Leaderboard
-
nilmini
கருத்துக்கள உறவுகள்11Points929Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்6Points20018Posts -
Paanch
கருத்துக்கள உறவுகள்5Points8133Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/23/24 in all areas
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
இந்த தபால் முத்திரையின் அசல் என்னிடம் இருக்கிறது. அத்துடன் ஆறுமுகநாவலர் பாடசாலையின் 150 ஆவது நிறைவு விழாவுக்கு ஏன்னை ஒருநாள் தலைமை விருந்தினராக 2006 ஆம் ஆண்டு அழைத்திருந்தனர். அப்போது எல்லா ஆதீனங்கள், இலங்கை இந்து கலாச்சார அமைச்சர், ஆறு திருமுருகன் மற்றும் பலர் அந்த 5 நாள் கொண்டாட்டத்துக்கு வந்திருந்தார்கள்.அப்போது எனக்கு இந்திய தபால் துறை 150 ஆண்டு விழாவை கௌரவித்து வெளியிட்ட முத்திரையும், ஒரு கடிகார கொம்பனி வெளியிட்ட நாவலர் படம் போட்ட கடிகாரமும் பரிசளித்தார்கள்.5 points
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
மாட்சிமை பொருந்திய ஐயன் நாவலர் பெருமான் தமிழை தலையில் சுமந்து திரிந்தார்........அவர்களை முத்திரையில் இட்டு சிறப்பித்து மகிழ்ந்தோம் ........... ஐயகோ அவரின் சந்ததிகள் தட்டுவடை பலகாரங்கள் எல்லாம் தட்டுடன் கடத்திக் கொண்டு திரிகிறார்களே, இவர்களை என் செய்வோம் ......... ! 😂5 points
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள். அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன். சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள். சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குடும்பம் மாத்தளை, நுவெரேலியா மற்றும் கொழும்பில் வாழ்ந்தததாலும் எனது அப்பாவின் சொந்தங்களுடன் கொண்டாட எனக்கு சந்தர்ப்பம் குறைவாகவே இருந்து. நீண்ட காலத்துக்கு பிறகு யாழ் களத்தில் சிறியுடன் மீண்டும்சொந்தம் கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் குடும்பத்துடன் ஜேர்மனியில் இருப்பது தெரியும் என்றாலும் தொடர்பு இருக்கவில்லை. சிறியின் சகோதரியுடனும் எப்படியாவது மீண்டும் பழகவேணும் என்றும் ஆர்வமாக இருந்தேன். எல்லாவற்றுக்கும் உதவும் விதமாக சிறியின் மகளின் கலியாணம் அமைந்தது. சிறியின் சகோதரி ஒருநாள் மெசேஜ் ஒன்று அனுப்பி இருந்தார். அதில், சிறியின் மகளின் கலியாணம் நடக்க இருப்பதாகவும் அப்பாவின் குடும்ப உறவினர் அனைவரும் ஜெர்மனி செல்வதாகவும் நான் வந்தால் எனது விருப்பத்தின்படி எல்லாரையும் சந்திக்க நல்ல சந்தர்ப்பம் என்றும் எழுதியிருந்தார். அத்துடன் சிறி யிற்கு எனக்கு அழைப்பு விடுக்க விருப்பம் இருந்தாலும் சிரமமாக இருக்குமோ என்று யோசிப்பார் என்றும் சொல்லியிருந்தார். மெஸேஜை வாசித்த கணமே, கல்யாணத்துக்கு போவது என்று தீர்மானித்தது விட்டேன். நான் இருக்கும் மெம்பிஸ் இலிருந்து தம்பி வீட்டுக்கு வெர்ஜினியா சென்று, அங்கு தங்கி விட்டு, வாஷிங்க்டன் மற்றும் போஸ்டன் வழியாக பிரான்க்பெர்ட் சென்றடைந்தேன். கல்யாண வேலைகளில் மத்தியிலும், சிறியின் மகன் (எனது மருமகன்) விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்திருந்தார். ஜெர்மனியிலேயே பிறந்து வளர்ந்து, மிகச்சிறிய வயதில் எலும்பு முறிவு அதிலும் முதுகெலும்பு சத்திரசிகிச்சை மருத்துவராக பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக இருந்து. அதைவிட ரெட்டிப்பு சந்தோசம் அவரது பணிவையும், சுத்தமான யாழ்பாணத்தமிழையும் கேட்டு. ஜெர்மனியில் இறங்கிய முதல் மணி நேரத்தில் இருந்தே எனது சந்தோஷமும், பிரமிப்பும், ஈர்ப்பும் தொடங்கிவிட்டது . உறவினர்கள் அநேகமானோர் ஒரே ஹோட்டலில் தான் தங்கினோம். எல்லோரும் பக்கத்த்து பக்க அறைகள். ஒன்றாக சாப்பிட்டு, வெளியில் சுற்றிப்பார்த்து மிகவும் சந்தோசமான நாலு நாட்கள். பாஞ் அண்ணாவையும் குசா அண்ணாவையும் சந்தித்து ஒரு யாழ்கள Gettogether வைப்பம் என்று பிளான் போட்டிருந்தேன். குசா அண்ணாவால் வேலை நிமித்தம் வரமுடியவில்லை. பாஞ் அண்ணாவை சந்தித்தது மிகுந்த. சந்தோசம். படத்தையும் இணைத்துள்ளேன். நீட்டுக்கு எழுதினால் வாசிக்க களைப்பாக இருக்கும், மிகுதி அடுத்த முறை தொடரும்.3 points
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
அடேய்.....அடேய்......அடேய்களா. இந்த திரியாவது சுத்தம் சுகாதாரமாய் போகட்டுமன். ஏனடா போற வாற இடமெல்லாம் பலகார பையோட திரியுறியள்? 🤣3 points
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு பழை மற்றும் புதிய உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி 😁 பழைய பெயரை தோண்டியெடுக்க முடியவில்லை 😞2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரம்பத்தில் வேகமாக அடித்தாடினாலும், பின்னர் விக்கெட்டுகள் சரியத் தொடங்கி, 19வது கிறிஸ் ஜோர்டனின் ஓவரில் 4 விக்கெட்டுகளை, hat trick உள்ளடங்கலாக, இழந்து இறுதியில் 18.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஜொஸ் பட்லரின் நெருப்படியான ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களுடன், 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 09 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், இங்கிலாந்து (B1) வெற்றியீட்டியதால் அவுஸ்திரேலியா (B2) இப்போட்டியில் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்திய அணி வெல்லும் எனக் கணித்த @theeya க்குப் புள்ளிகள் கிடையாது. 49வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 105 2 ரசோதரன் 103 3 ஈழப்பிரியன் 97 4 சுவி 96 5 கோஷான் சே 95 6 கந்தப்பு 93 7 நந்தன் 93 8 நீர்வேலியான் 91 9 கிருபன் 90 10 எப்போதும் தமிழன் 90 11 P.S.பிரபா 89 12 குமாரசாமி 88 13 தமிழ் சிறி 88 14 வாத்தியார் 88 15 அஹஸ்தியன் 87 16 வாதவூரான் 86 17 நிலாமதி 85 18 வீரப் பையன்26 84 19 ஏராளன் 83 20 தியா 80 21 புலவர் 76 22 நுணாவிலான் 74 23 கல்யாணி 732 points
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
2 points
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தடிச்ச சொல் பாவிச்சதுக்கு மன்னிக்கனும் அக்கா இனி அப்படி எழுத மாட்டேன்...................இது என் ஜக்கம்மா மேல் சத்தியம்😁..........................2 points- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
