Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்17Points39344Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33810Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்6Points19669Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்6Points3034Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/01/24 in Posts
-
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
உ.த. பரீட்சையில் சாதித்த மீன் வியாபாரியின் மகள்! (மாதவன்) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ். மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்றுள்ளார். க.பொ.த. உயர்தரம் (2023) பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியிருந்தன. இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி மேலும் தெரிவித்ததாவது, எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3 ஏ சித்திகளை பெற்றேன். நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன். அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும். தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(ப) https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_கலைத்துறையில்_சாதித்த_மீன்_வியாபாரியின் மகள்!7 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நன்றி பையா .....நான் இங்கினேக்கதான் திரிகிறன்.........! 23......கோஷான் சே..... இது ஒரு சிறப்பான இலக்கம் 2= மூன் .....3= மாஸ்டர் .....அதனால் இவர் முதல் மூன்றுக்குள் வர இன்றுவரை கிரகநிலை சாதகமாய் இருக்கு ........விதிகளை கடந்து மதிலால் ஏறி விழுந்து பின் கதவால் வந்துள்ளதால் முன் கதவடியில் வழிமேல் விழிவைத்து முழித்துக்கொண்டிருந்த சனியின் பார்வையில் இருந்து தப்பி அதிகாரியின் கிருபையால் வரிசையில் சேர்ந்து விட்டார் ........ஆகையால் ஏனையோர் அண்ணாந்து பார்க்கும் நிலையில் அவர் ஏணிமேல் நிப்பார் .........! 😂6 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IRL 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK USA 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG AFG 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN BAN 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN Select IRL Select IRL Select USA Select USA Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) INDIA #A2 - ? (1 புள்ளிகள்) PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM Select SCOT Select SCOT Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) ENG #B2 - ? (1 புள்ளிகள்) AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI WI AFG Select AFG Select PNG Select PNG Select UGA Select UGA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) WI #C2 - ? (1 புள்ளிகள்) NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PNG முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL SL BAN Select BAN Select NED Select NED Select NEP Select NEP Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA #D2 - ? (1 புள்ளிகள்) SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK SA SA 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 ENG NZ ENG 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI INDIA IND 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 AUS SL AUS 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 ENG SA ENG 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK NZ NZ 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 INDIA SL INDIA 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI AUS Aus 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK ENG ENG 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 NZ SA SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 AUS INDIA Aus 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI SL SL சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) INDIA Select INDIA INDIA AUS Select AUS Select WI Select WI WI SL Select SL Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) WI #அணி 1B - ? (2 புள்ளிகள்) INDIA 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK Select ENG Select ENG ENG NZ Select NZ Select SA Select SA SA 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) SA #அணி 2B - ? (1 புள்ளிகள்) ENG 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) WI 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) ENG இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி Eng உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SL 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) RACHIN RAVINDRA 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) woods 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) INDIA 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) TRAVIS HEAD 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) INd82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JOSH HAZLEWOOD 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SL 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Archer 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Aus கடைசி பஸ்சையும் விட்டு விட்டு, ஒரு மணத்தியாலம் பிந்தி, வெங்காய லாரியில் ஏறி வந்துள்ளேன். ஏற்றுகொள்ளவும் ஜி @கிருபன். டெம்பிளேட் உதவி 🙏 @ஈழப்பிரியன் அண்ணா.6 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிந்திவந்த @goshan_che போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்😀 வெற்றிக் கனியைத் தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்! யாழ்கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் பங்குபெற்றும் போட்டியாளர்கள்: 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன் 15 ரசோதரன் 16 அஹஸ்தியன் 17 கந்தப்பு 18 வாத்தியார் 19 எப்போதும் தமிழன் 20 நந்தன் 21 நீர்வேலியான் 22 கல்யாணி 23 கோஷான் சே4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையன் அழுத அழுது ஒரு மாதிரி கோஷானனையும் பங்'கு பற்ற வைத்து விட்டார். ஒரு வேளை கோஷான் முதலாவதாக வந்தால்வழக்குப் பாயும் என்று நினைக்கிறேன்.கறுப்பிதான் ஏமாற்றி விட்டார். எழுதுங்கள் ..... அவர் இரக்கமில்லாதவர் என்று. பாடுங்கள்... இவர் பைத்தியக்காரனென்று.3 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இஞ்சைதான் நிக்கிறன்.....கட்டிக்கொண்டு வந்த வடையை அளவு கணக்கில்லாமல் சாப்பிட்டதால வயிறு இன்னும் நோர்மலுக்கு வரரேல்லை......3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உலகக்கிண்ணப் போட்டிகள் அமெரிக்க நேரப்படி 01 ஜூன் 19:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன. இன்று சனி (01 ஜூன்) ஒரு போட்டியும் நாளை ஞாயிறு இன்னொரு போட்டியும் நடைபெறவுள்ளன. கீழே உள்ளவை பிரித்தானிய நேரப்படி உள்ளன! யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 19 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்வதாகவும் 04 பேர் கனடா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தியா தமிழ் சிறி நுணாவிலான் பிரபா USA வாதவூரான் ஏராளன் கிருபன் ரசோதரன் அஹஸ்தியன் கந்தப்பு எப்போதும் தமிழன் நந்தன் நீர்வேலியான் கல்யாணி கோஷான் சே கனடா சுவி புலவர் P.S.பிரபா வாத்தியார் முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 2) முதல் சுற்று குழு C : ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG எல்லோருமே மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா!3 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆமாம் இந்த திரி தொடங்கியதிலுருந்து,....அது வந்து நானும் பல பல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளேன் இந்த பலகாரங்களை எப்படி கடத்த்துவது என்ற தொழில்நுட்பம் தெரியாது தரும் பலகாரங்களைகூட ஒன்றை கடித்துவிட்டு வீட்டில் வந்து சாப்பிடுவதுண்டு 🤣🤣🤣🤣 ஆமா இதற்க்கு ஏதாவது கற்கை நெறிகள் உண்டா ??? அல்லது பயிற்சி3 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
3 points
- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
ஒரு வித்தியாசமான கோணத்தில் விடயங்களை அணுகுகிறீர்கள், இதுவும் ஒரு நல்ல கருத்துதான், ஆனால் நடைமுறையில் இலங்கை அரசு மிக தெளிவாக புலிகளை அழிப்பதில்தான் கடந்தகாலத்தில் அக்கறை காட்டி வந்துள்ளது. புலிகள் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொது இந்திய இராணுவம் வெளியேறிய பின் நல்லூர் கோயிலுக்கு சென்ற புலிகளின் தலைவரது துணைவியாரை பின் தொடர்ந்து புலிகளின் தலைவரின் இடத்தினை அறிந்து அவரை கொல்லும் முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டிருந்தது. இரணில் விகிரமசிங்க அவ்வாறு செய்ய மாட்டாரா என தெரியாது, பிரேமதாச புலிகளுக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போராடுவதற்காக அனுப்பிய பார ஊர்திகளில் ஒரு பார ஊர்தி முழுவதுமாக புலிகளின் தலைவரின் பிள்ளைகளுக்கான விளையாட்டு பொருள்களை பிரேமதாசா வழ்ங்கியிருந்தார் என கேள்விப்பட்டிருந்தேன். ஒரு பக்கம் நட்புறவு கொண்டாடிக்கொண்டே மறுபுறம் கொல்ல ஆள் அனுப்புவதில் அவர்கள் கில்லாடிகள்.2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
முதலிடம் பெற்ற கல்யாணி, இரண்டாமிடம் பெற்ற நுணாவிலான், மூன்றாமிடம் பெற்ற கந்தப்பு ஆகியோருக்கு வாழ்த்துகள்.👏💐2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍....... இந்த கூட்டத்தில் நாலு விசயம் தெரிந்த மனிதர்களும் இருக்கின்றார்கள்.............2 points- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வீட்டை போனபின் மனைவி பிள்ளைகள் நல்ல சாத்து சாத்தியிருப்பினம். உன்ரை நண்பர்களுக்கு எல்லாத்தையும் தூக்கிக் கொடுத்துட்டு கையை ஆட்டிக் கொண்டு வந்திட்டாய். கொடுத்த மொய்யுக்கு ஊரவங்கள் திண்டது தான் மிச்சம்.2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்பாடா.... ஒரு மாதிரி @goshan_che வந்திட்டார். இனி அவர், கொல்லைப்புறத்தில் நின்று கொண்டு நம்மை பாதுகாப்பார். 😂 நாம் ஜாலியாக.... "பொப் கோர்ன்" சாப்பிட்டுக் கொண்டு கிரிக்கெட் பார்க்கலாம். 🤣2 points- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
நன்னடத்தைப் பிணை (தண்டனைக் குறைப்பு) முன்னர் ஒரு போதும் குற்றவாளியாகக் காணப்படாத ஒருவருக்கு மட்டும் தான் சாத்தியம். இந்த வழக்கு நடந்த 6 வாரங்களிலேயே "தம்பு" 9 தடவைகள் நீதிமன்ற கட்டளையை மீறினார் என்று பத்தாயிரம் டொலர்கள் இதே நீதிம்ன்றில் அபராதம் கட்டியிருக்கிறார். எனவே, தம்புவின் "நன்னடத்தையை" முன்னிட்டு தண்டனைக் குறைப்பு வராது. ஆனால், சிறைக்கு அனுப்புவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கலால் சிறைத் தண்டனை கிடைக்காமல் போகலாம். சிறை சென்றால் கூட இவர் தேர்தலில் நிற்கலாம், வெல்லலாம், ஜனாதிபதியாகலாம். அமெரிக்க அரசியலமைப்பில் இதைத் தடை செய்யும் எந்த சரத்துகளும் இல்லை.2 points- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
2 points- வேதத்தில் சாதி இருக்கிறதா?
