Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3060
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2954
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/14/24 in Posts

  1. இந்த சாதனைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய அப்பா யானையைப் பற்றி ஒரு சொல் கூட இல்லை! என்ன உலகமடா இது 😄
  2. "ஒருபால் திருமணம்" [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன் விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்] திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும், ஒரு நிரந்தர மற்றும் பிரத்தியேக அர்ப்பணிப்புகளுடன் ஒன்றிணைவதுடன், இயற்கையாகவே (இயல்பாகவே அமையப்பெற்ற) குழந்தைகளை பெற்று ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அதாவது, ஆண் பெண் பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. எனவே, இதற்கு புறம்பாக, எதாவது ஒன்றை திருமணம் என்று அழைப்பது திருமணம் ஆகா. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகும். இது அதன் இயல்பாகவே, குழந்தைகளின் இனப்பெருக்கம் அவர்களின் கல்வி, வாழ்க்கைத் துணைகளின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வு நோக்கி தம்பதியர்களுக்கு அறிவுறுத்துகிறது அல்லது கட்டளையிடுகிறது. ஆனால் ஒருபால் திருமணத்தை ஆதரிப்பவர்கள் அல்லது அதை ஊக்கிவிப்பவர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றையே முன்மொழிகிறார்கள். அதாவது இரு ஆண்களுக்கு இடையில் அல்லது இரு பெண்களுக்கு இடையில் இதை முன்மொழிகிறார்கள். இது சுயமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணப்படும் உயிரியல், உடலியல் மற்றும் உளவியல் வித்தியாசங்களையும், அதனால் திருமணத்தில் இணைந்து அவர்கள் காணும் வாழ்வின் முழுமையையும் மறுக்கிறது. அது மட்டும் அல்ல, மனித இனத்தின் பெருக்கம் மற்றும் குழந்தைகளை அவர்களின் இயற்கையான இரு பெற்றோர்களுடன் வளர்வதையும் தடுக்கிறது. அதாவது, சிலவேளை அதில் ஒருவருக்கு வேறு யாராவதின் மூலம் ஒரு அல்லது பல குழந்தை இருந்து அவர்களுடன் வாழ நேரிட்டால், ஒரு பால் திருமணம் அந்த குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் முழுமையான பங்கை உணர முடியாமல் தடுத்து விடுகிறது. டார்வின் தனது இயற்கைத் தேர்வு என்ற அத்தியாயத்தில், வெற்றிகரமான உயிரினங்கள், இறக்கும் தன் மூத்தவர்களை ஈடு செய்வதற்கு தேவையானதை விட, அதிக சந்ததிகளை ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாக்குகின்றன என்கிறார். மேலும் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மைபயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தி, உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கத்தை தக்கவைக்கும் என்கிறார். உதாரணமாக ஒரு பால் உறவு, இயற்கையானது என்றால் அது ஏன் இனப்பெருக்கம் செய்யவில்லை ?.ஏனென்றால் அந்த இனம் தொடர்ந்து பிழைத்து வாழ அது மிக மிக முக்கியம். ஒருபால் மக்களுக்கு திருமணத்தை மறுப்பதால், அவர்களை மற்றொரு நபருடன் அன்பான அர்ப்பணிப்புக்கு மறுப்பதாக நீங்க ஒருவேளை நினைக்கலாம்?. உண்மையில் அது தவறு. மக்கள் எல்லா நேரமும் மற்றவர்களை நேசிப்பதுடன் அர்ப்பணிப்பும் செய்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் திருமணம் என்று கூறுவதில்லை, ஏனென்றால் அந்த உறவிற்கு என தனிப்பட்ட இயல்புகள் உண்டு. வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம். ஆனால் திருமணம் என்று இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு உறவுக்கும், இனப்பெருக்கம் ஆற்றல் உள்ள ஒரு உறவுக்கும் ஒரே மாதிரி வைப்பது தான் பிழை என்கிறோம்? ஒரு பால் உறவு அல்லது தற்பால்சேர்க்கை என்பது, ஒருவர் தனது பாலை சேர்ந்த இன்னும் ஒருவருடன் பாலியல் தொடர்பு வைப்பது ஆகும். உதாரணமாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் ஆகும். உலக வரலாற்றில், வெவ்வேறு கால கட்டங்களில், ஒரு பால் உறவு பல்வேறு விதமாக அங்கீகரிக்கப்பட்டும் , பொறுத்துக்கொள்ளப்பட்டும், தண்டிக்கப்பட்டும் மற்றும் தடைசெய்யப்பட்டும் வந்துள்ளது. பண்டைய உலகில் ஒரு பால் உறவுகளுக்கான பல ஆதாரங்களை, அதிகமாக பண்டைய கிரீஸ், ரோம், பண்டைய மெசொப்பொத்தேமியா, சீனாவின் சில பகுதி, மற்றும் இந்தியாவின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சில ஆலய சிற்பங்களிலும் காண்கிறோம். எனவே ஒரு பால் உறவு ஒன்றும் புதிது அல்ல. என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னைய காலத்தில் சந்ததிகளை உற்பத்தி செய்ய இயலாமை காரணமாக, இதை ஒரு திருமண பந்தத்தில் ஏற்கப் படவில்லை. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம். "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463] ஏன் ஒவ்வொரு சமுதாயமும், மனித குல வரலாற்றில், ஆதியில் இருந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை ஆதரித்தது அல்லது முதன்மை கொடுத்தார்கள்? ஏன் இந்த தனித்துவமான உறவு "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது? திருமணம் உண்மையில் தனித்துவமானதே, ஏனென்றால், இது உங்களுடன் தொடர்பில்லாத ஒருவருடன் உறவை உருவாக்கத் தேர்வு செய்வதுடன், அந்த தேர்வு பல பிணைப்புகளையும், உதாரணமாக, காதல் மற்றும் உடல் / பாலியல் கூறுகளையும் கொண்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுந்தொகை - 40, மிக ஆழமாக, சுருக்கமாக, அழகாக அந்த தனித்துவமான உறவை எடுத்து கூறுகிறது. என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்? நான் உன்னையும், நீ என்னையும் எந்த வகையில் அறிவோம். அப்படி இருந்தும் நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. செம்மையான நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலைபெற்றுவிட்டன. (இனி நிலமும் நீரும் பயிரை வளர்க்கும்) "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. அது நிலத்திற்கு செழிப்பைக் கொடுக்கிறது, அவ்வாறே இந்த தனித்துவ உறவும் மனித குலத்திற்கு செழிப்பு கொடுத்து அதன் தொடர் வளர்ச்சியையும் பாது காத்து ஊக்குவிக்கிறது. அது நடைபெறா விட்டால் இந்த விவாதமே தேவை வராது? இது மனித உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும் (stability), தனித்துவமான ஒரு கருத்தையும் (பொருளையும்) தருகிறது, இல்லையெனில் அது முழுமையடையாது. இது ஒருபோதும் தனிநபர்களுக்கோ அல்லது தம்பதிகளுக்கோ மட்டும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எம் மனித சமுதாயம் தொடரவும் வளரவும் இந்த தனித்துவமான உறவு ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதைத்தான் திருமணம் என்கிறார்கள். ஆகவே அந்த இயல்பு இல்லாத எதையும் அதே சொற்களால் அழைக்கலாமா?, நீங்களே முடிவு எடுங்கள்? உங்களுக்கு அன்பும் துணையும் மற்றும் பாலியல் இன்பமும் தரக்கூடிய எந்த நபருடனும் நீங்க ஒன்றாக வாழலாம். அது உங்கள் விருப்பம், ஆனால் அதையும் திருமணம் என்று சொல்லலாமா என்பதே எம் வாதம். திருமணம் என்பது பொதுவாக சில முக்கிய தனித்துவ அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளது. எனவே அங்கு காணப்பட்ட முதன்மை இயல்பு முற்றாக இல்லாத ஒன்றிற்கும் அதே பெயரை குறிக்க முடியாது. அதனால் தான் அதை "ஒருபால் கூட்டு" (same sex union) என்று கூறலாம் என்கிறோம்? ஆண் - பெண் திருமணம், கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை, ஒரு தலை முறையில் இருந்து மற்ற தலை முறைக்கு மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் மனித இனம் செழிக்கிறது. இதன் காரணமாகவே இந்த திருமணம் என்ற ஆண் - பெண் சங்கமம், முழு சமுதாயத்திற்கு நன்மை பயக்கிறது. உதாரணமாக, தமிழருக்கிடையில், கி மு 700 இல் முதல் தோன்றிய ஆண் - பெண் கூட்டு களவு என் அழைக்கப்பட்டது. இது தனக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளும் முறையாகும். என்றாலும் இது பல காரணங்களால் இடையூறுகள் அல்லது ஒருவரை ஒருவர் கைவிடுதல் ஏற்பட்டதால், தொல்காப்பியர் கூறியது போல, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல்,4), பலர் அறியத் திருமணம் என்ற சடங்கு (கரணம்) நடத்தும் வழக்கம் சங்க காலத்தில் ஏற்பட்டது. எனவே, மனித குல வரலாறு எங்கும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பிலும், திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடை பெரும் ஒரு சமூக நெறியாக இருந்து வந்து உள்ளது. இவை வெறுமனே விதிவிலக்குகள் இல்லை! ஒரு பால் கூட்டை ஆதரிப்பவர்கள், நிகழ் காலத்திலும், அதை தொடர்ந்து வரும் காலத்திலும் சோதிக்கப்படாத ஒரு சமூக நடைமுறையாக, ஈடுசெய்ய முடியாத ஆண் மற்றும் பெண்ணின் மதிப்புகள் முக்கிய காரணியாக அமையாத, பாலின மதிப்புக்கள் அற்ற, ஒரு பால் கூட்டை, குடும்பம் ஒன்றிற்கு உண்மையில் பரிந்து உறைகிறார்கள். இது தான் பிரச்சனையாகிறது. ஏன் என்றால் அந்த குடும்பம் அடுத்த தலை முறைக்கு தானாக போகும் வாய்ப்பை இழந்து விடுகிறது. சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள். ஒன்றை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும், ஒரு பால் கூட்டுக்கு, புது பெயர் தேடாமல், இருக்கும் திருமணம் என்ற பெயருக்குள்ளேயே அதை அடக்க முற்படும் பொழுது, நீங்கள் அதன் கருத்தை அல்லது வரையறை விரிவுபடுத்தப்பட்டு, அதை உள்வாங்க வேண்டி உள்ளது. இதனால் முன்னைய தனித்துவமான கருத்து தொலைக்கப் பட்டு, அவை மேலும் மேலும் விரிவாக்கக் கூடிய நெகிழ்வு தன்மையை பெறுகிறது. எனவே கட்டாயம் வரும் காலத்தில் அது மேலும் விரிவு படுத்தப்படலாம் ?. உதாரணமாக, இரு சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு இடையில் அல்லது தாய்க்கும் மகளுக்கும் இடையில் ... ஏன் சிலவேளை ஒருவருக்கும் அவரின் செல்லப் பிராணிக்கும் இடையில் .. இப்படி நீட்டப் படலாம் , அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“. இது ஆண் பெண்களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப்பட்டு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப்படையாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அப்படி தனித்துவமான ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பினால், திருமணம் கூட தேவை இருக்காது, அப்படி என்றால் அதைப்பற்றி வாதாடுவதை கூட இத்துடன் நிறுத்தி விடலாம் ? நீங்கள் திருமண பழக்கவழக்கங்களை வெளிப்படையாக, வரலாறு முழுவதும் உற்று நோக்கினால், அங்கே சில பொதுப்படையான காரணிகளை காணலாம். அவை அதிகமாக, திருமணத்திற்கு புறம்பான பாலியல் நடவடிக்கைகளுக்கு தடை, திருமணத்திற்குள் நம்பகத்தன்மை அல்லது ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருத்தல், வாழ்வு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் அர்ப்பணித்தல், திருமண வாழ்வில் ஒரு பிள்ளை பிறந்தால், அதன் தந்தை கணவரே என்ற அனுமானம், பரம்பரை தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சொத்துக்கள், திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருத்தல் (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and ahem , the marriage being between a man and a woman) போன்றவற்றை காணலாம். இவை எல்லாம் கட்டாயம் இனப் பெருக்க நோக்கம் கொண்டவையாகவும், பெற்றோர் இருவருமே என உறுதி படுத்துவதுடன், உயிரியல் தாய் தந்தையர் கண்காணிப்பில் பிள்ளைகளுக்கு ஆதரவை நிலைநாட்டுவதும் ஆகும். எனவே தான் என்னை பொறுத்தவரையில், ஒருபால் கூட்டுக்கு அல்லது சமூக கூட்டு (civil partnerships - a new institution with a new purpose) ஒன்றிற்கு எந்த பிரச்சினையும் எனக்கு இல்லை. ஆனால் அதை திருமணம் என்று வரையறுப்பதில் தான் உடன்பாடு இல்லை, ஏன் என்றால் கருத்து முக்கிய விடயத்தில் முற்றாக அல்லது எதிர்மறையாக மாறுகிறது. இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்ல வேண்டும், ஒரு ஆணின் உடலையோ அல்லது ஒரு பெண்ணின் உடலையோ, ஒரு பால் உறவு வைக்குமாறு அல்லது ஓரின சேர்க்கை செய்யுமாறு இயற்கை கட்டாயம் வடிவமைக்கவில்லை. ஒருவேளை அப்படித்தான் வடிவமைத்து இருந்தால், நாம் எல்லோரும் ஒரு இருபால் உயிரியாகவே (hermaphrodites!) இருந்திருப்போம். உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான கட்டத்துக்கு படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைகளும் எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்து உள்ளது. தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே (replicating process), கலவியற்ற இனப்பெருக்கமாகவே (Asexual reproduction) நிலவியது. உதாரணமாக வைரஸ், பற்றீரியா, அதிநுண்ணுயிரி போன்றவை. சிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. உதாரணமாக விலங்குகள், மனிதர்கள். ஆகவே நாம் மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக படிமலர்ந்து அல்லது பரிணமித்து இன்று இந்த நிலைக்கு தேவைகளின் அடிப்படையில் வந்துள்ளோம். எனவே இதை நாம் கவனத்தில் எப்பவும் எடுக்கவேண்டும். அண்மைய ஆய்வுகள், உலகில் இதுவரை 450 விலங்கு இனங்களிடையே ஓரினச்சேர்க்கை நடத்தைகள் காணப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன என எல்லாமே அடங்கும். இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [bonobos] ஆண் மற்றும் பெண்ணும் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish], தன்னுடன் போட்டியிடும் மற்ற ஆண் கூடைட் மீன்களை [போட்டியாளர்களை] ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி, உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும் விலங்குகளில் இருந்து எத்தனையோ மில்லியன் ஆண்டுகளாக ஒரு தேவை அல்லது ஒரு இலக்கை நோக்கி பரிணமித்து தான், நாம் இன்றைய நிலைக்கு முன்னேறி வந்துள்ளோம். ஆகவே மனித சமுதாயத்தில் எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு விலங்குகளைக் குறிப்பிடுவதில் அல்லது விலங்குகளிடம் இருந்து எமக்கு உதாரணம் எடுப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "ஓரினச்சேர்க்கை: மனிதர்களை எதிர்ப்பீர்கள்; சிங்கங்களை என்ன செய்வீர்கள்?" , என்று ஒருவரின் கட்டுரையை [By ஜெயராணி • 17/10/2019] பார்த்தேன், விலங்கு உலகில் ஆவணப்படுத்தப்பட்ட தன்னின ஊன் உண்ணும் ஆதாரம் உள்ளது, மேலும் சிங்கம் தன் குட்டிகளையே சாப்பிடுகிறது. ஆகவே மனிதர்களுக்கும் சிசுக்கொலை மற்றும் நரமாமிசம் (infanticide or cannibalism) சரியானதாக இருக்கும் என்று வாதாடலாமா ?. மனித ஓரினச்சேர்க்கை நடத்தை பற்றிய முக்கிய வாதங்களில் ஒன்று இது ஆண் குழுக்களை, உதாரணமாக, அவர்கள் வேட்டை அல்லது போரில் இருக்கும் பொழுது, அவர்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது என்கிறார் பேராசிரியரும் பரிணாம உயிரியலாளருமான ராபின் டன்பார் [Robin Dunbar is a professor of evolutionary psychology]. உதாரணமாக, பண்டைய கிரீஸில் ஸ்பார்டன்ஸ் [the Spartans, in ancient Greece], தமது சிறந்த மேம்பட்ட துருப்புகளுக்கு [elite troops] இடையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்தார்கள். இரு ஆண்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருந்தால், ஒருவருக்கு ஒருவர் தமது மற்ற நபர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். மேலும் ஓரினச்சேர்க்கைக்கு ஒரு செயல்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது வேறொன்றின் கிளை விளைவு என்றும் [a spin-off or by-product] மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான முக்கியத்தை இது கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறார் [It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight.]. அவர் மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை போதுமான வலுவானதாக இருந்தால் அல்லது மிகையாக வழிந்து கொட்டினால், அது வாலில்லாக் கருங்குரங்கு [போனோபோஸ்] மற்றும் செம்முகக் குரங்கு [மாகேக்] செயல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, உற்பத்தி செய்யாத உடலுறவில் அந்த வேட்கை பரவக்கூடும் என்கிறார் [if the urge to have sex is strong enough it may spill over into nonreproductive sex, as suggested by the actions of the bonobos and macaques.]. இதன் விளைவால் அல்லது தாக்கத்தால், அவர்கள் வளரும் சமூக சூழலின் விளைவாக, அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஓரினச்சேர்க்கை யாளராகவே வாழ வாய்ப்பு உள்ளது அல்லது அப்படியான உணர்வுகளுக்குள் முடங்கி விட வாய்ப்பு உள்ளது என்கிறார். இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும், மனித ஓரினச்சேர்க்கைக்கான காரணங்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ தூரம் ஆராச்சியில் செல்ல வேண்டும் என்கிறார் ராபின் டன்பார். உலக மனித வரலாற்றின் படி, ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பை அல்லது கூட்டை சட்ட பூர்வமாக முதல் முதல் ஏறத்தாழ கி மு 2350 இல் மெசொப்பொத்தேமியாவில் அறிமுகம் செய்தவர்கள் சுமேரியர்கள் ஆகும். அதற்க்கு முதல் திருமணம் என்ற ஒரு சடங்கு இருக்கவில்லை. இங்கு சுமேரியர்கள் இன்றைய தமிழர்களின் முன்னையோர்கள் என அறிஞர்கள் இன்று பல எடுத்துக் காட்டுகளுடன் வாதிடுகிறார்கள். இதற்கு முதல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியில் [tribe] உள்ள ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களை அணுகலாம் என்றும், அங்கு குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் முழு சமூகத்துக்கும் சேர்ந்தவர்களாக கருதப் பட்டார்கள். இது மனிதனுக்கு வெவ்வேறு பாலியல் அனுபவங்கள் அல்லது வகைகள் வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது எனலாம். என்றாலும் நாளடைவில், சில முக்கிய காரணங்களால், பாலியல் அறநெறி வளர்ச்சி அடைய, அதுவும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு தொகுதி ஆண்களுக்கும் ஒரு தொகுதி பெண்களுக்கும் இடையில் திருமணம் அமைக்கப் பட்டது [‘group marriage’]. அங்கு அவர்களுக்கு இடையில் பகிரப்பட்ட பாலியல் உறவுகள் நடைபெற்றன. இதனாலேயே பின் பலகணவர் மணம் [polyandry] ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் முன்னைய காலத்தில் வழமையில் இருந்தன. விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his]. எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம். “உங்கள் வயிறு நிரம்பட்டும் , உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , உங்கள் உடல், தலை கழுவட்டும்; இரவும் பகலும் மகிழுங்கள், ஆடி பாடி மகிழுங்கள்; உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! இதுதான் மனிதர்களின் விதி” “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.” இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம், இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று : “தூக்கமே களைந்து விடு என் கைகள் காதலியை தழுவட்டும் ! நீ என்னுடன் பேசுவதால், நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! என் அன்பே, உன்னை நினைத்து நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் இரவு முழுவதும் விழித்திருந்தேன்!" “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.” என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting]. இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது. எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை. ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் திருமணம் என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்க்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு. மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும் திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony = matri + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. மத்திய தாய்லாந்திலுள்ள அயுதயா யானைகள் சரணாலயத்தில் ஆசிய யானையொன்று அரிய வகை இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவொரு அதிசய நிகழ்வென அங்குள்ள பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். 36 வயதான சாம்சூரி என்ற யானை இரட்டைக் குட்டிகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை ஆண் குட்டியை ஈன்றெடுத்தது. அத்துடன் அதற்கான பிரசவம் முடிந்துவிட்டதாக நினைத்துள்ளனர். முதல் குட்டியை கழுவி சுத்தம் செய்து, தாய் யானையின் காலடியில் நிக்க வைக்க முயலும்போது பலத்த சத்தம் கேட்டுள்ளது. அப்போது சாம்சூரிக்கு இரண்டாவது பெண் குட்டி யானை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்தின்போது தாய் யானை சற்று பீதியில் ஆழ்ந்ததால், ஈன்ற பெண் குட்டியை மிதித்து விடாமல் பராமரிப்பாளர்கள் காக்க வேண்டியிருந்தது. இந்தக் குழப்பத்தில் ஒரு பராமரிப்பாளர் காயமடைந்தார். யானைப் பிறப்புக்களில் இரட்டைக் குட்டிகள் என்பது மிகவும் அரிது. அதிலும் ஒரு ஆண் மற்றும் பெண் என்பது அரிதிலும் அரிதானது சேவ் தி எலிஃபண்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் உட்பட பூங்காவை பார்வையிட வருபவர்களுக்கு யானைக் குட்டிகளைப் பார்ப்பதற்கு அனுமதியுண்டு. ஆனால், அவர்களின் பாதணிகளை கழற்றி வைத்து விட்டு, கைகளை நன்றாகக் கழுவிவிட்டே உள்ளே வர வேண்டும். அங்கே ‘யானைக் குட்டிகளை தொட வேண்டாம்’ என்று பலகையில் எழுதப்பட்டிருக்கும். பிறந்து ஏழு நாட்களின் பின்னரே யானைக் குட்டிக்கு பெயர் வைக்கப்படும். இரண்டாவதாக பிறந்த பெண் யானைக்குட்டி 55 கிலோகிராம் எடை கொண்டது. ஆண் யானைக் குட்டி 60 கிலோகிராம் எடை கொண்டது. https://thinakkural.lk/article/303745 வித்தியாசம் 5கிலோகிராம் போல தெரியவில்லை!
