Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19125
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    12678
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/27/24 in all areas

  1. நம் வாழ்வில் நாம் மறக்க முடியாத பலநாட்களை பலமுறை நாம் கடக்கின்றோம் சில நாட்கள் நம் வாழ்வில் - நாம் மறக்கவே முடியாமல் சிதளூரும் காயங்கள் போல் நித வருத்தம் தருவன 2009, சித்திரை 27 கடற்கரை மணலில் குளிரூட்டப்பட்ட திடலில் காலைச் சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட விடுமுறையில் மூன்று மணி நேரம் கலைஞரின் நாடகம் அரங்கேறிய நாள் தியா காண்டீபன் கலைஞரின் உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றப்பட்ட பின்னரே ஐம்பதாயிரம் வரையான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் https://www.vinavu.com/2009/05/11/congress-dmk-drama/ https://www.keetru.com/.../10-sp.../8834-2010-05-22-01-32-26
  2. இன்றைய நாளை ஈழத்தமிழர்கள் எவரும் மறக்கவே கூடாது. பதிவுக்கு நன்றி தீயா.
  3. பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும். அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை). ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள். ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
  4. நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
  5. நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன். நாங்கள் என்ன செய்தோம். போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம். 2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள். ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  6. "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 01 'அறிமுகம்' / 'Introduction' இத் தொடர் திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி, முடிந்த அளவு மனிதனின் ஆரம்ப காலத்தில் இருந்து, சுமேரிய, ஹரப்பா - மொகெஞ்சதாரோ, சங்க கால, மத்திய கால அல்லது பக்தி காலத்தின் ஊடாக ஆய்வு செய்யவுள்ளது. பெரும்பாலான திராவிடர்கள் வாழும் தென் இந்தியா மிளகு, கிராம்பு, ஏலம், இலவங்கம் [கருவா] போன்ற பல வகையான வாசனைத் திரவியங்களின் உற்பத்தி இடமும் ஆகும். உண்மையில், மிளகு போன்றவை இங்கு தான் முதலில் வளர்ந்தன. திராவிடர்களின் முக்கிய உணவு, பல ஆயிரம் ஆண்டுகளாக, இன்று வரையும் - அரிசி, அவல், பொரி, மா, இப்படி பல வகையான வேறுபாடுகள் கொண்ட - நெல் அரிசி உணவை அடிப்படையாக கொண்டது. அது மட்டு அல்ல, காலப் போக்கில் , தென் கிழக்கு ஆசியாவினது சமயலும், சில இஸ்லாமிய ஐதராபாத் நவாப் காலத்து சமயலும் திராவிடர்களின் உணவு பழக்கங்களில் சில, சில தாக்கங்களை உண்டாக்கின. என்றாலும் பொதுவாக, திராவிடர்களின் சமையலறை தனித்துவமாகவும் கலப்பு அற்றதாகவும் கடந்த 6000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இன்றைய நவீன கால திராவிடர்களின் உணவை இரு வகையாக பிரிக்கலாம். அவை சைவம், அசைவம் ஆகும். புலால் உணவு / மிருக பகுதிகள் தவிர்த்த அனைத்தும் சைவ உணவாகும். தாவரங்கள் சார்ந்த, செடிகளில் இருந்து கிடைக்கும் தாணியங்கள், காய் கறிகள், பழங்கள், மர வகை உணவுகள், பால், வெண்ணை, நெய் அனைத்தும் சைவ உணவுகள் ஆகப் கருதப் படுகின்றன. என்றாலும் இங்கு பால், வெண்ணை, நெய் என்பன தாவர உணவு அல்ல. சுருக்கமாக, மரக்கறி உண்பதை சைவம் என்றும், மச்சம் [" மச்சம் " - "மாமிசம்"] உண்பதை அசைவம் என்றும் பொதுவாக கருதப் படுகிறது. என்றாலும் இறைச்சியும் மீனும் கிட்டத்தட்ட எல்லோராலும் குறைந்த அளவிலேயே சாப்பிடப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விலை அதிகமாக இருப்பதும், அதே நேரம் மரக்கறிகள் ஒவ் வொரு தோட்டத்திலும் வளர்வதும் ஆகும். அரிசி முக்கிய உணவாக இருப்பதுடன் தென் இந்தியா, இலங்கை கரையோர பகுதி மக்களின் உணவில் மீனும் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேலும் பல விதமான கடல் உணவுடன், ஒரு முக்கிய உணவு சமைப்பதற்குப் பயன்படும் கூட்டுப்பொருளாக, தேங்காயும் கேரளம், கடலோர கர்நாடகம், இலங்கை போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. அதே நேரம் இன்சுவை மிகுந்த ஊறுகாய், காரமான நறுமண கறிகள், மிளகாய் தூள் தாராளமாக பயன்படுத்துதல் போன்றவை ஆந்திர உணவு வகைகளில் அதிகமாக காணலாம். பொதுவாக ஆந்திரா சாப்பாடு என்று சொன்னாலே பலருக்கு கண் எரியும். தென் இந்தியா முழுவதும் தோசை, இட்லி (இட்டளி), ஊத்தப்பம் போன்றவை மிகவும் பிர பல மானவை. உதாரணமாக, தமிழ் நாட்டில் இட்லி, தோசை, பொங்கல், சாம்பார், வடை போன்றவை பொதுவான காலை உணவாக உள்ளது, அதே நேரத்தில் - தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளிற்கு இடையிலான வேறுபாடுகளுடன் - இலங்கை தமிழ் உணவுகள், இந்தியா தமிழ் உணவில் இருந்து பலவகையில் தனித்துவமாக உள்ளது. மதிய உணவிற்கு சோறும் கறியும் பரவலாக இருப்பதுடன், காலை உணவிற்கும், இரவு உணவிற்கும் அரிசி மாவினால் அதிகமாக 12 சதம மீட்டர் விட்ட, வட்ட வடிவில் தயாரிக்கப்பட்ட இடியப்பமும் தக்காளி சொதியும் கறியும் இலங்கையில் [கேரள மாநிலத்திலும்], அதிக அளவில் காணப்படுகிறது. அத்துடன் மூங்கிலால் செய்யப்படும் பிட்டுக் குழலில் அல்லது பனையோலையினால் செய்யப்பட்ட கூம்பு வடிவான நீற்றுப் பெட்டியில் அவித்த அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்ட பிட்டும் [புட்டும்], வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் சுடப்படும் அரிசி மா அப்பமும் இலங்கை தமிழர்களிடம் பிரபலமானவை. மேலும் தேங்காய் பாலும் உறைப்பு ["உறைப்பு " - "காரம் "] கூடிய மிளகாய் தூளும் பெரும் பாலும் அங்கு சமையலுக்கு பாவிக்கப்படுவதுடன், பல தரப்பட்ட ஊறுகாய் [அச்சாறு], வடகம் மற்றும் மாவுடன், பணை வெல்லம், எள், தேங்காய், நல் லெண்ணெய் போன்றவைகளை முதன்மையாக பாவித்து வீட்டில் செய்யப்பட்ட பயத்தம் பணியாரம், மோதகம் / கொழுக்கட்டை, பால்ரொட்டி, முறுக்கு, அரியதரம், அவல் போன்ற இனிப்பு வகைகள், வேறு பிற சிற்றுண்டிகள் தனித்துவான மண் வாசனையை அவர்களுக்கு கொடுக்கிறது. இலங்கை மக்களால் மிக மிக விரும்பி உண்ணப்படும் இனிப்பு சீனி அரியதரம் அல்லது அரியதரம் ஆகும். இது திருமணம் போன்ற கலாச்சார வைபவங்களில் மிகமிக முக்கிய இடத்தை வகிக்கிறது. நான் 'திராவிடம்' என்னும் வார்த்தையை இங்கு தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல் - தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு - போன்ற கருத்துக்களில் மட்டுமே பாவிக்க உள்ளேன் ,அதாவது திராவிடம் என்பது, தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடும் அம்மக்களின் மொழியும் ஆகும் என்ற ஒரு பொது கருத்தில் மட்டுமே பாவிக்க உள்ளேன் . உதாரணமாக திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல். சமற்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை, திராவிடரும் இல்லை. ஆனால் சமற்கிருதம் நீக்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியே". அதேபோல "ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் 'த்ரமிளர்' என்றழைக்கப்பட்டு 'த்ரவிடர்' என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்று ள்ளது" என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அதே போல கி.பி 17ம் நூற்றாண்டில், தாயுமானவர் "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்" என்று படித்தவர்களின் போலியை நகைக்கிறார். அதில், "வடிமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் [வடமொழியிலே வல்லவனான ஒருத்தன் வந்தால்] த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் [திராவிடத்திலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரமாக சொல்லுவேன்] வல்ல தமிழறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்" என்று கூறுகிறார்.'தமிழ் மொழியும் தெரியும்' என்று சொல்வதற்கு பதிலாக 'திராவிடமும்' தெரியும் என்று தான் பயன்படுத்துகிறார் என்பதையும் கவனிக்க. அதாவது ராபர்ட் கால்ட்வெலுக்கு குறைந்தது 100 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி கூறுகிறார். இதிலிருந்து 'தமிழம்' / 'தமிழ்' என்ற சொல்லே வட மொழியில் 'திராவிடம்' என்றானது. திராவிடம் என்ற தனித்த மொழியோ, இனமோ இல்லை. 