Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    13
    Points
    15791
    Posts
  2. அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1962
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31986
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/27/23 in all areas

  1. விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும் அன்னக்காவடிகளே! விலை எங்கு போனீர்? வலை பின்னி வாரீர் வார்த்தைகள் பொய்க்கின்றீர் நிசம் இது இல்லை விழிகளே கூறும் மெய்நிலை உணர்கின்றேன். தமிழச்சாதி இவ்வளவு தூரத்திற்கு மலினப்பட்டுவிட்டதா?
  2. முழுமையாக கேளுங்கள், பலருக்கும் பகிருங்கள்.
  3. நன்னிச் சோழன் உங்கள் கருத்துக்களில் இப்போதெல்லாம் ஒருவித வன்ம, காழ்ப்பு பாணி இருப்பதை போல தெரிகிறது. நீங்கள் எதோ ஒரு ஆர்வத்தில் அப்படி பதிவிட்டாலும், உங்கள் தாயகம், தேச விடுதலை நோக்கிய செயல்பாடுகளுக்கு சற்றே நெருடலாக இருக்கிறதை போல நான் உணர்கிறேன். தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்க.
  4. இந்த துவாரகா பார்ட்டி கொஞ்சம் ஓவராக ஆட்டம் போடுகிறார்கள் என்பதை தவிர தமிழர்களின் அரசியலை கொண்டு செல்கிறோம் என்று கூறி தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் தேசிய அரசியல் என்று (ஏமாற்றும்) செயற்படும் ஒட்டு மொத்தமான எல்லா அமைப்புகளுக்குமே சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி நகரும் எந்த அக்கறையும் இல்லை. ஆகவே, இந்த துவாரகா குறூப்புக்கும் மற்றய தேசிய அமைப்புகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதே நிஜம். தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டுமானால் தற்போதைய நிலையில் சாத்தியமான, விரைவான, அரசியல் தீர்வை நோக்கிய நகர்வு மிக அவசியம். அதைச் செய்ய ஒருங்கிணைந்த புரிந்துணர்வுடன் கூடிய செயற்பாடு அவசியம் என்ற அரசியல் பாலபாடத்தை கூட புரிந்து கொள்ளாது தமக்குள் குறுகிய அரசியல் செய்யும் தாயக/ புலம் பெயர் தேசிய அமைப்புகளுக்களுக்குள் கொஞ்சம் விசர் கூடிய அமைப்பே இந்த துவாரகா பார்ட்டி.
  5. இக்காணொளியில் விடுதலைப்புலிகள் பாவிக்காத ஒரு சொல்லை பலதடவை பாவிச்சிருக்கிறார் அதாவது ஒரே சொல்லை அதுவும் விடுதலைப்புலிகள் தங்கள் உரையில் பாவிக்காத சொல்லைப் பலதடவைகள் பாவித்ததால் துவாரகா என்று சொல்லி உரை நிகழ்த்தும் இவரைப் போட்டியிலிருந்து விலக்குகிறோம். அந்தசொல் என்னவெனில் நாம் என்று தேசியத்தலைவர் பாவிக்கும் சொல்லை நான் எனப் பல இடங்களில் இவர் பாவிக்கிறார் அதாவது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடும் கொள்கை விளக்க உரையை எப்போதும் நான் தெரிவித்துகொள்கிறேன் எனச்சொல்வதில்லை அதாவது "நாம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றே உரைப்பது வழக்கம். ஆனால் மிகவும் அருவருக்கத்தக்கதும் புலிகளது ஈகத்தை மலினப்படுத்துவதும் தலைவரது குடும்பத்தை இழிவுபடுத்துவதும் தவறு எனச்சொல்லிக்கொண்டு போரில் மரணித்துவிட்ட ஒரு உயிரை கண்டவர்கள் எல்லாம் நக்கல் நையாண்டி செய்ய திட்டமிட்டே நாடகமாடிவிட்டது "தமிழர் விரோததேசமாகிய இந்தியா" இந்தியா நாசமாகிப்போகும் காலம் மிகவிரைவில் வரும். கொசுறாக இந்தியாவின் வேண்டுதலின் பிரகாரம் விடுதலைப்புலிகளது படங்கள் மற்றும் காணொளிகள் அனைத்தையும் தடை செய்து அதனை வெளியிட்டவர்களது கணக்குகளைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைசெய்யும் முறைமையை இப்போது முகப்புத்தகம் தவிர்த்திருக்கிறது. இதன்மூலம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்னுமாப்போல் இந்தியா தனது கபடமுகத்தைத் தோலுரித்துக்காட்டி மிகவும் அசிங்கமாகச் சிரிக்கிறது.
