Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2954
    Posts
  2. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14676
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33035
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/19/24 in Posts

  1. சிந்திப்போம் செயல்படுவோம் களியாட்டத்தில் கலாட்டாவா அனைவருக்கும் வணக்கம். அண்மையில் யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வின் பொழுது நடந்த ஒர் அசம்பாவிதத்தை பற்றி பல வாத பிரதிவாதங்கள் இடம் பெறுவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அசம்பாவிதத்தை ஊதி பெருப்பித்த பெறுமை நெட்டிசன் மாரை சேரும் .அதாவது சமுக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவு செய்யும் நபர்கள்..அநேகமான நபர்கள் தங்களுக்கு அதிக பார்வையாளர்கள்,மற்றும் லைக் வேணும் என்ற காரணத்தால் கவர்ச்சிகரமான தலையங்கங்களை எழுதி தங்களது கற்பனைக்கு எட்டியவற்றை கூறினார்கள் ..அவர்களில் அனேகமானவ்ர்கள் போட்ட படம், அதாவது சனம் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு முன்னுக்கு செல்லும் காட்சி...இந்த ஒரு காட்சியை ஏதோ ஒரு மூலத்தில் கொப்பி பண்ணி அதை தாங்கள் எடுத்த காட்சி போல பிரசுரித்து கருத்துக்களை அள்ளி வாரி இறைத்தனர். யாழ்ப்பாணத்தவன் உலகத்திலயே சிறந்த பிறவியாக இருக்க வேணும் என்ற கருத்து பட சிலர் எழுதினர்.இன்னும் சிலர் இந்த அசம்பாவிதத்தினால் யாழ்ப்பாணத்தானின் மானம் கப்பல் ஏறிவிட்டது என முதலை கண்ணீர் விட்டனர்.. இந்த யூ டியுப் விண்னர்கள் முழுக்க முழுக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொழிலதிபர் இந்திரன்,மற்றும் நடன தயாரிப்பாளர் கலா மாஸ்டர் மற்றும் தமன்னா மீது குற்றங்களை சாட்டுகிறார்கள் அல்லது அவர்களை வசை பாடுகிறார்கள். அவர்களின் ஒழுங்கமைப்பில் தவறுகள் இருக்கின்றது அதை சுட்டி காட்டுங்கள் இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகள் வராமல் செயல் பட உதவியாக இருக்கும்...இவர்களுக்கு மட்டுமல்ல எந்த ஒழுங்கமைப்பாளர்களுக்கும் அது உதவியாக இருக்கும் அதாவது பொது மனபான்மை ... தொழிலதிபர் தனது கல்வி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நிகழ்ச்சியை நடத்தியதாக குற்றம் சாட்டுகிறீர்கள் அதில என்ன தப்பு இருக்கின்றது? தாயகத்தில் இன்று புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தொழிலதிபர்கள் பலர் தொழில் முதலீடு செய்ய முன் வருகின்றனர் ,ஈடுபடுகின்றனர்.அவர்கள் புலம் பெயர்ந்த மண்ணிலயோ, இந்தியா,அல்லது ஏனைய ஆசிய நாடுகளில் தங்கள் முதலீடுகளை இலகுவாக செய்யலாம் இருந்தும் தாயகத்தில் இருக்கும் தங்களது பற்று காரணமாக அங்கு முதலீடு செய்ய முன்வருகின்றனர். அவர்களை ஊக்கபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தாயக மக்களுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் .சில யூ டியுப் நபர்கள் இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர் .அவர்கள் உண்மையிலயே பாராட்ட பட வேண்டியவர்கள் தொழிலதிபர் இந்திரனின் அரவணைப்பால் தாயக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அதிமாக இருக்கும்..இந்த இசை நிகழ்ச்சியின் பொழுது நடை பெற்ற அசம்பாவிதத்தினால் பாதிப்பு பொருட்களுக்கு மட்டுமே...எனவே எந்த தொழிலதிபர்கள் முதலீடு செய்ய வந்தாலும் அரவணைத்து ஊக்க படுத்த வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.. யாழ் மாநகர சபையினர்,மற்றும் பொலிசார்,அரசு போன்ற துறையினரும் இந்த அசம்பாவித் நிகழ்வுக்கு பொறுப்பாளிகள் ..இவர்களை கேள்வி கேட்க வேண்டிய மண்னின் யூ டியுப் விண்ணர்கள்,சமுக வலைத்தள ஜாம்பவாங்கள் எல்லாம் பணத்தை முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர் மீது குற்றம் சாட்டுகின்றனர். காவாலி கூட்டங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு இவர்களை திறுத்த முடியாது .ஆனால் கட்டுப்படுத்த முடியும் அதை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொலிசார் செய்ய வேண்டும் . மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போதைப்பொருள் பாவிப்பவர்கள் நடமாடுவதை பொலிசார் தடை செய்திருக்க வேணும் .மாநகர சபை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி கொடுக்கும் பொழுது சில கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேணும் .. ஒர் அரசியல்கட்சியின் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு மக்களை விட கலகம் அடக்கும் பொலிசார் அதிகமாக நிற்பார்கள் இங்கு அப்படியான எதுவும் ஒழுங்கு செய்ய படவில்லை.. பாதுகாப்பு செய்ய வேண்டியவர்கள் இங்கு தவறு செய்து விட்டார்கள் .. ஏற்கனவே மக்கள் கொந்தளிப்பு நிலையில் இருக்கும் பொழுது மக்களை அமைதி படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரி சிங்கள மொழியில் அமைதி காக்கும் மாறு கோருகின்றார் இது இன்னும் மக்களின் மனவேதனையை தூண்டும் செயல் ...அடுத்து தமிழில் பேசிய அதிகாரி கூறியவை எதுவும் மக்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. இன்று தொழிலதிபர் இந்திரன் தனது சார்பில் அறிக்கை விடுத்துள்ளார் அதைப்பற்றி எவரும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை...அதை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமையும் இந்த யூ டியுப் விண்ணர்களுக்கு உண்டு... இளைய வயதில் பிரபல தொழிலதிபராக வந்து தாயக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக வடமாகாண மக்களுக்கு ஒர் கல்வி நிறுவனத்தை தொடங்குவது என்பது உண்மையிலயே பாராட்டபட வேண்டிய ஒன்று ..கல்வி அறிவே எவராலும் அழிக்க முடியாத சொத்து...எம் மக்கள் இதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். இப்படி எழுதிய காரணத்தால் நானும் இந்திரனிடம் பணம் வாங்கி எழுதுகிறேன் பதிவுகளை போட சிலர் நினைக்கலாம் எனக்கு அவர் யார் என தெரியாது என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.. எல்லோரையும் குற்றம் சாட்டி, எம் மண்ணின் மைந்தர்கள் தொழில் செய்ய விடாமல் தடுக்க பல முயற்சிகள் திரைமறைவில் நடை பெறுவது கசப்பான உண்மை... நலன் விரும்பி
  2. யாழில் பதியப்பட்டிருந்த ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். 2014இல் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது கதை எனக்கு நினைவூட்டியது. அதைத்தான், “அப்பா அது நீதானா?” என இங்கே தந்திருக்கிறேன் இதற்குமேல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியாது என்று அன்றியாவுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் படுக்கையில்தான் இருந்தாள். அன்றியாவுக்கு அதிகம் பிடித்த இரவுகள் என்றால் அது ஞாயிறு இரவுகள்தான். அந்த இரவுகளில்தான் அடுத்தநாளின் சுமைகள் இல்லாமல் அன்றியா அதிகமாகத் தூங்குவாள். திங்கட் கிழமைகளில், ஏறக்குறைய நண்பகலை பொழுது நெருங்கும் நேரத்தில்தான் படுக்கையைப் பிரிந்து அவள் எழுந்து வருவாள். இந்தத் திங்கட்கிழமை மட்டும் அவளுக்கு சுகமானதாக இருக்கவில்லை. திங்கட்கிழமைகளில் அன்றியாவுக்குச் சொந்தமான, ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரோறண்ட்டுக்கு ஓய்வுநாள். வாரம் ஆறு நாட்கள் சுறுசுறுப்பாக ரெஸ்ரோறண்ட்டில் இருக்கும் அவளுக்கு, வாரத்தில் திங்கள் ஒருநாள் மட்டும்தான் ஓய்வு. ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட், அவளது தந்தை அல்போன்ஸோ அவளுக்கு விட்டுப்போன சொத்து. ‘ஒரு உணவு விடுதி பத்து வருடங்கள் நன்றாகப் போகும் அதற்குப் பின்னால் ஆட்டம் காணத் தொடங்கும்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்ரோறண்ட் முப்பது வருடங்களாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. உழைப்பை மட்டுமல்ல தனது ஆயுளையும் அதற்குத்தான் அல்போன்ஸோ அர்ப்பணித்திருந்தார். ‘அரக்கனின் உயிர் ஏழு கடல்தாண்டி, ஒரு பெரிய மலையில் ஒரு பொந்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது’ என்று சின்ன வயதில் கதைகள் கேட்டிருக்கிறோம். அதுபோல்தான் அல்போன்ஸின் உயிரும், ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான் அது இருந்தது. அல்போன்ஸுக்கு, பொழுது புலர்ந்து மறைவது எல்லாம் டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான். ஒருநாள் வேலை முடிந்து நள்ளிரவில் அல்போன்ஸ் வீட்டுக்கு வந்த போது, பத்து வயதான அவனது மகள் அன்றியா தனது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனது மனைவி அஞ்சலிக்கா வீட்டில் இல்லை. அவள் தனக்கான வாழ்க்கையைத் தேடிக் கொண்டு இன்னொருவனிடம் போய்விட்டாள் என்று அல்போன்ஸுக்கு அடுத்த நாள்தான் தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு அன்றியாவுக்கு எல்லாமே அல்போன்ஸ்தான். “அப்பா அது நீ இல்லையா? எப்போதும் என்னுடன் இருப்பாய் என்று நம்பினேனே? ஏமாந்து விட்டேனா?” அன்றியாவால் அதற்குமேல் படுக்கையில் புரள முடியவில்லை. எழுந்து கொண்டாள். கட்டிலின் அருகே இருந்த அலுமாரியில் இருந்து அந்தக் குடுவையை எடுத்துக் கொண்டாள். வரவேற்பறையின் ஷோபாவில் அமர்ந்திருந்த அவளது பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையிலேயே இருந்தது. அந்தப் குடுவைக்குள்தான் அல்போன்ஸ் இருந்தான். அதற்குள்ளேதான் அன்றியாவும் தன் உயிரை வைத்திருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அல்போன்ஸ் இறந்து போய்விட, அன்றியா தன் பலம் எல்லாம் இழந்து விட்டதை உணர்ந்தாள். எத்தனைபேர் வந்து ஆறுதல் சொல்லி இருப்பார்கள். அத்தனையும் அவளைத் தேற்றவில்லை. அவளது அப்பா இல்லாத வீடு அவளுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது ஓடி விடலாமா? என யோசித்து, தனியாக, சோகத்தில் விழுந்திருந்த போதுதான், தன் தந்தையின் உடலை அடக்கம் செய்வதில்லை, மாறாக எரித்து விடுவது என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. நண்பர்கள், உறவினர்கள் எல்லாம், “அடக்கம் செய்து விடு” என்று சொல்லிப் பார்த்தார்கள். அன்றியா, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் குடுவைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல்க் குடுவை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலோ,ஆறுகளிலோ கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயலாகும். “இது சட்டப்படி பிழையானது. பிடிபட்டால் பெரும் சிக்கலாகி விடும்” இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனத்தின் முதலாளி ஜோகன், அன்றியாவுக்கு அறிவுரை சொன்னார். “என்னால் உங்களுக்கு ஒரு சிக்கலும் வராது” சொல்லிக் கொண்டே தனது பணப்பையை அன்றியா திறந்தாள். அல்போன்ஸின் உடல் எரிக்கப்பட்டு, அவனது சாம்பல் அழகான ஒரு குடுவைக்குள் அடக்கப்பட்டு அவளிடம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து அன்றியாவின் கட்டிலோடு சேர்ந்திருந்த அலுமாரிக்குள் அவளது தந்தை அல்போன்ஸ் இருந்தார். வெள்ளி,சனிக்கிழமைகளில்தான் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்டோரண்ட் நிறைந்திருக்கும். மற்றைய நாட்களில் ஓரளவு வாடிக்கையாளர்கள்தான் உணவருந்த வருவார்கள். ஞாயிற்றுக் கிழமையான அன்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் இல்லை. அன்றியா, உணவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த செய்தி அவளுக்குக் கிடைத்தது. அவளுக்குச் செய்தியைச் சொன்னவர் உணவருந்த வந்த ஒரு வாடிக்கையாளர். “ கேள்விப் பட்டனீயோ அன்றியா? ஜோகனை அறெஸ்ற் செய்திட்டாங்களாம்” “எந்த ஜோகன்?” “இறுதிச் சடங்கு நடத்துற ஜோகன்” “ஏன்? அவருக்கு என்ன பிரச்சினை?” “தில்லு முல்லுதான். ஏகப்பட்ட விசயங்கள். நூறு யூரோப் படி சவப் பெட்டிகளை வாங்கி, அப்பிடி இப்பி டி சோடிச்சு, ஏமாத்தி ஆக்களைப் பாத்து விலையை ஆயிரம், இரண்டாயிரம் எண்டு கூட்டிக் குறைச்சுக் குடுத்துப் பணம் பாத்திருக்கிறான்..” “இதிலை என்ன பிழை இருக்கு? அது வியாபாரம். வாங்கிறாக்களை அவர் ஒண்டும் கட்டாயப் படுத்த இல்லையே” “இல்லைத்தான். ஆக்களுக்கு நல்ல விலையான சவப்பெட்டிகளைக் காட்டிப் போட்டு, அடக்கம் செய்யிற போது சாதாரண பெட்டியை மாத்திப் போடுவான். சவப் பெட்டிக்கான காசும் கொம்பனிக் கணக்குக்குப் போகாது. அவன்ரை தனிப்பட்ட எக்கவுண்டுக்குத்தான் போகும்” “அப்பிடி இருக்குமெண்டோ? என்னைப் பொறுத்த வரையிலை அவர் ஒரு நல்ல மனுசன்” “ நீ அப்பிடிச் சொல்லுறாய். கனக்க விசயம் இருக்கு அன்றியா. உடலை எரிச்சுப் போட்டு, ஆக்களின்ரை அவசரத்துக்கு, ஆளாளுக்கு சாம்பல்களை மாத்தியும் குடுத்திருக்கிறான். அங்கை வேலை செய்தவன் பொலிஸுக்கு அறிவிச்சுப் போட்டான். ஆள் மாட்டிட்டான்” ஷோபாவில் இருந்த அன்றியாவின் பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையில் இருந்தது. “அப்பா உள்ளே இருப்பது நீதானா?” இது ஒரு உண்மைச் சம்பவம் “ஸ்வேபிஸ் ஹால் நகரத்தைச் சேர்ந்த, இறுதிச் சடங்கு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஜோகன் (33), அதிக பணத்தைப் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளில், மலிவான சவப்பெட்டிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்தார் என்பதும், 60 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு இறந்தவர்களின் சாம்பல்களை மாற்றியும் கொடுத்திருக்கிறார் என்பதும், நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இது மனித நேயம், உணர்வுகள், உறவினர்களின் துக்கம் பற்றியது. இவை அனைத்தும் இங்கே மதிக்கப்படவில்லை, குற்றவாளி உறவினர்களின் நம்பிக்கையை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். 102 குற்றங்களை அவர் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இவற்றுக்காக மூன்று வருடங்களும் எட்டு மாதங்களும் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்படுகிறது” என்று தலைமை நீதிபதி 15.10.2014, புதன்கிழமை தனது தீர்ப்பில் கூறினார்
  3. Putthan, உங்களின் இந்த ஆதங்கம் என்னிடத்திலும் இருக்கிறது. பேனை பெரிதாக்கி பெருச்சாளியாக்கி பேயாகவும் காட்டியிருக்கிறார்கள். “நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது கவலை அளிக்கிறது. ஆனலும் நிலமையைச் சீராக்கி, நிகழ்ச்சி தொடர்ந்தது” என்று தென்னிந்திய கலைஞர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், சில தென்னிந்திய ஊடகங்களும் அறியத்தந்திருக்கிறார்கள். இதற்குள் எம்மவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து இழிந்த அரசியலும் செய்திருக்கிறார்கள். பொலிஸ் அதிகாரி சிங்களத்தில் வேண்டுகோள் விடுத்த போது, “தமிழில் கதை” என்று கத்தினார்கள். அவர் தமிழில் வேண்டுகோள் விடுத்த போதும் எம்மவர்களுக்குப் புரியவில்லை என்பது வேதனை. புலம் பெயர்ந்தவர்கள், தாயகத்தில் வந்து முதலீடு செய்துதான் பணம் பார்க்க வேண்டிய நிலையில் இல்லை. அவர்கள் பொது நலன் கருதியோ, தங்கள் புகழ் விரும்பியோ தாயகத்துக்கு உதவ முன் வரலாம். அதை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் திறன் அங்கு இல்லை என்பதைத்தான் நடந்த சம்பவம் காட்டியிருக்கிறது. வீழ்ந்திருந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் வீரம் பேசப் போகிறோம்?
