Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46791
    Posts
  2. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2138
    Posts
  3. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    6
    Points
    35602
    Posts
  4. சுண்டல்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    24
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/01/24 in Posts

  1. சம்மந்தர் ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! ஆயுத போராட்ட காலத்தில் இலங்கையில் அரசியலில் தமிழ் அரசியல்வாதிகள் செல்லாக்காசுகளே. இந்த காலத்தில் ஆயுதங்களே பேசின. நடைபெற்ற தமிழ் அரசியல் ஆயுத முனையிலேயே நடைபெற்றது. இந்தவகையில் பார்த்தால் சம்மந்தன் ஐயா தன்னால் முடியுமான அரசியலை தாயகத்தில் செய்துள்ளார்.
  2. சம்பந்தனின் ஆரம்ப அரசியல் தொடக்கம் இன்றைய அரசியல் போக்கு பற்றியும் எனது சந்ததிகளுக்கு மட்டுமே அனைத்தும் தெளிவாக தெரியும். இங்கே சாட்சிகள் இல்லாத இராவணன் வரலாறோ அல்லது சோழர் வரலாறோ பேசப்படவில்லை. கண் முன்னே நடந்த சம்பந்தனின் சோரம் போன அரசியல் பற்றியே பேசுகின்றோம். என்னைப்பொறுத்த வரைக்கும் சம்பந்தன் ஈழத்தமிழர் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து தன் அரசியல் வாழக்கையை தக்கவைத்து கொண்டாரே தவிர வேறேதும் இல்லை. பேச்சு வன்மை குறைந்தும் சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.
  3. தாயக தமிழ் அரசியல் வெறுமை : வரட்சி : இடைவெளி : இயலாமை : நம்பிக்கையீனம் இப்படி பல பதங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இவற்றுக்கு சம்பந்தர் காரணமாக முடியாது. பொறுப்பு கூறவேண்டியவர்கள் ஆயுதங்களுடன் மெளனித்துவிட்டார்கள். மூழ்கிய கப்பலுக்கு சம்பந்தரை கப்டனாக போட்டுவிட்டு கப்பலை சரியாக ஓட்டவில்லை என குறை கூறலாமா? தமிழர் தாயக சரித்திரத்தில் சம்பந்தர் ஐயா ஒரு வழிப்போக்கன். சுமந்திரன், சிறீதரன், மாவை இவர்களும் இந்த பட்டியலிலேயே அடங்குவார்கள். மக்களுக்கு அரசியலில் நம்பிக்கை உள்ளதா என்பதே சந்தேகம். இப்போதைக்கு தமிழ் அரசியல்வாதிகள் செய்யக்கூடியது மக்களின் அன்றாட, நாளாந்த பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு தம்மாலான உழைப்பை வழங்குவதே. பெரிய விடயங்களான தேசிய பிரச்சனைகள், தீர்வு, சமத்துவம், சுய உரிமை இவற்றுக்கான நடைமுறை சாத்தியங்கள், சூழ்நிலை இலங்கையில் உள்ளதாக தெரியவில்லை. இதை இன்னும் ஒரு பத்து இருபது ஆண்டுகளில் தாயக தமிழ் அரசியல்வாதிகள் தீர்த்து வைப்பார்கள் என்றும் நம்பிக்கை இல்லை. அதுவரை உள்ள கோமணம் கழன்று விழாமல் பிடித்துக்கொள்ள வேண்டியதுதான். உலக அரசியல், உலக ஒழுங்கு, போக்கில் வரக்கூடிய எதிர்கால மாற்றங்கள் இலங்கை தமிழர் விடயத்தில் ஏதாவது நல்லதை செய்தால்தான் உண்டு.