  6. யாழ் களம் மே மாதத்தில் 17 , 18 திகதிகள் வரும் வாரத்தில் தான் தலைவருக்கு படத்துடன் கூடிய அஞ்சலியை செலுத்துவது. இந்த வருடமும் அதனையே செய்தோம். நன்றி.
  7. தலைவருக்கு நான்கு பிள்ளைகள், அதில் கடைசி பிள்ளை ஒருபோதுமே வெளியில் வரவில்லை, எனவே அந்தப் பிள்ளையை வெளியே காட்டுகிறோம் என்று ஒரு திட்டத்துடன் அடுத்த முறை வந்தாலும் வருவார்கள்
  8. ராசாக்கள் வரட்டுக்கும் பிடிச்சு வீட்டில உள்ள கக்கூஸ் எல்லாத்தையும் கிளீன்பண்ணவிட்டால் போச்சு!
  9. காணொளியிலுள்ள பேச்சினை நிதானமாகக் கேட்கப் பொறுமை இல்லை. சுருக்கமாக விளங்கியது என்னவென்றால் மக்களே மறுபடி போராடித் தமிழீழம் எடுக்க வாருங்கள் என்கிறார் (தவறு என்றால் யாராவது விளக்குங்கள்). 14 வருட அஞ்ஞாதவாசச் சிந்தனை இவ்வளவுதானா ? ஏதாவது ஒரு சிறு துரும்பு கூட இல்லாமல் இந்த அறிக்கை தேவையா ? ஆளுமை அறிவியல் ராஜதந்திரம் எதுவுமே இல்லாத பிரயோசனமில்லாத இந்த அறிக்கையை வாசிப்பதை விட பேசாமல் இருந்திருக்கலாம்.
  10. ஒன்று விளங்கவில்லை... வளவன் இணைத்தமைக்கு ஏன் எல்லோரும் இனை குத்துகின்றீர்கள் என. உண்மையில் அவர் இங்கு இணைத்தமையை வரவேற்க வேண்டும். இதைப் பற்றி உரையாடுவதற்கும், உண்மைத்தன்மை பற்றி கதைப்பதற்கும், இந்த போலிகளை தோலுரிக்கவும், இதனை இணைத்தல் அவசியம் அல்லவா?
  11. நேற்றையில இருந்து துவாரகா வெளியிலை வாறா என்டு அறிவிக்கிறதிலை விசுகரும் கருவரும் கொஞ்சம் பிசியாம்... இன்டைக்கு வந்து உவதா ஆள் என்டு சொல்லி ஒரே கூத்தடிக்கப் போயினம்
  12. இது... "உக்ரைனா", "காஸா" வா... என்று தெரியவில்லை. ஆனால் காலத்திற்கு ஏற்ற புகைப்படம். வரைந்த ஓவியருக்கு பாராட்டுக்கள்.
