Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3054
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  3. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    10
    Points
    7596
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/10/24 in all areas

  1. 21வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி4 விக்கெட்டுகளை 23 ஓட்டங்களிலேயே இழந்து தடுமாறினாலும், ஹென்றிக் க்ளாஸனதும் டேவிட் மில்லரினதும் நிதானமான ஆட்டத்தின் உதவியுடன் இறுதியில் 6 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய நிதானமாக ஆடினாலும் இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் வெல்வதற்கு எடுக்கவேண்டிய நிலையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 6 ஓட்டங்களையே எடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் என்ற நிலையை மட்டுமே அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 21 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 36 2 பிரபா USA 34 3 ரசோதரன் 34 4 ஈழப்பிரியன் 32 5 சுவி 32 6 நந்தன் 32 7 வாதவூரான் 30 8 ஏராளன் 30 9 குமாரசாமி 28 10 தமிழ் சிறி 28 11 கிருபன் 28 12 கந்தப்பு 28 13 வாத்தியார் 28 14 எப்போதும் தமிழன் 28 15 நீர்வேலியான் 28 16 வீரப் பையன்26 26 17 நிலாமதி 26 18 தியா 26 19 புலவர் 26 20 P.S.பிரபா 26 21 நுணாவிலான் 26 22 அஹஸ்தியன் 26 23 கல்யாணி 26 இப்போதைக்கு @goshan_che முதல்வர் பதவியில் இருந்து இறங்குகின்ற திட்டத்தில் இல்லை!
  2. பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் பெரும்பாலும் இந்தக் கட்சி வெற்றி பெறவில்லை. வெளிநாட்டவர்களின் அதிகமான வாக்குகள் மட்டும் காரணமல்ல. பொருளாதாரம் எதிர்காலம் பற்றிய பரந்த அறிவுள்ளவர்கள் இப்படியான நகரங்களில் உள்ளனர். கிராமப் புறங்களில் உள்ளவர்களை வெளிநாட்டவர்களால் பிரான்சின் பணவீக்கமும் பாதுகாப்பும் சீரழிந்து விட்டதாக நம்பவைத்துள்ளனர். பிரான்சின் கலாச்சாரம் இந்த வெற்றிலைத் துப்பல் கூட்டத்தினால் சீரழிந்து விட்டதாகவும் தமது வேலைவாய்ப்பினைப் பறித்து வெற்றிலை துப்பாத கூட்டம் முன்னேறி விட்டதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. எந்த வகையிலும் வெளிநாட்டவர் வேண்டப்படாதவர்கள். ஒழுங்காக இருந்து முன்னேறினாலும் பிரச்சனைதான். ஜேர்மனியிலும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்களும் உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டி வரலாம். இப்போதே நீங்கள் அனுபவிக்கும் வசதிகளைக் துறக்க ஆயத்தப்படுத்துங்கள். 🤣 எனக்குத் தெரிந்த தமிழர்கள் சிலரும் இந்த இனவாதக் கட்சிக்கு வாக்களித்திருந்தனர். ஏனென்றால் வெளிநாட்டவர்களின் தொல்லை தாங்க முடியவில்லையாம் 😂. இந்தத் தமிழர்கள் யாரென்று பார்த்தால் அரசாங்கத்துக்கு வரி ஏய்ப்புச் செய்பவர்களும் உதவிப் பணத்தை எடுத்துக் கொண்டு களவாக வேலை செய்பவர்களும் மற்றும் வேறு வழிகளில் அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களுமாவர் இதில் அடங்கும்.
  3. கடந்த வாரம் தான் அதி வலது சாரி நாசிகளின் பிடியில் இருந்து மேற்கு ஐரோப்பாவை மீட்க இலட்சக்கணக்கான அமெரிக்க, பிரிட்டன், கனேடிய இளைஞர்கள் உயிரைத் தியாகம் செய்து நோர்மண்டியில் வந்திறங்கிய (D-Day) 80 வருடத்தை நினைவு கூர்ந்தார்கள். இனி இந்த நவீன அதி வலது சாரிக் குப்பைகள் ஐரோப்பாவை மீளவும் ஒரு இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும்! ஏதாவது ஆனால், இருக்கவே இருக்கிறார்கள் அமெரிக்கர்களும், கனேடியர்களும், மீண்டும் வந்து மீட்டுக் கொடுக்க! இப்படித் தான் ஓடுகிறது ஐரோப்பாவின் வாழ்க்கை வட்டம்😎!
  4. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் வலதுசாரிகளின் வெற்றியை நீங்கள், "மண்ணின் மைந்தர்களின்" வெற்றியாக கருதி, நா.த. கட்சியையும் அவர்களைப் போன்றவர்களே என்று சொல்கின்றீர்கள். அதாவது 16 வீதம் எடுத்து இரண்டாவதாக வந்த இனவாதக் கட்சியையும் நா.த.க வினரையும் ஒன்றாக ஒப்பிடுகின்றீர்கள். தமிழகத்தில் தமிழ் தேசியத்தின் எழுச்சி, ஐரோப்பாவில் வலதுசாரிகளின், இனவாத அரசியல் சக்திகளின் எழுச்சிக்கு ஒப்பானது என்றும் சொல்கின்றீர்கள். இந்த இனவாத எழுச்சியைத் தான் நா.த.க வினரும் செய்கின்றனர் என நம்புகின்றீர்கள். இங்கு நான் உட்பட நா.த,க வின் அரசியலை வெறுப்பதன் காரணமும் இதுதான். நாம் எழுதவேண்டிய பல விடயங்களை நீங்களே, இரண்டு தரப்பினரையும் ஒன்றாக தராசில் வைத்து எழுதியமைக்கு நன்றி
  5. இன்று பிராந்சில் நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இதனையடுத்து பிரெஞ்சு அதிபர் மக்ரோன் இன்று இரவு பிரான்சின் பாராளுமன்றம் சட்டவரைபுக்கு உட்பட்ட வகையில் கலைக்கப்படுவதாக தொலைக்காட்சியில் திடீரென அறிவித்தார். இந்த மாத இறுதியில் பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தல் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். பல்லின மக்களைக் கொண்ட பிரான்சில் தேசியவாதிகளின் எழுச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமானது. அதுவும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள வேளையில் இது பிரான்சுக்கு அவப்பெயரை உண்டாக்கும். தொடர்புபட்ட பிரெஞ்சுச் செய்தி: https://www.lemonde.fr/politique/live/2024/06/09/en-direct-resultats-europeennes-2024-emmanuel-macron-annonce-la-dissolution-de-l-assemblee-nationale-apres-le-score-historique-du-rn-aux-europeennes_6238193_823448.html
  6. 🤣.... ஒரு மணித்தியாலம் பிந்தி நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததைத் தானே சொல்கிறீர்கள்........
  7. மன்னிக்க வேண்டும், குருஜீ. இப்ப காலம் மாறிப் போச்சு..... இப்ப சின்ன அணிகள், பெரிய அணிகள் வேற: பெரிய அணிகள்: ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, ........... சின்ன அணிகள்: இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ............
