Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    33600
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3061
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33035
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53011
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/04/24 in all areas

  1. புலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை. அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது.. வல்லை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்லை சந்தியில்.. தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார். வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இராணுவ பயிற்சிக்கூடங்களும்.. தலைமையகங்களும்... ஏக்கர் கணக்கில் காணிகள் இன்னும் இராணுவம் வசம். கடற்படை வேறு கடல் பக்கமா அபகரிச்சு நிற்குது. எல்லா இடமும் புத்தர் ஒவ்வொரு அரசமரமா குந்தி இருக்கிறார். உவங்கட விசுவாசத்தை பார்த்தால்.. புத்தரே தலை சுத்தி விழுந்துடுவார். ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள். மதியம் பசிக்கும் தானே. அப்போ.. சாப்பிட ஒரு இடம் போனம். விளம்பரத்துக்காக இல்லை. உண்மையாகவே இடமும் உணவும் இயற்கை காட்சிகளும் மனதுக்கு குளிர்ச்சியாக இருந்திச்சு. உள்ளூர் தகவலின் படி (உண்மை பொய் உறுதிப்படுத்தப்படவில்லை) புலம்பெயர் நபரின் முதலீட்டில் உருவான.. ஒரு விடுதியுடன் கூடிய உணவகம் கிடைத்தது. வெள்ளையள் அங்கும் சைக்கிளில் ஓடி ஓடி பேரம் பேசிக்கிட்டு இருப்பதைக் காண முடிக்கிறது. வெள்ளைக்காரனாவது காசை விடுறதாவது. உணவகத்தின் உள்.. எல்லாம் நல்லாத் தான் இருக்குது. உணவும். விலையும் பறுவாயில்லை. ஆனால் உணவகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிங்களப் படைமுகாமில் இருந்து ரபான் ப்ரித்.. நாள் முழுவதும். செவிக்கும் மனதுக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சிங்கள பெளத்தர்களே இல்லாத இடத்தில் எதுக்கு இந்த வேலை. மிக வரைவில்.. அந்த இடத்தில் புத்தர் நிரந்தரமாக குடியிருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம். சரி.. என்று சற்றே நடந்து சுவர்களை நோக்கினால்.. வட ஹிந்திய நடிகைகளுக்கும் ஹிந்திய தலைவர்களுக்கும் முன்னிடம். மோடி ஜீ வேற இருக்கிறார். ஈழத்தமிழர்கள் கப்பல் வரலாறும் ஒரு பக்கம் போட்டிருக்கு. தமிழன் சுழியன்.. என்றது அப்பவே தெரியும். ஆனால் வல்வை மாதிரி சுழியனாக இருப்பது கடினம் தான். அழகான வல்வைக்கடல். ஏனே ஆர்ப்பரிப்பதை நிறுத்திவிட்டது. அதற்கும் வீரம் வீழ்ந்துவிட்டதோ என்னவோ..??! (காட்சிக்கு ஏற்ற வசனம்.. அப்புறம் வல்வை மக்கள் தங்கள் வீரத்தைப் பற்றி கதைப்பதாக சண்டைக்கு வரக்கூடாது. உங்கள் வீரத்தை உலகறியும்.) இந்த விடுதியின் கண்ணாடிக் கூட்டில் இருந்தான பார்வை. இங்கு சிங்களவர்களும்.. குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு வரும் இராணுவத்தின் உறவினர்கள் பெருமளவில் வந்து போகினம். உண்மையில்.. யாழ்ப்பாணம் காண ஆசையில் வரும் சிங்களவர்களும் உண்டு. அவர்களை வரவேற்பதில் தவறில்லை. நாம் தென்னிலங்கையை ரசிக்கவில்லையா..??! இந்தப் பக்கம் இருந்து தான் அந்த எரிச்சலூட்டும் ரபான் பிரித் வந்தது. ஒரு கடற்கரையை சோலையாக்கி வாழும் வல்வை மக்களுக்கு சலூட். இஸ்ரேலாம் இஸ்ரேல். வல்வையோடு நிற்காமல்.. தீவகமும் போனது.. நயினை.. அம்மாளாச்சி நல்ல பெயிட் கியின்ட் எல்லாம் அடிச்சு நல்ல களையா இருக்கா. என்ன அவாவின் பக்தர்களை காவிக் கொண்டு போற படகுகளுக்கு தான் யாரும் பெயின்ட் அடிக்கிறாங்கள் இல்லை. நயினாதீவு இறங்கு துறையும் இப்ப நல்லா இருக்கு. ஆனால்.. சில அடிப்படை பழவழக்கங்களை மாத்திறது கஸ்டம். எங்கும் கச்சான் கோதும் கஞ்சலும். சிங்களவர்களும் அதே. நயினை நாகபூசனி அம்மன் கோவில்... தற்போது. அம்மனை தரிசிக்க வந்த கணவாய். நாகபூசனி அம்மனுக்கு அருகில் வந்துவிட்ட புத்தர். வெள்ளைவெளேர் என்று பரந்து காட்சி அளிக்கிறார்... சாரி காலை நீட்டி படுத்திருக்கிறார். தீவகத்தின் அழகிய சன் - செட் உடன் முடிச்சுக் கொள்ளுறம். ஆக அலட்டினால்.. வாசிக்கவும் நேரமில்லை.. மிணக்கடவும் நேரமில்லை. இறுதியா.. ஒன்று சொல்ல மறந்தது.. தீவகத்தில் இருந்து அராலிப்பக்கமா தனிச்சிங்களத்தில் எதையோ எழுதி வைச்சு கொப்பேகடுவ.. போய் சேர்ந்த இடத்தை சிங்களவருக்கு மட்டும் திறந்து விட்டிடுருக்கிறாங்கள். ஐயாவுக்கு சிலை வைச்சு புகழஞ்சலியோ இல்லை.. குடியேற்றமோ தெரியாது. எங்கட டமிழ் டேசியக் கட்சிகளுக்கு தமது தேசத்தில் நடப்பத்தைக் கவனிக்க நேரமில்லை. கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும். இதனையே சிங்களவர்கள்.. ஹிந்தியா.. சீனா.. சர்வதேசம்.. மட்டுமல்ல.. தமிழர்களில் சிலரும் விரும்பினம். தமிழன் பலமாகக் கூடாது. அதை களத்தில் நல்லாச் செய்யுறாங்கள்.
