Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20018Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்6Points3057Posts -
nunavilan
கருத்துக்கள உறவுகள்6Points53011Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்5Points46783Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/20/24 in all areas
-
கனடாவில் கார் களவு.
5 pointsகனடாவில் கார் களவு.-_ அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன். நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ. எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம். சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம். பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று. இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை. இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை. கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ? நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.5 points
-
என் இந்தியப் பயணம்
4 pointsஎனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன் என்றால் பாருங்களன். அன்றே ஒன்லைனில் வேறு ஒரு தங்குவிடுதியை புக் செய்து போகும்போது வரவேற்பில் நின்றவரிடம் இரவு முழுதும் சரியான நுளம்புக்கடி என்கிறேன். நுளம்பே இல்லையே மடம் என்கிறார். அப்ப இரவு போய் படுத்துப்பாரும் என்றுவிட்டு வெளியேறி அடுத்த தங்குவிடுதிக்குச் சென்று சூட்கேசை வைத்துவிட்டு குளியலறையில் யன்னல் பூட்டக் கூடியதா என்று பார்த்துவிட்டுத்தான் பதிவே செய்தது. அதுமுடிய அறைக்குள் சென்றவுடன் பழைய தங்குவிடுதியின் இணையத்தளத்துக்குச் சென்று உள்ளதை உள்ளபடி விமர்சனம் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அன்று பகல் வங்கிக்குச் சென்று எமது பணத்தைப் பற்றிக் கதைத்தால் அந்த அலுவலை முடிக்க ஆறு நாட்கள் செல்லும் என்றார்கள். அத்தனை நாட்கள் சென்னையிலேயே நின்று என்ன செய்வது? அதனால் எங்காவது போய் வருவோம் என்றால் மனிசன் மதுரை போவோம் என்கிறார். எனக்கும் கீழடியைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலநாட்களாக இருக்க, நானும் சம்மதிக்க இருவரும் சென்று ஒரு பயண முகவர் ஒருவரைச் சந்தித்து அன்றைய இரவு பத்து மணிக்கு படுக்கையுடன் கூடிய சொகுசு உந்தில் மதுரை செல்லப் பயணச் சீட்டு எடுத்துவிட்டு மதிய உணவை உண்டுவிட்டு வந்து கொண்டுவந்த கைப்பொதியில் இரு நாட்களுக்கு உரிய உடைகளையும் முக்கிய பொருட்களையும் எடுத்து அடுக்கிவிட்டு படுத்துக் குட்டித் தூக்கம் ஒன்றும் போட்டு எழுந்தால் அப்பதான் மூன்று மணி. வெளியே கடைகளுக்குச் செல்ல மனமில்லை. படம் பார்க்கப் போவோமா என்கிறேன். இங்கே பக்கத்தில சினிமா இருக்கோ தெரியவில்லை என்று மனிசன் பின் வாங்க, வரவேற்பில் போய் கேட்டுக்கொண்டு வாங்கோ என்கிறேன். போன மனிசன் ஐந்து நிமிடத்தில் வந்து பத்து நிமிட நடையில் கிரிஷ்ணவேணி என்ற சினிமா இருக்காம், நாலரைக்குப் படம் இருக்காம் என்கிறார். என்ன படம் என்று எதுவும் கேட்கவில்லை. பெரிய பயணப்பொதியை இரண்டு நாட்களில் திரும்ப வருவோம் என்று கூறி கீழே வரவேற்பில் கொடுத்துவிட்டு கைப்பொதியை இழுத்தபடி செல்கிறோம். போகும் வழியில் உணவகத்தில் மனிசன் பரோட்டவும் நான் பூரியும் உண்டுவிட்டுத் தேனீரும் அருந்தி, இரவு உண்பதற்கு வடை, போண்டா எனச் சில சிற்றுண்டிகளையும் தண்ணீர் போத்தலையும் வாங்கிக்கொண்டு படம் பார்க்கச் செல்கிறோம். நாம் நின்ற இடத்திலிருந்து அரைமணி நேரத்தில் சென்று மகிழுந்தைப் பிடித்துவிடலாம். கோயம்பேடு சந்தைக்கு அருகில் தான் பஸ்கள் தரிப்பிடம் என்று எமக்குச் சொல்லப்பட்டது. அதனால் சாவகாசமாகப் படம் முடிந்து போகலாம் என்று போய் படமும் பார்க்க ஆரம்பிச்சாச்சு. சினிமா என்பதனால் போனின் சத்தத்தையும் நிறுத்தியாச்சு. ஆறரை மணிக்கு இடைவேளையில் மனிசன் சென்று பொப்கோனும் நெஸ்கபேயும் வாங்கிவர, இரசிச்சுக் குடிச்சு மீண்டும் படம்பார்க்க ஆரம்பிக்கிறோம். நாலரைக்கு படம் தொடங்கும் என்று போட்டாலும் 15 நிமிடம் விளம்பரங்களுக்குப் பின்னர்தான் படம் ஆரம்பித்தது. அதனால் இடையில் எத்தனை மணி என்று பார்க்க போனை எடுத்தால் 5 மிஸ்டு கோல்கள். என்ன ஏது என்று பார்த்தால் அப்ப ஏழரை மணி. படம் முடிய இன்னும் அரை மணி நேரமாவது செல்லும். ஏதோ மனதில் பிரையாணம் தொடர்பானதுதான் என்று தோன்ற போனை எடுத்துக் காதில் வைத்து ஏன் போன் செய்தீர்கள் என்று கேட்க, பஸ் கோயம்பேடில் நிக்காது மடம். அதுதான் உங்களையும் பிக் பண்ணிக்கொண்டு போக போன் செய்தோம் என்கிறான் அந்த பஸ்ஸின் ஓட்டுனர். நாங்கள் சினிமா பார்த்துக்கொண்டு இருந்ததில் கேட்கவில்லை. எனக்குப் பதட்டமாகிப் போகிறது. நான் வெளியே வந்து எடுக்கிறேன் என்றுவிட்டு மனிசனிடம் விடயத்தைச் சொல்லி, படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் வெளியே வந்து போன் செய்ய மீண்டும் அதையே சொல்கிறார் ஓட்டுனர். இப்ப எங்கே வந்து பஸ்சைப் பிடிப்பது என்று கேட்கிறேன். கீழாம்பாக்கம் என்ற இடத்துக்கு வரவேணும் என்று கூற எவ்வளவு தூரம் என்று கேட்கிறேன். ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம் என்றுகூற எனக்குப் பதட்டமாகிறது. ஒரு மணிநேரம் என்றால் தூரமாகத்தானே இருக்கும் என்று எண்ணியபடி நடக்க, பொறு எங்கட சூட்கேசை எடுத்துக்ககொண்டு வாறன் என்றபடி சினிமாவின் ரிக்கற் கவுண்டருக்கு அருகில் சென்று அங்கு அவர்களிடம் கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டு வர நான் என்னதை இழுத்துக்கொண்டு போகிறேன். சினிமா அரங்குக்குப் பக்கத்தில் தான் நாம் ரிக்கற்றைப் பெற்ற கடை. இப்ப கடை பூட்டி இருக்கும் என்கிறார் கணவர். எதுக்கும் போய் பார்ப்போம் என்று சென்றால் திறந்து இருக்க எதுக்கு பிழையான இடத்தைச் சொன்னீர்கள் என்கிறேன். என்னம்மா சொல்றீங்க. புரியும்படியா சொல்லுங்க என்கிறார். நான் விபரம் சொல்ல, பக்கத்தில் நின்ற ஒருவர் இப்பல்லாம் பஸ் இங்க நிக்கிறதில்லையே என்கிறார். முகவர் சமாளித்தபடி காலைல புக் பண்ணும்போது இங்கேதான் போட்டிருந்தாங்க. திடீர்னு மாத்தீட்டாங்க என்கிறார். இப்ப எப்பிடிப் போறது என்கிறேன் நான். ஓட்டோவில போங்க என்று கூற ஓட்டோவுக்கு எவ்வளவு என்கிறார் மனிசன். இரவு நேரம் டபுளா கேட்பாங்க என்றுவிட்டு ஒரு ஓட்டோவை நிறுத்த அவ்வளவு தூரம் வரமுடியாது என்கிறான் ஒருவன். நேரம் எட்டுமணியாகிவிட எனக்குப் பதட்டம் ஏற்பட முதலே சரியான இடத்தைச் சொல்லியிருக்கவேணும் என்கிறேன் முகவரைப் பார்த்தபடி. என் கோபம் புரிய நான் உங்களை ஏற்றாமல் போகக் கூடாது என்று இப்பவே சொல்கிறேன் என்றபடி போன் செய்கிறார். அவர் பேசி முடிய அவரை நம்பாமல் எனக்கு போன் வந்த இலக்கத்தை அழுத்தி இன்னும் நாங்கள் ரி நகரில் தான் நிற்கிறோம். வந்துவிடுவோம். என்று கூற உங்களை ஏற்றாமல் பஸ்சை எடுக்கமாட்டேன் மடம், வாங்க. என்றுவிட்டு போனை வைக்க, நீங்கள் தான் ஓட்டோ பிடித்துத் தரணும் என்கிறேன். சரிம்மா என்றுவிட்டு ஓட்டோவை நிறுத்துகிறார். பலரும் வர மறுக்க, ஏன் வரமறுக்கிறார்கள் என்று கேட்கிறேன். அவ்வளோ தூரம் போயிற்று திரும்பிவர சவாரி கிடைக்காட்டி நட்டம் என்று ரொம்பக் கேக்கிறாங்கம்மா என்கிறார். பரவாயில்லை நிறுத்துங்கள் என்றதும் ஓட்டோவை நிறுத்தப் போகிறார். சாதாரணமா ஒரே றபிக் அங்கிட்டுப் போக என்கிறார் எமக்குப் பக்கத்தில் நின்றவர். அப்ப டாக்ஸி பிடித்தால் விரைவாகச் செல்லலாமே என்றுவிட்டு முகவரிடம் டாக்ஸியை அழையுங்கள் என்கிறேன். டாக்சி ஸ்ராண்ட் பக்கத்தில இல்லை. பத்து நிமிடம் அங்கிட்டுப் போகணும். அதுக்கு ஓட்டோலையே போயிடுங்க. இதோ ஒண்ணு வந்திட்டுது என்றபடி ஒன்றை நிறுத்துகிறார். நானும் கணவரும் ஏறி அமர்கிறோம். வரும்4 points
-
கனடாவில் கார் களவு.
3 pointsஇந்த சம்பவம் நடந்தது 15 வருடமாவது இருக்கும். நண்பன் ஒருவர் (அப்போ திருமணம் செய்யவில்லை) நண்பர்களோடு ல் இருந்தவர். அப்போ இருந்த தமிழ் குடும்பம் இரவு உணவுக்காக அழைத்தது. பனியும் கொட்டிய படி உள்ளது. குறிப்பிட்ட நண்பரும் இன்னும் சில அவரின் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு பின்னேரம் போல் ( 6 - 6:30) போயடைந்தார்கள். போன நண்பர் அதிகம் குடிக்காதவர். கொஞ்சம் வைனுடன் சாப்பிடுபவர். மற்றவர்கள் சொல்ல தேவை இல்லை. மது, உணவு முடிய 11:30 ஆகி விட்டது. பனியும் சுமாராக கொட்டி விட்டது. "சரி காணும் வாங்கோடாப்பா" என நண்பர்களையும் கூட்டிக் கொண்டு காரை நோக்கி செல்கிறார்கள். காரில் எல்லோரும் ஏறிய பின்னர் காரை start பண்ண எந்த சத்தமும் வரவில்லை. பற்றரி போட்டுது போல இருக்கு "இறங்கி தள்ளுங்கோடா "என்று கூறி இருக்கிறார். அவர்கள் காரை கொஞ்ச தூரம் தள்ளியும் கார் startஆக வில்லை. கார் Hood ஐ திறந்து பார்த்த போது என்ஞினை காணவில்லை.😞 அந்த நண்பர் அத்தோடு நியூயோர்க்கை விட்டு பலோ அல்டோ(Palo alto), கலிவோர்ணியாவில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறார். எப்போதும் நியூயோர்க் என்ற பேச்சு வந்தாலே அவரின் இந்த அனுபவத்தை சகலரிடமும் பகிர்வார்.3 points
-
வல்வை மண்ணில் பிரித்
3 pointsசும்மா வாயாலை துண்டு போட்டு இடம் பிடிக்க அது ஒன்றும் சுடலை கிடையாது ஏற்கனவே உங்கடை ஆட்கள் தென்னிலங்கை புற்று நோயாளர் பாவித்த பஞ்சு மெத்தையை சுத்தம் பண்ணி வடபகுதியில் புதுசு போல் விற்று நல்ல காசு பார்த்தனர் அப்படியே வல்வை பக்கமும் போக அங்கு அந்த மெத்தையின் குறிப்பிட்ட வைத்தியசாலையின் அடையாளத்தை வைத்து மாட்டுபட்டு..................................... பிறகு நடந்தது தணிக்கை .அதன் பின் உங்க ஆட்கள் அந்த பக்கமே போவதில்லையாமே ....... அந்த ஊர் வெறுமே 25௦ ஏக்கரில் தான் உள்ளது அதுக்குள் 39 பெரிய கோயில்கள் ஒரு தேவாலயமும் உள்ள இடத்தில் உங்க கனவு நிறைவேற வாய்ப்பே இல்லை ராஜா .3 points
-
ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி
அங்க ஒரு கோதரியும் இல்லை...ஆனால் விரும்பினவன் வெற்றிலை போடலாம் .... 75 வருடமா சிங்கள சாணக்கியர்கள் அரசியல் செய்த லட்சணம்... சின்ன வயசில நாங்கள் வடிவான காய் கோவிலில் நின்றாள் சாமி கும்பிட போறம் என சொல்லி சென்று சாமி கும்பிடாமல் சுழற்றி கொண்டு திரிவம் ....அது மாதிரி உந்த நாடுகள் ஆராச்சி செய்யிறம் எண்டு போட்டு வேற லெவலில் புகுந்து விளையாடினம்..2 points
-
கனடாவில் கார் களவு.
2 pointsஓம் இங்கு கார் களவு மிகவும் அதிகமாக நடக்கின்றது . கடந்த சனவரி (2024) இல் மட்டும் 963 கார்கள் திருடப்பட்டன. Wheel Lock போட்டாலும், இலகுவாக அதனை வெட்டி அகற்றி விட்டு, களவு எடுக்கின்றனர். வீட்டினுள் faraday box போன்ற, திறப்புகளில் இருந்து மின் சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் பைகளுக்குள் கார் திறப்பை போட்டு வைத்தால், காரைத் திறக்க / இயக்க முடியாவிடின் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டுக்காரர்களை துப்பாக்கி முனையில் வைத்து கொண்டு, மிரட்டி கார் திறப்புகளை வாங்கி செல்கின்றனர். ஒன்ராரியோவில், வேறு நாடுகளில் இருந்து 10 நாள் விசிட்டர் வீசாவில் வந்தெல்லாம் காரைக் களவு எடுக்கின்றனர். அந்தளவுக்கு காரைத் திருடுவதற்கான ஒரு சொர்க்கபுரியாக கனடா, முக்கியமாக ஒன்ராரியோ உள்ளது. இங்கு இருக்கும் சட்டங்கள் மிக மென்மையாக (Lenient )இருப்பது இதற்கு முக்கிய காரணம். கார் திருட்டில் கைதாகின்றவர்கள் அடுத்த நாளே Bail லில் வந்து, மேலும் திருடுகின்றனர். அதிலும் அனேகமானோர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள். எனவே, சட்டப்படி அவர்களை உள்ளே வைத்து இருக்க முடியாது. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன், அந்த குற்றம் அவர்களின் records இல் இருந்து நீக்கப்பட்டு விடும். அதன் பின் இன்னொரு குற்றம் செய்யும் வரைக்கும், அவர்கள் குற்றமே செய்யாதவர்களாக கணிக்கப்படுவர். எனவே தான் குழுக்கள் வன்முறைக் குழுக்கள் 18 வயதுக்கும் குறைந்தவர்களைக் திரட்டி இவ்வாறு திருட்டில் ஈடுபட வைக்கின்றனர். லிபரல் ஆட்சியில் இல்லாத மாகாணங்களின் முதல்வர்கள், மத்திய அரசிடம் கிரிமினல் கோட் (Criminal code) இனை மாற்றி Bail லில் வராத மாதிரி செய்யச் சொல்லி பல தடவைகள் கேட்டுவிட்டனர். ருடோ போன்ற குற்றவாளிகளுக்கு இடம் கொடுக்கும் ஒருவர் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வரைக்கும் இது மாறாது. ஒன்ராரியோவில் திருடப்படும் கார்கள், மொன்றியலுக்கு கொண்டு செல்லப்பட்டு, துறைமுகமூடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகம் அனுப்பப்படுகின்றது. அதிலும் முக்கியமாக UAE இற்கு. இவ்வாறு வருவது அந்த நாட்டு அரசுக்கு நன்கு தெரிந்தாலும், அதை அவர்களின் பக்கம் தடுக்க எந்த முயற்சிகளையும் செய்வது இல்லை.2 points
-
கனடாவில் கார் களவு.
