Leaderboard
-
P.S.பிரபா
கருத்துக்கள உறவுகள்11Points1866Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்9Points19134Posts -
நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+8Points35602Posts -
இணையவன்
கருத்துக்கள பொறுப்பாளர்கள்7Points7596Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/09/23 in all areas
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான். போர் என்றாலே அழிவுதான் அதிலும் இந்த மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது சாதாரனமான ஒன்றாகிவிட்டது. இவர்களால் எங்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லேயோ ஆனால் எங்களது கொடியை இதற்குள் சேர்ப்பது தேவையற்ற ஒன்று7 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உக்ரேன்-ரஸ்யாப் போரினைத் தொடர்ந்து இன்னொரு அதியுயர் உணர்முனையில் போர் தொடங்கியுள்ளது. இரண்டுமே ஆக்கிரமிப்பு எதிர் விடுதலை என்ற கோணத்திலேயே நடைபெறுகிறது. இரண்டுமே உயிரழிவுப்போர்கள் என்றவகையில் ஏற்புடையனவல்ல. இதிலே தமிழீழத்தவர் என்ன செய்ய முடியும். எமது இனத்தின் அழிவையே தடுக்கமுடியாது கைகளைப்பிசைந்துகொண்டு புலம்பெயர்நாடுகளின் தெருக்களில் நின்று கூவென்று அழைத்தபோதோ, அழுதுபுலம்பியபோதோ யாரும் எம்மைத் திரும்பிப்பார்க்கவில்லை. இதே தெருக்களில் எம்மை வேடிக்கை பார்தவாறு யூதரும், பலஸ்தீனியரும், உக்ரேனியரும், ரஸ்யரும் கடந்துபோனார்கள். அதேவேளை இவர்களின் அரசுகளும், அதிகார சபையும் சிறிலங்காவுக்கு ஆயுத, தொழில் நுட்ப, புலனாய்வு எனப்பலமுனை உதவிகளைத் தாராளாமகச் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்று செய்தார்கள். அதற்காக நாம் இவர்களை எதிரிகளாகக் கொள்ள முடியாதுதான். ஆனால், இந்தச் சுற்றினுள் நாம்போய் விழுந்து புதிய எதிரிகளை உருவாக்காதிருப்பதை பற்றிச் சிந்திக்கலாம் அல்லவா? நன்றி5 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்கிற்கு ஆதரவாக எழுதாத ஒரே காரணத்துக்காக நன்னியைத் தூக்கி எறியத் துணிந்துள்ளீர்கள். உங்கள் பார்வையில் நன்னி சிறுகச் சிறுகச் சேமித்து உருவாக்கிய ஆவணங்கள் எல்லாம் அவர் இந்தத் திரியில் எழுதிய மேற்கை ஆதரிக்காத கருத்தால் ஒரு நொடியில் குட்டையிலிருந்து வந்ததாக ஆகிவிட்டது அல்லவா. எடுத்ததற்கெல்லாம் துரோகிப் பட்டம் கொடுத்துத் தமது தமிழீழ ஆதரவை வெளிக்காட்டும் போலியான தமிழ்த் தேசிதவாதியின் நிலை போன்றது உங்கள் நிலைப்பாடு.4 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் எதற்காக இதனை சுட்டிக்காட்டினீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? இராணுவ வீரர் என்பதற்காக அந்தப் பெண்ணை இப்படி இழுத்துச் செல்வதும்.. கொன்ற பின் துப்புவது. பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பாவிப்பதை வீரமாக கருதும் யாருமே மனிததன்மையற்றவரகள். எங்களுக்கு நடந்த பொழுது யாருமே ஒன்று கூறவில்லை.. நியாயம் கிடைக்க இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறோம் என்பதற்காக இந்த மாதிரி மனித தன்மையற்று மிருகங்களை விட கேவலமாக நடக்குமளவிற்கு மதவெறி.. மதங்கள் போதிப்பதை தமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு விடுதலைக்காக போராடுகிறார்கள் என்றெதல்லாம் கேலிக்கூத்து.3 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்பட்டமான யூதர்களின் வரலாற்றை பொய்யாக எழுதுகிறீர்கள். அல்லது பொய் சொல்லுகிறீர்கள். அல்லது உங்களுக்கு வரலாறு தெரியாது.3 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அது மட்டுமல்ல அவர்களில் பலர் இஸ்ரேல் அரசியலில் இருக்கிறார்கள்.. பாராளுமன்றில் இருக்கிறார்கள்.. நம்மவர் ஜரோப்பா அமெரிக்காவில் வாழ்வதுபோல் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறார்கள்.. ஆனால் ஆகக்குறைந்தது பாலஸ்த்தீனர்கள் தம்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காஸா மற்றும் வெஸ்ட் பாங்கிலாவது ஒரு அரசை அமைத்து இஸ்ரவேலை போல் அபிவிருத்தி அடைந்த நாடாக இத்தனை வருடங்களாக மாற்றி அமைக்க முடியவில்லை.. இஸ்ரேலை முற்றாக அழித்து பால்ஸ்தீனத்தை உருவாக்கினால்கூட அந்த நிலத்தில் இவர்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கப்போவதில்லை.. ஆப்கானிஸ்த்தான் ஈரான் ஈராக் போன்ற பெண்களைகூட படிக்க விடாத அடிமுட்டாள் மதவாதிகள் வாழும் முஸ்லீம் நாடுகளை பாருங்கள்.. ஒன்றுமே இல்லாமல் வந்து உழைப்பால் உருவாக்கி ஜனநாயகத்துடன் வாழும் இஸ்ரேலை பாருங்கள்.. மதவா திகள் மற்ற இனத்துக்கு மட்டுமல்ல சொந்த இனத்துக்கு கூட துரோகிகள்..2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
🤣 உங்களுக்கு இன்றுதான் யூதர்கள் 2ம் உலக யுத்தத்தின் பின் இஸ்ரேலுக்கு வந்தவர் அல்ல என்ற விடயமே தெரியவந்துள்ளது….இதற்குள் நீங்கள் வரலாறு, யூதருக்கு முஸ்லீம் அடைக்கலம் கொடுத்தார் என அடித்து விடுகிறீர்கள். நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், 2000 ஆண்டுகளாக ரோமர், பின் இஸ்லாமியர் பறித்த தன் சொந்த நிலத்தை மீள உருவாக்கும் முயற்சியே இஸ்ரேல் என்ற தேசம். 2ம் உலக போரில், இஸ்ரேலை ஐரோப்பாவில் வளமான ஒரு பகுதியில் ஸ்தாபிக்க வாய்ப்பு இருந்தும், இல்ல என வெறும் பாலவனமாக கிடந்த இஸ்ரேலுக்கு போனார்கள் யூதர்கள். என்ன காரணம்? அங்கேதான் அவர்களின் இனமூலம் இருக்கிறது. அங்கேதான் அவர்களின் வரலாறு இருக்கிறது. அதுதான் அவர்களின் மண். அந்த மண் அவர்களினதுதான். யூத தேசிய இனத்தின் மண் மீட்பு போரின் வெற்றியும், தொடர்ச்சியுமே இன்றைய இஸ்ரேல்.2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எம் இனம் பற்றியும், ஏமது கையறு நிலை பற்றியும் மிகச் சிறப்பான கருத்து.......! நாங்கள் கள நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தால் போதும்.....!2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பலஸ்தீனியர்களுடன் நொருங்கி பழகியவர்கள் என்னும் அனுபவத்தில் சொல்கின்றேன். இவர்கள் சக மனிதர்களை, விசேடமாக எம்போன்ற ஆசியர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார்கள். இவர்களுடன் வேலை செய்வது மிகவும் கஷ்டம்.2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தற்போதைய HAMASன் தாக்குதலால் பலனடையப்போவது யார் ? 