Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3057
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2954
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/19/24 in all areas

  1. புளுகுப் போட்டி -------------------------- மேடைப் பேச்சு சம்பந்தப்பட்ட எல்லாக் கலைகளும் யுத்த காலத்தை தாண்டியும் நன்றாகவே வளர்ந்து விட்டிருந்தாலும், 'புளுகுப் போட்டி' என்ற கலை வடிவம் ஏறக்குறைய முற்றாக அழிந்து போனது நெடுங்காலம் ஒரு கவலையாக இருந்தது. எந்த எந்த ஊர்களில் இந்தக் கலை வடிவம் அந்நாட்களில், 80களின் தொடக்கத்தில், இருந்தது, வளர்ந்தது என்று தெரியவில்லை, ஆனால் நான் வளர்ந்த ஊரில் அன்று மிகவும் செழிப்புடன் இது வளர்ந்து கொண்டிருந்தது. மூளையிலுள்ள நியூரான் நெட்வொர்க் போன்றதொரு மிகச் சிக்கலான ஒழுங்கைளின் வலைப்பின்னலால் உருவாக்கப்பட்டது என்னூர். ஊரில் சில ஒழுங்கைகளின் முடிச்சுகளில் காணாமல் போய், அப்படியே இன்னுமொரு முடிச்சில், நேர விரயம் ஏதும் இல்லாமல், தோன்றுவது என்பது மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. ஆரம்ப நாட்களில் ஆட்களைத் தேடி வந்த போலீஸ்காரர்கள் ஒழுங்கைகளில் கால்களை வைக்காமல், வீடுகளின் சுவர்களில் நடந்து திரிந்தனர். அவர்கள் ஒழுங்கை ஒன்றில் இறங்கினால், அவர்களையும் காணாமல் போனோர் கணக்கில் சேர்க்க வேண்டி வந்தாலும் வந்திருக்கும். அந்தளவு ஒழுங்கைகளும், பின்னல்களும் நிறைந்தது ஊர். ஒவ்வொரு ஒழுங்கைக்கும் ஒரு சிறிய விளையாட்டுக் கழகம் இருந்தது. பெரிய விளையாட்டு கழகங்கள் அல்லது தாய் விளையாட்டு கழகங்கள் என்றும் இருந்தன. மொத்தத்தில் ஏராளமான கழகங்கள். சிறிய கழகமோ, பெரிய கழகமோ அவர்களின் விளையாட்டுப் போட்டி வருடா வருடம் நடக்கும். கழக அங்கத்தவர்களுக்கான விளையாட்டுகள் மற்றும் பொது விளையாட்டுகள் என்று இரண்டு வகையான போட்டிகள் நடைபெறும். பொது விளையாட்டுகள் என்ற வகையில் புளுகுப் போட்டி வரும். யாரும் பங்கு பற்றலாம். மேடையில் ஏறி புளுகித் தள்ளவேண்டும். ஒரு கோர்வையாக, தொடர்ச்சியாக விடயம் இருக்கவேண்டும். கூட்டம் கைதட்டும். நடுவர்கள் புள்ளிகள் போடுவார்கள். இறுதியில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்று அறிவித்து பரிசுகள் வழங்கப்படும். வயதுக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. சிறுவர் முதல் பெரியோர் வரை அனுமதிக்கப்பட்டனர். உதாரணத்திற்கு, என் வயதை ஒத்த, அன்று சிறுவன், மேடையில் ஏறி, ஒரு சமயம் தன்னை யாரோ எங்கோ ஒரு வீட்டில் அடைத்து வைத்து விட்டார்கள் என்று ஆரம்பித்தான். தான் மெதுவாக ஒரு யன்னல் கம்பியை உடைக்க ஆரம்பித்தால், அது லட்டால் செய்யப்பட்டிருந்தது என்று தொடர்ந்தான். தான் அதை சாப்பிட்டு விட்டு, உடைப்பதை தொடர்ந்தால், வீடு முழுவதுமே லட்டால் கட்டப்பட்டிருந்தது என்றான். முழு வீட்டையுமே தான் சாப்பிட்டு விட்டேன் என்று சொன்னான். அன்றிலிருந்து அவனின் பெயரே மாறிவிட்டது. இதையே தொடர்ந்திருந்தால் சிலரின் இயல்பான திறமைகள் வெளியே வந்து, நன்றாக வளர்ந்தும் இருப்பார்கள். மற்றவர்களுக்கும் இந்தக் கலையில் ஒரு அடிப்படைத் திறமை, அறிவு கிடைத்திருக்கும். தொடர்ச்சியாக அடித்து விடுவது என்பது அரசியலிலும், சில சேவை வியாபாரங்களிலும் இருப்பவர்களுக்கு மிகத் தேவையான ஒரு திறமை. ஆந்திரா, தெலுங்கு, கன்னட, மலையாள நண்பர்களிடம் மிக மெதுவாகக் கேட்டுப் பார்த்ததில், திராவிட நாட்டில் இது வேறு எங்குமே காணப்படவில்லை என்றும் தெரிகின்றது. மலையாளிகளிடம் வேறு வேறு விதங்கள் இருக்கின்றன. ஒரு கட்ட சாயா, தட்டையுடன் (பிளேன் டீ, தட்டை வடை) அவர்கள் நாலு மணித்தியாலங்கள் உலக அரசியல் பேசி, இறுதியில் அமெரிக்காவை அரை உயிருடன் அடுத்த நாளுக்காக விட்டு வைப்பார்கள். மலையாளிகளுக்கு உலக அரசியலில் தான் ஆர்வம் அதிகம். மற்றும் அவர்கள் பொதுவாக சிவப்புச் சட்டை, சால்வைக்காரர்கள். இயல்பாக வந்த ஒரு திறமையை மறைப்பதென்பது கடினம். அது தும்மல் போன்று, விக்கல் போன்று எப்பவும், எங்கேயும் கொஞ்சம் அமுங்கியாவது வெளிப்படும். சமூக ஊடகங்களில் இன்று இந்தக் கலை வடிவம் நன்றாகவே வெளிப்படுகின்றது. ஆனால் எல்லா நாடுகளிலும் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், சாமியார்களும் இன்று தூள் கிளப்புகின்றனர். பத்து பன்னிரண்டு வயதில் விட்டுப் போன புளுகுப் போட்டியை இன்று மீண்டும் அரசியல் மேடைகளில் எங்கும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய அரசியல்வாதிகள் புளுகுப் போட்டியில் நிகர் இல்லாமல் அசத்துகின்றார்கள், முதலாம் இடம் அவர்களுக்கே.
  2. இதுவும் நல்லா தான் இருக்கு. முயலை மாதிரி ஓடி களைத்து படுக்கிறதை விட ஆமை வேகத்தில் நிதானமா மெதுவா போய் முன்னேறலாம். நாம் தமிழரும் ஆமை வேகத்தில் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
  3. தமிழக அரசியல் எமக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை. 👎🏿
  4. மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
  5. ஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூப்பக்கற், பிஸ்கட் இப்படி கண்டதை எல்லாம் வாங்கி நிரப்பி அதிலும் கிலோ கூடி ஒரு நான்கு கிலோ சொக்ளற்றும் மடிக் கணனியும் மகளிடன் திரும்பக் கொடுத்து ஒருவாறு விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. மிகப் பெரிய விமானத்துள் ஆயிரம் பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். வலது பக்கமாக உணவு கொடுத்து முடிந்த பின் ஒரு மணி நேரத்தின் பின்னரே எமக்கான உணவு வந்து சேர்ந்தது. பக்கத்து இருக்கைக்கு உணவு வரும்போது வயிறும் மனமும் தயாரானாலும் உணவு வராத கடுப்பும் ஏமாற்றமும் சேர்ந்து இன்னும் பசியை அதிகரிக்க நன்றி கூடச் சொல்லாமல் உணவை வாங்கி உண்டு கோபத்தைக் குறைத்துக்கொண்டேன். முன்னர் எமிரேட்ஸின் கவனிப்பு மிகையாகவும் உணவும் தரமாக இருக்கும். இம்முறை மிகுந்த ஏமாற்றம்தான். இம்முறை எனது தம்பியும் எம்முடன் வந்திருந்தான். அவன் 39 ஆண்டுகளாக தாயகம் செல்லவில்லை. முன்னர் ஆனையிறவில் கைதாகி ஒருவாரம் சிறையில் இருந்தவன். தடைசெய்யப்பட்ட பட்டியலில் அப்பாவின் பெயர் போட்டபோது இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் இணையத்தளத்தில் அவனும் நானும் லண்டனில் இருக்கிறோம் என்பது வரை பெயர் விபரங்களுடன் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததில் இருந்து அந்தப் பக்கமே போகமாட்டேன் என்று இருந்தவனை, நான் உன்னோடு வாறன். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்ளுவன் என்னும் நம்பிக்கையில் என்னோடு வந்திருந்தான். விமானத்தை விட்டு இறங்கி ஒன்லைன் விசாப் படிவத்தைக் காட்டி எனக்கும் கணவருக்கும் ஒருமாத விசா வழங்கியபின்னும் எமக்கு முன்னால் போனவனை நிறுத்திவைத்துவிட்டு உள்ளே ஒரு அறைக்கு அழைத்துப் போக நானும் கணவரும் சேர்ந்தே போக, எம்மை இருக்கச் சொல்லிவிட்டு தம்பியை மட்டும் அழைத்து அவனின் பாஸ்ட்டை திரும்பத்திரும்பப் பார்ப்பதும் வெளியே போவதும் வருவதுமாக இருக்க, எதனால் பிந்துகிறது என்கிறேன். “இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அது அவனிடம் இல்லை என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாது “எதற்காக நாம் பழைய கடவுச் சீட்டை கொண்டுவரப் போகிறோம்” என்கிறேன். கணவர் காதுக்குள் கொஞ்சம் நைசா கதை என்கிறார். “அது இல்லாமல் இவர் எப்பிடி இந்த நாட்டை விட்டுப் போனார் என்று எங்களுக்குத் தெரியணும் இல்லையா. அதோட இத்தனைகாலம் ஏன் வரவில்லை” என்கிறார். உடனே நான் “எங்கள் குடும்பத்தவர் எல்லோருமே வெளிநாட்டில் தான். அதனால் தம்பி வரவில்லை. இம்முறை எமது ஊரையும் நாட்டையும் பார்க்கத்தான் வந்தவன்” என்கிறேன். “இந்த நாட்டை விட்டுப் போறவைக்கு இங்க பதிவிருக்கோணும்” “இதுக்கு முதல் நிறையப்பேர் பதிவே இல்லாமல் வந்திருக்கினமே” “அது முந்தி. இப்ப கட்டாயம் பதிவு இருக்கவேணும்” நான் எதுவும் பேசாமல் இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அவர் கணனியைப் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பொறுமை போகிறது. “எங்களை அழைத்துப் போக வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்” “இவரை நாங்கள் வடிவா விசாரிக்க வேணும். ஒரு ஐந்து ஆறு மணித்தியாலம் செல்லும்” “சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்” நான் இறங்கிப் போய் கேட்கிறேன். அவமானமாக இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. “கொஞ்சம் பொறுங்க” என்றுவிட்டு யாருக்கோ போன் செய்ய ஒருவன் வருகிறான். பார்த்தால் தமிழன் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் கதைக்கிறான். இதில யார் கூட கதைக்கிறது என்கிறான். என்னோடு கதையுங்கள் என்று நான் கூற “வாங்க” என்று தமிழில் சொல்ல நான் எழுந்து செல்கிறேன். அறைக்கு வெளியே வந்ததும் கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்கிறான். நாங்கள் லீகலா விசா எடுத்துத்தானே வந்தது என்கிறேன். “எவ்வளவு வச்சிருக்கிறீங்க” என்கிறான். நாம் பணம் ஒன்றும் கொண்டுவரவில்லை. பாங்க் காட் தான் இருக்கு என்கிறேன். “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” நான் கணவரிடம் சென்று காட்டை எடுத்துக்கொண்டு வர, என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வெளியே இருக்கும் ATM இல் பணம் எடுத்தபின் உள்ளே அழைத்து வர அறைக்குள் போக முன்னரே பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கூற அவர் உடனே தம்பியின் கடவுச் சீட்டை அவனிடம் கொடுக்க அவனே எம்மை அழைத்துச் சென்று தம்பிக்கு விசாவைக் குத்தி வெளியே விடுகிறான். கோபம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை எண்ணி மனதை அடக்கிக்கொண்டு வெளியே வர வேறு வழியில்லை என்று மனம் தெளிகிறது. எமக்காக வந்த வான் ஓட்டுனர் வெளியே காத்திருக்க மனம் நிம்மதியடைகிறது. போன இரண்டு நாட்களில் நெருங்கிய உறவினர்களிடம் சென்று பின் எமது வீட்டை சுற்றி கமரா பூட்டி, எனது செடிகளுக்கு சொட்டுநீர் பாசனக் குழாய்கள் பூட்டி முடிய ஒன்றரை வாரங்கள் போய்விட, அதன்பின்னர்தான் இந்தியா போனால் அந்த வங்கி அலுவலையும் ஒருக்காப் பார்க்கலாம் என்று நான் நினைவுபடுத்த, சரி நானும் வாறன். எனக்கும் சேர்த்து டிக்கற் போடு என்று மனிசன் சொல்ல எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பலாலியால் போவோமா என்று மனிசன் கேட்க, கொழும்பு போய் போவதே அதிக கிலோ கொண்டு வரலாம் என்கிறேன். பாலாலியால் போனவர்கள் உளவு இயந்திரத்தில் போனதுபோல் இருந்ததாகக் கூறியதும் ஒரு காரணம். அடுத்த நாளே விமானச் சீட்டுப் பெற்றுக்கொண்டதும் அடுத்த மூன்று நாட்களில் சென்னை செல்ல ஆயத்தம் ஆயாச்சு. ஒருவருக்கு போகவர 69 ஆயிரம் ரூபாய்கள். ஒன்லைனில் சென்னை T நகரில் ஒரு நாளுக்கு 3000 இந்திய ரூபாய்களுக்கு கோட்டல் புக் செய்து ஒருவாறு போய் இறங்கியாச்சு. அந்தக் கோட்டலுக்கு அண்மையில் சில உணவகங்களும் இருந்ததில் மூன்று நேரமும் மிகச் சுவையான உணவுகள் உண்டுவிட்டு கடைகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒன்றுக்கு இரண்டு தேநீரும் குடித்துவிட்டு மனநிறைவுடன் இரவு ஏசியைப் போட்டுவிட்டுப் படுத்தால், சிறிது நேரத்தில் கால் கைகளில் கடி. மூட்டைப் பூச்சியாக்குமென்று துடித்துப் பதைத்து எழுந்தால் சில நுளம்புகள் பறக்கின்றன. இரவு பத்துமணி. இந்த நேரத்தில் எங்கே வேறு இடம் மாறுவது? ஏசியைக் கூட்டி விடுறன். உது மொத்தப் போர்வை தானே. இழுத்துப் போர்த்திக்கொண்டு படு என்கிறார் கணவர். பிரையாணக் களைப்பில் ஒருவாறு தூங்கி காலை எழுந்து பல் விளக்கக் குளியலறைக்குச் சென்றால் கண்ணாடியில் தெரிந்த என் முகத்தைப் பார்த்து நானே பயந்துவிட்டேன்.