2 pointsநண்பர் ஒருவர் சொன்னார் ஒன்ராரியோ இலக்க தகட்டுடன் நைஜீரியாவில் கார் ஓடுகிறது என்று. களவெடுக்கும் கார்கள் கப்பலில் ஏற்றி ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப படுகிறதாம்.2 points
-
வல்வை மண்ணில் பிரித்
2 pointsபுலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை. அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது.. வல்லை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்லை சந்தியில்.. தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார். வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இராணுவ பயிற்சிக்கூடங்களும்.. தலைமையகங்களும்... ஏக்கர் கணக்கில் காணிகள் இன்னும் இராணுவம் வசம். கடற்படை வேறு கடல் பக்கமா அபகரிச்சு நிற்குது. எல்லா இடமும் புத்தர் ஒவ்வொரு அரசமரமா குந்தி இருக்கிறார். உவங்கட விசுவாசத்தை பார்த்தால்.. புத்தரே தலை சுத்தி விழுந்துடுவார். ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள். மதியம் பசிக்கும் தானே. அப்போ.. சாப்பிட ஒரு இடம் போனம். விளம்பரத்துக்காக இல்லை. உண்மையாகவே இடமும் உணவும் இயற்கை காட்சிகளும் மனதுக்கு குளிர்ச்சியாக இருந்திச்சு. உள்ளூர் தகவலின் படி (உண்மை பொய் உறுதிப்படுத்தப்படவில்லை) புலம்பெயர் நபரின் முதலீட்டில் உருவான.. ஒரு விடுதியுடன் கூடிய உணவகம் கிடைத்தது. வெள்ளையள் அங்கும் சைக்கிளில் ஓடி ஓடி பேரம் பேசிக்கிட்டு இருப்பதைக் காண முடிக்கிறது. வெள்ளைக்காரனாவது காசை விடுறதாவது. உணவகத்தின் உள்.. எல்லாம் நல்லாத் தான் இருக்குது. உணவும். விலையும் பறுவாயில்லை. ஆனால் உணவகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிங்களப் படைமுகாமில் இருந்து ரபான் ப்ரித்.. நாள் முழுவதும். செவிக்கும் மனதுக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சிங்கள பெளத்தர்களே இல்லாத இடத்தில் எதுக்கு இந்த வேலை. மிக வரைவில்.. அந்த இடத்தில் புத்தர் நிரந்தரமாக குடியிருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம். சரி.. என்று சற்றே நடந்து சுவர்களை நோக்கினால்.. வட ஹிந்திய நடிகைகளுக்கும் ஹிந்திய தலைவர்களுக்கும் முன்னிடம். மோடி ஜீ வேற இருக்கிறார். ஈழத்தமிழர்கள் கப்பல் வரலாறும் ஒரு பக்கம் போட்டிருக்கு. தமிழன் சுழியன்.. என்றது அப்பவே தெரியும். ஆனால் வல்வை மாதிரி சுழியனாக இருப்பது கடினம் தான். அழகான வல்வைக்கடல். ஏனே ஆர்ப்பரிப்பதை நிறுத்திவிட்டது. அதற்கும் வீரம் வீழ்ந்துவிட்டதோ என்னவோ..??! (காட்சிக்கு ஏற்ற வசனம்.. அப்புறம் வல்வை மக்கள் தங்கள் வீரத்தைப் பற்றி கதைப்பதாக சண்டைக்கு வரக்கூடாது. உங்கள் வீரத்தை உலகறியும்.) இந்த விடுதியின் கண்ணாடிக் கூட்டில் இருந்தான பார்வை. இங்கு சிங்களவர்களும்.. குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு வரும் இராணுவத்தின் உறவினர்கள் பெருமளவில் வந்து போகினம். உண்மையில்.. யாழ்ப்பாணம் காண ஆசையில் வரும் சிங்களவர்களும் உண்டு. அவர்களை வரவேற்பதில் தவறில்லை. நாம் தென்னிலங்கையை ரசிக்கவில்லையா..??! இந்தப் பக்கம் இருந்து தான் அந்த எரிச்சலூட்டும் ரபான் பிரித் வந்தது. ஒரு கடற்கரையை சோலையாக்கி வாழும் வல்வை மக்களுக்கு சலூட். இஸ்ரேலாம் இஸ்ரேல். வல்வையோடு நிற்காமல்.. தீவகமும் போனது.. நயினை.. அம்மாளாச்சி நல்ல பெயிட் கியின்ட் எல்லாம் அடிச்சு நல்ல களையா இருக்கா. என்ன அவாவின் பக்தர்களை காவிக் கொண்டு போற படகுகளுக்கு தான் யாரும் பெயின்ட் அடிக்கிறாங்கள் இல்லை. நயினாதீவு இறங்கு துறையும் இப்ப நல்லா இருக்கு. ஆனால்.. சில அடிப்படை பழவழக்கங்களை மாத்திறது கஸ்டம். எங்கும் கச்சான் கோதும் கஞ்சலும். சிங்களவர்களும் அதே. நயினை நாகபூசனி அம்மன் கோவில்... தற்போது. அம்மனை தரிசிக்க வந்த கணவாய். நாகபூசனி அம்மனுக்கு அருகில் வந்துவிட்ட புத்தர். வெள்ளைவெளேர் என்று பரந்து காட்சி அளிக்கிறார்... சாரி காலை நீட்டி படுத்திருக்கிறார். தீவகத்தின் அழகிய சன் - செட் உடன் முடிச்சுக் கொள்ளுறம். ஆக அலட்டினால்.. வாசிக்கவும் நேரமில்லை.. மிணக்கடவும் நேரமில்லை. இறுதியா.. ஒன்று சொல்ல மறந்தது.. தீவகத்தில் இருந்து அராலிப்பக்கமா தனிச்சிங்களத்தில் எதையோ எழுதி வைச்சு கொப்பேகடுவ.. போய் சேர்ந்த இடத்தை சிங்களவருக்கு மட்டும் திறந்து விட்டிடுருக்கிறாங்கள். ஐயாவுக்கு சிலை வைச்சு புகழஞ்சலியோ இல்லை.. குடியேற்றமோ தெரியாது. எங்கட டமிழ் டேசியக் கட்சிகளுக்கு தமது தேசத்தில் நடப்பத்தைக் கவனிக்க நேரமில்லை. கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும். இதனையே சிங்களவர்கள்.. ஹிந்தியா.. சீனா.. சர்வதேசம்.. மட்டுமல்ல.. தமிழர்களில் சிலரும் விரும்பினம். தமிழன் பலமாகக் கூடாது. அதை களத்தில் நல்லாச் செய்யுறாங்கள்.2 points
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
2 pointsஇதுவரை இந்தக் கதையின் 19 அத்தியாயங்களை வாசித்து முடித்துள்ளேன். நிறையக் கருத்துக்களை அகரமுதல்வன் சொல்ல முற்பட்டாலும் யதார்த்தம் தாண்டிப் பல இடங்களில் கட்டுக் கதைகளைத் தாராளமாக அள்ளி வீசுகின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது. இவரின் முன்னைய பல சிறுகதைகளையும் நான் வாசித்துள்ளேன் பல கதைகளில், தமிழகத்துக்கு குடிபெயர்ந்த ஈழப் பெண்கள் இழிவான பல சித்தரிப்புகளுடன் எழுதியுள்ளதைக் கண்டுள்ளேன். தமிழகத்துக்குக் குடிபெயர்ந்துள்ள பல ஈழத்து எழுத்தாளர்கள் பல கட்டுக் கதைகளை உண்மைபோல் எழுதித் தள்ளி ஜெ.மோ போன்ற புண்ணியவான்களிடம் பாராட்டைப் பெற முயல்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஒருவகையில் இலக்கியத் தற்கொலை, நமது ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றிய, நாம் கடந்து வந்த பாதை பற்றிய தவறான புரிதலை மற்றைய மக்களிடம் கொண்டு செல்லத் தூண்டுகிறது/துணை புரிகின்றது என்பது எனது தாழ்மையான கருத்து.2 points
-
ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி
ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி] சீன தூதரகத்திற்கு கடுமையான ஒரு பதிலை யாழ்கள நீண்டகால யேர்மன் உறவுகள் வழங்க வேண்டும்.2 points
-
பேரரசியல் அபிலாஷைகளால் மத மோதல்கள் தொடர்ந்து அரங்கேறும் - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் எச்சரிக்கை
2 points
- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsஆமைகளின் வழித்தடத்தை பின்பற்றி கடல்வழிகளை கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப்பயணம் மேற்கொண்ட தமிழனின் பெருமை அறியாதோர் ஆமையினை இழிவாக பார்ப்பர். ஆமையினது வாழ்க்கை முறைகளை அறியாதோர் அதனை கேவலமாக பார்ப்பர். நாம் தமிழர் கட்சிக்கு ஆமை சின்னம் பொருத்தமானதே. ஏனெனில் அது இயற்கையோடு ஒன்றி வாழும் உயிரினம். யாருக்கும் தீங்கு செய்யாத உயிரினம்.ஆறறிவு படைத்த மனிதனை விட நீண்ட காலம் வாழும் உயிரினம். ஆயிரம் முட்டைகள் போட்டாலும் அமைதியாய செல்லும் உயிரினம். ஆமையிடமிருந்து மனிதன் இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை படிக்க வேண்டும்.2 points- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நல்லாயிருக்கு....கந்தையர் 😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால் அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது. இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில் அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல் நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்2 points- என் இந்தியப் பயணம்
1 pointசிறிது நேரம் யாருமே பேசவில்லை. ஓட்டோ ஓட்டுனர் : கீளாம்பாக்கம் தானே? கணவர்: ஓம் ஓ ஓ : எங்க போறீங்க கணவர்: மதுரை நான்: அந்த இடம் தெரியும்தானே? ஓ ஓ : ஆமா ஆமா. கீளாம்பாக்கத்தில ஆறு மாசம் முன்னாடிதான் புதிசா கலைஞர் கருணாநிதி நினைவா தொறந்து வைச்சாங்க. ரொம்பப் பெரிசு. மின்னாடியே உங்களுக்குத் தெரியாதா? கணவர்: தெரியாது. கோயம்பேடு என்று சொன்னாங்களே. ஓ ஓ: அங்க இப்ப யாரையும் ஏத்தக் கூடாது. எந்த பஸ்சும் வராது. நான்: ரிக்கற் போட்டவர் பொய் சொல்லீட்டார் கணவர்: ஒரு மணித்தியாலத்தில போகலாமோ? ஓ ஓ: இன்னிக்கி வெள்ளிக்கிழமை. ரொம்ப ராபிக்கா இருக்கும். எப்பிடியும் நான் ஒண்ணரை மணி நேரத்தில கொண்டு போயிடுவன். அன்று போய் சேர ஒன்றே முக்கால் மணிநேரம் பிடிக்க நான் டென்ஷன் ஆனதுக்கு அளவே இல்லை. அப்பா! மிகப் பிரமாண்டமாக ஒரு விமானநிலையம் போல வடிவமைத்திருந்தார்கள். நானும் லண்டன் விக்டோரியா கோச் நிலையம் போல ஒரு பத்து சொகுசு பஸ்கள் நிற்கும் என்று பார்த்ததால் - சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டம். ஒரு நூறு பஸ்கள் ஆவது நிற்கும். மற்றும் வேளையென்றால் இறங்கி நின்று படமோ வீடியோவோ எடுத்துவிட்டுத்தான் போயிருப்பேன். என் பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. உள்ளே சென்றால் ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக்கூடியதாக பெரிதாக இருந்தது மண்டபம். மலசலகூடமும் மிகச் சுத்தமாக இருக்க நம்ப முடியாததாக இருக்க கணவரிடம் வாய்விட்டுச் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போகட்டும். அதன்பின் வந்து பாரன் என்கிறார். எமது பஸ்ஸைத் தேடிப் பிடித்து உள்ளே சென்றால் நாம் மட்டும் தான் உள்ளே. யாரையும் காணவில்லை. எல்லா ஏசியையும் போட்டு குளிர் தாங்கவே முடியவில்லை. 96 ம் ஆண்டு இத்தாலி செல்லும்போது தான் முதன்முதல் தொடருந்தில் தூங்கிக்கொண்டு வந்தோம். இதுவே பேருந்தில் தூங்கியது முதல் அனுபவம். நாம் கொண்டுபோன விரிப்பை விரித்துவிட்டு திரைச் சீலையையும் இழுத்துவிட்டுப் படுத்தபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். நான் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அந்த ஏசியிலும் ஒரு நுளம்பு ஓடி ஓடிக் கடிக்க மனிசன் ஒரு இருபது நிமிடப் போரில் நுளம்பை வெல்ல அதன் பின் நிம்மதியான தூக்கம்தான். காலை ஆறு மணிக்கு மதுரை போகும் என்று சொன்னாலும் ஆறரைக்கே பேருந்து போய் சேர்ந்தது. பேருந்துத் தரிப்பிடம் போல் இல்லாமல் ஒரு வெட்டவெளியில் நிறுத்த, நாம் இறங்க இரண்டு மூன்று ஓட்டோக்காரர் என்னிடம் வாங்க, என்னிடம் வாங்க என்கின்றனர். அதில் ஒரு அப்பாவிபோல் இருந்த ஒருவரை கணவர் தெரிவு செய்ய, நாம் ஏறி அமர எங்கே போகணும் என்கிறார் அவர். மீனாட்சி அம்மன் கோவில் பக்கமாக நல்ல கோட்டல் ஒன்றுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் கணவர். கோவிலுக்குக் கிட்ட கோட்டல்கள் இல்லீங்க. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தான் கோட்டல் எல்லாம் இருக்கு. கோயிலுக்கு அங்கிருந்து 200 ரூபா தான் என்கிறார். இரண்டு மூன்று கோட்டல்கள் தொடர்ந்து இருக்க, ஓட்டுனர் சென்று இரண்டு கோட்டல்களில் கேட்க எல்லாம் புல் என்கின்றனர். மூன்றாவதில் இடம் இருக்க நான் உள்ளே சென்று அறையைப் பார்க்கவேண்டும் என்கிறேன் வரவேற்பில். தாராளமாகப் பாருங்கள் என்கின்றார். அறை என்னவோ பரவாயில்லை. ஆனால் போகும் வழியில் சுத்தம் இல்லாமல் இருக்க இது வேண்டாம் என்கிறேன். இன்னிக்கி சனிக்கிழமை வெளியூர்காரங்க வந்திருப்பாங்க. வேறு இடம் பார்க்கலாம் என்று இரண்டு மூன்று பார்த்து நான்காவதாக 3700 ரூபாய்கள் காலை உணவுடன் என்று கூற அதைத் தெரிவு செய்கிறோம். அறையில் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கீழே வர உணவகம் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. பபே என்றாலும் கேட்டுக்கேட்டு தோசை, பூரி என்று கொண்டுவந்து தருகின்றனர். அவர்களின் உபசரிப்பில் மனமும் வயிறும் நிறைந்து போகிறது. சரி இனி மீனாட்சி அம்மனிடம் செல்வோம் என்கிறார் கணவர். அவரது போனில் ஊபர் அப் இருக்கு. எனவே ஊபர் கிளிக் செய்ய அதில் ஓட்டோவும் வர ஓட்டோவுக்குப் போடுவம் என்று போட 157 ரூபாய்கள் என்றும் பணமாகக் கொடுக்கலாம் என்னும் ஒப்ஷன் வர, மனிசனும் மலிவாக இருக்கு என்று சந்தோசப்படுறார். 7 நிமிடத்தில் வருவதாகக் காட்டிய ஓட்டோ மூன்று நிமிடத்தில் தானாகவே கான்சல் ஆகிது. திரும்ப ஒன்று போட அதுவும் அப்படி இப்படி என்று எழு நிமிடத்தில் கான்சல் ஆக எனக்குக் கடுப்பு ஏற்பட, ரோட்டில் போய்நின்று பிடிப்போம் என்று ரோட்டுக்குச் சென்றால் அங்கு வந்த ஓட்டோ ஐநூறு கேட்கிறது. மனிசன் கூட என்று சொல்ல எவ்ளோ தருவீங்க என்று கேட்க மனிசன் இருநூறு என்கிறார். வேறு ஓட்டோ பாருங்க என்று கூறிவிட்டு அவன் கிளம்ப, வாற இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன். அடுத்த ஓட்டோவில் நானூறு சொல்ல மனிசன் கதைக்க முதலே நான் ஏறி அமர்கிறேன். உனக்கு எதிலும் அவசரம் என்று மனிசன் புறுபுறுக்க இது எங்கட ஊர் இல்லை. எங்களுக்கு அலுவல்தான் முக்கியம் என்கிறேன். சனி தொடரும்1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
சோவியத்யுனியன், கிழக்கு யேர்மனியின் நாச வேலை நோக்கங்கள் விளங்கி கொள்ள முடிந்தது. இப்படி ஐரோப்பா வுக்குள் சென்ற சிலர் மூலம் அறிந்திருக்கிறேன் தாங்கள் அகதி முகாமில் இருந்த போது அங்கே வந்த தமிழ் சித்தாந்தவாதிகள் சிலர் நீங்கள் இந்த நல்ல நாட்டை அடவதற்கு காரணமானவர்கள் ரஷ்யா ரஷ்யாவின் விமானம், இதை மறக்காமல் நீங்கள் ரஷ்யாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார்களாம்😂1 point- இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
சரியான ஆளிடம் தான் கேள்வி கேட்டுள்ளீர்கள் அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சி தொடங்கி அதிகாரம் அற்ற சீமான் கட்சிகள் வரை இலங்கை கடலுக்குள் சென்று தமிழ்நாட்டு மீனவர்களால் நடத்தபடும் கடற்கொள்ளையை தமது அரசியல் நலனுக்காக ஆதரிப்பவர்களாக தான் உள்ளனர். நான் முதலமைச்சரானால் இலங்கைக்கு களவு எடுக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்பி வைப்பேன் என்று சொன்னவர் தான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். தமிழ்நாட்டு மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மது குடித்து குடித்தே இறப்போம் என்று நினைத்து விட்டனரோ ☹️1 point- கனடாவில் கார் களவு.