  8. தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு” அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம் பெயர் தான் என்னவோ தமிழ் பொது வேட்பாளர. வேண்டாம் என்பது கொழும்பு வாழ் மக்களால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாத. ரணிலுக்கு சுமத்திரன். எப்படி தமிழ் மக்கள் மத்தியில் இது ரணிலின். பிரசாரக் கூட்டமென்று சொல்லி பிரசாரம் செய்ய முடியும்??. கொழும்பு வாழ் மக்கள் யார் சொல்லி ரணிலுக்கு வாக்கு போடவில்லை?? இது பற்றி சுமத்திரன். ஏன். பேசுவதில்லை?? ஆனால் 2005 இல் வாக்கு போடவில்லை என்று மிகவும் கவலைப்படுகிறார. ஏன்?? இன்றைக்குக்கூட ரணில் ஐனதிபதி தான் தமிழருக்கு சுயாட்சி வழங்கலாம் ஏன்? வழங்க இல்லை ?? அதாவது விருப்பமில்லை 2005 இவரை தெரிவு செய்திருந்தால் சுயாட்சி வழங்கி இருப்பாரா?? இந்த தேர்தலிலும் இவரை தெரிவு செய்தால் தமிழருக்கு சுயாட்சி வழங்குவாரா?? இல்லை இந்த ரணில் வாழ் நாள் அரசியல்வாதி. இதுவரை தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏதாவது உண்டா??
  9. இல்லை மிகுதி 80% இல் 20 % வெளிநாட்டவர்களுக்கு அதிக சலுகை கொடுக்கக் கூடாது எனும் பகுதி. ஆனால் வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம். இன்னும் ஒரு 20 % வெளிநாட்டவர்களை தங்கள் அடிமைகளாக நினைத்து அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த நினைப்பவர்கள். அதனால் வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம் மிகுதி 20 வீதத்தினர் வெளிநாட்டவர்கள் தங்களைவிடப் பொருளாதாரத்தில் முன்னேறுவதை பிடிக்காதவர்கள் . அதுவரை வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம். இன்னும் 20 வீதமானவர்கள் நித்திரை போல நடிப்பவர்கள் தங்களுக்குள்ளேயே வெளிநாட்டவர்களுக்கு எதிராகப் பேசிக்கொள்வார்கள் நல்லவர்களை போல நடித்துக் கொண்டிருப்பார்கள் . நேரம் வரும்போது AFD எனும் கட்சியை விடப் பலமடங்கு துவேசத்தைக் காட்டுவார்கள் . ஆனாலும் அதுவரை வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம்
  10. முக்கியமான ஒன்று இக் கட்டுரையில் விடுபடப்பட்டுள்ளது. ஜேர்மனி இராணுவம் எந்த உரிமையில் 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் காலூன்றியிருந்ததோ அதே உரிமை ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக ஜேர்மனிக்குள் வருவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அது மட்டுமின்றி அகதிகளை உள்வாங்குதல் சர்வதேச/ஐரோப்பிய உடன்படிக்கைகளின்படி கட்டாயமான ஒன்று. பாவம் பரிதாபம் பார்த்து அவர்களை ஜேர்மன் ஆதரிக்கவில்லை. வந்தவர்கள் விதிமுறைகளை மீறுவதை வேறு விதமாக அணுக வேண்டும். இது மதத் தீவிரவாதம். தங்கள் சமுதாயம் மேற்குலகினால் பாதிக்கப்பட்டதால் பழவாங்கும் நோக்கத்தோடு வருபவர்கள், மேற்குலகின் வெறுப்பை உள்மனதில் வைத்துக் கொண்டு வருபவர்கள் மற்றும் மூளைச்சலவை செய்யப்படுபவர்களே பெரும்பாலும் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள். இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஜேர்மனி இனவாதக் கட்சியான AfD இந்த வருட ஆரம்பத்தில் இரகசிய கூட்டம் ஒன்றில் தாம் ஆட்சிக்கு வந்தால் ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்கள் அனைவரையும் வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசித்தது. இதற்கு எதிராக ஜேர்மனி மக்கள் இலட்சக்கணக்கில் (14 இலட்சம் என்று கூறப்படுகிறது) நாடெங்கிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பலர் AfD கட்சியினைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரினர். https://www.lefigaro.fr/international/deuxieme-jour-de-manifestations-en-allemagne-contre-le-parti-d-extreme-droite-afd-20240121
  11. 'தோழர் இரும்பு' என்னும் இச் சிறுகதை ஜான் சுந்தர் அவர்களால் எழுதப்பட்டு 'அகழ்' இதழில் வெளிவந்திருக்கின்றது. 'தோழர்கள்' எப்போதுமே கொஞ்சம் 'இரும்பு' போன்றவர்கள்தான். கொள்கை, கோட்பாடுகள், இலட்சியம் என்று உறுதியாக, வளைந்து கொடுக்காமல் வாழ்பவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்வதில்லை, அவை ஒவ்வொன்றும் தனித்தனியே முக்கியமானவையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை போலும். இச் சிறுகதை தோழர்களின் இன்னொரு பக்கத்தை, இளகிய மனங்களை, காட்டுகின்றது. இதை வாசித்த போது இது ஒரு சாதாரண கதையாகத் தான் தெரிந்தது. ஆனாலும் பின்னர் இது தினமும் மனதில் வந்து போகின்றது. கதையில் நிகழும் பிரதான விடயங்களுக்கு பெரிதாக சம்பந்தம் இல்லாமல் இருக்கும் இந்த ஒரு வசனம் எங்களில் பலரை சொல்வது போலவே இருக்கின்றது: ” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர். ***************** தோழர் இரும்பு (ஜான் சுந்தர்) ----------------------------------------------- வீட்டுச் செலவுக்கு காசு கொடுக்காமல் சாப்பிடுவதில்லை என்கிற முடிவில் இருக்கிறேன். மகள்கள் வற்புறுத்தி சாப்பிட வைத்தாலும் மறுசோறு வாங்குவதில்லை என்று ஒரு வைராக்கியம். நான் என்ன செய்யட்டும்? வேலை வந்தால்தானே? ”ஹூம்… வந்துட்டாலும்….” இந்த கஞ்சத்துக்குப் பிறந்தவர்கள் தருகிற சம்பளம் இருக்கிறதே அதை நினைத்தால் மனக்கண்ணில் ஊறுங்கண்ணீர் தோழர் குணசேகரனின் குரல் வழியே ’ஆறாப்பெருகி ஆனை குளிப்பாட்ட, குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட’ பெருகிப் பெருகி வழிந்து கொண்டே இருக்கும். சின்னமகள் என்னை இழுத்துக் கொண்டு போய் தரையில் அமரச் செய்தாள். பெரியவள் உட்கார்ந்த இடத்துக்கே கைகழுவ பாத்திரமும், தண்ணீர் செம்பும் கொண்டு வந்தாள். வீடு என்று ஒன்று இருந்தால் இப்படி மனுசனைத் தாங்க வேண்டும். அதுவும் மனசு பொறுக்காத கோபத்தில் இருக்கிற போதோ, நெஞ்சு பாரமாய் இருக்கிறபோதோ தாங்கியே தீர வேண்டும். அதை விட்டு விட்டு ஏற்கனவே புண்ணாக கிடப்பதற்குள் விரலை விட்டு குடையக் கூடாது. கடந்த இரண்டு மாதங்களாக தன் சேமிப்பால் இந்த குடும்பச் செலவை சமாளித்து வருகிற என் இணையர் தட்டை வைத்து சோற்றை அன்னக்குத்தியில் அள்ளி வைத்து குழம்பை ஊற்றினார். நான் அவரது கண்களைப் பாராமல் சாப்பிடத் துவங்கினேன்.