  4. அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவார்த்தப் பித்துக்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும்.. வேலை செய்யாது. என்ன அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு கொன்று குவிக்க துணை நின்று.. சுகபோகம் சந்திச்சவன்.. கூடிய விரைவில் போய் சேர்ந்து விடுகிறான்.. சிலது தப்பிப்பிழைச்சிருப்பதற்கு இறைவன் தான் பதில் சொல்லனும். என்ன மரணம் என்பது கர்ணனிற்கும் உண்டு.. கருணாக்களுக்கும் உண்டு. அதனால்.. கர்ணனும் கருணாவும் ஒன்றாகிட முடியாது. இரண்டு மரணங்களிக்கிடையேயும் வேறுபாடுண்டு. அடிப்படையில் இரண்டும் மரணங்கள் ஆகினும்.
  5. ஆம். இச்சட்டத்தின் நோக்கம், காலனித்துவ காலத்தில் வெளிநாட்டினரிடம் அல்லது வெளிநாட்டினரின் நிழலில் வாழ்ந்த பணக்காரர்களிடம் தேங்கி விட்ட காணிகளை மீள சுதேசமயப் படுத்துதல் என்பது தான். இந்த 1972 சட்டத்திற்கு, 1975 இல் ஒரு திருத்தம் கொண்டு வரப் பட்ட போது, பெருந்தோட்டக் (plantation) காணிகள் பலவற்றின் உரிமை காலனித்துவ கம்பனிகளிடமிருந்து அரச கூட்டுத் தாபனங்களிடம் மாறின. எனவே, இது அந்தக் காலப் பகுதியின் இடதுசாரி, சுதேசவாத அரசின் கொள்கையேயொழிய, இதனால் தமிழர்கள் பாதிக்கப் பட்ட பதிவுகளைக் காணவில்லை. 1977 இல் ஐ.தே.க ஆட்சிக்கு வந்த போது, மீண்டும் தனியார் உரிமையை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் காணிச்சட்டங்களை ஐதாக்கினர்.
  6. of 1972. 39 of 1975. CHAPTER 297 LAND REFORM A LAW TO ESTABLISH A LAND REFORM COMMISSION TO FIX A CEILING ON THE EXTENT OF AGRICULTURAL LAND THAT MAY BE OWNED BY PERSONS, TO PROVIDE FOR THE VESTING OF LANDS OWNED IN EXCESS OF SUCH CEILING IN THE LAND REFORM COMMISSION AND FOR SUCH LAND TO BE HELD BY THE FORMER OWNERS ON A STATUTORY LEASE FROM THE COMMISSION, TO PRESCRIBE THE PURPOSES AND THE MANNER OF DISPOSITION BY THE COMMISSION OF AGRICULTURAL LANDS VESTED IN THE COMMISSION SO AS TO INCREASE PRODUCTIVITY AND EMPLOYMENT. TO PROVIDE FOR THE PAYMENT OF COMPENSATION TO PERSONS DEPRIVED OF THEIR LANDS UNDER THIS LAW AND FOR MATTERS CONNECTED THEREWITH OR INCIDENTAL THERETO Short title. Purposes of this Law. I. This Law may be cited as the Land Reform Law. 2. The purposes of this Law shall be to establish a Land Reform Commission with the following objects : - (a) to ensure that no person shall own agricultural land in excess of the ceiling; and (b) to take over agricultural land owned by any person in excess of the ceiling and to utilize such land in a manner which will result in an increase in its productivity and in the employment generated from such land. PART CEILING ON AGRICULTURAL LAND [26th August. 1972.] acres, so however that the total extent of any paddy land, if any, comprised in such fifty acres shall not exceed the ceiling on paddy land specified in paragraph (a). be deemed to vest In the Commission; and be deemed to be held by such person under a statutory lease from the Commission. (a) an area not exceeding half an acre in extent surrounding the residence of the owner of such land; (b) any garden surrounding staff quarters or labour lines on such land, not in excess of one-eighth of an acre in extent for every family resident in such quarters or lines; and Ceiling on agricultural land. ( I) On and after the date of 3. commencement of this Law the maximum extent of agricultural land which may be owned by any person, in this Law referred to as the" ceiling n, shall- (a) if such land consists exclusively of paddy land, be twenty-five acres; or (b) if such land does not consist exclusively of paddy land, be fifty XI/368 Any agricultural land owned by any (2) person in excess of the ceiling on the date of commencement of this Law shall as from that date- (a) (b) (3) agricultural land for the purpose of applying the ceiling, the following areas situated on such land shall not be taken into account :- In the computation of the acreage of Interim order declaring possession of any agricultural land subject to (c) (4) any area not exceeding half an acre set apart for a family burial ground. For the purpose of subsection (1)- (4) As long as the interim order is in force the Commission shall not alienate the agricultural land to which the interim order relates: Provided, however, that, where no reference has been made under subsection (2), the interim order made under subsection (I) shall have the effect of a final order under subsection (3). 5. Where after the date of commencement of this Law any person becomes the owner of agricultural land in excess of the ceiling, any such land owned by such person in excess of the ceiling shall as from that date- (0) where any land is subject to a mortgage, lease, usufruct or life interest, the mortgagor, the lessor or the person in whom the title to the land subject to the usufruct or life interest is ; and (b) where any land is held on a permit or a grant issued under the Land Development Ordinance, the permit-holder or the alienee on such grant, shall be deemed to be the owner of such agricultural land: Provided, however, that where the lessor of any agricultural land under paragraph (0) of this subsection is the State, the lessee of such agricultural land shall be deemed to be the owner. 4. (1) Where there is a dispute between parties as to the ownership of any agricultural land which is subject to the ceiling the Commission may, after such inquiry as it may deem fit, make an interim be deemed to Commission; and vest In the Special provisionsto apply where persons become owners of agricultural land in excess of the ceiling after the date of commence- ment. Effect of vesting of agricultural land in the Commission under this Law. Special provisions relating to co- owned agricultural land. Ownership of agricultural land by body corporate. Servitude not to be affected by change of ownership of agricultural land. the ceiling may be made by the order declaring one of such parties to be Commission. entitled to the possession of such agricultural land. Every interim order shall be published in the Gazette and shall come into force on the date of such publication. (2) Within two weeks of the publication of the interim order in the Gazette the Commission of its own motion or any of the parties to the dispute referred to in subsection (l) may refer such dispute to a court of competent jurisdiction for final adjudication. (.3) Till the final order is made by a court on such reference, the interim order shall be valid and effectual and shall not be called in question in any court by way of writ or otherwise. So long and for so long only as the interim order is in force the person declared by such interim order to be entitled to possess the agricultural land shall be deemed for the purpose of section 3 to be the owner of such agricultural land. LAND REFORM [Cap. 297 XIj369 (0) (b) 6. in the Commission under this Law, such vesting shall have the effect of giving the Commission absolute title to such land as from the date of such vesting, and free from allencumbrances. 7. For the purposes of this Law, where any agricultural land is co-owned, each co- owner shall be deemed to own his share in such land as a distinct and separate entity. 8. For the purposes of this Law, where any agricultural land is owned by a private company or co-operative society, the shareholders of such company, or society, as the case may be, shall be deemed to own such land for the purposes of section 3, in proportion to the shares held by each shareholder of such company, or society, as the case may be. 9. No servitude over any agri https://faolex.fao.org/docs/pdf/srl13619.pdf Land Reform Law AN LAW to establish a Land Reform Commission to fix a ceiling on the extent of agricultural land that may be owned by persons, to provide for the vesting of lands owned in excess of such ceiling in the Land Reform Commission and for such land to be held by the former owners on a statutory lease from the Commission, to prescribe the purposes and the manner of disposition by the Commission of agricultural lands vested in the Commission so as to increase productivity and employment, to provide for the payment of compensation to persons deprived of their lands under this Law and for matters connected therewith or incidental thereto. LAND REFORM LAW Arrangement of Sections 1. Short title. 2. Purposes of this Law. PART I CEILING ON AGRICULTURAL LAND 3. Ceiling on agricultural land. 4. Interim order declaring possession of any agricultural land subject to the ceiling may be made by the Commission. 5. Special provisions to apply where persons become owners of agricultural land in excess of the ceiling after the date of commencement. 6. Effect of vesting of agricultural land in the Commission under this Law. 7. Special provisions relating to co-owned agricultural land. 8. Ownership of agricultural land by body corporate. 9. Servitude not to be affected by change of ownership of agricultural land. 10. Rights of tenant cultivators not to be affected by change of ownership. 11. Statutory lessee may surrender lease on giving the prescribed notice to the Commission. 12. Agricultural lands subject to a mortgage, lease, usufruct or life interest. 13. Certain transfers of agricultural land to be reported to the Commission within three months of the commencement of the Law and the Commission may invalidate such transfers. 14. Inter family transfer of agricultural land after the commencement of this Law. 15. Terms and conditions of statutory leases. 16. An authorised officer or agent of the Commission may issue directions to the police for the ejectment of unlawful occupiers of a land subject to a statutory lease. 17. Where an authorised officer or agent is unable or apprehends that he will be unable to eject unlawful occupiers of agricultural land subject to a statutory lease. PART II DECLARATION IN RESPECT OF AGRICULTURAL LAND AND VESTING AND ALIENATION OF SUCH LAND 18. Declaration in respect of agricultural land subject to a statutory lease. 19. Provisions applicable on the receipt by the Commission of a statutory declaration. 20. Effect of a statutory determination published under section 19. 21. Contents of a statutory determination published in the Gazette. 22. Purposes for which agricultural land vested in the Commission may be used. 23. Agricultural land not to be alienated by the Commission to persons who are not citizens of Sri Lanka. 24. Terms and conditions of alienation of agricultural land by the Commission. 25. Special provisions applicable to alienation of agricultural land by the Commission. 26. Applications for alienated of agriculture land by the Commission. 27. Price at which land shall be alienated by the Commission. 27A. Minister may by Order vest in State Corporation agricultural or estate land vested in the Commission. 27B. Revival of certain encumbrances. PART III COMPENSATION 28. Compensation payable by the Commission in respect of land vested in it under this Law. 28A. Provision relating to the viewer or refund of certain taxes. 29. Notice to persons entitled to make claims to the compensation payable under this law in respect of any agricultural land vested in the Commission. 30. Determination of compensation. 31. Commission to make an award as to the amount of compensation. 32. Payment of Compensation. 33. Provision for cases where compensation is not accepted. 34. Deductions from compensation. 35. Compensation and interest payable. 36. Persons dissatisfied with the amount of compensation awarded may appeal there from to the Board of Review constituted under the Land Acquisition Act. 37. Application of certain sections of the Land Acquisition Act in relation to appeals to the Board of Review under this Law. 38. Finality of an award made under this Law. 39. Tender and payment of compensation. 40. Power of the Chairman of the Commission to pay advances on account of compensation. 41. Central Bank to issue securities for payment of compensation under this law. 42. Mode and manner of payment of compensation. PART IIIA SPECIAL PROVISIONS RELATING TO ESTATE LANDS OWNED BY PUBLIC COMPANIES 42A. Vesting of estate lands owned or possessed by public companies. 42B. Management of vested estate lands. 42C. Particulars to be furnished by statutory trustees. 42D. Ejectment of unlawful occupiers of vested estate lands. 42E. Servitudes not to be affected by the vesting of estate lands. 42F. Estate lands subject to mortgages, leases, usufruct or life interest. 42G. Termination of the statutory trusts. 42H. Purposes for which estate lands vested in the Commission may be used. 42J. Compensation. 42K. Vesting of the business undertakings of agency houses or organisations. 42L. Appointment and removal of Directors of agency houses and organisations. 42LL. Certain estate lands deemed to be an estate lands owned by a public company on the date of coming into operation of this part of this Law. 42M. Interpretation. PART IV ESTABLISHMENT, CONSTITUTION, POWERS AND FUNCTIONS OF THE LAND REFORM COMMISSION 43. Establishment of land Reform commission. 44. Powers of the Commission. 45. Constitution of the Commission. 46. Seal of the Commission. 47. Powers of the Minister in relation to the commission. 48. Officers and servants of the Commission deemed to be public servants. 49. Commission deemed to be a scheduled institution within the meaning of the Bribery Act. 50. District Land Reform Authorities. PART V STAFF OF THE COMMISSION 51. Appointment of officers and servants. 52. Powers of the Commission in regard to the staff of the Commission. PART VI FINANCE AND ACCOUNTS OF THE COMMISSION 53. Capital of the Commission. 54. Fund of the Commission. 55. Financial year of the Commission. 56. Application of provisions of the Public Corporations (Financial Control) Act........ Contd,.... https://www.srilankalaw.lk/l/608-land-reform-law.html Turning points in Sri Lanka’s Land Policy: MCC and its predecessors. https://www.lstlanka.org/wp-content/uploads/2022/02/Turning-points-in-Sri-Lankas-Land-Policy_English.pdf 1972 இல் நில உச்சவரம்பு சட்டம் என்பது இலங்கைத் தமிழரைக் குறிவைத்து இயற்றப்பட்டது என்பது தவறான கற்பிதம் என நினைக்கிறேன்.
