Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    12
    Points
    15791
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    53011
    Posts
  4. island

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1749
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/29/23 in all areas

  1. துவாரகா வருவா என நம்பியவர்கள், நம்பி அதனை வெளியே காவித்திரிந்தவர்கள் அனைவரும் கபட நோக்கில்தான் செய்தனர் என்று கூற முடியாது. பலர், உண்மை என நம்பி இருந்தனர். விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் மீதும் கட்டமைக்கப்பட்டு இருக்கும் அதீத நம்பிக்கை அவர்கள் ஒரு போதும் இறந்து போக மாட்டார்கள் என்று நம்பும் அளவுக்கு சிலருக்கு இருந்ததை அவதானித்துள்ளேன். அந்த அதீத நம்பிக்கை, சரி பிழைகளை சீர் தூக்கிப் பார்க்கும் அறிவை மேவி இருந்தது. ஆனால், இந்த காணோளி வந்த பின்பும், அப்பட்டமாக அது துவாரகா இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்த பின்னும் கூட, தம் தவறை ஒத்துக்கொள்ள மறுத்தும், சாக்கு போக்கு சொல்லி தம் நம்பிக்கையை நியாயப்படுத்தியும், நேரடியாக மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கின்றவர்களையும், "இல்லை அது துவாரகா தான்" என்று இன்னும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களையும் இனி ஒரு போதும் தமிழ் இனம் நம்பக் கூடாது. இப்படியானவர்களுக்கு தலைவர் பெயர் சொல்வதற்கும், புலிகளின், மக்களின் தியாயங்களைப் பற்றி கதைப்பதற்கும் கூட அருகதை அற்றவர்கள். இவர்களுக்கு தமிழ் தேசியம் பற்றி இனி வாயைத் திறப்பதற்கு கூட தார்மீக உரிமை இல்லை. இந்த போலி நாடகம், பலரை எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே இந்த நாடகத்தை நடாத்தியவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டு, எம்மைச் சுற்றி இருந்த போலித் தமிழ் தேசிய வியாதிகளுக்கு ஒரே அடியாக நன்றி வணக்கம் சொல்வோம்.
  2. * Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்கள் வாழும் நாடுகளிலும் பிரதான பேசுபொருள். தமிழர்கள் மத்தியில் சமூகவலைத்தளப் பதிவுகளையும் இன்று ஆக்கிரமித்த பேசுபொருளும் இதுவே. என்னைப் பொறுத்தவரையில், இவ்வாறான கேள்விகள் மக்களிடம் உலாவருவதே நம் சமூகத்தில் அரசியல் தெளிவின்மையின் வெளிப்பாடே. யாரும் எப்பொழுதும் நம்மை இலகுவில் இயக்கிவிடலாம் அல்லது குழப்பிவிடலாம் என்பதற்கான சான்றுகளே இவை. இன்னொருவிதத்தில் கூறுவதானால், முள்ளிவாய்க்களுக்குப் பின்னர் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த விடயங்களில் நாம் மிகவும் பலவீனப்பட்ட சமூகமாக உருவெடுத்துள்ளோம் என்பது நம்மைக் குழப்பிவிட நினைப்பவர்களுக்குக் கிடைத்த பெரு வெற்றி என்றே கூறலாம். ஆனால், வேடிக்கை என்னவெனில், ஈழத்தமிழர்களின் அரசியலைக் கையாள நினைக்கும் சக்திகள், தாமும் குழம்பி, நம்மையும் குழப்புகிறார்கள் என்பதே. ஆனால், இது இன்று நேற்றல்ல, ஈழத்தைக் கையாள முற்பட்ட காலம் முதல் இவ்வாறுதான் தீர்க்கதரிசனம் அற்றவகையில் Trial and Error போன்று பரீட்சார்த்த முனைப்புகளையே முன்னெடுக்கிறது அத்தரப்பு. ஈற்றில் 2009 இல் ஒரு தலைமைத்துவத்தை, பூண்டோடு அழிப்பதன் ஊடாக அனைத்தையும் மீளச்சரிசெய்துவிடலாம் (RESET) என்று கணக்குப்போட்டது. ஆனால், 14 ஆண்டுகள் கடந்தும் அந்த சக்தி, தான் விரும்பிய இலக்கை அடையவில்லை என்பதை இன்று சிறுபிள்ளைத்தனமாக ஆடிய வாரிசு உருவாக்க விளையாட்டு அமைந்துவிட்டது. ஆனால், ஒன்றை அவர்கள் புரிந்துகொண்டார்கள், அழிக்கப்பட்ட தலைமையின் வழிவந்தவர்கள் அல்லது வாரிசுகளைத் தவிர ஈழத்தமிழர்கள் எந்தத் தலைமைகளையும் நம்பமாட்டார்கள் என்பதே. இந்நிலை, கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் போன்றது. அதன் விளைவுதான், தம்மிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி, தலைவர் வருகிறார்....அவரின் மகள் வருகிறார்....என்ற நம்பிக்கையூட்டல்களை தமிழர்களிடம் விதைக்க முற்பட்டமை. இதற்காக தமது மேற்பார்வையில் இருந்த, தமிழ்த் தேசியவாதிகளைப் பேசவைத்து அவர்களின் தனிமனித நம்பகத்தன்மைகளை தனக்கான ஆயுதமாகப் பயன்படுத்தினர். எனினும், அவ்வாறான முயற்சிகள் சலசலப்புகளைக் கடந்து போதிய பெறுபேறுகளை அறுவடைசெய்யாத நிலையில், இன்று தாம் விதைத்த பொய்கள் உண்மை என்று நிரூபிக்க ஒரு 'பொய்மானை' மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். உண்மையில் இது மிகப்பெரிய International Operation. தமிழ்த்தேசிய வாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அல்லது தம்மை அவ்வாறு இனம்காட்டிக்கொண்ட பலர், குறித்த செயற்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். தனிநபர்கள், செயற்பாட்டுத்தளத்தில் பயணிப்போர், ஊடகங்கள் என்று பல தளங்களில் உள்ளவர்களும் உள்வாங்கப்பட்டு, நம்பிக்கையூட்டல்கள் விதைக்கப்பட்டு, இறுதியில் திரையில் உரை வெளியாகியுள்ளது. ஆனால், என்ன? Very Low Budget திரைப்படம். Hollywood க்கு நிகராக திரைப்படங்களை வசூல் வேட்டைக்கு விடுகிற தேசம், தமது கதையின் நாயகிக்கு ஒப்பனை செய்வதற்குக்கூட முறையான ஒப்பனைக் கலைஞரை அமர்த்த முடியாமற்போனமை வியப்புக்குரியதே. அளவுக்கு மீறிய முகப்பூச்சு, கீறி விளையாடிய புருவ அலங்காரம், கருவளையத்தை மேவிநிற்கும் கருமை, இமைகளை மினுங்கவைக்கும் வெளிர்வர்ணம், பொருந்தாத