முருங்கைக் கீரையும் பருப்பும் சேர்ந்தாலே பயங்கரமாயிருக்கும் . இதில் அரைத்த தேங்காயும், தேன்மலரின் பிரத்யேகமான தாளிப்பும் சேர்ந்து கொண்டு மணக்க , குழம்பு அதிபயங்கரமாயிருந்தது. நான் என் வைராக்கியத்தை மறந்து, “இன்னும் கொஞ்சம் சோறு போடுங்க தேன்மலர்” என்றபோது, அலைபேசி ‘தோழர். இரும்பு’ என்று ஒளிர்ந்தது. “வேண்டாம்… போதும் ” தட்டோடு எழுந்தேன். “தோழர்! வண்ட்டன் ரெண்டே நிமிஷம்” என் உற்சாகத்தைக் கண்டதும் இங்கே இன்னொரு தாளிப்பு துவங்கியது. ” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர். நான் கையைக் கழுவிவிட்டு மொட்டை மாடிப்படிகளுக்கு நடந்தேன். “ இன்னேரத்துக்கு மாடிக்கு போக வேண்டியது நடுசாமத்துல எறங்கி வரவேண்டியது” மணியைப் பார்த்தேன். பத்தரையாகி விட்டிருந்தது. நாளைக்குப் பேசுவோமா? இல்லை. முடியாது. இப்போது இருக்கிற மனக்குடைச்சலில் இருந்து நான் வெளியே வரவேண்டும். தோழர் ‘இரும்பு’என்கிற இரும்பொறை இளஞ்சேரல் மாலெ இயக்கத்தில் பகுதி நேர ஊழியராக இருந்து யோசனைக்கு எட்டாத பெருங்காரியங்கள் செய்தவர். பின்னாட்களில் இயக்கத்திலிருந்து விலகி மனைவியும் குழந்தைகளுமாக திருப்பூரில் வசிக்கிறார். தமிழாசிரியை மகன் என்றாலும் பள்ளியில் கலகம் செய்து படிப்பை முடிக்காமலே வெளியேறியதால் தற்போது பின்னலாடைத் துறையில் பணி. “ஒண்ணுமில்ல தோழர் சாப்புட்டீங்ளா?” வானம் கழுவி விட்டாற்போலிருந்தது. “ஆச்சு தோழர் சொல்லுங்க” தாமதமாக கூடு திரும்புகிற ஏதோ ஒரு பறவை கீச்சிட்டது தோழர் ஒன்றும் இல்லை என்றால் பகிர்ந்து கொள்ள ஏதோ இருக்கிறது என்று பொருள். ஏதோ என்றால் தட்டையான தகவலாக இருக்காது. புதிய களங்களில் எளிய நடையில் மனதை பிடித்துக் கொண்டு போய் அசாத்தியமான பரவச நிலைக்கு தள்ளுகிற முத்துலிங்கத்தின் கதைகள் பற்றியோ, “ஏந்தோழர்? நெசம்மாலுமே அந்தாளுக்கு எம்பது வயசு ஆகுதுங்ளா?”. ‘நல்ல புணர்ச்சிக்கிடையில் அழுகிற பெண்’ வருகிற பூமா.ஈஸ்வர மூர்த்தியின் கவிதை வரியைக் குறித்தோ, “இதென்னுங் தோழர் விசுக்குனு இப்புடி சொல்டாப்ள?”. ஒவ்வொன்றாகத் தொட்டுத்தொட்டு தொடர்ச்சியாக பேசிப்பேசி அவரது சொந்த வாழ்வில் கண்ட மனிதர்களைக் குறித்துப் பேசுவது என்று போகும். “பொம்பள சும்மா ஆறு ஆறறை அடிக்கு கொறையாம இருக்கும் தோழர்.. “ சாட்சியாக நேரில் பார்த்த சம்பவங்களை அசலான கொங்குத்தமிழில் விவரிப்பார். “.. அவரும் ஆதிக்கசாதில பொறந்தவருதானுங்க..ஆனா ஆளு எப்புடி தெரியிங்ளா? ப்யூர் கம்னிஸ்டுங் தோழர்.. தங்கம்னா தங்கம்ங்! சுயசாதிக்காரங் கண்ணுக்குள்றயே வெரல உட்டு ஆட்டிப்போட்டாருங் அவுனுக உடுவானுகளா கொன்ட்டானுக” வீணாகப்போக இருந்த நாளை பேச்சில் வளர்த்தி உருப்படியாக்கித்தருவார். “இங்கே எவன்ட்டயும் எதயிம் பேச முடில தோழர்! ‘ஏனப்பா முந்தியெல்லாம் வெட்டும் குத்துமா நல்லா ரத்தக் கதையா சொல்லுவ? இப்பல்லாம் நெஞ்ச நக்குற கதையா இருக்குதேடா நஞ்சப்பா’ன்றானுக.. இவனுக இப்போதைக்கு பக்குவப்பட மாட்டானுக தோழர்” ” நீங்கயேங்க அதயெல்லாம் சட்டை பண்றீங்க?” “இன்னக்கி ஒரு கலியாணப் பத்திரிக்கை வந்தது தோழர். மனசுக்கே நெம்ப சந்தோசமாயிருச்சுங்” நான் மௌனமாய் இருந்தேன். தோழர் தொடர்ந்தார். எனக்கு தோழர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தால் போதும். “ஒரு இருவது வருஷத்துக்கு முன்னாடி இதே திலுப்பூருல நானும் என்ர ஃப்ரண்டும் டீக்கடயில நின்ட்டுருந்தோம். எனக்கு செம்ம டயர்டாருக்கு. ஏறுவெய்யல்ல வெடி நைட்டு முடிச்சு நிக்கிறன். மறுக்கா பகல் பாக்கோணும். வேல தெரிஞ்ச ஆளுக கெடைக்க மாட்டாங்க தோழர். எதையப் பார்த்தாலும் சலிப்பா இருக்குது…” நான் செருப்பை மாட்டிக் கொண்டு தோழரோடு வானத்துள் இறங்கி நடந்தேன்.சாயம் போன தர்பூசணித் துண்டாக வீதியில் கிடக்கிறது வெளிர் நிலா. “…சரீங்களா? ஒரு குடும்பம் வந்து டீக்கடயோரமா நிக்குது. ஒரு பெரியவரு.. அவரு சம்சாரம், அப்பறம் அவிய பொண்ணு,பையன்” “ம்ம்” மனம் வரைகிற காட்சியில் திருப்பூர் துலங்கும். ” பெரியவருதான் டீய வாங்கி வாங்கி ஒரோருத்தருக்கும் குடுக்குறாப்ள” “செரி” “பொண்ணும் பையனும் டீய வாங்கி குடிக்கிறாங்க… இந்தம்மா டீ டம்ளர வாங்கி கைல வெச்சுட்டு தலய குனிஞ்சே நிக்கிது “ “ஏன்?” ” நமக்குந்தெரீலியே தோழர்… குறுக்க பேசாம கேளுங்க… பெரியவரு சமாதானப்படுத்தற மாதற ஏதோ சொல்லீட்டுருக்காரு” எனக்கு இப்போது உம் கொட்டுவதற்கு யோசனையாக இருந்தது “நம்ம ஃபிரண்டு சும்மா இருக்காம ‘ஏனுங்க ஏதாச்சிம் பிரச்சனைங்களா? உதவி கீணு வேணுமா?’ அப்படின்னு கேட்டுட்டானுங்க “ “இவன் எப்புமே பக்கத்துல இருக்கறவங்க கிட்ட வாய குடுத்து எதயாவது கேப்பானுங்க நேரம் போறதுக்கு “ “உம்மையில உதவியெல்லாஞ் செய்யமாட்டானுங்க எனக்கு நல்லா தெரியிம் “ “பெரியவரு யாராச்சிம் ஏதாச்சிம் கேப்பாங்களான்னு பாத்துட்டுருந்தாப்ள போல “ “அவரு பாட்டுக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டாப்ள “ “நல்லா வாழ்ந்து கட்ட குடும்பம் “ “கடங்காரனுக தொல்ல” “குடும்பத்தோட கெளம்பி வன்ட்டாங்க “ “ஏதாவது வேல வேணும் “ “இவன் நல்லா ஊ..