Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3055
    Posts
  3. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    929
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/20/24 in all areas

  1. திருமண தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நில்மினி. 🙏 இப்போதைய அவசர உலகில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் திருமணத்தை ஜேர்மனியில் உள்ளவர்களுடன் மட்டுமே நடத்துவது என நாம் யோசித்து இருந்தோம். மகளின் திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்ற போது... அதனை ஒரு தகவலாக அறிவிக்கும் வகையில் உறவினர்களின் WhatsApp குழுமத்தில் அந்தச் செய்தியை பகிர்ந்து கொண்டேன். செய்தி பகிர்ந்த அன்றும் அதற்கு அடுத்த நாளும் எல்லோரும் திருமணம் எப்போ என்றும்... அதற்கு தாமும் நிச்சயம் வருவதாக 16 குடும்பத்தினர் உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல் அனுப்பி இருந்தார்கள். நில்மினியும் வருவதாக தெரிவித்து இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தாலும்... வேலைகளுக்கு லீவு போட்டு, விமானத்தில் இவ்வளவு தூரம் வந்து சிரமப்படப் போகின்றார்களே என்ற ஆதங்கமும் இருந்தாலும் எல்லா உறவினர்களையும் ஒரே இடத்தில் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் அருமையான சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது என்ற ஆசையும் மனதில் இருக்கத்தான் செய்தது. நில்மினியை ஊரில் சந்திக்கவில்லை என்றாலும்... அவரின் சித்தப்பா, மாமா போன்றோருடன் உறவினர் முறையைத்தாண்டி நட்புடன் பழகி வந்துள்ளதை மறக்க முடியாது. உறவினர்கள் பலரும் நில்மினியை... சந்தித்த நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். வந்தவர்களில் சிலரை தொலைபேசி மூலம் உரையாடி இருந்தாலும் அப்போதான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இருவரை 40 வருடங்களின் பின்பு சந்தித்து இருந்தேன். வந்தவர்களில் ஆறு மாத குழந்தையில் இருந்து 78 வயது வரை உள்ளவர்களும் இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தது.
  2. சிறியின் அப்பம்மா தையல்முத்து (எனது அப்பப்பாவின் சகோதரி) திருமணம். அவரின் தகப்பன் சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வான அம்பலவாண நாவலர். இந்த புகைப்படங்கள் 1900 ஆம் ஆண்டுக்கும் 1902 ஆம் ஆண்டுக்கும் இடையில் எடுக்கப்பட்டது.
  3. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடியான 53 ஓட்டங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 134 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் சுற்றில் குழு C இல் மேற்கிந்தியத் தீவுகள் முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த மூவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த நால்வருக்குப் புள்ளிகள் கிடையாது. 43வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 97 2 ரசோதரன் 97 3 சுவி 90 4 ஈழப்பிரியன் 89 5 கோஷான் சே 89 6 கந்தப்பு 87 7 நந்தன் 87 8 கிருபன் 84 9 எப்போதும் தமிழன் 84 10 நீர்வேலியான் 83 11 குமாரசாமி 82 12 தமிழ் சிறி 82 13 P.S.பிரபா 81 14 அஹஸ்தியன் 81 15 வாதவூரான் 80 16 வாத்தியார் 80 17 நிலாமதி 79 18 ஏராளன் 79 19 வீரப் பையன்26 78 20 தியா 78 21 புலவர் 74 22 கல்யாணி 73 23 நுணாவிலான் 72
  4. சிறியர் வேண்டுமென்றே தனது வீட்டில் இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் என்று சாமியாரை தவிர்த்தாரோ? அல்லது நண்பனைப்பற்றி அறிந்திருக்கிற படியினால் சிறியர் தன்னை மட்டுமே, ஹாஹா... கவனிப்பார், எதற்கு அவருக்கு சிரமம் என்று சாமியாரே ஒதுங்கிக்கொண்டாரோ? "கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடுமாம்." ஆறுமுக நாவலர் பூட்டன் தமிழ் பேசா விட்டார்த்தான் ஆச்சரியம்! ஆறுமுக நாவலரைச்சாட்டி சிறியரோட சொந்தங்கொண்டாட ஆளாளுக்கு கிளம்ப போறார்கள். விழா எல்லாம் முடிந்தது. மகனின் கல்யாணத்தில் ஒன்று சேருவோம். இனி மகனுக்கு பெண் பார் படலத்தில் பிரச்சனை இல்லை சிறியருக்கு. நானும் ஆறுமுகநாவலரைப்பற்றி நிறைய வாசித்து அறிந்து வைத்திருக்கிறேன்.
  5. 🤣......... தலை பத்திரம்............... ஒரு விலை வைத்து விடுவார்கள்.........🤣.
