Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 05/19/24 in all areas
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahasthiyan க்கு மூன்று புள்ளிகள் கூட்டப்படும். மற்றையவர்களுக்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்படும். மூன்றாவதும் நான்காவதும் இடங்களை ஒருவருமே சரியாகக் கணிக்கவில்லை. எனவே அனைவருக்கும் மூன்றாம் இடத்திற்கான தலா இரண்டு புள்ளிகளும், நான்காம் இடத்திற்காக தலா ஒரு புள்ளியும் குறைக்கப்படும். மூன்றாவது கேள்விக்கான பதிலை @வீரப் பையன்26 மாத்திரமே சரியாகக் கணித்துள்ளதால், இரண்டு புள்ளிகள் கூட்டப்படும். மற்றையோருக்கு இரு புள்ளிகள் குறைக்கப்படும். மூன்று கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டதன் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நிலாமதி 70 2 அஹஸ்தியன் 68 3 வீரப் பையன்26 62 4 முதல்வன் 62 5 சுவி 62 6 ஏராளன் 62 7 கல்யாணி 62 8 கந்தப்பு 62 9 எப்போதும் தமிழன் 62 10 வாதவூரான் 62 11 கிருபன் 62 12 நீர்வேலியான் 62 13 நுணாவிலான் 62 14 புலவர் 62 15 ஈழப்பிரியன் 58 16 கோஷான் சே 58 17 கறுப்பி 545 points
-
தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது : மாவை, சுமந்திரனிடம் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் சம்பந்தன்
4 points
- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
நன்றி ரஞ்சித் உங்கள் மொழிபெயர்ப்பிற்கு, ஆங்கிலத்தில் உரையாடப்பட்ட காணொளியில் ஒரு பகுதியினை பார்த்தேன் மிக நீளமாக இருப்பதனால் மிகுதியினை பிறகு பார்க்க முடிவு செதுள்ளேன். இலங்கையில் கல்விகற்ற பெரும்பான்மை சமூகம் கூட புரிந்துணர்வற்ற நிலையிலேயே இருக்கிறார்கள், இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் (சில பெரும்பான்மை மக்களும் இதற்குள் விதிவிலக்காக அடங்ககூடும்) போர் முடிந்தபின்னரான இக்காலத்திலும் அநீதியான முறையில் இலங்கயின் சட்டத்திற்குட்பட்ட முறையில் துன்புறுத்தப்படுகின்ற பாதுகாப்பற்ற நிலையில்தான் உள்ளார்கள், இதற்கு காரணம் இலங்கை எனும் நாட்டில் ஒரு பொதுவான சட்டம் இல்லை, இந்த காணொளியில் கூறுவது போல பெரும்பான்மை சமூகம் தான் நினைத்த மாத்திரத்தில் புத்த ஆலயங்கள், காணி அபகரிப்புகள் என எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதனை எதிர்ப்பவர்களை கைது ஆணைப்பத்திரம் (அரஸ் வாரண்ட்) இல்லாமல் கைது செய்து காலவரையற்று தடுத்து வைக்கும் அவசரகால சட்டம் என்பவை உள்ளது. அரகலய நிகழ்வு பொருளாதார சீர்கேட்டினாலேயே உருவானது, பெரும்பான்மை வாதம் போரினால் சிறுபான்மையின தமிழ் மக்களை வென்றதன் பரிசாக அது நிகழ்ந்தது, பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் உலகம் இருண்டுவிடும் என்பது போல இலங்கையின் பொருளாதார பிரச்சினை முடிவடைந்து விட்டதாக நினைக்கிறார்கள், அதனால் இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களின் பாதுகாப்பிற்காக சட்டம் பேணப்படவேண்டும் என்பதனை அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. கடந்தகாலத்தில் தவறுகள் நிகழ்ந்துவிட்டது என்பதனை ஏற்று சிறுபான்மை மக்கள் ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நிகழாது எனும் நம்பிக்கையுடன் ஒன்றித்து பயணிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டாலே இலங்கை இந்த புதை மணலிற்குள்ளிருந்து மீழ முடியும், அதற்கான அரசியல் தீர்வுகள் காணப்படவேண்டும். இலங்கை 2032 இல் தனது கடனினை மொத்த தேசிய வருமானத்தில் 95% கொண்டுவரமுடியும் என நம்புகிறது (தற்போது 104%) அதாவது ஆண்டொன்றிற்கு கிட்டதட்ட 1%, இலங்கை தொடர்ச்சியாக ஒரு விளிம்பு நிலையிலேயே நீண்டகாலத்திற்கு இருக்கும், கடந்தகாலத்தில் பொருளாதார வங்குரோத்தான நாடுகள் மீண்டும் வங்குரோத்தாகும் பொதுவான காரணி ஊழல், பாதுகாப்பான சட்டம்ற்ற சூழல், உள்நாட்டுப்பிரச்சினை காரணமாகிறது, இந்த அனைத்துப்பண்புகளூம் ஒருங்கே கொண்டதுதான் இலங்கை, அதனால் இவற்றிற்கான தீர்வு எட்டப்படாவிட்டால் இலங்கை மீண்டும், மீண்டும் வங்குரோத்தாகும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தால் உலகம் இருண்டுவிடும் எனும் மனப்பாண்மையில் இருந்து இலங்கையர்கள் வெளிவரவேண்டும், அதனால் எந்த இலாபமும் இராது நட்டம்தான் ஏற்படும்.3 points- நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
🤣.......நல்ல யோசனை. பெட்டி பெட்டியாகத்தான் விற்கின்றார்கள். ஆறிலிருந்து பத்து அல்லது பன்னிரண்டு பழங்கள் ஒரு பெட்டியில் வரும். மாழ்பழத்தின் வகைகளையும், அளவுகளையும் பொறுத்து வேறுபடும். 'நல்ல டீல்' என்று சொல்லி, இந்த மாதங்களில் ஒரே நேரத்தில் சில பல பெட்டிகள் வீட்டுக்குள் வரும். பிறகு 'அய்யய்யோ, பழுதாகப் போகுதே....' என்று ஒரு குரல் விடாமல் கேட்கும்........ பிறகென்ன...காற்றுக்கென்ன வேலி.... நம்மவர்கள், இந்தியர்கள், வாங்கும் போது இரண்டு மூன்று பெட்டிகளை கலந்து ஒரு 'நல்ல' பெட்டியை உண்டாக்க முயல்வார்கள். கடைக்காரர் நொந்து போய் விடுவார்........3 points- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
3 pointsவருடத்தில் ஆறு மாதங்கள் ட்ரோலர் வகை மீன்பிடி தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயமே ஏனென்றால் இந்த வகை மீன்பிடி கடல் வளத்தை அழிக்கின்றது குட்டிக் குட்டி மீன்களை அழிப்பதன் வழியாக. ஆனால் எங்கள் மீனவர்களுக்கு மற்ற வகை மீன்பிடி முறைகளில், உதாரணம்: ஆழ்கடல் மீன்பிடி, நல்ல அனுபவமும், அதற்கேற்ற வசதிகளும் கிடையாது. பலர் இந்த தொழிலை செய்யாமல் விட்டு விட்டார்கள் என்றும் நினைக்கின்றேன். ஊரில் இருப்போர் கப்பலில் போகின்றனர், மற்றவர்கள் கப்பலில் போவதற்கான வகுப்புகளிற்கும் பயிற்சிகளுக்கும் போய் வந்து கொண்டிருக்கின்றனர். கனடா இப்பொழுது இலகுவாக்கியிருக்கும் விசா திட்டத்தின் மூலம் கடந்த சில மாதங்களில் இங்கிருந்து 600 பேர் வரை கனடாவிற்கு போய் விட்டார்கள் என்றும் சொன்னார்கள். எதற்குமே போதிய ஆட்பலம் இல்லை என்ற ஒரு நிலை.3 points- கருத்து படங்கள்
3 points3 points- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