தமிழ்நாடு தனிநாடல்ல அது இந்தியாவில் இருக்கிறது, இந்தியாவில் இருக்கின்ற பல மொழிகள் சங்கத் தமிழோடு சேர்ந்து இனிமை பெற்று உருவான தமிழ் சொற்கள் தமிழ்நாட்டுத் தமிழில் ஒலிப்பது வரவேற்கக்கூடியதே. இலங்கையில் அப்படியல்ல, இருமொழிகள் மட்டும் பேசும் இரு இனங்களைக் கொண்டநாடு. அதில் ஒரு மொழிசார்ந்த இனமான சிங்களத்தை தமிழ்மொழி பேசுபவன் பேசினாலே, பேசியவன் பிடரிக்குச் சேதம் என்று பழமொழியே இருக்கும்போது…சங்கத் தமிழோடு சேர்ந்து சிங்களமும் உருவாக்கிய சொற்களைப் பாவித்தால் அது தமிழன் உயிருக்கே உலைவைக்கும்.😳 பழைய சங்கத் தமிழ் சொற்கள் இலங்கையில் நிலைத்து நிற்பதும் நன்மைக்கானதே.🤔2 points- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
சிறியின் அப்பம்மா தையல்முத்து (எனது அப்பப்பாவின் சகோதரி) திருமணம். அவரின் தகப்பன் சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வான அம்பலவாண நாவலர். இந்த புகைப்படங்கள் 1900 ஆம் ஆண்டுக்கும் 1902 ஆம் ஆண்டுக்கும் இடையில் எடுக்கப்பட்டது.2 points- சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை!
இன்றைய இலங்கை நிலையை துல்லியமாக சொல்லும் தலைப்பு. சிங்களவர்கள்: சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! தமிழர்கள்: சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை! இது தான் இதுவரை சிங்களம் வெல்ல காரணம்.2 points- இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை adminJune 22, 2024 சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா ஆகியோா் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணிக்மர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்யுமாறு மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் செலவு செய்யும் அதேவேளை வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் மட்டுமே வழங்குவதாகவும் ஊழியர்களின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது இந்த வழக்கு தொா்பில் தீர்ப்பு வழங்கிய சுவிட்சர்லாந்து நீதிமன்றம் இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால் இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களும் அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்ள்ளது. எனினும் அவர்கள் மீது தொடரப்பட்ட மனிதக் கடத்தல் தொடர்பான வழக்கை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்துஜா குழுமம். இந்தியாவில் அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் , ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஹிந்துஜா லஹிந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவதுடன் 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனங்களின் கிளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2024/204557/1 point- "பெண் எனும் பிரபஞ்சம்"
1 point"பெண் எனும் பிரபஞ்சம்" "பெண் எனும் பிரபஞ்சம் மண் வாழ்வின் இறைவி! கண்ணின் இமையும் அவளே உண்மைத் துணையும் இவளே!" "திண்ணையில் அரட்டையும் செய்வாள் வண்ணத்தில் அழகும் காட்டுவாள்! எண்ணம் என்றும் குடும்பமே கண்ணாய் காப்பாள் என்றுமே!" "உண்ண உணவும் தருவாள் வீண் வம்புக்கும் இழுக்காள்! ஊண் உறக்கமும் பார்க்காள் ஆண்களின் சொர்க்கமும் அவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
திருமண நிகழ்வு உங்களின் சந்திப்புக்கள் . சொந்த முறை இவை அனைத்தையும் அழகாய் எழுதி இருந்தீங்கள் அக்கா 🥰🙏. தமிழ் சிறி அண்ணா எனக்கு கடந்த வருடமே சொன்னார் நீங்கள் அவரின் சொந்தம் என்று . இன்பமோ துன்பமோ எனது மூத்த அண்ணன் போல் தமிழ் சிறி அண்ணா கூட எதையும் பகிர்ந்து கொள்வேன். தமிழ்சிறி அண்ணாவும் ஒளிவுமறைவு இல்லாம எல்லாத்தையும் சொல்லுவார் . கள்ளம் கவடம் இல்லாம பழகும் நல்ல மனிதர் நல்ல உறவு🥰🙏 ........................... தமிழ் சிறி அண்ணா வயதில் எனக்கு மாமா மார் இருக்கினம் யாழில் இணைந்த காலம் தொட்டு அண்ணா என்று கூப்பிட்டதால் இன்று வரை அண்ணா என்று தான் தமிழ் சிறி அண்ணாவை அழைக்கிற நான் இன்னொரு முக்கியமான மேட்டார் ஈழத்து அரவிந்த சாமிய யாழில் எல்லாரும் தாத்தா தாத்தா என்று தான் அழைப்பது ஆனால் அவரின் வயதுக்கும் இளமைக்கும் அவர் தாத்தா கிடையாது யாழில் 2008களில் இணைந்த காலம் தொட்டு இப்ப வரை தாத்தா தாத்தா என்று கூப்பிட்டு பழகி போச்சி அந்த பழக்கத்தை கைவிட முடியாது , அது வேற யாரும் இல்லை உங்கட அண்ணா குமாரசாமி.................................. தமிழ்சிறி அண்ணாவின் மகன் அழகாய் தமிழில் கதைக்கிறார் என்று எழுதி இருந்தீங்கள் உண்மையில் வாசிக்க சந்தோஷமாய் இருந்தது...................இப்படி மற்ற பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தால் ஆயிரம் வருடம் ஆனாலும் புலம்பெயர் நாட்டில் தமிழ் அழியாது🙏🥰......................1 point- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
மீண்டும் "சுண்டலோடு " வந்திருக்கிறீர்கள். நல்வரவு ...1 point- "The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"
"The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/9564108346997717/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/9600878159987402/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/9638876056187612/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/9679551822120035/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/9719732041435346/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/9756879647720585/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 07 https://www.facebook.com/groups/978753388866632/posts/9797984360276780/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/9840268999381649/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 09 https://www.facebook.com/groups/978753388866632/posts/9867390243336191/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/9902567736485108/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 11 https://www.facebook.com/groups/978753388866632/posts/9939135942828287/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 12 https://www.facebook.com/groups/978753388866632/posts/9959688194106395/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 13 https://www.facebook.com/groups/978753388866632/posts/10007944625947418/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 14 https://www.facebook.com/groups/978753388866632/posts/10047737095301504/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 