Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    25
    Points
    88827
    Posts
  2. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    12791
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46977
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3127
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/06/24 in Posts

  1. ரெலிபோனுக்கு பக்கத்திலைதான்... இருக்கிறன். 🤣 இந்த நிமிடம் வரை அழைப்பு வரவில்லை. 😂
  2. பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 22 2 பிரபா USA 20 3 ஏராளன் 20 4 ரசோதரன் 20 5 நந்தன் 20 6 கோஷான் சே 20 7 சுவி 18 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாத்தியார் 18 12 எப்போதும் தமிழன் 18 13 வீரப் பையன்26 16 14 நிலாமதி 16 15 புலவர் 16 16 நுணாவிலான் 16 17 வாதவூரான் 16 18 கிருபன் 16 19 அஹஸ்தியன் 16 20 கந்தப்பு 16 21 நீர்வேலியான் 16 22 கல்யாணி 16 23 P.S.பிரபா 14
  3. வாய்ப்பில்லை சார் வாய்ப்பில்லை புலி ப‌துங்குவ‌து பாய‌த் தான் ஹா ஹா🤣😁😂............................................................
  4. 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? - 2 சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, புரட்சிகர தமிழ்த்தேசியன், நிழலி, கிருபன், தமிழ்சிறி, கந்தையா57 , வாத்தியார் ,பிரபா 1)தமிழ்சிறி - 36 புள்ளிகள் 2)கோஷான் சே - 34 புள்ளிகள் 3)நிழலி - 34 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 32 புள்ளிகள் 5)கிருபன் - 32 புள்ளிகள் 6)பிரபா - 32 புள்ளிகள் 7)பாலபத்ர ஓனாண்டி - 30 புள்ளிகள் 8)நுணாவிலான் - 26 புள்ளிகள் 9)கந்தையா57 - 24 புள்ளிகள் 10)வாத்தியார் - 22 புள்ளிகள் 11)சுவி - 20 புள்ளிகள் 12)புலவர்- 20 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 - 11, 14, 15, 18,19, 22, 24, 25, 26,28, 29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 20 கேள்விகளுக்கு (40 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  5. அவசரமாய் வெளிக்கிட்டு கொஞ்ச தூரம் போய்க்கொண்டிருந்த போது என்ரை மனுசி பிள்ளைகளிடம் ஏதோ குசுகுசுத்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. இருந்தாலும் தாய் பிள்ளை பிரச்சனை என எனக்குள் நினைத்தபடி கார் ஓடிக்கொண்டிருக்கும் போது பிழையான திசையில் போய்க்கொண்டிருக்கிறோம் என வழி காட்டியாள் எச்சரித்து திரும்பி போகுமாறு எச்சரிக்க எனது மகள் சொன்னார் அம்மா மொய் பார்சலை மறந்து போய் விட்டு வந்திட்டாவாம் என சொல்லி காரை ஹொட்டலுக்கு விடுங்கோ என்றார். ரெஞ்சன் உச்சியில இடிக்க மறு வார்த்தை பேசாமல் ஹொட்டலுக்கு போய் பார்சலை எடுத்துக்கொண்டு வேர்த்து விறுவிறுக்க கொண்டாட்ட மண்டபத்தை வந்தடைந்தோம். அப்போது 11 மணியிருக்கும் என நினைக்கிறேன். சிறித்தம்பி சொன்ன நேரத்துக்கு முதல் வந்திட்டம் எண்ட மனக்கொழுப்புடன்😂 ஹோலுக்குள் உள்ளே நுழைந்தோம். பெரிய ஆடம்பரம் இல்லாமல் ஹோலை சோடித்து இருந்தார்கள்.நாங்களும் இன்னுமொரு குடும்பமும் ஒரு மேசையை இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டோம். பலகார தட்டும் கோப்பித்தண்ணியும் வர ஒரு பிடி பிடித்து விட்டு ....சிறித்தம்பியர் சொன்ன மாதிரி ரெலிபோனை சட்டைப்பையிலேயே வைத்திருந்தேன். இருந்தாலும் அந்த மேளக்கச்சேரி சத்தத்தில் எதுவுமே கேட்காது என நினைத்து ரெலிபோனை மேசையிலையே வைத்திருந்தேன். உண்மையில் நான் பெண்கள் கைப்பை கொண்டு திரிவது போல் ரெலிபோனை கையில் தூக்கிக்கொண்டு திரிவதில்லை. ஆனால் அன்றைய தினம் அது நடந்துவிட்டது.😎 பட உபயம் சிறித்தம்பி.
  6. குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில் 🚗 30 நிமிடத்தில் செல்லக் கூடிய தொலைவில்தான் இருந்தது நல்லதாக போய் விட்டது. அவர்... நேற்று வந்து, இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு நாளை காலை புறப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தமையால்... காலம் குறுகிய நேரம் என்பதாலும், எப்படியும் இன்று சந்திப்பது என்று முடிவெடுத்து... அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளமாக செய்யலாம் என சொன்னார். குமாரசாமி அண்ணை வசிப்பது ஜேர்மனியின் ஒரு தொங்கலில் என்றால்... நாம் வசிப்பது மற்ற தொங்கல். இடையில் 550 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் வசிக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் மீண்டும் எப்போ கிடைக்கும் என தெரியாது என்ற படியால்... இருவரும் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். 🙂 இனி... எமது வீட்டிற்கு அண்மையில் வசிக்கும் @Paanch அண்ணையுடன் தொடர்பு கொண்டு, குமாரசாமி அண்ணையை சந்திக்க இன்று மதியம் நேரம் இருக்குமா என கேட்ட போது... அவரும் முழு உற்சாகத்துடன் தானும் வருவதாக தெரிவித்தார்🥰. பின்... @Kavi arunasalam த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இன்று குடும்பத்துடன் ஐரோப்பிய உல்லாசப் பயணம் செய்ய புறப்பட்டுக் கொண்டு இருப்பதால்.. கலந்து கொள்ள முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார். தொடரும்.... ✍️