  6. பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (21 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்தாலும் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா (B2) எதிர் பங்களாதேஷ் (D2) AUS எதிர் BAN 10 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள பங்களாதேஷ் வெல்லும் எனக் கணிக்கவில்லை. முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த மூவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு C இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்காவை வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் AUS வீரப் பையன்26 SL சுவி ENG நிலாமதி AUS குமாரசாமி AUS தியா AUS தமிழ் சிறி AUS புலவர் SL P.S.பிரபா ENG நுணாவிலான் SL பிரபா USA ENG வாதவூரான் ENG ஏராளன் ENG கிருபன் AUS ரசோதரன் ENG அஹஸ்தியன் AUS கந்தப்பு ENG வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் ENG நீர்வேலியான் ENG கல்யாணி SA கோஷான் சே AUS இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்? 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் தென்னாபிரிக்கா (D1) ENG எதிர் SA 10 பேர் போட்டியில் உள்ள இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இருவர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு, போட்டி கைவிடப்படாவிட்டால் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த @வாதவூரான்க்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 ENG சுவி AUS நிலாமதி ENG குமாரசாமி ENG தியா ENG தமிழ் சிறி ENG புலவர் AUS P.S.பிரபா AUS நுணாவிலான் AUS பிரபா USA AUS வாதவூரான் SL ஏராளன் AUS கிருபன் ENG ரசோதரன் AUS அஹஸ்தியன் ENG கந்தப்பு AUS வாத்தியார் SA எப்போதும் தமிழன் ENG நந்தன் AUS நீர்வேலியான் AUS கல்யாணி ENG கோஷான் சே ENG இப் போட்டியில் புள்ளிகளை யார் எடுப்பார்கள்?
  7. நீங்கள், ரசனியை ஏதிர்பார்க்கின்றீர்கள் போலுள்ளது. 😂 ரசனி... தனது கார் ரைவருக்கே சம்பள பாக்கி கொடுக்கவில்லை என்றும், அவரின் மனைவி லதா நடத்தும் பாடசாலைக்கும் பல ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை என்று செய்திகள் உலாவுது. இப்படியான கஸ்ரமான நேரத்தில்... அவர்களிடம் பணம் எதிர்பார்ப்பது சரியல்ல. 🤣
  8. வாடகை வருமான வரி.
  9. சிலவேளை இந்தியா பாகிஸ்தானில் விளையாடமாட்டேன் என்று அடம்பிடித்து போகாமல் விட்டால் இலங்கைக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் துடுப்பாட்டத்தில் இந்தியா அமெரிக்கா மாதிரி. ஐசிசி( ஐ. நா மாதிரி) இந்தியா விளையாடவே விரும்பும். 😄
  10. ஓ இவர்தான் பாஞ்ச் ஐயாவா. நான் இவர் தமிழ்சிறி என நினைத்தேன். துயரமான சம்பவம். நினைத்து பார்க்க திகிலாக உள்ளது. கடற்கொள்ளையர்கள் இலங்கயரா இந்தியரா அல்லது வேறு நாட்டவரா? எங்கள் ஆட்கள் இப்படி கடலில் கொலை செய்து கொள்ளை அடித்த சம்பவங்கள் ஊரில் சொல்ல கேட்டுள்ளேன்.
  11. எது எப்படியிருப்பினும் ஒரின சேர்க்கையாளகள் தங்களுக்கேற்ப வாழட்டும். இவர்கள் இயற்கையுடன் இயற்கையாக ஒன்றி வாழும் சமூகத்துடன் தம்மையும் இணைத்து வாழும் புதிய சட்டங்களை கோரக்கூடாது. நாம் அவர்களை ஒதுக்கவில்லை. ஆனால் அவர்கள் தனியாக வாழட்டும். அத்துடன் ஓரினவாதிகள் அவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமையை முற்று முழுதாக தடை செய்ய வேண்டும். இயற்கையால் படைக்கப்பட்டது தான் ஆண் பெண் இனம். அது இனவிருத்தியை முக்கியமாக கொண்டது. ஒருவருக்கு தன் பால் இன உணர்ச்சி இருந்தால் அதை அதை தணிக்க ஒன்று சேருங்கள்.தணியுங்கள். முடிந்தது கதை. அதற்காக பிள்ளை ஆசை பிள்ளைகளை தத்தெடுக்கும் ஆசை எதனால் எங்கிருந்து வருகின்றது? ஒரு பாலின சேர்க்கையால் பிள்ளை பெற்றெடுக்க முடியவில்லை எனில் ஒரின சேர்க்கையும் இயற்கைக்கும் மாறானதே.
  12. இதை முதலே சொல்லி இருந்தால் குமாரசாமி அண்ணை வேலைக்கு போகாமல் வந்து சந்தித்திருப்பார் நல்லகாலம் எங்கடை வீட்டுத் திருமணத்துக்கு @குமாரசாமிவரவில்லை என்று @தமிழ் சிறி சந்தோசப்படுவார்.