  2. தூய அடையாளம் ----------------------------- 10ம் வகுப்பு சோதனைக்காக அடையாள அட்டை ஒன்றை எடுக்குமளவும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என்று ஒன்று இருக்கின்றது, அது மிகவும் தேவையானது என்று உணர்ந்திருக்கவில்லை. அந்த விண்ணப்ப படிவத்தில் முழுப்பெயர் தப்பாக இருக்கின்றது என்று ஆசிரியர் சொல்ல, பின்னர் அதை மாற்றுவது கூட முடியாமல் போனது. முதன்முதலாக இலங்கையில் வேறு இன மக்களின் நடுவில் வாழ ஆரம்பித்த பொழுது தான், அடையாள அட்டையை தாண்டிய விடயங்கள் தெரியவந்தது. மொழி, உணவு, மதம் என்பன மட்டும் இல்லை, இனக் குழுக்களின் நடை, உடை, பாவனைகளில் கூட தனித்துவம் இருந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் ஒரு சொல்லை ஒருவர் சொன்னாலே, அவர் இந்த இனமா அல்லது அந்த இனமா என்று கணிக்கக்கூடிய வகைகளில் மனிதர்களுக்கு இடையே தனித்துவம் இருந்தது. புலம் பெயர்ந்த பின், குடியேறிய நாடுகளில் ஒரு அடையாளம் வழங்கப்பட்டது. பெரும்பாலும் 'இந்தியர்' என்ற ஒரு வகைக்குள் நாங்கள் அடக்கப்பட்டோம். இந்தியர்கள் தென்னிந்தியாவா என்று கேட்டனர், தென்னிந்தியர்கள் கேரளாவா என்றனர், இல்லை இல்லை ஶ்ரீ லங்கா என்று என் அடையாளத்தை நிலைநிறுத்தவே நிறைய சக்தி தேவைப்பட்டது. ஒரு தடவை ஒரு பங்களாதேஷ் நண்பரை நீ இந்தியாவா என்று தெருவில் ஒருவர் கேட்க, அவர் மிகவும் கோபப்பட்டு, எகிறிக் குதித்து பனியில் சறுக்கி விழுந்து போனார். அவருக்கு அவரின் அடையாளம் அவ்வளவு அவசியமான ஒன்றானதாக இருந்திருக்க வேண்டும். உண்மையில் எங்களின் தலைமுறைக்கு அடையாளம் என்பது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. நாங்கள் அங்கிருந்து கொண்டு வந்த அடையாளங்களுடனேயே இங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புலம்பெயர் தேசங்களில் இன்னும் இன்னும் அடையாளத்துடன் அதிகமாக ஒட்டியுள்ளோம் என்று தான் சொல்லவேண்டும். இப்படியே எங்களின் வாழ்க்கைகள் முடிந்தும் விடும். ஆனால், பிரச்சனை அடுத்த மற்றும் பின் வரப் போகின்ற தலைமுறைகளுக்கே. இங்கு ஒரு பல்கலையில் இந்த விடயத்தை ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கின்றார்கள். ஸ்பானிஷ் மொழி பேசும் தென்னமெரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் இடையே இந்த ஆய்வைச் செய்துள்ளனர். ஸ்பானிஷ் மொழி பேசும் ஒரு பெரும் சமூகமே இங்கிருப்பதால், அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறைகளில் அடையாளம் என்பது ஒரு சிக்கலான ஒரு விடயமாக இருக்காது என்றே உடனே எண்ணத் தோன்றும். ஆனால், அவர்களின் நிலைமையும் எங்களின் நிலைமையும் ஆச்சரியமாக ஒன்றாகவே இருக்கிறது. அச்சு அசலாக ஒன்றாக இருக்கின்றது. புதிய தலைமுறை ஒரு லத்தீன் அமெரிக்கராக இருக்க வேண்டிய அளவிற்கு லத்தீன் அமெரிக்கராக இல்லை என்று புலம் பெயர்ந்த தலைமுறை குற்றம் சாட்டுகின்றது. புதிய தலைமுறைக்கு ஸ்பானிஷ் மொழியே சரியாகத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. புதிய தலைமுறையோ எங்களுக்கு ஸ்பானிஷ் முற்றாகவே விளங்குகின்றது, ஆனால் நாங்கள் ஸ்பானிஷில் பதில் சொன்னால் இவர்கள் எங்களின் உச்சரிப்பை நக்கலும், நையாண்டியும் செய்கின்றார்கள் என்று முந்தைய தலைமுறையை நோக்கி விரலை நீட்டுகின்றனர். அமெரிக்கர்களோ எங்களின் சில ஆங்கில வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்கின்றனர். நாங்கள் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றோம் என்று ஆதங்கப்படுகின்றனர். மொழி விடாது போல.
  3. நல்ல செயல். இதில் பங்குபற்றியவர் உறவினர் மூலம் அறிந்தேன். சிங்கலவர்களும், அவுஸ்ரெலியா, கனடா, பிரான்ஸ் தமிழர்களும் பங்கபற்றி உள்ளார்கள்.
  4. சிறு வயதில், ஊரில் இருந்த நாட்களில், வீட்டிற்கு அப்பாவின் நண்பர்கள் எந்நேரங்களிலும் வருவார்கள். பலர் தேநீர் கேட்பார்கள். கேட்காதவர்களுக்கும் தேநீர் கொடுக்கப்படும், அது ஒரு உபசரிப்பு, மரியாதை போல. சீனியின் அளவு, சாயத்தின் அளவு போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இப்பொழுது காலம் மாறி, இடமும் மாறிவிட்டது. கேட்பதற்கும் தயக்கம், கொடுப்பதற்கும் தயக்கம், அளவுகள் வேறு தனித்தனியாகிவிட்டது. ** ஒரு கோப்பை தேநீர் -------------------------------- வீட்டுத் தவணைக் கட்டணம் வாகன தவணைக் கட்டணம் வீட்டுக் காப்புறுதி பொருள் காப்புறுதி மருத்துவக் காப்புறுதி கண்ணுக்கு தனிக் காப்புறுதி பற்களுக்கு புறம்பாக இன்னொன்று மரணக் காப்புறுதி வரை கட்ட வேண்டும் தண்ணீர் காஸ் கரண்ட் இன்டர்நெட் இரண்டு வகை ஃபோன்கள் குப்பை இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணங்கள் ஆர்வம் அதிகமானால் நெட்ஃபிளிக்ஸ் பிரைம் ஐபி டிவி பாக்ஸ் கேபிள் சாட்டிலைட் யூடியூப் டிவி ஸ்லிங் இப்படியும் சில செலவுகள் இருக்கும் கோவில்கள் சங்கங்கள் மையங்கள் அமைப்புகள் நிறுவனங்கள் இவையும் கையை எதிர்பார்க்கும் விழாக்கள் கொண்டாட்டங்கள் விருந்தினர்கள் தவிர்க்க முடியாதவை பயணங்கள் கட்டாயப் பயணங்கள் சொந்தங்கள் பொறுப்புகள் கடமைகள் இதில் எதையும் விடவும் முடியாது வழமையான வீட்டுச் செலவுகள் பள்ளிச் செலவுகள் பள்ளிக்கு பின் வரும் செலவுகள் இவை ஒரு தனிக் கணக்கு சாஸ்த்ரிய கலைகள் அரங்கேற்றம் சாமத்திய வீடு என்றால் கட்டுக் கட்டாக வேண்டும் இத்துடன் சேமிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர் இவைக்காக கண் முழித்தால் கண் மூடும் வரை ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் வீடு தேடி வந்தால் இருக்க விட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள்.
  5. அண்மையில் பிரான்சில் இருந்து ஒருத்தர் நயினாதீவு கும்பாபிசேகத்தன்று தன் மகளின் திருமண நிகழ்வினை முன்னுறுத்தி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வேட்டியும் சேலையும் இலவசமாக.. கொடுத்தாராம். 23 கோடி செலவு. ஓசி வேட்டிக்கும் சேலைக்கும் அலையுற அளவுக்கு எங்கட தாயக மக்கள் இல்லை... சில வருமானம் குறைந்த மக்கள் கூட தரமானதை கொடுத்தால் தான் வாங்குவினம். அது வரவேற்கப்படனும். ஆனால்... குறிக்கட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் ஓடும் பயணிகள் படகுகளில் கைவைச்சுப் பிடிக்க முடியாத அளவுக்கு கறள். ஆணி எல்லாம் கிளம்பி வெளில நிற்குது. ஆண்கள் பெண்கள் என்று அடசி குப்பை தொட்டி கொண்டு போற மாதிரி கொண்டு போறாங்கள் ஆக்களை. இந்த 23 கோடியை வைச்சு இரண்டு தரமான சர்வதேச சந்தையில்.. பிரான்சில் இல்லாத பயணிகள் படகுளா.. வாங்கி.. ஓட்டிறவனின் வயித்திலும் அடிக்காமல்.. ஒரு 20% வருமானத்தை பாரமரிப்பு செலவுக்கு வங்கியில போடு மாதாமாதம்.. மிச்சத்தை நீங்க எடுங்க என்றால்.. சேவை சிறப்பாக நடக்குதோ இல்லையோ என்று பாருங்கள். அங்கால சொறீலங்கா நேவி செகுசுப் படகுகளில் வருகினம்.. போகினம். அவைக்கு மக்களின் வரிப்பணத்தில் உல்லாசம். வரி கட்டிற சனம் கறள் ஆணி குத்தி ஏற்பு வலி வந்து கிடக்கப் போகுதுகள். சேவையில் உள்ள எல்லாப் படகுகளும் மீள் அமைக்கப்படனும்.. நவீன வசதிகளுடன். அதையாவது செய்யுறாங்களா இல்லை. டக்கிளஸ் வாக்கை வாங்கிறான்.. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் பற்றி அவனுக்கு ஒரு சிந்தனையும் இல்லை. என்ன வாற வெற்றிடங்களுக்கு காசை வாங்கிக் கொண்டு தகுதி இல்லாததுகளை போட்டு போலிப் பெயர் வாங்கிக்கிறான். அந்த வகையில்.. லெபரா பாஸ்கியின் இந்த வெற்றிகரமான முயற்சிக்கு பாராட்டுதல் வேண்டும். அதன் வெற்றிக்குப் பின்னால்.. அவர் சந்தித்த சர்ச்சைகளும் பல.