  7. வீட்டுக்கொரு போராளி வரவேண்டுமென்று கேட்டபோது எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவனை கொடுத்தோம். இப்போது பேசலாமல்லவா? இத்தனைக்கும் இப்போதும் நான் ஒரு ஸ்ரீலங்கன் பிரஜை!
  8. யாழில் நிகழ்ந்த நிகழ்வின் மறுபக்கத்தை அலசியுள்ளீர்கள் நல்ல விடயம். பந்திகளை சரியான முறையில் பிரித்து (இடைவெளி இல்லை) இருந்தால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அத்துடன் எழுத்துப்பிழைகளையும் கவனித்திருக்கலாம் 😄
  9. சில வேளைகளில் இவர்களை நினைத்தால் சிரிப்பாய்த்தான் இருக்கு. பாகிஸ்தானிலிருந்த வந்த ஏ கே 47 ஆயிரம் ரவைகள் அது எப்படியப்பா பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து ஒரு ஈ காக்க கூட உள்நுளையமுடியாது உண்மையும் அதுவே. அப்படி இருக்கையில் எப்படி அது கேரள விளிஞ்சியம் வரைக்கும் பயணம் செய்யுது? சரி அதைவிடவும், விடுதலைப்புலிகள் அமைப்பு சிறு கைத்துப்பாக்கி முதற்கொண்டு கனரக ஆயுதங்கள் வரைக்கும் பெருந்தொகையாகக் கையாண்டவர்கள் அதைவைத்தே அவர்கள் எதிரிகளைத் தோற்கடிக்க முடியவில்லை ஒரேயொரு ஏ கேயை வைத்து இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள்? இப்போது இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களுக்கு ஆயுதப்போராட்டத்தின்மீது அறவே நம்பிக்கை இல்லை என இந்தியாவுக்குத் தெரியும் உண்மையும் அதுதான். அப்படி ஒரு ஆயுதப்போராட்டம் வருமாகில் அது ஒன்றும் ஏ கே 47 தூக்கிப்போராடும் போராட்டமாக இருக்காது ஏ ஐ தொழில்நுட்பத்துடனான மிகவும் திறன்வாய்ந்த துல்லியமான போராட்டமாக அது இருக்கும். உதாரணமாக உக்ரைன் நாட்டுடன் சண்டையும்போது ரஸ்யா ஈரானில் தயாரித்த ட்றொணைப் பயன்படுத்தியது ஆனால் அது வினைத்திறன் குறைந்தது அதேவேளை இப்போது உக்ரைன் உள்ளூர் தொழில்நுட்பத்துடனேயே அதைவிட வீரியம் நிறைந்த ட்ரோனைப் பயன்படுத்துகிறது. துல்லியம்கூட ஓரளவுக்கு முன்னேற்றமானதாகும். முள்ளிவாய்க்காலுக்கு சிறிது முன்னைய காலத்தில் புலிகளிடம் இவை கிடைத்திருந்தால் யுத்தத்தின் போக்கே மாறியிருக்கும். ஆக இந்த ஏ கே 47 புலுடாவெல்லாத்தையும் இந்தியா ஏறக்கட்டி வைப்பதைத்தவிர வேறு வழியில்லை.
  10. முன்னர் ஒரு காலத்தில் ஆண்கள் பாடசாலையில் ஆசிரியர்களாக ஆண்களும் பெண்கள் பாடசாலையில் ஆசிரியர்களாக பெண்களுமே இருந்தார்கள். கலவன் பாடசாலைகளில் ஆசிரியர்களாக ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். அடுத்ததாக அதிபர்களை தெரிவு செய்யும் போது உபஅதிபராக இருப்பவரே கூடுதலாக அதிபராக வருவார். இப்போது அரசியல் தான் எல்லாவற்றையுமே தீர்மானிக்கிறது. விபரங்கள் தெரியாமல் கருத்தெழுதவே யோசனையாக உள்ளது.
  11. அரைகுறை ஆடையுடன் தமன்னா வந்தால் மாகாணங்கள் கடந்து பஸ் பஸ்ஸாக வந்து முன்னாடி நிகழ்ச்சி பாத்துக்கொண்டிருந்தவங்களையெல்லாம் மாடு உழக்கினமாதிரி உழக்கிக்கொண்டும் பனைமேல ஏறி நின்றும் பார்க்கும் கூட்டம், அறிவு சார்ந்த விடயத்தில் பெண் தலைமையேற்றால் வேண்டாம் என்று எதிர்ப்புக்குரலெழுப்புகிறது. போகிறபோக்கில் கலவிக்கு மட்டுமே பெண் வேண்டும் கல்விக்கு வேண்டாம் என்ற தலீபான்களின் கொள்கைகளை மனபூர்வமாக ஏற்கப்போகிறது போலும் யாழின் ஒருசில மக்கள் திருக்கூட்டம்.
  12. எத்தனை ஆயிரம் பெண் போராளிகள் களமாடிய பூமியில் தான் இவ்வாறு பெண்கள் உட்பட பலர் பெண் தலைமைத்துவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.
  13. @vasee இலங்கையில் இனவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தது அனைவரும் அறிந்த விடயமே. அதற்கு எதிராக தான் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. அதை எவரும் இங்கு மறுக்கவில்லை. அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் அது பற்றி பேசுவது ஏன்? ஆயுதப் போராட்டத்தை நடத்திய அனைத்து அமைப்புகளாலும் நிகழ்த்தப்பட்ட பல அரசியல் படுகொலைகள் அனைத்துலக ரீதியில் பிரச்சாரப் படுத்தப்பட்டு எவ்வாறு அது எமது போராட்டத்தின் பின்னடைவுக்கும் இறுதியில் பேரழிவுக்கும் காரணமாக அமைந்தது என்பதை பற்றியே இங்கு என்னால் உரையாடப்பட்டது. இதை வெளிப்படையாக கூறுபவர்கள் எப்படி இலங்கை அரசுக்கு உடந்தையாக இருப்பார்கள்? சும்மா வேண்டுமென்றே அடுத்தவர் மீது எழுந்த மானமாக பழி போடுவது தர்ககரீதியான விவாதமாக அமையாது என்பது உங்களுக்கு தெரியாதா? வேண்டுமென்றே இந்த விடயத்தை திசை திருப்புவதற்காக நில உச்சவரம்பு சட்டத்தை கூட துணைக்கு அழைத்திருக்கின்றீர்கள். நில உச்ச வரம்பு சட்டம் இன அடிப்படையில் அமைந்ததாக புதிதாக கதை கட்டுகின்றீர்கள். நில உச்சவரம்பு சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று எந்த தமிழ் தலைமையும் கூறவும் இல்லை அதற்கெதிராக போராட்டமும் மேற்கொள்ளவில்லை. இன ரீதியிலான தரப்படுத்தலே தமிழர்களுக்கு எதிரானது. அது கூட 1977 ல் ஐதேக அரசால் மாவட்ட அடிப்படையில் மாற்றப்பட்டபோது பின் தங்கிய தமிழ் பிரதேச மாணவர்கள் பலனடைந்தார்கள். அப்போது யாழ்பபாண மாணவர்கள் இங்கு படித்துவிட்டு பரீட்சையை வன்னி சென று தோற்றியதன் மூலம் வன்னி தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளை தட்டி பறித்த செயல்கள் குறித்துப் பேச மாட்டீர்கள். தர்ககரீதியான விவாதம் என்பது அடுத்தவர்மீது பழி போட்டு அவரை துரோகியாக்கி வெற்றி கொள்வதல்ல. புரிந்து கொள்ளுங்கள்.
  14. Curve fitting என்பது தரவு புள்ளிகளை எழுந்தமானமாக நாம் விரும்பியவாறு இணைப்பதன் மூலம் நாம் விரும்பும் காட்சியினை உருவாக்கலாம். ஆனால் உண்மையாக அவை இருக்கமாட்டாது, ஆனால் மற்றவர்களை ஏமாற்றுகிறோம் என நினைத்து எம்மை நாமே ஏமாற்றுவதில் முடிவடையும். இலங்கையில் தமிழ் மக்கள் செழிபாக இருந்த போது அவர்களை அழிக்கும் எண்ணத்துடன் பொருளாதார ரீதியாக நிலசுவாந்தர்களாக இருந்த தமிழ் மக்களை குறிவைத்து 1972 இல் நில உச்சவரம்பு சட்டம் இயற்றப்பட்டு குறித்த அளவிற்கு அதிகமான நிலத்தினை அரசு கைப்பற்றி அதனை சிங்கள மக்களிடம் பகிர்ந்தழிக்கப்பட்டது. பெருந்தோட்டங்கள் பற்றிய அறிவற்ற சிங்களவர்கள் சோம்பேறித்தனமான போக்குடன் செயற்பட்டு உற்பத்தி வீழ்ச்சியினை ஏற்படுத்தினார்கள் ( இவர்கள் சாரம் சேட்டிற்கு மேல் கோட்டினை அணிந்து கையில் குடையுடன் வலம் வந்தார்களாம்). அத்துடன் பெருந்தோட்டங்கள் பெருந்தோட்டமாகவே பராமரித்தாலேயே இலாபம் ஈட்ட முடியும், இவ்வாறுதான் சிங்கள அரசுகள் நாட்டிற்கு பேரழிவினை ஏற்படுத்தினார்கள், செல்வந்த வணிகர்களான தமிழ் வணிகங்களை இலக்கு வைத்து நடாத்திய இனக்கலவரங்கள் அவர்கள் விரும்பிய அழிவினை தமிழர்களுக்கு ஏற்படுத்தினாலும் நீண்ட காலத்தில் தற்போது இலங்கை ஆபிரிக்க நாடுகளின் நிலமையினை நோக்கி செல்லும் நிலையினை உருவாக்கி விட்டது. தமிழர்களின் கல்வி பொருளாதாரம் என அனைத்தையும் பறித்து அவர்களை ஏதிலிகளாக்கியவர்கள், இன்று உலகத்திடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு, அவர்களே சொந்த செலவில் சூனியம் வைத்து விட்டார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு எப்படி இந்த சின்ன நாட்டை இரண்டாக பிரிப்பது என அப்பாவியாக கேட்பார்கள், தமிழ் மக்கள் மீண்டும் பழைய நிலை வர விரும்பாத இந்த சிங்கள அரசுகளிற்கு உடந்தையாக இருந்து தமது சுயநலனுக்காக தமது இன மக்களுக்கே தீமை செய்யும் நபர்களும் அதனை நியாயப்படுத்துவர்களும் தமிழ் இனத்தில் மட்டுமே இருக்கமுடியுமா என எண்ணத்தோன்றுகிறது.
  15. எந்த படுகொலைகளையும் நியாயபடுத்த முடியாது அதனனால் தான் அவரும் அரசியலை முன்னெடுத்தார் போய் சேர்ந்தார் , போய் சேர்ந்தார் என்று தான் குறிப்பிடுகின்றார் 😂
  16. யோகேஸ்வரன்: இதோ 1000 இளைஞர்களை தாருங்கள் தமிழீழம் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தங்களின் சிங்கள எஜமான அரசியலை முன்னெடுத்தார் போய் சேர்ந்தார். அவரின் மனைவியும் அதே. சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை இனப்படுகொலைகளை.. வெண் புறா.. வெண்டாமரைக்குள் மறைக்க.. உதவினார்.. செம்மணி புதைகுழிகள் கூட கண்ணில் படவில்லை.. போய் சேர்ந்தார். அமிர்தலிங்கம்: ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் மக்கள் வகைதொகையின்றி இறந்து கொண்டிருக்க.. ஹிந்திய இராணுவம் ரப்பர் செல் அடித்தபடியே முன்னேறுவதாக ஹிந்திய விசுவாச அரசியலை முன்னெடுத்தார்.. போய் சேர்ந்தார். நீலன் திருச்செல்வம்: யாழ்.. மற்றும்.. வன்னியை ஆக்கரமிக்கும் சந்திரிக்காவின் வெண்புறா வேச இன அழிப்புப் போர் நீண்ட போது.. மக்கள் பட்டினி கிடந்தும் இடம்பெயர்ந்தும் செத்துக் கொண்டிந்த போது.. சந்திரிக்காவை சமாதான தேவதையாக சித்தரிக்க.. ஈயன் பொக்ஸ்.. விலகி நினறு விட்ட போதும்.. சிங்களம் கிழித்தெறிந்த போதும்.. புலிகள் நிராகரித்து நின்ற போதும்.. தன் வித்துவத்தையும் சிங்கள விசுவாசத்தையும் காட்டப் போய்.. போய் சேர்ந்தார். இப்ப.. மிஸ்டர்.. சுமந்திரன் அந்தப் பட்டியலில் வந்து குந்தி இருக்கிறார். என்ன தமிழ் மக்கள் கேடயம் இழந்த நிலையில் இருப்பதால்.. இவரால்.. சிங்கள விசுவாசத்தை தமிழர்களின் வாக்குகளை வைச்சே காட்ட முடியுது. இதில் எல்லாமே அரைகுறை.. இனவிரோத சட்டாம்பிகள் தான் கூடிய இனத்துரோகத்தைச் செய்திருக்கினம். அது காசுக்கு கட்சிக்காரனை காப்பாற்ற சாட்சிக்காரனை குற்றவாளி ஆக்கிற குணத்தின் பரினாமம் என்றால் வேறில்லை. இவர்களிடம் நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது. அதனால் தான் சிலது துர்மரணங்களை பரிசாக்கிக் கொண்டன.
  17. அதே அறிவுஜீவித்தனத்தால் உலகத்தில் ஒரு துரும்பையும் இவர்கள் புடுங்கியதில்லை இதுவரை. புடுங்க போவதுமில்லை.