15 https://www.facebook.com/groups/978753388866632/posts/23864680959847217/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 16 https://www.facebook.com/groups/978753388866632/posts/23884767157838597/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 17 https://www.facebook.com/groups/978753388866632/posts/23986856534296325/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 18 https://www.facebook.com/groups/978753388866632/posts/24027010520280926/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 19 https://www.facebook.com/groups/978753388866632/posts/24102926682689309/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 20 https://www.facebook.com/groups/978753388866632/posts/24148156724832971/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 21 https://www.facebook.com/groups/978753388866632/posts/24198246736490636/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 22 https://www.facebook.com/groups/978753388866632/posts/24241916592123650/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 23 https://www.facebook.com/groups/978753388866632/posts/24293753150273327/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 24 https://www.facebook.com/groups/978753388866632/posts/24340890602226248/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 25 https://www.facebook.com/groups/978753388866632/posts/24388637950784846/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 26 https://www.facebook.com/groups/978753388866632/posts/24433965519585422/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 27 https://www.facebook.com/groups/978753388866632/posts/24479740805007893/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 28 https://www.facebook.com/groups/978753388866632/posts/24521816720800301/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 29 https://www.facebook.com/groups/978753388866632/posts/24566341346347838/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 30 https://www.facebook.com/groups/978753388866632/posts/24610044775310828/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 31 https://www.facebook.com/groups/978753388866632/posts/24657589823889656/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 32 https://www.facebook.com/groups/978753388866632/posts/24708333482148623/?1 point- "The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"
மிகச்சரியான, தேவையான சேவைகள். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்க நலமுடன்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வணக்கம் சுண்டல். நீண்ட காலத்துக்கு பிறகு. அப்படியே ஜம்முவையும் கூட்டிக்கொண்டு வரவும்.1 point- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வாடா மச்சான்🙏🥰😍 போன வருடம் கேட்டேன் யாழுக்கு வர சொல்லி . இந்த வருடம் வந்து இருக்கிறாய் யாழில் கண்டது மகிழ்ச்சி யாழில் ஈமேல் முறையில் உள் நுழையும் முறை வந்த பிறக்கு உனது பழைய ஜடி வேலை செய்யாது என்று நினைக்கிறேன்........................................1 point- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
மிக்க மகிழ்ச்சி, வாருங்கள் சுண்டல். (பழைய சுண்டலை வேண்டுமானால் தேடித்தர முடியும் 🙂)1 point- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த போட்டிகளுக்கு நான் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து , மேற்கிந்திய தீவு , தென்னாபிரிக்கா, நியூசிலாந்து , பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான், இலங்கை , வங்காளதேசம், அமெரிக்கா, அயர்லாந்து , நெதர்லாந்து …, , உகண்டா என வரிசைப்படுத்தி விட்டு இறுதிபோட்டியில்கடந்த 10 வருடங்களாக இந்தியா நல்லாய் விளையாடியும் தோற்பதினாலும் அவுஸ்திரேலியா எனக்கு பிடித்த அணி என்பதினாலும் வெற்றி பெரும் அணிஅவுஸ்திரேலியாவை தெரிவு செய்து விட்டேன். சூப்பர் 8 இல் ஒரு குழுவில் இந்தியா இங்கிலாந்து மேற்கிந்தியா இலங்கை கிருபன் இணைத்த Excel இன் ஊடாக வந்தது. இதில் எனது வரிசையில் 1,3 இடங்களில் உள்ள இந்தியாவையும் இங்கிலாந்திணையும் , மற்றைய குழுவில் இருந்து எனது தரவரிசையில் 2, 5 இடங்களில் உள்ள அவுஸ்திரேலியாவும் தென்னாப்பிரிகாவையும் அரை இறுதிக்கு வரும் அணிகளாக தெரிவு செய்தேன் . சூப்பர் 8 தெரிவு பற்றி முன்பே தெரிந்திருந்தால் இந்தியா,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மேற்கிந்தியா தீவினை அரை இறுதிக்கு தெரிவு செய்திருப்பேன் . ஆனால் ஆப்கானிஸ்தான் வங்காளதேசத்தினை வென்று இந்தியா அவுஸ்திரலியாவை வென்றால் அவுஸ்திரேலியாக்கு ஆப்பு . அவுஸ்திரேலியா இந்தியாவை வென்றாலும் Run Rate கூடவாகவும் இருக்க வேணும்.1 point- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
1 point- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வணக்கம் சுண்டல். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.1 point- நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வாங்கோ வணக்கம்.இனியாவது தொடர்ந்து இருங்கோ.🙂1 point- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
