Leaderboard
-
Kandiah57
கருத்துக்கள உறவுகள்7Points4036Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்6Points2947Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்6Points20007Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/29/24 in all areas
-
நஷ்டஈடு கோரும் முன்னாள் சுகாதார அமைச்சர்!
எத்தனையோ மக்களைக் கொன்றதற்காக இவரையல்லவா மக்கள் நஸ்டஈடு கோர வேண்டும். பழுதடைந்த மருந்துகளை இறக்கி சேர்த்த பணம் போதாதா?3 points
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
சொல்லப் போனால் இப்படி எழுதும் உங்களைப் போன்றவர்களை விட தேசம்,தேசமாக வாழும் நாங்கள் ஊருக்கு மிக கூடுதலாக தான் செய்து கொண்டு இருக்கிறோம்..இதுக்கு மேல வாயைத் திறக்காதீர்கள்..நிர்வாகம் எனக்கு தண்டடனை தந்தாலும் பறவாயில்லை ஏற்றுக் கொண்டு போகிறேன்.3 points
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
@Kandiah57 அண்ணை , ஊரில உள்ள சிலர் வெளிநாட்டுகளிட்ட சிறீலங்காவே பிச்சை எடுப்பது தெரியாமல் வாழ்கிறார்கள்.3 points
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
இல்லை மூலையில் தொங்கவில்லை ஊர் வாசிகசாலையில் மேசையில் இரண்டு காலையும். போட்டு கொண்டு வெளிநாட்டில் வாழும் ஊராவன். ஒவ்வொருவரும் என்ன மாதிரி வாழ்கிறார்கள் என்று வம்பு அளக்கிறேன். வேறு என்ன வேலை ?? நான் ஒரு சோம்பேறியாகக்கும். என்னுடன் படித்தவை எல்லாம் வசதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை எப்படி இவன்கள் மட்டும் இப்படி வாழ்கிறார்கள்?? நாம்மால் ஏன் முடியவில்லை என்று கடந்த 20 வருடங்களாக யோசிக்கிறேன் ஒரு அறுப்பும் விளங்கவில்லை3 points
-
அவுஸ்திரேலிய பெற்றோலிய நிறுவனத்தினால் இலங்கையில் 150 எரிபொருள் நிலையங்கள்!
3 points
- சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024
சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024 உலகத் தமிழர்களுக்கு.... வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன். உங்களை உங்களோடு உங்களில் ஒருவனாக சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில் ஒருவரான சாந்தனை இழந்து இதோ இந்த கம்பிகளுக்கு பின்னால் இருந்து இப்படி உங்களை சந்திக்க நேர்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. 32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பிறகு கடந்த 11-11- 2022 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறுபேரில் நானும் ஒருவன். அந்த ஆறுபேரில் நான், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளியுறத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது. தொலைந்து போன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுபெறும் தருவாயில் கூட விடுதலையை ருசிக்க முடியாமல், சிறிது நேரம் கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும் வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டோம். இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது. இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதும் எங்களுக்கு போகப்போகத் தான் விளங்கியது. நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய தேதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். "சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்" என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாகமும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஒரு வார காலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக் கூட முடியாமல் மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது..? யாரை நாங்கள் நொந்துக்கொள்வது..? அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுத்து, உடல்நலன் குன்றி 'விடுதலை ஆகிவிடுவோம். விடுதலை ஆகிவிடுவோம்.' என்று கனவு கண்டு விடுதலை ஆகிவிட்டோம் என்று பூரிப்பு கிடைத்த தருவாயில் மீண்டும் ஏமாற்றப்பட்டு சிறைமாற்றப்பட்டு இதனால் மனநலனும் பாதிக்கப்பட்டு இறந்து போன சாந்தனுக்கு சிறை வாழ்வு முடிந்தது. இன்னும் மீதம் மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குகிறோம் இந்த சிறப்பு முகாமில். சிறையில் கூட சிறை நிர்வாகத்திற்கு சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு இருக்கக்கூடிய மற்றும் இல்லாத உரிமைகள் கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்பு முகாமோ சிறையை விட கொடுமையானது, இங்கு எந்த சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டத்திட்டங்களாகவும் ஆகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச் சிறை யாரும் மனு பார்க்கக்கூடாது என்று இவர்கள் முடிவெடுத்தால் யாரும் மனுப்பார்க்க முடியாது. இப்படியான நிர்வாகம் தான் நாட்டைவிட்டு வெளியில் அனுப்புவதற்காக என்று காரணம் கூறி சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமல் வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்னொரு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் சிறு சிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் கூட போராடி, உயிரைக் கொடுத்து பெறவேண்டிய சூழலே இருக்கிறது. எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்கு பின்னும் எங்களை எங்கள் குடும்பங்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும், உண்ணாநிலை போராட்டங்களையும் மேற்கொண்டே பெற்று வருகின்றோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலே போகும். மீதி, கேட்கப்படாமலே மக்கிப் போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாட்களை கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இவ்வாறில்லாமல் உரிய அரசுப் பொறிமுறைகள் அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிரு வருடங்களாவது இருந்திருப்பார். 