1 pointCar thefts have escalated to “national crisis” levels, according to the Insurance Bureau of Canada, an industry group, which said insurers paid out a record 1.2 billion Canadian dollars, or about $890 million, in theft claims in 2022. For victims, it's a dizzying, and sometimes traumatizing, experience.Feb 25, 2024 https://www.nytimes.com/2024/02/24/world/canada/toronto-car-theft-epidemic.html#:~:text=Car thefts have escalated to,in theft claims in 2022.&text=For victims%2C it's a dizzying%2C and sometimes traumatizing%2C experience. ஆபிரிக்காவில் கனேடிய /வட அமெரிக்க வாகனங்கள். 😉1 point- சிறந்த நடுவர்
1 pointஅன்று ஊரில் நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகள் பல இறுதிக் கட்டத்தில் கைகலப்பில் முடியும். ஓரிரண்டு நடுவர்கள் தான் ஊரில் இருந்தனர். ஒவ்வொரு தடவையும் கெஞ்சிக் கூத்தாடி அவர்களை போட்டிகளுக்கு கூட்டிக் கொண்டு வருவது. வந்த பின் அவர்களுக்கு என்ன நடக்கும் என்றால்.......... சிறந்த நடுவர் --------------------- கறுப்பு சட்டை கறுப்பு காற்சட்டை கறுப்பு காலணி கறுப்பு மணிக்கூடு அணிந்து நடுவில் நின்றார் நடுவர் வரப்போவதை அறியாத மணவறை மாப்பிள்ளை போல அந்தப்பக்கம் அவர்கள் இந்தப்பக்கம் இவர்கள் அந்த அணி சண்டியர்கள் இந்த அணி சவலைகள் சவலைகள் சந்தியில் முதல் நாள் ஏடாகூடமாக ஏதோ சொல்ல சண்டியர் அதைக் கேட்டு நாளை உடைத்து அனுப்புகிறோம் அவர்கள் உயிர் மட்டும் விடுவோம் இது சத்தியம் என்றார்கள் இன்று முடிக்கப் போகின்றார்கள் சபதத்தை சத்தியமா நடுவருக்கு எந்தச் சங்கதியும் தெரியாது விசிலடித்ததும் விரைந்தது பந்து வந்த பந்தை விட்டிட்டு பந்தோடு வந்தவனின் காலில் ஒரே போடு விழுந்தவன் வலியோடு நடுவே பார்த்தான் நடுவர் வெளியே பார்த்தார் முதல் பந்திலேயே முழுவதும் தெரிந்துவிட்டது நடுவருக்கு முந்தியும் பல தடவைகள் இந்த நடுவர் பின்பக்கம் இருக்கும் கோவிலடியால் ஓடியிருக்கிறார் கறுப்புச் சட்டையுடன் படார் படார் படார் விழுந்து எழும்பி ஓடி விழுந்தனர் சந்தியில் வாய்விட்டவர்கள் ஓடினால் அடி ஒதுங்கினாலும் அடி விசிலை விழுங்கி விட்டார் மெத்தப் படித்த நடுவர் சண்டியர்கள் ஆளடிக்க சவலைகள் பந்தடிக்க பத்து நிமிடம் இன்னும் இருக்க சவலைகள் ஒன்று சண்டியர் பூஜ்யம் சண்டியர்கள் கூடிப்பிரிந்தனர் கிளைமாக்ஸ் ரெடி இப்ப பார்த்து இரண்டு பேர்கள் முட்டுப்பட இதுவரை அடிக்காத விசிலை மறந்து அடித்தார் சிறந்த நடுவர் பொறி பறக்க நாலு சண்டியர்கள் பாய்ந்தனர் நடுவரைச் சுற்றி நடுவர் நாக்குக் குளறி திக்கித் திணற படார் என்று ஒரே அடி இந்த முறை நடுவருக்கு தலையில் அடியோடு கோவிலுக்கு ஓடி கடற்கரைக்கு ஓடி கரையால் ஓடி அன்றும் தப்பினார் சிறந்த நடுவர் உயிரோடு.1 point- நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள்
கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துதல் கிராமப்புறங்களில், நீர்பிடி முகடு அமைப்பின் கீழ் மழைநீர் அறுவடை செய்யப்படுகிறது. நீர்பரவும் பரப்பு அதிகம் இருப்பதால், பெய்யும் மழையை நிலத்தின் மேற்பரப்பில் ஊடுருவச் செய்து, சேமிக்கும் வழிமுறையே கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், சேமிக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். ஓடைகள், ஆறுகள், நிலச்சரிவுகள் போன்றவை மூலம் இழக்கப்படும் வழிந்தோடும் நீரை சேமிக்க கீழ்கண்ட நுட்பங்களை கடைப்பிடிக்கலாம். கல்லி ப்ளக் உள்ளூரில் கிடைக்கும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள், நீரோட்டம் போன்ற இடங்களில் கட்டப்படுகிறது. மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பிற்கு இந்த கல்லி ப்ளக் உதவுகிறது. நீரோட்டத்தில் ஏற்படும் இயற்கையான தடுப்பு பகுதிகளைத் தேர்வு செய்து, கல்லி ப்ளக் கட்டலாம். இதன் மூலம் தடுப்பணைகளில் அதிகளவு நீர் சேமிக்கப்படும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள், நீரோட்டம் போன்ற இடங்களில் கட்டப்படுகிறது. மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பிற்கு இந்த கல்லி ப்ளக் உதவுகிறது. நீரோட்டத்தில் ஏற்படும் இயற்கையான தடுப்பு பகுதிகளைத் தேர்வு செய்து, கல்லி ப்ளக் கட்டலாம். இதன் மூலம் தடுப்பணைகளில் அதிகளவு நீர் சேமிக்கப்படும். கான்டூர் வரப்பு நீர்பிடி முகடு பகுதிகளில், மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க இவை உதவுகிறது. குறைவான மழை பெய்யும் இடங்களில் இது உகந்த முறையாகும். இம்முறையில், சரிவுக்கு குறுக்கே, ஒரே உயரமுள்ள இடங்களை இணைத்து வரப்பு அமைத்து மழை நீர் சேமிக்கப்படுகிறது. சரியான இடைவெளியில் வரப்புகள் கட்டப்படுவதால், வேகமாக ஓடி மண்அரிப்பு ஏற்படுத்தும் நீரை, இந்த வரப்புகள் தடுக்கிறது. இரண்டு வரப்புகளுக்கு இடையேயான இடைவெளி, பரப்பு, சாய்வு, மண்ணின் நீர் இழுக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்து அமையும். மண்ணின் நீர் இழுக்கும் திறன் குறைவாக இருந்தால், இடைவெளி குறைவாக இருக்கும். சாதாரணமாக சரிவு காணப்படும் நிலங்களில் இவ்வரப்புகள் ஏற்றதாகும். கேபியன் கட்டுமானம் சிறிய நீரோடைகளில் கரைக்குள் ஓடும் நீரை பாதுகாக்க இந்தக் கட்டுமானம் உதவுகிறது. நீரோடைகளின் குறுக்கே இரு கரைகளுக்கிடையே, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கம்பி வலைகளுக்கிடையே போட்டு, அமைப்பது தான் கேபியன் கட்டுமானம். கேபியன் கட்டுமானத்தின் உயரம் 0.5 மீட்டர் அளவாகும். நீரோடைக்கு குறுக்கே கட்டப்படும் இந்தக் கட்டுமானத்தின் அகலம் குறைந்தது 10 மீட்டருக்கு உட்பட்டது. கட்டுமானத்தினால் ஓரளவிற்கு நீர் சேமிக்கப்படும், மீதி இருக்கும் தண்ணீர் கட்டுமானத்தின் மேல் வழிந்தோடுகிறது. சேமிக்கப்படும் நீர் நீலத்தடி நீர்வளம் பெருக்க உதவும். காலப்போக்கில் நீரோட்டத்தால், கட்டுமானப் பொருட்களிடையே மண் தேங்க தொடங்கும். இந்த மண்ணின் மேல் செடிகள் வளரும்போது தடுப்பணை, கடினமான கட்டுமானமாக உருவாகிறது. இது, மேற்பரப்பில் வழிந்தோடும் நீரைத்தடுக்கிறது. பெய்யும் மழைநீரும் சேமிக்கப்படுகிறது. உறுஞ்சு குளங்கள் இது நாம் உருவாக்கும் ஒருவகை நீர்சேமிப்புக் கட்டுமானமாகும். நீர் அதிகம் இழுக்கும் நிலத்தை உள்ளடக்கி இந்த அமைப்பு கட்டப்படுகிறது. இதன் மூலம், நீர் ஊடுருவிச் சென்று, நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தும். நிலத்தடி ஊற்றுகளுடன் தொடர்புடைய உடையும் அல்லது உடைந்த பாறைகளாலான இரண்டாவது அல்லது மூன்றாவது வகை நீரோடையில் இந்த அமைப்பு கட்டப்படுகின்றது. இவ்வமைப்புகள் அமைந்துள்ள பகுதியின் கீழ் தட்டுகளில், கிணறுகளும், பாசனம் தேவைப்படும் நிலங்களும் இருந்தால்தான், சேமிக்கப்படும் நீரை முறையாக பயன்படுத்தலாம். உறுஞ்சு குளங்களின் அளவு, குளங்களின் அடிப்பாகத்தின் ஊடுருவும் திறன் பொறுத்தது. பொதுவாக 3 முதல் 4 மீட்டர் வரை குளத்துநீர் சேமிக்கும் அளவிற்கு தொட்டி அமைக்கப்பட வேண்டும். மண் கொண்டுதான் இக்குளங்கள் கட்டப்படுகின்றன. வழிந்தோடும் பகுதி மட்டுமே சிமெண்ட் கட்டுமானம் உடையதாக இருக்கும். இக்கட்டுமானத்தின் நோக்கமே நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துவதுதான். கட்டுமானத்தின் அடிப்பகுதி அதாவது தரைப்பகுதி வழியாக நீர் ஊடுருவும் வகையில் அமைக்கப்படுகிறது. 4.5 மீட்டர் உயரமுள்ள குளங்களில், வழிந்தோடும் நீருக்கான கால்வாய்கள் தேவையில்லை. நிலத்தின் தரைப் பகுதிக்கும், குளத்தின் அடிப்பகுதிக்கும் இடையே சேர்ப்பு பகுதி மட்டும் தேவை. தடுப்பணைகள் / சிமெண்ட் ப்ளக் / நளா அணை லேசான சரிவுள்ள சிறிய நீரோடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. தடுப்பணை கட்டப்படும் பகுதியில் சேமிக்கப்படும் நீர் இறங்கும் வண்ணம் மண்கண்டம் இருத்தல் வேண்டும். அப்போது தான், சேமித்த நீர் குறுகிய காலத்தில் நிலத்திற்குள் இறங்கும். இந்த அமைப்புகளில் சேமிக்கப்படும் நீர் நீரோடையின் நீர்மட்டத்திற்கு மட்டுமே போதுமானது. பொதுவாக, இதன் உயரம் 2 மீட்டருக்குட்பட்டது. இதற்கு மேல் வரும் நீர் வழிந்தோட அனுமதிக்கப்படும். வழிந்தோடும் நீர் நின்று செல்ல கீழ்ப்பகுதியில் வசதி செய்யவேண்டும். நீரோடையில் வேகத்தைக் கட்டுபடுத்த, வரிசையாக தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் சேமிக்கப்பட்டு நீர் நிறுத்தப்படுகிறது. சிறிய நீரோடைகளை தடுத்து நிறுத்த, சிமெண்ட் பைகளில் களிமண் அடைக்கப்பட்டு, தடுப்புச்சுவர்போல் வைக்கப் படுவதும் நல்ல பயனை அளித்துள்ளது. சில இடங்களில், மேலான கால்வாய்கள் தோண்டப்பட்டு, இருபுறமும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகள் வைக்கப்படும் போது நீர் சேமிப்பு ஏற்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகளின் இடையே களிமண் நிறைக்கப்படுகிறது. இது செலவு குறைவான ஒரு தடுப்பணைகட்டும் முறை. மேற்பகுதியில் களிமண் அடைக்கப்பட்ட சிமெண்ட் பைகளை அடுக்கும்போது தடுப்பணைக்கு எவ்வித பாதிப்புமில்லாமல் பாதுகாப்பு ஏற்படுகிறது. ரீசார்ஜ் ஷாப்ட் இது ஒரு செலவு குறைந்த, ஆனால் திறன் வாய்ந்த, முறை. மண்ணின் உரிஞ்சும் தன்மை குறைவாக காணப்படும் போது, இம்முறை நீரை சேமிக்கும் ஒரு வழிமுறை. மண் உள்வாங்காத பகுதிகளில், இந்த அமைப்பினை ஆட்கள் கொண்டு வெட்டலாம். இந்த அமைப்பின் விட்டம் 2 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். நிலத்தின் அடிபகுதியில், நீர் ஊடுருவா பகுதியை கடந்து நீர் உடுருவும் பகுதி வரை இந்த அமைப்பு செல்ல வேண்டும். இருந்த போதிலும் கீழுள்ள நீர்மட்டத்தை தொடாமல் காணப்படலாம். இந்த அமைப்பின் ஒரங்கள் ஜல்லி, கற்கள், மணல்கொண்டு நல்லமுறையில் அடுக்கப்பட்டு பாதிப்பில்லாதவாறு பராமரிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீர், சிறிய குழாய் மூலம் வடிகட்டும் பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது. கிராமங்களிலுள்ள சில குளங்கள் மழைகாலங்களில் நிரம்பி காணப்படும். ஆனால், குளத்தின் அடியில் வண்டல் படிந்து, நீர் பூமிக்கடியில் புகுந்து செல்லாதபடிக்கு தடை செய்யும். இதனால், குளத்தின் அருகில் காணப்படும் கிணறுகள் கூட நீரின்றி காணப்படும். குளத்தின் நீர் ஆவியாகி உபயோகமில்லாமல் போய்விடும். மேற்கூறிய சூழலில், ரீசார்ஜ் ஷாப்ட் அமைப்புகளை ஏற்படுத்தி, குளங்களில் அதிகப்படியான நீரை நிலத்தடி நீர் மேம்பாடிற்கு பயன்படுத்தலாம். ரீசார்ஜ் அமைப்புகளின் விட்டம் 0.5 லிருந்து 3 மீட்டர் வரையும், ஆழம் 10-15 மீட்டர் ஆகவும், குளத்தின் நீரளவு பொருத்து அமைக்கலாம். ஷாப்டின் மேற்பகுதி குளத்தின் தரைப்பகுதிக்குமேல் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. குளத்தின் பாதி அளவு நீர்மட்டத்தின் மேல் ஷாப்டின் மேற்பகுதி இருத்தல் நலமாகும். ஷாப்ட்டின் வலுவுக்காக, அதனை சுற்றி ஜல்லி, கல், மணல் ஆகியவற்றை சுற்றி