  4. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா….? அதுவும் தந்தை ஆண்புலி, தாய் பெண்புலி, இருவருமே எழுத்துலகிலும் கால்பதித்துப் பாராட்டுப் பெற்றவர்கள். குட்டி 16அடி பாய்ந்து அதுவும் Stern Award பெற்றதில் வியப்பேதும் இல்லை. குட்டி துமிலனை மனசார வாழ்த்துகிறோம்.🙌 ‘நெஞ்சில் நின்றவை’ என்ற தொகுப்பில் தாயகத்தின் நினைவுகளை மூனா என்ற புனைப்பெயரில் பதிந்திருந்த துமிலனின் தந்தை செல்வகுமாரன் அவர்கள், ‘மறக்க மறுக்கும் மனசு’ தொகுப்பில் புலத்தின் வாழ்வையும் பதிந்துள்ளார். அவரது சித்திரங்கள், கேலிச்சித்திரங்களை யாழ்களமே வியந்து பாராட்டியுள்ளது சொல்லித் தெரியவேண்டியதில்லை. தாய் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் எழுத்துக்களை ஐபிசி தமிழ் வானொலி உற்சாகமாக வரவேற்றுக் கொண்டுள்ளது. அவரது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் எனப் பலதரப்பட்டவைகள் வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் எனப் பலவற்றிலும் பரவி நிற்கின்றன. தன் குடும்பத்திற்கு மேலும் பெருமை சேர்த்த துமிலனுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.😀
  5. அமலாக்கத்துறையை ஏவி விடும் அரசியல் பழிவாங்கல்🤣
  6. உங்களுக்கு ஆசையில்லா விட்டாலும் நாங்க கதிரையில் இருந்தி பார்க்க விரும்புகிறோம் இது நல்லா இல்ல.. உங்களை நம்பி வந்த முதல்வரை புதுசா கட்சியில சேர்ந்தவருக்காக பதவி இறக்கிறது சரியா????? இதை எங்கட பாரம்பரிய கட்சியில் இருந்து கொப்பி பண்ணீட்டங்களா அண்ணை🤭🤭🤭
  7. 28வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 13.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 47 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய மிகவேகமாக அடித்தாடி 3.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 50 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 28 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 46 2 ரசோதரன் 46 3 கோஷான் சே 46 4 ஈழப்பிரியன் 44 5 சுவி 44 6 நந்தன் 44 7 தமிழ் சிறி 40 8 ஏராளன் 40 9 கிருபன் 40 10 கந்தப்பு 40 11 வாத்தியார் 40 12 எப்போதும் தமிழன் 40 13 நீர்வேலியான் 40 14 வீரப் பையன்26 38 15 நிலாமதி 38 16 குமாரசாமி 38 17 தியா 38 18 வாதவூரான் 38 19 அஹஸ்தியன் 38 20 கல்யாணி 38 21 புலவர் 36 22 P.S.பிரபா 36 23 நுணாவிலான் 36 முதல்வர் பதவியில் அமெரிக்கப் பிரபா அமர்ந்துள்ளார்!
  8. யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் ஆரம்பமாகின்றது. உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டித் தொடரான யூரோ கிண்ண தொடராகும். உதைப்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் பெரும்பான்மையான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டித் தொடரில் நடப்பு சம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சம்பியன்களும் களம் காணுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று இன்று முதல் ஜூன் 26ஆம் திகதி வரை நடைபெறும். தொடர்ந்து சுற்று-16 ஜூன் 29 முதல் ஜூலை 2ஆம் திகதி வரையிலும், காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6 திதிகளிலும் நடைடபெறவுள்ளன. மேலும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9 ஆம் 10ஆம் திகதிகளில் நடத்தப்பட்டு இறுதி ஆட்டம் ஜூலை 14ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள பெர்லின், முனிக், டோர்ட்மண்ட், ஹாம்பர்க், ஃபிரங்க்பர்ட் உட்பட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://uthayam.lk/2024/06/14/யூரோ-கிண்ண-கால்பந்துப்-ப/
  9. துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதி இருக்கின்றார். 2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும் பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது. வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில், நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன் இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி தரையில் கிடந்த விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன் இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “ஸ்வேபிஸ் ஹாலின் விதவை கொலைகள்" பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், "குருடாகப் பறந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்" என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award 12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது. Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், "நான் பொலிஸ் துறையின் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில், நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லை” என்ற வருத்தத்தையும் விழா மேடையில் தெரிவித்தார். நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு விருது குறித்து முடிவை எடுத்திருந்தது. Stern சஞ்சிகை இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தே ‘புதனும் புதிரும்’ என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின் 26 அகவை சுய ஆக்கங்கள் பகுதியில் நான் எழுதியிருந்தேன். -கவி அருணாசலம்
  10. ஒரின சேர்க்கையாளர்களினால் தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை எங்கும் காண முடியவில்லை. அவர்களுக்கு இரண்டும் கெட்டான் எனும் துயர வாழ்க்கையே அமையும் என நான் நினைக்கின்றேன்.
  11. நான் இப்ப அதுதான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.........! 66 நிமிடங்கள் ஆயிற்று.......ஜேர்மன் 3 ...... ஸ்கொட் 0......! இடைவேளைக்கு முன் 03 கோல் போட்டுட்டுது, இதை எழுதும்போது 4 வது கோல் 67 வைத்து நிமிடத்தில் .....! ஸ்கொட்டில் ஒருவர் சிகப்பு மட்டை வாங்கி 10 பேருடன் களமாடுகின்றனர்.....!
  12. அமெரிக்கா சூப்ப‌ர்8க்கு போன‌து ஒரு வித‌த்தில் ந‌ல்ல‌ம் அமெரிக்கா ஊட‌க‌ங்க‌ளில் இந்த‌ செய்தி க‌ண்டிப்பாய் போடுவின‌ம் அதோட‌ அமெரிக்க‌ ம‌க்க‌ளின் சிறு பார்வை த‌ன்னும் கிரிக்கேட் மீது வ‌ரும்.....................அமெரிக்காவில் வெஸ்வோல் வ‌ள‌ந்த‌ மாதிரி கிரிக்கேட்டும் வ‌ள‌ர‌னும் 50வ‌ருட‌ம் போன‌ பிறக்கு கிரிக்கேட்டில் அமெரிக்கா தான் ஜ‌ம்பவாங்க‌ளாய் இருப்பாங்க‌ள்🙏🥰................................
  13. 🤣... ஏதோ ஒரு வழியில் அடாத்தாக கட்டி விட்டு கவனிக்காமல் விட்டால், நியூயோர்க்கில் வீடுகளில் வாழாமல் தெருவில் வாழும் மக்கள் இந்த மைதானத்தில் குடியேறி விடுவார்கள். அவர்களை அங்கிருந்து எழுப்பு என்று ஒரு கட்சியும், எழுப்பாதே என்று மற்ற கட்சியும் அவர்களுடன் சேர்ந்து அங்கேயே குடியேறி விடுவார்கள்............. இங்கு விளையாடிய மூன்று போட்டிகளில் மொத்தமாக ஐந்து ஓட்டங்களை எடுத்த விராட் கோலி இந்த மைதானத்தை உடைக்கும் செலவில் 50%ஐ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சொல்கின்றனர்...........😜.