33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன்மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்தமகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார். இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் 'உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும். அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன.!? 33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?! இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை. மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாடும் நிலையில் நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய், சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்றுசேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்து விட மாட்டோமா?! பச்சிளம் பாலகனாக பார்ந்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்கு திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனை பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப் பஞ்சு பாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களை காணிக்கையாக்கிவிட மாட்டேனா..?! அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். எங்கள் நிலைமை? நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசி காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்ச காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து விட்டுப் போக இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..? எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா..? இப்படிக்கு இராபர்ட் பயஸ் https://www.facebook.com/share/p/aZ7vRzda99wrq7mL/2 points- தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை வழக்கு விசாரணை
தமிழரசுக்கட்சியின் யாப்பு மீறல் என்ற காரணத்தை வைத்து வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் தமிழரசுக்கட்சி நீண்டகாலமாகவே யாப்பு மீறலைச் செய்திருக்கிறது. மாவை தொடச்சியாக பல வருடங்கள் தலைவராக இருந்தமை. சுமத்திரன்,சம்பந்தரது தன்னிச்சையான செயற்பாடுகள் என பல விடயங்கள் இருக்கின்றன.2 points- சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024
“சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது!” – ராபர்ட் பயஸ் 29 FEB, 2024 | 09:24 PM சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என ராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகியோரை கடந்த 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இதில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியர்கள் என்பதால் அவர்களது இல்லத்திற்கு சென்றனர். ஆனால் முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சாந்தனின் இறப்பு குறித்து சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட் பாயஸ் உலகத் தமிழர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், திருச்சி சிறப்பு முகாம் சிறையை விட கொடுமையானது என குறிப்பிட்டுள்ள அவர், தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கிய சாந்தனின் தாயிடம் உயிரற்ற உடலை தான் கொண்டு சேர்க்கப்போகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை நோயாளிகளாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள ராபர்ட் பயஸ், சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை, சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.மேலும், தங்களின் கடைசி காலத்தை குடும்பத்தினருடன் செலவழிக்க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/1776292 points- யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
2 points- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
கொடிய யுத்தத்தின் தாக்கங்களால் தனது துடிப்பான இளமைக்காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதையும் முழுவதையும் வேதனையில் கழித்தவர். அவரின் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சாந்தனின் சகோதரரின் முகநூல் பதிவு இவ்வாறு கூறுகிறது. நீதி என்பது நாதியற்றவர்க்கற்றது. யாரை எதிர்த்தோமோ அவர்களாலும் யாருக்காக எதிர்த்தோமோ அவர்களாலும் என் குடும்பம் அநாதையாக்கப்பட்டது. வேதனையான பதிவு2 points- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
வாழ் நாள் முழுவதும் வேதனையை அனுபவித்த மனிதர். இவர் ஒருபோதும் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு பட்டிருப்பார் என்று நம்பவில்லை. இன்றும் புலிகளின் சொத்துக்களை ஆட்டைய போட்டு வசதியாக வாழுபவர்கள் இருக்கின்ரார்கள். பழி ஒருபக்கம் பாவம் ஒருபக்கம்2 points- ஆண்டவனையும் கேட்க வேண்டும்
2 pointsபுங்கையூரான், புத்தர் கடவுள் இல்லை. ஒரு தத்துவவாதி. அவர் ஒரு இந்துவாக இருந்தும், “கடவுள் இல்லை. ஆன்மா இல்லை. மறு பிறப்பு இல்லை” என்று போதித்த ஒரு தத்துவவாதி. பின்னாளில் அவரையே கடவுள் ஆக்கி வழிபடத் தொடங்கி விட்டார்கள். சிறிலங்காவை சிங்கள பெளத்தர்களுக்கே, புத்தர் எழுதித்தந்து விட்டார் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்2 points- ஆண்டவனையும் கேட்க வேண்டும்
2 pointsகடவுள்கள் ஆயுதம் ஏந்துவது ஒரு பெரிய உண்மையை மறைமுகமாகச் சொல்கின்றது! அண்மையில் குறிகாட்டுவானிலிருந்து நையினாதீவு போகும் பக்தர்களின் நிலை கண்டு மிகவும் வருத்தமாக இருந்தது. சிங்கள நோனாக்கள் விசேட வரிசையில் வள்ளங்களில் இராணுவத்தினரால் அனுப்பப் பட, எம்மவர்கள் மூன்று மணி நேரம் கடும் வெய்யிலில் காய்கின்றார்கள். புத்தன் ஆயுதம் ஏந்தாத கடவுள் எனினும் ஆயுத முனையில் தானே அவன் மதமும் வளர்கின்றது..! எனவே கடவுள்கள் ஒரு செய்தியைச் சொல்கின்றார்கள்..! நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்…! காந்த்தீய இந்தியாவுக்கும்…அணுகுண்டு தானே தேவைப் படுகின்றது..!2 points- துவாரகா கடலிற்குள் மூழ்கிய பிரதமர் மோடி! … கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் காணிக்கை!!