இடலாம். வலுவிற்காக, ஷாப்ட்டின் மேற்பகுதியின் 1 அல்லது 2 மீட்டர் ஆழம் வரை, செங்கல், சிமென்ட் கொண்டு சுற்றமைப்பு கட்டப்படுகிறது. இந்த நுட்பத்தின் மூலம் சேமிக்கப்படும் நீரில் 50 சதம் நிலத்தடிக்கு செல்கிறது. நிலத்தடி நீர்வளம் இதன் மூலம் அதிகரிக்கிறது. மீதி இருக்கும் நீர் குளத்திலேயே இருப்பதால் நமது அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். வெட்டிய கிணறுகளில் ரீசார்ஜ் ஏற்கனவே உள்ள மற்றும் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட கிணறுகளை சுத்தம் செய்து நீரை சேமிக்கலாம். சேமிக்கப்படும் நீர் குழாய் மூலம் கிணறின் அடிப்பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது. சேமிக்கப்படும் தண்ணீர் மண் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். வழிந்தோடும் நீரும் வடிகட்டும் கட்டுமானம் வழியாக செல்லும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்வப்போது தொடர்ந்து க்ளோரினை தண்ணீரில் கலப்பதால், நுண்ணுயிர்களால் மாசுபடும் பிரச்சனை இருக்காது. நிலத்தடி நீர் அணைகள் நிலத்தடி நீர் அணை என்பது பூமிக்கடியில் ஓடையின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் ஓடையின் அடிமட்ட நீரோட்டம் தடுக்கப்பட்டு, நீரானது பூமிக்குள் உரிஞ்சப்பட வழி செய்யப்படுகிறது. இதனால் நிலத்தடியில் நீர் சேமிக்கப்பட்டு சரிவின் மேட்டுப்பகுதிகளில் நீர்வளம் அதிகப்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீர் அணை கட்டப்படும் பகுதியானது, நீர் ஊடுருவா வண்ணம் கடினமாய் காணப்படும் மண்கண்டம் குறைவாக இருத்தல் வேண்டும். சுற்றிலும் பெரிய நிலப்பரப்பு கொண்டுள்ளதாகவும், நீர் வெளிச்செல்லும் அமைப்பு சிறியதாகவும் இருக்கவேண்டும் தகுந்த இடத்தை தேர்வு செய்த பிறகு, 1-2 மீட்டர் ஓடையின் குறுக்கே நீர் ஊடுருவா மட்டம் வரை அகலமுள்ள குழியை எடுக்க வேண்டும். இக்குழியில், நிலமட்டத்திலிருந்து 0.5 மீட்டர் கீழ் வரை, களிமண், செங்கள் மற்றும் கான்கிரீட் சுவர் எடுக்க வேண்டும். நீர் முழுமையாக உட்புகுந்து செல்ல 400 - 600 காஜ் PVC சீட்டுகள் அல்லது 200 காஜ் பாலித்தீன் ஷீட்டுகளால், வெட்டிய நிலத்தடி நீர்த்தடுப்பணைகளின் முகப்பை மூடிவிடலாம். தண்ணீர் பூமியின் நீர் மட்டத்திற்குள்ளேயே சேமிக்கப்படுவதால், நிலப்பரப்பு நீரினால் மூழ்கடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால், மேற்பரப்பு நாம் எப்போதும்போல் பயன்படுத்தமுடியும். தடுப்பணையில் சேமிக்கப்படும் நீர் ஆவியாவதில்லை. மண்ணும் அதிகளவில் தடுப்பணையில் சேர்வதில்லை. பெரியளவில் இயற்கை இடர்பாடுகளினால், தடுப்பணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. நகர்புறங்களில் நிலத்தடிநீர் சேமிப்பு நகர்புறங்களில், கூரைவழியாக வரும், கட்டிடங்களில் விழும் மழை நீர் சேமிக்கப்படாமல், வீணாகிறது. இந்த நீர் பூமியின் நீர் மட்டத்தில் சேமிக்கப்படலாம். தேவை ஏற்படும்பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மழை நீர் அறுவடைக்கு அதிக பரப்பு இடம் தேவைப்படாது. நிலத்தில் முழுமையாக மழை நீர் சேமிக்க இயலும். கூரையிலிருந்து விழும் மழை நீரை சேமிக்க, ஒரு சில தொழில் நுட்பங்கள் உள்ளன. i. ரீசார்ஜ் குழி நீர் ஊடுருவும் பாறைகள் நிலமட்டத்தில் காணப்படும் பகுதிகளில், மழைநீர் சேமிப்பு இம்முறையில் செய்யப்படுகிறது. இம்முறை 100 ச.மீட்டர் கூரை பரப்புள்ள கட்டிடங்களில் விழும் மழை நீரை சேமிக்கவும் உதவுகிறது. மேலான பூமி நீர் மட்டம் உள்ள இடங்களில் நீர் சேமிப்பிற்கு ரீசார்ஜ் குழிகள் கட்டப்படுகிறது. இந்தக் குழிகளின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சாதாரணமாக, 1-2 மீட்டர் அகலம், 2-3 மீட்டர் ஆழமுள்ளதாக அமைக்கப்படும். இந்த குழிகளில் பெரிய கற்கள் (5-20 செ.மீ), ஜல்லிகள் (5-10 மி.மீ.) மற்றும் மணல் (1.5-2 மி.மீ.) போடப்படுகின்றன. கற்கள் கீழ்பகுதியிலும், அடுத்து ஜல்லிகளும், அதற்கு மேல் மணலும் போடப்படுவதால் மழை நீரோடு சேர்ந்து வரும் வண்டல்மண் மேல்பரப்பில் தங்கிவிடும். அதனை, எளிதாக அகற்றிவிடலாம். சிறிய கூறை பகுதி உள்ள கட்டிடங்களுக்கு குழியில் உடைந்த செங்கற்கள் அல்லது கூழாங்கள் போட்டால் போதுமானது. குழிக்கு கட்டிடத்தின் கூரையில் இருந்து செல்லும் மழை நீர் வடிகட்டி வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை குழிக்கு செல்லாமல் தடுக்கலாம். சிறிய மண்துகள்கள் குழிக்கு செல்லாவண்ணம், தடுப்பு / சேமிப்பு அமைப்பு ஒன்றும் அமைக்கலாம். குழியின் மேலுள்ள மணற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும். முதல் மழை பெய்யும்போது, சேமிப்புக்குழியில் அத்தண்ணீர் விழாதவாறு மாற்று அமைப்பு இருப்பது நல்லது. ii. ரீசார்ஜ் டிரன்ச் இந்த அமைப்பு, 200-300 சதுர மீட்டர் கூரை பரப்புடைய கட்டிடங்களுக்கு ஏற்றதாகும். நீர் ஊடுருவும் மட்டம் மேல்மட்டத்தில் காணப்படும் பகுதிக்கும் இம்முறை ஏற்றதாகும். குழியின் அளவு 0.5 - 1 மீட்டர் அகலம், 1 - 1.5 மீட்டர் ஆழம், மற்றும் 10-20 மீட்டர் நீளம் உடையதாக அமைக்கலாம். சேமிப்பு நீரின் அளவைப் பொறுத்து குழியின் அளவு மாறுபடும். நீர் சேமிப்புக் குழிகளில், பெரிய கற்கள், ஜல்லிகள் மற்றும் மணல் ஆகிய மூன்றும் தட்டுகளாக போடப்பட வேண்டும். கற்கள் அடிப்பகுதியிலும், ஜல்லிகள் அதற்கு மேலும், மணல் மேல்மட்டத்திலும் போடப்படுகின்றன. மழை நீரோடு வரும் வண்டல்மண் மேற்பரப்பில் சேமிக்கப்பட்டு, அவ்வப்போது எடுத்து விடும் வகையில், இம்மூன்று அடுக்குகள் போடப்படுகின்றன. நீர் சேமிப்பு குழிக்கு கட்டிடத்தின் கூரையிலிருந்து வரும் மழைநீர், சல்லடை போன்ற அமைப்பு வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை சேமிப்பு குழிக்கு செல்லாமல் தடுக்கப்படும். சிறிய வண்டல்மண் குழிக்கு செல்லா வண்ணம், மேற்கூறப்பட்ட மூன்று அடுக்கு அமைப்பும் அமைத்துக் கொள்ளலாம். முதல் மழை பெய்யும் போது சேமிப்புக் குழியில் நேரடியாக நீர் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சேமிப்புக் குழியின் மேற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டால், நீர் சேமிப்பு முழுமையாக நடைபெறும். iii. குழாய் கிணறுகள் மேல்மட்ட நிலத்தடிநீர் விரைவில் உளர்ந்து விடுவதால், கீழ்மட்டத்தில் உள்ள நிலத்தடிநீரை உறிஞ்சும் குழாய் கிணறுகளில், மழைநீர் சேமிப்பு முறை பயன்படுத்தி, கீழ்மட்ட நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கலாம். 10 செ.மீ விட்டமுடைய PVC குழாய்கள் மழைநீரை சேமிப்பதற்காக கூரைகளில் இணைக்கப்படவேண்டும். முதல் மழைநீர் குழாய் வழியாக வெளியேற்றப்படும். குழாயின் அடிபாகத்தை மூடிவிட்டு, 'T' வடிவ பைப் மூலம், குழாயின் வழியாக வரும் மழைநீரை PVC வடிகட்டிக்கு திருப்பிவிடவும். குழாய் கிணறுக்கு மழைநீர் சென்றடைவதற்கு முன் வடிகட்டப்படுகிறது. வடிகட்டியானது 1-1.2 மீட்டர் நீளமுடைய, PVC குழாய் கொண்டு செய்யப்படுகிறது. அதன் விட்டமானது, மேற்கூரையின் பரப்பை பொறுத்து மாறும். கூரை பரப்பு 150 சதுர மீட்டருக்கு குறைவாக இருந்தால், விட்டம் 15 செ.மீட்டர் ஆகவும், 150 சதுர மீட்டருக்கு மேல் கூரைப்பரப்பு இருந்தால் 20 செ.மீ விட்டமுடைய வடிகட்டியை பயன்படுத்த வேண்டும். வடிகட்டியின் இரண்டு பக்கங்களும் 6.25 செ.மீ அளவு சிறிய குழாய் காணப்பட வேண்டும். PVC வடிகட்டி மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது. இதனால் கழிவுகள் எதுவும் ஒன்றோடொன்று கலக்காமல் இருக்கும். வடிகட்டியின் முதல் பகுதியில் ஜல்லிக் கற்கள் (6-10 மில்லி மீட்டர்) நடுப்பகுதியில் கூழாங்கற்கள் (12-20 மில்லி மீட்டர்) மற்றும் கடைசி பகுதியில் பெரிய கூழாங்கற்கள் (20-40 மில்லி மீட்டர்) போடப்பட்டிருக்கும் கூரை பரப்பு பெரியதாக இருக்கும் பட்சத்தில், வடிகட்டும் குழி ஒன்று போடலாம். கூரையிலிருந்து மழைநீர் நேரடியாக தரைமட்டத்தில் உள்ள சேமிப்பு குழிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சேமிப்பு குழி குழாய் மூலம் வடிகட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். வடிகட்டும் குழியின் அளவு கூரையிலிருந்து கிடைக்கும் மழைநீரின் அளவைப் பொறுத்து மாறுபடும். வடிகட்டும் குழியானது, அடிப்பகுதியில் பெரிய கற்கள், நடுப்பகுதியில் ஜல்லிக்கற்கள் மற்றும் மேற்பகுதியில் மணற்கொண்டும் அடுக்கடுக்காக மூடப்பட்டிருக்கும். குழி இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். முதல் பாகத்தில் வடிகட்டும் பொருட்களும், அடுத்தபகுதி காலியாக, வடிகட்டப்பட்ட உபரி நீர் சேமிக்க பயன்படுகிறது. சேமிப்பு குழியின் கீழ்பகுதியிலிருந்து கிணறோடு இணைக்கும் குழாய் பொறுத்தப்படுகிறது. இதன் மூலம், வடிகட்டப்பட்ட மழைநீரானது குழாய் கிணற்றில் முறையாக சேர்க்கப்படுகிறது. iv. குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு மேல் மண்ணிற்குள் தண்ணீர் ஊடுருவ முடியாத நிலையில், கூரையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் அதிகளவு காணப்படும் பகுதிகளில், குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு பயன்படும். வடிகட்டிய மழைநீரை குழிகளில் சேமித்து, பின்பு, சேமிக்கப்பட்ட நீரானது நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறப்பு நீர் சேமிப்பு கிணறுகள் கட்டப்படுகின்றன. இந்த அமைப்பானது, நீர் ஊடுருவிச் செல்லும் மட்டம், தரைமட்டத்திலிருந்து 3 மீட்டருக்குள்ளாக உள்ள பகுதிக்கு ஏற்றது. சேமிப்பு கிணறு, நிலத்தடி நீர்மட்டத்தின் கீழ் 3-5 மீட்டர் ஆழத்திற்கு எடுக்கப்படுகிறது. 1.5-3 மீட்டர் அகலம், 10-30 மீட்டர் நீளம் உடைய குழி, சேமிப்பு கிணற்றை நடுவாகக் கொண்டு கட்டப்படுகிறது. இது கிடைக்கும் நீரைப் பொருத்து அமைக்கப்படுகிறது. கிடைக்கும் மழை நீரின் அளவு, பகுதியின் பாறைகளின் அமைப்பு போன்றவற்றை பொறுத்து சேமிப்பு குழாய்களின் எண்ணிக்கை அமையும். குழியில், பெரியகற்கள், ஜல்லிகள், மணல் ஆகியவை அடுக்கடுக்காக, மழைநீரை வடிகட்டும் நோக்கோடு போடப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்தில், அதாவது 20 மீட்டருக்கு மேல் அமையுமானால், 2-8 மீட்டர் விட்டமுள்ள, 3-5 மீட்டர் ஆழமுள்ள அமைப்பு கட்டப்படுகிறது. வழிந்தோடும் நீரையும் இதில் கணக்கெடுத்துக் கொள்ளகிறோம். இந்த அமைப்பின் உள்ளே, 100-300 மி.மீட்டர் விட்டமுள்ள ரீசார்ஜ் கிணறு கட்டப்பட்டு, ஆழமான நிலத்தடி நீர் பகுதிகளில், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் அடிப்பகுதியில் ஒரு வடிகட்டும் அமைப்பும் உண்டு. இது சேமிப்புக் கிணற்றை கழிவுகள் மூடிவிடாமல் பாதுகாக்கிறது. https://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/ba8bc0bb0bcd/நிலத்தடி-நீரை-அதிகப்படுத்தும்-முறை-மற்றும்-நுட்பங்கள்1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
அகரமுதல்வன் எழுதிய “சாகாள்” கதை வாசித்தீர்களா? இவர் இப்போது தீவிர சைவர்!1 point- கனடாவில் கார் களவு.