ஊன்னு கதை கேக்கறானுங்னா?” “ம்ம்….ம்ம்” “நான் நடுல பூந்து எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணங்கட்ட பேசி அவரு கம்பெனில சேத்து வுட்டன்” “நாலு பேருமே… செக்கிங்ல ஒருத்தரு, மடிக்கிறது ஒருத்தரு, பண்டலுக்கு ஒருத்தரு, கடைக்கு போறதுக்கு ஒரு ஆளுன்னு செட்டாயிட்டாங்க” “பெரியவர் வேலை நேரம் போக ,வெளிய மேஞ்சுக்கிட்டுருந்த ஆடு மாடுகள வேடிக்கை பாக்கறது… அதுகளுக்கு தழையப் புடுங்கி போடறதுன்னு இவரா செஞ்சிட்டுருந்திருக்காப்ள… அதுல ஒரு பசுமாட்டுக்கு வாந்தி பேதின்னு என்னவோ தொந்தரவு இருந்திருக்குமாட்டக்குது …” “இவரு ரோட்டோரம் தேடித்தேடி அங்கங்க மொளச்சுக்கெடந்த செடியப் பறிச்சு கசக்கி துணில பொதிஞ்சு மொகமூடியாட்டம் கட்டி வுட்டுருக்காரு அது ரெண்டு மூணு நாள்ள சும்மா கிண்ணுன்னு ரெடியாயிருச்சு” “இதையெல்லாம் ஓனர் பார்த்துட்டே இருந்திருப்பாப்ளயாட்டம் இருக்குது” “பெரியவரே! நீங்க நம்ம தோட்டத்த பாத்துக்கோங்கன்னு சொல்லி தோட்டத்து வீட்டுக்கு குடிபோக சொல்லிட்டாரு” ”அடங்கொன்னியா!” “பெரியவரு ஊர்ல பெரிய பண்ணக்காரரா இருந்திருப்பாராட்டக்குது” “இங்க தோட்டத்து வெளச்சல ரெண்டாக்கி ..” “கால்நடைகள பெருகப்பண்ணி…” “பார்ரா” ” ஆமா தோழர்! கூடுதலா கெணறு தோண்டி…” “நாலஞ்சு வருஷத்துல தோட்டத்த ஜம்முன்னு ஆக்கிட்டாப்ள” “கொஞ்சம் கொஞ்சமா ஊர்ல இருந்த கடனையும் முடிச்சு.. எல்லாத்தையிஞ்செரி பண்ணி மறுக்கா ஊருக்கே போய்ட்டாங்க. இத்தன வருசம் கழிச்சு அவரு புள்ளக்கி கலியாணம்னு நம்மளயும் நாவகம் வெச்சு அழைக்க வந்துருக்காரு தோழர்! “ ” அட! பத்திரிக்கையில புள்ளையூட்டுக்காரன்னு என்ர பேரை அடிச்சிருக்காரு தோழர்!” தோழர் அவரது உடையாத வலுத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். ஆயினும் பெருமிதத்தில் அவர் நெஞ்சம் துடிப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. ” மனிதர்களை நமக்குத்தான் அணுகத்தெரீல தோழர். எல்லாருமே அருவாக்கத்திய வச்சுட்டு திரியறதாவே நெனச்சுக்குறோம்” “போன வாரம் நீங்க கூப்பிடயில ரயில்வே ஸ்டேஷன்ல பார்சல் போட்டுட்ருக்கேன் தோழர் நான் கூப்பிடுறேன்னு சொன்னன்ல” “ம்ம்…ஆமா….” நான் யோசித்தபடியே ஆமோதித்தேன். “அதுவும் பழைய கதைதான்! திருச்சிலருந்து ஒரு அக்கா ரெண்டு பசங்களோட கெளம்பி இங்க வந்துருச்சு “ “புருஷன் பயங்கர தண்ணிவண்டிங்” “அடி தாங்க முடியாம இந்த பொம்பள, கொழந்தைகள தூக்கிட்டு ரயில்ல வுழுந்து தற்கொலை பண்ணிக்கலாம்னு போயிருக்குது” “அங்க போயி கொழந்தைக மொகத்த பாத்துட்டு இவனுக்கோசரம் நாம ஏஞ்சாகோணும்? கூடவே இந்த ரெண்டயும் ஏங்கொல்லோணும் ? அதுக என்ன பாவம் பண்டுச்சுன்னு ரயிலேறி வந்திருச்சு” ”அப்பறொம்?” “இங்க வந்து எங்க கம்பனில சேந்துருச்சு” ”சிறப்பு தோழர்!” “ரெண்டு பசங்களையும் வச்சுகிட்டு பாவம் அப்படியே வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தது “ “நம்ம கம்பனில ஒரு அண்ணன்.. பேரு சுப்பிரமணி. நாங்க கிண்டலுக்கு சுனாமின்னு கூப்பிட்டு ஓட்டுவோம். ஆச்சு அப்பவே ஒரு முப்பத்தெட்டு பக்கம் ஆயிருச்சு… கலியாணம் இல்லாத கன்னிப்பையன்” “அந்த திருச்சிக்கார அக்காள சுனாமிகட்ட கண்ணக்காட்டி நாங்க சும்மா நக்கலுக்குப் பேச, இந்தாளு பயங்கரமா வெக்கத்துல நெளிவாப்ள… ஒரே காமெடியா இருக்கும் தோழர்.. “ ”பொம்பள பாவம் ரெண்டு பசங்களயும் வெச்சுகிட்டு தனியா கெடந்து பாடுபடுது தோழர்.. நம்மாளுஞ் சும்மாத்தானே மெஷினோட்டறப்ள… சேர்ந்து இருக்கட்டுமேன்னு நாங்க நெனச்சோம்” “அதென்னவோ அந்தக்காளுக்கும் அதே மாதற தோணிருக்கும் போலருக்குது… ரெண்டு பேருக்கும் செட்டாயிப்போச்சு “ ”சிறப்பு….மிகச்சிறப்பு” “சுனாமி ரூம காலி பண்ணிட்டு அந்தக்கா வீட்டுக்கே போயிட்டாப்ள” ”ஓஹோ” “பார்க்கறவன் என்ன பேசுவான்…… ஒரு கவலையுங்கெடயாது “ “கம்பனி பசங்களுக்கு அது ஒரு செக்ஸ் புக்கு கதை தானே தோழர் ? அவனுகளுக்கு வேற என்ன தெரியிம்?” “பொதுப்புத்தி தோழர்” “அந்தாளுக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது தோழர் ! ரெண்டு பசங்களையும் நடத்தியே சினிமாக்கு கூட்டீட்டு போவாரு” “அந்தக்காள விட அந்த பசங்க மேல சுனாமிக்கு பாசம் “ “பேல்பூரி, காளான், தட்டுவடைன்னு தெனமும் பார்சல் கட்டீட்டு போவாப்ள” “எங்கிட்ட ஒரு தடவ சொன்னாப்ள… ‘நானெல்லாம் அனாதையாவே செத்து போயிருவேன்னு நெனச்சேன் இரும்பு! எனக்கு கூட ரெண்டு குழந்தைகளும் பொண்டாட்டியும் கெடைச்சிருச்சே? இதுங்களுக்காகவே வாழ்ந்துட்டு சந்தோஷமா செத்துருவேன்டா நானு’ன்னு …என்ன தோழர் இது ம்ம்? … எப்படி? எனக்கு அப்போ என்னடா இது காஜி காஜிங்கறானுகளே? அந்த உடல்தேவையைக் கடந்துட்டா அந்தப்பக்கம் ஒரு பெரிய ஏரியா இருக்கு போலருக்குதேன்னு தோணுச்சு ” தோழர் இடைவெளி விட்டு மௌனமாய் இருந்தார். நான் வெகு நேரம் பேசாமலே இருந்ததால் பேசப்போவதாக காட்டிக் கொள்ள, தொண்டையைக் கணைத்துக்கொண்டேன். “ஜப்பான்காரங்க கிட்ட ஒரு பழக்கம் இருக்கு தோழர்!. நல்ல பேரு சொல்வாங்க… மறந்துருச்சு .. உடைஞ்சு சிதறிப்போன பீங்கான் கோப்பைத் துண்டுகள எல்லாம் சேகரிச்சு வெச்சுகிட்டு கவனமா அதையெல்லாம் ஒண்ணா சேர்த்து ஒட்டுறாங்க. ஒட்டுப்போட்ட விரிசல்களோட திரும்பவும் பழைய வடிவத்துக்கு அந்த கோப்பையைக் கொண்டு வந்துடறாங்க. விரிசல்களை மறைக்கறது இல்ல. மாறா அந்த விரிசல்களுக்கு தங்க முலாம் பூசுறாங்க. சுக்கு நூறா உடைஞ்சு சிதறிப்போன அந்த பீங்கான் பாத்திரம் இப்போ தங்க விரிசல்களோட ஒளிருது ,வீட்டு அலமாரிகள்ல அதை வெச்சு அலங்கரிக்கறாங்க. பிசகுகள, தவறுகள, சறுக்கல்கள எல்லாம் அவங்க கொண்டாடுறாங்க. தவறுகளயோ, குறைகளயோ சரி செஞ்சுகிட்டு நிறைவாக்குறதுதான் வாழ்க்கைங்கறத புரிஞ்சுக்கவே இப்படிச் செய்றாங்க போல, சுப்பிரமணி உடைஞ்சு போன அந்தப் பொண்ணுமேல படிஞ்ச தங்கம் தோழர்! நாம அவங்ககிட்ட பேச முடிஞ்சா இன்னும் அருமையா இருக்கும் “என்று சொல்லி முடித்தேன். ” தோழர்!