உதட்டுச்சாயம் என்று சிறுபிள்ளைகள் Powder அலகாரம் செய்ததுபோல் தமது கதையின் நாயகியை மேடையேற்றியுள்ளனர். இங்குதான் மீளவும் மீளவும் Research & Analysis இல் பிழைவிடுகின்றனர் ஈழத்தமிழரை ஆட்டிவைக்க நினைப்பவர்கள். ஈழத்தின் போராட்ட மரபில் வந்த பெண்கள் எவ்வாறு உடை உடுத்துவார்கள்? எவ்வாறு தலைமுடியை வாருவார்கள்? எந்த அளவுக்கு அலங்காரம் செய்வார்கள்? என்பதைக்கூடப் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக தலைவிரிகோலமாக முடி அலங்காரம் செய்து தமது கதாநாயகியை அறிமுகம் செய்தமை, குறுதிப்படிந்த ஈழத்து மரபை சம்பந்தப்பட்டவர்கள் பூரணமாகப்படிக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் தொழில்நுட்ப ரீதியாகக்கூட புலமைத்துவம் இல்லாத சொதப்பல். பின்னணித் திரை (Chroma Key) அமைப்பு மற்றும் ஒளியமைப்பிலும் கூட நேர்த்தியில்லை. தரம் குறைந்த ஒளிப்பதிவுக் Camera. ஒலிவாங்கி அற்ற செயற்கையான Podium. ஆடையிற் பொருத்தும் ஒலிவாங்கியைக் கூடக் காணவில்லை. ஒளிப்பதிவில் தேர்ச்சியற்றவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஒரு காணொளி. ஆக, ஒன்றை மட்டும் ஊகிக்க முடிகிறது. ...அன்னை இந்திராவின் பாணியில் ஆடை உடுத்தி, தங்கை துவா_ கா... என்று ஒருவரை தமிழ் மக்களிடம் அரசியல் வாரிசாக அறிமுகம் செய்துவிடலாம் என்று எண்ணியுள்ளனர். இவ்வாறான வாரிசு அரசியல் விளையாட்டு ஈழத்தமிழருக்குப் பரீட்சயம் இல்லாத ஒன்று என்பதைக்கூடக் கணிக்கமுடியாத புலனாய்வு. தமது தேசத்தின் வாரிசு அரசியல் சமன்பாட்டை (Formula) கண்ணைமூடிக்கொண்டு ஈழத்தமிழர்களிடம் பிரயோகித்துள்ளனர். மேலும், பல கணக்குகள் இதிலே பிழைக்கின்றன. முதலில் தந்தை வருகிறார்.. மக்கள் முன் தோன்றுவார்.. என்று அறிவித்துவிட்டு, இப்போது மகள் என்று ஒருவரை அறிமுகம் செய்யும் அளவுக்குக் கதையில் மாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? உங்கள் கதையின் பிரகாரம் தந்தை உள்ள நிலையில், மகள் திரையில் தோன்றக் காரணம் என்ன? நீங்கள் எதிர்பார்த்த தந்தைக்குப் பொருத்தமான கதாபாத்திரம் இன்னமும் கிடைக்கவில்லையோ? அப்படியாயின், தந்தை உள்ளார் என்று தம்மவர் மூலம் சொல்லவைத்தது பொய் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக யாரோ ஒரு அப்பாவிப்பெண்ணை சம்பந்தம் இல்லாமல் சோடித்து, வேடிக்கை காட்டியுள்ளனர் சம்பந்தப்பட்ட தரப்பினர். இந்நிலையில், தமிழ் மக்கள்- ஏகோபித்த அளவில் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையை தமது சுயலாப அரசியலுக்காக அந்த தேசம் ஈழத்தில் உருவாக்க முனைகிறது. என்னவிதப்பட்டேனும், வேலுப்பிள்ளை குடும்பத்தில் இருந்து ஒருவரை முடிசூடிவிடப் படாதபாடு படுகிறது என்றால், வேலுப்பிள்ளையின் மகன் விட்டுச்சென்ற வெற்றிடம், இட்டு நிரப்பமுடியாத ஒன்று என்ற கசப்பான உண்மையை அத்தேசக் கொள்கை வகுப்பாளர்கள் உணரத்தலைபட்டுள்ளனரோ? என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், எல்லாம் காலம் கடந்த ஞானம். நிமிரவே முடியாவண்ணம் ஈழத்தமிழினத்தின் அரசியற்தளம் உங்களால் சிதைக்கப்பட்டுவிட்டது. இப்போதைக்கு ஒரு ஆளுமை மிக்க தலைமை உருவாக்கம் என்பது கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதுவரைக்கும், உங்களுக்கான தெரிவுகள் குறுக்குவழிகள் தான். எது எவ்வாறு இருப்பினும், சீனாவையும் சிங்களத்தையும் கையாள, வேலுப்பிள்ளையின் மகன்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் அந்த தேசம், முடிந்தால் ஒருமுறையேனும் ஈழத்தமிழருக்குப் பரிகாரம் செய்யட்டும். ஒருவேளை, அண்டத்தில் இருந்து மண்ணுக்காக மாண்டவர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள். ஆக, அன்னை இந்திராவின் ஆடை அலங்காரத்துடன், 'Making Of துவா_கா' படுமோசம். Copied: Thanks, Uthayan S Pillai
  3. இக்காணொளியில் விடுதலைப்புலிகள் பாவிக்காத ஒரு சொல்லை பலதடவை பாவிச்சிருக்கிறார் அதாவது ஒரே சொல்லை அதுவும் விடுதலைப்புலிகள் தங்கள் உரையில் பாவிக்காத சொல்லைப் பலதடவைகள் பாவித்ததால் துவாரகா என்று சொல்லி உரை நிகழ்த்தும் இவரைப் போட்டியிலிருந்து விலக்குகிறோம். அந்தசொல் என்னவெனில் நாம் என்று தேசியத்தலைவர் பாவிக்கும் சொல்லை நான் எனப் பல இடங்களில் இவர் பாவிக்கிறார் அதாவது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடும் கொள்கை விளக்க உரையை எப்போதும் நான் தெரிவித்துகொள்கிறேன் எனச்சொல்வதில்லை அதாவது "நாம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றே உரைப்பது வழக்கம். ஆனால் மிகவும் அருவருக்கத்தக்கதும் புலிகளது ஈகத்தை மலினப்படுத்துவதும் தலைவரது குடும்பத்தை இழிவுபடுத்துவதும் தவறு எனச்சொல்லிக்கொண்டு போரில் மரணித்துவிட்ட ஒரு உயிரை கண்டவர்கள் எல்லாம் நக்கல் நையாண்டி செய்ய திட்டமிட்டே நாடகமாடிவிட்டது "தமிழர் விரோததேசமாகிய இந்தியா" இந்தியா நாசமாகிப்போகும் காலம் மிகவிரைவில் வரும். கொசுறாக இந்தியாவின் வேண்டுதலின் பிரகாரம் விடுதலைப்புலிகளது படங்கள் மற்றும் காணொளிகள் அனைத்தையும் தடை செய்து அதனை வெளியிட்டவர்களது கணக்குகளைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைசெய்யும் முறைமையை இப்போது முகப்புத்தகம் தவிர்த்திருக்கிறது. இதன்மூலம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்னுமாப்போல் இந்தியா தனது கபடமுகத்தைத் தோலுரித்துக்காட்டி மிகவும் அசிங்கமாகச் சிரிக்கிறது.