'தமிழ்' தான் 'திராவிடம்'. 'திராவிடம்' தான் 'தமிழ்' - 'தமிழரை'த் தான் 'திராவிடர்' என்று குறித்தார்கள் என்று அறிய முடிகிறது என்பது என் கருத்து. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி :02 'அறிமுகம் தொடர்கிறது' தொடரும் "FOOD HABITS OF TAMILS" / PART 01 'Introduction' This thread is aimed to show you the food habits of Dravidians, mainly Tamil people - from first man, through Sumerian, Harappa-Mohenjo daro, Sangam period, Medieval or Bhakti period. South India, where majority of Dravidians live, is the home of all kind of spices, in fact spices like black pepper grew originally only in this region. Staple Food in Dravidians is mostly based on rice in all kind of variations. There has been influences from South East Asia, but also in some parts by the Islamite kitchen during the time of Hyderabad Nawabs. But all in all the Dravidian kitchen has been independent and pure for the last 6000 years or so. Modern Dravidian food could be divided in two categories. Veg and Non-Veg. Meat and fish is eaten by virtually all people to a lesser extent, because these items are costly, while Veg food grows in every garden. Rice is the staple diet, with fish being an integral component of coastal South Indian and Srilankan meals, along with various kind of seafoods. Coconut is an important ingredient in Kerala and costal part of Karnataka of South India as well as sri lanka, whereas the cuisine in Andhra Pradesh is characterized by the delicious pickles, spicy aromatic curries and the generous use of chili powder. Dosa, Idli, Uttapam etc. are popular throughout the South Indian region. Tamil Nadu is well known for its idli, dosai, pongal, sambhar [a lentil-based vegetable stew], vadai which is the common breakfast in Tamil families, But in Sri Lanka, Tamil dishes distinct from Indian Tamil cuisine, with regional variations between the island's northern and eastern areas. While rice with curries is the most popular lunch menu, String hoppers, which are made of rice flour and look like knitted vermicelli neatly laid out in circular pieces about 12 centimetres (4.7 in) in diameter, are frequently combined with tomato sothi (a soup) and curries for breakfast and dinner. Another two common items among the sri lankan Tamils is puttu, a granular, dry, but soft steamed rice powder cooked in a bamboo cylinder with the base wrapped in cloth so that the bamboo flute can be set upright over a clay pot of boiling water. and Appam, a thin crusty pancake made with rice flour, with a round soft crust in the middle. It has variations such as egg or milk Appam, Coconut milk and hot chilli powder are also frequently used by sri lankan Tamils along with a range of achars (pickles) and vadakams. as well as Snacks and sweets are generally of the homemade "rustic" variety, relying on jaggery, sesame seed, coconut, and gingelly oil, to give them their distinct regional flavour. Here the term term "DRAVIDIAM" OR "DRAVIDIAN" is only used in the following sense: Robert Caldwell used the term Dravidian (from the Sanskrit word for "southern") to separate the languages spoken in South India from other, more Sanskrit - affiliated languages of India. Also, here Dravidian denotes the peninsular South and not just Tamizh Nadu. (It is only geographic indicator and not racial). For example: Shankaracharya in Soundarya Lahiri, uses "Dravida Sisu". He was from present day kerala. Though the word "Dravidian" is seemly used incorrectly, My understanding here is Robert Caldwell found Tamil Language Group in south India, but he don’t wanted to call it Tamilian Language group. Since Tamilian means Tamil People (people who speak Tamil language). So he marked this group of Languages as “Dravidian Languages.” In the ancient India, the term Dravidian was loosely used to refer to all Southern people, but not their languages. It was the 19th century British scholar, Bishop Robert Caldwell (1875), who originally coined the name “Dravidian”. According to him; "The word I have chosen is 'Dravidian' from Dravida, the adjective form of Dravida. The term is still sometimes used as that of Tamil itself. …. On the whole it is the best term I can find, I admit that it is not perfectly free from ambiguity. It is a term which has been used more or less distinctively by Sanskrit philologists (grammarians), as a generic appellation for the South Indian people and their languages, and it is the only the single term they seem to have used in this manner. I have, therefore, no doubt of the propriety of adopting it. A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages, Page-4" There is no clear etymology for the word Dravidam. Robert Caldwell a Christian missionary who learnt Thamizh and many other languages,wrote a book called "Dravida mozhigalin oppilakkanam" (A comparative Grammar of the Dravidian or the South Indian family of Languages) where he used the word Dravidam to mean a group of languages, which are related to Tamil. Previously such languages were used to be called as “Tamulic” languages. All my articles, I used the term 'Dravidiam' or "Dravidian" only in this sense,.though true sense It is a misleading and incorrect word! Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART :02 'Introduction continuing' WILL FOLLOW
  7. இதில் மூன்று விடயம். Small businesses are the engine of the economy என்பது யூகே அரசியலில் தாரக மந்திரம். பொருளாதாரம் முன்னேற சிறு வியாபாரம் உயர்வது அவசியம். அடி மட்டத்தில் பணம் புழங்கினால்தான், மக்கள் காசை செலவிடுவர், மக்கள் காசை செலவிட்டால்தான் பொருளாதாரம் வளரும். இந்த 50 டொலர் காரர் நேரடியாக ஹோஸ்டல் நடத்துபவர், கொத்து ரொட்டிகாரார், இளனி விற்பவருக்கு நேரடியாக 50 டொலரை கொடுப்பார்கள், ஆனால் 300 டொலர் காரர் 5 நட்சத்திர ஓட்டலில் செலவழித்து அது கீழ் மட்டத்துக்கு ஒழுகி வரும் போது (trickle down economy) 30 டொலர் வருவதே பெரிய விடயமாக இருக்கும். அடுத்தது எண்ணிக்கை. 4x250 = 20x50. நாட்டின் பொருளாதாரத்துக்கு 4 நட்டத்திர விடுதி இலாபம் பார்பதை விட 20 ஹொஸ்டல் லாபம் பார்ப்பது நல்ல பலனை தரும். மூன்றாவது Trail Blazers. எப்போதுமே ஒரு இடத்துக்கு முதலில் போவது backpackers, shoe-string budgeters எனப்படும் 30 டொலர் பேர்வழிகள்தான். அவர்கள் போய் ஒரு vibe ஐ உருவாக்க, பின் tour operators 300 டொலர் பார்ட்டிகளை கூட்டி வருவார்கள். இன்றைய insta உலகில் - இந்த 30 டொலர் பார்ட்டிகள் கிட்டதட்ட ஒரு நாட்டுக்கு brand ambassadors போல. ஆகவே எல்லாரையும் கவரும் விதமாகவும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் சுற்றுலா துறையை கட்டி எழுப்பலாம் என நான் நினைக்கிறேன். #அதிதி தேவோ பவ🤣 இதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியாவும், சீனாவும், ரஸ்யாவும் சராசரி மனிதருக்கு ஏழை நாடுகள்தான், அதே சமயம் பெரும் பணக்காரரின் நாடுகள் கூட.