….. முழுசா கேளுங்க ! கத இன்னும் முடியல” என்றார் இரும்பு.”காலம் எப்படியெல்லாம் மாத்தி மாத்திப்போடுது பாருங்க” நான் மறுபடியும் மௌனத்தை கைக்கொண்டேன். “திருச்சிக்கார அக்காளோட பெரிய பையன் படிச்சு ஐ டி ஃபீல்டுக்கு போயிட்டான். கர்நாடகாவுல வேலை கிடைச்சிருச்சு” “பெரியவன் போனானா? அவனுக்கு சாப்பாடு செஞ்சு போட இந்தக்காவும் போயிருச்சு. இங்க திலுப்பூர்ல சின்னவனும், சுனாமியும் தங்கி சமைச்சு, சாப்பிட்டு வேலைக்கு போயிட்டுருந்தாங்க.பெரியவனுக்கு அங்க நல்ல சம்பளம் வரவும், சின்னவனையும் கூப்பிட்டுட்டான். ஓ… இவங்க நம்மள கழட்டிவுடறாங்கன்னு புரிஞ்சிகிட்டு சுனாமி தண்ணிய போட்டு அப்படியே சும்மா சுத்திட்டு இருந்தாப்ள.பழையபடி அனாதையாயிட்டேன் இரும்புன்னு சொல்வாப்ள” “அடப்பாவமே” “கண்ணீர் மட்டும் நிக்காம போயிட்டே இருக்கும் தோழர்,,, கண் கொண்டு பாக்க முடியாது” இரும்பு அழுகிறாரோ என்று எனக்கு சந்தேகம். “ஆனா அவங்கள பத்தி யார் கிட்டயும் ஒரு வார்த்தை தப்பா பேச மாட்டாப்ள. போன வாரம் சின்னவன் வன்ட்டான்” மொட்டை மாடிக் காற்று சிலீரென்று முகத்தை வருடியது. “வந்து எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு ‘எங்கூட கிளம்பு சுனாமி’ங்கறான். இந்தாளு, ‘இல்ல அது நல்லா இருக்காது’ன்னு சொல்றாப்ள.பெரியவனுக்கு கல்யாணம் பேசணும் நீ இல்லாம எப்படினு அவன் கேட்டான் சொந்தக்காரங்க என்னை யாருன்னு கேட்டா என்னன்னு சொல்றது? அது நல்லா இருக்காது” “எவனாச்சும் வந்து கேட்டா எங்க கிட்ட சொல்லு அதெல்லாம் நானும் எங்க அண்ணனும் பார்த்துக்கறோம்னான் பாருங்க கதாநாயகன் மாதற..அங்கே எங்கம்மா வாயத்தொறந்து சொல்லலன்னாலும் அதனால இருக்க முடியல எளச்சு எலும்பாப்போச்சு” “எங்களாலயே இருக்க முடியலய்யா உன்ன விட்டுட்டு “ “நீ என்ன இங்கயே இருந்துர்லாம்னு நினைச்சியாக்கும்? சுனாமி இப்ப கிளம்பப் போறியா இல்லையா ?” “அட உங்க சொந்தக்காரன் யாருன்னு கேட்டா என்னடா சொல்லுவ?” “சுனாமி திரும்பத்திரும்ப கேட்டதுக்கு அந்த பையன் சொல்றான் தோழர்.. “ “எங்க அம்மாவோட லவ்வர்ன்னு சொல்லிக்கிறோம் நீ கிளம்பி வாய்யா மூடீட்டு” “தோழர்! சத்தீமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துருச்சு தோழர் ..அப்புறம் நான் தான் எல்லாத்தையும் மூட்டை கட்டி ரயில்ல பார்சலா போட்டு அனுப்பி வெச்சுட்டு வந்தேன் “ பிறகு நான் பேச்சை மாற்ற வேண்டி,” ஏன் தோழர்? கல்யாண பத்திரிகை வைக்க வந்தாரே? அந்த பெரியவர்! அவர் குடும்பத்துக்கு உதவணும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சு? உங்க நண்பர் தானே பேசிட்டு இருந்தாரு நீங்க எதனால நடுவுல புகுந்தீங்க? என்று கேட்டேன் . அவர் சட்டென்று சுனாமியின் கதைக்குள் இருந்து வெளியே வந்தார் . “அது வந்து தோழர் ….அவரு பேசும்போது அவங்க ஊரோட பேரை சொன்னாரு தோழர்! அவங்க ஊரோட பேரைப்பாருங்க ‘அழகிய நிலமங்கலம் ! ‘ தோழர் ! ‘அழகிய நில மங்கலம்’ ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி திருத்தமாக உச்சரித்தார். “ரொம்ப அழகா இருந்தது தோழர்” இந்த மாதிரி பேரு வச்ச ஊரிலிருந்து ஒரு குடும்பம் வந்து கஷ்டப்படணுமான்னு தோணுச்சு “என்றார். எனக்கு ஏதோ நிறைந்து விட்டது போலிருந்தது. அவரிடம் ‘திரும்பவும் பேசுவோம் தோழர், கூப்பிடறேன்’ என்று பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கும் போது ‘அழகிய நில மங்கலம்’ என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். https://akazhonline.com/?p=7365
  12. பத்தொன்பதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்திலும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றாலும், பின்னர் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் தடுமாறி விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள்வரை நன்றாக விளையாடியிருந்தும், இந்திய அணியின் இறுக்கமான பந்துவீச்சால் ஓட்டங்களை எடுக்கமுடியாமல் திணறி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- இருபதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், குறிப்பாக பிராண்டன் மக்முல்லன் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள், அதிரடி வேகத்தில் அடித்தாடி வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 13.1 ஓவர்களிலேயே 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் சுற்ற்றுப் போட்டிகளில் பாதி நிலையான இருபது போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 34 2 பிரபா USA 32 3 ரசோதரன் 32 4 ஈழப்பிரியன் 30 5 சுவி 30 6 நந்தன் 30 7 வாதவூரான் 28 8 ஏராளன் 28 9 குமாரசாமி 26 10 தமிழ் சிறி 26 11 கிருபன் 26 12 கந்தப்பு 26 13 வாத்தியார் 26 14 எப்போதும் தமிழன் 26 15 நீர்வேலியான் 26 16 வீரப் பையன்26 24 17 நிலாமதி 24 18 தியா 24 19 புலவர் 24 20 P.S.பிரபா 24 21 நுணாவிலான் 24 22 அஹஸ்தியன் 24 23 கல்யாணி 24
  13. 🤣.... ஒரு மணித்தியாலம் பிந்தி நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததைத் தானே சொல்கிறீர்கள் அடபாவிகளா பாயின்ஸ் எல்லாம் எடுத்து பைல்ல போட்டு வைத்திருக்கறீங்களா?