  7. "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!" இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் இதைப்பற்றி என்ன கூறினார் என பார்ப்போமா ? குறள் 403: "கல்லா தவரும் நனி நல்லர் கற்றார் முன் சொல்லா திருக்கப் பெறின்." கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். கற்றவர்கள் முன் கல்லாதவர்கள் கற்கும் முனைப்புடன் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் முன் தனக்கு தெரிந்த அரை குறையானவற்றை பயனில்லாமல் பேசக் கூடாது என்பதே இதன் பொருளாகும் என நாம் கருதலாம். இதனால் தான் பாரதியார் "கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ" என்று பாடினாரோ? பொதுவாக "புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்; ,முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்." ஆகவே புத்திசாலிகள் மௌனமாக இருக்கக் கூடாது என்பது வெளிப்படையே! அது போலவே "பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது." ஆகவே முட்டாள்கள் மௌனமாய் இருப்பது நல்லது!! இப்ப நான் படித்த ஒரு கதையை கீழே தருகிறேன். மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான். ஒருநாள் சபையில் புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார். அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், "இது மதியற்ற செயல். உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான். சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து, "மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே வெளியேறு" என சீறி விழுந்தாள். ஆனால் அவளைத் தடுத்த மன்னர், "அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில் பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்" என்றார். அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. ஆஹா..இந்த திரியை இன்று யாழ் வந்ததால் காண நேர்ந்தது. 😍 யாழ்களம் வந்ததாக பாஞ் சொல்லியிருந்தார். மூன்று யாழ் உறவுகளும் சந்திப்பு வைபவம் மிக அருமை. மட்டற்ற மகிழ்ச்சி. நான் தமிழ் நாட்டை சேர்ந்திருந்தாலும், ஈழ உறவுகளின் நேசத்தையும், பாசத்தையும் அவர்களுடன் பழகியதில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணன் பாஞ் அவர்களை இருமுறை நேரில் சந்தித்து பிரிந்தபோது கண் கலங்கியது உண்மை. மூவரின் சந்திப்பை பற்றி படிக்க, படிக்க யாழை சிலகாலம் மறந்துவிட்டதை எண்ணி வருந்துகிறேன். இந்த பாசம், நேசம் என்றும் வாழட்டும்..🙏
  9. அண்ணை, வாழ்த்துக்கள். கோசான்ஐ தேவையில்லாமல் பகைத்து விட்டோமோ? எனக்கென்னவோ பாகிஸ்தான்காரன் காசு வாங்கிக்கொண்டு மேட்ச் fix பண்ணிவிட்டாங்கள் போல இருக்கு. ஒரு சிறிய அணியிடம் தோற்றுள்ளார்கள் இதைவிட ஆச்சரியம் மூன்று பேர் இங்கேயே படுத்திருக்கிறார்கள்
  10. அப்படி எல்லாம் இடையில் விட்டு விட்டு போக முடியாது, பையன் சார். நீங்க காண்ட்ராக்டை திரும்பவும் வாசித்துப் பாருங்க. நீங்க எல்லா மாட்சுகளுக்கும் முடிவு சொல்ல வேண்டும் என்று நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம். நீங்கள் இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு எது எதுவென்றே தெரியாது.......👍 நேற்று பபுவா நியுகினியா, பெயரே விஜய் டிவி தலைப்பு மாதிரி இருக்குது......., போட்டிருந்த யூனிபார்ம் சூப்பர். நல்ல கலரும், டிசைனும்.......நீங்க தான் விளையாட்டைப் பார்த்து சொல்ல வேண்டும்........🤣.
  11. எங்களை வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்!!🙏🙏 என்னுடன் அமெரிக்கப் படைத்தளத்தில் வேலைபார்த்த அமெரிக்க நண்பர் ஒருவர் எங்கள் 25வது திருமணநாளில் வாழ்த்தியபோது 25வருடங்களாக ஒரு மனைவியுடனா???. ஆச்சரியப்பட்டார், இன்று அவர் 53என்று அறிந்தால் நிச்சயம் மூர்ச்சையடைந்திருப்பார்.😳😂
  12. நல்வாழ்த்து நான் சொல்லுவேன்..........! 😍
  13. 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? - 8% க்கு மேல் 8.19% வாக்குகள் கிடைத்தது. சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன் , சுவி, ஈழப்பிரியன், தமிழ்சிறி, நுணாவிலான், புலவர் 1)தமிழ்சிறி - 32 புள்ளிகள் 2)கோஷான் சே - 30 புள்ளிகள் 3)நிழலி - 30 புள்ளிகள் 4)பாலபத்ர ஓனாண்டி - 28 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 28 புள்ளிகள் 6)கிருபன் - 28 புள்ளிகள் 7)பிரபா - 28 புள்ளிகள் 8)நுணாவிலான் - 26 புள்ளிகள் 9)கந்தையா57 - 22 புள்ளிகள் 11)சுவி - 20 புள்ளிகள் 11)வாத்தியார் - 20 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள் 13)புலவர்- 18 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 6 - 11, 14, 15, 18,19, 22, 24, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 18 கேள்விகளுக்கு (36 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  14. 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 புலவர், ஈழப்பிரியன், பாலபத்ர ஓனாண்டிதவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)கோஷான் சே - 22 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 22 புள்ளிகள் 3)நிழலி - 22 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 22 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 20 புள்ளிகள் 6)கிருபன் - 20 புள்ளிகள் 7)கந்தையா57 - 20 புள்ளிகள் 8)வாத்தியார் - 20 புள்ளிகள் 9)நுணாவிலான் - 20 புள்ளிகள் 10)பிரபா - 20 புள்ளிகள் 11)புலவர்- 16 புள்ளிகள் 12)சுவி - 14 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11, 14, 15, 18,19, 22, 25, 26,29,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  15. எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இந்தியா வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @goshan_cheக்கு புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 14 2 குமாரசாமி 14 3 தமிழ் சிறி 14 4 பிரபா USA 14 5 ஏராளன் 14 6 ரசோதரன் 14 7 அஹஸ்தியன் 14 8 கந்தப்பு 14 9 எப்போதும் தமிழன் 14 10 நந்தன் 14 11 நீர்வேலியான் 14 12 வீரப் பையன்26 12 13 சுவி 12 14 நிலாமதி 12 15 தியா 12 16 புலவர் 12 17 P.S.பிரபா 12 18 நுணாவிலான் 12 19 வாதவூரான் 12 20 கிருபன் 12 21 வாத்தியார் 12 22 கல்யாணி 12 23 கோஷான் சே 12
