Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்13Points33600Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்9Points2958Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்6Points3061Posts -
valavan
கருத்துக்கள உறவுகள்5Points1570Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/15/24 in Posts
-
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
5 points
- தாயின்றி நாமில்லை.!
4 pointsசர்வதேச மகளீர் தினம்(08.03.2024) அதற்காக எழுதிய கவிதையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றிகள். தாயின்றி நாமில்லை.! ************************ பூமித்தாய் என்று சொல்லும் புவிகூடத்தாய் தானே-வானில் பொட்டதுபோல் சுற்றிவரும் நிலவுகூட பெண்தானே நீலத்தால் சாறிகட்டி நிலம் காக்கும் கடல் அவளும் தாய் தானே நித்திலத்தில் தாய்க்கு நிகர்-எதுவும் இல்லை என்பேன் சரிதானே. சிந்து,கங்கை,யமுனை,சரஸ்வதி சித்தப்பா பிள்ளைகளா? காவேரி,குமரி,கோதவரி,நர்மதா. பெரியப்பா பிள்ளைகளா? இல்லை இல்லை இயற்கை ஈண்றெடுத்த நதித் தாய்கள் இவைகளும் பெண் பெயாரால் உயிர்த்தார்கள். பூமிதன்னில் பெண்ணினமே இல்லையென்றால் போட்டியிடும் ஆண்களெங்கே? பொறுமையெங்கே? ஆணினம்தான் அகிலத்தில் தனித்திருந்தால் அன்பு எங்கே? காதல் எங்கே? இனிமை எங்கே? கற்பனைக்கு பெண் இனமே இல்லையென்றால் கவிஞரெங்கே?கலைஞர் எங்கே? கலைதானெங்கே? கர்ப்பத்தில் எமைத் தாங்கி வளர்க்காவிட்டால் கல்வியெங்கே? கருணையெங்கே? காசினிதானெங்கே? பொன்னுலகம் பெண் இனத்தை மறந்திருந்தால் புதுமையெங்கே,புலமையெங்கே புரட்சியெங்கே? மண்ணகமும் வாழ்வதற்காய் படைத்து தந்த மாதவத் தாய்யினத்தை மதித்து வாழ்வோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.4 points- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
வணக்கம், யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......! (suvy) புதனும் புதிரும் ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே ( சுப.சோமசுந்தரம்) (தீ) சுவடு (தனிக்காட்டு ராஜா) இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024. ( ஈழப்பிரியன்) மரணம் (ரஞ்சித்) களியாட்டத்தில் கலாட்டாவா ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா? (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன். ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும் ( Kavi arunasalam) மயிலம்மா. ( suvy) வல்வை மண்ணில் பிரித் (nedukkalapoovan) ஆதி அறிவு ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை ( ரசோதரன்) என்ன பார்ட்டி இது?? (விசுகு) முடிவிலி (ரசோதரன்) மழைப் பாடல்கள் (ரசோதரன்) மின் காற்றாலைத் தோட்டம். ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும் (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா. (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம் (ரசோதரன்) இந்த ஏழு நாட்கள் (ரசோதரன்) தோற்கும் விளையாட்டு (ரசோதரன்) அன்றுபோல் இன்று இல்லையே! ( பசுவூர்க்கோபி) வாசலும் வீடும் (ரசோதரன்) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) மேய்ப்பன் (ரசோதரன்) ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்) தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி) விழல் (ரசோதரன்) இதுவரை பதியப்பட்ட 30 ஆக்கங்களில் புதிதாக இணைந்த உறுப்பினர் ரசோதரன் 12 ஆக்கங்களை பதிந்துள்ளார். உற்சாகமாக சுய ஆக்கங்களை பதியும் உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சுய ஆக்கங்கள் எழுதக்கூடிய ஆற்றல் உள்ள உறுப்பினர்கள் பலர் இன்னும் பதியாமல் பார்வையாளார்களாக உள்ளனர். யாழ் அகவை 26 க்கு இன்னும் 15 நாட்களே உள்ளன என்பதால் விரைவில் ஆக்கங்களைப் பதியுங்கள். குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி4 points- வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
இவர் முன்னர் இருவர் மீது வாள்வெட்டு நடாத்தியதாக போலீசார் கூறுகின்றார்கள் என வீரகேசரி சொல்கின்றது. மேற்படி தகவல்கள் உண்மை எனில், வாள்வெட்டு நடாத்திய இவரை முன்னமே இனம் கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தார்களோ தெரியாது. அப்படி சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த கொலை நடைபெறாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது.3 points- விழல்