  4. 2009 இல் சிநை்தது கிடந்த தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து அதன் தலைமைப் பொறுப்பை அப்போதைய நிலையில் அரசியல் அனுபவமும் வயதில் மூத்தவருமான சம்பந்தனிடம் கையளித்துவிட்டுத்தான் புலிகள் இயக்கம் தனது செயற்பாட்டை நிறுத்தியது. ஆனால். 2009 இற்குக்பின் சர்வதேசம் முன்னெடுத்த தமிழர்கள் தொடர்பான போர்க்குற்ற விசாரணை.தமிழ்களுக்கான தீர்வு தொடர்பாக எந்த செயற்பாட்டையும் செய்யாமல் கொழும்பில் சகல வசதிகளுடன் கூடிய வீட்டையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்திற்கும் போகாமல் திருகோணமலைக்குரிய பிரதிநிதியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்ல. தமிழர்களின் தேசியத்தலைம சம்பந்தனிடம் கையளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பல பிரிவுகளாக உடைத்து தனது சொந்தக் கட்சியான தமிழரகசுக்கட்சியையும் உடைத்து குழப்ப நிலையில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மிக மோசமான அரசியல்தலைவராக சம்பந்தன் இதுவரை காலமும் இந்தப் பூமிக்குப் பாரமாக இருந்தததைத்தவிர வேறு எதனையும் செய்ய வில்லை
  5. இதுவரை தமிழருக்கு தலைமை வகித்த அனைவருமே தமிழர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து பொறுப்பற்ற வகையில் நடந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் அழிவுக்கும் தமிழரின் உரிமை அரசியல் பல தலைமுறைக்கு பின்தள்ளப்பட்டதற்கும் காரணமானவர்களே. இதில் சம்பந்தரை மட்டும் திட்டும் அரசியல் என்பது, தாம் விசுவாசம் வைத்திருக்கும் தலைவர்களின் மாபெரும் தவறுகளை மறைத்து சம்பந்தர் மீது மட்டும் முழுப் பழியையும் போடும் இழிவான அரசியலே.
  6. சம்பந்தரின் அரசியலை கேள்வி கேட்கும, விமர்சிக்கும் உரிமையை மறுக்க முடியாது. ஆனால் யாரையும் துரோகி என்று முத்திரை குத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. அதுதான் எனது ஆணித்தரமான கருத்து.
  7. எல்லா பூகழும் என் அவனுக்கே.... 😂 அப்பன்! நீங்கள் இல்லையென்றால் இந்த திரி இவ்வளவிற்கு களைகட்டியிருக்குமா என்றால் அது இல்லை. உங்கள் உடனடி தகவல்களும் எதிர்வு கூறல்களும் பிரமிக்க வைத்தவை. சும்மா விளையாட்டை பார்த்து விசிலடித்து விட்டு போகும் உலகில் அதற்குரிய கருத்துக்களை ஒரு இணையதளத்தில் வந்து தமிழ் இல்லாத உலகில் இருந்து கொண்டு தமிழில் எழுதும் உங்களுக்கு பலகோடி பராட்டுக்கள். வாயாரப் பாடி மனமார நினைந்து வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்! தூயா முருகா மாயோன் மருகா உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!
  8. 1977 இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் . அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு மனுஷனின் அழகோ அழகு. அவரைப் பார்க்கவென்றே கூட்டங்களில் பெண்கள் குவிந்திருப்பார்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தமிழர்களின் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை செல்வாவிற்குப் பின்னர் பிரிந்திருந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஒரு பெரும் தலைவராக உருவெடுத்தவர். ஈழத்து தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் உலக அரசியலில் ஒரு மாற்றத்தை விடுதலைப் புலிகளின் காலத்தில் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும்----- அதை உதறித் தள்ளிவிட்டு ரணிலுடன் சேர்ந்து சிங்கக் கொடி அசைத்து தன் நலமே முன்னே என்று சுயநல அரசியலில் மூழ்கியவர் . இன்று ஈழத்து தமிழ் மக்களிடையே தேசத்து துரோகி என்ற பட்டத்துடன் விடை பெற்றுக் கொண்டார்