1) நிச்சயமாக பலஸ்தீனர்கள் இல்லை. 2) அடித்த சில வாரங்களில் Israel மேற்கொள்ளும் போகும் இராணுவ நடவடிக்கையின் பின்னர், இஸ்ரேல் கைப்பற்றப்போகும் Gaza வின் நிலப்பரப்பு யார் பலனடைந்தனர் என்பதைக் கூறும். 3) தற்போதைய நிலையில் உலகத்தை தனக்கு ஆதரவாகத் திருப்பும் வேலைகளை இஸ்ரேல் செய்யும். அதன் விளைவாக உலகின் அனுதாபத்தை தனக்குச் சாதகமாகப் பாவித்து இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கும். அப்போது பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகில் யாருமே இருக்கப்போவதில்லை, ஈரானையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் தவிர. 4) காசாவினை மண்ணோடு மண்ணாக்கிய பின்னர் இஸ்ரேல் Gazaவின் பெரும்பகுதியையும், அதன் கடற்பரப்பையும் தனது ழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரும். 5) இவற்றைப் பார்க்கும்போது, இப்படி ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டிய தேவை யாருக்கு எழுகிறது? 6) மேற்கூறியவற்றை நோக்கும்போது, இஸ்ரேலின் புலனாய்வுத்துறைக்குத் தெரியாமல் இப்படி ஒரு இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான தயாரிப்புக்களில் ஹமாஸ் ஈடுபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில், இஸ்ரேல் தனது நீண்ட கால நோக்கத்தை எட்டுவதற்காக திட்டமிடும் நாடே தவிர, குறுகிய நலன்களுக்காக தன்னை பலிகொடுப்பதில்லை. இங்கே இந்த இராணுவ நடவடிக்கையால் குறுகிய நலனை (publicity) யை பெற்றது மட்டுமே ஹமாஸ் கண்ட வெற்றி. ☹️2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஐரோப்பிய மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு பாலஸ்தீனர்கள் அடைகலமும் அரவணைப்பும் கொடுக்க அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனர்களின் நாட்டை அபகரித்து கொண்டான்கள் என்று இவர்கள் அடித்து விடுவதை பார்த்தால் ஐரோப்பா வருவதற்கு முதல் யூதர்கள் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து அடித்து விரட்டபட்டதாக இருக்கும்.2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அருமையான கருத்து.தமிழர்களை அழிக்க அனைத்து முஸ்லிம்நாடுகளும் உதவி செய்தன.நேரெதிர் போக்கைக் கொண்ட இந்தியா.பாகிஸ்தான் .சீனாவில் இருந்து அமெரிக்க .மேற்குலகம் .ரஸ்ஸியா உட்பட அனைத்து நாடுகளுமே சிறிலங்கா அரசுக்கு உதவின. தமிழர்கள் தனித்து நின்றே பேராடினார்கள்.அதே வேளை பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள்.தேசியத்தலைவைரைத் தவிர அனத்து இயக்கங்களின் தலைவர்களும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம்பணம் கொடுத்துப் பயிற்சி பெற்றார்கள்.அவர்களால் எந்தப்பயனும் தமிழர்களுக்கு கிடைக்க வில்லை.தொடர்ச்சியாக இஸ்ரேலினால் இனவழஜப்புச் செய்யப்படுகிறார்களே அதற்கு மேற்கு உலகமும் உதவி செய்கிறதே என்ற அனுதாபத்திலே தமிழர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கலாம்.ஆனால் நாளை தமிழ்கள் முஸ்லிம்கள் என்று பிரச்சினை வரும்போது அவர்கள் நிச்சயம் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள்.2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒரு இனத்தின் விடுதலையை முன்னிறுத்தி போராடியதை தவிர வேறெந்த பாரிய குற்றமும் புரியாத எமது விடுதலை இயக்கம் முள்ளி வாய்க்காலில் முற்றுப்பெற்றபோது முதல் வரிசையில் நின்று ஒரு அடக்குமுறை சிங்கள அரசுக்கு வாழ்த்து சொன்னவர்களில் எந்த பாலஸ்தீன போராட்டத்திற்கும் அதன் போராளிகளிற்கும் எழுத்தால் பக்கம் பக்கமாகவும் மனதால் கடலளவு அனுதாபமும் கொண்டிருந்தோமோ அதே பாலஸ்தீன இயக்கமும் அடக்கம். அவர்கள் இலங்கை அரசுக்கு வாழ்த்து சொன்னதற்கு மஹிந்த அரசு இஸ்லாமியர்களுடன் அப்போது கூடி குலவியதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மற்றவர்கள் தமக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் அவர்கள் எந்த மதத்திற்கோ இனத்திற்கோ இளாமியர்களை பெரும்பான்மையாக கொண்டிராத ஒரு நாட்டுக்கோ ஒருபோதும் ஆதரவாகவோ விசுவாசமாகவோ இருக்கவே மாட்டார்கள். இதற்கு எம் மண்ணிலேயே உதாரணம் இருக்கிறது, கிழக்கில் இந்திய ராணுவத்தை எதிர்க்க புலிகள் அமைப்பில் நூற்றுக்கணக்கில் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள், இந்திய ராணுவம் வெறியேறியதும் அவர்கள் மதகுருவின் ஒரு கூட்டத்தின் பின்னர் ஏறக்குறைய 350 பேர் ஆர்ஜிபி உட்பட்ட அனைத்து ஆயுதங்களுடனும் போய் இலங்கை ரானுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள். சேர்ந்து கொண்டது மட்டுமல்ல, புலிகளையும் தமிழர்களையும் இலங்கை ராணுவத்தைவிட மிக மோசமான ஆவேசத்துடன் ஜிகாத்,ஊர்காவல்படை,புலனாய்வுதுறை என சிங்கள படைத்தரப்பில் அங்கம் வகித்து வேட்டையாடினார்கள். இஸ்ரேல்பற்றி சொல்ல என்ன இருக்கிறது, இலங்கை தமிழர்களின் ஆயுதபோராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிய ஆரம்பத்திலேயே இலங்கை அரசு இயந்திரத்துடன் கை கோர்த்தது இஸ்ரேல் மட்டுமே. ஒரேயொரு வித்தியாசம் இஸ்ரேல் எந்த காலமும் தமிழர் தரப்புடன் ஒன்றாய் நின்றதுமில்லை , கூட நின்றுவிட்டு தொப்பி பிரட்டியதும் இல்லை. அவர்கள் எதிரி என்ற கோணத்தில் கடைசிவரை மிக நேர்மையான எதிரிகளாகவே நின்றார்கள். இஸ்ரேலே இஸ்ரேலுக்குள் போர் தொடுத்து சதி செய்ய வாய்ப்பிருக்கு என்பதெல்லாம் அளவுக்கதிகமான ஊகம். இஸ்ரேலியன் ஒருவன் கொல்லப்பட்டாலே வாள் தூக்கும் இஸ்ரேல், உலகில் எந்த மூலையில் யூதர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்வோர் தமது மூதாதையர்கள் இஸ்ரேலியர்கள் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கான ஆதரவையும் குடியுரிமையும் வழங்க தயாராக இருக்கும் இஸ்ரேல், ஒருபோதும் தன்னோட குடிமக்களை இஸ்லாமியருக்கெதிரான போரில் ஒன்றிணைக்க பலி கொடுக்காது. இஸ்ரேலுக்கு ஒன்று என்றால் இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல ஐரோப்பிய அமெரிக்க அனைத்து வல்லரசுகளுமே இஸ்ரேல் பின்னாடியே அணிவகுக்கும். அவர்களுக்கு குறுக்கு வழியில் பலம் தேடவேண்டிய அவசியமே இல்லை. இஸ்லாமியர்களுக்கெதிராக கை கோர்க்க தன்னினத்தை பலியிடும் அளவிற்கு அளவிற்கு இஸ்லாமியர்களை ஒரு பொருட்டாகவும் எடுக்காது இஸ்ரேல். ஆக மொத்தம் இவர்கள் இருவருமே ஆணித்தரமாக எமது ஆதரவை