  13. எதற்கும் ஊடக அடியாள் சேரமானின் துணையுடன் வந்த கொள்ளை பரப்புரையை யாழை வாசிப்பவர்கள் பாருங்கள். இதில் உள்ளவை எந்த எந்த ஆண்டு மாவீரர் உரைகளில் இருந்து உருவியதென்று கண்டுபிடித்துப் போட்டாலும் நல்லது.. ::::::::::::::::::: எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். தமிழீழம் என்ற அதியுன்னத இலட்சியத்திற்காகத் தமதுஇன்னுயிரை ஈகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமதுஇதயக் கோவில்களில் நாம் பூசிக்கும் இத் திருநாளில்உங்கள் முன் வெளிப்படுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்புஅளித்திருப்பதை மிகப்பெரும் பேறாகவே கருதுகின்றேன். இப்படி ஒரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையே ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே இன்று உங்கள் முன் நான் வெளிப்படுகின்றேன். அதே போல்என்றோ ஒரு நாள் தமிழீழத் தாயகம் திரும்பி, அங்கு எமதுமக்களோடு கூட இருந்து அவர்களுக்காகப் பணிசெய்வதற்குக் காலம் வாய்ப்பளிக்கும் என்ற அசையாதநம்பிக்கை எனக்கு உண்டு. எனது அன்பார்ந்த மக்களே, முழு உலகமுமே வியப்படையும் வகையில் களமுனைகளில்சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். தனித்து நின்றுஎம்மோடு போர்புரியத் திராணியற்ற சிங்கள அரசு, சக்திவாய்ந்த நாடுகளைத் தன் பக்கம் வளைத்தது. தோல்வியின்விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நியசக்திகளிடமும், சக்திவாய்ந்த நாடுகளிடமும் மண்டியிட்டுயாசகம் புரிந்தது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீதுஉலகின் பல நாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டு எமதுவளங்கள் முடக்கப்பட்டன. தமிழீழ தாயகத்திற்கானவிநியோகப் பாதைகள் மூடப்பட்டன. சிங்களப் படைஇயந்திரத்தை எமது தேச சுதந்திர இயக்கம்பலவீனப்படுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்சக்திவாய்ந்த நாடுகள் தலையிட்டு சிங்களப் படைஇயந்திரத்திற்கு உயிர்ப்பூட்டின. உலகின் ஒரு மூலையில்தனித்து நின்று, எமது மக்களின் ஆதரவில் மட்டும் தங்கிநின்று போராடிய எமது தேச விடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப் போனதற்குஇதுவே காரணமாகும். ஆனாலும் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம்முற்றுப் பெறவில்லை. தமிழீழம் என்ற அரசியல் வேணவாகருக் கொள்வதற்குக் காரணமாக இருந்த புறநிலைசூழல்கள் இன்றும் கூட அப்படியே தான் இருக்கின்றன. தமது தாயக பூமியில் தமது கலாச்சார பண்பாட்டுவிழுமியங்களையோ, தத்தமது சமய வாழ்வையோ, மொழிப் பாதுகாப்பையோ பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்குப்பண்பாட்டுச் சீர்கேடுகளை ஊக்குவித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பாகுபாடுகளை மேற்கொள்வதோடு, சிங்கள-பௌத்த மயப்படுத்தல் நடவடிக்கைகளை சிங்களஅரசு முழு மூச்சுடன் முன்னெடுத்து வருகிறது. இவை போதாதென்று ஈழத்தீவில் முற்று முழுதாகச் சிங்களப்படையாட்சிக்கு உட்பட்ட ஒரேயொரு மாநிலமாகத் தமிழீழதாயகத்தைச் சிங்களம் மாற்றியமைத்துள்ளது. அனைத்துசுதந்திரங்களும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டதேசமாகத் தமிழீழத் தேசம் திகழ்கின்றது. சட்ட ஆட்சிமறுக்கப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச்சட்டம் என எந்நேரமும் இராணுவப் பேயாட்சியைச் சிங்களம் திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்ட ஒரு மக்களாகவேஈழத்தீவில் எமது மக்கள் வாழ்கிறார்கள். மறுபுறத்தில் எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தால், அரசியல் வழிகளில் எமது மக்களின் அபிலாசைகளைநிறைவேற்றலாம் எனப் போர் நிகழ்ந்த காலப்பகுதியில்ஆசைவார்த்தை கூறி, நம்பிக்கையூட்டிய உலகின் சக்திவாய்ந்த நாடுகள் இற்றை வரைக்கும் எமதுமக்களுக்கு ஒரு காத்திரமான அரசியல் தீர்வைத் தானும்வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ் மக்களுக்குஇழைக்கப்பட்டது போர்க் குற்றம் என்றும், மானிடத்திற்குஎதிரான குற்றச்செயல் என்றும் கடந்த பதினான்குஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐ.நா. மன்றமும், இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றிய சக்தி வாய்ந்தநாடுகளும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட தமிழீழத்தேசத்திற்கு இற்றை வரைக்கும் ஒரு பரிகார நீதியைத்தானும் பெற்றுத் தரவில்லை. இவை தான் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம்தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணிகளாகும். சமஸ்டி அரசு கோரி 1950களில் எழுச்சி கொண்ட எமதுதேசத்தின் அகிம்சைப் போராட்டம், 1960களில் ஆயுத வலுக்கொண்டு சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. இதன் விளைவாகவே 1970களில் போர்க்குணம் கொண்ட இளையதலைமுறை தோற்றம் பெற்றது. சிங்கள ஆயுதப்படைகளையும், அதன் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தையும்எதிர்த்து வீரம்செறிந்த ஆயுதப் போராட்டத்தை எமதுஇளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத் தலைவரும்எனது தந்தையுமாகிய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்களின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் அணிதிரண்டஎமது இளைஞர்களும், யுவதிகளும் ஈழத்தமிழினம் ஓர்வீறுகொண்ட, மண்டியிடாத வேங்கையினம் என்பதைநிறுவினார்கள். இந்த நிலையை உருவாக்கித் தந்தவர்கள்தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈகம்செய்தமாவீரர்களே. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள்.அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றும் எம்மனக்கோவிலில் வைத்துப் பூசிப்போம். எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், எமதுசுதந்திரத்திற்கான, எமது அரசியல் அபிலாசைகளைவென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடுஇருப்பதற்கு, எமது தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் எமது மக்களும், அரசியல் தலைவர்களும், எமது தேச விடுதலை இயக்கத்தில் பணிபுரிந்தபோராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்திற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான யதார்த்தசூழமைவில் மக்கள் என்றும், புலிகள் என்றும்ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப் பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும்யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிமாணமாகும். ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும்வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல்உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக நாங்கள்இருக்கின்றோம். கட்சி பேதங்கள், அமைப்புகளுக்கிடையேநிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ தேசத்தின்அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதிகிட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும்பயணிக்க வேண்டிய கடப்பாடு தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கும்உண்டு. கருத்து வேறுபாடுகள் எமக்கிடையே நிலவலாம். ஆனாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதே தேசத்தின் அரசியல் உரிமைகள் என்று வரும் போது ஒரே கோட்டின் கீழ்பயணிக்க வேண்டியவர்களாக நாம் எல்லோரும்இருக்கின்றோம். அதே நேரத்தில் தாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்எமது மக்களினதும், கடந்த காலங்களில் தம்மையேஅர்ப்பணித்துப் போராடிய