1 pointகனடாவில் கார் திருட்டு அதிகமாக இருக்கலாம், ஆனால் அமெரிக்கா தான் முதலாவதாக, இதிலும், வரும் என்று நினைக்கின்றேன்........😀 ஒரு தடவை நண்பன் ஒருவன் விடிகாலைப் பொழுது ஒன்றில் அவசரமாக கூப்பிட்டிருந்தான். ஓடிப் போய்ப் பார்த்தால், நண்பனின் கார் நான்கு சில்லுகளும் இல்லாமல் மரக்கட்டைகளில் நின்று கொண்டிருந்தது. நான்கு ஹாண்டா சில்லுகளுக்கு களவெடுத்தவர்களுக்கு ஓர்டர் வந்திருக்குது போல, நண்பனின் வீட்டை வந்து இலேசாக கழட்டிக் கொண்டு போயிருக்கினம்......😀 கோவிட் காலத்தில், எங்கும் வைரஸ் எதிலும் வைரஸ் என்ற கலக்கத்தில், பலர் காரை பூட்ட மறந்து விட்டார்கள். நானும் ஒரு நாளோ சில நாட்களோ பூட்டாமல் விட்டு விட்டேன். ஒரு நாள், என்னத்தை உடைக்கிறது, அது தானே திறந்தே இருக்குது, கார் உள்ளுக்கிருந்த சில பொருட்களை அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். ஊரிலிருந்து 800 பாட்டுகள் அடித்துக் கொண்டு வந்த யுஎஸ்பி டிரைவ் ஒன்றும் போய் விட்டது. அது தான் பெரிய கவலை. 800 பாட்டுகளில் எத்தனை பாட்டுகளை அந்தக் 'களவாணிப் பயல்கள்' கேட்டிருப்பார்களோ... அது தான் அவர்களுக்கான தண்டனை.....😀1 point- அம்பானியின் வறுமை
1 point'அம்பானியின் வறுமை' என்னும் தலைப்பில் 'அருஞ்சொல்' இதழில் அதன் ஆசிரியர் சமஸ் இன்று எழுதியிருக்கும் கட்டுரை இது. அம்பானிக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் கூட இது பொருத்தமே. ****************** அம்பானியின் வறுமை சமஸ் 20 Mar 2024 ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு நீங்கள் இழந்ததாக நினைப்பது எதுவும் உண்டா? இப்படி யாராவது கேட்கும்போதெல்லாம் ஒரு விஷயம் தோன்றி மறையும். ஊர்ப் பக்கக் கல்யாணச் சாப்பாடு! எது நாம் வாழும் ஊரோ அதுவே நம் சொந்த ஊர் என்று எண்ணுபவன் நான். தீபாவளி, பொங்கல் என்றால் ஊருக்குச் செல்வது, ஊரில் திருவிழா என்றால் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்புவது, வீட்டில் ஏதும் விசேஷ நிகழ்வு என்றால் அதைப் பிறந்த ஊரில் திட்டமிடுவது… இதையெல்லாம் முற்றிலுமாக வெறுப்பவன். சென்னை நான் பிறந்த ஊரைக் காட்டிலும் எனக்கு எண்ணற்ற சந்தோஷங்களைக் கொடுத்திருக்கிறது. பதிலுக்கு நான் சென்னைக்கு அன்றாடம் செய்ய வேண்டியதும், இந்த ஊரோடு கரைந்துபோவதுமே கைம்மாறு. அப்படி இருக்க ஏன் கல்யாணச் சாப்பாட்டை ஓர் இழப்பாக நான் கருத வேண்டும்? இங்கு எனக்குச் சொந்தங்கள் இல்லையா, நண்பர்கள் இல்லையா அல்லது யாரும் விசேஷங்களுக்கு அழைக்கவில்லையா அல்லது சாப்பாட்டில்தான் ஏதும் குறைச்சலா? குறைச்சல் எல்லாம் இல்லை, அதீதம்தான் சென்னையின் பிரச்சினை. இன்று அநேகமாக தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுமே இப்படி மாறிவருகின்றன என்று சொல்லலாம். ஊர்ப் பக்கத்தில் கல்யாணத்துக்கு முந்தைய நாள் மாலை அல்லது கல்யாணத்தன்று காலை டிபன் மெனு பெரும்பாலும் இப்படி இருக்கும்: அசோகா அல்லது கேசரி, மெதுவடை அல்லது போண்டா, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம் அல்லது பூரி, கூடவே இட்லி, சட்னி, சாம்பார். சாப்பிட்டு முடித்ததும் காபி. மதிய விருந்து: சோறு, சாம்பார், ரசம், வத்தல் குழம்பு அல்லது மோர்க் குழம்பு, ஒரு வறுவல், ஒரு பொரியல், ஒரு கூட்டு, ஒரு பச்சடி, தயிர், கூடவே அப்பளம் – வடை – பாயசம். அவரவர் விரும்புவதை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம்; வேண்டாததை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். கேட்டுப் பரிமாறுவார்கள். ஆஹா! எவ்வளவு எளிமையான மெனு என்று சொல்பவர்கள், நான் கூறியிருப்பதே கொஞ்சம் அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சின்ன வயதில் என் தாத்தாவுடன் வெளியூருக்கு ஒரு விசேஷத்துக்குப் போயிருந்தேன். தாத்தாவின் நண்பர் விருந்தில் பண்டங்களை அதகளப்படுத்தி இருந்தார். எனக்கு அந்த வயதில் அது விசேஷமானதாகப் பட்டது. தாத்தா முகம் சரியில்லை. ஊர் திரும்புகையில் கேட்டேன், “தாத்தாவுக்குச் சாப்பாடு பிடிக்கலையோ?” கவனம் களைந்தவராகச் சொன்னார், “அப்படி இல்லப்பா, எலையில பத்து வகை, பதினைஞ்சு வகையினு உணவை வெக்கிறது ஆடம்பரத்தின் பெயரிலான அநாகரிகம். விருந்தாளிகளுக்கு அன்பை உணவா பறிமாறினா சாப்பிடலாம், அவனவன் அகங்காரத்தை ஏன் பரிமாறணும்? விசேஷங்கிறது பல தரப்பு ஆளுங்களும் வர்றது; யாரையும் நம்ம வசதியால சிறுமைப்படுத்திடக் கூடாது!” வயது மெல்ல நகர்ந்தபோது தாத்தா சொன்னது புரியலானது. அன்றாட உணவுக்கே அல்லாடுபவர்கள் கோடிக் கணக்கானோர் வாழும் நாட்டில் வசதி படைத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தவற்றைச் செலவிடுவதில் மிக்க பொறுப்புணர்வு வேண்டும். தம்முடைய விருந்தினர்களுக்கு இலையில் ஒருவர் இருபது பதார்த்தங்களை வைக்கிறார் என்றால், அது தன்னகங்காரத்தின் வெளிப்பாடுதான். விருந்தினரின் உணவு விருப்பம், ரசனை, உடல்நிலை என எல்லாமே அங்கு அடிபட்டுவிடுகிறது. விருந்துக்கு அழைத்தவர் எங்கோ தன்னுடைய தாழ்வுணர்வை இதன் மூலம் பூர்த்தியாக்கிக்கொள்ள முற்படுகிறார். சென்னையில் மாதத்துக்குப் பத்துப் பதினைந்து விசேஷங்களுக்கு எனக்கு அழைப்பு வரும். பெருநகர வாழ்வில் வேலை நெருக்கடி காரணமாகக் காலை நிகழ்ச்சிக்குச் செல்வது இன்று பெரும்பாலானோருக்குச் சாத்தியமற்றுவிடுவதால், நெருங்கிய உறவினர்களே அதில் பங்கேற்கிறார்கள்; முந்தைய நாள் அல்லது பிந்தைய நாட்களின் மாலையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளே ஊருக்கானதாக அமைகிறது. ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்கு நானும் அப்படித்தான் செல்கிறேன். எந்த விருந்துப் பந்தியிலும் குறைந்தது இருபது இருபத்தைந்து பண்டங்கள் இருக்கும். இட்லி, தோசை, பூரி, இடியாப்பம், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், வத்தல் குழம்பு சாதம், தயிர் சாதம், பாயசம், ஐஸ்க்ரீம், காபி, பீடா… என்ன எழவுடா இது; யாரெல்லாம் வீட்டில் இப்படி டிபன் சோறு எல்லாவற்றையும் வகைதொகை இல்லாமல் கலந்து கட்டிச் சாப்பிடுகிறார்கள்; ஏன் வருகிற விருந்தினர்களை இப்படி வாட்டி எடுக்கிறார்கள் என்று தோன்றும். எல்லோருமே எல்லாவற்றையும் பெரிய செலவில்லாமல் எளிமையாகத்தான் செய்தாக வேண்டும் என்று இல்லை. விசேஷ வீட்டுக்காரர்கள் வசதிக்கேற்ப செலவிடுவது அவர் சுற்றத்தாருக்கும் நல்லது, நாட்டுப் பொருளாதாரத்துக்கும் நல்லது. பயனுள்ள வகையில் அதைச் செலவிடலாம். லட்ச ரூபாயில் நூறு பேருக்குச் சாப்பாடு போடுவதற்கு பதில், சுற்றத்தார் தவிர ஐந்நூறு பேரை அழைத்து அன்னதானம் செய்யலாமே! வசதி இருக்கிறதோ, இல்லையோ; கடன் வாங்கியேனும் பெருஞ்செலவு செய் என்பது இன்று இந்தியாவில் ஒரு மோசமான பண்பாடாக வளர்ந்துவருகிறது. அதிலும் விருந்துகளுக்காக இந்தியர்கள் செலவிடுவதும், உயர் செலவில் இப்படித் தயாரிக்கப்படும் உணவில் கணிசமான பகுதி வீணடிக்கப்படுவதும் பாவக் கேடு. பல்லாயிரம் கோடிகள் ஒவ்வோர் ஆண்டும் இப்படி பாழாகின்றன. காந்தியைப் பிற்காலகத்தில் ஆழ ஊன்றி வாசித்தபோது வேறொரு விஷயம் பிடிபட்டது. தன்னுடைய ஆகிருதியை வெளிக்காட்டிக்கொள்ள உணவு, உடை, வாகனம் என்று ஒவ்வோர் அம்சத்திலும் தேவையைத் தாண்டி செலவிடுவோர் அகங்காரத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அவர்களிடம் உள்ள மோசமான வறுமையையும் வெளிக்காட்டுகின்றனர். காந்தியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அது ‘ஆன்ம வறுமை’. ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் முதல்நிலைச் செல்வந்தருமான ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியினுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண தடபுடல்களைக் கண்டபோது திகைப்பு ஏற்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் தொடங்கி இந்தியாவின் முக்கியமான நட்சத்திரங்கள் அவ்வளவு பேரையும் அள்ளிக்கொண்டுவந்து நடத்தப்பட்ட இந்த மூன்று நாள் திருவிழாவில் மணமக்கள் நடனம் ஆடுகையில் துணை நடிகர்கள் போன்று பாலிவுட் பாட்ஷாக்கள் ஷாரூக்கானும், சல்மான் கானும் உடன் ஆடவைக்கப்பட்டது ஒன்று போதாதா இந்நிகழ்வின் பின்னுள்ள மனநிலையை நாம் புரிந்துகொள்ள? இதற்கெல்லாம் செலவு ரூ.1250 கோடி செலவு என்கிறார்கள். மூன்று நாட்களில் பறிமாறப்பட்ட உணவு வகைகளின் எண்ணிக்கை மட்டும் 2,500 என்கிறார்கள். எப்பேர்ப்பட்ட ஆடம்பரம் என்று சிலர் பிரமிக்கலாம்; எவ்வளவு அருவருப்பு என்று சிலர் முகம் சுளிக்கலாம். எனக்கு அம்பானியைப் பார்க்க பாவமாகவும் பரிதாபமுமாகத்தான் இருந்தது. சுற்றிலும் எவ்வளவு செல்வம் குவிந்திருந்தாலும் சில மனிதர்களிடம் எவ்வளவு பெரிய வறுமை! மனிதர்களின் ஆன்ம வறுமையைச் செல்வத்தைக் கொண்டு போக்கிவிட முடிவதில்லை! https://www.arunchol.com/samas-article-on-anant-ambani-radhika-merchant-marriage1 point- வல்வை மண்ணில் பிரித்
1 pointஅதுவே....👍 இராணுவ முகாமுக்குள் அல்லது போலீஸ் நிலையத்திற்குள் அவர்கள் எதையும் செய்து கொள்ளலாமே தவிர, வல்வையில் வேறு எங்கும் முடியாது.1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நான் குறிப்பிட்டது கிழக்கு ஜேர்மனியில் இருந்த ஜேர்மன் மக்களை மேற்கு நோக்கிப் போக அனுமதிக்கவில்லை என்று, ஜேர்மனியர் அல்லாத வெளிநாட்டு அகதிகளை அல்ல. வெளிநாட்டு அகதிகளை மொஸ்கோ வரை (இன்றும்) ரஷ்யாவின் விமான சேவையாக விளங்கும் Aeroflot தான் ஆசியாவில் இருந்து ஏற்றி வரும். அங்கிருந்து தான் கிழக்கு ஐரோப்பா செல்வார்கள், கிழக்கில் இருந்து இவர்களை தாராளமாக செல்ல அனுமதிப்பார்கள். தம் பிரஜைகளுக்கே தொழில் இல்லாத போது, அகதிகளை எப்படி கிழக்கு ஜேர்மனி வைத்துப் பார்க்கும்😂?1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
இல்லை நான் 84 ஆம் ஆண்டு இந்த வழியில் தான் வந்தேன் கிழக்கில் உடனும். 3 நாள் விசா தருவார்கள் ஆனால் கிழக்கில் இருக்கப்பாடாது ...உடனுக்குடன் மேற்குக்கு போக வேண்டும் ..இதற்கு கிழக்கு பொலிஸார் கூட உதவியாக இருப்பார்கள் கிழக்கில் வாழ்ந்தால் தான் பிரச்சனை இந்த அகதிகளால் கிழக்குக்கு வருமானம் அதாவது விசவுக்கு பணம் அறவிடுவார்கள் ...இந்த அகதிகளை சோவியத் விமானங்கள் தான் ஏற்றிக்கொண்டு வரும் அதிலும் வருமானம் ஆனால் மேற்குக்கு இது விருப்பம் இல்லை அவர்கள் சிறந்த நாய்களை. பயன்படுத்தினார்கள் கட்டுபடுத்த முடியவில்லை காரணம் சோவியத்யூனியன். விமானங்கள் அதனுடைய கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆட்சி இரண்டுமே அகதிகளுக்கு ஆதரவுடன் இருந்தன இது மேற்கு ஜேர்மனியை பழிவாங்கும் ஒரு நடவடிக்கைகள் அதேநேரம் வருமானம் ஈட்டினார்கள் கிழக்கு அகதிகளை தடை செய்திருக்குமானால். நான் உட்பட பெரும்பாலோர் வெளிநாடு வந்திருக்க முடியாது குறிப்பு,..இது உண்மை சம்பவம்,..உங்களை எதிர்க்கவேண்டும் என்று கருத்துகள் எழுதவில்லை1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஆண்டவனையும் கேட்க வேண்டும்