தெரிவிக்க எந்த அருகதையும் இல்லாதவர்கள். ராமன் அடிச்சா என்ன ராவணன் வாங்கினா என்ன தூரத்தே இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்..2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரெல் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவைச் சேர்ந்த டஜன் கணக்கான ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தற்போது தலைமறைவாக உள்ளனர். காஸா பகுதியில் உள்ள இலக்குகளை ஹமாஸ் ஆயுதக் குழு தாக்கி வருவதாகவும் அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை மதிப்பிட்டு வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டன. இதனால் நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆப்பரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம் என்ற பெயரில் இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலின்போது ஒருவர் கொல்லப்பட்டதுடன், டெல் அவிவ் மற்றும் காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அதன் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தும் பிரிவு 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவியதாக அறிவித்துள்ளது. "காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேலிய ராக்கெட்டுகள் இலக்கு வைக்கப்பட்டன" என்றும் ஆயுதக் குழுவினர் "வெவ்வேறு இடங்களில்" இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாகவும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது. இஸ்ரேலிய பொது ஊழியர்களின் தலைவர் "சூழ்நிலை மதிப்பீட்டை" நடத்தி வருவதாகவும், "இந்த நிகழ்வுகளுக்கான விளைவுகளையும் பொறுப்பையும் ஹமாஸ் எதிர்கொள்ளும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் "தற்காலிக முகாம்களுக்கு அருகிலேயே இருக்க" அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. பட மூலாதாரம்,ABED RAHIM KHATIB/ANADOLU AGENCY VIA GETTY IMAGES ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் மேகன் டேவிட் ஆடோம் மீட்பு நிறுவனம் கூறியுள்ளது. அஷ்கெலோன் நகரில் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேலிய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காட்சிகள் காட்டுகின்றன. அதில் வாகனங்கள் எரிந்து கரும்புகை வெளியேறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,MOHAMMED SABER/EPA-EFE/REX/SHUTTERSTOCK காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் "அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள்" ஊடுருவியுள்ளதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேலின் தற்காப்புப் படைக் குழுவின் ஆரம்ப அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை "நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலியர்கள் - ஷபாத் மற்றும் சிம்சாட் தோராவின் விடுமுறை நாளில் சைரன்கள் ஒலிப்பதையும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் வீசும் சத்தத்தையும் கேட்டுக் கண் விழித்தனர். நம்மை நாமே காத்துக் கொள்வோம்" என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்டன: ஹமாஸ் அறிவிப்பு பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, தாக்குதலுக்கு இலக்கான இடங்களில் எரியும் தீயில் இருந்து கரும்புகை வெளியாகி வருகிறது. இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைவரான முகமது டெய்ஃப், "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்ம்" என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலைத் தொடங்க சனிக்கிழமை அதிகாலை 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவப்பட்டதாகவும் கூறினார். "இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுத்தது போதும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று டெய்ஃப் கூறினார். “நாங்கள் ஏற்கெனவே எதிரியை எச்சரித்துள்ளோம். இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக நேர்ந்த குற்றங்களால் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான தியாகிகள் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்." "ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்மின் தொடக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம். மேலும் எதிரிகளின் ராணுவ நிலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ கோட்டைகளைக் குறிவைத்த முதல் தாக்குதலில் 5,000 ஏவுகணைகள் மற்றும் ஷெல்களை கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம்." பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டுள்ளது. "போருக்குத் தயார்நிலை" பிரகடனத்தை வெளியிட்ட இஸ்ரேல் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "போருக்கான தயார் நிலை" பிரகடனம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்களை அழைக்க பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது என்பதுடன் ஹமாஸ் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது. இதற்கிடையே, தொடக்கத்தில் 5,000 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, மேலும் இரண்டாயிரம் ராக்கெட்டுகளை ஏவியதாக ஹமாஸ் தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த காட்சிகள் நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஹமாஸ் ஆயுதக் குழு மிக மோசமான தவற்றைச் செய்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார். யோவ் காலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இன்று காலையில் மிக மோசமான செயலைச் செய்துள்ளனர். இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்கியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது என்றும், இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவம் விரைவில் வெற்றிக்கொடி நாட்டும் என்றும் கூறியுள்ளார். ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் இந்த திடீர் தாக்குதலில் காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cp9xkn0rdldo1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இல்லை... அச்செய்தி பொயென எகிப்திய அரசு அறிவித்துள்ளது. மற்றது சண்டையில இருந்து லெபனான் பின்வாங்கிற்று... ------------------------------------------ *****1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
