள். எங்கட ஊரில? நாங்கள் வெக்கம் கெட்டு கோழையள் மாரி ஓடி எல்லே வந்தனாங்கள். சனமும் போராளியளும் அங்க சாக, நாங்கள் கொழும்பிலயும், பரிசிலயும், லண்டனிலயும், டுசிள்டோபிலயும், டொராண்டோவிலயும் வீடு வாங்கிற, கடை வாங்கிற, பிள்ளையள டொக்டர் ஆக்கிற பிசியில எல்லே திரிஞ்சனாங்கள்? எதோ சில இணைய தளங்களில் போய் பத்தி பத்தியா எழுதினத தவிர நாங்கள் வேற என்ன செய்தம் எங்கட இனத்துக்கு? புலம்பெயர் உக்ரேனியனிட்ட, புலம்பெயர் தமிழன் எதையோ வேண்டி குடிக்க வேணும் மச்சான். 1985 க்கு பிறகு ஊருக்கு போராட போன, அல்லது பிள்ளையள போராட அனுப்பின புலம்பெயர் தமிழன் எண்டுயாரும் இல்லைத்தானே மச்சான். மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு விசுவாசம் மருந்துக்கும் இல்லை மச்சான். ஊரில சண்டை வந்த போது அங்க விசுவாசமா நிண்டு போராடாமல் மேற்கு நாட்டுக்கு ஓடி வந்து பிச்சைஎடுத்தம். ஆனால் பிச்சை போட்ட நாட்டுக்கும் நாம் விசுவாசம் காட்டேல்ல மச்சான். அந்த நாடுகளுக்கு ரஸ்யாவோட பிரச்சனை எண்டால் - நாங்கள் அதில நியாயம் பிளக்க எல்லோவெளிகிட்டனாங்கள். நாங்கள் இனத்தின் இருப்பு பற்றி யோசிக்கிற ஆக்கள் எண்டால், ரஸ்யாவோட நிற்பதை விட மேற்கோடு நிற்பதுபுலத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் நாட்டிலும் தமிழர் நலனுக்கு ஒப்பீட்டளவில் நல்லது எண்டு உணர்ந்துநடந்திருப்பம் மச்சான். ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. ஸ்கோர் கேட்டு கைதட்ட மட்டும்தான் தெரியும். சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். இனி ஐரோப்பாவில்/கனடாவில் முன்னர் போல் தமிழர் பரம்பல் இராது. ஆகவே இந்த நாட்டு அரசுகளை நெருக்கி, நாட்டில உங்களுக்கு கொஞ்சம்தன்னும் விடிவை தர முயற்சிக்க கூட இனி முடியாது. தவிரவும் ரஸ்யா, இந்தியா, இலங்கை இரெண்டுக்கும் நல்ல நண்பந்தானே. ஆகவே இனி இலங்கைக்கு வெளி அளுத்தம் எண்டு ஒண்டு மருந்துக்கும் இருக்கபோவதில்லை. குறைந்த பட்சம் உங்களுக்கு உயிராவது மிஞ்சும் எண்டு சந்தோசப்படு மச்சான். இஞ்ச அதுவும் சந்தேகம்தான். அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை, நட்புடன், உடான்ஸ் சாமியார் (யாவும் கற்பனையாக இருக்கட்டும்)
  3. 😂 சுயமா எழுத தெரியாட்டிக்கி இது தான் பிரச்சினை. அடுத்தவன் கற்பனையை ஆட்டையை போடுவது. ஆட்டுக்குள்ள வந்து மாட்டை போடுவது...🤣 "டிக் டொக் டிக்கிலோனாக்கள்" அசட்டுத்தனம் பெரும் அவஸ்தை தான் பாருங்கோ. ~~ இது கற்பனை அல்ல நிஜம் ~~ !!!
  4. வயசுக்கேற்ற ஆக்கள் தானே வருவார்கள். ஏன் சிறி ஆஸ்பத்திரி நேர்ஸ் எவரும் வாறலையோ?
  5. முளளிவாய்க்காலில் இன அழிப்பே நிகழவில்லை தமிழ் மக்களை புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து யுத்தம் செய்து மீட்டு எடுத்து இருக்கிறோம் என்றுதான் சிங்கள அரசும் கூறுகிறது.. ரஞ்சித்தும் சிறுபான்மை உக்ரேனிய ரஷ்யர்கள் வாழிடங்கள் மீது உக்ரேன் எந்த தாக்குதலும் செய்யவில்லை என மேற்குலகுக்கு வெள்ளை அடிக்கிறார்.. இவரும் இவரது கருத்தை ஆதரிப்பவர்களும் முள்ளிவாய்க்காலை தமது கருத்தை நியாயப்படுத்த ஊறுகாயாக தொட்டுக்கொள்கிறார்கள்.. உண்மையில் இவர்கள் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி ஒப்பீட்டு கட்டுரைகள் எழுத எந்த தார்மீக உரித்தும் உடையவர்கள் அல்ல..
  6. உக்ரைனிலை ஒருத்தன்... ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை காக்க, தன்னை வெல்ல வைக்கச் சொல்லி... வாக்கு வாங்கி, வென்று... சும்மா இருக்க ஏலாமல்... வாயை குடுத்து, உக்ரைனை... சல்லி, சல்லியாக நொருக்க வைத்து விட்டு.. அழுது கொண்டு இருக்கிறான். 😂
  7. "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்" அந்தநாள் ஞாபகங்கள்.....
  8. இத்திரி எத்திசையில் பயணிக்கக் கூடாது என்று நான் அஞ்சி , மற்றையவர்களின் விதண்டாவாதங்களை இங்கே செய்யவேண்டாம் என்று கேட்டேனோ, அது இப்போது தத்ரூபமாக நடக்கிறது. இதை எண்ணித்தான் ஒரு பொதுவான வேண்டுகோளை முன்வைத்தேன். இது எனது சொந்த ஆக்கம், குறைந்தது நான் எழுதியதை முடிக்கும்வரையிலாவது என்னை எழுத விடுங்கள் என்று. ஆனால், நிர்வாகமே, "அப்படியில்லை, யாரும் எழுதலாம்" என்று சொன்னதன் பிறகு தமது பக்க நியாயங்கள் என்று ஆளாளுக்கு எழுதுகிறார்கள். உங்களின் சொந்தக் கருத்துக்களை, நியாயங்களை தனியே ஒரு திரி திறந்து எழுதலாமே என்றுகூடக் கேட்டுப் பார்த்தாயிற்று, ஆனால் எவரும் கேட்பதாக இல்லை. சரி, உங்கள் விருப்பத்தின்படியே ஆகட்டும்.
