Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    929
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46798
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19139
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7055
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/20/23 in all areas

  1. புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣 குழல் புட்டின் மகிமை தெரியுமா சின்னத்தங்கமே... நீற்று பெட்டி புட்டின் பக்குவம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கோதுமை மா புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே... வழுக்கல் தேங்காய் கலந்த புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே... வறுத்த அரிசி மா புட்டின் வாசனை தெரியுமா குஞ்சுத்தங்கமே.. ஒடியல் புட்டின் பலன் தெரியுமா ஞானத்தங்கமே... மரக்கறி புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே.. பால் புட்டின் சொர்க்கம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... அரிசி மா புட்டின் பதம் தெரியுமா ஞானத்தங்கமே... கூப்பன் மா புட்டின் பதம் தெரியுமா சின்னத்தங்கமே... ஒடியல் மா புட்டின் பதம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கருவாட்டு குழம்புடன் சேர்ந்த புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே ... சிவன் மண் சுமந்த புட்டின் கதை தெரியுமா சின்னத்தங்கமே...
  2. இவை பூச்சிகள். இலைகள் அல்ல.
  3. புட்டின் கவிதை ஆவி பறக்குது. நானும் இதில தான் தடக்குபட்டு விழுந்துட்டேன். கந்தையர் நீங்க யுரியூப் சனலே தொடங்கலாம்.
  4. ஓம் சிறி. லெமூர்களை பார்க்கவும் நல்ல வடிவு. பஞ்சு போல பாதங்கள். ஒருவிதத்தில் அப்பாவி மிருகங்கள் 😁ஆத்தில எல்லோரும் முழுசிக்கொண்டு நிண்டதால ஒருவரும் படம் எடுக்கவில்லை. படகில் இருந்து குறுக்க இருந்த மரத்துக்கு மேல ஏற வேண்டி இருந்ததால் கமெரா போன் எல்லாம் பையில வச்சிட்டம். படமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று எல்லோரும் முழுசிக்கொண்டு நிண்டதால் அந்தக்காட்சி மனதில் மட்டும்தான் இருக்கு சிறி.🤔
  5. நன்றி @nunavilan @பெருமாள் @ஈழப்பிரியன் @ராசவன்னியன் @suvy @தமிழ் சிறி @ஏராளன் @நிலாமதி 🙏
  6. பெரிசு, நீங்கள் உண்மைல எந்த ஊர்..... மர்மதேசி... நான் கேட்டது, ரதியக்காவ.... மட்டக்கிளப்பில், யாழ்பாணத்தான் வாழ்ந்தால், அவித்தமா பிட்டு சாப்பிடுவான் தானே பெரிசு. இன்னும் விபரம் வேணமா? யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் ஆளுமையில் இருக்கும் போதே, கோதுமைமா, பாண் பாவணை வந்தது. கிழக்கில் போர்த்துக்கேய ஆளுமை இருந்தது என்று, கல்வி வெளியீட்டு திணைக்கள புத்தகம் சொன்னால் அறியத்தரவும். அண்மையில் வாசித்தேன். பங்களாதேஸ், போர்த்துக்கேயர் சிட்டாகொங் நகரத்தில் பாண் அறிமுகம் செய்துள்ளனர். மூக்கை எலலா இடத்துக்கிளையும் டபக்கெண்டு நுழைக்கிற கெட்டிதனத்தால, நிர்வாகத்தில் சேர சிபார்சு....
  7. recipe கள் இப்பதான் வெளிய வருகிறது.
  8. குரக்கன் பு ட்டையும் மீன் புட்டையும் கீரைப்பிட்டும் காணவில்லை . குரக்கன் பிட்டு சுடச் சுட சீனி (சக்கரை) தேங்காய் சேர்த்து குழைத்து .சாப்பிட சொர்க்கம் தெரியும் ச்சா சொல்லிவேலையில்லை. மீன்பிடடுக்கு குழைத்த மாவுடன் சதைப்பிடிப்பான மீனை அவித்து மிளகாய்த்தூள் மஞ்சள் உப்பு சேர்த்து பின் வெங்கயம்பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி அதையும் மீனுடன் சேர்த்து அவித்தால் ருசியோ ருசி .
  9. இப்போதான் வெளியால வந்தாரு.. கட்டாயம் ஜக்கம்மாதான் தோழர்..👌
  10. ஐ லைக் திஸ் கு.சா டச் யா …🤣 காதலில் இதுதான் ஏழு நிலை…. காணும் இடம் எல்லாம் அவன், தூணிலும் அவன், துரும்பிலும் அவன், போனிலும் அவன், பிசைந்த புட்டிலும் அவன். மணந்தால் மாஸ்கோ தேவன், இல்லையேல் மரண தேவன் 🤣
  11. சுவையான புட்டினை அவிப்பதற்க்க.....சமைப்பதற்க்கு. நிறைய முன்வேலைகள். செய்ய வேண்டும் 1...மா. நன்றாக வட்ட வேண்டும் 2...வட்டிய. மா. அரிக்க வேண்டும் 3. ...நன்கு கொதித்த நீரில் குழைக்க வேண்டும் 4..தண்ணீர் கூடினால். அமெரிக்கா கோதுமை. மாவைச். சேர்த்து பதம். வரும் வரை அமர்த்தி பிசைத்து குழைக்க வேண்டும் 5...குழைத்த மாவை சிறு சிறு. துண்டுகளாகும் வரை சுண்டினால். நன்றாக குத்தவேண்டும் 6....இதனுடன் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்த தேங்காய் பூ சேர்த்து கலக்கவேண்டும். 7....இந்த கலவையை நன்றாக அவித்து எடுக்க வேண்டும் பச்சை மா கூடாது....பச்சை தண்ணீர் கூடாது....சுடுநீர் அதிகரிப்பு கூடாது புட்டினை குழைக்கும்போது கவனம் தேவை 🤣😂
  12. அழுத்தத்திற்குப் பணிந்த உமா மகேஸ்வரன் தனக்கு விசுவாசமான , தனக்கும், இலட்சியத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றக்கூடிய வீரர்களைத் தேடிக்கொண்டிருந்தபோதும் கூட, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரினை உமா மகேஸ்வரன் கைவிட வேண்டும் என்று பிரபாகரன் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தார். மேலும், தான் வேறு பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரினைக் கைவிட்டு விட்டதாகவும் உலவி வந்த வதந்திகளை அவர் ஒதுக்கித் தள்ளினார். "தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் சரித்திரத்தை இன்னொருவருக்கு விட்டுக் கொடுப்பதைக் காட்டிலும் நான் தற்கொலை செய்துகொள்வது இலகுவானது. எனது இயக்கம், தமிழ் மக்களின் போராட்டத்தை இன்னொரு படிநிலைக்கு உயர்த்தியிருப்பதுடன், தமிழ் மக்களின் மனங்களிலும் அது குடிகொண்டுவிட்டது" என்று தன்னிடம் சமரசம் பேச வந்த சிலரிடம் பிரபாகரன் கூறியிருக்கிறார். இலங்கையிலும், லண்டனிலும், தமிழ்நாட்டிலும் இருந்து வந்த கடுமையான அழுத்தங்களுக்குப் பின்னர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரை விட்டுக் கொடுக்க உமா மகேஸ்வரன் முன்வந்ததுடன், தனது அமைப்பிற்கு தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் என்றும் பெயர் சூட்டினார். இந்த அமைப்பினுள் உமாவுடன், மார்க்ஸிசச் சிந்தனையும், தத்துவார்த்த அடிப்படையில் காலம் காலமாக வீண் விவாதங்களில் ஈடுபட்டும் வந்த பல செயலற்ற உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். தனது சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் முட்டுக்கட்டையாகவிருந்த பல செயலற்ற சிந்தனாவாதிகள் தனது இயக்கத்தை விட்டுச் சென்றது குறித்து பிரபாகரன் நிம்மதி அடைந்திருந்தார். தமிழ் மக்களின் மனங்களில் தானும் ஒரு இடத்தினைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த உமா, அரசுக்கெதிராக அதிரடியான தாக்குதல்கள் சிலவற்றை நடத்தினார். மேலும், அரச சதியான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பங்கேற்கக் கூடாது என்று வன்மையாக எதிர்த்தும் வந்தார். இதேவேளை, தனது அரசியல் அதிகாரத்தை மேலும் பலப்படுத்த விரும்பிய ஜெயார். தனது அரசியல் வைரியான சிறிமாவின் அரசியல் எதிர்காலத்தைப் பாழாக்குவதன் மூலம் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறிமா போட்டியிடுவதை எப்படியாவது தடுத்துவிடலாம் என்று திட்டம்போட்டார். இதற்காக, தனது பிரதமரான பிரேமதாசவூடாக சிறிமாவின் குடிமை உரிமைகளை 7 ஆண்டுகளுக்குப் பறித்துப்போடும் தீர்மானம் ஒன்றினை 1980 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சிறிமாவோ திட்டமிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஜெயாரின் இந்தப் பழிவாங்கும் செயலினை எதிர்த்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், இரு தடவைகள் நாட்டை ஆட்சிபுரிந்த ஒரு பிரதமரின் குடிமை உரிமைகளைப் பறிப்பது ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கும் செயல் என்று விமர்சித்திருந்தனர். இறுதியாக, இந்தப் பழிவாங்கும் செயலில் இறங்கவேண்டாம் என்று அமிர்தலிங்கம் ஜெயாரிடம் கோரினார். இது முன்னணியினர் மீது ஜெயார் கடுமையாகக் கோபம் கொள்ளக் காரணமாகியது.