3 pointsதலை நிறைய முடி இருந்தாலும் பிரச்சனை. இல்லையென்றாலும் ஒரு சின்னக் கவலை. ***** விழல் ----------- சிவாஜியும் எம்ஜிஆரும் வைத்திருப்பது அவர்களின் தலைமுடி அல்ல என்று அன்று தெரியாது முடி நெற்றிக்கு மேல ஒரு சின்ன மலையாக ஏறி நெற்றியில் சுருண்டு விழ என்ன என்ன செய்ய வேண்டும் என்று அப்படி தலைமுடி இருந்தவர்களிடம் ஆலோசனை கேட்டேன் இரும்புக் கம்பி ஒன்றை மெதுவாக சூடாக்கி அப்படியே சுற்று என்றும் ஒருவன் கொடுத்தான் யோசனை பள்ளிக்கூடத்தில் சூடு அதிகமாகி புரதம் கருகி மணந்தது தான் மிச்சம் படும் பாட்டைப் பார்த்து அம்மா சொன்னார் உனக்கு வாழைக்காய் பட்டை முடி வளையவே வளையாது என்று இது தான் வடிவு என்றும் அவர் சொன்னார் நாய்க்கு மட்டும் வால் எப்படி சுருண்டே நிற்குதே என்று மெதுவாக ஒரு நாள் இழுத்துப் பார்க்க அது திரும்பிக் கடித்தது வயிற்றில் போட்டார்கள் ஊசிகளை இந்தக் குறையுடனேயே வளர்ந்து இன்னொரு ஊருக்கு போய் வாழ அங்கே ஒரு சலூன் இருக்குது அங்கே சுருட்டி விடுவார்கள் என்று நண்பன் ஒருவன் கூட்டிப் போனான் என்ன எனக்கு வேண்டும் என்று நான் சொல்ல வாயெடுக்க சிகை அலங்காரம் செய்பவர் வாயில் விரலை வைத்தார் அவர் வாயில் தான் நான் ஒன்றும் சொல்லக் கூடாதாம் ஒன்றும் சொல்லாமல் நான் ஏறி இருக்க அவரும் ஒன்றும் சொல்லவில்லை வெட்டிக் கொட்டி ஏதோ தலையில் பூசி முடிந்தது என்று சைகை காட்டினார் இவருக்கு பேச்சு வராதோ அய்யோ பாவம் என்று நான் நினைக்க 'காசு' என்று தெளிவாக கேட்டார் அங்கே கொடுத்த காசில் வெளியே இரண்டு வருடம் வெட்டியிருக்கலாம் முடி சுருளவும் இல்லை வெளியே வந்து கடையின் பெயர் என்னவென்று பார்த்தால் அது ஒரு பிரபல நகைக்கடையின் பெயர் பின்னர் கல்யாணம் காட்சி எல்லாம் வாழைக்காய் பட்டையுடனேயே தலையில் முடி இருக்குதா இல்லையா என்று தெரியாமலும் அதற்கு தேவை ஒன்றும் இல்லாமலும் வாழ்க்கை வைத்திருந்தது சில வருடங்களின் பின் என்னை நகை கடைக்கு முடி வெட்ட கூட்டிப் போன நண்பனை பார்த்தேன் தொப்பி போட்டிருந்தான் கேட்கவும் தயக்கமாக இருந்தது பொறுத்து பொறுத்து இருந்தேன் அவன் கடைசி வரை கழட்டவே இல்லை இப்ப தொப்பி நானும் வாங்க வேண்டும் இந்த தடவை கடையின் பெயர் என்ன என்று பார்த்தே உள்ளுக்குள் காலை வைக்க வேண்டும்.3 points- பேரனுக்கு பரிசாக சிறிய ரக முச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார் யாழ். உதயகுமார்
பேரனுக்கு பரிசாக சிறிய ரக முச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார் யாழ். உதயகுமார் பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு வழங்கும் நோக்கில் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா உதயகுமார். 34 வருடங்களாக முச்சக்கரவண்டி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அத்துடன் தனது 3 பிள்ளைகளும் தன்னுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், 34 வருட அனுபவத்தை பயன்படுத்தி பேரனின் முதலாவது பிறந்ததினத்திற்கு பரிசாக இந்த முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளதாகவும் பொன்னையா உதயகுமார் தெரிவித்துள்ளார். பேரனின் பெயரையும் பிறந்த திகதியையும் வைத்து இலக்கத்தகடினை உருவாக்கியுள்ளதாகவும் தான் எதிர்ப்பாராமல் தயாரித்த இந்த முச்சக்கரவண்டிக்கு தற்போது வெளிநாடுகளிலும் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முச்சக்கரவண்டி தற்போது சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/2958683 points- கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?
3 points3 points- மயிலம்மா.
3 pointsமயிலிறகு......... 16. பின் சுந்து வாமனைப் பார்த்து நீ ஏதோ கவலையுடன் இருக்கிறதுபோல் தெரியுது. என்னடா விஷயம்...... அதடா வந்து அஞ்சலைக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை அவனுக்கு சொல்கிறான். சரியடா .....அது அவர்களின் குடும்பப் பிரச்சினை.....அதுக்கேன் நீ கவலைப் படுகிறாய்..... அதில்லையடா ஏனோ மனசு கேட்க மாட்டேன் என்கிறது அதுதான்..... சரி நான் உன்னை ஒன்று கேட்கிறேன் நல்லா யோசித்துப் பதில் சொல்லு......நீ அஞ்சலையை விரும்புறியா...... அதுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியல்லையடா..... சரி இதுக்கு பதில் சொல்லு.....அவளைக் கலியாணம் செய்ய உனக்கு விருப்பமா..... ....ம்.....செய்யலாம் என்றுதான் தோன்றுகிறது.....ஆனால் அவர்களும் சம்மதிப்பினமோ தெரியாது..... சரி பக்கத்தில்தானே வீடு, வா போய் கதைத்துப் பார்க்கலாம்.....