  13. அடேய்.....அடேய்......அடேய்களா. இந்த திரியாவது சுத்தம் சுகாதாரமாய் போகட்டுமன். ஏனடா போற வாற இடமெல்லாம் பலகார பையோட திரியுறியள்? 🤣
  14. எனது மகனும் ஒரு வைத்தியர்தான். வேலை துவங்கி ஒருவருடமாகுது. லீவில வந்து நிற்கும் பொழுது தம்பி இந்த மெடிக்கல் றிப்போட்டைப்பாரடா என்றால் எல்லாம் பைன் என்று சொல்லுறான். தமிழ் சிறி குடுத்து வைத்தவர்.
  15. இதை முதலே சொல்லி இருந்தால் குமாரசாமி அண்ணை வேலைக்கு போகாமல் வந்து சந்தித்திருப்பார். 🤣 உங்கள் ஊரில் பாடசாலை. இருக்க ??? 🤣🤣🤣 ஆறுமுகநாவலர். பற்றி வாசித்து உள்ளேன் பலமுறை ஆனால் அவரின் சொந்தங்கள் பற்றி ஒருமுறை கூட வாசிக்கவில்லை எழுதுங்கள்… வாசிக்க ஆவலுடன் உள்ளேன்
  16. வணக்கம், உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஒரு திருமண உடன்படிக்கையினால் வரும் சட்டரீதியான அனுகூலங்களையும் பிற அனுகூலங்களையும் இந்த same sex couples அடையும் வேண்டும் என்றால் அதற்கு அவர்களது திருமணத்தையும் சட்டரீதியாக்கவேண்டும், [இதற்குள் குழந்தைகளை தத்து எடுப்பது தொடங்கி surogacy, egg/sperm donors மூலம் பெறுவது ( இந்த முறைகளை தனியே same sex couples மட்டும் நாடுவதில்லை என்பதையும் நடைமுறையில் பார்த்து வருகிறோம்) முதல் எல்லா வகையான அனுகூலங்களும் வரும்]. இந்த விடயம் இலகுவில் முடிவுக்கு வரும் விடயமோ ஒரே நாளில் மாறும் விடயமோ இல்லை. இங்கே பலரும் தங்களது எண்ணங்களை எழுதியிருந்தார்கள். ஆகையால் இதற்கு மேல் எழுத ஒன்றும் இல்லை என்றாலும் கூட எனது கருத்திற்கு விளக்கம் கேட்டிருந்தீர்கள். என்னைப் பொறுத்த வரை சட்டரீதியாக திருமணம் செய்து வாழும் எனது பெற்றோரின் மூலம் என்ன நன்மைகளை சட்டரீதியாகவும் குடும்ப வாழ்க்கை என்றதற்குள் நான் பெற்றேனோ அதனை இந்த same sex couplesன் பிள்ளைகளும் பெறவேண்டும். De facto relationship கூட எல்லா உரிமைகளும் அனுகூலங்களும் இல்லை. ஆகவே திருமண உடன்படிக்கையை தவிர வேறு முறைகள் சரிவரமாட்டாது. நன்றி வணக்கம் அவுஸ்ரேலியாவில் 2017ல்தான் தனபாலினத்தவர்களின் திருமணத்தை சட்டரீதியானதாக மாற்றினர்கள் அப்படியென்றால் அதற்கு முன் நடந்த காட்டுத்தீ தொடங்கி வெள்ளப்பெருக்குகள் வரைக்கும் காரணம் இந்த தமிழ் கிறிஸ்தவர்களாமா?
  17. ஓம் நானும் கேள்விபட்டேன் 😄. மெக்காவில் உள்ள சிவலிங்கத்தை தான் கறுப்பு கல் என்று முஸ்லிம்கள் வணங்குகின்றனராம். இப்போ பார்த்தால் இந்து மதத்தின் ஒரு பிரிவு ஈழதமிழர்களிடம் உள்ள சைவம் போன்று முஸ்லிம் மதமும் இன்னொரு பிரிவு. பாலஸ்தீனர்களுக்காக ஏன் வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்கள் இவ்வளவு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதும் விளங்கியது 😂
  18. நல்ல தகவல்கள். இல்லை, எனக்கு இதில் அனுபவம் இல்லை. Gatorade பற்றி வந்த சில கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். மற்றும் அப்பப்ப வரும் செய்திகள். லயனல் மெஸ்ஸியின் புதிய தொழில் பற்றிய செய்தி போன வாரம் இங்கே வந்திருந்தது.
  19. ஆம் கடவுளை நம்புபவர்கள் மிக அமைதியானவர்கள். வாகனங்கள் ஓட்டி காற்றினை மாசுபடுத்துவதில்லை, விமானம் ஏறுவதில்லை, தொலைக்காட்சி பார்த்து மின்சாரத்தை வீணாக்குவதில்லை, காடுகளை அழித்து வீடு கட்டுவதில்லை, நாசினிகள் பாவிக்கப்படும் தானியங்களை உண்பதில்லை, மருத்துவர் தரும் மருந்துகளை உண்ணாமல் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ்பவர்கள். நாத்திகவாதிகள் அதிகமாக வாழும் சுவீடன், டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மனித நேயமும் ஒழுக்கமும் சுற்றாடல் இயற்கை பற்றிய சிந்தனையும் இல்லாத மூர்க்கமானவர்களால்தான் உலகம் வெப்பமடைகிறது.