முன்னாள் போராளிகளினதும்வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, அவர்களின் பொருண்மியவாழ்வை மேம்படுத்த வேண்டிய கடப்பாட்டைக்கொண்டவர்களாக எமது தேசத்தின் வளம்கொண்டதரப்பினர் இருக்கின்றார்கள். குறிப்பாக இதற்கானபொறுப்பு புலம்பெயர் தேசங்களில் வாழும்ஈழத்தமிழர்களுக்கு உண்டு. வறுமைக் கோட்டின் கீழ் வாழும்எம் இன உறவுகள் அனைவரையும் பொறுப்பேற்று உதவி புரிந்தால் அந்நியர்களிடம் எமது தேசம் கையேந்தி நிற்கும்நிலை ஏற்படாது. இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ச்சியாகக்குரலெழுப்பி, பக்கபலமாகத் திகழும் தாய்த் தமிழகஉறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத் தமிழ்மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எமது இனம் கடந்து இந்தியாவிலும் மற்றும்உலகநாடுகள் எங்கும் எமக்காகக் குரல் கொடுத்துதுணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையோடுபற்றிக்கொள்கிறேன். தமிழீழ தேசத்திற்குப் பக்கபலமாகத்திகழும் தாய்த் தமிழக உறவுகளும், உலகத் தமிழர்களும்எமது மக்களுக்கு உறுதுணையாக நின்று, எமது மக்கள்தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்தும்நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று எனக்கு அசையாதநம்பிக்கை உண்டு. எனது அன்பார்ந்த மக்களே, நாம் வரித்துக் கொண்ட இலட்சியமும், இதற்காக எமதுமாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் புரிந்தஈகங்களும், சந்தித்த இழப்புகளும் அளப்பரியவை. இவைஒரு நாளும் வீண்போகாது. நெருக்கடி மிகுந்த காலங்களில்எல்லாம் எமக்குத் தூண்களாக நின்றவர்கள் எமதுமக்களாகிய நீங்களே. இலட்சியத்தால் ஒன்றுபட்டமக்களாக எமது விடுதலையை வென்றெடுக்க ஒன்றுசேரவேண்டுமென்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றேன். மாற்றம் கண்டுள்ள உலக ஒழுங்கிற்கு ஏற்ப, அரசியல்வழியில், அறநெறி நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லா வகையான போராட்டங்களிலும் அரசியல்போராட்டம் மிகவும் கடினமானது. இவ் வகையானபோராட்டத்திற்குப் பொறுமையும், நம்பிக்கையும், இலட்சியஉறுதியும் அடிப்படையானது. இதனை நான் புரிந்துகொள்ளாமல் இல்லை. தமிழீழத் தனியரசே எமது தேசத்தின் இறைமையையும், தன்னாட்சி உரிமையையும் உறுதி செய்யும் என்பது எனதுஅசையாத நம்பிக்கை. இதுவே எமது தேசியத் தலைவரின்நிலைப்பாடும் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எமதுமக்கள் தமது தாயக பூமியில் அவர்களது மொழியையும், பண்பாட்டையும், தத்தமது சமய வாழ்வையும், பொருண்மியவளங்களையும் பேணிப் பாதுகாத்து, மேம்படுத்தக் கூடியவகையிலும், சனநாயக விழுமியங்களுக்கு இசைவாகவும், தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும்பேணக் கூடிய விதத்திலும், சட்ட ஆட்சி கொண்டமக்களாட்சியாகத் "தமிழீழம்" என்ற தனியரசுஅமைவதற்கான புறச்சூழலை காலம் ஒரு நாள்கட்டவிழ்க்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு. அதேநேரத்தில் தமிழீழ தாயகத்தில், தன்னாட்சி உரிமையின்அடிப்படையில் ஒரு தேசமாகத் தமிழீழ மக்கள் வாழ்வதற்குவழிசமைக்கக் கூடிய வகையில் உலகம் முன்வைக்கக்கூடியஅரசியல் தீர்வுகளைப் பரிசீலித்துப் பார்ப்பதற்கு எமது தேசம்தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் உணராமல்இல்லை. சிங்கள மக்களுக்கும் இந்நேரத்தில் ஒரு விடயத்தைக்கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாம் சிங்கள மக்களுக்குஎன்றுமே எதிரானவர்கள் அல்ல. நீங்கள் எங்களுக்குஎதிரிகளும் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம்செயற்பட்டதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சிங்களஇனவெறிகொண்ட அரசு இயந்திரத்தாலும் சுயநலம்கொண்ட சிங்கள