1 pointபெட் கமின்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஹெட்-ட்ரிக்; ஆனால் ஆஸியை அதிரவைத்தது ஆப்கான்! 23 JUN, 2024 | 10:11 AM (நெவில் அன்தனி) சென். வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற குழு 1க்கான சுப்பர் 8 ஐசிசி உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலும் அவுஸ்திரேலியாவை விஞ்சிய ஆப்கானிஸ்தான் 21 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இருவகை உலகக் கிண்ண வரலாற்றில் (50 ஓவர் மற்றும் ரி20) அவுஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அரை இறுதிக்கு செல்வதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் போட்டி முடிவை அடுத்து குழு1 இல் இடம்பெறும் நான்கு அணிகளுக்கும் அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸ்தரான் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், 8ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட குல்பாதின் நய்பின் 4 விக்கெட் குவியல் என்பன ஆப்கானிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அத்துடன் இப்போட்டியில் பிடிகள், ரன் அவுட் வாய்ப்புகள், ஸ்டம்ப் வாய்ப்பு ஆகியன தவறவிடப்பட்டமை அவுஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் பொறுமையாகவும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடி 118 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ரஹ்மானுல்லா குர்பாஸ் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைப் பெற்றதுடன் இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் அவர் குவித்த 3ஆவது அரைச் சதம் இதுவாகும். இப்ராஹிம் ஸத்ரான் 51 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால், குர்பாஸின் விக்கெட் உட்பட முதல் 4 விக்கெட்கள் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிய ஆப்கானிஸ்தான் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன் கடைசி ஓவரிலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. ஆரம்ப வீரர்களைவிட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தவில்லை. இதனிடையே பெட் கமின்ஸ் தனது 2ஆவது தொடர்ச்சியான ஹெட் - ட்ரிக்கைப் பதிவு செய்து வரலாறு படைத்தார். முன்னைய ஹெட் - ட்ரிக்கைப் போன்றே இந்த ஹெட் - ட்ரிக்கையும் அவர் இரண்டு ஓவர்களில் பதிவுசெய்தார். பெட் கமின்ஸ் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்பா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 149 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் க்ளென் மெக்ஸ்வெல் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார். மொத்த எண்ணிக்கை 106 ஓட்டங்களாக இருந்தபோது மெக்ஸ்வெல் 6ஆவதாக ஆட்டம் இழந்ததும் அவுஸ்திரேலியாவின் எதிர்பார்ப்பு தகர்ந்தது. இறுதியில் அவுஸ்திரேலியா 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் குல்பாதின் நய்ப் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி சர்வதேச ரி20 போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். ஆரம்ப பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கும் திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன்: குல்பாதின் நய்ப். https://www.virakesari.lk/article/1867431 point- சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை!
தோற்கடிக்கவல்லவாம், எப்படியும் சமஸ்டியை(வெறும் சட்டியைக்கூடக் காட்டமாட்டார்கள் என்பது வேறுவிடயம்)அடைவதற்கான இராசதந்திர நகர்வாம். சிங்களம் பிரிக்கமுதல் சட்டாம்பிள்ளையளும் வாத்திமாரும் கட்சித்தலைமைப்போட்டியிலை நீதிமன்ற வாசல்ல நிற்கினமே. இதிலை சிங்களம் என்னத்தைப் பிரித்தாள இருக்கு. அவர்கள் இதைப்பார்த்து சிரித்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்.1 point- இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
இவ்வளவு பெரும் தொழிலதிபர்களால்… அவர்களின் வீட்டு வேலை செய்யும் மனிதர்களை மதித்து உரிய சம்பளம் கொடுக்க மனம் இடம் கொடுக்கவில்லை. இப்போ வசமாக மாட்டுப் பட்டு, வருடக் கணக்கில் களி தின்னப் போகின்றார்கள். சுவிஸ் நீதிமன்றத்துக்கும், கடுமையான தண்டனை வழங்கிய நீதிபதிக்கும் பாராட்டுக்கள்.1 point- "கலங்காதே மகனே"
1 pointஅருமயானதொரு கருப்பொருள். நாம் இழந்ததை அல்லது தோல்வியை இழப்பை நினைத்து வருந்துகிறோம். அதைக் கடந்து வர வேண்டும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
நல்ல தீர்ப்பு. இவர்கள் குடும்பத்துக்கே அவமானம். புதிதாக இவர்கள எந்தத் தவறும் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக ஏழை மக்களை வருத்தி வேலை வாங்குவது இந்திய பணக்காரர்களுக்குச் சாதாரண விடயம். சக மனிதரை மதிக்கத் தெரியாதவர்கள். தனக்குக் கீழ் உள்ளவரை மிதிப்பதூம் மேலுள்ளவர்களுக்குப் பணிந்து போவதும் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று. பிரான்சில் சில வருடங்களுக்கு முன் பிரான்சிலுள்ள இந்திய தூதரகத்தில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் அவர்கள் செய்த கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து வெளியே வந்து தனக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இவரும் சரியான தூக்கமின்றி ஒரு நாளைக்கு 16 மணித்தியாலம் வேலை செய்துள்ளார். உலகிலுள்ள ஏனையவர்களும் இத் தீர்ப்பைப் பார்த்து ஓரளவாவது அறிவு பெறட்டும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
குமாரசாமி தாத்தா தமிழ் சிறி அண்ணா நிலாமதி அக்கா உங்க மூன்று பேருக்கும் நாளை 4 புள்ளி கிடைக்கும்............................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஹார்டிக் பாண்டியாவில் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி அடித்தாடமுயன்று விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன . சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு D இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. 47வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 101 2 ரசோதரன் 99 3 சுவி 94 4 ஈழப்பிரியன் 93 5 கோஷான் சே 93 6 கந்தப்பு 91 7 நந்தன் 89 8 நீர்வேலியான் 89 9 கிருபன் 88 10 வாத்தியார் 88 11 எப்போதும் தமிழன் 88 12 P.S.பிரபா 87 13 குமாரசாமி 86 14 தமிழ் சிறி 86 15 அஹஸ்தியன் 85 16 வாதவூரான் 84 17 நிலாமதி 83 18 ஏராளன் 81 19 வீரப் பையன்26 80 20 தியா 78 21 புலவர் 74 22 கல்யாணி 73 23 நுணாவிலான் 721 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்* நாம் – முதல் தலைமுறை, தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை, பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை, பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை, ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை, சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை, பரன் + பரை – ஏழாம் தலைமுறை, ஆக, பரன் + பரை = பரம்பரை ஒரு தலைமுறை – சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை – 480 வருடங்கள்.. ஈரேழு தலைமுறை – 960 வருடங்கள்.. (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை முறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை.. ஆதாரம் கூக்கிள் ஆண்டவர்.1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