  13. அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா ! 1980 ஆம் ஆண்டு ஆவணி 8 ஆம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான பிரேரணையினை பிரதம மந்திரியான பிரேமதாசா பாராளுமன்றத்தின் முன்வைத்தபோது பிரச்சினை இன்னும் சிக்கலானது. அதனை உடனடியாகவே நிராகரிக்க வேண்டும் என்று இளைஞர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பிரேரணையினை பாராளுமண்ரத்திலேயே நிராகரித்துவிட்டு, வெளியே வந்து தனிழ்நாட்டிற்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், இளைஞர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க முன்னணி மறுத்துவிட்டது. பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை பிரேரணையினை ஆதரிப்பதென்றும், அதனை நடைமுறைப்படுத்த ஜெயாருக்கு தமது முழு ஆதரவினையும் வழங்குவதென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழு முடிவெடுத்தது. எரிக்கப்பட்டுக் காட்சிதரும் யாழ்ப்பாண நூலகம் சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் வவுனியாவில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பொதுச்சபை, அரசால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பான தமது தீர்மானத்தை கலந்தாலோசித்திருந்தது. சுமார் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் பேசிய அமிர்தலிங்கம் "இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாகும்" என்று கூறியதுடன் தமது கட்சி இதனை முற்றாக ஆதரிக்கும் என்றும் கூறினார். இச்சட்டத்தை தானும், தனது கட்சியும் ஏற்றுக்கொள்வதற்கு மூன்று காரணங்களை அமிர்தலிங்கம் முன்வைத்திருந்தார். முதலாவதாக, இச்சட்டத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கலை நாடு முழுவதற்கு விஸ்த்தரிக்க முடியும் என்று அவர் கூறினார். அபிவிருத்திப் பணிகளில் மக்களையும் இதன்மூலம் ஈடுபடுத்த முடியும் என்றும் அவர் கூறினார். இரண்டாவதாக, தமது கட்சி இந்தப் பிரேரணையினை ஆதரிக்காவிட்டாலும் கூட, பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கும் அரசாங்கம் நிச்சயம் அதனை நிறைவேற்றியே தீரும். ஆகவே, அதனை எதிர்த்து அரசுடன் பகைமையினை வளர்ப்பதைக் காட்டிலும், ஆதரித்து நட்புப் பாராட்டலாம் என்று அவர் கூறினார். மூன்றாவதாக, தமது கட்சி இந்தப் பிரேரணையினை ஆதரித்து சட்டமாக்க உதவுவதன் மூலம், தமிழ் மாவட்டங்களில் அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியும் என்றும், அவ்வாறில்லாமல் இதனை எதிர்த்தால் வடக்குக் கிழக்கில் இன்றுவரை அரசால் அபிவிருத்திப்பணிகளில் காட்டப்பட்டுவரும் மாற்றாந்தாய் மனப்பான்மை இனிமேலும் தொடரும் என்றும் அவர் வாதிட்டார். ஆனால், அமிர்தலிங்கத்தின் இந்த யோசனைக்குப் பலமான எதிர்ப்பு இளைஞர் மத்தியில் இருந்து வந்தது. அவரை விமர்சித்தவர்கள் இச்சட்டம் மிகவும் பலவீனமானதென்றும், இதனால் தமிழருக்கென்று நண்மைகள் ஏதும் இல்லையென்றும் வாதிட்டனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் டட்லி சேனநாயக்கவினால் வரையப்பட்ட பிராந்திய சபைகள் அடிப்படையிலான தீர்வினைக் காட்டிலும் ஜெயாரின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மிகவும் பலவீனமானவை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். டட்லியின் பிராந்திய சபைகளையே தமிழ் இளைஞர்கள் "மிகைப்படுத்தப்பட்ட நகர சபைத் தீர்வு" என்று ஏளனம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது. மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டத்தினை விமர்சித்தவர்களின் கருத்தின்படி சட்டவாக்கல் மற்றும் வரி அறவிடல் ஆகிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குப் போதுமானதாக இல்லையென்றும், மத்திய அரசாங்கத்தின் விருப்பின் அடிப்படையிலேயே இவை தீர்மானிக்கப்படும் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும், இந்த சட்டத்தினை தமிழர்களுக்கான தீர்வாக சர்வதேசத்திற்கு காட்டுவதே ஜெயாரின் உண்மையான நோக்கம் என்றும், இச்சட்டத்தினை அவர் ஒருபோதும் உண்மையாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ஈழவேந்தன் தமிழர் ஐக்கிய முன்னணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வவுனியா நகர மண்டபத்திற்கு வெளியே இளைஞர் குழுவொன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றில் இறங்கியது. அந்த இளைஞர்கள் பதாகை ஒன்றினை ஏந்தியிருந்தனர். "எமது இலட்சியத்திலிருந்து எம்மை திசைதிருப்பும் இந்த சட்டத்தினை உடனடியாக நிராகரியுங்கள்" என்று அந்தப் பதாகை கூறியது. கூட்டத்தின் முடிவில் அச்சட்டத்தினை தமது கட்சி ஏற்கும் என்று அன்று இரவு 9 மணிக்கு முடிவெடுத்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியே வந்த அமிர்தலிங்கத்தைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் "அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா, அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா" என்று ஆக்ரோஷமாகக் கூச்சலிடத் தொடங்கினர். அதாவது, அமிர்தலிங்கம் சிங்களவர்களுக்கான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் என்று பொருள். அந்தச் சத்தியாக்கிரகத்தை ஒழுங்குசெய்த ஈழவேந்தன் எழுந்துசென்று, அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையற்கரசியின் முன்னால்ப் போய் அழுதுகொண்டே, "உங்களின் கணவர் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார்,உங்களுக்கு வணக்கம்" என்று கூறிவிட்டுச் சென்றார். கனகேந்திரன் எனும் இயற்பெயரைக் கொண்ட ஈழவேந்தன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் பலகாலம் பணிபுரிந்தவர் என்பதுடன், செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியின் முக்கிய அமைப்பாளராக ஆரம்ப காலங்களில் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஈழவேந்தனின் அந்த இறுதி விடைபெறுதல் நிகழ்வு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குள் இருந்த பிளவை முழுமையாக்கியிருந்தது என்றால் அது மிகையில்லை. முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற கோவை மகேசனின் அமைப்பு தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் புதிய அமைப்பினை உருவாக்கியது. இப்புதிய அமைப்பின் தலைவராக கலாநிதி தர்மலிங்கமும், செயலாளராக ஈழவேந்தனும் நியமிக்கப்பட்டார்கள். அக்காலத்தில் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். தனது அமைப்பை மீள உருவாக்கிக் கட்டமைக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். தான் எப்படியாவது மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கவேண்டும் என்று அவர் உறுதி பூண்டிருந்தார். தனக்கு விசுவாசமான, தனது நோக்கத்தினைச் செவ்வணே நிறைவேற்றும் கெரில்லா அமைப்பொன்றினை உருவாக்க அவர் விரும்பினார். தேவையற்ற விவாதங்களும், பலனற்ற தத்துவார்த்தச் சிந்தனைகளும், இயக்கம் எப்படி பயணிக்கவேண்டும் என்பது குறித்து காலவரையறையின்றி நடக்கும் கலந்துரையாடல்களும் ஒருபோதும் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தப்போவதில்லை என்று அவர் திடமாக நம்பினார். ஆகவே, தந்தை செல்வாவைப்போன்று தானும் யதார்த்தமான வழிகளைப் பின்பற்ற விரும்பினார். ஒரே தலைவன், ஒருவனே தீர்மானம் எடுப்பது, தமிழ் மக்களின் விடுதலையினை வென்றெடுக்க ஒரே சிந்தனையுடன் இலட்சியத்தில் பயணிப்பது ஆகியவையே அவரைப்பொறுத்தவரை தனது இயக்கத்திற்குத் தேவையானதாக இருந்தது. பிரபாகரனின் தளபதிகளில் ஒருவராக கிட்டு அவர்கள் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் இற்கு வழங்கிய நேர்காணலில் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். தமிழர்களின் தலைவர் தான் மட்டுமே என்ற காரத்தினால்த்தான் தந்தை செல்வாவினால் பிரதமர்களான பண்டாரநாயக்கவுடனோ அல்லது டட்லி சேனநாயக்கவுடனோ நேரடியாக ஒப்பந்தங்களைச் செய்யக்கூடியதாக இருந்தது என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாகக் கிட்டு கூறுகிறார். தந்தை செல்வா தன்னுடன் G G பொன்னம்பலத்தையோ அல்லது சுந்தரலிங்கத்தையோ உடன் அழைத்துச் சென்றிருந்தால், தந்திரசாலிகளான சிங்களப் பிரதமர்கள் இருவரும், தமிழர்களின் பிரதிநிதிகளுக்குள் பிளவினை உருவாக்கி பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பினைப் பலவீனப்படுத்தியிருப்பார்கள் என்று பிரபாகரன் கிட்டுவிடம் கூறியிருக்கிறார்.
  14. நல்ல ஒரு முக்கிய வரலாற்றினை ஆவணப்படுத்துகின்ற உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது, தொட்ருங்கள்...