1 pointஇதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது. ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம். எனக்கு மதங்களைப் பற்றிய அறிவிருக்கிறதா என்ற கேள்வியும் சந்தேகமும் யாருக்காவது எழுந்தால் அவர்கள் என்மேலான தீர்ப்பை எழுதுவதற்கு நான் உதவத் தயாராய் இருக்கிறேன். எனது கேள்விகள் உறுத்தாமல் இருக்கவேண்டுமானால் என்னைப் பற்றிய தீர்ப்பை எழுதி, ஒரு அடையாளமிட்டு வைத்துவிடுவது அவர்களுக்கு நல்லது. எனக்கு மதங்களைப்பற்றிய அறிவு எவ்வளவு என்பதை எந்த அளவையிலும் சொல்ல விருப்பமில்லை. அதேபோல் சக மக்களின் மீதான அன்பையும் எந்த அளவையிலும் சொல்லவிருப்பமில்லை. நான் தீவிர வலதுசாரி இந்து வெறியனாக இருந்திருக்கிறேன். கம்யூனிஸ நம்பிக்கைகளை எடுத்துகொண்டு திரிந்திருக்கிறேன். தமிழ் தேசியம் கொஞ்சகாலம் இருந்தது. எல்லாவற்றையும் எனது அவற்றினூடான தீவிரமான ஈடுபாட்டலும், சார்பாலும் தான் கடந்து வந்திருக்கிறேன்; வெறுப்பால் அல்ல. மக்களின் மேல் உள்ள அன்பும், மதங்களின் (நிறுவனங்களின்) மேல் உள்ள விமர்சனமும் எந்த இசத்தின் பாற்பட்டதுமானது அல்ல. எந்த மேலுலகின் கனிகளுக்காகவோ, கடவுளரின் கருணாவிலாசத்துக்காகவோ அல்லது புதியதொரு பொன்னுலகத்தை நிர்மாணிக்க புறப்பட்டோ இதைச் செய்யவில்லை; இரக்கம், மனித நேயம், கருணை இவை போன்ற பெருமிதப்படத்தக்க பதக்கங்களை என் ஆத்துமாவில் நிறைத்துக்கொள்ளவும் விரும்பி இதைச் (மக்களின் மேலுள்ள என் அன்பும், நிறுவனங்களின் மேலமைந்த என் கேள்விகளும்) செய்யவில்லை. மக்களின் மேலான அன்பு என்மேல் உள்ள சுயகாதல்; இந்தக்கேள்விகள் என்னை நிறுவனப்படுத்தி இருக்கும் அமைப்புக்கு எதிரான சுய விடுதலையை முன்னெடுக்கிற கேள்விகள். அவ்வளவே! *** இப்போது விதயத்துக்கு வருவோம். இந்து மதம் என்று இன்று முன்னிருத்தப்படுகிற வேதங்களை ஒத்துக்கொள்ளும் எந்த தத்துவப்பிரிவும் மனிதனுக்கு எதிரானது. பெண்களையும் உள்ளடக்கியே! இதில் யோனி-லிங்க வழிபாடுகள், பெண்களை சக்தியாகவும், தெய்வமாகவும் சித்தரிக்கும் வழிபாடுகள் போன்றவை வேத மதங்களுக்கு எதிரானதாக உண்மையில் தோன்றிய தந்திரா வகை தத்துவங்களை சேர்ந்தவை. அதே போன்று வேத மதங்களை எதிர்த்தே 2300 ஆண்டுகளுக்கு முன்னேயே புத்தரும் தோன்றி இந்தத் துணைக்கண்டமெங்கும் மனித விரோத வேத மதங்களை (இன்றைய இந்து மதமாக முன் வைக்கப்படும் உள்ளீட்டை) வீழ்த்தி அப்புறப்படுத்தினார். இதற்காக அவர் மேற்கொண்ட விவாதங்கள், எதிர்கொண்ட சதிகள் போன்றவைகளை பெளத்த- சமண தத்துவங்களில் பரிச்சயம் கொள்ள முனையும் யாவரும் அறியலாம். தென்னிந்தியாவில் தோன்றி இருந்த உலகாயத்தை முன்வைத்த தத்துவப்பிரிவுகள் மிக எளிதாக பெளத்தத்தோடு இணங்கி, பரவிவந்த வேத அடிப்படை கருத்துக்களை எதிர்கொண்டதற்கான குரலை திருக்குறளிலும், மற்ற காப்பியங்களிலும் காணலாம். புத்தரின் இந்த வெற்றியைத் தொடர்ந்தே கர்ம காண்டமாகிய வேதமதங்கள் யாகம் போன்ற சுரண்டல் வழிகளை குறைத்துக்கொண்டன. சாதி என்ற வருண அமைப்பின் மீதான அதன் பிடி தகர்ந்துபோனது. புத்த மத்தின் தாக்கங்களாலேயே ஞானமார்க்கங்கள் தளிர்விடத்துவங்கி உபநிடதங்கள் தோன்ற ஆரம்பித்தன. பெளத்த நெறிகளை வேராகவும் தந்திரா போன்ற வழிபாட்டு முறைகளை தனது உடலாகவும் கொண்ட சன்மதங்களை ‘பிரசன்ன பெளத்தராகிய‘ சங்கரர் ஸ்தாபித்து அவற்றின் மூலம் வேத மேலாண்மையை மீளக்கொண்ர்ந்தார். அதற்காக பிராமணீயம் அவருக்கு தீராத கடன்பட்டிருக்கிறது. வேத தத்துவங்களை அதன் மனித விரோத தன்மைக்காக புத்தர் தொடங்கி (புத்தருக்கு முன்பாகவே செயினர், சார்வாகர்கள், சாக்கியம், லோகாயத்தின் பலபிரிவுகளும் இந்த எதிர்ப்பைச் செய்திருந்தாலும்) பல நூற்றாண்டுகளாக பல ஞானிகளாலும், சித்தர்களாலும் எதிர்க்கப்பட்ட உழைக்கும் சமூக விரோத, ஆணாதிக்கச் சிந்தனைகள் என அடையாளங்காட்டப்பட்ட ஒன்றை அம்பேத்காரும், பெரியாரும் ஒழிக்க நினைத்தது, முயன்றது ஏதோ நேற்று நடந்த சமூக மாற்றமோ, ஒரு சாதிக்கு எதிரானதோ அல்ல. பாரத தேசத்திலே புத்தமதம் ஜீவகாருண்யம், சர்வஜன சமத்துவம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும் படி செய்தது என்கிறார் பாரதி (பாரதியின் பகவத்கீதை). சாஸ்திரங்கள், இதிகாசங்களை முற்றாகப் புறக்கணித்து உபநிடதங்களின் மேலாக சாதி/ வருண மறுப்பைத் தொடர நினைத்த ஆரியசமாஜம் போன்ற செயல்பாடுகளும் வேதக்கொடுமைகளை ஒழிக்கக் கிளைத்தவையே. இந்த சீர்திருத்தங்களும் ஏனைய வேத மதங்களின் உள்ளேயே நடந்த மற்ற சீர்த்திருத்தங்களை (இராமனுஜர் போன்ற) போல வருணாஸ்ரமத்தையும், மனுவையும் தாங்கி நிற்கும் பகுதியினரால் வெற்றிகொள்ளப்பட்டன. இப்போது இரண்டு கேள்விகள் இருக்கின்றன. 1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? 2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு (அதைக்காப்பற்ற முனைகிறவ்ர்களுக்கு) வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா?இவைகளைப் பார்ப்போம். 1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? வேதத்தை மூலப்புத்தகமாகக் கொண்ட பல சாஸ்திரங்களும், சமயப்புத்தகங்களும் வருணாசிரமத்தை, சாதி அடிமைமுறையை, பலவேறு சாதிகளின் கடமைகளை பிராமணர்களின் மேலாதிக்கத்தைச் சொல்லுவன. இதில் குறிப்பாக மனுஸ்மிருதியைக் குறிப்பிடலாம். அது சூத்திரர்களின் வாழ்விடங்கள் மண்ணால் கட்டப்பட்ட்டிருக்கவேண்டும், உலோகங்களை பாத்திரங்களாக பயன் படுத்தக்கூடாது, மண்ணிற்கு அடியில் உள்ள கிழங்குகள் , வேர்களையே சாப்பிட வேண்டும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் இடுப்புக்கு மேல் உடையணியத் தடை, அத்தியாவசியத்தின் காரணமாக ஊருக்குள் நடக்கும் போது கைக்கொள்ளவெண்டியமுறைகள், பொது நீர்நிலைகளை பயன்படுத்த, கல்வி கற்க, இடம்பெயர செய்யப்படவேண்டிய தடைகள், அவை மீறப்பட்டால் கொடுக்கப்படவேண்டிய தண்டனைகள் போன்ற பலவற்றை விரிவாகப் பேசுகிறது. அது தவிர பெண்ணடிமைத்தனம், பால்யவிவாகம், பால்யவிவாகம் செய்யாவிட்டால் ஏற்படக்கூடிய பாதகங்கள், சதி (உடன் கட்டை ஏறல்) போன்ற கருத்துக்களையும் சொல்கிறது. இது தவிர பிராமணர்களுக்கான சலுகைகள், சிறப்புகள் போன்றவையும் குறிப்பிடப்படுகின்றன. மனுவின் இந்த சட்டப்புத்தகம் மிக முக்கியமான ஸ்மிருதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்மிருதிகள் என்பவை நினைவில் வைக்கப்பட்டது என்று பொருள் படுபவை. இவை யுகங்கள் தோறும் மாறக்கூடியவை என்றாலும் யுகங்கள் பல நூற்றாண்டுகளைக் கொண்டதால் நடைமுறையில் அவை மாறாத தன்மைகொண்டவையாகவே இருக்கின்றன. மனு ஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக செல்வாக்கு செலுத்தி வருவது அப்படியே. மேலும் ஸ்ருதி (ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டவை என்று பொருள் கொள்ளலாம்; ஸ்ருதிகள் என்றும் மாறத்தன்மை கொண்டவை) என்றழைக்கப்படும் வேதங்களையும் இந்த ஸ்மிருதிகளையும் எந்தக்காரணம் கொண்டும் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்பது மனுவின் சட்டம் (மனு ஸ்மிருதி (பாகம் 2 சூத்திரம் 10). இந்நிலையில் மனு உலகத் தொடக்கம் பற்றிய பகுதியிலேயே மனிதனின் உருவாக்கத்தைப்பற்றி பேசும் போது“But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.” (மனு ஸ்மிருதி பாகம் 2 சூத்திரம் 31) இப்படியாகக் குறிப்பிடுகிறார். இதில் நான் குறிப்பிடவிரும்புவது மனிதனைப் படைக்கும் போதே அவனை நால் வருணங்களாய் படைக்கிறார் என்பதைத்தான். செய்யும் தொழிலைக்கொண்டே வருணங்கள் பிரிக்கப்பட்டன என்று விளக்கமளிக்கும் ‘சமத்துவபுர ஜெண்டில்மேன்கள்‘, நவீன பெளராணிகர்கள் இதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கலாம். இதை வருணாஸ்ரமத்துக்கான துவக்கப்புள்ளி என்பதால் (இந்தப்புத்தகத்தில்) குறிப்பிடுகிறேன். மற்ற சாதியக் கடமைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகள், பெண்களுக்கு எதிரான சதித்திட்டங்களை வாசகர்கள் படித்தறிய வேண்டுகிறேன். ஆங்கில மனுஸ்மிருதிக்கான சுட்டி கீழே உள்ளது; தமிழில் திரிலோக சீத்தாரம் மொழிபெயர்த்த (தமிழினி வெளியீடு என்று நினைக்கிறேன்) மனுஸ்மிருதியும் கிடைக்கிறது. இதைத்தவிர வேறு சில பதிப்புகளும் கிடைக்கின்றன. சரி மனுஸ்மிருதி மாறக்கூடியது. இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம், மூலப்புத்தகமான வேதத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதா என்று நண்பர்கள் வினாவலாம். வேதங்களில் பழமையானதும், முதன்மையானதுமாகக் கருதப்படுவது ரிக். அதன்கண் உள்ள புருச சூக்தத்தில் (PURUSHA SUKTA, Verse 13) காணப்படுவதே மனுவினால் எடுத்தாளப்பட்டுள்ளது. 