ஆம் இந்தியா பிரதமர்களில். மிக சிறந்த பிரதமர் மோடி தான் பொருளாதாரத்திலும். மதிப்பிலும். உலக நாடுகள் மத்தியில் உயர்ந்துள்ளது2 points- ஆண்டவனையும் கேட்க வேண்டும்
2 pointsஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம். ஆண்டவன் தண்டனை கொடுத்த போது அது செய்யப்பட வேண்டியதாக நியாயமானதாக என்னால் செய்ய முடியாததை ஆண்டவர் செய்கிறார் என்று வரவேற்றோமா? இல்லையா? எம் மனதில் எழும் எம்மால் முடியாத விடயங்களை ஆண்டவனை செய்ய வைத்து விட்டு கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அல்லாவுக்கு பிகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது என்பதும் நான் மோடு அவர் எல்லாம் தெரிந்தவர் செய்திருக்கக் கூடாது என்பதெல்லாம் சுயநலத்தின் உச்சம் மட்டுமே.2 points- ஆண்டவனையும் கேட்க வேண்டும்
1 pointஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும். ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்…இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள். ஆண்டவர்களில் மூன்றுபேர், படைத்தல், காத்தல், அழித்தல் என்று தங்களுக்கான பொறுப்புகளை தங்களுக்குள்ளேயே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். இதில் படைப்பவன், படைத்தலுடன் தன் வேலையை நிறுத்திக் கொண்டான். காத்தல், அழித்தல் செய்பவர்கள் கொஞ்சம் குளப்படி. தேவையில்லாத விடயங்களையும் செய்யக் கூடியவர்கள். அப்படிச் செய்யும் தில்லு முல்லுகள் எல்லாம் ஆண்டவனின் ‘திருவிளையாடல்கள்’ என்ற பதத்துக்குள் அடங்கிவிடும். அழித்தல் வேலை செய்த ஆண்டவனின் மாமனார் (பெண் கொடுத்தவர்), ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்துக்கு மருமகனை அழைக்கவில்லை. அது மருமகனுக்குப் பொறுக்கவில்லை. கோவம் தலைக்கேறி ஒரு தாண்டவமும் ஆடி, தனது வேலையாளான வீரபத்திரனை அனுப்பி, யாகத்தை அழித்து மாமனாரையும் கொலை செய்வித்தான் . இந்தக் கொலையை செய்ய ஆளை அனுப்பியவன் ஆண்டவன் என்பதால் ‘வதம்’ செய்வித்தான் என்று குறிப்பிட்டால்தான் சரியாக இருக்கும். அடுத்து காத்தல் செய்பவன். இவன் அழித்தல் செய்பவனை விட ஓவரான குழப்படிக்காரன். தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை கொடுக்கும் தீராத விளையாட்டுக்காரன். பெண்களை மயக்கும் மாயவன். பெரும் தந்திரசாலி. ஒரு தடவை நரகன் என்ற அரசனுடன் (பின்னாளில் நரகாசுரன்) பிரச்சனையாகிப் போனது. நரகன் பலசாலி. அவனுடன் மோதினால் காத்தல் வேலை செய்யும் தான் கந்தல் ஆகிவிடுவேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான். நரகன் நல்லவன், அறிஞன், வீரன் என்பதெலாம் காத்தல் ஆண்டவனுக்குத் தேவைப்படாத விடயங்கள். தந்திரத்தால் நரகனை அழிக்கத் திட்டம் போட்டான். ‘நரகன் ஆண்களுடனையே போர் செய்வான். எக்காலத்திலும் பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டான்’ என்ற தகவல் அவனுக்குக் கிடைத்தது. நரகனை போருக்கு அழைத்துத் தன் மனைவி சுபத்திரையிடம் ஆயுதம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தான். நரகன், பெண்களை மதிப்பவன். கொண்ட கொள்கையில் நிலையாய் நிற்பவன். போர்க்களத்தில் தன்னுடன் மோத வந்திருப்பது ஒரு பெண் என்பதால், தன் ஆயுதங்களை எடுக்காமல் அமைதியாக நின்றான். கணவன் சொல் கேட்டு சுபத்திரை அம்பு விட்டாள். நரகன் செத்துப் போனான். “நரகன் அழிந்துவிட்டான். இந்நாளை இனி வரும் காலங்களில் நன்னாளாகக் கொண்டாடுங்கள்” என்று மக்களுக்கு ஆணையிட்டான். காத்தல் வேலை செய்தாலும், தன்னுடைய மச்சான் செய்யும் அழித்தல் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது போலே, இரணியனை கொலை (வதம்) செய்தான். பரசுராமன் என்று மாற்றுப் பெயரில் போய் தன் தாயையே கொன்றான். கெளரவர்களில் ஒருத்தனை மட்டும் விட்டு விட்டு எல்லோரையும் அழித்தான்.. என்று அவனின் காத்தல் வேலை அழித்தலாகத் தொடர்ந்தது. இதை எல்லாம் கேள்விப் பட்ட எங்களை ஆண்ட கந்தனுக்கும் கை துருதுருக்க அவனும் சூர பத்மனை கொலை (வதம்) செய்து, ஆண்டாண்டு காலமாக அதை நினைவு கூரவும் செய்திருக்கிறான். இப்படிப் போகிறது எங்களை ஆண்டவர்கள் கதை. அமைதி தேடி ஆண்டவர்களின் இருப்பிடத்துக்குப் போனால், ஆண்டவர்கள் எல்லாம் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறார்கள். கால்களில் யார் யாரையோ போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னிகளை ஒன்றுக்கு இரண்டாக அணைத்து வைத்துக் கொண்டு காட்சி தருகிறார்கள். ஆனாலும் நாங்கள் அங்கே போய்த்தான் அமைதியைத் தேடிக் கொள்கிறோம். ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம்.1 point- வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
பிரச்சனைகளு கிளப்புபவர்களை கண்டிக்க உங்களுக்கு தைரியமில்லை…. ஏன் யாயினியை குறை கூறுகிறீர்கள்?1 point- சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்!
1 pointஐயோ அப்படி சொல்லா தையுங்கோ ...அது அவரின் கடமை ...அது அவர்கள் தங்கள் நலன் சார்ந்து செய்த அரசியல் படுகொலை .....அதற்கு ஐ.நா ட்டில் அங்கீகாரம் உண்டு....1 point- தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
சில தப்புக்களை செய்ய அடையாளங்களை மாற்றி செய்ய வேண்டிய நிலை .... சந்தேக நபர் திட்டமிட்டு பெயரை மாற்றி அந்த கிராமத்தில் வாழ்ந்திருக்கின்றார் ,,, பொலிசார் இது பற்றி தீவிரமாக விசாரனை செய்ய வேண்டும்1 point- அவுஸ்திரேலிய பெற்றோலிய நிறுவனத்தினால் இலங்கையில் 150 எரிபொருள் நிலையங்கள்!
