Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    25
    Points
    88812
    Posts
  2. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    12788
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46969
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3125
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/06/24 in all areas

  1. ரெலிபோனுக்கு பக்கத்திலைதான்... இருக்கிறன். 🤣 இந்த நிமிடம் வரை அழைப்பு வரவில்லை. 😂
  2. பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 22 2 பிரபா USA 20 3 ஏராளன் 20 4 ரசோதரன் 20 5 நந்தன் 20 6 கோஷான் சே 20 7 சுவி 18 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாத்தியார் 18 12 எப்போதும் தமிழன் 18 13 வீரப் பையன்26 16 14 நிலாமதி 16 15 புலவர் 16 16 நுணாவிலான் 16 17 வாதவூரான் 16 18 கிருபன் 16 19 அஹஸ்தியன் 16 20 கந்தப்பு 16 21 நீர்வேலியான் 16 22 கல்யாணி 16 23 P.S.பிரபா 14
  3. வாய்ப்பில்லை சார் வாய்ப்பில்லை புலி ப‌துங்குவ‌து பாய‌த் தான் ஹா ஹா🤣😁😂............................................................
  4. 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? - 2 சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, புரட்சிகர தமிழ்த்தேசியன், நிழலி, கிருபன், தமிழ்சிறி, கந்தையா57 , வாத்தியார் ,பிரபா 1)தமிழ்சிறி - 36 புள்ளிகள் 2)கோஷான் சே - 34 புள்ளிகள் 3)நிழலி - 34 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 32 புள்ளிகள் 5)கிருபன் - 32 புள்ளிகள் 6)பிரபா - 32 புள்ளிகள் 7)பாலபத்ர ஓனாண்டி - 30 புள்ளிகள் 8)நுணாவிலான் - 26 புள்ளிகள் 9)கந்தையா57 - 24 புள்ளிகள் 10)வாத்தியார் - 22 புள்ளிகள் 11)சுவி - 20 புள்ளிகள் 12)புலவர்- 20 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 - 11, 14, 15, 18,19, 22, 24, 25, 26,28, 29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 20 கேள்விகளுக்கு (40 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  5. அவசரமாய் வெளிக்கிட்டு கொஞ்ச தூரம் போய்க்கொண்டிருந்த போது என்ரை மனுசி பிள்ளைகளிடம் ஏதோ குசுகுசுத்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. இருந்தாலும் தாய் பிள்ளை பிரச்சனை என எனக்குள் நினைத்தபடி கார் ஓடிக்கொண்டிருக்கும் போது பிழையான திசையில் போய்க்கொண்டிருக்கிறோம் என வழி காட்டியாள் எச்சரித்து திரும்பி போகுமாறு எச்சரிக்க எனது மகள் சொன்னார் அம்மா மொய் பார்சலை மறந்து போய் விட்டு வந்திட்டாவாம் என சொல்லி காரை ஹொட்டலுக்கு விடுங்கோ என்றார். ரெஞ்சன் உச்சியில இடிக்க மறு வார்த்தை பேசாமல் ஹொட்டலுக்கு போய் பார்சலை எடுத்துக்கொண்டு வேர்த்து விறுவிறுக்க கொண்டாட்ட மண்டபத்தை வந்தடைந்தோம். அப்போது 11 மணியிருக்கும் என நினைக்கிறேன். சிறித்தம்பி சொன்ன நேரத்துக்கு முதல் வந்திட்டம் எண்ட மனக்கொழுப்புடன்😂 ஹோலுக்குள் உள்ளே நுழைந்தோம். பெரிய ஆடம்பரம் இல்லாமல் ஹோலை சோடித்து இருந்தார்கள்.நாங்களும் இன்னுமொரு குடும்பமும் ஒரு மேசையை இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டோம். பலகார தட்டும் கோப்பித்தண்ணியும் வர ஒரு பிடி பிடித்து விட்டு ....சிறித்தம்பியர் சொன்ன மாதிரி ரெலிபோனை சட்டைப்பையிலேயே வைத்திருந்தேன். இருந்தாலும் அந்த மேளக்கச்சேரி சத்தத்தில் எதுவுமே கேட்காது என நினைத்து ரெலிபோனை மேசையிலையே வைத்திருந்தேன். உண்மையில் நான் பெண்கள் கைப்பை கொண்டு திரிவது போல் ரெலிபோனை கையில் தூக்கிக்கொண்டு திரிவதில்லை. ஆனால் அன்றைய தினம் அது நடந்துவிட்டது.😎 பட உபயம் சிறித்தம்பி.
  6. குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில் 🚗 30 நிமிடத்தில் செல்லக் கூடிய தொலைவில்தான் இருந்தது நல்லதாக போய் விட்டது. அவர்... நேற்று வந்து, இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு நாளை காலை புறப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தமையால்... காலம் குறுகிய நேரம் என்பதாலும், எப்படியும் இன்று சந்திப்பது என்று முடிவெடுத்து... அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளமாக செய்யலாம் என சொன்னார். குமாரசாமி அண்ணை வசிப்பது ஜேர்மனியின் ஒரு தொங்கலில் என்றால்... நாம் வசிப்பது மற்ற தொங்கல். இடையில் 550 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் வசிக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் மீண்டும் எப்போ கிடைக்கும் என தெரியாது என்ற படியால்... இருவரும் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். 🙂 இனி... எமது வீட்டிற்கு அண்மையில் வசிக்கும் @Paanch அண்ணையுடன் தொடர்பு கொண்டு, குமாரசாமி அண்ணையை சந்திக்க இன்று மதியம் நேரம் இருக்குமா என கேட்ட போது... அவரும் முழு உற்சாகத்துடன் தானும் வருவதாக தெரிவித்தார்🥰. பின்... @Kavi arunasalam த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இன்று குடும்பத்துடன் ஐரோப்பிய உல்லாசப் பயணம் செய்ய புறப்பட்டுக் கொண்டு இருப்பதால்.. கலந்து கொள்ள முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார். தொடரும்.... ✍️
  7. "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!" இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் இதைப்பற்றி என்ன கூறினார் என பார்ப்போமா ? குறள் 403: "கல்லா தவரும் நனி நல்லர் கற்றார் முன் சொல்லா திருக்கப் பெறின்." கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். கற்றவர்கள் முன் கல்லாதவர்கள் கற்கும் முனைப்புடன் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் முன் தனக்கு தெரிந்த அரை குறையானவற்றை பயனில்லாமல் பேசக் கூடாது என்பதே இதன் பொருளாகும் என நாம் கருதலாம். இதனால் தான் பாரதியார் "கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ" என்று பாடினாரோ? பொதுவாக "புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்; ,முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்." ஆகவே புத்திசாலிகள் மௌனமாக இருக்கக் கூடாது என்பது வெளிப்படையே! அது போலவே "பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது." ஆகவே முட்டாள்கள் மௌனமாய் இருப்பது நல்லது!! இப்ப நான் படித்த ஒரு கதையை கீழே தருகிறேன். மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான். ஒருநாள் சபையில் புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார். அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், "இது மதியற்ற செயல். உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான். சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து, "மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே வெளியேறு" என சீறி விழுந்தாள். ஆனால் அவளைத் தடுத்த மன்னர், "அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில் பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்" என்றார். அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. ஆஹா..இந்த திரியை இன்று யாழ் வந்ததால் காண நேர்ந்தது. 😍 யாழ்களம் வந்ததாக பாஞ் சொல்லியிருந்தார். மூன்று யாழ் உறவுகளும் சந்திப்பு வைபவம் மிக அருமை. மட்டற்ற மகிழ்ச்சி. நான் தமிழ் நாட்டை சேர்ந்திருந்தாலும், ஈழ உறவுகளின் நேசத்தையும், பாசத்தையும் அவர்களுடன் பழகியதில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணன் பாஞ் அவர்களை இருமுறை நேரில் சந்தித்து பிரிந்தபோது கண் கலங்கியது உண்மை. மூவரின் சந்திப்பை பற்றி படிக்க, படிக்க யாழை சிலகாலம் மறந்துவிட்டதை எண்ணி வருந்துகிறேன். இந்த பாசம், நேசம் என்றும் வாழட்டும்..🙏
  9. அண்ணை, வாழ்த்துக்கள். கோசான்ஐ தேவையில்லாமல் பகைத்து விட்டோமோ? எனக்கென்னவோ பாகிஸ்தான்காரன் காசு வாங்கிக்கொண்டு மேட்ச் fix பண்ணிவிட்டாங்கள் போல இருக்கு. ஒரு சிறிய அணியிடம் தோற்றுள்ளார்கள் இதைவிட ஆச்சரியம் மூன்று பேர் இங்கேயே படுத்திருக்கிறார்கள்
  10. அப்படி எல்லாம் இடையில் விட்டு விட்டு போக முடியாது, பையன் சார். நீங்க காண்ட்ராக்டை திரும்பவும் வாசித்துப் பாருங்க. நீங்க எல்லா மாட்சுகளுக்கும் முடிவு சொல்ல வேண்டும் என்று நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம். நீங்கள் இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு எது எதுவென்றே தெரியாது.......👍 நேற்று பபுவா நியுகினியா, பெயரே விஜய் டிவி தலைப்பு மாதிரி இருக்குது......., போட்டிருந்த யூனிபார்ம் சூப்பர். நல்ல கலரும், டிசைனும்.......நீங்க தான் விளையாட்டைப் பார்த்து சொல்ல வேண்டும்........🤣.