  20. 🤣......... சென்னை, திருச்சிக்கும் சேர்த்தே சோதனை வந்திருக்குது............
  21. 👍.... இதில் எதுவும் சட்ட விரோதமானது இல்லை. அவருடைய மனைவியின் சொத்தையே இந்த தொழிலில் முதலிடுகின்றார் என்று நான் சொல்ல வரவில்லை. அவர் மிகவும் செல்வாக்கானவர் என்றே சொல்ல வந்தேன். முதலீட்டாளார்களை கவர்ந்திழுப்பதற்கு இது அவருக்கு உதவும். முரளியின் சொத்து மதிப்பு 9 மில்லியன் டாலர்கள் தான் என்றால், இந்திய ரூபாயில் 70 அல்லது 75 கோடிகள், அது ஒன்றுமேயில்லை. டாக்டர் ராமமூர்த்தியின் சொத்து மதிப்பு எனக்குத் தெரியாது. சில நூறு கோடிகளாக இருக்கலாம். முதலீட்டாளர்கள் தான் இங்கு தேவை. Sports Drinks இன்று உலகெங்கும் கடகடவென்று வளரும் ஒரு பெரிய தொழில். இங்கு அமெரிக்காவில் லயனல் மெஸ்ஸி ஒன்றை ஆரம்பிக்கின்றார். Kobe Bryant இறப்பதற்கு முன் இதில் இருந்தார். கடந்த வருடம் அவருடைய நிறுவனத்தை கோக் வாங்கியது என்று நினைக்கின்றேன், அல்லது பெப்ஸி, இரண்டில் ஒன்று. கோபேயின் பங்காக 600 அல்லது 700 மில்லியன் டாலர்கள் வந்தது. இன்னும் சில பிரபல வீரர்களும் இதில் இருக்கின்றனர். Electrolytes, Alkaline Water, ..... இப்படி ஏதாவது சொல்லி, அவர்களும் நண்பர்களும் விளம்பரத்தில் வந்து, அவர்களின் ஒவ்வொரு சதங்களையும் பல டாலர்களாக மாற்றி விடுகின்றனர். அதே பழைய குளிர் தண்ணீருக்குள் ஒரு எலுமிச்சையையும், கொஞ்ச உப்பையும் போடுவதற்கு இன்னும் எதுவும் ஈடாகவில்லை, ஆனாலும் மார்க்கெட்டிங் என்று ஒன்று இருக்குதல்லவா.........
  22. இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை இன்னும் தொடரும் என்பது முரளிதர போன்றவர்களுக்கு விளங்கியிருக்கின்றது அதனாலே அவர்கள் குறைந்த சம்பளத்தில் அதிக லாபம் ஈட்டக்கூடிய இந்தியாவை நாடுகின்றனர்
  23. கடவுளை மட்டுமே நம்பினால், கைவிடப்படுவார்!
  24. ஸ்டாலின் சீற்றம்; ஜெய்சங்கருக்கு கடிதம் களவு எடுக்க போனவர்கள் பிடிபட்டதிற்காக ஸ்டாலின் சீற்றம் கொள்ளலாமா இப்படி ஒரு முதல்வர் செய்யலாமா 😭
  25. பொதுவாக தமது பணத்தினை யாரும் முதலிடுவதில்லை, வங்கியில் கடன் பெற்றால் அதன் கடன் வட்டி வரி விலக்கழிக்கப்படும் என்பதால் தமது சொந்த பணத்தினை முதலிடுவது அவர்களுக்கு நட்டம் ஏற்படும். எப்பவுமே OPM (Other People Money) தெரிவு. வங்கிக்கடனுக்கு சொத்துக்களை பிணை வைத்தாலும் வியாபாரதிட்ட்டம் சிறப்பாக இல்லாவிட்டால் வங்கி பணம் கொடுக்காது அதனைவிட தனியார் முதலீட்டாளர்களை பெறுவது கல்லில் நார் உரிப்பது போல, பிரபலம் என்பதற்காக யாரும் தமது காசை எடுத்து சும்மா கொடுத்துவிடுவார்களா? 1400 கோடியில் ஆரம்ப கட்டுமானம், இயந்திரங்கள், ஒரு வருட நடை முறை செலவு என்பன கிட்டதட்ட 1200 கோடிகளை எட்டும் மிகுதிப்பணமாய்வு மற்றும் சந்தைப்படுத்த்லுக்கு செலவாகும்.
  26. ஏன் அண்ணா? அங்கே போய் சாவதே அவர்களது பிரார்த்தனைகளும் இறுதி விருப்பங்களும்.....