தங்கையே! இதுபோதும் உங்கள் தலையும் எங்ளுடன் சேர்ந்து உருள.😆🤪1 point- கருத்து படங்கள்
1 pointஇந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும், ஜனாதிபதி ரணிலும்... கொழும்பில் யோகா செய்தபோது.....1 point- மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
நீங்கள் ஜேர்மனியில் ஒரு கட்சியின் உறுப்பினர் என நினைக்கிறேன். அந்தக் கட்சியினர் புவி வெப்பமாதலைத் தடுக்கும் கொள்கைகளை வைத்திருக்கின்றனரா அல்லது நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவோம் எனக் கூறுகின்றனரா? அப்படி ஒர் நிலக்கரிச் சுரங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த கிறெரா துன்பேர்க்கை நீங்களே யாழில் காய்ச்சி எடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கு மறந்து விட்டதா😎? நீங்கள் ஆதரிக்கும் ட்ரம்ப், "இன்னும் எண்ணை தோண்டுவேன்" என்கிறார். நீங்கள் எதிர்க்கும் பைடன் கொண்டு வந்த சூழல் பாதுகாப்புச் சட்டங்களை ரத்துச் செய்வேன் என்கிறார். முரண்பாட்டின் மொத்த வடிவமா நீங்கள் அல்லது குழப்பத்தின் வடிவமா😂? யார் புவியை வெப்பமாக்குகிறார்கள்? யார் பசுமைத் தொழில் நுட்பத்தால் உலகை அடுத்த சந்ததிக்கு விட்டு செல்ல முயல்கிறார்கள் என்ற தெளிவாவது இருக்கிறதா?1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
சில கருத்துக்களை, படங்களைப் பார்க்கும் போது எவ்வளவு தூரம் பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் என்ற ஆச்சரியம் வருகிறது😂. BDSM (Bondage, Domination, Sadism, Masochism) என்ற வினோதமான (queer) பாலியல் செயன்முறைகள் (முன்னர் deviant sexual behaviors என்று அழைக்கப் பட்டவை இவையெல்லாம்) எதிர்ப்பால் இணைகளிடையே பிரபலமாக இருக்கும் நடைமுறைகள். இதையெல்லாம் ஓர் பால் தம்பதிகள் சமூகத்திற்கு அறிமுகம் செய்ததாக புதுக் கதைகள் யாரும் சொன்னால், உடனே நம்பும் அளவுக்கு இருக்கிறார்கள்.1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
For Narthaki, her love for Bharatanatyam became her life right from her childhood. Besides being a Padma Shri recipient, she has been granted distinctive honors such as the Sangeet Natak Akademi Puraskar Award from the President of India, the title of Nrithya Choodamani, and the Kalaimamani title from the government of Tamil Nadu, among other accolades. This beautiful dancer received the very first award of the evening for Excellence in Performing Arts from the multi-faceted actor Parthiban. நர்த்தகி நடராஜ் பற்றிய காணொளி 5.30 நிமிடங்களில் இருந்து பாருங்கள்.1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
நீங்கள் சந்ததி. என்பது ஆண் வம்சத்தின் வழி. அதாவது உடக்குகாரர்கள். ....7 தலைமுறை வரை ஆண் வழியில் உடக்கு இருக்கும் என்பார்கள் எனது உறவினர்கள் இந்த உடக்குகாரருக்கு முக்கியம் அளிப்பது உண்டு எந்தவொரு வைப்பதற்கும் அவர்களுக்கு சொல்வது உண்டு இரத்த உறவுகள் பெண் வழியில் இரண்டாவது அல்லது மூன்றாவது உடன். கொண்டாட்டம் இல்லை,.. .மேலும் ஆறுமுகநாவலர். பிறந்த இடம் நல்லூர் எனறு படித்த ஞாபகம் மற்றும் சந்ததி. என்று சொல்லாமல் சொந்தம் என்று சொல்லலாம் அல்லவா??? 🙏1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
ஏன்?? தகப்பனின் தாயின் பூட்டன். என்றால் சரியாக இருக்கும் ..5 தலைமுறை கடந்து விட்டது இல்லையா?? கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேல் வரும்1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வாண அம்பலவாண நாவலரின் தகப்பன் தாவடியில் மிகவும் புகழ் பெற்ற கச்சேரி சக்கடத்தார் தாவை சண்முகம் சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவைவாண அம்பலவாண நாவலர்- இவர்தான் சிறியின் பாட்டியினதும், எனது பாட்டனிதனும் தகப்பன். நாவலரின் மதிப்புக்குரிய மாணவராதலால் இவருக்கு நாவலர் பெயர் சூட்டப்பட்டது. எனது அப்பம்மாவின் பூட்டன் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். ஆக, எனக்கும், சிறியிக்கும் ஆறுமுகநாவலரும், அவரது முதன்மை மாணவரும் நேரடி சொந்தம்.1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
திருமண தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நில்மினி. 🙏 இப்போதைய அவசர உலகில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் திருமணத்தை ஜேர்மனியில் உள்ளவர்களுடன் மட்டுமே நடத்துவது என நாம் யோசித்து இருந்தோம். மகளின் திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்ற போது... அதனை ஒரு தகவலாக அறிவிக்கும் வகையில் உறவினர்களின் WhatsApp குழுமத்தில் அந்தச் செய்தியை பகிர்ந்து கொண்டேன். செய்தி பகிர்ந்த அன்றும் அதற்கு அடுத்த நாளும் எல்லோரும் திருமணம் எப்போ என்றும்... அதற்கு தாமும் நிச்சயம் வருவதாக 16 குடும்பத்தினர் உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல் அனுப்பி இருந்தார்கள். நில்மினியும் வருவதாக தெரிவித்து இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தாலும்... வேலைகளுக்கு லீவு போட்டு, விமானத்தில் இவ்வளவு தூரம் வந்து சிரமப்படப் போகின்றார்களே என்ற ஆதங்கமும் இருந்தாலும் எல்லா உறவினர்களையும் ஒரே இடத்தில் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் அருமையான சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது என்ற ஆசையும் மனதில் இருக்கத்தான் செய்தது. நில்மினியை ஊரில் சந்திக்கவில்லை என்றாலும்... அவரின் சித்தப்பா, மாமா போன்றோருடன் உறவினர் முறையைத்தாண்டி நட்புடன் பழகி வந்துள்ளதை மறக்க முடியாது. உறவினர்கள் பலரும் நில்மினியை... சந்தித்த நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். வந்தவர்களில் சிலரை தொலைபேசி மூலம் உரையாடி இருந்தாலும் அப்போதான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இருவரை 40 வருடங்களின் பின்பு சந்தித்து இருந்தேன். வந்தவர்களில் ஆறு மாத குழந்தையில் இருந்து 78 வயது வரை உள்ளவர்களும் இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தது.1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
https://postimages.org/ அப்பனுக்கு வைத்தியம் பார்க்கவென்றே படித்திருக்கிறார் போல.1 point- சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை!