  14. விக்கிபீடியாவில் கிடைக்கும் இந்த மைதானம் பற்றிய தகவல்களில் இருந்து: நியூயோர்க்கில் வேறு ஒரு இடத்திலேயே ஒரு நிரந்தர மைதானம் அமைக்கும் திட்டம் இருந்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு தொடர்ச்சியாக அந்த ஊர் மக்களும், சுற்றுச் சூழல் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருந்தனர். பின்னர், இன்று மைதானம் இருக்கும் இடத்திற்கு கடைசி நேரத்தில், ஒரு தற்காலிக மைதானம் என்னும் ஒப்புதலுடனேயே, மாற்றினார்கள். இல்லாவிட்டால் இங்கும் எதிப்புகள் காட்டப்பட்டிருக்கும். இந்த மைதானத்தை Modular Architecture முறையில் உருவாக்கிய நிறுவனம் இதே போன்ற பல கட்டமைப்புகளை வே று விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளுக்காகவும் இங்கே செய்திருக்கின்றார்கள். MLC எனப்படும் Major League Cricket இங்கே அமெரிக்காவில் இருந்தாலும், போட்டிகள் பெரும்பாலும் கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, டெக்சாஸ் போன்ற வருடம் முழுவதும் காலநிலை விளையாட்டிற்கு உகந்ததாக இருக்கும் இடங்களிலேயே நடத்தப்படுகின்றது.
  15. எழுத்தாளர் துமிலனுக்கும், பெருமைக்குரிய அவர் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்! ஆசியப் பெற்றோர் வெளிநாடுகளில் "மருத்துவர், பொறியியலாளர், முதலீட்டு வங்கியாளர்" என்ற தடங்களில் மட்டும் தங்கள் குழந்தைகளைத் தள்ளி விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பத்திரிகைத் துறையில் பிள்ளையை அனுமதித்து, பிரகாசிக்க விட்டிருக்கிறீர்கள். எழுத்தாளர் முத்துலிங்கத்தின் மகன், ஒரு National Geographic ஒளிப் படக்கலைஞராக ஒளிர்கிறார் என்று அவரது தந்தையின் ஒரு கட்டுரையில் அறிந்தேன். எல்லாத் துறைகளிலும் எங்கள் ஆட்கள் கொடி நாட்ட வேண்டும்.
  16. நீங்கள் இந்தக் கட்டுரையை முதலே இணைத்திருக்கிறீர்களென நினைக்கிறேன். தற்போது இது கவனம் பெற்றிருக்கிறது. உங்கள் கட்டுரையில் இருக்கும் பல சந்தேகங்களும், வினாக்களும் நாகரீகமான முறையில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைத் தவிர, ஏலவே ஓர்பாலின உறவை எதிர்ப்போர் முன்வைத்து, பரவலாகப் பதில்கள் கொடுக்கப் பட்ட வழமையான சந்தேகங்கள் தான். ஒரு மாதிரிக்கு, 1. மனித இனம் தப்பி, பெருகி வாழ இயற்கையாக வழங்கப் பட்டது ஆண், பெண் உறவு என்கிறீர்கள். ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? அல்லது, பிள்ளை பெறாமல் திருமணமாகி இருப்போர் "இயற்கைக்கு மாறாக இருக்கிறார்கள்" என்று அவர்களையும் ஓரினச் சேர்க்கையாளரை தற்போது செய்வதைப் போல ஒதுக்கி வேறு பெயரால் அழைக்க வேண்டுமென்கிறீர்களா? மனித இனத்தோடு சேர்ந்தே வந்திருக்கும் இந்த ஓர்பால் கவர்ச்சியால், நீங்கள் பயப்படுவது போல எந்த மனித இன அழிவும் கடந்த 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்? ஹாவார்ட் கூர்ப்பியல் நிபுணர் டானியல் லிபர்மானின் கருத்துப் படி. "கூர்ப்பு என்பது எப்போதுமே எண்ணிக்கையை அதிகரித்தல்/தப்பி வாழ்தல் என்ற நோக்கத்தில் இயங்குவதில்லை". அது மட்டுமல்லாமல், தற்போது நிகழும் ஹோமோ சேபியன்சின் கூர்ப்பு என்பது, இயற்கையினால் பெரிதும் கட்டுப் படுத்தப் படும் நிலையில் இல்லை என்றும் சொல்கிறார். இதற்கான பல உதாரணங்கள் அவரது சுவாரசியமான நூலான The Story of Human Body இல் தருகிறார். எனவே, நான் ஒரு எதிர் கருதுகோளை முன்வைக்கிறேன்: சமூக மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, சகலரையும் (பால் கவர்ச்சி, தோல் நிறம், உடல் இயலுமை) சமமாக நடத்தினால், உலகில் ஒரு பல்லினத் தன்மையான ஹோமோ சேபியன்ஸ் உருவாகும். அதன் எண்ணிக்கை சிறிது குறைகிறதென்றே வைத்துக் கொள்வோம் ஒரு பேச்சுக்கு. ஆனால், தப்பி வாழும் ஹோமோ சேபியன்ஸ், நியண்டதாலை சேபியன்ஸ் கொன்றது போல ஒருவரை ஒருவர் மறுத்து ஒதுங்கி நிற்க/ ஒளித்திருக்கச் செய்யாமல் ஸேபியன்ஸ் என்ற இனம் முன்னேற உழைப்பவர்களாக மாற்றும். இது கூர்ப்பு ரீதியில் தப்பி வாழ்தல்/நிலைத்திருத்தல் அல்லவா? 2. இன்னொரு மாதிரியாக: இதை அனுமதித்தால், incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்ற உங்கள் சந்தேகம் உங்களுக்கு வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இரத்த உறவுக்குள் நீங்கள் சொல்வது போல உறவு நிகழ்ந்தால் பல பரம்பரை ரீதியான நோய்களைச் செறிவாக்கும் நிகழ்வு நடக்கிறது, இதனால், சில விலங்குகள் கூட தங்களிடையே தாய், மகன், உடன் பிறப்பு உறவை (in-breeding) நாடுவதில்லை. எனவே, மனிதர்கள் இதைத் தவிர்க்க உறுதியான உயிரியல் காரணம் இருக்கின்றது. விலங்குகளை ஒருவர் புணர முயல்வது சட்டப் படி குற்றம். ஏன்? ஒரு உடலுறவில் consent இல்லை என்றால் அது சட்ட ரீதியான consensual உறவு அல்ல! விலங்குகள் எப்படி consent கொடுக்கும் என நினைக்கிறீர்கள்? எனவே, அழகாக எழுதியிருக்கிறீர்கள், ஆனால், உங்கள் வாதம் உறுதியான அடித்தளத்தில் இல்லை!
  17. சில தினங்களிற்கு முன் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த LGBTQIA வினரின் சுயமரியாதை நடைபவனி
  18. கந்தையர், பலதமிழர்களுக்கு இது நன்றாகவே புரிகிறது. ஆனால் யாழ் களத்தில்தான் சில மெத்தப்படித்தவர்களுக்கும் அடிக்கடி நிறம் மாறுபவர்களுக்கும் இது புரிவதில்லை. அது அவர்களுக்கு என்றுமே புரியாது.
  19. தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்று நாங்கள் எழுதலாம் ஆனால் இறந்தவருக்கு அதுதான் தீர்வாகி உள்ளது. அவரால் பிரச்சனையை எதிர்கொள்ள முடியவில்லை.. ஒருவருக்கும் அவரது பிரச்சனையோ அல்லது அவரது விருப்பங்களோ தெரியவில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக கதைத்து தீர்வுகளை எடுக்கும் நிலை எங்களது சமூகத்தில் இல்லை. மற்றவர்கள் என்ன கூறுவார்களோ என்ற நிலையில்தான்/பயத்தில்தான் அனேகமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
  20. என்னைக்கேட்டால் இதை எதிர்க்கவும் தேவை இல்லை ஆதரிக்கவும் தேவை இல்லை.. இதை கலாச்சாரமாக ஊக்குவிப்பது நிச்சயம் தவறு.. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.. அவரவர் தெரிவு அவரவர்க்கு.. இதை ஊக்குவித்து ஒரு பஷன் ஆக்கி ரெண்ட் ஆக்குவது புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பதுபோல் மிகத்தவறான செயற்பாடு.. அதே நேரம் இதை இயற்கையின் தெரிவாக அமைந்தவர்களை நாம் ஏற்றுக்கொண்டு அரவணைத்து செல்லவேண்டும்.. எங்களைப்போல் அவர்களுக்கும் தம் ஆசைபோல் வாழ எல்லா உரிமையும் உண்டு.. அதே நேரம் இயற்கையாக உடலில் இந்த ஹோர்மோன் மாற்றங்கள் இல்லாத பிள்ளைகளுக்கும் மூளைச்சலவை செய்வதுபோல் இதை ரெண்ட் ஆக்குவது பல்வேறு பால்வினை நோய்களுக்கும் சமூக மற்றும் குடும்ப கட்டமைப்புகளின் சீர்குலைவுக்கும் காரணமாகிவிடும்..