  11. எங்களை வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்!!🙏🙏 என்னுடன் அமெரிக்கப் படைத்தளத்தில் வேலைபார்த்த அமெரிக்க நண்பர் ஒருவர் எங்கள் 25வது திருமணநாளில் வாழ்த்தியபோது 25வருடங்களாக ஒரு மனைவியுடனா???. ஆச்சரியப்பட்டார், இன்று அவர் 53என்று அறிந்தால் நிச்சயம் மூர்ச்சையடைந்திருப்பார்.😳😂
  12. நல்வாழ்த்து நான் சொல்லுவேன்..........! 😍
  13. 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? - 8% க்கு மேல் 8.19% வாக்குகள் கிடைத்தது. சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன் , சுவி, ஈழப்பிரியன், தமிழ்சிறி, நுணாவிலான், புலவர் 1)தமிழ்சிறி - 32 புள்ளிகள் 2)கோஷான் சே - 30 புள்ளிகள் 3)நிழலி - 30 புள்ளிகள் 4)பாலபத்ர ஓனாண்டி - 28 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 28 புள்ளிகள் 6)கிருபன் - 28 புள்ளிகள் 7)பிரபா - 28 புள்ளிகள் 8)நுணாவிலான் - 26 புள்ளிகள் 9)கந்தையா57 - 22 புள்ளிகள் 11)சுவி - 20 புள்ளிகள் 11)வாத்தியார் - 20 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள் 13)புலவர்- 18 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 6 - 11, 14, 15, 18,19, 22, 24, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 18 கேள்விகளுக்கு (36 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  14. 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 புலவர், ஈழப்பிரியன், பாலபத்ர ஓனாண்டிதவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)கோஷான் சே - 22 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 22 புள்ளிகள் 3)நிழலி - 22 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 22 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 20 புள்ளிகள் 6)கிருபன் - 20 புள்ளிகள் 7)கந்தையா57 - 20 புள்ளிகள் 8)வாத்தியார் - 20 புள்ளிகள் 9)நுணாவிலான் - 20 புள்ளிகள் 10)பிரபா - 20 புள்ளிகள் 11)புலவர்- 16 புள்ளிகள் 12)சுவி - 14 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11, 14, 15, 18,19, 22, 25, 26,29,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  15. எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இந்தியா வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @goshan_cheக்கு புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 14 2 குமாரசாமி 14 3 தமிழ் சிறி 14 4 பிரபா USA 14 5 ஏராளன் 14 6 ரசோதரன் 14 7 அஹஸ்தியன் 14 8 கந்தப்பு 14 9 எப்போதும் தமிழன் 14 10 நந்தன் 14 11 நீர்வேலியான் 14 12 வீரப் பையன்26 12 13 சுவி 12 14 நிலாமதி 12 15 தியா 12 16 புலவர் 12 17 P.S.பிரபா 12 18 நுணாவிலான் 12 19 வாதவூரான் 12 20 கிருபன் 12 21 வாத்தியார் 12 22 கல்யாணி 12 23 கோஷான் சே 12
  16. மிகவும் அரிய இனிமையான சந்திப்பு. நான் சிறியின் மகளின் கலியான வீட்டுக்கு இந்தமாதம் Germnay போகும்போது குசா அண்ணாவையும் பாஞ் அண்ணாவையும் சந்திக்கலாம் என்று இருந்தேன். பாஞ் அண்ணா வந்திருந்தார் குசா அண்ணாவுக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லை. யாழில் கலியான வீடு மற்றும் எனது பார்வையில் ஜேர்மன் மற்றும் யூரோப் தமிழ் மக்கள் பற்றி இந்தக்கிழமை முடிவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
  17. காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில் சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்லை. தமிழ் ஆட்களின் நேரத்தைப் பற்றி 😂 நான் நன்கு அறிந்து இருந்ததால்.... பத்தரை மணிக்கே, பாஞ்ச் அண்ணைக்கு தொலை பேசி எடுக்க, அவர் தனது மகளுடன் எனக்கு முன்னால் தாங்கள் வந்து விட்டோம் என்று காரில் கைகாட்டிய படி கடந்து சென்றார். 🙂 நான் அவர்களின் நேரம் தவறாமையை தவறாக எடை போட்டு விட்டேனே என்று மனதிற்குள் சங்கடப் பட்டுக் கொண்டு... பாஞ்ச் அண்ணையும் நானும் ஒரு காரில் குமாரசாமி அண்ணையை சந்திக்க அதிவேக நெடுஞ்சாலையில் பழைய தமிழ்ப் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணித்தோம். எனக்கு வாகனம் ஓடுவதை விட.... அருகில் இருந்து பயணிப்பதுதான் பிடித்தமானது என்பதால்... வாகனம் ஓடும் பொறுப்பை பாஞ்ச் அண்ணையிடமே கொடுத்து விட்டேன். நாங்கள் எதிர்பார்த்த நேரம் 11 மணிக்கு, மண்டபத்திற்கு சென்று வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றால்.... தவில், நாதஸ்வர கச்சேரி இசை நடந்து கொண்டிருந்தது. குமாரசாமி அண்ணையை... முன், பின் கண்டிராததால் அவரை எப்படி கண்டு பிடிப்பது என்ற யோசனையுடன் நானும், பாஞ்ச் அண்ணையும் போற, வாற ஆக்களைப் பார்த்து... இவர் குமாரசாமியாக இருப்பாரோ... அவர் குமாரசாமியாக இருப்பாரோ என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு இருந்தோம். 