இதுதான் சிங்களத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் வெல்லக் காரணம்.........! 😴1 point- "துரோகம்...!"
0 points"துரோகம்...!" துரோகம் என்றால் என்ன ? கூடவே இருந்து குழி பறித்தல் அல்லது நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுதல். அதே நேரம் வாழ்க்கை, காதல் இரண்டும் ரோசாக்களின் படுக்கை அல்ல! இது அவளுக்கு எனோ புரியவில்லை. அவள் தன் காதலனை அந்த ஆற்றங்கரை ஓரத்தில் இன்னும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக காணுவாள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். அவள் ஒன்றாக கூடி வாழ்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. என்றுமே அவள் ஐயப்படும் மாதிரி அவன் நடந்ததும் இல்லை! என்றாலும் அவன், அவளுடன் கணவன் மனைவி உறவுடனே, காதல், காமம் இரண்டிலும் நெருக்கமாக அனுபவித்தே வாழ்ந்தான். அவளும் அவன் மேல் உள்ள நம்பிக்கையில், அவனின் விருப்பங்களுக்கு விட்டுக் கொடுத்தே தினம் தினம் வாழ்ந்தாள். ஒரு கட்டத்தில் பாடசாலையை கூட விட்டு விட்டு முழுநேர காதலியாகவே, திருமணம் செய்யா மனைவியாகவே, வாழத் தொடங்கினாள். ஒரு இரு சந்தர்ப்பங்களில், அவர்களின் பாதுகாப்பை மீறி கருவுற்றாலும், அவனின் வேண்டுதலின் படி அதை அவள் விருப்பம் இல்லாமலே கவலையுடன் கலைத்து விட்டாள். என்றாலும் அவனோ அவளின் தொடர் வேண்டுகோளான திருமணத்தை, அன்று இருந்த போர் சூழலில், தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான். தான் பெரிய ஆடம்பரமாக செய்யவேண்டும், மற்றும் தன் பெற்றோரிடம் நேரம் பார்த்து சொல்ல வேண்டும் இப்படி அப்படி அவளுக்கும், அவளின் பெற்றோருக்கும் காரணங்கள் சொல்லிக் கடத்திக் கொண்டும், அதே நேரம் அவர்களுக்கு நல்ல நம்பிக்கை வரக்கூடியதாக பழகிக் கொண்டும் இருந்தான். அது தான் அவளால் இன்னும் நம்பமுடியாமல் திகைத்து நின்றாள்! அவள் பதினோராம் வகுப்பில் படிக்கும் பொழுது தான் தன் காதலனை முதல் முதல் சந்தித்தாள். அவன் பட்டம் பெற்று தனது முதல் உத்தியோகமாக அந்த பாடசாலைக்கு ஆசிரியராக வந்திருந்தான். அவனின் முதல் பாடம் அவளுடன் தான் ஆரம்பித்தது. அவள் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தாள். அதனாலோ என்னவோ அவளே முதல் முதல் 'காலை வணக்கம் சார்' சொன்னது இன்னும் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. அவனின் கண்கள் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டது! அவள் அப்படி ஒரு அழகு! பெயர் கூட ரோசா தான்!! பாடசாலை விட்டவுடன் தன் வீட்டிற்கு அவள் பொதுவாக நடந்தே போவாள். அவளின் அப்பா, அம்மா ஒரு சாதாரண நாள் கூலி வேலையே பார்த்து வந்தனர். அன்றும் அப்படியே நடந்து போனாள். அவள் பாடசாலையில் இருந்து கொஞ்ச தூரம் போய், ஒரு ஒழுங்கையில் திரும்பி நடக்கும் பொழுது ஒரு மோட்டார் சைக்கிளின் சத்தம் பின்னால் கேட்பதை உணர்ந்து கொஞ்சம் தள்ளி ஒழுங்கையின் கரைக்கு போனாள். ஆனால் அது அவளை கடந்து போகாமல், மெதுவாகி அவளுக்கு அருகில் நின்றது. 'ஹாய் ரோசா, உன் வீடு இந்தப் பக்கமா?' கதையை ஆரம்பித்தான் அவன். 'நானும் இந்தப்பக்கம் தான் போகிறேன், வீட்டை காட்டினால், உன்னை இறக்கிவிட்டு போகிறேன்' அவன் மீண்டும் கதையை ஆரம்பித்தான். ஆசிரியர் என்ற மதிப்பும், அதேவேளை கொஞ்சம் பயமும் அவளிடம் இருந்தது. 'வேண்டாம் சார், நான் தினம் நடப்பது போலவே நடந்து போய் விடுவேன்' அவள் அவனிடம் கூறி விட்டு கொஞ்சம் கெதியாக நடக்கத் தொடங்கினாள். பொல்லாத காலத்துக்கு மழையும் திடீரென தூவ தொடங்கி விட்டது.'