  15. யாழ் நூலக எரிப்பு யாழ்ப்பாணம் நூலகம் பிரிகேடியர் வீரதுங்கவின் சுற்றிவளைப்பு மற்றும் தேடியழித்தல் இராணுவ நடவடிக்கைகளினால் போராளிகள் அடங்கி ஒடுங்கிவிட்டார்கள் என்று நினைத்த ஜெயார், தனது அரசியல் இருப்பினை மேலும் பலப்படுத்தும் முகமாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பிரேரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த விழைந்தார். இந்த விசேட ஆணைக்குழு ஜெயாரினால், நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் 1979 ஆம் ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் திகதி அமைக்கப்பட்டிருந்தது. தனது பிரேரணைகளை ஆணைக்குழு 1980 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஒரு அறிக்கையாகச் சமர்ப்பித்திருந்தது. தென்னக்கோனின் இந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கும் இடையே உருவாகி வந்த விரிசலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அறிவிப்பை ஜெயார் வெளியிட்டிருந்த காலப்பகுதியில் , 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கெதிராக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காதது குறித்து அக்கட்சியின் இளைஞர் பிரிவு தனது ஆட்சேபணையினை வெளியிட்டிருந்தது. வட மாகாணத்தின் பலவிடங்களிலும் தமது தலைமையினை விமர்சித்து சுலோககங்கள் எழுதப்பட்டிருந்தன. "நீங்கள் பெற்றுத்தருவதாகக் கூறிய ஈழம் இதுதானோ?" என்று ஒரு வாசகம் தலைமையைக் கேள்வி கேட்டிருந்தது. தந்தை செல்வாவின் இளைய மகனும், இந்தியக் கைக்கூலியுமான எஸ் சி சந்திரகாசன் 1979 ஆம் ஆண்டு மார்கழி 27 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் தற்காலிகமாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட வேளை மாவை சேனாதிராஜா சிறையிலிருந்து வெளியே வந்தார். வெளியே வந்ததும், சுதந்திரன் அமைப்பினரோடு சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தார். சுதந்திரன் பத்திரிக்கை தந்தை செல்வாவினால் தனது சமஷ்ட்டிக் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் இப்பத்திரிக்கை தமிழர் ஐக்கிய முன்னணியின் கொள்கைகளையும் முன்னெடுத்துச் சென்றிருந்தது. 1977 ஆம் ஆண்டு தந்தை செல்வாவின் மரணத்திற்குப் பின்னர் அவரது இளைய மகனான எஸ் சி சந்திரகாசன் நடத்தி வந்தார். 1980 ஆண்டு சித்திரை 2 ஆம் திகதி இப்பத்திரிக்கை மிகவும் காரசாரமான தலையங்கத்தைத் தாங்கி வெளிவந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினைக் கடுமையாக விமர்சித்திருந்த இப்பத்திரிக்கை, போலியான மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் காட்டி தமிழரை ஏமாற்றாமல் தாம் உறுதியளித்தவாறு சுதந்திரத் தனிநாடு நோக்கிய பயணத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. அக்காலத்தில் சுதந்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக கோவை மகேசனே செயற்பட்டு வந்தார். கோப்பாயைச் சேர்ந்த மகேஸ்வர ஷர்மா தனது பெயரைக் கோவை மகேசன் என்று மாற்றியிருந்தார். அரசியல் மடல் எனும் தலைப்பில் அவர் எழுதிவந்த தீவிர அரசியல் கட்டுரை பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டு வந்தது. அவ்வாறானதொரு அரசியல் கட்டுரையில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கோவை மகேசன் அதனை எள்ளி நகையாடியுமிருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் உத்தியோகபூர்வப் பத்திரிக்கையாக இருந்தபோதும், கோவை மகேசனின் அரசியல் கட்டுரைப்பகுதியில் தலையிடுவதில்லை என்கிற தந்தை செல்வாவின் முடிவினால் அமிர்தலிங்கமோ அல்லது முன்னணியின் தலைவர்களோ கோவை மகேசன் முன்வைத்து வந்த விம்ர்சனங்களை கட்டுப்படுத்த முடியாமல்ப் போயிற்று. மேலும், முன்னணியினரின் கருத்துப்படி கோவ மகேசனுக்கு தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசனின் பலமான ஆதரவு இருந்தமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என்கிறர்கள். ஆகவே, கோவை மகேசனின் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளிக்க அமிர்தலிங்கம் உதயசூரியன் எனும் பெயரில் இன்னொரு பத்திரிக்கையினை ஆரம்பித்தார். அப்பத்திரிக்கையை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ பத்திரிக்கை என்றும் அவர் அழைக்கத் தொடங்கினார். அப்பத்திரிக்கை பறவைகளே பறவைகளே எனும் தலைப்பில் விசேட பகுதியொன்றைத் தாங்கி வெளிவந்தது. இப்பகுதியை கோவை மகேசனின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ஒரு களமாக அமிர்தலிங்கம் பாவித்து வந்தார். இவ்விரு பத்திரிக்கைகளினதும் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் விவாதங்கள் வாசகர்களான தமிழ் மக்களை பெரிதும் ஈர்த்திருந்தன. உதாரணத்திற்கு, கோவை மகேசன் ஒருமுறை சுதந்திரனில் பின்வருமாறு எழுதியிருந்தார், "சோறு வேண்டாம் சுதந்திரமே வேண்டும் பாலம் வேண்டாம் ஈழமே வேண்டும்" அதற்கு உதயசூரியனில் பதிலளித்த அமிர்தலிங்கம் பின்வருமாறு எழுதுகிறார், "சோறும் வேண்டும் சுதந்திரமும் வேண்டும் பாலமும் வேண்டும் அந்தப் பாலத்தை வைத்தே ஈழத்தை உருவாக்கும் விவேகமும் வேண்டும்". அவ்வேளை மாவை சேனாதிராஜாவும், உணர்வெழுச்சிகொண்ட இளையவர்களான ஈழவேந்தன், தர்மலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய கோவை மகேசன் அமைப்பும் ஒருங்கிணைந்து வெளியிட்ட தீர்மானத்தில் 1980 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதிக்குள் தனிநாடு நோக்கிய பயணத்தை முன்னணியினர் ஆரம்பிக்காதுவிடில், தாம் பிரிந்து சென்று அதனைச் செய்யப்போவதாக அச்சுருத்தியிருந்தனர். சிறிது நாட்களின் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் ஒருபோதுமே செயலில் இறங்கமுடியாது என்று விமர்சித்துவிட்டு மாவை சேனாதிராஜா அக்கட்சியிலிருந்து விலகிச் சென்றார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், அதன் இளைஞர் பிரிவுக்கும் இடையிலான விரிசல் 1980 ஆம் ஆண்டு மேதினத்தில் அப்பட்டமாக வெளித்தெரிந்தது. அன்றைய நாளை முன்னணியினர் வழமையான மேதின பேரணியாக அனுஷ்ட்டித்தபோது, அதில் பங்கேற்ற தமிழ் இளைஞர் பேரவையினர், முன்னணியினரின் தலைமைப்பீடத்திற்கெதிராகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர். "தமிழ் மக்களுக்கு உறுதியளித்ததன்படி எப்போது தமிழ் ஈழத்திற்கான பாராளுமன்றத்தை உருவாக்கப்போகிறீர்கள்?", "உங்கள் பாராளுமன்றப் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு தனிநாட்டிற்கான விடுதலைப் போராட்டத்தை உடனே ஆரம்பியுங்கள்", "அதிகாரப் பலம் தளபதியையே பாதை மாற வைத்துவிட்டதோ?" என்று சுலோகங்கள் எழுப்பப்பட்டன. இது அமிர்தலிங்கத்திற்கு சினத்தை ஏற்படுத்தியது. ஆகவே, பேரணியின் நிறைவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமாக அவர் பேசினார். அவ்வுரையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினை விமர்சிப்பவர்கள் மீதும், போராளிகள் மீதும் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். போராளி அமைப்புக்களை எள்ளி நகையாடிய அமிர்தலிங்கம், "சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று பகிரங்கமாக ஏளனம் செய்தார். தொடர்ந்து உரையாற்றிய அமிர்தலிங்கம், "நீங்கள் சிறு குழுக்களாக அலைந்து திரிகிறீர்கள். நீங்கள் அழிவுகளையே எம்மீது கொண்டுவரப்போகிறீர்கள்" என்று கடிந்தும் கொண்டார். அப்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராக இருந்த சிவசிதம்பரம் அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்துப் பேசினார். தலைமையினை விமர்சிப்பவர்களைப் பார்த்து, "அமிர்தலிங்கத்தை அகற்றிவிட்டு உங்களால் எதையாவது சாதிக்க முடியுமா?" என்று அவர் கேட்டார். உங்களின் ஆதரவிற்கு நன்றியண்ணா
  16. பரராய சேகரன் தாய் பரிவுடன் தான் விளங்க அரசமாளிகைக்கு அருகாய் அழகு மிகு கோயில் கட்டி பிரதிஸ்ட்டை செய்துவைத்த பெரும் கோவில்தானிந்த பிரவிய நல்லிடம்தானே விநாயகர் தன் பதியாகும் பிரவிய நல்லிடம்தானே காட்டா விநாயகர் தன் பதியாகும்
  17. இதைத்தான் அசல் பகிடி எண்டு சொல்லுறது. நில்(மினி) ஓடி(மினி) ஆகிய இடம் மடகஸ்கார். பி கு: அப்பா இருந்தா கவலைப்பட்டிருப்பாரே? அவரது நீல மாணிக்கத்தை (Nilmini) எல்லோரும் பகிடி பண்ணுகிறார்கள் என்று ☺️ நன்றி சுவி. நிறைய சுவாரசியமான கதைகள் இருக்கு. கட்டுரை தொடரும்.
  18. இலையான் கில்லர் வித்தியாசமான முயற்சி இரசிக்கக்கூடியதாக இருக்கிறது.
  19. இன்னும் இலையான் கில்லருக்கு கெட்டிக்காரன் கெட்டிக்காறி அகப்படவில்லை. நல்ல பதிவு இலையான் கில்லர்.🙂
  20. அண்டாசிபே லெமூர் சரணாலயத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் லெமூர் தீவுக்கு விடிய காலமய் படகுகளில் புறப்பட்டோம். வெள்ளைக்காரர்களுக்கு பொதுவாக படகோட்டல் நீர், மலை, காடு சம்பத்தப்பட்ட விடயங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்றபடியால், எனக்கும் படகோட்டத்தெரியும் என்று நினைத்திருந்தார்கள். ஏரிக்கு அருகில் சென்றதும் ஒரு படகுக்கு இருவர், நாலு துடுப்புகள் என்று எடுத்துக்கொண்டு படபடவென்று ஏறிவிட்டார்கள். எனக்கு படகு ஓட்டத்தெரியாது என்று அவர்களிடம் உடனேயே சொல்லிவிட்டேன். எம்முடன் வந்த guide, தான் என் படகில் முன்னுக்கு இருந்து துடுப்பை இயக்குவதாகவும், நான் எப்படி பின்னுக்கு இருந்து அதே மாதிரி செய்யவேண்டும் என்றும் சொல்லித்தந்தான். அமைதியான ஏரிதான். என்றபடியால் பிரச்சனை இல்லை என்று ஒருமாதிரி நானும் படகை ஓட்டினேன். அரைவாசி வழியில் ராட்சத மரம் ஒன்று அரைவாசி வெட்டப்பட்டு எரிந்த நிலையில் குறுக்கே விழுந்திருந்தது. மடகாஸ்கர் மக்கள் பொருளாதார பிரச்சனைகளால் சட்டத்தை மீறி காடுகளையும், மிருகங்களையும் அழித்து வருகிறார்கள். அந்தமரத்தை கடந்து படகை எடுத்துக்கொண்டு நாமும் போகவேண்டும் என்பது நினைத்துப்பார்க்க முடியாத மாதிரி இருந்தது. எல்லோருக்கும் ஒத்தபடிதானே என்று நான் அவ்வளவு கவலைப்படவில்லை. உதவிக்கு வந்த சிலருடன் உதவியுடன் படகில் இருந்து மரத்தில் ஏறி பிறகு, அவர்கள் படகை மற்றப்பக்கம் கொண்டுவர திரும்ப படகுப்பயணம் தொடர்ந்தது. அப்பாடா என்று நினைக்கும் முதல் பாறைகள் நிறைந்த எரிப்பக்கத்தில் நீரின் ஓட்டம் அதிகமாக இருந்தது. என்னுடன் படகை ஒட்டிய மடகாஸ்கர் காரனே கொஞ்சம் படபடத்தமாதிரி இருந்தது. வந்த எல்லோருமே மிகவும் பயந்து போனோம். இடையிடையே படகைவிட்டு பாறையில் ஏறி நிற்பதும் பிறகு படகில் போவதுமாக ஒருமாதிரி லெமூர் தீவை சென்றடைந்தோம். தூரத்தில் எங்களை கண்டதுமே அழகான ரிங் டெய்ல் லெமூர் இன மிருகங்கள் ஏரியின் கரையில் வந்து வரவேற்பதுபோல் ஆவலாக நின்றார்கள். படகுகள் அவர்களை அண்மித்ததும் பாய்ந்தோடிவந்து எங்கள் தோள்மூட்டு, தலை என்று ஏறி நிண்டுகொண்டார்கள். கூட்டி வந்த guide மார் வாழைப்பழங்களை தந்து அவர்களுக்கு கொடுக்கும்படி கூறினார். மிகவும் நற்பான மனிதர்களை நம்பும் காட்டு விலங்கினங்கள் அவை. எமது மாணவிகள் செல்பி எடுக்க வெளிக்கிட்டவுடனேயே அந்த லெமூர்கள் அவர்களது தலையில் இருந்துகொண்டு தாமும் போஸ் கொடுத்தது மிகவும் அழகாக இருந்தது.