  18. (எழிலன்): - முதலாளி இன்றைக்கு லீவு தாங்கோ? எனக்கு காய்ச்சலா இருக்கு உடம்பும் நடுங்குகிறது (எழிலன்) முதலாளி:- இன்றைக்கு லீவு கொடுக்க இயலாது இன்று ஞாயிற்றுக்கிழமை கன சனம் கடைக்கு வரும் நீயும் லீவு எடுத்தால் நான் யாரைக்கொண்டு க‌டையை நடத்துற‌ வேலை செய்யுற என்று சொன்னார் முதலாளி முதலாளி:- இல்லை ஐயா எனக்கு நிற்க கூட முடியல அதுதான் லீவு கேட்கிறன் முதலாளி:- சரி லீவு இல்ல கணக்கை பார்த்து காசை மொத்தமா வாங்கிட்டு போ இனி வேலைக்கும் வராத‌ என்றார் முதலாளி. (எழிலன்): உடலைப்பார்த்தால் தான் நாளைக்கு வேலை செய்யலாம் என காசை தாங்கோ என கேட்க முதலாளி:- எத்தனை நாள்? (எழிலன்): 15 நாள் ஐயா 15000 ரூபா முதலாளி:- இந்தா 10000 பிறகு வந்து 5000 ரூபாவை வாங்கித்துப்போ என்றார் முதலாளி நம்ம தமிழ் முதலாளிகளின் நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று காசை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு நான் செல்ல அங்கே காவாலாளி இன்றைக்கு ஓ பி ரி (O.P.T) இல்லை நாளைக்கு வாங்க என்றார். எனக்கு நிற்க முடியல மருந்து எடுக்கணூம் தம்பி உள்ள விடுங்க யாரையாவது பார்த்து மருந்து எடுத்து செல்கிறேன் என நானும் சொல்ல அவங்க விடுவதாக இல்லை லேசாக மயக்கம் வருவது போல அமர உள்ளே கிளினிக் செய்யும் வைத்திரியரிட்ட அனுப்புங்க என சொல்லி உள்ள விட அங்கே ஒரு பெண் தரையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் சென்றால் அந்த பகுதி மீண்டும் அழுக்காகிவிடும் என்ற காரணத்தால் காயும் வரைக்கும் நிற்க அவளோ போங்க பறவாயில்லை என்றாள் ஆளை அடையாளம் காண முடியவில்லை முகத்தை மறைத்து முகக்கவசம் அணிந்திருந்தாள். சரி நான் போய் வைத்தியரைப்பார்க்க வரிசையில் நிற்க அந்த குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது என மனம் சொல்ல அந்த‌ குரலையும் அவளையும் தேடியது கண்கள் அவவாக இருக்குமோ என்ற‌ ?? கேள்விதான் எழுகிறது பதில் இல்லாமல் வைத்தியர் :- அடுத்த ஆள் வாங்கோ உள்ளே அழைக்க என்ன பிரச்சினை! ஐயா நேற்றில இருந்து நடுங்கி காய்ச்சல் காயுது சரி இந்த குழுசைகளை விழுங்குங்க பனிக்காலம் என்ற படியால் பனிவெளியில திரியாதிங்கோ சரி ஐயா நன்றி என்று வெளியில் வர நீலன் நீலன் என அழைக்க திரும்பி பார்த்தேன் அந்த பெயரோ போராட்ட காலத்தில் எனக்கு வைத்த பெயர் அது அந்த பெயரை தெரிந்தவர் யார் என திரும்பி பார்த்த போது அந்த பெண்தான் நீங்க?? நான் ரோசி (சுடர்) அக்கா நீங்களா? நீங்கள் எப்படி இங்க இந்த வேலைக்கு அது பெரிய கதை வா என கூட்டிக்கொண்டு போனா இங்க இரு......... சாப்பிட்ட நீயா? ஓம் சாப்பிட்ட நான் சரி பிளேன் டி குடி இல்ல அக்கா வேணாம் தம்பி ஒரு பிளேன் டீ போடு அக்கா காசை எடுத்துவர போனா வேலைக்கு கொண்டு வரும் பையை எடுக்க‌ அதிலதான் காசு வைத்திருந்தா அப்போது சிற்றுண்டி சாலைக்கு முன்னால் உள்ள சிறிய கோவிலில் பதறி விழுந்து ஒருவன் ஓடி வந்து நீயெல்லாம் கடவுளே இல்லை உன்னை நான் கும்பிட்டிருக்கவே கூடாது என்றான் உறவினர் யாரோ இறந்திருப்பார்கள் போல இன்னொருவன் வந்து விழுந்து வணங்கினான் ஆண்டவரே உனக்கு நன்றியப்பா என் வாழ் நாள் உனக்காகவே என்றான் பாவம் கடவுள் எவ்வளவு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. கல்லாகவே இருப்பது கடவுளுக்கு நல்லது என என் மனதுக்குள் தோன்ற அக்கா ஓடி வந்தா என்ன குடிச்ச நீயோ ஓம் குடிச்சன் இங்க நல்ல புதுனம் பார்க்கலாமே அக்கா இங்க நேரம் போறதே தெரியுறல்ல கடைக்கார தம்பி இந்தா 20 ரூபா அக்கா கடை பக்கமே வாரல்ல போல இப்ப பிளேண்டீ 25 ரூபா ஓ அப்படியா சரி அஞ்சு ரூபா பிறகு தாரன் கடைக்கு வார ஆட்கள் இதயே சொல்லுங்க‌ இப்ப எல்லாம் விலை கூடிப்போச்சு அக்காவுக்கு தெரியாதே என்று கேட்டான் அந்த சிற்றுண்டிச்சாலை தம்பி அக்கா இத கொடுங்க நான் கூட வேலையில் இருந்து விலகித்தான் ஆஸ்பத்திரிக்கு வந்த நான் காய்ச்சலுக்கு லீவு கேட்ட நான் கணக்க முடிச்சு துரட்டிட்டாரு அக்கா இந்தா கையில இருக்கு 10000 ரூபா பார்த்தியா நம்ம சனத்தா ஓம் அக்கா உலகமே அப்படித்தானே இயங்குது ஓம் ஓம் பறவாயில்ல நீ வச்சுக்க ................. சரி குழுசையை காட்டு இந்தா பாருங்க உங்களுக்கு தெரியாத குழுசையா என்ன‌ ?? இந்த பவர் கூடுன குழுசைகளை விழுங்காமல் நல்ல ஊறல் பைய வாங்கு ஊறல் போட்டு குடி அது உடம்புக்கும் நல்லது பச்சை தண்ணியில அளையாமலும் இரு ம் சரி அக்கா என்ன நடந்த? அந்த கதைகளை விடு அதைப்பேசி பலன் இல்லை என மறுத்துவிட்டார் இஞ்ச பாரு என முகத்தை காட்டுனா முகம் ஒரு பக்கமாக தீ காயம் ஏற்பட்டு கழுத்து வரை நீண்டு இருந்தது. நீங்க மருத்துவ பிரிவிலிருக்கும் போது பார்த்தது அக்கா ம் நம்மட பிள்ளைகள் எல்லாம் போயிட்டுது நான் மட்டும் தான் அந்த ஷெல் தாக்குதல்ல காயப்பட்டு வந்த நான் ஊருக்கு எங்கயும் போக முடியல. போனாலும் பிரச்சினை இப்ப இங்கதான் ஒரு பிள்ளை படிக்குது அவரும் இறந்து போனார் ஓ அப்படியா? அதுதான் இந்த வேலையில சேர்ந்த நான் சாப்பாடு இங்க கிடைக்கும் அந்த செலவு மிச்சம் பிள்ளைக்கு படிப்புக்கு மட்டும் காசு............... ம் அக்கா இப்ப முன்னாள் போராளிகளுக்கு கனபேர் உதவி செய்யுறாங்க தானே அக்கா ம் செய்யுறாங்க ஆனால்???? அவங்க போண் நம்பற எடுத்து நமக்கு நீங்க போராளிதானா என பரீட்சை வைத்து பார்த்து உதவி செய்யுறதுல பல மாதம் போய் விடுகிறது தம்பி.............. ஓம் அக்கா நானும் கூட யாரிட்டயும் சொல்கிறதில்லை கடந்த காலத்தை . சரி சாப்பாடு ஒன்று கட்டித்தருகிறேன் கொண்டு போய் சாப்பிடு இங்க ஆஸ்பத்திரி சாப்பாடு என்று யாரும் பெரிதாக சாப்பிடமாட்டார்கள் சாப்பாடு இருக்கு கோழிகறி இன்றைக்கு என அக்கா சாப்பாடு எடுக்க போனா கையில் இருந்த அந்த 10000 ரூபாவை அவ பையில் அவக்கு தெரியாமல் வைத்துவிட்டு இருந்தேன் .அக்கா பொலித்தீன் பையையினுள் சாப்பாடு இட்டு தந்தா நானும் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன் திடிரெனா யாரோ அதட்டி எழுப்புவது தெரிந்தது கோழி சாப்பிட்டு கோவிலுக்கு முன்ன உறங்க கடவுள் கோபித்து விட்டாரோ அவர்தான் அதட்டி எழுப்புகிறாரோ???? என எழும்ப கோவில் நிர்வாகியாம் இங்க படுக்க கூடாது போங்க என்றார். நானோ அந்த பஸ் நிற்கும் நிறுத்துமிடத்தில் இருக்கையில் அன்றிரவு தூங்க ஆயத்தமாகிறேன் அப்போது அந்த‌ சுவற்றில்............. இதோ கடவுள் வருகிறார் என போஸ்டர் ,இன்னும் பல கோவில்களின் போஸ்டர்கள் ஒட்டி இருந்தது அந்த நிலையத்தில் நான் கூட பயமில்லாமல் தூங்கினேன் நாளை என்னை எழுப்பி விடுவார் என்ற நினைப்பில்... மலிந்து போன கடவுள்களை நோக்கி..................................
  19. ஒரு இராணுவ வீரர் 1,.இராணுவ உடையில் இருக்க வேண்டும் என்பது இல்லை 2,..துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்பது இல்லை 3. களத்தில் நிற்க வேண்டும் என்பது இல்லை 4 .....குளிர் ஊட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு போரை அவர் நினைந்தபடி வழி நடத்த முடியும் 5,.மேலே இலக்கம்,4.இல் சொல்லப்பட்டவர் ஒரு இராணுவ வீரரை விட. மோசமானவர் மிக மிக மோசமானவர் கண்ணுக்கெட்டாத நேரடியாக பார்க்க முடியாத எதிரி. களத்தில் நிற்கும் இராணுவ வீரர்களை கொல்லப்படுவது சரியென்றால். இவர் கொல்லப்படுவது பல பல மடங்குகள் சரியாகும் 6, .மேலே 4. இல சொல்லப்ட்டவர்கள். தான் நீலன,.கதிர்காமர்,. போன்றவர்கள். இவர்கள் இலங்கை அரசுக்கு ஆலோசனைகளையும். பிரச்சாரகர்களையம். தமிழ் மக்களின் உரிமை போருக்கு எதிராக மேற்கொண்டுள்ளார்கள் 7,...தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்களை பெறுத்த வரையிலும் தமிழ் மக்களை பெறுத்த வரையிலும் இவர்கள் இராணுவ உடை அணியாத இராணுவம் தான் 8,....இவர்கள் சிவிலியன்கள். இல்லை இவர்களை சாதாரண குடிமக்கள் என்று கூறக்கூடாது எப்படி கூற முடியும் ??? 9,. இவர்களை கொன்றபடியால். தான் முள்ளிவாய்க்கால் எற்பட்டது என்பது பிற்போக்குத்தானமான கருத்துகள் இவர்கள் உயிர் உடனிருந்தாலும். முள்ளிவாய்க்கால் நடத்திருக்கும். அது அதிக வினைத்திறனுடன். இவரகளின் அலோசனைகளுடன். நடத்திருக்கும்
  20. பட மூலாதாரம்,NETFLIX கட்டுரை தகவல் எழுதியவர், ஜோஸ் லூயிஸ் குயில் குரேரோ பதவி, தி கன்வர்ஷேசன் 18 பிப்ரவரி 2024, 07:40 GMT கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ’. இந்தப் படம், அதீதமான ஒரு சூழ்நிலையில் மக்கள் நரமாமிசம் உண்பதைப் பற்றிப் பேசுகிறது. ஆண்டிஸ் மலைத்தொடரில் விமான விபத்தில் சிக்கிய உருகுவே நாட்டு மக்கள் குழுவின் உண்மைக் கதை அது. அந்தக் குழுவினர், தங்களுடன் பயணித்த தோழர்களின் சடலங்களை உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், படத்தில் வரும் பனிக்கட்டிகளின் பின்னணியில் நமக்குள் நாமே எதிர்கொள்ளும் ஒரு கேள்வியும் எழுகிறது: நாம் எப்போது, எந்த நேரத்தில், மனித மாமிசத்தை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்? ஹோமினிட் ஆகிய நாம், நமது பரிணாம வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில் அதைச் செய்துள்ளோம். ஒரு வேளை, அது அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட தேவையின் காரணமாகக் கூட நாம் அதைச் செய்திருக்கலாம். நரமாமிசம், மனித பரிணாமத்தின் ஒரு பகுதி சுமார் 14.