  8. Makeup Pic👆 With Out Makeup👆 இது தான் மேக்க‌ப் ம‌ற்றும் மேக்க‌ப் இல்லாம‌ எடுத்த‌ ப‌ட‌ம் இன்னும் நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இணைய‌த்தில் கொட்டி போய் கிட‌க்கு............................................
  9. என்ன மாதிரி? காணியளின்ர உறுதியளையும் கையோட தரோணுமோ 😂
  10. JVP அல்ல, எந்தக் கட்சி ஆட்சி அமைந்தாலும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் அசையாச் சொத்துக்களைக் கொள்வனவு செய்தோரின் நிலைமை மோசமடையலாம். ஏனென்றால் இலங்கையில் காணிப் பதிவு செயல்முறையை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்போகிறார்கள் என்று அரசல் புரசலாகக் கதை அடிபடுகிறது. அதனை மிகவும் வேகமாக செயற்படுத்த முனைப்புக் காட்டுகிறார்கள் என்று கேள்வி. அதனால் அதிகம்பாதிக்கப்படப்போவது புலம்பெயர் தமிழரே. ☹️
  11. இதை மறந்து விட்டேன் மற்ற ஒரு கோணத்தில், மிளகு (காயவைத்தே அதன் கருமை நிறம், அதுவும் ஒரு விதத்தில் கருகல் தான்) உட்பட வேறு வாசனை திரவியங்கள் காய வைத்தே தூள் ஆக்க படுகிறது. அனால், மிளகாய் மாத்திரம் ஏன் புற்றுநோய் ஊக்கி உருவாகுவதில் பெரிய பங்கு வகிக்கிறது என்பதை சொல்லும் விஞ்ஞான ஆய்வை இதுவரை காணவில்லை.
  12. எனக்கும் இந்த 3வது ஆப்சன் அதிக ரிஸ்கியாகவே தெரிகிறது. வெளிநாட்டினர் காணி வாங்க முடியாது, ஆனால் அவர்களுக்கு பெற்றார் காணியை கிரயம் பண்ணலாம் என இருப்பது நிச்சயம் ஒரு சட்ட-ஓட்டை (loophole) தான். இதை ஒரு சட்ட திருத்தம் மூலம் அடைக்கலாம். அதன் பின் இந்த திருத்தம் பின்னோக்கி பாயுமா இல்லையா (does it have retrospective effect) என பார்க்க வேண்டும். பொதுவாக காணி சட்டங்கள் பின்னோக்கி பாய்வதில்லை. அது நியாயமும் இல்லை. ஆனால் சொல்ல முடியாது அதுவும் இலங்கையில் எதுவும் நடக்கலாம். பிறகு வழக்கு எண்டு ஏறி இறங்க வேண்டி வந்தால் - கனடாவில் இருந்து இதை கொண்டு நடத்த வேண்டும். உள்ளதில் ரிஸ்க் குறைவு என்றால் இரெட்டை பிரஜா உரிமைதான் - என்பேன் நான். பலருக்கு 72 சிறிமா ஆட்சியும், நில உச்ச வரம்பு சட்டமும் மறந்து விட்டது அல்லது தெரியாது என நினைக்கிறேன். இப்போ JVP ஆனது NPP என ஒரு மிதவாத முகமூடியோடு வருகிறது. ஆட்சிக்கு வந்தால் முகமூடி களரலாம். முடிவாக. பாட்டியின் காணியை பேரனாக பொறுப்பெடுத்தமைக்கு வாழ்த்துக்கள். ஏதாவது புதிய தகவல்கள் வரும் போது தெரியப்படுத்துங்கள்🙏. குட் லக்.
  13. இதுவரை நான் பொது வேட்பாளரை ஆதரித்தது இல்லை. ஆனால் இந்த முறை முயற்சிபதில் தவறில்லை என நினைக்கிறேன். ஆனால் எல்லாரும் உடன்பட வேண்டும். பகிஸ்கரிப்பால் ஒரு பலனுமில்லை. தமிழரில் 10% கூட இந்த முடிவை ஆதரிப்பது சந்தேகமே. ஆனால் யாழில் ஒரு எம்பி சீட்டை தக்க வைக்க இது போதுமாயிருக்கும்.
  14. உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, இலங்கை இராணுவ புலனாய்வு துறையால் வழிநடத்திப்படும் டிரிபோலி பிளாட்டூன்னாலே (Tripoli Platoon) நடத்தப்பட்டது என்பது தற்பொழுது உலகறிந்த பரமரகசியமாகும். சஹாரன் குழுவையும், புலனாய்வு துறையையும் ஒருங்கிணைப்பதில் பிள்ளையானும், அவரது சகாக்களும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்கள். எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஈடுபடடவர்களுக்கு மிகப்பெரிய ஆப்பு காத்திருக்கின்றது.
  15. நான் நினைக்கிறேன் , 2009க்கு முன்பு வன்னியில் போராளிகள், தலைவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள செயற்பாட்டாளற்களுடன் தொடர்பில் இருந்தார். 2009 க்கு பிறகு அவர்தொடர்பில் இருந்த வன்னியில் இருந்துதப்பியவர்களில் ஒரு சிலரும் , புலம்பெயர் நாடுகளில் உள்ள செயற்பாட்டாளராக இருந்தவர்களில் சிலரும் தெரிந்தோ தெரியாமலோ இந்திய இலங்கை உளவு அமைப்புகளினால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். இவர்கள் சொல்வதினை நெடுமாறன் அவர்கள் உண்மை என்று நம்பியிருக்கலாம்.