இருவரும் அஞ்சலை வீட்டுக்கு வருகிறார்கள்....... அவர்கள் வரும் வழியில் அவர்களைக் கடந்து ஒரு வெள்ளை வானும் கூட ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் (அவ்வூருக்கு அறிமுகமில்லாதவர்கள்) குறுக்கும் நெடுக்குமாய் போய் வருகிறார்கள். வானில் சாரதிக்கு பக்கத்து ஆசனத்தில் வைத்தியின் இரண்டாவது மகன் யோகிபாபு இருக்கிறான். ஒவ்வொரு முறையும் இவர்களைக் கடக்கும்போது வாகனத்தை மெதுவாக செலுத்தி நன்றாகப் பார்த்துக் கொண்டு செல்கிறார்கள். இவர்கள் வீட்டுக்கு முன் வந்து நிக்க நாயும் மெதுவாகக் குரைத்துக் கொண்டு வாலாட்டுகின்றது. அதன் அருகில் அஞ்சலையின் அப்பா நிக்கிறார். அவர் உள்ளே பார்த்து மகளைக் கூப்பிட அவளும் ஜன்னலைத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து இவர்களை அழைத்துக் கொண்டு போகிறாள். அப்பாடா நல்ல காலம் இப்ப நீங்கள் வந்தது..... ஏன் ஏதும் பிரச்சினையோ என்று வாமன் கேட்கிறான்..... ஓம்....அப்படித்தான் தெரியுது.....ஒரு வெள்ளை வானில் அவன் அடிக்கடி அங்கும் இங்குமாய் போய் வருகிறான். அதோடு இரண்டுபேர் மோட்டார் சைக்கிளிலும் .....அங்க மெதுவாய் திரும்பிப் பாருங்கோ என்கிறாள். அப்போது அந்த வான் மெதுவாக வீட்டை நோட்டம் விட்டபடி கடந்து போகிறது..... சுந்து சொல்கிறான் இப்ப நாங்கள் வரும்போது கூட இவங்கள் எங்களை ஒரு விரோதப் பார்வை பார்த்துக் கொண்டு போனவங்கள். வாமனுக்குப் பிரச்சினையின் தீவிரம் புரிந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் நீங்கள் ஒன்றுக்கும் பயப்பிடாதையுங்கோ நாங்கள் வந்திட்டமெல்லோ இனி நாங்கள் பார்த்துக் கொள்ளுறம் என்கிறான். சுந்து வெளியே சென்று கேட்டடியில் நின்று கொண்டு வாமுவை ஜாடையால் அழைத்து நீ போய் அவவிடம் கேளடா அல்லது நான் போய்க் கேட்கவா என்று சொல்ல .... இருடா நானே போய்க் கேட்கிறேன் என்று சொல்லி அவளிடம் வருகிறான். வந்தவன் அவள் கையைப் பிடித்து மா மரத்தின் பின்னால் அழைத்துச் சென்று, அஞ்சலா இது இந்த நேரத்தில் கேட்பது சரியோ எனக்குத் தெரியாது ஆனால் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தெரிகிறது. உங்களுக்கு என்னைக் கலியாணம் செய்ய சம்மதமா யோசித்து சொல்லுங்கோ...... என்னடா திடுதிப்பென்று இப்படிக் கேட்கிறாய்.... நீங்கள் இல்லையென்று சொன்னாலும் பரவாயில்லை......ஆனால் யாராலும் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வர நான் விடமாட்டன்.....கொஞ்சம் யோசித்தவள் இரு வாறன் என்று போய் தந்தையையும் தாயையும் சேர்த்து வைத்து கதைத்து விட்டு வந்து ....ம்....சம்மதம் என்று சொல்கிறாள். அவளை அன்பு பொங்கப் பார்த்தவன் சுந்துவை அழைத்து கைகளால் "ஹார்ட்" காட்டி ....ம்......என்கிறான். கொஞ்ச நேரம் வெளியில் நின்று பார்க்கிறார்கள்.போன வானையும் ஆட்களையும் காணவில்லை. உடனே வாமன் அவளின் பெற்றோரை கவனமாய் இருங்கோ,கதவைத் திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவளையும் கூட்டிக்கொண்டு பின் தோட்டத்தால் வேகமாய் நடந்து வர சுந்துவும் மோட்டார் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறான். மூவருமாக வயலுக்குள்ளால் வெகுதூரம் வந்து ஒரு ஒழுங்கையையைப் பிடித்து, சுந்து மோட்டார் சைக்கிளை ஓட்ட அஞ்சலா நடுவில் இருக்க வாமன் பின்னால் ஏற வண்டி வேகமாய் வந்து மயிலம்மா வீட்டின் முன்னால் நிக்கிறது......... அங்கு முன் முற்றத்தில் இருந்து மயிலம்மா,கனகம் அவளின் புருஷன் மகள் கோமளம் எல்லோரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பொடியளுடன் அஞ்சலாவைக் கண்டதும் எல்லோரும் திகைத்துப் போனார்கள். சுந்து சென்று அவர்களுக்கு நடந்தவற்றை சுருக்கமாய் சொல்ல வாமுவும் அஞ்சலையும் அவர்கள் வீட்டு முன் அலுவலக அறைக்குள் செல்கிறார்கள். சுந்து அவர்களிடம் வந்து அம்மா அவர்கள் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகினம். இப்ப அவர்களுக்கு வைத்தியின் இரண்டாவது மகன் யோகிபாபுவால்தான் பிரச்சினை. அதுதான் இங்கு கூட்டிக்கொண்டு வந்தனாங்கள் என்று சொல்கிறான்..... 🦚 மயில் ஆடும்......... 16.3 points- ஒரு கொய்யா மரத்தின் விவரம்
2 pointsஒரு கொய்யா மரத்தின் விவரம் ----------------------------------------------- நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது. ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன. ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது. எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது. மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று விட்டுவிட்டேன். சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன. காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது. வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை. வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன. மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.2 points- மயிலம்மா.