😂 🤣 குமாரசாமியார் சுழியன். எங்களுக்குத்தான்... குமாரசாமியாரை தெரியாதே தவிர, அவருக்கு எங்களை நன்றாக தெரிந்தே இருந்தது🙂. பட்டு வேட்டி சால்வையுடன்... தமிழ்ப் பழமாக எங்கள் முன் ஒருவர் சிரித்துக் கொண்டு வந்து கதைக்கும் போதும் பாஞ்ச் அண்ணை குமாரசாமியை தேடுகின்றோம், அவர் எங்கு இருக்கின்றார் என்று சொல்ல முடியுமா என்று கேட்க, வந்தவர் வாங்கோ... இந்த மேசையில் இருந்து கதைப்போம் என்று, அவரும் பிடி கொடுக்காமல் எம்மை அழைத்துச் சென்றார். குமாரசாமியாரின் குரல் எனக்கு பரிச்சயமானது என்பதால்... இவர்தான், நாம் தேடிய ஆள் என்று கண்டு பிடித்து... கட்டிப் பிடித்து... கொஞ்சிய கையுடன் பொறுங்கோ என்று... கோப்பியும், தட்டு நிறைய பலகாரமும் கொண்டு வந்து தந்தார். அந்த சுப நிகழ்விற்கு குமாரசாமி அண்ணையை நாம் தேடிப் போய் இருந்தாலும்.... பாஞ்ச் அண்ணை முன்பு ஜேர்மன் விளையாட்டுக் கழகத் தலைவராக இருந்த போது... சிறுவர்களாக விளையாடிய பலர் இளைஞர்களாக பாஞ்ச் அண்ணையிடம் வந்து தமது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். என்னுடன் முன்பு வேலை செய்த பலரையும் அந்த நிகழ்வில் 25 வருடங்களுக்கு பின்பு கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 🙂 யாழ். களத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித் திறமையை பற்றி நாம் நிறைய கதைத்தோம். சிலரின் அபரிதமான ஆற்றல்கள் உண்மையிலேயே வியக்க வைத்தது. அந்த வகையில்... யாழ்.களத்தின் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றுதலுக்கு உரிய திறமைசாலிகள் என்பதை நாம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது சிறப்பு. 👍 முதல் முறை சந்தித்த சந்திப்பு என்ற போதும்... உடன் பிறந்த சகோதரன் ஒருவரை கண்ட மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்தது. இப்படியான நல் உள்ளங்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த யாழ்.களத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம். ❤️
  18. "காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை "காலம் மாறினால் அன்பு மாறுமா? கோலம் கலைந்தால் அன்பு போகுமா? ஓலம் எழுப்பினால் பிணம் எழும்புமா? நிலம் வறண்டால் பயிர் துளிர்க்குமா?" நீங்கள் ஒருவருடன் உண்மையான அன்பு அல்லது காதல் வசப்படும் போது, அந்த அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையுடன், வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் ஒன்றாக பயணிப்பதுடன், அதில் பெரும் மகிழ்வையும் கண்டு, ஒருவருக்கு ஒருவர் கொண்ட அன்பு முழுமையாக வாழ்வதை உணர்வீர்கள்! சொந்த நாட்டை விட்டு வெளிநாடு போனாலும், மாற்று கலாச்சாரத்தின் சில தாக்கங்கள் உங்களை வசப்படுத்தினாலும் அந்த அன்பு, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு தைரியம், வலிமை மற்றும் மகிழ்ச்சியைத் தருவதுடன், 'காலம் கடந்தும் நாடு கடந்தும் அன்பு வாழும்' என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கும்! அது ஒருவர் இறந்தாலும் கட்டாயம் மற்றவரிடத்தில் அவர்பால் கொண்ட அன்பு தொடரும்! ஆனால் இன்னும் ஒன்றையும் நான் சொல்லவேண்டும், இரு காதலர்கள், தம்பதியர்கள் எண்பது, தொண்ணூறு வயது மட்டும் பிரியாமல் ஒன்றாய் வாழ்கிறார்கள் என்பது 'காலம் கடந்தும் அன்பு வாழும்' என்று பொருளல்ல! அவர்கள் மற்றவர்கள் பார்ப்பதற்காக வெளியில் அன்பாகக் காட்டிக் கொண்டே, உள்ளே வெதும்பும் உறவுகளாகவோ அல்லது சமூகம் மற்றும் மதத்தின் கட்டுப்பாட்டின் காரணமாக பிரிந்து செல்லத் தயாராக இல்லாதவர்களாகவோ இருக்கலாம்! நீங்க உண்மையான காதல் அல்லது அன்பு ஒன்று இருக்கு என்று நம்புகிறீர்களா? கண்டதும் காதல் என்பது உண்மையா? காதல் அல்லது அன்பு என்றென்றும் நீடிக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இந்த மூன்று கேள்வியிலும் தான் உங்க வாழ்க்கைகூட தங்கியுள்ளது. சங்கத் தலைவி ஒருவள் "மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய, காமம் கலந்த காதல் உண்டு எனின், நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;" என 'அப்படிப் பட்ட மலை நாட்டின் தலைவன் அவன். அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு ‘காமம் கலந்த காதல்’ என்றால் மிகவும் நல்லது. அதனை நீ தேடித் தருவ தென்றால் அவனிடம் செல்லும் படிக் கூறு' என்று கூறுகிறாள். அதாவது "வெறும் காமம் என்றால், தயவு செய்து வேண்டாம் என்கிறாள். அதாவது, காதல் மிகுந்த காமக் கூட்டம் (புணர்ச்சி) உளதாயின் அது மிக நன்றாகும், நீடிக்கும் என்கிறாள்! இன்னும் ஒருவனோ, தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியில் தலைவியிடம் "யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர். யானும் நீயும் எவ்வழி அறிதும், செம்புலப் பெயல்நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’ என்கிறான். இந்த இரண்டிலும் உண்மை உண்டு. அதை அனுபவித்தவன், அனுபவித்துக் கொண்டு இருப்பவன் நான்! எம் சமூகப் பண்பாடு, பழக்கவழக்கங்கள், நாம் இன்று வாழும் இடத்தில் சூழ உள்ள மற்ற பெரும்பான்மையான மனிதர்கள், மற்றும் இன்றைய நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் என எத்தனையோ எம்மை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கும். ஆகவே இது காதலையும் சிலவேளை சோதனைக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. இவை எல்லாம் தாண்டியது தான் உண்மையான, மனங்களிளும் ஆன்மாக்களிளும் இணைவாகிய காதல் / அன்பு! முதிர்ந்து காலம் கடந்தாலும் மூச்சில் நின்று வாழும் காதல் / அன்பு அதுதான்! இன்று 14/02/2024, அன்பு கொண்டோர் தினம். நான் இன்று நேரத்துடன் எழும்பிவிட்டேன். மற்ற நாள்களை விட இது ஒரு சிறப்பு நாள். எதோ காதலர் தினம் [valentine's day] என்பதால் நான் சொல்லவில்லை. எனக்கு அதில் அக்கறையும் இல்லை. ராசாத்தி, என் மூன்று பிள்ளைகளின் தாய், எனக்காக காத்திருக்கிறாள். வெளிய கொஞ்சம் பனி பொழிகிறது. எங்கும் பால் போல வெள்ளை. முட்டுக்கு