  21. ஓர் ஆணுக்கு ஒரு பெண்தான் துணை. ஒரு பெண்ணுக்கு ஒர் ஆண்தான் துணை. இதை மாற்ற வெளிக்கிட்டால் அந்தக் கடவுளே வந்தாலும் எதிர்ப்பேன். வெல் செய்ட் போப்!👏
  22. "வரலாறு தன்னைத் தானே திருப்பிச் சொல்லும்" இலங்கையின் வடமேல் மாகாணக் கரையோரத்தில் சிறந்து விளங்கும் நகரம் சிலாபம் என்று சொல்லலாம். அங்கிருந்து 16 மைல் தூரத்தில், இந்துமகா சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்து இருக்கும் எழில் மிகும் கிராமம் தான் உடப்பு. இங்கு தற்சமயம் அண்ணளவாக 10 ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இக்கிராமம் நெய்தல் நிலத்தைச் சார்ந்ததால், இங்கு மீன் பிடித் தொழிலே முதன்மையாக இருந்தாலும், நெசவுத் தொழிற்சாலை, கயிற்றுத் தொழிற்சாலை, பனை ஓலை குடிசைத் தொழிற்சாலைகள் போன்றவையும் உள்ளன. இந்த அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம் பரப்பும் உடப்பு அல்லது உடப்பூர் கிராமத்தை, கட்டாயம் புத்தளம் மாவட்டத்தின் குட்டித் தமிழகம் என்று சொல்லலாம். இங்கு இன்று வாழும் பெரும்பாலான மக்களின் முன்னோர்கள், இராமேஸ்வரத்தை வாழ்விடமாகக் கொண்டவர்கள். அவர்கள் 1678 ஆம் ஆண்டளவில் இங்கு குடியேறினார்கள் என்று வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, இங்கு உள்ள மக்கள் அதிகமாக தெய்வப் பெயர்களை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இன்று பிறக்கும் பிள்ளைகளைத் தவிர. அப்படியான, கடற்கரை கிராமத்தில் எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி; அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் - வேனிற்கால மாலைப் பொழுதிலே கதிர்காமன் என்ற இளம் பையன் சிறிது நேரம் கடலைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு இருந்தான். அப்போது அடி வானத்திலே எழுந்தது ஒரு கார்மேகம். இடி இடித்தது; இருள் பரந்தது. பெருமழை பெய்யும் போலிருந்தது. அம்மழைக் குறியைக் கண்டும் கடற்கரையை விட்டு அவன் அகலவில்லை. அவன் வாய் முணுமுணுத்தது "என்னே இம் மேகத்தின் கருனை! உடப்பு முழுவதும் அனல் வீசுகின்றது; குடி தன்ணீர் குறைகின்றது; உயிர்கள் உலர்ந்து திரிகின்றன. இவற்றை யெல்லாம் அறிந்தும் இக் கடல், தண்ணீரைத் தன்னகத்தே தேக்கி வைத்துக்கொண்டு, ஆனந்தமாகக் கொட்ட மடிக்கின்றதே! இது தகுமா? முறையா? இந் நெடுங் கடல் கொடுங்கடலாக அன்றோ இருக்கிறது? ‘கொடு’ என்றால் கொடுமை வாய்ந்த கடல் கொடாதென்று அறிந்துதானே கருணை மா முகில் இடியென்னும் படை தாங்கி எழுந்து வருகின்றது! ஈகையால் வருவதே இன்பம் என்று அறியாதாரை அடித்து வாங்குதல் அறமே போலும்! அதனால்த்தானோ என்னவோ இம் மேகம் கடல் வெள்ளத்தைக் கொள்ளை கொண்டு கனத்த மழை பொழியப் போகின்றது?" இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக. கதிர்காமன் தன் மனதுக்குள் மேகத்தை வாழ்த்தினான் "முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்" (திருவெம்பாவை) கதிர்காமன் கடலைப் பார்த்து சிரித்தான். அந்த சிரிப்பு உண்மையில் தர்மராஜா முதலாளியை நினைத்துத் தான்! கதிர்காமனின் குடும்பத்தில் ஐந்து உருப்படிகள். அதில் கதிர்காமன் மூத்த பையன். கதிர்காமன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் மட்டுமல்ல மிகவும் ஆர்வமும் உள்ளவன். அவனின் தந்தை வைரவன் சிறு மீன்பிடித் தொழில் செய்பவர். என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூறாவளியுடன் ஏற்பட்ட கடும் மழையில், சிக்குண்டு தன் படகுடன் விபத்துக்குள்ளாகி, இன்றுவரை ஊனமுற்றவராக இருக்கிறார். இதனால் அவனின் குடும்ப நிலை மோசமாகி படிப்பை இடை நடுவே முடிப்பதற்கு வழிவகுத்தாலும், அவனின் படிப்புத் திறன் மேல் உள்ள நம்பிக்கை கஷ்டமான நிலையிலும் பெற்றோரால் தொடர வைக்கப்பட்டது. அவன், 1902 இல் களிமண்ணால் கட்டப்பட்டு ஓலையினால் மேயப்பட்ட சிறிய பாடசாலையாக ஆரம்பித்து, 1965 இல் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு, பின் 1973 விஞ்ஞான கூடமும் அமைத்து முழுமை பெற்ற உடப்பு தமிழ் மகாவித்தியாலத்தில், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் முதல்வரின் உதவியுடன் தன் கற்றலை தங்கு தடையின்றி தொடர்ந்தான். என்றாலும் ஒரு நேர உணவு உண்பதே சிரமமான நிலையில் தான் அவனது இளம் பராயம் கழிந்தது. பல நாட்கள் அம்மா சிலரது பெயரைச் சொல்லி பணமோ அரிசியோ வாங்கி வரச்சொல்லி கதிர்காமனை அனுப்புவார். பணம் உள்ளவர்களான, அம்மா சொல்லாதவர்களிடமும் அவன் முயற்சிப்பான். என்றாலும் சிலவேளை வெறுங்கையுடன் தான் வீடு போவான். அப்படியான நேரம் எதோ வளவில் கிடைக்கும் சில இலைவகைகளுடனும் அல்லது கிழங்குகளுடனும் அவனின் குடும்பம் சமாளித்துவிடும். மிகுதி வயிறை நீரால் நிரம்பிவிடும். இன்று அவன் முதல் முறையாக தர்மராஜா முதலாளியிடம் போயிருந்தான். இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை. உனக்கெல்லாம் எதுக்குப் படிப்பு. போய் மீனைப் பிடிச்சு குடும்பத்தைப் பார், உனக்கு இப்ப வயது வந்துவிட்டது தானே என்று சத்தம் போட்டு ஏசி அனுப்பினார். அது தான் அவன் கடலைப் பார்த்து, தர்மராஜாவை நினைத்து ஏதேதோ அவன் மனதில் எழும்பியதை கொட்டித் தீர்த்தான். எப்படியோ அம்மா, அப்பாவின் முயற்சி, கதிகாமனின் வெறித்தனமான கல்வி ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றால் குடும்பத்தில் அனைவருமே படித்து நல்ல நிலைக்கு, சிறப்பான வாழ்க்கை வெளிநாட்டிலும் தலைநகரிலும் வாழத் தொடங்கினர். அப்படியான ஒரு காலத்தில் தான், இலங்கையில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை 2004/12/26 அன்று இலங்கையைத் தாக்கியதில் குறைந்தது 46,000 பேர் இறந்தனர். அது முக்கியமாக பெரும் சேதங்களைக் இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தினாலும், அவனின் ஊரும் கடற்கரைக் கிராமம் என்பதால், சில பாதிப்புக்களுக்கு உள்ளாகின, என்றாலும் ஒரு உயிர் சேதமும் அங்கு இல்லை. இதை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் கேள்விப்பட்ட கதிர்காமன், தன் சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு உடனடியாக ஊர் சென்றான். அனைவருக்கும் தேவையான தற்காலிக கூடாரங்கள், உணவுப் பொதிகள், தண்ணீர் மற்றும் மாற்ற உடைகள் என பலவற்றை தமது செலவிலேயே ஒழுங்கு செய்தான். தர்மராஜா முதலாளி ஊரில் முன்னர் பெரிய செல்வந்தர். இவர்தான் கதிர்காமனை திட்டி அனுப்பியவர் கூட, அவரின் அந்த கடும் மனிதத்தன்மை அற்ற வார்த்தைகளும் அன்று கதிர்காமனை உசுப்பேற்றி, அவனை ஒரு இலக்கு நோக்கி கடுமையாக படிக்க வைத்தது என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விடயம்! தர்மராஜா ஐயா, அழுதவாறே என்னை மன்னித்துவிடு தம்பி என்ற அவரின் வார்த்தைகள் கதிர்காமனுக்கு இன்று காதில் தேனாக இனிக்க வில்லை. இல்லை ஐயா, மாறாக நீங்களும் ஐயா அன்று என்னை ஏசிக் கலைத்ததால் தான் நான் இப்ப அறுவை சிகிச்சை நிபுணராக வர முடிந்தது என கண்களில் நீர் கசிய, தரும ராஜா என்ற பொருத்தமில்லா பெயரைக் கொண்ட தர்மராஜா ஐயாவிற்கு கதிர்காமன் கூறியதை, அவனின் அம்மா, சின்னக்காளி மகிழ்சியுடன், கொஞ்சம் தள்ளிநின்று பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு மனக் கர்வத்துடன்! தர்மராஜா முதலாளி ஒன்றும் பேசவில்லை, தூர தெரிந்துகொண்டு இருக்கும் கடலை பார்த்தவண்ணம், கண்ணீர் ஒழுக தன்னையே அவரின் வாய் திட்டிக்கொண்டு இருந்தது. "கருணைமா முகிலே! வான வெளியிலே உருண்டு திரண்டு செல்கின்ற உன்னைக் காண என் கண் குளிர்கின்றது; உள்ளம் மகிழ்கின்றது. கருமையின் அருமையை இன்று நன்றாக அறிந்தேன். கருணையின் நிறம் கருமைதானோ என்று மனங்களிக்கின்றேன். கார் முகிலே! நீ அறத்தின் சின்னம்; அருளின் வண்ணம்; கொடாக் கடலிடம் தண்ணீரைக் கொள்ளை கொண்ட உன்னை இம் மாநிலம் தூற்றவில்லை; போற்றுகின்றது; கொண்டல் என்று உன்னைக் கொண்டாடுகின்றது. உன் கருணை வடிவத்தில் அழகினைக் கண்டனர். பண்டைத் தமிழர்; நானும் கதிர்காமன் வடிவில் இன்று காண்கிறேன்!" உடப்பில், அன்றாட வழக்கில் பாவிக்கப்படும் பழமொழியில் பிரபலமான ஒன்று 'மச்சம் பிடித்தவனுக்கு மிச்சமில்லை', அதன் பொருள் எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும், முடிவில் ஒன்றும் மிச்சம் இல்லை என்பதே. மற்றது " ஊரான் வீட்டு நெய்யே ! என் பொண்டாட்டி கையே !" ஆகும். அதாவது தன் வீட்டு நெய் என்றால் மனைவி சிக்கனமாகவும் ஊரார் வீட்டு நெய் என்றால் மேம்போக்காக வாரி இறைத்தும் செலவு செய்வார் என்கிறது. தர்மராஜா முதலாளி இதை உணர்ந்தாரோ இல்லையோ, ஆனால் அவர் புதுப்பிறவி எடுத்தவர் போல், அவரின் நடவடிக்கைகள் அன்றில் இருந்து மாற்றம் அடைந்தன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  23. மேற்கிந்திய தீவுக்கும் இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்துக்கும் இடையில் நடக்கப்போகுது முன்பும் இப்படி 50 உலக்கிண்ணப்போட்டியில் சூப்பர் 6 இல் செய்தது. எந்த போட்டி என்று மறந்து விட்டேன்.