இன்று பலஸ்த்தீனத்தில் நடக்கும் அவலங்கள் குறித்தும், ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் குழந்தைகள் குறித்தும், வீடுகளுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படும் பெண்கள் குறித்தும் கவலைப்படும் நாங்கள், ஆத்திரத்துடன் கேள்விகேட்கும் நாங்கள், இதையேதானே 15 வருடங்களுக்கு முன்னர் இதே நாட்டில் வடக்கில் செய்தோம்? அப்போது எமக்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இன்று ரஃபாவரை பலஸ்த்தீனர்களை தள்ளிச் சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து படுகொலை செய்வதுபோல, நாமும் முள்ளிவாய்க்கால்வரை தமிழர்களைத் தள்ளிச் சென்று கொல்லவில்லையா? கொல்லப்பட்டவர்கள் எல்லாருமே புலிகள்தான் என்றும், அதனால் அதுகுறுத்து நாம் கவலைப்படத் தேவையில்லையென்றும், ஆகவே புலிகளின் மரணத்திற்கு நினைவுகூர்வதைத் தடுப்பது சரியே என்று கூறும் நாம், விமானத்திலிருந்து கொட்டப்பட்ட குண்டுகள் புலிகளை மட்டுமே இலக்குவைத்துத் தாக்கவில்லை, மாறாக அங்கிருந்த 3 மாதக் குழந்தையிலிருந்து அனைவரையுமே கொன்றது என்பதை ஏன் புரிந்துகொள்கிறோம் இல்லை? சரி, கொல்லப்பட்டது எல்லாருமே புலிகள் என்று வைத்துக்கொள்வோமே, ஏன், அவர்களின் உறவுகள் அவர்களை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 1977 ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தனிநாடு கோருவது தவறில்லை என்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி, பதவிக்கு வந்த வெறும் ஆறு மாதத்திலேயே பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்று கொண்டுவந்து ஒரு சில போராளிகளை மட்டுமே கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை பெருவிருட்சமாக வளர்த்துவிடவில்லையா? தமிழர்களுக்கு, ஒரு இனமாக அரசியல் ரீதியில், பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் இருந்த பிரச்சினைகளுக்கு சிங்கள் அரசுகள் தீர்வொன்றினை வழங்க மறுத்ததனாலேயே புலிகள் உருப்பெற்றார்கள் என்பதை ஏன் நாம் புரிந்துகொள்கிறோம் இல்லை? ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதிகளான சிறில் போன்றவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே அன்று கூறியவை முற்றான பொய்கள் என்று எமக்குத் தெரியும், ஆனாலும் இன்றுவரை நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லையா? தெற்கின் "மக்கள் விடுதலை முன்னணியினர்" ஒரு காலத்தில் பயங்கரவாதிகள். ஆனால், இன்று அவர்கள் தமது உறுப்பினர்களின் மரணத்தை "மாவீரர்கள்" என்று நினைவுகூர்ந்து வருகிறார்கள். நாம் அதனை ஆதரிக்கிறோம், அனுமதிக்கிறோம். அப்படியானால், யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கமுடியும்? மே 18 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தனது மகனை, மகளை, தாயைத், தந்தையை அம்மக்கள் நினைவுகூரும் நாள். அதற்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அம்மக்களை தமது உறவுகளுக்கான வணக்கத்தினைச் செய்வதிலிருந்து தடுப்பதன் மூலம் மேலும் மேலும் இவ்வாறான படுகொலைகளுக்கே நாம் வித்திடுகிறோம்.3 points- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
போரில் தோற்ற மக்களின் நிலைதான் சிரட்டை கையுமாக அலைய வைக்கவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் நிலையும் சிரட்டையும் கையுமாக அலையும் நிலியில்தான் தற்போது இலங்கை உள்ளது (அதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும் அதுதான் உண்மை), இதற்கு காரணம் மக்களிடையே தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனவாதம் எனும் குரோதத்தினை வளர்த்த, வளர்க்கின்ற அரசியல்வாதிகள்தான் காரணம்.3 points- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 pointsஒடுகின்ற வண்டியோட ஒத்துமையா ரெண்டு மாடு ஒண்ணா விட்டு ஒன்று பிரிஞ்சா என்னவாகும் எண்ணிப் பாரு தென்ன மரம் ஜாதிக கொரு தேங்காய் காய்ப்பதில்லை கொல்லையில் வைச்ச முல்லை குலம் பார்த்து பூப்பதில்லை ஆயிரம் ஜென்மம் தாண்டி அன்பாலே ஒன்று கூடி சேர்வது காதல் தானே பிரிப்பது பாவம் தானே2 points- நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
தம்பி ஏராளன் ...இங்கு அதிகம் பெட்டியாக தான் விற்பார்கள் 12 16 என இருக்கும். சில கடைகளில்தான் சில்லறையாக விற்பார்கள். பார்க்கவே ஆசையாக இருக்கும். ஊரில் இருக்கும் போது இவ்வ்ளவு ஆசை இல்லை.மற்றும் கிழமைக்கு ஒருக்கா தானே ஷாப்பிங் போவது தொகையாகவே வாங்கிவந்து விடுவார்கள் .2 points- நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
அண்ணை வாங்கும்போது குறைத்து ஆளுக்கு 1 என வாங்கிப்பாருங்கோ. வீட்டுக் கறுத்தக்கொழும்பான் ஓரிரு காய்களோடு நிற்கிறது. இந்த முறை பூத்ததும் குறைவு, பிஞ்சும் பிடிக்கேல.2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கவலைப்படாதே பையா .........உங்களையும் தாங்கிப் பிடிக்க யாராவது வராமலா போகப்போறம்.......! 😁2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பெரியப்பு நான் தான் கடசி இடம் பஞ்சாப் ஆப்பு வைக்க வில்லை மும்பை தொடர் தோல்வியால் பஞ்சாப் 9வது இடத்துக்கு வந்து விட்டது இந்த முறை பெரிய புள்ளிய ஒருதரும் பெற போவது கிடையாது கூட்டி கழிச்சு பார்த்தால் நான் தான் கடசி இடம்.....................நம்பின அணிகள் எல்லாம் கைவிட்டால் நிலமை இப்படி தான் இருக்கும்😁...............................2 points- கொஞ்சம் ரசிக்க
2 points2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்று பலருக்கு புள்ளிகள் இறங்குதிசையில் போகப்போகின்றது😂🤣2 points- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது. தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை.2 points- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
அரகலய காலத்தில் ராஜபக்ஷேக்கள் சொல்லிவந்தவை எல்லாமே பொய்கள் தான் என்கிற தெளிவை சிங்கள மக்கள் உணர்ந்தபோதிலும், இறுதி யுத்தம் தொடர்பாகவும் ராஜபக்ஷேக்கள் பொய்களையே கூறினார்கள் என்பதையும், இறுதியுத்தம் அரசினால் உருவாக்கப்பட்ட பொய்க்கான களத்திலேயே நடத்தப்பட்டது என்பதையும் சிங்களச் சமூகம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர், போர் குறித்து முற்றான பொய்களைப் பரப்பக்கூடிய சில ஊடகவியலாளர்களை முன்னேறிச் சென்ற இராணுவ அணிகளுடன் அரசு அனுப்பியதென்றும், நடுநிலையான செய்தியாளர்களை அரசு ஒருபோது இறுதி யுத்த களத்தில் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறார். நல்ல கலந்துரையாடல். தமிழில் வரவேண்டும். யுத்தத்தின் இறுதிநாட்களின்போது தனது இராணுவம் ஒரு கையில் ஐ நா மனிதவுரிமைகள் சாசனத்தையும், மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தியே போரிட்டதென்றும், உலகிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் ஒரே ராணுவம் சிங்கள இராணுவம் என்றும், ஆகவே யுத்தத்தில் ஒரு தமிழ் மகனும் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதை இன்றுவரை சிங்களச் சமூகம் நம்ப விரும்புவதாலேயே தமிழர்களுக்கு நடந்த அவலங்களை, அக்கிரமங்களை அச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது என்றும், இதனாலேயே தமிழர்களால் அக்காலத்தில் சேகரிக்கப்பட்ட போர்க்குற்ற சாட்சியங்களைப் பொய்கள் என்று சிங்களச் சமூகத்தால் இலகுவாகத் தட்டிக் கழித்துவிட முடிகிறதென்றும் அவர் கூறுகிறார்.2 points- எனது அறிமுகம்