எவ்வளவு தூரம் உன் வீடு?' அவன் மீண்டும் கேட்டான்.' ம்ம் இரண்டு மைல் சார்' அவள் கொஞ்சம் நனைந்தபடி கூறினாள். அவன் தன்னிடம் இருந்த கூடுதல் ஹெல்மெட்டை அவளிடம் கொடுத்து 'இதை போடு ரோசா, மழை பெருத்தாலும் பெருக்கும், பின்னால் ஏறு. இல்லா விட்டால் முழுக்க நனைந்துதான் வீடுபோவாய்' கொஞ்சம் உருக்கமாக சொன்னான். அவளும் மழை கூடத் தொடங்குவதை கண்டு, மோட்டார் சைக்கிளில் ஏறினாள். இது ஒரு கிராமப்புற ஒழுங்கை வீதி என்பதால் பள்ளங்கள் அங்கொன்று இங்கொன்றாக இருந்தன. எனவே மோட்டார் சைக்கிளும் அதில் ஏறி இறங்கி குலுங்கித் தான் சென்றது. இன்னும் ஒரு பக்கம் மின்னலும் இடிமுழக்கமும். ரோசாவின் கை தன்னை அறியாமலே, தன் பாதுகாப்புக்கு அவனின் இடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டது. அவளின் மார்பும் அவனின் முதுகோடு முட்டி மோதிக் கொண்டு இருந்தன. இருவரின் மனமும் பல காதல் உணர்வுகளை தங்களுக்குள் தேடிக்கொண்டும் ஆனால் மௌனமாக இருந்தன. அவளின் வீடு வந்ததும், அவளை அவன் இறக்கி விட்டான். இருவரும் அதற்கிடையில் ஓரளவு நனைத்து விட்டார்கள். ஆகவே, ரோசா அவனை பார்த்து ' சார், நீங்க உள்ளே வந்து ஈரத்தை துடைத்துவிட்டு போங்க, நல்ல நனைந்து விட்டீர்கள்' என்று கூப்பிட்டாள். அவனும் அப்படியே உள்ளே போனான். அன்று ஆரம்பித்த இருவருக்கும் இடையிலான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கி, அது அவர்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் அளவுக்கு போய்விட்டது. அவளுக்கு அவனிடம் நல்ல நம்பிக்கை மேலோங்க, மற்றும், தாயும் தந்தையும் நாள் கூலிக்கு வேலை செய்வதால், அவர்கள் வீடு பொதுவாக பிந்திவருவதால், அவன் அவளை இறக்கிவிடுவதுடன், அவளுடன் அவள் வீட்டில் தனிய கொஞ்ச நேரம் பேசி பொழுது போக்கவும் தொடங்கிவிட்டான். அதுமட்டும் அல்ல, அவன் அவளுக்கு நிறைய நம்பிக்கை வரக்கூடியதாக பேசிப் பழகவும் தொடங்கினான். எனவே அவள் எந்த வித பயமோ அல்லது ஐயப்பாடோ இல்லாமல், அவன் நெருங்கி பழக அனுமதித்தாள். ஏன் அவளும் உண்மையில் அவனை இதயபூர்வமாக காதலிக்க தொடங்கினாள். அவளின் குடிசை ஒரு ஒதுக்குப் புறத்தில் இருந்ததால், அது அவளின் பெற்றோருக்கும் ஆரம்பத்தில் தெரியவும் இல்லை. ஆனால், ஒரு ஆண்டு போக அவள் ஒரு குழந்தைக்கு கருவுற்றாள். அவள் மிகவும் மகிழ்வாக அந்த செய்தியை அவனிடம் கூறியதுடன், இனி பெற்றோரிடமும் சொல்லவேண்டும் என்றும், அவன் ஊர் அறிய தாலி கட்ட வேண்டும் என்றும் கெஞ்சி கொஞ்சி ஆலோசனையும் வழங்கினாள். ஆனால் அவனோ அதைக் கலைக்க அவளை தனியார் டாக்டர் இடம் கூட்டிப்போக முடிவு எடுத்தான். என்றாலும் அவன் அவளின் பெற்றோரை சந்தித்து, தான் கட்டாயம் அவளைத்தான் திருமணம் செய்வேன் என் உறுதி அளித்ததுடன், அவளை பாடசாலையில் இருந்து உடனடியாக விலக அறிவுறுத்தினான். அவளும் பெற்றோரும் அவனின் வார்த்தையை முற்றாக நம்பினர். அவன் அப்படித்தான் நன்றாக, பண்பாக அவர்களுடனும் அவளுடனும் பழகினான். அது மட்டும் அல்ல, அவளின் பெற்றோர் பெரிய படிப்பு படித்தவர்களும் அல்ல, ஒரு சாதாரண ஏழைக் கூலி வேலை செய்யும் குடும்பமே. அது அவனுக்கு வசதியாகவும் இருந்தது! அவளுக்கும் பெற்றோருக்கும் விருப்பம் இல்லாவிட்டாலும், அவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவள் கருவை கலைத்தாள். அவன் இப்ப வெளிப்படையாகவே பெற்றோர் அறிய வந்து போவான். சிலவேளை அங்கேயே தங்குவான். அவர்களும் அவனை கணவனாக, மருமகனாகவே பழக தொடங்கினர், அவனும் மனைவியாக, மாமா மாமியாக பழகினான். அவன் இன்னும் தாலி கட்டவில்லை என்றாலும், தனிக்குடித்தனம் போகவில்லை என்றாலும், அவன் அவளை தன்னுடையவள் என்பது போலவே அன்பாக நடத்தினான். இருவரும் நெருக்கமாக கணவன் மனைவியாகவே தினம் அனுபவித்து வாழ்ந்ததுடன், அவள் அவன் மேல் உள்ள நேர்மையான அன்பு, பாசம், நம்பிக்கையால், தன் குடிசையில் பெரிய வசதி இல்லாவிட்டாலும், அவனுடன் சமாளித்து அங்கு வாழ்ந்தாள். அவனுடன் ஒரு தனி வீட்டில் வாழ, அவள் விரும்பினாலும், அதற்கு பெற்றோரின் முன் தாலி கட்டிய பின்பே செய்யலாம், இல்லாவிட்டால் பெற்றோரின் சம்மதம் கஷ்டம் என்று ஏதேதோ கூறி சமாளித்துவிடுவான். அப்படி