13 வது சம்ஹிதை இது. brAhmaNo asya mukhamAseet | bAhoo rAjanya: krta: | ooru tadasya yad vaishya | padbhyAm shoodro ajAyata || 12 || (asya) His (mukham) mouth (Aseet) became (brAhmaNa:) the Brahmin, (bAhoo) his arms (krta:) were made (rAjanya:) Kings. (yad) what were(asya ooru) his thighs, (tad) they were made into (vaishya:) the merchants, (padbhyAm) and from his feet (shoodro) were the servants (ajAyata) born. அதாவது மாறக்கூடிய ஸ்மிருதியும், மாறாத ஸ்ருதியும் (வேதமும்) மனிதனை பிறப்பினால் பிரிக்கவே செய்கின்றன. மனிதனின் பலவேறு தொழிகளின் பேரில் இப்படி தோற்றம் பெற்றதாக யாரும் இதை ‘திரிக்க‘ முடியாது. ஏனெனில் உலகம் தோற்றம் பெறுகையிலேயே மனிதன் இப்படியான சாதிகளாக தோற்றம் பெறுவதாக மனுவும், புருஷ சூக்தமும் சொல்லுகின்றன. ஆனால் அறிவியலை நம்புகிறவர்கள் பரிணாமவளர்ச்சியில் மனிதனாகி, காட்டாளாகி, சமூகமாய் மாறுகையில் தான் இந்த வேலைஅடிப்படை பிரிவினைகள் தோன்றியிருக்கமுடியும் என்று அறிவார்கள். ஆனால் புருஷ சூக்தம் மற்றும் மனுவின் நோக்கம் மனிதனை அவனது சாதி அடிப்படையிலான பிறப்பே மிக இயல்பானதாகவும், கடவுளின் திட்டமாகவும், மாற்ற முடியாததாகவும் காட்டவும் அதனடிப்படையில் சாதியச் சுரண்டலை காலங்காலமாக நிலைநிறுத்தவும்தான் என்பதை கொஞ்சம் யோசிக்கத் தெரிந்த, நேர்மையான அணுகுமுறை கொண்ட எவரும் புரிந்துகொள்ள முடியும். இதனால் தான் வர்ணாசிரமத்தை இத்தனை ஆழமாகவும், ஆண்டுகளாகவும் இந்திய சமூகத்தில் காப்பாற்ற முடிந்தது. சமயச் சீர்திருத்தக்காரர்களால் (இராமானுஜர் போன்ற) நிலையான எந்த சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்குக் காரணமும் அவர்கள் வருணாசிரமத்தின் வேராகிய வேதத்தை மறுக்காததுதான்; ஒழிக்காததுதான். சரி, இந்த வேதமும், மனுவும் ஒழியட்டும். பதிலாக இன்று இந்துக்களின் புனித நூலாக காட்டப்படும் பகவத் கீதையாவது சுத்தமாக இருக்கிறதா என்றால் அதுவும் வருணாஸ்ரமத்தை வலியுறுத்துவதாயும், சாதிக்கலப்பு நடந்துவிடக்கூடாதென பதைப்பதாகவும் இருக்கிறது. பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலேயே பிறப்பதாக பெண்களைப்பற்றிய கருத்தை விதைக்கிறது. இது தொடர்பான ஜெயமோகனின் திண்ணை கட்டுரைகளும், அதைத்தொடர்ந்து நான் எனது பதிவில் எழுதிய கீதையின் பெயரில் சில கட்டுரைகளும் படிக்கத் தக்கன. தவிர வேதமும், மனுவும் சொல்லும் சம்ஸ்கிருத மேலாதிக்கத்தையும், மற்ற நீச பாசைகளைப்பற்றிய குறிப்புகளையும் அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்: வைணவத்திலும் சரி… சைவத்திலும் சரி… தமிழ் இப்படி தள்ளிவைக்கப் பட்டதற்கு என்ன காரணம்?இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது. சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள். “தஸ்மாது ப்ராம்மணேன நம்லேச்சித வை நம அபபாஷித வை…” இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை. அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லியிருக்கிறது என்று. இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்சபாஷை… அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள். எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மை யற்ற பாஷை… என்கிறது வேதம். இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார். “…தயோ ரேவ அந்ததம் கிரியோஹா தேவ நதியோஹா யதந்தரம் தம்தேவ நிர்மிதம் தேசம் ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா…” அதாவது… விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்… கங்கை, யமுனை நதிகள் பாயும்… இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும்தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத்தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும். அதனால்… இந்த பகுதியை தவிர… மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை….2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா? இந்தகேள்விதான் முதல் கேள்வியைவிட முக்கியமானது. இதற்கான பதிலே இந்துமதத்தை அழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என சொல்லவைக்கிறது. இந்து மதமென்ற இன்றைய நிறுவனம் பலம் பெறும்போது அது வருணாசிரமத்தை, சாதிய படிநிலையை, பெண் அடிமைத்தனத்தை கண்டிப்பாக முன்னெடுக்கும், வலியுறுத்தும். வருணாசிரமத்தை நடைமுறைப்படுத்த அது எந்த வழிமுறையையும் கையாளத் தயங்காது என்பது பலமுறை நிரூபனமான ஒன்று. சமூக வரலாற்றை கூர்ந்து நோக்கும் எவரும் இன்றைய நவீன உலகில் கூட இதைச் செய்யத்தயங்காத இந்துத்துவ சக்திகளின் செய்லபாடுகளை அறியலாம். இது எங்கெங்கே எந்த விதத்தில் நடந்தது? பட்டியல் போட்டுக்காட்டுக என்று நண்பர்கள் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அவர்களும் தங்கள் அக்கறையின் பேரில் கொஞ்சம் உழைக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதத்துக்கு வருணாசிரமத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய கடமையும் இருந்தது, அதற்காக மறைந்த சந்திரசேகர சரஸ்வதியின் தலைமையில் அது இந்திய துணைக்கண்ட (பாகிஸ்தானை உள்ளடக்கிய) அளவில் பாரிய முயற்சியை முன்னெடுத்தது என்பதை இங்கு சொல்லவிரும்புகிறேன். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த காரணத்தால் தான் அது நடக்காமல் போனது. அது மட்டும் நடந்திருந்தால் சுதந்திர இந்தியாவில் வருணாசிரமம் சட்டபூர்வமாக (இன்று மட்டுமென்ன வாழுகிறது!) ஆக்கப்பட்டு சாதியச் சுரண்டலும் பெண்ணடிமைத்தனமும் செய்யபட்டிருக்கும். இதை வெகு முனைப்போடு செய்ய இந்திய அளவில் தமது திறனனைத்தையும் பயன்படுத்தியதால் தான் அவரை ‘மகா பெரியவர்‘ என்று அழைக்கிறார்கள் போலும். இதை யாரோ திகவில் இருந்தவரோ, பெரியார் அடிப்பொடியோ சொல்லவில்லை. வருணாசிரமத்தை சட்டப்பூர்வமாக்க மகாபெரியவரின் ஆக்ஞையை ஏற்று உழைத்த அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் நக்கீரனில் எழுதிய ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற கட்டுரைத் தொடரிலேயே இதைப் பதிவு செய்துள்ளார். (அது இப்போது நூலாக வெளிவந்துள்ளது). வருணாசிரத்தை சட்டப்பூர்வமாக்க ஆடுதுறையில் நள்ளிரவில் அந்தணர்களைக் கூட்டி மீட்டிங் போட்டு செயல்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் ‘மகா பெரியவர்‘. தாத்தாச்சாரியார் எழுதுகிறார்… இப்போது மகாபெரியவரின் மீட்டிங்குக்கு வருவோம். இப்படியாக ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு, வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன. நம் தேசம் ஸ்வராஜ்யம் (சுதந்திரம்) அடைய இருந்த நேரத்தில்… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Parliamentary deligation ஒன்று நமது தேசத்துக்கு வந்தது. அதாவது… நமது தேஸத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு அது பற்றிய விவாதங்கள் நடத்துவதற்காக… எப்படி கொடுக்கலாம் என்று முடிவு பண்ணுவதற்காக… பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இங்கே வந்தது. அதுதான் Parliamentary deligation இந்த குழு வந்த காலகட்டத்தில்தான் அந்த ஆடுதுறை கூட்டம். “ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டா… இன்னும் என்னெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல அட்டாக் பண்ணப் போறாளோ… அதனால… இப்ப வந்திருக்குற அந்த டெலிகேஷன்கிட்ட… சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும்… என்ன சொல்றேள்?….”-என மகாபெரியவர் கேட்க… சிஷ்யாளோ… ‘ஸ்வாமி… இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவா செய்தா செய்யட்டும்… சில விஷயங்களை மாத்தறது நல்லதுதானே…’ என்றனர். ஆனால்… சங்கராச்சாரியார் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தார். உட்கார்ந்திருந்த என்னிடம்…`தாத்தாச்சாரீ… நீரும் நானும் தான் மிச்சம்’ என்றார். என்ன ஸ்வாமீ?… என்றேன். “நான் சொன்னதை யாரும் ஏத்துக்கல. ஆனா இதை விடக்கூடாது. நம் சம்ப்ரதாயத்தை காப்பாத்தணும். இதுக்காக அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைதான் செலக்ட் பண்ணியிருக்கேன்…” என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை… `நீர் இதுக்காக டெல்லிவரை போக வேண்டியிருக்கும்…’ அதுக்கு முன்னால… டெலிகேஷனுக்கு நம் அபிப்பிராயத்தை தந்தி அடிக்கணும். அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் தந்தி வாசகங்களை தயார் பண்ணினோம். ஒன்றா… இரண்டா?