  24. ஜேர்மன் 05 ........ ஸ்கொட் 01.......! ஸ்கொட்லாந்தின் 01 கோலும் கூட தவறுதலாக ஜெர்மன் வீரரின் தலையில் பட்டு சேம்சைட் கோலாக மாறியது....... ஜெர்மனியின் 5 வது கோல் மேலதிகமான 3 நிமிடத்துக்குள் அதாவது 92 வது நிமிடத்தில் விழுந்தது........! 😂
  25. எந்த அணி வந்தாலும் இந்த முறை சொந்த நாட்டில நடக்கிறபடியால் பலமாகத்தான் இருப்பார்கள். 5-1 அதுவும் ஸேர்மனி own goal போட்டுக்குடுத்திருக்கு.
  26. ஸ்கொட்தாந்துக்கு ரெட் காட் ஹா ஹா ஸ்கொட்லாந் கால்ப‌ந்தில் ப‌ல‌மான‌ அணி கிடையாது ஜேர்ம‌னி பெரிய‌ அணிக‌ளை வென்றால் தான் பாராட்டுவோம் புல‌வ‌ர் அண்ணா...............................
  27. உங்கள் பொன்னான வாய்கு சக்கரை போடுகிறேன், வாக்கு பலிக்கட்டும்.
  28. அன்பு Justin க்கு [Just - based on or behaving according to what is morally right and fair. / in - expressing the situation of something that is or appears to be enclosed or surrounded by something else.] மனித இனம் தப்பி, பெருகி வாழ இயற்கையாக வழங்கப் பட்டது ஆண், பெண் உறவு என்கிறீர்கள். ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? அல்லது, பிள்ளை பெறாமல் திருமணமாகி இருப்போர் "இயற்கைக்கு மாறாக இருக்கிறார்கள்" என்று அவர்களையும் ஓரினச் சேர்க்கையாளரை தற்போது செய்வதைப் போல ஒதுக்கி வேறு பெயரால் அழைக்க வேண்டுமென்கிறீர்களா? இதற்கு மிக ஆழமான விளக்கம் கொடுத்துள்ளேன் . [சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள்.] [ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? தொடர்ச்சி என்றால் என்ன என்று சொல்லமுடியுமா ? தங்களின் தொடர்ச்சியை தாங்களே ஏற்படுத்துவது , மற்றும் படி நீங்கள் தத்து எடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுபது அல்ல , அந்த குழந்தையும் உங்களை மாதிரியே இருந்தால் தொடர்ச்சி அறுந்துவிடும் ?? அப்படி என்றால், அது உங்களில் இருந்து மாறுபட்டு இருபால் உறவு ஒன்றில் ஈடுபடவேண்டும் அல்லவா , அந்த, நீங்கள் சொன்ன தொடர்ச்சியை நீட்டிட] முதலாவது, நான் ஓரின ஒன்றி வாழ்வுக்கோ அல்லது கூட்டு வாழ்வுக்கோ எதிரிப்பு என்று எங்கும் சொல்லவில்லை இரண்டாவது, ஆனால் திருமணம் என்ற, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பண்பாட்டில் உள்ள அதே சொல்லை ஓரின கூட்டுக்கும் பாவிக்கக் கூடாது, அதற்க்கு வேறு ஒரு சொல்லை பாவிக்கலாம் என்பதே என் வாதம். [வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம்.] மூன்றாவதாக "உங்கள் கட்டுரையில் இருக்கும் பல சந்தேகங்களும், வினாக்களும் நாகரீகமான முறையில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைத் தவிர, ... " நான் எங்கும் அழகுபடுத்தவில்லை, ஆனால் நாகரிகமாக வரலாற்றில் இருந்தும் இயற்கையில் இருந்தும் குறிப்புகள் கொடுத்துள்ளேன் நான்காவதாக "மனித இனத்தோடு சேர்ந்தே வந்திருக்கும் இந்த ஓர்பால் கவர்ச்சியால், நீங்கள் பயப்படுவது போல எந்த மனித இன அழிவும் கடந்த 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்?" இது தான் கவனிக்க வேண்டியது. உதாரணமாக The proportion of the UK population aged 16 years and over identifying as heterosexual or straight was 93.6% in 2020; there has been a decreasing trend since the series began in 2014. An estimated 3.1% of the UK population aged 16 years and over identified as lesbian, gay or bisexual (LGB) in 2020, an increase from 2.7% in 2019 and almost double the percentage from 2014 (1.6%). The proportion of men in the UK identifying as LGB increased from 1.9% to 3.4% between 2014 and 2020; the proportion of women identifying as LGB has risen from 1.4% to 2.8% over the same period. ஆகவே நீங்கள் கூறிய 200K ஆண்டுகளில், இப்ப தான் இது ஒரு கணிசமான அளவு தலைகாட்டிட தொடங்கி உள்ளது . எனவே இதன் விளைவு அல்லது தாக்கம் இன்னும் நாம் உணரும் அளவு இல்லை. எனவே அதை வைத்து, 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்?" என்று சொல்லமுடியுமா?? மற்றும் படி நான் அல்லது எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால், இதன் முழுவளர்ச்சி இன்னும் 200K ஆண்டுகளில் கூட நடைபெறாது. அதுவும் எதோ ஒரு இடத்தில் தன்னை இயற்கையின் தெரிவுகளுடன் சமநிலை படுத்திவிடும். ஆனால் குடும்பம் குழந்தை இவைகளில் எப்படியான பாதிப்புக்கள், இதன் சதவீதம் ஒரு எல்லையைத் தாண்டும் பொழுது என்ன நடக்கும் என்பது தெரியாது? இன்னும் நாம் 200K ஆண்டுகள் கடந்தும் ஒரு சிறிய வீதத்தில் தான் காண்கிறோம். அதனாலதான் எந்த பாதிப்பும் பெரிதாக இன்னும் இல்லை. என்றாலும் பாதிப்புக்கள் கூட எத்தனிக்கும் பொழுது , தானாகவே சமநிலை படுத்தும் என்பதே என் நம்பிக்கை ஐந்தாவதாக, "தப்பி வாழ்தல்/நிலைத்திருத்தல் அல்லவா? ". ஆம் , அதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆறாவதாக, "இதை அனுமதித்தால், incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்ற உங்கள் சந்தேகம் உங்களுக்கு வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது" நான் incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்று கூறவில்லை, ஆனால் திருமணம் என்ற சொல்லின் வரைவிலக்கணம், அப்படியான ஒன்றுக்கும் நீட்சி பெறலாம் என்றே கூறினேன் . அதனால்த்தான் ஓரின ஒன்றிய வாழ்வுக்கு , வேறு ஒரு சொல் தேவை என்று கூறினேன். ஏழாவதாக "இரத்த உறவுக்குள் நீங்கள் சொல்வது போல உறவு நிகழ்ந்தால் பல பரம்பரை ரீதியான நோய்களைச் செறிவாக்கும் நிகழ்வு நடக்கிறது, இதனால், சில விலங்குகள் கூட தங்களிடையே தாய், மகன், உடன் பிறப்பு உறவை (in-breeding) நாடுவதில்லை. எனவே, மனிதர்கள் இதைத் தவிர்க்க உறுதியான உயிரியல் காரணம் இருக்கின்றது." இது முற்றிலும் சரி. ஆனால் இதற்கு எதிர்மாறான சில செய்திகளும் வரலாற்றில் அல்லது இன்றும் உண்டு. எட்டாவதாக, "விலங்குகளை ஒருவர் புணர முயல்வது சட்டப் படி குற்றம்." ஆம் அது சரி, ஆனால் ஏன் அப்படியான சட்டம் வந்தது என்று சொல்ல முடியுமா ?, சட்டம் எதோ ஒன்றை தடுக்க, சொல்ல ஏற்படுவது தானே , அப்படி என்றால் ?? உங்கள் கருத்துக்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றிகள். எப்பவும் ஒரு அடித்தளத்தில் இருந்து தான் நான் பார்க்கிறேன், எழுதுகிறேன் , அலசுகிறேன் . அதனால்த்தான் இந்த எட்டு விளக்கங்களும் தோன்றின? அது தான் அடித்தளம்
  29. படத்தில் ஒரு யானைக்குட்டி பெரிதாகவும் மற்றையது மிகச் சிறிதாகவும் இருப்பதை பார்க்க.... ஆகக் குறைந்தது 50 கிலோ வித்தியாசம் இருக்கும் என நினைக்கின்றேன். மனிதரில் பிறக்கும் இரட்டை குழந்தைகளில் கூட... ஒருவர் ஆணாகவும், மற்றையவர் பெண்ணாகவும் பிறப்பது அரிதான விடயம் என கருதுகின்றேன். எனக்குத் தெரிந்த இரட்டையர்கள் பலரும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள்.