2 pointsஅறை வாங்கினேன் மறு கன்னத்திலும் ஏசுவே இனி என்ன செய்ய??????? கொல்ல வரும் பசுவையும் கொல்லலாமென்று சொன்னதே ஒரு பெரிய ஆத்மாதான். எறும்புக்கும் தீங்கு நினைக்காத குணம் போற்றுதலுக் குரியதுதான். ஆனால், என் தாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கூட்டத்தினரிடமும், என் சகோதரியின் கற்புக்கு களங்கம் விளைவிக்க வரும் வெறிக் கூட்டத்தினரிடமும் நான் கருணை காட்டினால்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொல்லியதையும்....அன்பு செய்ய சொல்லிய தையும் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கி றோமோ... ???? எவன் ஒருவன் கோபத்தில் அறைந்து செல்வானாயில், அவனிடம் மறு கன்னத்தையும் காட்டு... அவன் அதை நினைத்து வருந்தாவிடில்..!!!! அவனுக்கு அன்பு செய்.... மீண்டும் மீண்டும்.... எது வரை....?? மனித புனிதர்களாய் இருப்பவர்களுக்கு சாத்தியம். உயிரை குடிக்கும் மானிடர்களிடம் இது வீண் அல்லவா..???2 points- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 06:17 PM முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல. இந்த விவகாரத்தை அரசாங்கம் தவறான விதத்தில் கையாள்கின்றது என சட்டத்தரணியும் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினருமான சிறீநாத் பெரேரா தெரிவித்தார். நேர்காணலின்போது இதனை தெரிவித்த ஸ்ரீநாத் பெரேரா கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் எனவும் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ள ஸ்ரீநாத் பெரேரா, வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் போராட்டங்கள், கேப்பாபிலவு மண்மீட்பு போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள் போன்றவற்றில் தன்னை இணைத்துக்கொண்டவர். ஸ்ரீநாத் பெரேரர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மயிலத்தனை மாதவனை தமிழ் பண்ணையாளர்களை சமீபத்தில் சந்தித்திருந்தார். உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்றவை செயற்படக்கூடிய சூழல் இலங்கையில் இல்லை என தெரிவிக்கும் அவர் ஜேவிபி தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை சிறிதளவும் புரிந்துகொள்ளவில்லை அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாரில்லை எனவும் குறிப்பிட்டார். பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கேள்வி - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ளீர்கள்? இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கின்றீர்கள் அங்கு எவ்வாறான உணர்வுகளை கடந்த காலங்களில் அவதானித்திருக்கின்றீர்கள்? பதில்- கடந்த வருடம் இளைஞர்கள் பலர் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவது உட்பட பல்வேறு ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இளைஞர்கள் இவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபடுவது மிகவும் சாதகமான விடயம். பரந்தன் முதல் முள்ளிவாய்க்கால் வரை நான் இதனை அவதானித்தேன். திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கியவர்கள் தாக்கப்பட்ட விடயம் தமிழ்மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. சமூக ஊடகங்களில் நான் அவதானித்த விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உணர்வுகள் கடினமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது தொடர்வதற்கு இனியும் அனுமதிக்க முடியாது என தமிழர்கள் கருதுகின்றனர். இந்த துன்புறுத்தல்கள் வன்முறைகள் முடிவிற்கு வரவேண்டும் என தமிழ் மக்கள் கருதுகின்றனர். தமிழ் மக்களின் உணர்வுகள் கடினமாகியுள்ளமை இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வெளிப்படும் என கருதுகின்றேன். நான் கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளேன். தங்கள் உறவுகளைஇழந்த குடும்பத்தவர்களின் துயரம் வேதனை ஒவ்வொரு வருடம் மனதை வருத்தும் விதத்தில் வெளிப்படும். இந்த வருடமும் அதேபோன்ற வேதனையான துயரமான உணர்வுகளே வெளிப்படப்போகின்றன. கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் தனிமையில் வாழும்போது அவர்களிடமிருந்து வெளிவராத உணர்வுகள் அனைவரும் ஒன்றிணையும் போது திடீரென வெடித்துக் கிளம்பும் கண்ணீராக கதறல்களாக. தற்போது வடக்குகிழக்கில் காணப்படும் நிலைமை மாற்றமடையும் வரை இந்த நிலை மாறப்போவதில்லை. தற்போதைய நிலை தொடர்ந்தால் இந்த நிலை மாறாது. 2 திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டமைக்கு உடனடியாக நீங்கள் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கண்டனம்வெளியிட்டிருந்தீர்கள்-? பதில்- இது மிகவும் மோசமான செயல் என்னவென்று சொல்ல முடியாத செயற்பாடு- எவரும் இவ்வாறான அனுபவத்தை எதிர்கொள்ளக்கூடாது. முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? அதில் என்ன உள்ளது? அது ஏன் தவறு ? போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக அவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குகின்றனர். இது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமில்லை. அவர்கள் இதன் மூலம் மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைகூருகின்றனர். இதில் என்ன தவறு உள்ளது ஆட்சியாளர்கள் மிகவும் மோசமான விதத்தில் இந்த விடயத்தை கையாள்கின்றனர். 3 திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு தென்பகுதியிலிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்- திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கியவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எங்களை போன்ற சில குழுக்கள் மாத்திரம் எதிர்ப்பை வெளியிட்டன. எதிர்கட்சி அரசியல்வாதிகள் இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. மலையக அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல் வெளிப்பட்டதை நான் அவதானிக்கவில்லை. 