  6. இலங்கை அரசியலமைப்பின்படி இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி கட்சிக்குள் பிரச்சனையென்றால் இலங்கை நீதி மன்றைத்தான் நாடவேண்டும். இலங்கையில் நீதி செத்துவிட்டது என்று அவர்கள் சொன்னது இனங்களுக்கிடையே காட்டப்படும் பாகுபாடு சம்பந்தமான இனப்பிரச்சனை பற்றி. இன பிணக்கும் கட்சியும் ஒன்றல்ல, நீங்கள்கூடத்தான் ஈழமக்கள் என்றபேரில் கட்சி நடத்துகிறீர்கள் அதனால் நீங்கள் ஈழமக்கள் எனும் இனத்தால் அமைச்சராக்கப்பட்டவர் என்று பொருளாகிவிடுமா? அல்லது ஈழமக்களும் நீங்களும் ஒன்றாகிவிடுமா?
  7. மயிலிறகு......... 04. அப்போது கனகம் என்ன மயூரி பூவனத்தின் கல்யாண விடயங்கள் எப்படிப் போகுது என்று கேட்கிறாள். அதுதான் கனகம் நானும் யோசிக்கிறன். ஒரு வழியும் காணேல்ல. மாப்பிள்ளை பொடியன் நல்ல பிள்ளை. அவை சீர்செனத்தி என்று எதுவும் கேட்கேல்ல, அதுக்காக நாங்கள் பிள்ளையை வெறுங்கழுத்தோட அனுப்ப ஏலுமே. ஏதோ அவளுக்கு செய்யவேண்டியதை செய்துதானே அனுப்பவேணும். ஓம் அதுவும் சரிதான் மயூரி, நீ தினமும் கும்பிடுகிற அம்பாள்தான் உனக்கு ஒரு வழி காட்டுவாள். கனக்க யோசிக்காத என்று சொல்கிறாள். பின் இருவரும் நீராடி ஈரஉடுப்புகளையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அப்ப நான் போட்டு பிறகு வாறன் மயூரி என்று சொல்லி கனகம் செல்ல அவள் பின்னால் கோமளமும் தாயுடன் போகிறாள். மயிலம்மாவும் ஒயிலாக நடந்து படியேறி வீட்டுக்குள் வர முன் அறையில் இருந்து வாமனும் சுந்துவும் போனமாதம் நடந்த ஒரு சம்பவம் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுந்து வாமனிடம், எட வாமு, நாங்கள் அந்த மதகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தால் அவருக்கென்ன வந்தது அவற்ர வீட்டுக்குள்ளேயே போனனாங்கள். அது இல்லடா சுந்து நாங்கள் அந்த மாங்காய்க்கு கல் எறிந்ததுதான் பிரச்சினை. திண்ணையில் ஆச்சி இருக்கிறா, இங்கால அவற்ர வைப்பு நிக்குது அதுதான். ஓ....அப்ப அவற்ர வைப்பாட்டிக்கு கெத்து காட்ட எங்களை பேசிபோட்டுப் போறார் என்கிறாய். ஓமடா .....எண்டாலும் நீ ஒண்டைக் கவனிச்சனியே அந்தப் பெண் இஞ்சாலுப் பக்கமாய் வந்து ரெண்டு மாங்காயை மதிலுக்கு மேலால் போட்டுட்டு மற்றதுகளைப் பொறுக்கிக் கொண்டு போனதை. ஓமடா....நானும் பார்த்தனான்.....எண்டாலும் நீ தடுத்திருக்கா விட்டால் அடுத்த கல்லால அவற்ர மண்டையை உடைத்திருப்பன். போடா ....உனக்கு விஷயம் தெரியாது சுந்து....நான் பகுதி நேரமாய் வேலை செய்கிற அரசு விதானையார் இருக்கிறார் எல்லோ அவரிட்ட இவர் ஒருநாள் ஒரு ஆலோசனை கேட்க வந்தவர்.அவரும் இவரோட கதைத்து அனுப்பினாப்பிறகு என்னிடம் சொன்னவர், இப்ப வந்தவர் யார் தெரியுமோ, இவர்தான் வைத்திலிங்கம். ஆனால் எல்லோருக்கும் காசை வட்டிக்கு விட்டு தொழில் செய்கிறவர்.அதால இவருக்கு "வட்டி வைத்தி"என்றுதான் சொல்லுறவை.உவங்களோட வலு கவனமாய் புழங்க வேண்டும்.கொழுவுபட்டால் "பிலாக்காய் பிசின்மாதிரி" லேசில பிரச்சினை தீராது.உவர் கொஞ்ச காலத்துக்கு முந்தித்தான் ஒரு பிள்ளையை அவளின் பெற்றோரிடம் இருந்து உங்கட வட்டிக்கும் முதலுக்குமாய் இவள் என்னோட இருக்கட்டும் என்று சொல்லி கொண்டு வந்திட்டார். அதால அவற்ர மூத்த சம்சாரமும் பிள்ளைகளும் பேச்சுப்பட்டு அடிபாடுகளுடன் இருக்க நான் போய்த்தான் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தனான். பிறகு அவளுக்கு தனியாக வீடு வளவும் குடுத்து வைத்திருக்கிறார். அது இதுவாகத்தான் இருக்கும். அவையளுக்கும் நிறைய சொத்து பத்தெல்லாம் இருந்தது எல்லாம் இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி வட்டி குடுத்து எல்லாம் பறிபோட்டுது.பத்தாதற்கு பெட்டையையும் கூட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கிறார் என்று சுந்துவுக்கு வாமு சொல்கிறான். இவர்கள் கதைப்பது தன்பாட்டுக்கு காதில் விழ பக்கத்து அறையில் மயிலம்மா ஈரப்பாவாடையை கால்வழியே கழட்டி விட்டுட்டு வேறு ஆடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்.ஒரு கனம் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பம் தெரிய தன்னை மறந்து ரசித்தவள்..... ம்.....என்று ஒரு பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகிறது. பொடியங்கள் கதைக்கும் "வட்டி வைத்தி" பற்றி அவளுக்கும் தெரியும்.அவரின் மனைவியுடன் மயிலம்மா நல்ல பழக்கம். அவர்களின் வயல் அறுவடைக்காலங்களில் மயிலம்மாவும் கனகமும் அங்கு சென்று வேலை செய்துவிட்டு கூலி வாங்கிக் கொண்டு வருவது வழக்கம். அவர் வைத்திருக்கும் பொடிச்சியைப் பற்றியும் அவர் மனைவி மயிலம்மாவிடம் மனம்விட்டு கதைக்கும் நேரங்களில் சொல்லி இருக்கிறா. அதுவும் வைத்தி வயல் பக்கம் வந்துட்டு விசுக்கென்று மோட்டார் சைக்கிளை திருப்பி சீறிக்கொண்டு போகும்போது ....ம் ...."சொந்தக் காணிக்குள் உழமுடியாத மாடு வெளியூருக்கு போச்சுதாம் பவிசு காட்ட " என்று ரெண்டு கையையும் விரிச்சு நெளிச்சுக் காட்டுவாள்..... என்னக்கா இப்படிச் சொல்லுறியள் என்று கேட்டால் பின்ன என்னடி, அந்தப் பொடிச்சிதான் பாவம். இது அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு சோத்தையும் விரலால அலைஞ்சு போட்டு அப்படியே வேட்டி போனஇடம் தெரியாமல் குப்புறப் படுத்திட்டு சாமத்தில எழும்பி வரும். இதெல்லாம் சும்மா ஊருக்கு பவிசு காட்ட வேறு ஒன்றுமில்லை என்று சொல்லுவாள். அங்கால பூவனம் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து தருகிறாள். சுந்து அவளிடம் இப்ப எங்களுக்கு வேண்டாம் எடுத்துக்கொண்டு போ என்று சொல்ல அவளும் எனக்குத் தெரியும் நீங்கள் என்ன குடிக்கிறீங்கள் என்று சொல்லி நெளித்துக் கொண்டு போகிறாள். அப்போது வாமு சுந்துவிடம் டேய் , உன்ர தங்கச்சி பூவனத்தின்ர சம்பந்தம் எந்தளவில இருக்குது என்று கேட்கிறான்.... அதெடா நல்ல சம்பந்தம்தான் ஆனால் நடக்கிறது சந்தேகமாய்தான் இருக்கு......ஏனடா ......வேறை என்ன பணம்தான் பிரச்சினை. உனக்குத்தான் தெரியுமே அப்பா நல்லா சம்பாதித்தவர்தான், அம்மாவையும் வேலை செய்ய விட்டதில்லை.எங்களையும் நல்லா பார்த்துக் கொண்டவர். ஆனால் சொத்தென்று பெரிதாய் எதுவும் சேர்த்து வைக்க வில்லை.அவர் எதிர்பாராமல் இறந்து போனபடியால் எங்களிடம் மிஞ்சியது இந்த வீடும் வளவும் பின்னால் இருக்கும் வயலும்தான். இந்த நிலைமையில் அம்மா எங்களை ஆளாக்கி படிப்பிக்கிறதே பெரிய காரியம். நானும் இனி பல்கலைக்கழகத்துக்கு போகவேணும். அந்தக் கடிதத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். அது வந்தாலும் அங்கே போறதுக்கு கூட என்ன வழியென்று தெரியவில்லை. அப்படி கடிதம் வந்தாலும் நீ யோசிக்காத சுந்து. நான் மோட்டார் சைக்கிள் வாங்கவென்று சேர்த்து வைத்திருக்கிற காசை உனக்குத் தருவன். அதுக்கில்லையடா வாமு, சிலரிடம் பணம் தானாய்ப் போய்க் குவியுது, நாங்கள் முயற்சி இருந்தும் கால்காசுக்கு கல்லில நார் உரிக்க வேண்டிக் கிடக்கு. வாழ்க்கை என்றால் அப்படித்தான் சுந்து. நாளைக்கு நீயும் பெரிய ஆளாய் வருவாய்.வறுமையும் இப்படியே நீடிக்காது.........! மயில் ஆடும்.........! 🦚