  9. எல்லாம் இந்த டிக் டொக் அப்ஸ் மூலம் வியபாரம் பெறுமதி அற்ற ஓர் பொருளை டிக் டொக் விளம்பர விம்பம் கொண்டு ஊதி பெருப்பித்து அதிக விலைக்கு விற்கும் தந்திரம் உடலை குறைப்பது , உடம்பை வெள்ளை ஆக்குவது , மொகுமுகு குளிர்பானம் பிரைம் எனும் குளிர் பானம் இங்கு லண்டனிலும் முயல் எண்ணை என்கிறார்கள் அதை பூசினால் தலைமுடி மொட்டை மண்டையிலும் வளருமாம் ஒரு சிறிய துண்டு சவர்காரம் 25பவுனாம் இப்படி வகை தொகையாக பலவகையான கிரீம்கள் மனிதரின் உடல் கவலைகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப கள்ள மார்கெட் மருந்துகள் கிரீம்கள் டிக் டொக் வியாபாரம் கொடிகட்டி பறக்குது கவுன்சில்களும் கடைகள் என்றால் சோதனைகளில் அள்ளிக்கொண்டு போய் எரித்து விடுவார்கள் இந்த ஆன்லைன் வியாபாரம் எப்படி பிடிப்பது என்று தலையை பிராண்டி கொண்டு இருக்கிறார்கள் .எல்லாத்துக்கும் மூல காரணம் சைனா தான் . ஒரு சிறு உதாரணம் எச்சரிக்கை இந்த பிள்ளை சொல்வது எல்லாம் எந்த ஒரு உறுதி பாடும் இல்லை சில தமிழ் பெண்களே முகத்தை வெள்ளையாக கண்ட கிரீமும் பூசி அலேர்ஜிஆகி முகம் பார்க்கவே முடியாத அளவுக்கு கறுப்பு பிடித்து மன உளைச்சலில் உள்ளார்கள் .
  10. ஜோ பைடனை மாற்ற வேண்டி வந்தாலும், கமலா ஹாரிஸ் தவிர வேறு எவரையும் இப்பொழுது பிரேரிக்க முடியாத ஒரு சிக்கல் இருக்கின்றது. பல மாநிலங்களில் ஏற்கனவே வேட்பாளர்களின் பட்டியல் நிரப்பப்பட்டு விட்டது. ஜனநாயக் கட்சியில் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸின் பெயர் மட்டுமே உள்ளது. இன்னும் நாலு மாதங்களே இருக்கின்றன, வேறு மாற்றங்களுக்கு போதிய நேரம் இல்லை. ஆனால், பைடன் வென்று பதவிக்கு வந்த பின் வேறு மாற்றங்கள் செய்யக் கூடியதாக இருக்கும்.
  11. சம்பந்தர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அவருடைய நீண்ட சேவைக்கு நன்றிகளும்! இங்கே எழுதும் சில உறவுகள் போல என்னால் சம்பந்தரைத் திட்ட இயலவில்லை. உயிருக்கு அச்சுறுத்தல் இரு தரப்பிலிருந்தும் வந்த போதும், இந்தியாவைத் தாண்டி எங்கும் போகாமல் நாட்டிலேயே இருந்தவர், போட்டியாளர்களை துப்பாக்கியால் போட்டுத் தள்ளி விட்டு தலைமையை/பதவியைப் பிடித்துக் கொண்டிருக்காதவர், தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காக ஆகாயக் கோட்டை கட்டி மக்கள் காதில் பூச்சுத்தாமல் இயலக் கூடிய தீர்வை மட்டும் பேசியவர். இந்தக் காரணங்களாலேயே உலக அரசுகளின் பிரதிநிதிகளால் இறுதி வரை மரியாதையோடு நடத்தப் பட்டவர். சம்பந்தரை, அவரது மரண வீட்டில் வைத்து "வேஸ்ட்டு" என்று விமர்சிக்கும் எவரும் நிச்சயம் அவரை விட முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார்கள், அதன் பலன்களை மக்களுக்குக் கொடுத்து விட்டு தமக்கு எதுவும் வேண்டாமென்று இப்போது அமைதியாக ஒதுங்கி வாழ்கிறார்கள் என்று தான் ஊகிக்கிறேன்😎.