  6. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை சோம. அழகு பிற உயிரின் துயருக்கு நெக்குருகும் கண்ணோட்டம் வாய்க்கப் பெற்ற மனங்களெல்லாம் ஆசீர்வதிக்கப் பெற்றவையா? அல்லது கொடுஞ்சாபத்திற்கு உள்ளானவையா? மிகச் சாதாரண காட்சிகளே போதுமானவையாக இருக்கின்றன, நம்மை மொத்தமாக உருக்குலையச் செய்ய. பரவலான பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் எனினும் ‘சாதாரணம்’ என்பதற்கு இங்கு அளவுகோல் என்ன? உங்கள் சாதாரணங்கள் எனக்குப் பெரும்பாலும் ‘ரணங்கள்’. உதாரணமாக, நம் தாத்தா பிறப்பதற்கு முன்பிருந்தே நிற்கும் மரம் ஒன்று ‘சாலை விரிவாக்கம்’, ‘மின்கம்பிக்கு இடைஞ்சல்’… போன்ற அற்பக் காரணங்களுக்காக வெட்டப்படுவதை யாரேனும் நேரில் நின்று பார்த்திருக்கிறீர்களா? சுருங்கிய மனங்களுடன் விசாலமான உலகைக் காண முயலும் விந்தை, ‘மண்ணோ டியைந்த மரத்தனையர்’க்கு மட்டுமே கைவந்த கொலை! யாருக்கும் எத்தீங்கும் இழைக்காத மரத்தோடான மாந்தர்களின் ஒப்பீடே இங்கு தவறு! இது survival of the fittest கோட்பாட்டினுள் வராது; வேண்டுமானால் Survival of the foolest என்று கொள்ளலாம். கண்களுள் சிறையிட முடியாத அளவு பெரிதாக கம்பீரமாக நின்ற மரம் பரிதாபமாகச் சாய்ந்து விழும் போது தரையுடன் சேர்ந்து நம் மனதும் ஒரு கணம் அதிர்ந்து அடங்கும். நிலத்தில் லேசாகக் கிளம்பும் புழுதியில் அம்மரத்திற்காகப் பூமியில் இருந்து எழும் விசும்பல்களைக் கேட்டிருக்கிறீர்களா? காய்ந்து கிடக்கும் நம் மனங்களுக்கும் சேர்த்துத் தன் வேர்களில் சேமித்து வைத்திருக்கும் ஈரத்தைக் காட்சிப்படுத்தி ஒரு அலட்சியப் பார்வையில் கடைசியாக ஒரு முறை நம்மை எள்ளி நகையாடும். எத்தனை மனிதர்களுக்கு நிழல் தந்திருக்கும்! எத்தனை சிறுவர்களின் விளையாட்டுத் தோழனாய் இருந்திருக்கும்! கால சுழற்சியில் மாறிப் போன மனிதர்களுக்கும் அருகிப் போன கருணைக்கும் நின்ற சாட்சி அல்லவோ இப்போது வீழ்த்தப்பட்டுக் கிடக்கிறது! இரை தேடச் சென்று மாலை வீடடையும் பறவைகள் இன்று ஸ்தம்பித்துப் போகாதா? மனசாட்சியே இல்லாமல் ஒறுத்தாற்றுபவர்களிடம் எல்லாம் எப்படி பொறுத்தாற்றும் பண்புடன் நடந்து கொள்வது? இப்படியே நீண்டு கொண்டிருக்கும் சிந்தனையிலிருந்து எங்ஙனம் மீள்வது? ‘நம்ம பொழப்ப பாப்போம்’ போன்ற வழமையான வறட்டுத்தனத்தின் பின் ஒளிந்து கொண்டா? இது போலவே இன்னும் நிறைய… கிழிந்த சட்டையும் கலைந்த தலையும் காய்ந்த வயிறுமாகக் குப்பைத்தொட்டியை நிறைத்திருக்கும் மனிதத்திற்கு இடையே போனகம் தேடி ஆர்வத்தோடு துழாவும் ஒரு சக உயிர்; யாரிடமேனும் இரந்து நிற்கும் வாழ்ந்து கெட்டவர்கள்; உயிருக்கு உயிரான ஒருவரைப் போதிய பண வசதி இல்லாததால் ஒரு கொடூர நோய்க்குக் கண் முன்னரே கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது கண்டு செய்வதறியாது நிர்க்கதியாகிப் போனவர்கள்; குடும்பத்தினரின் வயிறு காயாமல் இருக்கவென, அவர்களுள் சிலரே தன் மகளை/சகோதரியை/மனைவியை நெறிபிறழ்ந்த வாழ்வுமுறைக்கு வற்புறுத்தும் கொடுமை அரங்கேற, அதை கனத்துக் காய்ந்து வற்றிப் போன உணர்வுகளுடன் ஏற்கத் துணியும் பெண்; விண்ணில் போர் விமானங்களின் விகாரமான சத்தத்தையும் அதனை விஞ்சும் வகையில் மண்ணில் இருந்து கிளம்பும் ஓலத்தையும் மொத்தமாகத் தன்னுள் அடக்கியபடி அமைதியாக நடு சாலையில் கிடக்கும் குருதி தோய்ந்த குழந்தையின் ஷூ (எவ்வளவு கோரமான புகைப்படம்!); பட்டாம்பூச்சியின் வண்ணத்திற்குப் பதில் பணியின் பொருட்டு கரி அப்பிய பிஞ்சு விரல்கள் – இவை போன்ற இன்னும் எத்தனையோ அவலங்களையெல்லாம் கேட்க/காண நேர்ந்த அந்நொடிக்குப் பிறகு கண்கள் காணும் எதுவும் மூளைக்குச் செல்வதில்லை. “ஏன் இவர்களுக்கு இப்படி நிகழ்கிறது? எனக்கு மட்டும் என்ன பெரிய தகுதி இருக்கிறது பாதுகாப்பான சூழலும் ஓரளவு நல்ல பொருளாதார நிலையும் வாய்க்கப் பெற? மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட உலகில் நிலவும் பாரபட்சம் எதன் அடிப்படையில்? இதற்கெல்லாம் சட்டையைப் பிடித்து உலுக்கி வளமான வசவுகளைப் பொழியவாவது அந்தக் கடவுள் என்ற ஒன்று இருந்து தொலைத்திருக்கலாம்……” ஒரு குமிழ் போல என்னுள் பெரிதாகிக் கொண்டே செல்லும் எண்ணவோட்டங்களை உடைக்கும் பொருட்டு ஒவ்வொரு முறையும் சிறிய கல் ஒன்று எறியப்படும் – “என்ன யோசிச்சுட்டு இருக்க?” என்னும் கேள்வியாக. சட்டென நிகழ் உலகத்திற்குத் தரதரவென இழுத்து வரும் இக்கேள்விக்குரியவரிடம் உண்மை பதிலைத் தர நான் என்ன பித்தியா? கொஞ்சம் பித்திதான் என்றாலும் கூட உலகத்தவரின் அளவீட்டில் இன்னும் பிரகடனப்படுத்தும் அளவிற்குச் செல்லவில்லை. உண்மையில் நான் யோசித்தவற்றை அப்படியே சொன்னால் என்னவாகும்? ஏற இறங்க ஒரு பார்வை கிட்டும். மிதமிஞ்சிப் போனால் ஒரு “சரி விடு… அதுக்கு நீ என்ன செய்ய முடியும்? இப்படி எத்தனையோ பேர் இருக்காங்க”. “என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே இங்கு வெட்கக்கேடுதானே? இந்தக் குற்றவுணர்வை எப்படி அநாயசமாகத் தூக்கிப் போடுகிறீர்கள்?” என்றெல்லாம் பதிலுக்குக் கேட்டு வைக்க முடியாது. பின்னர் அக்மார்க் முத்திரையே குத்திவிடுவார்கள். எனவே ஆழ்மனதில் ஒரு நொடி மௌன அஞ்சலி செலுத்தி இந்நுண்ணுணர்வுகளில் இருந்து விடுபட இயலாத தருணங்களில் எல்லாம் Weltschmerz என்னும் வார்த்தைக்கு என்னை ஒப்புக்கொடுக்க முயல்கிறேன். முயற்சி மட்டும்தானே செய்ய முடியும்? இதற்கெல்லாம் ஆறுதல் என்று ஒன்று இருக்கவா செய்கிறது? உச்சகட்டமாக மனம் அழுந்தி பச்சாதாபத்தில் மேலெழும் கோபம் அவர்களை அந்நிலைக்குத் தள்ளிய சூழல்கள், அதற்குக் காரணமாய் அமைந்தவர்கள் ஆகியவற்றின் பக்கம் திரும்பி ஏதோ நெறிப்படுத்தப்பட்டுவிட்டதைப் போல் போலி ஆறுதலடைய முயலும். இல்லையெனில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்…’ல் இருந்து ‘நமக்கு இருக்குற பிரச்சனையில இதையெல்லாம்….’க்கு மனம் மடைமாறி கழிவிரக்கத்தில் முற்று பெறும். ‘இப்படியே ஒவ்வொண்ணா பாத்துட்டு இருந்தா நம்ம வாழ்க்கைய வாழவே முடியாது’ – நடைமுறைக்கு ஒவ்வாதவை என வகுக்கப்பட்டுக் கழித்துக் கட்டப்பட்ட ‘ஒவ்வொன்று’களில்தான் நானும் ஒரு ஓரத்தில் ஒண்டிக் கிடக்கிறேன் போலும். உலகம் இப்படித்தான் இயங்கும் என்ற எதார்த்தம் எனக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் ‘கண்ணோட்டம்’ என்னும் இவ்வுணர்வு சில நேரங்களில் மனதளவில் முடக்கித்தான் போடுகிறது. கண்ணில் படுபவர்களுக்கும் ஓரளவுதான் உதவ முடிகிறது. அப்படி அவர்கள் ‘ஒவ்வொருவருக்கும்’ உதவி செய்வதென்பது ஒரு தனியாளாக சாத்தியமில்லை ஆகையால் நான் முழுமையாகச் சூடிக் கொள்ள இயலாத அக்கழிபெருங் காரிகை, நான் ‘உண்மை(உள்ளமை) நிலக்குப் பொறை’ என மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது. மனிதத்திற்கான அச்சாரமே பச்சாதாபம் தானே? உலகின் குரூரங்களை எல்லாம் காணுற்ற பிறகும் அவற்றை மனதின் ஏதோ ஒரு இடுக்கில் அமுக்கி ஆழப் புதைத்த பின் நிகழும் இயல்பான நகர்தலில் மனித மனங்கள்(என்னுடையதும்தான்!) ரொம்பவே பயங்கரமானதாகத் தெரிகின்றன. சோம. அழகு https://puthu.thinnai.com/2024/03/17/கண்ணோட்டம்-என்னும்-கழிபெ/
  7. நான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டிச் செல்பவர். அந்தமுறை என் அம்மா கற்பித்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பத்துப்பேர் சேர்ந்து இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என் வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம். எனக்குப் பின் பிறந்த ஒரு தம்பியையும் இரு தங்கைகளையும் அம்மாவின் பெற்றோர் சகோதரிகளுடன் விட்டுவிட்டு ஆறே வயதான என் கடைக் குட்டித் தம்பியையும் எம்மோடு அழைத்து வந்திருந்தார். முதலில் ஊரில் இருந்து கிளம்பி தலை மன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தொடருந்தில் பயணம் எது பின்னர் எமக்காக ஒழுங்கு செய்திருந்த மகிழுந்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் ஊர் வந்து சேர்ந்தோம். முதலாவது அந்தக் கப்பல் பயணமே எனக்கு எத்தனையோ அனுபவங்களையும் மகிழ்ச்யையும் தந்தது என்றாலும் அதுபற்றி எழுதும் ஆர்வம் எனக்கு இதுவரை எழுந்ததில்லை. அதன் பின் பதினாறு ஆண்டுகளின் பின்னர் திருமணமாகி கணவர் பிள்ளைகளுடன் சென்றபோது என் தந்தையும் கணவரின் பெற்றோரும் எம்முடன் வந்தனர். அப்போது என் நண்பியின் தமக்கை போர் சூழல் காரணமாக இந்தியா சென்று அங்கு ஒரு சொந்த வீட்டையும் கட்டி மேல்மாடியில் உள்ள மூன்று அறைகளை இந்தியாவுக்கு வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவார். எமக்கும் அது பாதுகாப்பு என்று கருதியதால் நாமும் மகிழ்வாகவும் நிம்மதியுடனும் அங்கு இருக்க முடிந்தது. அடுத்த நாளே அவரிடம் கதைத்தபோது அவரே ஒரு டாடா சுமோ ஜீப் ஒன்றை எங்களுக்காக ஒழுங்குசெய்து தந்தார். ஒருமாதம் மீண்டும் கோவில்கள் அரண்மனைகள் முக்கிய இடங்கள் என்று அதில் திரிந்தபோதும் பார்த்த இடங்களை மீண்டும் பார்த்தபோதும் எனக்குச் சலிக்கவில்லை. ஆனால் ஜீப்புக்கு செலுத்திய தொகைதான் தலைசுற்ற வைத்தது. ஆனாலும் அதுபற்றி என் கணவரைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. ஆனாலும் மீண்டும் இனி இந்தியா போவதே இல்லை என்று என் கணவர் கூற எனக்கோ மீண்டும் போய் இந்தியா முழுவது திரிந்துவிட்டு வர வேண்டும் என்னும் அவா கூடியது. எல்லோரும் இருந்து இதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோது அந்த எம்மூர் அக்கா “நீர் இங்கை ஒரு பாங்க் ஏக்கவுண்ட் திறந்துபோட்டுப் போனால் வருஷா வருஷம் கொஞ்சக் காசை அனுப்பினால் உமக்கு ஊர் சூத்திப் பாக்க காசும் சேர்ந்திடும்” என்று சொல்ல எனக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிய ஒருவாறு கணவரை சம்மதிக்க வைத்து வங்கிக் கணக்கொன்றை எங்கள் இருவரின் பெயரிலும் திறந்தாச்சு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐநூறு டொச் மாக்குகள் மட்டும் அனுப்பி அதன்பின் 2001 இல் கணவரின் தம்பியின் திருமணத்துக்குச் சென்றபோது இன்னும் ஒரு ஆயிரம் என்று போட்டாலும் மனிசன் மட்டும் எங்கட நாடும் இல்லை. உன்ர விசர் கதையைக் கேட்டு எக்கவுண்டில காசைப் போட்டாச்சு. திரும்பக் கிடைக்குமோ இல்லையோ என்று எப்பவும் எதிர்மறையாக ஏச, கடைசிவரையும் போகாது என்று மனிசனுக்குக் கூறினாலும் எனக்கும் ஒரு வீதப் பயம் இருந்தது என்னவோ உண்மை. அதன்பின் 2014 இல் என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது மனிசன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இன்னும் ஒரு இரண்டாயிரம் பவுண்சுகளையும் கொண்டுசென்று முன்னர் போட்டவைகள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று ஆண்டுகள் நிரந்தர வாய்ப்பில் இட்டுவிட்டு