அரசியல்வாதிகளினாலும் திட்டமிட்டவகையில் பொய்யான கருத்துக்கள் விதைக்கப்பட்டுஅப்பாவிச் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்குஎதிரானவர்களாகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதையும்நான் அறிவேன். எனவே எம்மினத்தின் தார்மீகஉரிமைகளையும் எமது மக்களின் உணர்வுகளையும், எமதுஅறத்தின்பாற்பட்ட போராட்டத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள்என்று நம்புகிறேன். எனது அன்பார்ந்த மக்களே, எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டது போன்று “எமதுபாதைகள் மாறலாம், ஆனால் ஒரு போதும் எமது இலட்சியம்மாறப் போவதில்லை.” சத்தியத்தின் சாட்சியாக நின்று எமதுமாவீரர்களின் தியாகமும், மாண்டு போன மக்களின்ஈகங்களும் எமது தேசத்திற்கு வழிகாட்டும். அந்தச்சத்தியத்தின் வழியில் சென்று, என்றோ ஒரு நாள் நாம் எமதுஇலட்சியத்தை அடைந்தே தீருவோம். "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
  14. ஹிந்தியாவின்.. சீனாவின்.. மேற்குலகின்.. ரஷ்சியாவின் தேவைகளோடு சேர்ந்து நாம் ஓடாவிட்டால்.. இலக்கை அடைவது இலகு அல்ல. எமது பூகோள அரசியல் ராஜதந்திரப் பலவீனமே.. முள்ளிவாய்க்கால் மெளனம். இதனை தெளிவாகச் சொல்கிறது பேச்சு. அதனை இன்னும் இனம்காணாமல்.. ஒட்டினால்.. ஒன்றில் ஹிந்தியா.. இல்ல சிங்களம் என்று காலம் கடத்துவோமாக இருந்தால்.. எம் மாவீரர்களின் கனவு நனவாக இன்னும் பல சதாப்தங்கள் தேவைப்படும்.
  15. இதில் கேவ‌ல‌ம் என்று சொல்ல‌ என்ன‌ இருக்கு.....விள‌ங்க‌ப் ப‌டுத்த‌வும்.... ஏதும் நானோ அல்ல‌து ந‌ன்னி சோழ‌னோ ஏதும் த‌வ‌றாக‌ எழுதி விட்டோமா அண்ணா...............இன்று தான் த‌லைவ‌ரின் ம‌னைவி அம்மா ம‌திவ‌தனியின் ப‌ட‌த்தை பார்த்தேன்............சொந்த‌ ச‌கோத‌ரியின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்தின‌ அருணா..........அவாக்கு முட்டுக் கொடுக்க‌ யாழில் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் இருக்கிறார்............இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ செய‌லுக்கு நாட்டு ப‌ற்று அறிவுள்ள‌வ‌ர்க‌ள் ஒரு போதும் ஈடு ப‌ட‌ மாட்டின‌ம்...........நாம் வைச்ச‌ விவாத‌ம் த‌லைவ‌ர் குடும்ப‌த்தின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்த‌ வேண்டாம்..............பூமாலை போட்டு க‌ண்ணீரை கானிக்கையாக்கி வ‌ண‌ங்க‌ வேண்டிய‌ துவார‌காவ‌ யாழில் யார் கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌து................நேற்று த‌லைவ‌ரின் பிற‌ந்த‌ நாள் நேற்று தான் என‌து பிற‌ந்த‌ நாளும்..........பிற‌ந்த‌ நாளுக்கு க‌ண்ணீர் விட்டு அழுது விட்டு ப‌டுத்த‌ நான்..............ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் வ‌லி வேத‌னை அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு புரியாது...............த‌லைவ‌ர் இருக்கிறார் என்று அட‌ம் பிடித்த‌ ந‌ப‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ர்............இதுவும் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரின் தியாக‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து போல் தானே.............ச‌ரி 2009க‌ளின் விப‌ர‌ம் தெரியாம‌ இருந்தோம்..........14வ‌ருட‌ம் க‌ழித்தும் த‌லைவ‌ர் அருகில் நின்ற‌ போராளிக‌ள் காணொளி ஆதார‌த்தோடு சொல்ல‌ வில்லையா த‌லைவ‌ர் இந்த‌ இட‌த்தில் தான் வீர‌ச்சாவு அடைந்தார் என்று.............த‌ம்பி பால‌ச்ச‌ந்திர‌னை த‌னிய‌ விட்டுட்டு பெத்த‌ தாய் புலம்பெய‌ர் நாட்டுக்கு த‌ப்பி செல்பாவா.............இப்ப‌டி ப‌ல‌ நூறு கேள்விக‌ள் இருக்கு கேட்க்க‌............இதை போய் கேவ‌ல‌ம் என்று சொல்ல‌ எப்ப‌டி உங்க‌ளுக்கு மன‌சு வ‌ருது😏.................