2 pointsமயிலிறகு........... 17. பின்பு மயிலம்மாவும் கனகமும் சுந்துவும் வந்து அவர்களின் அறைக் கதவைத் தட்டிவிட்டு திறந்து கொண்டு உள்ளே வருகிறார்கள். கதிரையில் அஞ்சலா இருக்கிறாள். மயிலம்மா அவள் தோளில் கை வைத்து நீ பிள்ளை ஒன்றுக்கும் யோசிக்காதை, பயப்படாமல் இரு என்று சொல்லிவிட்டு வாமனைப் பார்த்து இப்பவே இரவாகப் போகுது இனி எது செய்யிறதெண்டாலும் நாளைக்குத்தான் பார்க்கலாம். நான் போய் உங்களுக்கு சாப்பாடும் தேநீரும் எடுத்துக் கொண்டு வாறன் எண்டு கிளம்ப அவளைத் தடுத்த வாமன் அவங்கள் எல்லா இடங்களிலும் எங்களைத் தேடிக்கொண்டு திரிகிறாங்கள். அதனால் இன்றிரவே நாங்கள் தாலி கட்டி கலியாணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். அப்ப கனகத்தின் புருஷன் வந்து நடந்தது நடந்து போச்சு, அவன் சொல்லுறதுதான் சரி அதெல்லாம் செய்யலாம் என்கிறார். கனகமும் அங்கபார் அவற்ர உசாரை என்று சொல்கிறாள். பின்பு வாமன் அலுவலகத்தில் இருந்த தொலைபேசியை எடுத்து அரசு விதானைக்கு விஷயத்தை சொல்லி அண்ணா என்ர நண்பன் சுந்து அங்க வருவான். உங்கட காரில் அவனோடு சென்று அஞ்சாலாவின் பெற்றோரையும் என் பெற்றோரையும் கூட்டிக்கொண்டு மயிலம்மா வீட்டுக்கு வர முடியுமோ என்று கேட்க மறுமுனையில் இருந்து சரியடா நான் எல்லாவற்றையும் கவனிக்கிறன். நீ சுந்துவை அனுப்பு. நீங்கள் அங்கேயே கவனமாய் இருங்கோ வெளில வரவேண்டாம் என்று சொல்கிறார். சுந்துவும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்கிறான். இங்கே கோமளம், வீட்டு முற்றத்தையும் கோயில் முற்றத்தையும் கூட்டி சாணி தெளித்து கோலங்கள் போடுகிறாள். அப்போது விதானையாருடன் காரில் இருவரது பெற்றோர்களும், பின்னால் சைக்கிளில் சுந்துவும் வந்து இறங்குகின்றார்கள். இவர்களை இறக்கி விட்டுட்டு விதானையார் காரை எடுத்துக் கொண்டு வலு வேகமாய் செல்கிறார். மற்றப்பக்கம் கனகத்தின் புருசனும் இவங்கட நண்பர்களுமாய் சேர்ந்து ஆங்காங்கே மரங்களில் தூங்கிக் கொண்டிருந்த அஞ்சாறு சேவல்களைப் புடுங்கிக் கொண்டு வந்து அடித்து கறிசோறு சமைக்கின்றார்கள். மயிலம்மாவும் அன்று அஞ்சலா குடுத்து விட்ட சாராயப்போத்தல்களை அவர்களிடம் குடுத்து கெதியாய் சமையுங்கோ, இன்னும் என்னென்ன பிரச்சினை நடக்கப் போகுதோ தெரியாது என்று சொல்லிவிட்டு போகிறாள். அயலில் உள்ளவர்கள் அரசல் புரசலாய் விசயம் கேள்விப்பட்டு தங்கள் தங்கள் வீடுகளில் இருந்த கறி சாமான்களுடன் வந்து வேலைகள் செய்கிறார்கள். பூவனமும் புருசனுடன் காரில் வந்து இறங்குகிறாள். அவளும் கோமளத்துடன் சேர்ந்து அஞ்சலாவை மணப்பெண்ணாய் கூந்தலில் மலர் மாலைகள் மற்றும் சடைநாகம் எல்லாம் சூட்டி அலங்கரிக்கிறார்கள். வேறு சிலர் அம்மனுக்கும் மணமக்களுக்கும் மலர்களைச் சேகரித்து மாலைகள் கட்டுகிறார்கள். பூவனத்தின் புருசனும் வாமனின் தந்தையும் கோயிலைக் கழுவி விட சுந்து சென்று ஐயரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வருகிறான். வாமனின் தாய் அவன் தங்களுக்குத் தந்த வேட்டி சேலைகளை பூவனத்திடம் குடுத்து பொண்ணு மாப்பிள்ளைக்கு உடுத்தி விடத் தருகிறாள். ஐயரும் அம்மனுக்கும் பட்டுசேலை உடுத்தி அருகில் இருக்கும் விநாயகர், முருகனுக்கும் புதுப் பட்டுடுத்தி அலங்கரித்திருக்கிறார். அந்நேரம் அரசு விதானையாரும் காரில் வந்து இறங்குகிறார். பெண்கள் தேவாரம் பாடிக்கொண்டிருக்க எல்லோரும் மலர்தூவி வாழ்த்த கோவில் மணி ஒலிக்க ஐயர் மந்திரம் சொல்லி அம்மனின் கழுத்தில் இருந்து தாலியை எடுத்துக் குடுக்க வாமன் அஞ்சாலாவின் கழுத்தில் தாலி கட்டுகிறான். அப்போது ஒரு காரில் வைத்தியின் மனைவியும், மூத்த மகனும் வந்து இறங்குகிறார்கள். அவர்களுக்கு விதானையார் நடந்தவற்றை கூறியிருந்தார். வந்தவர்கள் தாலி கட்டுவதைக் கண்டதும் அங்கிருந்த தட்டில் இருந்த மலர்களை எடுத்து தூவி ஆசீர்வதிக்கிறார். சற்று நேரம் கழித்து பின்னால் வெள்ளை வானும் ஒரு மோட்டார் சைக்கிளும் வந்து நிக்கின்றது. வானில் இருந்து யோகிபாபு இறங்கி வருகின்றான். அவனுக்கு அங்கு தனது சித்திக்கு திருமணம் நடக்கிறதைப் பார்க்க ஆச்சரியமாய் இருக்கு. வந்தவர்களைக் கண்டு எல்லோரும் திகைத்து நிக்க மயிலம்மா முன் வந்து வைத்தியின் மனைவியிடம் அம்மா நீங்கள் பெரியவங்கள் பிள்ளைகளை மன்னிக்க வேணும். ஏனடி மயிலு, இதெல்லாம் என்ன நடுநிசியில் திடீர் திருமணம் என்று கேட்கிறாள்...... எல்லாம் உங்கள் சின்னமகனால்தான் இப்படி நடக்கிறது என்று மயிலம்மா சொல்கிறாள். அவள் யோகிபாபுவின் பக்கம் திரும்பி எடேய் சின்னவனே என்னடா இது என்று கேட்க, எனக்கு ஒன்றும் தெரியாதம்மா இந்தக் கல்யாணம் எனக்கும் திகைப்பாத்தான் இருக்கு என்று சொல்கிறான். அப்போது அஞ்சலா முன் வந்து இவர் பொய் சொல்கிறார் அம்மா. என்னைக் கடத்திக் கொண்டுபோய் தனது நண்பனுக்கு கட்டி வைக்கிறதுக்காக இன்று முழுதும் என் வீட்டுக்கு முன்னால் நூறுதரம் அந்த வானில் அங்கும் இங்குமாய் திரிஞ்சவர். நான் பயத்துடன் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தனான். அதோ அந்த வெள்ளை வான்தான், இப்பவும் அதுக்குள் ஆட்கள் இருக்கினம் வேணுமென்றால் போய்ப் பாருங்கள் என்கிறாள். மூத்த மகன் தம்பியைப் பார்த்து என்னடா வேலை இது.....