கடன் வாங்கி கல்யாணம்.... மததள விமான நிலையத்தின் நிலை தெரியும் தானே....பெறறொல் நிலையம் திறக்கப்படும் பிறகு பெற்றோல் இருக்காது ......நிலையம் இருக்கும்...ஆடு மாடுகளுக்கு பெற்றோல் விடுவினம்1 point- அவுஸ்திரேலிய பெற்றோலிய நிறுவனத்தினால் இலங்கையில் 150 எரிபொருள் நிலையங்கள்!
கடன்களை திரும்ப அடைக்க வெளிக்கிட்டாலும் இந்த நிலமை வரலாம். தேர்தல்வரை அமுக்கி வைத்திருப்பார்கள்.1 point- நடனங்கள்.
1 point- யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
கல்வித்துறை போகவில்லை மீன்பிடி அமைச்சர் தான் கல்வித்துறைக்குள் நீந்தி வந்துள்ளார் அவர் படித்த படசாலை அவரது படசாலை அவர் விரும்பும் ஒருவர் தான் அதிபர் பதவியில் இருக்க முடியும் ஆண். பெண் என்பது எல்லாம் நொண்டி சாட்டுகள் உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையை சேர்ந்தவர் அவரது ஆட்சியில் ஆண்களும் வாழ்ந்தார்கள்1 point- தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை வழக்கு விசாரணை
பல வருடங்களாக.பல சந்தர்ப்பங்களில் யாப்பு மீறல் நடை பெற்றுள்ளது....சுமத்திரன் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்த பொழுதும் சட்ட மீறல் நடை பெற்றுள்ளது,,,அதை ஏனைய உறுப்பினர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை....தமிழ் தேசியம் சிதைந்து போகாமல் இருக்க அந்த முடிவை எடுத்திருக்லாம்... இப்பொழுது நீதி மன்றத்திற்கு இந்த வழக்கு சென்ற காரணத்தால் ....நீதி மன்ற தீர்புக்கு ஏற்ற வகையில் முடிவுகளை எடுத்து தமிழரசுகட்சி மீண்டும் தனது அத்திவாரத்தை உறுதியாக போட்டு,சுவர்,கூரை போன்றவற்றை கட்டியெழுப்ப வேணும்....தமிழ் தேசியத்திலும் ஆயிரம் பூக்கள் மலரட்டும்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
1 pointகுலசேகரப்பட்டினம்... இனி இந்திய விண்வெளிப் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக மாறப்போகும் இடம். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.1 point- அவுஸ்திரேலிய பெற்றோலிய நிறுவனத்தினால் இலங்கையில் 150 எரிபொருள் நிலையங்கள்!
ஓவரா குதிக்ககாதிங்க முடிந்தால் ஒரு இரண்டு கிழமைக்கு வாகன இறக்குமதி தடையை சிங்கள அரசியல்வாதிகள் எடுக்கட்டும் பார்க்கலாம் அதன் பின் சிம்பாவே நாட்டு பணம் போல் சொறி லங்கன் ரூபாயை மாட்டு வண்டிலில் தான் கொண்டு திரிய வேண்டி வரும் . வரும் வரத்தான் போகுது அப்போது வேறு பெயரில் நீங்கள் வராமல் இருந்தால் சரி .1 point- சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்
1 point- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
எனக்கு முகமறியாத சாந்தனின் மரணம் இத்தனை துயரை இந்த நாளில் தரும் என்று எண்ணியிருக்கவில்லை. “சட்டத்தில் சாமானியர்களுக்கு எல்லா உரிமையும் இருகிறது. நீதிதான் சாமானியருக்கு இல்லை” சாந்தனுக்காக ஒரு கணம் வணங்கிக் கொள்வோம். Kuna Kaviyalahan1 point- மலரும் நினைவுகள் ..
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
நீங்களும் வந்து வாழலாம்” யார் மறிப்பது???. வசதியாக வாழ்கிறார்கள் என்று எப்படி தெரியும்?? இங்கேயும் ஆயிரம் பிரச்னைகள் உண்டு” இரண்டு வேலை செய்து கணவன் மனைவி இருவரும் வேலை செய்து தான் வாழ்கிறார்கள் அது உங்கள் விருப்பம் நாங்கள் மெழுகுதிரி பாவிக்கிறோம். ஏனெனில் மின்சார கட்டணம் மிக அதிகம் வருமானம் குறைவு யாரை கேட்க முடியும் பணம் அனுப்புமாறு??1 point- இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க இணக்கம்
ஏறக்குறைய இலங்கையின் எல்லா பகுதிகளுமே அதானியின் கைக்குள் வரும்பொழுது இலங்கை ஏன் ராமேஸ்வரத்தில் அமைக்க முடியாது. வடக்கில் காற்றாலை மின் உட்பதி, தேடகில் மத்தலை விமான நிலையம், கொழும்பில் கிழக்கு துறைமுகம், கிழக்கில் திருகோணமலை என்று நாலு பக்கமும் அவர்கள் கட்டுப்பாட்டில். மலைநாட்டில் அமுலின் பால் பண்ணைகள், நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள். இவைகள் எல்லாம் முக்கியமான முதலீடுகள் மட்டுமே. இன்னும் டெலிகாம், விமான நிலையம் என்று நிறைய வரப்போகின்றன. இன்னும் மோடி நேற்று தமிழ் நாட்டுக்கு வந்தபோது மதுரை ஆதீனம் கச்சதீவையும் மீட்க்கும்படி வலியுறுத்தி இருக்கிறார். எனவே ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு சிறு முகாம் அமைப்பதில் மோடிக்கு பிரச்சினை இல்லை. தமிழர் பிரச்சினை எல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. தமிழனை காட்டி , காட்டி தங்கள் அலுவலை முடித்து விடடார்கள்.1 point- அதிசயக்குதிரை
1 pointஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு?? நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா?? நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ?? நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற.. நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா?? நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட?? நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா??? கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்.. நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??1 point- ஆண்டவனையும் கேட்க வேண்டும்
