Leaderboard
-
கந்தப்பு
கருத்துக்கள உறவுகள்14Points12678Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்12Points46790Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்10Points3061Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்8Points19129Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/05/24 in Posts
-
நன்றி கெட்ட உலகமிது 😡
4 pointsஅண்மைக் காலங்களில் நான் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் சிறு பிள்ளை பாலியல் கொடுமைகள். ஜேர்மனியர்கள் தம் மண்ணில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அல்லது பயணித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு சமூகத்தினரால் கொலைகள் செய்யப்படுகின்றார்கள். கொலை செய்யப்படுகின்றவர்கள் எதுவுமறியாத அப்பாவிகள்.எதுவுமறியாத சிறுவர் சிறுமிகள். இப்படியான நடத்தைகளை செய்பவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டிலிருந்து வந்த அகதி தஞ்சம் கோரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாருங்கள் என வரவேற்றவர்களின் நெஞ்சிலே இன்று குத்துகின்றார்கள். ஒரிருவர் இந்த தவறுகளை செய்தால் பரவாயில்லை என்றாலும் ஆயிரமாயிரம் இப்படியான மனநிலை உள்ளவர்கள் ஜேர்மனிய மண்ணில் உலாவுகின்றார்கள் என் இன்றைய செய்திகள் கூறுகின்றன.உண்மையை சொல்ல வேண்டுமானால் மக்கள் ஏதோவொரு அச்சத்துடனேயே உலாவுகின்றார்கள் என சொல்லலாம். பல் வேறு நாடுகளில் அரசியல் குழப்பங்களால் தமது நாடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வருபவர்களை இன் முகத்துடன் வரவேற்று சகல உதவிகளையும் அதாவது உடை உறைவிட வசதி,பண வசதி,தொழில் கல்வி கற்க வசதி என சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள். ஜேர்மனிய இன்றைய சமுதாயமும் எவ்வித பாரபட்சமின்றி இவர்களுடன் கைகோர்த்து நட்புறவுடனேயே பழகுகின்றார்கள். பல இளம் சமுதாயத்தினர் தங்கள் வீடுகளில் அகதிகளாக வருபவர்களுக்கு ஒரு அறையை அவர்களுக்கென்றே ஒதுக்கி கொடுத்தும் உள்ளார்கள். பல குடும்பங்களில் அகதி என முத்திரை கொடுக்காமல் அவர்களும் மனிதர்கள் எனும் மனப்பான்மையில் பிள்ளைகளாக தத்தெடுத்து பொறுப்பேற்றும் உள்ளார்கள். இன்னும் பல இடங்களில் இளையவர்கள் இன மத பேதமில்லாமல் காதல் செய்தும் உள்ளார்கள்.காதல் கருத்து வேறுபாடு வந்து பிரியும் போது கொலைகளும் செய்துள்ளார்கள் அந்த அகதி கயவர்கள். இது ஜனநாயக நாடு,தனிமனித உரிமையுள்ள நாடு என தஞ்சம் புகுந்து விட்டு தமது மத/இன கலாச்சாரத்தை மனதில் வைத்து கொலைகளை செய்கின்றார்கள். இந்த நாடு அரசியல் சுதந்திரம் உள்ள நாடு. யாரும் எந்த அரசியலுக்கும் எந்த கருத்தும் வைக்கலாம். நன்றி அரசியலை எதிர்பார்க்காத நாடு. அப்படிப்பட்ட நாடுகளுக்கு வந்தவர்கள் கொலை,பாலியல் கொலை,பாலியல் வன்முறை,மதம் சம்பந்தப்பட்ட கொலைகளை செய்கின்றார்கள். மத சுதந்திரம் அதிகமாக கொடுக்கும் நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அப்படியான நாட்டில் இஸ்லாமுக்கு மாற்றுக்கருத்து வைத்த ஒரு மனிதரை அகதி தஞ்சம் கோரிய ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கத்தியால் முகம் மற்றும் ஏனைய இடங்களில் கூரிய கத்தியால் குத்தியுள்ளார். அதை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரியை தலையின் பின்புறம் கத்தியால் குத்தி..... அவசர சிகிச்சையின் பின் அந்த பொலிஸ் அதிகாரி காலமாகிவிட்டார். அஞ்சலிகள் இப்படியான செயல்களினால் ஜேர்மனிய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாத அளவிற்கு அகதிகள் மீதான வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள். சில இடங்களில் அகதிகள் மீதான வெறுப்பில்லாமல் பயம் காரணமாகவே போராட்டங்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சில தினங்களுக்கு முன் ஒரு ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் ஜேர்மனிய குடிமகன் மீது கத்திக்குத்து நடத்திய சம்பவம். காணொளி பார்க்க நன்றி கெட்ட உலகமிது..😡4 points
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
3 pointsமோடிஎன்பவர் ஆர். எஸ். எஸ் இன் இந்துத்துவா பாசிசத்தை அமுல்படுத்தும் ஒரு கருவி மட்டுமே. அந்த கருவியின் காலம் ஏறத்தாள முடிந்து சக்கை போல் ஆர். எஸ் ஆராலேயே தூக்கி வீசப்படும் காலம் வந்து விட்டது. அந்த மோடி எப்படி சிங்களவனுக்கு ஆப்பாக இருப்பாராம். இவ்வாறான கற்பனைகள் தான் தமிழரின் பாரிய பலவீனம். காங்கிரஸோ, பா.ஜ.க வோ இருவரையும் சமாளிக்கும் வல்லமையான ராஜதந்திரம் சிங்கள அரசிகளிடம் உள்ளது என்பதை நேரில் பார்தத பின்புமா இப்படியான கற்பனைகள்.3 points
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
3 pointsதமிழ்நாட்டில் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாதக 8.19 % வாக்குகளை பெற்றுள்ளது 2021 சட்டசபை தேர்தலில் 6.5% வாக்குகளை பெற்றிருந்தது நாதக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெற உள்ளது நாம் தமிழர் கட்சி https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-lok-sabha-election-results-2024-vote-counting-live-news-updates-and-highlights-in-tamil-611015.html3 points
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
ஐயா! யாவரும் உயிருடன் இருந்தால் சந்தோசம் எல்லோருக்குமானதே. ஆனால் அதை வைத்து வியாபாரம் என வரும்போது தானே கசப்புகள் வருகின்றது.3 points
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