கொஞ்சம் கீழே வரை இருக்கும் என் புதை மிதியடிமூடு காலணியை [boots] காலில் மாட்டிக்கொண்டு, குளிரை தாங்கும் உடைகளையும் அணிந்து கொண்டு, வழுக்கி விழக் கூடாது என்று நான் மெல்ல மெல்ல அடிவைச்சு பேருந்து தரிப்புக்கு போனேன். இந்த வயதில் சறுக்கி தவறி விழுந்தால் அவ்வளவும் தான். ஒவ்வொரு அடி வைக்கும் பொழுதும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னைய நினைவுதான் மனதில் ஊஞ்சல் ஆடியது. திங்கள் கிழமை 14/02/1983, ஆம் நாள் அன்று நான் முதல் முதல், படிப்பு முடித்தபின், அரசநிறுவனம் ஒன்றில் கொழும்பில் வேலை ஆரம்பிக்கிறேன். நான் நேற்றுத்தான் கொழும்பு வந்து தற்காலிகமாக ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளேன். இன்று லேசான தூறல். தார் வீதி வழுக்கும் என்பதால், மெல்ல மெல்லமாக பார்த்து நடந்து அருகில் இருந்த பேருந்து தரிப்பு நிலையம் போனேன். அங்கு வேறு சிலரும் காத்து இருந்தார்கள். அப்ப தான் அவசரம் அவசரமாக அங்கு கொஞ்சம் தலை நனைந்தபடி ஓடிவந்த அவள், கைக்குட்டையால், முகம் முழுவதையும் துடைத்தாள். முகம் துடைத்த ஈரத்தில் பளபளத்தன. ஒரு சிறு கைக் கண்ணாடி ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து முகத்தை பார்த்தாள், அவளுக்கு அது சந்தோசமாக இருந்தது போலும். அவள் முகத்தில் ஒரு புன்னகை தொற்றியது. நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அதை எப்படியோ கவனித்த அவள், தன்னை சமாளித்தவாறு, மறுபக்கம் பார்க்கத் தொடங்கினாள். இதற்கு இடையில் என் பேருந்து வர, நான் அதில் ஏறி, இருக்கையில் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம் அவளும் அதே இருக்கையில் அமர்ந்தாள். நான் ஹாய் என்று அவளிடம் கூறி, நான் கொழும்பு புதிது, மட்டக்குளி, காக்கை தீவில் உள்ள கடற்தொழில் அமைச்சுக்கு போகவேண்டும், அது வரும் பொழுது சொல்லுகிறீர்களா என்று கேட்டேன். அவள் என்னை மேலும் கீழும் பார்த்தாள், நீங்கள் தானா புதிதாக வரும் பொறியியலாளர் என்று எடுத்தவுடன் கேட்டாள். என்னைத் தூக்கிவாரி போட்டது. 'ஆமாம்', ஆனால் நீங்க யார் என்று கேட்டேன். அவள் சொல்லவில்லை, ஆனால் பேருந்து நின்றதும், இங்குதான் இறங்கவேண்டும் வாங்க சார் என்றாள். இன்று காதலர் தினம் என ஞாபகத்துக்கு வர, 'ஹாப்பி வேலன்டைன் நாள்' என்று சொல்லிவிட்டு முகத்தை பார்த்தேன். புதிதாக தாமரை பூ பூத்ததுபோல அவள் முகம் மலர்ந்து இருந்தது. 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்'. என என் உள்ளத்தில் என்னை அறியாமலே அவள் நிறைந்துவிட்டாள். என்றாலும் அவள் என்னை விரும்புகிறாளா என்று எனக்குத் தெரியா ? அவள் திருப்பி சந்தோசமான வேலன்டைன் நாள் சொல்லவே இல்லை, அது தான் என் மனதை அரித்துக்கொண்டு இருந்தது. அவள் அங்கே தட்டச்சாளர் ஆக இருந்தாள். நான் அன்று முழுவதும் வேலையை பாரம் எடுப்பதிலும், மற்றும் தேவையான அறிமுகங்களிலும் போய்விட்டது. அதனால் அவளை மீண்டும் அங்கே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்றும் என் உயர் அதிகாரிகளுடன் கதைத்து, அன்றைய வேலையை முடித்து வெளியேவர அரைமணித்தியாலம் சுணங்கியும் விட்டது. நான் அவசரம் அவசரமாக பேருந்து நிலையம் வந்தேன். அவள் இன்னும் அங்கு நின்றாள். 'பஸ் வரவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் 'ஹாப்பி காதலர் தினம்' என்றாள். இருவரும் ஒன்றாக அமர்ந்து வீடு திரும்பினோம். ஒரே அமைதி, கண்கள் மட்டுமே பேசின! அன்று இணைந்த இரு இதயங்களும் அதன் பின் பிரியவே இல்லை. அந்த நாள் தான் இன்று. அதுதான் இது ஒரு சிறப்பு நாளாக இருக்கிறது. அவ்வளவுதான்! ரோசா மலர்கொத்து ஒன்று என் கையில் இருந்தது. அதை கவனாக பிடித்துக்கொண்டே பஸ்சில் ஏறினேன். இது முதல் தடவை இல்லை முன்பும் பல முக்கிய நாட்களில் போய் உள்ளேன். வெள்ளை மேல் சட்டை மற்றும் கருப்பு கால்சட்டை அணிந்தும் இருந்தேன். அது அவளுக்கு பிடித்த நிறம். என்றாலும் ஜம்பர், ஜாக்கெட் மற்றும் ஸ்னோ பேண்ட் [jumper, jacket and snow pant] போட்டு இருப்பதால், அது அவளுக்கு தெரியப் போவதில்லை. இது ஒரு மரியாதை மட்டுமே! என்னை அந்த பஸ்சில் பார்ப்பவர்கள் தங்களுக்கும் எதோ கதைப்பது தெரிகிறது. எனக்கு பக்கத்தில் இருந்த இளம் பெண் ஒருவள் ஆங்கிலத்தில் ' மாமி எப்படி? ஏதாவது சுகயீனமாய் வைத்திய சாலையில் இருக்கிறாரா' என்று கருணையுடன் விசாரித்து, 'ஹாப்பி வேலன்டைன்' என்று வாழ்த்தும் கூறினார். எனக்கு பேத்தியின் ஞாபகம் தான் வந்தது, ஆனால், அவள் இன்னும் பாடசாலை போகாத சிறு பிள்ளை. என் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் விழுந்தன. வாய் பேச மறுத்துவிட்டது. அந்த இளம் பெண் என்னையே பார்த்துக் கொண்டு 'நான் உங்களை காயப்படுத்தி இருந்தால், வருந்துகிறேன்' என்றாள். 'இல்லை, நீ என் பேத்தி மாதிரி' என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டேன்! 