1 pointபுராணங்களின் போர்க்களங்களை ரணகளமாக்கி நீதிதேவன் முன் நிறுத்தும் கட்டுரை.......நல்லா இருக்கு.....! 😂1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- ஆண்டவனையும் கேட்க வேண்டும்
1 pointமுன்னரெல்லாம் எங்களைக் காப்பாற்று என்று மக்கள் கோவில்களை நோக்கி ஓடினார்கள். இப்போ தெய்வங்களெல்லாம் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு உள்ளேயிருந்து மக்களே எங்களை காப்பாற்றுங்கள் என்று தூங்கிவிட்டார்கள். அவர்களது தேவை,சேவைகளை மக்களே கையிலெடுத்து விட்டார்கள்.1 point- ஆண்டவனையும் கேட்க வேண்டும்
1 pointஆண்டவனே கவலை கொள்ளும் செயல்களை செய்துவிட்டு, மனசாட்சி என்றதை மறைத்துவிட்டு ஆண்டவனுக்காகத்தான், ஆண்டவனது இருப்புக்காகத்தான் அதனை செய்தோம் என கொஞ்சமும் தயங்காமல் சொல்கிறோம். ஆண்டவனே மனிதர்களைப் பார்த்து பயம் கொள்ளும் அளவுக்கு எங்களது செயல்கள் உள்ளன.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கதவு திறந்ததா காட்சி தெரிந்ததா ......... நடிப்பு : எஸ்.எஸ்.ஆர் & பத்மினி.....! 😍1 point- மலரும் நினைவுகள் ..
1 point1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மையாகவே புலிகளால் செய்யப் பட்ட ஒரு தவறைப் பற்றிப் பேசுகிறோம். அதைப் பேச வேண்டி வந்ததே நீலன் போல கொஞ்சமாவது செயல்படுகிற ஒரு தற்கால அரசியல் வாதியைக் கொல்ல வேண்டுமென்பது போன்ற கருத்துக்களை சிலர் சில திரிகளில் சொன்னதால் தான். இது வலிந்து யாரும் தொடங்கிய குற்றப் பத்திரிகை அல்ல, ஆனால் இதை இவ்வளவு நீட்டித்து "மூடனுக்கு அசிங்கம் அப்பினால் மூன்று இடத்தில் அப்பும்" என்பது போல கொண்டு வந்ததே, இந்த வன்முறையை நியாயப் படுத்தும் தீவிர தேசியர்கள் தான். ஆனால், அதை மடை மாற்ற எல்லாவற்றையும் பேசுவர், நீலன் கொலை சரியா பிழையா என்பதைத் தவிர!அரசியல் கொலையை பற்றி மூச்சு விடாமல், ஒருவர் "character assassination" பற்றிப் பிளந்து கட்டியிருப்பதும் பெரிய நகைச்சுவை தான்! அதாவது புலிகள் அமைப்பு இதைச் செய்த போது கரெக்ரரில் கீறலே விழவில்லை, அதைச் சொல்லிக் காட்டினால் கரெக்ரர் கொல்லப் பட்டு விட்டது - நம் கையில ரத்தம்😂!1 point- மலரும் நினைவுகள் ..
1 point1 point- புலிகளின் சண்டியன் உந்துகணை - சிறுகுறிப்பு
https://eelavarkural.wordpress.com/2020/10/13/seatigers-boat/ மூன்று தண்டவாளக் கம்பிகளை இணைத்து ஒரு ஆயுதத்தை உருவாக்கினார்கள். அதன் சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆராய முகமாலைப் பகுதியின் ஒரு வெளியில் தெருநாய்களைப் பிடித்து கட்டிவிட்டு அந்த ஆயுதத்தை இயக்கி அதன் சக்தியினை மதிப்பீடு செய்தார்கள் . ஆம் அது மெதுவாக தண்டவாளத்தில் ஓடி ஆசைந்தபடி தன் இலக்கை நோக்கி நகர்ந்து சென்று வெடித்துச் சிதறியது. அதன் சத்தம் ஆறேழு கிலோமீற்றர்களுக்கு அதிர்ந்தது. 800 மீற்றர் சுற்றுவட்டத்தை அழித்திருந்தது அங்கு விடப்பட்ட தெருநாய்கள் காணாமல் போயிருந்தன. அந்தக் கண்டுபிடிப்பிற்கு சண்டியன் எனப் பெயரிட்டனர். ஆம் அந்தச் சண்டியன்தான் முகமாலைப் பகுதியில் முன்னேறிய இராணுவங்களைக் கொன்றுகுவித்துக்கொண்டிருந்தது. இருந்தும் தலைவரின் பணிப்பிற்கு அமைய அவ் ஆயுதத்தைப் பாவிக்காமல் விட்டிருந்தனர். அதற்குக் காரணம் அவ் ஆயுதம் பாரிய உயிர்ச்சேதங்களையும் அழிவுகளையும் உண்டுபண்ணியதனாலயே அதைத் தடைசெய்தார்கள். எங்கள் போராட்டத்தை சரியான முறையில்த்தான் செய்திருந்தோம் என்பதற்கு இவ்வாயுதம் கைவிடப்பட்டதே பெரும் சான்று. ஒரு ஆயுதத்தையல்ல, இதுபோல பல ஆயுதங்களை உற்பத்தி செய்தனர் எங்கள் வீரர்கள். எதுவித வளங்களும் இல்லாதபோதும் எதிரி ஏவிய குண்டுகளை குடைந்து அதன் மருந்தில் உற்பத்தி செய்த ஆயுதங்கள்தான் எத்தனை எத்தனையோ அந்தக் கண்டுபிடிப்புக்களுக்காக நூற்றுக்கணக்கான மாவீரர்களைத் தியாகம் செய்திருந்தது இந்த மண் அந்த மண்ணில்தான் நாம் இப்போ சோம்பறிகளாக குந்தியிருக்கின்றோம் எங்கள் நிலங்கள் தரிசுநிலமாக மாறிக்கொண்டிருக்கின்றது … --------------- கூடுதல் படங்களும் மேலதிக படிமங்களும் இதற்குள் உள்ளன.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபொடியன்களை விட்டு நாம் வெளியேறப்போவதில்லை - யாழ் மக்கள் இராணுவமும் பொலீஸாரும் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். அவர்களை ஊக்குவிக்கும் முகமாக "இராணுவத்தினருக்கு உதவுவோம்" எனும் பெயரில் நிதிச் சேகரிப்பு நிகழ்வினையும் தேசியப் பாதுகாப்பு நிதியத்தையும் ஆரம்பித்துவைத்தார் லலித்.பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க நாட்டு மக்கள் அனைவரும் முப்படைகளுக்கு தாராள மனது கொண்டு உதவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பணத்திற்கு மேலதிகமாக மழைக்காலத்தில் பாவிக்கும் ரெயின்கோட்கள், தண்ணீர்ப் போத்தல்கள், கட்டில்கள், நீர்க் கொல்கலன்கள், அலவாங்குகள், குளிர்சாதனப் பெட்டிகள், அலுமீனியத்தால் உருவாக்கப்பட்ட ஏணிகள், மின் சுவிட்சுக்கள், கைப்பந்து மற்றும் ஏனைய விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றையும் பொதுமக்கள் இராணுவத்தினருக்குக் கொடுத்து உதவிட முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். லலித் அதுலத் முதலியின் தேசியப் பாதுகாப்பு நிதிக்கு நிகரான ஒரு நிதியத்தை பிரபாகரனும் ஆரம்பித்தார். அதற்கு தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதியம் என்று அவர் பெயரிட்டார். தமிழ் மக்களுக்கென்று தனியான வேண்டுகோள் ஒன்றினையும் பிரபாகரன் வெளியிட்டார், தலைவர் - 1980 களில் "தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். ஒடுக்குமுறைகொண்ட இராணுவ ஆட்சி தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் அழித்துவிட அரசாங்கம் முயல்கிறது. ஆனால், அடக்குமுறைகள் வெற்றிபெற்றதாக வரலாறுகள் உலகில் எப்பக்கத்திலும் இருந்ததில்லை. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களின் எழுச்சியை அடக்குமுறை மேலும் மேலும் உரமாக்கிவிடவே உதவும். சுதந்திரத்திற்கான மக்களின் அவாவையும் அடக்குமுறை ஊக்குவிக்கும். சுதந்திர எழுச்சிக்கான மக்களின் மனவுணர்வையும் அடக்குமுறை புத்துயிர் பெறச் செய்யும். எமது ஆயுத ரீதியிலான போர் முன்னெடுப்புக்களை அரசாங்கம் முகம்கொடுக்க முடியாது திணறுவது தெரிகிறது. ஆகவேதான் தனது கோபத்தை அப்பாவித் தமிழ் மக்கள் மீது அது காட்டுகிறது. தான் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அட்டூழியங்கள் ஊடாக தமிழ் மக்கள், போராளிகளை வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிடலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது.அரசாங்கத்தின் இச்சூழ்ச்சிகளை நாம் அறியாதவர்கள் அல்ல. இராணுவம் மக்களைத் தாக்குகிறது என்பதற்காக எமது விடுதலைப் போராட்டத்தை பிற்போடுவது விவேகமானதாக இருக்காது. தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் தமிழ் மக்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று அரசாங்கம் நினைப்பதைத் தவறு என்று நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களின் இராணுவத்தை நாம் தொடர்ச்சியான போர் ஒன்றிற்குள் வைத்திருக்க வேண்டும். இராணுவத்தை அவர்களின் முகாம்களுக்குள்ளேயே நாம் முடக்கி வைத்திருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் நாம் தனியாக நிற்கவில்லை. தமிழ் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் எமக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய மக்களின் அனுதாபமும் எம்பக்கம் இருக்கிறது. ஆனால், எம்மீது போடப்பட்டிருக்கும் அடக்குமுறை விலங்கினை நாமே உடைத்தெறிய வேண்டும், அதற்காக நாம் தொடர்ந்தும் போராட வேண்டும். இழப்புக்கள் இல்லாது எம்மால் எமக்கான விடுதலையினைப் பெற்றெடுக்க முடியாது. தியாகங்கள் இன்றி விடுதலை கிடைக்கப்பெற்றதாகச் சரித்திரங்கள் இல்லை. சுதந்திரம் கொண்ட , பாதுகாப்பான வாழ்வினை நாம் வாழவேண்டுமானால் நாம் தியாகங்களைப் புரிவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்". பிரபாகரனின் இந்தக் கோரிக்கை உள்நாட்டிலும் வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் மனங்களை வென்றது. அது அவர் எதிர்பார்த்த நிதியினையும் அவருக்கு வழங்கியது. யாழ்ப்பாணத்தின் இன்னும் வசித்துவரும் எனது நெருங்கிய உறவுகளை கொழும்பிற்கு வந்துவிடுமாறு அழைக்க நானும் மனைவியும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றோம். நாவற்குழி இராணுவ முகாமிலிருந்து ஏவப்படும் எறிகணைகள் எமது வீட்டுப் பகுதிக்குள்ளும் வந்து விழலாம் என்கிற சாத்தியம் இருந்ததனால் நாம் அஞ்சினோம். முதலில் இதுகுறித்து எனது தந்தையுடனும் மாமியாரோடும் பேசலாம் என்று நினைத்தோம். நாம் இதுகுறித்து தந்தையிடம் கேட்டபோது, "பொடியளை விட்டு விட்டு எங்களை ஓடச் சொல்கிறாயா? நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நாம் அனைவரும் இதுகுறித்துப் பேசி ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம். நாம் அவர்களுடன் தான் இருக்கப்போகிறோம்" என்று அவர் கூறினார். எனது மாமியாருடன் பேசும்போதும், "பொடியன்கள் எங்களுக்காகச் சண்டை பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களுடனேயே இருக்கப்போகிறோம்" என்று அவரும் கூறிவிட்டார். அவர்கள் இருவரும் அப்போதுதான் எழுபது வயதைக் கடந்திருந்தார்கள். எனது தங்கையும், மனைவியின் தங்கையும் அதே முடிவில் உறுதியாக இருந்தார்கள். பிள்ளைகளும் தான். எவருக்குமே யாழ்ப்பாணத்தையும், பொடியன்களையும் விட்டு விட்டுத் தப்பியோட விருப்பம் இருக்கவில்லை. நாவற்குழி முகாமையும் எமது கிராமத்தையும் பிரிக்கும் வயல்வெளிக்குச் சென்றேன். தூரத்தில் வரிசையாக அமைக்கப்பட்ட காப்பரண்களை என்னால் காண முடிந்தது. முகாமைச் சுற்றிப் போராளிகள் இந்தக் காப்பரண்களை அமைத்து வைத்திருந்ததுடன், முகாமை எப்போதும் தமது கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். ஒரு போராளி என்னுடன் பேசுகையில், "நாங்கள் முகாமைச் சுற்றி