2 pointsவாக்குகளுக்கு பணம் கொடுக்காமலும் ஊடக பலமில்லாமலும் கூட்டணி இல்லாமலும் கடைசி நேர சின்ன பறிப்பால் புதிய சின்னத்தில் போட்டியிட்டு மாநில அளவில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளமை மாபெரும் வெற்றிதான். வாழ்த்துகள். ☘️ சீமான் தனது கொள்கைகளில் ஒரு சில திருத்தங்களை சீர் செய்வார் எனின் விரைவில் பல வெற்றிகள் நிச்சயம்.💪2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........ நீங்கள் தரவுகளையும், செய்திகளையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள்.........👍 உகண்டாவா அல்லது பபுவா நியூகினியா, எதைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்கு ஒரே குழப்பம். முதலாவதாக, இவை இரண்டு பேரும் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்பதே அன்று தான் தெரிந்தது. இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் இடி அமீனை மட்டும் தான் எனக்குத் தெரியும் என்பதால், உகண்டா என்று போட்டேன் என் தெரிவை........... இப்ப இடி அமீனின் ஆவி தான் வந்து என்னை காப்பாற்ற வேண்டும் போல.....🤣.2 points
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
2 pointsநிச்சயமாக. ஆனால் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் பிஜேபியின் பலம் அதன் வாக்கு வங்கி அல்ல, மாறாக ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை ஒன்று திரட்டி பின் அதை தாமே ஆட்டையை போடுவது. இந்த முறை அதிமுக இந்த வலையில் இருந்து தப்பி விட்டது. அப்படி தப்பி இருந்தாலும் பிஜேபி கூட்டணி என பல சிறிய கட்சிகளின் வாக்கை அள்ளி - 10% வாக்கு வங்கி தமது கூட்டணிக்கு என பிஜேபி காட்டும். காட்டும் அல்ல, காட்டுகிறது. அண்ணாமலை தற்போதைய பேட்டியில் “அதிமுகவுக்கு இப்போ உறைத்திருக்கும்” என சொல்லியது இதைத்தான். 2026 இல் அதிமுகவை எப்படியாவது வலையில் விழுத்துவதே பிஜேபி திட்டம் என நினைக்கிறேன். அதற்கு இந்த” 10% கூட்டணியின் தலைமை” என்ற பீடிகை கை கொடுக்கும். நாதக 6.5 இல் இருந்து 8.2 க்கு போனது ஒரு வகை வளர்ச்சி (எண்ணிக்கை வளர்ச்சி) என்றால் பிஜேபி இப்படி கூட்டணி கண்டு 10% க்கு மேல் எட்டியது இன்னொரு வகை வளர்ச்சி. இதில் தமிழ் நாட்டுக்கு அதிகம் ஆபத்தானது பிஜேபியின் வளர்சியே. காரணம் - இதை வைத்து, மத்திய அரசின் பவரை வைத்து, அமலாக்கதுறையை வைத்து, அவர்கள் அடுத்த தேர்தலில் அதிகுகவோடு 60:40 என நெருக்குவார்கள். தொடந்து இது 50:50, பின் 40:60 என நெருக்கி, அதிமுகவை அப்படியே விழுங்கி தமிழ் நாட்டின் மாற்று கட்சி என ஆகி விடுவார்கள். மாற்று கட்சியாக அவர்கள் வந்தால் - மக்கள் திமுகவை மாற்ற நினைக்கும் போது ஆட்டோமட்டிக்காக அவர்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறும் நிலை ஏற்படும். மஹாராஸ்டிரா முதல் பல மாநிலங்களில் இப்படித்தான் பிஜேபி ஆட்சியை பிடித்தது. நாதகவின் 1.5% வளர்சியை அலட்சியபடுத்துவது போல விட பிஜேபியின் இந்த வளர்ச்சியை அலட்சியப்படுத்த முடியாது என்பது என் கருத்து.2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) - 2 ம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன், தமிழ்சிறி 1)கோஷான் சே - 20 புள்ளிகள் 2)பாலபத்ர ஓனாண்டி - 20 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 20 புள்ளிகள் 4)நிழலி - 20 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 20 புள்ளிகள் 6)கிருபன் - 18 புள்ளிகள் 7)கந்தையா57 - 18 புள்ளிகள் 8)வாத்தியார் - 18 புள்ளிகள் 9)நுணாவிலான் - 18 புள்ளிகள் 10)பிரபா - 18 புள்ளிகள் 11)புலவர்- 16 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 13)சுவி - 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11, 14, 15, 18,19, 22, 25, 26,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? - ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை. சுவியையும், ஈழப்பிரியனையும் தவிர மற்றவர்கள் சரியான பதிலை தந்திருக்கிறார்கள். 1)நிழலி - 20 புள்ளிகள் 2)கோஷான் சே - 18 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 18 புள்ளிகள் 4)கிருபன் - 18 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 18 புள்ளிகள் 6)கந்தையா57 - 18 புள்ளிகள் 7)வாத்தியார் - 18 புள்ளிகள் 8)நுணாவிலான் - 18 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 16 புள்ளிகள் 10)பிரபா - 16 புள்ளிகள் 11)புலவர்- 16 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 13)சுவி - 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 8, 10, 11, 15, 18,19, 22, 25, 26,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.2 points
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
2 pointsபா ஜ க கூட்டணிக் கட்சிகள் எவை பாஜக - தெலுங்கு தேசம் கட்சி - ஐக்கிய ஜனதா தளம் - சிவசேனா - பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு - லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) பீகார் - தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா - பாரத தர்ம ஜன சேனா கேரளா - மதசார்பற்ற ஜனதா தளம் - அசோம் கண பரிஷத் அசாம் - ஜன சேனா கட்சி ஆந்திரா - தேசிய மக்கள் கட்சி மேகாலயா - ராஷ்டிரிய லோக் தளம் உத்தரப் பிரதேசம் - அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஜார்கண்ட் - ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா பீகார் - நாகா மக்கள் முன்னணி மணிப்பூர் - தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி நாகாலாந்து - ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா பீகார் - ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா மகாராஷ்டிரா - சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசம் - ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் அசாம் - இத்தூண்டு கட்சிகளுடன் அமைத்தது தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அலியாஸ் பா ஜ க கூட்டணி2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