  14. தீயவர்களை தேடி தான் புட்டின் செல்வார் அவர்கள் மட்டுமே இவருடன் இணைவார்கள்.
  15. 🤣 ச்...சா....ச்..சா இந்தா பார் சிங்கன் சிங்கிளாய் தேர் இழுத்து எங்கை கொண்டு வந்து நிப்பாட்டியிருக்கான் பார்....? 😜 உன்னால் முடியுமா தம்பி?
  16. மரின் லு பென்னுக்கும், அவரின் தந்தை லு பென்னுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், அவர் எல்லா இன-பிரான்சியர் அல்லாத, வெள்ளை தோல் அல்லாதவரையும் எதிர்த்து அரசியல் செய்தார். ஆனால் அது வெறி அவுட் ஆகாது என தெரிந்து கொண்டு - packaging மாத்தி, பிரெஞ்சு குடிகள் இல்லாதோருக்கு எதிரான அரசியல் செய்கிறார் மெரின். இது யூகே யில் வெற்றிகரமாக பரீட்சித்து பார்க்கப்பட்ட பாலிசிதான். எப்படி? இப்படி👇 1. 70, 80,90 களில் National Front, British National Party என சகல பிரித்தானியர், ஐரிஷ் அல்லாதோருக்கும் எதிரான வெளிப்படையான இனதுவேச அரசியல் செய்து மூக்குடைபட்டார்கள். 2. 2000 களில் நாம் இனத்துவேசிகள் அல்ல, ஐரோப்பிய மட்டற்ற குடிவரவு, ஐரோப்பிய யூனியனுக்கு எதிரானோர் மட்டுமே என UKIP ஐ ஆரம்பித்து - சிறுக சிறுக, கிழக்கு ஐரோப்பியர் மீது வெறுப்பை வளர்த்து - பிரெக்சிட்டை ஸ்தாபித்தார்கள். பிரெக்சிட் வாக்கு நேரம், இவர்கள் பல ஆசிய, ஆபிரிக்க வம்சாவழி வாக்காளரையும் கவர்ந்தார்கள். என்ன சொல்லி? நாம் உங்களுக்கு அல்ல, கிழக்கு ஐரோப்பியருக்கு மட்டுமே எதிரானோர். பிரெக்சிட்டின் பின் உங்களுக்கு சம்பளம் கூடும், உங்கள் நாட்டில் இருந்து ஆட்களை எடுப்பது இலகுவாகும் என பூச்சுற்றி. 3. இவ்வாறு பிரெக்சிட்டை நடத்தி முடித்த கையோடு, UKIP ஐ கலைத்து விட்டு, அடுத்து Reform UK என ஒரு பார்ட்டியை ஸ்தாபித்து இப்போ பழமைவாத கட்சியை hostile takeover செய்யும் நிலைக்கு வளர்ந்து விட்டார்கள். இப்போ இவர்களின் பிரதான எதிரி சட்ட, சட்டபூர்வமற்ற வகையில் நடக்கும் குடிவரவு. அதாவது ஆசிய, ஆபிரிக்க நாட்டில் இருந்து வருவோர், வந்து இன்னும் நிரந்தர வதிவுரிமை அடையாமல் இருப்போரே இப்போ இவர்களின் இலக்கு. 4. இதையும் பிரெக்சிட் போல் முடித்த பின் - அடுத்த இவர்களின் இலக்கு? இங்கே குடியேறி, பிரஜையும் ஆகி விட்ட வெள்ளை அல்லாதோர். அதாவது நீங்களும், நானும், ரிசி சுனாக்கும், சஜித் கானும்🤣. இங்கே படிமுறை 1 முதல் 4 வரை இந்த கட்சிகளை நடத்தியோர், பணம் கொடுத்தோர் எல்லாரும் ஒரே இனவாத சிந்தனை உள்ளோரே. காலத்துக்கேற்ப தம் packaging ஐ மாற்றி கொள்கிறனர். பிரான்சில், தந்தை லிபென் நின்றது படிமுறை 1 இல். மகள் மெரின் நிற்பது படிமுறை 2இல். ஆகவேதான் இந்த விஷ கிருமிகளை அது யூகே, பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, தமிழ் நாடு, இலங்கை எங்கேயும் எந்த காரணத்துக்காகவும், அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஆதரிக்கவே கூடாது. இந்த இனவாத கிருமிகளை விட ஊழல் வாதிகள் பரவாயில்லை. ஓம்…நீங்கள் கூட கொஞ்சம் ஆவலுடன் யாழில் எழுதி இருந்தீர்கள். நான் கொஞ்சம் பயந்துதான் இருந்தேன். நல்லவேளையாக யாருக்கோ இவரை ஆப் செய்யும் ரகசியம் தெரிந்துள்ளது. அதனால் இத்தாலியும், ஐரோப்பாவும் கொஞ்சம் நிம்மதியாக உள்ளன. அல்லது இவர் வாக்குக்காக இனவாதம் பேசும் ஆளாகாவும் இருக்கலாம். ஆனால் எல்லாரும் இவரை போல் இருக்க மாட்டாகள். கிட்டதட்ட நூறு வருடம் முன் அடோல்ப் என்ற ஒருவருக்கு இதே வாய்ப்பு கிடைத்த போது நடந்ததை மறக்க கூடாது.
  17. மிகவும் கஸ்ரம் .....கடினம் ஏனெனில் Bundes. Rat. என்ற ஒன்று உண்டு இல்லையா?? அது அனுமதிக்க வேண்டும் அதற்கு இவர்கள் பல மாநிலங்களை ஆள வேண்டும் புண்டாஸ் ரட்டில். பல இல்லாமல் ஆட்சி செய்யும் கட்சி கூட தங்கள் விரும்பும் சட்டங்களை இயற்ற முடிவதில்லை
  18. இந்த மதவாத முட்டாள்களும், AfD போன்ற இனவாத முட்டாள்களும் ஒரே ஆட்கள்தான், பெப்சியும், கொக்கோ கோலாவும் போல. அவர்கள் இல்லாட்டில் இவர்களையும், இவர்கள் இல்லாட்டில் அவர்களையும் நாயும் சீண்டாது🤣.