அப்பாக்குத்தான் அறிவில்லை எண்டால் உனக்கு அறிவு எங்க போச்சுது. அந்தப் பிள்ளைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய நீயே இப்படி செய்யலாமா மடையாஎன்று ஏசிப்போட்டு டேய் யாரங்கே வானுக்குள்ளே இறங்கி வாங்கடா இங்கே என்று கத்த அதில் இருந்து நாலுபேர் கை கட்டிக்க கொண்டு முன்னால் வந்து நிக்கிறார்கள்.......! 🦚 மயில் ஆடும் .......... 17.2 points- விழல்
2 pointsஎன்ன இது, யாராவது இரும்புக்கம்பியைக் சூடாக்கி முடியில் வைத்தால் முடி பொசுங்கும்தானே......நான் ஒன்றும் அவ்வளவுக்கு விவரமில்லாத ஆள் கிடையாது.........கிளுவம் கதியாலில் மோதிரவிரல் அளவு தடிமனான தடியை ஒரு முழம் அளவு பிசிறில்லாமல் வெட்டி அடுப்புத் தணலுக்குள் (சுடருக்குள் அல்ல) வைத்து விட்டு தலையை பட்டையாய் வாரி வைத்துக் கொண்டு திருவிழாவில் வாங்கிய சதுரக் கண்ணாடியை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் அந்தத் தணலுக்குள் இருந்த தடியை எடுத்து இரண்டு விரற்கடை இடைவெளியில் தலையில் தலையில் அழுத்தி அழுத்தி வைத்து எடுக்க வேண்டும். கொஞ்சம் சுடும்தான் பொறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த சனி முழுகிறவரை அழகாய் இருக்கும் பின் பனிபோல் மறைந்திடும்......! 😁 எச்சரிக்கை: அப்பா , சித்தப்பா , மாமா உள்ளவர்கள் வீட்டில் இருக்கும்போது முயற்சிக்கக் கூடாது.....முயற்சித்தால் முதுகில் உதை கிடைப்பது உறுதி.......! 😴2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
2 pointsநான் இந்தப் படத்தை இதுவரை பார்க்கவில்லை. இனியும் பார்க்கும் எண்ணமும் எனக்கில்லை. யூடியூப்பில் வந்தால்க்கூட கடந்துதான் செல்லப்போகிறேன். இதற்கு எனக்குக் காரணங்கள் உண்டு. எனது மொழியில் இருந்து பிறந்து, எனது மொழியையும் இனத்தையும் அவமதித்து, எனது தோல்நிறத்தை எருமை மாடுகளின் தோல் என்று இகழ்ந்து, கேரளாவில் இருக்கும் தமிழர்களை நாய்கள் என்று அழைத்து, எனது விடுதலை வீரர்களை விலைமாதர்களாகச் சித்திரித்து, எமது இனம் அழித்த இந்திய ராணுவப் பேய்களை தெய்வங்களாக வழிபட்டு, இறுதியாக எனது தலைவனின் பெயரையே தனது படத்தில் வலம்வரும் நாய்க்கு இட்டு அதனைப் "பிரபாகரா" என்று அழைத்து தனது இச்சை தீர்க்கும் கேரளத்துப் பொறுக்கிகளின் படத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? உடனேயே நீங்கள் வருவீர்கள், "கலையைக் கலையாகப் பார்க்க வேண்டும், இனத்துவேஷம் கூடாது" என்று சொல்லிக்கொண்டு. முதலில் தமது சினிமாவில் தமிழர்களை தீண்டத்தகாதவர்களாக, நாய்களாக, எருமை மாட்டுத் தோல் கொண்டவர்களாக சித்திரிப்பதை நிறுத்தட்டும், பின்னர் அவர்களின் கலையைக் கலையாக ரசிக்கலாம்.2 points- ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
நடந்தது ஆயுத போராட்டம் இங்கே உயிர்காவுகள்தான் மூலதனம். இங்கே மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஏதுமில்லை. சுமந்திரன் சார்ந்திருக்கும் அரசியல் தலைமைகள் தெற்கிலிருக்கும்போது ஒரு பேச்சு வடக்கு வந்தால் வேறு பேச்சு என்று செய்த சாக்கடை அரசியலால்தான். உங்கள் அரசியலில் நம்பிக்கையில்லாத தமிழ் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் இறங்க காரணம். ஆகவே அந்த புதைகுழிகளுக்கு விதைபோட்டது உங்காளுங்களே என்று அனந்தி அப்போது பதில் சொல்லிருக்கவேண்டும். தமிழர் மத்தியில் மனித புதைகுழிகள் உருவாக மறைமுகமாக காரணமா இருந்த நீங்களே பேசும்போது நாங்கள் ஏன் பேசகூடாது எண்டு கேட்டிருக்கவேண்டும் எல்லாமே காலம் கடந்தவைதான் இதுவும் கடந்தே போகட்டும்.2 points- ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
இவர்கள் மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களல்ல, வேறு வழி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். புலிகள் இருந்து அவர்கள் தேர்தலில் நின்றிருந்தால் இவர்கள் கட்டுப்பணம்கூட மீள பெற்றிருக்கமாட்டார்கள். இதைதான் நம்மிடையே உள்ள குழப்பம் என்றேன்.2 points- மயிலம்மா.