19)எல் முருகன் (பிஜேபி) - 2 ம் இடம் நிழலி, goshan_che ,புரட்சிகர தமிழ்த்தேசியன்,தமிழ்சிறி ,கந்தையா57, நுணாவிலான், புலவர், ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1)நிழலி - 18 புள்ளிகள் 2)goshan_che - 16 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 16 புள்ளிகள் 4)கிருபன் - 16 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 16 புள்ளிகள் 6)கந்தையா57 - 16 புள்ளிகள் 7)வாத்தியார் - 16 புள்ளிகள் 8)நுணாவிலான் - 16 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 14 புள்ளிகள் 10)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 11)பிரபா - 14 புள்ளிகள் 12)புலவர்- 14 புள்ளிகள் 13)சுவி - 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 8, 10, 11, 15, 18,19, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
யாராவது எங்காவது இருந்தால் சந்தோசம் தானே. ஏன் இருக்கிறார் இல்லை என்று அடிபடணும்? எங்களுக்காக அவர்கள் செய்தது போதாதா? யாரோ எலும்பை விட்டெறிய நாய்கள் அந்த எலும்புக்கு கடிபட்ட மாதிரி இருக்கிறது.2 points- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
2 points- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
2 pointsஊடக பலம் இல்லை சோசல் மீடியா மூலம் இளையர்கள் குறுகிய நாட்களில் மைக் சின்னத்தை மக்களிடம் சேர்த்தார்கள்...........................ஒரு கட்டத்தில் பணமே இல்லை தேர்தல் செலவுக்கு இருந்ததை வைச்சு தேர்தல் செலவை சமாளிச்சினம் மத்திய அரசு தேர்தல் நேரம் கொடுத்த நெருக்கடி என் ஜ ஏ சோதனை , கட்சி சின்னம் பறிப்பு இதை எல்லாம் தாண்டி ஆட்டோ சின்னம் கேட்க்க அதை உடன வேறு கட்சிக்கு தூக்கி கொடுத்தது பீஜேப்பி கூட கூட்டனி வைச்ச வாசனுக்கு சைக்கில் சின்னம் கொடுத்தது இப்படி பல குளறு படிகள் இதை எல்லாம் தாண்டி தான் 21 நாள் பிரச்சாரத்தின் பின் 36லச்ச ஓட்டுக்கு மேல் பெற்று இருக்கினம் 2019 பாராள மன்ற தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்கு 17 லச்சம் , இந்த பாராள மன்றத்தில் கூடுதலா 19லச்ச ஓட்டு பெற்று இருக்கினம்.................................2021 சட்ட மன்ற தேர்தலில் 31 லச்ச வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு 2026 சட்ட மன்ற தேர்தலில் 16சத வீதத்தை தொடும் புலவர் அண்ணா..................................... கந்தையா57 ஜயாவுக்கு நாங்கள் உண்மையை விளங்கப் படுத்தினால் அந்த மனுஷன் ஏதோ எல்லாம் எழுதுவார்😁....................................................2 points- தோழர் இரும்பு
1 point'தோழர் இரும்பு' என்னும் இச் சிறுகதை ஜான் சுந்தர் அவர்களால் எழுதப்பட்டு 'அகழ்' இதழில் வெளிவந்திருக்கின்றது. 'தோழர்கள்' எப்போதுமே கொஞ்சம் 'இரும்பு' போன்றவர்கள்தான். கொள்கை, கோட்பாடுகள், இலட்சியம் என்று உறுதியாக, வளைந்து கொடுக்காமல் வாழ்பவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்வதில்லை, அவை ஒவ்வொன்றும் தனித்தனியே முக்கியமானவையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை போலும். இச் சிறுகதை தோழர்களின் இன்னொரு பக்கத்தை, இளகிய மனங்களை, காட்டுகின்றது. இதை வாசித்த போது இது ஒரு சாதாரண கதையாகத் தான் தெரிந்தது. ஆனாலும் பின்னர் இது தினமும் மனதில் வந்து போகின்றது. கதையில் நிகழும் பிரதான விடயங்களுக்கு பெரிதாக சம்பந்தம் இல்லாமல் இருக்கும் இந்த ஒரு வசனம் எங்களில் பலரை சொல்வது போலவே இருக்கின்றது: ” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர். ***************** தோழர் இரும்பு (ஜான் சுந்தர்) ----------------------------------------------- வீட்டுச் செலவுக்கு காசு கொடுக்காமல் சாப்பிடுவதில்லை என்கிற முடிவில் இருக்கிறேன். மகள்கள் வற்புறுத்தி சாப்பிட வைத்தாலும் மறுசோறு வாங்குவதில்லை என்று ஒரு வைராக்கியம். நான் என்ன செய்யட்டும்? வேலை வந்தால்தானே? ”ஹூம்… வந்துட்டாலும்….” இந்த கஞ்சத்துக்குப் பிறந்தவர்கள் தருகிற சம்பளம் இருக்கிறதே அதை நினைத்தால் மனக்கண்ணில் ஊறுங்கண்ணீர் தோழர் குணசேகரனின் குரல் வழியே ’ஆறாப்பெருகி ஆனை குளிப்பாட்ட, குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட’ பெருகிப் பெருகி வழிந்து கொண்டே இருக்கும். சின்னமகள் என்னை இழுத்துக் கொண்டு போய் தரையில் அமரச் செய்தாள். பெரியவள் உட்கார்ந்த இடத்துக்கே கைகழுவ பாத்திரமும், தண்ணீர் செம்பும் கொண்டு வந்தாள். வீடு என்று ஒன்று இருந்தால் இப்படி மனுசனைத் தாங்க வேண்டும். அதுவும் மனசு பொறுக்காத கோபத்தில் இருக்கிற போதோ, நெஞ்சு பாரமாய் இருக்கிறபோதோ தாங்கியே தீர வேண்டும். அதை விட்டு விட்டு ஏற்கனவே புண்ணாக கிடப்பதற்குள் விரலை விட்டு குடையக் கூடாது. கடந்த இரண்டு மாதங்களாக தன் சேமிப்பால் இந்த குடும்பச் செலவை சமாளித்து வருகிற என் இணையர் தட்டை வைத்து சோற்றை அன்னக்குத்தியில் அள்ளி வைத்து குழம்பை ஊற்றினார். நான் அவரது கண்களைப் பாராமல் சாப்பிடத் துவங்கினேன்.முருங்கைக் கீரையும் பருப்பும் சேர்ந்தாலே பயங்கரமாயிருக்கும் . இதில் அரைத்த தேங்காயும், தேன்மலரின் பிரத்யேகமான தாளிப்பும் சேர்ந்து கொண்டு மணக்க , குழம்பு அதிபயங்கரமாயிருந்தது. நான் என் வைராக்கியத்தை மறந்து, “இன்னும் கொஞ்சம் சோறு போடுங்க தேன்மலர்” என்றபோது, அலைபேசி ‘தோழர். இரும்பு’ என்று ஒளிர்ந்தது. “வேண்டாம்… போதும் ” தட்டோடு எழுந்தேன். “தோழர்! வண்ட்டன் ரெண்டே நிமிஷம்” என் உற்சாகத்தைக் கண்டதும் இங்கே இன்னொரு தாளிப்பு துவங்கியது. ” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர். நான் கையைக் கழுவிவிட்டு மொட்டை மாடிப்படிகளுக்கு நடந்தேன். “ இன்னேரத்துக்கு மாடிக்கு போக வேண்டியது நடுசாமத்துல எறங்கி வரவேண்டியது” மணியைப் பார்த்தேன். பத்தரையாகி விட்டிருந்தது. நாளைக்குப் பேசுவோமா? இல்லை. முடியாது. இப்போது இருக்கிற மனக்குடைச்சலில் இருந்து நான் வெளியே வரவேண்டும். தோழர் ‘இரும்பு’என்கிற இரும்பொறை இளஞ்சேரல் மாலெ இயக்கத்தில் பகுதி நேர ஊழியராக இருந்து யோசனைக்கு எட்டாத பெருங்காரியங்கள் செய்தவர். பின்னாட்களில் இயக்கத்திலிருந்து விலகி மனைவியும் குழந்தைகளுமாக திருப்பூரில் வசிக்கிறார். தமிழாசிரியை மகன் என்றாலும் பள்ளியில் கலகம் செய்து படிப்பை முடிக்காமலே வெளியேறியதால் தற்போது பின்னலாடைத் துறையில் பணி. “ஒண்ணுமில்ல தோழர் சாப்புட்டீங்ளா?” வானம் கழுவி விட்டாற்போலிருந்தது. “ஆச்சு தோழர் சொல்லுங்க” தாமதமாக கூடு திரும்புகிற ஏதோ ஒரு பறவை கீச்சிட்டது தோழர் ஒன்றும் இல்லை என்றால் பகிர்ந்து கொள்ள ஏதோ இருக்கிறது என்று பொருள். ஏதோ என்றால் தட்டையான தகவலாக இருக்காது. புதிய களங்களில் எளிய நடையில் மனதை பிடித்துக் கொண்டு போய் அசாத்தியமான பரவச நிலைக்கு தள்ளுகிற முத்துலிங்கத்தின் கதைகள் பற்றியோ, “ஏந்தோழர்? நெசம்மாலுமே அந்தாளுக்கு எம்பது வயசு ஆகுதுங்ளா?”