  27. இவருக்கு சந்தேகம் வராட்டித்தான்... கமுக்கமாக அலுவலை பார்த்திடுவாரோ என்று நாங்கள் உசாராக இருக்க வேணும். 😂 ஈழப்போர் நடந்த போது... புலிகளை கண்காணிக்க இந்தியா, இலங்கைக்கு கொடுத்த சற்றலைட்டுகளை வைத்து... மண்வெட்டி கூட செய்ய முடியாது என்று நெத்தியில் அடித்த மாதிரி சொன்னவர் என்பதால்... இவரை கொஞ்சம் பிடிக்கும். 🤣
  28. அவர் மட்டும் என்றில்லை, அண்ணை......... முக்கியமாக இன்னும் பலரையும் காணவில்லை. திமுக அரசு என்றவுடன் ஒரு அறிக்கை கூட விடாமல் மௌனமாகவே இருக்கின்றார்களே......உதயநிதிக்கும், அவரின் ரெட் ஜயண்ட்ஸ்ஸிக்கும் அவ்வளவு பயம்.........ஜி வி பிரகாஷ் பரவாயில்லை போல, இது அரசின் தவறு என்று ஒரு அறிக்கையாவது விட்டுள்ளாரே..... ரஜனி எல்லாம்.........செருப்பால் என்னை நானே அடிச்சாலும் மனம் ஆறாது. ஏழு பேர்கள் விடுதலை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, யார் அந்த ஏழு பேர்கள் என்று கேட்டவர் தானே. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் போராடியவர்கள் சமூக விரோதிகள் என்றும் சொன்னவர். இப்ப, அம்பானி வீட்டு கல்யாண வீட்டில், அம்பானி கைலாசத்தையும், வைகுண்டத்தையும் ஒன்றாக பூமிக்கு கொண்டு வந்து விட்டார் என்றவர்....... இந்த மனிதனைப் பற்றி எழுதுவதை விட, குப்புறப் படுத்துக் கிடக்கலாம்...........
  29. ரஜனிக்கும் ஏழை எளிய மக்கள் உதவி அவரது கஸ்டத்தையும் மக்கள் போக்க வேண்டும்.😂
  30. அண்ணன் அவசரம் அவசரமாக கரீபியனுக்கு போய் இருக்கின்றார்......... நம்ம அணிக்கு பந்துவீச்சில் சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து விட்டு இப்ப வந்து விடுவார்.......... முன்னமே சொல்லியிருக்கின்றேன்........ யானை சரிந்தால் குதிரை.....இது ஒரு சின்ன சரிவு தான், யானையாக இருந்த அண்ணன் இப்பொழுது குதிரையாகி இருக்கின்றார்........😜.
  31. தமிழர்களுக்கு எந்த தீர்வும் வழங்க கூடாது என்று எதிர்த்தும் நிற்கும் இதே பெளத்த சங்கங்கள், பீடங்கள் தான் பால்சமனிலை மற்றும், LGBTQ+ சமூகத்துக்கு சாதகமான சட்ட திருத்தங்களுக்கும் எதிராக நிற்கின்றது. வலதுசாரிகள், நாசிகளின் கொள்கைகளை / ஹிட்லரை ஆதரிப்பவர்கள், மத அடிப்படைவாதிகள், மத சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள், இனவாதிகள், ஆச்சார பூபதிகள், சாதிமான்கள் எல்லாரும் ஒரே அணியில் தான் எப்போதும் ஒன்று சேர்வார்கள்.
  32. சாராயம் மூலம் அதிக வருமானம் பெறும் திமுக அரசு கள்ள மெளனம் சாதிப்பது ஏன்?
  33. வேலி அடைக்கும்போது கதியால் தள்ளிப்போட்டுக் காணிசேர்க்கும் கலையை நான் அறிந்த காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் கற்பிக்கிறார்கள். அதனைக் கற்பதற்கு எனக்கும் ஆர்வம் ஏற்பட்டபோது…. அம்மா கண்டித்ததால் அந்தக் கற்கை நெறியைக் கற்காமல் கைவிட்டது உண்மை.🤔
  34. 1400 கோடியினை முரளி கிரிக்கெட்டில் உழைத்திருக்கமுடியாது, பெரும்பாலான இவரது விளையாட்டு காலகட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடியவர் இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் விளம்பர பணம் என்பவற்றில் இவர் இவ்வளவு பணத்தினை பெற்றிருக்கமுடியாது, அத்துடன் இவர் ஐ பி எல் போன்ற போட்டிகளில் மிக குறுகிய காலங்கள் மட்டுமே விளையாடி இருந்தார், நான் நினைக்கிறேன் இவர் யாராவது உழல் அரசியல்வாதிகளின் பினாமியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