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, கென்யாவில், நம் முன்னோர்கள் ஒருவரை ஒருவர் அறுத்துக் கொன்றனர் என்பதற்கான மிகப் பழமையான ஆதாரம் உள்ளது. கால் முன்னெலும்பில் உள்ள வெட்டுக் குறியின்படி, நம் முன்னோர்கள் ஒருவரை ஒருவர் சாப்பிட்டுள்ளனர். ஆனால், நரமாமிதத்தைப் பற்றிய மற்றொரு தகவல் என்னவென்றால், இந்தப் பழக்கம், தென்னாப்பிரிக்காவில் ப்ளியோ-ப்ளீஸ்டோசீன் காலத்தில், அதாவது சுமார் 25 முதல் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த பழைய மனித இனத்திடமிருந்து வந்திருக்கலாம். இவர்களைத் தொடர்ந்து, பெரும்பாலான ஹோமினிட் இனத்தினர் (மனிதர்களை உள்ளடக்கிய குரங்குகளின் பரிணாமக் குடும்பம்), அடாபுர்காவின் ஹோமோ முன்னோர்கள் முதல், நியண்டர்தால்கள் முதல் வெவ்வேறு ஹோமோ சேபியன்ஸ் சமூகங்கள் வரை அனைவரும் நரமாமிசம் உண்டவர்கள் எனத் தெரிகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் கொலம்பஸ் பார்த்த முதல் பழங்குடியினர் நரமாமிசம் உண்பவர்கள் என்பதற்காக சான்றுகள் உள்ளன. சில பசிபிக் தீவுகள் உட்பட பிற புவியியல் பகுதிகளில், நரமாமிசம் சமீப காலம் வரை நடைமுறையில் இருந்தள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் கொலம்பஸ் பார்த்த முதல் பழங்குடியினர் நரமாமிசம் உண்பவர்கள் என்பதற்காக சான்றுகள் உள்ளன ‘நாம் வேட்டையாடுபவர்களாக இருந்தபோது நிறைய கொழுப்பு தேவைப்பட்டது’ நம்முடைய இனங்கள் மற்றும் நமக்கு முந்தைய உறவினர்கள், எந்த வகையான வாழ்விடத்திலும் வாழ பழகிக்கொள்ள வேண்டி இருந்தது. அந்தத் தன்மை, நமது உணவு முறையில் ஒரு தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பூமியின் துருவப் பகுதிகளில் உறைபனிக்காலங்களில், அப்பகுதியில் உள்ள விலங்குகள் உண்ணும் உணவின் விகிதம், வெப்பமான பகுதிகளில் இருக்கும் விலங்குகளின் உண்ணும் உணவின் விகிதத்த விட அதிகமாக இருந்தது. மேலும், அங்கு வாழ்வதற்கான முக்கிய ஆற்றலாக, விலங்கின் கொழுப்பு இருந்தது. இதற்கு மாறாக, தென் பிராந்தியங்களில், கார்போஹைட்ரேட் நிறைந்த தாவர உணவுகள் அதிகம் உண்ணப்படும். இதில், கொழுப்பைச் சார்ந்திருப்பது எப்போதும் இருந்து வந்துள்ளது. மற்ற காரணங்களுக்கிடையில், ஓமேகா-3 மற்றும் ஓமேகா-6 கொழுப்பு அமிலங்களை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், இது, தற்கால மனிதர்கள் உள்ளிட்ட ஹோமினிட்களுக்கு மூளையின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமாகிறது. உண்மையில், ஒமேகா-3 இன் குறைபாடு பல்வேறு நோய் தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES குதிரைகள் மற்றும் யானைகள் மான்களை விட அதிக ஓமேகா-3 ஐ கொண்டுள்ளன எளிய வயிற்றைக் கொண்ட பாலூட்டிகளில் (ஹோமினிட்கள், குதிரைகள், கரடிகள், யானைகள் மற்றும் மாமத்கள்) ஒமேகா-3 நிறைந்த தோலடி கொழுப்பு உள்ளது. மாறாக, சிக்கலான செரிமான அமைப்பு அல்லது ரூமினன்ட்கள் (ஆடுகள், கலைமான், மான் மற்றும் காட்டெருமை) கொண்ட விலங்குகளின் உடல்களில் உள்ள கொழுப்பில், இந்த வகை கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. இதிலிருந்து நமது முன்னோர்களின் ஊட்டச்சத்து நிலை பெரும்பாலும் அவர்களின் இரையின் தேர்வைப் பொறுத்தது. கற்கால ஹோமினிட்கள், வாழ்வாதாரத்திற்காக ஒரு சில வகையான விலங்குகளை நெருக்கமாகச் சார்ந்திருந்தனர் என்பதையும், தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததையும் நாம் அறிவோம். ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்த இரை அதிகமாகக் கிடைக்காதபோது என்ன நடந்தது? பதில்: ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஒத்த வளங்கள் போன்ற ஒமேகா-3 இன் பிற தாவர ஆதாரங்களை நம்பியிருந்திருக்கலாம். இருப்பினும், யூரேசியாவில், நீண்ட பனிக் குளிர்காலத்தில், தாவர வளங்களும் பற்றாக்குறையாகவே இருந்தன. இது ஒமேகா-3 குறைபாடு நோய்கள் அடிக்கடி வெளிப்படுவதற்கு காரணமாக இருந்திருக்கும், எனவே நீண்டகாலத்தில் ஹோமினிட் குழுவின் பரிணாம வளர்ச்சி சமரசம் செய்யப்பட்டிருக்கும். ஓமேகா-3 குறைபாடுக்கும் நரமாமிசத்திற்கும் என்ன தொடர்பு? இந்த அனைத்து காரணங்களுக்காகவும், யூரேசியாவில், கற்காலத்தில், மாமிச உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதுவும், குறிப்பாக, பனிக்காலங்களில், மனிதர்கள் அவற்றையே நம்பியிருந்தனர். கார்போஹைட்ரேட்டுகளின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, விலங்குகளின் கொழுப்பை உண்பதன் மூலம் தேவையான ஆற்றல் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். இந்த விலங்கின் கொழுப்பு, ஒரே நேரத்தில், தேவையான ஆற்றல், ஒமேகா-3, மற்றும் ஒமேகா-6 ஆகியவற்றையும் வழங்கியது. இருப்பினும், வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில், ஹோமினிட்கள், அதிக இரைப்பை கொண்ட விலங்குகளை சர்ந்திருந்தனர். ஆனால், அவற்றில் தேவையான, ஒமேகா-3 இல்லை. இத்தகைய கடினமான சூழலில், ஹேமினிட்கள், ஒருவரையொருவர் சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டது. அது ஒமேகா-3 அளவை அவர்களுக்கு கூடுதலாக வழங்கியது. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, நியண்டர்தால்களும் நவீன மனிதர்களும் ஒருவரையொருவர் வேட்டையாடி சாப்பிட்டிருக்கலாம், அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்த ஹோமினிட்கள் ஒருவரையொருவர் சாப்பிட்டிருக்கலாம். உண்மையில், இந்தச் சூழ்நிலையில் மிகவும் சுவையான ஒன்றாக ஹோமினிட்களின் மூளை இருந்திருக்கக்கூடும். அளவில் பெரிதாக இருந்த அது, தேவையான டி.எச்.ஏ-வை வழங்கியிருக்கக்கூடும். இது ஒரு வகை ஒமேகா -3 கொழுப்பு அமிலமாகும். எனவே, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நரமாமிசம் உண்ணப்பட்டிருக்கக் கூடியதன் சாத்தியத்தை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றே தோன்றுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பூமியின் எல்லா பகுதியிலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் இருந்ததா? கற்கால யூரேசியாவில் ஒமேகா-3 அமிலத்தின் தேவைக்காக மனிதர்கள் நரமாமிசம் உண்டனர். சரி. ஆனால் ஒமேகா-3 அமிலங்கள் அதிகமாகக் கிடைத்த பிற சூழல்களிலும் நரமாமிசம் உண்ணப்பட்டிருக்குமா? ஆம் என்பதே பதில். பூமியின் தெற்குப் பகுதிகளில் ஒமேகா-3 அமிலங்களின் மூலங்களை அதிக அளவில் கிடைத்தாலும், மீன் அல்லது கொட்டைகள் போன்ற அமிலங்கள் நிறைந்த உணவுகள் எப்போதும் சரியான அளவில் கிடைத்திருக்காது. ஊட்டச்சத்து மூலம் என்ற வகையிலும், எளிதில் பெறக்கூடிய ஒரு உணவு என்ற வகையிலும் மனித உடல் இருந்ததால், நரமாமிசம் உண்ணும் வழக்கம் எப்போதும் ஹோமினிட்களின் உயிர்வாழ்விற்கு பரிணாம ரீதியாகச் சாதகமாகவே இருந்திருக்கும். ஆனால், இதனால் நாம் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு சார்ந்த இனம் என்பது பொருளல்ல. மாறாக நாம் ‘நிபந்தனைகள் சார்ந்து வன்முறையாக’ இருந்திருக்கிறோம். அதாவது, கிடைக்கக்கூடிய ஆதாரங்களைப் பொறுத்து நமது நடத்தை மாறியிருக்க வேண்டும். அடுத்த முறை நீங்கள் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்று, மீன், வால்நட், அல்லது ஆளி எண்ணெய் போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் உட்பட பல்வேறு வகையான உணவுகளைப் பார்க்கும்போது, நம் முன்னோர்களின் வள பற்றாக்குறையின் நீண்ட வரலாற்றை சில நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். * ஜோஸ் லூயிஸ் குயில் குரேரோ, அல்மேரியா பல்கலைக்கழகத்தில் உணவு தொழில்நுட்பப் பேராசிரியராக உள்ளார். https://www.virakesari.lk/article/176674
  21. வேடிக்கை என்னவென்றால்.. வகுப்பறையில் ஆசிரியைகளை ஏற்றுக் கொள்ளும் மாணவர்களும் பெற்றோரும்.. அதிபர் அலுவலகத்தில் ஒரு ஆசிரியையை ஏற்றுக் கொள்ள தயங்குவது எங்கேயோ இடிக்குதே..?! எல்லாம் குத்தியரின் திருவிளையாடலாகத்தான் இருக்கும். தனக்கு வேண்டியவரை உள்ள போட.. இப்படி புரளியை கிளப்பி விட்டிருப்பார். அவர் பெயருக்குத்தான் மீன்பிடி அமைச்சர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை முடிசூடா சுயம்பு மன்னன். எல்லாத்துக்குள்ளும் தன் மூக்கை நுழைப்பதே அவரின் கொள்கை. இதனால் தான் முன்னர் அடிவாங்கிக் கொண்டு ஹிந்தியாவுக்கு ஓடினவர்.
  22. கிறிஸ்தவ மிசனரிகளின் ஆதிக்கம் தான் ஆண்கள் தலைமைத்துவப் பாடசாலைகளின் பெருக்கத்திற்கு அடிகோள். யாழ் மத்திய கல்லூரி கிறிஸ்தவ மிசனரி வழி வந்த ஒன்று. ஆனாலும் அங்கு ஆரம்பப் பிரிவு கலப்பு தான். மேலும் யாழ் மத்திய கல்லூரியில் பெருமளவிலான ஆசிரியைகள் பன்னெடுங்காலமாக.. மகத்தான சேவை ஆற்றி இருக்கினம்... சேவை ஆற்றிக் கொண்டும் இருக்கினம். அந்த வகையில் கல்லூரியின் தனித்துவத்தையும் கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் முன்னேற்றங்களையும் மற்றும் மாணவர்களை நல்ல சமூகப் பிரஜைகளாவும் ஆக்கக் கூடிய எவரும் அதிபர் பதவியில் அமர்வதில் சிக்கலில்லை. ஏனெனில் கல்லூரி இப்போ கிறிஸ்தவ மிசனரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியில்.. ஒரே ஒரு பெண் ஆசிரியை தான் இருந்தார். ஆனால்.. இப்போ சரி பாதி பெண் ஆசிரியைகள். மேலும் இலங்கையின் நிர்வாகம் மற்றும் கல்வித்துறையில் பெண்களே அதிகம். வீட்டில் அம்மா செல்லமெல்லாம்.. இந்த பெண் அதிபர் நியமனத்தை ஏற்றுக் கொண்டு.. போய் படிக்கிற வேலையை பாருங்க. தேவை தரமான கல்வி... உயர்ந்த ஒழுக்கம்.. ஓயாத விளையாட்டு... யாழ் மத்தியின் மைந்தனாகவும் இருந்த ஒருவனாக இக்கருத்தைச் சொல்வதில் பெருமைபட முடிகிறது. விடாப்பிடியாக.. என்னை யாழ் மத்திய கல்லூரிக்கு அழைத்துச் சென்று சேர்ப்பித்ததே என் அம்மா. போர்ச் சூழல் கருதி... இடை நடுவில் யாழ் இந்துவுக்கு பாய்ந்தது வேறு விடயம்.
  23. ஜஸ்ரின், ஐலன்ட், கப்பித்தான் உங்கள் கருத்திற்கு நன்றி.
  24. JVP வென்றாலும் ...இந்தியாவை எதிர்க்கும் சக்தி சிங்களவரிடம் உண்டு ....இந்தியா ஜனநாயக முறைப்படி சிறிலங்காவின் ராஜதந்திர நகர்வுகளை வெற்றி கொள்வார்களோ தெரியவில்லை.......சில சமயம் மறைமுக வன் முறைகளை பாவித்து சிங்களவரின் ராஜதந்திரத்தை தோற்கடிப்பார்கள்... மேலும் மோடியின் ஆட்சி நிலைத்து நிற்பதை சிறிலங்காவும் ,அமேரிக்கவும் விரும்பவில்லை முக்கியமாக ரணில் ....இந்தியாவில் ஆட்சி மாற்றம் இந்த வருட தேர்தலில் ஏற்படின்...பல மாற்றங்கள் சிறிலங்காவில் ஏற்படலாம்.... இந்தியாவின் தேர்தல் நிலமையை பார்த்து சிறிலங்கா தேர்தலை வைக்கும்... ராகுல் காந்தி ஆட்சி,அல்லது சிறுபான்மை ஆட்சி இந்தியாவில் அமைந்தால் ...ரணில் ,ராஜபக்சா மற்றும் ஏனைய கட்சிகள் மகிழ்ச்சி யடைவார்கள் ,சீனா,அமெரிக்கா போன்ற நாடுளும்...
  25. சுவாரசியமான கட்டுரை. ஆனால் நரமாமிசம் உண்ணும் பழக்கம் வழக்கொழிந்தமைக்கான ஒரு முக்கியமான காரணத்தைத் தவற விட்டிருக்கிறார்கள். Prions எனப் படும் புரத மூலக் கூறுகளால் ஏற்படும் நோய்கள் நரமாமிசம் உண்பதால் உருவாகும் தீமைகளில் முக்கியமானது. பபுவா நியுகினி, இந்தோனேசியாவுக்கு அருகில் இருக்கிறது. அங்கே வாழும் பழங்குடியினர் நரமாமிசம் சாப்பிடுவதை நவீன காலத்திலும் ஒரு சடங்காகச் செய்து வந்தனர். அவர்களிடையே குணப் படுத்த இயலாத CJD (Kuru) எனப் படும் ஒரு மூளை நோய் தீவிரமாகப் பரவ இந்த நரமாமிசம் காரணமாக இருக்கிறது. இது போன்ற நோய்களால், முன்னோர் விழிப்படைந்து நரமாமிசம் உண்பதைக் கை விட்டிருக்கலாம்.
  26. நன்னி, இப்போதுதான் முகமூடிகளுக்கு பின்னாலுள்ள முகங்கள் எட்டிப்பார்க்கின்றன! அவர்களுக்கு சிங்குச்சா அடிக்க, முண்டுகொடுக்க எத்தனைபேர்!! விசுகர் இவர் யாரென்று தெரிகிறதா? இப்படியான களைகளை அழிக்காமல் மனிதாபிமானமாக அகன்றுவிடச்சொன்னதால் வந்த விளைவுதான் முள்ளிவாய்க்கால்!