1983 ஜூலை 24 இரவு, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக காடையர்களாலும் அரசின் சில தலைவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட கலவரம் அடங்க ஏழு நாட்கள் சென்றது. முக்கியமாக சிங்களக் காடையர் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தனர். இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது, 150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. இவை எல்லாவற்றையும் விட , அவளின் தொடர்புகூட அறுந்துவிட்டது. அன்று கைத்தொலைபேசி இலங்கையில் இல்லாத காலம். போய் பார்க்கக்கூடிய சூழ்நிலையும் இல்லை. என்றாலும் அவள் கொழும்பில் பிறந்து வளர்ந்தவள். பல சிங்கள நண்பர்களும் அவள் குடும்பத்துக்கு உண்டு. எனவே பெரிதாக கவலைப்படத் தேவை இல்லை என்றாலும், மனதில் ஒரு வேதனை வதைத்துக்கொண்டே இருந்தது. பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது குறிப்பிடத்தக்கது. கலவரங்களுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, 1983 ஜூலை 11 இல் இலண்டன் 'டெய்லி டெலிகிராப்' பத்திரிகைக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தன அளித்த ஒரு நேர்காணலில், ஜெயவர்தன இவ்வாறு கூறினார்: "யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" இது ஒன்றே இந்த கலவரத்தின் நோக்கத்தையும் கொடுமையையும் எடுத்துக்காட்டும்! நான் இந்தியா அரசாங்கத்தின் சரக்கு கப்பல் மூலம் , மற்ற நூற்றுக்கணக்கான உள்நாட்டு தமிழ் அகதிகளுடன் யாழ்ப்பாணம் சென்றேன். ஏறத்தாழ ஆறுமாதம் வேலைக்கு திரும்பவில்லை. அவளுடன் தொடர்புகளும் நின்றுவிட்டது, என்றாலும் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் வாழ்ந்து கொண்டே இருந்தது. இதற்கிடையில் என் அண்ணாவின் உதவியுடன் கனடா போகும் வாய்ப்பு கிடைத்தது. எனவே ஆறு மாதத்தின் பின் கொழும்பு , திரும்பி, என் ராஜினாமா கடிதம் கொடுக்க வேலைத்தளம் போனேன், கடிதத்தை விட அவள் அங்கு இருக்கிறாளா இல்லையா என்பதை சரிபார்ப்பதே எனக்கு முக்கியமாக இருந்தது. என்னைக் கண்டதும், அவள் ஓடிவந்து, வேலைத்தளம் என்பதையும் மறந்து, என்னை அணைத்து ஆனந்த கண்ணீர் சிந்தினாள். மற்றவர்களும் ஒருவர் ஒருவராக, அணைத்து நலம் விசாரித்தனர். ஏன் அவசரப் படுகிறீர்கள், ராஜினாமா வேண்டாம் என்றும் கூறினர். எனினும் நான் அண்ணா கூப்பிடுவதை கூறி, ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். அன்று மாலையே அவளின் வீட்டிற்கும் சென்று, நான் கனடா போய் வேலை எடுத்து, ஓரளவு நிரந்தரமானதும் உங்க மகளை, என் துணைவியாக அங்கு கூப்பிட உள்ளேன் என்பதை தெரியப்படுத்தினேன். அப்படியே அவளும் 1985, அக்டோபர் 22 அங்கு வந்தாள். ஆனால் நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறு? நான் அவளுடன் கதைத்த அந்த கடைசி நாளை நினைத்தேன். வைத்தியர்கள் கைவிரித்துவிட்டார்கள். அது வெள்ளிக்கிழமை ஜூன் 8, 2007 அதிகாலை நாலு மணி இருக்கும். நான் அவளின் கட்டிலில் இருந்து கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன், மகன் அதுவரை அங்கு நின்றவர், கொஞ்சம் வெளியே போய்விட்டார். இரண்டு மகளும். பல்கலைக்கழக விடுதியில், அவர்கள் விடிந்த பின்புதான் தொடர்வண்டி எடுத்து வருவார்கள். அந்த நேரம் திடீரென என் மடியில் சாய்ந்தவள், 'அன்பே நான் இனி சாகிறேன்' - அது தான் அவள் கதைத்த கடைசி வார்த்தை. இன்னும் என் நெஞ்சை உருக்கும் சோக வார்த்தை! நான் மலர்க்கொத்தை இறுக்கமாக பிடித்தபடி, அந்த பனி தூறலிலும், படலையை திறந்து உள்ளே போனேன். அவளுக்கு இந்த காதலர் தினத்தில் மகிழ்வாக மலர் கொத்துடன் அன்பு முத்தமும் பரிமாறியது நெஞ்சை விட்டு அகலவில்லை. என்னில் ஒரு தடுமாற்றம் தானாக வந்தது, பனியுடன் குளிர் காற்றும் கொஞ்சம் கடுமையாக வீச தொடங்கி விட்டது. என் கை சரியாக விறைத்துக் கொண்டு வந்தது, பூக்கொத்து கையில் இருந்து நழுவியது, ஆனால் கடும் காற்று அதை அவளின் உடல் மேலே போட்டது. அவள் எழுந்து, அந்த பூக்கொத்தை கையில் எடுத்து நுகர்ந்து பார்த்தாள், அவள் முகம் கண்டு அந்த ரோசாக்கள் தலை குனிந்து காற்றுடன் பறந்து சென்றன. நான் சிலநிமிடம் அங்கு இருந்துவிட்டு 'மீண்டும் வருகிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்! "காலம் கடந்தும் காதல் வாழும்" "ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? எந்தை அவள்- தன் ஒளி அணைத்துவிட்டாள் முந்தை நாளில்- கொஞ்சி கூடி குலாவினாள் பந்தை அடித்து-சேயுடன் ஆனந்தக் கூத்தாடினாள்" "சிந்தை ஓடவில்லை?- என் மனம் ஆறவில்லை? எந்தை அவள்-கண் மூடி உறங்கிவிட்டாள் நிந்தை பேசாள்- நினைவிலும் கெடுதல் செய்யாள் விந்தை புரிந்தாள்-எந்நாளும் உள்ளம் கவர்ந்தாள்" "மந்தை கூட்டம் போல் நாம் இருந்தோம்! தந்தை தாயாக சேர்ந்து நாம் இருந்தோம்! இந்தை பிள்ளை இன்னும் கண்ணீர் துளியில் கந்தை கொண்டு கண் துடைக்க வாரயோ?" "குந்தை அண்டி அவள் ஒய்யாரமாய் இருப்பாள் விந்தை காட்டி சேயுடன் ஒன்றி இருப்பாள் சிந்தை குளிரும் அவள் சிங்கார சிரிப்பில் எந்தை அவள் வாய் மூடி உறங்கிவிட்டாள்" "தீந்தை விழியால் தினம் காதல் பேசியவள் சாந்தை பூசி சந்தன பெட்டிக்குள் போயிற்றாள் வேந்தைக்கும் ஏழைக்கும் அவள் ஒரே பார்வை குழந்தைக்கும் குஞ்சுக்கும் அவள் ஒரே அன்பு" "உந்தை வழியில் -தினம் கடவுள் வேண்டினாய் விந்தை உலகமடா- இன்று நீயே கடவுள்? எந்தையே என்றன்- குலப் பெருஞ் சுடரே! மடந்தையே என்று -நான் உன்னை காண்பேன்??" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. இன்று 53´வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு, உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். 🙏
  20. இப்ப தானே தொடக்கம் போகப் போக மேல கீழ போக ஆயத்தமாக இருக்க வேண்டும். நேற்று தான் பெரிய ஜாம்பவான்களை சிறிய அணி தோற்கடிச்சிடும் என்று சொன்ன மாதிரி இருந்தது. கையோட கம்மாரிஸ். குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து சனிக்கிழமை குடியுங்கோ.