2 pointsமயிலிறகு.......... 15. வாமன் சாதாரணமாய் அஞ்சலா வீட்டுப்பக்கம் போய்வர நேர்ந்தால் அவளோடும் தாயாருடனும் கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான்.அது அவர்களுக்கும் பிடித்தமானதாயும் பொழுதுபோக்காகவும் இருந்தது. அன்றும் அப்படி ஒருநாள் போனபோது அஞ்சலா மிகவும் சோகமாய் இருந்தாள். என்ன இன்று மிகவும் கவலையுடன் இருக்கிறீர்கள்..... அதொன்றுமில்லையடா வாமு, "மழை விட்டும் தூவானம் போகேல்ல" என்ற மாதிரி என் நிலைமை இருக்கு. என்னெண்டு சொல்லுங்கோ.......இவற்ர இரண்டாவது மகன் யோகிபாபு இருக்கிறான் எல்லோ அவன்தான் அன்று இவற்ற செத்தவீட்டில் என்னோடு குழப்பம் செய்தவன். சரி ....அதுக்கென்ன....... இப்ப அவர் என்னை கடத்திக் கொண்டுபோய் அவற்ர நண்பனுக்கு மணமுடித்து விடுகிற பிளானில் இருக்கிறார் என்று அவர் பாரில் தன் நண்பர்களுடன் கதைத்ததை எனக்கு நம்பகமான ஒருத்தர் அங்கிருந்து கேட்டுவிட்டு வந்து சொன்னவர்.அதைக் கேட்டதில் இருந்து மனம் ஒரே குழப்பமாய் இருக்கு. என்ன பணம் சொத்து எல்லாம் இருந்தால் என்ன எல்லாம் அவங்கட கையில் இருக்கிறமாதிரி நடக்கிறாங்கள். வாமனும் ....இல்ல நான் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் ஏன் நீங்கள் அவர் சொல்லுற இடத்தில கலியாணம் செய்யக்கூடாது. அதுக்கில்ல.....எனக்கு அது விருப்பமில்லை....விட்ட படிப்பைத் தொடரலாமா என்றும் ஒரு எண்ணம் எனக்கு வருகுது.....அதுக்குள்ளே இவன் இந்தமாதிரி வேலை பார்க்க நிக்கிறது எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல. இவற்ற சம்சாரமோ மூத்தப்பிள்ளையோ வந்து கதைத்தால் கதைத்துப் பார்க்கலாம்.அதை விட்டிட்டு கடத்திக் கொண்டு போக நினைப்பதெல்லாம் துப்பரவாய் சரியில்லை. ஓம்.......நீங்கள் சொல்லுறதும் சரிதான்..... நான் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து இரண்டு முறைதான் இந்தப் படலையைத் தாண்டி இருக்கிறன். அவற்ர செத்தவீட்டுக்கும், மயிலம்மா வீட்டுக் கலியாணத்துக்கும்தான். எனக்கென்ன தெரியும் அவங்களை மீறி நான் என்ன செய்ய முடியும். நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ......அவன் என்ன செய்யுறான் என்று நானும் பார்க்கிறன். இன்னும் இரண்டு நாளில் சுந்துவும் விடுமுறையில் வருகிறான். நான் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். எதையும் யோசித்து செய்யலாம். அதுக்குள்ள ஒன்றும் நடக்காது என்று நினைக்கிறன். அப்படி பிரச்சினை என்றால் உங்கட தொலைபேசியால் அரசு விதானைக்கு அறிவியுங்கோ. அல்லது அங்கு போய் இருங்கோ. அநேகமான நேரங்களில் நானும் அங்குதான் இருப்பேன்.இப்ப போய் நானும் அவரிடம் சொல்லி வைக்கிறன். பின் வாமன் அரசு விதானையிடம் சென்று விஷயத்தை சொல்கிறான். அதற்கு அவர் நீ ஒன்றுக்கும் யோசிக்காத. ஆர் அந்த யோகிபாபுதானே, அவன் ஒரு மொக்கன். அவனைத் தெரியும் எனக்கு. வைத்தி இருக்கேக்க அவரை ரெண்டு கேசில இருந்து காப்பாற்றி விட்டனான். மூத்தவன் விவேக் கொஞ்சம் நல்லமாதிரி சொன்னால் கேட்பான். விடு அதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஏன்டா நீ அவளுக்காக இவ்வளவு கரிசனைப் படுகிறாய்...என்ன விசயம் சொல்லு. அப்படி ஒன்றுமில்லை அண்ணா ....அந்தப் பிள்ளை எங்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கு. நல்ல பிள்ளை அதுதான்.... சரி....சரி.....அப்படி ஏதாவது இருந்தாலும் சொல்லு செய்திடலாம் யோசிக்காத.... ஒன்று சொல்லுறன் கேள், பிறகு விதானைக்கு பொம்பிளை தர மாட்டாங்களாடா.......சும்மா சொல்லுவாங்கள் அரச உத்தியோகம்.....நல்ல வேலை என்று எல்லாம்....... பொம்பிளை கேட்டுப் போனால்தான் தெரியும்.....ஹா .....ஹா என்று வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். அடுத்து வந்த சில நாட்களில் சுந்து விடுமுறையில் வருகிறான். வாமன் சென்று அவனை அழைத்துக் கொண்டு வந்து அவன் வீட்டில் விடுகிறான்.அங்கு அவன் தனது தாய் சகோதரங்களுடன் வழமையான குசலங்கள் விசாரித்து விட்டு, அம்மா நான் வாமனுடன் வெளியே போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி அவனின் அலுவலக அறைக்கு சென்று அவனையும் அழைத்துக் கொண்டு இருவருமாக மோட்டார் சைக்கிளில் வெளியே போகிறார்கள். அப்போது வாமன் ஏதோ யோசனையில் இருப்பதை சுந்துவும் கவனித்துக் கொண்டு வருகிறான். அவர்கள் வழமையாகப் போகும் "பாரு"க்கு சென்று அரைப்போத்தல் சாராயமும் தண்ணிப் போத்தலும், கணவாய்ப் பிரட்டலும் வாங்கிக் கொண்டு வந்து ஒரு கதிரையில் அமருகிறார்கள். இப்போது வாமன் விதானையாகிய பின் எங்கு சென்றாலும் அவனுக்கு தனி மரியாதை கிடைக்கின்றது. அப்போது அங்கு ஒரு குடிமகன் போதையில் தள்ளாடியபடி வந்தவர் வாமனைப் பார்த்துவிட்டு தம்பி புது விதானையார் எனக்கொரு சந்தேகம்..... கொஞ்சம் விளக்க முடியுமோ..... வாமனும் என்ன அண்னை சொன்னால் தானே தெரியும்......