1 pointஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும். ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்…இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள். ஆண்டவர்களில் மூன்றுபேர், படைத்தல், காத்தல், அழித்தல் என்று தங்களுக்கான பொறுப்புகளை தங்களுக்குள்ளேயே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். இதில் படைப்பவன், படைத்தலுடன் தன் வேலையை நிறுத்திக் கொண்டான். காத்தல், அழித்தல் செய்பவர்கள் கொஞ்சம் குளப்படி. தேவையில்லாத விடயங்களையும் செய்யக் கூடியவர்கள். அப்படிச் செய்யும் தில்லு முல்லுகள் எல்லாம் ஆண்டவனின் ‘திருவிளையாடல்கள்’ என்ற பதத்துக்குள் அடங்கிவிடும். அழித்தல் வேலை செய்த ஆண்டவனின் மாமனார் (பெண் கொடுத்தவர்), ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்துக்கு மருமகனை அழைக்கவில்லை. அது மருமகனுக்குப் பொறுக்கவில்லை. கோவம் தலைக்கேறி ஒரு தாண்டவமும் ஆடி, தனது வேலையாளான வீரபத்திரனை அனுப்பி, யாகத்தை அழித்து மாமனாரையும் கொலை செய்வித்தான் . இந்தக் கொலையை செய்ய ஆளை அனுப்பியவன் ஆண்டவன் என்பதால் ‘வதம்’ செய்வித்தான் என்று குறிப்பிட்டால்தான் சரியாக இருக்கும். அடுத்து காத்தல் செய்பவன். இவன் அழித்தல் செய்பவனை விட ஓவரான குழப்படிக்காரன். தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை கொடுக்கும் தீராத விளையாட்டுக்காரன். பெண்களை மயக்கும் மாயவன். பெரும் தந்திரசாலி. ஒரு தடவை நரகன் என்ற அரசனுடன் (பின்னாளில் நரகாசுரன்) பிரச்சனையாகிப் போனது. நரகன் பலசாலி. அவனுடன் மோதினால் காத்தல் வேலை செய்யும் தான் கந்தல் ஆகிவிடுவேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான். நரகன் நல்லவன், அறிஞன், வீரன் என்பதெலாம் காத்தல் ஆண்டவனுக்குத் தேவைப்படாத விடயங்கள். தந்திரத்தால் நரகனை அழிக்கத் திட்டம் போட்டான். ‘நரகன் ஆண்களுடனையே போர் செய்வான். எக்காலத்திலும் பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டான்’ என்ற தகவல் அவனுக்குக் கிடைத்தது. நரகனை போருக்கு அழைத்துத் தன் மனைவி சுபத்திரையிடம் ஆயுதம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தான். நரகன், பெண்களை மதிப்பவன். கொண்ட கொள்கையில் நிலையாய் நிற்பவன். போர்க்களத்தில் தன்னுடன் மோத வந்திருப்பது ஒரு பெண் என்பதால், தன் ஆயுதங்களை எடுக்காமல் அமைதியாக நின்றான். கணவன் சொல் கேட்டு சுபத்திரை அம்பு விட்டாள். நரகன் செத்துப் போனான். “நரகன் அழிந்துவிட்டான். இந்நாளை இனி வரும் காலங்களில் நன்னாளாகக் கொண்டாடுங்கள்” என்று மக்களுக்கு ஆணையிட்டான். காத்தல் வேலை செய்தாலும், தன்னுடைய மச்சான் செய்யும் அழித்தல் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது போலே, இரணியனை கொலை (வதம்) செய்தான். பரசுராமன் என்று மாற்றுப் பெயரில் போய் தன் தாயையே கொன்றான். கெளரவர்களில் ஒருத்தனை மட்டும் விட்டு விட்டு எல்லோரையும் அழித்தான்.. என்று அவனின் காத்தல் வேலை அழித்தலாகத் தொடர்ந்தது. இதை எல்லாம் கேள்விப் பட்ட எங்களை ஆண்ட கந்தனுக்கும் கை துருதுருக்க அவனும் சூர பத்மனை கொலை (வதம்) செய்து, ஆண்டாண்டு காலமாக அதை நினைவு கூரவும் செய்திருக்கிறான். இப்படிப் போகிறது எங்களை ஆண்டவர்கள் கதை. அமைதி தேடி ஆண்டவர்களின் இருப்பிடத்துக்குப் போனால், ஆண்டவர்கள் எல்லாம் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறார்கள். கால்களில் யார் யாரையோ போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னிகளை ஒன்றுக்கு இரண்டாக அணைத்து வைத்துக் கொண்டு காட்சி தருகிறார்கள். ஆனாலும் நாங்கள் அங்கே போய்த்தான் அமைதியைத் தேடிக் கொள்கிறோம். ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம்.1 point- ஆண்டவனையும் கேட்க வேண்டும்
1 pointஆண்டவன் என்ற பெயரில் மக்களை ஆண்டவர்கள்தான் கொலைகளைச் செய்தார்கள். அவர்களை அவதார புருஷர்கள் என்று சூதர்களும் பாணர்களும் பாடிப்பாடியே ஆண்டவர்களாக ஆக்கினர். அழிவு இல்லாமல் ஆக்கம் இல்லை என்பதால் அழிவுகளும், பேரழிவுகளும் இந்தப் பூமியில் தொடரும். எல்லோரையும் இறுதியில் உண்ணும் புழுவும், அனலும் எப்போதும் விடாய்கொண்டே இருக்கின்றன!1 point- பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.1 point- பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி
பாடசாலை கல்வியில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்வி அமைச்சு - மைக்ரோசொப்ட் நிறுவனம் கைச்சாத்து Published By: VISHNU 19 MAR, 2024 | 11:57 PM தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கைசாத்திடப்பட்டது. 20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டது. அதன்படி கல்விச் செயற்பாடுகளை தொழில்நுட்ப முறையில் முன்னெடுப்பதற்கான உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழுவொன்று வழங்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம், மைக்ரோசொப்ட் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவர் புனித் சந்தோக் (Mr. Puneet chandok),புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கும் ஆதரவிற்கும் வழிகாட்டலுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த வேலைத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டினார். இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், இலங்கை மக்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்றும் அதனால்,அனைவரும் முழுமையான பயனடைய வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார். மேலும், இலங்கை மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்கு சுயாதீன குழுக்களின் ஆதரவை பெற்றுத்தருவதாகவும் அவர் தெரிவித்தார். தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தர்மசிறி குமாரதுங்க மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு, கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, முஸ்லிம் பெண்கள் பாடசாலை, புஸ்ஸல்லாவ இந்து தேசிய பாடசாலை, தங்கல்ல பெண்கள் கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/1791701 point- காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
சீ சீ ....சிறிலங்கா இப்ப ....இரண்டும் கெட்டான் நிலை....வடக்கு இந்தியாவுக்கு தெற்கு சீனாவுக்கு ,மேற்கு அமெரிக்காவுக்கு ......கிழக்கு எல்லோருக்கும் என்ற நிலை சிங்களவனின்ட அரசியல் சாணக்கியம் என சிலர் புலம்புவினம் ,,,1 point- வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி
ஆயுதமற்ற கலாச்சாத்தை எமது மக்களுக்கு உபதேசம் பண்ணுவதறகு நாங்கள் பந்தி பந்தியாக எழுதும் பொழுது .....நீங்கள் ஆயுத கலாச்சரத்தை தூண்டும் வகையில் ஒற்றை வரியில் கருத்து எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறோம்😃1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointபையா ஒரு கட்சி வளரரும் போது அதை இழிவுபடுத்த பலர் வருவார்கள்.ஒவ்வொருவரிடமும் போய் காலில் விழுவது கோழைத்தனம். அதையும் தாண்டி முன்னேறணும்.1 point- வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி
ஆயுதத்துக்கு உள்ள மரியாதை வேறு எதற்கும் இல்லை போல. தொல் பொருள் திணைக்களம் எனும் பெயரில் சனங்கள் கண்களுக்குள் விரலை விட்டு இந்த ஆட்டு ஆட்டுறாங்கள்.1 point- அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…
😀😀.... இங்கே பெயர், சொந்த ஊர், வயது இப்படியானவைற்றை சொல்லலாமா இல்லையா என்று தெரியவில்லை....... சுய ஆக்கங்களில், சிறுவனாக 80ம் ஆண்டுகளில் இருந்த போது நடந்த சில விசயங்களை எழுதியிருக்கின்றேன்......🤣 நீங்கள் இங்கே களத்தில் கொஞ்சம் வித்தியாசமானவர்😀.......ஒரு மாற்றுக் கருத்து.....👍1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
இப்படியானவற்றை நானும் அவதானித்துள்ளேன். மேற்குலகநாடுகளில் குடியேறிய ஈழதமிழர்கள் பலரிடம் உள்ளது. நான் வசிக்கின்ற நாடு தான் நம்பர் ஒன்று உன்னுடைது அது மாதிரி வராது என்பார் ஒருவர், மற்றவர் எனது நாடு தான் சிறந்தது உன்னுடையது பின்னுக்கு தான் என்பார் இப்படியே மேற்குலகநாடுகளில் என்ஜோய் பண்ணி வாழ்கின்றார்கள் அதில் தான் வாழ்கின்ற மேற்குலகநாடு தான் சிறந்தது என்று சொல்லி பெருமைபபட்டு போட்டிபோடுவார்கள் தான் போகவே விரும்பாத ரஷ்யா சீனா வடகொரியா ஈரானை இங்கே வாழ்ந்து கொண்டு புகழ்பாடுவதைவிட இது மேலானது நாங்கள் பலர் ஐரோப்பா சென்ற போது அந்த கம்யனிச வீழ்ச்சி பேர்லின் சுவரை காண்பதை மிகவும் ஆசையாக கொண்டிருந்தோம்.1 point- கண்ணுறுவது கண்ணோட்டம்
1 point- கண்ணுறுவது கண்ணோட்டம்
1 point- மயிலம்மா.
1 pointசலிப்பில்லாமல் வாசித்த கதைகளில் ஒன்று…..! ஊரில் ஒரு விதானையாக ஆகியிருக்கலாமோ என்ற ஏக்கம் மட்டும் என்னை விட்டு நீண்ட காலத்துக்கு அகலாது என்பது மட்டும் உண்மை…! வாழ்த்துக்கள், சுவியர்…!1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
யாருடைய அனுபவத்தையும் மறுதலிக்காமல், ஒரு ஒப்பீட்டுக் குறிப்பை மட்டும் தருகிறேன். 1982- 84: இந்தக் காலப் பகுதியில் ஐரோப்பா கிழக்கு, மேற்கு என ஜேர்மனியின் ஊடாகப் பிரிந்திருந்தது. மேற்கில் அமெரிக்க செல்வாக்கு, கிழக்கு ஜேர்மனியில் தெளிவாக சோவியத் செல்வாக்கு (சோவியத்தின் சுற்றயல் நாடு-satellite state என்று கிழக்கு ஜேர்மனி அழைக்கப் பட்டது). ஜேர்மனியின் கிழக்கில் இருந்து மேற்குப் பாதிக்கு மக்கள் உயிரைப் பணயம் வைத்துத் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் தப்பியோடாமல் இருக்க பேர்லின் சுவரை படிப் படியாகப் பலப்படுத்திக் கொண்டிருந்தது சோவியத் அணி. (ஒரு கட்டத்தில், dog run என்ற வடிவில் கொடிய கடி நாய்கள் கூட காவலுக்குப் பயன்படுத்தப் பட்டன). இதே காலப் பகுதியில், உள்ளூர் வாசிகளான ஜேர்மனியர்கள், கிழக்கில் Stasi உளவுப் பிரிவினால் கைதாகி, சித்திரவதைக்காளானார்கள், காணாமல் போனார்கள். இன்னும், கிழக்கே போனால், ஸ்ராலின் பின் வந்த வால்களான பிறஷ்னேவும், அந்த்ரபோவும் சோவியத் ஒன்றியத்தின் சொந்த மக்களையே குலாக்குகள் (Gulags) என்ற சைபீரிய கடூழிய சிறைகளில் அடைத்து வைத்தார்கள். இவர்களுக்கு, அடுத்த நகரம் என்ன, அடுத்த கொட்டிலுக்கே சுதந்திரமாகச் செல்ல அனுமதி இருக்கவில்லை - பலர் அங்கேயே சமாதியுமானார்கள். எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் துன்பங்கள் என்பவை ஒப்பீட்டு ரீதியானவை தான். எதிர்பார்ப்புகளோடு குடியேறியாக வந்தோம், எதிர்பார்த்ததை விட குறைவாக அடைந்தோம். இன்னொரு பக்கம், நாம் அடைந்ததை விட அதிக துன்பம் அடைந்த மக்களை ஆண்ட, ஆளும் தலைவர்களை மிகவும் மரியாதையோடு விரும்புகிறோம். இந்த முரண், புரிந்து கொள்ள முடியாத ஒரு முரண்!1 point- காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
இந்தியன் நிதி உதவியில் துறைமுகம் கட்டி வேலைமுடிய சீனா ஆராச்சிகப்பல் வந்து நிற்க சரியாயிருக்கும்..1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣1 point- 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
1ஒருவருக்கு விருப்பமில்லாத விடயம் தங்களுக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒருவருக்கு சுதந்திரமாக இருக்க, சுயமாகச் சிந்தித்துத் செயற்பட ஆர்வம் ஆனால் தாங்களோ யாருக்கும் கீழ்ப்படிந்து, சொல்வதைக் கேட்டு வேலைசெய்ய, கிடைப்பதையுண்டு வாழ சித்தமாயிருக்கிறீர்கள். இதுதான் வேறுபாடு.1 point- கருத்து படங்கள்
1 point1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 point1 point- கருத்து படங்கள்
1 point1 point- மின் காற்றாலைத் தோட்டம்.