  35. உக்கிரேன் இரஸ்சிய போர் என்பது உண்மையில் அமெரிக்க இரஸ்சிய போர் என இந்த போர் ஆரம்பித்த காலகட்டத்திலேயே யாழ்களத்தில் கூறப்பட்டது, இந்த போரில் இரு சக்திகளிடமும் அணுவாயுத வல்லமை உண்டு. அமெரிக்கா இரஸ்சியாவினை நசுக்க திடீர் அவசரம் காட்டுவதன் காரணமாக ஒரு சதிக்கோட்பாடு அண்மை காலங்களில் உலவி வந்துள்ளது, அதனை புரஜெக்ட் சான்ட்மான் என அழைக்கிறார்கள் இந்த சதிக்கோட்பாட்டாளர்கள். இரண்டாம் உலக யுத்த முடிவின் பின்னர் பிரித்தானியாவின் ஏகபோக உலக நாணய அந்தஸ்தினை பிரட்டன்வுட் தீர்மானத்தின் மூலம் தட்டிப்பறித்த அமெரிக்கா ஆரம்பத்தில் தங்கத்தின் பெறுமதியில் தனது நாணயபெறுமதியினை பேணிய அமெரிக்கா வியட்னாம் போரின் விளைவாக அதனை அப்போதிருந்த அமெரிக்க அதிபர் நிக்சன் தூக்கியெறிந்துவிட்டு வெறும் முகப்பெறுமதி நாணயமாக அமெரிக்க நாணயத்தினை மாற்றி அமைத்தார், ஆனால் அதனை பெறுமதியாக்குவத்ற்கு மாற்றீடாக 1974 இல் சவூதியுடன் ஒப்பந்தம் மூலம் எண்ணெய் பரிவர்த்தனைக்கு அமெரிக்க நாணயம் மட்டும் பயன்படுத்தும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இந்த புரஜெக்ட் சான்ட்மான் என்பது பல நாடுகள் ஒருஙிணைத்து அமெரிக்க நாணயத்தினை தமது பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்தாமல் விடுவது, சவுதியின் பெறொடொலர் கைவிடல் கூட அதன் ஒரு அங்கமென கூறுகிறார்கள். இதன் தாக்கம் நினைத்துப்பார்க்க முடியாத பொருளாதார பேரழிவினை அமெரிக்காவில் ஏற்படுத்துவதுடன் அதன் அதிர்வலைகள் மற்றநாடுகளில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரியவில்லை. அமெரிகாவினை தளமாக கொண்டு இயங்கும் பெரிய நிறுவனங்கள் தமது பிளான் B பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும் இதனை உறுதிப்படுத்துவது போல அமெரிக்காவின் சீனாவிற்கெதிரான நிறுவனங்களின் மேலான தடை, 100% வரி விதிப்புகள், சிப் கட்டுப்பாடுகளினுடன் அதனை பயன்படுத்தும் தொழில்னுட்பதடை என பொருளாதார யுத்தத்தினை ஆரம்பித்துள்ளது, ஏனெனில் அமெரிக்காவிற்கு பிரதியீடான சீனாவினை நோக்கி நிறுவனங்களின் பார்வை திரும்பாமல் இருப்பதற்கான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருக்கலாம். அமெரிக்கா தனது பலத்தினை காட்ட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது, அதற்காக அணுகுண்டினை பயன்படுத்தவும் தயங்காது, அதற்காக வருத்தப்படும் நாடாக அமெரிக்கா எப்போதும் இருந்ததில்லை. இந்த போர் ஆரம்பித்த காலப்பகுதியில் இரஸ்சிய அதிபர் கூறிய இந்த போர் முடிவில் ஒரு புதிய உலக ஒழுங்கு ஏற்படும் என கூறியிருந்தார். அமெரிக்கா, புதின் கூறுவது போல இலகுவாக தனது நிலையினை இழக்க விரும்பாது; அதற்காக பேரழிவினை கூட ஏற்படுத்த தயங்காது என்பதற்கு இலங்கை, காசா போன்றவை தற்கால உதாரணம். என்ன ஒரு வித்தியாசம் இலங்கையில் புரெஜெக்ட் பீகனை செய்தவர்களுக்கே புரெஜெக்ட் சான்ட்மான் செய்கிறார்களா? இது எந்தளவிலற்கு உண்மை? ஏற்கனவே இரண்டு நாட்டு அதிபர்கள் இது போன்ற விசப்பரீட்சையில் இறங்கி காணாமல் போயுள்ளார்கள், யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். புரெஜெக்ட் சான்ட்மானை முறியடிக்க இரஸ்சியாவினை மோசமாக தோற்கடிக்கவேண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜப்பானில் செய்தது போல, அது மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும், எதிர்வரும் காலங்களில் அதற்கான நிகழ்வுகள் நடைபெறலாம்,
  36. ஓரின சேர்க்கையாளர்கள் செய்யும் கூத்துகள் தான் இவை. நாளைய கால மாற்றங்கள் மூளை வளர்ச்சிகள் வரும் போது ஆடு,மாடு,நாய் பூனைகளுடனும் பாலியல் தொடர்பில் இருப்பதை சட்ட பூர்வமாக்க போராட்டம் நடத்துவர். ஏனெனில் அன்று ஓரின பாலியல் இலைகாய்மறையாக இருந்து இன்று சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதோ அதே போல் விலங்குகளுடனான பாலியலும் அங்கீகரிக்கப்படும் காலமும் வரும். காலக்காட்டாறு எனும் விகுதியில் இதுவும் தகும்.