சரி.....நீங்கள் மாளிகைக் கடைக்குப் போனால் என்ன செய்வீங்கள்..... சாமான்கள் வாங்குவோம் .......பிறகு .......பிறகு பணம் குடுப்போம். .... முடி வெட்டப் போனால் ......முடி வெட்டுவோம் ....பிறகு பணம் குடுப்போம் .... உடுப்புகளை சலவைக்குப் போட்டால் ........இதென்ன கேள்வி கொண்டு வந்து தந்தபின் பணம் கொடுப்போம். தேனீர் சாப்பாட்டுக் கடைக்குப் போனால் .......சாப்பிட்டுட்டு பணம் கொடுத்து விட்டு வருவோம்......சரி......சரி......ஆனால் ஒரு பாருக்கு போனாலோ, சினிமாவுக்கு போனாலோ அல்லது விலைமாதிடம் போனாலோ என்ன செய்கிறீர்கள் .......பக்கத்தில் குடித்துக் கொண்டிருந்த ஒரு வண்டிச்சாரதி சொல்கிறார் .....ஹா....ஹா.....இது நல்ல கேள்வி..... முதலில் பணத்தைக் குடுத்து விட்டுத்தான் பொருளை நுகர்கிறோம்....சரியா .....மெத்தச் சரி...... விதானைத் தம்பி நீயே கேள் இவனிட்டை ஒரு கால் போத்தல் தாடா நாளைக்கு காசு தருகிறேன் என்றால் தராமல் விரட்டுறான். அங்கிருந்த எல்லோரும் சிரிக்கிறார்கள்.....வாமனும் சிரித்து விட்டு சரி அண்ணை நான் சொல்லுறன் நீங்கள் போய் வாங்குங்கோ நான் அவரிட்டை சொல்லுறன். அவர் தள்ளாடி கும்பிட்டுக்கொண்டு போகிறார். சுந்து சொல்லுறான், டே வாமு ஆனாலும் விதானை வேலை ரெம்பக் கஷ்டமடா.........! 🦚மயில் ஆடும்............. 15.2 points- குறட்டை விடுவதால் உங்கள் குடும்பத்துக்கு என்ன ஆபத்து? எப்படி தடுக்கலாம்?
என்ரை சொந்த அனுபவம் என்னனெண்டால் ஒரு பக்கம் சரிஞ்சு படுத்தால் குறட்டை விடுறது குறைவாக இருக்கும்....😷1 point- வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
உண்மை ...இது ஊரில் மட்டுமல்ல பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை வீழ்த்தியவுடன் அவர்களின் வாரிசுகளை தேடி தேடி அழிப்பதன் காரணம் இந்த பழிவாங்கும் குணம் மனிதர்களிடையே இருப்பதால் தான்.... சிறுவர்களை கூடவிட்டு வைக்காமல் அழித்து விடுவார்கள் ....சிறுவர்கள் வளர்ந்து பழி தீர்ப்பார்கள் என்ற பயத்தினால்.. எதிர்த்து போரிட்ட மன்னர்களின் பரம்பரை இல்லாமல் போனது இதனால் தான்...சங்கிலியன்,ராஜராஜ சோழன் ...எமது போராட்ட வரலாற்றிலும் இது நடந்தது...1 point- வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
ஊர்களில் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கினாலும்.... சம்பந்தப்பட்டவர்களுக்குள் பழிக்கு பழி எனும் இன்னொரு நடவடிக்கை என்று உள்ளது. அது 20,30 வருடங்கள் காத்திருந்தும் பழிக்குப்பழி நிறைவேற்றப்பட்டே தீரும்.1 point- விழல்
1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- விழல்
1 point- கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?
கோதாவை கமராவில் எடுத்தது போல இருக்கின்றது.....👍 இலங்கை டெயிலி மிரர் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தனர். ஒருவர் நூலகம் ஒன்றில் கோதாவின் இந்தப் புத்தகத்தை நகைச்சுவை புத்தகங்கள் என்ற பகுதியில் தேடிக் கொண்டிருப்பது போல....😀1 point- அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு
@Kapithan BJP இற்கு ஆதரவா? உங்களுடைய அரிப்பிற்கு என்னிடம் இடம் தேடாதீர்கள்…1 point- விண்ணில் சீறிப்பாய்ந்த உலகின் மிகப்பெரிய ரொக்கெட்
இந்த மூன்றாவது பரீட்சார்த்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது பற்றிச் செய்தியில் சொல்லப்படவில்லை.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- கருத்து படங்கள்
1 point1 point- மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
1 pointநன்றி நன்றி ரஞ்சித் .1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஇ இந்த லூசு கேள்வியை கேட்டே அங்கு அவங்கள் முன்னுக்கு வந்து விட்டாங்க .இனி ஒரே வழி லட்சுமியை கூப்பிடனும் ?........................😃1 point- ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
விடுதலைப் புலிகளின் முகாம்களிலும் புதை குழிகள் இருந்தன.1 point- ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
எம் பக்கம் முழுசா நாமே இல்லை என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?1 point- இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!
