Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46793
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19134
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38770
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/17/24 in all areas

  1. நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும் இருந்தும், வேறு எதனை எதிர்பார்க்கப் போகின்றீர்கள்" என்றே. இதனால் என்ன பயன்? போர்க் குற்ற விசாரணை எல்லாம் நடக்குமா? எனக் கேட்டால், கண்டிப்பாக இல்லை. ஆனால், ஆகக் குறைந்தது ஒரு சிலருக்காவது, இலங்கை எனும் சொர்க்க புரியில், ஒரு இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்றதா என கேள்விகளாவது மனசில் எழும். நீங்கள் யாழ்ப்பாணம் போனால், வெளி நாட்டில் இருந்து வந்தவர் என்று அவர்கள் புரிந்து கொண்டால், முச்சக்கர சாரதியில் இருந்து தின்னவேலி சந்தையில் காய்கறி விற்பவர் வரைக்கும் நன்றாக ஏமாற்றுவார். கேள்வி கேட்டால், போருக்கு பயந்து ஓடிப் போனவர் தானே என்றும் சிலர் நக்கலடிப்பர்.
  2. மின்னம்பலம் திமுகவினது இல்லை. எல்லாக் கட்சிகளும் விளம்பரங்களைப் போடுவதைப் பார்க்கின்றேன். கருத்துக்கணிப்பு தெளிவாகச் சொல்வது என்னவென்றால் எவர் வெல்லும் கூட்டணியை அமைக்கின்றாரோ அவர் கட்சிக்கூட்டணியே வெல்லும். அதிமுக, பிஜேபி, பா.ம.க கூட்டணி அமைத்திருந்தால் திமுகவுக்கு பத்துக்குள்தான் வெற்றிவாய்ப்பு உள்ளது. கூட்டணி எப்போதும் ஜனநாயகத்தைக் காப்பாற்றும். ஆனால் சுயநலத்திற்காகத்தான் தமிழ்நாட்டில் கூட்டணிகள் அமைவதும், பிரிவதும் உண்டு. எல்லாமே பகடை பன்னிரண்டுதான்! இப்போது 40 தொகுதிகளுக்குமான கருத்துக்கணிப்பு வந்துள்ளது. அண்ணாமலைக்கும் வெற்றி வாய்ப்பில்லை. ஆனால் கடினமாக முயன்றால் வெல்ல இப்போதும் சந்தர்ப்பம் இருக்கின்றது! வாய்ப்பில்லை ராஜா!😜 பிஜேபி கூட்டணி மூலம் வளர்ந்து வருகிறது. எப்படியும் அதிமுகவுடன் மீண்டும் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.
  3. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
  4. இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
  5. தினக்குரல் குழப்புகிறது. பிரதமர் மீதல்ல அவர் கட்சி பாஉக்கள் இருவர் மீதே 2003 ஆரம்பத்தில் ஊழல் புகார் வைக்கப்பட்டது. 2003 இறுதியில் ஏலவே முடிவு செய்த பதவிக்கால நிர்ணய நிரல்படி, அடுத்த தேர்தலுக்கு புதிய தலைமையை கொடுக்கும் வண்ணம், 2024 இல் தான் பதவி விலகுவதாக பிரதமர் அறிவித்தார். வேணும் எண்டால், இதை தன் கட்சியினரின் மீதான குற்றச்சாட்டுக்கான தார்மீக பொறுபேற்றல் என கொள்ளலாம்.
  6. வந்துடடேன் வந்துடடேன் என்று இன்னுமா வந்து முடியவில்லை ?😃
  7. கொல்கத்தாவிடம் இருந்து 'நம்பமுடியாத' வகையில் வெற்றியைப் பறித்த பட்லர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 14-ஆவது ஓவர்வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று வர்ணனையாளர்களும், ரசிகர்களும் நம்பி கருத்துக்களைத் தெரிவித்தனர். கணினி கணிப்புகளும் 0.30 சதவீதம் மட்டுமே ராஜஸ்தான் வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்தது. ஆனால், கடைசி 6 ஓவர்களில் தனிஒருவனாக இருந்து சாதித்த ஜோஸ் பட்லர் சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும், வீரர்களுமே ஒரு கட்டத்தில் தோல்வியை ஏற்கும் மனநிலைக்குச் சென்றிருப்பார்கள். அத்தகைய சூழலில் இருந்து, கடினமான வெற்றியை பட்லர் சாதித்துக் காட்டினார். கடைசி 6 ஓவர்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வெற்றி தங்களின் கரங்களை விட்டு மெல்ல மெல்ல நழுவுகிறது என்பதை அறியாமல் கொல்கத்தா அணியினர் திகைத்துபோய் பந்துவீசியதைக் காண முடிந்தது. அணி நிர்வாகத்திடம் இருந்து அவ்வப்போது, அறிவுரைகள் வந்து கொண்டிருந்தன. ஆயினும் தோல்வியைத் தடுக்க முடியவில்லை. புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் இரு அணி வீரர்களுமே அதிக நுட்பங்களை, உத்திகளை போட்டியில் கையாண்டனர். எந்த பேட்டருக்கு யாரை பந்துவீசச் செய்வது, யாரை எப்படி வீழ்த்துவது, திட்டங்களை எப்படி முறியடிப்பது என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் ஆட்டம் அமைந்திருந்தது. பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது. 224 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட்டை பொருத்தவரை பெரிதாக முன்னேற்றமில்லாமல் 0.677 என்ற அளவிலேயே 3வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே(0.726) அணியை விட குறைவாக இருக்கிறது. அடுத்துவரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றால்தான் நிகர ரன்ரேட்டை உயர்த்த முடியும். அதேசமயம், கொல்கத்தா அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட்டைப் பொருத்தவரை, 1.399 என்று அனைத்து அணிகளையும் விட வலுவாக இருக்கிறது அந்த அணிக்கு பலவகையிலும் சாதகமாக அமையும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் 107 நாட்அவுட்(60 பந்துகள்,6 சிக்ஸர், 9பவுண்டரி) தவிர வேறு எந்த பேட்டரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. ரியான் பராக்(34), ரோவ்மென் பாவெல்(26) ஆகியோர் மட்டும் சிறிய கேமியோ ஆடினர். மற்றவகையில் அனைத்து பேட்டர்களும் ஏமாற்றினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘ரியல் இம்பாக்ட் பிளேயர்’ ஜாஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரராக, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஜாஸ் பட்லர், தனது ஆட்டத்தின் மூலம் “பெரிய இம்பாக்ட்டை” நிகழ்த்திவிட்டார். சதம் அடித்தபோதுகூட கொண்டாடாத பட்லர் அணியை கடைசிப்பந்தில் வென்று கொடுத்தபின்புதான் தனது ஹெல்மெட்டையும், பேட்டையும் தூக்கி எறிந்து வெற்றியைக் கொண்டாடினார். ராஜஸ்தான் அணிக்கு சாத்தியமில்லாத வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜாஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஜாஸ் பட்லர் இந்த ஐபிஎல் சீசனில் அடித்த 2ஆவது சதமாகும். இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக கோலி சதத்துக்குப் பதிலடியாக பட்லர் சதம் அடித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிகசதம் அடித்த பேட்டர்களில் 