  21. விஸ்வரூப ஆஞ்சநேயா ஆஞ்சநேயா ஆஞ்சநேயா கண்திறந்து பார்ப்பவரே பார்ப்பவரே பார்ப்பவரே விஸ்வரூபம் கொண்டு நீங்கள் கொண்டு நீங்கள் கொண்டு நீங்கள் சிலையாக நிப்பவரே நிப்பவரே நிப்பவரே வெற்றிலையில் தினம் தோறும் மாலைக்காட்டி வழிபடுவோம்
  22. பிரணவமே அருள்வாய் வற்றாபளை கருணை நிறைந்த அன்னை கண்ணகி பதம் பாட கருணை நிறைந்த அன்னை கண்ணகி பதம் பாட பிரணவமே அருள்வாய் வற்றாபளை சரவணனுக்கு அருளும் சசிவர்ணனே கணேஷா வற்றாப்பளை கண்ணகி அம்மன்
  23. திருக்கோவில் முருகனுக்கு திருவிழா தெய்வயானை வள்ளி உடன் மண விழா திருக்கோவில் முருகனுக்கு திருவிழா தெய்வயானை வள்ளி உடன் மண விழா அருட்கோல வேலனுக்கு பெருவிழா அந்த ஆறுமுக கந்தனுக்கு திருவிழா பெருவிழா திருக்கோவில்! திருக்கோவில் முருகனுக்கு திருவிழா மட்டுநகர் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமிகளுக்கு பாடிய பாடல்
  24. இந்த பயணம் மிகவும் தனித்துவமான ஒரு சுற்றுலாவாக இருந்ததற்கு முக்கிய காரணங்கள் ஆய்வு நிமித்தமாக ஒரு உலக அமைப்பினர் எமது பயணத்தை ஒழுங்கு செய்து மடகஸ்காரில் உள்ள அவர்களது கிளை உறுப்பினர்கள் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு முக்கியமான இடங்களுக்கு அழைத்து சென்றமைதான். அங்கிருந்த 12 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து நள்ளிரவு வரை காடு மேடு வனாந்திரம் எல்லாம் ஒரே ஹைக்கிங் தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போவதானல், கிட்டஎன்றால் van அல்லது நேரத்தை வீணாக்காமல் சிறிய ரக விமானத்தில்தான் பயணித்தோம். ஒரு ஆபத்தான விலங்குகளும் மடகஸ்காரில் இல்லாதால் இரவிரவாக காடுகளில் நடமாட பயப்படத்தேவை இல்லை. பாம்புகள் இருக்கு ஆனால் நச்சுப்பாம்புகள் அல்ல. உலகில் சிங்கம், புலி, யானை, கரடி, மலைப்பாம்பு மாதிரி மிருகங்கள் கூர்ப்பு அடைந்து தோன்ற முன்னமே, மடகாஸ்கர் ஆபிரிக்க பெரும் நிலப்பரப்பில் இருந்து பூமித்தட்டுகளின் அசைவு காரணமாக தனியே விலகி சென்றுவிட்டது. அதனால் தான் உலகின் மற்ற இடங்களில் இருந்த லெமூர் மாற்று ராட்சத பச்சோந்திகள், பறவைகள் எல்லாவற்றையும் பின்பு தோன்றிய வேட்டையாடும் விலங்குகள் கொன்றழித்து விட்டன. மற்ற மிருகங்களை காட்டிலும், மிகுந்த அழிவை தரும் மனித விலங்குகளால் தான் பல விலங்கினங்களும் அழிந்து போய்விட்டன. மடகாஸ்கரும் அதற்கு விலக்கல்ல. ஆனால் அங்கு மனிதர்கள் குறைவாக இருந்ததாலும், குடியேறச்சென்ற மனிதர்கள் புலி, சிங்கங்களை கொண்டு போகாமல் நாய் பூனைகளை கொண்டு சென்றதால் ஓரளவுக்கு இந்த லெமூர் உற்பட மிகப்பழைய விலங்கினங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றன. ஆனாலும் நாய்கள் பெருகி காட்டுக்குள் சென்று இந்த அரிய வகை மிருகங்களை கொல்வதும், மடகஸ்காரின் அரசியல், பஞ்சம் என்பவற்றால் நிறைய அழிவுகளை சந்தித்திக்கொண்டு இருக்கிறது. காடுகளை சட்ட விரோதமாக அழித்து எரிபொருள், கட்டடம் கட்ட என்றும் ஒரு பக்கத்தால் அழிவு. பொதுவாக அமெரிக்கர்களை ஒருவருக்கும் பிடிக்காது. ஒன்றில் பொறாமை அல்லது அவர்கள் எல்லோரிடமும் சண்டை போடுபவர்கள் என்பதால். அது அவர்களுக்கும் தெரியும். தாம் உலகில் எங்கு சென்றாலும் ஒருவித சந்தேகத்துடன் தான் பயணிப்பார்கள். ஆனால் மடகஸ்காரில் அமெரிக்கர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு. ஏனென்றால் பட்ரிசியா ரைட் என்னும் பெண் விஞ்ஞானி 1960 ஆண்டுப்பகுதியில் அங்கு சென்று இந்த லெமூர் மற்றும் விலங்குகளை பாதுகாக்க பெரும் பாடு பட்டு, அங்கு ஒரு ஆய்வு நிலையமும் அமைத்து இன்று அது மிகப்பெரும் உதவிகளை செய்து வருகிறது. https://www.stonybrook.edu/commcms/centre-valbio/. அதானல் எமது குழுவினருக்கு பெருமிதமும் மகிழ்ச்சியும். இன்னும் தொடரும்……
  25. தோழர்கள் பெருமாள் நுணா அகஸ்தியன் தமிழ் சிறி ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
  26. பெருமாள் ,அகஸ்தியன் ,நுணா, தமிழ்சிறி அண்மையில் பிறந்தாளை கொண்டாடிய அனைவர்க்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  27. விசாரணைக் கமிஷன்களில் நம்பிக்கையிழந்த தமிழர்கள் நீதித்துறை மீதிருந்த தமிழர்களின் நம்பிக்கை இல்லாமற்போனது 1977 ஆம் ஆண்டு ஆவணியில் தமிழர்களுக்கெதிரான பொலீஸாரின் வன்முறைகளை மறைக்கத் துணைபோன குற்றத்திற்காக பொலீஸ் ஆய்வாளர் குருசாமி டெலோ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசாங்கத்தால் அமைக்கப்படும் விசாரணைக் கமிஷன்களில் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாகவே குருசாமியின் தண்டனை நிகழ்ந்திருந்தது. முக்கியமாக கண்துடைப்பிற்காக அமைக்கப்பட்ட சன்சொனி விசாரணைக் கமிஷன் அரசு எதிர்பார்த்ததையே செய்துமுடித்திருந்தது. ஆவணி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பொலீஸார் மேற்கொண்ட அட்டூழியங்களைப் பாராளுமன்றத்தில் பதிவுசெய்து, அவைதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று அமிர்தலிங்கம் கேட்டுக்கொண்டதன் பின்னர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சன்சொனி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை ஜெயவர்த்தன 1977 ஆம் ஆண்டு கார்த்திகை 9 ஆம் திகதி அமைத்திருந்தார். அமிர்தலிங்கத்தைப் பொய்யர் என்று நிறுவுவதற்கும், பொலீஸாரின் வன்முறை குறித்த அவரது தகவல்கள் யாவும் பொய்யானவை என்று நிறுவுவதற்கும் சன்சொனி விசாரணைக் கமிஷனை அரசும் பொலீஸாரும் மிக நேர்த்தியாகப் பாவித்துக் கொண்டனர். தனிநாட்டிற்கான கோர்ரிக்கையினை தமிழ் மக்களும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்ததும், அதுநோக்கிய வன்முறைச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதும் சிங்கள மக்களை சினங்கொள்ள வைத்தது மட்டுமல்லாமல் ஆவணி வன்முறைகள் நடைபெறுவதற்கு ஏதுவான பதட்டமான சூழ்நிலையினை தமிழர்களே ஏற்படுத்தியிருந்தனர் என்றும் சன்சொனி கமிஷன் கூறியிருந்தது. முடிவாக, "நீங்கள் கேட்டுக்கொண்டதே உங்களுக்கு வழங்கப்பட்டது" என்று தமிழர்களுக்கு இந்தக் கமிஷன் பதிலளித்திருந்தது. சோல்பரி பிரபு ஆனால், இலங்கையின் நீதித்துரை மீதிருந்த நம்பிக்கையினை தமிழர்கள் ஏற்கனவே இழந்துவிட்டிருந்தனர். சோல்பரி அரசியலமைப்பின் பிரகாரம் சரத்து 29 இல் குறிப்பிடப்பட்டிருந்த சிறுபான்மையின மக்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதை இலங்கையின் நீதித்துறை முற்றாக மறுத்திருந்தது. சோல்பரி யாப்பின் சரத்து 29 இவ்வாறு கூறுகிறது, "ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்த ஒருவருக்கோ அல்லது ஒரு பிரிவினர்க்கோ வழங்கப்படும் அந்தஸ்த்து மற்றைய இன, மத பிரிவுகளைச் சேர்ந்த ஒருவருக்கோ அல்லது ஒரு பிரிவினருக்கோ வழங்கப்படும் அந்தஸ்த்தினைக் காட்டிலும் அதிகமாக இருக்க முடியாது" "பாராளுமன்றத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்குமிடத்து அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யவியலும்" சோல்பரி யாப்பின் பிரகாரம் நீதிக்கு முறணான வகையில் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட பல லட்சம் மலையகத் தமிழர்கள் விடயத்தில் நீதித்துறை தலையீடு செய்து தவற்றினைத் திருந்த்திக்கொள்ள இருவேறு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன. முதலாவது தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசுகள் கொண்டுவந்த பாகுபாட்டு முறைகளைத் திருத்தக்கூடிய சந்தர்ப்பம். பதுர்தீன் எனும் மனிதர் ஆரம்பித்த வழக்கில் இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தில் புகுத்தப்பட்ட "சாதாரண வதிவாளர்" எனும் பதத்தினை நீதித்துறை பாவித்த விதம் பற்றியது. அரச வழக்கறிஞர்களின் கூற்றுப்படி மனுதாரரின் மனைவியும் பிள்ளைகளும் குறைந்தது 7 வருடங்களாவது இலங்கையில் வாழ்ந்திருந்தால் மட்டுமே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகமையினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் வழக்கின் நீதிபதி பஸ்நாயக்கவோ, 