ஆயுதம் இல்லாமல் கை கடிக்கும் நேரத்தில் ரனிலை சந்திக்க முடியும். 🙃மக்ரோனின் "இதோ வருகிறோம் என்பது "புட்டினின் நேர்காணலில் தயார் நிலை பற்றி சொல்லி உள்ளார். ஆபிரிக்க நாடுகளின் எதிர்ப்பு புட்டினினின் பின்னணியில் நடைபெற்றதும் ( மாலி உதாரணமாக) மக்ரோனை கடுப்பாகி உள்ளதை விளங்கி கொள்ள முடிகிறது. ஆனால் இரண்டு அணுசக்தி நாடுகள் மோத நினைப்பது மில்லியன் காசா ஆகி விடும் என்பதே உலக மக்களின் அச்சம்.1 point- தாயின்றி நாமில்லை.!
1 point- மயிலம்மா.
1 pointமக்களுக்கு சேவை செய்யும் விதானைமாரும் இருக்கினம், அதனை துஸ்பிரயோகம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.1 point- வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டர்களுக்கு கைவிலங்குடன் தொடர்ந்தும் சிகிச்சை
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
1 pointஇன்னமும் இந்த திரி இழுபடுதா ? ஒரு முழுமையான ஈ அடிச்சான் திருட்டு கதைக்கு இவ்வளவு அலப்பறையா 2௦2௦ ல் வெளிவந்த த எம்ரி மான் எனும் ஆங்கில ஹோரர்ர் படத்தில் கொஞ்ச நேர கதையை மட்டுமே திருடி எடுத்து முழு படமாக்கி உள்ளார்கள் மலையாளிகள் .ஆனால் the empty man கதை கிடங்கில் இருந்துவெளியே வந்த பின்தான் கதையே சூடு பிடிக்குது ஒரு பேயை வழிபடும் கூட்டம் தாங்கள் பூமியில் வெளிப்படும் காலம் வரும்வரை ஒரு தொடர்பாளரை தொடர் நிகழ்ச்சியாக உருவாக்கி கொள்வதுதான் கதை கொஞ்சம் matrix கதையையும் தெளித்து விட்டு இருக்கினம் . கிறுக்குத் தனமாய் எம்மிடையே நம்பும் சிதம்பரத்துக்கு மேல் சாட்டிலைட் வேலை செய்யாது என்பது போல் ஆங்கில கிறுக்கு கூட்டம் பல உண்டு அந்த கூட்டம்களுக்கு இப்படியான திகில் கதை அல்வா சாப்பிடுவது போல் . ott வாங்க மாட்டர்கள் என்று கொள்ளுபடுகினம் .https://www.republicworld.com/entertainment/malayalam-cinema/manjummel-boys-producers-greed-leads-to-no-ott-deal-for-malayalam-survival-drama/. ஒரிஜினல் கதை போல் இருக்க 2௦௦6 ல் நடந்த உண்மை கதை அனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாருக்குமே சொல்லாமல் அந்த கதையை ஒளித்து வைத்து இருந்தார்களாம் நன்கு சரடு விடுகிறார்கள் குட்டன்ஸ் 😀1 point- வெறுப்பு!
1 pointயதார்த்தம்... இப்ப தானே அரசமரம் இல்லாமலேயே அலுவல்கள் நடக்குது. அரசமரத்துக்கு மறுபெயர்= தொல்பொருள் திணைக்களம். நாட்டிலே பஞ்சமே தலைவிரித்த தாண்டவமாடுது...இங்கு என்னவென்றால் ..அலுவலகமில்லா அமைச்சுக்கு உவ்வளவு நிதி ஒதுக்கி ..காணி பிடிப்பு நடக்குது...1 point- மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
1 pointஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் கட்டுரையை படித்தவர்களுக்கு புரியும், காடுகளில் கொட்டப்படும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்களாலும், வேண்டும் என்றே அங்கிருக்கும் விலங்குகளை துன்புறுத்தி இன்பம் காண்பதற்காக அவற்றின் உணவில் கலந்து கொடுக்கப்படும் கண்ணாடித் தூள்களாலும், வெடிகளாலும் விலங்குகள் அடையும் மரண வேதனை பற்றி. இதில் பெரும்பாலும் ஈடுபடுகின்றவர்கள் இன்று ஜெயமோகனானல் 'கேரளத்து பொறுக்கிகள்" என்று அழைக்கப்படுகின்றவர்கள் தான். இவ்வாறு காட்டுக்குள் சென்று குடித்து, போத்தல்களை உடைத்து அட்டகாசம் செய்யும் பொறுக்கிகளை மெச்சி படம் எடுத்தால், எல்லாரும் பாரட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. தியேட்டர் போய் பார்க்கும் எண்ணம் இல்லை, OTT யில் வரட்டும்.1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது - மகளிர் அணி தலைவரிடம் கட்சி தலைவர் நேர்காணல் 1.உங்களை பற்றி சொல்லுங்க.. ? 2.உங்கள் தொகுதியில் நீங்கள் செய்தது என்ன ? 3.உங்களுக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ? 4.... ? .... 5.....? .... செய்தி மூலம் : https://tamil.oneindia.com/news/chennai/dmk-mp-kanimozhi-was-interviewed-by-cm-stalin-for-tuticorin-seat-in-lok-sabha-elections-589803.html ரொம்ப கடினமான கேள்விகளை கேட்டதாக சொல்கிறார்கள் .. இந்த நேர்காணலில் தேர்வாகி வேட்பாளாராக நிறுத்தபடுவாரா ? ..ரெல் மீ..! டிஸ்கி : மற்ற வேட்பாளர்களிடம் கேட்கபடும் 4வது மற்றும் 5வது கேள்விகள் விடுபட்டுள்ளன அது என்ன..? 4. கட்சிக்கு எவ்வளவு நன்கொடை தருவியல்.? 5. தேர்தலுக்கு ( ஒரு ஒட்டுக்கு ) எவ்வளவு செலவு செய்வியல் ?1 point- வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
முதல் தாக்குதல் எதற்காக இவர் செய்தார்.. ?? (முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல்)0 pointsImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- தாயின்றி நாமில்லை.!