😂 அண்மையில் ஒரு கள உறவிடம் "ஆறுமுக நாவலர் யாழ் மத்திய கல்லூரியில் படித்தார்" என்றேன். அவர் மறுத்து "யாழ் மத்திய கல்லூரியில் படித்த பின்னர் தான் அவர் நாவலர் என்ற பெயர் கொண்டார்!" என்று என்னைக் கடிந்து கொண்டார்! இப்படி இருக்கிறது உங்கள் ஆபிரகாம் பற்றிய வரலாற்றுப் புரிதல்! ஆபிரகாம் யூதர் இல்லையென்றால், இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர் அல்ல என்பது போல ஆகும் - ஏனெனில் இயேசுவைக் கொன்ற பின்னர் தான் கிறிஸ்தவம் என்ற மதம் உருவானது. ஆபிரகாம் என்ற பாத்திரம் பல தெய்வங்களை வழி பட்ட ஒரு காலத்தில் பிறந்து வந்தவர் என்றாலும் ஏக கடவுள் (monotheism) என்ற நிலை நோக்கி அவர் காலத்தில் நகர்ந்த போது தான் யூத மதத்தின் ஆரம்ப வடிவம் உருவானது. இந்த ஆரம்ப மதத்திலேயே பல பிரிவுகள் (sects) இருந்திருக்கின்றன என்பது உண்மை. அலெக்சாண்டர் யூதரைப் பற்றி எழுதவில்லையா தெரியாது, ஆனால் சாக்கடல் ஓலைகள் (Dead Sea scrolls) கி.மு 300 இல் எழுதப் பட்டவை, 1947 இல் கண்டறியப் பட்டன. இன்றைய யூதர்களினதும், கிறிஸ்தவர்களினதும் பொதுக் கதையான பழைய ஏற்பாட்டை இவற்றில் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த சாக்கடல் படிமங்கள் எழுதப் பட்ட இடம் தற்போதைய மேற்குக் கரையில் இருக்கும் Qumran ஆக இருக்க வாய்ப்புகள் உண்டென்கிறார்கள். தங்களை இவர்கள் " people of the book" என்று அழைத்துக் கொண்டார்களென சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அக்காலத்தில் இருந்த பல யூதப் பிரிவுகளில் ஒன்று தான் இது என சாக்கடல் ஓலைகளின் உள்ளடக்கத்திலிருந்து தெரிகின்றது.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
🤣 அதாவது யூதரை பற்றிய குறிப்பு இல்லை என்றால் அது நல்ல ஆதாரம். ஆனால் யூதரை பற்றிய குறிப்பு இருக்கு என்றால் அது பின்னர் யூதர் திரித்து எழுதிய கெட்ட ஆதாரம்🤣. இது உங்கள் வழமையான பாணிதான். ஆனால் இப்படி எல்லாம் நீங்கள் எட்டாக வழைய தேவையில்லை. நானே ஏற்கிறேன். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று வரை உள்ள நிகழ்வுகளை பார்த்தால் - அது இப்போ அரபிகளுக்கும், யூதர்களுக்கும் மூதாதைய உரிமை உள்ள இடம்தாம். ஆகவேதான் Two State Solution ஏ இதற்கு தீர்வு என்ற என் நிலைப்பாடு. இந்த வகையில் நீங்கள் சொல்வதற்கும் நான் சொல்வதற்கும் அதிக வேறுபாடில்லை. உண்மதான் - முஸ்லிம்களை விமர்சித்து எழுதினால் உங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்பது யாழ்கள உறவுகள் பலருக்கு தெரிந்த விடயம்தான். நீங்கள் புலிகளை பயங்கரவாதிகள் என மேலே எழுதிய போதே உங்கள் நோக்கம் புரிந்து விட்டது.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதனால்தான் இந்த திரியில் 6 பக்கமாக புலிகள் என்ற வார்த்தையை கூட பாவிக்காமல் எல்லாருமே உரையாடினோம் என நம்புகிறேன். 7 ம் பக்கத்தில் அவர்களை தேவையில்லாமல் இழுத்து வந்தவர்தான் இதற்கு பொறுப்பு. ஆமாம் இவர் புலிகளின் புலனாய்வு பிரிவோடு நிண்டு கதைச்சு, கரைச்சு குடிச்சுட்டு, கண்ணாலும் கண்டு தலை சுற்றிய படியே எழுதுகிறார். படித்ததை எழுதுவதை கேலி செய்துவிட்டு, அடுத்த பந்தியில் கேட்டதை நடந்தது போல் எழுதிறதெல்லாம் வேற லெவல். ————— @நன்னிச் சோழன் சில நாட்களுக்கு முன்பே காஸாவில் இருந்து தாக்குதல் நடக்க போகவதாக எகிப்து நெதென்யாகுவை எச்சரித்ததாம். உங்கள் சந்தேகம் மேலும் வலுக்கிறது. https://x.com/ShaykhSulaiman/status/1711403086642630868?s=201 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எனக்கு கொஞ்சம் நியாபக மறதியாக இருக்கிறது. இனியொரு - புலிகள் மீது அபாண்டம் சொல்லும் புளட் உறுப்பினர் எழுதும் தளம் என இதே யாழில் முன்னர் குறை பட்டது நீங்கள்தானா? அல்லது மீசாலையானா?1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதில் எனக்கும் மாற்று கருத்தில்லை. ஆனால் காலா காலமாக ஒடுக்கப்பட்டுவரும் பலஸ்தீனர்களை தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அடிச்சு விடுபவருடன் சேர்ந்து நையாண்டி செய்வதைத்தான் சகிக்க முடியவில்லை.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் இந்த தலைப்பில் செய்திகளையும் கருத்துக்களையும் வாசித்துக் கொண்டு வருகிறேன். கொல்லப்பட்ட பெண்னைப் பற்றிய செய்திகளை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது திடீரென நீங்கள் ஒரு பெண்ணின் படத்தைப் போட்டுவிட்டு அவர் ஒரு இரானுவ வீரர் etc etc என எழுதியதைப் பார்த்துவிட்டுதான் உங்களிடம் கேட்டேன். ஏனெனில் அந்தப் பெண் இராணுவ வீரர் என்பதால் அந்தப் பெண்ணிற்கு நடந்தது சரியாகுமா? இல்லைத்தானே? யாருக்குமே அப்படி நடக்ககூடாது என்றுதான் நாங்கள் நினைப்போம் இல்லையா!. அவ்வளவுதான். இந்த திரியில் நன்னியின் பதிவுகள், பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு நடப்பது சரியென்ற தோற்றத்தை எனக்குள் உருவாக்கியது. அது சரியான ஒன்றாக எனக்குப்படவில்லை. ஏனெனில் இரண்டு பக்கதாலும் கொல்லப்படுவது சாதாரண அப்பாவி மக்களே. ஆகையால்தான் இரண்டு கொடிகளையும் சேர்த்து எழுதட்டோ எனக் கேட்டதற்கு எனது கருத்தை எழுதினேன். இஸ்ரேலினை ஆதரிக்க கூடாது எனக் கூறவுமில்லை, நன்னியில் மதிப்பும் குறையவில்லை. ஆனால் யூதர்கள் இனவழிப்பு கொடுமையை எதிர்கொண்டவர்கள் ஆனால் இன்னொரு இனம் அவர்களைப் போன்ற இனவழிப்பை எதிர்கொண்ட பொழுது மற்றையவர்கள் போல அமைதி காத்தார்கள் எனும் பொழுது அவர்களின் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை. அதற்காக இந்த ஹமாஸ், தலீபான் போன்ற இஸ்லாமிய மதவெறிக்குழுக்களையும் ஆதரிக்கவில்லை. இவ்வளவுதான் இந்த விடயத்தில் எனது வட்டம். எல்லா விடயங்களிலும் வட்டத்தைவிட்டு சிந்திக்க முடியவில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மிக தவறான புரிதல். 1. ஆபிரகாம் யூதர்தான். முஸ்லீம்கள் அவரின் மகனான இஷ்மேல் (இஸ்மாயில்) ஐ, அரபிகளின் (முஸ்லிம் அல்ல, இஸ்லாம் என்ற மதமே அப்போ இல்லை) தந்தையாக கருதுகிறனர். நீங்கள் தந்த இணைப்பிலேயே இது சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இது அரபிகளின் நம்பிக்கை மட்டுமே. 