  4. துவாரகா வின் பேச்சு என்ற கபட நாடக உரையை வெளியிட்டவர்கள் ஆகக் குறைந்தது செய்யும் களவிலாவது கொஞ்சம் மினக்கெட்டு இருக்கலாம். 'அவர்களின்' வளத்தையும் காசையும் கொள்ளை அடித்த இந்தக் கூட்டம், Deep fake போன்ற நவீன தொழில் நுட்ப விடயங்களுக்காகவது கொஞ்சம் காசை செலவழித்து இதனை வெளியிட்டு இருக்கலாம். இனை கூட பயன்படுத்தவில்லை இந்த மூடர்கள். இனி இதைச் சொல்லி உண்டியல் குலுக்கிக் கொண்டு இவர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, கக்கூஸ் கழுவ பயன்படுத்தும் துடைப்பத்தை எடுக்க மறந்து விடாதீர்கள்
  5. இழுத்தடிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஜெயார் திட்டமிட்ட இருவழிக் கொள்கையில் இந்திராவின் இலங்கை தொடர்பான கொள்கையும் ஒத்துப் போகலாயிற்று. தமிழ்ப் போராளி அமைப்புக்களைப் பலப்படுத்துவதன் மூலம் தனது இந்திரா தனது முதலாவது திட்டத்தினை பூர்த்திசெய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார். அதாவது, பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய அரசியல் முறை ஒன்றினை உருவாக்குவது என்பது. இதனை அடைவதற்காக ஜெயாரின் புதிய பாதையான அணிசேராக் கொள்கையினை உதறிவிட்டு இந்தியாவின் எதிரிகளுடன் பயணிப்பதை தடுக்கவேண்டும் என்பதே இந்திராவின் நோக்கமாக இருந்தது. ஆனால், இந்திராவின் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை அடைந்து கொள்ளுதல் எனும் முதலாவது வழியினை ஜெயார் தனக்கான நேர அவகாசத்தினைப் பெற்றுக்கொள்ளும் வழியாகப் பார்த்தார். இந்த அவகாசத்தினூடாக தனது இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்திக்கொண்டு தமிழர்களின் தனிநாட்டிற்கான கனவினை முற்றாக அழித்துவிடுவதுடன் அதற்கான அடிப்படையினையும் முற்றாக இல்லாமல்ச் செய்ய அவர் எத்தனித்தார். ஆவணி 17 ஆம் திகதி மூன்றாவது முறையாக ஜெயாருடன் தொலைபேசியில் பேசியபோது இந்திரா தனது விசேட தூதுவரான கோபாலசாமி பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை பேச்சுவார்த்தைகள் ஊடாக அடைய விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனை உடனடியாகவே ஜெயார் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அவரது இராணுவத்தைக் கட்டியெழுப்ப அவருக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. ஆகவே, பேச்சுவார்த்தைக்கான இழுத்தடிப்புக்களைச் செய்வதூடாக அதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தீர்மானித்தார். ஆவணி 25 முதல் 29 வரையான நாட்களின் பார்த்தசாரதியுடனான தனது பேச்சுக்களில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் அதிகாரம் அற்ற நிர்வாக நடைமுறையினை, மீளவும் பிரதான தீர்வாக முன்வைத்தார். இவ்வாறு செய்வதன் மூலம் பேச்சுக்கள் காலவரையின்றி இழுபட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், மாவட்ட அபிவிருத்திச் சபையூடான தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை என்று பார்த்தசாரதி திட்டவட்டமாக ஜெயாரிடம் கூறினார். ஆகவே, பேச்சுக்களில் சமாதானத் தூதராகச் செயற்பட்ட பார்த்தசாரதியின நம்பகத்தன்மையினைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான காரியங்களில் ஜெயார் ஈடுபலானார். நான் பணிபுரிந்து வந்த லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பத்திரிக்கைகள் ஜெயாரின் இந்த சேறுபூசும் வேலைக்கான பிரச்சார முன்னோடிகளாக செயற்பட ஆரம்பித்தன. இதன் நோக்கம் பாரத்தசாரதி உண்மையான சமாதானத் தரகர் அல்ல என்று சர்வதேசத்தின் முன்னால் காட்டுவதுதான். இந்த பிரச்சார நடவடிக்கையின் ஊடாக இரண்டு மாதங்களை ஜெயாரினால் இழுக்க முடிந்தது. ஆனால், இந்த இரு மாத காலத்தில் தமிழர்களும் தம்மைப் பலப்படுத்திக் கொண்டார்கள். துணிகரமான மட்டக்களப்பு சிறைச்சாலையுடைப்பு மற்றும் அமிர்தலிங்கத்தின் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கான வெற்றிகரமான சுற்றுப்பயணங்கள் ஆகியனவே தமிழர் தரப்பால் இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் என்று கூறலாம். அமிர்தலிங்கம் தனது சுற்றுப்பயணங்கள் ஊடாக பெற்றுக்கொண்ட சர்வதேச விழிப்புணர்வினை அவர் பயங்கரவாதிகளை ஆதரித்து வருகிறார் என்று சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்துவதன் மூலம் மழுங்கப்பண்ணலாம் என்று ஜெயார் எண்ணினார். பகீரதன் அமிர்தலிங்கம் ஆரம்பித்த ஆயுதக் குழு சந்தர்ப்ப‌வசத்தால் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட 19 வயது நிரம்பிய பல்கலைக்கழக மாணவனான வள்ளுவன் இராஜலிங்கத்தை தனது பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஜெயார் பாவிக்க முனைந்தார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 7 ஆம் திகதி தலைமன்னாரில் வைத்து வள்ளுவன் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அமிர்தலிங்கத்தின் இரண்டாவது புதல்வனான பகீரதனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த‌ தனது சகோதரியான மலர்வள்ளியை சென்னையில் இறக்கிவிட்டு மீண்டு தலைமன்னார் வழியாக இலங்கை திரும்பிக்கொண்டிருந்தார் வள்ளுவன். பகீரதனால் தனக்கு வழங்கப்பட்ட மூன்று கடிதங்களையும் வள்ளுவன் தன்னுடன் கொண்டுவந்திருந்தார். அவை தமிழில் எழுதப்பட்ட கடிதங்கள். அன்று இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை தமிழில் இருக்கும் எந்த ஆவண‌மும் வைத்திருப்பவரைக் கைதுசெய்யப் போதுமானதாக இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவையின் தலைவரான மாவை சேனாதிராஜாவிற்கு பகீரதனால் எழுதப்பட்ட கடிதங்கள் பொலீஸாரின் கவனத்தை ஈர்ந்திருந்தன. பகீரதனால் அமைக்கப்பட்டு வந்த இராணுவக் குழு ஒன்று பற்றி அக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த இராணுவ அமைப்பைனை உருவாக்க லிபிய அதிகாரிகளுடன் அமிர்தலிங்கம் நடத்திய பேச்சுக்கள் , பிரபாகரனுடன் அமிர்தலிங்கம் நடத்தியதாகக் கூறப்படும் சந்திப்புக்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இக்கடிதங்களை