  9. இது உங்களுக்கே ஓவராய்த் தெரியல்ல ...ரஞ்சித் தன்னுடைய ஆதங்கத்தை கட்டுரையாய் எழுதுகிறார் ...அதை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று இல்லை ....உங்கட கதையை பார்த்தால் எல்லோரும் ஆமாம் பாட்டு பாடணுமாக்கும் ...அவரை யாழுக்கு வர வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார் ?...மற்றவர்களை துரத்தி விட்டுட்டு நீங்கள் மட்டும் திரும்ப வருவீர்களாக்கும்😫
  10. மண் ஆதி பூதமொடு விண் ஆதி அண்டம் நீ மறை நான்கின் அடிமுடியும் நீ ..!! மதியும் நீ ரவியும் நீ ! புனலும் நீ அனலும் நீ மண்டலம் இரண்டு எழும் நீ ..! பெண்ணும் நீ ஆணும் நீ பல் உயிர்க்கு உயிரும் நீ பிறவும் நீ ஒருவ நீயே .! பேதாதி பேதம் நீ .பாதாதி கேசம் நீ பெற்ற தாய் தந்தை நீயே . பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ ..! புகழொணாக் கிரகங்கள் ஒன்பதும் நீ இந்த புவங்கள் பெற்றவனும் நீ ..! என் அறிய ஜீவ கோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன் ..! ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே.... 🙏 .
  11. நான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். ஆளைப் பார்த்தால் நன்றாகத்தான் ஆடை அணிந்திருப்பான். ஆனாலும் அதில் ஒரு அசாதாரணமும் இருக்கும். முதல் சில நாட்கள் எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவனை நான் போகும்போதோ வரும்போதோ சட்டை செய்யவில்லை. அவன் நடந்து வரும்போது ஒரு நளினம் இருக்கும். இவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளனாகத்தான் இருப்பான் என நான் நம்பினேன். அடுத்த வாரம் என்னை நோக்கி வந்து நமஸ்தே கிறிஷ்ணா என்றபடி ஒரு தாளை நீட்டினான். நான் வேண்டுமென்றே வணக்கம் என்றேன். அவன் எதுவும் சொல்லாமல் நிற்க நான் அந்தத் தாளை விரித்தேன். அது கவுன்சில் வீடற்றவர்களுக்கு வாராவாரம் கொடுக்கும் உதவித் தொகைக்கானது. ஆனால் அதைக் கொண்டு வருபவர் தன் அடையாள அட்டையைக் காட்டினால்த்தான் நாம் பயணம் கொடுக்கலாம். ஏனெனில் வேறு ஒருவரினதை எடுத்துக்கொண்டு வந்து மற்றவர்கள் பணமாக்காதிருக்க அப்படியான முறையை வைத்திருந்தனர். “உனது ஐடியைத் தருகிறாயா?” “என்னிடம் ஐடி இல்லை, ஜோன் ஒன்றுமில்லாமல் எனக்குப் பணம் தருவான்” “யார் அது ஜோன்? அப்படி யாரும் இங்கு இல்லையே” “ இந்தக் கடையின் ஓனர் தான். உனக்குத் தெரியாதா?” எனக்குக் குழப்பமும் கோபமும் ஒன்றாக வர கொஞ்சம் பொறு என்றுவிட்டு எனது முதலாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விபரத்தைக் கூற அவரும் வீடியோவில் அவனைப் பார்த்துவிட்டு “அவனுக்குக் கொடுங்கோ. அவன் காசை என் கடையில் தான் செலவழிக்கிறவன் என்று சொல்ல, யார் அந்த ஜோன் என்றேன். “ நான் தான். என்னை உந்த வெள்ளைச் சனங்கள் அந்தப் பெயரால்த்தான் அழைப்பார்கள்” என்று கூறி அவர் போனை வைக்க, தமிழராய் இருந்துகொண்டு உவருக்கு ஆங்கிலப் பேர் கேட்குது என மனதுள் கறுவினாலும் வெளியே சொல்லவில்லை. அதன்பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்லும்போது “நன்றி. கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்றான். “நான் கிரிஷ்ணரை வணங்குவதில்லை” என்றேன். அவன் எதுவும் சொல்லாது போய்விட்டான். அடுத்த வாரம் நான் வேலைக்குச் செல்லும்போது கால்மேல் கால் போட்டபடி கடையின் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தான். என்ன பிறப்பு இவன். இவனுக்குக் குளிர்வதே இல்லையா என எண்ணியபடி உள்ளே வந்தேன். சிறிது நேரத்தில் நான் என் அலுவல்களைப் பார்க்க அவன் கடைக்குள் வந்து அங்கும் இங்குமாக நடக்க எனக்கு எரிச்சல் அதிகரித்தது. எதையாவது களவெடுத்துக்கொண்டு போக எண்ணுகிறானோ என எண்ணியபடி அவன் எங்கு செல்கிறான் என என் அறையின் உள்ளே இருக்கும் கமராவின் ஸ்கிரீனைப் பார்த்துக்கொண்டிருக்க அவன் எதையும் எடுக்காது பொறுமையின்றி நடந்து திரிந்துவிட்டு என் பக்கமாக வந்தான். நீ அஞ்சலகத்தைத் திறந்துவிட்டாயா என்றபடி நிற்க, வா என்றபடி அவனின் தாளை வாங்கி அவனிடம் எதுவுமே கேட்காது பணத்தைக் கொடுத்தேன். மீண்டும் அவன் “கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்று கூற “நன்றி உன்னை சிவா ஆசீர்வதிப்பார்” என்றேன். அவன் எதுவுமே கூறாமல் செல்ல என மனதில் எத்தனையோ கேள்விகள் எழுந்தது. அடுத்தடுத்த வாரங்களில் வரும்போது அவனைப் பார்த்ததும் காலை வணக்கம் சொல்ல, என்னை ஆச்சரியமாகப் பார்த்து தானும் சொன்னான். அன்று அவன் பணம் பெற்றுக்கொள்ள வரவில்லை. ஏன் அவன் வரவில்லை என்று எண்ணியபடி ஆட்கள் வராத நேரத்தில் நான் வெளியே சென்று அவன் இருக்கிறானா என்று பார்த்தபோது அவனைக் காணவில்லை. கடையில் வேலை செய்தவர்களைக் கேட்க தமக்குத் தெரியாது என்றுவிட்டு அப்படித்தான் அவன் அடிக்கடி காணாமல் போவான் பின் வருவான் என்றனர். நானும் அதன் பின் அவனைப் பற்றி மறந்துவிட்டேன். ஒரு வாரத்தின் பின்னர் வந்தவன் இரண்டு காசோலைகளை என் முன்னே நீட்டினான். ஒவ்வொன்றும் 100 பவுண்கள் பெறுமதியானவை. அவனுக்குப் பணத்தை வழங்கிவிட்டு “எங்கே சென்றாய் உன்னைக் காணவில்லையே ஒரு வாரமாக என்றேன். தனக்கு மன அழுத்தம் கூடியதால் ஒருவாரம் வைத்தியசாலையில் இருந்தேன் என்றதும் மேற்கொண்டு என்ன கேட்பது என்று தெரியாது அவனை அனுப்பிவிட்டு மற்ற வாடிக்கையாளர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். நான் வேலைசெய்யும் கடையிலே சூடான உணவுப் பொருட்களும் உண்டு. நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு தேவை எனில் குளிரான உணவுகளை சூடாக்கிக் கொடுப்பார்கள். பிரியாணி சமோசா போன்றவற்றை அவன் சூடாக்கித் தரும்படி வாங்கி உண்பான். தேனீரும் கோப்பியுமாக அவன் பணம் அங்கேயே கரையும். ஆனால் ஒருநாள் கூட மலிந்த பியரைக் கூட அவன் வாங்குவதில்லை என அங்கு வேலை செய்பவர்கள் கூறுவார்கள். அன்று ஒரு மூன்று மணியிருக்கும். பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் பள்ளி முடிந்து மாணவர்கள் வருவதும் போவதுமாக இருக்க, நான் காலையில் அவனுக்குக் கொடுத்த 20 பவுண்டஸ் தாள்களைக் கொண்டுவந்து பத்துப் பவுண்டஸ் தாள்களைத் தருகிறாயா என்றான். நானும் கொடுத்துவிட்டு எனக்கு வாடிக்கையாளர்கள் வாராதாபடியால் அறையை விட்டு வெளியே வந்து வீதியைப் புதினம் பார்க்கச் சென்றேன். அங்கே கூட்டமாக ஒரு ஏழு பள்ளி மாணவர்கள் நிற்க இவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாளைக் கொடுத்துக்கொண்டிருந்தான். எனக்குப் பார்த்தவுடன் சுள் என்று கோபம் தலைக்கேறியது. கவுன்சில் அவனுக்குத் தரும் காசைச் சேமித்து வைத்துச் செலவழிக்காது இப்பிடி கொடுத்துக் கரைக்கிறானே என்று. ஏனெனில் அந்த வாரம் பணம் முடிந்தவுடன் எமது கடையில் கடன் சொல்லிவிட்டுத்தான் பொருட்களை வாங்குவான். ஆனாலும் அடுத்த நிமிடம் அவனின் செயலை எண்ணிய வியப்புத் தோன்றியது. எதுவும் இல்லாதவன். இருப்பவர்களே கொடுக்க யோசிக்கும் இந்தக் காலத்தில் தனக்கு என வைத்திருக்காமல் இவர்களுக்குக் கொடுக்கிறான் எனில் எத்தனை பெரிய மனது வேண்டும் என எண்ணியவுடனேயே எனக்குள் ஒரு கூச்சம் எழ நான் உள்ளே நகர்ந்தேன். அடுத்த வாரம் பணம் மாற்ற வருவதற்கு முன்னர் சில பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு வந்திருந்தான். ... ........