2. ஆனால் அரபிகள் இப்படி கோரினாலும் கூட - இப்போ இஸ்ரேல் என அறியப்படும் நிலப்பரப்பில் யூத அரசுகளே ஆதி காலத்தில் இருந்தன. அங்கே அரபிகள் என இப்போ அடையாளம் காணப்படுவோரின் மூதாதைகளும், சமேரியர்களும் இன்னும் பல குழுக்களும் வாழ்ந்தன. ஆனால் நாடு யூத நாடாகவே இருந்தது. அவர்களின் கோவில்கள் இருந்தன. அப்போ அரபுலகம் என்பது இல்லை. ஜெருசலேமில் Temple Mount இல் கி மு சில நூற்றாண்ட்டுக்கு முன்பே யூதக்கோவில் இருந்தது. அதன் பிந்தான் ஜேசு பிறப்பு, அதன் பின் தான் கிறிஸ்தவ தேவாலயங்கள், அதன் பிந்தான் அரேபியாவில் முகமது பிறந்து - இஸ்லாம். அதன் பின் கிபி 650 இன் பின் அங்கு கட்டபட்டது தான் இப்போ எமது 3வது புனித ஸ்தலம் என முஸ்லிம்கள் கூறும் அல் அக்சா மசூதி. 3. இவ்வளவு ஏன் எகிப்து கூட கிபி 639 வரை அரபுதேசம் கிடையாது. பிரமிட்டை கட்டியவர்கள் அரபிகள் அல்ல. கிளியோ பட்டிரா அரபி அல்ல. எகிப்தை அரேபியாவில் இருந்து வந்து, கைப்பற்றி அரபு தேசமாக மாற்றினர். 4. இஸ்லாத்தின் பின் வாழ்முனையில் அரபு நாடுகளில் இருந்து வந்த தொடர் படை எடுப்புகளால் பல அரபல்லாத தேசங்கள், குழுக்கள் இஸ்லாமிய மயமாகின, அரபுமயமாகின. இப்படித்தான் ஒரு குழுவாக முன்னர் இஸ்ரேலில் இருந்த அரபிகள், பல்கி பெருகினர். பலஸ்தீனம் என்ற நிலப்பரப்பையும் உரிமை கோரத்தொடங்கினர். 5. வரலாறு சிக்கலானது அதை திரும்ப அமைக்கும் முயற்சி ஆபத்தானது. ஆனால் தனியே கிபி 2000-1942 வரையான காலம் மட்டும் வரலாறு இல்லை. நினைவில்லா காலம் தொட்டு - கி பி 2000 உம் வரலாறுதான். 1942-2023 உம் வரலாறுதான். அந்த நிலத்தில் ஒரு யூத தேசமும், ஒரு அரபு-இஸ்லாமிய தேசமும் அமைவதே நியாயமான தீர்வாக இருக்கும். இஸ்ரேல் தனக்கென தன் மூதாதையர் நிலத்தில் ஒரு நாட்டை அமைத்து விட்டது. நாடில்லாமல் இருப்பவர்கள் பலஸ்தீனர்கள். பலஸ்தீனர்கள் (ஹமாஸ்) இஸ்ரேலை மறுதலித்து, அதை வரைபடத்தில் இருந்து தூக்குவோம் எனும் வரை இந்த சிக்கல் தீராது. இதை உணர்ந்துதான் அரபாத் two state solution ஐ ஏற்றார். இட்சாக் ராபின் கொல்லப்படாமல் இருந்திருந்து, ஈரான் ஹமாசை உசுப்பேத்தி விடாமல் இருந்திருந்தால் அது நடந்தும் இருக்கலாம். 2.1 மில்லியன் அரபிகள் இஸ்ரேல் பாஸ்போர்ட், சிற்றிசன்ஷிப் எடுத்து இஸ்ரேல் பிரஜைகளாக வாழ்கிறனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். நன்றி அண்ணா🙏1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
//எனது மகள் Shani Louk ஜேர்மன் பிரஜாவுரிமை உடையவர், இன்று காலை ஒரு உல்லாசப் பயணிகள் உள்ள குழுவில் இருந்து இஸ்ரேலின் தென் பகுதியில் வைத்து பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினரால் ஒரு வாகனத்தில் நினைவு இழந்த நிலையில் கடத்தப் பட்டு, காஸா பகுதியை நோக்கி சென்ற காணொளியை தன்னால் துல்லியமாக பார்க்கக் கூடியதாக இருந்தது. தயவு செய்து ஒவ்வொரு உதவியும், அதனைப் பற்றிய புதிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்பவும். மிக்க நன்றி.//1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆமாம் அது அவர்களது சாபம்தான். பரிசுத்த வேதகாமத்தின்படி இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து அந்த சாபத்தை தேடினார்கள். இயேசுவை சிலுவையில் அறையும்படி கொண்டு சென்றபோது அவருக்கு பின்சென்ற அநேகர் அழுது புலம்பிக்கொண்டு போனார்கள். அப்பொழுது இயேசு கூறியது எனக்காக அழ வேண்டாம் , உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். அந்த சாபம் வந்து பலித்தது. பின்னர் நடந்தது எல்லாமே சரித்திரம். எப்படி இருந்தாலும் வேதத்தின்படி மீண்டும் அவர்கள் தங்கள் ராஜ்யத்தில் குடியேறி ஆட்சி செய்ய வேண்டும். இப்போது அது நிறைவேறிக்கொண்டு வருகின்றது. வனாந்திர பூமியை செழிப்புள்ள நிலமாக மாற்றியவர்கள் அவர்கள். அவர்களை இப்போதைக்கு யாரும் நினைப்பதை போல அவர்களை அழிக்க முடியாது. எல்லா அரபு நாடுகளும், ருசியா , சீன வந்தாலும் அழிக்க முடியாது. இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் முழுவதும் ஒரு அமைதி உருவாகி அவர்களது தேவாலயம் கடடப்படும். அப்போது 666 இலக்கம் யாவருக்கும் தயாரிக்கப்படும். அதன் பின்னர் யூதர்களுக்கு அழிவு உருவாகும். யாரும் அதனை தடுக்க முடியாது. அது யூதருக்கு இக்கட்டு காலம் என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்னர் நடப்பது மிகவும் அதிசயமானதாக இருக்கும். சில வேளைகளில் நான் எழுதுவது சிலருக்கு சிரிப்பாக இருக்கலாம். நிச்சயமாக இது நடக்கும்.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
The mother of the German woman Shani Luk, who was caught on video by Hamas militants, recorded an appeal, BILD reports. Ricarda Luke from Ravensburg believes that the girl who was caught in the militant video is her 22-year-old daughter. In despair, the mother, who lives with her family in Israel, published a video message. A woman holds a photo of her daughter on her cell phone and says: “This morning my daughter was kidnapped along with a group of tourists in southern Israel. They sent us a video in which I clearly recognized our daughter. Unconscious, in a car with Palestinians as they entered the Gaza Strip. I ask for any help, any information." Shani Luk, a German citizen, came to the Nature Party festival in Israel. It passed near the border with the Gaza Strip. Her uncle Winfried Gehr told BILD that the girl came to the festival with a friend from Mexico. The German Embassy got involved in the case. The fate of Shani Luk remains unknown. @berezoview. https://x.com/GoldenR_Fella/status/1710980493351461142?s=201 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மத்திய கிழக்க்கின் மக்களாகிய யூததர்கள் ஐரோப்பாவில் எப்படி வந்தார்கள்? அவர்கள் மண்ணில் (இஸ்ரேல்) இருந்து சிலுவை யுத்தம், ஒட்டமான் பேராரசு என மாறி மாறி முஸ்லிம் ஆட்சிகள் அவர்களை ஐரோப்பா நோக்கி அடித்து திரத்தியதால். அப்படி அவர்களை திரத்தி இராவிட்டால், ஆபிரகாம், டேவிட் காலத்தில் இருந்து தாம் வாழ்ந்த மண்ணில் அவர்கள் தொடர்ந்தும் இருந்து இருப்பார்கள்.