  19. இவர்கள் வாக்கு வேட்டைக்காக இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள் என நினைக்கின்றேன். தேர்தல் மூலம் முக்கிய பதவிகளுக்கு இவர்கள் வந்தாலும் அரசியல் சாசனங்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடமுடியுமா என தெரியாது. ஆனால் இனவாத கட்சிகளின் வெற்றி பழைய/முக்கிய கட்சிகள் தமது இன்றைய நடவடிக்கைகளை மாற்றியமைக்க சாத்தியங்கள் உண்டு. முக்கியமாக அகதிகள் வருகை, உக்ரேன் போர் நடவடிக்கைகள் , வெளிநாட்டவர்களின் சோசல் உதவி வாழ்க்கை என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். அதுடன் இன்னுமொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இனவாத கட்சிகளின் வெற்றியை போல் வெளிநாட்டவர்களுக்கு சார்பான கட்சிகளும் வென்றுள்ளன.
  20. போட்டியில் சேர முதலே இதை நான் சொல்லியிருந்தேன்😁 @வீரப் பையன்26 என்னையே நான் மெச்சிக்க கன்யாகுமரி மகளுக்கு நன்றி😍 🍾🍷🍺🍻🥃 நான் இப்ப ட்ரிங்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கேன்! ஓணாண்டியிடம் கொடுத்தாலும் காரியமில்லை! ஓணாண்டி, முகவரி ப்ளீஸ்!
  21. சீமான் ஆதரவை நியாயப்படுத்த ஐரோப்பிய அரசியலை ஒப்பிட்ட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு கதைக்கு உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவர் பாடசாலையில் சக மாணவரோடு விளையாடும்போது அவர்கள் வந்தேறு குடி என்று விளித்திருந்தால் அதனை உங்கள் மகன் உங்களிடம் முறையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் மகனிடம், மகனே அவர்கள் திட்டியது நியாயமானது. வந்தேறு குடிகளான நாம் அதைப் பொறுத்துக் கொண்டு அதிகம் படித்து புத்திசாலியாகி பெரிய பதவிகளிலோ அரசியல் பதவிகளிலிருந்தோ ஐரோப்பியரை ஆளாமல் கொஞ்சமாகப் படித்து அவர்களுக்குக் கீழ்படிந்து வாழ்வதே நியாயமானது என்று சமாதானம் செய்வீர்களா ? சீமானின் இனவாதத்தை வரவேற்றால் அடிமையாக வந்து அமெரிக்காவை ஆண்ட கறுப்பினத்தவர் முதல் புலம்பெயர்ந்த தமிழர்களின் அடுத்த சந்ததியின் அரசியல் பிரவேசம் வரை எதிர்ப்பவராக இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட பிரெஞ்சுப் புரட்சி இந்தத் தூய ஆட்சியை எதிர்த்து உருவானது. புரட்சி முடிந்து அடுத்த வருடம் 1790 ஆம் ஆண்டு அவர்கள் இயற்றிய சட்ட வரைபில் வெளிநாட்டு நபர் ஒருவர் 5 வருடம் பிரான்சில் இருந்து பிரெஞ்சு ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்திருந்தால் அல்லது பிரான்சில் சொத்து வைத்திருந்தால் அவர் பிரெஞ்சுப் பிரஜையாகக் கணிக்கப்படுவார் என்று எழுதியுள்ளனர். 1804 இல் நெப்போலிய மன்னன் பிரெஞ்சுக் கல்வியறிவு உள்ளவரும் பிரெஞ்சுப் பிரஜையாவார் என்று சில மாற்றங்களைச் செய்திருந்தார். மரின் லுபெனின் தந்தை இரண்டாம் உலகப் போரில் இறந்த இராணுவத்தினர் பொதுமக்களுக்கான நினைவு நாளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட பிரெஞ்சு மக்கள் விரும்பவிலை. காரணம் ஹிட்லரின் செயல்களை இவர் தொடர்ச்சியாக ஆதரித்து வந்தவர். அண்மையில் இறந்த முன்நாள் அமைச்சர் Robert Badinter இன் அரச மரியாதையோடு நடந்த இறுதிக் கிரியையில் மரின் லுபென் கலந்து கொள்வதை Badinter குடும்பத்தினர் விரும்பவில்லை என்று அறிவித்திருந்தனர். இவர் பிரான்சில் சமத்துவம் தொடர்பான பல சட்டங்களை இயற்றக் காரணமானவர். நாம் பிரெஞ்சுப் புரட்சி முதல் இன்று வரை பல உயிர்களைத் தியாகம் சமத்துவத்திற்காக உழைத்து வந்திருக்கிறோம். ஆனால் இந்த இனவாதிகள் இவற்றையெல்லாம் உதறித் தள்ளக் கூடியவர்கள் என்று இவரது மனைவி தெரிவித்திருந்தார். இனத் துவேசம் அழிவை நோக்கியே செல்லும்.
  22. சாதி மதம் மற்றும் பிரதேசவாதம் சார்ந்த கட்சிகள் எப்போதும் ஆபத்தானவையே.
  23. பையா தென்னாபிரிகா Official ஆக சூப்பர் 8 க்கு போய்விட்டதா?
  24. நா அடக்கி மெல்ல நழுவினேன் அங்கிருந்து ! ஒரமாய் இருந்து காப்பி குடித்து டிவியும் பார்த்து ரசித்தேன்! ஏதோ மர்மத்தை எதிர் பார்த்து நின்றேன்!" பணிந்து 'நானும்' மெல்ல ஒதுங்கினேன்!" செய்யாமல் பின் வாங்கி அமைதி நிலைநாட்டினேன்!" நன்றாக நிலைமையை விளங்கி கொண்டு, அனுசரித்து போகும் நல்ல கணவனாய் இருந்தீர்கள் என்பதில் பெருமைப்படுங்கள்.
  25. அவர்கள் துருக்கியர்கள். வன்முறையை பார்க்கவில்லை மதத்தை பிர்க்கிறார்கள். அவர்கள் வன்முறையை பார்க்க வேண்டுமெனில் ஒரு துருக்கி கன்னிப் பெணணை பிடித்து .... .........சிரிய ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் விடலைகள். செய்வது போன்று செய்ய வேண்டும் ......நேரம் உண்டா?? வாருங்கள்… இருவரும் முயற்சிக்கலாம் 🤣🤣🤣🙏 குறிப்பு,..சும்மா பகிடிக்கு எழுதினேன் உண்மை என நினைக்க வேண்டாம் 🤪 பார்க்கிறார்கள்
  26. ஒன்று துறக்க ஆயத்தப் படுத்த வேண்டும், அல்லது "நான் AfD இற்கு வாக்களித்தவன்" என்று உடலில் வெளித்தெரியும் பகுதியில் பெரிதாகப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும். ஏன் என்பதற்கு பதிலாக அமெரிக்காவில் நடந்த ஒரு உதாரணம் சொல்கிறேன். 2016 இல் ட்ரம்ப் "முஸ்லிம்களுக்கு விசா கொடுக்காமல் செய்வேன்" என்று பிரச்சாரம் செய்த போது பல மோடி வாலா இந்தியர்கள் ட்ரம்பை வெளிப்படையாக ஆதரித்தனர். சிலர் அவருக்கு வாக்களித்திருக்கவும் கூடும். அவர் வென்றார். அவர் வென்ற பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசம் அமெரிக்காவில் அதிகரித்தது. கன்சாஸ் நகரில் இரு மண்ணிறத்தோல் குடியேறிகளை ஒரு ட்ரம்ப் விசுவாசி துப்பாக்கியால் சுட்டு, ஒருவர் சாக மற்றவர் காயத்துடன் தப்பினார். "மத்திய கிழக்கில் இருந்து வந்த பயங்கரவாதிகளென நினைத்து சுட்டேன்" என்றார் ட்ரம்ப் ஆதரவாளர். சுடப் பட்ட மண்ணிறத் தோல் குடியேறிகள் இருவரும் தென்னிந்தியர்கள். எனவே, இப்பவே பச்சை குத்த ஆயத்தப் படுத்துங்கள்😂!