  37. விளையாட்டு எனும் பண வியாபாரத்தில் முரளிதரன் கோடீஸ்வரன்.யாரால்? அவர் ரசிகர்களால் மட்டுமே. ஆனால் அவர் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாழ்க்கை தரம் என்ன? இதே கதைதான் தான் சினிமா முதலைகளுக்கும்... அரசியல்வாதிகளுக்கும்.
  38. இந்த கருத்து பல நாட்களுக்கு முன் என்னால் எழுதப்பட்டது. அதன் மூலம் வந்த பல பின்னோட்டங்களின் பின் குமாரசாமி ஆகிய நான் என் கருத்தை மாற்றினேன். நான் எழுதியது சரியில்லை தவறுதான் எனவும் எழுதியிருந்தேன். அதன் பின்னரும் சசிவர்ணம் எனும் உறவு எனக்கு சிவப்பு புள்ளி குத்தியுளார். @Sasi_varnam அவர்கள் இனிமேலாவது ஒரு திரியில் உள்ள முழு கருத்துக்களையும் வாசித்து விட்டு தனது திறமையை காட்டுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
  39. யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடியாய நின்றார். லொட்டரி ரிக்கற் எடுக்காமல் இருப்பதையே ஒரு கொள்கையாக கொண்டுள்ள எனக்கு பரிசுத்தொகையைப் பெறமுடியாது என்று நயமாகச் சொல்லி, விரும்பினால் ஒரு சமூகத் தொண்டுக்கு உதவுமாறு சொன்னேன். இலண்டனில் ஏ லெவல் படிக்கும்போது அறிமுகமாகி விரைவிலேயே எனது buddy ஆகிய நண்பனின் மகள் சஹானா இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் 14 வயதிலேயே மரணித்திருந்தார். அவரின் நினைவாக Sahana Foundation என்னும் அறக்கட்டளை அமைப்பை நிறுவி சாவகச்சேரிப் பகுதியில், தீராத நோய்களால் மரணத்தினை நெருங்கிய நோயாளிகளை கவனிக்கும் ஒரு இல்லத்தை, Palliative Care hospice, பல தொண்டு அமைப்புக்களுடன் சேர்ந்து அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த இல்லத்திற்கு ஒரு அம்புலன்ஸ் வாங்குவதற்கான £75oo பவுண்ட்ஸ் பணம் சேர்க்க எனது இன்னொரு நண்பர் சூரி North of Wales Cotswold Way Challenge எனும் 50km கடினமான நடைபயணம் ஒன்றை அடுத்த ஞாயிறு (22 ஜூன்) மேற்கொள்கின்றார். தாராள மனம்கொண்ட @வீரப் பையன்26 £1oo பவுண்ட்ஸைக் கொடுத்ததோடு கமிஸனாக £15 பவுண்ட்ஸையும் கொடுத்துள்ளார். அம்புலன்ஸ் வாங்கும் நிதி சேர்ப்புக்கு பங்களித்த பையனுக்கு நன்றி பல. கள உறுப்பினர்கள் யாராவது பங்களிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பில் சென்று பங்களிக்கமுடியும். ஆனால் பையனைப் போல £15 கமிஸனைக் கொடுக்காமல் அதனை ஒரு பவுண்ட்ஸ் அல்லது அதற்கும் கீழாக மாற்றினால் நல்லது, https://www.justgiving.com/crowdfunding/Soori?utm_source=whatsapp&utm_medium=socpledgemobile&utm_content=Soori&utm_campaign=post-pledge-mobile&utm_term=r4yXppEQw
  40. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், அண்ட்ரியஸ் கவுஸின் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களுடன் வெற்றியை அண்மித்தாலும், ஹார்மிற் சிங்கின் விக்கெட் போனபின்னர் இறுதி இரண்டு ஓவர்களில் தென்னாபிரிக்கப் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் அடித்தாட முடியாமல் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. 41வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 93 2 ரசோதரன் 93 3 சுவி 86 4 ஈழப்பிரியன் 85 5 நந்தன் 85 6 கோஷான் சே 85 7 கந்தப்பு 83 8 கிருபன் 80 9 எப்போதும் தமிழன் 80 10 நீர்வேலியான் 79 11 குமாரசாமி 78 12 தமிழ் சிறி 78 13 வாத்தியார் 78 14 P.S.பிரபா 77 15 ஏராளன் 77 16 அஹஸ்தியன் 77 17 வாதவூரான் 76 18 நிலாமதி 75 19 வீரப் பையன்26 74 20 தியா 74 21 புலவர் 72 22 கல்யாணி 71 23 நுணாவிலான் 70 @suvy ஐயா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பதுதான் இன்றைய விஷேசம்
  41. நெல்லை சி.பி.எம் அலுவலகம் மீது தாக்குதல் | ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்! | தோழர் செல்வம்
  42. 🤣......... இன்னமும் கவிதையும், கதையும் படித்துக் கொண்டே இருக்கிறதிலிருந்தே தெரிய வேண்டுமே........வேற அனுபவம் எதுவும் இங்கும் கிட்டவில்லை என்று.........🤣.