  16. KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது. வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர். நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன. பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும். கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
  17. இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள் சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள். ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
  18. இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோட்டோரியின் நியமனம் பற்றி வெளியிட்டுள்ள தலைப்புச் செய்திகளில் 'முதல் பெண் தலைவர்' மற்றும் 'முதல் முன்னாள் விமானப் பணிப்பெண்' , 'அசாதாரண நியமனம்' என்று பலவாறு குறிப்பிட்டு வருகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகச் சிறிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர் சிஸ்டம் (JAS) என்னும் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக டோட்டோரி பணிபுரிந்தார். அதைக் குறிப்பிட்டு, 'இவரெல்லாம் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரா?' எனும் தொனியில் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு வலைதளம் அவரை 'ஒரு அந்நிய மூலக்கூறு' என்றும் 'ஒரு விகாரம்' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. டோக்கியோவில் இருந்து பிபிசியிடம் உரையாடிய டோட்டோரி, "அந்நிய விவகாரம்’ பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது," என்று கூறி சிரிக்கிறார். இவ்வளவு விமர்சனங்கள் ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விமான நிறுவனங்கள் வழக்கமாக உயர்மட்ட பதவிகளுக்கு வசதியான மேல்தட்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். டோட்டோரி இந்த ‘எலைட் (மேல்தட்டு)’ வரையறைக்குள் இல்லை. இதற்கு முன் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர்களாகப் பதவி வகித்த 10 பேரில் ஏழு பேர் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். ஆனால், டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஜப்பானை பொறுத்தவரையில், 1%-க்கும் குறைவான முன்னணி நிறுவனங்களில்தான் பெண்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். டோட்டோரியின் நியமனத்தைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த 1% நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் பேசிய டோட்டோரி, "நான் என்னை முதல் பெண் தலைவர் என்றோ தலைவரான முதல் விமான பணிப்பெண் என்றோ முன்னிறுத்த விரும்பவில்லை. நான் ஒரு தனிநபராகப் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் என் மீது இவ்வளவு பேர் இந்த அளவு கவனம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்கிறார். "மேலும், பெருநிறுவன பிரமுகர்கள் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களும் சக ஊழியர்களும் என்னை அப்படிப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்றும் கூறுகிறார். ஜப்பான் மக்களின் அன்பைப் பெற்ற விமானப் பணிப்பெண்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விபத்து அண்மையில், ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. விமானத்தில் இருந்து பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு டோட்டோரியின் நியமனம் அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516, ஓடுபாதையில் காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் கேப்டன் படுகாயமடைந்தார். இருப்பினும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், ஏர்பஸ் A350-900 விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர். விமானப் பணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த விபத்தில் இருந்து பயணிகள் காப்பாற்றப்படக் காரணம் என மக்கள் பாராட்டினர். முன்னாள் விமானப் பணிப்பெண்ணான, டோட்டோரி விமானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர். ஆரம்பக் காலகட்டத்தில் அவர் பணியில் இணைந்ததும் முதலில் கற்றுக் கொண்டது விமானப் பாதுகாப்பு பற்றித்தான். கடந்த 1985ஆம் ஆண்டில், அவர் விமான பணிப்பெண்ணாகப் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தில் சிக்கியது. ஒசுடாகா மலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 520 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியருக்கும் ஒசுடாகா மலைக்குச் செல்லவும் அங்கு விபத்து நடந்ததை நேரில் பார்த்த மக்களிடம் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது." "நாங்கள் எங்கள் பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தில் விபத்துப் பகுதியில் கிடந்த விமானப் பாகங்களையும் காட்சிப்படுத்தினோம், ஒரு பெரிய விபத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் படிப்பதற்குப் பதிலாக எங்கள் சொந்தக் கண்களால் பார்த்தோம். விமான விபத்தின் நேரடிக் காட்சிகள், இழப்பு அனைத்தையும் எங்களால் அன்றைய தினத்தில் உணர முடிந்தது," என்று டோட்டோரி கூறினார். மாறிவரும் ஜப்பான் ஏர்லைன்ஸ்-இன் முகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலைமையில் இருந்தது. உயர் பதவியில் அவர் நியமனம் செய்யப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், 2010இல் ஜப்பான் ஏர்லைன்ஸ் திவாலானதில் இருந்து அதன் நிலைமை வேகமாக மாறி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், அரசாங்கம் கொடுத்த நிதி ஆதரவின் காரணமாக விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு புதிய செயற்குழு மற்றும் நிர்வாகத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பெரிய மறுசீரமைப்புக்கு உட்பட்டது. மேலும், அந்நிறுவனத்தின் அப்போதைய 77 வயதான ஓய்வு பெற்ற அதிகாரியும் புத்த துறவியுமான கசுவோ இனாமோரியின் (Kazuo Inamori) நடவடிக்கைகளால்தான் ஜப்பான் ஏர்லைன்ஸ் புத்தாக்கம் பெற்றது. நிறுவன ஊழியர்கள் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தனர். அவர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது புரட்சிகரமான நிர்வாகம் இல்லாமல் டோட்டோரி போன்ற ஒருவர் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவராகி இருக்க வாய்ப்பில்லை. 'இது பெண்களுக்கான நம்பிக்கை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பான் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரான கசுவோ இனாமோரி கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது இனாமோரியிடம் நான் பேசினேன், மனதில் பட்டதைப் பேசினார். அவர் தன் வார்த்தைகளைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஜப்பான் ஏர்லைன்ஸ் `தனது வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு திமிர்பிடித்த நிறுவனம்` என்று கூறினார். இனாமோரியின் தலைமையின் கீழ், நிறுவனம் அதிகாரத்துவ பதவிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விமானிகள், பொறியாளர்கள் போன்ற முன்னணி நடவடிக்கைகளில் இருக்கும் ஊழியர்களை உயர்த்தியது. "இந்த நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் போன்று உணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் சுலபமான அதிகார பலத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தில் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்," என்று 2022இல் இனாமோரி என்னிடம் குறிப்பிட்டார். அதன்பிறகு ஜப்பான் ஏர்லைன்ஸ் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது. தற்போது அதற்கு முதல் பெண் தலைவரும் கிடைத்துவிட்டார். நாட்டில் பெண் தலைமை நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டளவில் நிர்ணயித்த இலக்கை அடையத் தவறிய பின்னர், எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் முக்கிய வணிகங்களில் மூன்றில் ஒரு பங்கு தலைமைப் பதவிகள் பெண்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது. "இது கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளின் மனநிலையைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு மேலாளராக ஆவதற்கு பெண்களுக்கு நம்பிக்கை இருப்பதும் முக்கியம். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?" என்கிறார் டோட்டோரி. "எனது நியமனம், மற்ற பெண்கள் முன்பு முயற்சி செய்யப் பயந்த விஷயங்களை முயல ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் டோட்டோரி நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/cq5ner5wr8wo