அமிர்தலிங்கத்தின் மீது அவதூறு பரப்பும் பிரச்சாரங்களுக்காக அரசு பாவித்தது. தேசிய தொலைக்காட்சியில் பேட்டி காணப்பட்ட வள்ளுவன், பகீரதனால் தனக்கு வழங்கப்பட்ட கடிதங்களைப் படித்துக் காட்டுமாறு பணிக்கப்பட்டார். இப்பிரச்சாரங்களின் நோக்கம் அமிர்தலிங்கம் தமிழ்ப் பயங்கரவாதத்தின் பின்னால் நிற்கிறார் என்பதைக் காட்டுவதே. ஒருபுறம் அகிம்சை, காந்தீயம் என்று இடையறாது பேசிவரும் அமிர்தலிங்கம் இன்னொரு பக்கத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, ஆதரிக்கிறார் என்று அரசு பிரச்சாரகர்கள் பேசத் தொடங்கினர். மேலும், பகீரதனால் அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆயுதக் குழுவே வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் புலேந்திரனைப் படுகொலை செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது. வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தெவேளை புலேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பகீரதனால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், "புலேந்திரனின் கொலையினை தமது அமைப்பு உரிமை கோருவதாக " எழுதப்பட்டிருந்தது.ஆகவே, தனது பிரச்சாரத்திற்காக அரசு இதனைப் பாவித்துக்கொண்டது. ஆனால், புலேந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினராலேயே கொல்லப்பட்டிருந்தார். ஆனால், இதனைத் தெரிந்துகொண்டும் பகீரதனின் ஆயுத அமைப்பின் மீதே பொலீஸார் கொலைக்கான பழியினைப் போட விரும்பினர். அதற்கு பகீரதனைன் கடிதம் அவர்களுக்கு உதவியது. வள்ளுவன் கைதுசெய்யப்பட்டு, தன்மீதான வன்மப் பிரச்சாரங்கள் அரசினால் முடுக்கிவிடப்பட்டிருந்தவேளை அமிர்தலிங்கம் லண்டனில் தங்கியிருந்தார். தன்மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்ததோடு, பகீரதனால் எழுதப்பட்டதாக அரசால் கூறப்படும் கடிதங்கள் போலியானவை என்றும் அவர் கூறினார். "புலிகளுடனோ அல்லது வேறு எந்த ஆயுதக் குழுவினருடனோ தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதுவிதமான தொடர்புகளையும் பேணவில்லை" என்று லண்டன் பி.பி.ஸி இற்கு அவர் பேட்டியளித்தார். அவரது கட்சியும் அமிர்தலிங்கத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியது. ஐப்பசி 17 ஆம் திகதி சென்னையில் கூடிய அதன் அரசியற்குழு அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டது. "எமது கட்சி வன்முறைகள் அற்ற அரசியல் பாதையினையே பின்பற்றுகிறது என்பதனை மீளவும் உறுதிப்படுத்துகிறோம். ஆகவே, எமது கட்சியினை எந்தவொரு வன்முறைச் சமபவத்துனுடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைத்துப் பேசுவதையோ, அல்லது எந்தவொரு வன்முறை அமைப்புக்களுடனும் இணைத்து பரப்பப்பட்டுவரும் வன்மப் பிரச்சாரங்களையோ முற்றாக நிராகரிக்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறியது. ஆகவே, அமிர்தலிங்கத்தின் மறுப்பையும், அக்கட்சியினரின் அரசியற்குழு வெளியிட்ட அறிக்கையினையும் பொய்யென்று நிரூபிக்க அரசாங்கம் மறுநாள் தகவல்த் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை நடத்தியது. பகீரதனால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் மற்றைய இரு கடிதங்களையும் அரசு அங்கு காண்பித்தது. இவற்றுள் ஒரு கடிதம் ஜெயராஜா என்பவருக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டிருந்தது. அதில் பகீரதனின் ஆயுதக் குழுவினரின் பயிற்சிக்காக மன்னாரில் கொள்வனவு செய்யப்பட்ட 13 ஏக்கர் காணி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. பிரேம்குமார் என்பவருக்கு எழுதப்பட்ட மூன்றாவது கடிதத்தில், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த தனது அமைப்பின் போராளிகளுக்கு எயர் ரைபிள்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக பகீரதனால் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கான இந்தியாவின் பயிற்சியினால் கலவரமடைந்த அமிர்தலிங்கம் இவற்றுள் உண்மை இல்லாமலும் இல்லை. பிரபாகரனை அமிர்தலிங்கம் சந்தித்ததும், அமிர்தலிங்கத்தின் மகனான பகீரதன் ஆயுத அமைப்பொன்றினை உருவாக்க முனைந்ததும் உண்மைதான். தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா பயிற்சியும் ஆயுதமும் வழங்க முடிவெடுத்திருப்பதை அறிந்த போது அமிர்தலிங்கம் வருத்தமடைந்தார். ஏற்கனவே ஆயுத அமைப்புகளோடு அவருக்கு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. 1982 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக்கொள்வதென்று அமிர்தலிங்கம் எடுத்திருந்த முடிவினை அனைத்து ஆயுதக் குழுக்களும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தன. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் அமிரின் கட்சியினர் பங்குபற்றியது ஆயுதக் குழுக்களுடன் நேரடி மோதலுக்கான சூழ்நிலையினை ஏற்படுத்தியிருந்தது. 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு வழங்கப்பட்ட தனிநாட்டிற்கான ஆணையினை அவர்கள் இழந்துவிட்டதாகவும், ஆகவே தமிழ் மக்களுக்கான அரசியல்த் தலைமை தற்போது ஆயுத அமைப்புகளிடமே வந்திருப்பதாகவும் அவர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எதிர்நோக்கியிருந்த சவால்கள், அமிர்தலிங்கம் இந்திரா காந்தியுடனான தனது பேச்சுக்களின் பின்னர், இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் பேரம்பேசலில் ஈடுபடப்போவதாக தில்லியில் அறிவித்தபோது இன்னும் அதிகமானது. மன்னாரில் இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட விடயமான அரசுடன் பேச்சுக்களில் இனிமேல் ஈடுபடப்போவதில்லை எனும் தீர்மானத்தை தனது கட்சி கைவிடுவதாக அமிர்தலிங்கம் அறிவித்தார். "நிலைமை இப்போது மாற்றம் கண்டிருக்கிறது. பார்த்தசாரதியின் சமாதான முயற்சிகள் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டும் சாதகமான சூழ்நிலையொன்றினை ஏற்படுத்தியிருக்கிறது" என்று அமிர்தலிங்கம் அறிவித்தார்.