7 சதங்களுடன் பட்லர் 2-ஆவது இடத்தில் இருக்கிறார். அதேபோல சேஸிங்கில் அதிக சதங்களை அடித்தவர்கள் வரிசையில் கோலிக்கு அடுத்ததாக பட்லர் 3 சதங்களுடன் உள்ளார். டி20 சதங்களைப் பொருத்தவரை அதிகமான சதங்களை அடித்த இங்கிலாந்து பேட்டர் என்ற பெருமையையும் பட்லர் பெற்றார். இந்த 8 சதங்களுமே பட்லர் கடந்த 3 ஆண்டுகளுக்குள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி 6 ஓவர்களில் ஜாஸ் பட்லர் அதிரடியாக பேட் செய்தார். அவரின் கண்களுக்கு வெற்றியைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்றே கூற வேண்டும். பட்லர் கடைசியாக சந்தித்த 27 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 65 ரன்கள் சேர்த்து 240.74 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார். ஆனால் 7ஆவது ஓவர் முதல் 14-ஆவது ஓவர்வரை பட்லர் ஆமை வேகத்தில் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 22ரன்கள் மட்டுமே சேர்த்த்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘நம்பமுடியாத வெற்றி’ ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த வெற்றியால் பெருமகிழ்ச்சி. நம்பமுடியவில்லை. 6 விக்கெட்டுகள் சென்றபின் சிறிது நம்பிக்கையற்று இருந்தோம். ஆனால் பாவெல் களமிறங்கி சிக்ஸர்கள் விளாசியபின் நம்பிக்கை ஏற்பட்டது, போட்டி கையைவிட்டுச் செல்லவில்லை என்று எண்ணினோம். தோல்வியிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்று அழகான நிகழ்வு, இதற்கு அதிர்ஷ்டமும் தேவை. நரைன், வருண் இருவருமே அற்புதமாக பந்துவீசி நடுப்பகுதி ஓவர்களில் எங்கள் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்தனர். இந்த விக்கெட் இருவருக்குமே அருமையாக ஒத்துழைத்தது.” “கடந்த 7 ஆண்டுகளாக ஜாஸ் பட்லர் எங்கள் அணிக்காக அற்புதமாக பேட் செய்து வருகிறார். அவரின் பேட்டிங் நிலைத்துவிட்டால் கடைசி 20 ஓவர்கள்வரை நின்றுவிளையாடுவார் என டக்அவுட்டில் பேசிக்கொள்வோம். பட்லரின் 20வது ஓவர் பேட்டிங், ரன் எடுக்காத அவரின் புத்திசாலித்தனம், யாராலும் அவரை தோற்கடிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தியது” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் செய்த சாதனை 6 விக்கெட்டுகளை இழந்தநிலையில், கடைசி 6 ஓவர்களில் மட்டும் ராஜஸ்தான் அணி 103 ரன்களைச் சேர்த்துள்ளது. 6-வது விக்கெட்டை இழந்தபின், 100க்கும் மேற்பட்ட ரன்களை சேஸிங் செய்த அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது. ராஜஸ்தான் அணி 15-வது ஓவரை பேட் செய்ய எதிர்கொண்டபோது வெற்றிக்கு 96 ரன்கள் தேவைப்பட்டது. 36 பந்துகளில் 96 ரன்கள் என்பது சாத்தியமில்லாதது. ஆனால் கடைசி 6 ஓவர்களில் இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்த முதல் அணி என்ற பெயரை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது. ராஜஸ்தான் அணி 14.1 ஓவர்களின்போது 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. கணினியின் வெற்றிக் கணிப்பின்படி, ராஜஸ்தான் அணி வெல்வதற்கு 0.32 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், அதன்பின் கூடுதலாக 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 96 ரன்களை சேஸிங் செய்தது ராஜஸ்தான் அணி. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி ராஜஸ்தான் அணி சேஸிங் செய்த 224 ரன்கள்தான் அதிகபட்ச சேஸிங்காகும். பட மூலாதாரம்,SPORTZPICS கடைசி 6 ஓவர்களில் நடந்தது என்ன? ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்பட்டது. பட்லர் 42 ரன்களுடனும், பாவெல்2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வருண் வீசிய 15வது ஓவரில் பட்லர் 4 பவுண்டரிகளை விளாசி 17 ரன்கள் சேர்த்துதனது அரைசதத்தை நிறைவு செய்தார். கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 79 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை ஆந்த்ரே ரஸல் வீசினார். ரஸல் ஓவரில் பாவெல் ஒரு சிக்ஸரும், பட்லர் ஒரு சிக்ஸரும் விளாசி 17 ரன்கள் சேர்த்து பதற்றத்தைத் தணித்தனர். கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 62 ரன்கள் தேவை. நரைன் வீசிய 17-வது ஓவரை பயன்படுத்திய பாவெல் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி, 4வது பந்தில் கால்காப்பில் வாங்கி 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பாவெல் சென்றபின் ராஜஸ்தான் அணியில் பெரிதாக பேட்டர்கள் யாரும் இல்லை என்பதால், பட்லரையும் தூக்கிவிட்டால் ராஜஸ்தான் தோல்வி உறுதி என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். கடைசி 18 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 46 ரன்கள் தேவை. அடுத்த 3 ஓவர்களையுமே பட்லர் தனி ஒருவனாக இருந்து களமாடி, கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்தார். கடைசி 3 ஓவர்களில் ஒரு பந்தைக் கூட ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கானுக்கு பட்லர் வழங்கவில்லை. 2 ரன்கள், கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தனது பக்கவே பட்லர் வைத்திருந்து பேட் செய்தார் . பட மூலாதாரம்,GETTY IMAGES மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய 18-வது ஓவரில் பட்லர் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் அடித்தார், அந்த ஓவரில் வைடில் பைஸ் 5 ரன்கள் என 18 ரன்கள் ராஜஸ்தானுக்குக் கிடைத்தது. ஆட்டத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.இந்த ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து பட்லர் ஸ்ட்ரைக்கை தக்கவைத்தார். கடைசி 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்சித் ராணா வீசிய 19-வது ஓவரில் பட்லர் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் விளாசி கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை. வருண் சக்ரவர்த்தி கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் லாங்-ஆன் திசையில் சிக்ஸரை விளாசி பட்லர் அதிர்ச்சி அளித்தார். அடுத்த 3 பந்துகளும் ரன் சேர்க்க வாய்ப்புக் கிடைத்தும் பட்லர் ஓடவில்லை, ஒரு ரன் எடுத்தால் ஆவேஷ் கான் ஸ்ட்ரைக்கில் வருவார், அவரை எளிதாக ஆட்டமிழக்கச் செய்துவிடுவார்கள் என்பதால் 3 பந்துகளையும் பட்லர் டாட் பந்துகளாக கழித்தார். 