  12. வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...! அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...! இது கொஞ்சம் வித்தியாசமானது...! மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...! மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...! மண்டலாவை வடித்த போது..., கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..! மகாத்மாவை வடித்த போது, கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...! அரேபிய அகதிகளுக்கு..., அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,! பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்..., தன் காதுகளை முழுதாக மூடியது...! முள்ளி வாய்க்காலில்..., முகத்தையே மூடியது..! பன்னாடைக்கு என்ன நடந்தது...? எல்லோரும் தேடினார்கள்...! மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...! ஒன்று...இரண்டல்ல..., பத்து வருடங்கள்..! வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..! போர்க் குற்றமா..? எங்கே நடந்தது...? புதினம் கேட்டது, பன்னாடை..! உக்ரெயினில் யுத்தமாம்..! ஓடோடி வந்தது...பன்னாடை..! தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....! அங்கத்தின் நிறமோ, வெள்ளை...! கண்களின் நிறமோ....மரகதம்..! கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...! உக்ரெயின் யுத்தம் தொடங்கி..., இன்னும் பத்து நாள் ஆகவில்லை...! நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...! ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..! எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..! அகதி முகாமில் பிறந்த குழந்தயை..., ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...! அந்தக் குழந்தயை...., பன்னாடை வடிகட்டாது...! ஏனெனில்.., அவள் ஒரு ஈழத்து அகதி...!
  13. அவர் இன்னும் சுந்தராம்பாள் ஐ தாண்டவில்லை, அவர் நினைவாகவே இருக்கிறார் கவிதை சூப்பர், எங்களுக்கு வரும் கனவுகளை இப்பிடி எல்லாம் எழுத்தெரியாது. எழுத்ததெரிவது ஒரு கொடுப்பினை.
  14. ஓணாண்டியார்... உங்களோடு எனக்கென்னய்யா வன்மம்... 🙏 "வெள்ளைத்தோல் அடிமை மோகம்" என்ற தடித்த எழுத்துக்கள் வரும் பொழுது இப்படியான பதில்கள் வாஸ்தவம் தானே. உங்களுக்கு மேற்குலக (அமெரிக்க) வெளிவிகார கொள்கையில் சரி பிழை நியாயங்கள் கதைக்க வேண்டும் என்றால் தனி திறந்து அலசினால் உங்களோடு சேர்ந்து நாங்களும் கும்மி அடிக்கலாம். பொதுவாக இந்த யுத்தம், இதனால் ஏற்படும் மக்கள், உடைமைகள், உளவியல் அழிவுகள் பற்றி கரிசனை படும் ஒரு சராசரி மனிதனின் கருத்து. இந்த கரிசனை ஈராக்கிலும், லிபியாவிலும், இதர நாடுகளிலும் நடக்கும் போதும் எமக்கு இருந்தது. அப்போதும் நாங்கள் ஒருவரும் அமெரிக்கனுக்கு வாழ் பிடிக்க வில்லையே. இதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.
  15. கொழும்பு துறைமுக நகர்.. சீனா கடல்மேல் உருவாக்கிய பாலைவன மணற்திட்டு.. எப்போ நகராகும்.??! இது பாலைவன கடல்மேற் திட்டு நுழைவாயில்.. இது தான் சீனா உருவாக்கிய கொழும்பு துறைமுக நகருக்கான மணற்திட்டும்.. நாட்டப்பட்டுள்ள தென்னை மரங்களும். நுழைவாயிலை அலங்கரிக்கும் கடதாசிப் பூச்செடிகள். பழைய கொழும்பு நகரக் கட்டிடங்கள்.. உருவாக்கப்பட்டுள்ள பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு துறைமுகம்.. பாலைவனப் பூமியில் இருந்து.. பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு நகர்.. நவீன கட்டிடங்கள் மற்றும் கடல்நீர் தேக்கம்.. பார்வை. பாலைவனப் பூமியில் இதுவரை நிர்மானிக்கப்பட்டதில் உருப்படியானது இது ஒன்றும் தான்.. கொழும்பு துறைமுக நகர் உலகின் பிரதான நகரங்களை விட விஞ்சும் அளவுக்கு அமையும் ஒப்பீட்டு விளம்பரங்கள் மத்தியில்.. அது இப்படித்தான் அமையும் என்ற ஓவிய விளம்பரம். கண்ணுக்கு கவர்ச்சியாக அமைந்தாலும்.. இதன் பின்னால்.. எழும் வினாக்கள் ஆயிரம்..?! அதில் ஒன்று இது எப்போ முடியும்.. அதற்கான சாத்தியம் என்ன..??! === இப்போ இந்தப் பூமி.. கடும் வெயில் சுடும் இலங்கையின் சகாரா என்றால் மிகையல்ல.
  16. ஐயாவின்ரை கனவிலை வந்து போறது கேஆர் விஜயாவா?
  17. அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மற்றும் தொங்கு பாலத்தில் இருந்து.. பாலைவனப் பார்வை.. கொழும்புநகர் மற்றும் அண்டிய கடல்.