என்றால் ஏன் கணவன் மனைவி போல் உறவு வைக்கிறாய், பெற்றோரின் அனுமதி இன்றி எனக் கேட்க அவளுக்கு துணிவு வரவில்லை. அது தான் அவளின் காதலின், நம்பிக்கையின் பலவீனமாக இருந்தது! அவள் என்றுமே அவன் தன்னை விட, இன்னும் ஒரு பெண்ணை காதலிப்பன் என்றோ அல்லது தனக்கு புறம்பான வேறு ஒரு உறவு வைத்திருப்பான் என்றோ கனவிலும் நம்பவில்லை. அவன் மிக தந்திரமாக, மற்ற பெண்கள் எல்லாம் தனக்கு சகோதரிகள் மாதிரி என்று சந்தர்ப்பங்கள் வரும் பொழுது கூறிவிடுவான். அது மட்டும் அல்ல, வேறு ஆண்களுடன் அல்லது மற்ற பெண்களின் கணவருடன் உறவு கொள்ளும் பெண்களை கண்டாலே தனக்கு அருவருப்பு என்று கதைகூட விடுவான். பாவம் அவள் எல்லாம் நம்பிவிடுவாள்! 'எனக்கு என் மனைவியே முக்கியம் , அவளின் வாழ்வே என் வாழ்வு, மற்றவர்கள் எனக்கு முக்கியம் அல்ல, நீயே என் மகாராணி!' அவன் அடிக்கடி கூறும் வசனம் இது! அவள் திகைத்தபடி அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே அந்த ஆற்றங் கரை ஓரத்தில் நின்றாள். அவனின் புதிய நண்பி மிக நேர்த்தியான உடையுடன், வசதியான குடும்பத்தில் வாழ்பவள் போல் தெரிந்தது. அவள் ரோசாவை ஒரு நையாண்டியாக பார்த்தாள். 'நீங்க இவளை சட்டப்படி கல்யாணம் செய்யவில்லை தானே ? உங்களின் அறிவையும் வசதியையும் பார்த்து, தன் பெற்றோருடன் சேர்ந்து உங்களை ஏமாற்றி இருப்பாள் ?' அவனைப் பார்த்து கேட்டாள். அவன் தன் புது நண்பியின் கூந்தலை வருடியபடி, 'ம்ம் ஆமாம், நானும் கொஞ்சம் ஏமாந்து விட்டேன். அவள் அந்த முதல் நாள் ஈரம் துடைக்க குடிசைக்குள் கூப்பிடும் பொழுது, அவளை நல்ல ஒரு மாணவியாக நினைத்தே, அவளின் வேண்டுகோளை ஆமோதித்து உள்ளே போனேன்!' என்று கூறி புது நண்பியிடம் 'சொரியடா' என்றான். அவன் ரோசாவை பார்த்தான். 'இவளின் [ரோசாவின்] உள்நோக்கம் அப்ப எனக்குப் புரியவில்லை. துவாயை தந்துவிட்டு போய் இருக்கலாம். அதை விட்டு என் உடலை தானே இழுத்து துடைத்ததுடன், தன் உடலை, அதே துவாயால் என்னை துடைக்கும் படி கெஞ்சியும் கேட்டாள். அந்த பெண்மை அழகு என்னை அறியாமலே உணர்வைத் தூண்டி அவளுடன் இணைத்துவிட்டது' அவன் முற்றிலும் எதிர்மாறான பொய் ஒன்றை கட்டவிழ்த்து விட்டான். அவன் இந்த நிமிடம் வரை ஏமாற்றி ஆடிய நாடகம், நடிப்பு அவளால் இன்னும் நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு மனிதனா? அவளை அறியாமலே கண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. 'வாங்க என் அம்மா, அப்பா என் பிறந்த நாள் கொண்டாட பார்த்துக் கொண்டு இருக்கினம், இம் முறை உங்களையும் எல்லோருக்கும் அறிமுகப் படுத்தி பெரிதாக செய்யப் போகிறார்கள், உங்க அம்மா, அப்பாவையும் அழைத்துள்ளார்கள், இவளுக்கு காசு கொடுத்தால் பேசாமல் போகிறாள், இதுகள் எல்லாம் ஏன் தான் பிறந்ததுகளோ? ' என அவன் கையை உரிமையுடன் பிடித்து தனக்கு நெருக்கமாக அவனை இழுத்தாள்! 'இது பழைய பிற்போக்கு காலம் அல்ல, நம்பினேன், காதலித்தேன் என ஒருவனை அறியாமல் கல்யாணத்தின் முன் தன்னைக் கொடுக்க, இளம் வயதில் பெண் நண்பி, ஆண் நண்பன் இன்று சகயம். இதில் துரோகம் என்று ஒன்றும் இல்லை. அவரவர் தங்கள் எல்லைகளை, பாதுகாப்பை உணரவேண்டும், அதை விட்டுவிட்டு ... ' ரோசாவை பார்த்து அவள் கூறினாள். 'எதோ உன்னைப் பார்க்க பாவமாய் தோன்றுகிறது, இந்த கொஞ்ச காசு, இனியாவது ஒழுங்காக வாழு ரோசா! ' என்று அவள் கூறிக்கொண்டு, காசோலை ஏடு ஒன்று எடுத்து எழுத தொடங்கினாள். அவனோ தன் புது நண்பியை அணைத்தபடி மறு பக்கம் பார்த்தபடி நின்றான். காசோலை எழுதி முடிந்ததும், அவள் அதை கொடுப்பதற்கு நிமிர்ந்தாள், ஆனால் ரோசா அங்கு இல்லை, அவள் அவர்களை விட்டு விலகி பல தூரம் போய்விட்டாள்! உடலில் மட்டும் அல்ல, மனதளவிலும்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]0 points - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.