வந்தாச்சு. மூன்று ஆண்டுகளின் பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போது உங்களுக்குக் கடிதம் மூலம் அறியத் தருவோம் என்றதுடன் சரி. எந்தக் கடிதமும் வரவில்லை. இப்ப மனிசன் எதுவும் சொல்லாமலே எனக்குப் பயம் எழ, வங்கி முகாமையாளருடன் தொலைபேசியில் கதைக்க அவரும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நான் மெயில் ஒன்று போடுகிறேன் என்று சொன்ன கையோடு அதுவும் வந்து சேர, அதன் பின்தான் எனக்கு நிம்மதி வந்தது. அது நடந்து படிக்கட்டு ஆண்டுகளாகியும் மீண்டும் இந்தியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் என் கணவருக்கு இந்தியா என்றாலே வேப்பங்காயாகவே இருந்ததும் பிள்ளைகள் கல்வி, திருமணம் என்னும் சுழலும் இந்தியாவைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை என்றானது. கடந்த ஆண்டு நான் ஆறு மாதங்கள் இலங்கை சென்ற போது எனது சுவிஸில் இருக்கும் நண்பி ஒருத்தியும் நானும் உன்னுடன் வர ப்போகிறேன் என்றதும் உடனே எனக்கு அவளுடன் இந்தியா செல்ல வேண்டும் என்னும் அவா எழ அவளிடம் கேட்கிறேன். அவள் இதுவரை இந்தியா சென்றதில்லை. இனிச் செல்லும் ஆர்வமும் தனக்கு இல்லை என்று கூற சரி இலங்கையிலாவது இருவரும் சேர்ந்து திரிந்து இடங்கள் பார்க்கலாம் என்றதுடன் நான் எங்கெங்கு செல்லலாம் ஆவலுடன் பட்டியலிட்டயபடி காத்திருக்க, அவளோ கடைசி நேரத்தில் தான் தனிய இலங்கை வருவது தன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வாராமலே விட்டது வேறு கதை. இம்முறை என் வளவில் மேலதிக மரக்கன்றுகள், செடி கொடிகள் எல்லாம் வைப்பதற்கு ஏற்ற காலம் ஒக்டோபர் என்பதால் நான் விமானச்சீட்டு முதலே எடுத்து வைத்தபடி காத்திருக்க, வாங்கிய வீட்டையும் வளவையும் நான் வடிவாப் பார்க்கவே இல்லை. நானும் உன்னுடன் வாறன் என்று மனிசன் சொல்ல சரி என்று அவருக்கும் பயணச் சீட்டு எடுக்க வெளிக்கிட இப்ப நான் வர ஏலாது. டிசம்பர் அல்லது தை மாதம் போவம் என்று கூற நான் ஏற்கனவே ஒக்டோபருக்கு எடுத்திட்டனே என்கிறேன். பரவாயில்லை மாத்து என்று சொல்ல, டிசம்பரில் விலை ஆயிரம் தாண்டியது. சரி தை மாதம் போடுவோம் என்று இணையத்தில் தேடினால் எல்லா 23-30 kg மட்டுமே கொண்டுபோகலாம் என்று காட்ட 40kg பொதிகள் கொண்டுபோகக் கூடிய விமானம் எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டும் தான். அதில் என் தேர்வு எமிரேட்ஸ் தான். ஏனெனில் உணவும் கவனிப்பும் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். எல்லாம் எதிர்மாறாக இருந்தது வேறுகதை. வரும்
  8. நல்லாயிருக்கு....கந்தையர் 😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால் அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது. இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில் அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல் நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
  9. விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  10. (குறுங்கதை) குற்றமே தண்டனை --------------------------------- நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சேகர் எங்கள் வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் ஐயா சேகரை கூட்டி வந்தார். சேகருக்கும் எனக்கும் ஒரே வயது. மலையகத்தைச் சேர்ந்தவன். யாழில் ஒரு வீட்டில் வேலைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றான். அந்த வீட்டுக்காரர்களின் கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓடிக்கொண்டிருந்த சேகரை ஐயா யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் வைத்துக் கண்டதாகச் சொன்னார். நாங்கள் அப்போது ஏழு பிள்ளைகள். எட்டாவது தம்பி இன்னும் பிறக்கவில்லை. சேகர் தற்காலிகமாக எட்டாவது பிள்ளை ஆகினான். சேகரை சேகரின் ஊர், தாய் தந்தையர் விவரம் அறிந்த பின், அவனின் வீட்டாரை எச்சரித்து, அங்கு கொண்டு போய் விடுவதாக ஐயா அம்மாவிற்கு ஒரு தகவலாக மட்டுமே ஒரு இரவில் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா மிகுந்த இரக்கமுள்ளவர். ஆனாலும் ஏற்கனவே ஏழு குஞ்சுகளுக்கு தினமும் இரை தேடும் ஒரு தாய்ப்பபறவையின் நிலையிலேயே அம்மா இருந்தார். அம்மாவின் தவிப்புகள் எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஐயாவிற்கு எட்டாவது நிரந்தரப் பிள்ளை ஒன்றிற்கான திட்டம் இருந்ததும் அம்மாவிற்கு அப்போது தெரிந்தே இருக்காது. சேகரை பள்ளிக்கூடம் அனுப்பவில்லை. இது அநியாயம், அக்கிரமம் என்று உடனேயே முடிவெடுத்துவிடாதீர்கள். என்னையே அப்பொழுது தான் பள்ளிக்கூடம் அனுப்ப ஆரம்பித்திருந்தனர், அதுவும் அக்கம்பக்கம் இருந்தவர்களுக்குப் பயந்து. இரண்டாம் வகுப்பு எனக்கு அரிவரியே, முதலாம் வகுப்பின் பிற்பகுதியில் தான் நானே பாடசாலையை ஆரம்பித்திருந்தேன். நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தால், சேகரும் நானும் எப்போதும் ஒன்றாகவே விளையாடுவோம். சேகர் உடல் மிகவும் உறுதியானவன். வேகமானவனும் கூட. ஒருநாள் ஒரு தென்னந்தோப்பிற்கு எங்களிவரையும் கூட்டிச்சென்றனர். நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள். தென்னை மரங்களில் பாம்பு கீறும் வேலையை எங்களிருவருக்கும் கொடுத்தனர். கறுப்பு மையால் வளைச்சு வளைச்சு தென்னை மரத்தில் பாம்பு கீறவேண்டும். பாம்பின் தலைப்பக்கம் கொஞ்சம் பெரிதாக இருக்க வேண்டும், வால் பக்கம் மெல்லிதாக இருக்கவேண்டும். தேரையின் கண்ணுக்கு அது பாம்பாகத் தெரிய வேண்டும், அது தான் நிபந்தனை. தேரை தென்னையில் ஏறி, குரும்பைகளை மேய்ந்தால், தேங்காய்கள் ஒல்லித்தேங்காய்கள் ஆகிவிடும் என்பது ஐயாவினதும் அவர்களினதும் நம்பிக்கை. நான் இன்றுவரை இந்த பாம்பு - தேரை - ஒல்லித்தேங்காய் விசயத்தை எங்கும் தேடி உறுதிபபடுத்தவில்லை. பாம்பை விட வேறு ஏதாவது என்னைக் கீறச் சொல்லியிருந்தால், அது அதுவாக வந்தே இருக்காது. சித்திரம் அவ்வளவு மட்டுமட்டு. தேரையைத் தூக்கும் ஒரு பருந்தோ அல்லது ஒரு கழுகோ கீறி இருந்தால், அங்கிருந்த தேரைகள் நிச்சயமாக என் சித்திரத்தின் மேலால் தென்னைகளில் ஏறி ஒரு உயரத்தில் வாழ்ந்திருக்கும். ஒவ்வொரு பாம்புடனும் A, B, C, D இப்படி ஒரு எழுத்தையும் தென்னையின் மற்ற பக்கத்தில் போடலாமே என்று எனக்கு ஒரு யோசனை திடீரெனத் தோன்றியது. அப்பொழுது தான் நான் இரண்டாம் வகுப்பில் ஆங்கிலப்பாடம் படிக்க ஆரம்பித்திருந்தேன். நான் அதை சேகருக்கும் சொன்னேன். அவனும் அதை ஏற்றுக்கொண்டான். ஆனால் அவனுக்கு ஆங்கில எழுத்துகள் தெரியாது, தமிழ் எழுத்துகளும் தெரியாது. பாம்புகளைக் கீறி முடித்த பின், இருவருமாகச் சேர்ந்து A, B, C, D போடுவதாக முடிவெடுத்தோம். பாம்புகளை கீறிக்கொண்டிருக்கும் போது, சேகர் அடிக்கடி என்னிடம் வந்தான். இடையிடையே சின்னச் சின்ன ஓய்வு எடுப்பது போன்று. ஒவ்வொரு தடவையும் A என்றால் எப்படி இருக்கும், B என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டான். எழுதிக்காட்டினேன். பாவமாக இருந்தது, சேகரையும் எப்படியும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும், அம்மாவிடம் மட்டுமே பேசலாம், அம்மாவையே கேட்போம் என்று நினைத்தபடியே என்னுடைய தென்னை மரங்களில் பாம்புகளைக் கீறி முடித்தேன். சேகர் எப்பவோ கீறி முடித்திருக்கவேண்டும். அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பக்கத்தை நோக்கி நடந்தேன். அவனுடைய தென்னை மரங்களையும், பாம்புகளையும் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டேன். ஒவ்வொரு பாம்பின் வாலுக்கு கீழும் ஒரு ஆங்கில எழுத்து எழுதப்பட்டிருந்தது. ஓடி ஓடிப் பார்த்தேன். 26 எழுத்துகளும் 26 பாம்புகளின் வால்களில் எழுதப்பட்டிருந்தது. அப்படியே முட்டி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அங்கேயே நின்றேன். எனக்கு தெரிந்த முழு ஆங்கிலத்தையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தேன், ஆனால் இவன் என்னை ஏமாற்றி விட்டானே என்று. கோபமும் அழுகையும் கரையை உடைக்கக் காத்திருந்தன. வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் சேகர் என்னிடம் எதுவும் கதைக்கவில்லை, நானும் தான். வீட்டிற்கு வந்த பின்னர், இருவரும் குளிப்பதற்காக கிணற்றடிக்குப் போனோம். பெரிய வட்டக் கிணறு. எப்போதும் ஆறு அடிகளுக்கு தண்ணீர் நிற்கும். மாறி மாறித் தண்ணீர் இறைத்துக் குளிப்பது எங்கள் வழக்கம். சேகர் முன்னால் நின்று தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் தயங்கி விட்டு, அப்படியே சேகரைப் பிடித்துத் தள்ளி விட்டிட்டேன். 'அய்யோ' என்ற அவனின் குரல் முடிவதற்குள் பெரிய சத்தத்துடன் சேகர் தண்ணீருக்குள் போய்விட்டான். அம்மாவும், வேறு ஆட்களும் ஓடிவந்தனர். பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர் மிக இலகுவாக கிணற்றுக்குள் காலை கீழே விட்டுப் பாய்ந்து, சேகரை தண்ணீருக்குள் இருந்து தூக்கி எடுத்தார். சேகர் தானே தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகவே சொன்னான். எனக்குப் பக்கத்திலேயே ஒட்டிக்கொண்டே இருந்தான். இரவாகியது. ஐயாவிற்கும் அம்மாவிற்கும் ஒரே வாய்த்தர்க்கம். அம்மா ஒரே விசயத்தையே ஐயாவிடம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார், சேகருக்கு எதுவும் ஆகியிருந்தால் நாங்கள் இந்த உலகத்திற்கு என்ன பதில் சொல்வது என்று. நானும் சேகரும் அப்படியே நித்திரை ஆகிவிட்டோம். காலை எழும்பி அவசரம் அவசரமாக நான் பள்ளிக்கூடத்திற்கு போவதற்கு ஆயத்தமானேன். சேகரும் எழும்பி விட்டிருந்தான். பள்ளிக்கு கிளம்பும் போது, வாசலில் நின்று திரும்பிப் பார்த்தேன், சேகர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அன்று வகுப்பில் இதே நினைவு மட்டுமே. சேகர் எப்படியும் வீட்டில் என்னை மாட்டி விட்டுவிடுவான் என்று மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது. பள்ளிக்கூடம் முடிந்து பயத்துடன் வீட்டிற்குள் மெதுவாக நுழைந்தேன். சேகரைக் காணவில்லை. அவனை எங்கும் காணவில்லை. மெதுவாக அம்மாவிடம் போய் சேகர் எங்கே என்று கேட்டேன். சேகரைக் கூட்டிக்கொண்டு ஐயா மஸ்கெலியாவிற்கு போயிருப்பதாக அம்மா சொன்னார். மஸ்கெலியாவில் சேகரின் தாய் தந்தை இருப்பதாகவும் அம்மா சொன்னார். சேகர் அழுதுகொண்டே போனதாகவும் அம்மா சொன்னார், சொல்லும் போதே அம்மாவின் குரலிலும் ஒரு அழுகை தெரிந்தது. நான் அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன். தொண்டை அடைத்த பின், கண்ணீர் ஓட இருந்தேன். மஸ்கெலியாவிலிருந்து ஐயா மட்டும் திரும்பி வந்தார். அதன் பின் சேகர் பற்றி எங்கள் வீட்டில் எவரும் கதைக்கவில்லை. நானும் ஐயாவையோ அம்மாவையோ எதுவும் கேட்டதும் இல்லை.