  16. மிகவும் அரிய இனிமையான சந்திப்பு. நான் சிறியின் மகளின் கலியான வீட்டுக்கு இந்தமாதம் Germnay போகும்போது குசா அண்ணாவையும் பாஞ் அண்ணாவையும் சந்திக்கலாம் என்று இருந்தேன். பாஞ் அண்ணா வந்திருந்தார் குசா அண்ணாவுக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லை. யாழில் கலியான வீடு மற்றும் எனது பார்வையில் ஜேர்மன் மற்றும் யூரோப் தமிழ் மக்கள் பற்றி இந்தக்கிழமை முடிவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
  17. காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில் சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்லை. தமிழ் ஆட்களின் நேரத்தைப் பற்றி 😂 நான் நன்கு அறிந்து இருந்ததால்.... பத்தரை மணிக்கே, பாஞ்ச் அண்ணைக்கு தொலை பேசி எடுக்க, அவர் தனது மகளுடன் எனக்கு முன்னால் தாங்கள் வந்து விட்டோம் என்று காரில் கைகாட்டிய படி கடந்து சென்றார். 🙂 நான் அவர்களின் நேரம் தவறாமையை தவறாக எடை போட்டு விட்டேனே என்று மனதிற்குள் சங்கடப் பட்டுக் கொண்டு... பாஞ்ச் அண்ணையும் நானும் ஒரு காரில் குமாரசாமி அண்ணையை சந்திக்க அதிவேக நெடுஞ்சாலையில் பழைய தமிழ்ப் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணித்தோம். எனக்கு வாகனம் ஓடுவதை விட.... அருகில் இருந்து பயணிப்பதுதான் பிடித்தமானது என்பதால்... வாகனம் ஓடும் பொறுப்பை பாஞ்ச் அண்ணையிடமே கொடுத்து விட்டேன். நாங்கள் எதிர்பார்த்த நேரம் 11 மணிக்கு, மண்டபத்திற்கு சென்று வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றால்.... தவில், நாதஸ்வர கச்சேரி இசை நடந்து கொண்டிருந்தது. குமாரசாமி அண்ணையை... முன், பின் கண்டிராததால் அவரை எப்படி கண்டு பிடிப்பது என்ற யோசனையுடன் நானும், பாஞ்ச் அண்ணையும் போற, வாற ஆக்களைப் பார்த்து... இவர் குமாரசாமியாக இருப்பாரோ... அவர் குமாரசாமியாக இருப்பாரோ என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு இருந்தோம். 😂 🤣 குமாரசாமியார் சுழியன். எங்களுக்குத்தான்... குமாரசாமியாரை தெரியாதே தவிர, அவருக்கு எங்களை நன்றாக தெரிந்தே இருந்தது🙂. பட்டு வேட்டி சால்வையுடன்... தமிழ்ப் பழமாக எங்கள் முன் ஒருவர் சிரித்துக் கொண்டு வந்து கதைக்கும் போதும் பாஞ்ச் அண்ணை குமாரசாமியை தேடுகின்றோம், அவர் எங்கு இருக்கின்றார் என்று சொல்ல முடியுமா என்று கேட்க, வந்தவர் வாங்கோ... இந்த மேசையில் இருந்து கதைப்போம் என்று, அவரும் பிடி கொடுக்காமல் எம்மை அழைத்துச் சென்றார். குமாரசாமியாரின் குரல் எனக்கு பரிச்சயமானது என்பதால்... இவர்தான், நாம் தேடிய ஆள் என்று கண்டு பிடித்து... கட்டிப் பிடித்து... கொஞ்சிய கையுடன் பொறுங்கோ என்று... கோப்பியும், தட்டு நிறைய பலகாரமும் கொண்டு வந்து தந்தார். அந்த சுப நிகழ்விற்கு குமாரசாமி அண்ணையை நாம் தேடிப் போய் இருந்தாலும்.... பாஞ்ச் அண்ணை முன்பு ஜேர்மன் விளையாட்டுக் கழகத் தலைவராக இருந்த போது... சிறுவர்களாக விளையாடிய பலர் இளைஞர்களாக பாஞ்ச் அண்ணையிடம் வந்து தமது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். என்னுடன் முன்பு வேலை செய்த பலரையும் அந்த நிகழ்வில் 25 வருடங்களுக்கு பின்பு கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 🙂 யாழ். களத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித் திறமையை பற்றி நாம் நிறைய கதைத்தோம். சிலரின் அபரிதமான ஆற்றல்கள் உண்மையிலேயே வியக்க வைத்தது. அந்த வகையில்... யாழ்.களத்தின் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றுதலுக்கு உரிய திறமைசாலிகள் என்பதை நாம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது சிறப்பு. 👍 முதல் முறை சந்தித்த சந்திப்பு என்ற போதும்... உடன் பிறந்த சகோதரன் ஒருவரை கண்ட மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்தது. இப்படியான நல் உள்ளங்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த யாழ்.களத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம். ❤️
  18. துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு இப்பிடித்தான் London போய் ஆறு மாசத்தில, “டேய், கார் வாங்கீட்டாய் தானே,சனி ஞாயிறு வேலை இல்லாட்டி வீட்ட வா” எண்டு சஞ்சீவ் சொல்ல , சரி எண்டு சொல்லீட்டு காஞ்சு போன வாய்க்கு வீட்டுச் சாப்பாட்டு கிடைக்கிற அவாவில வெள்ளிக்கிழமை வெளிக்கிட்டு எப்பிடி வாறது எண்டு வழி கேட்டால், உப்பிடியே Gantshill roundabout ஆல நேர வந்து A 406 எடுத்து அடுத்த roundabout இல மூண்டாவது exit எடுத்து அப்பிடியே north circular ஆல வந்து பிறகு அடுத்த roundabout ஐஞ்சாவது exit ஆல வெளீல வந்து எண்டு சொல்ல, ஊரில இருக்கிற சந்தி மாதிரி இருக்கும் எண்டு நெச்சு இருக்கிற roundabout பேரை எல்லாம் பாடமாக்கீட்டு் , வடிவா விளங்காட்டியும் ஆரையும் கேட்டாவதூ போகலாம் எண்டு நெச்சபடிக் காரை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன். முதலாவது roundabout இலயே exit எடுக்கத் தெரியாமல் சுத்துசுத்தெண்டு சுத்தீட்டு வழி கேக்க வழி ஒண்டுமில்லாமல் தட்டுத் தடுமாறித் திரும்ப , சந்தேகத்தில மறிச்ச பொலிஸ்காரனுக்கு விளக்கம் குடுத்திட்டு அவன்டையும் வழி கேட்டாப் பாவம் அவனுக்கும் சொல்லத் தெரியேல்லை, Map ஐப் பாத்துக்கொண்டு போகச் சொன்னான். திருப்பி வீட்டை வந்து காரை விட்டிட்டு tube எடுத்து harrowக்குப் போனன். அப்ப தான் ஊரின்டை அருமை விளங்கிச்சுது ஒரு நாளும் போகாத ஊருக்கு கூட “அண்ணை அராலிக்கு எப்பிடிப் போறதெண்டு” town ல