வளைத்திருக்கிறோம். அதனைச் சுற்றிக் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கிறோம். இராணுவத்தினர் வெளியே வரமுடியாது" என்று கூறினார். நான் அவர்களுடன் அப்பகுதியில் நெடுநேரம் நின்றிருந்தேன். உலங்கு வானூர்திகள் மூலம் உள்ளே அடைபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு பொருட்கள் இறக்கப்படுவது தெரிந்தது. அப்போராளி என்னுடன் தொடர்ந்தும் பேசுகையில், "யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவத்தை முடக்கும் நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகிறோம்" என்றும் கூறினார். போராளிகளின் மனோதிடத்தையும், எனது உறவினர்களின் உறுதியையும் கண்ட நாங்கள் நம்பிக்கையுடன் மீளவும் கொழும்பு திரும்பினோம். மக்கள் போராளிகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது தெரிந்தது, குறிப்பாக புலிகளுடன் அவர்கள் மிகவும் நெருக்கமாகக் காணப்பட்டார்கள். போராளிகளும் சிறிது சிறிதாக பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆரம்பித்திருந்தார்கள். மார்கழி மாதத்தின் இறுதிப்பகுதியிலேயே நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்டவற்றை எனது சிங்கள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். லேக் ஹவுஸ் ஸ்த்தாபனத்தின் மூத்த ஆசிரியரான மேர்வின் சில்வாவும் அவர்களுள் ஒருவர். அவர் என்னுடன் பேசும்போது, "சபா, இதுகுறித்து இங்கு எவருடனும் பேசாதீர்கள். இதைக் கேட்கும் மனோநிலையில் எவரும் இங்கு இல்லை. இராணுவ ரீதியில் தாம் வென்று வருவதாகவே இங்கு அனைவரும் நினைக்கிறார்கள். எங்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் பயிற்சியையும் வெளிநாடுகள் வழங்குகின்றன, ஆகவே நாம் வெல்வது உறுதி என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். அவர் மட்டுமல்ல, இங்கே பொதுவாக அனைத்துச் சிங்களவர்களும் அதையே நம்பினார்கள். இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர், அனுபவம் அற்றை ரஜீவ் காந்தி அரியணை ஏறியிருக்கும் நிலையில், அரசியலில் சாணக்கியமும், சூட்சுமமும் நிறைந்த ஜெயவர்த்தனவும் அவரது வலதுகரமாகச் செயற்பட்ட லலித் அதுலத் முதலியும் இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து எப்படியாவது இராணுவ ரீதியில் தமிழ்மக்களின் கோரிக்கைகளையும் அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டனர். மார்கழி 26 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டினை முற்றாக நிறுத்திவிடுவது என்று பாராளுமன்றம் முடிவெடுத்தது. பாராளுமன்றத்தின் இம்முடிவினை லலித் அதுலத் முதலி அறிவித்த செய்தியாளர் கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். இதுகுறித்து நான் வெளியிட்ட செய்தியின் முதலாவது வசனம் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு மார்கழி 27 ஆம் திகதி அச்செய்தி வெளியாகியிருந்தது, அரசியல் தீர்வொன்றைக் காணவே அரசு விரும்புகிறது. ஆனால் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிடுவதென்பது அதனைக் காட்டிலும் மிக முக்கியமானது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மனமுடைந்து போயினர். இது குறித்து அமிர்தலிங்கத்தின் கருத்தினையறிய நான் சென்றவேளை அவர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். அரசியல் அரங்கிலிருந்து மிதவாதிகள் முற்றாக அகற்றப்பட்டுவிட்டார்கள் என்பதை அவர் நன்கு அறிந்துகொண்டார். மிதவாதிகளை சிங்கள அரசியல்வாதிகள் கைவிட்டு விட்டார்கள் என்று அவர் கூறினார். தமிழ் மக்கள் முன்னால் தம்மால் போகமுடியாது ஆகிவிட்டது என்று அவர் என்னிடம் கூறினார். அன்டன் பாலசிங்கம் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டே அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசமுடியும் என்று லலித் அறிவித்ததையடுத்து புலிகளும் தமது பதிலினை சென்னையில் அறிவித்தனர். அவர்களின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் பின்வருமாறு தெரிவித்தார், "தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இராணுவ வழியில் வழங்கவே அரசாங்கம் உறுதிபூண்டிருப்பது தெரிகிறது. இதுதான் அவர்களுக்குத் தேவையென்றால், நாமும் அதற்கான பதிலை இராணுவ வழியிலேயே வழங்க ஆவலாக இருக்கிறோம். எம்மை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும்வரை எமது நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்துவோம்". 1984 இல் பலமான இராணுவக் கட்டமைப்பொன்றினை உருவாக்குவதன் மூலம் தமிழருக்கான தனிநாட்டினை உருவாக்கிவிட பிரபாகரன் உறுதிபூண்டபோது அவருடன் கூடவிருந்தவர் என்கிற வகையில் இராணுவ ரீதியில் இராணுவத்தை வலுவிழக்கச் செய்யலாம் என்பதை பாலசிங்கம் முழுவதுமாக நம்பினார். இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஏறத்தாள 75 வீதமான நிலப்பரப்பினைத் தமது கட்டுப்பாட்டில் புலிகளால் வைத்திருக்க முடிகிறதென்றால் அவர்கள் 1984 இல் இட்ட உறுதியான அடித்தளத்தினாலேயே இது சாத்தியமானது என்றால் அது மிகையில்லை (2005 இன் படி).1 point- யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்?