  18. இது என்னுடைய கருத்தில்லை.. இணையத்தில் சுட்டது… சில கருத்துக்கள்(?)… ….. தனிப்பட்ட காழ்ப்புகள், பிறர்பற்றி ஏதுமறியாமலேயே கொள்ளும் முன்முடிவுகளில் இருந்து எழுபவை. இத்தகைய முன்முடிவு கொண்டவர்கள் தங்கள் மூளைக்கொதிப்பாலேயே சூழலில் சதா வெளிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். தன் எதிர்த்தரப்புக்கும் பொதுவான ஒரு முறைமையை கடைப்பிடிக்க, தர்க்கத்தை முன்வைக்க இவர்களால் இயலாது. ஆகவே எப்போதும் தன் எதிர்த்தரப்பை, தன்னை ஏற்காதவர்களை, தன் எதிரியாக உருவகம் செய்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே வகுத்து வைத்திருக்கும் எதிரிக்கு என்னென்ன இயல்புகளுண்டோ அனைத்தையும் அவன்மேல் ஏற்றி வசை, ஏளனம், அவதூறு என சலம்புகிறார்கள். இவர்களிடம் பேசுவதென்பது குடிகாரர்களிடம் பேச்சுக்கொடுப்பதுபோல. ….
  19. அதுவொரு பதில் கடிதம். நீங்கள் ஒருவருக்கு பதில்கடிதம் எழுதுவதென்றால் எப்படி எழுதுவீர்கள்? மனதில் வன்மத்தை வளர விட்டால் ஆசிரியரிடம் கற்றது கூட ஆட்டைய போட்டது மாதிரித்தான் தெரியும்.
  20. 👏🏻 ஆகா…. உடான்ஸ் சாமியாருக்கு, “நொங்கு” எடுக்க வந்த, படான்ஸ் சாமியாரின் ஆச்சிரமத்துக்கு… இராணுவ பாதுகாப்பு போடுங்க. 😁
  21. யுகே ஆச்சு ஐரோபபா ஆச்சு ரசியா ஆச்சு ஏனப்பா சும்மா இருக்கிற அமெரிக்காவை இழுக்கிறீங்க.
  22. ரஞ்சித், உக்ரைன் ரஷ்யா மோதலில்தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடே தவிர மற்றும்படி நாம் எல்லோரும் ஒரே குறிக்கோள் உடையவர்கள்தான் என்பது எனது கருத்து!
  23. ரஞ்சித் மன்னிக்கவும், இங்கே ஒரு வரிகூட எழுதக்கூடாது என்றே நான் நினைத்தேன்... இருந்தாலும் என்னுடைய ஆதங்கத்தையும் பதிந்து விடுகிறேன். ரஞ்சித் யாழ் அகவை - சுய ஆக்கங்கள் - பகுதியில் தனது அவதானிப்பு, புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு கட்டுரை வரைகிறார். அதற்கான இடத்தை , சுதந்திரத்தை அவருக்கு கொடுக்கும் அடிப்படை மாண்பு மீறி தங்களது கிறுக்குப்பிள்ளை அரசியல் எதிர் வாதத்தையும் இங்கே வைக்கிறார்கள். உங்ககளால் முடிந்தால் ரஷியா தன்னிச்சையாக மேட்கொண்டு வரும் யுத்தம், அவர்கள் பக்கத்துக்கான ஞயாயங்களை பக்கம் பக்கமாக எழுதுங்களேன். யார் உங்களை தடுத்தார்கள்? வெறுமனே ஆதாரமற்ற "உக்ரைன் போட்ட "பொஸ்பரஸ்" குண்டு, உக்ரைன் கொன்ற "செஞ்சோலை சிறார் " போன்ற "டிக் டொக்" வீடியோ பார்த்து உணர்ச்சி பிழம்பாவத்தை விட்டு உருப்படியாக எதையாவது எழுதுங்கள் நாங்களும் வாசிக்கலாம். இன்றும் கூட ஒரு வீடியோ பார்த்தேன்... கைகள் கட்டப்பட்ட ஒரு மனிதனின் நெஞ்சாங்கூடு பிளக்கப்பட்டு, தசை நார்கள் கிழிக்கப்பட்டு இதயம் துடிக்க துடிக்க பிடுங்கப்படுகிறது... பின்னணியில் "நித்திரையோ தமிழா நீ .. திரும்பிப்பாரடா" பாட்டு ஓட்டுகிறது. ஆனால் அந்த வீடியோ தென்அமெரிக்க நாட்டில் நடந்த சம்பவம் போல் தெரிகிறது. இப்படித்தான் எம்மவரை "உணர்ச்சியுள்ள தேசியவாதிகளாக" காட்ட பாடுபடுகிறார்கள். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். அதன் முடிவில் நியாயங்களை, "மாயங்களை" தீர்மானிப்பது வாசிப்பவர்களாக இருக்கட்டும்.
  24. வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி எனக்கு / எமக்கு வரும் சில கனவுகள் இனம்புரியாத உணர்வுகளை தோற்றுவிப்பன. அடுத்த நாள் காலையில் எழுந்தால் அக் கனவின் சுமை கண்களின் வழி மனதெங்கும் பரவி அன்றைய நாளின் மீது கவிழும் மேகமாக தொடரும் இயல்புள்ளன. என்ன கனவு என்று தெளிவாக அடுத்த நாள் சொல்ல முடியாமல் இருக்கும். மீள அதை நினைவில் கொண்டு வர முடியாமல் இருக்கும். அது தரும் உணர்வுகளையும் பழக்கமான வார்த்தைகளால் அளக்க முடியாமல் இருக்கும். அப்படி ஒரு கனவு நேற்றுக் காலையில் வந்தது. அதில் கடல் நிரம்பி இருந்தது. விடிய எழும்பும் போது கண்களில் எரிச்சலும் மனசில் உளைச்சலுமாக இருந்தது. அதை எழுத்தில் கொண்டு வர எடுத்த முயற்சி தான் இது. யாழின் 24 ஆவது அகவைக்கு என்று மினக்கெட்டு எழுதவில்லை இது. தானாக வந்த கவிதை.