  27. எனக்கும் புதிதாகத் தான் இருக்கிறது. தேடிப் பார்க்கிறேன். ஆனால், இந்தத் திரியில் பல தவறான தகவல்களைப் பரப்பித் தான் இந்தக் கொலைகளை மிகப் பிரயத்தனப் பட்டு நியாயப் படுத்த வேண்டியிருக்கிற நிலையை அவதானிக்கிறேன். உதாரணமாக யோகேஸ்வரன் கொலை: கொலை நடந்த காலப் பகுதியில் செய்திப் பத்திரிகை வாசித்தோருக்குபுரிந்த தகவல், யோகேஸ்வரன் தான் அமிர், சிவசிதம்பரம் ஆகியோரை புலிகளின் ஆயுதக் குழு சந்திக்க ஏற்பாடு செய்தார். வந்தவர்களை பரிசோதிக்காமல் உள்ளே விடும் படி கோரியதும் அவரே. உள்ளே வந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் அமிரைச் சுட்ட போது குறுக்கே சென்று தடுக்க முயன்ற யோகேஸ்வரனும் சுடப் பட்டார். ஆனால் இப்ப புதுக் கதை என்னவென்றால் யோகேஸ்வரன் "1000 பேரைக் தந்தால் ஈழம் எடுத்துத் தாறன்" என்றி விட்டு, பின்னர் அரசோடு சேர்ந்தியங்கமையால் சுடப் பட்டார். இப்படிப் பல திரித்த கதைகள், அவற்றை நம்பவும் ஆட்கள் 😂 ! நல்ல வேளையாக எங்களிடம் இப்ப ஆயுத தாரிகள் இல்லை. இருந்திருந்தால், என்னையும் உங்களையும் கூட "வேள்விக்கு" கொண்டு போக ஆட்கள் வந்திருப்பர்!
  28. நீங்கள் இதை சொல்கிறீர்களா? உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளமேறி ரொம்ப நாளாச்சே! நெற்கதிர் வளரவேண்டுமென்றால் களைகள் அழிக்கப்பட அல்லது அகற்றப்பட வேண்டியவையே!!
  29. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு நாக்கு சொட்ட சமைச்சு நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா குழு : மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன் ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன் குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு..ஹா..ஹா.......! --- மானூத்து மந்தையில --- (எனது அறிவு குறைந்ததற்கு நான் சின்னனில நிறைய ஆட்டுப்பால் குடிச்சதும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று இப்ப தெரியுது).
  30. காரணமின்றி கண்ணீர் வரும் .......! 🙏
  31. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரிய லலித் அதுலத் முதலி மட்டக்களப்பில், கார்த்திகை 30 ஆம் திகதி, படகு ஒன்றில் இருந்து இறங்க எத்தனித்த ஐந்து ஆயுதம் தரித்த போராளிகள் இராணுவத்திற்கு உளவு பார்ப்பவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு, அப்பகுதியில் பதுங்கியிருந்த இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்படகிலிருந்து 10 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளையும் 3,000 தோட்டாக்களையும் இராணுவத்தினர் கைப்பற்றினர். இரண்டாவது படகு இராணுவத்தினரின் தாக்குதலுக்கு மத்தியிலும் தப்பிச் சென்று விட்டது. இராஜாங்க அமைச்சரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் செய்தியாளர் மாநாட்டில் பேசும்போது தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையை ஆக்கிரமிக்க தமிழ்ப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், 1985 ஆம் ஆண்டு தை மாதம் 15 ஆம் திகதி, தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் அன்று தமிழ் ஈழத்திற்கான சுதந்திரப் பிரகடணத்தைச் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும் கூறினார். "அப்படியான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தால் நாம் போருக்குச் செல்வோம்" என்று அவர் முழங்கினார். அல்விஸின் கூற்றிற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததுடன், இலங்கையரசு தேவையற்றவிதமாக போர் உளவியலுக்குள் மக்களை இழுத்துச் செல்வதாகவும் கூறியது. தமிழர்கள் மீது கொடூரமான இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கிலேயே இலங்கையரசு இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறது என்றும் இந்தியா குற்றஞ்சாட்டியது. இந்தியாவின் குற்றச்சாட்டினை லலித் ஏளனம் செய்தார். "தமிழர்களுடன் போருக்குச் செல்வதன் மூலம் நாம் எதனை அடையப் போகிறோம்?. இந்த அரசாங்கத்திற்கு அறுதிப் பெரும்பான்மையிருக்கிறது. அடுத்துவரும் தேர்தல் 1989 இல் தான் நடக்கவிருக்கிறது" என்று கவனமாகப் பேசியிருந்தாலும்கூட, அவரது இந்தப் பேச்சு இந்தியாவை நோக்கித்தான் என்பது புதிரல்ல.ராஜீவ் காந்தியும் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அதற்கான பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தேர்தல்ப் பிரச்சாரங்களில் இலங்கையில் நடைபெற்றுவரும் இன முரண்பாடே முக்கிய பேசுபொருளாக மாறியிருந்தது. இஸ்ரேலிய ஆலோசகர்களுடன் தான் மிகவும் நுணுக்கமாக வகுத்திருந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான சூழலினை லலித் ஏற்படுத்தத் தொடங்கியிருந்தார்.போராளிகளை நோக்கி அவர் விடுத்த எச்சரிக்கையில், "இலங்கைப் படைகள் மீது நீங்கள் நடத்திவரும் பைத்தியக்காரத்தனமானதும், விளைவுகளற்றதுமான‌ தாக்குதல்களை உடனே நிறுத்தி சரணடையுங்கள். அப்படிச் சரணடைந்தால் உங்களுக்கு மன்னிப்பளிக்கப்படும்" என்று கூறியிருந்தார். ஆனால், போராளி அமைப்புக்கள் லலித்தின் எச்சரிக்கையினை நிராகரித்தன. லலித்தின் வேண்டுகோளினை தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்து ஒரு கடிதத்தை புலிகள் அவருக்கு அனுப்பியிருந்தனர். தமிழில் எழுதப்பட்டிருந்த அக்கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. சிங்கள ஆங்கில ஊடகங்கள் புலிகளின் கடிதத்தை முற்றாகவே புறக்கணித்திருந்தன. யாழ்ப்பாணப் பத்திரிக்கைகள் அக்கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அக்கடிதத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் பின்வருமாறு, அன்பான திரு அதுலத் முதலிக்கு, நீங்கள் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக இனவாத யுத்தம் ஒன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறீர்கள். இந்த யுத்தத்தில் கொடூரமானவனான ஹிட்லரையும் நீங்கள் மிஞ்சி விட்டீர்கள். தமிழ் இனத்தை இரத்தமும் கண்ணீரும் சிந்தவைத்து பெரும் பாவத்தையும், குற்றவுணர்ச்சியையும் உங்கள் தலைகளில் சுமந்துவருகிறீர்கள். நீங்கள் செய்துவரும் கொடூரங்கள் சரித்திரம் காணாதவை. எங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனால், எமது போராட்டம் என்பது அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் ஆயுத ரீதியிலான எதிர்ப்பு மட்டுமே. உங்களின் அரச பயங்கரவாதத்தின் விளைவான பிள்ளையே நாம் போராடிப் பெறவிருக்கும் தமிழ் ஈழமாகும். அதன் உருவாக்கத்திற்கு நீங்களே பொறுப்பானவர்கள். அதனை இராணுவ அடக்குமுறை மூலம் நீங்கள் தடுத்து நிறுத்திவிட முடியாது. எங்களைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதன் மூலமும் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை. இராணுவ ரீதியிலான உங்களின் முன்னெடுப்புக்கள் உங்களுக்கு அழிவுகளை மட்டுமே கொண்டுவரப்போகின்றன. எங்களை அடையாளம் காண்பதோ, அழிப்பது உங்களால் இயலாத காரியம். நாங்கள் எங்கும் பரந்திருக்கிறோம்.குறிப்பாகச் சொல்லப்போனால் நாங்களே மக்கள். பலம் பொறுந்திய நாடுகளே மக்கள் எழுச்சிக்கு முன்னால் தோற்றுப்போன வரலாறுகள் எம் முன்னால் இருக்கின்றன. மக்களின் உண்மையான விருப்பினை அழித்து வெற்றிகொண்ட அரசுகள் கிடையாது. எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை அடைவதில் நாம் உறுதிபூண்டு நிற்கிறோம். எத்தடைகள் வரினும், எவ்வகையான தியாக‌ங்கங்களைச் செய்தாவது எமது இலட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று நாம் உறுதி பூண்டிருக்கிறோம். உலக மக்களின் மனச்சாட்சியின் முன்னால் நீங்களே உங்கள் குற்றங்களுக்காக குற்றவாளியாக ஆடையாளம் காணப்படுவீர்கள். என்று கூறப்பட்டிருந்தது. புலிகளின் கடிதத்திற்கு காரசாரமான பதிலை லலித் வழங்கினார். தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகள் இலங்கையை ஆக்கிரமிக்க எடுத்துவரும் நடவடிக்கையினைத் தடுத்து இலங்கையின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் காக்கவே தான் பாடுபடுவதாக அவர் தெரிவித்தார். உடனடியாக இரண்டு வகை அவசரகால திட்டங்களை அவர் வெளியிட்டார். முதலாவது கடல்ப்பரப்பினைப் போராளிகள் பாவிப்பதனைத் தடை செய்வது. இரண்டாவது புலிகள் கூறிய "நாமே மக்கள்" எனும் பதத்திற்கான எதிர்வினையினை வழங்குவது. கார்த்திகை 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அதுலத் முதலி மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான கடற்பிரதேசம் மக்கள் செல்ல முடியாத பகுதியென்று அறிவிக்கப்படுவதுடன் இப்பகுதியில் கடற்றொழிலிலோ அல்லது போக்குவரத்திலோ ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் தரைமூலம் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பிரதேசங்கள் குறித்தும் அறிவித்தார். இப்பிரதேசங்களில் தனியார் வாகனங்களான பஸ்வண்டிகள், மோட்டார் வண்டிகள், மோட்டா சைக்கிள்கள், பாரவூர்திகள், உழவு இயந்திரங்கள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றில் பயணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். அரச பேரூந்துக்கள் மட்டுமே இப்பிரதேசத்திற்கு வரமுடியும் என்றும், அவை கூட ஒரு நாளை 2 மணிநேரத்திற்கு மேல் இப்பகுதிகளுக்குள் நிற்கமுடியாதென்றும் கூறினார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ இதுகுறித்து எழுதுகையில் "கொடூரமான அப்பயங்கரவாதிகள் இனி என்ன செய்யவிருக்கிறார்கள்? முச்சக்கர சைக்கிள் வண்டிகளில் பயணம் செய்வார்களோ? கடைசியாக முச்சக்கர சைக்கிள்களும் தடைசெய்யப்படுமோ? பயங்கரவாதிகள் சிலர் சைக்கிள்களைப் பாவித்ததால் சைக்கிள்கள் தடைசெய்யப்படுகின்றவென்றால், சில மக்கள் பாலியலில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக உடலுறவையும் தடைசெய்துவிடுவார்களோ? என்று கேள்வி எழுப்பியிருந்தது. மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான கரையோரப் பிரதேசம் பாராளுமன்றத்தில் தனது உரையினை நிறைவுசெய்கையில் லலித் அதுலத் முதலி யாழ்ப்பாண மக்களுக்கு அறிவித்தல் ஒன்றினை விடுத்தார். அதுதான் யாழ்க்குடாநாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள் என்பது. யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள உறவினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ விடுமுறையினைக் கழிப்பதற்கு யாழ்ப்பாண மக்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டால் பயங்கரவாதிகளுக்கு உதவுவது யார், எதிர்ப்பவர் யாரென்பதைக் கண்டறிவது இராணுவத்தினருக்கு இலகுவானதாக இருக்கும் அன்று அவர் கூறினார். எனக்கும் அந்த அறிவித்தல் வந்தபோது நான் கடும் அதிர்ச்சியடைந்தேன், இதனை என்னால் நம்பவே முடியவில்லை. மறுநாள் காலை 5:30 மணிக்கு லலித்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட நான் அவரது இந்த அறிவித்தலுக்கெதிராக அவரிடம் முறைப்பாடு செய்தேன். எனது தந்தையார், சகோதரி மற்றும் அவரது குடும்பம், எனது மாமியார், மைத்துனி மற்றும் எனது நெருங்கிய உறவினர்களையெல்லாம் என்ன செய்வது என்று அவரைக் கேட்டேன். தமிழர்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளால் தான் மூழ்கிவிட்டதாகத் தெரிவித்த லலித், பயங்கரவாதிகளைப் புறக்கணிக்க யாழ்ப்பாணத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலினை செய்கிறது என்று ஒரு செய்தியைப் போடுங்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். மேலும், இச்செய்தியைத் தன்னுடன் எந்தவிதத்திலும் தொடர்புபட்டதாகக் காட்டவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
  32. நிஜமாகவே சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ....... யாழ்ப்பாணத்தில் மக்களைவிடவும் கூடுதலாக முப்படைகளும் இருக்கு ......சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஏனைய இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்........இதைவிட வேறு என்னத்தை சொல்வதற்கு இருக்கு.......!