… நூறு தந்திகள். அந்தக் காலத்தில் ஒரு தந்தி அடிக்க வேண்டுமென்றால், ரொம்ப கஷ்டம். ஏனென்றால், பெரிய பெரிய நகரங்களில் தான் தந்தி ஆபீஸ் இருக்கும். ஒரு தந்தி என்றால் அடித்து விடலாம். நூறு தந்திகள். ஒரே இடத்திலிருந்து கொடுத்ததாக இருக்கக் கூடாது. தேஸத்தின் பல பகுதிகளிலிருந்தும் அனுப்பவேண்டும். `பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷ்டாங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக் கூடாது’ என்பதுதான் தந்தி வாசகம். இதை தேசத்தின் பல இடங்களிலிருந்தும் டெல்லிக்கு அனுப்பினோம். 100 தந்திகள்… அதுவும் வெவ்வேறு இடத்திலிருந்து. செலவை மகாபெரியவரே ஏற்றுக் கொண்டார். நான் உதவி செய்தேன். தந்தியடித்த பிறகு, மறுபடியும் என்னை அழைத்த மகாபெரியவர், `நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தை பத்தி பிரஸ்தாபிச்சு சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும்… அதை நீர்தான் பண்ணணும்’ என்றார். அப்போது… `பார்லிமெண்ட் டெலிகேஷன்’ மெம்பர்கள் பத்திரிகைக் கார்யாலயங் களுக்கெல்லாம் விஜயம் செய்து… ஸ்வராஜ்யம் பற்றி தேஸம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் சுதந்திர எழுச்சியைப் பல பத்திரிகைகள் தட்டி எழுப்பியபடி இருந்தன. அந்த வகையில்… சென்னைக்கு வந்தது பார்லிமெண்ட் டெலிகேஷன். அன்று தேஸத்தின் மிக முக்கிய பத்திரிகையான `தி ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு டெலிகேஷன் வந்திருந்தது. இதையறிந்த மகாபெரியவர்… உடனே என்னை அழைத்து அவர்களைப் போய் பார்க்கச் சொன்னார். நானும் `ஹிண்டு’ பத்திரிகை ஆபீசுக்குப் போனேன். அப்போது… `ஹிண்டு’வின் எடிட்டராக இருந்த சிறீ.கே. சீனிவாஸன் என்னை பார்லிமெண்டரி டெலிகேஷனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியென்றால் `இவர் மதாச்சாரியார்களின் பிரதிநிதி’ என்று. டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதிரியாரும் நானும் பரஸ்பர வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம். நான் முதலில் 100 தந்தி விடயத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். ‘oh’ என ஞாபகப்படுத்திக் கொண்ட சோரன்சன்… ‘We meet tonight’ என்றார். அன்று ராத்திரி பிரபல அட்வகேட் ஒருவரின் வீட்டில் இருந்த சோரன்சன்னை சந்தித்தேன். பத்து மணி ராத்திரிப் பொழுதில் எனக்கும், சோரன்சன்னுக்கும் நடந்த ஆங்கில உரையாடலை இங்கே தருகிறேன். சோரன்சன்: Welcome. What do you want? நான்: We lives in India. But havings not any rights to follow our religion. We must need freedom to follow our “Dharma”. சோரன்சன்: Oh… it is very serious matter… give me a memorandam and meet me in Delhi என்றார். நான் உடனே கும்பகோணம் விரைந்து மகாபெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள் சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு… “வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்’’ என்ற மெமோரண்டத்தைத் தயார் பண்ணினோம். டெல்லிக்கு போய் நேரில் கொடுக்க இருந்தோம். அதற்குள் அந்த டெலிகேஷன் மெம்பர் அஸ்ஸாம் போய் அங்கே தேஸ நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன்… மெமோரண்டத்தை அஸ்ஸாமுக்கே ஒரு காப்பி முதலில் அனுப்பி வைத்துவிட்டோம். பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீடு, பகல் 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனை சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போனவுடன், நான் சில அட்வகேட்களுடன் டெலிகேஷனை சந்தித்தேன். `வர்ணாசிரம மதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும்’ என்ற மெமோரண்டத்தைப் பார்லிமெண்ட்ரி டெலிகேஷனிடம் நேரடியாகவே கொடுத்தோம். வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். இதன் பிறகு… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet deligation வந்தது. அந்த குழுவினருக்கும் தந்தியடித்தோம். மெமோரண்டம் கொடுத்தோம். அவர்களோ “உங்கள் அரசியல் சாசனத்தை உங்கள் தலைவர்கள்தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்’’ என சொல்லி விட்டார்கள். சரி… என சொல்லிவிட்டு நம் தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம். அவர்… மெமோரண்டத்தைப் பார்த்துவிட்டு… “சனாதன மதத்தைப்பற்றியும் மடங்களைப்பற்றியும் நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால், மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். அவரவர்களுக்கும் அவரவர்களுடைய சிஷ்யர்களோடுதான் பழக்கம். வெளி உலகத்தோடு மக்களோடு உறவே இல்லை. மக்களின் பொதுவான பணிக்கோ, மதப் பணிக்கோ அவர்கள் முன்வரவில்லை. முக்கியமாக ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்…’’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல். நான்… `பழைய காலத்தில் அப்படி இருக்கலாம். புது பாரத தேசம் உருவாவதால் அவர்கள் பொதுப் பணிகளை நிறைவேற்றுவார்கள்’ என சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்… பட்டேல் ஒப்புக் கொள்ளவில்லை. இதை மகாபெரியவரிடம் சொன்னபோது… `ஆமாம் இது முழுவதும் உண்மைதான்’ என்றார். அடுத்து பண்டிட் நேருஜியை பார்த்தேன். …………… ஏதோ நேரு உறுதியாக இருந்ததால் பிழைத்தோம். அப்புறமும் இந்து மடங்களின் உரிமைகளைக் காக்க (அதாவது வருணாசிரமத்தை அவை வலியுறுத்த இருக்கும் சுதந்திரத்தை, அதிகாரத்தை காக்க) அவர் நாடளாவிய மடாதிபதிகளின் கூட்டமொன்றைக் கூட்டினார். ஆனால் அந்த நேரத்தில் அவ்வளவு விழித்துக்கொள்ளாத வடநாட்டைச் சேர்ந்த மற்ற மடாதிபதிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. இப்படி நிறைவேறாமல் போன வருணாசிரமத்தை மீண்டும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றத்தான் பஜகவும் RSS உயிரைக்கொடுத்து (எடுத்து) உழைக்கின்றன. உயிரைக்கொடுத்துஎடுத்துஉழைக1 point- ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
இது எதோ இஸ்ரேலியர்களாலேயே (மொசாட்) மிருகங்கள் என கழித்துவிடப்பட்டவர்களுக்கு சந்தடி சாக்கில் வெள்ளை அடிக்கும் முயற்சி போல் இருக்கிறது, நீங்களும் உங்கள் நண்பரும் 2009 இற்கு பின் பிறந்தவர்களா?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியன் அண்ணா நான் எடுத்த வீரர்களின் விபரம் espncricinfo இந்த இணையத்தில் வருவது தான் உறுதி படுத்த பட்ட கிரிக்கேட் தகவல்கள் . மற்றும் விளையாட்டு இஸ்கோர் நேரடியா போட்டு கொண்டு இருப்பினம்.................................இந்த இணையத்துக்கை போனால் 100வருடத்துக்கு முதல் இங்லாந் அவுஸ்ரேலியா ஆரம்ப காலத்தில் விளையாடின ஸ்கோர்கள் மற்றும் வீரர்களின் பெயர்கள் அவர்களின் சாதனைகள் எல்லாம் தெரிந்து கொள்ளலாம்........................................................... ஓம் அண்ணா Toronto Raptors & Golden State Warriors 2021களின் வென்றவை கனடியர்கள் போட்ட கூத்து அதிகம் தான் ஆனால் அது அவர்களுக்கு பெரிய இன்பத்தை கொடுத்தது இப்போது அந்த அணியில் கோப்பை வென்ற வீரர்கள் யாரும் இல்லை எல்லாரும் வேறு அணிக்கு தாவி விட்டினம் 🤣😁😂 இந்த முறை படு தோல்வி அடைஞ்சு கீழ் மட்டத்தில் நின்றவை😁...............................................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓ மை கடவுளே, என்னை நீங்கள் இங்கு போட்டியில் கடைசியில் வரச் செய்தாலும், அது எனக்கு பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு இந்தக் கனடாவை தோற்கச் செய்து விடுங்கள். கடவுளே. கனடா இன்றைக்கு வென்றால், அங்கிருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் திடீரென்று இன்றைக்கு உடனடி கிரிக்கட் வித்தகர்களாக ஆகிவிடுவார்கள். முந்தி ஒரு தடவை கனடா அணியொன்று கூடைபந்தாட்டத்தில் வென்றவுடன், அவர்கள் போட்ட ஆட்டத்தை நீங்கள் பார்த்தனீர்கள் தானே..........1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உப்பு விக்க போனால் மழை பெய்யுது மா விக்க போனால் காற்று வீசுது ஏதோ ஒரு விளையாட்டு திரியில் எழுதி இருந்தீங்கள் அதை வாசித்து நல்ல சிரிப்பு அதே நிலை இந்த போட்டியில் உங்களுக்கும் வரலாம் எனக்கும் வரலாம் புலவர் அண்ணா 😁.............................................................1 point- ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்!