4வது பந்தில் லாங் ஆப் திசையில் தட்டிவிட்டு 2 ரன்களை பட்லர் சேர்த்தார். ஸ்கோர் சமநிலைக்கு வந்ததையடுத்து, ராஜஸ்தான் தோல்வியிலிருந்து தப்பியது. ஆனால், கடைசிப்பந்தில் ரன் அடிக்காவிட்டால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றுவிடும் என்பதால் ரசிகர்களும், வீரர்களும் பதற்றத்தில் இருந்தனர். வருண் வீசிய கடைசிப்பந்தை லெக் திசையில் தட்டிவிட்டு பட்லர் ஒரு ரன் எடுக்க ராஜஸ்தான் அணி ‘சாத்தியமில்லாத’ வெற்றியை பெற்றது. சதம் அடித்தபோதுகூட தனது பேட்டை உயர்த்தி பட்லர் கொண்டாடவில்லை, ஆனால், ராஜஸ்தான் வென்றவுடன், தனது ஹெல்மெட்டையும், பேட்டையும் தூக்கி எறிந்து பட்லர் வெற்றியைக் கொண்டாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES நரைன் அடித்த முதல் சதம் வீணாகியது கொல்கத்தா அணி 223 ரன்கள் அடித்ததில் பெரும்பகுதி காரணம் சுனில் நரைன்தான். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 80 ரன்கள்வரை சேர்த்திருந்த நரைன் முதல்முறையாக சதத்தைபதிவு செய்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணியிலும் சுனில் நரைனைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. கொல்கத்தா அணியில் இதுவரை 2 பேட்டர்கள் மட்டுமே சதம் அடித்திருந்தனர். முதலாவது மெக்கலம்(158), 2வதாக வெங்கேடஷ் ஐயர்(104), 3வதாக தற்போது நரைன்(109) சதம் அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் சதமும் அடித்து, பல விக்கெட்டுகளை 3 வீரர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர். கிறிஸ் கெயில் இருமுறையும், ஷேன் வாட்சன் ஒருமுறையும் நிகழ்த்தினர், 3வது வீரராத நரைன் சதமும் அடித்து, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஐபிஎல் வரலாற்றிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரரும், சதம் அடித்த வீரரும் என்ற ஒருசேரப் பெருமை பெற்றவர் சுனில் நரைன் மட்டும்தான். வேறு எந்த ஆல்ரவுண்டரும் சதம் அடித்திருந்தால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை, 5 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் சதம் அடித்தது இல்லை. இந்த இரு அம்சங்களை நிகழ்த்தியவர் நரைன் மட்டும்தான். 2வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷியுடன் சேர்ந்து நரைன் 85 ரன்கள் சேர்த்ததுதான் பெரிய பார்ட்னர்ஷிப்பாகும். ரகுவன்ஷி(30) ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக பேட் செய்த நரைன் 29 பந்துகளில் அரைசதம் அடித்து, அடுத்த 20 பந்துகளில் அடுத்த 50 ரன்கள் சேர்த்து 49 பந்துகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். நரைன் தனது ரன் கணக்கில் 6 சிக்ஸர்கள், 9பவுண்டரிகளை விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சஹல், அஸ்வினை பந்துகளைப் பறக்க விட்ட நரைன் நரைன் தனது 109 ரன்களில் 67 ரன்கள் சஹல், அஸ்வின் ஓவர்களில் அடித்ததாகும். அஸ்வின்,சஹல் ஓவரை வெளுத்து வாங்கிய நரைன், சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். அஸ்வின் வீசிய ஓவரில் 17 பந்துகளைச் சந்தித்த நரைன் 34 ரன்களையும், சஹல் வீசிய ஓவரில் 11 பந்துகளில் 33 ரன்களையும் விளாசி, இருவரையும் ஓடவிட்டார். நரைன் கடைசியாக தான் சந்தித்த 14 பந்துகளில் மட்டும் 35 ரன்கள் சேர்த்தார். அஸ்வின், சஹல் இருவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். அஸ்வினைப் பொருத்தவரை இந்த சீசன் அவருக்கு தொடக்கம் முதலே மோசமாக இருந்துவருகிறது. மற்றவகையில் கொல்கத்தா அணியில் பேட்டர்கள் அதிகம் இருந்தும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ்(11), ரஸல்(13), வெங்கடேஷ்(8), பில் சல்ட்(10) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களும் கேமியோ ஆடி இருந்தால் ஸ்கோர் 250 ரன்களைக் கடந்திருக்கும். ரிங்கு சிங் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 9 பந்துகளில் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா கோட்டைவிட்டது எங்கே? கொல்கத்தா அணியின் தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்து பந்துவீசியதால் ராஜஸ்தான் அணி சீராக விக்கெட்டுகளை இழந்தது. ஜெய்ஸ்வால்(19), சாம்ஸன்(12), ஜூரைல்(2), அஸ்வின(8), பராக்34) என சீராக விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் 97 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. நரைன், வருண் இருவரும் நடுப்பகுதி ஓவர்களில் ராஜஸ்தான் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்து, விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். இதனால் வெற்றி கொல்கத்தா பக்கம் என்றுதான் அனைவரும் நம்பினர். ஆனால், 15வது ஓவருக்குப்பின் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு படுமோசமாக மாறியது. குறிப்பாக 15வது ஓவரில் இருந்து ராஜஸ்தான் அணி சராசரியாக 17 ரன்களுக்குள் குறைவில்லாமல் சேர்த்தது, அந்தஅளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு மோசமாக இருந்தது. தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசிய நரைன், வருண் கடைசி ஸ்பெல்லில் பவுண்டரி, சிஸ்கர் வழங்கினார். மிட்ஷெல் ஸ்டார் கடைசி ஓவரில் பைஸ் உள்பட 18 ரன்கள், ராணவின் கடைசி ஓவர் என கொல்கத்தாவின் பதற்றத்தை பட்லர் பயன்படுத்தினார். https://www.bbc.com/tamil/articles/c4n1zvgd4vko
  8. இதெல்லாம் அவர்களின் பொழுது போக்கு நிகழ்வுகள் என்று விட்டு போக வேண்டியது தான்..அங்கு நடக்கும் அனேக சந்திப்புக்களை பேஸ்புக் போராளிகள் அவ்வப்போது போடும் போது பார்த்துட்டும் பார்க்காதது போலத் தானே கடந்து போக வேண்டி இருக்கிறது..கலந்துரையாடல் அது ஆக்க பூர்வமானதாக எண்டால்....அதன் பின் ஒரு சிற்றுண்டி பரிமாறல் இந்த கலந்துரையாடலின் பின் கூழ் பார்ட்டி.ஆ...இப்படியே கதைச்சு கதைச்சே காலத்தை கடத்துகிறார்களே தவிர அந்தப் புது இலக்கிய வாதிகள் சார்பாக பாதிக்கபட்ட இன்னும் அன்றாடம் சீவிப்பதற்பே இயலாமலிருக்கும் மக்களுக்கு ஏதாவது சிறு பங்களிப்பு..சொல்லிப் பாருங்கள்..அடுத்த மாதம் இதுவும் ஒரு சந்திபாக வைப்பார்கள்...பாவங்கள் விட்டு விடுவோம் புது இலக்கியவாதிகள் பேசிக் கொண்டே இருக்கட்டும்..