  33. சாவகச்சேரி தாக்குதல் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 1984 ஆம் ஆண்டென்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட முக்கியமான திருப்புமுனை என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த அத்தியாயத்தில் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமங்கள் அவர்களை அரசிடமிருந்து அந்நியப்பட வைத்திருந்தது என்று எழுதியிருந்தேன். தனக்கு எதிரானவர்களை, அவர்கள் தமிழர்களாகவோ அல்லது சிங்களவர்களாகவோ இருந்தாலென்ன, முற்றாக அழித்துவிடுவது எனும் ஜெயாரின் கொள்கையும், எதிர்த்தோரைப் பழிவாங்கும் அவரது இயல்பான குணமும், இஸ்ரேலிய அதிகாரிகளின் ஆலோசனைப்படி தமிழர்களின் பாரம்பரிய வாழிடங்களிலிருந்து அவர்களை அச்சுருத்தி அகற்றிவிட்டு அப்பிரதேசங்களில் இராணுவ ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியும், தனது படைகள் மீதான தாக்குதலுக்கு தமிழ் மக்கள் மீது பழிவாங்கல்த் தாக்குதல்களைச் சரியென்று நிறுவியும் வந்த லலித் அதுலத் முதலியின் கொடுங்கரமும் தமிழர்களை போராளிகளின் பின்னால், குறிப்பாக புலிகளின் பின்னால் அணிதிரள வைத்திருந்தது. இந்த அத்தியாயத்தில் அதன் அடுத்த கட்டமான பிரதேசங்களை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது முதல் தனிநாட்டிற்கான அடிப்படைக் கட்டுமாணங்களை புலிகள் உருவாக்கியது வரையான விடயங்களைப் பார்க்கலாம். அடுத்துவரும் அத்தியாயங்களில் புலிகள் இராணுவ நிர்வாகக் கட்டமைப்புக்கள் பற்றி பார்க்கலாம். அந்த அத்தியாயத்தில் பிரபாகரன் எனும் மேதையின் செயற்றிறனும் ஏனைய நான்கு போராளி அமைப்புக்களிடமிருந்து புலிகளை அவர் எவ்வாறு விதிவிலக்காக்கி வழிநடத்திச் சென்று ஈற்றில் 1987 ஆம் ஆண்டு ஒற்றை அமைப்பாக, தமிழ் மக்களின் நம்பிக்கையாக புலிகளை எவ்வாறு மாற்றினார் என்பதையும் பார்க்கலாம். வேலுப்பிள்ளை பிரபாகரன் அதன்பின்னர் எழுதப்படும் கதை பிரபாகரனினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கதையாகவே அமையும். ஏனைய போராளி அமைப்புக்கள் வினைத்திறன் அற்ற வெற்று ஆமைப்புக்களாகவும் இன்னும் சில சிங்கள அரசாங்கத்தின் கருவிகளாகவும் மாறிப்போனார்கள். தமிழ் மக்கள், ஏறக்குறைய அனைவருமே பிரபாகரன் மீதும் புலிகள் மீதும் தமது முழு நம்பிக்கையினையும், விசுவாசத்தையும் வைத்தார்கள். இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. தமிழ் மக்கள் பிரபாகரனின் பின்னாலும், புலிகளின் பின்னாலும் உறுதியாக அணிவகுத்து நிற்கிறார்கள். மேலும் கருணா மற்றும் அவர் போன்றவர்களைப் பயன்படுத்தி அரசாங்கம் பிரபாகரனை பலவீனப்படுத்தி தோற்கடிக்க எடுத்த முயற்சிகள் அவர்களின் நோக்கத்திற்கு எதிராகவே அமைந்தன என்பதையும் என்னால் கூறமுடியும். இவர்களின் முயற்சிகளுக்கு மத்தியிலிருந்து தமிழர்களின் ஒற்றுமையின் அடையாளமாக பிரபாகரன் வெளித்தெரிந்தார். பிரபாகரனைப் பலவீனப்படுத்தித் தோற்கடிக்க அரசாங்கமும் அதன் தமிழ்க் கருவிகளும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் உரிமைகளை கொடுக்க மறுக்கும் கைங்கரியங்கள்தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட தமிழ் மக்கள் அவர்பின்னால் அணிதிரண்டார்கள். தமது சுய கெளரவமும், மரியாதையும், கண்ணியமும் பிரபாகரனின் இராணுவ வல்லமையிலேயே முற்றாகத் தங்கியிருப்பதை அவர்கள் முற்றாக உணர்ந்தார்கள். இந்திய ரோ வின் அழுத்தத்தினால் ஈரோஸ் அமைப்பினர் ஐப்பசி 22 ஆம் திகதி போரினை கொழும்பிற்குக் கொண்டுவந்திருந்தார்கள். தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் ஜெயாருக்கும் லலித் அதுலத் முதலிக்கும் கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்திருந்தன. அவர்கள் சிங்களவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். தமிழர்களை அடக்கியாள அவர்கள் அதுவரை வைத்திருந்த "இனக்கலவரம்" எனும் ஆயுதத்தையும் இழந்து நிர்க்கதி நிலைக்கு கீழிறக்கப்பட்டிருந்தார்கள். ஐப்பசி 27 ஆம் திகதி கொழும்பிற்கு விஜயம் செய்த அமெரிக்க செயலாளர் ரிச்சேர்ட் மேர்பியின் மூலம் ஜெயார் தேடிக்கொண்டிருந்த ஆறுதல் அவருக்குக் கிடைத்தது. "இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வென்பது எவ்வளவு அவசியமோ, அதேயளவு அவசியமானது அத்தீர்வு வெளியாரின் தலையீடுகள் இன்றி அமைவது" என்று மேர்பி கூறியிருந்தார். 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் திகதி கொல்லப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்காகத் தமிழ் மக்கள் இரங்கினார்கள். பிரபாகரனும் ஏனைய அமைப்புக்களின் தலைவர்களும் தமது இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்கள். இந்திரா காந்தியை "அன்னை இந்திரா" என்று விளித்து பிரபாகரன் தனது இரங்கல் உரையினை வெளியிட்டிருந்தார். இந்திராவின் மறைவிற்குப் பின்னர் அவரது மகனான ரஜீவ் காந்தி கார்த்திகை 1 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி புலிகள் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தியே வந்தார்கள். ரஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நாள் இரவே அச்சுவேலி - வசாவிளான் வீதியில் பயணித்த இராணுவக் கவச வாகனத்தைக் குறிவைத்து கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றினை அவர்கள் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 9 இராணுவத்தினர் பலியானதுடன் இன்னும் மூவர் காயமடைந்தனர். மறுநாள், கார்த்திகை 2 ஆம் திகதி தொண்டைமானாறு பலாலி வீதியில் இராணுவக் கவச வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தில் இன்னும் 6 இராணுவத்தினரை அவர்கள் கொன்றனர். பலாலி முகாமிலிருந்து மக்கள் குடியிருப்புக்கள் ஊடாக இரவு வேளைகளில் ரோந்து வரும் இராணுவத் தொடரணியை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் இரண்டும் நடத்தப்பட்டன. தமது பாதுகாப்பிற்காகவும் , பொதுமக்களை அச்சுருத்தி அடிபணியவைக்கும் நோக்கிலும் இராணுவத்தினர் கவச வாகனங்களில் வரிசையாக ரோந்து புரிவதை அப்போது வழமையாகக் கொண்டிருந்தனர். இந்திரா காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட கார்த்திகை 3 ஆம் திகதியை துக்கதினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அன்றும், மறுநாளும் புலிகளும் அமைதி காத்தனர். அதன்பின்னர் அவர்களின் கண்ணிவெடிப் போர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. கார்த்திகை 9 ஆம் திகதி இராணுவம் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலையடுத்து யாழ்ப்பாணம் சந்தைக்குள் நுழைந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது நடத்திய சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட மேலும் பலர் காயமடைந்தனர். இராணுவம் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படவேண்டும் என்கிற இஸ்ரேலின் ஆலோசனைக்கு அமைய "கூட்டுத் தண்டனை" தமிழர்களுக்கு வழங்கப்படத் தொடங்கியது. பண்டிதர் கார்த்திகை 19 ஆம் திகதி இராணுவத்தினர் மீது பாரிய தாக்குதல் ஒன்றினை நடத்தினர். இராணுவத்தின் அதிகாரியான கேணல் ஆரியப்பெரும‌வும் இன்னும் ஏழு சிப்பாய்களும் பயணம் செய்த ஜீப் வண்டி புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. புலிகளின் தாக்குதல்க‌ள் தீவிரமாகக் காணப்பட்ட பருத்தித்துறைப் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் திறமைசாலியான கேணல் ஆரியப்பெருமவை பாதுகாப்பு அமைச்சு தெரிவுசெய்து அனுப்பியிருந்தது. பருத்தித்துறைப் பகுதியிலிருந்து புலிகளை முற்றாக துடைத்தழிப்பதே அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி. ஆனால், புலிகளோ பதிலுக்கு அவரை அழித்துவிட திடசங்கற்பம் பூண்டனர். புலிகளின் வடபகுதித் தளபதியாவிருந்த பண்டிதரை இத்தாக்குதலை நடத்துமாறு பிரபாகரன் பணித்திருந்தார். பண்டிதரும் அவரது உப தளபதியான கிட்டுவும் ஆரியப்பெருமவுக்கான பொறியைத் திட்டமிட்டனர். கட்டுவன் - தெல்லிபழை வீதியில் அமைந்திருந்த கல்வெட்டொன்றினை வேண்டுமெறே தகர்த்த அவர்கள் தெல்லிப்பழை சந்திக்கு அருகில் கண்ணிவெடியொன்றினை புதைத்துவிட்டுக் காத்திருந்தனர். பண்டிதர் எதிர்பார்த்ததைப் போலவே தகர்க்கப்பட்ட கல்வெட்டைப் பார்க்க ஆரியப்பெருமவும் வந்தார், கண்ணிவெடியிலும் அகப்பட்டார். ஒரு ஜீப்பும் இரு கவச வாகனங்களும் கொண்ட இராணுவத் தொடரணியில் ஆரியப்பெரும தெல்லிபழைக்கு வந்தார். தொடரணியின் முன்னால் பயணம் செய்துகொண்டிருந்த ஜீப் வண்டியில் ஆரியப்பெரும பயணித்திருந்தார். ஜீப் வண்டியை இலக்குவைத்து கண்ணிவெடித் தாக்குதலை நடத்திய புலிகள் ஆரியப்பெரும உட்பட எட்டு இராணுவத்தினரைக் கொன்றனர். ஆரியப்பெருமவின் இழப்பு இலங்கை இராணுவத்திற்கு விழுந்த பெரிய அடியாகக் கருதப்பட்டது. அவரது மரணத்தின் பின்னர் அவர் பிரிகேடியர் தரத்திற்கு பதவியுயர்வு பெற்றார். தாக்குதல் நடைபெற்ற தெல்லிப்பழை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் மீது இராணுவத்தினல் காலை 3 மணியிலிருந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடைபெற்றிருக்கொண்டிருந்த வேளையிலேயே அன்றுவரை நடந்த ஆயுதப் போராட்டத்தில் மிகவும் அதிகளவு இழப்புக்களை ஏற்படுத்திய தாக்குதலை டெலோ அமைப்பு நடத்தியது. அன்று பிற்பகல் 2:30 மணிக்கு நன்கு பலப்படுத்தப்பட்டு, காவலுக்கு உட்பட்டிருந்த இருமாடிகளைக் கொண்ட சாவகச்சேரி பொலீஸ் நிலையத்திற்கு 14 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் சென்றான். வாயிலில் காவலுக்கு நின்ற‌ பொலீஸ் காவலாளியிடம் தனது தேசிய அடையாள அட்டை தொலைந்து விட்டதாகவும், ஆகவே அதுகுறித்து முறைப்பாடு ஒன்றினைச் செய்து, இன்னொரு அடையாள அட்டையினைப் பெறவே தான் வந்திருப்பதாகக் கூறினான். மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக தான் காத்திருப்பதால் அடையாள அட்டை மிகவும் அவசியம் என்றும் அவன் கூறவே, போலீஸ் காவலாளியும் கேட்டினைத் திறந்து அவனை உள்ளே அனுமதித்தார். ஏக காலத்தில் பொலீஸ் நிலையத்தின் முன்னால் வந்த உள்ளூரில தயாரிக்கப்பட்ட கவச வாகனத்திலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டே வெளியில் குதித்த நிக்கலஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட நியூட்டன் எனும் போராளி பொலீஸ் நிலையம் நோக்கி ஓடத் தொடங்க அவரைத் தொடர்ந்து மேலும் பல டெலோ போராளிகள் உள்ளே புகுந்தார்கள். கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த நியூட்டன் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். நியூட்டனின் பின்னால் பத்து போராளிகள் சுட்டுக்கொண்டே உள்நுழைய மேலும் 20 போராளிகள் அவர்களைத் தொடர்ந்து உள்நுழைந்து பொலீஸ் நிலையத்தின் ஏனைய பகுதிகள் நோக்கிச் சென்றனர். இராணுவச் சீருடையில் இருந்த அவர்களில் ஒரு பிரிவினர் ஆயுதக் கிடங்கு நோக்கிச் சென்று அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றினர். கட்டிடத்தின் மேற்பகுதியில் அமைந்திருந்த தொலைத் தொடர்பு அறைக்குச் சென்ற ஒரு குழு தொலைத்தொடர்புச் சாதனங்களை அடித்து நொறுக்கியதுடன், பொலீஸாரின் தங்குமிடத்திற்குள் ஒளித்திருந்த பொலீஸாரைச் சுட்டுக் கொன்றனர். டெலோ போராளிகள் கிர்னேட்டுக்களைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட சிறப்புக் கொமாண்டோக்கள் அதிர்ச்சியுற்று சிதறி ஓடத் தொடங்கினர். இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான லொறியைக் கடத்திவைத்திருந்த 3 போராளிகள் அதனுள் வெடிகுண்டுகளை நிரப்பி ஓட்டி வந்தனர். பொலீஸ் நிலைய வளாகத்தின் நடுவில் அந்த லொறியை நிறுத்திவைத்த அவர்கள் அதிலிருந்து தாம் வந்த வானிற்கு வயர்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தினர். சிறிது நேரத்தில் போராளிகளில் ஒருவர் விசில் ஒலியை எழுப்பியதும் உள்ளிருந்த போராளிகள் வெளியேறிவிட பாரிய சத்தத்துடன் லொறிக் குண்டு வெடித்தது. சீமேந்துத் தூண்களினாலும், தகடுகளாலும் பலப்படுத்தப்பட்ட பொலீஸ் நிலையக் கட்டிடம் நொறுங்கி வீழ்ந்தது. தாக்குதல்க் நடத்தப்பட்ட கட்டிடத்தைப் பார்க்கப் பள்ளிச் சிறுவர்கள் வந்திருந்தார்கள். சேதப்படுத்தப்பட்டுக் கிடந்த பல ஆயுதங்களை அவர்கள் பொறுக்கியெடுத்தார்கள். தாக்குதலில் காயத்துடன் உயிர் தப்பிய தமிழ் பொலீஸ் பரிசோதகர் ஒருவர் அச்சூழ்நிலை இதயத்தைப் பிளக்கும் உணர்வைத் தந்ததாகக் கூறினார். அன்றைய தாக்குதலை தமிழ் மாணவர்கள் மகிழ்வுடன் கொண்டாடிய விதத்தினைப் பார்க்கும்போது எவ்வளவு தூரத்திற்கு தமிழ்ச் சமூகம் இலங்கை அரசிடமிருந்தும், சட்டம் ஒழுங்கினைக் காக்கும் இலங்கைப் பொலீஸாரிடமிருந்தும் தம்மை அந்நியப்படுத்திக் கொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். "இலங்கை அரசிடமிருந்தும் அதன் படைகளிடமிருந்தும் தமிழ் மக்கள் முற்றாகப் பிரிந்து சென்றுவிட்டார்கள்" என்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றிற்கு அவர் கூறினார். 24 பொலீஸாரும், உதவிக்கு இருந்த மூன்று சிவிலியன்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். மீதமாயிருந்த பொலீஸாரில் பெரும்பாலானோர் காயமடைந்தனர். மிகவும் திட்டமிட்ட ரீதியில், குறுகிய நேரத்தில் கச்சிதமாக அத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. வெறும் 15 நிமிடத்தில் அனைத்தும் முடிந்திருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து படையணியொன்றினை சாவகச்சேரி நோக்கி இராணுவம் உடனடியாக அனுப்பிவைத்தது. ஆனால், இராணுவம் பொலீஸாருக்கு உதவிக்கு வரும் என்பதை எதிர்பார்த்த டெலோ போராளிகள் கைதடிப் பகுதியில் இராணுவம் மீது கடுமையான தாக்குதல் ஒன்றினை நடத்தினர். கண்ணிவெடிகளை இயக்கிய அதேவேளை கடுமையான துப்பாகித் தாக்குதலையும் அவர்கள் மேற்கொண்டனர். கண்டி வீதியின் இருபக்கத்திலிருந்து தாக்குதல் நடத்திய டெலோ போராளிகள் இராணுவம் மீது சரமாரியாக கிர்ணேட்டுக்களையும் எறிந்து தாக்கினர். டெலோவின் கடுமையான தாக்குலில் குறைந்தது 20 இராணுவத்தினர் கைதடியில் பலியானார்கள். இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட பொலீஸார் மீதும், இராணுவத்தினர் மீதும் தாக்கும் வல்லமையினைப் போராளிகள் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் இத்தாக்குதல் நிரூபித்திருந்தது. இத்தாக்குதலையடுத்து இலங்கையின் வடக்குக் கிழக்கிலும் தமிழ்நாட்டிலும் மக்கள் மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் இருந்து வெளிவந்த அனைத்துத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் இத்தாக்குதலை மகிழ்ச்சியுடன் செய்தியாக வெளியிட்டன. சிங்கள அரசுக்கு தமிழர்கள் பாடம் ஒன்றினைப் புகட்டியிருக்கிறார்கள் என்பதே இச்செய்திகளின் கருப்பொருளாக இருந்தது. டெலோ அமைப்பும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டது. இறுதியாக தமிழ் மக்களின் அபிமானத்தை வென்றுவிட்டோம் என்கிற பூரிப்பு அவ்வியக்கத்தில் காணப்பட்டது. அதுஅவரை காலமும் புலிகள் அமைப்பே மக்களின் கவனத்தை ஈர்ந்திருந்தது. பொலீஸார் மீதும் இராணுவத்தினர் மீதும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புலிகள் தாக்குதல் நடத்திக்கொண்டு வந்தனர். இத்தாக்குதல் தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாகவே வெளிவந்திருந்தன. ஆகவே, மக்களின் கவனம் தனது இயக்கம் நோக்கியும் திரும்பவேண்டும் என்று நினைத்த டெலோ அமைப்பின் தலைவர் சிறீசபாரட்ணம் பெரியளவில் தாக்குதல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்று நினைத்தார். மேலும், இதே பொலீஸ் நிலையம் மீது இரு வருடங்களுக்கு முன்னர் புலிகள் நடத்திய தாக்குதலைக் காட்டிலும் வெற்றிகரமான தாக்குதலாக இது அமையவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இத்தாக்குதலைத் திட்டமிடுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அவர் வந்திருந்தார். இத்தாக்குதலை ஒளிநாடாவாகப் பதிவுச் செய்யும் நடவடிக்கைகளையும் அவர் எடுத்திருந்தார். இந்த ஒளிப்படத்தைத் தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் டெலோ அமைப்பினர் மக்களிடம் காண்பித்தனர். இதன்மூலம் பணத்தினை மக்களிடமிருந்து அவர்களால் பெற முடிந்தது. ஆனால், தாங்கள் ஏற்படுத்திய தாக்குதல் வெற்றியைத் தொடர்ச்சியாகக் கொண்டுசெல்ல டெலோவினால் முடியவில்லை. எப்போதாவது இருந்துவிட்டு நடத்தும் தாக்குதல்கள் ஊடாக விடுதலைப் போராட்டத்தை வென்றுவிட முடியாது என்பதற்கு டெலோவின் இத்தாக்குதல் ஒரு உதாரணமாக அமைந்தது. ஆனால், புலிகள் அமைப்போ இராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தி, பிரதேசங்களை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கும் கண்ணிவெடித் தாக்குதல்களை முதன்மையாகக் கொண்ட நகர்வு முறியடிப்புத் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக நடத்தியபடியே இருந்தனர்.