  30. @goshan_che இனி உய்ய வாய்ப்பில்லை! மழையும், மெதுவான ஆடுகளமும் அமெரிக்க @பிரபா வுக்கே வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன. அவுஸ்திரேலியா சம்பியனாக வந்தால் அவரைப் நாலுகால் பாய்ச்சலில் கலைத்தாலும் பிடிக்கேலாது! பிட்ச் இன்ஸ்பெக்ஸன் நடக்குது! அம்பயர்மார் மிதித்துப் பார்க்கினம்!
  31. என்ன‌ கார‌னத்துக்காக‌ புதிதாக‌ க‌ட்ட‌ப் ப‌ட்ட‌ கிரிக்கேட் மைதான‌த்தை உடைக்க‌ போகின‌ம் இதை ப‌ற்றி ஏதும் தெரியுமா ஜ‌பிஎல்ல‌ போல‌ அமெரிக்காவிலும் விளையாடுற‌வை தானே இந்த‌ மைதான‌ம் க‌ட்ட‌ ப‌ட்ட‌போது யூடுப்பில் ஒரு தக‌வ‌ல் வ‌ந்த‌து இந்த‌ மைதான‌ம் உல‌க‌ கோப்பை முடிந்த‌தும் அந்த‌ இட‌த்தில் இந்த‌ மைதான‌ம் இருக்காது என்று அப்ப‌ நான் ந‌ம்ம‌ வில்லை இந்த‌ன‌ கோடி கொட்டி செய்த‌ அழ‌கான‌ கிரிக்கேட் மைதான‌த்துக்கு நியூயோக்கில் இட‌ம் இல்லை என்றால் புரிய‌ வில்லை☹️.........................
  32. தேவைக்கு அதிகமாய் இருக்கிறதை பங்கிட்டு வாழும் பழக்கம் அறவே கிடையாது .......!
  33. Pope Francis has criticised laws that criminalise homosexuality as “unjust”, saying God loves all his children just as they are, and calling on Catholic bishops who support the laws to welcome LGBTQ+ people into the church. “Being homosexual isn’t a crime,” Francis said on Tuesday in an interview. கடந்த வருட ஆரம்பத்தில் The Guardianல் வந்த பாப்பரசரின் செய்தி இது. . அப்படியிருக்க இன்று அவர் தன்பாலினத்தவரைப் பற்றி வசைபாடியாதாக கூறுவது எந்தளவு தூரம் உண்மையெனத் தெரியவில்லை. ஆனால் இப்படியான செய்திகளை பெரிதுபடுத்தி அவர்களை தீண்டத்தாகதவர்களாக காட்டுவது ஊடகங்களே. தன்பாலின தம்பதிகள் இன்று உலகில் ஒரு அங்கமாக உள்ளனர். ஆகையால் அவர்களை வெறுப்பதில்லை. இன்று இந்த தன்பாலின தம்பதிகளுக்கு திருமண உடன்படிக்கை அவசியம் என நம்புகிறேன் ஏனெனில் அவர்களது குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் சட்டரீதியான பி்ரச்சனைகள் வராது இருக்க. மற்றப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான கொள்கைகள். அவ்வளவுதான்
  34. மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை முன்னே இருத்திப் பயணிப்பதும் பாதுகாப்பற்றது. ஆனால் பலரும் செய்கிறார்கள்.
  35. இலங்கையில் தீர்வு திட்டம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி, மாவட்டசபை, மாகாணசபை என பெயரளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தலில் உள்ள பிரச்சினையாக இருப்பது இலங்கையின் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மையினரிடம் இருக்கிறது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதன் விகிதாசார ப்ரதினித்துவ ஆட்சி முறை உள்ளது. மற்ற நாடுகளில் சிறுபான்மையினரை பாதுகாக்க (இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு) சட்டங்கள் இருக்கும் ஆனால் இலங்கையில் அரசினால் இயற்றப்படும் சட்டங்கள் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்ற சட்டங்கள்தான் சிறுபான்மையினருக்கு. தீர்வுத்திட்டம் இலங்கை அரசியல் சட்டமுறைமையில் சாத்தியமில்லை, அதில் மாற்றம் ஏற்படுத்த பொதுவேட்பாளர் முறை தாக்கத்தினை ஏற்படுத்தலாம், ஆனால் தற்போதுள்ள முறைமையில் சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைக்கும் என பொய்யான வாக்குறுதிகளை வழங்குவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
  36. நன்றி, உங்கள் அனைவரது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் துமிலனுக்கும் தெரியப்படுத்துகிறேன்🙏
  37. புலம்பெயர் என்பதை சுருக்கமாக புலத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். copilot ன் விளக்கம் இது 👇 தமிழ் மொழியில் “புலம்” என்ற சொல்லின் பொருள் பின்வருமாறு: வயல்: அரிப்பு நிலம், குறிப்பாக நெற்பயிர் சாகுபடி செய்யும் நிலம்1. இடம்: ஒரு இடம், மண்டலம், அல்லது நாட்டின் ஒரு பகுதி1. திக்கு: காம்பஸின் ஒரு புள்ளி அல்லது திசை1. மேட்டு நிலம்: உலர் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற உயர்ந்த நிலம்1. பொறி: உணர்வு அல்லது ஐம்புலன்களின் ஒரு அம்சம்1. உணர்வு: உணர்ச்சிகள் அல்லது புலன்கள் மூலம் உணர்வு1. அறிவு: கல்வி அல்லது ஞானம்1. கூர்மதி: அறிவுக்கூர்மை அல்லது நுண்ணறிவு1. “புலம்” என்பது பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படும் பன்முகப்பட்ட சொல்லாகும்.
  38. யோவ் பெரிசு என்ன சேட்டையா? நம்மள பத்தி ஏற்கனவே தெரியுமெல்லே....😎 வெரி டேஞ்சரஸ் பீப்பிள்.... கெயார் ஃபுல் புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு.
  39. இந்த வரலாற்றுத் தருணத்தில் இருவருக்கு என் நன்றியை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.............🤣.
  40. வித்தியாசமான, ஆழமான பார்வை. சில விடயங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருப்பினும் நீங்கள் ஆழ அலசி இருப்பது நன்றாக உள்ளது. மேலும் மேலும் எழுதுங்கள்
  41. போகிறார்களென எண்ணுகிறேன்.
  42. இந்த கருத்தை விட ஆயுதம் ஏந்தி போராடியது பிழை போரடாமல். இருந்து இருக்கலாம் என்று எழுதுவது சிறப்பு மேலும் உங்கள் கருத்துகள் இலங்கை அரசாங்கம் தமிழர்களை துரத்தி துரத்தி குண்டுகள் போட்டது சரி என சொல்லாமல் சொல்லுகிறது ஏன் இலங்கை குண்டுகள் போடுவதை நிறுத்தி இருக்கக்கூடாது ??? உங்கள் கருத்துகள் சந்தர்ப்பவாத கருத்துகள் ஆகும் அந்த மக்களின் குழந்தைகள் தான் புலிகள் இல்லையா?? முள்ளிவாய்க்கால் எற்படாமால் இருந்து இருந்தால் இப்போது உங்கள் கருத்துகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன் என்னாலும். உங்களை மாதிரி கருத்துகள் எழுத முடியும் ஆனால் அது இலங்கை செய்தது சரி என்பது போன்றது மட்டுமல்ல இலங்கைக்கு நற்சான்றிதழ் கொடுப்பது ஆகும்
  43. ஊக்கு ஓர்பால் தெரிவை ஊக்குவிப்பதற்கான காரணங்களாக கீழே வருபவைகளை Copilot அடையாள காட்டியுள்ளது 👇 என்னைப்பொறுத்தவரை குடும்ப அமைப்பு முதான் குழந்தைகளுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் பாதுகாப்பானது என்பது என் நம்பிக்கை.. அதனை பலவீனப்படுத்தும் எதனையும் ஆதரிக்கவ்முடியாது. மேற்கில் குடும்ப அமைப்பை ஊக்குவிக்கும் எந்த ஒரு விளம்பரத்தையும் யாரேனும் பார்த்ததுண்டா? கண்டவர்கள் பதில் கூறவும்”. The support for same-sex relationships in Western countries is influenced by a variety of factors, including cultural values, economic development, and political systems. Here are some key reasons why Western societies may encourage and support same-sex relationships: Human Rights and Equality: Western countries often emphasize human rights and equality for all individuals, including those in the LGBTQ+ community. The recognition of same-sex relationships is seen as an extension of these rights1. Democratic Values: Democracies promote freedoms such as freedom of expression and assembly, which extend to supporting the rights of minority groups, including LGBTQ+ individuals1. Economic Development: There is a correlation between economic development and the support of LGBTQ+ rights. Wealthier nations tend to be more tolerant and supportive of diversity, including sexual orientation2. Separation of Church and State: In many Western countries, there is a clear separation between religious institutions and government policies, which allows for the support of same-sex relationships regardless of religious views on the matter2. Cultural Shifts: Over time, Western societies have experienced cultural shifts that lead to a broader acceptance of different lifestyles and family structures, including those of same-sex couples3. Legal Recognition: Many Western countries have legalized same-sex marriage or recognize civil unions, providing legal support and recognition for same-sex couples1. It’s important to note that attitudes towards same-sex relationships can vary widely even within Western countries, and there is still ongoing debate and discussion on this topic. However, the general trend in many Western societies has been towards greater acceptance and support for same-sex relationships. பின்குறிப்பு: மேற்கில் வசிப்பதால் மேற்கில் கூறப்படும் எல்லாவற்றையும் தலைமேற் சுமந்து, காலால் இட்ட கட்டளையை தலையால் செய்ய என்னால் முடியாது. சிலருக்கு அதுதான் தொழிலே. (நிழலியைக் குறிப்பிடவில்லை)
  44. கதை தானே அவிழ்த்து விடுங்க ஆனால் யாழ் களத்தில் அது சரிவராது..