  8. மயிலிறகு........ 03. அப்போது மயிலம்மாவின் மகன் சுந்தரேசன் என்னும் சுந்துவும் அவன் நண்பன் வாமதேவனும் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.அம்மா வேலர் அப்பா இறந்துட்டாராம்.....உங்களிடம் சொல்லச் சொன்னவை என்று சுந்து சொல்கிறான். எப்படியும் இன்று பின்னேரம் எடுத்து விடுவார்கள். சரியில்லை, எதுக்கும் நாங்கள் நேரத்துக்கு போவம் என்னடி கனகம். ஓம் மயூரி, நான் போய் சீலை மாற்றிக்கொண்டு வருகிறன்.பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போக கிளம்பியவளை நில்லடி நானும் உன் கூடவாறன் என்று சொல்லி விட்டு இரண்டு பொடியலையும் பார்த்து பிள்ளைகள் நான் சமைச்சு வைத்திருக்கிறன், வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ என்று சொல்லும் போது மயிலம்மாவின் மகள் பூவனமும் கனகத்தின் மகள் கோமளமும் தனித்தனி சைக்கிளில் வந்து இறங்குகின்றனர். அம்மா வேலர் அப்பா செத்துட்டாராம் இண்டைக்கே எடுக்கினமாம் என்று சொல்ல ....ஓம் இப்பதான் அண்ணன்மார் சொன்னவங்கள். சரி, நீங்களும் அண்ணன்மாரோட கொழுத்தாடு பிடிக்காமல் இருக்கிறதை போட்டுச் சாப்பிடுங்கோ. நாங்கள் அங்க போயிட்டு வாறம் என்று வீட்டினுள் போகிறாள். அறைக்குள்ளே கொடியில் கிடந்த பாவாடையை எடுத்து அதில் இருந்த கிழிசலை ஒருபக்கம் மறைவாக விட்டு கட்டிக்கொண்டு இருப்பதிலேயே நல்லதொரு வெள்ளைப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். மயிலம்மா மகள் பூவனம் பெரியவளான நாள் தொட்டு தனக்கென ஒரு சீலையோ நகையோ வாங்கியதில்லை.கிடைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவளுக்கென ஆடைகளும், நகைகளும் வாங்கி விடுவாள். மேலும் சுந்தரேசனின் படிப்புக்கும் காசு தேவையாய் இருக்கும். ஆனாலும் அவை போதாது என்று அவளுக்கும் தெரியும். அவள் வெளிக்கிட்டு வெளியே வரும்போது மயிலம்மாவிடம் ஒரு கம்பீரமும் சேர்ந்து வருகின்றது. இனி அந்த அயலைப் பொறுத்தவரை எங்கும் அவள் பேச்சு செல்லும். அனைவரும் அவளுக்கு மரியாதை குடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் இருக்கும்வரை அந்த ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் கணவன் லொறியால் மோதுண்டு இறந்தபின் அவள் தானாகவே சிலபல நல்ல காரியங்களில் முன்னுக்கு நிற்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். மயிலும் கனகமும் தாழ்வாரத்தில் கிடந்த "பாட்டா"வைப் போட்டுக் கொண்டுவந்து படலையைத் திறக்க வெளியே அவர்களின் பசுமாடு கன்றுடன் நிக்கிறது அவற்றை உள்ளே விட்டு சத்தமாய் பிள்ளை லெச்சுமி வருகுது கட்டையில் கட்டிப் போட்டு குண்டானுக்குள் இருக்கும் கழனிய எடுத்து வை என்று சொல்லி படலையை சாத்தி கொழுவிவிட்டு வெளியில் இறங்கி நடக்கிறார்கள்.பக்கத்தில் அம்மன் கோயில் குறுக்கிட அங்கு டேப்பில் சன்னமாய் தேவாரப்பாடல் ஒலிக்கின்றது.அங்கு வந்த மயிலம்மா ஐயரிடம் ஐயா வேலர் மோசம் போயிட்டாராம் என்று சொல்லிவிட்டு, இனி ஐயா பிணம் சுடுகாட்டில் தகனமாகும் வரை நடை திறக்க மாட்டார் என்று கனகத்திடம் சொல்லிக்கொண்டு சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டு செத்த வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் கிருத்தியம் முடிந்து பாடை வேலியைப் பிய்த்துக் கொண்டு போக இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.செத்தவீட்டால் வர நாலு மணிக்கு மேலாகி விட்டது. வீட்டில் நாலு பொடியலும் வெகு மும்மரமாய் தாயம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே சத்தமும் கும்மாளமுமாய் இருக்குது.அதைப் பார்த்த கனகம் ஓமனை உந்த மும்மரத்தை படிப்பிலே காட்டினால் எங்கேயோ போயிடுவீங்கள்,இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று சொல்ல, விடு கனகம் அதுகளும்தான் என்ன செய்யிறது.சும்மா விளையாடட்டும் நீ வா நாங்கள் குளத்துல தோய்ஞ்சு போட்டு வருவம் என்று கனகத்தையும் கூட்டிக்கொண்டு போகிறாள். போகும்போது எட்டி அடியெடுத்து நடக்க மயிலம்மாவின் பாட்டா செருப்பு அறுந்து விடுகிறது.உடனே அவள் தடுமாறி விழ இருந்து சமாளித்துக் கொள்கிறாள்.பிள்ளைகள் சிரிக்க வாமன் எழுந்து வந்து அந்த அறுந்த செருப்பை எடுத்து யாரிடமாவது ஒரு ஊசி இருந்தால் தாங்கோ என்று கேட்க மயிலம்மாவே தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை கழட்டி அவனிடம் தருகிறாள். வாமனும் அதைக்கொண்டு செருப்பை சரிசெய்து அவளிடம் தர அவளும் போட்டுகொண்டு கனகத்தின் பின்னால் போகிறாள். குளத்தில் இருவரும் ஆடைகளைக் களைந்து அலம்பிக் கரையில் வைத்து விட்டு நன்றாக முங்கி நீந்தித் தோய்கிறார்கள்........! மயில் ஆடும்....... 🦚
  9. யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த வெளிநாட்டவர்கள்...! குவியும் பாராட்டுக்கள் யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர், துவிச்சக்கர வண்டிப் பயணம் மூலம் நிதி சேகரித்து அதனை யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கி அதனை சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கான துவிச்சக்சகர வண்டிப் பயணமானது, கண்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி அங்கிருந்து மாத்தளை ஊடாக தம்புள்ளை வந்து, அங்கிருந்து நேற்றையதினம்(01) வவுனியாவை அடைந்தனர். அதன்பின்னர் யாழ்ப்பாணம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம் ஆரம்பமாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஆண், பெண் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை வெளிநாட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் துவிச்சக்கரவண்டி பயணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://samugammedia.com/foreigners-made-jaffna-people-look-back-accumulating-praises-1709350973
  10. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் - கனடா நடாத்திய பத்திரிகையாளர் மகாநாடு!