  16. உண்மைகளை விட பொய்களையே அதிகம் அலசி ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் உண்மையை விட பொய்களே இலகுவாக உள்ளே நுழைந்து விளையாடுகின்றன. உண்மைகள் சாவதில்லை. என்றோ ஒரு நாள் உயிர்த்தெழும். ஆனால் பொய்களோ உண்மையின் இருந்த இடத்தையே தடம் தெரியாமல் அகற்றி விடும். இது காலம் கற்றுத்தந்த பாடம்.
  17. மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டிய யாழ் களம்.. துவாரகா உண்மையா பொய்யா என்று அடிபடுவதிலும் வீழ்ந்து போன மறவர்களின் எதிரிவெளியிட்ட ஒளிப்படங்களை மீளவும் தரவேற்றியும்..தங்களின் வாதப் பிரதிவாதங்கள் எடுபட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்.. தீவிரமாக இருக்குது. நல்ல வழிநடத்தல். தமிழீழத் தாயகக் கனவோடு தம் இன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம். உண்மையில் தாயக மக்கள் மிகத் தெளிவாக ஆற்ற வேண்டிய கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து தம் பிள்ளைகளுக்கு சகோதர சகோதரிகளுக்கு மாமா மாமிகளுக்கு அஞ்சலி செய்திருக்கிறார்கள். அந்த மக்களிடம் உள்ள தெளிவு.. யாழ் களத்திடம் கூட இல்லாமல் போனது கேவலம்.
  18. துவாராக வெளியில் கொண்டு வருகிரம் என்று இறங்கின கூட்டம் அதாங்க நம்ம இந்திய உளவுபிரிவுகள் விழி பிதிங்கி நிக்கினமாமே இனிமேல் என்ன உருட்டு உருட்டினாலும் தமிழ் சனம் நம்ப போவதில்லை அந்தளவுக்கு பழம் சீலை சத்தமாய் கிழிந்து விட்டது .😀 படத்தில் துவரகாவாய் நடிக்க வந்த வந்த பெண்ணின் ரிசிமூலம் ரசி மூலம் முகவரி எல்லாமே கிழித்து தொங்க போடுகினம் இங்கு போடுமளவுக்கு தரம் இல்லை .