. ‘நல்ல புணர்ச்சிக்கிடையில் அழுகிற பெண்’ வருகிற பூமா.ஈஸ்வர மூர்த்தியின் கவிதை வரியைக் குறித்தோ, “இதென்னுங் தோழர் விசுக்குனு இப்புடி சொல்டாப்ள?”. ஒவ்வொன்றாகத் தொட்டுத்தொட்டு தொடர்ச்சியாக பேசிப்பேசி அவரது சொந்த வாழ்வில் கண்ட மனிதர்களைக் குறித்துப் பேசுவது என்று போகும். “பொம்பள சும்மா ஆறு ஆறறை அடிக்கு கொறையாம இருக்கும் தோழர்.. “ சாட்சியாக நேரில் பார்த்த சம்பவங்களை அசலான கொங்குத்தமிழில் விவரிப்பார். “.. அவரும் ஆதிக்கசாதில பொறந்தவருதானுங்க..ஆனா ஆளு எப்புடி தெரியிங்ளா? ப்யூர் கம்னிஸ்டுங் தோழர்.. தங்கம்னா தங்கம்ங்! சுயசாதிக்காரங் கண்ணுக்குள்றயே வெரல உட்டு ஆட்டிப்போட்டாருங் அவுனுக உடுவானுகளா கொன்ட்டானுக” வீணாகப்போக இருந்த நாளை பேச்சில் வளர்த்தி உருப்படியாக்கித்தருவார். “இங்கே எவன்ட்டயும் எதயிம் பேச முடில தோழர்! ‘ஏனப்பா முந்தியெல்லாம் வெட்டும் குத்துமா நல்லா ரத்தக் கதையா சொல்லுவ? இப்பல்லாம் நெஞ்ச நக்குற கதையா இருக்குதேடா நஞ்சப்பா’ன்றானுக.. இவனுக இப்போதைக்கு பக்குவப்பட மாட்டானுக தோழர்” ” நீங்கயேங்க அதயெல்லாம் சட்டை பண்றீங்க?” “இன்னக்கி ஒரு கலியாணப் பத்திரிக்கை வந்தது தோழர். மனசுக்கே நெம்ப சந்தோசமாயிருச்சுங்” நான் மௌனமாய் இருந்தேன். தோழர் தொடர்ந்தார். எனக்கு தோழர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தால் போதும். “ஒரு இருவது வருஷத்துக்கு முன்னாடி இதே திலுப்பூருல நானும் என்ர ஃப்ரண்டும் டீக்கடயில நின்ட்டுருந்தோம். எனக்கு செம்ம டயர்டாருக்கு. ஏறுவெய்யல்ல வெடி நைட்டு முடிச்சு நிக்கிறன். மறுக்கா பகல் பாக்கோணும். வேல தெரிஞ்ச ஆளுக கெடைக்க மாட்டாங்க தோழர். எதையப் பார்த்தாலும் சலிப்பா இருக்குது…” நான் செருப்பை மாட்டிக் கொண்டு தோழரோடு வானத்துள் இறங்கி நடந்தேன்.சாயம் போன தர்பூசணித் துண்டாக வீதியில் கிடக்கிறது வெளிர் நிலா. “…சரீங்களா? ஒரு குடும்பம் வந்து டீக்கடயோரமா நிக்குது. ஒரு பெரியவரு.. அவரு சம்சாரம், அப்பறம் அவிய பொண்ணு,பையன்” “ம்ம்” மனம் வரைகிற காட்சியில் திருப்பூர் துலங்கும். ” பெரியவருதான் டீய வாங்கி வாங்கி ஒரோருத்தருக்கும் குடுக்குறாப்ள” “செரி” “பொண்ணும் பையனும் டீய வாங்கி குடிக்கிறாங்க… இந்தம்மா டீ டம்ளர வாங்கி கைல வெச்சுட்டு தலய குனிஞ்சே நிக்கிது “ “ஏன்?” ” நமக்குந்தெரீலியே தோழர்… குறுக்க பேசாம கேளுங்க… பெரியவரு சமாதானப்படுத்தற மாதற ஏதோ சொல்லீட்டுருக்காரு” எனக்கு இப்போது உம் கொட்டுவதற்கு யோசனையாக இருந்தது “நம்ம ஃபிரண்டு சும்மா இருக்காம ‘ஏனுங்க ஏதாச்சிம் பிரச்சனைங்களா? உதவி கீணு வேணுமா?’ அப்படின்னு கேட்டுட்டானுங்க “ “இவன் எப்புமே பக்கத்துல இருக்கறவங்க கிட்ட வாய குடுத்து எதயாவது கேப்பானுங்க நேரம் போறதுக்கு “ “உம்மையில உதவியெல்லாஞ் செய்யமாட்டானுங்க எனக்கு நல்லா தெரியிம் “ “பெரியவரு யாராச்சிம் ஏதாச்சிம் கேப்பாங்களான்னு பாத்துட்டுருந்தாப்ள போல “ “அவரு பாட்டுக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டாப்ள “ “நல்லா வாழ்ந்து கட்ட குடும்பம் “ “கடங்காரனுக தொல்ல” “குடும்பத்தோட கெளம்பி வன்ட்டாங்க “ “ஏதாவது வேல வேணும் “ “இவன் நல்லா ஊ..ஊன்னு கதை கேக்கறானுங்னா?” “ம்ம்….ம்ம்” “நான் நடுல பூந்து எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணங்கட்ட பேசி அவரு கம்பெனில சேத்து வுட்டன்” “நாலு பேருமே… செக்கிங்ல ஒருத்தரு, மடிக்கிறது ஒருத்தரு, பண்டலுக்கு ஒருத்தரு, கடைக்கு போறதுக்கு ஒரு ஆளுன்னு செட்டாயிட்டாங்க” “பெரியவர் வேலை நேரம் போக ,வெளிய மேஞ்சுக்கிட்டுருந்த ஆடு மாடுகள வேடிக்கை பாக்கறது… அதுகளுக்கு தழையப் புடுங்கி போடறதுன்னு இவரா செஞ்சிட்டுருந்திருக்காப்ள… அதுல ஒரு பசுமாட்டுக்கு வாந்தி பேதின்னு என்னவோ தொந்தரவு இருந்திருக்குமாட்டக்குது …” “இவரு ரோட்டோரம் தேடித்தேடி அங்கங்க மொளச்சுக்கெடந்த செடியப் பறிச்சு கசக்கி துணில பொதிஞ்சு மொகமூடியாட்டம் கட்டி வுட்டுருக்காரு அது ரெண்டு மூணு நாள்ள சும்மா கிண்ணுன்னு ரெடியாயிருச்சு” “இதையெல்லாம் ஓனர் பார்த்துட்டே இருந்திருப்பாப்ளயாட்டம் இருக்குது” “பெரியவரே! நீங்க நம்ம தோட்டத்த பாத்துக்கோங்கன்னு சொல்லி தோட்டத்து வீட்டுக்கு குடிபோக சொல்லிட்டாரு” ”அடங்கொன்னியா!” “பெரியவரு ஊர்ல பெரிய பண்ணக்காரரா இருந்திருப்பாராட்டக்குது” “இங்க தோட்டத்து வெளச்சல ரெண்டாக்கி ..” “கால்நடைகள பெருகப்பண்ணி…” “பார்ரா” ” ஆமா தோழர்! கூடுதலா கெணறு தோண்டி…” “நாலஞ்சு வருஷத்துல தோட்டத்த ஜம்முன்னு ஆக்கிட்டாப்ள” “கொஞ்சம் கொஞ்சமா ஊர்ல இருந்த கடனையும் முடிச்சு.. எல்லாத்தையிஞ்செரி பண்ணி மறுக்கா ஊருக்கே போய்ட்டாங்க. இத்தன வருசம் கழிச்சு அவரு புள்ளக்கி கலியாணம்னு நம்மளயும் நாவகம் வெச்சு அழைக்க வந்துருக்காரு தோழர்! “ ” அட! பத்திரிக்கையில புள்ளையூட்டுக்காரன்னு என்ர பேரை அடிச்சிருக்காரு தோழர்!” தோழர் அவரது உடையாத வலுத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். ஆயினும் பெருமிதத்தில் அவர் நெஞ்சம் துடிப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. ” மனிதர்களை நமக்குத்தான் அணுகத்தெரீல தோழர். எல்லாருமே அருவாக்கத்திய வச்சுட்டு திரியறதாவே நெனச்சுக்குறோம்” “போன வாரம் நீங்க கூப்பிடயில ரயில்வே ஸ்டேஷன்ல பார்சல் போட்டுட்ருக்கேன் தோழர் நான் கூப்பிடுறேன்னு சொன்னன்ல” “ம்ம்…ஆமா….” நான் யோசித்தபடியே ஆமோதித்தேன். “அதுவும் பழைய கதைதான்! திருச்சிலருந்து ஒரு அக்கா ரெண்டு பசங்களோட கெளம்பி இங்க வந்துருச்சு “ “புருஷன் பயங்கர தண்ணிவண்டிங்” “அடி தாங்க முடியாம இந்த பொம்பள, கொழந்தைகள தூக்கிட்டு ரயில்ல வுழுந்து தற்கொலை