7 வருடங்கள் தேவையில்லை, விண்ணப்பிக்கும் நேரத்தில் அவரது குடும்பம் அவருடன் இருந்தாலே போதுமானது என்று கூறி தீர்ப்பு வழங்கியிருந்தார். இதன்மூலம் சுமார் 50,000 தமிழர்கள் தமது பிரஜாவுரிமைகளை மீளப் பெற்றுக்கொள்ளும் வழி பிறந்திருந்தது. ஆனால் சுதாரித்துக்கொண்ட அரசு தனது பிரஜாவுரிமைச் சட்டத்தினை தனக்கு ஏற்றவகையில் மாற்றி இந்தச் சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கியது. இதன்மூலம் பல்லாயிரம் தமிழர்களுக்கு நீதித்துறையின் தலையீட்டினால் கிடைத்திருக்கவேண்டிய பிரஜாவுரிமை அரசால் தட்டிப் பறிக்கப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பினைப் பாவித்தே அரசு இதனைத் தனக்குச் சாதகமாக மாற்றியிருந்தது. சோல்பரி அரசியல் யாப்பின் பிரிவு 29 இன்படி முதன்முதலாக பதிவுசெய்யப்பட்ட வழக்கு கேகாலை மாவட்டத்தின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் கே ஜி எஸ் நாயர் என்பவரால் பதிவாளருக்கு எதிராகப் போடப்பட்டிருந்தது. தேர்தல் தொகுதியில் தன்னை ஒரு வாக்காளராக பதிவு செய்ய மறுத்தமைக்காகவே இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என் சிவஞானசுந்தரம், நாயரின் பெயர் வாக்காளர் பட்டியலில் மீளவும் சேர்க்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். சோல்பரி யாப்பின் சரத்து 29 இன்படி ஒரு இனம் மற்றைய இனம் மீது நீதிக்குப் புறம்பான வகையில் சலுகைகளைப் பெறமுடியாது எனும் சரத்தினைப் பயன்படுத்தியே பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு மேலாகச் சென்று யாப்பின்பிரகாரம் நீதி வழங்கியிருந்தார். ஆனால், இந்த தீர்ப்பிற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றை குடியகல்வு - குடிவரவு ஆணையாளர் மதநாயக்க பதிவுசெய்தார். இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளான ஜயதிலக, புள்ளே மற்றும் சுவான் ஆகியோர் 1952 ஆம் ஆண்டு கேகாலை மாவட்ட நீதிபதியின் தீர்ப்பை உடைத்தெறிந்ததோடு பிரஜாவுரிமைச் சட்டம் எந்தவொரு இனப்பிரிவிற்கும் மற்றைய இனப்பிரிவுகளைக் காட்டிலும் அதிக சலுகைகள் வழங்கவில்லையென்றும், சோல்பரி யாப்பிற்கெதிராக பிரஜாவுரிமைச் சட்டம் பாவிக்கப்படவில்லையென்றும் தீர்ப்பு வழங்கினர். 1961 ஆம் ஆண்டு மார்கழியில் அரசால் வெளியிடப்பட்ட திறைசேரியின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் அரச சேவையில் எழுதுவிளைஞராகப் பணிபுரியும் ஒருவர் சம்பள உயர்வினைப் பெறவேண்டுமென்றால் சிங்கள மொழிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் அரச எழுதுவிளைஞராக இருந்த சி. கோடீஸ்வரன் அவர்களின் வருடாந்த சம்பள உயர்வுகள் அவர் சிங்கள மொழிப் பரீட்சையினை எழுதாதனால் தடுத்துவைக்கப்பட்டிருந்தன. ஆகவே, சோல்பரி யாப்பில் கூறப்பட்டதற்கு முரணான விதத்தில் இந்த சுற்றுநிருபம் அனுப்பட்டுள்ளதென்றும், ஆகவே தனது சம்பள உயர்வுகள் தடையின்றித் தனக்குக் கிடைக்கப்பெறவேண்டும் என்றும் கோரி கோடீஸ்வரன் அவர்கள் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த சுற்று நிருபத்தை அனுப்பும்படி கட்டளையிட்டவர் அன்றிருந்த அரச சேவைகள் அமைச்சரான பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்க என்பதுடன், தனிச்சிங்களச் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றுநிருபம் சகல அரச நிறுவனங்களுக்கும் கூட்டுத்தாபனங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க கொழும்பு நீதிமன்றத்தில் தனது வழக்கினைப் பதிவுசெய்த கோடீஸ்வரன் சிறுபான்மையினமான தமிழினத்திலிருந்து தான் வந்துள்ளதால் சிங்களம் தெரிந்தாலன்றி சம்பள உயர்வு தரமுடியாதென்பது சோல்பரி யாப்பிற்கெதிரான செயற்பாடு என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் தமிழர்களின் பாரம்பரிய வாழிடங்களில் பணிபுரியும் சிங்கள அதிகாரிகள் தமிழில் பணிபுரியத் தேவையில்லை என்கிற அனுமதி இருக்கின்ற அதேவேளை, தமிழர்களின் பூர்விக்கத் தாயகத்தில் தனது சொந்த மொழியான தமிழில் பணிபுரியும் தமிழர்கள் கட்டாயம் சிங்கள மொழியினைக் கற்றிருக்கவேண்டும் என்கிற அழுத்தம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இது தமிழர்களைக் குறிவைத்தே கொண்டுவரப்பட்ட சதியென்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், இந்த வழக்கு அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துகொண்ட அரச தலைமைச் சட்ட அதிகாரி, அரச பணியில் இருக்கும் ஒருவர் சம்பள உயர்வு தொடர்பாக அரசிற்கெதிராக வழக்குத் தக்கல் செய்யமுடியாது எனும் விவாதத்தை முன்வைத்து இவ்வழக்கிற்கெதிரான தடையொன்றினைக் கேட்டிருந்தார். அரச தலைமை சட்டவாளரின் தடைக் கோரிக்கையினை நிராகரித்த மாவட்ட நீதிபதி கோடீஸ்வரனுக்குச் சார்பாக தீர்ப்பளித்ததோடு சோல்பரி அரசியல் யாப்பிற்கு எதிராக தனிச் சிங்களச் சட்டம் இயங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இத்தீர்ப்பிற்கெதிராக அரசு உச்சநீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. அரசு சார்பில் வழக்காடிய வழக்கறிஞர்கள் கோடீஸ்வரனின் வழக்கு ஆங்கில சட்டங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், சாதாரண ஊழியர் ஒருவர் அரசுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று வாதாடினர். ஆனால் கோடீஸ்வரனின் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் ரங்கனாதன் மூல வழக்கு ரோமன் டச்சுச் சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டதால் அரச ஊழியர் ஒருவர் அரசிற்கெதிராக வழக்காட முடியும் என்று வாதாடினார். வழக்கின் முடிவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு ஆங்கில சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் ஊழியர் ஒருவர் சம்பள விடயங்கள் தொடர்பாக அரசிற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்ததுடன் தனிச் சிங்களச் சட்டத்தினை இந்த நீதிமன்றத்தில் விவாதிக்கவேண்டிய தேவையும் இல்லையென்று கூறியிருந்தார். ஆனால் தொடர்ந்தும் போராடிய கோடீஸ்வரன், ஆளுநரால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் முன்னிலையில் தனது வழக்கைக் கொண்டு சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, கோடீஸ்வரன் அரசிற்கெதிராக வழக்காடும் உரிமையினைப் பெற்றிருப்பதாகக் கூறித் தீர்ப்பளித்ததுடன், தனிச் சிங்களச் சட்டம் குறித்து வழக்கில் எதுவும் குறிப்பிடப்படாததால் இந்துதொடர்பாக தாம் தீர்ப்பெதுவும் வழங்கத் தேவையில்லை என்றும் கூறியது. மேலும், தேவையேற்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் தனிச்சிங்களச் சட்டம் குறித்து விசாரிக்கலாம் என்று கூறியபோதும் இலங்கையரசு வழக்கை நீட்டிச் செல்வதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. கோடீஸ்வரன் விரும்பியிருந்தால் வழக்கினை மேலும் தொடர்ந்திருக்க முடியும். ஆனால், அரச நிர்வாக அமைச்சினால் விநியோகிக்கப்பட்ட சுற்று நிருபத்தில் மாற்றங்களைச் செய்து தமிழர்கள் அனைவருக்கும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வுகளை மீள வழங்க அரசு ஒத்துக்கொண்டதனால் அவரும் தொடர்ந்து வழக்காடுவதை நிறுத்திக்கொண்டார். இந்த மூன்று நீதிமன்றங்களிலும் முன்வைக்கப்பட்ட வாதங்களின்படி தனிச்சிங்களச் சட்டம் செல்லுபடியற்றதாக நிரூபிக்கப்பட்டதுடன், அதுதொடர்பாக விவாதங்களையும் இம்மூன்று நீதிமன்றங்களும் தவிர்த்தே வந்தன. ஆனாலும், இந்த நீதிமன்றங்களின் கருத்தினை உதாசீனம் செய்த அரசு தொடர்ந்தும் தனிச் சிங்களச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்ததுடன், நீதித்துறையின் சுயாதீனத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. 1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமா, நீதிமன்ற தீர்ப்பினை மீறி, தனிச்சிங்களச் சட்டத்தினை 1972 ஆம் ஆண்டு யாப்பினுள் உள்வாங்கியதோடு, சோல்பரி அரசியல் யாப்பிலிருந்தும் விலகிக்கொண்டார். 