  6. படித்ததை சொன்னது ஒரு குற்றமா.........! 😴
  7. காலநிலை மாறும் போது எனது பாலும் மாறிவிடுவதுண்டு. 😆 மறுபடியும் கோடை காலத்தில் ஆணாகி விடுவேன். கவலை வேண்டாம்🤣🤣
  8. வெய்யிலின் அருமை நிழலில்........மரம் வளர்ப்போம்.......! 😁
  9. என்ன நெடுக்ஸ், முகப்பில் உள்ளதை வாசிக்கவில்லை போலிருக்கு? தாயக கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களை நினைவு கூர்வோம் என்றால் அதற்குள் தலைவரும் அவர் குடும்பமும் அடக்கம்தான். தனியே தலைவருக்கு மட்டும் மாவீரர் நாளில் அஞ்சலி செய்வது தலைவரையே அவமானப்படுத்துவது போலாகாதா?? மேக்கப் மாமியின் உருவ அலங்காரத்தை பார்த்தவுடனேயே தெரிந்திருக்க வேண்டும் இது யாரின் வேலை என்று! என்ன செய்வது இந்தியாவிற்கும், உண்டியல் குலுக்கும் கோஷ்டிக்கும் இப்படியான மட்டமான ஐடியாக்கள்தான் வரும்போல!!
  10. வணக்கம் வாத்தியார்........! ஆண் : முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும் ஆண் : மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் ஆண் : அவளை ஒரு நாள் நான் பார்த்தேன் இதயம் கொடு என வரம் கேட்டேன் அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள் ஆண் : கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன் ஆண் : கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன் ஆண் : ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நான் இருக்க இடையில் தனிமை தளும்புதே நதியாய் ஆண் : கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே ஆண் : அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்து கொண்டேன் பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம் ஆண் : உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம் ஆண் : அருகில் இருந்தால் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம் கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள் ஆண் : அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா.......! --- முழுமதி அவளது முகமாகும் ---
  11. வா வாத்யாரே வூட்டாண்டே நீ வராங்காட்டி நா வுடமாட்டேன் ........! 😂
  12. என்னுடைய சந்தேகம் இப்பொழுதும் இதை RAW செய்திருக்க வாய்ப்பில்லை என்பது தான். அதற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று முதல் இணையத்தில் மித்துஜா என்பவர் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார். அவரின் அடையாள அட்டை முதல், கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படம் வரை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நான் இங்கே இணைக்க விரும்பவில்லை. அது மித்துஜா இல்லையென்றால் அவர் எல்லோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் மித்துஜா சுவிசில் அகதி அந்தஸ்து நிலையில் தான் இருக்கிறார் என்பது அவருடைய அடையாள அட்டையில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சில மாதங்களிற்கு முன்னர் சுவிசில் துவராகவின் பெயரை வைத்து ஒரு பணவேட்டை நடந்தது அனைவரும் அறிந்ததே. அதுவும் மித்துஜாவின் திருவிளையாடலாக இருக்கலாம். இந்த சில்லறைத்தனமான வீடியோ கூட பணவேட்டை கும்பலின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எது எப்படியோ மித்துஜா இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றால் வெளியில் வந்து பேசவேண்டும். சம்மந்தம் இல்லாத பட்சத்தில் இணையத்தில் வதந்தி பரப்பிய அனைவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெறட்டும். அவரின் மௌனம் மேலும் மேலும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
  13. இந்தத் திரிக்குள் ஏன் இதைக் கொண்டாறியள் என்பது தெரியவில்லை. இருப்பினும் நானும் மறுமொழியளிக்கிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்களும் ஈரோஸ் அமைப்பில் இருந்து புலிகளால் அங்கீகரிக்கப்பட்டவர்களுமே மாவீரர்கள். ******
  14. இயற்கையோடு ஒன்றிப்பிணைந்தது தான் சைவம். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.
  15. சைவத்தில் என் கடவுளுக்கு இடைதரகர்கள் இல்லாமல் நானே தீபாரதனை செய்து வழிபடுவேன். அவரவர்க்கென குல தெய்வங்கள் உண்டு. வழ்பாட்டில் மாமிச உணவுகளும் உண்டு. குறிப்பாக இயற்கையோடு சேர்ந்து வாழ்பவர்கள் சைவர்கள்.
  16. எம் எஸ் என் காலத்துக் கிழடுகளின் அறுவல் தாங்க முடியவில்லை. ஏதோ ஆனையிறவு அடிச்சு விழுத்தின கணக்கா சிலரில் அலப்பறை ரெம்ப ஓவர். இத்தனைக்கும் களத்தில் ஒரு துரும்பைதானும் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக இவர்கள் நகர்த்தியதில்லை. இந்த தலைப்புக்குரிய துவாரகாவை இங்கும் யாரும் நிஜம் என்றோ.. போலி என்றோ நிறுவ நிற்கவில்லை. அதேபோல்.. இங்குள்ளவர்களினதும்.. வெளியில் உள்ளவர்களினதும் சொல்லால் நிறுவச் சொல்லவில்லை. எது நிஜம் எது நிழல் என்பது எல்லா பாமர ஈழத்தமிழனுக்கும் தெரிந்ததே. இன்றைய தேவை எம் தேசத்தின் விடுதலையும் மாவீரர் கனவை நனவாக்க உழைப்பதுவே. அதற்கு தேவை ஒற்றுமை.. ஒத்துழைப்பு. அதையேன் நாசமாக்குகிறார்கள் இன்னும் இன்னும். பல இளையோர் அமைப்புக்கள்.. எவ்வளவோ காரியங்களை நாட்டுக்காக ஆற்றிக் கொண்டிருக்கினம்.. புலம்பெயர் நாடுகளிலும் சரி.. தாயகத்திலும் சரி. அவர்கள் யாரும் இந்த சலசலப்புக்கு ஆடினதா தெரியவில்லை. ஆனால்.. இங்கு சிலர்.. தங்களை தாங்கள் முதுகு சொறிய இதனைப் பயன்படுத்தி.. மாவீரர் நாளை இழிவுபடுத்தி விட்டுடிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை அவர்களே அறிவார்கள். மற்றவர்களும் அறிவார்கள். உலகில் உள்ள சாத்தியமான எல்லா வடிவங்களினூடும் எமது போராட்டம் முன்னெடுக்கப்படுவதில் இளையோரும் மற்றோரும் தொடர்ந்து இயங்குவது மிக முக்கியம். குறிப்பாக நவீனமயமாக்கலை உள்வாங்கி. எதிரிகளின் நவீனமயமாக்கலை முறியடிக்கக் கூடிய வகையிலும் எதிரியை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியதுமாகவும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை தரக்கூடியதுமாக இருந்தால்.. அதனை பரீட்சித்துப் பார்ப்பதில் தவறில்லை.