  21. உவர் @ஈழப்பிரியன் Texas க்கு கிட்ட தான் இருக்கிறார். எப்பிடி அமெரிக்கா வெல்லும் என்று கணித்தார்🤪 எனக்கென்னவோ உவர்தான் உள்ளுர் சூதாட்ட தரகரோ என்று சந்தேகமாய் இருக்குது🤣
  22. ல‌சித் ம‌லிங்கா இந்த‌ த‌மிழ் சிறுவ‌னுக்கு ப‌யிற்ச்சி அளித்தால் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு இந்த‌ த‌மிழ் சிறுவ‌னுக்கு ந‌ல்லா யோக்க‌ர் ப‌ந்து மிக‌வும் வேக‌மாக‌ போடுகிறார்........................................................
  23. 👍..... நேர்மை எல்லாவற்றிலும் இருக்க வேண்டும், ஆனால் அதை எங்கேயோ கைமாறி வைத்து விட்டோம் என்று உலகமே அதை இருட்டில் தேடிக் கொண்டிருக்கின்றது போல ........
  24. ச‌லிம் ம‌லிக் ஈடு ப‌ட‌ வில்லை 2010க‌ளில் முக‌ம‌ட் அசாருதீன் ஜ‌டேயா இவ‌ர்க‌ள் 2000ம் ஆண்டு சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டு அணியில் இருந்து நிர‌ந்த‌ர‌மாய் நீக்க‌ ப‌ட்ட‌வை அசாருதீன் இப்போது வ‌ட‌ நாட்டில் பீஜேப்பி க‌ட்சியில் இருக்கிறார் மோடிக்கு பிர‌ச்சார‌ம் செய்த‌வ‌ர்........................................
  25. அறப் படித்தால் கூழ் பானைக்குள் விழுவார்கள் என்றும் சொல்வார்கள்.
  26. ஒரு ம‌ணித்தியால‌த்துக்கு முத‌ல் புதிய‌ த‌லைமுறை வெளியிட்ட‌ இர‌ண்டு நிமிட‌ காணொளி பாருங்கோ நாம் த‌மிழ‌ர் 8ச‌த‌ வீத‌த்தை தாண்டி விட்ட‌து க‌ந்த‌ப்பு அண்ணா....................................................................
  27. 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) - 3ம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, புரட்சிகர தமிழ்த்தேசியன், நிழலி, கிருபன்,பிரபா,தமிழ்சிறி, நுணாவிலான் 1)கோஷான் சே - 30 புள்ளிகள் 2)நிழலி - 30 புள்ளிகள் 3)தமிழ்சிறி - 30 புள்ளிகள் 4)கிருபன் - 28 புள்ளிகள் 5)பிரபா - 28 புள்ளிகள் 6)பாலபத்ர ஓனாண்டி - 26 புள்ளிகள் 7)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 26 புள்ளிகள் 8)நுணாவிலான் - 24 புள்ளிகள் 9)கந்தையா57 - 22 புள்ளிகள் 10)வாத்தியார் - 20 புள்ளிகள் 11)சுவி - 18 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 16 புள்ளிகள் 13)புலவர்- 16 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 6 - 11, 14, 15, 18,19, 22, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 17 கேள்விகளுக்கு (34 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  28. 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை. சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, நிழலி, தமிழ்சிறி,கிருபன்,பிரபா , சுவி 1)கோஷான் சே - 24 புள்ளிகள் 2)நிழலி - 24 புள்ளிகள் 3)தமிழ்சிறி - 24 புள்ளிகள் 4)பாலபத்ர ஓனாண்டி - 22 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 22 புள்ளிகள் 6)கிருபன் - 22 புள்ளிகள் 7)பிரபா - 22 புள்ளிகள் 8)கந்தையா57 - 20 புள்ளிகள் 9)வாத்தியார் - 20 புள்ளிகள் 10)நுணாவிலான் - 20 புள்ளிகள் 11)சுவி - 16 புள்ளிகள் 12)புலவர்- 16 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11, 14, 15, 18,19, 22, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  29. கூட்டணி வைத்தால் சீமான் காணாமல் போய்விடுவார் 😂 8% தேய்த்து 3% ஆகிவிடும் வெல்லவிட்டாலும் காரியம் இல்லை அவர் தனித்து தான் போட்டி இடுவார் அப்ப அவரது வளர்ச்சி தெரியும் கூட்டணியில் சேர்ந்தால். அவரது வாக்கு வீதம் தெரியாது சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவிட்டாலும். கூட கூட்டணி அமைப்பதில்லை மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர் அவரது மகன் வளர்த்து வரைவார். வேறு எவரும் தேவையில்லை
  30. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன… அதேவேளை உங்கள் கருத்துகளை நான் அல்லது மற்றைய யாழ் கள உறுப்பினர்கள் காட்டாயம் எற்க வேண்டும் என்று நினைக்க கூடாது 🤣😂🤣 ஆனாலும் கருத்துகள் அருமை
  31. உங்கள் கருத்திற்கு நன்றி புத்திசாலி, முட்டாள் எனும் கருதுகொள்களை Cognitive bias ஆக பார்க்கிறார்கள். https://www.beapplied.com/post/attribution-bias-what-is-attribution-bias நியூட்டனது பூனை வெளியே போவதற்கும் உள்ளே வருவதற்கும் கதவினை பிராண்டுவதை பார்த்து அவருக்கு தொந்தரவில்லாமல் அதுவாக போய் வர கதவில் இரு துவாரங்களை போட தச்சனை அணுகினார் (பெரிய துவாரம் தாய் பூனைக்கு, சிறிய துவாரம் குட்டிப்பூனைக்கு) தச்சன் பெரிய துவாரத்தினை கதவில் போட்டு விட்டு சிறிய பூனை பெரிய துவாரத்தினூடாக செல்லும் என கூறினார், நியூட்டனால் அதனை புரிந்து கொள்ளமுடியவில்லை இருவரது வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும்போது தாய் பூனையும் குட்டி பூனையும் அந்த பெரிய துவாரத்தினூடாக சென்றது. ஒவ்வொருவரது புரிதலும்(Perception) அவர்களது பிண்ணனியில் மாறுகின்றது. இந்த காணொளியில் அந்த பெண் ஒஸ்ரியா என கூறுவார், அதனை அவுஸ்ரேலியா என புரிந்து கொண்டு, அவுஸ்ரேலியர்களின் பேச்சு வழ்க்கில் அவர்களது பாரம்பரியமான இன்னொரு இறாலை பார்பக்கியூவில் போடு என்பார் அந்த நடிகர், இந்த நகைச்சுவை புரிவதற்கு அவுஸ்ரேலியர்களினது பாரம்பரியம் அறிந்தவர்களால் முடியும் மற்றவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளமாட்டார்கள். மற்றவர்களது கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எந்த வகையான கேள்விகளும் ஒரு புதிய பரிணாமத்துடன் ஒரு புரிதலை உருவாக்கும் அதனால் நன்மைதான் உண்டாகும், எனக்கு தெரிந்த விடயங்களில் கள உறவுகள் அது தொடர்பான எந்தவித பரிட்சயமுமில்லாமல் விவாதிக்கும் போது அது எனக்கு அதிக புரிதலை ஏற்படுத்துகிறதனை எனது அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன், அதனை எப்போதும் விருப்புடன் எதிர்பார்ப்பதுண்டு(சிலர் தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் செய்வார்கள் அது அவர்களது திருப்திக்கு அதனை மட்டும் கண்டு கொள்வதில்லை).