  20. 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது. யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார். வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார். நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார். ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’ பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார். ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
  21. இன்று காலை அலுவலகத்திற்கு வந்துகொண்டு இருந்தேன். நிறைய கம்பெனிகள் இங்கே சனி ஞாயிறு விடுமுடை. சிப்காட்டுக்குள் போய்க்கொண்டு இருக்கும் போது ரோடு வெறிசோடி கிடந்தது. தூரத்தில் போகும் போதே அந்த காட்சி என் கண்ணில் பட்டது. ஒரு டிவிஎஸ் வண்டி ரோட்டோரமாக நின்றுகொண்டு இருந்தது. ரோட்டில் ஒரு முதியவர் நின்று கொண்டு தார்ரோட்டில் கொட்டிக்கிடக்கும் சாதத்தை பார்த்துக்கொண்டே நிற்கிறார். அவர் கையில் வெறும் டிப்பன் பாக்ஸ் ஒன்று ஒரு சின்ன பாக்ஸ் ஒன்று இருக்கிறது. அவர் கீழே கிடந்த உணவை வெறித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவரைப்பற்றி சொல்லனும்னா படிச்சவர் மாதிரி இருந்தார். கண்ணாடி அணிந்து இருந்தார், வயது அறுபது நெருங்கும் தோற்றம். வெள்ளை சட்டை, பிரவுன் கலர் பேண்ட். அவர் பக்கத்தில் நெருங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று யூகித்துவிட்டேன். கொண்டு போன லன்ச் பேக் அருந்து , கீழே விழுந்து, கொண்டு போன உணவு எல்லாம் கொட்டிவிட்டது. சில காட்சிகளை பார்த்துவிட்டு அந்த இடத்தை நம்மால் கடக்க முடியாது. ஒரு இரண்டு வார்த்தை உச்சு கொட்டிவிட்டாவது சென்றால்தான் திருப்தியாக இருக்கும். நானும் அதே நோக்கத்தோடு வேகத்தை குறைத்து நின்று… “ஐயோ கீழே கொட்டிருச்சா”. அவர் தலையை மட்டும் அசைத்தார். அப்போதுதான் முகத்தை பார்த்தேன் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. உடைந்து போய் நின்றார். அய்யா… இதுக்குபோய் ஏன் கலங்குறீங்க? தப்பா நினைக்க வேண்டாம். லன்ச்க்கு பணம்வேணா தரேன். விடுங்க அய்யா கொட்டியதை அள்ளவா முடியும்.. உங்க முகத்தை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்று முட்டாள்தனமாக பேசிட்டேன். என்னை ஒரு பார்வை பார்த்துட்டு அவர் பர்ஸ் எடுத்து காட்டினார். நிறைஞ்சு இருந்தது. “என் ஒய்ப் ஆசை ஆசையா காலையில் ஐந்து மணிக்கு எழுந்து எனக்கு பிடிச்சதை சமைச்சு கொடுப்பா சார். மூட்டுவலி & சுகர் இருக்கு. உடம்புக்கும் முடியல அவளுக்கு. மதியம் போன் பண்ணுவா சார் “எப்படி இருக்கு டேஸ்ட் ? உப்பு சரியா இருக்கா? நல்லா இருக்கா?னு கேப்பா சார்….” அதற்க்கு மேலே என்னாலும் பேச முடியவில்லை. அவருக்கும் வார்த்தை வரலை. ஒரு சில வார்த்தைகள் தான் ஆனால் அர்த்தம் ஓராயிரம். கீழே கிடந்த உணவை அவர் வாஞ்சையா அள்ளி ஒரு கேரிபேக்கில் போட ஆரம்பித்தார். “ரோட்டில் கிடந்தா வேஸ்ட் ஆகிடும். ஏதாவது நாய்க்கு வச்சா சாப்பிடும்…” தனக்குத்தானே பேசிக்கொண்டார். எனக்கு அவர் சொன்ன வார்த்தையும், அதன் வலியும் அப்படியே இருக்கு இன்னும்.சோறு என்பது ஒரு பொருள் அல்ல. அதை சமைப்பவர்களின் அன்பு. எத்தனை முறை உதாசீனம் செய்திருக்கிறேன். “மதியம் பாக்ஸ் ரெடியா இருக்கு. இன்னிக்கி அவியல் செஞ்சேன்.”“வேண்டாம்… ஆபீசில் சாப்பிட்டுகிறேன்.” நைட் ….”வாங்க புதினா சட்னி இருக்கு .சாப்பிடலாம்” “வெளில சாப்பிட்டுட்டேன்”. “ஒண்ணே ஒன்னு டேஸ்ட் பாக்கலாமே”. “வயிறு புல்லா இருக்கு. வேண்டாம்.” எத்தனை முறை நோகடிச்சு இருக்கிறோம். மிக பெரிய உதாசீனம் அது. சுருக்கென்று இருக்கிறது. சாப்பாடுதானே வயிறு நிறைஞ்சா போதாதா? அப்படி இல்லை. நாம சாப்பிடுற சாப்பாட்டில் உப்பு இருக்கோ, காரம் இருக்கோ, புளிப்பு இருக்கோ…. தெரியாது ஆனால் சமைப்பவர்களின் அன்பு இருக்கு. சாப்பிட்டா நிறைவது நம்ம வயிறு மட்டும் இல்லை. அவர்களின் மனசும் சேர்ந்தே நிறைகிறது. கொஞ்சம் பாராட்டலாம். அட பாராட்ட கூட வேண்டாம். ஒரு “தேங்க்ஸ்” சொல்லி பழகலாம். “நல்லா இருக்கு, தேங்க்ஸ்பா” என்று சொல்லலாமே. இரண்டு மணி நேர அடுப்படி போராட்டம் உங்களின் ஒரே ஒரு வார்த்தையில் மகிழ்ச்சியாக மாறுமே..!!!!! “உணவே மருந்து இதயத்திற்கும்” படித்ததில் பிடித்து பகிர்கிறேன்.
  22. என்னையா வாசிக்கிறீங்க? 🤦‍♂️. உண்மையிலேயே எழுதுவதை கிரகிக்கும் ஆற்றல் இல்லையா அல்லது அப்படி நடிக்கிறீர்களா? அல்லது சிறிதரனுக்கு இன்னொரு திரியில் அடி விழ இங்கே காலை தூக்குகிறீர்களா? எனக்கும் மீராவுக்கும் இடையே கான்சர் ஊக்கிகள் பற்றி ஒரு காத்திரமான உரையாடல் இந்த திரியில் நடைபெற்றது. உறைப்பை பற்றி எழுதியது இன்னொரு கிளைக் கருத்து, அதை பற்றி இன்னும் இரு உறவுகளுடன் இன்னொரு சம்பாசணை போனது. இரெண்டையும் போட்டு குழப்பி அடித்து சாம்பாராக்கி….கடவுளே… இதுக்க ஏதோ நாங்கள்தான் முட்டு கொடுத்து இலங்கையில் இனப்பிரச்சனையை தூண்டுவதாக வேறு ஒரு கற்பனை🤣🤣🤣. ”சாமி, எங்க இருந்து சாமி வாறீங்க”🤣. ஆங்கிலத்தில் unhinged என்பார்கள். நீங்கள் எழுதுவது அப்படியாத்தான் உள்ளது. முன்னமும் பல கருத்தாள்ர்களிடம் ஏறுக்குமாறாக எழுதுவது உங்கள் வழக்கம் எனிலும், நான் கடந்த ஒரு மாதமாக பார்க்கிறேன்….ஏதோ சுவரை பார்த்து கதைக்கும் மனிதர்கள் போல….சம்பந்தமில்லாத விடயங்களை போட்டு குழப்பி, மிகை கற்பனை, மனப்பிராந்தியில் ஏதேதோ தொடர்பே இல்லாமல் எழுதுகிறீர்கள். தயவு செய்து இதில் கொஞ்சம் கவனம் எடுங்கள் (சீரியசாகவே எழுதுகிறேன்). ஏரியும் நெருப்பில் நானும் எண்ணை ஊற்ற விரும்பவில்லை. இனிமேல் முடிந்தளவு விலகி நடக்க் முயற்சிக்கிறேன்🙏.
  23. என்னதான் கோபதாபம் இருந்தாலும் விவசாய பயிர்களை அழிக்காதீர்கள். 🙏🏼 கோபமிருந்தால் சம்பந்தப்பட்டவருக்கு கன்னத்தில் இரண்டு அறை அறைந்து விட்டு செல்லுங்கள். பலன் தரும் பயிர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தது? 😠
  24. முன்பு கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் மைதானங்களில் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு பின் தொடங்கினால் சனி மற்றும் ஞாயிறு மாலைவரை நடக்கும்......அதுவும் யாழ் இந்து மைதானமென்றால் மூன்று பக்க வீதிகளிலும் சனம் குவிந்து நின்று பார்க்கும்.......ஆனால் இப்பொழுது ஒரு நல்ல வீடியோ கூட ரெண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை......அவ்வளவுக்கு வேலைகளும் ஆட்களும் நேரமின்றி ( பிஸியாகி ) விட்ட காலத்தில் வாழ்கின்றோம்......இங்குள்ள பிள்ளைகள் கூட கிரிக்கட் பக்கம் தலை வைத்தும் படுக்காதுகள்......அது சம்பந்தமாய் ஒன்றுமே தெரியாது.....(கால்பந்தாட்டம் + றக்பி நல்லா ரசித்துப் பார்ப்பார்கள்). இந்தக் கதியில் 20 ஓவர் விளையாட்டு ஓரளவு பரவாயில்லை என்ற மாதிரி இருக்குது....... அது கூட 4 மணித்தியாலத்துக்கு மேல் வருகுது......அதனால் இடைக்கிடைதான் வந்து வந்து பார்க்கிறது.........! 😁 மைக்கேல் ஹோல்ட்டிங்கை இப்ப ஒருத்தரும் ஏலத்தில் எடுக்க மாட்டினம் அவர் அந்த கடுப்பில சொல்லுறார்........! 😂
  25. நான் நினைக்கிறேன் பையன் போனில் இருந்து வேக வேகமாய் அடித்து பதிவுக்கு அனுப்புவதால்தான் எழுத்துக்கள் சரியாக வேகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொற்பிழைகள் ஏற்படுக்கின்றன ....... அதைக் கவனித்து சரிசெய்ய அவருக்கு அவகாசம் குடுக்காமல் வருகிற எல்லோரும் அவரோடு மோதினால் அவரால் என்ன செய்ய முடியும்.......மற்றும்படி நான் பார்த்தவரை பையனுக்கு நல்ல தமிழ் விளக்கம் இருக்கு........! 😁
  26. வாழ்க்கை என்பது அவ்வளவு இலகுவானதல்ல. நாங்கள் இருவர் தான். எந்த மூன்றாவது நபருடைய உட்புகுதலும் கருத்துக்களும் வாழ்வை திரிபு படுத்திவிடும். அடுத்த வீட்டை பார்த்து எப்பொழுது நாம் எம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்கிறோமோ அத்துடன் எம் வாழ்வு கலைந்து விடும். அவனவன் கவலைகளை அவரவர் தலையணைகளே அறியும். நன்றி.