4 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராடும் பகுதிகளிற்கு தென்னிலங்கையிலிருந்து தொடர்ச்சியாக சென்று வருபவர்களில் நீங்களும் ஒருவர் - அவர்களின் போரட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்து நீங்கள் அவர்களின் போராட்டத்திற்கு உங்கள் ஆதரவை வெளியிட்டு வந்துள்ளீர்கள் - காணாமல்போனோர் அலுவலகம் உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழு போன்றவை குறித்த உங்கள் அவதானிப்பு என்ன? பதில்- எந்த நம்பிக்கையும் இல்லை. காணாமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றன ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டதா? எதுவும் வெளிவரவில்லை. மரணச்சான்றிதழ் வழங்குவது இழப்பீடு வழங்குவது குறித்து மாத்திரம் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் காணாமல்போனவர்களின் உறவுகள் உங்களிடம் பணம் கேட்கவில்லை நீதியைதான் கோருகின்றார்கள். அவர்களில் பலர் தங்கள் உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள். அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை தான் அவர்கள் கேட்கின்றனர். காணாமலாக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு இது தொடர்பில் எவருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? இது தொடர்பில் காணாமல்போனோர் அலுவலகம் எதனையும் செய்யவில்லை. உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்றவை செயற்படக்கூடிய சூழல் இலங்கையில்இல்லை. அரசாங்கம் அதற்கு தயாரில்லை. நடந்து முடிந்த சம்பவங்களிற்கு பொறுப்பான ஆளும் வர்க்கமும் ஒடுக்குமுறை அரசாங்கமும் வெள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சியாக இவ்வகை ஆணைக்குழுக்களை பயன்படுத்த முயல்கின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை விட இது எந்த வகையில் சிறந்தது என்பது எனக்கு விளங்கவில்லை. 5 சில வாரத்திற்கு முன்னர் நீங்கள் மயிலத்தனைமடு சென்றிருந்தீர்கள்? மயிலத்தனைமடு கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் தற்போது பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். தங்கள் கால்நடைகளிற்கு உணவு வழங்குவதற்காக அவர்கள் மேய்ச்சல் நிலங்களை பயன்படுத்தி வந்தார்கள். பெண் ஆளுநர் - பதவியேற்ற பின்னர் அந்த நிலத்தை கைப்பற்றி சிங்கள விவசாயிகளிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். அவர்களின் போராட்டம் 200நாட்களை கடந்து நீடிக்கின்றது அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துள்ளது. ஆனாலும் விவசாயிகள் துணிச்சலுடன் அர்ப்பணிப்புடன் போராடுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் கூட வலுவான விதத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என நான் கருதுகின்றேன். கேள்வி- எதிர்வரும் தேர்தல்களில் ஜேவிபி தமிழ் மக்களின் ஆதரவை பெறுவது குறித்த விடயம் பேசுபொருளாகியுள்ளதே? பதில்- ஜேவிபி தற்போது சிங்கள பௌத்த வாக்காளர்களின் பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது அவர்கள் தற்போது வடக்குகிழக்கு மற்றும் மலையக தமிழர்களின் ஆதரவை பெற முயல்கின்றனர். இந்த பகுதிகளில் அவர்களிற்கு மிகக்குறைந்த ஆதரவே காணப்படுகின்றது அனுரகுமார திசநாயக்க இந்த பகுதிகளில் தனது ஆதரவை அதிகரிக்க முயல்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கப்போகின்றன. இதன் காரணமாக அனுரகுமார திசநாயக்க தமிழ்மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றார். ஆனால் அவர் தமிழ் மக்களிற்கு எதனையும் வழங்க முன்வரவில்லை. நாங்கள் இந்த நிலைமையை மாற்றுவோம் அபிவிருத்தி செய்வோம் என மாத்திரம் தெரிவிக்கின்றார். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை அவர் புரிந்துகொள்ளவில்லை. தேசியஇனப்பிரச்சினைக்குபொருளாதார அபிவிருத்தி மூலம் மாத்திரம் தீர்வை காணமுடியாது. தங்கள் பகுதிகளை தங்கள் நாளாந்த வாழ்க்கையை நிர்வகிப்பதற்கான உரிமையை தமிழ் மக்கள் கோரிநிற்கின்றனர். இதற்கான தீர்வு குறித்த விடயத்தில் அனுரகுமார திசநாயக்க அமைதியாக காணப்படுகின்றார். 13வது திருத்தம் குறித்தும் அவர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய 13 வது திருத்தத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என தெரிவித்து 24 மணிநேரத்தில் டில்வின் சில்வா அதனை முற்றாக எதிர்த்தார். நாங்கள் அதனை ஆதரிக்கவில்லை என தெரிவித்தார். இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் -ஜேவிபி சிறிய அளவு அதிகாரப்பகிர்விற்கு கூட தயாரில்லை . ஆரம்பத்திலிருந்து இதுதான் அவர்களின் கொள்கை . அவர்கள் அதிகாரங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பவில்லை. அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணமாட்டார்கள் இதேவேளை ஜேவிபி தமிழ் வர்த்தகர்களின் ஆதரவை பெற முயல்கின்றது. சோசலிஸ கட்சி என்ற நிலையிலிருந்து அவர்கள் சீர்திருத்த பூர்ஸ்வா கட்சியாக மாறிவிட்டனர். அவர்களிடமிருந்து தமிழர்களிற்கு எந்த தீர்வும் கிடைக்காது. கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மக்களுடன் கைகோர்ப்பது குறித்து கருத்துதெரிவித்திருந்தீர்கள்? பதில்- தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு காலத்திற்கு காலம் பெரும்பான்மை சமூகம் ஏதோ சில தீர்வுகளை முன்வைக்க முயன்றுள்ளது. இடதுசாரிகள் என்ற அடிப்படையில் நாங்கள்அதனை ஆதரிக்கவில்லை. தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையை ஏற்றுக்கொள்வதிலேயே அவர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தங்கியுள்ளது. எனினும் இலங்கையை ஆண்ட எந்த முதலாளித்துவ கட்சிகளும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அவர்களின் அரசியல் அடிப்படை என்பது சிங்கள பௌத்த பேரினவாதமாகும். இடதுசாரிகள், சோசலிச கொள்கைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் மாத்திரம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்கின்றார்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாப்பதும் அதற்காக போராடுவதும் பெரும்பான்மை சமூகத்தினர் அதனை ஏற்றுக்கொள்ளச் செய்வதும் ஒரு வகையான இடதுசாரிகளிற்கான ஒரு புனித கடமை. தமிழ் மக்களின் போராட்டத்தை தென்பகுதியின் வர்க்க போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கவேண்டும். நாங்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். எந்த முதலாளித்துவ கட்சியும் இதனை செய்யப்போவதில்லை. https://www.virakesari.lk/article/1837901 point- காஸாவில் போரைத் தொடரும் நெதன்யாகுவுக்கு அமைச்சர் திடீர் மிரட்டல் - ஜூன் 8 வரை கெடு