  19. மதி மாமியின் பூதவுடல் & மதிமகளின் வித்துடல் (இவற்றை அந்த இந்திய யூரியூப் சனலில் வெளியிட்ட பின்னரே என்னிடத்தில் இருப்பில் இருந்த படிமங்களுக்குள் தேடி முழுப்படத்தையும் எடுத்தனான். அப்படி இருந்தும் என்னிடத்தில் மதி மாமியின் பூதவுடலின் முழுப் படம் இல்லை.) மதி மாமி: நீலத்துணியால் போர்த்தப்பட்டிருப்பவர் மதி மாமி: நடுவிலை மாலதி படையணியின்ர படையணிச் சீருடையோடு (காற்சட்டையால் கீழுடல் போர்த்தப்பட்டிருப்பவர்) வித்துடலாய் வளர்த்தப்பட்டிருப்பவர்: பி.ம. துவாரகா (இயக்கப்பெயர்: மதிமகள்) அந்த மஞ்சள் பஞ்சாபி: மதிமாமியின் கால்கள்
  20. துவாரகா வின் பேச்சு என்ற கபட நாடக உரையை வெளியிட்டவர்கள் ஆகக் குறைந்தது செய்யும் களவிலாவது கொஞ்சம் மினக்கெட்டு இருக்கலாம். 'அவர்களின்' வளத்தையும் காசையும் கொள்ளை அடித்த இந்தக் கூட்டம், Deep fake போன்ற நவீன தொழில் நுட்ப விடயங்களுக்காகவது கொஞ்சம் காசை செலவழித்து இதனை வெளியிட்டு இருக்கலாம். இனை கூட பயன்படுத்தவில்லை இந்த மூடர்கள். இனி இதைச் சொல்லி உண்டியல் குலுக்கிக் கொண்டு இவர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, கக்கூஸ் கழுவ பயன்படுத்தும் துடைப்பத்தை எடுக்க மறந்து விடாதீர்கள்
  21. இதுபற்றி என்ன பேசி கொள்ளபோகிறார்கள் என்பதை அறியவே இணைத்தேன் பாலபத்திய ஓணாண்டி வேறொன்றுமில்லை.
  22. கார்த்திகை 27 க்காக இப்பாடல் சமர்ப்பணம்..........! 🙏
  23. இந்த குஷ்பு என்பவர் குறிப்பிட்டது அவமரியாதையான நோக்கம். கண்டிக்கபட வேண்டியது.. இந்த குஷ்பு மட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது பேச்சாளராக இருந்திருந்தால் யாழ்களத்தில் அவர் நிலைமையே வேறு 🤣 ஆளுக்கு ஆள் போட்டி போட்டு கொண்டு அவா எப்போதும் அன்பானவர், அவாஅன்பாக சொன்ன சேரி என்ற வார்த்தையை தவறாக விளங்கி கொள்ளலாமா என்று அவரை நியாயபடுத்த கடுமையாக பாடுபடுவார்கள்.
  24. ந‌ன்றி அண்ணா............. ந‌ன்றி இணைய‌வ‌ன் அண்ணா........
  25. தோழர்..காருக்கு கியர மாற்றுவது சுலபம்.. புல்றோசருக்கு கஸ்ரம் .. போக போக அதை உணர்வார்
  26. இறுதி காலத்தில் தன் தொலைபேசியை அணைத்து வைத்து இருந்த இந்த வைகோ எனும் சந்தர்ப்பவாதி சொல்கிறார் இதை. தனக்காக தீக்குளித்த தொண்டர்களின் தியாகத்தை மதிக்காத இந்த தலைவர் இன்று காசு அடிக்கும் கயவர் கூட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடிய விடயம் அல்ல.
  27. பார்த்தவுடன்... சிரிப்பு வரவைத்த கருத்தோவியம். 😂 2024´ம் ஆண்டை வைத்து ஓவியரின் சிந்தனையும், தூரிகையும் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளது.
  28. அட அவர் உதை நம்பேலை... தான் துவாரகா அக்காவின்ர குரலையே நேரில கேட்டனான் என்டெல்லோ திண்ணையில அறிவிச்சவர்... அவற்ற எல்லையே வேறை... ஆள் கதைச்சுப் போட்டுத்தான் உறுதிப்படுத்துவார்😜😂 (அன்டைகே நினைச்சு வைச்சனான், 27 ம் திகதி ஐயாவை அறுக்கிறது என்டு...) மட்டுமில்லாமல், அவர் பாட கருப் பிள்ளையார் ஆட, ஒரே கூத்தா இருந்தது நேற்று.😂 இன்டைக்குப் பாருங்கோ, ரண்டுபேரையும் இந்தத் திரிப்பக்கமே காணேலை... வந்தால் மொங்கப்படுவம் என்டு தெரிஞ்சு ஓடிற்றினம்.😝
  29. விசுகண்ணையும் உதிலை ஓராள்..😂 உத நம்பி இதுக்கு விசுகண்ணை குடுத்த பில்டப் இருக்கே..🤦🏻

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.