  32. பல வருடம் கழித்து நாம் புகைப்படம் அல்லது ஓவியத்தில் மட்டும் தான் இருப்போம். அந்த படத்தை அடுத்த சந்ததி விரும்பினால் மட்டுமே வைத்திருப்பார்கள் நாம் பாவித்த பொருட்கள் எதுவுமே இருக்காது நாம் வாழ்ந்த வீட்டில் யாரோ எல்லாம் இருப்பார்கள் நாம் வாழ்ந்த வீடே வேறு மாதிரி இருக்கும் தினசரி நாம் நடந்து திரிந்த பாதைகள் சுற்றித் திரிந்த இடங்கள் எல்லாமே மாறிவிடும் இப்படி ஒருத்தன் இருந்தான் என்பதே யாருக்கும் தெரியாமல் போய் விடும் இதெல்லாம் யோசித்து பார்க்கும் போது என்ன பெரிய பிரச்சனை? என்ன பெரிய கவலை? வாழ்க்கை ஒரு குறுகிய வட்டம்.
  33. நிச்சயமாக உண்மை வளரும் ஒவ்வொரு கட்சியும் வரவேற்கப்படுகின்றன… நாம் தமிழர் கட்சி வளர்ச்சி கண்டு உள்ளது மகிழ்ச்சி ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும். தமிழர் பகுதிகள் உண்டு” அங்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் அப்படி இருக்க தமிழ்நாட்டில் தெலுங்கார் வெளியேறு. மலையாளிகள் வெளியேறு. .........வடக்கன். வெளியேறு,.......இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசினால் இந்த வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்கள் நிலைமை என்ன மாதிரி ?? 1977. ......1984. ஆண்டுகளில் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசிய உணர்ச்சியை துண்டும். பேச்சுகளை விட மோசமானது இதனால் எந்தவொரு பிரயோஜனம் இல்லை தமிழ் இளைஞர்கள் அருமையான வாழ்க்கையை வெட்டி பேச்சுகளில் மயங்கி இழக்க முடியாது
  34. வளரட்டும் தாராளமாக! "பச்சைத் தமிழ்" , "தமிழ் ஜீன்" என்று முட்டாள் தனமான கருத்துக்களை தமிழ் நாட்டோடு மட்டும் மட்டுப் படுத்திக் கொண்டு தன் அரசியலைச் செய்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால், இன்று ஈழத்தமிழர்களிடையேயும் இந்த முட்டாள் கருத்துக்களைப் பரப்பி அவர்களை அறிவலட்சியம் கொண்ட மடையர்களாக மாற்றும் வேலையில் நா.த.க வெற்றி பெற்றிருக்கிறது. நா.த.க ஆளும் கட்சியாக வந்தால் கூட இந்த அறிவலட்சியம் பரப்பும் வேலையை எதிர்க்க வேண்டியிருக்கும்.
  35. 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 16 புள்ளிகள் 2)கிருபன் - 16 புள்ளிகள் 3)வாத்தியார் - 16 புள்ளிகள் 4)goshan_che - 14 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 14 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 14 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 14 புள்ளிகள் 9)கந்தையா57 - 14 புள்ளிகள் 10)நுணாவிலான் - 14 புள்ளிகள் 11)பிரபா - 14 புள்ளிகள் 12)சுவி - 12புள்ளிகள் 13)புலவர்- 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 8, 10, 11, 15, 18, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  36. நாம்தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் நிச்சயம் 8 வீதத்திற்கு மேல் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறப் போகிறது என்பது 100 வீதம் நடக்கத்தான் போகிறது. அதை சில நா;தமிழர்கட்சிக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்களால் சீரணிக்க முடியவில்லை. அதனால்தான் ஆதாரத்தை; தருமாறு கேட்கின்றனர். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பொழுது நம் தமிழர்கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல அதனால்தான் மற்றவர்கள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சிலநாட்களில் உண்மை வெளிவரும். தனித்துர நின்று ஒரு கட்சி பெற்ற வாக்குகளை வைத்து இலகுவாக ஊகிக்க முடியும் ஆனால் பல கட்சிக் கூட்டணி அமைத்து பெுhட்டியிட்ட கட்சிகளின் நம்பகத்தன்மையற்ற வாக்கு சத வீத்தைதை ஏற்றுக் கொளபவர்களால் தனித்து நின்று பெற்ற வாக்குகளின் அடிப்படயில் நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகளை வைத்து வாக்கு சதவீதத்தைக் கணிப்பிட முடியவில்லை ஆதாரத்ரதத் தாருங்கள் என்கிறார்கள். திமுகவின் உணமையான வாக்கு சதவீத்தை 100 வீத் இவர்களால் தரமுடியுமா?நாம் மழிழர் அங்ககரிக்கப்பட்ட கட்சியாக மாறுவது சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதுவும் 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில்)
  37. 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) - 1ம் இடம் எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 8 புள்ளிகள் 2)கிருபன் - 8 புள்ளிகள் 3)வாத்தியார் - 8 புள்ளிகள் 4)goshan_che - 6 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 6 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 6 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 6 புள்ளிகள் 9)கந்தையா57 - 6 புள்ளிகள் 10)நுணாவிலான் - 6 புள்ளிகள் 11)பிரபா - 6 புள்ளிகள் 12)புலவர் - 6 புள்ளிகள் 13)சுவி - 4 புள்ளிகள்
  38. வணக்கம் பாஞ் அண்ணா உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி
  39. விவசாய பழமொழிகள் விளக்கத்துடன் விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன. அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம். தவளை கத்தினால் தானே மழை மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர். அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம் மாலை வேளையில் ஈசல்கள் நிறைய பறந்தால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் மழை பெய்யும். தும்பி எட்ட பறந்தால் தூரத்தில் மழை. தும்பி கிட்டப் பறந்தால் பக்கத்தில் மழை. தட்டான் உயரமாகப் பறந்தால் தூரமாக மழை பெய்யும். தட்டான் தாழ்வான உயரத்தில் பறந்தால் அருகில் மழை பெய்யும். எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல். எறும்பு உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு கூட்டமாகச் சென்றால் கட்டாயம் பெரும் புயல் வரும். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. மார்கழி மாதத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராயிருக்கும். அப்போது தண்ணீர் தேவை இருக்காது. அப்போது மழை பெய்வது பயிர் விளைச்சலை பாதிக்கும். எனவே மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. தை மழை நெய் மழை நெய்யானது சிறிதளவு ஊற்றினால் உணவு ருசிக்கும். அதே போல் தை மாதத்தில் பெய்யும் சிறிதளவு மழையானது வேளாண்மையை மணக்கவே செய்யும். தைப் பனி தரையை துளைக்கும். மாசிப்பனி மச்சை பிளக்கும். தை மாதப்பனியானது தரையை துளைக்கும் அளவுக்கு இருக்கும். மாசி மாதப்பனி உள்வீட்டிற்குள்ளும் குளிரும் அளவு இருக்கும். மச்சி வீடு என்பது பழங்காலத்தில் நீளமான நெட்டு வீடுகளில் கடைசியில் இருக்கும் அறையைக் குறிக்கும். தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு தை மற்றும் மாசி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். ஆதலால் கூரை உள்ள வீடுகளில் உறங்க வேண்டும். திறந்த வெளியில் உறங்கக் கூடாது. புத்து கண்டு கிணறு வெட்டு கரையான் புற்றானது நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில்தான் பொதுவாக அமைந்திருக்கும். எனவேதான் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்டினால் தண்ணீர் கிடைக்கும். வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் பள்ளத்திலேயே தண்ணீர் தங்கும். வெள்ளம் சூழும் என்றாலும் பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். காணி தேடினும் கரிசல்மண் தேடு. சிறிய அளவு நிலம் வாங்கும்போது நீரினைத் தேக்கும் தன்மை உடைய வேளாண்மைக்கு ஏற்ற, கரிசல் மண் உள்ள நிலமாக வாங்குவது சிறந்தது. களர் கெட பிரண்டையைப் புதை களர் நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்து வைக்க வேண்டும். கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி. கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டால் நிலம் வளமாகும். அதே போல் வறுமை மிக்க குடும்பத்திற்கு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும். நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற நிலத்தில் எருக்கச் செடி விளையும். எனவே ஒரு நிலத்தின் வளமையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம். நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். ஓரிடத்தில் வேளாண்மைக்கு தேவையான நீரும், வளமையான நிலம் இருந்தாலும், காலநிலையை கணக்கில் கொண்டே வேளாண்மை செய்ய வேண்டும். ஆடிப்பட்டம் பயிர் செய். ஆடி மாதத்தில் செய்யும் பயிரானது நல்ல விளைச்சலைத் தரும். இதனையே ஆடிப்பட்டம் பயிர் செய் என்றனர். விண் பொய்த்தால் மண் பொய்க்கும். பருவ மழை பெய்யாவிட்டால் பயிர் விளைச்சல் இருக்காது. மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை. மழை நீரை மட்டும் நம்பி இருக்கும் இடங்களில் நஞ்சை பயிர்களை பயிர் செய்யவும். மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் ஆகியவற்றின் மடைக்கு அருகில் இருக்கும் நிலங்களில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம். களரை நம்பிக் கெட்டவனும் இல்லை. மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. களர் நிலமானது தண்ணீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. மணலானது தண்ணீரை வடித்து விடும் தன்மை உடையது. அதனால் களர் நிலத்திற்கு ஏற்ற பயிரை பயிர் செய்தவன் ஏமாற மாட்டான். மணலில் பயிர் செய்தால் விளைச்சல் நன்றாக இருக்காது. உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழவழ. மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் இல்லாது போகுமோ அது போல உழவில்லாத நிலம் பலன் தராது. அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல். வேளாண்மைக்கு நிலத்தை தயார் செய்யும்போது அகலமாக உழுவதைத் தவிர்த்து ஆழமாக உழ வேண்டும். புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு. புஞ்சை நிலத்தைவிட நஞ்சைக்கு உழவு செய்யும்போது மண்ணானது நன்றாக சந்தனம் போல் மையாக இருக்குமாறு உழவ வேண்டும். குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. எரு இடப்படாத வேளாண்மை பயன் தராது. ஆடு பயிர் காட்டும். ஆவாரை கதிர் காட்டும். ஆட்டுச் சாணம் பயிரை வளரச் செய்யும். ஆவாரை உரம் பயிரில் தானிய முதிர்ச்சியை உண்டாக்கும். கூளம் பரப்பி கோமியம் சேர். கூளம் எனப்படும் சிதைந்த வைக்கோல் கழிவுகளை பரப்பி வைத்து அதன்மீது கோமியத்தை தெளித்தால் உரம் விரைவில் சத்தானதாக மாறும். ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. ஆற்று வண்டலானது வளமானதாக உள்ளதால் அது பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து பின் அதனை மடக்கி உழுது நிலத்தின் வளத்தை அதிகரிக்கும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். பயிருக்கு தினமும் தண்ணீர் விடக்கூடாது. தண்ணீர் பாய்ச்சி நிலம் காய்ந்தபின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும். தேங்கிக் கெட்டது நிலம்; தேங்காமல் கெட்டது குளம். நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது. குளத்தில் தண்ணீர் தேங்காவிடில் பயிர்கள் வாடும். கோரையைக் கொல்ல கொள்ளுப்பயிர் விதை. களைப்பயிரான கோரையின் வளர்ச்சியை தடை செய்ய கொள்ளுப்பயிரினை பயிர் செய்யவும். சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும். வேளாண்மை செய்பவர் தன்னுடைய சொத்துகளைப் பாதுகாப்பது போல் விதைகளைப் பாதுகாக்க வேண்டும். பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு. சரியன பருவத்தில் பயிரினை பயிர் செய்ய வேண்டும். ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர் வைத்த தனம். ஆடி ஐந்தாம் தேதி விதைக்க வேண்டும். புரட்டாசி பதினைந்தாம் தேதி நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் சொத்து போன்று அது பலன் தரும். கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும். விதைகளை இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும். அதனால் தானியங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் களஞ்சியம் நிறையும். நெருக்கி விதைத்தால் விளைச்சல் பயன் தராது. அதனால் வெறும் வைக்கோல் மட்டும் கிடைக்கும். இதனால் வைக்கோல் போர் உயரும். விவசாய பழமொழிகள் படிப்போம். அவை தரும் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம்.
  40. போன மாதம் ராய்ட்டர்ஸ் இங்கு ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தியது. அதில் ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களில் 25% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தனர். எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திய வாக்காளர்களில் 60% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்ததாகவும் ஞாபகம். இவரின் தீவிர ஆதரவாளர்கள் இன்னும் தீவிரமாக மாறுவார்கள். தீக்குளிக்கும் வழக்கம் இங்கு இல்லாதது நல்ல ஒரு விடயம். மற்றபடி, இந்த தீர்ப்பு, கிடைக்கப் போகும் தண்டனை எதுவாகினும், இவருக்கு ஒரு பின்னடைவு என்றே நினைக்கின்றேன்.
  41. இந்த "இப்போதிருக்கும் நிலை" என்ன? ட்ரம்ப் இருந்ததை விட, அல்லது ட்ரம்ப் இனி வந்தால் இருக்கப் போவதை விட எவ்வளவு கீழான நிலை அல்லது மேலான நிலை? நான் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டிருப்பது போல, மனனப் போட்டியில், அல்லது ஒலிம்பிக்கில் ஓடிப் பதக்கம் வாங்கக் கூடிய ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டியதில்லை. அதற்கு தனியாக அமெரிக்காவில் ரீம் இருக்கிறதென நினைக்கிறேன்😂. இது புரியாத வாக்காளர்களுக்கு பைடனை விட ட்ரம்ப் உசத்தியாகத் தெரிவதில் வியப்பில்லை. ஆனால், இப்படியான வாக்காளர்களால் தேர்தல் வெற்றி தீர்மானிக்கப் படப் போவதுமில்லை!
  42. அட்டகாசமான எழுத்து / மொழி நடையுடன் மீண்டும் வருகை தந்த பாஞ்ச் அண்ணாவை மனசார வாழ்த்தி வரவேற்கின்றேன். தொடர்ந்து இணைந்து இருங்கள்.
  43. மகிழ்ச்சி
  44. எமக்கு அவப்பெயரை ஏற்படுத்த நாம் உமக்கு என்ன தீங்கு செய்தோம் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.