  9. புலி எதிர்ப்பு வாந்தி.. பிரபாகரன் வசைபாடல் எல்லாம் இப்ப புலம்பெயர் சும்மா இருப்பவர்கள்.. இலக்கியமாகி விட்டன. இவை 2009 மே முன் வேற மொழி பேசிச்சினம்.. மாற்றுக்கருத்து அரசியல்.. அதுக்கு என்னாச்சுப்பா. அதுவும் புலிகளோடு அழிஞ்சு போச்சுப் போல. இப்ப புலி எதிர்ப்பை இலக்கியமாக்கிட்டாங்கள்... வசதியாக தாம் சில கூடி வசைபாடி மகிழ.
  10. இன்று முதல் புதிய விசா முறை அமுல் Published By: DIGITAL DESK 3 17 APR, 2024 | 09:48 AM இன்று புதன்கிழமை (17) புதிய விசா முறை மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது. "புதிய விசா நடைமுறைகள், அதற்கான கட்டணங்கள், பூர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்க முடியுமான காலப் பிரிவு என்பன இலக்கம் 2360/24 மற்றும் 2023.11.27 ஆம் திகதி விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்குப் பதிலாக அறிமுகம் செய்யப்படும் இணைய வழிமுறையான E-Visa முறைமை GBS Technology Service & IVS Global நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதோடு அந்த இணையத்தளத்தின் தொடர்பு கீழே தரப்பட்டுள்ளது. www.srilankaevisa.lk வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவரும் வகையில், புதிய இணைய வழிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் விரைவான மற்றும் திறமையான விசா விண்ணப்ப செயல்முறையை வழங்க உத்தேசித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/181269
  11. அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உணவுப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பாரிய சிரமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் முகம்கொடுத்து வருகின்றனர். குறுந்தூர பயணங்களுக்கு வாகன சாரதிகள் அதிக பணம் அறவிடுதல், உடமைகளைக் கொள்ளையடித்தல் சேவைக் கட்டணங்கள் மற்றும் விலைகளை அதிகரித்தல் போன்ற முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்கின்றனர். அண்மையில், சைவ உணவகம் ஒன்றுக்குச் சென்ற ஜேர்மனிய பிரஜைக்கு ஒரு வடை 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பில் குறித்த பயணி காணொளி மூலமாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இது போன்ற மீண்டும் ஒரு இது போன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஒரு பயணி உணவு உண்பதற்காக வீதியோரக் கடை ஒன்றில் விலை விசாரித்த போது அங்கு சொல்லப்பட்ட விலையைக் கேட்டு அதே இடத்தில் வெளிப்படையாகவே தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். ஒரு கொத்து ரொட்டியின் விலை 1900 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், குறித்த கடையின் உரிமையாளர் விரும்பினால் வாங்குங்கள் இல்லை என்றால் சென்று விடுங்கள் என்று கடும் தொணியில் தெரிவித்துள்ளார். இவற்றை காணொளியாக பதிவு செய்துள்ள அந்த பயணி தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்த இலங்கை மீளெழுவதற்கான பிரதான இலக்கு அண்ணியசெலாவணியை ஈட்டுவதாகும். சுற்றுலாப் பயணிகள் மூலமாக அதிகமான வெளிநாட்டு வருமானம் கிடைக்கின்ற நிலையில், இவ்வாறான முகம் சுழிக்க வைக்கும், சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விடயங்கள் எமது நாட்டின் வருமானத்தையும் பாதிக்கின்றது. அத்துடன், இப்போதைய டிஜிட்டல் மயமான காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சமூக வலைத்தளங்களில் தங்களது சுற்றுலா அனுபவங்களை நேரலையாக பகிர்ந்து கொள்ளும் போது இது போன்ற மோசடி நடவடிக்கைகள் நம் நாட்டின் மீதான நன் மதிப்பையும் பாதிக்கின்றன. சுற்றுலாவுக்காக நமது நாட்டை நோக்கி வருகின்றவர்கள், எமது கலாசாரத்தையும், உணவு பழக்க வழக்கங்களையும், எமது பண்பாடையும் கற்றுக் கொள்ளவும், அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவும் வருகின்றார்களேத் தவிர இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளை அல்ல... https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail
  12. வேண்டாம்.....வேண்டாம் எண்டு சொல்லிக்கொண்டு இந்த திரியை ஊதி பெருப்பிச்சது ஆரெண்டு போய் பாத்தால்.... தலை வெடிக்குது 😎 27,28 எண்டுபெரும்பான்மையாய் எழுதி திரியையே ஊத்தி ஊதி வைச்சிருக்கிறியள்....🤣
  13. எம்மிடம் எடுத்துச் சொல்வதற்கு... நிரந்தரமாக எதுவும் இல்லை... ஆனால்.. பழகி பார் பாசம் புரியும்.... பகைத்து பார் வீரம் தெரியும்.... வலிகள் தான் வரலாறு ஆகும் ....