பண்ணிக்கலாம்னு போயிருக்குது” “அங்க போயி கொழந்தைக மொகத்த பாத்துட்டு இவனுக்கோசரம் நாம ஏஞ்சாகோணும்? கூடவே இந்த ரெண்டயும் ஏங்கொல்லோணும் ? அதுக என்ன பாவம் பண்டுச்சுன்னு ரயிலேறி வந்திருச்சு” ”அப்பறொம்?” “இங்க வந்து எங்க கம்பனில சேந்துருச்சு” ”சிறப்பு தோழர்!” “ரெண்டு பசங்களையும் வச்சுகிட்டு பாவம் அப்படியே வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தது “ “நம்ம கம்பனில ஒரு அண்ணன்.. பேரு சுப்பிரமணி. நாங்க கிண்டலுக்கு சுனாமின்னு கூப்பிட்டு ஓட்டுவோம். ஆச்சு அப்பவே ஒரு முப்பத்தெட்டு பக்கம் ஆயிருச்சு… கலியாணம் இல்லாத கன்னிப்பையன்” “அந்த திருச்சிக்கார அக்காள சுனாமிகட்ட கண்ணக்காட்டி நாங்க சும்மா நக்கலுக்குப் பேச, இந்தாளு பயங்கரமா வெக்கத்துல நெளிவாப்ள… ஒரே காமெடியா இருக்கும் தோழர்.. “ ”பொம்பள பாவம் ரெண்டு பசங்களயும் வெச்சுகிட்டு தனியா கெடந்து பாடுபடுது தோழர்.. நம்மாளுஞ் சும்மாத்தானே மெஷினோட்டறப்ள… சேர்ந்து இருக்கட்டுமேன்னு நாங்க நெனச்சோம்” “அதென்னவோ அந்தக்காளுக்கும் அதே மாதற தோணிருக்கும் போலருக்குது… ரெண்டு பேருக்கும் செட்டாயிப்போச்சு “ ”சிறப்பு….மிகச்சிறப்பு” “சுனாமி ரூம காலி பண்ணிட்டு அந்தக்கா வீட்டுக்கே போயிட்டாப்ள” ”ஓஹோ” “பார்க்கறவன் என்ன பேசுவான்…… ஒரு கவலையுங்கெடயாது “ “கம்பனி பசங்களுக்கு அது ஒரு செக்ஸ் புக்கு கதை தானே தோழர் ? அவனுகளுக்கு வேற என்ன தெரியிம்?” “பொதுப்புத்தி தோழர்” “அந்தாளுக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது தோழர் ! ரெண்டு பசங்களையும் நடத்தியே சினிமாக்கு கூட்டீட்டு போவாரு” “அந்தக்காள விட அந்த பசங்க மேல சுனாமிக்கு பாசம் “ “பேல்பூரி, காளான், தட்டுவடைன்னு தெனமும் பார்சல் கட்டீட்டு போவாப்ள” “எங்கிட்ட ஒரு தடவ சொன்னாப்ள… ‘நானெல்லாம் அனாதையாவே செத்து போயிருவேன்னு நெனச்சேன் இரும்பு! எனக்கு கூட ரெண்டு குழந்தைகளும் பொண்டாட்டியும் கெடைச்சிருச்சே? இதுங்களுக்காகவே வாழ்ந்துட்டு சந்தோஷமா செத்துருவேன்டா நானு’ன்னு …என்ன தோழர் இது ம்ம்? … எப்படி? எனக்கு அப்போ என்னடா இது காஜி காஜிங்கறானுகளே? அந்த உடல்தேவையைக் கடந்துட்டா அந்தப்பக்கம் ஒரு பெரிய ஏரியா இருக்கு போலருக்குதேன்னு தோணுச்சு ” தோழர் இடைவெளி விட்டு மௌனமாய் இருந்தார். நான் வெகு நேரம் பேசாமலே இருந்ததால் பேசப்போவதாக காட்டிக் கொள்ள, தொண்டையைக் கணைத்துக்கொண்டேன். “ஜப்பான்காரங்க கிட்ட ஒரு பழக்கம் இருக்கு தோழர்!. நல்ல பேரு சொல்வாங்க… மறந்துருச்சு .. உடைஞ்சு சிதறிப்போன பீங்கான் கோப்பைத் துண்டுகள எல்லாம் சேகரிச்சு வெச்சுகிட்டு கவனமா அதையெல்லாம் ஒண்ணா சேர்த்து ஒட்டுறாங்க. ஒட்டுப்போட்ட விரிசல்களோட திரும்பவும் பழைய வடிவத்துக்கு அந்த கோப்பையைக் கொண்டு வந்துடறாங்க. விரிசல்களை மறைக்கறது இல்ல. மாறா அந்த விரிசல்களுக்கு தங்க முலாம் பூசுறாங்க. சுக்கு நூறா உடைஞ்சு சிதறிப்போன அந்த பீங்கான் பாத்திரம் இப்போ தங்க விரிசல்களோட ஒளிருது ,வீட்டு அலமாரிகள்ல அதை வெச்சு அலங்கரிக்கறாங்க. பிசகுகள, தவறுகள, சறுக்கல்கள எல்லாம் அவங்க கொண்டாடுறாங்க. தவறுகளயோ, குறைகளயோ சரி செஞ்சுகிட்டு நிறைவாக்குறதுதான் வாழ்க்கைங்கறத புரிஞ்சுக்கவே இப்படிச் செய்றாங்க போல, சுப்பிரமணி உடைஞ்சு போன அந்தப் பொண்ணுமேல படிஞ்ச தங்கம் தோழர்! நாம அவங்ககிட்ட பேச முடிஞ்சா இன்னும் அருமையா இருக்கும் “என்று சொல்லி முடித்தேன். ” தோழர்!….. முழுசா கேளுங்க ! கத இன்னும் முடியல” என்றார் இரும்பு.”காலம் எப்படியெல்லாம் மாத்தி மாத்திப்போடுது பாருங்க” நான் மறுபடியும் மௌனத்தை கைக்கொண்டேன். “திருச்சிக்கார அக்காளோட பெரிய பையன் படிச்சு ஐ டி ஃபீல்டுக்கு போயிட்டான். கர்நாடகாவுல வேலை கிடைச்சிருச்சு” “பெரியவன் போனானா? அவனுக்கு சாப்பாடு செஞ்சு போட இந்தக்காவும் போயிருச்சு. இங்க திலுப்பூர்ல சின்னவனும், சுனாமியும் தங்கி சமைச்சு, சாப்பிட்டு வேலைக்கு போயிட்டுருந்தாங்க.பெரியவனுக்கு அங்க நல்ல சம்பளம் வரவும், சின்னவனையும் கூப்பிட்டுட்டான். ஓ… இவங்க நம்மள கழட்டிவுடறாங்கன்னு புரிஞ்சிகிட்டு சுனாமி தண்ணிய போட்டு அப்படியே சும்மா சுத்திட்டு இருந்தாப்ள.பழையபடி அனாதையாயிட்டேன் இரும்புன்னு சொல்வாப்ள” “அடப்பாவமே” “கண்ணீர் மட்டும் நிக்காம போயிட்டே இருக்கும் தோழர்,,, கண் கொண்டு பாக்க முடியாது” இரும்பு அழுகிறாரோ என்று எனக்கு சந்தேகம். “ஆனா அவங்கள பத்தி யார் கிட்டயும் ஒரு வார்த்தை தப்பா பேச மாட்டாப்ள. போன வாரம் சின்னவன் வன்ட்டான்” மொட்டை மாடிக் காற்று சிலீரென்று முகத்தை வருடியது. “வந்து எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு ‘எங்கூட கிளம்பு சுனாமி’ங்கறான். இந்தாளு, ‘இல்ல அது நல்லா இருக்காது’ன்னு சொல்றாப்ள.பெரியவனுக்கு கல்யாணம் பேசணும் நீ இல்லாம எப்படினு அவன் கேட்டான் சொந்தக்காரங்க என்னை யாருன்னு கேட்டா என்னன்னு சொல்றது? அது நல்லா இருக்காது” “எவனாச்சும் வந்து கேட்டா எங்க கிட்ட சொல்லு அதெல்லாம் நானும் எங்க அண்ணனும் பார்த்துக்கறோம்னான் பாருங்க கதாநாயகன் மாதற..அங்கே எங்கம்மா வாயத்தொறந்து சொல்லலன்னாலும் அதனால இருக்க முடியல எளச்சு எலும்பாப்போச்சு” “எங்களாலயே இருக்க முடியலய்யா உன்ன விட்டுட்டு “ “நீ என்ன இங்கயே இருந்துர்லாம்னு நினைச்சியாக்கும்? சுனாமி இப்ப கிளம்பப் போறியா இல்லையா ?” “அட உங்க சொந்தக்காரன் யாருன்னு கேட்டா என்னடா சொல்லுவ?” “சுனாமி திரும்பத்திரும்ப கேட்டதுக்கு அந்த பையன் சொல்றான் தோழர்.. “ “எங்க அம்மாவோட லவ்வர்ன்னு சொல்லிக்கிறோம் நீ கிளம்பி வாய்யா மூடீட்டு” “தோழர்! சத்தீமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துருச்சு தோழர் ..அப்புறம் நான் தான் எல்லாத்தையும் மூட்டை கட்டி ரயில்ல பார்சலா போட்டு அனுப்பி வெச்சுட்டு வந்தேன் “ பிறகு நான் பேச்சை மாற்ற வேண்டி,” ஏன் தோழர்? கல்யாண பத்திரிகை வைக்க வந்தாரே? அந்த பெரியவர்! அவர் குடும்பத்துக்கு உதவணும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சு? உங்க நண்பர் தானே பேசிட்டு இருந்தாரு நீங்க எதனால நடுவுல புகுந்தீங்க? என்று கேட்டேன் . அவர் சட்டென்று சுனாமியின் கதைக்குள் இருந்து வெளியே வந்தார் . “அது வந்து தோழர் ….அவரு பேசும்போது அவங்க ஊரோட பேரை சொன்னாரு தோழர்! அவங்க ஊரோட பேரைப்பாருங்க ‘அழகிய நிலமங்கலம் ! ‘ தோழர் ! ‘அழகிய நில மங்கலம்’ ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி திருத்தமாக உச்சரித்தார். “ரொம்ப அழகா இருந்தது தோழர்” இந்த மாதிரி பேரு வச்ச ஊரிலிருந்து ஒரு குடும்பம் வந்து கஷ்டப்படணுமான்னு தோணுச்சு “என்றார். எனக்கு ஏதோ நிறைந்து விட்டது போலிருந்தது. அவரிடம் ‘திரும்பவும் பேசுவோம் தோழர், கூப்பிடறேன்’ என்று பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கும் போது ‘அழகிய நில மங்கலம்’ என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். https://akazhonline.com/?p=73651 point- சாமி சிறீ பாஞ்