1 pointஅண்மையில் Plam Spring California என்ற இடத்தில் போய் 4 நாட்கள் தங்கியிருந்தோம். இந்த தேசம் முழுவதும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் நன்றாக காற்று வீசக் கூடிய இடத்தில் Windmills Farm என்று சிறிய காற்றாலைகளில் இருந்து பெரிய பெரிய காற்றாலைகள் வரை பூட்டி மின்னுற்பத்தி பண்ணுகிறார்கள். ஒருநாள் இதைப் பார்க்க போயிருந்தோம். அவர்களின் உத்தரவுடன் வாகனத்திலேயே பயணித்தபடி பார்வையிடலாம். அவர்களின் அலுவலகத்துக்குள் போனால் காற்றாலை எப்படி இயங்குகிறது.எவ்வளவு மின்சாரத்தை பெற முடியும்.காற்றே இல்லை என்றால் எப்படி மின்சாரம் வழங்குவது. மிக முக்கியமாக இதில் பிரச்சனை வரும்போது எப்படியெல்லாம் திருத்த வேலைகள் செய்யலாம்.உள்ளே போவதற்கு எப்படி போவது. இதுவரை ஏதோ சும்மா சுற்றுது மின்சாரம் வருகுது என்று தான் நினைத்தேன்.அலுவலகத்தில் இருந்த காணொளியைப் பார்த்தால் தலை சுற்றியது.இதுவரை எண்ணியதெல்லாம் தவிடுபொடியானது. பெரிய காற்றாலையின் அடிப்பகுதியைப் பார்க்கவே எமது ஊர் கிணறுகள் மாதிரி பெரிதாக இருந்தது.பெரிய காற்றாலைகளின் சிறகுகள் தனித்தனியே ஒரு ரெயிலரில் கொண்டு போக முடியாது.இதற்கென்று தனி ரெயிலர்கள் தேவை.அவ்வளவு பெரிதாக இருந்தது. அடிப்பாகத்திலிருந்து ஏதாவது திருத்த வேலைகளுக்கு கீழே இருந்து மேல்தட்டுவரை நிரந்தரமாக ஏணியிருக்கிறது.நமது ஊர் பனை மரங்கள் போல உயரமாக இருந்தது. ஏணியில் ஏறி உள்ளே போனால் பெரிய பெரிய இயந்திரங்கள்.சிறகுகள் பூட்டியிருக்கும் பகுதி கீழே நின்று பார்க்க சிறியதாக இருக்கும்.ஆனால் உண்மையிலேயே இது ஒரு பேரூந்து அளவு இருந்தது.அதற்குள் எப்படியெல்லாம் இயந்திரங்களைப் பூட்டி மின்சாரம் பெறுகிறார்கள். யாருக்காவது இவைகளை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடாமல் போய் பாருங்கள். சிறிய காற்றாலையின் சிறகு. காற்றாலைத் தோட்டத்தின் ஒரு பகுதி. ஓரளவான காற்றாலையின் முழுத் தோற்றம். திருத்த வேலைக்காக உள்நுழையும் பாதை.1 point- பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
1 point- பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
அதென்ன 1.5 பாகை செல்சியஸ் அதிகரிப்பு..? ஆம்.. தொழில்புரட்சிக்கு முன்னைய காலத்தை விட அதன் பின் அமைந்த காலத்தில் பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தால்.. முக்கியமாக கரியமிலை வாயு எனப்படும் காபனீரொக்சைட் (முக்கியமாக சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளியேறுவது) அளவு அதிகரிப்பால்.. பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பானது 1.5 பாசை செல்சியஸை தாண்டினால்.. அதன் விளைவு பூமியில் மீள முடியாத அளவுக்கு போகலாம் என்ற எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். அப்போ.. அந்த 1.5 பாகை செல்சியஸ் இப்ப அதிகரிச்சிட்டுதா..? ஆம். 2023 இல் இது பதிவு செய்யப்பட்டிருக்குது. ஆனால்.. இந்த அதிகரிப்பு நிரந்தரமா இல்லையா என்பதை எனி வரும் கால கணிப்புக்கள் தான் சொல்ல வேண்டும். ஆனாலும் கடந்த.. 120,000 ஆண்டு கால பூமியின் வரலாற்றில் 2023இல் தான் ஓர் ஆண்டுக்கான சராசரி பூமியின் வெப்பநிலை இந்த அதிகரிப்பைக் கண்டுள்ளது. சரி இதனால் நமக்கென்ன..?! நமக்கு பல பிரச்சனைகள் வரும். பூமியில் வரட்சி அளவு அதிகரிக்கும். உணவு பயிர்களின் உற்பத்தி குறையும். நுளம்பு போன்ற நோய் பரப்பு பூச்சிகளின் பரவல் எல்லை அதிகரிக்கும்.. புயல்களின் உருவாக்கம் அதிகரிக்கும்.. கடல் மட்டம் இருப்பை விட அதிகரிக்கும்.. துருவ பனியின் உருகும் வேகம் அதிகரிக்கும்.. பஞ்சம் பட்டினி..நோய் தாக்கங்கள் அதிகரிக்கும்.. கடல்வாழ் உயிரினங்கள் அழிவுகளை சந்திக்கும்.. தரைவாழ் உயிரினங்களிலும் பாதிப்புக்கள் அதிகரிக்கும்.. இந்த நிலை தொடர்ந்தால்.. பூமி தரிசாவது நிச்சயம் ஓர் நாள் விரைந்து நிகழும். அது மனிதனால்.. ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். அதேன்.. இவ்வளவு காலமும் இருக்க இப்பதான் இந்தப் பிரச்சனை வருகுது..?! இது புதிய பிரச்சனை அல்ல. ஏலவே எச்சரிக்கப்பட்ட ஓர் விடயம் தான். வளர்ந்த நாடுகளும் வளர்முக நாடுகளும்.. தங்களின் பொருண்மிய ஆதாயங்களை முன்னிலைப்படுத்தினவே தவிர.. பூமியை பாதுகாப்பதற்கான வழிகளை ஆராய்வதில்.. ஆராய்ந்து செயற்படுவதில்.. கூடிய அக்கறை செய்யாமையே இந்த விளைவு இவ்வளவு துரிதமாக வரக் காரணம். ஏலவே 2100 இல் இந்த நிலை வரும் என்று கூறப்பட்டு.. பின் 2040 என்றான போதும்.. அது 2023 இலே அடையப்பட்டிருப்பது.. தொழில்புரட்சிக்குப் பின்னான நாடுகளின் செயற்பாடுகளில் பூமியை பற்றிய அக்கறையின்மை குறைந்ததே காரணம். அதுக்கு நாங்க என்ன பண்ணுறது..?! இது நாடுகளின் பிரச்சனை என்று பொதுவாக பார்க்கப்பட்டாலும்.. வாழ்ந்த வாழும்..ஒவ்வொரு மனிதனதும் பங்களிப்போடு உருவான பிரச்சனை. எனவே காபன் வெளியீட்டு அளவை குறைப்பதன் மூலம்.. குறிப்பாக பச்சைவீட்டு வாயுங்கள்.. (கரியமிலை வாயு.. மீதேன் வாயு.. உட்பட்ட மேலும் சில வாயுங்கள்) வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம்.. பூமி இந்த பச்சை வீட்டு விளைவில் இருந்து மீள்கிறதா என்று நோக்கலாம். குறிப்பாக கோவிட் காலத்தில் நடைமுறையில் இருந்த நாட்டு முடக்கங்களால்.. சில முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டிருந்தாலும்.. கோவிட் முடக்க தளர்வின் பின்.. மீண்டும் நிலை மோசமாகியுள்ளது. நான் இதை எப்படி குறைக்க உதவிறது..?! பல வழிகளில் உதவலாம். குறிப்பாக சுவட்டு எரிபொருள் பாவனையை குறைப்பதன் மூலம்.. வெளியிடப்படும் மாசு வாயுங்கள் உள்ளடங்க.. கரியமிலை வாயுவின் அளவை குறைக்கலாம். இதற்கு சுவட்டு எரிபொருள் வாகனப் பாவனையை குறைக்க வேண்டும். பொதுப்போக்கு வரத்துப் பாவனையை கூட்டலாம். குறுகிய பயணங்களை நேரத்திட்டமிடலுடன் கால் நடையாகவோ.. துவிச்சக்கர வண்டி மூலமோ மேற்கொள்ளலாம். மீதேன் வெளியேற்றத்தைக் குறைக்கதக்க வழிமுறைகளை அல்லது காபன் மீள் கைப்பற்றல் பொறிமுறைகளை.. அல்லது காபன் சமநிலை செய்முறைகளை பின்பற்றலாம். அதென்ன காபன் மீள் கைப்பற்றல்.. காபன் சமநிலை..??! சுவட்டு எரிபொருட்கள் பன்னெடுங்காலத்துக்கு முன் வளிமண்டல கரியமிலைவாயுவை கொண்டான.. காபன்பெறுதிகளால் உருவாகி.. பூமிக்குள் புதைந்து போன உக்கல்களால் உருவான ஒன்று. அதனால் கரியமிலை வாயுவின் அளவு வளிமண்டலத்தில் படிப்படியாக குறைந்து.. . உயிரினங்கள் தொடர்ந்து.. வாழக் கூடிய வெப்பநிலையுடன் கூடிய சூழல் பூமியில் உருவானது. அதுபோக.. பூமியின் பெருமளவிலான கரியமிலைவாயு கடலோடு கலந்து கிடக்கிறது. மேலும்.. பூமி வாழ் தாவரங்களும்.. கரியமிலை வாயுவை உள்வாங்கி நமக்கு சுவாசிக்க அவசியமான பிராண வாயுவை (ஒக்சிசன்) தருகின்றன. ஆக.. வளிமண்டலத்துக்குள் மேலதிமாக விடப்பட்ட கரியமிலை வாயுவை மீள் கைப்பற்றுவதன் மூலம்.. குறிப்பாக தாவரங்களை பயன்படுத்தி.. அதன் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் அதுவா நடக்குது. காடழிப்பு.. வேலி அழிப்பு.. காணிகளில் உள்ள தாவரங்கள் அழிப்பு.. என்று தாவரங்கள் வெட்டி அழிக்கப்படும் அளவுக்கு அவை மீள் உருவாக்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி.. காபன் சமநிலை செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். அதாவது எடுத்துக்காட்டாக.. நீங்கள் (ஒரு தனி மனிதன்) ஒரு நாளைக்கு பூமியில் சேர்க்கும் 400 கிராம் காபன்சார் வாயுக்களை குறிப்பாக கரியமிலை வாயு.. மீதேன்.. இதனை மீள அகத்துறிஞ்சக் கூடிய பயிர்களை வளர்த்து.. அந்தப் பயிர்களில் இருந்து உங்களுக்கு தேவையான உணவை பெறுவதும்.. மீண்டும்.. அந்த உணவின் வழி வெளியேறும் காபன் அளவை மீளக் கைப்பற்றி.. அதாவது பயிர்களை வளர்த்து.. அதனை மீண்டும் உணவாக்குவது.. இப்படி சுழற்சி முறையில் செய்துவரின்.. உங்களால்.. வளிமண்டலத்தில் சேர்க்கப்படும் நிகர காபன் சார் வாயுக்களின் அளவு பூச்சியமாக இருக்கப் பார்த்துக் கொள்ளலாம். இதனை ஒவ்வொரு மனிதனும் செய்யும் போது.. தனிமனிதன் ஒருவன் வெளியிடும் காபன் சார் பச்சைவீட்டு வாயுக்களின் அளவை குறைக்கலாம். எப்ப பார்த்தாலும் கார் கார் என்று கொண்டு நிற்கிறாங்களே.. இப்ப மின்சாரக் கார் வந்திட்டு அப்பவும் இந்த பிரச்சனை இருக்கா..?? சுவட்டு எரிபொருளை பாவிக்கும் எல்லாப் பயண முறைகளும்.. பச்சைவீட்டு வாயுக்களின் அளவை அதிகரிக்கும். அது காராக இருக்கலாம்.. விமானமாக இருக்கலாம்.. கப்பலாக இருக்கலாம். எனவே அதனை கட்டுப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைக்கலாம். ஆம்.. மின்சாரக் கார்கள் வந்துவிட்டன தான். அவற்றால்.. நேரடியாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றமில்லை. ஆனால்.. மின்சாரக் காரை உற்பத்தி செய்யும் வழிமுறைகளில்.. அதன் மூலப் பொருள் தொடங்கி முடிவுப் பொருள் வரையான பல செயல்முறைகளில் இன்னும் சுவட்டு எரிபொருள் மின்சக்தியே பயன்பாட்டில் இருக்குது. குறிப்பாக நிலக்கீழ் காபன் சார் வாயுக்களை (காஸ்) எரியூட்டி பெறும் மின்சக்தி. ஆக மின்சாரக் கார்கள்.. வீதியில் புகையை கக்கவில்லை என்றாலும்.. அவை உருவான வழியெங்கும் புகை. இவை எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் வரனும் என்றால்.. கார்களின் பாவனையை குறைத்து.. மின்சார பொதுப்போக்குவரத்தை அதிகம் பாவிக்க வேண்டும். குறுந்தூரப் பயணங்களை நடந்து சென்று செய்வதன் மூலம்.. இந்த பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவலாம். ரஷ்சியாவில் இருந்தான இந்த வாயு சப்பிளை குழாய்களை தான் மேற்கு நாடுகள் உக்ரைனை கொண்டு உடைத்தன. அதனால்.. கூடிய ஆதாயம் அடைந்தது அமெரிக்காவின் சுவட்டு எரிபொருள் கம்பனிகள். அவையே இப்போ.. ஐரோப்பாவுக்கான முக்கிய சப்பிளை முகவர்கள் ஆகிவிட்டனர். உக்ரைன் சனநாயகம்.. ஆக்கிரமிப்பு.. யுத்தம் என்பது வெறும் சாட்டு தான்.. அதன் பின்னணியில் இருப்பது.. அமெரிக்காவின் சுயநலம். இந்த யுத்தத்தை நன்கு திட்டமிட்டு ஆரம்பிச்சு வைச்சதே அமெரிக்கா தான். மேலும்.. கூடிய பச்சை வீட்டு வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா.. சீனா உள்ளிட்ட உலகின் முதன்மை பொருளாதார நாடுகளே முன்னிற்கின்றன. சுழற்சி முறை பயிர்செய்கை உதவுமா..??! ஆம்.. பயிர்களை உற்பத்தி செய்து விளை பொருட்களை ஈட்டிய பின்.. பயிர்க் கழிவுகளை அதே மண்ணில் இட்டு உக்க வைத்து உரமாக்கி மீள் பயிர்செய்கைக்கு அந்த உரமிட்ட வள மண்ணைப் பாவிப்பது.. கூடிய காபன் சமநிலைக்கு உதவும். இதே வீட்டில் பயன்படுத்தும் உணவுப் பொருள் கழிவுகளையும் உரமாக்கி தாவரங்களின் பயன்பாட்டிற்கு அளிப்பதன் மூலம்.. காபன் மீளக் கைப்பற்றலுக்கும்..காபன் சமநிலை செயற்பாட்டிற்கும்.. நாம் சிறுக என்றாலும் பங்களிக்காலம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் செய்யும் போது காபன் மீளக் கைப்பற்றல் என்பது பெருமளவில் நிகழ வாய்ப்புண்டு. இது தாவர மீதிகளை எரிப்பதனை விட கூடிய காபன் சமநிலையானது. இவ்வளவும் வாசிச்சாப் பிறகு உங்க மூளைக்கு ஒன்னுமே புரியாத மாதிரி இருக்கா.. அதற்கு சுருக்கமாக.. பூமியின் சராசரி வெப்ப அதிகரிப்பு எச்சரிக்கை எல்லை அளவான 1.5 பாகை செல்சியஸை கடந்த ஆண்டில் தாண்டி இருக்குது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னரே நிகழ்ந்துவிட்டது. இது கரியமிலைவாயு போன்ற வாயுக்களின் அதிகரித்த வெளியேற்றத்தால் உருவாகும் பூமி வெப்பமுறுதல் என்ற பச்சைவீட்டு விளைவின் வெளிப்பாடாகும். இதில் மனித செயற்பாடுகளே முதன்மை. இதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால்.. காபன் சார் வாயு வெளியேற்றச் செயற்பாடுகளை குறைப்போம். (சுவட்டு எரிபொருள் பாவனையை குறைக்கும் எல்லாச் செயற்பாடுகளும் இதற்கு உதவும்) காபன் சார் வாயுக்களை மீள் கைப்பறல் செய்யும் செயற்பாடுகளை ஊக்குவிப்போம். (தாவரங்களை குறிப்பாக மீள் காடாகத்தை ஊக்குவிப்போம். மீள் பயிர்செய்கையை வளப்படுத்துவோம்.) இது நமக்காக மட்டுமல்ல.. நம் எதிர்கால சந்ததிக்கும்.. பூமியின் வளமான எதிர்காலத்திற்குமாகும். உசாத்துணை: https://www.bbc.co.uk/news/science-environment-68110310 https://www.bbc.com/future/article/20231130-climate-crisis-the-15c-global-warming-threshold-explained https://www.ipcc.ch/sr15/ https://www.worldometers.info/co2-emissions/co2-emissions-by-country/ https://www.statista.com/chart/28725/cumulative-co2-emissions-per-country-since-1970/ மேலதிக விளக்கப் படங்கள்:1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 01 October 2, 2023 வீரயுகத்தின் அந்தி நந்திக்கடலில் சாய்ந்து ஆண்டுகள் இரண்டாகியிருந்தன. செட்டிக்குளம் அகதி முகாமில் அடைக்கப்பட்டு