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய-மூலஸ்தானப் போரில் சிங்களவர் குளிர் காய்கிறார்கள் புலிகளையும் கமாஸையும் ஒப்பிட்டு புலிதான் கெட்டது கமாஸ்தான் நல்லதாம்... அதுக்கு சோனிகள் பக்கவாத்தியம் ஊதுறாங்கள். அத்தோடை இஸ்ரேலின்ர தாக்குதல்கள் எல்லாம் மோசமாம். ஆனால், புலிகள் தாக்கினாலும் தாங்கள் திருப்பி தமிழ் மக்கள் மீது எந்தவொரு தாக்குதலையும் செய்ததில்லையாம்... எப்பையும் தமிழர்களை பாதுகாத்தே போர் புரிந்தனராம். இப்படிக் கூறி தங்கட போர்க்குற்றங்களை மறைத்து அதற்கு வெள்ளையடிக்க முனையுறாங்கள். --------------------------------- அதே நேரம் எங்கடையள் சிலது இஸ்லாமிய கொடிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பதிவுகள் இடுகிரார்கள். ஆனால், எங்களுக்கு ஆதரவாக அன்றிலிருந்து இன்றுவரை எந்தவொரு இஸ்லாமிய இயக்கமும் குரல் கொடுத்ததில்லை. மாறாக எமக்கு எதிராகவே நின்றன. சிங்களவரைப் போற்றின. விருதுகள் வளங்கி மதிப்பளித்தன. ஆனால், இவங்கள் என்னடா என்டால், புலிகள் & ஈரோஸ் 1990களின் தொடக்கம்/1980களில் வெளியிட்ட பம்ப்லெட்டுகளை தூக்கிக்கொண்டு வந்து நின்று பாயோக் பாயோக் என்டு கத்துறாங்கள்....1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஷ்யா கிரிமியாவை சட்டவிரோதமாக தன்னுடன் இணைத்து விட்டது என கதறும் மேற்குலக ஊடகங்களும் அதன் விசுவாசிகளும்..... இஸ்ரேல் பலஸ்தீனத்தின் பெரும் பகுதிகளை கையகப்படுத்துவதை கண்டிப்பதுமில்லை.....கண்டுகொள்வதுமில்லை.....கருத்து எழுதுவதுமில்லை. எவன் உச்சத்தில் இருக்கின்றானோ அவனுக்கு செம்பு பித்தளை பாத்திரங்கள் தூக்க பழகிவிட்டோம். ஈழ விடுதலைப்போராட்டத்தையும் தவறு என விமர்ச்சிப்பதும் இங்கு நடக்கும்......நம்புங்கள் இதுவும் நாளை நடந்தேறும்.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பேஸ்புக்கிலையும் துவிட்டரிலையும் இலங்கை வாழ் சோனகர்கள் வழக்கம் போல கொக்கரித்துக்கொண்டிருக்கின்றனர். துவிட்டரில் சில ஈழத்தமிழர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவு நல்குகின்றனர்.... சிலர் இஸ்ரேலுக்கு ஆதரவு நல்கின்றனர். கதைச்சால் உண்மையைக் கதைக்கோணும். நல்ல கருத்து, ஒன்றே ஒன்றைத் தவிர. சோனாவின்ர நிலைப்பாட்டிலை நான் மாற்றமில்லை... எங்களுக்கு நடந்த போது கொண்டாடி மகிழ்ந்த சோனாக்கு இப்ப விழேக்கிலை நான் வெடி கொழுத்தி மகிழ்கிறேன். என்றென்றும்.... வாழ்க இஸ்ரேல்💏1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அந்த முல்லாக்களுக்கும் ,இஸ்ரேலுக்கும் உங்களுக்கும் ,உங்களை போன்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முல்லாக்களின் அல்லாவிற்கு🤡 லாடம் கட்டப் போறாங்கள். வெற்றி வேல் வீர வேல்... 🤣🤣 இனி உந்த வெற்றி வெற்றி என்டு படுகொலைகளை ஆதரித்துக்கொண்டு கத்தினவங்கள் "ஐயோ காப்பாத்துங்கோ, ஐயோ காப்பாத்துங்கோ" என்டு தெருக்களில் நின்று குழறுவதைக் காணலாம்.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எங்கே போர் நடந்தாலும், முதலில் இறப்பது அப்பாவி மக்கள் தான் ...நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களாய் இருந்தும் கூட ஒரு பக்கம் சார்ந்து இருந்து வெற்றிக் கூச்சல் போடுவதை பார்க்க வியப்பாய் இருக்கு1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
போகப் போகப் பாப்பம், எப்பிடிப் போகுது என்டு. அப்ப கமாஸ் செய்வது பயங்கரவாதம் தான் என்டு ஒத்துக்கொள்ளுவியளோ? ஓமோ இல்லையோ? ஒரே சொல்லில் சொல்லுங்கோ பாப்பம்.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
1 point
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇந்திராவின் அழுத்தத்திற்குப் பதிலடியாக ஜெயார் மேற்கொண்ட மூன்றுவழிக் கொள்கை அரசியல் சதுரங்கத்தில் ஜெயவர்த்தன ஒரு மேதை என்று அவரது அபிமானிகளும் எதிரிகளும் ஒருங்கே கூறுவார்கள். தனது எதிரிகள் இரு விடயங்களில் தனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள் என்றால், அவர் அவர்களுக்கு எதிராக மூன்று விடயங்களில் திட்டமிட்டுக்கொண்டிருப்பார் என்று பரவலாகக் கருதப்பட்டவர். இதே பாணியிலான சதுரங்க ஆட்டத்தைத்தான் இந்திரா காந்தி விடயத்திலும் ஜெயவர்த்தன கைக்கொண்டார். இந்திராவின் இரு வழிச் செயற்பாடுகளுக்கு நிகராக மூன்றுவழிச் செயற்பாட்டினை ஜெயார் முன்னெடுத்தார். அவரது மூன்று வழித் திட்டங்களுமாவன, 1. தனது இராணுவ இயந்திரத்தைக் கட்டமைத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தினைப் பெற்றுக்கொள்வது. 2. தமிழ் மிதவாதிகளைப் பலவீனப்படுத்துவது. 3.தமிழ்ப் போராளி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் போராட்டத்தினைப் பயங்கரவாதப் போராட்டமாக சர்வதேசத்தின் முன்னால் காட்டி அழித்துவிடுவது, தமிழ் ஈழம் எனும் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினை, நிலத்தை அபகரிப்பதன் மூலம் சிதைப்பது. 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த காலம் முதல் ஜெயாருக்கு இருந்த முதலாவது கரிசணை என்னவென்றால் தனக்கெதிராக இயங்குபவர்களை, அவர்கள் சிங்களவராகவோ தமிழர்களாகவோ இருந்தாலென்ன, அழிப்பது. தனது பிரதான எதிரியான சுதந்திரக் கட்சியை முற்றாகச் செயலிழக்கச் செய்து, தொழிற்சங்கங்களை காடையர்களைக் கொண்டு அடக்கி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அச்சுருத்தி அடிபணிய வைத்திருந்தார் அவர். ஆனால், இவர்கள் எல்லாரைக் காட்டிலும் தமிழர்கள் மேல் அவர் மேற்கொண்ட அடக்குமுறைகள் மிகக் கொடூரமானவையாக இருந்தன. தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்டுவோம் என்கிற சிங்கள இனவாதிகளின் எண்ணக்கரு 1961 ஆம் ஆண்டு சிறிமாவோவின் காலத்திலேயே முதன்முதலாக கருக்கொண்டது. அக்காலத்தில் அரச செயலகங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் செயற்பட்டை வடக்குக் கிழக்கில் முற்றாக முடக்கிப் போட்ட தமிழரின் ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தை அடக்க அவர் இராணுவ அணியொன்றினை அனுப்பி வைத்திருந்தார். ஆனால், சத்தியாக்கிரகப் போராட்டம் முழுமையாக அகிம்சை முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்தமையினால், அவர்களை அங்கிருது விரட்ட பலாத்காரத்தைப் பாவிக்க இராணுவ அணியின் அதிகாரி விரும்பவில்லை. ஆகவே, கொழும்பில் நடைபெற்ற முக்கிய மந்திரிசபைக் கூட்டத்திற்குச் சமூகமளிக்குமாறு அந்த இராணுவ அதிகாரியை சிறிமா பணித்தார். அக்கூட்டத்தில் அமைச்சரவையின் பலமான அமைச்சர் ஒருவரும் அவரது சகாக்களும் "தமிழருக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்டும் நேரம் வந்திருக்கிறது" என்று முழக்கமிட்டார்கள். ஆகவே வேறு வழியின்றி, அரசாங்கம் பணித்தவாறே சமாதானமான முறையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டிருந்த தமிழர்கள் மீது இராணுவ அடக்குமுறை ஏவிவிடப்பட்டு, சத்தியாக்கிரகப் போராட்டம் பலவந்தமாகக் கலைக்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழர்கள் சாத்வீக வழிகளில் உரிமைகேட்டுப் போராடிய போதெல்லாம் இராணுவ அடக்குமுறையினை ஏவிவிடுவதே வழமையாகக் கைக்கொள்ளப்படலாயிற்று. 