  11. சினிமாவில் போதைப்பொருள் கடத்துவார்கள். ஆனால், போதைப்பொருள் கடத்தி சினிமா எடுப்பது இது தான் முதல் தடவை என்று எங்கோ ஒரு பகிடி இருந்தது.
  12. அவர்கள் சமூகத்திற்கு செய்த பங்களிப்பு என்ன? அது மிகவும் முக்கியம்.
  13. இங்கேயும் அதே... சும்மாமே வயிறு எரியும் இதைப் பார்த்தால்????
  14. தமிழ் தேசியத்திற்கு அபகீர்த்திகள் பல நடந்து விட்டது ..இது பெரிய அபகீர்த்தி அல்ல .. தமிழ் தேசிய உணர்வை தமிழர்கள் மீண்டும் வெளிப்படுத்தி உள்ளனர் ... தமிழ் தேசியத்தை விரும்பாத ,அங்கிகரிக்க முடியாத நாடுகள், அமைப்புக்கள் ,தனிநபர்கள்,கட்சிகள் போன்றவற்றுக்கு இது ஒர் அபகீர்த்தியாக இருக்கலாம்.... என்பது எனது கருத்து தமிழக அரசு.... அவர்கள் கோல்டன் கிரசன்ட்...கோல்டன் டிராங்கில் போன்ற விடயங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள் .....அத்துடன் திருச்சி சிறப்பு முகாம்...
  15. இப்படியும் தலையங்கம் போடுகிறார்கள்.... "யாழ் மக்களை பார்க்க பொலிஸ் பாதுகாப்புடன் வந்த புலம்பெயர் தமிழர்கள்" ...இந்த தலையங்கம் எப்படி? யூ டியுப்பரின் தலையங்கம் எனக்கு தமிழ் தெரியும் என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாதுதுது...என மேட்டுக்குடி டமிழ் பெண்மணி சொல்கின்றார்...
  16. வெள்ளைக்கு எங்க போனாலும் பன் னுக்கு ஆக்கள் தேவை. இப்படியான எங்கட வெங்காயங்களுக்கு தங்கட மேக்ப் மூஞ்சிக்கு விளம்பரம் தேவை. அப்புறம் என்ன.. மருத்துவமனையில் பெயரால்.. கிளப்படா கிளியப்பட்ரோ என்றிருப்பாங்கள். கிளப்பியாச்சு. அதிலும் நம்ம ஊடகங்கள் இருக்கே.. ஊரில எதை சுட்டிக்காட்டி சமூகத்தை நாட்டை வழிநடத்தனும் என்ற விவஸ்தை இல்லை. அதுகளும் மேக்கப் பின்னாடியும் தோல் கலருக்கு பின்னாடியும் திரியுதுங்க.
  17. தேசிய நல்லிணக்கம் என்ற சிறிலங்காவின் கொள்கையை ஐ/நாசொல்லுவதற்கு....சிங்கள தமிழ் புலம்பெயர் உறவுகள் தெரிந்தோ தெரியாமலோ உதவுகிறார்கள் ...10 , வருடங்களாக நடை பெறுகிறது,,, இது ஒர் தனியார் மருத்துவ மனை..... இவ்வளவு பேருக்கும் விமான டிக்கட்,சைக்கிள்கள் மற்றும், ஏனய செலவுகளை கொடுத்தாலே மருத்துவ மனை க்கு நல்ல பணம் வரும்.....ஆனால் அதை விட நல்லிணக்கம் என்ற படம் காட்ட இது முக்கியம் கண்டியளோ..... எதோ தேனும் பாலும் ஒடுகிற நாட்டில் சைக்கிள் ஒடுவது போல காட்சி படுத்துகிறார்கள் ... கிழக்கிலிருந்து வடக்கிற்கு சைக்கிள் ஒட சொல்லுங்கோ ....செய்ய மாட்டினம்... அமெரிக்கா சொல்லிச்சோ தெரியவில்லை நல்லிணக்க சைக்கிளை நீங்கள் ஒடுங்கோ ,எங்க‌ன்ட மிசனரி பணத்தை அள்ளி தரும் என்று..... ஆண் குதிரைகள் என்ற கிரிக்கட் குழுவை உருவாக்கிய ஜாம்பவான்கள் இதிலிருக்கினம் .
  18. மனிதனின் தேவைகள் அதிகமாய் விட்டன......இவற்றை விட வருஷத்தில் இருமுறையாவது சுற்றுலா போகவேண்டும் ......என்ன செய்வது செய்யத்தான் வேண்டும்......! 😴
  19. வாழ்க்கையின் தேவைகள் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள். களைத்த மனிதருக்கு ஒரு கோப்பை தேநீர் மிகவும் இதமாக இருக்கும். நல்ல உபசரிப்புள்ள குடும்பத்தவர் போல , பொறுப்பான குடும்பஸ்தர்
  20. 04 MAR, 2024 | 04:10 PM இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக உலக வன ஜீவராசிகள் தினமான நேற்று ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா மலை (Pigeon Island) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நிலாவெளி சுற்றுலா அபிவிருத்தி குழு,திருகோணமலை ஹோட்டல் சங்கம் மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுற்றுலா பணியக தவிசாளர் மதன்,வனவிலங்கு ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். https://www.virakesari.lk/article/177868
  21. அப்படித்தான் செய்கின்றார்கள்.......👍 அத்துடன் சில அமெரிக்கர்களின் பூகோள அறிவு கொஞ்சம் விசித்திரமானது. ஒரு நீண்ட நேர இலங்கை, இந்தியா பற்றிய விளக்கத்தின் பின்னும், நீங்கள் கடைசியாக இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டிற்கு எப்போது போனீர்கள் என்று என்னைக் கேட்டவர்களும் உண்டு. சில வருடங்களின் முன், வட கொரியா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடத்தலாம் என்ற ஐயம் இருந்தது. இங்கு ஒரு தொலைக்காட்சியில் உலக வரைபடத்தை போட்டு, வட கொரியா எங்கிருக்கின்றது என்று பலரை நேரலையில் கேட்டனர். ஒருவர் சிறிது நேரம் நன்றாக யோசித்து விட்டு, அமெரிக்காவிற்கு மேலே (கனடாவை) தொட்டுக் காட்டினார்...........😀
  22. இதற்குத்தான் ஹிந்தி படியுங்கோ ஹிந்தி படியுங்கோ என்று சொன்னால் கேட்டால்தான்
  23. இன்று தான் இங்கு இணைந்தேன். வணக்கத்தின் பின் எழுதும் முதல் பதிவு இது. பல நன்றிகள். பூச்சியமான நேரம் ------------------------------ ஒரே நேரத்திற்கு எழும்பி காலையில் ஒரே கடமைகளை முடித்து ஒரே வழியில் ஒரே வேலைக்கு போய் ஒரே வேலையைச் செய்து ஒரே மனிதர்களுடன் கதைத்து ஒரே வழியில் திரும்பி வந்து ஒரே ஓட்டமாக பிள்ளைகளுடன் போய் இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒன்றே ஒன்றைச் செய்து மீண்டும் ஒரே நேரத்திற்கு சாப்பிட்டு ஒரே நேரத்திற்கு தூங்கி கண் முழித்தால் இன்றும் நேற்றைய நேரத்தையே மணிக்கூடு காட்டி நிற்கின்றது.
  24. ஈழத் தமிழர்களின் இந்தியா மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாக இது அமைவதால் இந்த சந்தர்ப்பத்தை நான் மனதார விரும்புகிறேன்.
  25. புத்தகத்தின் பெயர் : AK47 எப்படி இயக்குவது
  26. நன்றிகள் பெருமாள். நன்றிகள் கந்தையா. இந்த வருட போட்டிகள் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01 ம் திகதிகளில் சாக்ரமெண்டோ நகரில் நடக்க இருக்கின்றது.
  27. தமிழர்கள் ஒன்று சேர்ந்திட கூடாது என்பதற்காகவும் இந்திய புலனாய்வுத்துறையின் வேலைகளை இலகுவாக்கவுமே இது இருக்கிறது.