பாலஸ்தீன் விடயத்தில் இஸ்ரேல் என்றோ தோற்று விட்டது.இஸ்ரேலுக்கு மேற்குலகின் உதவிகள்/ உண்மை மறைப்புகள் இருந்ததினால் வெளியில் எதுவுமே தெரியவில்லை. ஆனால் இன்றைய தனிமனித ஊடக வளர்ச்சி எல்லா உண்மைகளையும் படம் போட்டு காட்டுகின்றன.1 point- இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இவர் தாத்தா அமெரிக்கா முன்னனி Basketball Player இவரின் சொத்துக்கள் பல வில்லியன் அமெரிக்கன் டொலர் இவர் தனக்கென்று சொந்தமாய் கெலிகப்டர் வைத்து இருந்தவர் 2020 தை மாசம் தனது மகளுடன் கலிபோனியாவில் இருந்து வேறு இடத்துக்கு பயணம் செய்தார்........................அந்த அன்று நடு வானில் இயற்கை மிகவும் மோசமாக இருந்தது வானுர்த்தி ஓட்டுனரால் கெலிகப்டர கட்டுபாட்டுக்குள் வைத்து இருக்க முடிய வில்லை மொத்தமாய் அந்த கெலிகப்டரில் 7 பேர் பயணித்தவை நடு வானில் இருந்து கெலிகப்டர் கீழ விழுந்து நொறுங்கி அதில் பயணித்த அத்தனை பேரும் எரிந்து பலி ஆனார்கள் உடல்கள் கூட மிஞ்ச வில்லை அவர் பயணித்த கெலிகப்டர் அதிக பெறுமதி வாய்ந்த கெலிகப்டர்....................... இப்ப கூட Kobe Bryant இழப்பை என்னால் தாங்க முடிய வில்லை 2020ம் ஆண்டு இந்த செய்தி கேள்வி பட்டதும் கண்ணீர் அதிகம் வந்திச்சு....................2012களில் இருந்து இவரின் விளையாட்டை பார்த்து ரசித்து இருக்கிறேன் இப்படியான விவத்து யாருக்கும் நேரக் கூடாது.................................................1 point- இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
2014ம் ஆண்டு MH370 மலேசிய விமானம் 239 பேரோட மேல எழும்பினது இன்னும் கீழ இறங்கவே இல்லையாம்.🤣 மொத்த உலகமும் இண்டுவரைக்கும் தேடிக்கொண்டுதான் இருக்குதாம்.... தேடுற ஆக்கள் ஆருயிர் அமெரிக்கா மற்றது அன்பே ஆருயுரே அவுஸ்ரேலியா. ஒரு வேளை இதுவும் பழைய டப்பாவாக இருக்குமோ? 😎1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அக்கா மதுரைக்கு வந்த சோதனை. வாழ்த்துக்கள். மூக்கால அழுது அழுது மூன்றாவதாக.1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
மொழிபெயர்ப்புக்கு நன்றி ரஞ்சித். இலங்கையின் இன்றைய பொருளாதார நிலமைதான் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒரு பகுதி சிங்களவரையாவது சிந்திக்க வைக்கிறது. இது புதிய சிந்தனை அல்ல. விஜய குமாரதுங்க போன்றவர்களும் முன்னெடுத்ததுதான். இன்று இச் சிந்தனையானது தமிழர்களுடன் சமாதானமாகப் போனால் நாட்டை அபிவிருத்தி செய்வதன் மூலம் அனைவரும் முன்னேற்றமடையலாம் என்பதைச் சிங்களவர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் உரிமைக்காகப் போரடியது முடிவுக்கு வந்து பல வருடங்களின் பின் சிங்களவர் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுடன் எம்மை நோக்கி வரக் கூடிய நிலை ஏற்படலாம். அரசியல் போராட்டங்கள் மூலம் இரண்டு தரப்பினரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கலாம். இதற்கு முக்கிய இடைஞ்சலாக இருக்கப் போவது இலங்கையின் பௌத்த பீடங்கள் தான்.1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointவிளையாட்டின் இடையில் பந்து பழுதானால் அல்லது உருவம் மாறினால், அந்த ஓவரளவு பாவித்த பழைய பந்துகளில் ஒன்றை அம்பயர் இரு அணிகளின் கப்டன்களின் ஒப்புதலோடு பாவிப்பார். புதிய பந்தை பாவித்தால் bowling க்கு சாதகமாகிவிடும். நேற்றைய போட்டியில் தோனி பந்தை மைதானத்தைவிட்டு வெளியே அனுப்பியது (110 மீற்றர் சிக்ஸ்) RCB க்கு சாதகமாகிவிட்டது என்று சொல்கின்றார்கள். வேறு பந்தைக் கொண்டுவந்ததால் பந்துவீச்சாளருக்கு இலகுவாகிவிட்டது!1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்று புள்ளிகள் நிலவரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்! 01) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். போட்டியாளர் பதில் CSK DC GT KKR LSG MI PBKS RR RCB SRH வீரப் பையன்26 CSK GT KKR RR முதல்வன் CSK KKR RR SRH சுவி CSK KKR RR SRH ஏராளன் CSK KKR RR SRH நிலாமதி CSK KKR RR SRH அஹஸ்தியன் CSK KKR RR SRH ஈழப்பிரியன் CSK KKR LSG RR கல்யாணி CSK KKR RR SRH கந்தப்பு CSK KKR RR SRH கறுப்பி CSK GT MI RR எப்போதும் தமிழன் CSK KKR RR SRH வாதவூரான் CSK KKR RR SRH கிருபன் CSK KKR RR SRH நீர்வேலியான் CSK KKR RR SRH கோஷான் சே CSK KKR LSG RR நுணாவிலான் CSK KKR RR SRH புலவர் CSK KKR RR SRH1 point- நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மே 2024, 04:07 GMT முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். எனவே மாம்பழத்தை உண்ணும்போது, அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்றும் பலர் கருதுகின்றனர். உண்மையிலேயே மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா இதுகுறித்து மருத்துவர்களிடம் பேசினோம்... பட மூலாதாரம்,GETTY IMAGES மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் மாம்பழத்தில் பேரூட்டச் சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் நிறைய உள்ளன. கார்போஹைட்ரேட், புரதங்கள், அமினோ அமிலங்கள், லிப்பிடுகள் மற்றும் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. மேலும், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துகளும் உள்ளன. 100 கிராம் மாம்பழம் சாப்பிடுவதால் 60-90 கலோரி ஆற்றல் கிடைக்கும். இது தவிர, மாம்பழத்தில் 75-85 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மாம்பழத்தில் கொழுப்பு இல்லை. நூறு கிராம் மாம்பழத்தில் இருக்கும் சத்துக்களின் பட்டியல்: தண்ணீர்: 83 கிராம் கலோரி : 60 கலோரிகள் (ஆற்றல்) மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) : 14.98 கிராம் புரதம்: 0.82 கிராம் நார்ச்சத்து : 1.6 கிராம் சர்க்கரை: 13.66 கிராம் கால்சியம்: 11 மி.கி இரும்பு: 0.16 மி.கி வைட்டமின் சி: 36.4 மி.