  17. நீங்கள் எதிர்த்ததை மறுக்கவில்லை. ஆனால் நான் தெளிவடைய உங்கள் கருத்து உதவவில்லை. ஏன் என்றால் - இதில் மாற்று நிலைப்பாட்டை சீமான் எடுத்திருந்தால்…தோன்றிய போலி-க்கா, தான் துவாரகா என நீங்கள் வாதாடி இருப்பீர்கள் என்பது என் அபிப்பிராயம். ரஜீவின் தாயின் வடிவில், தலைவரின் மகள்….. Can you see what they are trying to do subliminally? Dear RAW, We know you.
  18. துவாரகா திரைப்படத்துக்கு blue சட்டை மாறனின் review வந்துவிட்டதா?! 😂
  19. ஆடி அடங்கும் வாழ்க்கையடா........! 😢
  20. "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன் களத்தில் நிற்பாள்" -காசியானத்தன் “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்.. இந்தியாவும் புலம் பெயர் தீய சக்திகளும் சேர்ந்து தமிழர்களையும் மாவீரத்தையும் களங்கப்படுத்த உதயமானதுதான் இந்த துவாராக ஒப்பிறேசன… ஆனால் அது தமிழ்நாடு ஈழம் புலம்பெயர் தேசம் என்று ஒட்டு மொத்த தமிழ் மக்களாலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு எதிர்ப்புடனும் கேலி கிண்டலாகவும் கடந்து செல்கிறது.. அதேவேளை மறுவளத்தில் மாவீரர்களையும் போராட்டத்தையும் மனதில் சுமக்கும் லட்சோப லட்சம் சாதாரண பொதுமக்கள் இம்முறை வழமைக்கு மாறாக தாமாக தமிழர் தேசமெங்கும் அதிகளவாக கூடி மாவீரத்தை போற்றி உள்ளனர்… இது தமிழர்களின் தணியாத வேட்கையினை உலகுக்கு பறை சாற்றுவதாக உள்ளது.. இவளவு உயிர் போயும் விடுதலை இல்லையே என சில வேடீக்கை மனிதருள்ள பூமியின் நூறு வருடங்களைக் கடந்து விடுதலை அடைந்த அடையப் போராடும் மனித குலம் பற்றிய சரிதத்தை எடுத்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது… அந்தத் தேவையின் ஆணிவேரில் தழைத்த பூஞ்செடிகளே இன்று துயிலுமில்லம் தோறும் ஏற்றப்பட்ட பல்லாயிரம் அக்னிச் சுடர்கள் என்பதை உலகறியும்.. இத்தகு தருணத்தில் எம்மைக் கொன்றொழித்த இந்திய மத்திய அரசும் அதன் ஒத்தோடிகள் செய்யும் துரோகமும் இனியும் எடுபடாது என்பதை இம் மாவீரர்தினம் உணர்த்தியுள்ளது இன்னும் உணர்த்தும்…
  21. நிச்சமாக.. அவர்கள் உயிரோடு இருந்தாலோ இல்லையோ.. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு வரமாட்டார்கள். ஊக்குவிக்கவும் மாட்டார்கள். அதற்கான பூகோள ஏதுநிலைகளும் இல்லை. அரசியலில் குதிக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில்.. தலைவர் போராட்ட களத்தில் இருந்த போதே தேடி வந்த பதவிகளை உதறித்தள்ளிவிட்டு கொண்ட இலட்சியத்துகாக போராடிக் கொண்டிருந்தவர். தலைவர் இருக்கிறாரோ இல்லையோ.. அவர் சுமந்த இலட்சியம் வாழ்ந்து கொண்டு தான் இருக்குது. அது.. தலைவரின் அயலவரான..தாயகத்தில் வாழும்.. மாவீரர் ஒருவரின் அம்மாவின் கருத்தில் கூட தொனித்தது.
  22. யாழ் களம் மே மாதத்தில் 17 , 18 திகதிகள் வரும் வாரத்தில் தான் தலைவருக்கு படத்துடன் கூடிய அஞ்சலியை செலுத்துவது. இந்த வருடமும் அதனையே செய்தோம். நன்றி.
  23. ஹிந்தியாவின்.. சீனாவின்.. மேற்குலகின்.. ரஷ்சியாவின் தேவைகளோடு சேர்ந்து நாம் ஓடாவிட்டால்.. இலக்கை அடைவது இலகு அல்ல. எமது பூகோள அரசியல் ராஜதந்திரப் பலவீனமே.. முள்ளிவாய்க்கால் மெளனம். இதனை தெளிவாகச் சொல்கிறது பேச்சு. அதனை இன்னும் இனம்காணாமல்.. ஒட்டினால்.. ஒன்றில் ஹிந்தியா.. இல்ல சிங்களம் என்று காலம் கடத்துவோமாக இருந்தால்.. எம் மாவீரர்களின் கனவு நனவாக இன்னும் பல சதாப்தங்கள் தேவைப்படும்.
  24. அதேவேளை எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது தலைவர் இருக்கிறார் அவரது பிள்ளைகள் மனைவி இருக்கிறார்கள் என்றவுடன் அதை மறுத்து ஆயிரம் வீடியோக்களும் ஆய்வுகளும் அறிக்கைகளும் சாட்சிகளும் காசுக்கொடுக்கல் வாங்கல்களும் கணக்கறிக்கைகளும் கூட வருகின்றன. ஆனால் இத்தனை நேரங்களையும் ரகசிய புலநாய்வு ஜேம்ஸ் பாண்ட் களையும் பயன்படுத்தி இதுவரை (இந்த 14 வருடங்களில்) ஏன் தலைவர் அவரது குடும்பத்தினர் மற்றும் பொட்டம்மான் எப்படி எங்கே எவ்வாறு இறந்தனர் என்று இவர்களால் நிறுவ முடியவில்லை அல்லது முயலவில்லை. இவ்வாறு செய்தால் அத்தனை பிரச்சினைகளுக்கும் முடிச்சுக்களுக்கும் முடிவு வருமே.? ஆக இவர்களும் அதனை விரும்பவில்லை. அல்லது ஊக்குவிக்கிறார்கள்.