1 pointeBay Kleinanzeigen ist jetzt Kleinanzeigen. அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மறுபிறவி எடுத்த என் இதயம் கனிந்த வணக்கங்கள்🙏🙏 எனது இதயத்தை இயக்குவதில் பிரதான பங்குவகிக்கும் இரத்தக் குழாய்யொன்று இயங்கமறுத்து என் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர முயன்றதைக் கண்டறிந்த வைத்தியர் எனது நெஞ்சை வெட்டிப்பிளந்து அந்தக் குழாய்வழியை மாற்றியமைக்க 5 மணித்தியாலங்கள் சென்றதாம், அதன்பின்பு இருதயம் தடையின்றி இயங்குவதற்காக நெஞ்சில் ‘மின்கலம் ஒன்றைப் பொருத்தும்போது இன்னொரு குழாயில் இரத்தம் கசிவது கண்டு அதனைச் சரிசெய்யாது விட்டால் இவருடைய வாழ்க்கை இன்னமும் 11நாட்களே என்று வைத்தியர் தெரிவித்ததால் வெட்டித் தைத்த இடத்தை மீண்டும் வெட்டி மேலும் 4 மணித்தியாலங்கள் சிகிச்சை நடைபெற்றதாம். கடவுளைக் காட்டித் தமிழர்களை மயக்கி வடவர் தங்கள் மொழியை தமிழர்களுடைய கோவில்களில் வளர்த்து வருவதுபோல், என்னை மயக்கமடைய வைத்து இதனைச் செய்ததால் சிகிச்சையின் தாக்கத்தை நான் உணரவில்லை. “செல்வத்துள் செல்வம் அருள்ச் செல்வம்” என்று பொய்யா மொழிப்புலவர் கூறியிருந்தார், ஆனாலும் நிலத்தில் அருள்ச் செல்வத்தையும் தேடிச் சேர்த்த காடையர்கள் பலர் இலங்கையில் இருப்பது கண்டு, அதிலும் அரச ஆட்சி அதிகாரத்திலிருந்து சொந்த மக்களையே கொல்லும் கொடியவர்களிடமிருந்தும் தப்புவதற்காக புலம்பெயர்ந்து வந்தபோதும், கூட இருந்தே குழிபறிக்கும் என் சொந்தங்களான என் நலம்காக்கும் இரத்த நாளங்களில் சில கருனாகூட்டம் போல் குழிபறித்ததால் வந்தநிலை இது. கள உறவுகளில் ஒருவரான திரு குமாரசாமி அவர்களைச் சந்திக்க வழிசமைத்த என் நண்பர் தமிழ்சிறீ அவர்களுக்கு என்நன்றிகள்.🙏🙏1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தடக்கள வீரர்கள், தடை தாண்டி ஓடுபவர்கள்….போட்டியில் ஓடுகிறோம் என பாவ்லா காட்டி விட்டு…அப்படியே ஓடிவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன்🤣 முதலாவது அல்லது இரெண்டாவது 50 ஓவர் உலக கிண்ணத்தில் இந்த அணிகள் எல்லாம் - கிழக்கு ஆபிரிக்கா என்ற பெயரில் விளையாடின என பள்ளிகூட லைபரரியில் ஒரு புத்தகத்தில் வாசித்த நினைவு. 96 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசை கென்யா வீழ்த்தியது மறக்க முடியாத நிகழ்வு.1 point- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1 pointபுலவர் அண்ணா நீங்கள் தொட்டு நான் தொட்டு பலருக்கு நல்ல விளக்கம் கொடுத்து விட்டோம் ஆனால் அவைக்கு புரிந்தாலும் புரியாது போல் நக்கல் நையாண்டி செய்வது திருமாளவனை பற்றி இங்கு யாரும் எழுதுவதில்லை 2சீட்டுக்கு இன்று வரை எம் இனத்தை அழித்த காங்கிரஸ் மற்றும் திமுக்கா கூட நிக்குது திருமாளவன் எம்பி ஆகி விட்டார் எங்களுக்காக டெல்லியில் குரல் கொடுப்பாரா.................................... திருமா நாக்கு பிரட்டி திருமாக்கு பிரபாகரன் எதற்காக போராடினார் என்பதை கூட மறந்து இருப்பான் . தேர்தல் நேரம் பல கோடி காசு அதோட 2சீட் நக்கி பிழைச்சால் போதும் என்ர நிலைக்கு திருமாளவன் வந்து விட்டார்................................ஏன் ஈழ தமிழர்கள் திருமாளவன் பெயரை சொல்வது கிடையாது காரணம் திருமாளவன் மேல் இருந்த நம்பிக்கையை ஈழ தமிழர்களை விட்டு போய் விட்டது இது தான் நிதர்சன உண்மையும் கூட.................................................................1 point- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
ஆமாம் ஆமாம்.. அது தான் பைடன் இந்தத் தீர்ப்புத் தொடர்பில் கருத்துச் சொன்னாராக்கும். இது எதுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றால்.. எதுக்கு கருத்துச் சொல்லி மிணக்கட்டுக்கிட்டு..???! கிளிங்டன் - மோனிக்கா வழக்கில்.. முன்னாள் பின்னாள் சனாதிபதிகள் கருத்துச் சொன்னவையாக்கும்..??! ஆமாம் ஆமாம்.. நாசா சொல்லுறதெல்லாம்.. மிகவும் நம்பத்தகுந்தவை.. மற்றவை எல்லாம் பொய்..! இதுவே தங்கள் தத்துவார்த்தம். நீங்கள் அதற்குள் கட்டுண்டு கிடப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. 😜1 point- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1 pointபுதிய சின்னத்தில் 20 நாட்களுக்குள் அதுவுமு; ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி அல்லது சிலரது கருத்துப்படி உள்ளுராட்சி சபையிலே பிரதிநிதிகள் இல்லாத கட்சி தனித்து நின்று அதுவும் நாடாளுமன்றத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்க முடியாத கட்சி தேர்தல் ஆணையம் முதல் அனைத்து ஊடகங்களாலும் புறக்கணிகப்பட்ட கட்சி இந்தக் கட்சி அரசியலில் வெல்லாது என்று மீண்டும் மீண்டும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற கட்சி தனித்து நின்று 8 வுPத்துக்கு மெல் எடுத்து சாதித்துக் காட்டியுள்ளது. அதுவும் பணம் கொடுக்காமல். அது வளர்ச்சியில்லை என்று கூறுவதும் பாஜக வின் பி ரீம் எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்ணி வைக்கும் என்று மூக்குச்சாத்திரம் கூறுவதும் அந்த கட்சியின் வளர்ச்சியில் வந்த காழ்ப்புணர்ச்சியைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியமு;. காங்கிரஸ்விசிக சில முஸ்லிம் கட்சிகளைத் தவிர பாஜகவுடன் கூட்டணிவைக்காத கட்சி எதுவும் இல்லை. ஏற்கனவே பாஜகவுக்கு எம்எல் ஏ பெற்றுக் கொடுத்த திமுக மீண்டும் பாஜகவுடன் கூட்ணி வைக்காது என யாராவது கூற முடியுமா. இந்த நிலையில் இதுவரையில் யாருடனும் கூட்டணி வைக்காத கட்சியை எதற்காக கரித்துக் கொட்டுகிறீர்கள்.