பாராளுமன்ற தேர்தல் அதே ஒற்றையாட்சி அரசியமைப்பின் கீழ் நடத்தப்படுவதில்லையா?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
க்கூம்....... அவுஸ் போல் திறமையை வெளிப்படுத்தி பைலும் வக்கீலுமாய் அலையப்போறார்கள் கவனம்......! 😁1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓம் அண்ணா பார்த்தேன் ஆனால் அவுசின் முன்னனி பந்து வீச்சாளர்கள் பயிற்ச்சி ஆட்டத்தில் பந்து போட வில்லை பயிற்ச்சி ஆட்டத்தை வைச்சு அவுஸ்ச மட்டம் தட்டி விட முடியாது அண்ணா.........................வெஸ்சின்டீஸ் அணி வீரர்கள் ஆரம்ப சுற்று போட்டியில் எப்படி விளையாடுகினம் என்று பார்த்து விட்டு , அதற்க்கு பிறக்கு அவர்களின் விளையாட்டை பற்றி விவாதிப்போம் அண்ணா.........................................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வசீகரம் அவரில் இல்லை அவர் வைத்திருக்கும் 💰 💰 💰 ல் தான் இருக்கிறது.. தெரியாதோ 🤭1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கென்னவோ Donald Trump 5ந்தாம் நம்பராக இருக்க வாய்ப்பில்லை.. 5,14,23 நம்பர்காரர்கள் வசீகரமானவர்கள்..1 point- "தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]"
தில்லை அண்ணா… நீங்கள் தமிழருக்கு நடந்த பல மாறத வடுக்களை திரட்டி, வருங்கால சந்ததி அறியும் வகையில் மகத்தான பணியை செய்கின்றீர்கள். நன்றியும், பாரட்டுக்களும் உரித்தாட்டும். 🙏1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இந்த தவறுக்கு என்ன காரணம் ..ஒற்றுமையின்மை, சுயநலம் இந்தக் கட்சிகளின் கொள்கைகள் தமிழ் மக்களின் நலனைச் சார்ந்ததாக இருந்திருந்தால் 2009ற்குப் பின்னராவது ஒற்றுமையாக வந்திருக்கவேண்டும். அப்படி இன்று வரை நடக்கவில்லை. ஏன்? சுயநலம்தான். இவர்களின் செயல்கள் உங்களுக்கு தவறாகத் தெரிவது எனக்கு தவறாகவும், அந்த தவறுக்கு காரணம் சுயநலமாகவும் தெரிகிறது. அதுதான் வித்தியாசம். மக்கள் இவர்களை வாக்குகளால் திருத்தவேண்டும் என்றால் அதனையும் செய்துதான் வருகிறார்கள் இல்லையென்றால் ஒரு கட்சிக்கே பாரம்பரியமாக வாக்களித்து வந்த மக்கள் அந்தக் கட்சியின் செயற்பாடுகளால் நம்பிக்கை இழந்து போனதை கடந்த தேர்தலிலும் காட்டியிருந்தார்கள். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை. ஆகையால் இனியும் அதனைத்தான் செய்வார்கள். மேலும், இந்த silent majorityற்குள் உங்களைப் போன்றவர்கள், என்னைப் போன்றவர்கள், தேசியத்தின் மீது அக்கறை இருந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாமல் மெளனமாக இருப்பவர்கள் என பலரும் அடங்குவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.1 point- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்தி Published By: VISHNU 01 JUN, 2024 | 02:47 AM வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும் 2ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏபிசி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/1850111 point- பொது வேட்பாளர் தெரிவை கிழக்கிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ; அவரை தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தவேண்டும் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்
30 MAY, 2024 | 11:01 AM பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.எனவும் தெரிவித்துள்ளது யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் களத்தினை தங்கள் நலன்சார்ந்து எவ்வாறானதாகக் கையாள வேண்டும் என்பதில் கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து இனியாவது சுதாகரித்து முன்நகர வேண்டிய அவசியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் சாணக்கியம், ராஜதந்திரம் என்னும் பெயரில் வெற்று வாக்குறுதிகளை மாத்திரமே நம்பி தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் பேரம் பேசும் இணக்க அரசியலினால் தமிழினவழிப்பிலிருந்து தாயகத்தின் ஒரு அங்குல நிலத்தையேனும் காப்பாற்ற முடியவில்லை என்பதோடு, தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளும் உதிரிகளாக்கப்பட்டுள்ளமையும் அது உளவியல்ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனநிலையினை மக்களிடையே விதைப்பதிலுமே வெற்றியடைந்துள்ளது. 1. ஈழத்தமிழ் மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்டுதல். 2. போரிற்குப் பின் மக்களிடையே உள்ள தோல்வி மனோநிலையினை அகற்றுதல். 3. வடக்கு – கிழக்கிற்கான பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவுதல். 4. அரசற்ற தரப்பாக பன்னாடுகளைக் கையாள்வதற்கான வெளிவிவகாரக் கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குதல். 5. பன்னாட்டுச் சமூகத்தில் கூட்டாகத் தமிழரின் குரலை முன்வைத்தல். 6. வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்துநிறுத்துதல். 7. அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் தமிழ் அரசியலை நகர்த்துதல். ஓர் அரசற்ற தரப்பாக எமது தமிழ்ச் சமூகத்தினால் அடைந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மேற்குறிப்பிட்ட விடயங்களெதனையும் சாதித்திராத தமிழ் அரசியற் தரப்புக்கள் தொடர்ந்தும் பேரம் பேசும் அரசியலால் இனியும் எதையாவது சாதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. தமிழ் அரசியற்கட்சிகளும், குடிமக்கள் சமூகத்தினரும் (Civil Societies) தமிழ் மக்களின் பின்நோக்கிய இந்நிலையிலாவது தம்மைச் சுதாகரித்துக் கொண்டு தமிழ் அரசியலின் பாதையினை மீளச் சரிவர தகவமைத்துக் கொள்ள வேண்டும். கடந்த 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் இனப்படுகொலைப் பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கே வாக்களிப்பதற்குப் பரிகார நீதி கோரக்கூடிய தமிழ் மக்கள் தவறாக வழிநடாத்தப்பட்டோம். இனியாவது ஏமாற்று கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்றுசேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களை தமிழ் அரசியற் தரப்புக்கள் மேற்கொள்ளத் தவறுமேயானால் நாம் அரசியல் பிழைத்த மக்களாக்களாக்கப்படுவோம். சமகால அரசியற் களச்சூழலில் தமிழ் மக்களின் முன்னால் உள்ள தெரிவுகள், 1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல். 2. சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் தற்போது எதிர்பார்க்கப்படும் தேர்தலை நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான அறைகூவல் விடுக்கும் பொதுவாக்கெடுப்பாகக் கைளாளும் வகையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துதல். சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல் மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துதல் இரண்டும் ஒரே கருத்தியலின் இருவேறுபட்ட பிரயோக வடிவங்களே! தமிழர்களால் அளிக்கப்படாத வாக்குகள் மற்றும் பொதுவேட்பாளருக்கு வழங்கப்படும் வாக்குகள் என இரண்டுமே சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதத்தின் முகவர்களை நிராகரிக்கும் வாக்குகளேயாகும். பொதுவேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், பின்வரும் விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த தமிழ் மக்கள் உள்ளிட்ட தொடர்புபட்ட தரப்புக்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம். 1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதனாலோ, தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதனாலோ சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர் எவர் வென்றுவிடக் கூடும் எனும் கேள்வி பொதுவில் அனைவரிடமும் எழக்கூடியதொன்று. ஆனால், அரசியல் விடுதலை வேண்டும் சமூகமாக எமக்கு எது தேவை? எமது நிலைப்பாடு என்ன? என்பதுவே நாம் அக்கறை கொள்ளவேண்டியது. அதன் பக்க விளைவுகளைப் பற்றியல்ல. 2. பொதுவேட்பாளரை நிறுத்துதல் என்பது எதிர்வரும் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைத் தமிழ் மக்களின் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தேர்தல் ஒன்றாக மாற்றுவதேயாகும். ஆகவே, பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு நடைமுறையில் வெற்றி – தோல்விகளுக்கு அப்பாற்பட்டதாகும். 3. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் இதுவரைகால வேணவாக்களை பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, குறிப்பிட்ட சில தரப்புக்களின் அரசியல் நலன்களையல்ல. 4. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்பட வேண்டும். முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம். 5. தமிழ்மக்களின் வாக்குகள் என்பது அவர்தம் வேணவாக்களைச் உறுதிபடச் சொல்வதற்கேயன்றி பேரங்கள் பேசுவதற்கல்ல. ஆகவே இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் என்ற பேச்சுக்களுக்கே இடமளித்தல் கூடாது. 6. பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் நபர் அரசியல்வாதியல்லாதவராக இருப்பதோடு, தேர்தலின் பின்னர் அந்நபர் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படுவதோ, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்பது முன்நிபந்தனையாக்கப்பட வேண்டும். மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மக்களின் வாக்குகள் இத்தேர்தலிலாவது அவர்களின் உரிமைக்குரலாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். மேற்கண்ட தெரிவுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கூட்டாகத் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் பட்சத்தில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கும் இணைந்து பயணிப்பதற்குமான எமது உடன்பாட்டினை மாணவர் சமூகமாக நாம் வெளிப்படுத்துகின்றோம். தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுடனான பேரம் பேசலுக்காகப்; பலியாக்கப்படாது. தமிழ்மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, தமிழ் அரசியற்கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் ஒன்றுபட்டுத் தீர்க்கமான முடிவொன்றினைத் திடசித்தத்துடன் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம். பொது வேட்பாளர் தெரிவை கிழக்கிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ; அவரை தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தவேண்டும் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் | Virakesari.lk1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த உலகத்தை அவ்வளவாக நம்பக்கூடாது. ஏதோ எங்களை விரும்பித் தான் கூப்பிடுகின்றார்களே என்று நினைப்பம், ஆனால் கூப்பிடுவதே கடைசியில் விட்டு கழுதையாக்குவதற்காகவும் இருக்கலாம்..........🤣🤣.....1 point- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
அண்ணை, அரசியல் கட்சியில் எல்லாம் உறுப்பினராக இருக்கிறீர்கள், இவ்வளவு நாளும் இது தெரியாமல் போய்விட்டது. நீங்களும் ஒரு அரசியல் பழம்தான்1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG AFG 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN SL 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ WI 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG WI முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN CAN IRL Select IRL IRL USA Select USA USA 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) PAK #A2 - ? (1 புள்ளிகள்) IND 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM NAM SCOT Select SCOT SCOT OMA Select OMA OMA 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) AUS #B2 - ? (1 புள்ளிகள்) ENG 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI WI AFG Select AFG AFG PNG Select PNG PNG UGA Select UGA UGA 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) WI #C2 - ? (1 புள்ளிகள்) AFG 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PNG முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL SL BAN Select BAN BAN NED Select NED NED NEP Select NEP NEP 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA #D2 - ? (1 புள்ளிகள்) SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 IND SA IND 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 AUS AFG AUS 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI PAK PAK 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 ENG SL ENG 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 AUS SA AUS 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 IND AFG IND 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 PAK SL PAK 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI ENG WI 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 IND AUS AUS 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 AFG SA SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 ENG PAK PAK 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI SL WI சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK PAK ENG Select ENG WI WI Select WI C1 SL Select SL D2 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) PAK #அணி 1B - ? (2 புள்ளிகள்) WI 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS AFG Select AFG C2 SA Select SA D1 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) AUS #அணி 2B - ? (1 புள்ளிகள்) IND 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) PAK 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 1 இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Travis Head 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Adam Zampa 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Yashasvi Jaiswal 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SL 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK ஜயா ஐபோனுடன் போராடி முடிந்தளவு போட்டுள்ளேன். இதுக்கு மேல் எதிர்பாக்காதீங்க1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
பூனைகள் இல்லா உலகில் எலிகளுக்கு கொண்டாட்டம்….. தமிழர்களின் விடிவில் உங்களின் வகிபாகம் யாது ??? வெறுமனே யாழில் பொங்கி விட்டு செல்வதால் ஒன்றும் ஆவதற்கில்லை…1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இதில் நான் சற்று முரண்படுகின்றேன். சர்வதேசத்தின் அழுத்தத்தில் இவ்வாறு ஒரு தீர்வை ரணில் வழங்க முன்வந்திருந்தாலும், தென்னிலங்கையின் இனவாத சக்திகள் மகிந்தவின் பின்னாலும் விமல் வீரசிங்க போன்றவர்களின் பின்னாலும் அணி திரண்டு, எதிர்த்து தீர்வை கைவிட வைத்து இருக்கும். அரகலய அன்றே உருவாகி இருக்கும். கடும் இனவாத அரகலயவாக அது இருந்திருக்கும். அவ்வாறு நடந்து இருப்பின், சமாதானத்துக்கான அவா தமிழர்களிடம் மட்டுமே உள்ளது, சிங்களத்திடம் இல்லை என தெளிவாக காட்டி தமிழர்களின் அரசியல் பலம் அதிகரித்து இருக்கும். இப்படியான ஒரு நிலையை ஏற்படுத்தவே அன்ரன் பாலசிங்கம் அண்ணா தன்னளவில் முயன்றார் என நம்புகின்றேன்.1 point- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
போன மாதம் ராய்ட்டர்ஸ் இங்கு ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தியது. அதில் ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களில் 25% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தனர். எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திய வாக்காளர்களில் 60% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்ததாகவும் ஞாபகம். இவரின் தீவிர ஆதரவாளர்கள் இன்னும் தீவிரமாக மாறுவார்கள். தீக்குளிக்கும் வழக்கம் இங்கு இல்லாதது நல்ல ஒரு விடயம். மற்றபடி, இந்த தீர்ப்பு, கிடைக்கப் போகும் தண்டனை எதுவாகினும், இவருக்கு ஒரு பின்னடைவு என்றே நினைக்கின்றேன்.1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இதில் எனக்கு முரண்பாடு உண்டு. தமிழ் மக்களினதும் அவர்களின் பிள்ளைகளினது தியாகத்தாலும், தமிழ் மக்களினது பங்களிப்பால் கிடைத்த ஆயுத பலத்தாலும், புலி வீரர்களது போர் திறமையாலும், புலிகள் இயக்கம் அடைந்த பேரம் பேசும் உயர் வலுவை உபயோகித்து அன்றைய நிலையில் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து இன்று கனவில் கூட நினைக்க முடியாத ஒரு அரசியல் தீர்வை உருவாக்கி சர்வதேச நீடுகளின் ஒத்துளைப்புடன் அதை அமுல் செய்ய புலிகளின் அரசியல் பிரிவை பலமுடையதாக்க செய்யும் வல்லமையை அன்று கொண்டிருந்தது. மேற்கு நாடுகளும் அதையே விரும்பி பேச்சுவார்தைக்கு திரும்புமாறு புலிகளை கேட்டுக்கொண்டேயிருந்தனர். புலிகள் அதை புறக்கணித்து மீண்டும் யுத்ததிற்கு செல்ல முடிவெடுத்ததன் பலனே முள்ளிவாய்கால் பேரழிவு. ஆகவே, அன்று ரணிலை ஜனாதிபதியாக்கி அவருடன் பேசியிருப்பதன் மூலம் புலிகள் பலவீனமாக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மாறாக, அரசியல் ரீதியில் பலப்பட்டிருப்பார்கள். இன்று மூக்கால் அழும் நிலையும் வந்திருக்காது என்பது எனது கருத்து.1 point- "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
"அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்" அறப்படித்தவன் என்றால் செவ்வையாக முழுமையாக படித்தவன் என்று பொருள். அதாவது அளவுக்கு மிஞ்சி படித்தவன். அதனால் அவன் அளவுக்கு மிஞ்சி யோசிக்கத் தொடங்குகிறான். அது தான் ஆபத்து ஒரு முறை, மாணவர்களில் ஒருவன் ஆசிரியரை பார்த்து “ஐயா அதிகம் படித்த அறிவாளிகளால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை விளக்குவது போல அல்லவா இந்தப் பழமொழி உள்ளது.” என்று கேட்டான். அதற்கு ஆசிரியர் “அப்படியல்ல என்று கூறியதுடன் ஒரு கதையை கூறினார் முன்னொரு காலத்தில் சாஸ்திரமும், மருத்துவமும் கற்றுதந்த ஒரு குருகுலத்தில் மாணவர்கள் நிறைய பேர் கற்றுவந்தனர். ஒரு நாள் மாணவர்களில் சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரையும், மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரையும் உணவுப் பொருட்களை வாங்க குரு அனுப்பினார். சாஸ்திரம் படித்தவனோ காய்கறி வாங்கச் சென்ற இடத்தில் சாஸ்திரப்படி இது சரியல்ல. இந்தக் கடையில் வாங்கக் கூடாது. இந்த விற்பனையாளரிடம் வாங்கக் கூடாது என்று அனைவரையும் கழித்தானாம். மருத்துவம் படித்தவனோ கத்தரிக்காய் ஆகாது. வாழைக்காய் வாயு, கிழங்குகளை உண்ணலாகாது, என ஒவ்வொரு காயையும் கழித்தானாம். இவ்விதமாக ஒருவர் கடைகளையும், கடைக்காரரையும் பழிக்க மற்றொருவர் காய்கறிகளை பழிக்க இருவரும் வெறும் கையுடன் குருகுலத்திற்குத் திரும்பி வந்தனராம். இப்படி கதையை முடித்தாரும் . அவர் மேலும் ஒரு விளக்கமாக ஒரு ஊரில் திருவிழா ஒன்று நடக்க இருந்தது. அத்திருவிழாவிற்கு சங்கீத கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என ஊர்மக்கள் விரும்பினர். எனவே கச்சேரி ஏற்பாடு செய்ய நன்கு படித்த இருவரை ஊர் மக்கள் அணுகினர். “நீங்கள் சென்று சங்கீதக் கச்சேரிக்கு நல்ல வித்துவான்களை ஏற்பாடு செய்து வாருங்கள்” என்று கூறி அவ்விருவரையும் அனுப்பி வைத்தனர். முதலில் அவ்விருவரும் ஒரு வீணை வித்துவானை கச்சேரிக்கு ஒப்புதல் செய்யச் சென்றனர். அங்கு அவர் வீணையை படுக்க வைத்து ஒரு வெள்ளைத் துணியால் அதனை மூடிவைத்து இருந்தார். இதைக் கண்ட முதலாமவன் “இந்த வீணைக் கலைஞரைக் கச்சேரிக்கு ஒப்புதல் செய்ய வேண்டாம்” என்றான. அதற்கு இரண்டாமவன் “ஏன்?” என்று கேட்டான். “நீயே பார். அவர் வீணையை மூடி வைத்துள்ளதைப் பார்க்கும் போது ஏதோ பிணத்தை மூடி வைத்துள்ளது போல் உள்ளது!. நாம் முதன் முதலாக கச்சேரி ஏற்பாடு செய்கிறோம். இவர் கச்சேரி மேடையில் இக்கருவியை இங்கு இருப்பது போல மூடி வைத்தாரானால் அதைக் கண்ட நம் ஊர்மக்கள் என்ன நினைப்பார்கள்!. ஊர் பெரிய மனிதர்கள் சகுனம் சரியாக இல்லை என்று கூற மாட்டார்களா?” என்றான். இதனைக் கேட்ட இரண்டாமவன் முதலாமவனின் பேச்சினை ஒப்புக் கொண்டான். பின் இருவரும் “இன்னொரு நாள் வந்து கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறோம்!” என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். அவ்வூரில் இன்னொரு தெருவில், கடம் வாசிக்கும் ஒருவர் இருந்தார். அவரை கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்ய இருவரும் நினைத்தனர். அப்போது இரண்டாமவன் “கடம் வாசிப்பவரை நாம் கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டாம்” என்று தடுத்தான். “ஏன் வேண்டாம் என்கிறாய்?” என முதலாமவன் கேட்டான். அதற்கு இரண்டாமானவன் “நண்பரே நாமோ முதன் முதலாக கச்சேரி ஏற்பாடு செய்ய வந்துள்ளோம். கடம் என்பது மண்ணால் செய்யப்பட்டது. நமது போதாத வேளை இவர் கச்சேரி செய்யும்போது கடம் உடைந்து போனால் ஊரார் அபசகுணம் என்று கூறுவதோடு இதை ஏற்பாடு செய்த நம்மைத் திட்டமாட்டார்களா?” என்றான். அடுத்தவனும் “ஆமாம்” என ஒப்புக் கொண்டான். இப்படியாக இருவரும் பல கலைஞர்களையும் பார்த்து சாக்குப் போக்கு சொல்லி வெறும் கையுடன் ஊர் திரும்பினராம். இதுபோலவே அதிகம் விபரம் தெரிந்த ஒருவர் கடைக்குச் சென்றால் அவரால் எந்த ஒரு பொருளையும் திருப்தியாக வாங்க இயாது என்ற விளக்கத்துடன் கதையை முடித்தார் ஏனென்றால் அவருடைய பார்வைக்கு எல்லாப் பொருளும் குற்றமுடையதாக தோன்றும் என்பதே இப்பழமொழியின் கருத்தாகும்.” என்று கூறினார். இது எப்பவோ நான் கேட்டது நன்றி எல்லோருக்கும் என் நன்றிகள்1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இந்தப் பிளவுக்கு என்ன காரணம் என்று எப்பவாவது யோசித்திருக்கிறீர்களா? யாழ் களத்தை மட்டும் ஒரு சாம்பிளாக எடுத்துப் பாருங்கள்: புலிகள் மீதான விமர்சனம், தற்போது இருக்கும் "புலி வால்கள்" என நான் அழைக்கும் தீவிர தேசியர்கள் மீதான விமர்சனம் ஆகியவை சுயம்புவாக யாழில் உருவாகின்றனவா அல்லது ஒரு கருத்திற்குப் பதில் சொல்லும் போது உருவாகின்றனவா? என் அவதானிப்பு, சில தவறுகள், முட்டாள் தனமான knee-jerk முடிவுகள் என்பவற்றை தவிர்த்து விட்டு ஆய்வுகளை (நிலாந்தன் செய்திருப்பது போல) பிரச்சார நோக்கிற்காக முன் வைக்கும் போது, அந்த தவறுகளை மீண்டும் பேச வேண்டியேற்படுகிறது. இதன் பிறகு வந்து, "ஏன் இன்னும் இதையே பேசுகிறீர்கள்?" என்று மூக்கால் அழுவதில் என்ன பயன்? மேலே, ரஞ்சித் எழுதியிருக்கும் உதாரணமே இதைச் சுட்டிக் காட்டுகிறதே? 2005 புலிகளின் ரணில் மீதான கோபத்தின் வெளிப்பாடு, மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டு வந்து மக்களையும் அழித்து, புலிகளையும் அழித்தது. இதில் இருந்து இலங்கையில் கூட elections have consequences என்ற பாடத்தைக் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல ரணில் மீதான கோபத்தைத் தான் இந்த தேர்தலிலும் காட்ட நிற்கிறார்கள். எனவே, பேச வேண்டியிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டுவோர் "ரணிலை மீட்பராகப் பார்க்கின்றனர்" என்ற அர்த்தம் தொனிக்க எழுதுவதும், "சிங்ஹல தெமிழர்" என்பதும் தமிழர்களை தமிழ் தேசியத்தின் பக்கம் இழுத்து ஒற்றுமையைக் கூட்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்😂? குறுகத் தறித்த தமிழ் தேசியத்தை வைத்துக் கொண்டு புலத்தில் மட்டும் தான் நாம் கொடி கட்டிக் கொண்டாடலாம். நிலத்தில் நிலைமை வேறாக இருக்கும். ஏற்கனவே வேறாகி விட்டது என்பதே என் அவதானிப்பு.1 point- "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
நானும் அப்படித்தான் நினைப்பதுண்டு. “அறப்படித்தவன் அங்காடி போனால் வாங்கவும் மாட்டான் விற்கவும் மாட்டான்” இப்படி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படி பல பழமொழிகளை அவரவர் தங்களது மனநிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பயன்படுத்துவர்கள். அவ்வளவுதான்1 point- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
அவருக்கு தண்டனை கிடைத்தால் ...... குற்றத்தை மறைப்பதற்காக அவர் கொடுத்த பணம் எல்லாவற்றையும் அம்மணிகள் கொண்டுவந்து குடுப்பார்களா ........ (இப்பொழுதுதான் அவரது குற்றங்கள் பரகசியமாகி விட்டதே) ........ குடுத்தால் அவரின் தேர்தல் செலவுக்கு உதவுமே என்ற ஆதங்கம்தான்........! 😴1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இதனைத்தான் அதிகம் உணர்வதுண்டு. 2009ற்குப் பின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள், புலிகளை வெறுப்பவர்கள், கல்வியாளர்கள் etc etc என பலர் கூறினார்கள். 15 வருடங்களாகவா தவறுகளில் இருந்து பாடம் படிக்கிறார்கள். சரி போகட்டும் ஏதாவது நன்மை நடந்ததா? ..இன்னமும் பிளவுபட்டுக்கொண்டு அல்லவா போகிறோம்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட @ரசோதரன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! இதுவரை போட்டியில் கலந்துகொண்டோர்.. 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன் 15 ரசோதரன்1 point- சாமி சிறீ பாஞ்
1 pointவாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்.. போர்க்களம் மாறலாம் போர்களதான் மாறுமா…? சாம்பலில் இருந்து எழுந்து பறக்கும் பீனிக்ஸ்போல எழுந்து வந்திருக்கும் பாஞ் அண்ணா என்றும் இதே வைத்தியர்கள் தந்த மறு ஆரோக்கியத்தை பேணி காக்கவேண்டும்.. நீடுழி நலமுடன் வாழ சந்தோசமாக வாழ்த்துகிறேன்.. யாழில் தொடர்ந்து இணைந்திருங்கள்..1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கல்யாணி 74 2 நுணாவிலான் 74 3 கந்தப்பு 58 4 நிலாமதி 56 5 கிருபன் 56 6 சுவி 54 7 முதல்வன் 48 8 அஹஸ்தியன் 48 9 வாதவூரான் 48 10 புலவர் 46 11 வீரப் பையன்26 44 12 ஏராளன் 44 13 ஈழப்பிரியன் 42 14 எப்போதும் தமிழன் 42 15 நீர்வேலியான் 42 16 கறுப்பி 40 17 கோஷான் சே 26 தொடர்ந்தும் பல கேள்விகளில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @kalyani க்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் இரண்டாவது நிலையில் நிற்கும் @nunavilan க்கும் வாழ்த்துக்கள்! இறுதிக் கேள்விகளில் பதில்களைச் சரியாகக் கணித்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபற்றி இறுதிப் படியில் நிற்கும் @goshan_che அடுத்த தடவை மேலெழும்ப வாழ்த்துக்கள்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், உற்சாகமாக பலரைப் பங்குபற்ற அயராது உழைத்த @வீரப் பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல.1 point- முன்னாள் போராளியின் துயரம் : புதிய கோணத்தில் உதவிகள் தேவைப்படுவதை உணராத ஈழத்தமிழ்ச் சமூகம்
முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் துயரங்கள் எண்ணிலடங்காதவை. அண்ணா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நாங்கள் ஏன் கஷ்டப்படப் போகின்றோம் என முன்னாள் பெண் போராளியொருவார் தனது துயரங்களை வெளிப்படுத்தியுள்ளார். சோதியா படையணியின் திறமைமிக்க போராளியாக இருந்த இவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தாயாக இப்போது இருக்கின்றார். குடிபோதையில் நித்தம் சண்டை போடும் கணவரோடு அவரது வாழ்க்கை தொடர்ந்து சொல்கின்றதை அவருடனான உரையாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைந்து வாழ வாய்ப்பளிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் சொல்லப்பட்ட போதும் அவர்களது புனர்வாழ்வு விடுதலைப்புலிகளின் அமைப்பின் கொள்கைப் பிடிப்புக்களில் இருந்து அவர்களை விடுவிப்பதை மட்டுமே நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனை முன்னாள் போராளிகள் இன்று எதிர்நோக்கும் சவால்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும் என சமூக விட ஆய்வாளர் வரதன் இது தொடர்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். முன்னாள் போராளிகளின் தியாகங்களைச் மதித்து செயற்பட்டு வருவோர் அவர்களது உளவியல் சார் விடயங்களில் தங்களின் கவனத்தினைச் செலுத்துவதில் உள்ள அவசியத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். திசைமாறிய வாழ்வு சோதியா