  11. மயிலிறகை......... 19. மயிலம்மா வீட்டுப் படுக்கை அறை. கல்யாணக் கலாட்டா எல்லாம் முடிந்து வர நேரமும் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. வாமனும் பொடியலுடன் கொஞ்சம் மதுவும் பாவித்து சாப்பிட்டு விட்டு வந்ததால் அறையில் பால்பழங்கள் எதுவும் அங்கில்லை. புது இடமாய் இருந்த போதிலும் அஞ்சலா கட்டிலில் சிறிதும் அச்சமின்றி அமர்ந்திருக்கிறாள். தலையில் வட்டமாய் கொண்டை போட்டு பின்னலில் சடைநாகமும் குஞ்சமும் வைத்து நிறைய பூக்களால் அலங்காரம் செய்து அனுப்பி இருந்தார்கள். அவள் தனக்குள் இவன் ஒரு தொடை நடுங்கி, இவனால் என்ன பெரிதாய் செய்துவிட முடியும் என்னும் எகத்தாளம் கண்களில் தெரிகின்றது. புத்தம் புது வாலிபனான இவனை நான்தான் சாமர்த்தியமாக வழிக்குக் கொண்டுவர வேண்டும். ஒரேயடியாய் பயப்படுத்தக் கூடாது என்று நினைக்க சிரிப்பும் கூடவே வருகின்றது. அப்போது வாமன் அங்கு நாலுமுழம் வேட்டி கட்டி நாஷனல் சேர்ட்டும் போட்டுகொண்டு கழுத்தில் மைனர் செயினும் கைகளில் மோதிரங்களும் மின்ன உள்ளே வருகிறான். அவன் விதானையல்லவா, இதுநாள்வரை எத்தனை எத்தனையோ பேரின் பொய் மெய் களை அவர்களின் கண்களை பார்த்தே கண்டுபிடித்திருக்கிறான். அதுபோல் அஞ்சலாவின் எண்ண ஓட்டங்களும் அவனுக்குப் புரிகின்றது. மெல்லமாய் நடந்து அவளை நெருங்கி அருகில் நிக்கிறான். அவளும் கொஞ்சம் அரக்கி இருந்து கொண்டு உட்காருடா என்கிறாள். அவனும் அருகில் அமர்கின்றான். அவள் தனக்கு சொல்வதுபோல் அவனுக்கும் சேர்த்து சொல்கிறாள். சே எல்லாம் புஷ்வாணமாய் போச்சுது. எனக்கென்ன தெரியும் அவங்கள் மோட்டார் சைக்கிளுக்காத்தான் அப்படி அலைஞ்சு திரிஞ்சவங்கள் என்று சொல்ல அவனும் எனக்கு அப்படித் தோன்றவில்லை. திருமணங்கள் சொர்க்கத்தில் நிட்சயிக்கப் படிக்கிறது என்பார்கள் அது நிஜமோ பொய்யோ தெரியாது ஆனால் எங்களை பொறுத்தவரை யோகிபாபுவால் தான் நிட்சயிக்கப் பட்டிருக்கு. அதென்னமோ உண்மைதான் என்று அதை அவள் ஆமோதிக்கிறாள். பின் அவன் கையை எடுத்து தன் இடுப்பைச் சுற்றி வைத்துக் கொண்டு மெதுவாக அவன் மார்பில் சாய்கிறாள். அவன் சும்மா இருப்பதைப் பார்த்து என்னடா பயமாய் இருக்கா.....என்னிடம் என்னடா பயம் என்கிறாள். அவனும் ....ம்.....கொஞ்சம் என்று சொன்னவன், அப்படியே அவளை சரித்து மடியில் வளர்த்தி கண்களில் காதல் மின்ன உதடுகளில் முத்தமிடுகிறான். அதை அவள் ரசிக்கிறாள்.கண்கள் கிறங்குகின்றன. அவள் சற்றே அசைந்து அவன் கண்களை நோக்க அதில் காதலுடன் காமமும் ஒளிர்கின்றது. கண்களின் வார்த்தைகளை அவள் புரிந்து கொள்ளும் அடுத்த கனத்தில் இருந்து அவன் அவனாக இல்லை. கொதிக்கக் காய்ச்சிய இரும்பு கொல்லனின் அடியில் வளைந்து நெளிந்து வசமாவதுபோல் அவளும் நெகிழ்ந்து மகிழ்ந்து மலர்ந்து நிக்கிறாள்.மேனி துடிதுடித்து மயங்கி முயங்கி நிலைகுலைகிறாள். இதுநாள்வரை கஞ்சனின் பெட்டிக்குள் பணக் கட்டாய் பஞ்சடைத்து இருந்தவள் இப்போது திருவிழாவில் சிறுவனின் கையில் கிடைத்த சில்லறைகள் போல் சிறகடித்துப் பறக்கிறாள். அவள் மேனியில் ஆடைகள் சில இருந்த போதும் அவை தம் கடமையை மறந்து ஒதுங்கி நின்று ஓரங்க நாடகம் பார்க்கின்றன. சென்றி உடைத்து உட்புகுந்த இராணுவத்திடம் பாதுகாவல் அரண்களும் பதுங்கு குழிகளும் சரண்டர் ஆகின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் கெஞ்சிக் கெஞ்சி கொஞ்சிக் கொஞ்சி அணைக்கும் அவனின் வலிமையான கரங்களை அவளின் வளைக்கரங்கள் தடுக்க முயன்று தோற்று மென்மேலும் இறுக்கித் தழுவிக் கொள்கின்றன. செவ்விதழ்கள் செந்தேனாய் சிந்துகின்றன. தேன்துளிகள் தெறிக்கும் இடமெல்லாம் அவன் ஆதரங்களால் மேய்கிறான். கன்னிமலர் காகிதமாய் கசங்கி போகிறது. மதனநீர் ஒழுக மதம் பிடித்து நின்ற பிடி அங்குசத்துக்கு அடங்கிக் கிடக்கின்றது. அன்று அப்படி இருந்த இவன் இன்று எப்படி இப்படி மாறினான். மனதில் எழும் ஆயிரம் கேள்விகளை உடலின் இன்பவேதனை மறக்கடிக்க அவளும் அவனுடன் மல்லுக்கட்டிக் களைத்து அவனருகில் அயர்ந்து உறங்கி விடுகிறாள். அடுத்தநாள் பகல் பத்து மணிக்குமேல் எழும்பி கைகளை உயர்த்தி உடம்பு முறித்து கதவு திறந்து வெளியே வருகிறாள். மாருதியின் ஓவியம்போல் தலை நிறைய பூக்களுடன் பொலிவாய் உள்ளே போனவள் இப்பொழுது கன்னங்களும் உதடு முகம் எல்லாம் வீங்கி கண்களும் சுருங்கி அரசியல் கார்ட்டூன் போல் அலங்கோலமாய் இருக்கிறாள்.அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க சந்திரபிம்பமாய் இருந்தவள் சந்திரமுகியாய் வெளியே வருகிறாள்.அந்த அலங்கோலத்திலும் அழகு கொட்டிக் கிடக்கு. மயிலம்மாவும் அவளைக் கண்டு சிநேகமாய்ப் புன்னகைத்து அவளைக் குளக்கரைக்குக் கூட்டிப் போகிறாள்.போகும்போது மறக்காமல் அஞ்சலா மாற்றுவதற்காக்க பூவனத்தின் ஆடைகளையும் துவாயையும் எடுத்துக்கொண்டு போகிறாள். பின் சம்பிரதாயமாக என்னம்மா நன்றாகத் தூங்கினாயா என்று கேட்க அவளும் கைகளை உதறி விரல்களை நெட்டி முறித்துக் கொண்டே மயிலம்மாவை நேராகப் பார்க்காமல் எங்கையம்மா உங்களுக்கு பகிடியாய் இருக்கு போல. ஏன் என்ன நடந்தது நேற்றிரவு நடந்த சம்பவத்துக்கு உன்னை கோபித்துக் கொண்டானோ...... அப்படி கோபித்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை என்று தோன்றுகின்றது. அப்போது இருவரும் குளத்தருகில் வந்து விட்டார்கள். இருவரும் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்து விட்டு குறுக்குக் கட்டிக்கொண்டு குளத்துக்குள் இறங்கி முங்கி முங்கி மூழ்கிக் குளித்து மேலே வருகிறார்கள்.அஞ்சலா கல்லில் இருக்க மயிலம்மா ஒரு சவர்காரத்தை எடுத்து அவளுக்கு முதுகு தேய்த்து விட்டு முகத்துக்கு போடுவதற்கு அவளிடம் தருகிறாள். என்ன முதுகெல்லாம் ஒரே கீறலாயிருக்கு. சே....என்ன பையன் அவன் .....அவன் ஒரு மிருகம். பத்து கைகளும் எட்டுக் கால்களுமாய் என்னை எத்தனை இம்சை செய்தான் தெரியுமா. எனக்கென்ன தெரியும், நீ சொன்னால்தான் தெரியும். அன்று என் வீட்டில் தண்ணிப் பம்பு திருத்தும்போது அப்படிப் பயந்தாங் கொள்ளியாய் இருந்தவன்.... மயிலம்மா இடைமறித்து எப்படி "எலிபிடிக்கப் பழகாத பூனை" என்று என்னவோ சொன்னாயே அப்படியா ....ம்....அன்று நான் சொன்னது உங்களுக்கு கேட்டுட்டுது போல......அதேதான் இந்த சில மாதங்களில் இப்படி ஆகியிருக்கிறான்..... என்ன வேகம் ....ஓடுற முயல்களை விரட்டி வேடடையாடும் புலியாய் இருந்தான். அப்போது இல்லாத வெட்கம் இப்போது என்னை ஆட்கொள்ள டேய் வெட்கமாய் இருக்குடா,லைட்டை அணையடா, லைட்டா அணையடா செல்லம் என்று சொல்கிறேன் அவன் கேட்டால்தானே, நீ என் ஸ்வீட் ஹார்ட் அதுதான் ஹார்ட்டை அணைக்கிறேன் ஹார்ட்டாய் அணைகிறேன் என்று இதயத்துக்குள் இதயத்தைப் புகுத்துவது போல் இம்சை செய்தான். இது எப்படி என்று இவர்கள் கதைக்கும் போது தூரத்தே வாமன் வருகிறான். வரும்போது முற்றத்தில் நின்ற பாம்பை கையில் எடுத்து, கையிலும் தோளிலும் ஊரவிட்டுக் கொண்டே அங்கு வருகிறான். ஐயே பாம்போடு வருகிறான் பயமில்லையா என்று அஞ்சலா வினவ... இல்லை அது சின்னனில் இருந்தே அவனோடு நல்ல பழக்கம் ஒன்றும் செய்யாது. சரி இப்ப அவனிடமே கேட்கிறேன் எப்படிடா உனக்குள் இந்த மாற்றம் என்று.....அப்படியே கேட்கவும் செய்கிறாள். வாமன் இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே பாம்பை கீழே விட அது அப்பால் போகின்றது.பின் நாலுமுழ வேட்டியையும் பனியனையும் கழட்டிக் கரையில் வைத்து விட்டு ஜட்டியுடன் குளத்துக்குள் பாய்கிறான். மயிலம்மா நைசாக நழுவி ஆடைகளை அலம்பும் சாக்கில் அப்பால் போகிறாள். நன்றாக முங்கிக் குளித்து மேலே வந்தவனிடம் அஞ்சலாவும் டே நீ இந்த வித்தையெல்லாம் எங்கு கற்றாய் ..... எந்த வித்தை...... தெரியாத மாதிரி கேட்டியென்றால் கல்லெடுத்து அடிச்சுப்போடுவன் சொல்லடா என்கிறாள். இவர்களின் சண்டையை ரசித்தபடியே இவன் என்ன சொல்லித் துலைக்கப் போறானோ என்னும் பதட்டத்தில் மயிலம்மா ஆடைகளை அலம்பிப் பிழிகிறாள்…. ஓ....அதுவா ....சொல்கிறேன் கேள்.....நீ என்னை அன்று அவமதித்தாய் அல்லவா .. சீ ......நான் ஒன்றும் உன்னை அவமதிக்கவில்லை..... இருக்கட்டும், முதலில் நீ என்னைப் பூனையுடன் ஒப்பிட்டதே தவறு..... பெருந்தவறு ..... அதன் பின்தான் நான் கோயில் தேரில் சிலைகளைப் பார்த்தேன்.....கோபுரத்தில் சிற்பங்கள் பார்த்தேன்..... சோலையில் கிளிகளைப் பார்த்தேன்.....மரங்களில் மந்திகளைப் பார்த்தேன்..... பாதையில் நாய்களைப் பார்த்தேன் .......பட்டிகளில் மாடுகள் பார்த்தேன்.... மலர்களில் வண்டுகள் பார்த்தேன்.....சந்து பொந்துகளில் சர்ப்பங்கள் பார்த்தேன்.... இவைகளும் போதாதென்று சரோஜாதேவியைப் பிடித்தேன் படித்தேன் ...... சரோஜாதேவியா ...... என்னடா சொல்கிறாய் , அஞ்சலா கேட்க, மயிலம்மா வியக்கிறாள்..... ஓம்.......சரோஜாதேவியேதான்......கையடக்கமான ஒரு காவியம்.....கலவிக் கலையின் அத்தனை நுணுக்கங்களும் அதில் அடக்கம்..... எல்லாவற்றையும் எனக்குள் ஒத்திகை பார்த்து வைத்துக் கொண்டேன் .....எதிர்காலத்தில் உதவலாம் என்று..... நேற்றிரவு என் பத்தினி நீ எகத்தாளமாய் மெத்தையில் இருந்தாய். புதுப் பெண்ணுக்குரிய வெட்கம் கிஞ்சித்தும் இல்லை உன்னிடம். அது என்னை சூடேற்ற, பார்த்து வைத்திருந்த ஒத்திகை அத்தனையையும் தத்தை உன்னிடம் மெத்தையில் அரங்கேற்றினேன்..... ஓ....அதுவா விசயம் .....நானும் என்னென்னமோ நினைத்துக் கொண்டேன் என்று மயிலம்மாவை ஓரக்கண்ணால் ஒரு நொடி பார்த்து விட்டு சொல்கிறாள்....மயிலம்மாவும் நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விடுகிறாள். அது சரி.....நீ எப்படி என்னைப் பத்தினி என்கிறாய். பத்தினிக்கு அர்த்தம் என்னென்று தெரியுமாடா உனக்கு....வட்டிக்காக வட்டிவைத்தி வீட்டில் வெட்டியாய் வாழ்ந்து வந்தவள் நான்.....நான் பத்தினியா..... நீ பத்தினிதான், அதில் என்ன சந்தேகம் உனக்கு.... எப்படி..... இப்படி.....அசோகவனத்தில் ஆண்டு முழுதும் வாழ்ந்த சீதை அக்நியில் குளித்து வந்த பத்தினி..... அக்நியில் பிறந்து ஐவருடன் வாழ்ந்த பாஞ்சாலியும் பத்தினி ..... முனிவன் உருவில் வந்து முயங்கியவனை சாபமிடாமல் சல்லாபித்த அகலிகையும் பத்தினி..... கோவலனை மணந்த கண்ணகியும் பத்தினி..... கணிகையர் குலத்தில் பிறந்தும் அவனோடு மட்டும் வாழ்ந்து பின் தானும் துறவியாகி பெற்ற மகளையும் துறவியாக்கிய மாதவியும் பத்தினி..... படகில் முனிவனுடன் சல்லாபித்து வியாசரைப் பெற்று பின் கன்னியாகி மணமுடித்த சத்யவதியும் பத்தினி.... கணவனின் கருத்துக்கமைய ஆகாயத்தில் சென்ற தேவர்களைக் கூவி அழைத்து குழவிகளைப் பெற்ற குந்திதேவியும் பத்தினி என்றால் என்றால் ..... நீயும் பத்தினியே.....உன்னையும் என்னையும் சேர்த்து மணமுடித்து வைத்து அழகுபார்க்கும் இந்த மயிலம்மாவும் பத்தினிதான். என்றவனைப் கல்லில் இருந்து பாய்ந்து தாவியணைக்கிறாள் அஞ்சலா.... மனதில் இருந்த பாரம் இறங்கிய நிம்மதியில் வாமனின் அறிவை வியந்துகொண்டே பிழிந்த துணிகளை எடுத்துக் கொண்டு பின்னழகு அசைந்து அசைந்து அவனுக்கு நன்றி சொல்ல அன்னம்போல் நடந்து முன்னால் செல்கிறாள் மயிலம்மா.....! சுபம். மது வீட்டுக்கு கேடு.....! யாவும் கற்பனை....! யாழ் அகவை 26 க்காக...... ஆக்கம் சுவி........!