  27. சுமந்திரன் ஒரு உதாவாக்கரை அரசியல்வாதி. தன்னலம் தவிர வேறு எதையும் கருதாத, தன் திறமை பற்றி அதீத எண்ணம் கொண்ட, தலைமை பண்புகள் எதுவுமற்ற மனிதர். நிற்க, சுமந்திரனை போலவே இன்னொரு உதவாக்கரைதான் சிறிதரன். சுமந்திரனை போல அல்லாது - தனது உறவினர், ஊரவர் வலையமைப்பு மூலம் புலம்பெயர் தேசங்களில் தனக்கென ஒரு கூட்டத்தை சிறிதரன் வைத்துள்ளார். இவர்களில் சிலர் சில்லறை வர்தகர்கள், சிலர் பெரிய வர்தகர்கள். சுருக்கமாக, புலம்பெயர் தேசத்தில், படித்த முட்டாள்கள் சுமந்திரன் பக்கம் எண்டால், படிக்காத முட்டாள்கள் சிறிதரன் பக்கம் (பொதுப்படையாக). படித்த, படிக்காத முட்டாள்கள் அல்லாதோர் இந்த இரு பகுதி அடிப்பொடிகள் பற்றியும் அவதானமாக இருக்க வேண்டும். சுமந்திரனை போன்ற ஒரு ஊத்தைதான் சிறிதரனும்.
  28. 1)இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 4ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 1ம் இடம். 😎தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 3ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 2ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம். 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம். 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 1ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 3ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 4ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 4ம் இடம். 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 0 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 6 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 31 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 5
  29. ஐயா! ஏதோ புது நியூஸ் சொல்லப்போறார் போல கிடக்கு....🧐 எதுக்கும் நாமள் ஜேர்மன் மல்லி செத்தல் மிளகாய் சீரகம் எண்டு சொல்லி விடை பெற வேண்டியது தான்....😂
  30. நாங்கள் எமக்கு தேவையானவற்றை சேர்த்து கொடுத்தால் அரைத்து தர பல இடங்கள் உள்ளது. கடைகளில் விற்கும் தூள் சரக்கு தூள் வகைகள் வாங்கி நீண்ட காலமாகி விட்டது.அவற்றில் கவனமாக இருங்கள்-
  31. நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு கூப்பனுக்கு ஒரு கொத்து அரிசி தருவன் எண்டு சொல்லுற தேர்தல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து வந்த உங்களுக்குமா இன்ஞும் அரசியல் தந்திரங்கள் புரியவில்லை? ஐயோ பாவங்கள்....🤣 வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை . வெள்ளைக்காரன் சொல்வதையே செய்வான். செய்வதையே சொல்வான் என நம்பும் கூட்டம் இன்னும் யாழ்களத்தில் இருப்பது விநோதத்திலும் விநோதம்.😁
  32. ஆனால் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர் வெளிநாட்டு குடியுரிமை உடனே இலங்கையில் சொத்துக்கள் வைத்துள்ளார்கள் மேலும் நாவற்குழியில். பெரிய றால். பண்ணை ஒன்று வெள்ளைக்காரன் வைத்திருந்தார் 1980 இல் கொழும்பில் கிரான்பாஸ் றோட்டில். லீபர். பிறதர். என்ற பெயரில் வெள்ளைக்காரன் சவர்க்கார உற்பத்தி ஜாம். பட்டர். தாயாரிக்கும். தொழில்சாலை வைத்திருந்தார் 1980 தான் அரசாங்கம் முதலீட்டாளர்களை. வெளிநாட்டிலிருந்து எப்படி வரவேற்கிறது??
  33. ஓம் இப்படியும் செய்யலாம். அதே போல் மேலே நான் சொன்னவற்றில் கம்பெனிக்கு பதிலாக ஒரு trust ஐ உருவாக்கியும் அதே இறுதிப்பலனை அடையலாம்.
  34. பகிடி, நீங்கள் கேட்ட கேள்வியை நான் சரியாக விளங்கி கொண்டுள்ளேன் எனில், இலங்கை பிரஜாஉரிமை இல்லாமல் எப்படி ஒரு கனேடியன் சிட்டிசனாக இந்த காணியை உங்க பெயருக்கு மாற்ற முடியும் என்பதா? அப்படி எனில், short answer is முடியாது. இலங்கையில் வெளிநாட்டு பிரசைகள் காணியின் freehold ஐ வாங்க முடியாது. இதைத்தான் உங்கள் இலங்கை வக்கீலும் கூறியுள்ளார். ஆனால் பின்வரும் நடைமுறைகள் மூலம் இதை வளைய வரலாம் (circumvent). 1. காணியின் freehold ஐ அம்மா, அப்பாவிடமே விட்டு விட்டு, அதற்கு ஒரு 99 வருட லீஸ் ஹோல்டை எடுத்தல். அவர்களிற்கு பின் freehold ற்கு என்ன நடக்கும் ? புள்ளி 3 ஐ பார்க்கவும். 2. ஒரு கம்பெனியை தாபித்து அதன் பெயரில் freehold ஐ மாற்றி விட்டு, கம்பெனியிடம் இருந்து நீங்கள் லீஸ் ஹோல்டை பெறல் - வெளி நாட்டினராக நீங்கள் 49% கம்பெனி பங்குகளை மட்டுமே வைத்திருக்கலாம். ஆனால் கம்பெனி உருவாக்கும் போது, உங்கள் அனுமதியின்றி சொத்துக்களை எதுவும் செய்ய முடியாது என சரத்துகளை உருவாக்கி உங்கள் உரிமையை பாதுகாக்கலாம். 3. இதை உங்கள் வக்கீலிடம் கதைத்து பாருங்கள். இலங்கை சட்டத்தில் ஒரு loophole உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளி நாட்டினர் காணியை வாங்க முடியாது, ஆனால் பெற்றாரின் சொத்து அவர்களின் வாரிசுகளுக்குத்தான் செல்லும். இங்கே வாரிசுகள் வெளி நாட்டு பிரசைகள் என்றால் சொத்துக்கு என்னாகும்? என்ற கேள்வி தெளிவில்லாமல் உள்ளதாம். ஆகவே பெற்றாரின் காலத்தின் பின் - “வாங்குதல்” என இல்லாமல் சொத்து சந்ததி மாறல் என்ற வகையில் நீங்கள் இதை அடையக்கூடும். ஆனால் இது தெளிவில்லாததும், ரிஸ்க் அதி கூடியதுமாகும். 4. மிக பாதுகாப்பானது- சிக்கல் அறவே இல்லாதது - நீங்கள் மீள இலங்கை இரட்டை குடியுரிமையை எடுப்பது. பிள்ளைகளிற்கும் எடுத்து வைக்கலாம். சொத்துரிமை சந்ததிகளிற்கு பாதுகாக்கப்படும். ஒரே சிக்கல் - சில வேலைகள் வெளிநாட்டில் அந்த நாட்டு பிரசை/இரெட்டை குடியுரிமை இருந்தால் தரமாட்டார்கள். இது பிள்ளைகளை பின்னாளில் பாதிக்கலாம். ஆனால் அப்படி ஒரு நிலை வந்தால் - அவர்கள் காணியை விற்று விட்டு, இலங்கை குடியுரிமையை உதறலாம். பிகு 3வது ஆப்சன் பற்றி மேலதிகமாக அறிந்தால் இங்கே பகிரவும். ஒரு condominium அடுக்கு மடியில் 4ம் மாடி அல்லது அதற்கு மேல், அல்லது எந்த சொத்திலும் லீஸ் ஹோல்ட் மட்டுமே வைத்திருக்கலாம். 4ம் மாடிக்கு குறைந்த அல்லது காணியாக freehold ஐ வெளிநாட்டினர் வைத்திருக்க சட்டம் அனுமதிக்கவில்லை.