  45. அமர்ந்தே இருப்பது ஆபத்து, ஏன்? கு.கணேசன் கொரோனா பெருந்தொற்று எப்போது பரவத் தொடங்கியதோ, அப்போதிருந்தே நம் அன்றாட வாழ்வியலில் பல மாற்றங்களைக் கண்கூடாகக் காண்கிறோம். ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, ‘இணையவழி வணிக’த்தில் இறங்கினோம். அதை இப்போதும் கைவிட முடியாமல் கஷ்டப்படுகிறோம். இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசி பொத்தானைத் தட்டி, வீட்டுக்குத் தேவையான ஊறுகாயிலிருந்து ஸ்மார்ட் போன், டிவி வரை எல்லாவற்றையும் வரவழைத்துவிடுகிறோம். கடைக்கு நடந்து செல்வதைக் குறைத்துக்கொண்டோம். மற்ற வேலைகளுக்கும் தெருவில் இறங்க வேண்டிய தேவை குறைந்துபோனது. கொரோனா காலத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல், கைகளில் கைபேசியைக் கொடுத்து, ‘இணையவழி கற்றலு’க்குப் பழக்கப்படுத்தினோம். அதை இப்போதும் அவர்கள் உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டார்கள். மாலையில் விளையாடச் செல்லும் வழக்கத்தைக் கைவிட்டார்கள். கைபேசியே கதி என்று வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். பெரியவர்கள் நாம் பேருந்திலோ, சொந்த வாகனத்திலோ அலுவலகம் செல்ல முடியாமல் ‘வீட்டிலிருந்து வேலை’ செய்ய ஆரம்பித்தோம். அதுதான் வினையாயிற்று. கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்த பின்னும், பன்னாட்டு நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ கோட்பாட்டை நம் தலையில் கட்டின. கணினியும் கைபேசியும் நம்மை ‘ஆள’ வந்தன. அதனால் அமர்ந்தே செய்யும் வேலைகள் அதிகரித்தன. வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வதை ஒப்பிடும்போது அமர்ந்தே வேலை செய்வது சுலபமாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் புதிய போக்கு நம் ஆரோக்கியத்துக்கு எப்படியெல்லாம் குழி பறிக்கிறது என்பதை எத்தனை பேர் புரிந்திருக்கிறோம்? முதுகு வலியின் பிறப்பு! ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்துகொண்டு வேலை செய்யும்போது கீழ்முதுகில் கயிறு கட்டியதுபோல் அழுத்தம் அதிகரிக்கிறது; தசை இயக்கம் குறைகிறது; தசைநார் இறுகுகிறது. முதுகெலும்புச் சங்கிலியில் உள்ள இடைத் தட்டு (Disc) நசுங்குகிறது. இயல்பாக இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், உடற்பருமன் உள்ளவர்களுக்குச் சொல்லவா வேண்டும்? இடைத் தட்டு வீங்கிவிடுகிறது அல்லது விலகிவிடுகிறது. அப்போது கீழ் முதுகுவலி ஆஜர் ஆகிறது. நாம் அமர்வதிலும் ஓர் ஆரோக்கிய அம்சம் இருக்க வேண்டும். நிமிர்ந்து அமர்வதுதான் அந்த ஆரோக்கிய அம்சம். அப்படி அமர்பவர்கள் பாதிப்பேர்கூட இல்லை. சிலர் கூன் விழுந்த நிலையில் அமர்வார்கள். இன்னும் சிலர் ஒரு பக்கமாக சாய்ந்தும் முதுகு வளைந்தும் அமர்வார்கள். இன்னும் பலர் அமர்ந்த மாத்திரத்தில் அரை அடி ஆழத்துக்கு அழுந்திக்கொள்ளும் மெத்தைகளில் அமர்வார்கள். இப்படிச் செய்வது அவர்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். முதுகெலும்பின் வளைவுக்கு அவை மோசம் செய்யும். அப்போது முதுகு வலி ஆக்ரோஷம் அடையும். இப்போதாவது நாம் உஷாராக வேண்டும். இல்லையென்றால், கீழ்முதுகில் கொஞ்சம் கொஞ்சமாக வலி கூடிக்கொண்டே போய் பின்புறத் தொடைக்கோ, காலுக்கோ அது பரவிவிடும். ‘மின்சார ஷாக்’ மாதிரியான அந்த வலியைத் தொடர்ந்து கால் மரத்துப்போகும். படுத்து ஓய்வெடுத்தால் கால் வலி குறையும்; நடக்கும்போது வலி அதிகமாகும். நெல்லுக்குப் பாய்ச்சிய தண்ணீர் புல்லுக்கும் போய்ச் சேர்கிறமாதிரி முதுகில் ஏற்பட்ட பிரச்சினை இப்போது கால் நரம்புக்கும் பரவிவிட்டது என்று அர்த்தம். ‘சியாட்டிகா’ (Sciatica) எனப்படும் அந்தக் கால் குடைச்சல் சிலருக்குப் படுக்கையில் முடக்கிப்போடும் அளவுக்குக் கடுமையாகிவிடும் என்றால் அதன் கொடுமையைப் புரிந்துகொள்ளுங்கள். கழுத்து வலி நிச்சயம் இப்போதெல்லாம் அலுவலகத்தில் மேஜைக் கணினியில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் மடிக்கணினியில் வேலை செய்வதும் அதிகரித்துவருகிறது. அப்போது பொருத்தமான இருக்கைகள் இல்லாதபோது, பலரும் சோபாவில் அல்லது படுக்கையில் சாய்ந்துகொண்டு, கழுத்தைத் தூக்கிக்கொண்டும், குனிந்துகொண்டும்தான் மடிக்கணினித் திரையைப் பார்க்கிறார்கள். இந்தப் பழக்கம் கழுத்துத் தசைகளை இறுக்கிக் கழுத்துவலிக்கு மாலை சூடுகிறது. மாற்றம் காணும் வளர்சிதை மாற்றம் அடுத்து, வீட்டில் உள்ளவர்கள் அதிக நேரம் அமர்வது தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால்தான். அப்போது சும்மா அமர்வதில்லை. கையில் ஒரு தட்டு நிறைய நொறுவைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அளவில்லாமல் அதைத் தின்று தீர்க்கிறார்கள். இது நாள்பட நாள்பட உடற்பருமனை போனஸாகக் கொடுத்துவிடுகிறது. அத்தோடு நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது, உடலுக்குள் வளர்சிதை மாற்றப் பணிகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றின் விளைவாக, உடலுக்குள் ‘இன்சுலின் எதிர்ப்பு நிலை’ (Insulin Resistance) அதிகரிக்கிறது. இது இளம் வயதிலேயே சர்க்கரை நோயைத் தானமாகத் தந்துவிடுகிறது; கொஞ்ச நாளில் உயர் ரத்த அழுத்தத்தைத் துணைக்கு அழைக்கிறது. அமர்ந்தே இருக்கும்போது உணவுக் கலோரிகள் உடலில் சரியாக எரிக்கப்படாமல் போகும். அப்போது கெட்ட கொழுப்புக்குத் திருவிழா கொண்டாட்டம் ஆகிவிடும். பிறகு, இந்த மூன்றும் ஜோடி சேர்ந்து இதய நோய்க்கு ‘முன்பணம்’ கட்டும். இதை உறுதிசெய்யும் விதமாக வந்திருக்கிறது ‘ஹார்வர்டு ஹெல்த் ஸ்டடி’ (Harvard Health Study) எனும் அமெரிக்க ஆய்வு. ஆம், நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால், அது ஒரு சிகரெட் புகைப்பதற்குச் சமம் என்கிறது அந்த ஆய்வு. கூடவே உங்களுக்குப் புகைப்பழக்கமும் இருக்கிறது என்றால், மாரடைப்பு வாய்ப்புக்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கிறது என்று கூவுகிறது அதே ஆய்வு. இவை தவிர, நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது கால்களில் ரத்த ஓட்டம் தேங்கிவிடும். இதனால் ரத்த உறைவு (DVT) ஏற்படும். மாரடைப்பையும் பக்கவாதத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் ‘கூரியர்’ இது. சிலருக்குச் சுருள் சிரை நோய் (Varicose veins) வரக்கூடும். தப்பிக்க என்ன வழி? நீங்கள் அமரும் இருக்கை முதலில் சரியாக இருக்க வேண்டும். முதுகையும் கழுத்தின் பாரத்தையும் தாங்கும் வகையில் இருக்கையில் குஷன் இருந்தால் சிறப்பு. நிமிர்ந்து அமர்வதும், கால்களை செங்குத்தாகத் தொங்கப்போட்டு, தரையில் பதித்துக்கொள்வதும் முக்கியம். கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி, 20 அடி தொலைவில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால் கழுத்துக்கும் கண்ணுக்கும் நல்லது. அடுத்து, அமர்ந்த இடத்திலிருந்து மணிக்கொருமுறை எழுந்து 5 நிமிடம் நிற்கலாம்; நடக்கலாம்; கை, கால்களை நீட்டி மடக்கலாம். இந்த இடத்தில் மதுரையில் இருக்கும் என் பேராசிரியர் டாக்டர் சந்திரபோஸ் நினைவுக்கு வருகிறார். அவர் நோயாளிகளைப் பார்க்கும்போது தொடர்ந்து அமர மாட்டார். நோயாளி அமர்ந்த இடத்துக்கு அவரே சென்று நின்றுகொண்டுதான் பரிசோதிப்பார். இது நல்ல உத்தி. அலுவலகத்தில் முடிந்தவரை மின்தூக்கிகளைப் பயன்படுத்தாமல் படிகளைப் பயன்படுத்தலாம். இடைவேளையில் காபி/தேநீர் போன்றவற்றை உங்கள் மேஜைக்கு வரவழைக்காமல், வெளியில் சென்று அருந்திவிட்டு வரலாம். நீண்ட நேரம் கைபேசியில் பேசும்போது நடந்துகொண்டே பேசலாம். இது எதுவும் முடியாது என்றால், காலையில் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள் அல்லது சைக்கிள் ஓட்டுங்கள் அல்லது நீச்சல் மேற்கொள்ளுங்கள் அல்லது யோகா செய்யுங்கள். அமர்வதால் வரும் ஆபத்துகள் விலகிவிடும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-sitting

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.