  25. உண்மைகளை விட பொய்களையே அதிகம் அலசி ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் உண்மையை விட பொய்களே இலகுவாக உள்ளே நுழைந்து விளையாடுகின்றன. உண்மைகள் சாவதில்லை. என்றோ ஒரு நாள் உயிர்த்தெழும். ஆனால் பொய்களோ உண்மையின் இருந்த இடத்தையே தடம் தெரியாமல் அகற்றி விடும். இது காலம் கற்றுத்தந்த பாடம்.
  26. பாருங்க ஐடியா சிங்கம் ஐடியா கொடுக்கிறார் நெசமாலுமே அடுத்தமுறை வந்தாலும் வருவாங்க அவ்வளவுக்கு தென்னாசிய இந்திய அரசியல் நிலைமை அந்த சின்ன மாலை தீவு காரனும் கெட் அவுட் இந்தியன் என்று சொல்லிபோட்டான் .
  27. தலைவருக்கு நான்கு பிள்ளைகள், அதில் கடைசி பிள்ளை ஒருபோதுமே வெளியில் வரவில்லை, எனவே அந்தப் பிள்ளையை வெளியே காட்டுகிறோம் என்று ஒரு திட்டத்துடன் அடுத்த முறை வந்தாலும் வருவார்கள்
  28. துவாராக வெளியில் கொண்டு வருகிரம் என்று இறங்கின கூட்டம் அதாங்க நம்ம இந்திய உளவுபிரிவுகள் விழி பிதிங்கி நிக்கினமாமே இனிமேல் என்ன உருட்டு உருட்டினாலும் தமிழ் சனம் நம்ப போவதில்லை அந்தளவுக்கு பழம் சீலை சத்தமாய் கிழிந்து விட்டது .😀 படத்தில் துவரகாவாய் நடிக்க வந்த வந்த பெண்ணின் ரிசிமூலம் ரசி மூலம் முகவரி எல்லாமே கிழித்து தொங்க போடுகினம் இங்கு போடுமளவுக்கு தரம் இல்லை .
  29. அந்த அக்காவுக்கு ஒரு ஒழுங்கான மேக் அப் கூட போடேலை. மாப்பானைக்குள்ளை விழுந்த எலிக்குஞ்சு மாதிரி வந்து நிக்கிறா😆. கமராக்கு முன்னாலை வாரது கொஞ்ச வடிவா வெளிக்கிட்டு அனுப்பிறதை விட்டுட்டு இப்பிடி அரைகுறையா அனுப்பி விட்டிருக்கிறாங்கள்.🤣🤣 அடுத்த மாவீரர் நாளுக்காவது ஒழுங்கா மேக் அப் போட்டு அனுப்புங்கடா, இந்திய அப்பிரண்டீசுங்களா.😏
  30. விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும் அன்னக்காவடிகளே! விலை எங்கு போனீர்? வலை பின்னி வாரீர் வார்த்தைகள் பொய்க்கின்றீர் நிசம் இது இல்லை விழிகளே கூறும் மெய்நிலை உணர்கின்றேன். தமிழச்சாதி இவ்வளவு தூரத்திற்கு மலினப்பட்டுவிட்டதா?
  31. ஒன்று விளங்கவில்லை... வளவன் இணைத்தமைக்கு ஏன் எல்லோரும் இனை குத்துகின்றீர்கள் என. உண்மையில் அவர் இங்கு இணைத்தமையை வரவேற்க வேண்டும். இதைப் பற்றி உரையாடுவதற்கும், உண்மைத்தன்மை பற்றி கதைப்பதற்கும், இந்த போலிகளை தோலுரிக்கவும், இதனை இணைத்தல் அவசியம் அல்லவா?
  32. நேற்றையில இருந்து துவாரகா வெளியிலை வாறா என்டு அறிவிக்கிறதிலை விசுகரும் கருவரும் கொஞ்சம் பிசியாம்... இன்டைக்கு வந்து உவதா ஆள் என்டு சொல்லி ஒரே கூத்தடிக்கப் போயினம்
  33. யாருக்காவது வயிறு எரிந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது......! 😂
  34. இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஜெயாருடன் பேரம்பேசலில் ஈடுபட்ட அமெரிக்கா ஜெயவர்த்தனவின் ஆட்சியின் கீழ் தமிழர் மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்க இராணுவத்தினரைத் தமிழ் இளைஞர்கள் இலக்குவைக்கத் தொடங்கினர். திருநெல்வேலித் தாக்குதலுலுக்குப் பழிவாங்கவென்று அரங்கேற்றப்பட்ட ஜூலைப் படுகொலைகளுட‌ன் இலங்கை இராணுவம் என்பது சிங்கள இராணுவமே எனும் நிலைமாற்றம் பூரணப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், சிங்கள இராணுவம் எனும் நிலையிலிருந்து தமிழர்களுக்கு எதிரான இராணுவம் எனும் நிலையினை அது அடைந்தது. தமிழர்கள் இந்த இராணுவத்தை சிங்கள இராணுவம் என்பதையும் தம்மை ஆக்கிரமிக்க வந்த இராணுவம் என்பதையும் முழுமையாக உணர்ந்துகொண்டனர். இந்த இராணுவம் அந்நிய இராணுவம் என்று அவர்களால் அழைக்கப்பட்டும், நடத்தப்பட்டும் வந்தது. ஜூலை இனக்கொலை நடந்த சில நாட்களின் பின்னர் பிரபல ஊடகவியலாளரான மேர்வின் டி சில்வா இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி சில்வாவிடம் ஜூலை இனக்கொலையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் விளைவுகளில் எதனை நீங்கள் முக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, "இராணுவம் அரசியலில் செலுத்தும் தாக்கமே" என்று அவர் பதிலளித்தார். இனப்பிரச்சினையில் சிங்கள மக்கள் சர்பாக இராணுவத்தைக் களமிறக்கிய‌ ஜெயார் , அதனை விரிவுபடுத்தி, நவீனமயமாக்கி தமிழர்களை முற்றாக வெல்லும் நிலைக்கு அதனை உயர்த்தவேண்டும் என்று உறுதிபூண்டார். அதற்கு அவருக்கு ஆயுதங்களும், பயிற்சிகளும் தேவைப்பட்டன. ஆகவே, அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் இதுகுறித்து தொடர்ச்சியாக அவர் அழுத்தி வந்தார். ஜெயவர்த்தனவுக்கு உதவ விரும்பிய அமெரிக்கா, சிங்கள மக்களை உற்சாகப்படுத்த உடனடியாக எதனையாவது செய்யவேண்டும் என்று கருதியது. இந்தியாவின் அழுத்தங்களையடுத்து சிங்களவர்கள் தமக்குத் தோழமையாக எவரும் இல்லையே எனும் மனநிலைக்கு வந்திருந்தனர். ஆகவேதான் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரான கஸ்பர் 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 1 ஆம் திகதி சிநேகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்தார். இந்த விஜயத்தின் நோக்கமே, "கலங்கவேண்டாம், அமெரிக்கா உங்களுடன் நிற்கிறது" எனும் செய்தியை சிங்களவர்களுக்குச் சொல்வதே. வோஷிங்க்டன், கஸ்பரின் விஜயத்தை பெரிதாகக் காட்டிக்கொள்ள விரும்பாதபோதும் அவரது விஜயத்தின்போது இராணுவ உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில முடிவுகளும் எடுக்கப்பட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவித்திருந்தனர். அமெரிக்காவின் மத்தியஸ்த்தத்தின் ஊடாக இஸ்ரேலினை இலங்கையினுள் கொண்டுவர அரசு முயல்வதாக எதிர்க்கட்சிகள் அப்போது குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. ஐப்பசியின் இறுதிப்பகுதியில் அமெரிக்க ராணுவ ஜெனராலன வேர்னன் வோல்ட்டர்ஸ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். ரீகனின் பிரத்தியேகச் செய்தியுடன் இலங்கை வந்திருந்த அவர் ஜெயாருடன் முக்கியமான பேச்சுக்களில் ஈடுபட்டார். ஜெயாரின் வாழ்க்கைச் சரிதையை எழுதிய கே.