  25. ஒருவன் மனது ஒன்பதடா ........! 😁
  26. ரஞ்சித் இதுவரை உக்ரேன் பொது மக்களின் துன்பங்களைக் க்ண்டு அதன் காரணமாகத்தான் ரஸ்யா MIது கோபம் கொள்கிறீர்கள் என்றிருந்தேன்.வ் ஆனால் இப்போதுதான் புரிகிறது உங்கள் நோக்கம் அது அல்ல என்று. ☹️
  27. விஷமப் பிரச்சாரம் 2 : உக்ரேனின் கிழக்கில் வசிக்கும் ரஸ்ஸிய மொழிபேசும் மக்கள் மீது உக்ரேன் அரசு இனவழிப்பினை மேற்கொள்கிறது. மனிதநேயத்திற்கு எதிரான மிகவும் மோசமான அக்கிரமங்களை உக்ரேன் அரசு செய்வதாகப் பொய்யுரைக்கும் ரஸ்ஸியா, உக்ரேனை மிகப்பெரும் வில்லனான ரஸ்ஸிய மக்களிடையே சித்தரித்து வருகிறது. ஆனால், 1948 ஆம் ஆண்டின் ஜெனீவா மனித உரிமை சாசனத்தின்படி இனவழிப்பு என்பதன் வரைவிலக்கணத்தினை முற்றாக மறைத்து இனவழிப்பு என்பதற்கான புதிய விளக்கத்தினை ரஸ்ஸியா கொடுக்க முயன்று வருவது கண்கூடு. ஆனால், புட்டினாலும், அரச பயங்கரவாத ஊடகங்களினாலும் பரப்பப்பட்டுவரும் இந்த நகைப்பிற்கிடமான "இனவழிப்பு" குற்றச்சாட்டை ரஸ்ஸியாவின் சுயாதீன ஊடகங்கள் கண்டுகொள்ள மறுப்பதுடன், இவை அரசினால் புனையப்பட்ட கட்டுக்கதைகள் என்பதையும் பகிரங்கமாகக் கூறி வருகின்றன. உக்ரேனின் நடப்பதாக ரஸ்ஸியா பசப்பும் இனவழிப்பை ஐ நா வின் மனிதவுரிமை ஆணையமோ அல்லது சர்வதேச மனிதவுரிமைகளுக்கான நீதி மைய்யமோ ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், ஆண்டுதோறும் வெளியிடப்படும் மனிதவுரிமை அறிக்கையில் உக்ரேனில் நடப்பது இனவழிப்பு எனும் ரஸ்ஸியாவின் தொடர்ச்சியான பரப்புரையினை முற்றாக மறுதலித்தே வருகின்றன. ரஸ்ஸியாவின் இந்தப் பொயான புனைவினையடுத்து, உக்ரேனின் கிழக்கில் ரஸ்ஸியாவினுடனான போரை முடிவிற்குக் கொண்டுவரும் நோக்கில் சர்வதேச நீதிமன்றில் ஆணையொன்றினைக் கேட்டிருக்கும் உக்ரேன், ரஸ்ஸியா கூறுவதுபோன்று அங்கே இனவழிப்பொன்று நடைபெறவில்லையென்பதை எவர் வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
  28. சரி, தூற்றுபவர்களும்,பிழைகாண்பவர்களும் ஒருபக்கம் எழுதட்டும். அது அவர்களின் வேலை. நான் எனது திரி தொடங்கிய நோக்கத்திலிருந்து தொடர்ந்து பயணிக்கலாம். உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் காரணங்கள் என்று ரஸ்ஸியப் பயங்கரவாத அரசினால் முன்வைக்கப்படும் கற்பனைக் காரணங்கள் பற்றி தெளிவுபடுத்துவது இத்திரியின் நோக்கத்திற்கு அவசியமானது என்பதால், அதுகுறித்தும் சில விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டே தொடர்ந்தும் பயணிக்கலாம். மேற்குலக ஊடகங்கள் பொய்யுரைப்பதாகவும், இப்போரின் மறுபக்கம் என்றொன்று இருக்கிறது, அது ரஸ்ஸியாவின் நடவடிக்கையினை நியாயப்படுத்தும் என்று நம்பிக்கொண்டு இக்களத்தில் எழுதிவரும் சிலருக்காகவும் நான் இதனை இங்கே தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று உணர்வதாலும் இதைச் செய்யவேண்டியிருக்கிறது. உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு தொடங்கிய காலத்திலிருந்து ரஸ்ஸியாவுக்குச் சார்பான செய்திச் சேவைகள் மற்றும் இணையத்தளங்களினூடாக பரப்பப்பட்டுவரும் பொய்யான பரப்புரைகளையும், காரணங்களையும் களைவது மிக அவசியம். 2014 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு முரணான வகையில் கிரிமியாவை ஆக்கிரமித்துக்கொண்டது முதல் இன்று உக்ரேனில் முழுமையான ஆக்கிரமிப்புப் போரை கட்டவிழ்த்துவிட்டதுவரையான இக்காலப் பகுதியில் ரஸ்ஸிய அரசு தனது உள்ளூர் மக்களை நோக்கியும், தனது அயல் நாடுகள் நோக்கியும் உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் தொடர்ச்சியான, மிகவும் பாரதூரமான பொய்ப் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டிருக்கிறது. இந்தப் பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் உலக மக்களின் அபிப்பிராயம் தன் பக்கம் திரும்பலாம் என்று அது எதிர்பார்க்கிறது. ரஸ்ஸியாவில் வேண்டுமென்றே முடுக்கிவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களை ஒவ்வொன்றாக நாம் களையலாம். விஷமப் பிரச்சாரம் 1 : உக்ரேனில் நிலவும் நிலைமையே இந்த ஆக்கிரமிப்பிற்குக் காரணமாகும். உக்ரேனின் கிழக்கில் வசிக்கும் ரஸ்ஸிய மொழி பேசும் சிறுபான்மையினருக்கெதிரான உக்ரேனின் நடவடிக்கைகளே இந்த ஆக்கிரமிப்பைத் தூண்டிவிட்டன. ரஸ்ஸியாவும் உக்ரேனும் ஒரே நாட்டு, ஒரே தேசம், ஆகவேதான் உக்ரேனின் கிழக்கில் மக்களைக் காக்க ரஸ்ஸியா தலையிட வேண்டியதாகியது. இந்தப் பொய்யுரையினை மெய்யாக்க ரஸ்ஸிய அரசு ஊடகங்கள் கடுமையாக முயன்று வருகின்றன. தன் மொழிபேசும் மக்கள் மீது உக்ரேன் இனவழிப்பை நடத்துவதாக அவை தொடர்ச்சியாக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதுடன் உக்ரேனை ஒரு வில்லனாக, ரஸ்ஸியாவின் பிரதான எதிரியாக உள்நாட்டிலும், தனது ஆதரவாளர்களிடையேயும் விம்பப்படுத்தி வருகின்றன. 2 ஆம் உலகப் போரில் நாஜிக்களுடனான போரில் ரஸ்ஸியாவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பை மீண்டும் கிளறியெடுத்து, மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, உக்ரேனை புதிய நாஜிகள் என்று ஒப்பிடுவதன் மூலம் தனது பொய்ப்பிரச்சாரத்தை ரஸ்ஸியர்களிடையே முன்கொண்டு செல்கிறது ரஸ்ஸிய அரசு. ரஸ்ஸிய அரச ஊடகங்களில் வெளிவந்த பொய்ப்பரப்புரைகளில் ஒன்றினை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், ரஸ்ஸிய சிறுவன் ஒருவனை உக்ரேனிய ராணுவத்தினர் சிலுவையில் அறைந்து கொன்றதாக ஒரு செய்தியாளர் கூறிவிட, அப்பொய்ச் செய்தியை அனைத்து ரஸ்ஸிய ஆதரவுத்தளங்களும் காவித் திரிந்தன. ஆனால், இப்படியான நிக்ழவு உண்மையிலேயே நடக்கவில்லை என்பதுடன், இந்நிக்ழவு நடந்ததற்கான காரணமாக ரஸ்ஸியா முன்வைத்த காரணமும் மிகவும் நகைப்பிற்கிடமானது. 