1961 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சத்தியாக்கிரக நிகழ்வில் பங்குகொள்ளும் செல்வநாயகம், தம்பையா ஏகாம்பரம் மற்றும் ராஜவரோதயம் தமிழ்ப் போராளி அமைப்புக்களை இராணுவ ரீதியில் நசுக்கிவிட ஜெயவர்த்தன திடசங்கற்பம் பூண்டிருந்தார். தமிழரின் ஆயுதவழி விடுதலைப் போராட்டத்தினை நசுக்குவதற்கு பலமான இராணுவ இயந்திரம் ஒன்றினைக் கட்டியமைக்கவேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது. தனது இராணுவ உதவிகளுக்காக அவர் முதன்முறையாக வெளிநாடொன்றினைத் தொடர்பு கொண்டது ஜூலை இனக்கலவரம் ஆரம்பிப்பதற்கு ஏறக்குறைய மூன்று மாதங்கள் இருக்கும் தறுவாயில், அதாவது 1983 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 8 ஆம் திகதி. அன்று அவர் மேற்கொண்ட அறிவிப்பில் பிரித்தானியாவுடன் இலங்கை கொண்டிருக்கும் இணைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளதாகவும், இலங்கை அரசாங்கத்திற்கு வெளிநாடு ஒன்றிலிருந்தோ அல்லது உள்நாட்டிலிருந்தோ ஆபத்தொன்று உருவாகும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு பிரித்தானியா இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என்று அவர் கூறினார். 1947 ஆம் ஆண்டு இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையினை அடிப்படையாக வைத்தே ஜெயவர்த்தன இந்த அறிவித்தலை மேற்கொண்டிருந்தார். இவ்வுடன்படிக்கையின்படி பிரித்தானியாவும் இலங்கையும் தமது நாடுகளுக்கெதிராக வெளிநாடொன்றில் இருந்தோ அல்லது உள்நாட்டிலோ உருவாகும் ஆபத்துக்களை எதிர்கொள்ள இராணுவ ரீதியில் ஒன்றுக்கொன்று உதவும் என்றும், பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்றும் கூறப்பட்டிருந்தது. தான் விடுத்த அறிவிப்பிற்கான பிரித்தானியாவின் பதில் எவ்வாறானதாக இருக்கும் என்பதை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் கண்டறிய லண்டனில் இருந்த இலங்கை உயர்ஸ்த்தானிகரைப் பணித்திருந்தார் ஜெயார். தனக்குப் பரீட்சயமான செய்திநிருபர்கள் ஊடாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் பதிலை அறிய உயர்ஸ்த்தானிகர் முற்பட்டார். ஆனால், 1947 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி "இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் சூழ்நிலைகளில் மட்டுமே உதவிட முடியும்" என்று ஒப்பந்தத்தினை மேற்கோள் காட்டிய வெளிவிவகார அலுவலகம் ஜெயவர்த்தனவின் இராணுவ உதவி எனும் பேச்சினை உதாசீனம் செய்திருந்தது. ஆனாலும்கூட, தனது இராணுவ உதவி கோரலினை ஜெயார் கைவிடவில்லை. ஜூலை இனக்கொலை நடைபெற்ற சில நாட்களுக்குப் பின்னர் இந்திரா காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு ஜெயாருக்கு வந்திருந்தது. அது தன்னை அச்சுருத்தும் ஒரு செயலாக ஜெயாரினால் பார்க்கப்பட்டது. ஆகவே மீண்டும் ஆடி 28 ஆம் திகதி இராணுவ உதவிக்கான அழைப்புக்களை அவர் மேற்கொண்டார். இந்திராவின் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் அவர் பிரித்தானியா, அமெரிக்கா, பாக்கிஸ்த்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகோரும் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டார். இந்த நாடுகளை மிகுந்த அவதானத்துடன் அவர் தெரிவுசெய்தார். ஆடி 28 ஆம் திகதி இரவு அவசர அவசரமாக உள்ளக அமைச்சரவையினைக் கூட்டிய ஜெயார் அமெரிக்காவும் பிரித்தானியாவும் நிச்சயமாக தமக்கு உதவும் என்று அவர்களிடத்தில் கூறினார். மேற்குலகிற்குச் சார்பான தனது வெளிநாட்டுக் கொள்கை இவ்விடயத்தில் நிச்சயம் கைகொடுக்கும் என்றும் அவர் கூறினார். நாம் அவர்களின் நண்பர்கள், ஆகவே அவர்கள் எமக்கு உதவவேண்டிய கடமை அவர்களுக்கிருக்கிறது என்று கூறினார். அப்போது நடந்துகொண்டிருந்த பனிப்போர் நிச்சயம் தமக்குச் சாதகமான சூழ்நிலையினை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சோவியத் ஒன்றியத்துடன் இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தினால் மேற்குலகு இந்தியா மீது அதிருப்தி கொண்டிருக்கிறது என்று கூறிய ஜெயார், இந்தியாவின் எதிரிகளான சீனாவும் பாக்கிஸ்த்தனும் கூட தமக்கு உதவ முன்வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆனாலும், ஜெயார் நினைத்த எளிமையான திட்டம் தோல்வியிலேயே முடிவடைந்தது. அதற்கான முழுக் காரணம் நாடுகள் நட்பின் அடிப்படையில் அல்லாமல் தமது சொந்த நலன்களிலேயே அதிகம் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பதுதான். ஜெயவர்த்தன இராணுவ உதவி கோரிய நாடுகளைத் தொடர்புகொண்ட இந்திரா, "நீங்கள் இதில் தலையிட வேண்டாம், விலத்தியே நில்லுங்கள்" என்று கூறியபோது அவையும் அவ்வாறே செய்தன. அவர்களிடம் பேசிய இந்திரா, "இலங்கை இராணுவ ரீதியில் உதிவி கோரினால், இப்பிராந்தியத்தின் வல்லரசு என்கிற ரீதியில் இந்தியாவிடமே முதலில் உதவி கோரமுடியும்" என்று கூறினார். இதனை எந்த நிபந்தனையும் இல்லாமல் அந்த நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இலங்கைக்கு வெளிப்படையான இராணுவ உதவிகளைச் செய்வது இந்தியாவை ஆத்திரமூட்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் அரசாங்கம் கருதியதால், அதனைச் செய்ய மறுத்தது. சோவியத் ஒன்றியத்தின் வட்டகைக்குள் இருந்த இந்தியாவை எப்படியாவது வெளியில்க் கொண்டுவரும் முயற்சிகளில் அமெரிக்க இறங்கியிருந்த வேளை, இந்தியாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுப்பதை அது தவிர்த்தே