கி மாம்பழம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆமதாபாத்தை சேர்ந்த நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் மனோஜ் விதாலானி பிபிசியிடம் பேசுகையில், ``சர்க்கரை நோய் இருந்தால் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்பது முற்றிலும் கட்டுக்கதை. மாம்பழத்தில் உள்ள சர்க்கரைகள் பிரக்டோஸ் (Fructose) அதாவது எளிய பழச் சர்க்கரை வடிவில் உள்ளன. பழங்களில் உள்ள இயற்கையான `பிரக்டோஸ்’ உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. இருப்பினும், அவற்றை அதிகளவில் சாப்பிடக் கூடாது," என்று அவர் விளக்கினார். மாம்பழத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் (antioxidant) உள்ளன. பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மாம்பழங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில், சர்க்கரை உறிஞ்சப்படும் செயல்பாட்டை மெதுவாக்குகிறது. இது கார்போஹைட்ரேட் ஓட்டத்தைச் சீராக்கி, ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உடலுக்கு உதவுகிறது. ஒரு உணவுப் பொருள் ரத்த குளுக்கோஸ் அளவை, உடனடியாக எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதைக் குறிக்கும் அளவீட்டை `சர்க்கரை உயர்த்தல் குறியீடு’ (glycemic index) என்போம். மாம்பழங்களில் மிதமான (Moderate) கிளைசெமிக் குறியீடு உள்ளது. எனவே மாம்பழங்களை அளவோடு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் மிகவும் மெதுவாக ஜீரணிக்கப்படும். இதன் விளைவாக, உடலில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காமல் படிப்படியாக அதிகரிக்கிறது. `சர்க்கரை உயர்த்தல் குறியீடு’ (கிளைசெமிக் இன்டெக்ஸ்) என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவர் மனோஜின் கூற்றுப்படி, ``கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது ஒரு உணவுப் பொருள், உடலின் சர்க்கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவைக் குறிக்கிறது. தாக்கத்தின் அடிப்படையில் உணவுப் பொருட்களுக்கு எண்கள் ஒதுக்கப்படும். இந்தக் குறியீட்டில் 0 முதல் 100 வரையிலான அளவீட்டு எண்கள் உள்ளன. 0 என்றால் ஒரு உணவு உடலில் சர்க்கரை அளவை பாதிக்காது. 100 மதிப்பெண் என்றால் அந்த உணவு ரத்த சர்க்கரை அளவை அதிக அளவில் உயர்த்துகிறது என்று அர்த்தம். கிளைசெமிக் இன்டெக்ஸ் 55 அல்லது அதற்குக் குறைவான உணவுகளை உண்பது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் இந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. மாம்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவீடு 51. எனவே இந்தப் பழங்கள் சாப்பிடுவதற்குப் பாதுகாப்பானது. இது ரத்த சர்க்கரையை அதிகம் உயர்த்தாது. இருப்பினும், ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீடு நடுத்தர (Moderate) அளவில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, அன்னாசி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, ரொட்டி போன்ற உணவுகள் 70க்கு மேல் அளவீடு பெற்றுள்ளது. அதாவது அவற்றைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழம் சாப்பிடலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 'மாம்பழம் - நீரிழிவு நோய்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். இந்த ஆய்வறிக்கைப்படி, ``நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவற்றை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளனர். மருத்துவர் மனோஜ் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களது அறிவுறுத்தலின்படி, ஒரே நேரத்தில் அதிக மாம்பழங்களைச் சாப்பிட வேண்டாம். மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரு நாளைக்கு ஒருவர் 100-150 கிராம் அளவு மாம்பழம் சாப்பிடலாம் அல்லது ஒரு நாளைக்கு மூன்று முறை 50 கிராம் மாம்பழம் சாப்பிடலாம். பொதுவாக ஒரு நபரின் ரத்த சர்க்கரை அளவு, உணவுக்குப் பிறகு உயர்கிறது. உணவு உட்கொண்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கும். எனவே உணவு சாப்பிட்ட உடனே மாம்பழம் சாப்பிட வேண்டாம். சிற்றுண்டிகள் சாப்பிடும் வேளையில், மாம்பழங்களை சிற்றுண்டியாக உண்ணலாம். மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீட்டை மேலும் குறைக்க நார்ச்சத்து நிறைந்த பிற உணவுகளுடன் மாம்பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுமாறு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது மாம்பழத்தை, பீன்ஸ் மற்றும் தானியங்களுடன் சேர்த்து கலவையாக (salad) சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான வேகம் குறையும். மெதுவான செரிமானம் நமக்கு முழு உணவை உட்கொண்ட உணர்வை கொடுக்கும். மேலும், நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாது. 'பழச்சாறாகப் பருக வேண்டாம்' பட மூலாதாரம்,GETTY வழக்கமாக நாம் ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம்தான் சாப்பிடுவோம். ஆனால் பழச்சாறாக மாம்பழத்தை உட்கொள்ளும்போது, 2 அல்லது 3 பழங்கள் மற்றும் சர்க்கரையும் சேர்க்கப்படும். எனவே, ஜூஸ் வடிவில் உட்கொள்ளாமல், பழமாக துண்டுகளாக வெட்டி உண்ணுங்கள். பழத்துண்டுகளை சாப்பிடுவதால், அதிகமாகச் சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தைச் சாப்பிடும்போது கலோரி அளவு மற்றும் கிளைசெமிக் அளவை மனதில் கொள்ளுங்கள். இந்தியாவில் 1000 வகையான மாம்பழங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் மாம்பழம் மிக முக்கியமான பயிர் வகையாகப் பார்க்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியா 21.79 மில்லியன் மெட்ரிக் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் 1000 வகையான மாம்பழங்கள் விளைகின்றன. ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், பிகார், கர்நாடகா, குஜராத் மற்றும் தெலங்கானா ஆகியவை மாம்பழம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்கள் ஆகும். (குறிப்பு - இந்தக் கட்டுரை விழிப்புணர்வுக்காக மட்டுமே. சந்தேகம் இருந்தால் மருத்துவர்களை அணுகவும்.) https://www.bbc.com/tamil/articles/cy0l8nyek9no1 point- நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
ஊரில் பல வீடுகளில் விலாட்டு மரங்கள் காய்த்திருப்பதைப் பார்த்தேன். எங்கள் வீட்டிலும், மனைவியின் பிறந்து வளர்ந்த வீடு, ஒரு மரம் காய்த்திருக்கின்றது. கறுத்த கொழும்பானை பார்க்கவேயில்லை என்று இப்பொழுது தான் நினைவுக்கு வருகின்றது. நான் பிறந்து வளர்ந்த வீட்டில் இரண்டு கறுத்த கொழும்பான் மரங்கள் முந்தி நின்றது. இப்ப இல்லை. முந்தி அவையும் சில வருடங்கள் காய்த்துக் கொட்டின, சில வருடங்கள் பகிஷ்கரித்தும் இருக்கின்றன. என்ன டிசைனோ.....😀1 point- வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி
டக்கி ஏற்கனவே ஒரு திய்யேட்டரில் குடி இருக்காரே..அப்ப அவருக்கு மேலதிகம்மாக ஒன்றா ?1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஹா ஹா அதில் பெயர் மட்டும் தானே முதல் இடம் புள்ளியோட இருந்து எடுத்து போட்டால் பெருமையா இருந்து இருக்கும் லொல்😁.........................................1 point- தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது : மாவை, சுமந்திரனிடம் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் சம்பந்தன்
நாளை நாளை என்றால் இல்லை இல்லை என்றே அர்த்தம். பொதுவேட்பாளர் பற்றி ஆராய்கிறோம் என்பது இது தான். ஐயா கதைக்க பேசவே மாட்டார். தனது முடிவை எப்படி சுமந்திரனிடம் சொன்னார்? ஏன் சுமந்திரனின் காதுக்குள் மட்டும் சொன்னார்? அப்போ யாருக்கு ஆதரவு வழங்க போகிறார்?1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 point- வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி
ஜனாதிபதியால்… மூன்று தியேட்டர்களும் திறந்து வைக்கப்பட இருப்பது… சினிமா ரசிகர்களுக்கு பால் வார்த்த மாதிரி ஒரு இனிப்பான செய்தி. 😂1 point- எனது அறிமுகம்
1 pointவிசாரிப்புகளுக்கு மிக்க நன்றி💐🙏 ஆமாம். 🌷 மிக்க நன்றி விசு💐🙏 வலி சுமந்த வரிகள்😥1 point- தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
உங்கள் தியாகங்கள் வீண்போவதில்லை! இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்தம்மா....ஊருக்குபோக.. சிங்கள பொலிசு விடுமா..?1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில், சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முகங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.1 point- தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்?1 point- தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
எமது தேசத்தின் விடுதலையினை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம் என்று இந்தநாளில் உறுதியெடுத்துக் கொள்வோம். தமிழினக்கொலையில் இலங்கை, இந்திய சர்வதேசப் பேய்களால் பலியிடப்பட்ட என் மக்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். உங்கள் தியாகங்கள் வீண்போவதில்லை!1 point- தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
தேசிய தலைவர் பிரபாகரனுக்கும், இறுதி போரில் இறந்த மாவீரர்களுக்கும் வீரவணக்கம். இறுதி போரில் மரணமடைந்த அனைத்து பொதுமக்களுக்கும் நினைவு வணக்கங்கள்.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஆறு ---------------------------------------------------------------- குட்டிக் கடை என்றாலும் எங்கள் வீட்டவர்கள் அங்கும் எட்டு மணித்தியாலங்கள் செலவழிக்கும் திறமை பெற்றவர்கள். அவர்கள் காலை முன் வைத்து ஒரு கடைத் தெருவில் இறங்கி விட்டால், சுன்னாகமும், தி நகரும் ஒன்றே. ஒரு கட்டத்தில் மதியம் தாண்டிய பின் இனிமேல் பசி பொறுக்க முடியாது என்ற நிலையில், சரி, சாப்பிடப் போவம் என்று வந்தார்கள். 'ஒரு நல்ல சைவச் சாப்பாட்டுக் கடையாக பார்த்து நிற்பாட்டப்பா...' என்று ஓட்டுனரிடம் சொன்னதில் ஒரு வார்த்தை பெரும் பிழையான வார்த்தை. 'நல்ல' என்ற அடைமொழியை நான் சொல்லியிருக்கக்கூடாது. அவர் அங்கிருந்து இன்னும் தூரம் ஓடி திண்ணைவேலியில் இருக்கும் லவின்ஸ் என்னும் ஒரு கடைக்கு எங்களைக் கொண்டு வந்தார். உயர்தர இந்திய சைவ உணவு அல்லது அப்படி ஏதோ ஒன்று அக்கடையின் முகப்பில் எழுதப்பட்டிருந்தது. இது தான் இந்தப் பயணத்தில் நாங்கள் முதலாவதாகப் போகும் உணவகம். எனக்கு எந்தக் கடைகள் பற்றியும் எதுவுமே தெரியாது, என் மனைவியும் யூ டியூப் சேனல்களில் துணிக்கடைகள் போன்றவற்றை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருந்தவர், ஆனால் உணவகங்களை பார்த்து வைக்க நினைக்கவில்லை. நாங்கள் ஆறு பேர்கள், வாகன ஓட்டுநர் உட்பட. மெனு கார்ட்டை தந்தார்கள். குடிப்பதற்கு ஜூஸ், லஸ்ஸி, சோடா என்று சிலவற்றை சொன்னோம். ஒரு ஆரஞ்சு ஜூஸ் 4000 ரூபாய்கள் என்று போட்டிருக்கின்றார்கள் என்று பிள்ளைகள் காட்டினார்கள். அங்கு வேலை செய்பவர் ஒருவரைக் கூப்பிட்டு, இது என்ன 4000 ரூபாய் ஆரஞ்சு ஜூஸ் என்று கேட்டோம். ஆரஞ்சை பிழிந்து கொடுப்பார்கள் என்றார். அவர் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை. நாங்கள் அந்த ஜீஸ் எடுக்கவும் இல்லை. இந்த 4000 ரூபாய் ஜூஸ் பற்றி ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் யாரோ செய்தி போட்டிருக்கின்றார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். ஒரு செட் பூரி, பரோட்டா, ஒரு தோசை என்று மிகச் சாதாரண உணவுகளையே எடுத்தோம். கறிகளையும் எடுங்கள் என்றார்கள் அங்கு வேலை செய்பவர்கள். ஏன், பூரி, பரோட்டா போன்றவற்றுடன் ஒன்றும் வராதா என்று கேட்டோம். வரும், ஆனால் அது போதாது என்றனர். சரி என்று நான்கு கறிகளையும் எடுத்தோம். மிகச் சாதாரணமான ஒரு சாப்பாடு. அமெரிக்காவில் லிட்டில் இந்தியா என்னும் ஒரு பகுதியில் தான் என்னுடைய வீடு இருக்கின்றது. ஆதலால் அருகிலேயே பல இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் சாதாரண, விலை மிகவும் குறைந்த ஒரு உணவகத்தில் இருக்கும் தரமே இங்கும் இருந்தது. அதே மணமும், குணமும், சின்ன சின்ன இரும்புச் சட்டிகளும். எதையும் சாப்பிட்டு முடிக்கவும் இல்லை. நான்கு கறிகளில் இரண்டு கறிகளை தொடக்கூட இல்லை. 