  12. 19 MAR, 2024 | 11:21 AM வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார். குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். https://www.virakesari.lk/article/179099
  13. 😀😀.... இங்கே பெயர், சொந்த ஊர், வயது இப்படியானவைற்றை சொல்லலாமா இல்லையா என்று தெரியவில்லை....... சுய ஆக்கங்களில், சிறுவனாக 80ம் ஆண்டுகளில் இருந்த போது நடந்த சில விசயங்களை எழுதியிருக்கின்றேன்......🤣 நீங்கள் இங்கே களத்தில் கொஞ்சம் வித்தியாசமானவர்😀.......ஒரு மாற்றுக் கருத்து.....👍
  14. https://www.facebook.com/share/p/WdsMHGsMDxqxmV9S/?mibextid=oFDknk
  15. என் மகள் சோம.அழகு 'திண்ணை' இதழில் எழுதிய கட்டுரையை இங்கு பதிவு செய்துள்ளேன். நன்றி தோழர். "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" (குறள் 315; அதிகாரம் : இன்னா செய்யாமை) (குறளின் பொருள் : பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தைத் தனக்கே ஏற்பட்ட துன்பமாய்ப் பாவிக்காவிட்டால், ஒருவன் பெற்ற அறிவினால் என்ன பயன் ?) மேற்கண்ட குறள் நீங்கள் சொன்ன கருத்துடன் பொருத்தி நோக்கத்தக்கது. 'பிறிதின் நோய்' என்று அஃறிணைகளுக்கு ஏற்படும் துன்பத்தையும் வள்ளுவன் குறித்தது குறளின் சிறப்பு. 'பிறிதின் நோய் தந்நோய்' எனும் தலைப்பில் முன்னர் நமது இந்த 'யாழ்' தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆகையால் குறள் உடனே நினைவுக்கு வந்தது. தங்களின் பின்னூட்டத்திலிருந்து சற்று விலகி, ஒரு கருத்தையும் இவ்விடத்தில் கட்டுரைக்கான எனது பின்னூட்டமாகப் பதிவு செய்ய விழைகிறேன். சில நேரங்களில் சில அழிவுகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதயாததாய் அமையும் - சாலை அமைக்க மரம் வெட்டுவது போல. இருப்பினும் அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தாமல் கடந்து செல்வது பேரழிவுகளுக்கு வழி வகுக்கும். அவ்வாறு கேள்விக்கு உட்படுத்துவதாகவும் கட்டுரையைப் பார்க்கிறேன். இக்கண்ணோட்டமும் கட்டுரையில் குறித்த 'கண்ணோட்ட'மும் இணைந்து செல்வன என்று நினைக்கிறேன்.
  16. முடிவிலி ------------- சமீபத்தில் இங்கே ஒரு பாதிரியாருக்கு பெரிய மாரடைப்பு வந்து கொஞ்ச நேரம் இறந்து போய்விட்டார். பின்னர் அவருக்கு உயிர் திரும்பவும் வந்துவிட்டது. இப்படித்தான் வைத்தியசாலையில் சொன்னார்கள். இது செய்திகளிலும் வந்து இருந்தது. பாதிரியாரும் இடைப்பட்ட, அவர் இறந்திருந்த, நேரத்தில் அவர் வேறு ஒரு இடத்திற்கு போய் வந்ததாகச் சொன்னார். இதை Near Death Experience (NDE) என்று சொல்கின்றனர். இந்த வாழ்வின் முடிவில் இருந்து சாவின் விளிம்பு வரை போய் வருதல். அடிக்கடி உலகில் எங்காவது நடக்கும் ஒரு நிகழ்வு இது. பொதுவாக இந்த அனுபவம் பெற்றவர்கள் அநேகமாக வெளிச்சமான, பிரகாசமான, பூந்தோட்டங்கள் நிறைந்த, வாசனைகள் பரவும், ஒளி சுற்றிச் சுழலும், தெரிந்தவர்கள் மற்றும் முன்னோர்கள் மிதந்து கொண்டிருக்கும் ஒரு இடத்திற்கே போய் வந்ததாகச் சொல்வார்கள். அவர்கள் போய்ப் பார்த்து வந்த இடம் சொர்க்கம் என்பதன் விளக்கம் இது போலும். ஆனால் இந்தப் பாதிரியார் தான் நரகத்திற்கு போய் வந்ததாகச் சொல்கின்றார். ஒரே இருட்டு, அதைத் தாண்டினால் மனிதர்கள் நான்கு கால்களில் நடக்கின்றார்கள், அவர்களின் கண்கள் வெளியே தள்ளப்பட்டிருக்கின்றன, சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்றார்கள், நெருப்பில் விழுகின்றனர் என்று பாதிரியார் அவர் போய் வந்த இடத்தை விபரித்திருந்தார். இதற்கு முன்னர் வாழ்வின் முடிவு வரை போய் வந்தவர்கள் சொன்னவற்றை வைத்து, இங்கே பூமியில் என்ன செய்தாலும், என்ன கூத்து ஆடினாலும், கடைசியில் எல்லோரும் சொர்க்கத்திற்கு தான் போவார்கள் போல என்று அசமந்தமாக இருந்துவிட்டேன். மற்ற இருட்டான இடத்திற்கும் ஆட்கள் அனுப்பப்படுகின்றனர் என்று இப்பொழுது தான் தெரிய வந்துள்ளது. 40 வயதிற்கு மேல் ஒருவரது விதிப்பயனை, ஊழ்வினையை மாற்றவே முடியாது என்று தமிழ்நாட்டின் இன்றைய முன்னணி சிந்தனையாளர், தத்துவஞானி, ஆன்மீக அறிஞர் ஒருவர் சமீபத்தில் சொல்லியிருக்கின்றார். இந்த அறிஞரைப் பார்த்து, 'என்ன உங்களின் தத்துவம் எல்லாம் ஒரே ஓட்டை ஒடிசலாக இருக்குதே. சுட்ட தோசையையே திருப்பி திருப்பி சுடுகிறீர்களே' என்று ஒரு சாதாரண மனிதன் கேட்டுவிட்டார். சினம் கொண்ட அந்த அறிஞர் அந்த சாதாரண மனிதன் நரகத்திற்கு போவார் என்பதையே இப்படிப் பூடகமாகச் சொன்னாராம். நரகம் போய் வந்த பாதிரியார் தான் இங்கு வாழ்க்கையில் விட்ட பிழைகள் என்ன என்னவென்று சொன்னதிலிருந்து அறிவது என்னவென்றால், நான் அங்கு போகும் பொழுது இந்த அறிஞர் கூட அங்கு நாலு கால்களில் நடந்து கொண்டிருப்பார் என்றே தெரிகின்றது. கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் அங்கே தான் இருப்பார்கள் அல்லது எனக்குப் பின்னால் வரப் போகின்றார்கள். இதே கூட்டம் தான் அங்கேயும், முடிவற்ற ஒரே வாழ்க்கை. இனிமேல் இதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை என்றாலும், இப்பவே கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொள்ளலாம். ஒரு கிழமைக்கு மூன்று தமிழ்ப் படங்களும் மூன்று தெலுங்குப் படங்களும் விடாமல் பார்த்து வந்தால், நரகத்தைக் கூட ஒரு கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பக்குவம் வந்துவிடும்.
  17. நினைத்து ஏங்கவைக்கும் ஒரு கட்டுரை........ என்ன சிறு வயதிலும், இளமைக் காலங்களிலும் வீரமென நினைத்து செய்யும் சில பாவங்கள் மரங்களை முறிப்பது, சிறு உயிரினங்களை வதைப்பது போன்றவை எல்லாம் வயதாக வயதாக வந்து தலையில் அடிக்கிறது.......! நன்றி ஐயா .......!
  18. மிகவும் அருமையான ஒரு கட்டுரை, ஆசானே. எங்களில் பலருக்கு இருக்கும் உளச் சிக்கல்களை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள். சமீபத்தில் 'குருகு' இதழில் சடகோப முத்து ஶ்ரீநிவாசன் அவர்களுடனான ஒரு நேர்காணலை வாசித்தேன். அதில் வைணவன் என்பன் யார் என்னும் கேள்விக்கு அவர் ஒரு பதில் சொல்லியிருந்தார். எல்லா நெறிகளும் ஒன்றையே சொல்லுகின்றன என்று தோன்றியது. ஆனால், நெறிப்படி நடப்பது முடியாத ஒரு காரியமாகவே இருக்கின்றது. **** வைணவன் என்பன் யார்? ‘பர துக்க துக்கித்வம்’ என்றால் பிறர் துன்பத்தை தனதாகக்கொள்பவன். பிறர் என்றே இல்லாமல் இருப்பவன். ஏனெனில் இந்த உலகமாக இருப்பவனும் அவற்றில் உயிராக இருப்பவனும் பரமாத்மாவே. மரம், புழு, பூச்சி என அனைத்து உயிருக்குள்ளும் அவனே உறைகிறான்..........
  19. 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. https://thinakkural.lk/article/296334
  20. மேலும் ஒவ்வொரு நண்பர்கள் குழாமிலும் ஒரு புளுகன் கண்டிப்பா இருப்பார்........! 😂
  21. கோலி வெங்க‌ளூர் ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌னுக்கு வாழ்த்து சொன்னார் கோலிக்கு பெரிய‌ மன‌சு 16வ‌ருட‌ம் ஜ‌பிஎல் ஆண்க‌ள் அணி கோப்பை தூக்காத‌து ராசி இல்லை என்று சொல்லுவ‌தா அல்ல‌து வீர‌ர்க‌ளை குறை சொல்வ‌தா..........இந்த‌ முறை வ‌ங்க‌ளூர் கோப்பை தூக்கினா RCB ர‌சிக‌ர்க‌ள் ஆத்தில் அடை ம‌ழை தான்................
  22. மரத்தை நட்டு அதன் நிழலில் உட்கார பாருங்க.
  23. கற்பனைக் கதை தானே அண்ணை?!
  24. தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
  25. 1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய, கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.
  26. Bhakshak (தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்) என்று ஒரு திரைப்படம் சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன்.அனாதை இல்லத்தில் சிறுமிகளை எப்படித் துன்புறுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறார்கள். முடிந்தால் பாருங்கள்
  27. அது மூட்டைப் பூச்சி…! இது நுளம்பு…!
  28. நாமளும் யாழ்களத்தில் ஒரு எச்சரிக்கையை விடுவோம் ...தலைவராகிடலாமில்ல
  29. America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
  30. எல்லோரும் எச்சரிக்கை மட்டும் தான் விடுவர், ஏனெனில் புத்தியுள்ள தலைவர்களுக்கு status quo மாறாமல் இருப்பதே முக்கியம். இடையிடையே முன் யோசனை குறைந்த தலைவர்களும் அமைப்புகளும் - புரின், ஹமாஸ், நெரன்யாகு- போன்றவை மட்டும் சும்மா சண்டையைத் துவங்கி விட்டு முடிக்கவோ, தப்பவோ முடியாமல் நெரிபடுவினம்.
  31. அவர்களுடைய என்றும் மாறாத உறுதியான சொகுசான இருப்பிடத்தில் இருந்து கொண்டு இடைகிடை கிளையை வெட்ட முயற்சிக்கலாமா? கொலஸ்ட்ரரோல் கூடியதால் வந்த பிரச்சனை தானே --------------------------------------------- புதினின் தேர்தல் மோசடி நாடகத்தை மேற்குலக நாடுகள் சட்டவிரோதமானது என்று சுட்டிகாட்டியுள்ளன. யேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ரஷ்யாவின் தேர்தல் உண்மையான தேர்தல் இல்லை விரும்பியவரை தேர்வு செய்ய முடியாத தேர்தல் என்றார். சீனாவும் வடகொரியாவும் மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற யாழ்கள புதின் ஆதரவாளர்களும் புதினை வாழ்த்தியுள்ளனர் .