கேட்டால் சந்திக்குச் சந்தி ஒருத்தன் எங்களுக்கெண்டே நிப்பான் வழி சொல்ல. “சத்திரத்துச் சந்தியால நேர போய் அப்பிடியே மனோகராச் சந்தியால திரும்பிப் போனா வாற ஐஞ்சு சந்தியால வலது பக்கம் திரும்பி ஓட்டுமடச்சந்தியால இடது பக்கம் திரும்பி நேர போங்கோ” எண்டு easyயாய் சொல்லுவாங்கள். இல்லாட்டியும் இதுக்கெண்டே ஒவ்வொரு சந்தி வழியவும் சாரத்தோட பேப்பர் வாசிச்சுக்கொண்டு ஆராவது இருப்பினம், வழி கேட்டுக் கேட்டுப் போக. அதோட ஊருக்க போய் ஆரின்டையும் பேரைச் சொல்லிக் கேட்டால் வீட்டடீல கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு வீட்டுக்காரரை கூப்பிட்டும் விடுவினம். ஊருக்க போய் வீட்டைக் கண்டு பிடிச்சு வாசலில நிண்டு பேரைக் கூப்பிடவும் முறை இருக்கு. பொதுவா ஆச்சி, அப்பு, ஐயா எண்டு கூப்பிடிறது, இல்லாட்டிச் சொந்தம் எண்டா முறையைச் சொல்லிக் கூப்பிடலாம். மனிசிமார் புருசன்டை பேரைச் சொல்லாத மாதிரித தான் வீடு வழிய போய் பேரை நேர சொல்லிக் கூப்பிடீறதோ இல்லாட்டி சபை சந்தீல கதைக்கேக்கயோ பேரைச் சொல்லுறதோ குறைவு. வீட்டுக்கும் , ரோட்டுக்கு ஒரு அடையாளம் மாதிரி ஊருக்க இருக்கிற ஆக்களுக்கும் பேரோட ஒரு அடைமொழி அடையாளமாய் இருக்கும். அப்ப பேருக்குப் பஞ்சம் எண்டதாலயோ இல்லாட்டி Numerology தெரியாததாலயோ ஊர் வழிய ஓரே பேரில கன பேர் இருப்பினம். அதோட வயசுக்கு மூத்த ஆக்களுக்குப் பேரைச்சொல்லிக் கூப்பிடிறது சரியில்லை எண்டு ஒரு மரியாதைக்கும் தான் இப்படி அடைமொழியோட கூப்பிடுறது எண்டு நெக்கிறன். அடைமொழிக்கு வைக்கிற பேர் அநேமா அவரின்டை வேலை சார்ந்ததா இருக்கும் . புரோக்கர் பொன்னம்பலம் , பரியாரி பரமசிவம் , கிளாக்கர் கனகசபை, CTB சிவலிங்கண்ணை எண்டு தொழிலோட பேர் இருக்கும். பிசினஸ் செய்யிற எல்லாருக்கும் ஒரே வேலை எண்டதால வேலைக்குப் பதிலா அவை வேலை செய்யிற இடங்களைச் சேத்துச் சொல்லிறதும் இருந்தது . இது அநேமா சிங்கள ஊரா இருக்கும் . காரைநகர் பக்கம் தான் சிங்கள ஊர் அடைமொழி கனக்கப்பேருக்கு இருந்தது. வெலிகம பொன்னம்பலம், தங்கொட்டுவ தணிகாசலம் , களுத்துறை கனகலிங்கம் எண்டு ஒரு கேள்விப்படாத ஊரில போய் வியாபரம் தொடங்கி ,establish பண்ணி அந்த ஊர் பேரை ஒட்டிக் கொண்டு வந்து பேரையும் பிறந்த ஊரையும் பெருமைப்படுத்தின கன பேர் இருந்தவை. என்டை மச்சான் ஒருத்தனை்பள்ளிக்கூடத்தில அப்பப்பான்டை பேர் என்ன எண்டு கேக்க PM எண்டு சொல்லி இருக்கிறான் , குழம்பிப்போன ரீச்சர் திருப்பி விசாரிக்க , “ ஓம் வீட்டை வாறவை எல்லாம் PM நிக்கிறாரோ எண்டு தான் கேக்கிறவை” எண்டு சொல்லத்தான் ரீச்சருக்கு விளங்கிச்சுது postmaster தான் PM ஆனவர் எண்டு. ஓவசியர், Chairman, SM ( station master ) எண்டு தொழிலே பேராகி பேர் மறக்கப்பட்ட ஆக்களும் இருந்தவை. பெருமைக்கு ஊரைச்சேக்கிற ஆக்களும், ஊருக்கு பெருமை சேக்கிற ஆக்களும் எண்டு ரெண்டு பேரும் பேரோட ஊரைச் சேப்பினம். ஊரில தன்னைத் தானே பெருமையா நினைக்கிறது St John’s கொலிஜ் காரருக்கு மட்டும் இல்லை முழு யாழ்ப்பணத்தானுக்கும் இருந்தது. “ பருத்தித்துறை ஊராம் பவளக்ககொடி பேராம்” எண்டு பாடின கல்லடி வேலுப்பிள்ளையார், ஆடிப்பிறப்பிக்கு பாடின நவாலியூர் சோமசுந்தரப்புலவர் எண்டு , கவிஞனும் சரி கவிதையும் சரி ஊர்ப் பேரோட தான் இருந்தது. ரோடுகளுக்கு ஆக்களின்டே பேர் இருந்தாலும் ஊர் வழிய சந்திக்கு ஆக்களின்டை பேர் வைக்கிறேல்லை. பெரிய சந்திகள் ஊரின்டை பேரிலேம் மற்றச் சின்னன்களுக்கு மரத்தின்டை பேரோட புளியடி, இலுப்பையடி இல்லாட்டி ஒரு கட்டிடம் இருந்தா அந்தப் பேரோட மடத்தடி, கச்சேரியடி, மனோகராத் தியட்டரடி எண்டோ இல்லாட்டி குளத்தையோ , கோயிலையோஅதில இருக்கிற வைரவரையோ , பிள்ளையாரையோ, மாதா கோவிலையோ சேத்துத் தான் பேர் வைக்கிறது. எங்கடை ஒரு ஊரில ஒரு சந்தி இல்லை ஒராயிரம் சந்தி. ஐஞ்சு சந்தி, நாச்சந்தி , முச்சந்தி, கெற்றப்போல் சந்தி எண்டு ஒவ்வொரு சந்திக்கெண்டு ஒரு காரணப் பேரும், இடுகுறிப் பேரும் அதுக்கெண்டு ஒரு சிறப்பும் இருக்கும். அதோட எங்கேயும் சண்டை நடக்கேக்கயும் சொல்லுவாங்கள் இது ஆரியகுளம் சந்தி குறூப் , கொட்டடிச் சந்தி குறூப் , கொய்யாத்தோட்ட குறூப், ஐயனார் கோவிலடி குறூப், இது பிரவுண் ரோட் குறூப் எண்டு. பஸ்ஸில போகேக்க பெரும்பாலும் சந்தீன்டை பேரைச் சொல்லித் தான் இறங்கிறது. ஊருக்குள்ள நிறையச் சந்தி இருந்தாலும் main bus route இல ஊரின்டை பேரோட ஒரு சந்தி இருக்கும். கொக்குவில் , கோண்டாவில் , இணுவில், உடுவில் எண்டு வாறது townஇல இருந்து போகேக்க ஊர் தொடங்கிற சந்தியா இருக்கும். Town க்கு போற பஸ் எல்லாம் KKS ரோட்டாலேம் , பருத்தித்துறை ரோட்டாலேம் A 9 ஆல வந்து ஆஸ்பத்திரீ ரோட்டாலேம் வர ஒரு பஸ் மட்டும் இந்த சந்தியால போறது , அது காரை நகரில இருந்து வாற 782 பஸ் . ஸ்ரான்லி றோட்டால வந்து வெலிங்டன் சந்தீல திரும்பி town க்கு போகும். அதே போல மணிக்கூட்டுக் கோபுரத்தில இருந்து வாற றோட் தான் மணிக்கூட்டு கோபுர வீதி. அது முந்தி ஆசுபத்திரிக்கு குறுக்கால வந்து , ஸ்ரான்லி ரோட் , நாவலர் ரோட் எல்லாம் தாண்டி பிறவுண் ரோட் வரைக்கும் வந்ததாம் . முந்தி இருந்த GA Lionel Fernando தான் குறுக்கால ஆசுபத்திரி கட்ட விட்டவர் அதின்டை எச்சம் தான் இப்ப இருக்கிற மணிக்கூட்டு ஒழுங்கை. அதே போல சந்திக்கும் பழைய பேர் ஏதும் இருந்திச்சுதோ தெரியாது இப்ப அதுக்குப் பேர் வெலிங்டன் சந்தி. Town மாதிரி பழைய வெலிங்டன் சந்தீன்டை நாலு மூலையிலும் கட்டடங்கள். வெலிங்டன் தியட்டர் ஒரு மூலை , முனீஸ்வரா கபேயும் கடைச்சல் பட்டறையும் மற்ற மூலை , லிங்கம் கிறீம் கவுஸ் தெற்கை பாத்த வாசலோட , பிளவுஸில மட்டும் விட்ட அம்பை பெடியளின்டை காச்சட்டை பொக்கற்றிலும் விட்ட விக்ரம் டெயிலேர்ஸ் அதுக்குப் பக்கத்தில, எதிர கண்ணாடி விக்கிற S.M. Fernando , அதையும் தாண்டிப் போக Tower கூல் பார் எண்டு இருந்தது. 