  14. அரைகுறையா எந்த விடயத்தையும் தூக்கி பிடித்து கொண்டு ஆடி காலை உடைப்பது உங்கள் வழமையான தொன்று முதலில் யாழில் எப்படி ஒரு செய்தியை இணைப்பது என்பதை புரிந்துகொள்ளுங்க உங்களுக்கு அது பற்றி தெரியாது எப்ப பார்த்தாலும் பழம் சீலை கிழிந்தது போல் மல்லுக்கு மல்லு பல்லுக்கு பல்லு அதுவும் இல்லையா உபரி அவதர்களில் உங்களுக்கு நீங்களே யாழ்ரா அடிப்பது அதை விடுங்க சொல்ல வந்த விடயம் எங்கிருந்து அந்த இணைப்பு எடுக்கப்பட்டது அந்த செய்தி எப்போது வந்தது என்பதுவா உங்களுக்கு தெரிவதில்லை தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்து கொள்ளுங்க சக கருத்தாளர்களிடம் .கீழே இந்த திரிக்கான இணைப்பு லிங்க் தந்துள்ளேன் பார்த்து அறிந்து கொண்டு உங்கள் நக்கல் நளினம்களை நிறுத்தி கொள்ளுங்க . https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail
  15. சிம்பிளா சொல்ல வேணும் என்றால் அவர் ஒரு பச்சோந்தி என்று தமிழக மக்களுக்கு காட்டி விட்டார் பெரியாரின் பேரன் தான் என்று சொல்லி பின் பிள்ளைக்கு காது குத்த அந்தணர்களை அழைத்ததில் இருந்து தமிழ் மொழி கல்வி கட்டாயமாக்க வேணும் என்று விட்டு தன் பிள்ளைகளை ஆங்கில மொழியில் படிக்க வைப்பதுடன் சாதி வாரியாக இம்முறை கட்சி வேட்பாளர்கள் பலரை தெரிவு செய்தது ஈறாக தன் மனுசியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்த வரைக்கும் ஒரு பக்கா பச்சோந்தி அரசியல்வாதி என்று காட்டி விட்டார். உவர் ஏனயோருக்கு மாற்று இல்லை. எனவே பத்தோடு ஒன்றாகி விட்டார் 4 , 4.5 தான் அவருக்கு கிடைக்கும்
  16. அப்படியென்றால் இந்திய தேர்தலில் எந்தவொரு சீர்கேடுகளும் இல்லாத சுத்த ஜனநாயக தேர்தல் முறை என சொல்கின்றீர்கள் அப்படித்தானே?? 😁
  17. ஈழத்தமிழரின் ஆயுத போராட்டத்தை பயங்கரவாதிகளின் போராட்டம் அல்லது தீவிரவாதிகளின் போராட்டம் என்றே வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கிணைய வடகிழக்கு தமிழர் பிரதேசங்கள் யுத்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வெளிநாட்டு உல்லாச பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்களா? சில வேளை சுற்றுலா பயணிகளையும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளுக்கு செல்ல அனுமதித்திருந்தால் படங்களும் காணொளிகளும் வெளியுலகிற்கு வந்திருக்கலாம். வன்னியில் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மற்றும் வடபகுதிகளுக்கு எந்தவொரு அசுமாத்தமும் தெரியவில்லை என்பது வேறு விடயம்.
  18. அவரின் இறுதி உரை. 👇 //என் இறுதி பயணத்தை தயார்படுத்தி உள்ளேன், நான் இப்போது எனது கடைசி இறுதி பயணத்தை தயார் செய்துள்ளேன். இப்போது, நம் மதத்தின்படி, இறப்பதற்கு முன் மெழுகுவர்த்தியைக் கொடுக்கலாம். எனது உடலை தூக்கிக் கொண்டு செல்லும் சவப்பெட்டியை இலட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து வாங்காமல் அந்தப் பணத்தில் ஏழைப் பிள்ளைகளுக்கு புத்தகம் கொப்பி உணவு என்பனவற்றை வாங்கி தருமாறு கூறியுள்ளேன். எனது மயானத்திற்கு வருபவர்கள் யாரும் அழுது கொண்டு என் பின்னால் வர மாட்டார்கள். அதற்காக நான் ஒரு பாடலை எழுதியுள்ளேன். பழகிய பாதையில் இன்றும் செல்கின்றேன் ஆனாலும் வேறு பயணம்.அதிகமான மக்கள் என் பின்னால் வருகின்றார்கள் நான் தனியாக செல்கின்றேன் என்று நினைத்து. எப்பொழுதுமே எனது பாரத்தை உனது தோளில் இறக்கி வைக்கவில்லை மகனே. கூடுதலான பாரமாக இருந்தால் பூமியில் வைக்கவும் உனது தோல் வலிக்கும் என் மகனே. எமது தோட்டத்தின் பக்கத்தில் உள்ள குளத்தின் அருகில் எனக்கான இறுதிக் குழியை நானே அமைத்து வைத்துள்ளேன் என் சிறிய மகனே.. என்னை விட்டு செல்லும்போது உனது அம்மாவின் மருந்து பற்றுச் சீட்டை மறக்காமல் சென்று கொடுத்து விடு என் மகனே.. எனது பெரிய மகன் ஏற்கனவே இறந்து விட்டான் என் தனிமைக்கு அவன் அங்கு இருப்பான் அவன் என்னை பார்த்துக் கொள்வான் நீ என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம். எனது ஆசை சாதாரண ஏழையைப் போல் என்னை நல்லடக்கம் செய்ய வேண்டும். அதை விட்டு மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தாரை போல் மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை சீரழித்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்து இறப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. நான் தேடியது நான் உழைத்தது என் அரசியல் பயணம் இறுதி வரை ஏழை மக்களுக்காகவே இது நான் எனது சுயநினைவோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சென்று வருகின்றேன். நான் நேசிப்பது என்னை நேசிப்பது ஏழை மக்கள். எனது மூச்சிலும் பேச்சிலும் ஏழை மக்களின் நினைவோடு உயிர் பிரிவேன்.// Translation by Paul ✍️✍️
  19. அரைகுறையாகச் செய்தியை விளங்கிக் கொண்டு வந்து எழுதுகிறீர்கள். https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523
  20. இதை பாஞ் செய்ததாக எழுதவில்லை, ஆனால் இலங்கையில் இறங்கியதும் நடை உடை பாவனையில் உள்ளூர் காரர் போல மாறி "ஜோதியில்" கலந்து விடா விட்டால் இது போன்ற பிரச்சினைகள் வரலாம். பல வருடங்கள் முன்பு நானும் என் ஐரோப்பாவில் வசிக்கும் அண்ணரும் ஊர் போனோம். அவர் கடைக்கு மீன் வாங்கப் போனால் ஒரு கிராமத்திற்கே தேவையான கடலுணவுகளை தலையில் கட்டி அனுப்பி விடுவார்கள் மீன் வியாபாரிகள்😂. உடைகளை அவர் மாற்றிக் கொள்ளவேயில்லை, அது தான் காட்டிக் கொடுத்திருக்கிறது.
  21. இருதய அறுவைச் சிகிச்சையின் பின்... முன்பு போல் எழுத முடியவில்லை என்று சொன்னார். இடைக்கிடை யாழை மேலோட்டமாக பார்ப்பதாகவும் தெரிவித்தார். நீங்களும், ஈழப்பிரியனும் விசாரித்ததாக சொல்கின்றேன் நிழலி. 🙂
  22. வெளிநாட்டுகாரரை எப்படித் தான் மணந்து பிடிக்கிறார்களோ தெரியாது. ஆனாலும் கண்டு பிடித்து விடுகிறார்கள். நான் சொல்வது ஒரு செல்போன் வைத்திருந்தால் வெளிநாட்டுக்காரன் இரண்டு போன் வைத்திருந்தால் உள்நாட்டுக்காரன். சிறி பாஞ்ச் எப்படி இருக்கிறார்? ஏன் யாழைவிட்டு ஒதுங்கி இருக்கிறார்.