2014 இல் இடம்பெற்றதாக ரஸ்ஸியா புனையும் இந்த புழுகில், சிறுவன் திருடினான் என்பதற்காகவே உக்ரேனியர்கள் அவனை சிலுவையில் அறைந்தார்களாம். ஆனால், இதுபோன்ற பல புரட்டுக்களை ரஸ்ஸிய செய்தி ஊடகங்கள் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து வருகின்றன. ஆனால், உண்மையில் கிழக்கு உக்ரேனில் ரஸ்ஸிய மொழி பேசும் மக்களுக்கெதிரான எந்தவித அச்சுருத்தல்களையும் உக்ரேன் அரசு விடுக்கவில்லை என்று நிலைமையிருக்க, ரஸ்ஸியாவோ அங்கே இனவழிப்பு நடைபெறுவதாக கூக்குரலிட்டு வருகிறது. கிழக்கு உக்ரேனில் ரஸ்ஸிய மொழிபேசுவோருக்கு எதிராக மனிதவுரிமை மீறள்கள் நடைபெறவில்லையென்பதை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சிலும், ஐரோப்பிய கவுன்சிலும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மேலும் ரஸ்ஸியாவும் உக்ரேனும் ஒரே தேசம் எனும் பல் நூற்றாண்டுப் பழமைவாதக் கோஷமானது, சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பில் உக்ரேன் உட்பட்டிருந்த வேளையில் உக்ரேனை ஆக்கிரமித்தவர்கள் உக்ரேன் மீது திணித்த ஒரு கொள்கை. அதே கொள்கையினை மீள உயிர்ப்பிக்கும் ஒரு நடவடிக்கையாகவே சுமார் 800 வருடங்களின் பின், தனியான அடையாளங்களைக் கொண்ட, தனித்துவ இனமான, தனிக் கலாசாரத்தைக் கொண்ட உக்ரேனை தன்னுடன் கட்டாயமாக இணைக்க அதே கோஷத்தைப் புட்டின் கையிலெடுத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை. 2014 இல் இருந்து இந்தப் பொய்பரப்புரையினை கடுமையாக முடுக்கி விட்டிருக்கும் புட்டின், உக்ரேன் மீதான தனது ஆக்கிரமிப்பிறகு நியாயம் கற்பிக்க இந்த புனைவினை பாவித்து வருகிறார். சுமார் 800 வருடங்களுக்கு முன்னால் எல்லைகளற்ற ரஸ்ஸிய தேசத்தை 21 ஆம் நூற்றாண்டில் கொண்டுவருவேன் என்று புட்டிங் நினைப்பது சுத்த அயோக்கியத்தனமேயன்றி வேறில்லை. உக்ரேன் சுதந்திரமான ஒரு தனிநாடு. தனது வளர்ச்சி எப்பாதையில் செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உக்ரேன் மட்டும்தான். யார் யாருடன் தான் சிநேகம் வைக்கவேண்டும், தனது பாதுகாப்புத்துறையும், வெளிவிவகாரத்துறையும் எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கூட உக்ரேன் தான். அத்துடன், சர்வதேச அமைப்புக்களில் தான் இடம்பெறவேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதும் உக்ரேன் தான். ஆனால், அகண்ட ரஸ்ஸிய தேசத்தை சரித்திர காலத்திலிருந்து கிளறியெடுத்து, அதற்கு உயிர்கொடுக்க முனையும் புட்டினும் அவரது பயங்கரவாத அரசும் உக்ரேனின் தனித்தன்மையினைத் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு வருவதுடன், உக்ரேன் என்பது ஒரு சுதந்திரமான நாடு என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுத்தே வருகின்றனர்.
  29. நீங்கள் கண்டுகொள்ளமால் உங்கள் ஆக்கம்களை வையுங்கள் எல்லாம் முடிந்தபின் கருத்துக்களை படியுங்கள் பிரச்சனை முடிந்தது .
  30. ரஞ்சித், நீங்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறீர்கள், புரிகிறது, ஆணாலும் உடல் நலத்துக்கு அவ்வளவு நல்லதல்ல
  31. வணக்கம் கோஷான், உங்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. உக்ரேன் பிரச்சினைபற்றிய விவாதங்கள் நடந்தபோது நீங்கள் இல்லாமையினை உணர்ந்தேன். உங்களின் புட்டினும் புதுமாத்தலனும் படித்தேன். உண்மையில் சுட்டு விட்டது. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் உக்ரேனியர்கள் எங்கே, யுத்தம் நடக்கும்போது புலிகளிடமும் , தப்பியோட முடியாதவர்களிடமும் போராட்டத்தைத் திணித்துவிட்டு "நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு தப்பியோடி வந்த நான் எங்கே என்று எண்ணிப்பார்த்துக்கொண்டேன். நீங்கள் கூறியதுபோல அந்நியப்பட்டுவிடுவேன் என்கிற அச்சம் இப்போது வருகிறது. அதற்காக நான் நினைப்பதை எழுதாமலும் இருக்கமுடியவில்லை. சிறுகச் சிறுக சேர்த்த பலர் விலகிச் செல்லவும் சந்தர்ப்பம் இருப்பதாக நினைக்கிறேன். பார்க்கலாம், எதுவரை என்னால் முடிகிறதென்று. உங்களின் ஆதங்கத்திற்கும், உண்மையான கரிசணைக்கும் எனது நன்றிகள்.
  32. ரஞ்சித், நீண்டகாலம் பழகிய உரிமையில் சொல்கிறேன். நீங்களும் விடை பெற வேண்டிய காலம் அண்மித்து விட்டது. Save your sanity 🙏🏾.
  33. ஏன் இந்த கைபிற்ஸ் கோவம் அண்ணா.✍️வராதீங்கோ பார்க்காதீங்கோ எழுதாதீங்கோ என்றால் எப்படி உங்கள் ஆக்கங்களைப் படிப்பது நாங்கள்.வாசிப்பதற்கு யாரும் இல்லாத விடத்து எழுதியும் பிரியோசனம் இல்லயே..சற்று யோசிச்சு பாருங்கோ..அப்புறம் என்னோடும் கத்தக் கூடா..மனதில் பட்டதை அப்படியே சொல்லிட்டு போறன்.நன்றி.🖐️
  34. முள்ளிவாய்க்கால் சிங்கள அரசின் நேரடிப் பங்களிப்போடு.. அமெரிக்கா.. ரஷ்சியா.. ஹிந்தியா.. சீனா.. ஐநா.. உட்பட எல்லாரும் சேர்ந்து நடத்தியது. இனப்படுகொலை தொடர்பான.. எந்த ஆதாரமும் சிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து நடத்தினார்கள். அதுவும் உலகில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக போராடாத மக்களை கொன்று குவித்தார்கள். சொந்த மண்ணில் சொந்த வாழும் உரிமையைக் கோரியது ஒன்றே அந்த மக்கள் செய்த குற்றம். அது பயங்கரவாதமாக்கப்பட்டது. ஆனால்.. உக்ரைன் - ரஷ்சிய யுத்தம் அப்படி அன்று. நேட்டோ விரிவாக்கம் ரஷ்சிய எல்லைகளை எட்ட எட்ட ரஷ்சிய மக்கள் உக்ரைனில் படுகொலை செய்யப்படப் பட.. எழுந்த யுத்தம். உக்ரைனில் இரண்டு பகுதி ரஷ்சிய மக்களின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வக்கில்லாத மேற்குலகம்.. அந்த மக்களையும் சேர்த்து முழு உக்ரைனையும் அழிப்பது தான் இந்த யுத்தத்தின் நோக்கம். அதன் மூலம்.. ரஷ்சியாவை இராணுவ ரீதியில் அச்சுறுத்துவதோடு.. ரஷ்சிய பொருண்மியத்தை பலவீனப்படுத்துவம் நோக்கம். ஆக.. தமக்கான எதிரி சீனா.. என்பதோடு இருக்க விரும்பும் மேற்குலகம்.. ரஷ்சியாவை பலவீனப்படுத்த நடத்தும் ஒரு யுத்தத்தில் ரஷ்சியா தன் இருப்பை தக்க வைக்கும் நடவடிக்கையும்.. தமது உயிர்வாழ்வுக்காக.. உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்களை தமிழர் என்பதற்காகவே கொன்று குவித்ததும் ஒன்றல்ல. முள்ளிவாய்க்கால்.. ஒரு கூட்டு இனப்படுகொலையின்.. ஆதாரமற்று நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையின் அடையாளம். ரஷ்சியாவால் மரியுப் போல் சிதைக்கப்பட்டது போல்.. உக்ரைனால்.. ரஷ்சியர்கள் வாழ்ந்த Donbas பிராந்தியம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. உலகின் ஒரு பெரிந்துரோக இனப்படுகொலைக்கு ஆளான நாமே.. மேற்குலகின் பிரச்சாரங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு சிந்தனைக்குள் வைச்சுக் கொண்டு மரியுப் போலுக்காக குரல் எழும்பி.. Donbas பிராந்திய அழிவுகளை உக்ரைனின் அரச பயங்கரவாதத்தை மறைப்பது மிகக் கேவலமான செய்லாகும். உண்மையில் ரஷ்சியா பலவீனப்படுவது.. உலக யுத்த சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு.. அமெரிக்க சார்பு சக்திகளின் ஏகாதபத்தியத்துக்கு இன்னும் பல முள்ளிவாய்க்கால்கள் உலகெங்கும் ஆதாரமற்ற படுகொலைகள் மூலம் இலக்காகும் அபாயமே அதிகம்.