1972 ஆம் ஆண்டு யாப்பின்படி பாராளுமன்றா அதிகாரம் பொறுந்திய அமைப்பாக மாறியதுடன், ஆளுநரூடாக வழக்குத் தாக்கல் செய்யும் பிரிவி செயன்முறையினையும் முற்றாக இல்லாமலாக்கியிருந்தது. அமிர்தலிங்கத்திற்கெதிராக பதிவுசெய்யப்பட்ட ட்றையள் அட் பார் வழக்கில் 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பு இரு முக்கிய விடயங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தது. வழக்கறிஞர் திருச்செல்வம் இதுதொடர்பாக வாதிடுகையில் சோல்பரி யாப்பின் பிரிவு 29.4 இன்படி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் யாப்பின் சரத்துக்கள் மாற்றப்படலாமேயன்றி, யாப்பினை முற்றாக மாற்ற முடியாது என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த அரச தலைமை வழக்கறிஞர் ஐக்கிய முன்னணி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் மக்கள் ஆணையினைப் பெற்றிருப்பதாகக் கூறினார். இந்த வழக்கை விசாரித்து மூன்று நீதிபதிகளும் இதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்ததுடன், திருச்செல்வம் முன்வைத்த இன்னுமொரு முக்கிய விடயத்தையும் வேண்டுமென்றே தட்டிக்கழித்தனர். திருச்செல்வத்தின் வாதத்தின்படி ஐக்கிய முன்னணி அரசாங்கம் மக்கள் ஆணையினைப் பெற்றிருந்தாலும் கூட, அது வெறுமனே சிங்கள மக்களின் ஆணை மட்டுமேயன்றி , இன்னொரு தேசிய இனமான தமிழ் மக்களின் ஆதரவு இந்த புதிய அரசியல் அமைப்புருவாக்கத்திற்குக் கிடைக்கவில்லை என்று வாதிட்டிருந்தார். தமிழ் மக்கள் சமஷ்ட்டி முறையிலான ஆட்சியொன்றிற்கு 1970 ஆம் ஆண்டு தேர்தல்களில் வாக்களித்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. இந்தவிடயத்தை முற்றாகப் புறக்கணித்த மூன்று நீதிபதிகளும் அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் கைதுசெய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் காலவதியாகிவிட்டதனால், அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியாது என்று மட்டுமே தீர்ப்பளித்தனர். மேலும், இந்த நீதிமன்றம் யாப்பின் பிரகாரம் உருவாக்கப்படாததனால், குடியரசு யாப்பின் ஏற்புடைமை குறித்து தம்மால் கருத்தெதுவும் கூறமுடியாதென்று கைவிரித்து விட்டனர். உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்த அரச பிரதான வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் கூறுவதுபோல அவசரகாலச் சட்டம் வழக்கற்றுப்போனாலும் கூட, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அது இன்னமும் நடைமுறையிலேயே இருக்கிறது. ஆகவே இந்த நீதிமன்றமும் யாப்பின்படியே உருவாக்கப்பட்டிருக்கிறது, ஆகவே அமிர்தலிங்கத்திற்கெதிரான வழக்கு தொடர்ந்தும் நடைபெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், திடீரென்று சட்ட மாதிபர் வழக்கினை வாபஸ் வாங்கியதால் 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பின் ஏற்புடைமையினை உரசிப்பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று அரசால் திட்டமிட்ட ரீதியில் தவிர்க்கப்பட்டிருந்தது. 1976 ஆம் ஆண்டு புரட்டாதி 20 ஆம் திகதி அமிர்தலிங்கத்திற்கெதிரான வழக்கின் தீர்ப்பு நீதிபதி ஜே. எப். ஏ. சோசா அவர்களால் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புப்பற்றி தந்தை செல்வாவிடம் கேட்டேன். வெளிப்படையாக எதனையும் சொல்ல மறுத்த செல்வா அவர்கள் ஒரு விடயத்தைப் பொதுவாகச் சொன்னார். இலங்கையில் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தினூடாகவோ, நீதித்துறை ஊடாகவோ அல்லது அதிகாரத்திலிருப்பவர்களூடாகவோ தமக்கான நீதியை ஒருபோதுமே பெற்றுவிட முடியாதென்பது தெரிகிறது என்று மட்டும் கூறினார். "தமிழர்கள் இலங்கையின் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையிழந்துவிட்டார்கள். சோல்பரி யாப்பின் பிரிவு 29 இன்படி சிறுபான்மையின மக்களுக்கான நலன்கள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய இலங்கையில் உள்ள எந்த நீதிமன்றமும் தயாராக இல்லை" என்று தந்தை செல்வா கூறினார்.
  28. குருசுவாமியின் கொலை அதிகரித்து வந்துகொண்டிருந்த முறுகல் நிலை, டெலோ அமைப்பினரால் பொலீஸ் பரிசோதகர் குருசுவாமி 1979 ஆம் ஆண்டு ஆடி 1 ஆம் திகதி கொல்லப்பட்டபோது மேலும் தீவிரமாகியது. 1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தி இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான பொலீஸ் மற்றும் இராணுவத்தினரின் வன்முறைகளை விசாரிக்கவென்று அமைக்கப்பட்ட சன்சொனி விசாரணைக் கமிஷனின் முன்னால் அழைக்கப்பட்ட இரு தமிழ் பொலீஸ் அதிகாரிகளில் குருசுவாமியும் ஒருவர். மற்றைய அதிகாரியான தாமோதரம்பிள்ளை கமிஷனின் முன்னால் பேசும்போது யாழ்ப்பாண பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தில் கடைகளுக்கும் சந்தைக் கட்டிடத் தொகுதிக்கும் தீவைத்ததாகக் கூறினார். அவர்கள் எவரும் சீருடையில் இருக்கவில்லையென்றும், எவரும் தமது அடையாள இலக்கத் தகடுகளை அணிந்திருக்கவில்லை என்றும் மேலும் கூறினார். முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனி யாழ்ப்பாணம் சந்தை ஆவணி 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பொலீஸார் நடத்திய வன்முறைகளில் இருமுக்கிய விடயங்களில் பொலீஸாரைப் பாதுகாக்கும் வகையில் குருசுவாமி சாட்சியமளித்திருந்தார். முதலாவது, யாழ்ப்பாண பழைய சந்தைக்குத் தீமூட்டிய விவகாரம். இந்த தீவைப்புச் சம்பவத்தில் பொலீஸார் எவரும் ஈடுபடவில்லை என்று அவர் கூறினார். இரண்டாவது யாழ்ப்பாணத்தில் வாழும் சிங்களவர்கள் தாக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் நாகவிகாரை தமிழர்களால் எரியூட்டப்பட்டதாகவும் வேண்டுமென்றே பொலீஸாரால் அனுப்பப்பட்ட செய்தி. யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியான நாணயக்கார அனுப்பிய இந்த விஷமத்தனமான அறிவிப்பை அவர் செய்யவில்லை என்று குருசுவாமி கமிஷனிடம் கூறினார். யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்கவின் நெருங்கிய தோழரான குருசுவாமி தனது பொலீஸ் நண்பர்களைக் காப்பதில் மிகுந்த கவனம் எடுத்திருந்தார். குருசுவாமியின் வாக்குமூலம் பத்திரிக்கைகளில் வெளிவந்தபோது தமிழர்கள் மிகவும் ஆத்திரமடைந்தனர். பல தமிழர்கள் அவரைத் தமிழினத் துரோகி என்று அழைக்கத் தலைப்பட்டனர். தமிழர்களின் வெறுப்பினை அவர் சம்பாதித்துக்கொண்டதால் அவரின் பாதுகாப்பிற்கென்று தானியங்கிக் கைத்துப்பாக்கியொன்றும் அவருக்கு பொலீஸாரால் வழங்கப்பட்டது. நடராஜா தங்கவேல் (தங்கத்துரை) தங்கத்துரையின் அமைப்பு குருசுவாமியைக் கொல்லத் தீர்மானித்தது. குருசுவாமியைக் கொல்லும் பணி குட்டிமணி, ஜெகன் மற்றும் ஒபரோய் தேவனிடம் வழங்கப்பட்டது. கொழும்பில் அமைந்திருக்கும் உல்லாச விடுதியான ஒபரோய் ஹோட்டலில் சிலகாலம் தேவன் கடமையாற்றி வந்ததினால் அவர் ஒபரோய் தேவன் என்று அழைக்கப்பட்டு வந்தார். குருசுவாமியைச் சுட்டுக் கொல்லும் பொறுப்பு தேவனுக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் குருசுவாமியின் இல்லம் அமைந்திருந்தது. குருசுவாமியைக் கொல்லும் குழு அவரது வீட்டை நெருங்கிய நேரத்தில், அருகிலுள்ள வீடொன்றில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக்கொண்டிருக்க இன்னொரு புறத்தில் வெடிகளும் கொழுத்தப்பட்டன. குருசுவாமியின் வீட்டுக் கதவை குட்டிமணி தட்டினார். குருசுவாமி கதவினருகில் வரும்போது அவரைச் சுட்டுக் கொல்வதே தேவனுக்கு வழங்கப்பட்டிருந்த பணி. யன்னலின் அருகில் பதுங்கியிருந்த தேவன், வீட்டினுள் இருந்து கதவுநோக்கி குருசுவாமி வருவதைக் கண்டதும் பதட்டமடையத் தொடங்கினார். அவரை நடுக்கம் பற்றிக்கொண்டது. அதுவே தேவனின் முதலாவது கொலை. "சுடடா" என்று தேவனைப் பார்த்துக் கட்டளயிட்டார் குட்டிமணி. தேவனுக்கு இன்னமும் நடுக்கம் நின்றிருக்கவில்லை. "டேய், சுடடா" மீண்டும் குட்டிமணி தேவனைப் பார்த்துக் கத்தினார். இந்தமுறை தேவன் சுட்டார். அருகில் வெடிச்சத்தம் காதைப் பிளந்துகொண்டிருக்க, தாம் வந்த சைக்கிள்களில் ஏறி மறைந்தது குருசுவாமியைக் கொல்ல வந்த குழு.