  28. சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?" காவியா தனது ஸ்கூட்டரில் அரசடி சந்தியால் திரும்பி, வைமன் வீதியால், அத்தியடி புது வீதியூடாக, யாழ் போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு காலை புறப்பட்டாள். அவள் ஒரு இளம் செவிலியாக அண்மையில் தான் பணிக்கு சேர்ந்தவள். அவள் முகத்தில் புன்னகையைக் காணவில்லை. எதோ ஏக்கம் துக்கம் அவளை வாட்டுவது அப்படியே தெரிகிறது. அதை அவளால் மூடி மறைக்க முடியவில்லை. அத்தியடி புதுவீதியால் போகும் பொழுது, அந்த வீட்டில் பலர் கூடியிருப்பதைக் கண்டு, செவிலி தானே, என்ன ஏது என்று தன்னை யறியாமலே விசாரித்தாள். தானே தற்கொலை செய்து, வாழ்வை முடிக்க திட்டமிட்டவளுக்கு, இப்ப அது உண்மையில் தேவையில்லாத ஒன்றுதான். தன் வேலையிடத்தில், தான் பார்க்கும் நோயாளிகளை முறையாக இன்னும் ஒரு செவிலியிடம் பாரம் கொடுத்து விட்டு, தற்கொலையை எனோ ஒரு தீர்வாக எடுத்து, இரவு இந்த உலகை விட்டு போக வேண்டும் என்பதே அவளின் இறுதி முடிவாக இருந்தது. அதற்கிடையில் இது! ரமேஷ் மீதான அவளுடைய காதல் ஆழமாக இருந்தாலும், காலத்தையும் சமூக எல்லைகளையும் தாண்டிய ஒரு பந்தம் இருவருக்கும் இடையில் இருந்தாலும், அவர்களின் காதல் சமூகத்தின் கடுமையான மரபுகளுடன் மோதியதால், காவியா விரக்தியின் தவிர்க்க முடியாத வலையில் சிக்கிக் கொண்டாள். சமூக எதிர்பார்ப்புகளின் கனமும், அவளது காதலுக்கும் வேரூன்றிய மரபுகளுக்கும் இடையிலான மோதலும், ரமேஷ் இல்லாத எதிர்காலத்தைப் பற்றிய பயமும் காவியாவிற்குள் ஒரு நம்பிக்கையற்ற உணர்வை உருவாக்கியது. தான் ஆழமாக நேசித்த ஒருவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணமும், அவர்களின் காதல் செழிக்கக் கூடிய எதிர்காலத்தை கற்பனை செய்ய முடியாத இயலாமையும் சேர்ந்து, அத்தகைய சோகமான தீர்வை யோசிக்க வைத்தது அவளுக்கு. எல்லாத் தற்கொலைகளும் மூடத்தனமானதுதானா? தன் உயிருக்கு மேலாகத் தான் நம்பும் ஒன்றை நிறுவ உயிரை மாய்க்கும் சமூக விழுமியத்தை நாம் தக்கவைக்க வேண்டாமா? தற்கொலைகளில் தியாகமாக? ஒரு மானுட உச்சமா? அவளால் சிந்தித்து பார்க்கும் நிலையில் அவள் இப்ப இல்லை. வில்லியம் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் அவரது கதாபாத்திரங்கள் தற்கொலையால் இறக்கின்றன. ரோமியோ ஜூலியட்டின் இறுதிக் காட்சியில், இளம் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அது கதைக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்து இருக்கலாம்? மற்றும் படி அது எந்த தீர்வையும் தரவில்லை என்பதே உண்மை! இலங்கையின் யாழ்ப்பாணத்தின் பரபரப்பான தெருக்களில், யாழ்ப்பாணத்துக்கே உரிய மசாலா வாசனை, பாரம்பரியத்தில் ஊறிய கலாச்சாரத்தினையும் சேர்த்து ஆழமாக எதிரொலிக்க, பாலச்சந்திரன் குடும்பம் அங்கு பெருமையுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தது. பாலச்சந்திரனுக்கு ரமேஷ் என்ற ஒரு மகனும் மூன்று மகளும் இருந்தனர். அதில் ஒருவளுடன் சிறு வயது முதல் நண்பியாக இருப்பவள் தான் காவியா. அதனால் ரமேஸுடனும் தோழியாக, சிறுவயதில் நெருக்கமாக இருந்ததால். பிற்காலத்தில் அது காதலாக மாறி, ஒருவருக்கொருவர் சகவாசத்தில் ஆறுதல் கண்டனர். என்றாலும் அவர்களின் காதல் இரகசியமாகவே மலர்ந்தது. ஏனென்றால் அவர்களுக்கிடையில் சமூக ஏற்றத் தாழ்வுகள், அவர்களின் இணைப்புக்கு குறுக்காக நின்றது. ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும் [அழகாகத் திலகம் இட்ட அழகிய ஒளி பொருந்திய நெற்றியும், அழகிய கண்களும்] மட்டும் அல்ல, "அறம்திகழ் தவமும் அகிலமும் இதனால் அழியுமென் றயன்படைத் திலனோ சிறந்தவேல் விழியை முன்படைத்தயர்ந்து செங்கரம் சோர்ந்ததோ திகைத்து மறந்ததோ கரந்து வைத்ததோ களப வனமுலைப் பொறைசுமந் துருகி இறந்ததோ உளதோ இல்லையோ இனிமேல் எய்துமோ அறியொணா திடையே." அறநெறி விளங்கும் வீட்டு நெறியும் உலகியல் நெறியும் இடையினால் அழியும் என்று எண்ணி இடையினைப் படைக்கவில்லையோ? சிறந்த வேல் போன்ற கண்களை முதலில் படைத்து இளைத்துச் சிவந்த கைகள் தளர்ந்தனவோ? செய்வதறியாது மதிமயங்கி மறந்துபோனினனோ? அல்லது அவள் வடிவில் மறைத்து வைத்திருக்கிறானோ? சந்தனக் குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச் சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ? இடை இருக்கிறதோ இல்லையோ அல்லது இனி மேல்தான் உண்டாகுமோ? இடை இருப்பதாகவே அவளிடம் தெரியவில்லை. அப்படி ஒரு அழகு அவள். அவள் தான் காவியா! அவள் தனது பிரகாசமான புன்னகையுடனும் உறுதியுடனும், காதல் அனைத்தையும் வெல்லும் எதிர்காலத்தை கனவு கண்டாள். ரமேஷ், சமமான உற்சாகத்துடன், ஆனால் குடும்பப் பொறுப்புகளின் சுமைகளை சுமந்து கொண்டு, தனது இதயத்தின் ஆசைகள் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட கடமைகளுக்கு இடையே, தவிர்க்க முடியாத மோதலுடன் போராடினான். தன்னால் இரண்டையும் சமாளிக்க முடியும் என்ற தெம்பு அவனிடம் இருந்தது. ரமேஷ், யாழ்ப்பாணத்தில் உள்ள பல மேல் மட்ட தமிழ் மக்களைப் போலவே, பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு இறுக்கமான சமூகத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயதிலிருந்தே, குடும்ப மரியாதை, கடமை, பெரியவர்களுக்கு மரியாதை போன்ற மதிப்புகளை ஊட்டி வளர்க்கப் பட்டவன். அதிலும் மூன்று தங்கைகளுடன் பிறந்தவன் என்பதால் பொறுப்பும் அதிகம் இருந்தது. இந்த கலாச்சார, கடமை நெறிமுறைகள் அவனது தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் ஆசைகளுடன் மோதின. ரமேஷின் போராட்டத்தின் அடிப்படையானது காவியா மீதான அவனது இதயப்பூர்வமான பாசத்திற்கும் அவனது குடும்பம் அமைத்துள்ள, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதைக்கும் இடையிலான மோதலாகும். பாரம்பரிய நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியிருந்த அவனது குடும்பம், ஸ்திரத்தன்மை, சமூக அந்தஸ்து மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய அவர்களின் கருத்துக்களுடன் இணங்கக்கூடிய இன்னும் ஒரு ஒத்த குடும்பத்தில் அவனுக்கு ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்யத் தொடங்கினர். இருந்தாலும் ரமேஷின் இதயம் காவியாவுக்கே ஏங்கியது. குழந்தைப் பருவத்தில் உருவான அவர்களின் பிணைப்பு, காலப்போக்கில் வலுப்பெற்று, எல்லைகளைத் தாண்டிய காதலுக்குச் சான்றாக இருந்தது. அவன் தனது இதயத்தின் கட்டளைகளைப் பின்பற்றவும், அன்பே வழிகாட்டும் சக்தியாக இருக்கும் எதிர்காலத்தைத் தழுவவும் விரும்பினான். இதனால், தன் தங்கையினூடாக தன் காதலை பெற்றோரிடம் தெரியப்படுத்தினான். தான் காவியாவை திருமணம் செய்தாலும், கட்டாயம் மூன்று தங்கையின் வாழ்வை தீர்மானிப்பேன், நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். ஆகவே பயம் தேவையில்லை என்று உறுதிமொழியும் கொடுத்தான். என்றாலும் அவனது