  32. முள்ளிக்குளம்தான் சரி. நான் மதவாச்சி/ வவுனியா - மன்னார் பாதையில் இருக்கும் குளங்களை எல்லாம் மூளையைக் கசக்கியும், கூகிள் மாப்பைப் பார்த்தும் முள்ளிக்குளம் நினைவுக்கு வரவில்லை! முள்ளிக்குளம்... மூன்று முறிப்பூடாக மடு செல்லும் பாதையில் உள்ளது. 1995 களில் நான் சைக்கிளில் திரிந்த இடங்கள் இவை. இதில் நான் சொன்ன மூன்று குறிப்புக்கு ஒரு சிறப்புண்டு. இந்தக் கிராமம் வவுனியா-மன்னார்-முல்லைத்தீவு மாவட்டங்களை இணைக்கும் மையப் புள்ளியில் இருப்பதாகும்
  33. காதல் கடை மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும் , சைக்கிள் வித்தவனும் முதலாளியா மாறின காலம் அது, அதே பவுசு மோட்டச் சைக்கிள் சைக்கிள் திருத்திற ஆக்களுக்கும் வந்திச்சுது. பவுண் வித்து பாண் வாங்கின நிலமை அப்ப . ஆசுபத்திரிக்கு போறதை கூட அடுத்த மாசம் தள்ளிப்போட்டிட்டு ஓடிறதுக்கு ரெடியா உடுப்பெல்லாம் கட்டி வைச்சிருந்த காலம். எல்லாருக்கும் அடிக்கடி அவசரத்துக்கு இடம்பெயர்ந்து ஓடிப்போக ஒரே போக்குவரத்து சைக்கிள் எண்ட படியால் மருந்துக்கடையிலும் பாக்க இருக்கிற ஒரே வாகனமான சைக்கிள் கடைக்கு உடன ஓடிப் போய் காட்டின நிலமை இருந்த நாட்கள் அவை. மோட்டச் சைக்கிள் பேருக்கு ஏத்த மாதிரி மோட்டுச் சைக்கிளாத்தான் இருக்கும்; ஒரு நாள் ஓடினா ஒரு கிழமை கராஜ்ஜில இருக்கும். ஆட்டிறைச்சிக்கடையில ஒண்டும் மிச்சம் இல்லாமல் காலில இருந்து தொங்கிற வால் வரை வித்து முடிக்கிற மாதிரி, சைக்கிள் கடையிலேம் கிழிஞ்ச ரயர் , நசிஞ்ச rim, அறுந்த chain எண்டு எல்லாம் சொல்லிற விலைக்கு “ விருப்பம் எண்டால் வாங்கு“ எண்டு வித்த நிலமை இருந்திச்சுது. திடீர் திடீரெண்டு இந்தா வெளிக்கிடிறன் எண்டு கோட்டையில இருந்து அடிக்கிற செல்லுக்கு ஆக்கள் கொஞ்சம் முதல் ஓட , பிறகு ஆசுபத்திரியும் இடம் பெயர , இனி இருக்ககேலாது எண்டு அதுக்குப் பின்னால நாங்களும் ஓடிப் போக வேண்டி இருந்தது. இதால சைக்கிள் கட்டாயம் தேவை எண்டதால ஆக்களிலும் பாக்க அதைக் கழுவித் துடைச்சு கவனமாப் பாக்க வேண்டி இருந்திச்சுது. அடிக்கடி அடிக்கிற செல்லுக்கு இப்பிடியே போக்கும் வரவுமாய் இருந்த படியா எப்பவும் ஓட ரெடியா சைக்கிளை வைச்சிருக்கிறனாங்கள். ஒயில் ஓடிக்காஞ்சு போன கறுத்த மண், எண்ணையில வழுக்கிற உடைஞ்சும் உடையாத சீமெந்து தரை, ஆண்டாண்டு காலமா தடீல தொங்கிற பழயை ரயர்கள், குமிச்சு அடுக்கின கறள் கட்டின rims, ஆணிகள் அடிச்ச பக்கீஸ்பெட்டீல தொங்கிற ஆறாம், எட்டாம் , பத்தாம் , பன்ரெண்டாம் சாவி , பழைய மரப் பெட்டீக்க குறடு ,சுத்தியல் ,ஸ்பனர் எண்டு கையால தொட்டாலே ஏற்பூசி போட வேண்டிய நிலைமையில கறள் கட்டின சாமாங்கள் , குறுக்கால வெட்டின பழைய பரல் ஒரு மாதமா மாத்தாத தண்ணியோட , ஓட்டு தீராந்தீல இருந்து தொங்கிற ரெட்டைப்பட்டுச் சைக்கிள் செயின் நுனியில வளைஞ்ச ரெண்டு கம்பி அதில முன்காலைத் தூக்கின குதிரை மாதிரி ஏத்தி விட்ட சைக்கிள், நிலத்தில விரிச்ச சாக்கில ; வால் பிளேட், கத்திரிக்கோல் , பாதி தேஞ்ச அரம், வடிவா வெட்டின வெவ்வேறு சைஸ் சதுர ரியூப் துண்டு , பினாட்டு மாதிரி கறுப்பா உருட்டின கொம்பவுண்ட் , பிங் கலர் சொலூசன் , ஒட்டுப் போட்டாப் பிறகு வல்கனைஸ் பண்ண (அவிக்கிறதுக்கு ) ஒரு செட்டப் இவ்வளவும் இருந்தால் இது சைக்கிள் கடை. கடையில ஒரு பெரிய bossம் மற்றது வேலை பழகிற சின்ன boss எண்டு ரெண்டு பேர் தான் இருப்பினம். கடை இப்பிடி இருக்கிறதால கடைக்காரரை சில்லறை ஆள் எண்டு நெக்கக்கூடாது. சில Senior citizens ன்டை கடைகள் இருக்கும் அவைகளுக்காக, என்ன அவை திறந்திருக்கிறதிலும் பாக்க பூட்டி இருக்கிறது தான் கூட. எங்களுக்க ஏத்த மாதிரி கடையைத் தான் தேடிப் போறது. எங்கடை வயதுக்காரர் ஆனால் அவை boss. நாங்கள்சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் கடையில விட எங்களைக் கண்டாலும் busy மாதிரி கவிட்டு வைச்ச பழைய wheel spoke க்குள்ள சில்லை வைச்சு பக்கிள் எடுக்கிறவங்கள் , காத்தடிக்கப் பொம்பிளைப் பிள்ளைகள் வந்தால் எழும்பி ஓடிப்போய் உடனயே கவனிப்பாங்கள் . கவனிப்பு சைக்கிளுக்கும் ஆளுக்கும் பலமாய் இருக்கும் . அடிக்கடி இந்த கதை நடக்கும்; “ என்ன கனநாளா காணேல்லை “ “ ஏன் சும்மா சும்மா வாறதே “ “அண்டைக்கு ஆரோ பெடியன் பின்னால வந்தான்” “ எனக்கு அப்பிடி ஒருத்தரும் இல்லை“ ( confirmation) காத்தடிச்சிட்டு ,பக்கத்தில நிண்ட சைக்கிளில இருந்து வால்கட்டையின்டை capபைக் கழற்றி பூட்டீட்டு “ இது இல்லாட்டி மண் போய் அடைச்சிடும் “ எண்டு சொல்லி, அதோட பிறேக்கையும் சரிபாத்திட்டு விட; “ எவ்வளவு” “சீ காசு வேணாம் , அடுத்த முறை பாப்பம் “ சொல்லாத thank you சிரிப்பை வாங்கிக் கொண்டு வந்து எங்களைக் கவனிக்காமல் திருப்பியும் buckle எடுக்கத் தொடங்குவாங்கள். இதை கவனிச்சும் இல்லாத மாதிரி, “ கழுவிப் பூட்டேக்க எதையும் மாத்திப் போடுவான்“ எண்டு அம்மா சொன்னதால, நாள் முழுக்க கடையிலயே இருந்து; லாபம் பாத்து சாமாங்களை வேண்டித் தாறம் எண்டு சொல்லி , ஒரு போத்தில் மண்ணெண்ணை , இருவது ரூவாக்கு கிறீஸ், ரெண்டு சைசில ஐம்பது சைக்கிள் போள்ஸ் எல்லாம் வாங்கிக் குடுத்து , கழட்டி வைக்கிறதை கவனமாப் பாத்துக் கொண்டிருந்து, கழுவிப்பூட்டிறவருக்கு கேக்காமலே ஒத்தாசையும் செய்தாத் தான் சைக்கிள் கெதியாக் கிடைக்கும். புதுசா வாங்கின சைக்கிள் ஆருக்கு நேந்ததோ தெரியேல்லை வாங்கி ஒரு வருசத்திலயே காணாமல் போக , ரெண்டு வருசமா பஸ்ஸில அலையவிட்டு வாங்கித்தந்தது தான் கழுவிப் பூட்டக் கொண்டந்த இந்தப் பழசு. இதாலயே பட்டப்பேரும் பழசு எண்டு வந்திச்சுது. நிண்டு கால் நோக இருக்க இடமில்லாமல் பெரிய கரியர் ஓட நிண்ட சைக்கிளை central ஸ்டாண்டில விட்டிட்டு அதில இருந்தபடி சாடயா கண்ணயர்ந்து விழப்பாக்க , “ தம்பி போய்ச்சாப்பிட்டிட்டு வாரும்” எண்டு சைக்கிள் கடைக்காரர் சொன்னார். ,“ இல்லை பரவாயில்லை இருந்து எடுத்துக்கொண்டே போறன்” எண்டு நம்பிக்கையில்லாமல் சொல்ல , அப்ப கொஞ்ச நேரம் இரும் நான் சாப்பிட்டிட்டு வாறன் எண்டு ஒரு மணிக்குப் போனவர் திருப்பி வர மூண்டு மணி ஆச்சிது. என்னை வைச்சு அடிக்கடி சின்னச்சின்ன வேலையும் வாங்கீட்டு பின்னேரம் வரை விடாக்கண்டனா என்னை சைக்கிள்கடைக் கொடாக்கண்டன் “ஆறு மணியாயீட்டுது இருட்டீட்டுது நாளைக்குப் பாப்பம் “ எண்டு சொல்லீட்டு சாமாங்களை உள்ள எடுத்து அடுக்க வேற வழியில்லாமல் வீட்டை போனன். ஒருமாதிரி அடுத்த நாள் சைக்கிளை எடுத்து உழக்கிக் கொண்டு போக செயின் கவரோட முட்டிற சத்தம் கேக்க ஒரு தட்டுத் தட்ட நிண்டிட்டுது சத்தம். எத்தினை சைக்கிள் ரோட்டில போனாலும் எங்கடை வேண்டிய ஆரும் சைக்கிளி்ல வாறதை தூரத்தில வரேக்கையே கண்டு பிடிக்கலாம். ஒவ்வொருத்தன்டை சைக்கிளுக்கும் ஒரு சத்தம் இருக்கும் வாறதை கண்டு பிடிக்க , மணி அடிக்கிற சத்தம் , பிரேக் பிடிக்கேக்க வாற சத்தம் , செயின் உரஞ்சிற சத்தம் எண்டு எல்லாச் சத்தங்களும் உதவி செய்யும் அதோட அவன் அரைக்குண்டீல ஓடிறானா, சீட் நுனீல இருந்து ஓடிறானா, காலை அகட்டி ஓடிறானா எண்டு ஓடிற ஸ்டைலிலேம் கண்டு பிடிக்கலாம். ரியூசன் வகுப்புகள் முடிஞ்சு பின்னேரம் எண்டால் பிரவுண் ரோட்டில குமரன் வீட்டு ஒழுங்கை முடக்கில சாத்தீட்டு நிக்க ஒவ்வொருத்தரா வருவாங்கள். வந்து வழமை போல அரட்டை தொடங்கும் . கடைசீல் நேற்றைக்க அடிச்ச செல் விண் கூவினதையும், யாரை யார் பாக்கிறாங்கள் எண்ட update ஓட கூட்டம் கலையும். ஒருநாள் இப்பிடித்தான் தேடிப்போனா குமரனைக் காணேல்லை. அவன் உங்களோட தானே வந்தவன் எண்டு அம்மா சொல்ல, “டேய் அவன் நேற்றைக்கு சேகரோட ஒளிஞ்சு ஒளிஞ்சு கதைச்சவன் ஒரு வேளை இயக்கத்துக்குப் போட்டானோ” எண்டு பிரகாஸ் கேக்க “விசரே உனக்கு இவனாவது போறதாவது , வா கபிலன் வீட்டை போய்ப் பாப்பம்” எண்டு நவாஸ் சொல்ல போய்ப்பாத்தால் அங்கையும் இல்லை. காணேல்லை எண்டு ரோடு ரோடாத் தேட, கலட்டீக்க புதுசாத் திறந்த சைக்கிள் கடையில காத்துப் போகாத tyreக்கு காத்து அடிச்சும் வந்தவனுக்கெல்லாம் அடிச்சு விட்டு சமூக சேவை செய்து கொண்டு நிண்டான். ஏனெண்டு கேக்க அண்டைக்கு ரோட்டால போகேக்க பாத்துச் சிரிச்ச பிள்ளை இந்த இடத்தில தான் எங்கேயோ இருக்குதாம் எண்டான். கடைசீல இண்டைக்கு காணேல்லை நாளைக்கு ஒருக்கா வந்து பாப்பம் எண்டு எங்களோட வந்தான். இவனுக்கு அவனுக்கு மட்டும் இல்லை எங்கள் எல்லாருக்கும் சுழற்றித் திரிஞ்ச காலத்தில ஒண்டிறதுக்கு எண்டு ஒரு சைக்கிள் கடை இருந்தது. முதலில அந்தப் பிள்ளை இருக்கிற ஏரியாவில ஒருத்தனை friend பிடிச்சு , அவனோட போய் அவளின்டை வீட்டிக்கு கிட்ட இருக்கிற சைக்கிள் கடைக்காரனை friend பிடிச்சு , பிறகு ரியூசன் கொப்பியோட வெளிக்கிட்டு நேராச் சைக்கிள் கடையில போய் இறங்கினதும் உண்டு. தப்பித்தவறி தெரிஞ்ச ஆக்கள் வந்து கேட்டால், சைக்கிள் காத்துப் போட்டுது எண்ட பொய்யோட சமாளிக்கலாம். கடைக்காரனிற்கும் காத்தடிச்சு விட , சாவியை எடுத்துத் தர எண்டு காசில்லாமல் உதவி செய்ய ஒருத்தன் கிடைக்கிறதால பேசாம இருந்திடுவான். அப்ப சைக்கிள் கடை தான் கன பேரின்டை காதலை develop பண்ண உதவி செய்யிற கடையா இருந்திச்சுது. இப்ப சைக்கிளும் குறைஞ்சு , சைக்கிள் கடையும் குறைஞ்ச படியால் இப்பத்தைப் பெடியள் என்ன செய்யிறாங்களோ தெரியேல்லை. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
  34. இதை வைச்சு புட்டினுக்கும் ரஷ்யாவுக்கும் அடிக்கிறம். உக்ரேனை எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வாறம். அப்பிடியே ரஷ்யாவையும் கொஞ்சம் கொஞ்சமாய் எங்கடை கைக்குள்ள கொண்டு வாறம்....😎
  35. இலங்கைத் தமிழர் உட்பட... உலகம் எங்கும் வாக்குப் போடத் தெரியாத கூட்டம் ஒன்று இருக்குது தானே... அதுதான்... இந்த 12%