  35. இறக்கும் தறுவாயில்... கணவனிடம், மனைவி வாங்கிய சத்தியம். மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்டகணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று... மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்... தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை! என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது. ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான். அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ... "என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு... அண்ணா, தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி சத்தியம் வாங்கிக் கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான். படித்ததில் பிடித்தது. Str Moorthy
  36. நன்றி... நிழலி...! நீங்கள் கூறிய படியே...நாமெல்லாம் கூட, எம்மையறியாமலே மூளைச் சலவை செய்யப் பட்டுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தான் உண்மை...! யாழ் களத்தில் இப்போது எழுதுவது, மிகவும் இலகுவாக உள்ளது...! தொடர்ந்து எழுதலாம் என உத்தேசித்துள்ளேன்! யாழுக்கு வெறும் வயது மட்டும் போகவில்லை..! அவள் தன்னைத் தானே, மேலும்...மேலும் மெருகூட்டிய படியே வளர்கின்றாள்..! இதற்கான பெருமை முழுவதும்...மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும், தினமும் வந்து போகின்ற கள உறுப்பினர்களுக்கும், அதன் அடித்தளமாக உள்ள வாசகர்களுக்கும் உரியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது...!
  37. மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா.......! 💞
  38. இரை. தினையளவு இரைதேடி சிற்றெறும்புக் கூட்டம் புற்றுவிட்டு நீங்கி பொழுதெல்லாம் அலையும். குடைபோல் வலைபின்னி வலைக்குள் காத்திருக்கும் பறந்துவந்து சிக்கும் பல்லுயிர்க்காய் எட்டுக்கால் சிலந்தியும். அதிகாலை வேளை மொட்டவிழ்ந்த மலர்தேடி மதுவுண்டு செல்ல மணம் முகர்ந்து அலையும் மாமரத்துத் தேனீக்கள். உடும்பொடு பாம்பும் இரைபார்த்து ஊர்ந்து வரும் பாம்பு மெலிந்தால் உடும்புக்கு இரையாகும் உடும்பு தளர்ந்தால் பாம்பு பசியாறும். வானில் உலவும் பருந்து வீட்டு முற்றம் சேர்ந்து தாயை விட்டு விலகிய குஞ்சை கிள்ளியெடுத்து தன்குஞ்சு பசிபோக்கும். தன்னுயிர் காக்க வெறித்தோடும் கலைமானை தன்பசி தீர்க்க விரட்டிப் பிடிக்கும் வேங்கை கூட்டமாய் வரும் செந்நாய்கள் சேர்ந்தே வேங்கையை விரட்டி இரையை எடுக்கும். கிலோக்கணக்காய் இலையுண்ணும் யானைகளும் கிலோமீட்டர்கள் நடந்து அலைந்து திரியும் அவை சென்ற பாதையெல்லாம் மரங்கள் முறிந்திருக்க பறவைகள் ஓலமிடும். பறவைக்கும் இரையாகும் விலங்குக்கும் இரையாகும் மனிதர்க்கும் இரையாகும் தமக்கும் தாமே இரையாகும் மீன்கள், எல்லாமே பசியால் புசிக்கும் இரைகளன்றோ அதனால் கொல்லுகின்றன ஒன்றையொன்று. பசித்தாலும் பசிக்கும் ஆனாலும் புசிக்கவும் போவதில்லை அதனாலென்ன வெட்டிக் கொல்லுகின்றார் சுட்டுக் கொல்லுகின்றார் குண்டுகளும் கொட்டுகின்றார் கேடுகெட்ட மாந்தர் இவரே......! யாழ் 24 அகவைக்காக, ஆக்கம் சுவி......!
  39. மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி . உங்கள் ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறோம்.