அவரின் நம்பிக்கையில் நிஜமாகவே அவர் ஜேசுநாதரைப் பார்த்திருக்கிறார்......அல்லது ஜேசுநாதர் உங்களைக் கருவியாகப் பாவித்து அவரை ஆசீர்வதித்திருக்கிறார்......! 😁1 point- யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
வேடிக்கை என்னவென்றால்.. வகுப்பறையில் ஆசிரியைகளை ஏற்றுக் கொள்ளும் மாணவர்களும் பெற்றோரும்.. அதிபர் அலுவலகத்தில் ஒரு ஆசிரியையை ஏற்றுக் கொள்ள தயங்குவது எங்கேயோ இடிக்குதே..?! எல்லாம் குத்தியரின் திருவிளையாடலாகத்தான் இருக்கும். தனக்கு வேண்டியவரை உள்ள போட.. இப்படி புரளியை கிளப்பி விட்டிருப்பார். அவர் பெயருக்குத்தான் மீன்பிடி அமைச்சர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை முடிசூடா சுயம்பு மன்னன். எல்லாத்துக்குள்ளும் தன் மூக்கை நுழைப்பதே அவரின் கொள்கை. இதனால் தான் முன்னர் அடிவாங்கிக் கொண்டு ஹிந்தியாவுக்கு ஓடினவர்.1 point- யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
அரசியல் தலையீடாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். திரு. இந்திரகுமார் பதவிக்கு வந்த பின் டக்ளசை வந்து சந்திக்கும் படி அழுத்தம் கொடுக்கப் பட்டதாக அறிந்தேன். அவர் சில நாட்கள் தள்ளிப் போட்டார், இறுதியில் போய் சந்தித்தாரா என அறியேன். மறு பக்கம் பிரதி அதிபராக இருந்த திருமதி செல்வகுணாளன், புலத்தில் இருக்கும் பழையமாணவர் அமைப்புகளோடு தொடர்பு கொண்டு வெளிநாட்டுக் காசு பாடசாலைக்கு வர முயற்சிகள் செய்து வருபவர் (எல்லாக் காசும் பாடசாலைக்குத் தான் போகிறதா என்பது மில்லியன் டொலர் கேள்வி😎!) இந்தப் பின்னணியில் குறுகின காலத்தில் திரு.இந்திரகுமாரை அகற்றி, இவருக்கு பதவியுயர்வு வந்திருக்கிறது. (நான் மத்திய கல்லூரிப் பழைய மாணவன் என்பதால் இந்த வசந்தி/துலாபாரம்/பின் கதையெல்லாம் எனக்கு வந்து விடும் உடனே!)1 point- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
செய்தி கேட்ட கணம் முதலாய் சேயைத் தேடிய தாய் தான் சிந்தை எங்கும் வந்து போகின்றாள் அக்காப் பிள்ளை அம்மா ஆரோ பெத்த பிள்ளை என்னைக் கண்ட போதே உச்சி மோந்து எஞ்சில் ததும்ப முத்தம் தந்து உவகை கொண்டு உருகி நின்றவள் பெத்த பிள்ளை தன்னை காண வருவானென்று எத்தனை ஆண்டாய்க் காத்திருந்தவள் கண்டிருந்தால் எப்படி எல்லாம் அணைத்து மகிழ்ந்திருப்பாள். எல்லாம் கானலாகிப் போனதுவே Inuvaijur Mayuran0 points- வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
எதோ ஒரு மூலையில் தொங்கிக்கொண்டு கருத்து எழுதும் உங்களுக்கு வேறென்ன வேலை. sorry.com0 points- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
இலங்கை வந்தாலோ அல்லது அவர்களை சிறப்பு முகாமிலிருந்து சுதந்திரமாக நடமாட வெளியே விட்டாலோ இந்தியாவின் வண்டாவாளங்கள் எல்லாம் வெளித்தெரிய ஆரம்பிக்கும். எனவே அவர்களை உள்ளே வைத்திருந்து அப்படியே கொல்லுவதுதான் இந்தியாவுக்குள்ள ஒரே தெரிவு. ☹️0 pointsImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024