  23. அடபாவி 1-2 ஐ களவெடுத்தாலும் பரவாயில்லை. பிடிபட்டிருக்காவிட்டால் ஆட்டுக்காரன் என்னபாடு பட்டிருப்பான்.
  24. இதுவரை வந்தவற்றில் பெரும்பாலும் 3 முதல் 7 ற்குள் உள்ளது தனித்து நிற்பதால்த் தான் . ஆனாலும் இந்த முறை 10க்கு கூட வரும் என்கிறார்கள். ஏற்கனவே பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு கட்சிகளுக்குமாகி விட்ட நிலையில் சிறிய கட்சிகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.
  25. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா🙏🥰.......................
  26. கருத்துக் கணிப்பின்படி ஒருசில இடங்களைத் தவிர அதிமுக பிஜேபி யைவிட முன்னணியில் உள்ளது. நாம் தமிழர் கட்சியால் பிஜேபி யின் வாக்குகளைக் கூடக் கவர முடியவில்லை. மொத்தமாக நாதக 4 முதல் 5 வீதமான வாக்குகளையே பெறும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் வாக்கு இயந்திரத்தைக் குறை கூறுவதிலேயே நிற்கிறீர்கள்.
  27. ஒரு மெளன செய்தி ( இன்று படித்ததில் பிடித்தத்து. ) 100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் உப்மா பரிமாறப்பட்டது. அந்த 100 பேரில் 80 பேர் தினமும் உப்மாவுக்கு பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும் என்று புகார் கூறி வந்தனர். ஆனால், மற்ற 20 பேரும் உப்மா சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீதமுள்ள 80 பேர் உப்மாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர். இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் விடுதி காப்பாளர் வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது. இதன்படி எந்த டிபன் அதிக ஓட்டு வாங்குகிறதோ அந்த டிபன் அன்றே சமைக்கப்படும். உப்மா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர். மீதமுள்ள 80 பேர் கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர். 18 - மசாலா தோசை 16 - ஆலு பரோட்டா & தாஹி 14 - ரொட்டி & துணை 12 - ரொட்டி & வெண்ணெய் 10 - நூடுல்ஸ் 10 - இட்லி சாம்பார் எனவே, வாக்குப்பதிவு முடிவுகளின்படி, உப்மா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது. பாடம்: 80% மக்கள் சுயநலவாதிகளாகவும், பிரிந்து சிதறியவர்களாகவும் இருக்கும் வரை, 20% பேர் நம்மை ஆள்வார்கள்.
  28. நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம்.
  29. இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.
  30. கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
  31. எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
  32. நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣.
  33. இந்த விடயத்தில் எனக்காகவும் சேர்த்தே அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள் என்பதால் நன்றிக் குறி போட்டிருக்கிறேன்! பி.கு: நீங்களும் இனி பப்புக்குப் போய் டயற் பெப்சி குடிப்பதை க் கைவிட வேண்டும்😎. அப்படி ஒரு வெண்டிங் மெசின் கூட இல்லையா லண்டனில் டயற் பெப்சி எடுக்க?
  34. "தைரியமானவள்" வவுனியாவில் உள்ள ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும். இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும். அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை! "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது" கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள் "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்" ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி' காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும் கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது. அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர், பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார். மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக. கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத் திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப் படைத்தனன் நல்கமலத் தோனே! ” பொற்கொடியாளே, வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான். ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல. "எண் அரும் நலத்தினாள் இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்." அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள். அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம். "இசை போன்ற மெல்லிய மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க இறைவி நேரே வந்தது போல இதயம் மகிழ பாடம் புகட்டினான்! " "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி இருவரும் கூடி இன்பம் கண்டனர்!" மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள். அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்! கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல, ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்' ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள். "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து," கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது. "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு" "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை" அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள். சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது. "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  35. நீங்க யாரும் இந்தியாவிடம் விலை போக கூடாது….. நான் மட்டும்தான் போவேன்😂 #தொழில் போட்டி
  36. இதில் எதையுமே தமிழன்பன் குறிக்கவில்லை என்றுதான் படுகின்றது. தனது சொந்த நலனுக்காக மட்டுமே “உழைக்கும்” பிழைப்புவாதிதான் சுமந்திரன். தமிழ் மக்களுக்கோ, அவரைச் சேர்த்த கட்சிக்கோ சுமந்திரன் விசுவாசமாக இருப்பதில்லை. அது போல அவரின் மதத்திற்கும், ஊருக்கும், சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை. ஒரு “எலீஸ்ரிஸ்ற்” ஆக இருக்க முனைவதால்தான் எப்போதும் அதிகாரத்தில் இருக்கும் சிங்களத் தலைவர்களுடன் நல்லுறவில் இருக்கின்றார்.