தந்தை பாலச்சந்திரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தாயும் கூட தந்தையின் பக்கமே நின்றாள். இதனால் ஏற்பட்ட தவறான புரிதல்களும் குடும்ப அழுத்தங்களும் காவியா, ரமேஷ் இடையே கடக்க முடியாத சுவர்களை எழுப்பின. ஏங்கித் தவிக்கும் இரு இதயங்களுக்கும் ரமேஷ் குடும்பத்தின் தவிர்க்க முடியாத கோரிக்கைகளுக்கும் இடையில் அகப்பட்ட காதலர்கள் இருவரும், வாழ்வில் ஒரு பள்ளத்தை எதிர்கொண்டனர். தங்கள் காதலுக்கு, தாங்கள் சேர்ந்த உலகில் ஒருபோதும் இடம் கிடைக்காது என்ற மனவருத்தம் தரும் உணர்வு அவர்களை கடுமையான நடவடிக்கைகளைச் சிந்திக்கத் தள்ளியது. என்றாலும் ரமேஷ் தான் இன்னும் பெற்றோருடன் கதைத்து பேசி நல்ல முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால், குடும்ப எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டிய அழுத்தம், சமூகத்தின் தீர்ப்பு பற்றிய பயம் மற்றும் அவர்களின் இக்கட்டான நிலைக்கு சாத்தியமான தீர்வு கிடைக்காது என்ற விரக்தி ஆகியவை காவியாவின் தோள்களில் தாங்க முடியாத பாரமாக மாறியது. இது அவளுடைய தனிப்பட்ட ஆசைகளைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களின் அன்பைத் தடுக்கும் சமூகத் தடைகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியின் வழியில் நிற்கும் கடக்க முடியாத தடைகள் பற்றியதாகவும் விரிந்தது. தன் இறப்பு மூலம் தன் வேதனைக்கு, மனச் சஞ்சலத்துக்கு முடிவு கட்டலாம் என்பதுடன் இது பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து, பிள்ளைகளின் கருத்தையும் அலசும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்று எண்ணினாள். காதல் வெற்றி பெற முடியாததால், அவள் இதயம் வேதனைப் பட்டபோது, அவளுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணம் ஒரு தீர்வாக அவளுக்கு தோன்றியிருக்கலாம்? இது ஒரு பகுத்தறிவு முடிவு அல்ல, மாறாக அவளது வேதனையின் ஆழத்தின் பிரதிபலிப்பு, அவளுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் அவள் மூழ்கடிக்கப் பட்ட போது தன்னை இழந்த நிலையில், ஏற்பட்ட ஒரு உணர்வு. அவள் தன் உணர்வுகளை சமாளித்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால், அது பிந்திவிட்டது. பக்கத்து வீட்டாரின் துணை பெற்று, கதவு உடைத்து திறக்க நேரம் கடந்து விட்டது. தந்தையின் எதிர்பாராத திடீர் விபத்து மரணத்தால், மனம் உடைந்த இளம் உயர் வகுப்பு மாணவன் தாயின் சீலையில் கழுத்தில் தூக்கு போட்டு அங்கு சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் விட்டு சென்றது தாயும், தங்கையும், தந்தை இல்லா நேரம் ஒரு வலுவான துணையாக இருந்து பொறுப்புகளை சுமக்க வேண்டிய ஒருவன், தன்னை மரித்து அதில் இருந்து தப்பிவிட்டான் என்று தான் சொல்லவேண்டும் என்று அவளுக்கு, காவியாவுக்கு தோன்றியது. அப்படி என்றால் ? அவள் சிந்திக்க தொடங்கினாள்! ரமேஷ் மீதான அவளது காதலுக்கு இடையூறுகள் தோன்றி, கடக்க முடியாத தடைகளை எதிர்கொண்டபோது, அவள் அனுபவித்த தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து, தற்கொலை என்ற இந்த கடுமையான நடவடிக்கை பற்றிய அவளது சிந்தனை தோன்றியது என்னவோ உண்மையே. ஆனால் இப்ப இந்த தொங்கும் சடலத்தையும், வெம்பி வெம்பி அழுது புலம்பிக் கொண்டு இருக்கும் அவனின் தாயையும் தங்கையையும் பார்த்த பின், அவள் மனதில் ஒரு ஞானம், ஒரு தெம்பு பிறந்தது. தான் சாவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை, தன்னை விரும்பியவர்களுக்கு, தன் குடும்பத்துக்கு கவலை மற்றும் துன்பத்தையே அது கொடுத்து, அவர்களின் வாழ்வைக் கூட அது சிதைக்கலாம் என்ற ஞானமே அது! அவள் அன்று வேலை முடிய நேராக ரமேஷ் வீட்டுக்கு போனாள். முன்பு எத்தனையோ தடவை ரமேஷின் தங்கையுடன் அங்கு போனவள் தான். அவனின் பெற்றோர்களை சந்தித்தவள் தான். ஆனால் இந்த சூழ்நிலை வேறு. "தற்கொலை தீர்வாகுமா?" என்ற மனதில் ஏற்பட்ட போராட்டத்துக்கு ஒரு மறுமொழியாக அங்கு போகிறாள். வலது கால் எடுத்து மங்கள வாத்தியம் ஒலிக்க ரமேஷின் குடும்பத்துடன் இணைவதற்கு, தானே அவர்களுடன் கதைத்து, விளங்கப்படுத்தி உறுதிகொடுக்க போகிறாள். அது தான் வேறுபாடு. காவியாவுடன் ரமேஸும் இணைய, இருவரின் உணர்ச்சிபூர்வமான நேர்மையும் ஆர்வமும் நிறைந்த வேண்டுகோள், ரமேஷின் பெற்றோர்களுக்கு எதையோ தூண்டியது. மெதுவாக, பாரம்பரியத்தின் விறைப்பு தணிந்து, புரிதல் மற்றும் பச்சாதாபத்தின் ஒரு மினுமினுப்புக்கு வழிவகுத்து, பெற்றோர்களின் மன மாற்றத்திற்கான வாய்ப்பு அடிவானத்தில் மின்னியது. பாலச்சந்திரன் குடும்பம், காவியா ரமேஷின் நேர்மையால் நகர்ந்து, அது உணர்த்திய ஞானத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்தனர். இதனால் காவியாவும் ரமேஷும் நம்பிக்கையுடன் மீண்டும் உற்சாகமடைந்தனர், அவர்கள் கைகோர்த்து நின்றனர், இது ஒரு உடனடி புரட்சி அல்ல, ஆனால் மாற்றத்தின் விதை விதைக்கப் பட்டு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிந்துகொள்வதற்கான பயணத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தியது. "தற்கொலை தீர்வாகுமா?" என்றால் கட்டாயம் இல்லை. காவியா அதைத்தான் அந்த கடைசி நிமிடத்தில் மனம் மாறி தெம்பு பெற்று, ரமேஸுடன் சேர்ந்து செய்தாள். அந்த இளம் உயர் வகுப்பு மாணவனின் தற்கொலை எந்த தீர்வையும் தந்ததா? என்ற காவியாவின் கேள்வி, அவளுக்கும் ஒரு வாழ்வு சமைக்க வழிவகுக்கிறது என்று நம்புவோம். பாலச்சந்திரனும் அதற்கு எந்த தடையும் இல்லாமல் ஒத்துழைக்கட்டும்! "தற்கொலை தீர்வா? இல்லை வாழ்க்கை ஒரு பாடல்! ஒவ்வொரு இசைச்சுரமும் இடைநிறுத்தமும் வளர ஒரு வாய்ப்பு! வலி கடந்து போகும் காயங்கள் காய்ந்து குணமாகும்! ஆறுதல் ஒன்று தேடுங்கள் அன்பில், நண்பரில் உங்களில்!" "பொறுமையுடன் வாழ்நாள் இருந்தால் பல பெருமைக்கு ஆளாவாயே! துணிந்து நின்றால் துர்க்கையையும் நீ வதம் செய்திடுவாயே! சரித்திரத்தில் இடம் பெற்று சாதிக்க பிறந்த மனிதா! நிற்காமல் ஓடு மானிடா தற்கொலை உனக்கு எதற்கடா?" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  29. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே ஆண் : உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் ஆண் : உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் ஆண் : வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாள் ஒன்றிலும் ஆனந்தம் ஆண் : நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் ஆண் : நதியிலே புது புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது.........! --- உறவுகள் தொடர்கதை ---
  30. உறவுகள் தொடர்கதை ......! 👍
  31. ஏதோ ஆணைக்குழு என்று சொல்லி சாட்சியங்களை (முள்ளிவாய்க்கால்) அழைத்து வாக்குமூலங்கள் எடுத்தீர்கள். அவற்றுக்கு என்ன நடந்தது? களவாக மண்ணை அள்ளி விற்றல் எந்த சட்டத்துக்கு கீழ் வருகிறது??