24 ஆயிரம் ரூபாய்கள் என்று பில்லைக் கொடுத்தார்கள். நம்ப முடியவில்லை, கூட்டிப் பார்த்தேன், 24 ஆயிரங்களே. பின்னர் கூகிளில் இந்த உணவகத்தினை தேடிப் பார்த்தேன். பொதுவாக எல்லோரும் நன்றாகவே சொல்லியிருக்கின்றனர். என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. இதே வேளையில், பின்னர் ஒரு நாள் நல்லூர் கோவிலின் வீதியில் இருக்கும் Lemon Tree Hotel என்னும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். இந்த தடவை நாங்கள் எட்டுப் பேர்கள். அதே 'இந்திய சைவ....' என்ற அடைமொழியுடன் இந்த இடமும் இருந்தது. இங்கும் சிற்றுண்டி வகைகளும், மதிய உணவு வகைகளும் இருந்தன. தென் இந்திய தாலி போன்று ஒரு மதிய உணவு கொடுத்தனர். வேறு உணவுப் பண்டங்களையும் எடுத்திருந்தோம். சிலவற்றை வீட்டுக்கு கட்டியும் கொண்டோம். மொத்தமாக ஆறு ஆயிரங்கள் என்று பில் வந்தது. என்னைக் கேட்டால், அந்த உயர்தர உணவகம் என்று போடப்பட்டிருந்த உணவகத்தில் இருந்தது போன்று அல்லது அதை விட சிறப்பாக இங்கு உணவுகள் இருந்தன. என்ன, சின்ன சின்ன இரும்புச் சட்டிகளில் இவர்கள் பரிமாறவில்லை என்பது மட்டுமே பெரிய வித்தியாசம். என்ன சொன்னாலும் சைவம் என்றால் எங்களுக்கு சரியாக அமைவது மலாயன் கபே என்பதில் பெரிதாக மாற்றுக் கருத்துகள் இருக்காது என்று நினைக்கின்றேன். என்றும் அந்த உணவகம் அப்படியே இருக்கின்றது. இரண்டாம் தடவை அங்கு போயிருந்த பொழுது ஒரு சம்பவம் நடந்தது. முதல் தடவை பிள்ளைகளையும் அங்கு கூட்டிப் போயிருந்தோம். நன்றாகவே இருக்குது என்றார்கள். இரண்டு வாரங்களில் பிள்ளைகள் அமெரிக்கா திரும்பி விட்டார்கள். இருவருக்கும் வேலை, அதில் ஒருவர், இளையவர், இந்த வருடம் தான் வேலை ஆரம்பித்து இருக்கின்றார். ஆரம்பத்தில் வருடத்திற்கே அமெரிக்காவில் இரண்டு வாரங்கள் தான் விடுமுறை கொடுப்பார்கள். இவருக்கு நான்கே மாதத்தில் சிறிது இரக்கப்பட்டு இரண்டு வாரங்கள் விடுமுறை கொடுத்தது அமெரிக்க சட்டக் கோவைகளுக்கு கொஞ்சம் எதிரான ஒரு விடயம். இரண்டாம் தடவை மலாயன் கபே போயிருந்த போது, ஒரு பருப்பு வடை எனக்கும், மனைவிக்கு ஒரு முக்கோண ரொட்டி என்றும் சொன்னேன். அதைக் கேட்டவர் சில விநாடிகள் என்னையே பார்த்துக் கொண்டே நின்றார். நல்ல உயரமான ஒரு இளைஞன். போனவர் ஒரேயொரு உளுந்து வடையுடன் மட்டும் திரும்பி வந்தார். பருப்பு வடை என்றேன் மீண்டும். ஒரு வேளை கடலை வடை என்று தான் கட்டாயம் சொல்ல வேண்டுமோ என்று கடலை வடை என்றும் சொன்னேன். அந்த இளைஞன் மெதுவாக என் காதருகில் குனிந்தார்............... தான் தமிழ் இல்லை என்றும், ஒரு சிங்களவர் என்றும் மிகப் பணிவாகச் சொன்னார். சிங்களத்திலேயே சொன்னார். கொஞ்சம் ஆச்சரியமாகப் போய்விட்டது. அது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்களே வந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று காட்டுகின்றோம் என்று சொல்லி விட்டு, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்றேன். தான் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்றார். பீடம் கிளிநொச்சியில் இருக்கின்றது, இங்கு யாழ் நகரில் என்ன செய்கின்றீர்கள் என்றேன். அவர்களின் பயிற்சி ஒன்றுக்காக யாழ் நகரில் இப்போது தங்கியிருப்பதாகச் சொன்னார். நானும் படிக்கும் காலத்தில் இரண்டு தடவைகள் பயிற்சிக்காக மொத்தமாக ஆறு மாதங்கள் தென் பகுதியில் வாழ்ந்திருக்கின்றேன். ஆனால் பயிற்சிக் காலத்தில் ஒரு உணவகத்தில் வேலை செய்வது புதிய விடயம். அது அந்த இளைஞன் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியது. அவரின் பெயர் சொன்னார். சொந்த இடம் கதிர்காமம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். கிளிநொச்சியில் எலக்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் சில விடயங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் கதைத்தோம். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியில் வரும் போது திரும்பிப் பார்த்தேன். அந்த இளைஞர் ஒரு மேசையில் நாலு ஆட்களிடம் மாட்டுப்பட்டிருந்தார். சமாளித்து, கற்றுக் கொண்டு தான் வாழ்க்கையில் முன்னுக்கு போக வேண்டும். நாங்களும் இப்படித்தானே பயணித்தோம். மனைவி கேட்டார், 'எல்லாம் சரி, அந்தப் பொடியன் எப்படி உங்களோட உடனேயே சிங்களத்தில் கதைச்சது?' எனக்கும் ஏன், எப்படி என்று விளங்கவில்லை. அடுத்த முறை போய், கதிர்காமம் போய், நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். (தொடரும்...........)1 point- யாழில் நாய் இறைச்சி கொத்து.
1 pointமாட்டு இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று ஒரு குழு போராட்டம் நடத்துகின்றனர். பசு வதை செய்பவர்களை தலை கீழாக கட்டித் தொங்க விடுவோம் என்று அமித்ஷா அந்தப் பக்கம் முந்தாநாள் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கின்றார். வேள்வி அன்று கோயிலுக்கு போய் பார்த்தேன். சின்ன சின்ன கிடாய் ஆடுகளே ஒரு இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலே. இந்த நிலையில், கொத்துக் கடைக்காரர்களிடம் 'என்ன, கொத்தில இறைச்சியையே காணல்ல...' என்று முறைத்தால், அவர்களும் தான் என்ன செய்யிறது? அதிகமாக கண்ணில் படுவதை பிடித்து அடிக்கின்றார்கள் போல. ஒவ்வொரு ஒழுங்கையிலும் எவ்வளவு என்கிறீர்கள்.......கூட்டம் கூட்டமாக நிற்கின்றன........எங்களைப் பார்த்து முறைத்த படியே.1 point- இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் - சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்
சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் (Agnes Callamard) இறுதிப் போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த அஞ்சலி நிகழ்வு, இன்று (18.05.2024) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்றுள்ளது. அக்னெஸ் கலமார்ட் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதை சர்வதேசத்துக்கு கூறுவதே எங்களின் முதன்மையான நோக்கம்.1 point- இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் - சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்
உள்ளூர் சர்வதேச அழுத்தங்களின் மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வந்து உரை நிகழ்த்தியதுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களைப் போன்றோர் தமிழ்மக்களின் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
இதுவரையிலும் நான் கேட்ட பார்த்த தமிழர் மற்றும் அவர்கள் பிரச்சினை குறித்த சிங்களவர்களின் உரையாடலில் இது மிகவும் சிறப்பு என்று கூறலாம்1 point- முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு
பிரதேச இளைஞர்களுக்கு ஒரு சபாஷ்! டெம்பிரரியாகத் தன்னும் யோக்கியர்களாக மாறிவிட்டார்களே!😂1 point- முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு
அவரை பத்து கிலோ மீட்டர் ஊர்வலமாக நடத்திக் கொண்டு, அதை காணொளி எடுத்து எல்லாருக்கும் காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.1 point- வினா விடை
1 pointசெயலி = காதலி........( காத்திருக்க வைத்து செய்வதில்). யாழ் = மனைவி ...... ( அப்பப்ப திட்டினாலும் சோறும் தண்ணியும் நேரத்துக்கு கிடைக்கும்). 😂1 point - 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.