  43. கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில், இரயிலில் பயணிப்பதற்காக, இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின் இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத்தில், நீங்கள் ஆணா? பெண்ணா? என்ற கேள்வியில் எங்கே ‘ஆம்’ என்று போடுவதில் அவருக்குச் சிக்கல் வந்தது. காரணம் அவர் ஆணும், பெண்ணும் இல்லாத மூன்றாம் பால். கோபத்துடன் அவர் இரயில் திணைக்களத்துக்கு இது விடயமாக மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். பதில் அவருக்கு அனுகூலமாக இல்லாததால், நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றார். இரயில் திணைக்களம் அவருடன் சமரசம் செய்ய முயற்சித்தது. அவருக்கேற்பட்ட மன அழுத்தத்துக்கான நட்ட ஈடாக 1000 யூரோக்களைத் தருவதாகவும் கேட்டுப் பார்த்தது. அவர் உடன் படவில்லை. “இது ஒருவரது தனிப்பட்ட விடயம் அல்ல. பொதுவானது. ஆகவே உங்கள் (இரயில் திணைக்களம்) படிவங்களில் மாற்றங்களைச் செய்யுங்கள். அதுவும் ஆறு மாதங்களுக்குள்” என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆறு மாதங்கள் குறைவானது ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறோம் என இரயில் திணைக்களம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர் குறிப்பிட்ட படிவத்தில் மட்டுமல்ல, எங்களது முழு ‘சிஸ்ரத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பெரும் பணமும், கால அவகாசமும் தேவை என்றார்கள். இப்பொழுது மாற்றம் செய்து விட்டார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. இந்தப் பிரச்சினை இன்று யேர்மனியில் உள்ள சகல நிறுவனங்களுக்கும் இருக்கிறது. திரு,திருமதி என்று விழிக்காமல் எல்லோருக்கும் பொதுவாக ‘ஹலோ” என்றே அழைக்கலாமா? என குளம்பிப் போய் இருக்கிறார்கள். ஓரினச் சேர்க்கையாளர்களின் குடும்ப வாழ்வை யேர்மனியும் அங்கீகரிக்கிறது. அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. யேர்மனியில் வளரும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களே பாலியல் சம்பந்தப்பட்ட விபரங்களை சொல்லித் தருகிறார்கள். பாடசாலைகளிலும் பாலியல் சம்பந்தமான விடயங்களை ஆசிரியர்கள் விளக்குகிறார்கள். ஆகவே ஓரினச் சேர்க்கையாளர்களின் பிள்ளைகளும் தங்கள் பாதுகாவலர்கள் போல் மாறி விடுவார்களோ என்ற அச்சம் தேவையற்றது. தவறாக ஏதும் நடந்தாலும்,பாடசாலையில் பிள்ளைகளின் நடத்தையை ஆசிரியர்கள் அவதானித்து அது சம்பந்தமான திணைக்களத்துக்கோ (Jugendamt), பாடசாலை அதிபருக்கோ அறிவித்து விடுவார்கள். ஓரினச் சேர்ககையாளர்களும் எங்களைப் போன்று வாழப் பிறந்தவர்கள். அவர்களுக்கான உரிமையையும், மதிப்பையும் தருவதுதான் முறையானது.
  44. சரத் பொன் சேகா உறுதியாகவும் தெளிவாகவும் கூறியிருந்தார், "கிளிநொச்சியோடு நம் போரை முடிவுக்கு கொண்டு வருவதே நமது திட்டமாக இருந்தது, ஆனால் இந்தியாவே நமது போரை தொடர்ந்து செல்ல வற்புறுத்தியது." "மஹிந்தா சொன்னது, "நாம் செய்தது நமது போரல்ல, அது இந்தியாவின் போர். நாம் கேட்காமலேயே போருக்கான சகல உதவிகளையும் வழங்கியது இந்தியா." என பகிரங்கமாக சொன்னார். இந்தியா மௌனம் காத்து அதை ஏற்றுக்கொண்டது. போர் முடிவு பெற்று வெற்றி களிப்போடு மஹிந்தா பாராளுமன்றம் வந்தபோது தங்களையும் அவர்களோடு சேர்த்துக்கொள்ளுமாறு ரணில் கட்சியினர் கோரியிருந்தனர். ஆனால் ரணிலே நாட்டைகாட்டிக்கொடுத்து புலிகளுடன் பேசினார் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம், அந்த வெற்றி தமக்கு மட்டும் உரியது என நிராகரித்து விட்டார். எழுபத்தாறு ஆண்டுகளாக சிங்கள ஜனாதிபதிகளை மாறி மாறி தெரிவு செய்து எதை சாதித்தோம் என்றும் விளக்கி முழங்கினால் கேட்கிறவர்கள் விளங்கிக்கொள்ள வசதியாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.