  29. ஒருங்கிணையும் சிங்கள இனவாதிகள் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் செயல்களை நியாயப்படுத்தி வாதிடுவதற்கென்று ஒரு சிறந்த பேச்சாளர் இருந்தார். அவரது பெயர் ஜி எம் பிரேமச்சந்திர. அவர் பாராளுமன்றத்தில் அரசுக்கு முன்வைத்த கோரிக்கையில் அனைத்து பிரிவினைவாத அமைப்புக்களையும் உடனடியாகத் தடைசெய்யவேண்டும் என்று கேட்டிருந்தார். சகல சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும் இதன்மூலம் செயற்படுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இவற்றுள் முக்கியமானது மூன்று நிக்காயக்களின் சங்க சபா என்றழைக்கப்பட்ட மூன்று முக்கிய பெளத்த பீடங்களின் பெளத்த பிக்குகளும் உள்ளடங்கிய பெளத்த இனவாத அமைப்பு. இவ்வமைப்பு அரசுக்கு விடுத்த கோரிக்கையில் சிங்களவர்களுக்கெதிராகவும், நாட்டிற்கெதிராகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரச்சாரம் செய்யும் அனைவருக்கும் எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருந்தது. இவ்வமைப்பைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து சிங்கள பெளத்த இனவாத அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைக் கண்டிக்கத் தொடங்கியதுடன் அமிர்தலிங்கத்தின்மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவர்கள் சிலரின் தீர்மானங்கள் அமிர்தலிங்கத்தை "துரோகி" என்று விழித்திருந்தன. ஐக்கிய பெளத்த மண்டலய எனும் பெளத்த சிங்கள அமைப்பு தனிநாட்டிற்கெதிரான தீர்மானத்தினை நிறைவேற்றியது. அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் பலிபான சந்தானந்த தேரரும், மல்வத்தை பீடத்தின் அனுனாயக்கரான ரம்புக்வல்ல சிறி சோபித தேரரும் இத்தீர்மானங்களுக்கு தமது ஆதரவினைத் தெரிவித்திருந்ததுடன், தனிநாட்டிற்கான கோரிக்கையினையும் வெகுவாகக் கண்டித்திருந்தனர். சிங்கள ஆங்கில நாளிதழ்கள் சிங்களவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் தமிழருக்கும் எதிரான செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வந்தன. சிங்களப் பத்திரிக்கைகள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர்கள் செய்யவேண்டியவை என்ன என்கிற தலைப்பிலும் தமிழர்கள் தமது தனிநாட்டுக் கனவினை ஏன் கைவிடவேண்டும் எனும் தலைப்பிலும் வெளியிடப்பட்டன. அரச ஆதரவிலான டெயிலி நியூஸ் பத்திரிக்கை தனது ஆசிரியர்த் தலையங்கம் ஒன்றில் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது தனிநாட்டுக் கனவினை தூக்கிக் குப்பையில் போடவேண்டும்" என்று கூறியிருந்தது. "பிரிவினவாதகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமது தனிநாடான தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையினை முன்வைப்பதனை உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரிகளைக் கொல்லுதல், வங்கிகளைக் கொள்ளையிடல், அச்சுருத்தல்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்றும் அது கூறியிருந்தது. தனது கட்டுப்பாட்டினை இழந்த அமிர்தலிங்கம் தமது அரசியல்த் தலைவர்களைப் போலவே சிங்களப் பத்திரிக்கையாளர்களும் தமிழர்களின் உணர்வுகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை. அமிர்தலிங்கத்தை சிங்களவர்களின் நலன்களுக்கு அடிபணியவைக்கும் தமது முயற்சிகள் மொத்தத் தமிழ்ச் சமூகத்தின்மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை அவர்கள் ஒருபோதுமே எண்ணிப்பார்க்க விரும்பியதில்லை. தமது அழுத்தங்களுக்கு அமிர்தலிங்கத்தைப் பணியவைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தமிழர்கள் முன்னால் அவரை கீழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை அவர்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அதனைச் செய்தார்கள். 1978 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல பேச்சாளர்கள் அமிர்தலிங்கம் சிங்களவர்களுடன் மிகவும் மென்மையாக நடதுகொள்வதாக விமர்சித்திருந்தனர். கூட்டத்திற்குத் தலைமை வகித்த சந்ததியார் பேசும்போது "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது தேர்தல் வெற்றிக்காகவே தமிழ் ஈழம் எனும் கோரிக்கையினை முன்வைக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். தனது பேச்சின் முடிவில்,"இனிமேல் தமிழ் இளைஞர் பேரவை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிடமிருந்து பிரிந்து தனித்தே இயங்கும்" என்று கூறினார். மாவை சேனாதிராஜா இன்று தமிழ் இளைஞர் பேரவையின் இந்த தனித்தியங்கும் முடிவை தனது ஆதரவாளரான மாவை சேனாதிராஜாவைப் பாவித்துத் தடுத்துவிடலாம் என்று அமிர்தலிங்கம் நினைத்தார். சிங்களவர்களிடமிருந்து எழுந்து வந்த கடுமையான அழுத்தத்தினையடுத்து வன்முறைகளைக் கண்டிப்பதாகக் கூறிய அமிர்தலிங்கம், தமிழ் ஆயுத அமைப்புக்களிடமிருந்தும் விலகி நடக்கத் தொடங்கினார். இது, இளைஞர் அமைப்புக்கள் மீது அவருக்கிருந்த செல்வாக்கினை சிறிது சிறிதாக இழக்கக் காரணமாகியது. 1979 ஆம் ஆண்டின் முதற்பாதியில் டெலோ அமைப்பு வீரியமாகச் செயற்பட்டு வந்தது. மார்கழி 13 ஆம் திகதி தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த பொலீஸ் உளவாளி ஐயாசாமி சிவராஜாவை டெலோ இயக்கம் கொன்றது. மாசி 1 ஆம் திகதி பொலீஸ் கொன்ஸ்டபிள் ஞானசம்பந்தம் என்பவர் கொக்குவில்ப் பகுதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பங்குனி 21 ஆம் திகதி இன்னொரு பொலீஸ் கொன்ஸ்டபிள் சிவநேசன் என்பவர் வல்வெட்டித்துறையில் கொல்லப்பட்டார்.ஆனி 30 ஆம் திகதி தொண்டைமனாற்றினைச் சேர்ந்த பொலீஸுக்குத் தகவல் வழங்கும் கணவன் மனைவியான சுவர்ணராஜா தம்பதிகளை டெலோ கொன்றது. மாவை சேனாதிராஜா தமிழ் இளைஞர் பேரவையினை தன்பக்கம் மெதுவாகத் திருப்பிக் கொண்டாலும்கூட, அவ்வமைப்பில் செல்வாக்கு மிகுந்தவர்களாக விளங்கிய பல உறுப்பினர்களை அவரால் தன்பக்கம் இழுத்துக்கொள்ள முடியாமற்போனது. இவர்களுள் சந்ததியார், இரா வாசுதேவா, இறைக்குமரன், யோகனாதன் போன்றோர் தனித்து இயங்கி வந்ததுடன் பின்னாட்களில் ஆயுத அமைப்புக்களின் தலைவர்களாகவும் மாறிப்போனார்கள். சிறிதுகாலம் தமிழ் இளைஞர் பேரவை - விடுதலை அணி என்கிற பெயரில் இயங்கிவந்த இவர்கள் உமாமகேஸ்வரன் 1981 ஆம் ஆண்டு புளொட் அமைப்பினை உருவாக்கியபோது அதில் தம்மையும் இணைத்துக்கொண்டார்கள். டெலோ அமைப்பினரது செயற்பாடுகள் ஜெயவர்த்தனவை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன், சிங்கள மக்களின் உணர்வுகளையும் வெகுவாகப் பாதித்திருந்தது. ஐரோப்பாவில் வசித்துவந்த இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு செயற்பட்ட விதமும் சிங்களவர்களுக்கு எரிச்சலையூட்டியிருந்தது. இலங்கையில் பொது எழுதுவிளைஞர்கள் ஒன்றியத்தின் முன்னாள்த் தலைவரும், பின்னர் வழக்கறிஞராகி பிரித்தானிய மற்றும் இலங்கை வழக்காடு மன்றங்களில் வழக்குரைஞராகவும் பணிபுரிந்து ஒரு காலத்தின் சம்பியாவின் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய கிருஷ்ணா வைகுந்தவாசன் அவர்கள் அமெரிக்காவில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் இங்கிலாந்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டிருந்தார். கிருஷ்ணா வைகுந்தவாசன் 1978 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் வெளிநாட்டுச் செய்திப் பிரிவிற்கு வந்த உடனடிச் செய்தியொன்று மிகுந்த பரபரப்பாகப் பேசப்பட்டது. ரொயிட்டர்ஸ் செய்திச்சேவையூடாக ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து இலங்கையர்களுக்காக அனுப்பப்பட்ட செய்தி என்று தலைப்பில் அது வந்திருந்தது. சுமார் 150 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேச எழுந்த தருணத்தில் இலங்கையின் சிறுபான்மைத் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் இலங்கையில் தமிழ் மக்கள் மேல் சிங்கள அரசு செய்துவரும் கொடுமைகளைக் கண்டிப்பதாக முழக்கமிட்டார். ஆனால், அவர் முழக்கமிடத் தொடங்கிய சில வினாடிகளில் அவரது ஒலிவாங்கியின் இணைப்பு மறுக்கப்பட்டதுடன் அவரைக் காவலர்கள் அங்கிருந்து அகற்றிச் சென்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் சபையில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட அந்த தமிழர் தன்னை கிருஷ்ணா என்று அறிமுகப்படுத்தியிருந்ததோடு, சுமார் 25 லட்சம் மக்களைக் கொண்ட, இந்தியாவிற்கும் சிங்களவர்களின் நாட்டிற்கும் இடையில் அமைந்திருக்கும் தமிழ் ஈழம் எனும் தேசத்தை தான் பிரதிநித்துவம் செய்வதாகவும் கூறியிருந்தார். "தமிழர்கள் மேல் சிங்களவர்களின் தேசம் இனக்கொலையொன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது" என்று அவர் முழக்கமிட்டு முடியும்போது அவரது ஒலிவாங்கியின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த சம்பவம் குறித்து தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வந்தது. அதன் இன்னொரு செய்தி பின்வருமாறு கூறியது, "இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சாகுல் ஹமீட் பேசும்போது, "எனக்கு முன்னால் பேசிய பேச்சாளருக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எனது நேரத்தில் ஒரு பகுதியினை எடுத்துக்கொண்டாலும் கூட, சபையில் சலசலப்பை ஏற்படுத்தி எனது பேச்சிற்கான முன்னுரையை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்" என்று அச்சம்பவத்தின் தக்கத்தை குறைக்க எத்தனித்தார்" என்று கூறியது. அச்செய்தியின் இறுதிப் பகுதி பின்வருமாறு கூறியது. "கவனயீர்ப்பில் ஈடுபட்ட அந்த நபரை விசாரித்தபோது அவர் இலங்கையைச் சேர்ந்த கே வைகுந்தவாசன் என்று அடையாளம் காணப்பட்டதாக ஐ நா பேச்சாளர் தெரிவித்தார். முன்னாள் நீதிபதியான அவர் தற்போது லண்டனில் பணிபுரிந்துவருந்துவருகிறார். அவரது வதிவிட விபரங்கள் தெரியவில்லை. சபையினுள் நுழையும்போது ஏனைய அதிதிகளுடன் அவரும் நுழைந்து வந்துள்ளதனால் அவர் தனது அடையாளம் தொடர்பான அனைத்துச் சோதனைகளும் மிகவும் நுட்பமாகக் கடந்து