85 /86 கோட்டையில இருந்து செல்லுகளும் பொம்பரும் நியூ மாக்கட்டையே இல்லாமல் பண்ண , செல்லுக்கெட்டிய தூரம் தாண்டி சனங்கள் பிழங்கத்தொடங்கேக்க தான் இந்த மாற்றம் வந்தது. வருசம் பதினாறு குஸ்புவைப் பாக்க கள்ளமா ஒதுங்கின அதே வெலிங்டன் தியட்டர்ச் சந்தி . தொண்ணூறில CCA , science hall , science academy , new- master எண்டு கல்விச் சந்தியாகி மாறினதும் இதே சந்தி தான். மனிசிக்குப் பின்னால திரியேக்க வெலிங்டன் சந்தீல “ அவள் வருவாளா” எண்டு பாத்து கொண்டிருந்தது லிங்கம் கடை மூலையில . தொண்ணூறுகளில யாழ்ப்பாணத்தின் tuition கொட்டில் எல்லாம் இருந்தது இந்த சந்தி தான். இதைப் போல ஒவ்வொரு சந்திக்கும் ஓராயிரம் கதை இருக்கும். அது ரோட் சந்திக்கிறதால மட்டுமில்லை ஆக்களும் சந்திக்கிறதால தான் சந்தி எண்டு எழுவாயும் பயனிலையும் சேந்ததா இருக்கு. இப்ப இருக்கிற ஊருக்கும் இருக்காத ரோடுக்கும் board எல்லாம் போட்டிருந்தாலும் எங்கயாவது போறதெண்டால் ஒரு சந்தீல நிப்பாட்டிக் “வட்டுக்கோட்டைக்கு வழி என்ன” எண்டு கேக்கிறாக்களுக்கு விடை “ துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” எண்டு வழி சொல்லிறாக்களும் இருக்கினம் ஊரில. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  19. அண்மைக் காலங்களில் நான் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் சிறு பிள்ளை பாலியல் கொடுமைகள். ஜேர்மனியர்கள் தம் மண்ணில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அல்லது பயணித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு சமூகத்தினரால் கொலைகள் செய்யப்படுகின்றார்கள். கொலை செய்யப்படுகின்றவர்கள் எதுவுமறியாத அப்பாவிகள்.எதுவுமறியாத சிறுவர் சிறுமிகள். இப்படியான நடத்தைகளை செய்பவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டிலிருந்து வந்த அகதி தஞ்சம் கோரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாருங்கள் என வரவேற்றவர்களின் நெஞ்சிலே இன்று குத்துகின்றார்கள். ஒரிருவர் இந்த தவறுகளை செய்தால் பரவாயில்லை என்றாலும் ஆயிரமாயிரம் இப்படியான மனநிலை உள்ளவர்கள் ஜேர்மனிய மண்ணில் உலாவுகின்றார்கள் என் இன்றைய செய்திகள் கூறுகின்றன.உண்மையை சொல்ல வேண்டுமானால் மக்கள் ஏதோவொரு அச்சத்துடனேயே உலாவுகின்றார்கள் என சொல்லலாம். பல் வேறு நாடுகளில் அரசியல் குழப்பங்களால் தமது நாடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வருபவர்களை இன் முகத்துடன் வரவேற்று சகல உதவிகளையும் அதாவது உடை உறைவிட வசதி,பண வசதி,தொழில் கல்வி கற்க வசதி என சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள். ஜேர்மனிய இன்றைய சமுதாயமும் எவ்வித பாரபட்சமின்றி இவர்களுடன் கைகோர்த்து நட்புறவுடனேயே பழகுகின்றார்கள். பல இளம் சமுதாயத்தினர் தங்கள் வீடுகளில் அகதிகளாக வருபவர்களுக்கு ஒரு அறையை அவர்களுக்கென்றே ஒதுக்கி கொடுத்தும் உள்ளார்கள். பல குடும்பங்களில் அகதி என முத்திரை கொடுக்காமல் அவர்களும் மனிதர்கள் எனும் மனப்பான்மையில் பிள்ளைகளாக தத்தெடுத்து பொறுப்பேற்றும் உள்ளார்கள். இன்னும் பல இடங்களில் இளையவர்கள் இன மத பேதமில்லாமல் காதல் செய்தும் உள்ளார்கள்.காதல் கருத்து வேறுபாடு வந்து பிரியும் போது கொலைகளும் செய்துள்ளார்கள் அந்த அகதி கயவர்கள். இது ஜனநாயக நாடு,தனிமனித உரிமையுள்ள நாடு என தஞ்சம் புகுந்து விட்டு தமது மத/இன கலாச்சாரத்தை மனதில் வைத்து கொலைகளை செய்கின்றார்கள். இந்த நாடு அரசியல் சுதந்திரம் உள்ள நாடு. யாரும் எந்த அரசியலுக்கும் எந்த கருத்தும் வைக்கலாம். நன்றி அரசியலை எதிர்பார்க்காத நாடு. அப்படிப்பட்ட நாடுகளுக்கு வந்தவர்கள் கொலை,பாலியல் கொலை,பாலியல் வன்முறை,மதம் சம்பந்தப்பட்ட கொலைகளை செய்கின்றார்கள். மத சுதந்திரம் அதிகமாக கொடுக்கும் நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அப்படியான நாட்டில் இஸ்லாமுக்கு மாற்றுக்கருத்து வைத்த ஒரு மனிதரை அகதி தஞ்சம் கோரிய ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கத்தியால் முகம் மற்றும் ஏனைய இடங்களில் கூரிய கத்தியால் குத்தியுள்ளார். அதை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரியை தலையின் பின்புறம் கத்தியால் குத்தி..... அவசர சிகிச்சையின் பின் அந்த பொலிஸ் அதிகாரி காலமாகிவிட்டார். அஞ்சலிகள் இப்படியான செயல்களினால் ஜேர்மனிய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாத அளவிற்கு அகதிகள் மீதான வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள். சில இடங்களில் அகதிகள் மீதான வெறுப்பில்லாமல் பயம் காரணமாகவே போராட்டங்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சில தினங்களுக்கு முன் ஒரு ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் ஜேர்மனிய குடிமகன் மீது கத்திக்குத்து நடத்திய சம்பவம். காணொளி பார்க்க நன்றி கெட்ட உலகமிது..😡
  20. இன்று 53´வது திருமணநாள் காணும் திரு, திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு, உளம் கனிந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட ஆயுளுடனும், தேக ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு, பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம். 🙏
  21. இப்ப தானே தொடக்கம் போகப் போக மேல கீழ போக ஆயத்தமாக இருக்க வேண்டும். நேற்று தான் பெரிய ஜாம்பவான்களை சிறிய அணி தோற்கடிச்சிடும் என்று சொன்ன மாதிரி இருந்தது. கையோட கம்மாரிஸ். குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து சனிக்கிழமை குடியுங்கோ.