  35. ம்ம்.... அதுதான் பெரிய பிரச்சனை! ஊரிலே பரம்பரை பரம்பரையாக போர்காலத்திலும் சரி இப்போதும் சரி தொடர்ந்து இருப்பவர்களின் காணியிலேயே புலம்பெயர்ந்தோர் வெளிநாட்டுக்காசை கொண்டு வந்து, ஆனால் இனாமாக அடாவடியாக ஏழைகளின் காணியை அபகரிக்க முயற்சிப்பதை என்ன சொல்வது? ஊர்ல மட்டும் கள்ளர் காடையர் இல்லை, இங்கிருந்து பெயர்ந்து போன கள்ளர் காடையர் மீண்டும் வரும்போதெல்லாம் தமது தொழிலை விட முடியவில்லை தொடர்கிறார்கள். வெளிநாட்டுக்காரர் என்று அவர்கள் செய்யும் தொழிலை களவு என்று யாரும் பேசுவதில்லை.
  36. @Kapithan எனது காணி வீடு வயல் போன்ற சொத்துக்கள் அம்மா பெயரில் இருந்தது.அம்மா அதை அக்காவின் பெயருக்கு மாற்றி விட்டு போய் சேர்ந்து விட்டார். இதெல்லாம் ஆக பழைய கதை. புதுக்கதை என்னவென்றால் அந்த காணி சொத்துக்களை என் பெயருக்கு மாற்றுவதென்றால் ஊருக்கு வரும்படி அழைக்கின்றார்கள். ஆனால் அதை என் பிள்ளைகளுக்கு எப்படி மாற்றி விடலாம் என யோசிக்கின்றேன். அதை விட இன்னுமொரு பெரிய யோசனை என்னவென்றால் சொத்துக்களை மாற்றிய பின்.... அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 😂
  37. ஈழத் தமிழர்களின் நலன்களை விற்று தனது நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனித்த இந்தியா பண்டாரியுடனான பேச்சுக்களின்போது சில விடயங்கள் குறித்து விளக்கங்களைத் தருமாறு ஜெயார் கோரினார், யுத்த நிறுத்தம் : போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று ஜெயார் கேட்க, போராளிகளைக் கலந்தாலோசிக்கமாலேயே பண்டாரி, போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவு தருவார்கள் என்று உறுதியளித்தார். பேச்சுவார்த்தை : போராளிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று உறுதியளிக்க முடியுமா என்று ஜெயார் கேட்டபோது, ஆம், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று போராளிகளைக் கேட்காமலேயே உறுதியளித்தார் பண்டாரி. இதன்போது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசுவதில் பயனில்லையென்றும் ஜெயார் கூறியிருந்தார். தில்லி திரும்பியதும் இந்தியாவின் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான திட்டத்தினை போராளிகளுக்கும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் "இரகசிய ஆவணம்" எனும் பெயரில் பண்டாரி அனுப்பி வைத்தார். யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான இந்தியாவின் திட்டம் பின்வருமாறு, கட்டம் ஒன்று : ஆனி 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் செய்யப்பட வேண்டியவை அரசாங்கம் செய்ய வேண்டியவை 1. வீதிகளில் வாகனங்கள் ஆட்களையும் பொருட்களையும் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குதல். 2. புதிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்திவைக்கப்படும். 3. உள்ளூர் அதிகாரிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் முன்னிலையிலேயே இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர். 4. கடற்கண்காணிப்பு வலயங்களை நீக்குதலும், இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் மேலதிகமான ஆயுத தளபாடங்களை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்துதல். போராளிகள் செய்யவேண்டியவை 1. யுத்த தவிர்ப்பு வலயங்களை தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்துவதை நிறுத்துதல். 2. வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்கள் மற்றும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 3. வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்திருக்கும் அரச அலுவலகங்கள், பொருளாதார இலக்குகள், தனியார் சொத்துக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 4. யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாட்டிற்கு வெளியே இருந்து ஆட்களையும், ஆயுதங்களையும் கொண்டுவருவதை நிறுத்துதல். கட்டம் இரண்டு : மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை அரசாங்கம் செய்யவேண்டியவை 1. பாதுகாப்புப் படையினர் ஊரடங்கு உத்தரவினை மீளப் பெற்றுக்கொள்வர். போராளிகள் செய்ய வேண்டியவை 1. இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் ரோந்து அணிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 2. இராணுவ முகாம்கள், பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 3. வீதிகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல்களை நடத்துவதை நிறுத்துதல். 4. ஆயுதங்களைக் காவித் திரிவதை நிறுத்துதல். கட்டம் மூன்று: இரண்டு வாரங்களில் செய்யப்பட வேண்டியவை 1. யுத்த நிறுத்தத்தினைக் கடைப்பிடித்தல். 2. மூடப்பட்டிருக்கும் பொலீஸ் நிலையங்களை மீளத் திறத்தல். சட்டம், ஒழுங்கு விடயங்களைப் பொலீஸார் பொறுப்பேற்றுக் கொள்வர். 3. வழக்குப் பதிவின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். வழக்குப் பதிவுசெய்யப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, கலந்தாலோசனைகளின்பின்னர் விடுதலை செய்யப்படுவர். கட்டம் நான்கு (அரசியல்த் தீர்வு எட்டப்படுவதற்கான கால அவகாசம் குறிப்பிடப்படவில்லை) முக்கியமான பிரச்சினைகளில் எட்டப்படவேண்டிய அரசியல்த் தீர்வு குறித்த இரகசியப் பேச்சுவார்த்தைகள் அரசாங்கம், போராளிகள் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியோருக்கிடையில் நடைபெறும். இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாவது நாடொன்றில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பேச்சுவார்த்தைகளில் கலந்தாலோசிக்கப்படும் அனைத்து விடயங்களையும், பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளையும் இரகசியமாக வைத்திருக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். யுத்த நிறுத்தமும், பொது மன்னிப்பும் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சரியாக மூன்று மாத காலத்திற்குள் அரசியல்த் தீர்விற்கான பலமான அடித்தளம் இடப்பட்டிருக்க வேண்டும். அரசியல்த் தீர்விற்கான அடித்தளம் இடப்பட்டதும், அரசாங்கத்திற்கும் தமிழர்களின் அரசியல்த் தலைமைக்கும், ஆயுத அமைப்புக்களுக்கும் இடையே வெளிப்படையானதும், நேரடியானதுமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருந்த ஆலோசனைகளை பிரபாகரன் அறிந்துகொண்டபோது கொந்தளித்துப் போனார். தமிழர்களின் நலன்களை விற்று தனது சொந்த நலன்களை இந்தியா பாதுகாத்துக்கொள்ளப் பார்க்கிறது என்று பாலசிங்கத்திடம் அவர் கூறினார். கட்டம் ஒன்று, சரத்து 4 இல், குறிப்பிடப்பட்டிருக்கும், ".....இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் மேலதிகமான ஆயுத தளபாடங்களை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்துதல்" என்று கோருவதன் மூலம் இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்க முனைகிறது என்று அவர் கூறினார். இதனூடாக தனது இராணுவத்தினருக்கான பயிற்சிகள் என்கிற பெயரில் வெளிநாட்டு இராணுவ நிபுணர்களையும், கூலிப்படைகளையும் ஜெயவர்த்தன‌ இலங்கைக்குள் கொண்டுவருவதை இந்தியா தடுக்கப்பார்க்கிறது என்று அவர் கூறினார். இதனை அடைந்துகொள்வதற்காக ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக‌ இதுவரை காலமும் அடைந்திருக்கும் அனைத்து வெற்றிகளையும் இந்தியா தாரை வார்க்க விரும்புகிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் இந்தச் செயல் மூலம் தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதப் போராட்டத்தினை முற்றாகக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதோடு, தமிழர்களின் ஆயுத வல்லமையினால் மூடப்பட்டிருந்த பொலீஸ் நிலையங்களை அரசாங்கம் மீளவும் திறக்கும் சந்தர்ப்பமும் இந்தியாவால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தமிழ் மக்களின் அரசியல்த் தலைமை என்று இந்தியா குறிப்பிடுவதையும், போராளிகளின் முயற்சியினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்பட்டிருக்கும் தருணத்தில், அவர்களை வெறுமனே ஆயுத அமைப்புக்கள் என்று இந்தியா அழைப்பதையும் பிரபாகரன் விரும்பவில்லை. ஆனால், பிரபாகரன் அதிருப்தியடைந்த இன்னும் இரு விடயங்கள் இருந்தன. இலங்கை இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் பழிவாங்கல்த் தாக்குதல்களிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தேவையான சரத்துக்களை தனது ஆலோசனைகளில் சேர்த்துக்கொள்ள இந்தியா தவறியிருந்தது. மேலும், பேச்சுவார்த்தைகளை கால அவகாசமின்றி ஜெயவர்த்தன நீட்டித்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தினையும் இந்தியா தனது ஆலோசனைகள் ஊடாக வழங்கியிருந்தது. ஆகவே, அரசியல்த் தீர்விற்கான பலமான அடித்தளம் ஒன்றினையும், அதனூடான நிரந்தரத் தீர்வையும் இலங்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முன்வைக்கவேண்டும் என்கிற நிபந்தனையினை இந்தியா கோரியிருக்க வேண்டும் என்றும் பிரபாகரன் கருதினார். இந்தியா முன்வைத்திருந்த ஆலோசனைகள் குறித்து பிரபாகரன் தனது அதிருப்திகளைத் தெரிவித்து வந்த நிலையில், லலித் அதுலத் முதலி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் செயலில் இறங்கினார். இலங்கையரசாங்கம் தனது படைகளை ஆனி 18 இலிருந்து யுத்த நிறுத்ததைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டிருப்பதாக அவர் அறிவித்தார். அவசர அவசரமாக இலங்கையரசாங்கம் யுத்த நிறுத்தத்தினை கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்ததன் உண்மையான நோக்கம், போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை முன்வைப்பதைத் தடுப்பதற்காகத்தான் என்பது இரகசியமல்ல. தேசியப் பாதுகாப்பு அமைச்சின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட லலித் அதுலத் முதலி, யுத்த நிறுத்தப் பிரகடணம் இரு தரப்பாலும் ஒன்றிணைந்து வெளியிடப்படப்படும் போது மட்டுமே இரு தரப்பு நிபந்தனைகளும் உள்வாங்கப்பட்டிருக்கும், ஆகவேதான், தன்னிச்சையாக இலங்கையரசாங்கம் இதனை அறிவித்தது, போராளிகளின் நிபந்தனைகளை நாம் இதன்மூலம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றாகிவிடுகிறது என்று கூறினார். "இப்போது அவர்கள் தமது நிபந்தனைகளையும் தூக்கிக்கொண்டு நரகத்திற்குப் போகட்டும் (Let them go to hell with their conditions)" என்று ஆக்ரோஷமாகக் கூறினார் லலித் அதுலத் முதலி. பிரபாகரன் ஆட எண்ணிய ஆட்டத்தில் அவரைத் தோற்கடித்திருந்தார் லலித் அதுலத் முதலி. இதன்மூலம் பிரபாகரனும் ஏனைய போராளித் தலைவர்களும் யுத்த நிறுத்தத்தினை நிபந்தனியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. எனது அறிவிற்கு எட்டிய வகையில், லலித் அதுலத் முதலி பிரபாகரனை வெற்றி கொண்டது இந்தத் தருணத்தில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். வடமாராட்சியில் இலங்கையரசால் நடத்தப்பட்ட ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கையின்போது கூட , தனது போராளிகளையும், ஆயுத தளபாடங்களையும் சேதமின்றி வன்னிக்குப் பிரபாகரன் நகர்த்தியிருந்தபோதும், அதுலத் முதலியும், அவரது தலைவரான ஜெயவர்த்தனவும் அதிர்ந்து போகும்வகையில் நெல்லியடி மத்திய கல்லூரி மீது பாரிய குண்டுத்தாக்குதல் ஒன்றினை பிரபாகரன் வெற்றிகரமாக நடத்தியிருந்தார். ஆனி 18 ஆம் திகதி காலை, ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் யுத்த நிறுத்தம் குறித்து முடிவெடுக்க மீளவும் ஒன்றுகூடினார்கள்.
  38. இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர். ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். ரஜீவுடன் சிதம்பரம் பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்". "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன், 1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது. 2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும். 3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும். 4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்" என்கிற பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார்.
  39. அடுத்த பிறவி எண்டு ஒண்டிருந்தால் திரிஷாவின்ர வயித்திலை பிள்ளையாக பிறக்க வேணும் என தனக்குள் புறுபுறுதபடி தவறணைய விட்டு நகர்ந்தார் ...... "பழஞ்சோறு பரமானந்தம்"
  40. அம்மு சன்ரைசர்ஸ் ஐதரபாத்துக்கு எடுபட்டதாக நினைக்கிறேன். அதே போல் நேற்று replacement ஆக யாழின் வியாஸ்காந்த் எடுபட்டுள்ளார். ஐ பி எல் லில் ஈழத்தமிழருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரே அணி கலாநிதி மாறனின் ஹைதரபாத் தான். @வாலி உங்கள் கவனத்துக்கும். நான் சி எஸ் கே (வாய்ப்பு முழுக்க இலங்கை வீரருக்கே) விட்டு, ஈழத்தமிழரை உள்ளீர்ர்கும் எஸ் ஆர் எச் க்கு மாற நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் @MEERA
  41. எல்லா தமிழர்களும் ஒரே தமிழ் வேட்பாளருக்கு முதல் தெரிவை போட்டு விட்டு, அடுத்த தெரிவை போடாமல் விடலாம் இரண்டாவது தெரிவை சிங்கள கட்சி யாருக்கோ போடுவதற்கு கூடுதலான சந்தர்ப்பம் உள்ளது. இதைப்பற்றி மக்களுக்கு தெளிவான விளக்கவுரைகளை யாரும் நடத்துவதாக தெரியவில்லை. இன்னமும் தங்களுக்குள்ளேயே தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  42. நிச்சியமாக ஏனென்றால் எல்லோரும் ஓடிச்சென்று விடுவார்கள் கடைசியாக. இவர் மட்டும் தான் கட்சியில் இருப்பார் 🤣🤣😂. மன்சூர். அலிகானின். முடிவு சரியானது தான் ஒவ்வொரு முறையும் தேர்தலில் தோற்பதை விட. இப்படி குத்துகரணமடித்து வெற்றி பெறலாம் 🙏
  43. அவர் தமிழ்நாடாய் இருந்தால் தானே அவருக்கு தமிழ்நாட்டை பற்றி தெரிந்திருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.