  27. பலஸ்தீன பெண்களை எப்படி சிறையில் இஸ்ரேலியர்கள் நடாத்துகிறார்கள் என்பதை அல்ஜசீரா பல காணொளிகளை வெளியிட்டு இருந்தது. உண்மைகளை வெளியில் உடனுக்குடன் வெளியிடுவதால் இஸ்ரேல் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியமை குறிப்பிடதக்கது.
  28. எல்லாப் புள்ளிகளும் இந்த திரியில் சிரிச்சு சிரிச்சே😆😆 முடிந்துவிட்டது. ஆனாலும் சிரமம் பாராது உடனுக்குடன் update செய்யும் உங்களுக்கு நன்றி..
  29. 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், கிருபன் , நிழலி, வாத்தியார், பிரபா 1)நிழலி - 83 புள்ளிகள் 2)கிருபன் - 83 புள்ளிகள் 3)பிரபா - 73 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 68 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)கோஷான் சே - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 59 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள் 9)வாத்தியார் - 49 புள்ளிகள் 10)சுவி - 43 புள்ளிகள் 11)கந்தையா57 - 43 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 13)புலவர்- 34 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1 - 16,18 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 41 கேள்விகளுக்கு (93 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  30. இந்த ஐரோப்பியர்களைக் காலம் காலமாகக் காப்பாற்றும் கனேடியர்களும் அமெரிக்கர்களும் வானத்தில் இருந்து குதித்தவர்களாக்கும்
  31. படிக்கப் படிக்க ஒவ்வொரு சம்பவமும் மயிலிறகால் இதயத்தை வருடுவதுபோல் இதமாய் இருக்கு....... ஓரிரு நாட்களுக்காவது இந்தக் கதை மனசுக்குள் சுழன்று கொண்டிருக்கும்.......! 🦚 நன்றி ரசோதரன்.......!
  32. கோஷான் ஷே கலக்குகிறார். வாழ்த்துக்கள்!
  33. Published By: DIGITAL DESK 3 10 JUN, 2024 | 10:12 AM பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தேர்தல்கள் ஜூன் 6 முதல் 9 வரை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நடைபெற்றது. அதில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/185714
  34. 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் - 1 ஆம் இடம் கோஷான் சே, தமிழ்சிறியைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 79 புள்ளிகள் 2)கிருபன் - 79 புள்ளிகள் 3)பிரபா - 69 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 64 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)கோஷான் சே - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 57 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள் 9)வாத்தியார் - 47 புள்ளிகள் 10)சுவி - 43 புள்ளிகள் 11)கந்தையா57 - 43 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 13)புலவர்- 32 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1 - 16,18 - 22, 24 - 30, 32 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 39 கேள்விகளுக்கு (89 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  35. 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) - 2 ஆம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், கிருபன் , நிழலி, வாத்தியார், பிரபா 1)நிழலி - 75 புள்ளிகள் 2)கிருபன் - 75 புள்ளிகள் 3)பிரபா - 66 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 5)கோஷான் சே - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 53 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 45 புள்ளிகள் 9)வாத்தியார் - 45 புள்ளிகள் 10)சுவி - 41 புள்ளிகள் 11)கந்தையா57 - 41 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 31 புள்ளிகள் 13)புலவர்- 30 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1, 2, 3, 5 - 16,18 - 22, 24 - 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 37 கேள்விகளுக்கு (85 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  36. கையில் துடைக்கும் காகிதம் வைத்துக் கொண்டு பார்க்கவும் ......! 😂
  37. நாங்க‌ளே ஜ‌ந்து ப‌த்து பிச்சை எடுக்கிறோம் பாக்கிஸ்தானுக்கு அள்ளிக் கொடுக்க‌ நாங்க‌ள் வில்கேச்சா அல்ல‌து அம்பானி குடும்ப‌மா ஹா ஹா நியூயோக் பிச்சில் 140ர‌ன்ஸ் சிர‌ம‌ ப‌ட்டு அடிச்சால் க‌ண்ண‌ முடிட்டு சொல்லுவேன் 140ர‌ன்ஸ் அடிச்ச‌ அணிதான் வெல்லும் என்று...............................பிச் அப்ப‌டி இன்று ம‌ழை பெய்த‌தால் பிச்சின் த‌ன்மை மாறும் என்று நினைத்தேன் அதே மாற்ற‌ம் இல்லா பிச்................................................
  38. இந்த போட்டியை பார்க்க முடியாதே, வெளியில் போக வேண்டி இருக்கே என்ற நிலை......கடவுள் இருக்கார், சார்..... இது பெரிய மாயாண்டி குடும்பப் பகை போல......ஒன்றுமே தெரியாத அப்பாவி அமெரிக்கா குடும்பச் சண்டைக்கு நடுவில போய் மாட்டுப்பட்டிட்டுது...........
  39. எப்படியும் Rugbyல All Blacksசிடம் வேண்டிக்கட்டிவினம் தானே அப்ப பார்த்துக்கொள்ளலாம் அவுஸை..
  40. நான்கு பணயக்கைதிகளை மீட்பதற்காக 200க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொல்லலாம் என்றால் 20000 ஆயிரம், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளைக் கொல்வதற்காக 2 லட்சம் தமிழ்ப் பொதுமக்களைக் கொன்றது சரி என்றாகிவிடும். உதைக்கூடப் புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லையா? 🤦🏼‍♂️ உங்கள் குறுகிய அல்லது ஒற்றை, தட்டையான சிந்தனைமுறை வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை. ☹️
  41. 👆இதைத்தான் திருவாளர் " நியாயம் " அவர்கள் கூற விரும்பியது. இதைக்கூட தாங்கள் புரிந்துகொள்ள முடியவில்லையா? ☹️ எல்லா அரசுகளுக்குமே பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது. அது இலங்கை அரசாயிருந்தாலென்ன இஸ்ரேலாக இருந்தால் என்ன? இஸ்ரேலிய அரசை நியாயப்படுத்துதல் இலங்கை அரசை நியாயப்படுத்துவதாகும்.
  42. தமிழீழ அணி இறுதிப் போட்டியில் FA Sapmi vs Tamil Eelam FINAL CONIFA Women World Football Cup 👆 (காணொளி.) 👆
  43. மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமானால் விபுகள் மக்களை விடுவித்து முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம் என்கிறீர்களா? கழுவுவதற்கும் ஒரு அளவு வேண்டும் இல்லையா ? பெயரில் மட்டும் நியாயம் இருந்து ஒரு பலனும் இல்லை. சிந்தனையிலும் சிறிதளவேனும் வேண்டும். 😏
  44. பெரிய பெரிய அமௌண்டாக கொடுத்து மாட்சுகளை ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றோம்.........🤣.....பரிசுத் தொகையை பார்த்து கொஞ்சம் பெரிசா கொடுங்க.....
  45. உங்களைப் பற்றியும் கதைத்தோம். யாழ்களத்தை பற்றிய உரையாடல் என்றால் உங்களைப்பற்றி பாஞ்ச் அவர்கள் கதைக்காவிட்டால் அது உலக அதிசயம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.