இது யதார்த்தை முடி மறைத்து நாதக வளரவில்லை வளராது. அதனுடைய வாக்கு சதவுPதத்துக்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்பவர்கள் விழுந்த மொத்த வாக்குகளையும் நாதக பெற்ற வாக்குகளையும் வைத்துக் கணித்துப்பார்த்தாலே தெளிவாகப் புரிந்து விடும் . அப்கபடிகத் தெளிவாகக் கணிக்கக் கூடிய ஒரேகட்சி நாம்தமிழர்கட்சி மட்டும்தான். கூட்டணிக்கட்சிகளின் வாக்குசதவுPத்தை எப்படிக்கணித்தாலும் அது 100 சதவீதம் உண்மையான கணிப்பாக இருக்காது.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையன் சார் முற்பிறவியில் நாமக்கல் பக்கம் பிறந்திருக்க வேண்டும், முட்டை முட்டையா அள்ளிக் கொடுக்கின்றார்..............🤣. இது எல்லாம் சும்மா ஒரு பகிடிக்குத் தான், பையன் சார். கிரிக்கெட்டில் லீக்குகளில் நிறைய சம்பாதிக்கலாம் இந்த நாட்களில், நீங்கள் சொல்வது போலவே. 🤣..... இதே மாதிரி தான், சில காலத்தின் முன், மல்யுத்தம், வில்யுத்தம் என்று எந்தப் போட்டிகளுக்கும் எந்த நாட்டுக்கு போனாலும், வீரர்களும் திரும்பி வரவில்லை, கூடப் போனவர்களும் திரும்பி வரவில்லை என்று தேடிக் கொண்டிருந்தனர்.........1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இல்லயெண்டால்.... கப் ஸ்ரீலங்காவுக்குத்தான். 🤣1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இந்தியா வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @goshan_cheக்கு புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 14 2 குமாரசாமி 14 3 தமிழ் சிறி 14 4 பிரபா USA 14 5 ஏராளன் 14 6 ரசோதரன் 14 7 அஹஸ்தியன் 14 8 கந்தப்பு 14 9 எப்போதும் தமிழன் 14 10 நந்தன் 14 11 நீர்வேலியான் 14 12 வீரப் பையன்26 12 13 சுவி 12 14 நிலாமதி 12 15 தியா 12 16 புலவர் 12 17 P.S.பிரபா 12 18 நுணாவிலான் 12 19 வாதவூரான் 12 20 கிருபன் 12 21 வாத்தியார் 12 22 கல்யாணி 12 23 கோஷான் சே 121 point- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1 point👍...... அமித்ஷா உள்துறை அமைச்சராகக் கூடாது என்று சந்திரபாபு நாயுடு ஒரு கோரிக்கை வைத்ததாக சொல்கின்றனர்........1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
https://wsc.icc-cricket.com/games/665dce60fd57681dd755e7ab.html இது இலங்கை அணி விளையாடிய பிட்ச்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்னப்பா கூட்டாளிகள் 1, 2, 3 என அணிவகுத்திருக்கினம்!! Ireland (15.6/20 ov) 96/10 India India chose to field. Current RR: 6.00 • Last 5 ov (RR): 47/3 (9.40)1 point- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1 pointஅதே தான் கோஷான் மேலதிக தகவல்களுக்கு நன்றி இப்போது நாயுடுவும் நித்திஷ்ம் ஆதரவு தருவதாகக் கடிதம் கொடுத்து விட்டார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன மோடியைக் கூட்டணியின் தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்துள்ளார்கள். மோடியை விட்டுப் பிடிக்க நினைக்கின்றார்கள் போலத் தான் தெரிகின்றது.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்ப ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்..🤭 அவர்களிடம் தான் கேட்கவேண்டும்🧐1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) - 2ம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, பிரபா 1)நிழலி - 20 புள்ளிகள் 2)கோஷான் சே - 18 புள்ளிகள் 3)பாலபத்ர ஓனாண்டி - 18 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 18 புள்ளிகள் 5)கிருபன் - 18 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 18 புள்ளிகள் 7)கந்தையா57 - 18 புள்ளிகள் 8)வாத்தியார் - 18 புள்ளிகள் 9)நுணாவிலான் - 18 புள்ளிகள் 10)பிரபா - 18 புள்ளிகள் 11)புலவர்- 16 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 13)சுவி - 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11, 15, 18,19, 22, 25, 26,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.1 point- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1 pointஎன்னை ப்பொறுத்தவரை, காங்கிரஸ் இல்லாத எந்த ஒரு கட்சி ஆட்சி பிடித்தாலும் பரவாயில்லை so long as Rahul ghandi is not PM. மேலும், மோடிதான் சிங்களவனுக்கு ஆப்பு வைக்க சரி. எங்களுக்கில்லாத இலங்கை சிங்களவனுக்கும் இருக்கக்கூடாது.1 point- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1 pointகந்தையா அண்ணை பா ஜ க கடந்த மூன்று தேர்தலிலும் கூட்டணி தான். ஆனாலும் அவர்கள் அந்தக் கூட்டணிக்குள்ளே இருக்கும் மற்றய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டியிட்டதால் (காரணம் தேசியக் கட்சி) அதிக இடங்களில் வென்றார்கள் அவர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் அவர்களுக்கு விழுந்திருக்கும் அவர்களது வாக்கு வாங்கி என ஒன்று உள்ளது அது அவர்களது ஆட்சியைப் பொறுத்துக்க கூடும் குறையும் ஆனாலும் பெரிதான வித்தியாசம் இருக்காது இங்கே சிலர் வாக்கு வங்கியையும் வாக்கு வீதத்தையும் ( கூட்டணியின் போது ).விளங்கிக் கொள்ளவில்லை போல இருக்கின்றது கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும் போது விழும் வாக்குகளை அந்தத் தொகுதியில் போட்டியிடும் கட்சிக்காக வீழ்ந்த வாக்குகளாகவே தேர்தல் ஆணையம் வெளியிடும்1 point- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1 pointஇது இங்குள்ள சில அறிவுஜீவிகளுக்கு புரியுதேயில்லை புலவரே! என்ன செய்ய அவ்வளவுதான் விளக்கம் என்று கடந்து போக வேண்டியதுதான்!!1 point- 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை!