  37. மேற்குலகு என்பவர்கள் யார்? அவர்கள் இதுவரை எங்களுக்காகச் செய்தது என்ன? 1. 80 களில் இருந்து எம்மைச் சோசலிசவாதிகள் என்று அழைத்து எமது போராட்டத்தை அழிக்கத் துணைபோனவர்கள். 2. எமக்கெதிரான இனக்கொலைக்கு 80 களின் ஆரம்பத்திலிருந்தே ஆயுதமும், பயிற்சியும், ஆலோசனையும், கூலிப்படைகளும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள். 3. உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாம் மேற்கொண்ட உயிர்ப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று அழைத்து உலகெங்கும் எம்மை முடக்கியவர்கள். 4. 2009 வரை இனக்கொலைக்கான சகல உதவிகளையும் செய்து, தமிழர்களின் போராட்டம் முற்றான அழிவையும், தமிழ் மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்படுவதையும் உறுதிப்படுத்தி, தமிழர்களின் இறையாண்மையினை தமது பிராந்திய நலன்களுக்காகவும், சர்வதேச நலன்களுக்காகவும் விருப்பத்துடனேயே எப்பம் விட்டவர்கள். 5. இனக்கொலை முடிவிற்கு வந்தபின்னரும் தமது நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக இனக்கொலையினையும் போர்க்குற்றங்களையும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதைத் தடுத்தும் அல்லது அவற்றை மிகவும் பலவீனமாக்கி, ஈற்றில் நீர்த்துப் போகச் செய்து போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள். 6. இன்றுவரை எமக்கு நடக்கும் அநீதிகளும், எம்மீதான அடக்குமுறையும், எம்மீதான திட்டமிட்ட இனழிப்பும் நடப்பது நன்கு தெரிந்தும், அதனை அமோதித்து வருபவர்கள். 7. எம்மைப்போன்றே விடுதலைக்காகப் போரிடும் இனங்கள் மீதான அடக்குமுறைகளை, படுகொலைகளை ஆதரித்து, உதவிசெய்து, சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி வருபவர்கள். ஆக, இவர்களிடமிருந்துதான் நாம் நற்சான்றிதழ் பெறக் காத்திருக்கிறோம். நற்சான்றிதழ் கிடைத்தவுடன், எமக்கான விடிவும், சுதந்திரமும், எமது தாயகத்தின் விடுதலையும் எமக்குத் தங்கத் தட்டில் கொண்டுவந்து தரப்படும். பிணந்திண்ணிப் பேய்கள். நீங்கள் எழுதுங்கள். உங்கள் உணர்வுகளை அப்படியே எழுதுங்கள், மேற்குலகிடம் இறைஞ்சும் ஜனநாயக மேதாவிகளின் பிதற்றல்களை ஓரத்தில் போட்டுவிட்டு எழுதுங்கள். எமக்கான விடுதலையும், மீட்சியும் எமது கரங்களில் இருந்தே வரவேண்டும். மேற்குலகு ஒன்றும் இறைவர்கள் அல்ல, மிக மோசமான பிணந்திண்ணிக் கழுகுகள். மேற்குலக அக்கிரமப் பிசாசுகளின் விருப்பங்களும், எண்ணங்களும், நோக்கங்களுமே அவர்களின் பணத்தினால் நடத்தப்படும் ஊடகங்களில் வெளிவருகின்றன. சர்வதேச ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டே தமது படுகொலைகளை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆகவே, இவர்களின் ஊடகங்களில் நாம் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டால், நாம் அவர்களுக்கும், அவர்களின் நலன்களுக்கும் எதிரானவர்கள் என்று பொருள். ஆகவே, தொடர்ந்து நடவுங்கள். மேற்குலக ஜனநாயகப் பிணந்திண்ணிகளின் அலோசனைகளை அப்படியே தனது பத்திரிகைக் கட்டுரையில் வரையும், எமது வாழ்தலுக்கான போராட்டம்பற்றிய எதுவித தெளிவும் அற்ற ஒருவன் எழுதும் கருத்துக்களை நாம் பொருட்படுத்த‌த் தேவையில்லை.
  38. அப்பிடி போடு அருவாளை..... இன்று வரைக்கும் விடுதலைப்புலிகள் தமது போராட்ட காலங்களில் கேவலமாக நடந்து கொண்டார்கள் என எந்தவொரு ஊடகங்களும் தெரிவிக்கவில்லை. ஒரு சில தமிழ் வக்கிர இணைய தளங்களை தவிர....
  39. ச‌ரி நீங்க‌ள் சொல்வ‌தை கேட்டு ந‌ட‌க்கிறோம் நீங்க‌ள் சொல்லும் ச‌ர்வ‌தேச‌ம் இந்த‌ 15 ஆண்டுக‌ளில் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ தீர்வை பெற்று த‌ந்த‌து..........................ஏதும் ஒன்றை சொல்லுங்கோ அத‌ற்க்கு பிற‌க்கு நாங்க‌ள் அட‌க்கி வாசிக்கிறோம்................... த‌மிழ‌னுக்கு பிற‌ப்பிலே வீர‌ம் உட‌ம்பில் ஒட்டி பிற‌ந்த‌து ................. ........... வீர‌ம் விளைந்த‌ ம‌ண்ணில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் 25ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மாவீர‌ர் ஆனார்க‌ள்....................... 2009 த‌மிழ‌ர்க‌ளுக்கு கெட்ட‌ நேர‌ம் ந‌ட‌ந்த‌து ந‌ட‌ந்து போச்சு ஆனால் ஆறாத‌ வ‌லி இப்ப‌வும் ப‌ல‌ர் ம‌ன‌ங்க‌ளில் இருக்கு....................இப்ப‌த்த‌ தொழிநுட்ப‌த்தோட‌ சிங்க‌ள‌வ‌ன் கூட‌ நாம் போர் செய்து வெல்வ‌து முடியாத காரியம்.................குடிக்கிம் க‌ஞ்சாவுக்கும் அடிமையா போன‌ இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளை புர‌ட்சிக்கு த‌யார் செய்ய‌ ஏலாது.................சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌ர்க‌ளின் ம‌ண்ணில் கால் வைக்கும் போது ப‌ய‌ங்க‌ர‌ பாதுகாப்போடு தான் வைக்கிறான்.................கார‌ண‌ம் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் சிங்க‌ள‌வ‌னுக்கு கொடுத்த‌ ம‌ருந்து அப்ப‌டி.................. முதுகேலும்பு இல்லாத‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை ந‌ம்ம‌ முடியாது அதிலும் திராவிட‌த்தை ந‌ம்ப‌வே கூடாது ச‌ர்வாதேச‌ம் நினைச்சு இருந்தால் 2013ம் ஆண்டே இன‌ அழிப்பை சாட்டி பொது வாக்கெடுப்பு ந‌ட‌த்தி இருக்க‌லாம் அல்ல‌து ம‌கிந்தா போர் குற்ற‌வாளி என்று அறிவித்து சிங்க‌ள‌வ‌னுக்கு நெருக்க‌டி கொடுத்து பொருளாதாரத் தடை போட்டு சிங்க‌ள‌வ‌ன‌ ச‌ர்வ‌தேச‌ம் வ‌ழிக்கு கொண்டு வ‌ந்து இருக்க‌லாம்...................ஆனால் இதை எல்லாம் செய்யாத‌ ச‌ர்வ‌தேச‌ம் இனி ந‌ம‌க்கு என்ன‌ செய்ய‌ போகுது..................ச‌ர்வ‌தேச‌மே இஸ்ரேல் ப‌ல‌ஸ்தீன‌ பிர‌ச்ச‌னையில் நடுநிலையா செயல்படாமல் ப‌ர்க்க‌ சார்வாய் செய‌ல் ப‌டுகின‌ம்................................