  22. உவர் @ஈழப்பிரியன் Texas க்கு கிட்ட தான் இருக்கிறார். எப்பிடி அமெரிக்கா வெல்லும் என்று கணித்தார்🤪 எனக்கென்னவோ உவர்தான் உள்ளுர் சூதாட்ட தரகரோ என்று சந்தேகமாய் இருக்குது🤣
  23. என்ன அமெரிக்காவுக்கு வெற்றியா????😱 Google sheet உபயம் நீங்கள்தான் என சொல்லியிருக்கிறார்..
  24. ல‌சித் ம‌லிங்கா இந்த‌ த‌மிழ் சிறுவ‌னுக்கு ப‌யிற்ச்சி அளித்தால் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு இந்த‌ த‌மிழ் சிறுவ‌னுக்கு ந‌ல்லா யோக்க‌ர் ப‌ந்து மிக‌வும் வேக‌மாக‌ போடுகிறார்........................................................
  25. ஆமா ஆமா எட்டாப்பழம் புளிக்கும்.
  26. 👍..... நேர்மை எல்லாவற்றிலும் இருக்க வேண்டும், ஆனால் அதை எங்கேயோ கைமாறி வைத்து விட்டோம் என்று உலகமே அதை இருட்டில் தேடிக் கொண்டிருக்கின்றது போல ........
  27. வணக்கம் வாத்தியார்.........! பெண் : மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே பெண் : வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே பெண் : நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே பெண் : வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே ஆண் : யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா ஆண் : அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா பெண் : தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் பெண் : சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா பெண் : கனவில் நினையாத காலம் இடை வந்து { பிரித்த கதை சொல்லவா } (2) ஆண் : கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா ஆண் : இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா.......! --- மலர்ந்தும் மலராத ---
  28. ஒரு ம‌ணித்தியால‌த்துக்கு முத‌ல் புதிய‌ த‌லைமுறை வெளியிட்ட‌ இர‌ண்டு நிமிட‌ காணொளி பாருங்கோ நாம் த‌மிழ‌ர் 8ச‌த‌ வீத‌த்தை தாண்டி விட்ட‌து க‌ந்த‌ப்பு அண்ணா....................................................................
  29. 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) - 3ம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, புரட்சிகர தமிழ்த்தேசியன், நிழலி, கிருபன்,பிரபா,தமிழ்சிறி, நுணாவிலான் 1)கோஷான் சே - 30 புள்ளிகள் 2)நிழலி - 30 புள்ளிகள் 3)தமிழ்சிறி - 30 புள்ளிகள் 4)கிருபன் - 28 புள்ளிகள் 5)பிரபா - 28 புள்ளிகள் 6)பாலபத்ர ஓனாண்டி - 26 புள்ளிகள் 7)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 26 புள்ளிகள் 8)நுணாவிலான் - 24 புள்ளிகள் 9)கந்தையா57 - 22 புள்ளிகள் 10)வாத்தியார் - 20 புள்ளிகள் 11)சுவி - 18 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 16 புள்ளிகள் 13)புலவர்- 16 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 6 - 11, 14, 15, 18,19, 22, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 17 கேள்விகளுக்கு (34 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  30. கூட்டணி வைத்தால் சீமான் காணாமல் போய்விடுவார் 😂 8% தேய்த்து 3% ஆகிவிடும் வெல்லவிட்டாலும் காரியம் இல்லை அவர் தனித்து தான் போட்டி இடுவார் அப்ப அவரது வளர்ச்சி தெரியும் கூட்டணியில் சேர்ந்தால். அவரது வாக்கு வீதம் தெரியாது சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவிட்டாலும். கூட கூட்டணி அமைப்பதில்லை மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர் அவரது மகன் வளர்த்து வரைவார். வேறு எவரும் தேவையில்லை
  31. செந்தமிழன் அண்ணாவின் கட்சிக்கு 8% வாக்குகள் கிடைத்தது வரவேற்கத்தக்கது. இரண்டு விடயங்களை செந்தமிழன் அண்ணா கருத்திற்கொள்ளவேண்டும் முதலாவது கூட்டணி இல்லாமல் எதையும் சாதிக்கமுடியாது அடுத்தது அவருக்குப் பிறகு இரண்டாம் கட்ட தலைமைகளை உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளது.