ஆவணங்கள் தரவேற்றும் வழிமுறை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்டவில்லை. எதிர்காலத்தில் இதுபற்றி யோசிக்கலாம்.1 point- சாமி சிறீ பாஞ்
1 pointகடவுளைக் காட்டித் தமிழர்களை மயக்கி வடவர் தங்கள் மொழியை தமிழர்களுடைய கோவில்களில் வளர்த்து வருவதுபோல், என்னை மயக்கமடைய வைத்து இதனைச் செய்ததால் சிகிச்சையின் தாக்கத்தை நான் உணரவில்லை. “செல்வத்துள் செல்வம் அருள்ச் செல்வம்” என்று பொய்யா மொழிப்புலவர் கூறியிருந்தார், ஆனாலும் நிலத்தில் அருள்ச் செல்வத்தையும் தேடிச் சேர்த்த காடையர்கள் பலர் இலங்கையில் இருப்பது கண்டு, அதிலும் அரச ஆட்சி அதிகாரத்திலிருந்து சொந்த மக்களையே கொல்லும் கொடியவர்களிடமிருந்தும் தப்புவதற்காக புலம்பெயர்ந்து வந்தபோதும், கூட இருந்தே குழிபறிக்கும் என் சொந்தங்களான என் நலம்காக்கும் இரத்த நாளங்களில் சில கருனாகூட்டம் போல் குழிபறித்ததால் வந்தநிலை இது. இது யாராலும் முடியாதது.....உயிராபத்து வேதனையிலும் ..உங்கள் உணர்வை பல கோடிமுறை மதிக்கின்றேன்...காலன் ஒருமுறை வந்து நல்ம் விசாரித்துவிட்டுச் சென்று விட்டான்.. இனி அச்சமின்றி வாழுங்கள்... உங்கள் பக்கமே இறைவன் இருப்பான்..வாருங்கள் .. யாழை மீட்டுங்கள் .. அனைவரும் சந்தோசமாக இருப்போம்..1 point- சாமி சிறீ பாஞ்
1 pointமீண்டும் இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. யாழுக்கு வந்தால் பாதி வருத்தம் போய்விடும். டாகடர் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்து நீண்டகாலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் தொடர்ந்து இணைந்து இருங்கள் .1 point- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1 pointஉறவே இதை நீங்கள் முதலே வெளியிட்டு இருக்கலாம் இணையவன் அண்ணாவும், நியாயமும் தேடி மிகவும் களைத்து போனார்கள்.1 point- பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
வரவேற்கிறோம் சகோதரா. அவர்கள் வாழ்ந்ததும் நமக்காக.. இறந்ததும் நமக்காக.. வாழ்ந்தாலும் நமக்காக.. என்ற எண்ணம் எப்போதும் எம்மோடு இருக்க வேண்டும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
1 pointதமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு ஒரு இடமும் கிடைக்காது போலிருக்கே. பன்னீர் செல்வமும், எடப்பாடியும், தினகரனும், சசிகலாவும் பிரிந்து நின்று அ.தி.மு.க. வை குழி தோண்டி புதைத்து விட்டார்கள். ஈழத்தமிழருக்கு செய்த சாபம்தான்…. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறாமல் தடுக்குது.1 point- "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
"சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்" அது முற்றிலும் சரி யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை. அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு இதைப் பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன் அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம் ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப் பயன்படுத்துவது இல்லை. ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான் புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம் நிறைய சொல்ல இருக்கும் ஆனால் குறைவாக பேசுவார்கள். புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது நன்றி உங்கள் கருத்துக்கு "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது. உதாரணமாக, இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911 இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு. ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது. இன்று [படித்த, படிக்காத] எல்லா அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்? இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும் அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம். நன்றி1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 77 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி குறைந்த வெற்றி இலக்கை 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். சிறிலங்கா வெல்லும் எனக் கணித்த @வீரப் பையன்26 க்கும் @வாதவூரான்க்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 8 2 நிலாமதி 8 3 குமாரசாமி 8 4 தமிழ் சிறி 8 5 நுணாவிலான் 8 6 பிரபா USA 8 7 ஏராளன் 8 8 கிருபன் 8 9 ரசோதரன் 8 10 அஹஸ்தியன் 8 11 கந்தப்பு 8 12 எப்போதும் தமிழன் 8 13 நந்தன் 8 14 நீர்வேலியான் 8 15 கல்யாணி 8 16 கோஷான் சே 8 17 வீரப் பையன்26 6 18 சுவி 6 19 தியா 6 20 புலவர் 6 21 P.S.பிரபா 6 22 வாதவூரான் 6 23 வாத்தியார் 61 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
1 point- "தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]"
"தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]" கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரீகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது . அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்யும் அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார். அவ்வாறே யாழிலும் இது அரங்கேறியது. இனப்படுகொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது .ஏன் என்றால் லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். அவ்வாறே யாழ் நூலக எரிப்புக்கு முன்னின்ற இலங்கை அரசின் அரசியல்வாதியும் அல்லது அரசியல்வாதிகளும் ஆகும். அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா.இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற ,மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? . அவ்வாறே நான்சி முர்ரே, ஒரு மேற்கத்திய எழுத்தாளர், "சீருடை அணிந்த காவலர்களும் சாதாரண உடையில் இருந்த குண்டர்களும் சில ஒழுங்கமைக்கப்பட்ட அழிவுச் செயல்களை மேற்கொண்டனர்" என்று எழுதினார். "யாழ்ப்பாணம் பொது நூலகம் உட்பட, அதன் 95,000 தொகுதிகள் மற்றும் விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகள் உட்பட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அவர்கள் தரையில் எரித்தனர் ... இது பற்றி தேசிய செய்தித்தாள்களில் எதுவும் இல்லை, தமிழர்களின் கலாச்சார அடையாளமான நூலகத்தை எரித்தது கூட இல்லை. ஜூன் 2 ஆம் தேதி வரை அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவருவதை அரசாங்கம் தாமதப்படுத்தியது, அந்த நேரத்தில் முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டன." எரிப்பு இரண்டு இரவுகள் தடையின்றி தொடர்ந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையகம் மற்றும் ஈழநாடு நாளிதழின் அலுவலகங்கள் உட்பட யாழ்ப்பாண நகர் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளும் கும்பலால் தீவைக்கப்பட்டன. வர்ஜீனியா லியரி, சர்வதேச நீதிபதிகள் ஆணையம் சார்பில் ஜூலை/ஆகஸ்ட் 1981 இல் "யாழ்ப்பாண பொது நூலகத்தை அழித்த சம்பவம் யாழ் மக்களுக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும்." என்று கூறினார். இனங்களுக்கிடையிலான நீதி மற்றும் சமத்துவத்திற்கான இயக்கம் ஒரு தூதுக்குழுவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய பின்னர் அறிக்கை ஒன்றில் "யாழ்ப்பாண மக்களுக்கு எந்த அழிவுச் செயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று கேட்டால், யாழ்ப்பாண மக்களின் கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் மீதான, இந்த யாழ் பொது நூலகத்தின் மீதான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகத் தான் இருக்கும். இந்த நூலகத்தின், அறிவின், பண்பாட்டின் சின்னத்தின் அழிவு பல ஆண்டுகளுக்கு கசப்பான நினைவுகளை விட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியது. [Nancy Murray, a western author, wrote at the time ''uniformed security men and plainclothes thugs carried out some well organised acts of destruction”. "They burned to the ground certain chosen targets - including the Jaffna Public Library, with its 95,000 volumes and priceless manuscripts…no mention of this appeared in the national newspapers, not even the burning of the library, the symbol of Tamils' cultural identity. The government delayed bringing in emergency rule until 2 June, by which time the key targets had been destroyed." The burning continued unchecked for two nights. Homes and shops across Jaffna town were also set alight by the mob, including the TULF headquarters and the offices of the Eelanadu newspaper. Virginia Leary wrote in Ethnic Conflict and Violence in Sri Lanka - Report of a Mission to Sri Lanka on behalf of the International Commission of Jurists, July/August 1981, that “the destruction of the Jaffna Public Library was the incident, which appeared to cause the most distress to the people of Jaffna." The Movement for Inter-racial Justice and Equality said in a report, after sending a delegation to Jaffna, "If the Delegation were asked which act of destruction had the greatest impact on the people of Jaffna, the answer would be the savage attack on this monument to the learning and culture and the desire for learning and culture of the people of Jaffna... There is no doubt that the destruction of the Library will leave bitter memories behind for many years."]1 point- சாமி சிறீ பாஞ்
1 point- சாமி சிறீ பாஞ்
1 pointவணக்கம் பாஞ்ச். நீண்ட காலத்துக்குப் பின் உங்களைக் காண்பது மிகவும் சந்தோசம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.1 point- சாமி சிறீ பாஞ்
1 point- சாமி சிறீ பாஞ்
1 pointஐயா! உங்களை மீண்டும் யாழ்கள மேடையில் சந்திப்பதில் அலைகடல் போல் மிக்க மகிழ்சி அடைகின்றேன் ஐயா கருத்துக்கள் எழுதாவிட்டாலும் யாழ் களத்தோடு இணைந்திருங்கள். அதுவே எமக்கு பெருமை.1 point - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.