  40. கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது. இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது, பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள்
  41. பார்வை ஒன்றே போதுமே.......(15). வீட்டுக்கு வருகின்றார்கள். தூரத்தில் வரும்போதே கோழிக்கறியின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. முற்றத்தில் நின்ற சேவல் சட்டிக்குள் கொதித்துக் கொண்டிருக்கு. மகேஸ்வரியின் பழகிய கை பக்குவமாய் சட்டியை கிளறுகின்றது.அவள் மனசும் அதுபோல் கொதித்துக் கொண்டிருக்க நினைவுகள் உள்ளே பிராண்டிக் கொண்டிருக்கின்றன. கடவுளே எதோ ஒரு எண்ணம் என்னையும் அறியாமல் என்னை அலைக்கழித்து இந்த மனுஷன் என் மனசுக்குள் புகுந்து விட்டார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற திருப்தி. அது கூட உனக்குப் பொறுக்கவில்லையா. மனம் ரணமாய் வலிக்கிறது. யோசித்துப் பார்க்கிறாள், இது எப்படி......சில கோவில் தீர்த்தக்கிணறுகளில் ஒரு சான் அளவு தண்ணீர்தான் இருக்கும்.அபிஷேகத்தின் பொழுது பத்து குடமா, நூறு குடமா, ஆயிரம், லட்ஷம் குடமா நீர் சுரந்து கொண்டு இருக்கும் வற்றாது, அதுபோல் இப்பொழுது அவர்மீதுள்ள அன்பு பிரவாகித்து வருகிறதே, நான் என்ன செய்வேன். குழம்புபோல் மனமும் கொதிக்கிறது. அவளின் நிலையில்தான் சாமிநாதனும் இருந்தார். சமீபகாலமாக அவளின் நடவடிக்கையில் மாற்றங்களை அவர் பார்த்துக் கொண்டுதான் வருகிறார். இப்போது திண்ணையில் இருந்து மகேஸ்வரியைப் பார்க்க அவளின் பரிதவிப்பு அவரை என்னமோ செய்கிறது. இதற்கெல்லாம் தானும் காரணமாகி விட்ட குற்றவுணர்வு மேலோங்கி அவரை என்னமோ செய்கிறது. கண்கள் பனிக்கின்றன. பிள்ளைகள் வந்து விட்டதால் மறுபுறம் திரும்பிப் புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். ஆனால் அவர்கள் அதைக் கவனித்து விடுகிறார்கள். மகேஸ்வரி வெளியில் வந்து வாங்கோ பிள்ளைகள் சாப்பாடு தயார். எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும். தம்பி முத்து ஓடிப்போய் எல்லோருக்கும் வாழையிலைகள் வெட்டிக் கொண்டு வா அப்பு. பிள்ளை பாய்களை எடுத்து வந்து போடனை என்று சொல்லிக்கொண்டு பம்பரமாய் சுழல்கிறாள். எல்லோரும் சாப்பிடும்போது சாமிநாதனும் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழும்புகிறார், மகேஸ்வரிக்கு சாப்பிடவே மனமில்லை வெறும் தண்ணியைக் குடித்துவிட்டு எழும்புகிறாள். அம்மா சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது, இப்படி ஒரு விருந்து சாப்பிட்டு ரொம்ப காலமாச்சுது என்று ரவிதாஸ் சொல்ல நிர்மலாவும் ஓம் அம்மா என்று சொல்கிறாள். கிளம்புகிற நேரம் எல்லோருக்கும் ஒரு தயக்கமாய் இருக்கு. சாமிநாதனுக்கும் தான் எப்படி இனியும் இங்கிருப்பது என்ற தயக்கம் ஆனாலும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு முன்வந்து "முத்தம்மா" ஆம் இதுவரை அவளை அவர் அப்படித்தான் கூப்பிட்டு வந்திருக்கிறார். நீங்கள் விரும்பினால் என் பிள்ளைகளில் ஒருவரையும் உங்களின் பிள்ளைகளில் ஒருவரையும் மணமுடித்து வைக்கலாமே என்று சொல்கிறார். அதற்கு அவளும் அதென்ன புதிதாக இன்றைக்கு உங்க பிள்ளை , என் பிள்ளை என்று பிரித்துப் பேசுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் எது சொன்னாலும் எனக்கு சம்மதம். இவ்வளவு நாளும் இந்தப் பிள்ளைகளுக்கும் எனக்கும் ஒரு அரணாக இருந்து அதுகளை சொந்தக்காலில் நிக்குமளவு ஆளாக்கி விட்டது நீங்கள்தான். அன்று நீங்கள் சொல்லவில்லை யென்றால் முத்துவால் படித்திருக்கவே முடியாது. அந்த நன்றியை நாங்கள் ஒருகாலமும் மறக்க மாட்டோம்.எதுக்கும் பிள்ளைகளையும் ஒரு வார்த்தை கேளுங்கள்.அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்லும்போதும் அவலறியாமல் குரல் கம்முகிறது கண்களில் நீர் தளும்புகிறது. சாமிநாதனும் பிள்ளைகள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ என்று சொல்ல ரவிதாஸ் முன்வந்து அப்பா நீங்களும் இவ்வளவுகாலமாய் வேலை வேலை என்று வீட்டையும் மறந்து எங்களுக்காக உழைத்தீர்கள். அதனாலோ என்னவோ எங்கள் அம்மாவையும் இழக்க வேண்டி வந்து விட்டது. பின் வந்த இடத்தில் இவர்களின் குடும்பத்தையும் ஒரு மேல் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறீங்கள். அதுபோல்தான் இந்த அம்மாவும் தன் பிள்ளைகளின் நலனுக்காகவே இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இனி நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் ஆசைப்படுகின்றோம் என்று சொல்ல, சித்ரா முன்வந்து ஓமம்மா அண்ணா சொல்வதுதான் சரி என்கிறாள். சற்றுமுன் நாங்கள் தோட்டத்தில் இதை பற்றித்தான் கதைத்தோம் என நிர்மலாவும் சொல்லிவிட்டு ஓம்....நீங்கள் "பார்வை ஒன்றே போதுமே" என்று பார்வையால் வாழ்ந்தது போதும் மகேஸ்வரியின் கையைப் பிடித்து நீங்கள் எங்களுக்கும் அம்மாவாக வேணும் இதை நீங்கள் மறுக்கக் கூடாது என்கிறாள். மகேஸ்வரி வெட்கத்துடன் சாமிநாதனைப் பார்க்க அவரும் மௌனமாக ஓம் என்று தலையசைக்கிறார். கொஞ்ச நேரத்தில் ஆடைகள் மாற்றிக்கொண்டு வந்த முத்துவும் சித்ராவும் அம்மா இன்று நாங்கள் அண்ணாத்தை படம் பார்த்துவிட்டு அண்ணாவின் பங்களாவில்தான் இரவு தங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டே ஆடி காரில் ஓடிப்போய் ஏற அது கோர்ன் அடித்துக் கொண்டு சீறிச் செல்கின்றது. திண்ணைத் தூணைப் பிடித்தபடி ஒருக்களித்து நின்று கொண்டு மகேஸ்வரி வெட்கமும் காதலும் கலந்து காலால் நிலத்தை கீறிக்கொண்டு நிக்கிறாள். "காணாத உறவொன்று கண்முன் நிற்க வாழாத பெண் ஒன்று வழி கண்டதுபோல்" தலை தாழ்திருக்க விழிகளை அசைத்து மேற்கண்ணால் அவரைப் பார்க்கிறாள். சாமிநாதனும் மெல்ல நெருங்கி வந்து அவள் தோளைத் தொட்டு முத்தம்மா என்று மெல்ல சொல்ல ..... ம்.....என்கிறாள். சற்று மௌனம்..... பின் ஏன் நீங்கள் ரஜினி படம் பார்க்க போகவில்லையா...... இல்லை...... ஏனாம் ..... நாங்கள் வலிமை பார்க்கலாம் என்று ...... அப்படியா எனக்கு அஜித் படமும் பிடிக்கும். அப்படியென்றால் இருவரும் சேர்ந்தே பார்க்கலாம். தோள் மீதிருந்த கையை மெதுவாக அழுத்துகின்றார். அவளறியாமலே உடல் இசைவாக குழைகிறது.கூடவே மேனியெங்கும் சிறு நடுக்கமும்......இவ்வளவு காலமும் இருவருக்குள்ளும் தூங்கிக் கிடந்த ஹார்மோன்கள் சலனமடைந்து கிளர்ச்சியுற்று ஹார்மோனியம் வாசிக்கத் தயாராகின்றன. இதற்கு மேலும் தாங்க முடியாமல் "அரங்கனின் தோளில் ஆண்டாள் மாலைபோல்" கைகளை அவர் கழுத்தில் போட்டு மார்பில் மலர்கிறாள். துவளும் அவளது இடையை தன் இரு கைகளால் இறுக்கி அந்த மலரை தன்னுடன் சேர்த்தணைத்தபடி திண்ணையில் அமர்கிறார் சாமிநாதன்......! யாவும் கற்பனை......! யாழ் 24 அகவைக்காக அன்புடன் சுவி......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.