  40. 🙏... மிக்க நன்றி, கோஷான். இங்கு நீங்கள் பலர் மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள். சிலருக்கு நகைச்சுவை நன்றாக வருகின்றது. ஜஸ்டின் போன்ற சிலர் ஒரு கலைக்களஞ்சியம் அளவிற்கு தகவல்களை அறிந்து வைத்திருக்கின்றனர். கவிஞர்கள், ஓவியர்கள், செய்தியாளர்கள், சிந்தனையாளர்கள்..........எல்லாவற்றிற்கும் மேலாக பலர் நட்புடன் ஆதரவளிப்பவர்கள்... இந்த வெள்ளியிலிருந்து அடுத்த மூன்று வாரங்களுக்கு களத்திற்கு நான் வருவது குறைவாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஊருக்கு போகின்றேன். அதன் பின்னர், விட்ட இடத்திலிருந்து ஒடி உள்ளே வந்து விடுவேன்....😀
  41. நன்றி. உங்கள் எழுத்தும், சிந்தனையும் அபாரம். வேலைபளுவின் மத்தியிலும் சுண்டி இழுக்கிறது. குவாலிட்டி மட்டும் அல்ல குவாண்டிட்யும் பிரமிக்க வைக்கிறது. ஒருமுறை @Justinஜெயமோகனை தமிழின் prolific writer என அழைத்தார். அதே போல் நீங்கள் யாழின் புரோலிபிக் எழுத்தாளர். எப்படி சச்சின் ரன் அடிப்பதை மட்டுமே குறியாக கொண்டு விளையாடுவாரோ அப்படி அற்புதமாக, அசுர வேகத்தில் எழுதுகிறீர்கள். இதே போல் எப்போதும் தொடரவும்🙏.
  42. உண்மையிலேயே மிகவும் அருமையான மனிதர், எனக்கும் instructorஆக இருந்தவர், நீங்களும் நானும் ஒரே காலத்தில் அங்கே இருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இங்கு அவர் வேறு விரிவுரையாளர்களுடன் வந்தபோது ஒன்று கூடல் ஒன்று வைத்தோம்
  43. 👍........ இவர் கிளிநொச்சியில் உள்ள பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்த பொழுது நன்றாகவே செயற்பட்டார் என்று நினைக்கின்றேன். சமூக ஊடகங்களில் சிறு சலசலப்புகள் ஒன்றோ, இரண்டோ வந்திருந்தன. மற்றபடி நான் வேறு எதுவும் கேள்விப்பட்டதில்லை. ஒரு தடவை இவரும், அங்கு பணியாற்றும் சில விரிவுரையாளர்களும் இங்கு அமெரிக்கா வந்து சில சந்திப்புகளை நடத்தினர். நானும் பங்குபற்றியிருக்கின்றேன். பின்னர் ஒரு தடவை நாங்கள் சில பேர்கள் கிளிநொச்சி போயிருக்கின்றோம். உங்களிடம் பொதுவெளியில் பகிரக் கூடிய தகவல்கள் எதுவும் இருந்தால், உங்களுக்கு ஆட்சேபணைகள் எதுவும் இல்லாமலும் இருந்தால், அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.
  44. சர்வதேச மகளீர் தினம்(08.03.2024) அதற்காக எழுதிய கவிதையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றிகள். தாயின்றி நாமில்லை.! ************************ பூமித்தாய் என்று சொல்லும் புவிகூடத்தாய் தானே-வானில் பொட்டதுபோல் சுற்றிவரும் நிலவுகூட பெண்தானே நீலத்தால் சாறிகட்டி நிலம் காக்கும் கடல் அவளும் தாய் தானே நித்திலத்தில் தாய்க்கு நிகர்-எதுவும் இல்லை என்பேன் சரிதானே. சிந்து,கங்கை,யமுனை,சரஸ்வதி சித்தப்பா பிள்ளைகளா? காவேரி,குமரி,கோதவரி,நர்மதா. பெரியப்பா பிள்ளைகளா? இல்லை இல்லை இயற்கை ஈண்றெடுத்த நதித் தாய்கள் இவைகளும் பெண் பெயாரால் உயிர்த்தார்கள். பூமிதன்னில் பெண்ணினமே இல்லையென்றால் போட்டியிடும் ஆண்களெங்கே? பொறுமையெங்கே? ஆணினம்தான் அகிலத்தில் தனித்திருந்தால் அன்பு எங்கே? காதல் எங்கே? இனிமை எங்கே? கற்பனைக்கு பெண் இனமே இல்லையென்றால் கவிஞரெங்கே?கலைஞர் எங்கே? கலைதானெங்கே? கர்ப்பத்தில் எமைத் தாங்கி வளர்க்காவிட்டால் கல்வியெங்கே? கருணையெங்கே? காசினிதானெங்கே? பொன்னுலகம் பெண் இனத்தை மறந்திருந்தால் புதுமையெங்கே,புலமையெங்கே புரட்சியெங்கே? மண்ணகமும் வாழ்வதற்காய் படைத்து தந்த மாதவத் தாய்யினத்தை மதித்து வாழ்வோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  45. நேரான நீண்ட ஒரு நடைபாதை. நேர் என்றால் அடிமட்டம் வைத்து கோடு போட்ட ஒரு நேர். இரண்டு பக்கங்களிலும் அடுக்கி வைத்தது போல வீடுகள் அடுக்கடுகாக இருக்கின்றன. நான் தினமும் கடந்து நடக்கும் வீட்டு வாசல்கள். வாசல்கள் அதன் உள்ளிருக்கும் வீடுகளை மறைத்து வைத்திருப்பது போல, முகங்களும் அகங்களை பெரும்பாலும் மறைத்து வைத்து இருக்கின்றனவோ என்று தோன்றும். அகத்தின் அழகோ அல்லது சிக்கல்களோ முகத்தில் அவ்வளவாக வெளிப்படுவதில்லை. தேடித்தான் கண்டறிய வேண்டியிருக்கின்றது. ***** வாசலும் வீடும் ----------------------- வாசல்கள் அழகானவை ஒழுங்கானவை நேர்த்தியாக அடுக்கப்பட்டவை வாசல்களின் உள்ளிருக்கும் வீடுகள் உள்ளே தலைகீழாக எவ்வளவு புரட்டிப் போடப்பட்டிருந்தாலும் பூந்தொட்டிகள் தொங்கும் செடிகள் கஞ்சல்கள் இல்லாத கால்மிதிகள் வாசலில் அவசரத்தில் பார்த்தால் அநேக வாசல்களும் அழகே நிதானத்தில் பார்த்தால் பல வாசல்களும் ஒன்றே என்றும் எல்லாமே ஒரு ஒப்பனையோ என்றும் தோன்றும் வெகுசில வாசல்கள் பயத்தை தருகின்றன தனித்தவர்களும் துணிந்தவர்களும் அதன் உள்ளே வாழ்கின்றனர் எப்போதும் கரப்பான் மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் வாசல்கள் வேரோடி வெடித்து கவனம் இன்றி கைவிடப்பட்ட சில வாசல்கள் ஒரு வாசலில் மண்டையோடும் இருந்தது இன்னொன்று அகலிகையுடன் கல்லாகி இன்று வரை உயிர் கொடுக்கப் போகும் ஒருவருக்காக காத்துக் கிடக்கின்றது வாசல் தாண்டி வீடுகளுக்குள் மனிதர்கள் வருகின்றனர் போகின்றனர் வாழ்கின்றனர் பிரிகின்றனர் குப்பை ஆகின்றன வீடுகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.