  32. உங்கள் கருத்திற்கு நன்றி புத்திசாலி, முட்டாள் எனும் கருதுகொள்களை Cognitive bias ஆக பார்க்கிறார்கள். https://www.beapplied.com/post/attribution-bias-what-is-attribution-bias நியூட்டனது பூனை வெளியே போவதற்கும் உள்ளே வருவதற்கும் கதவினை பிராண்டுவதை பார்த்து அவருக்கு தொந்தரவில்லாமல் அதுவாக போய் வர கதவில் இரு துவாரங்களை போட தச்சனை அணுகினார் (பெரிய துவாரம் தாய் பூனைக்கு, சிறிய துவாரம் குட்டிப்பூனைக்கு) தச்சன் பெரிய துவாரத்தினை கதவில் போட்டு விட்டு சிறிய பூனை பெரிய துவாரத்தினூடாக செல்லும் என கூறினார், நியூட்டனால் அதனை புரிந்து கொள்ளமுடியவில்லை இருவரது வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும்போது தாய் பூனையும் குட்டி பூனையும் அந்த பெரிய துவாரத்தினூடாக சென்றது. ஒவ்வொருவரது புரிதலும்(Perception) அவர்களது பிண்ணனியில் மாறுகின்றது. இந்த காணொளியில் அந்த பெண் ஒஸ்ரியா என கூறுவார், அதனை அவுஸ்ரேலியா என புரிந்து கொண்டு, அவுஸ்ரேலியர்களின் பேச்சு வழ்க்கில் அவர்களது பாரம்பரியமான இன்னொரு இறாலை பார்பக்கியூவில் போடு என்பார் அந்த நடிகர், இந்த நகைச்சுவை புரிவதற்கு அவுஸ்ரேலியர்களினது பாரம்பரியம் அறிந்தவர்களால் முடியும் மற்றவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளமாட்டார்கள். மற்றவர்களது கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எந்த வகையான கேள்விகளும் ஒரு புதிய பரிணாமத்துடன் ஒரு புரிதலை உருவாக்கும் அதனால் நன்மைதான் உண்டாகும், எனக்கு தெரிந்த விடயங்களில் கள உறவுகள் அது தொடர்பான எந்தவித பரிட்சயமுமில்லாமல் விவாதிக்கும் போது அது எனக்கு அதிக புரிதலை ஏற்படுத்துகிறதனை எனது அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன், அதனை எப்போதும் விருப்புடன் எதிர்பார்ப்பதுண்டு(சிலர் தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் செய்வார்கள் அது அவர்களது திருப்திக்கு அதனை மட்டும் கண்டு கொள்வதில்லை).
  33. 18)ரி ஆர் பாலு ( திமுக) - 1ம் இடம் எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 14 புள்ளிகள் 2)கிருபன் - 14 புள்ளிகள் 3)வாத்தியார் - 14 புள்ளிகள் 4)goshan_che - 12 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 12 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 12 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 12 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 12 புள்ளிகள் 9)கந்தையா57 - 12 புள்ளிகள் 10)நுணாவிலான் - 12 புள்ளிகள் 11)பிரபா - 12 புள்ளிகள் 12)புலவர் - 12 புள்ளிகள் 13)சுவி - 10 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 10, 11, 15, 18, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  34. நாம்தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் நிச்சயம் 8 வீதத்திற்கு மேல் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறப் போகிறது என்பது 100 வீதம் நடக்கத்தான் போகிறது. அதை சில நா;தமிழர்கட்சிக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்களால் சீரணிக்க முடியவில்லை. அதனால்தான் ஆதாரத்தை; தருமாறு கேட்கின்றனர். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பொழுது நம் தமிழர்கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல அதனால்தான் மற்றவர்கள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சிலநாட்களில் உண்மை வெளிவரும். தனித்துர நின்று ஒரு கட்சி பெற்ற வாக்குகளை வைத்து இலகுவாக ஊகிக்க முடியும் ஆனால் பல கட்சிக் கூட்டணி அமைத்து பெுhட்டியிட்ட கட்சிகளின் நம்பகத்தன்மையற்ற வாக்கு சத வீத்தைதை ஏற்றுக் கொளபவர்களால் தனித்து நின்று பெற்ற வாக்குகளின் அடிப்படயில் நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகளை வைத்து வாக்கு சதவீதத்தைக் கணிப்பிட முடியவில்லை ஆதாரத்ரதத் தாருங்கள் என்கிறார்கள். திமுகவின் உணமையான வாக்கு சதவீத்தை 100 வீத் இவர்களால் தரமுடியுமா?நாம் மழிழர் அங்ககரிக்கப்பட்ட கட்சியாக மாறுவது சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதுவும் 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில்)
  35. 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி - 2ம் இடம் பாலபத்ர ஓனாண்டி, நிழலி,கிருபன், வாத்தியார் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 6 புள்ளிகள் 2)கிருபன் - 6 புள்ளிகள் 3)வாத்தியார் - 6 புள்ளிகள் 4) goshan_che - 4 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 4 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 4 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 4 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 4 புள்ளிகள் 9)கந்தையா57 - 4 புள்ளிகள் 10)நுணாவிலான் - 4 புள்ளிகள் 11)பிரபா - 4 புள்ளிகள் 12)புலவர் - 4 புள்ளிகள் 13)சுவி - 2 புள்ளிகள்
  36. விவசாய பழமொழிகள் விளக்கத்துடன் விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன. அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம். தவளை கத்தினால் தானே மழை மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர். அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம் மாலை வேளையில் ஈசல்கள் நிறைய பறந்தால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் மழை பெய்யும். தும்பி எட்ட பறந்தால் தூரத்தில் மழை. தும்பி கிட்டப் பறந்தால் பக்கத்தில் மழை. தட்டான் உயரமாகப் பறந்தால் தூரமாக மழை பெய்யும். தட்டான் தாழ்வான உயரத்தில் பறந்தால் அருகில் மழை பெய்யும். எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல். எறும்பு உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு கூட்டமாகச் சென்றால் கட்டாயம் பெரும் புயல் வரும். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. மார்கழி மாதத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராயிருக்கும். அப்போது தண்ணீர் தேவை இருக்காது. அப்போது மழை பெய்வது பயிர் விளைச்சலை பாதிக்கும். எனவே மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. தை மழை நெய் மழை நெய்யானது சிறிதளவு ஊற்றினால் உணவு ருசிக்கும். அதே போல் தை மாதத்தில் பெய்யும் சிறிதளவு மழையானது வேளாண்மையை மணக்கவே செய்யும். தைப் பனி தரையை துளைக்கும். மாசிப்பனி மச்சை பிளக்கும். தை மாதப்பனியானது தரையை துளைக்கும் அளவுக்கு இருக்கும். மாசி மாதப்பனி உள்வீட்டிற்குள்ளும் குளிரும் அளவு இருக்கும். மச்சி வீடு என்பது பழங்காலத்தில் நீளமான நெட்டு வீடுகளில் கடைசியில் இருக்கும் அறையைக் குறிக்கும். தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு தை மற்றும் மாசி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். ஆதலால் கூரை உள்ள வீடுகளில் உறங்க வேண்டும். திறந்த வெளியில் உறங்கக் கூடாது. புத்து கண்டு கிணறு வெட்டு கரையான் புற்றானது நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில்தான் பொதுவாக அமைந்திருக்கும். எனவேதான் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்டினால் தண்ணீர் கிடைக்கும். வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் பள்ளத்திலேயே