வந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. ஐ நா வின் மாநாட்டு மண்டபத்தில் இராஜதந்திரிகளும் அவர்களது விருந்தினர்களும் அமரும் பகுதியில் அமர்ந்துகொண்ட அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேசுதற்கு அழைக்கப்பட்ட வேளை மேடையில் திடீரென்று ஏறி பேசத் தொடங்கியிருக்கிறார். ஐ நா சபையின் பேச்சாளர் கூறும்போது அவரை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச் சென்றதாகவும், இனிமேல் பிரவேசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், வைகுந்தவாசன் அமெரிக்காவில் செய்தியாளர் ஒருவருடன் பேசும்போது நியுயோர்க் நகரில் நடைபெறும் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் பங்குபெற தான் வந்திருந்ததாகக் கூறிய அவர், தமிழரின் அவலங்களை உலகறியச் செய்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கவே ஐ நா சபையில் தான் அவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறினார்". வைகுந்தவாசனின் பேச்சின் முழு வடிவம், "மதிப்பிற்குறிய தலைவர் மற்றும் உலக நாடுகளின் அதிபர்களே! அடக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழர்கள் போன்ற சிறுபான்மையின மக்களுக்கு இந்த உயரிய சபையில் தம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியவில்லையென்றால், அவர்கள் எங்குதான் போவார்கள்? எனது பெயர் கிருஷ்ணா, நான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அமைந்திருக்கும் சுமார் இரண்டரை மில்லியன் தமிழ் மக்களைக் கொண்ட தமிழ் ஈழம் எனும் தேசத்திலிருந்து வந்திருக்கிறேன். தமிழ்த் தேசத்தை முற்றாக அழித்துவிடும் நோக்கில் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை சிங்கள அரசு ஈழத் தமிழர்கள் மேல் ஏவிவிட்டிருக்கிறது". "தமிழர்களின் பிரச்சினை இந்திய பிராந்தியத்தின் அமைதியினைக் குலைக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது. உலக நாடுகளின் தலைவர்களாகிய நீங்கள் உடனடியாக எமது பிரச்சினையில் தலையிட்டு ஒரு தீர்விற்கு உழைக்காவிட்டால் ஈழத் தமிழரின் பிரச்சினையும் மிக விரைவில் இன்னொரு பாலஸ்த்தீனமாகவோ அல்லது சைப்பிரஸாகவோ மாற வாய்ப்பிருக்கிறது. ஆகவே, நாங்கள் உங்களின் உதவியினை வேண்டி நிற்கிறோம். மிக்க நன்றி ! அனுமதியின்றி எனது பேச்சினை இங்கே நிகழ்த்தியதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நெடுநாள் வாழ்க தமிழ் ஈழம் !!!". இந்தச் சம்பவம் குறித்து வைகுந்தவாசனையும் சாகூல் ஹமீதையும் நான் தனித்தனியாகச் செவ்வி கண்டேன். என்னிடம் பேசிய வைகுந்தவாசன் தனது நோக்கமெல்லாம் தமிழரின் அவலங்களை உலகறியச் செய்வதுதான் என்றும், அதற்காக அதனை தான் மிகவும் திட்டமிட்டு நிகழ்த்தியதாகவும் கூறினார். ஹமீத் என்னிடம் பேசும்போது, அந்த அசாதாரண சூழ்நிலையினை தணிக்கவேண்டிய தேவை தனக்கு இருந்ததனால் தான் மிகவும் இயல்பாக நடந்துகொள்ள எத்தனித்ததாகக் கூறினார். தான் இயல்பாக நடந்துகொண்டமைக்காக பலராலும் கெளரவப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், கொழும்பு அரசாங்கமோ கொதித்துப் போயிருந்தது. வைகுந்தவாசனின் செயலை அமிர்தலிங்கம் வரவேற்றிருந்ததனால் தனது ஆத்திரம் முழுதையும் அவர்மீதே கொழும்பு அரசாங்கம் காட்டியது. அமிர்தலிங்கத்தின் அறிக்கை இவ்வாறு கூறியது, " திரு வைகுந்தவாசன் அவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தமிழ் ஈழத் தனிநாட்டின் தேவையினையும், நவ காலணித்துவவாதிகளான சிங்களவர்களிடமிருந்து தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கான தேவையினையும் மிகச் சுருக்கமாக சர்வதேச அவையில் கொண்டுவந்திருக்கிறார். எம்முன்னால் உள்ள இன்றைய தேவை என்னவென்றால் சர்வதேசத்தின் முன்னால் தமிழர்களின் போராட்டம்பற்றி பிரச்சாரம் செய்வதுதான். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேசுவதற்கு முன் மேடையில் வைகுந்தவாசன் பேசியதன் மூலம் உலக வரைபடத்தில் தமிழ் ஈழத்தினையும் அவர் இடம்பெறச் செய்திருக்கிறார்" என்று அவ்வறிக்கை கூறியது. இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து விவாதித்த எதிர்க்கட்சியினர், இந்த சம்பவம் சிங்களவர்களின் அதிகாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினர். உலகத்தின் கண்களில் சிங்களவர்கள் அடக்குமுறையாளர்களாக இதன்மூலம் காட்டப்பட்டிருப்பதாக அவர்கள் மேலும் கூறினார்கள். மசாசுசெட்ஸ் தீர்மானம் 1979 ஆம் ஆண்டு வைகாசி 10 ஆம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அமெரிக்க ஜனாதிபதியும், காங்கிரஸின் உறுப்பினர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பாவித்து இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசுகளினால் நிகழ்த்தப்பட்டுவரும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளையும், மனிதவுரிமை மீறல்களையும் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்று கேட்டிருந்தது. இதுவும் ஜெயவர்த்தனவையும் சிங்கள மக்களை வெகுவாக ஆத்திரப்பட வைத்தது. சமர்வில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான மேரி இ ஹவீ என்பவரால் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானத்தில் சுமார் 8000 சதுர மைல்களைக் கொண்ட தமிழ் ஈழம் எனும் நிலப்பரப்பில் வாழும் சுமார் 30 லட்சம் தமிழ் மக்கள் இலங்கையில் சிங்களவர்களால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வாழ்வதாகக் கூறியிருந்தார். மேலும் இலங்கையில் சரித்திர காலம் தொட்டு இரு வேறு இனங்களான தமிழர்களும் சிங்களவர்களும் தனித்துவமான மத, கலாசார, மொழிகளையும் கொண்டிருப்பதாகவும், வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட இவ்விரண்டு தேசங்களும் பிரிட்டிஷாரின் நிர்வாகத் தேவைகளுக்காக ஒன்றக்கப்பட்டதாகவும் அவர் விளக்கப்படுத்தியிருந்தார். அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதன்படி பிரஜாவுரிமை, மொழி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை உட்பட்ட பல விடயங்களில் தமிழர்கள் சிங்களவர்களால் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் சிங்கள அரசுகளால் கொண்டுவரப்பட்ட யாப்புகளில் தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அவரின் உரையின் முடிவில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பின்வருமாறு அம்மாநில அவை கூறியிருந்தது, "இத்தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளும் இந்த அவை, அமெரிக்க ஜனாதிபதியும், காங்கிரஸ் தலைவர்களும் தமது அதிகாரத்தினைப் பாவித்து தமிழர்மீது நடத்தப்பட்டுவரும் அநீதியான அடக்குமுறைகளையும், மனிதவுரிமை மீறல்களையும் உடனே நிறுத்தி தீர்வொன்றினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது" என்று கூறியதுடன் இதன் பிரதிகளை அமெரிக்க ஜனாதிபதி, காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற அவையின் பிரதிநிதிகள், அமெரிக்க அரசுச் செயலாளர், உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தது. ஆளுநர் எட்வேர்ட் கிங் அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து மசாசுசெட்ஸ் மாநிலத்தின் ஆளுநர் எட்வேர்ட் கிங் அவர்கள் 1979 ஆம் ஆண்டு, வைகாசி 22 ஆம் திகதியினை "தமிழ் ஈழம் நாள்" என்று பிரகடண்ம் செய்ததுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரும், நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான சிவசிதம்பரத்தையும் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தமிழ் ஈழம் நாள் நிகழ்வில் பங்குபற்றுமாறும் அழைப்பு விடுத்திருந்தார். மசாசுசெட்ஸ் மாநில ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் ஈழ நாள் பிரகடணத்தின் பிரதி சிவசிதம்பரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயற்பாடுகள் சிங்கள மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது. ஆகவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் தடைசெய்யும் முயற்சிகள் மீளவும் முன்னெடுக்கப்படலாயின. ஆடி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய பிரேமச்சந்திர மற்றும் சுனில் ரஞ்சன் ஜயக்கொடி ஆகியோர் இந்த விடயத்தை மீளவும் முன்வைத்துப் பேசினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தனா விசேட சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதனைப் பயன்படுத்தி தீவிரவாதத்தை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும், அச்சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார். தனது விசேட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்காகக் காத்திருக்கும் வேளையில், வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாகக் குடியேற்றப்பட்டு வாழ்ந்துவந்த பகுதிகளை அநுராதபுர மாவட்டத்துடன் ஜெயவர்த்தன இணைத்துக்கொண்டார். இதற்கெதிராக செயற்பாடுகளில் இறங்கிய முன்னணியினர் பாராளுமன்றத்தைலிருந்து வெளிநடப்புச் செய்தனர். தீவிரவாத எண்ணங்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்றத்தின் அனைத்து குழுக்களிலிருந்தும் வெளியேறவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்குப் பதிலளித்த அரசாங்கம் பிரேமச்சந்திரவையும், ஜெயக்கொடியையும் பாவித்து இரு தீர்மானங்களை முன்வைத்தது. வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புக்களையும், தனிநாடு கோரும் அரசியல்க் கட்சிகளையும் தடைசெய்யவேண்டும் என்று பிரேமச்சந்திர முதலாவது தீர்மானத்தை முன்வைத்தார். இரண்டாவது தீர்மானத்தை முன்வைத்த ஜயக்கொடி தமிழ் ஈழத்திற்காகப் பிரச்சாரம் செய்வோர் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
  30. ஓம்......பழையபடி அந்த பதிவு இருந்தால் நல்லாயிருக்கும்......அவரவர்களின் பிறந்தநாளில் ஒரு வாழ்த்து சொல்வது நல்லதுதானே........! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.