படையணியில் இருந்தவாறு தேச விடுதலைக்காக போராடி விழுப்புண்களைச் சுமந்து விட்ட முன்னாள் போராளியான இவரை திருமணம் செய்து கொண்டவர் ஒரு சிங்களவர் என்பது ஆச்சரியமான விடயமாகும் என ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றை கொண்டு ஈழத் தமிழருக்கான தீர்வுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டார். தமிழர்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைகளை மதித்து நடந்து கொள்ள முடியாத போதே ஆயுதம் ஏந்தி போராட தலைப்பட்டனர் தமிழர்கள். அப்படியான சூழலில் அன்று யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களின் சமூகத்தில் இருந்து ஒருவரை திருமணம் செய்து தன்னுடைய வாழ்க்கைத் துணையாக கொள்ள முடிந்தது எப்படி என்ற கேள்வியின் போதுதான் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி எழுந்துள்ளது. நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் தோல்விகளும் வெற்றிகளும் மாறி மாறி வந்து போவது ஆச்சரியமானதல்ல. ஆனாலும் ஏன் நாம் போராடினோம். யாரோடு போராடினோம். அவர்கள் எப்படி எங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி நடப்பதற்கான ஏதுக்கள் என்ன இருக்கின்றன என்றவாறான பல கேள்விகளுக்கு விடைகளைக் தேடிக்கொள்ள முயன்றவாறு நாம் நம் அன்றாட வாழ்வியலை முன்னகர்த்திச் செல்ல தவறிப் போகின்றோம். இதனை அந்த முன்னாள் போராளியின் இன்றைய வாழ்வு நிலை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்களவரான கணவரின் வார்த்தைப் பிரயோகங்கள் அந்த முன்னாள் போராளியினை சொல்லால் கொன்று விடுவதாக இருக்கின்றது. மனதால் ஒரு முன்னாள் போராளி அனுபவித்து வரும் சித்திரவதைகளை தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளையும் இதுவரை யாரும் முன்னெடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம். போதையின் தாக்கம் குடும்ப வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நன்றாகவே இருந்தார். நாளடைவில் பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட போது அவர் குடிக்கத் தொடங்கி விட்டார். ஆரம்பத்தில் கள்ளு மற்றும் சாராயத்தை குடித்தவர் நாளடைவில் கசிப்புக்கு பழக்கப்பட்டு விட்டார். கசிப்பு குடித்து விட்டு வரும் நாளெல்லாம் வீட்டில் கடுமையாக சண்டையிட்டுக் கொள்வார் என்று அந்த முன்னாள் போராளியுடனான உரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த முன்னாள் போராளி தன் மூன்று பிள்ளைகளுக்கும் சிங்களத்தில் பெயரிட்ட இருக்கின்றார். 2009ஆம் ஆண்டு ஓமந்தையில் படையினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர் சிங்களவரான தன் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு முன்னாள் போராளியான உங்களால் எப்படி ஒரு சிங்களவரைக் காதலிக்க முடிந்தது என்ற கேள்விக்கு மௌனமாக ஒரு புன்னகையை உதிர்ந்து கொண்டார். போதையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் தன் கணவரின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் குறிப்பிடும்போது குடும்ப வாழ்வை வெறுத்து விட்டதான தன் உணர்வையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். கணவனை குறிப்பிடும் போது மரியாதைக் குறைவான சொல்லாடலைப் பயன்படுத்தி இருந்ததோடு தனக்கேதும் உதவிகளை செய்ய யாரேனும் முன்வந்தால் தன் கணவனிடமிருந்து விவகாரத்து வாங்கித் தந்தாலே அது பெரிய உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஈழ விடுதலைப் போரின் போது விழுப்புண் பட்டு உடலில் அதன் தழும்புகளைப் கொண்டுள்ள இந்த முன்னாள் பெண் போராளியினை விழுப்புண்ணால் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிட்டு அவரது கணவர் போதையில் உள்ள போது அவரை தரக்குறைவான வார்த்தைப் பிரயோகத்தினால் இழிவுபடுத்தி பேசுவதாகவும் தன்னை திருமணம் செய்து கொண்டதாலேயே தான் கஷ்டப்படுவதாக அவர் திட்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன் அயலவர்கள் மற்றும் உறவினர்களை சண்டைக்கு இழுத்துக் கொள்வார். அவர்கள் இவரது சுபாவத்தைப் புரிந்து கொண்டு நடப்பதால் முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள முடிவதாக முன்னாள் போராளி கூறியுள்ளார். மன உளைச்சல் விழுப்புண் பட்டு இயல்பு நிலையில் வாழ முடியாதவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய சூழலில் அவர்களது அசாதாரண நிலையைச் சுட்டிக்காட்டி அவர்களை இழிவுபடுத்தல் என்பது அவர்களுக்கு பெரும் மனவுளைச்சலை ஏற்படுத்தும் என உளவள ஆலோசகர் ஒருவருடன் உரையாடும் போது இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாக வாழ்பவர்களிடையே ஏற்படும் மனவுளைச்சலை இலகுவில் மாற்றியமைத்து அதிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். ஆனாலும் கொள்கைப் பிடிப்போடு உயிர்த்தியாகம் செய்து விடத் துணிந்த முன்னாள் போராளிகளிடையே ஏற்பட்டு விடும் மனவுளைச்சலை மாற்றியமைத்து அவர்களை விரக்தியில் இருந்து விடுவித்துக் கொள்வது கடினமானது. இலங்கை அரசினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர் வாழ்வளிப்புக் கூட யதார்த்த சூழலை விளக்கி வன்முறையற்ற வாழ்வு ஒன்று உங்களுக்கு உறுதிப்படுத்தப்படுவதாக மட்டுமே அமைந்துள்ளது. முன்னாள் போராளிகளினால் அந்த யதார்த்தத்தினை இலகுவாக ஏற்றுக்கொண்டு செயற்பட முடியும். ஏனெனில் அவர்களால் நேர்த்தியான முறையில் சிந்திக்க முடியும். சிங்கள தேசத்தினால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னல்களைப் புரிந்து கொண்டு தங்கள் வாழ்வை தியாகிக்கும் படி வாழ்ந்தவர்கள் முன்னாள் போராளிகள் ஆகும். ஆயினும் நாட்கள் கடந்து போகும் போது ஏற்படும் சூழல் மாற்றங்கள் அவர்களை வெகுவாகப் பாதிக்கின்றன. அந்தப் பாதிப்பில் இருந்து அவர்களை காத்துக்கொள்ள வேண்டும். முன்னாள் போராளிகளின் நலன்களில் அக்கறை காட்டுவோர் அவர்களது அன்றாட வாழ்வியலை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். நிர்வாக இயக்கம் விடுதலைப் புலிகளின் நிர்வாக இயக்கத்தில் இருந்து இன்றைய சமூகத்தின் நிர்வாக இயக்கம் பாரியளவிலான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. அவர்களது நிர்வாக இயக்கத்தில் சாதாரண குடிமக்களின் இயல்பு வாழ்வை பாதுகாத்துக் கொடுக்கும் கட்டமைப்புக்கள் இருந்தன. அதனால் இயல்பு வாழ்வுக்கு நல்ல பண்புகள் மட்டும் போதுமாக இருந்தது. எனினும் இன்றைய நாட்களில் உள்ள நிர்வாக இயக்கத்தில் ஊழல், ஏமாற்று போன்ற நற்பண்பியலுக்கு முரணான பல விடயங்களை எதிர் கொண்டு வாழ வேண்டும். அதனை எதிர்கொள்ளும் போது இவர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகி வருவதனை ஈழத்தில் அவதானிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை அரசாங்க நிர்வாகம் உறுதிப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை கொண்டுள்ள போதும் அவை முழு நிறைவாக செயற்படாத போக்கு இருப்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். முதியோர்களை அவர்களது வயதனுபவம் மற்றும் பெரியோர் என்ற அடிப்படையில் அவர்களை மதித்து நடத்தாத அரச அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களை நம் அன்றாட வாழ்வில் அவதானிக்க முடிவதை இங்கே சுட்டிக்காட்டலாம். முன்னாள் போராளிகளின் மனநிலை ஆயினும் விடுதலைப்புலிகளின் காலத்தில் முதியவர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கும் உரியளவிலான மரியாதைகள் வழங்கப்பட்டிருந்தன என்பதை உள்ளூர் மக்களோடு மேற்கொள்ளும் நீண்ட கலந்துரையாடல்கள் மூலம் அறிய முடியும் என்பது இங்கே நோக்கத்தக்கது. ஒவ்வொரு முன்னாள் போராளியும் ஏதோவொரு மனவுளைச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை மறுதலிக்க முடியாது. உலகளவில் உள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மற்றும் தாயக வாழ் ஈழத்தமிழ்ச் சமூகம் போன்றன முன்னாள் போராளிகளை அவர்களது மனவுளைச்சலில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைகளைப் புரிந்து கொண்டு தங்கள் வாழ்வை திட்டமிட்டு முன்கொண்டு செல்ல வழிகாட்ட ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். அது ஒன்றே அவர்களது இன்னல்களுக்கான குறைந்தபட்ச மருந்தாக இருக்கும். அவர்கள் கொண்ட ஈழத் தாகத்தின்பால் அவர்களின் தியாகத்திற்கான கைமாறாக அமையும் என்பதும் திண்ணம். https://tamilwin.com/article/ex-combatant-s-grief-1717049562?itm_source=parsely-detail1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
குமாரசாமியரைச் சந்திக்க இன்னமும் எத்தனை காலம் தேவையோ தெரியவில்லை. கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விட்டுவிட்டேன். சந்திப்பு பற்றிய விபரங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நான் 4வருடத்துக்கு முதலே படத்தில் பார்த்து விட்டேன் நேரில் இன்னும் பார்க்கல தாத்தா நடிகர் பார்த்திபன் போல் கருப்பும் நல்ல இளமையும் என்ன செய்ய யாழில் இணைந்த காலம் தொட்டு கூப்பிட்டு பழகி போச்சு தாத்தா என்று என்னை விட 24வயதில் தாத்தா மூப்பு....................... போன வருடம் ** இந்த வயது பிறந்த நாளை கொண்டாடினது என்று சொன்னார்😁..................... நான் நினைக்கிறேன் யாழில் வயதில் மூத்தவர்கள் என்றால் பஞ் ஜயாவும் சுவி அண்ணாவும்🙏🥰...........................................1 point - பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.