  32. இலங்கையில் நீதி நிலைத்து இருந்தால்; இவர் எப்பவோ கம்பி எண்ணிக்கொண்டிருந்திருப்பார். வடக்கும் கிழக்கும் இணைந்து அமைதியாய் இருந்திருக்கும், நாங்களும் இங்கே சமத்துவம் அடைந்திருப்போம், சர்வதேசத்தை நாடிப்போக வேண்டிய தேவை வந்திருக்காது என்பதை உணரத் தெரியாத மனிதர். "எங்கே கல்லெறி பட்டாலும், காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடித்திரியுமாம்." பழமொழியைச் சொன்னேன் நான்.
  33. மயிலிறகு.........02. இந்தப் பக்கம் அடுப்பின் மேல் புகட்டில் குளத்தில் பிடித்த பெரிய பெரிய யப்பான் மீன்கள் கீறி உப்பில் போட்டுப் பிரட்டி எடுத்து பனைநாரில் கோர்த்து தொங்குது. அங்கால வாழைத்தார் ஒன்றும் கயிற்றில் தொங்குது. அதி ஒரு எலி இடைப்பழம் ஒன்றை கொறித்து சுவைத்துக்கொண்டிருக்கு. அப்போது எவ்வித அசுமாத்தமும் இன்று ஒரு சாரைப் பாம்பு அந்த எலியைப் பார்த்துக் கொண்டு மெதுவாக நகருது. அதைக் கண்ட கனகம் அம்மாடி பாம்பு என்று கத்திக் கொண்டு மயிலம்மா அருகில் எட்டி அடியெடுத்து வருகிறாள். அந்த சலசலப்பு கேட்டு எலியும் திரும்பி பாம்பைப் பார்த்து வாழைத்தாரில் இருந்து எதிர் வளைக்குத் தாவ சடாரென பாம்பும் இரண்டு முழ நீளத்துக்கு தனது உடலை வீசி அந்தரத்தில் வைத்தே லபக்கென்று எலியைக் கவ்விப் பிடித்து சரசரவென பனைமட்டையில் சறுக்கி சுவரில் ஊர்ந்து குசினி மூளைக்குள் சுருண்டு கொள்கிறது. இவ்வளவும் ஒரு கனப் பொழுதுக்குள் நடந்து முடிகின்றது. காணக்கிடைக்காத காலமெல்லாம் மறக்க முடியாத ஒரு காட்சி அதுபாட்டுக்கு இயல்பாக நடந்து முடிந்தது. கனகம் ஒரு எட்டில் கதவால் பாய்ந்து முத்தத்துக்கு வர மயிலம்மா கேத்திலுக்குள் கொஞ்சம் தேயிலையும் போட்டு பனங்கருப்பட்டியையும் எடுத்துக் கொண்டு பதட்டமில்லாமல் வெளியே வருகிறாள். என்ன மயூரி மெதுவாக வருகிறாய், பாம்பு பாய்ந்து புடுங்கினால் அப்ப தெரியும் உனக்கு. பதறாத கனகம். அது குட்டியாய் இருந்து இங்கினதான் தெரியுது. முன்பு ஒருநாள் அதை உடும்போ பிராந்தோ கடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் இந்தத் தாழ்வாரத்தில் வந்து கிடந்தது நாய் குரைக்குது, பூனை சீறுது அப்போது நானும் வாமனும் ஓடிவந்து பார்த்தால் இது சுருண்டு கிடக்குது. எனக்கு அதை அடித்துக் கொல்ல மனம்வரவில்லை. வாமன் அதுக்கு ஒரு சிரட்டையில் பால் ஊத்தி வைக்க குடிச்சுது. பிறகு அதை ஒரு பெட்டியில் போட்டு நான் கொஞ்சம் சாம்பலும் மஞ்சலும் கலந்து கொட்டி விட்டன். சில நாட்களாக அதுக்கு வாமனும் நானும் தினம் ஒரு மீனும் ஒரு முட்டையும் குடுத்து வர அதுவும் தேறி வந்திட்டுது.என்ர மகன் சுந்து அதுக்கு கிட்டவும் வரமாட்டான் அவ்வளவு பயம்.பூவனம் அதைத் தொடமாட்டாள் ஆனால் பயமும் இல்லை.அது அவள் அருகாகப் போய் வரும்.எங்கட நாயும் பூனையும் கூட அதோடு சேட்டைகள் செய்வதில்லை. வாமு கண்டான் என்றால் அதோடு தூக்கி விளையாடாமல் போகமாட்டான். இந்தக் கூத்து எப்ப நடந்தது.எனக்குத் தெரியாதே. அது நீ கலியாணம் கட்டி புகுந்தவீடு போன நாட்களில் நடந்தது.. இப்ப நீ இங்கு வந்து ஒரு வருசம் இருக்குமா .....ம்.....இருக்கும். காலம் போற போக்கு....என்று சொன்ன கனகம் உனக்கு இரவில பயமில்லையா .....இல்லை. அது இரவில் வீடுகளில் தங்காது. மேலும் அதுக்கு இங்கு புழங்கும் ஆட்களையும் மிருகங்களையும் நன்றாதத தெரியும். நீ இந்த தேத்தண்ணியைக் குடி என்று குடுக்கிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பாம்பும் குசினிக்குள் இருந்து வெளியேறி பின்னால் காட்டுக்குள் உள்ள புற்றுக்குப் போகிறது.........! மயில் ஆடும்........! 🦚
  34. நானும் இதைத் தான் எண்ணினேன். எனது எண்ணம் தனியே முதலீடு அல்ல. முதலீட்டுடன் சமாந்தரமாக அரசியலையையும் கொண்டு போகணும். தனியே முதலீட்டைப் போட்டு நாட்டை எழுப்பிவிட்டால்கதை கந்தல்.
  35. "Garbage in, Garbage out" 😂 உயிரியல் மருத்துவ ஆய்வுலகில் நவீன அணுகுமுறைகளும் உபகரணங்களும் வந்து விட்டன. ஆனால் ஆய்வு முடிவுகளின் தரத்தை , தனி மனிதனின் சிந்தனையும் படைப்பாற்றலும் அதிகரிப்பது போல இந்த நவீன கருவிகள் பெரிதாக அதிகரிப்பதில்லை. இதன் காரணம், ஒரு உபகரணம் என்ன தான் நவீனமாக இருந்தாலும் "குப்பையைப் போட்டால் குப்பை தான் விளைவாக வரும்- garbage in, garbage out" கூகிள் உட்பட்ட இணையத் தரவுத் தளங்களில் கொட்டிக் கிடக்கும் போலித்தரவுகளைச் சுத்தம் செய்யாமல், அந்தப் போலித் தரவுகளின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவை இயங்க வைத்தால் அது போலியாகத் தான் இருக்கும். இதை Artificial Intelligence என்பதை விட Artificial Ignorance என அழைக்கலாம்!
  36. ஆரம்பமே அசத்தல்…! தொடருங்கள்…!
  37. மயில் ஆடட்டும்...ஆட்டத்தை ரசிக்க காத்திருக்கிறோம்
  38. கண்ணீர் அஞ்சலிகள் ...கோபம்தான் வருகிறது கால இழுத்தடிப்பினால் என்னத்தை கண்டார்கள். ஏழைத் தாயினதும் தமிழ் மக்களின் சாப மும் அந்த மண்ணின் மீது இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.