  36. மயிலிறகு........... 18. உடனே யோகிபாபு ஐயோ அம்மா, அண்ணா நான் ஒன்றும் அவங்களைக் கடத்துறதுக்கு வரேல்ல. எங்கட அப்பான்ர மோட்டார் சைக்கிளை யாரோ ஒரு பொடியன் ஓடித் திரிகிறதாய் கேள்விப் பட்டன். அதுதான் அவனுக்கு இரண்டு தட்டு தட்டிப்போட்டு சைக்கிளைத் தூக்கிக் கொண்டு வரத்தான் பிளான் போட்டு பொடியளுடன் இந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள். அப்போது அஞ்சலா முன் வந்து அதை இவர் கேட்டிருந்தால் நானே குடுத்திருப்பேனே. இவர் "பாரில்" கடத்துறது தூக்கிறது என்று கதைத்ததால்தான் அது எனக்குத் தெரிந்து இவ்வளவும் நடந்திட்டுது. அதோ அந்தா நிக்குது மோட்டார் சைக்கிள். நான்தான் அது பழுதாய் இருந்தது. அவர் கம்பிரமாய் அதில் இருந்து இந்த ஊர் முழுதும் ஓடித் திரிந்தவர். அது பழுதாகி திண்ணையில் நிற்பதை பார்க்க எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதனால்தான் இவரிடம் அதைத் திருத்தி சில நாட்கள் ஓடிப்பார்த்துட்டு கொண்டு வரச்சொல்லி குடுத்தனுப்பினனான். எங்க அந்தத் தம்பியைக் கூப்பிடு என்று சொல்ல அரசு விதானை முன்னால் வந்து அவனை உங்களுக்குத் தெரியும் தம்பி,எப்போதும் என்கூடத்தான் வேலை செய்து வருகிறவன். பெயர் வாமன். இப்ப அவனும் இங்கு விதானையாகி இருக்கிறான் என்று சொல்ல வாமன் முன்னால் வருகிறான். ஓ.....அப்படியா நல்லது, அவனைப் பார்த்து நல்ல ராஜாவாட்டம் இருக்கிறாய்......அவர்களை நல்லபடியாய் வைத்து வாழ்ந்துகொள் என்று வாழ்த்துகிறான். வாமனும் சைக்கிள் சாவியை அவனிடம் தர நீட்டுகிறான். அதை அவன் தாய் மறித்து இந்தப் பிள்ளை விடயத்தில் அவர் செய்த பாவத்துக்கு தன் மோட்டார் சைக்கிள் மூலமாய் பிராயசித்தம் செய்திருக்கிறார். அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்போது மூத்தமகன் ரவியும் எங்களுக்கு கொஞ்சம் முன்னால்தான் விதானையார் பிரச்சினைகளைச் சொல்லி கூட்டி வந்தவர். அதுவும் நல்லதாய் போயிற்றுது. உங்களின் திருமணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கு என்கிறான். மயிலம்மாவும் ஏதோ அந்தப் பெண்ணுக்கு உரித்தானவர்கள் வந்திருக்கிறீர்கள், சாப்பாடு எல்லாம் தயாராய் இருக்கு. இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போக வேணும் என்று சொல்ல அங்கேயே படங்கு விரித்து தாமரை இலையில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப் படுகிறது. பின் அவர்கள் போகும் போது அந்த அம்மாள் தன் கையிலும் கழுத்திலும் இருந்ததைக் கழட்டி அஞ்சலாவுக்கு காப்பும் வாமனுக்கு சங்கிலியும் போடுகிறாள்.ரவியும், யோகிபாபுவும் கூட தங்களிடம் இருந்த சங்கிலி மோதிரங்களை கழட்டி இருவருக்கும் போடுகிறார்கள். பின் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு செல்கிறார்கள். போகும் போது மூத்தமகன் ரவி அவர்களை பார்த்து இனிமேல் உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் எனக்கு சொல்லியனுப்பவும் நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களின் தாயாரும் மயிலம்மாவையும் மற்றும் எல்லோரையும் பார்த்து நீங்கள் நாலாம் சடங்குக்கு எங்கள் வீட்டிற்கு வாருங்கோ, நாங்கள் எல்லா ஏற்பாடும் செய்த்து வைக்கிறம் என்று சொல்கிறார்கள். யோகிபாபு வானில் ஏறும்போது அவனது கூட்டாளிகள் அப்பாடா கனகாலத்துக்குப் பிறகு நல்ல சாப்பாடு என்று சொல்லி ஏப்பம் வீட்டுக் கொண்டே வர யோகிபாபு அவங்களை பார்த்து நில்லுங்கடா....சும்மா தன்பாட்டில் வீட்டுக்ல வந்து நிக்கப் போற மோட்டார் சைக்கிளுக்கு என்னை உசுப்பேத்தி விட்டு நான் வானையும் வாடகைக்கு எடுத்து உங்களுக்கும் ஒரு வாரமா விஸ்கியும் பிரியாணியுமாய் அழுது கடைசில சைக்கிளும் கையை விட்டுப்போய் கையில கழுத்தில கிடந்த நகைகளும் போகப் பண்ணிட்டீங்களேடா. ஏறுங்கடா பஸ் ஸ்ராண்டில இறக்கி விடுவன் காலமை முதல் பஸ்ஸில இந்த ஊரைவிட்டே ஓடிடனும் சொல்லிப்போட்டன். வான் போகுது எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏதோ சண்டை கலாட்டா நடக்கும் தான் விலக்குப் பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விதானையும் விசயம் சப்பென்று போனதைப் பார்த்து மணமக்களை அழைத்து பொக்கட்டில் இருந்து பணம் எடுத்து இந்தா இதை வைத்துக் கொள் என்று குடுக்கிறார். என்ன அண்ணா இது சம்பளப்பணமா என்று நமுட்டுச் சிரிப்புடன் வாமன் கேட்க, போடாங்.....பக்கத்தில பிள்ளை நிக்குது இல்லையென்றால் இப்ப உனக்கு சொல்லுவான், ஏன்டா ஒன்றுமே இல்லாத விசயத்துக்கு இப்படிக் கலாட்டா பண்ணிட்டீங்களேடா. என்று சொல்லி விட்டுப் போகிறார். மற்றவர்களும் நல்ல சாப்பாடு நல்ல கலியாணம் என்று சொல்லி சிரித்துக் கொண்டு போகிறார்கள்.......! 🦚 மயில் ஆடும்........... 18.
  37. இ இந்த லூசு கேள்வியை கேட்டே அங்கு அவங்கள் முன்னுக்கு வந்து விட்டாங்க .இனி ஒரே வழி லட்சுமியை கூப்பிடனும் ?........................😃
  38. மயிலிறகு......... 12. சில நாட்களாக வாமன் மயிலம்மா வீட்டுப் பக்கம் போகவில்லை.அவனுக்கு அதிகமான வேலைப்பளுவும் ஒரு காரணம்.அன்று அரசு விதானையுடன் சென்று இரு சகோதரர்களுக்கான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து விட்டு அவர்கள் கோழி அடித்து விருந்து வைக்க சாப்பிட்டுவிட்டு இருவரும் விதானையாரின் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது விதானையார் ஒரு பேரூந்து தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி இந்தாடா வாமு நான் கனநாளாய் உனக்கு காசு தரவில்லை, இப்ப இதை வைத்துக்கொள் பிறகு கணக்கு பார்த்துக் கொள்ளலாம்.இப்பவெல்லாம் நீ தனியாக சென்று வேலைகள் செய்யுமளவு தேறி விட்டாய். அநேகமாய் இந்த வாரத்தில் கூட உனக்கு வேலைக்கு கடிதம் வந்து விடும். நீ தினமும் தபால்காரரை விசாரித்துப் பார்.இப்ப எனக்கு இங்கால சில வேலைகள் இருக்கு, நீ பேரூந்தில் வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டுப் போகிறார். அவன் பேரூந்தை எதிர்பாராமல் வழியில் வரும் சைக்கிள்களிலோ ட்ராக்டர்களிலோ செல்லலாம் என்று நினைத்து நடந்து வருகிறான். அப்படி வரும் வழியில் வட்டி வைத்தி வீட்டை கடக்கையில் ஒரு பெண் ஓடிவந்து அவனை மறித்து அண்ணா உங்களை அம்மா ஒருக்கால் வந்துட்டுப் போகட்டாம் என்று சொல்ல, அவள் அன்று அந்த அம்மா மயங்கி விழுந்த போது ஓடிவந்து ஒத்தாசை செய்த பெண் என்று கண்டு என்ன மோட்டார் வேலை செய்யவில்லையா என்று கேட்கிறான். சீச்சீ அதெலாம் நல்லா வேலை செய்யுது நீங்கள் வாங்கோ என்று சொல்லி முன்னாள் போகிறாள். வீட்டுக்கு வர கேட்டுக்கு அருகில் அஞ்சலா நிக்கிறாள். என்ன பிறகு உன்னை இந்தப் பக்கம் காணேல்ல....சரி....சரி ...உள்ளேவா உனக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டானான். வேறு ஒன்றுமில்லை என்பதை நமுட்டுச்சிரிப்புடன் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள். எதுக்கு நன்றி......உண்மையிலேயே நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இக்கட்டான நேரத்தில் நீங்கள் செய்த உதவி பேருதவி. (இருவரும் திண்ணையில் அமர்கிறார்கள். அவளின் தாயார் அருகில் கால்களை நீட்டியபடி வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறார்). அதை விடுடா ....அதெல்லாம் தொழில். நான் ஒன்றும் சும்மா செய்யவில்லை.வட்டிக்குத்தான் தந்தனான்.இன்னும் காணி உறுதி என்னிடம்தான் இருக்கு மறந்திடாத. இது அதில்லை.அண்டைக்கு நீ வரப்பில் மயங்கி விழுந்த என்ர அம்மாவை தகுந்த நேரத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாக இவளும் அம்மாவும் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா. அது நான் என்ர அம்மாவாய் இருந்தால் செய்ய மாட்டனா, யாராய் இருந்தாலும் அதை செய்திருப்பார்கள். அவள் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்து எடி கவிதா, உள்ளே போய் பால் தேத்தண்ணியும் போட்டுகொண்டு பனங்காய் பணியாரத்தையும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அவளும் உள்ளே போகிறாள். அம்மா சுகமாக இருக்கிறாவா .....ஓம் இந்த நீரிழிவு வருத்தத்தால கொஞ்சம் கவனமாய் அவவைப் பார்த்துக் கொள்ள வேணும்.ஆனாலும் மனுசி சொல்வழி கேட்கிறேல்ல....ஒளிச்சு வைச்சு இனிப்புகள் சாப்பிடுது. அப்போது வீதியால் ஒரு நாய் போக மோட்டார் சைக்கிள் அருகில் படுத்திருந்த ஜிம்மி ஆக்ரோஷமாய் குரைக்கிறது. ஜிம்மி சும்மா இரு என்று அடக்கிய அஞ்சலா இதுக்கொன்றும் குறைச்சலில்லை அவரைமாதிரி குரைக்கத்தான் தெரியும் ஒரு சதத்துக்கு பிரயோசனமில்லை என்று சொல்ல அது புரிந்ததுபோல் எழுந்து வாலை பின்னங் கால்களுக்குள் மடக்கிக் கொண்டு அப்பால் போகிறது. திண்ணையில் இருந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்த வாமன் நீங்கள் இது ஓட்டுவீங்களா என்று கேட்கிறான்...... இல்லை சைக்கிள் ஓட்டுவன்.அதில்தான் பாடசாலைக்கும் போய் வந்தனான். உன்ர வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது......இப்பவும் வேலையாலதான் வருகிறேன். விதானையார் என்னை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுட்டுப் போகிறார். பஸ்ஸை காணேல்ல வந்தால் மறித்து ஏறுவம் என்றுதான் நடந்து வந்தனான். அப்ப இண்டைக்கு உனக்கு நல்ல விருந்து சாப்பாடும் தண்ணியும் கிடைத்திருக்கும் இல்லையா. ....ம்.....அதெல்லாம் கிடைத்ததுதான், ஆனால் இப்ப சாராயம் குடிக்க வெறுக்குது. சும்மா அவங்களுக்காக கொஞ்சம் எடுத்தனான். பின் அந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தபடி நீங்கள் இதை விக்கிற எண்ணமிருந்தால் எனக்குத் தருவீங்களா என்று கேட்கிறான். எனக்கு அதை விக்கிற யோசனையில்லை.என்ன இருந்தாலும் அவர் பாவிச்சது.அவற்ர பிள்ளைகளும் இருக்கினம்.அண்டைக்கு ஒருநாள் சரியான மழை அவர் நல்ல வெறியில இந்த சைக்கிளோட சறுக்குப்பட்டு பள்ளத்துக்க விழுந்து எழும்ப முடியாமல் அப்படியே இறந்து போனார்.அப்போது இரவுநேரம் அருகில் யாரும் இல்லை. இதுவும் சேதமாயிட்டுது. பின் உதை அப்படியே கொண்டுவந்து திண்ணையில் விட்டதுதான்.அப்படியே நிக்குது. அதுக்கில்லை ஓரு மோட்டார் சைக்கிள் வாங்கத்தான் பார்த்துத் திரியிறன். ஒன்றும் தோதாக அம்பிடவில்லை. அதுவும் இப்ப வேலையும் அதிகம். அத்துடன் விரைவில் கிராமசேவகர் வேலையும் கிடைத்து விடும்.வெறும் சைக்கிளுடன் அந்த வேலை பார்க்கிறது சிரமம். அதுதான் கேட்டனான். ஓ......இப்பதான் ஞாபகம் வருது, நீ மோட்டார் சைக்கிள் வாங்க வைத்திருந்த காசைத்தான் உன்ர நண்பனுக்கு குடுத்ததாக அக்கா சொன்னவ. உண்மைதான் .....நானும் சுந்துவும் சிறுவயதில் இருந்தே அவ்வளவு பிரியமான நண்பர்கள். அவனளவு எனக்கு வேறு நண்பர்கள் கிடையாது.அப்படித்தான் அவனுக்கும். அவனது படிப்பை விட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பெரிதில்லை. (அப்போது கவிதா மூவருக்கும் பால்தேநீரும் பணியாரத் தட்டையும் கொண்டு வந்து வைத்து சீனி போடாத தேநீரை ஆச்சியின் அருகில் வைத்த விட்டுப் போகிறாள்). சரி...நீ முதல்ல அதை எடுத்து திருத்தி கொஞ்சநாள் ஓடிப்பார். பின்பு உனக்குப் பிடித்திருந்தால் நான் அக்காவிடம் கதைத்து விட்டு பிறகு விலையைப் பேசிக்கொள்ளலாம். அவன் கண்கள் மின்ன இப்பவே எடுக்கவா........ ....ம் பாரேன் அவற்ரை அவசரத்தை...... சரி போய் எடு. அவன் எழுந்து சென்று அந்த ஹோண்டா 200 மொடல் மோட்டார் சைக்கிளை செல்லமாய் வருடிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு வந்து முற்றத்தில் நிறுத்தி விட்டு சாவியைப் போட்டு பட்டனை அமுக்கினால் அது இயங்கவில்லை. அதை உதைத்துப் பார்த்தும் ம்கூம்..... பின் அவன் அதன் பெட்டியைத் திறந்து பார்க்க அதற்குள் சாராயப்போத்தல்,மிக்ஸர் பைக்கட், ரெண்டு ஜட்டி, ஒரு வேட்டி துவாய் அவற்றின் அடியில் சில சாவிகள் குறடு,திருப்புளியுடன் சில தாள்காசுகள் சில்லறைகள் என்று இருக்கின்றன.அவன் ஆயுதங்களை தவிர்த்து ஏனையவற்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவளும் அவைகளை வாங்கிக் கொண்டு இன்னும் எந்தெந்தக் கடங்காரங்களின் வீட்டில் ஜட்டிகளும் வேட்டிகளும் கிடக்குதோ தெரியாது என்று சொல்லியபடி அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே போகிறாள்........! 🦚 மயில் ஆடும்.............. 12.