தண்ணீர் தங்கும். வெள்ளம் சூழும் என்றாலும் பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். காணி தேடினும் கரிசல்மண் தேடு. சிறிய அளவு நிலம் வாங்கும்போது நீரினைத் தேக்கும் தன்மை உடைய வேளாண்மைக்கு ஏற்ற, கரிசல் மண் உள்ள நிலமாக வாங்குவது சிறந்தது. களர் கெட பிரண்டையைப் புதை களர் நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்து வைக்க வேண்டும். கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி. கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டால் நிலம் வளமாகும். அதே போல் வறுமை மிக்க குடும்பத்திற்கு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும். நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற நிலத்தில் எருக்கச் செடி விளையும். எனவே ஒரு நிலத்தின் வளமையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம். நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். ஓரிடத்தில் வேளாண்மைக்கு தேவையான நீரும், வளமையான நிலம் இருந்தாலும், காலநிலையை கணக்கில் கொண்டே வேளாண்மை செய்ய வேண்டும். ஆடிப்பட்டம் பயிர் செய். ஆடி மாதத்தில் செய்யும் பயிரானது நல்ல விளைச்சலைத் தரும். இதனையே ஆடிப்பட்டம் பயிர் செய் என்றனர். விண் பொய்த்தால் மண் பொய்க்கும். பருவ மழை பெய்யாவிட்டால் பயிர் விளைச்சல் இருக்காது. மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை. மழை நீரை மட்டும் நம்பி இருக்கும் இடங்களில் நஞ்சை பயிர்களை பயிர் செய்யவும். மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் ஆகியவற்றின் மடைக்கு அருகில் இருக்கும் நிலங்களில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம். களரை நம்பிக் கெட்டவனும் இல்லை. மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. களர் நிலமானது தண்ணீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. மணலானது தண்ணீரை வடித்து விடும் தன்மை உடையது. அதனால் களர் நிலத்திற்கு ஏற்ற பயிரை பயிர் செய்தவன் ஏமாற மாட்டான். மணலில் பயிர் செய்தால் விளைச்சல் நன்றாக இருக்காது. உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழவழ. மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் இல்லாது போகுமோ அது போல உழவில்லாத நிலம் பலன் தராது. அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல். வேளாண்மைக்கு நிலத்தை தயார் செய்யும்போது அகலமாக உழுவதைத் தவிர்த்து ஆழமாக உழ வேண்டும். புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு. புஞ்சை நிலத்தைவிட நஞ்சைக்கு உழவு செய்யும்போது மண்ணானது நன்றாக சந்தனம் போல் மையாக இருக்குமாறு உழவ வேண்டும். குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. எரு இடப்படாத வேளாண்மை பயன் தராது. ஆடு பயிர் காட்டும். ஆவாரை கதிர் காட்டும். ஆட்டுச் சாணம் பயிரை வளரச் செய்யும். ஆவாரை உரம் பயிரில் தானிய முதிர்ச்சியை உண்டாக்கும். கூளம் பரப்பி கோமியம் சேர். கூளம் எனப்படும் சிதைந்த வைக்கோல் கழிவுகளை பரப்பி வைத்து அதன்மீது கோமியத்தை தெளித்தால் உரம் விரைவில் சத்தானதாக மாறும். ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. ஆற்று வண்டலானது வளமானதாக உள்ளதால் அது பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து பின் அதனை மடக்கி உழுது நிலத்தின் வளத்தை அதிகரிக்கும். காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். பயிருக்கு தினமும் தண்ணீர் விடக்கூடாது. தண்ணீர் பாய்ச்சி நிலம் காய்ந்தபின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும். தேங்கிக் கெட்டது நிலம்; தேங்காமல் கெட்டது குளம். நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது. குளத்தில் தண்ணீர் தேங்காவிடில் பயிர்கள் வாடும். கோரையைக் கொல்ல கொள்ளுப்பயிர் விதை. களைப்பயிரான கோரையின் வளர்ச்சியை தடை செய்ய கொள்ளுப்பயிரினை பயிர் செய்யவும். சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும். வேளாண்மை செய்பவர் தன்னுடைய சொத்துகளைப் பாதுகாப்பது போல் விதைகளைப் பாதுகாக்க வேண்டும். பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு. சரியன பருவத்தில் பயிரினை பயிர் செய்ய வேண்டும். ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர் வைத்த தனம். ஆடி ஐந்தாம் தேதி விதைக்க வேண்டும். புரட்டாசி பதினைந்தாம் தேதி நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் சொத்து போன்று அது பலன் தரும். கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும். விதைகளை இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும். அதனால் தானியங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் களஞ்சியம் நிறையும். நெருக்கி விதைத்தால் விளைச்சல் பயன் தராது. அதனால் வெறும் வைக்கோல் மட்டும் கிடைக்கும். இதனால் வைக்கோல் போர் உயரும். விவசாய பழமொழிகள் படிப்போம். அவை தரும் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம்.
  37. போன மாதம் ராய்ட்டர்ஸ் இங்கு ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தியது. அதில் ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களில் 25% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தனர். எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திய வாக்காளர்களில் 60% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்ததாகவும் ஞாபகம். இவரின் தீவிர ஆதரவாளர்கள் இன்னும் தீவிரமாக மாறுவார்கள். தீக்குளிக்கும் வழக்கம் இங்கு இல்லாதது நல்ல ஒரு விடயம். மற்றபடி, இந்த தீர்ப்பு, கிடைக்கப் போகும் தண்டனை எதுவாகினும், இவருக்கு ஒரு பின்னடைவு என்றே நினைக்கின்றேன்.
  38. இந்த "இப்போதிருக்கும் நிலை" என்ன? ட்ரம்ப் இருந்ததை விட, அல்லது ட்ரம்ப் இனி வந்தால் இருக்கப் போவதை விட எவ்வளவு கீழான நிலை அல்லது மேலான நிலை? நான் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டிருப்பது போல, மனனப் போட்டியில், அல்லது ஒலிம்பிக்கில் ஓடிப் பதக்கம் வாங்கக் கூடிய ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டியதில்லை. அதற்கு தனியாக அமெரிக்காவில் ரீம் இருக்கிறதென நினைக்கிறேன்😂. இது புரியாத வாக்காளர்களுக்கு பைடனை விட ட்ரம்ப் உசத்தியாகத் தெரிவதில் வியப்பில்லை. ஆனால், இப்படியான வாக்காளர்களால் தேர்தல் வெற்றி தீர்மானிக்கப் படப் போவதுமில்லை!
  39. அட்டகாசமான எழுத்து / மொழி நடையுடன் மீண்டும் வருகை தந்த பாஞ்ச் அண்ணாவை மனசார வாழ்த்தி வரவேற்கின்றேன். தொடர்ந்து இணைந்து இருங்கள்.
  40. பாஞ்ச் ஐயாவை மீண்டும் யாழில் காண்பது சந்தோஷம்😀
  41. வணக்கம் பாஞ்ச் .......என்றும் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்........! தொடர்ந்தும் யாழில் இணைந்திருங்கள்........ மிகவும் முயற்சி எடுத்து உங்களை இங்கு அழைத்து வந்த சிறியருக்கும் நன்றி........! 👍
  42. மகிழ்ச்சி
  43. பிச்சை போட்டால் நஞ்சையும் வாங்கும் நிலையில் இருக்கும் நாடும் ..அதன் தலைவரும்..நாடு பெரிதல்ல நமக்கு பதவியும் பணமும்தான் முக்கியம் ...என்ற கொள்கை உடையவர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.