  34. மிகவும் கவலையான விடயம், அதிகாரிகளின் அசமந்த போக்கு அழிவிற்கே வழிவகுக்கும்
  35. கொலை செய்யும் ஒவ்வொரு கொலைகாரனும் தமதுகொலைக்கு இப்படி பல காரணங்களை சோடித்து தாம் செய்த கொலையை நியாயப்படுத்துவது உலக வழமை. கொலைகார்ரின் ஆதரவாளர்களும் அதையே செய்வர். நீங்களும் அந்த உலக வழமைக்கு விதிவிலக்கு இல்லைத் தானே. 😂
  36. 1982 இல் நாலாம் மாடியில் இருந்து ஆரம்பித்தது என் போராட்ட புலிகளுடனான அனுபவம் வரலாறு. பிழை பிடிப்பவன் செயலற்றவன் என்பது கூடவா தெரிந்திருக்காது. அதுக்கு தான் சிவப்பு
  37. மேலே விளையாடும் மான்களைப் பார்க்கும் ஜாகுவார்ப்புலி ..........மகிழ்ச்சிக்கும் மரணத்திற்கும் அதிக தூரமில்லை ......! 😂
  38. நான் சுமத்திரனை மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து அணுகாமல் சுமத்திரன் தன் வாயால் என்ன தான் சொல்கிறார் என்பதை அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் கொடுத்த பத்திரிகை, தொலைக்காட்சிப் பேட்டிகள் மூலம் மட்டுமே அணுகியிருந்தேன். காய்தல் உவர்தல் இன்றி நான் கவனித்ததில் என்னைப் பொறுத்த வரையில் சுமந்திரன் 1) தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் இப்பொழுது இருப்பதை விட ஒரு படி ஏனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புபவர் 2) இப்போதைக்கு அடைய முடியாத தமிழ்க் கனவைக் காண்பவர் அல்லர். 3) லிபரல் கொள்கை கொண்டவர், வலது சாரி மனநிலை இல்லாதவர் ஆகவே one way thinking இல்லாதவர். Critical thinking ability நன்கே உண்டு 4) தமிழனாக உணரும் அதே நேரம் இலங்கையனாகவும் உணர்கின்றார் 5)இந்திய எதிர்ப்பு மனநிலை உள்ளவர் 6) மேற்குக்கு விசுவாசமானவர் 7) காசுக்காக அவர் அரசியல் செய்யவில்லை 8) சட்டம் தெரிந்து இருப்பதால் உள்குத்து வேலைகளை சட்டப்படி எப்படி செய்வது என்று தெரியும் 9) சுமத்திரனின் பலம் தெளிவான அவரின் விளங்கப்படுத்தும் திறமை 10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் 😭😭) 11) தி மு க அனுதாபி
  39. இப்படியான பிரச்சனைகளில் ஆட்களை போட்ட காலம் முடிந்து இப்ப வழக்கு போடும் காலம் வந்தது ஒரு முன்னேற்றம் தானே. 😂
  40. கட்டுரையாளர் சுமத்திரனின் சொம்பு என்பதை பார்த்து பல்லுப்படாமல் எழுதியதில் இருந்து தெரிகிறது.
  41. இஸ்ரேலியப் பயங்கரவாதிகளின் வழிகாட்டலில் தமிழின அழிப்பை முன்னெடுத்த ஜெயாரும் லலித் அதுலத் முதலியும் இறுதியுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பலியிட இஸ்ரேலினால் வழங்கப்பட்ட கிபிர் கொலைக்கருவி தம்மீது நடத்தப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளின் பின்னால் இஸ்ரேலின் மறைகரம் இருப்பதை யாழ்ப்பாணத் தமிழர்கள் அறிந்துகொண்டனர். பாலஸ்த்தீனர்களை ஒடுக்குவதில் இஸ்ரேலியர்கள் கடைப்பிடித்த அதே அனுகுமுறையினையே ஜெயவர்த்தன - லலித் குழுவும் பாவித்து வருகின்றது என்பதை அவர்கள் உணரத் தலைப்பட்டனர். தமிழர்களைப் போலவே இந்தியாவும் அதனை நன்கு உணர்ந்து கொண்டது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இலங்கைக்குள் செயற்படுவது தனக்குச் சவாலான விடயமாகக் கணித்த இந்தியாவின் ரோ, தனது சொல்லிற்குக் கட்டுப்பட்ட சில தமிழ்ப் போராளி அமைப்புக்களிடம் யுத்தத்தை கொழும்பிற்கும், இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்த்தரிக்குமாறு கோரியதாக இவ்வமைப்புக்களின் உறுப்பினர்கள் பின்னாட்களில் என்னிடம் தெரிவித்தனர். புலிகள் இந்தியாவின் திட்டத்தை மறுக்க, ஈரோஸ் அமைப்பு அதனைச் செய்வதற்கு ஒப்புக்கொண்டது (என்னிடம் இந்த விடயத்தை கூறியவர் போராளி அமைப்பொன்றில் முக்கிய உறுப்பினராக இருந்ததுடன் இலங்கை அரசுடனும் இந்தியாவுடனும் நெருங்கிய தொடர்புகளையும் பின்னாட்களில் ஏற்படுத்திக் கொண்டவர். தான் கூறிய விடயம் வெளியே தெரியவருமிடத்து தனக்கு அது ஆபத்தாக முடியலாம் என்று அஞ்சியதால் தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று என்னைக் கேட்டிருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் அவர் கொல்லப்பட்டு விட்டார் (2005)). இக்காலத்தில் பார்த்தசாரதி இலங்கையில் இருந்தார். புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்திலும் பல வெளிநாட்டுச் செய்திச் சேவைகளின் ஊடகவியலாளர்கள் கொழும்பில் முகாம் அமைத்துத் தங்கியிருந்தனர். இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படும் எண்ணிக்கை பல உலக செய்திச் சேவைகளின் கவனத்தை ஈர்த்திருந்ததனால் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களைச் சேர்ந்த பல செய்தி நிறுவனங்கள் இலங்கையில் நடக்கும் அக்கிரமங்களை உடனுக்குடன் வெளியே கொண்டுவர ஆவலாக இருந்தன. தென்னாசியாவின் கொலைக்களம் என்று அக்காலத்தில் அறியப்பட்ட இலங்கை குறித்து இந்தியாவிலிருந்த பி.பி.சி யின் செய்தியாளர் மார்க் டல்லி எழுதுகையில், "உலகிலேயே மிகவும் காட்டுமிராணடித்தனமான, ஒழுக்கக் கட்டுப்பாடுகள் எதனையும் கொண்டிராத இராணுவம்" என்று இலங்கை இராணுவத்தை வர்ணித்திருந்தார். 1978 ஆம் ஆண்டு முதல் 1997 வரையான 18 வருடங்களில் ஓரிரு நாட்களைத் தவிர பெரும்பான்மையான நாட்களில் டெயிலி நியுஸ் செய்திகளுக்காக மந்திரிசபைச் செய்தியாளர் மாநாட்டில் தவறாமல் கலந்துகொண்டிருக்கிறேன். அப்படியான சந்தர்ப்பங்களில் பல வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. 1984 ஆம் ஆண்டின் புரட்டாதி மற்றும் ஐப்பசி மாதங்கள் பெருமளவு வெளிநாட்டுச் செய்தியாளர்களை நாட்டிற்குள் தருவித்திருந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆவணி 27 ஆம் திகதி வெளிவந்த நியூஸ் வீக் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இலங்கை ராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகள் என்று எழுதியிருந்தது. ஓரிரு பொதுமக்களைத் தவிர கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் தான் என்று இலங்கையரசாங்கம் செய்துவரும் பிரச்சாரத்தைச் சாதாரண சிங்கள மக்களே நம்ப மறுத்தனர் என்று அவ்வறிக்கை கூறியது. தமிழர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான சிங்களவர்கள் கூட ஜெயவர்த்தன சமாதான வழிமுறைகளில் தமிழரின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காணப்போவதில்லை என்பதை நம்புவதாகவும் அவவறிக்கை மேலும் கூறியது. வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கை யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் நடத்தப்பட்டுவரும் படுகொலைகள் குறித்து எழுதுகையில், "இரவு வேளைகளில் யாழ்நகரம் பேய்நகரம் போல் காட்சியளிக்கிறது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கலாக அப்பாவிகளை இராணுவம் கொன்றுவருகிறது. நாட்டின் அதிபர் ஜெயவர்த்தன, அரசியல் தீர்வில் ஆர்வமுள்ளவர் போல்த் தோன்றவில்லை. தமிழரின் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வொன்றினை வழங்கவே அவர் முயல்வதுடன், அதனை தமிழர்களை அச்சமூட்டிச் சரணடைய வைப்பதன் மூலம் செய்ய எத்தனிக்கிறார்" என்று எழுதியது. மும்பாயிலிருந்து வெளிவரும் பிரபலப் பத்திரிக்கையான பிலிட்ஸ் அதன் ஆவணி 18 ஆம் நாள் இதழில் யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் காணப்படும் சூழ்நிலை குறித்து எழுதியிருந்தது. பின்னர் இந்தச் சூழ்நிலைகளை ஆசிரியர் தலையங்கமாக இட்டு செய்தியொன்றினையும் வெளியிட்டது. யாழ்ப்பாணத்தின் கரையோரக் கிராமங்கள் மீது இராணுவமும் கடற்படையும் தொடர்ச்சியான செல்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் நோக்குடன் அம்மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களை இராணுவம் அழித்து வருகிறது. இப்புராதன தமிழ்க் கிராமங்களை அழித்துத் தரைமட்டமாக்க இராணுவத் தாங்கிகளும், நிலங்களை மட்டமாக்கும் கனரக உபகரணங்களும் அரசால் பாவிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் தன் சொந்த நாட்டு மக்களையே கொல்வதற்காக விமானக் குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டதில்லை. என்று எழுதியிருந்தது. மேலும், இந்தியா சீக்கியத் தீவிரவாதிகளுக்கெதிராகப் போராடுவது போன்றதே இலங்கை தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கெதிராகப் போராடுவதும் என்ற இலங்கையின் பிரச்சாரத்தைக் கேலி செய்த இப்பத்திரிக்கை, "இலங்கையில் இருப்பது ஒரு பயங்கரவாதம் மட்டும்தான். அடிப்படை மனிதவுரிமைகளுக்காகப் போராடும் அப்பாவிகளைக் கொன்றுகுவிக்கும் அரச பயங்கரவாதமே அது" என்று அப்பத்திரிக்கை எழுதியிருந்தது. ஜெனீவாவுக்கான இந்திய தூதுக்குழுவும் இதேவகையான விமர்சனங்களை இலங்கை அரசாங்கம் மீது வைத்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. (மேலதிக வாசிப்புக்களுக்கு : 2009 இறுதி யுத்தத்தில் இஸ்ரேல் ஆற்றிய பங்கு குறித்து தி டிப்லொமட், அல்ஜசீரா மற்றும் தி எலெக்ட்ரோனிக் இன்டிபாடா எழுதிய கட்டுரைகளின் இணைப்புக்கள்) https://thediplomat.com/2023/07/israels-role-in-sri-lankas-dirty-war/ https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644 https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated https://www.greenleft.org.au/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.