வந்தது. அதேபோல் பிரித்தானியாவும் ஜெயவர்த்தனவுக்கு உதவுவதை விரும்பவில்லை. ஆனால் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை விற்க முன்வந்தன. பாக்கிஸ்த்தான் உடனடியாகவே கெரில்லாக்களை எதிர்கொள்ளும் இராணுவப் பயிற்சிகளை இலங்கை ராணுவத்திற்கு வழங்கத் தொடங்கியது. இந்தியாவின் சினத்தினை இந்த நிகழ்வு சம்பாதித்துக் கொண்டது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் தனக்கு இராணுவ உதவிகளை வழங்க மறுத்தமையினால் ஜெயார் துவண்டுபோய்விடவில்லை. தனது வெளிவிவகார அமைச்சரான ஹமீதினை அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் அனுப்பிய ஜெயவர்த்தன அந்நாடுகள் தனக்குத் தேவையான உதவியினை வழங்க மறுத்தமைக்காக தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜோர்ஜ் ஷுல்ட்ஸுடன் ஹமீது பேசும்போது இலங்கையை அமெரிக்கா ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்தார். மேலும், நேரடியாக இல்லாமல் பாக்கிஸ்த்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஊடாக அமெரிக்கா இலங்கைக்கு உதவும் என்று கூறினார். மேலும், இஸ்ரேலிடமிருந்து இலங்கைக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத்தருவோம் என்றும் அவர் உறுதியளித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜோர்ஜ் ஷுல்ட்ஸு ஹமீதிற்கு மேலதிகமாக தனது சகோதரரையும் சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, சீனா, யப்பான் மற்றும் அவுஸ்த்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிய ஜெயவர்த்தன, தனது அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார். இந்த நாடுகள் அனைத்துமே போராளிகளின் தாக்குதல்களை உடனடியாகவே பயங்கரவாதம் என்று சித்தரித்து விமர்சித்ததோடு தமிழ் ஈழக் கோரிக்கையினையும் முற்றாக நிராகரித்திருந்தன. ஆனால் தமிழ்ப் போராளிகளுக்கு உதவிவரும் இந்தியாவை விமர்சிப்பதை அவை தவிர்த்திருந்தன. சீனா மட்டும், "ஒரு பெரிய நாடு தனக்கருகில் இருக்கும் சிறிய நாட்டை அச்சுருத்த முடியாது" என்று விமர்சனம் செய்திருந்தது.1 point -
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தலைமுறை தலைமுறையாக பலஸ்தீனர்களை திறந்தவெளிச் சிறை போல மேற்குக்கரையிலும், ஹாஸாவிலும் ஆயுத பலத்தைக் காட்டி அடக்கிவைத்திருக்கும் இஸ்ரேலும், அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும், ஒற்றுமையில்லாத மத்தியகிழக்கு நாடுகளும், பாலஸ்தீனம்- இஸ்ரேல் இரண்டும் இருநாடுகள் என்ற தீர்வை கொடுக்கமுடிடியாத வலுவற்ற ஐ.நா. அமைப்பும் இன்றைய தாக்குதலுக்கும், பொதுமக்களின் உயிரழப்புக்களுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள். எதிர்வரும் நாட்களில் இஸ்ரேல் கொடூரமான முறையில் இன்னும் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களைக் கொன்றழிக்கும்போது இந்த சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கும்.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
3 தினங்களுக்கு முன் சிரியாவில்.. ஒரு கடேட் அக்காடமி பரிசளிப்பு வைபவத்தின் மீது குண்டுகள் தாங்கிய ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல்.. அமெரிக்க ஆதரவு முஸ்லிம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 க்கும் அதிக மக்கள்.. பெண்கள்.. குழந்தைகள் என்று கொல்லப்பட்டும்.. 1000 வரை காயமடைந்தும் இருந்தனர். பல மேற்குலக ஊடகங்கள் இதனை செய்தியாகக் கூடப் போடவில்லை. மேற்குலக மனித உரிமை ஜாம்பவான் நாடுகள் வாயே திறக்கவில்லை. இன்று இஸ்ரேலை மையப்படுத்தி கட்டி வைக்கப்பட்டிருந்த அனைத்து மாயைகளும் நொருங்கிவிட்டது. மேற்குலக ஜாம்பவான்கள் கண்ணீரும் கம்பலையுமாக அறிக்கை விடுகிறார்கள். 1. உலகிலேயே சிறந்த இராணுவ பாதுகாப்பு எல்லை என்று சொன்ன எல்லையை பலஸ்தீன விடுதலைப் போராளிகள் கடந்து சென்றுள்ளமை. 2. இஸ்ரேலின் மிகச் சிறந்த உளவு அமைப்பு என்று சொல்லப்பட்ட மொசாட் படுதோல்வி கண்டுள்ளமை. 3. கமாஸின் ராக்கட்டுக்களை அழிக்க முடியாமல் திணறிய இஸ்ரேலின் அயன் சீல்ட்... ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறை. 4. உலகில் சிறந்த டாங்கிகளை கொண்ட இஸ்ரேலின் தாங்கிகள் மீது கமாஸ் சவாரி. செயல்திறனற்றுப் போனமை. 5. உலகில் சிறந்த இராணுவம் என்று சொல்லப்பட்ட இஸ்ரேல் இராணுவம்.. சண்டையிடாமலே.. சரணடைந்த கேவலம். 6. இத்துணை பெரிய இராணுவ நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இஸ்ரேலின் இராணுவ கண்காணிப்பை சிதறிடித்து இஸ்ரேலுக்குள் பல முனைகளில் நுழைந்துள்ள கமாஸ் போராளிகள். எல்லாமே.. இஸ்ரேல் பற்றிய மாயையை தகர்த்துவிட்டுள்ளது. இதே இஸ்ரேல்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஆரம்பம் முதல் கடைசி வரை.. சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்கும் இராணுவ இயந்திரத்திரத்திற்கும் பலவேறு வழிகளில் உதவி வந்ததோடு.. முக்கிய டோரா... பீரங்கிப் படகுகள்.. கிபீர் விமானங்களை சொறீலங்கா.. தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு பயன்படுத்த தொடர்ந்து வழங்கி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆளில்லா உளவு விமானங்களையும் (வண்டு).. இஸ்ரேலே சொறீலங்காவுக்கு வழங்கி இருந்தது. கமாஸின் பயங்கரவாதத்தை விட இஸ்ரேலின் பயங்கரவாதம்.. எம்மினத்தை அதிகம் அழித்திருக்கிறது. எம்மினம் இன்று அடிமைப்பட்டுக்கிடக்க அதுவும் ஒரு காரணம். இஸ்ரேலின் பயங்கரவாதம் கமாஸினதை விட மிக மிக மிக மிக மோசமானது. அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவானது.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சப்பானின் முத்துத் துறைமுகத் தாக்குதல் போன்றது தான் உது..🤡 வாங்கிக் கட்டப் போயினும், உவையள் நல்லா வாங்கிக் கட்டப் போயினம்.1 point
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யாழ் நிருவாகத்தில் உள்ள உங்களுக்கு அவர் யாழ் கருத்துக்கள விதிமுறைகளை எப்படி எல்லாம் இந்த கருத்தாடலில் மீறி உள்ளார் என்பதை கண்டுகொள்ள இஸ்டம் இல்லை போலும்.0 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
@Maruthankerny அந்த பெண்ணினை இம்சித்தவர்களில் ஒருவனின் பெயர், விபரத்தை ஜேர்மன் ஆட்கள் சிலர் கூகிள் துணை கொண்டு கண்டு பிடித்துள்ளார்களாம்.0 points