பலாத்காரங்களுக்கும் வன்முறைக்கும் உள்ளான சொற்ப சனங்கள் சொந்தவூர்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட்டனர். வரிசையில் நிற்க வைத்து அடையாளங்களைச் சரிபார்த்து ஆவணங்களை தருவித்து இராணுவப் பேருந்துகளில் அவர்கள் ஏற்றப்பட்டனர். செத்துப்போனாலும் சொந்தக் காணியில் சாகவேண்டும் என்பவர்களுக்கு நிம்மதி திரும்பிற்று. ஒரு பெருங்கனவு சிதைந்து உருக்குலைந்து மண்ணோடு மண்ணாகியிருந்தது. அளவற்ற தியாகமும், உயிரிழப்பும் அந்த மண்ணில் வெறித்திருந்தது. சொந்தவூரில் இறக்கிவிடப்படும் வரை அம்மாவோ அக்காவோ எதுவும் கதையாமல் வந்தனர். வழிநெடுக பனைகள் தலையற்றும் நிமிர்ந்து நின்றன. வீட்டுக்கு முன்பாக இறக்கிவிடப்பட்டோம். புதர்கள் மண்டிக்கிடந்தன. வீட்டுக் கூரையில் கறையான் படை. சுடுகாட்டமைதி. வாசலற்ற வீடு. சொந்த வீட்டினுள் செல்வதற்கு வழியற்று நின்றோம். எந்தத் துயரத்திலும் கண்ணீர் சிந்தாத அம்மா தனது காலடி மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளி வான் நோக்கி எறிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அது சாபமோ, பிரார்த்தனையோ யாரறிவார்? காணியைத் துப்புரவு செய்வது அவ்வளவு கஷ்டமாயிருக்கவில்லை. இரண்டு காட்டுக்கத்திகளாலும் மண்வெட்டியாலும் மரங்களையும் புதர்களையும் புரட்டிப்போட்டோம். வீட்டினுள்ளே எழுந்திருந்த பாம்பு புற்றுக்களை எதுவும் செய்யாமல் அடுத்தநாள் பார்த்துக் கொள்ளலாம் என்றாள் அம்மா. பார்த்தீனியத்தின் நாற்றம். இரவானதும் மாமரத்தின் கீழே அம்மாவும் நானும் அக்காவும் படுத்துக் கொண்டோம். நான்கு வருடங்களுக்குப் பிறகு சொந்தக் காணியில் நித்திரையாவது கனவெனத் தோன்றியது. அம்மாவுக்கு நித்திரை வரவில்லை. அவள் லாம்பைத் தீண்டி வைத்துவிட்டு எழுந்திருந்தாள். காற்றில்லாத இரவு. அம்மாவிடம் அனலின் விறைப்பு. அவள் மெல்ல எழுந்து கிணறு நோக்கிப் போனாள். வெட்டப்பட்ட செடிகளும், புற்களும் கும்பியாகி கிடந்தது. என்ன தோன்றியதோ! லாம்பிலிருந்து மண்ணெண்ணையை ஊற்றி கும்பியில் தீ வைத்தாள். அந்த இரவுக்கு அப்படியொரு வெளிச்சம் தேவையாகவிருந்தது. தீயின் சடசடப்பு பச்சையத்தில் எழுந்தது. அக்கா பயந்தடித்து நித்திரையிலிருந்து எழுந்தாள். புன்னகைத்தபடி நெருப்பு என்றேன். ஏற்கனவே சித்தம் குழம்பியிருந்த அவள் வெளிச்சத்தைப் பார்த்து வெருண்டிருந்தாள். நந்திக்கடலில் இறப்பதற்கு விஷம் தேடி அலைந்து களைத்தவள் அக்கா. “ஊழியில சாவு வாய்ப்பதெல்லாம் ராசியடி மோளே” என்று ஆச்சி சொல்லியும் அவள் கேட்கவில்லை. அக்காவுக்கு சித்தம் குழம்பியதை அம்மாதான் முதலில் உணர்ந்தாள். ஆனால் என்னிடமோ யாரிடமோ அதனைச் சொல்லாமல் தவிர்த்தாள். முள்ளிவாய்க்கால் நாட்களில் கட்டுப்படுத்தமுடியாமல் போயிற்று. பதுங்குகுழிக்குள் இருந்தபடி வெறித்துப் பார்த்து அழுவாள். யாரேனும் சமாதானம் சொன்னால் வெளியே எழுந்து ஓடுவாள். பிறகு அந்தக் கூடாரங்களுக்குள் அவளைக் கண்டுபிடிப்பது பெரியதொரு வாதை. என்னிடமொரு பழங்கால செபமாலையிருந்தது. டச்சுக்காரர்களின் தேவாலய அருங்காட்சியத்திலிருந்து அதனைக் களவாடியிருந்தேன். எங்கு சென்றாலும் என்னோடு வருகிற நிழலது. அக்காவின் கழுத்தில் அதனை விளையாட்டாக அணிவித்து உனக்கு வடிவாக இருக்கிறது என்றேன். அவள் சிலுவையைப் பிடித்து அறுத்தாள். செபமாலையை பதுங்குகுழிக்கு வெளியே எறிந்துவிட்டு “போடா கள்ளா” என்று அழத்தொடங்கினாள். சாவுகள் மலிந்து விளைந்த படுகளத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்க்க எண்ணி பலமுறை முயன்றும் தோற்றாள். ஒருநாள் இரவு அவளைப் பதுங்குகுழியில் காணாமல் தேடித்திரிந்தோம். நீரடர்ந்த குளத்து ஒற்றைப்பனையின் கீழே நின்றாள். அவள் இன்னும் நந்திக்கடல் வீழ்ச்சியை அறியவில்லை. எரியும் நெருப்பைப் பார்த்தபடி அம்மா….அம்மா என்று கூப்பிட்டாள். எந்த அசைவுமின்றி எரிந்தசையும் ஒளியின் முன்னே இரவு முழுவதும் நின்றாள் அம்மா. அடுத்தநாள் காலையில் மீண்டும் துப்பரவு பணிகளைத் தொடங்கினோம். வீட்டினுள்ளே இருந்த புற்றை வெட்டியெறிந்தோம். பாம்பில்லை. புற்று மண்ணை அம்மா பத்திரமாக எடுத்து வைத்தாள். காணி கொஞ்சம் வடிவெய்தியிருந்தது. கிணறு இறைக்க வேண்டும். வீடு வேயவேண்டும் என பெரிய பட்டியல் போட்டோம். நாங்கள் இடம்பெயர்கையில் மண்ணுக்குள் புதைத்து வைத்த அம்மிக்கல்லையும், சில பொருட்களையும் எடுக்கலாமென்று அகழ்ந்தோம். எல்லாமும் இருந்தது. இரண்டு பெரிய புகைப்பட அல்பங்கள் பொலித்தீன் படையால் காக்கப்பட்டிருந்தது. அக்கா ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டினாள். வீரயுகத்தின் நாயகர்கள் பலர் உயிர்ப்புடன் இருந்த புகைப்படங்கள். அக்கா எல்லோரையும் பார்த்து புன்னகை செய்து, அவர்களின் பெயர்களையெல்லாம் மறவாமல் சொன்னாள். அம்மிக்கல்லை எடுத்து தென்னைமரத்தின் கீழே வைத்தோம். அம்மியில் அரைத்த சம்பலும், ரொட்டியும் சாப்பிடவேண்டுமென சொன்னேன். அம்மா சரியென்று தலையசைத்தாள். அன்றைக்கு வெளியில் அடுப்பு மூட்டி, மாவைக் குழைத்து ரொட்டி சுட்டோம். சம்பலுக்கு வெங்காயம் போடாமல் வெறும் மிளகாயை தேங்காய்ப் பூவோடு அரைத்தோம். அக்கா நன்றாகச் சாப்பிட்டாள். அவளுக்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது என்றாள் அம்மா. ஊரில் ஏனையோரும் தங்களது வீட்டையும் வளவையும் சீராக்கியிருந்தனர். பொதுக்கிணற்றை எல்லோரும் பணம் போட்டு இறைத்துச் சுத்தம் செய்தனர். கள்ளருந்திக் கூத்திசைக்கும் கனவான்கள் பனைமரங்களின் பாளையைச் சீவி முட்டியைக் கட்டிக் காத்திருக்கத் தொடங்கினர். கள்வெறிக்கு நிகர்த்த இன்பம் ஈழருக்கு வேறில்லை. காவோலையில் கருவாட்டைச் சுட்டு இரண்டு தூசணங்களோடு பொழுதை மங்கலமாக்கும் அப்புமார் பனைக்கு கீழே அமர்ந்திருந்து கதையளந்தனர். வசந்தம் வருமென்றில்லை, ஆனாலும் நாம் பூப்போம் என்பதைப் போல பெண்கள் கூந்தல் நனைத்து வழிநெடுக காற்சங்கிலி ஒலிக்க நடந்து போயினர். கனரக ஆயுதங்களின் வெற்றுக் கோதுகளைச் சேமித்து பூஞ்செடிகளை நட்டுவைத்து சின்னஞ்சிறுசுகள் தங்களை ஆமி இயக்கமாய் பாவித்து சண்டை செய்து விளையாடினர். கிளித்தட்டு விளையாடும் இளையோர்கள் வேர்த்தொழுக மறிக்கின்றனர். அடிக்கின்றனர். இரவானதும் விளக்குகள் திரி குறைக்கப்பட்டு வீடுகள் குளிர்கின்றன. வெறுமை அழிந்து உடல்கள் இன்பம் நுகர்கின்றன. காற்றில் ஈரம் திரும்புகிறது. கிளைகளில் அசையும் மலர்களில் தேன் அடர்ந்து திரள்கின்றது. ஊரில் மனுஷ வாசனை தளும்பத் தளும்ப முட்டிகளில் கள் நிரம்பிற்று. ஒரு மாதத்தில் வீட்டை திறமாகச் சரிப்படுத்தியிருந்தோம். அக்காவும் நானும் யாழ்ப்பாணத்திலுள்ள பெரியம்மா வீட்டுக்குச் சென்றிருந்தோம். அம்மா மட்டுமே வீட்டிலிருந்தாள். ஒரு குழம்பும் சோறும் வைத்துச் சாப்பிடுவது அவளுக்கு போதுமானதாக இருந்தது. உறைப்புக்கு கொச்சி மிளகாய் காய்த்திருந்தது. ஒருநாள் சந்தைக்குச் சென்று திரும்புவதற்குள் அம்மாவைத் தேடி வந்திருந்த ஆச்சியொருத்தி வீட்டின் முன்னால் குந்தியிருந்துள்ளாள். நடுவெயில் வெக்கை வீச தலைவிரிகோலமாய் வெள்ளைச் சீலை உடுத்தியிருந்த ஆச்சியைப் பார்த்த ஊரவன் “ஆரன வேணும்” என்று கேட்டிருக்கிறார். ஆச்சி வீட்டைக் காண்பித்து “இவள் தான்” என்றிருக்கிறாள். “சந்தைக்குப் போயிட்டாள். வரப்பிந்தும். அவள் வருகிற வரைக்கும் என்ர வீட்டில வந்து இருங்கோ. அவள் வந்ததும் இஞ்ச வரலாம்” “அவள் வரட்டும். நான் இதிலையே இருக்கிறன்” “நீங்கள் எங்க இருந்து வாறியள்” “உதில இருந்துதான். நடந்து வந்தனான்.” “உதில எண்டால் எங்க” “எனக்கு சரியான பசி. அவளைச் சோறு கொண்டுவந்து தரச் சொல்லு. என்னைக் கொஞ்சம் குளிப்பாட்டச் சொல்லு. நான் வெளிக்கிடுறன்” என்றெழுந்த ஆச்சியின் வெண்கூந்தல் மண்வரை நீண்டு, அவளது தடத்தையே அழித்திருக்கிறது. “எங்க இருந்து வந்தனியள், உங்கட பேர் என்ன, எதுவும் சொல்லாமல் போனால், அவளிட்ட நான் எப்பிடிச் சொல்லுவன்” என்று கேட்ட ஊரவனைப் பார்த்து “நீ அவளிட்ட சூலக்கிழவி வந்தனான் என்று சொல்லு, என்னை நல்லாய்த் தெரியும்” என்றிருக்கிறாள். ஊரவன் அவளுடைய பதிலைக் கேட்டு உறைந்து நின்றார். முன்னே நடந்து சென்றவள் வெயிலானாள். கண்கள் கூசுமளவுக்கு வெளிச்சம் வந்தடைந்த ஊரவன் மயக்கமுற்று வீதியில் விழுந்தான். அம்மா வீட்டுக்கு வந்ததும் இந்தச் செய்தியை அவரே சொன்னார். “உன்னைத் தேடி சூலக்கிழவி வந்து தனக்கு பசிக்குதாம், குளிக்க வேணுமாம், வந்து பார்க்க சொல்லுது” என்றார். அம்மாவிடம் அந்தத் தகவலைச் சொன்னதும் ஊரவனுக்கு இந்தச் சம்பவத்தின் அனைத்து துளிகளும் மறந்து போயிற்று. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆற்றாமையும் சந்தோசமும் பொலிந்த அம்மா கொட்டடி காளி கோயிலை நோக்கி ஓடினாள். வழிநெடுக அவள் காளியை நோக்கி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.“இஞ்ச உள்ள ஒருத்தரிட்டையும் வராமல் என்ர வீடு தேடி வந்த உனக்கு நான் என்ன செய்வேன். என்ர ஆச்சியே” என்றபடி கோயிலிருக்கும் இடத்தை அடைந்தாள். சதுப்புக் காணியில் வெள்ளம் தேம்பி நின்றது. புதர்களும் செடிகளும் மண்டி வளர்ந்திருந்தன. காளி செடிகளுக்குள் புதைந்திருந்தாள். ஓடுகளற்ற கோயில் கூரையையும் கொடிகள் சடைத்து பிடித்திருந்தன. ஆழமிக்க தண்ணீரில் இறங்கி நடந்தாள். எதற்கும் அஞ்சாதவள் தாய். உக்கிரம் பெருகி தளும்பித் தளும்பி அழுதபடி புதர்களை பிடுங்கி எறிந்தாள். ஈரச்சருகுகளின் வாசனையும் பூச்சிகளும் குமைந்து கிடந்தன. வெடிக்காத எறிகணையொன்று குத்திட்டிருந்து. துருவேறிய அதன் மேற்பரப்பில் லட்சோப லட்ச சனங்களின் குருதியுறைவு. காளியின் பீடம் தகர்ந்திருந்தது. எங்களுடைய குலத்தின் விலா எலும்பு சூலம். எங்கே எங்கள் விலா எலும்பு! அம்மா பிய்த்துக் கொண்டு அலறினாள். விஷப்பூச்சிகள், எதையும் பொருட்படுத்தாமல் சருகுகளை கைகளால் அகற்றினாள். ஒரு படை விலக இன்னொரு படை. சருகுகள் அழுகிக் கிடந்தன. நாற்றம் குமட்டியது. முறிந்து துருப்பிடித்த சூலத்தை கண்டெடுத்து நெஞ்சோடு அணைத்து “என்ர ஆச்சி, உன்னைக் கைடவிடமாட்டேன்” என்ற அம்மாவின் குரல் பேரிகையாக ஒலித்தது. அவளது இரு கால்களுக்குமிடையால் துயின்றிருந்த நாகமொன்று படமெடுத்தபடி அசைந்து அருளியது. மண்ணில் சரிந்திருந்த சூலத்தை நிமிர்த்தி ஊன்றிய அம்மா, புதர்களில் மலர்ந்திருந்த செங்காந்தள் மலர்களை ஆய்ந்து படைத்தாள். சூலத்தில் சூட்டப்பட்ட செங்காந்தள் மலர்களின் நெருப்பு இதழ்கள் கனன்று நிறத்தன. வளவை மொத்தமாய் துப்புரவு பண்ணி, அடுத்தமாதமே பூசையைத் தொடங்கவேண்டுமென எண்ணம் தகித்தது. ஊழியுண்ட பெருநிலத்தின் மீதியாய் தன்னைப் போலவே காளியும் காந்தள் மலர்களோடு வெறித்திருப்பதை அவளால் ஏற்கமுடியாதிருந்தது. தெய்வமும் வாழ்வுக்கு மீளட்டுமென்று மண்ணை வேண்டிக்கொண்டு புறப்பட்டாள். கொட்டடி காளி காந்தள் மலர்கள் சூடி நின்ற அன்றிரவு அம்மா விளக்கு வைத்தாள். வெகு விரைவிலேயே கோவில் வளவைத் துப்பரவு செய்து வழிபாடு தொடங்கியது. முறிந்து போன சூலத்தை வைத்து வழிபடுவது ஊருக்கு நல்லதில்லை என்று பலர் சொல்லியும் அம்மா கேட்கவில்லை. அதே சூலம் புளிபோட்டு மினுக்கி மீண்டும் வழிபடு பீடத்திற்கு வந்தது. காந்தள் மலர்கள் மீண்டும் சூடப்பட்டது. கொட்டடி காளிக்கு இப்போது காந்தள் காளி, கார்த்திகைப் பூ காளி எனப் பலபெயர்கள். கோயிலை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில் எல்லா மாதங்களிலும் காந்தள் பூக்கள் மலர்கின்றன. அது காளியின் அற்புதம் என்கின்றனர் சனங்கள். நீண்ட வருடங்களின் பின்னர் காந்தள் காளி அம்மாவின் கனவில் வந்தாள். அவளுடைய முகத்தில் ஒருவித உலர்ச்சியிருப்பதைக் கண்ட அம்மா “ஏதேனும் உடம்பு சுகமில்லையா” என்று கேட்டாளாம். காளி ஓமென்று தலையசைத்திருக்கிறாள். என்னவென்று கேட்க காளி பதில் சொல்லாமல் உம்மென்று இருந்திருக்கிறாள். சித்தம் பிசகிய அக்காவிடம் கனவைச் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. எல்லாவற்றையும் கேட்ட அக்கா, தன்னுடைய கனவிலும் காளி வந்தாள் என்றாள். அம்மா திகைப்புற்று “என்ன சொன்னவா” என்று கேட்டாள். “காளிக்கு ஒரு காயமிருந்திருக்கு. ஷெல் காயம். ஒரு பீஸ் துண்டு காளியின்ர தலைக்குள்ள இப்பவும் இருக்கு. வெயில் நேரத்தில அது குத்தி நோக வெளிக்கிடுது. மண்ட பீஸ். காளி அதை நினைச்சு பயப்பிடுறா” என்றாள் அக்கா. அம்மாவுக்கு வந்த கோபம் ஆறாமல் “போடி விசரி, உனக்குத் தான் மண்ட பீஸ்” என்றாள். “அதுதான் நானும் சொல்றேன். காளிக்கு மண்ட பீஸ். கொட்டடி காளிக்கு மண்ட பீஸ்” என்று அக்கா அரற்றத் தொடங்கினாள். அப்போதும் சூலம் மண்ணில் நிமிர்ந்து நிற்க காந்தள் மலர்கள் கனன்று மலர்ந்தன. https://akaramuthalvan.com/?p=8471 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.