எம்.டி.சில்வா மற்றும் ஹவார்ட் ஹிக்கின்ஸ் ஆகியோர் வோல்ட்டர்ஸின் இந்த விஜயம் குறித்து பின்னாட்களில் அவரை வினவியிருந்தனர். அபோது பேசிய வோல்ட்டர்ஸ், "நான் ஜெயாரை தமிழ்ப் பிரிவினைவாதிகளுடனும் இந்தியாவுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்படி கோரினேன். மேலும் இலங்கையின் இனப்பிரச்சினை மேலும் தீவிரமடைந்தால், இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம், இதில் இராணுவ‌த் தலையீடும் சாத்தியமாகலாம் என்ற அச்சத்தையும் அவரிடம் தெரிவித்தேன்" என்று கூறினார். ஆனால், வோல்ட்டர்ஸுக்கும் ஜெயாருக்கும் இடையே நடந்த கலந்துரையாடல்கள் குறித்து சில்வாவும், ஹிக்கின்ஸும் வேண்டுமென்றே குறிப்பிடத் தவறிய சில விடயங்களும் இருக்கின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களின் முக்கிய கருப்பொருளே இஸ்ரேலிடமிருந்து இலங்கை இராணுவத்திற்கு எவ்வாறு ஆயுதங்களைத் தருவித்துக் கொள்வது என்பதும், இதற்கு கைமாறாக இலங்கை என்ன செய்யவேண்டும் என்பதும்தான். பேரம்பேசலில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவரான வோல்ட்டார்ஸ் பின்வரும் விடயங்களைச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்தே இஸ்ரேலிடமிருந்தான ஆயுதக் கொள்வனவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தார், 1. இஸ்ரேலுக்கு இராஜதந்திர அந்தஸ்த்தினை வழங்குவதும் அதனை அங்கீகரிப்பதும் 2. வொயிஸ் ஒப் அமெரிக்காவுக்கான புதிய ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்வது 3. அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகளுக்கு திருகோணமலைத் துறைமுக எண்ணெய்க் குதங்களை குத்தகைக்குக் கொடுப்பதன் மூலம் துறைமுகத்தை அமெரிக்கச் செல்வாக்கின் கீழ் கொண்டுவருவது. 4. அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் பாவனைக்கு திருகோணமலைத் துறைமுகத்தினை வழங்குவது என்பனவே அவையாகும்.
  35. இன்னும் பல படங்களை அடையாளம் கண்டுள்ளேன் ஏதோ என்னாலை முடிஞ்சது!😥😭 (என்னிடம் இருக்கின்ற வித்துடல் படங்களின் விம்பகத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட நிர்வாகம் அனுமதி தந்தால் நன்றாக இருக்கும். ) இந்தா, அவர் மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா நல்ல தெளிவா அக்காவின்ர வித்துடலை அடையாளம் காட்டுவதைக் காணுங்கள். கையால் சுட்டிக் காட்டுகிறான். சுட்டுவிரல் சுட்டும் இடத்தையும் மேலே உள்ள அக்காவின் வித்துடல் உள்ள இடத்தையும் உற்று நோக்குங்கள். இதில் கடும் பச்சை மேலாடை அணிந்திருப்பவரே மாவீரர் ரட்ணம் மாஸ்டர் அவர்கள் எனில், துவாரகா அக்கா ரட்ணம் மாஸ்டரின் வித்துடல் உள்ளிட்ட வித்துடல்களோடுதான் வளர்த்தப்பட்டுளார். இவர்களினதோடு இவ்விடத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வித்துடல்கள்கள் வளர்த்தப்பட்டிருந்தன. அவை மே 17,18ம் திகதிகளில் பல இடங்களில் வீரச்சாவடைந்தவர்களினது ஆகும். எதை வைத்துக் " பல இடங்களில்" என்று கூறுகிறேன் எனில், என்னிடத்தில் சாள்ஸ் அண்ணாவின் வித்துடல் இருவேறு இடங்களில் இரு வேறு நிலைகளில் வளர்த்தப்பட்ட படியான படிமங்கள் இரண்டு உள்ளது. முதல் இடத்தில் கானான் கோனான் என்ட நிலையில் சில வித்துடல்கள் (இவரின் மெய்க்காவலர்களினதாக இருக்கலாம்) உள்ளன. அவற்றின் மேல் அன்னவர்களினுடைய சுடுகலன்கள் உள்ளன. பின்னர் அதே ஆட்களின் வித்துடல் இந்த வித்துடல் குவியலிலும் காணப்படுகின்றன. ஆகையால் தான் இவை பல்வேறு இடங்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் என்று உறுதிபடக் கூறுகிறேன். சாள்ஸ் மற்றும் அன்னாரின் 8 மெய்க்காவலர்களின் வித்துடல்கள் வேறொரு இடத்தில்; ஒரு கருக்குமட்டை வேலிக்கு அருகில் வளர்த்தப்பட்டுள்ளன: வித்துடல் குவியல்கள் இர்நுத இடத்தில் வேறொரு தரப்பாளில் சாள்ஸ் மற்றும் பல புலிவீரர்களின் வித்துடல்கள் வளர்த்தப்பட்டுள்ளதைக் காண்க. துவாரகா (இ.பெ.: மதிமகள்) அவர்களின் வித்துடல் இருந்த இடத்தில் இன்னொரு பகுதியில் தான் தேசியத் தலைவரின் மூத்த புதல்வன் சாள்ஸ் அன்ரனி (இ.பெ.: சாள்ஸ்) அவர்களின் வித்துடலும் வளர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவொரு வரலாற்றுத்தகவல். அதாவது தாயும் அவருடைய முதல் மகன் & மகள் ஆகியோரின் பூதவுடல் & வித்துடல்கள் ஒன்றாகவே நிலத்தில் தரப்பாளின் மேல் வளர்த்தப்பட்டிருக்கின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.