  39. மயிலம்மாவுக்கு அடிக்கடி பாவடையை காலாலே கழட்டுறதும், கட்டுறதும் பெரும் வேலையாய் போச்சு. ‘மாதவிப் பெண்ணாள் தோகை விரித்தாள்’ அந்தமாதிரி
  40. மனசார நினைத்தால் எதுவும் நடக்கும்.....ஆனால் நல்லதே நினைக்க வேண்டும்......! 👍
  41. மழைப் பாடல்கள் ---------------------------- மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ..... என்று சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் ஆரம்பித்திருப்பார். மங்கல வாழ்த்தில் திங்களையும் ஞாயிறையும் போற்றிய பின், மழையைப் போற்றி, பின் சிலம்பின் காப்பியம் கதையை ஆரம்பிக்கும். இங்கு இப்பொழுது ஒவ்வொரு திங்களில் இருந்து ஞாயிறு வரையும் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மாமழை கண்டு, இளங்கோவடிகள் இப்பொழுது இருந்திருந்தால், அவரே சலித்துப் போய் 'மாமழை போதும், மாமழை போதும்' என்று பாடியிருப்பார். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. இங்கு தினமும் வானம் பிளந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. வானிடிந்தால் என்னவென்று அன்றொரு நாள் நவகவிஞன் விறைப்பாக நின்றார். அவருக்கென்ன, அவருக்குத் தான் அச்சம் எதிலும் இருக்கவில்லையே. அரை அங்குல தடிப்பு கூட இல்லாத மெல்லிய கூரையில் ஓயாமல் அடித்து ஊற்றிக் கொண்டிருக்கும் மழையால் கூரை பிளந்தால் பாரதியும் இளங்கோவடிகளுமா கூடமாட உதவிக்கு வரப் போகின்றனர்? காப்புறுதி நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை நாலு இடங்களில் எழுதி வைத்திருக்கின்றேன். தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. இது அய்யன் வள்ளுவன் எழுதியது. அம்மா வாசுகி சாமி எதுவும் கும்பிடாமல், அய்யனை மட்டுமே கும்பிட்டு வாழ்ந்திருக்கின்றார். ஆதலால் அம்மா கேட்கும் போதெல்லாம் மழை பெய்தது என்று அய்யன் சொல்லியிருக்கின்றார். பெண் உரிமைச் சங்கங்கள் இந்தத் திருக்குறளை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருப்பதை எண்ணி எண்ணி அய்யனின் ஆத்மா எங்கிருந்தாலும் மகிழவேண்டும். வாசுகி அம்மா நில்லென மழை நின்றும் இருக்கும். ம்.... அது ஒரு காலம். இன்றும் தொலைக்காட்சிகளில் காலநிலை அறிக்கைகளை ஏன் பெண்கள் மட்டுமே வாசிக்கின்றார்கள் என்பதன் பின்னால் இருக்கும் மெய்ஞானம் இது. தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. நல்ல நெல்லிக்கனி ஒன்றை மன்னனிடமிருந்து பெற்ற பின், காலக் கணக்கில்லாமல் வாழ்ந்து, எல்லாவற்றிற்கும் காரணங்கள் சொன்ன பாட்டி அவ்வை சொன்னவற்றில் ஒன்று இது. இங்கு நாலைந்து வருடங்களாக மழையே இல்லை. வெடித்த பூமியும் வெளுத்த வானமுமாக இருந்தோம். போகிற போக்கில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்கலாம் என்ற கட்டுப்பாடு கூட வரக்கூடும் என்று பேசிக் கொண்டனர். ஒரு நல்லவர் கூட இங்கு சுற்றுவட்டாரத்தில் இல்லாமல் போய்விட்ட நிலைமை. திடீரென இங்கு இப்பொழுது இரண்டு வருடங்களாக நாற்பது வருட மழை ஒன்றாகச் சேர்ந்து பெய்து கொண்டிருக்கின்றது. பலரும் இந்த இரண்டு வருடங்களில் இங்கு நல்லவர்களாக மாறி விட்டனரோ? ம்ஹூம்.... அமெரிக்க உளவுத்துறை யாரோ நாலு நல்லவர்களை கடத்தி வந்து இங்கு மறைத்து வைத்திருக்கின்றார்கள் போல.
  42. எவ்வளவு பெரிய விடயத்தை இப்படி சொல்லி போட்டியள்.
  43. அண்மையில் எனது நெருங்கிய நண்பரும் அயலவரும் அவர்களது மைத்துனனின் இறுதிச் சடங்குக்காக சுவிஸ் போனார்கள். அங்கு இறுதிச் சடங்கை நடாத்த ஜேர்மனியில் இருந்து ஒரு இந்தியன் ஐயரும் அவருடன் உதவிக்கு ஒரு பாகிஸ்தானியரும் வந்து கிரியைகளை நடாத்தி முடித்ததாக கூறினார். தலை சுத்துது அய்யா..பாகிஸ்தானி...அய்யரோ ...அல்லாவோ
  44. ஆசான் அவர்களே, நானும் கிட்டத்தட்ட நீங்கள் சொல்லுவதையே சொல்ல முயன்றிருக்கின்றேன். அந்தப் புரோகிதர் அவரின் கைத்தொலைபேசியில் பார்த்து, வாசித்து, பொருள் சொன்னவை பலவும் தற்கால நடைமுறையில் இருந்து எங்கோ தள்ளியும், ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவுமே இருந்தன. அநதப் புரோகிதர் மெக்ஸிக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என்று நான் என் உறவினர்களுக்கு சொன்னவுடன், அவர்கள் எல்லோரினதும் நாடிகள் அப்படியே தளர்ந்து போய்விட்டன. இது இன்னொரு பிரச்சனை. பிற்குறிப்பு: நான் இங்கு இணைந்து ஐந்து நாட்களே. ஆனால் உங்களையும், இங்கிருக்கும் பலரையும் பல வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருகின்றேன். உங்கள் எழுத்தினதும், ஆக்கங்களினதும் வாசகன் நான். இப்படியான ஒரு சந்தர்ப்பம் அமைந்தது நான் செய்த ஒரு பாக்கியமே. நன்றிகள் ஆசான்.
  45. மயிலிறகு ....... 05. எடேய் ....அப்போது நீ கவனிச்சனியே அவன் தன்ர மோட்டர் சைக்கிள் சைட் பெட்டியில் இருந்து ஒரு மஞ்சள் பை எடுத்து அவளிடம் பணம் பத்திரம், கவனமாய் கொண்டுபோய் பெட்டியில் வை என்று கொடுத்ததை. தோராயமாய் பார்த்தாலும் ஐந்தாறு லட்சங்களாவது இருக்கும் இல்லையா.....அதை சொல்லும்போது சுந்துவின் குரலில் ஒரு அவாவும் தடுமாற்றமும் இருக்கு. ஓமடா .....நானும் கவனித்தனான் ஆனாலும் அதடா என்பவனை இடைமறித்து அதுமட்டும் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடுமடா. பூவனத்தின் கல்யாணம்,என்ர படிப்பு,உன்ர மோட்டார் சைக்கிள் மற்றும் ஊருக்குள் ஒரு மளிகைக் கடை என்று எல்லாம் செய்யலாம்டா...... சுந்துவுக்கு கொஞ்சம் வெறி ஏறீட்டுது. டேய் வாமு அவன்ர சேட்டைக்கு எப்படியாவது அதை அடிச்சுக்கொண்டு வரவேணும். குரல் உசாராய் சத்தமாய் வருகிறது. உனக்கென்ன பைத்தியமாடா சுந்து ....அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவருக்குத் தெரிந்து போயிடும் நாங்கள்தான் செய்திருப்பம் என்று...... பிறகு உன்ர படிப்பு, தங்கச்சியின் கல்யாணம் எல்லாம் பாழாகிடும்.இப்ப நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்ப்படு.பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான். மயிலம்மா அறைக்குள் தன் அலுமாரியில் எதையோ தேட பூவனம் அங்கு தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.தாயைப் பார்த்து என்னம்மா தேடுகிறாய் .....இல்லையடி இன்று முழுதும் செத்தவீடு, மார்அடிச்சு அழுதது, நடை என்று ஒரே அலுப்பாய் இருக்கு அதுதான் இந்த மருந்துப் போத்தலை இங்கினதான் எங்கேயோ வைத்தனான் காணேல்ல ஓ......அதுவா அதைத்தான் அவங்கள் இரண்டு பேரும் எடுத்து குடிச்சுட்டு அலட்டிக் கொண்டிருக்கிறாங்கள். அப்படியே.....சரி சரி அத விடு, உந்தத் தேத்தண்ணியைத் தா குடிப்பம். நீ அவங்களுக்கு நல்லா இடங் குடுக்கிறாய் சொல்லிப் போட்டன் என்று தாய்க்கும் தேநீரைக் குடுத்துட்டு தனது தேநீரை எடுத்துக் கொண்டு வெளியே போகிறாள் பூவனம். அடுத்தநாள் காலை பத்து மணியளவில் தபால்காரர் சைக்கிளில் மயிலம்மா வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்க பூவனம் சென்று அவரிடமிருந்து பதிவுத்தபால் ஒன்றை கையெழுத்திட்டு வாங்கி வருகிறாள். வரும்போதே அண்ணா உனக்கொரு கடிதம் வந்திருக்கு வந்து பாரேன் என்று அழைக்கிறாள். அடுக்களையில் இருந்து மயூரியும் சுந்துவும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறார்கள். சுந்து வந்து தங்கையிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கவனமாகப் பிரித்துப் படிக்கிறான்.அதில் அவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாகவும் வரும் திங்கள் கிழமை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வந்து சேந்து கொள்ளும்படி தெரிவிக்கப் பட்டிருந்தது.அதை அறிந்ததும் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கு. அம்மா நான் இந்த நல்ல செய்தியை வாமனிடம் போய் சொல்லிப்போட்டு வாறன்.இதைக் கேட்டதும் அவன் மிகவும் சந்தோசப்படுவான் என்று சொல்லிவிட்டு தாயைப் பார்க்க அவளும் இருடா வாறன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கொஞ்ச பணம் எடுத்துவந்து மகனிடம் குடுக்கிறாள். பணத்தை வாங்கியதும் சுந்து சந்தோசத்துடன் சைக்கிளில் சிட்டாய்ப் பறக்கிறான்.இதை பார்த்த பூவனம் அம்மா இவங்கள் குடிக்கப் போறாங்கள், நீ வேற அவங்களுக்கு காசு குடுக்கிறாய்.... நீ சும்மா இருடி அவங்கள் என்னண்டாலும் செய்யட்டும். அங்க படிக்கப்போனால் இனி எப்ப அவனைப் பார்க்கபோறோமோ....நீ போய் அடுப்பில மா அவிய வைத்தனான் என்னெண்டு போய்ப் பார்....நான் ஒருக்கால் கனகத்தைப் பார்த்துட்டு வருகிறேன்.....பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்கையில் அவளின் மனம் கணக்குப் போடுகிறது. இன்று வெள்ளி அடுத்து சனி,ஞாயிறு பின் திங்கள் வந்துடும்.இதற்குள் பணத்துக்கு என்ன செய்வது. இப்ப ஒரு இரண்டாயிரம் இருந்தால் கூட போதும் பிறகு பார்த்து நிலத்தை ஈடு வைத்து எண்டாலும் பிள்ளையின் படிப்புக்கு உதவ முடியும். அவன் படித்து ஆளாயிட்டான் என்றால் எங்கட பஞ்சம் தீர்ந்திடும்.அதுக்குள் இவளின் சம்பந்தம் வேற நான் முந்தி, நீ முந்தி என்று நிக்குது.எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மயூரிக்கு மண்டை விறைக்குது. அங்கு வீட்டு வாசலில் கனகம் நிற்பதைக் கண்டு விரைவாக நடக்கிறாள். வாமு வீட்டை போன சுந்து அங்கு அவனைக் காணாது அவனின் தாயிடம் விசாரிக்க அவவும் அவன் அரசு விதானையார் கூப்பிட்டு போயிட்டான். இப்ப வரும் நேரம்தான் நீ உந்த வாங்கில இரு தம்பி. நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வாமுவும் சைக்கிளில் வந்து இறங்குகின்றன். அவனைக் கண்டதும் ஓடிச்சென்று வாமுவைக் கட்டிப்பிடித்த சுந்து தனக்கு பல்கலைக்கழகத்துக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சட்டென்று அமைதியாகின்றான்.அவனின் முகவாட்டத்தைப் பார்த்த வாமு என்னடா சொல்லு என்று கேட்க அவனும் வாற திங்கள் போகவேணும் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு அதற்குள் பணத்துக்கு என்ன செய்யிறதென்றுதான் யோசிக்கிறன். எட மடையா, அதெல்லாம் வெல்லலாம், நீ ஒன்றுக்கும் யோசிக்காத.நீ இருந்து தேத்தண்ணியைக் குடி நான் உடுப்பு மாத்திக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறான்.சிறிது நேரத்தில் இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு சைக்கிள்களில் வெளியே போகின்றார்கள். அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு பாரில் சுந்து ஒருபோத்தல் சாராயம் வாங்கப் போக வாமு அவனிடம் கணக்க வேண்டாம் அரைப் போத்தல் வாங்கு போதும் என்று சொல்லி அரைபோத்தல் சாராயமும் இரண்டு பிளாஸ்டிக் கப்பும் அத்துடன் குடல் கறியும் வாங்கிக்கொண்டு வருகிறான். இருவரும் அங்கிருந்த சிறு மேசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்தில் ஒரு மேசையில் நாலுபேர் ஊர் உலகத்தில் நடக்கிற பல விஷயங்களையும் கதைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சுந்துவும் போத்தலை எடுத்து உள்ளங்கையில் ரெண்டு குத்து குத்தி மூடியிலும் குத்திவிட்டு மூடியைத்திருக அதுவும் மெல்லிய இழை தளர்ந்து புதுமணப்பெண்போல் முனகிக் கொண்டு திறந்து கொள்கிறது.ஒரு சுகந்தமான வாசனை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படியே அந்தப் பொன்னிறத் திரவத்தை இரண்டு கிளாஸ்களிலும் பாதி பாதியாக ஊற்ற வாமுவும் பக்கத்து மேசையில் இருந்து தண்ணி வாங்கி அதில் கலந்து விடுகிறான்.இருவரும் ஆளுக்கொரு மிடறு குடிக்கிறார்கள்.பின் வாமு பொக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அவனுக்கும் ஒன்றைக் குடுத்து தானும் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி தேட பக்கத்து கதிரையில் இருந்தவர் இங்காலுப்பக்கம் திரும்பாமல் தன்னிச்சையாய் தனது சிக்ரெட்டை நெருப்புடன் இவனிடம் தருகிறார். வாமனும் அதை வாங்கி தன் வாயில் இருந்த சிக்ரெட்டைப் பற்றவைத்து சுந்துவிடம் குடுத்துட்டு அவனிடமிருந்த சிக்ரெட்டை வாங்கி தான் பத்தவைச்சுக்க கொண்டு அவரிடம் அவருடையதைக் குடுத்து விடுகிறான். 🦚 மயில் ஆடும் ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.