  12. ஆழ்ந்த அனுதாபங்கள்
  13. இறுதி யுத்தம் நடந்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராய் இருந்தும் எங்கே கொழும்பில் இருந்தால் புலிகள் தொடர்பெடுத்து அரசியல் ரீதியான உதவிகளை கேட்டுவிடுவார்களோ என்று பயந்து தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் யாரும் தொடர்பு கொள்ளாதபடி இந்தியா பக்கம் போய் ஓடி ஒழித்துக்கொண்ட உங்களின் ஆத்மா சாந்தியடைய முள்ளிவாய்க்கால் மண்ணில் கடைசி வரை ஏக்கத்தோடு நின்று மடிந்து போன அத்தனை ஆத்மாக்களும் உங்களை மன்னிக்கட்டும்
  14. சுமந்திரன் விக்னேஸ்வரன் என்று கொழும்பு தமிழர்களை தமிழ் தேசிய அரசியலுக்கு கொண்டுவந்து தமிழ் தேசிய அரசியலை சிங்கள அரசின் ரகசிய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து தமிழ் தேசிய அரசியலை மழுங்கடித்த பெருமையோடு போய் வாருங்கள் ஐயா
  15. ஒரு மனிதனின் இறப்பை நாம் விமர்சிப்பது நல்லதல்ல. ஆனால் சம்பந்தர் தான் தெரிவு செய்த இடத்தில் நடக்கும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதட்காகவ்து முயற்சி செய்யாத ஒரு ***** ****** . லட்சம் மக்கள் இறந்த பிறகும் திருந்தாத ராட்சதன் . பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் புலிகள் யாருக்கும் உதவாத கல்நெஞ்சக்காரன் . எப்பவோ இறந்திருந்தால் தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது நன்மையாக இருந்திருக்கும் . சுமாவை பின் கதவால் கொண்டு வந்தது மிகப்பெரிய தப்பு. செல்வா காலத்திலேயே தெரியும் சிங்களம் தமிழுக்கு ஒன்றும் தரமாட்டார்கள் என்று. அதனால் தான் ஆயுத போராட்டம் பரிணாமித்தது . அதனால் தான் சிங்களம் பயந்தது . இது தெரிந்தும் போராட்டத்தில் பங்கு பற்றியவர்களை அப்புறப்படுத்தி தமிழரசு கட்சியால் எப்படி அந்த சிங்களத்தை வெல்ல முடியும் இதன் அர்த்தம் நீங்கள் ஒரு சிங்கள அடிவருடி என்பதுதான். இப்படியான தொடர் துரோகங்களை செய்த இந்த மனிசனின் இறப்பு தமிழருக்கு வேண்டியதே. காலம் கடந்த இறப்பு . சுமாவை கொண்டு வந்து மிஞ்சின தமிழ் கூட்டமைப்பை உடைத்த திருந்தாத ஜென்மம். ஒரு உயிரின் இறப்பை நான் நிந்திக்கவில்லை. அவர் எமக்கு செய்த துரோகங்களின் வலிதான் மேலே எழுதியது.
  16. உலகில் மானிடராய் பிறந்த எல்லோரும் இறப்பது நியதி . தலைமைத்துவ பதவியில் இருந்த ஒருவர் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற ஆவன செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது .அரசியல் அனுபவமும் கல்வி அறிவும் நிறையவே கொண்டவர், என்ன நோக்கத்துக்காக பாராளுமன்றம் அனுப்பிவைக்க பட்டாரோ காலம் கடத்த பட்டதே தவிர அது நிறைவேறாத போது இறந்த பின்பும் ஆதங்கத்தை கள உறவுகள் வார்த்தைகளால் வெளிப் படுத்து கிறார்கள் அவ்வளவே . "இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."
  17. சம்பந்தனின் அபிமானியோ, ஆதரவாளரோ அல்ல நான். ஆனா;, சம்பந்தனின் அனுபவத்தை நிலமைக்கு ஏற்றவாறே பாவித்து உள்ளார். ஆத்மா சாந்தியடையட்டும். வேறு யாராவது என்ன செய்து இருக்க முடியும், கிந்திய பேய் சிங்களத்துக்கு முட்டு கொடுத்து தடுக்கும் பொது ( இப்பொது பார்க்க போனால் கிந்தியாவுக்கு 13 இல் சொல்லளவில் இருப்பதை கொடுப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது) ? ஆயினும், சம்பந்தன் கிந்தியவை பச்சடி போட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பை தக்க வைத்தார், தேவையான காலத்தில். நாராணனனும், மேனனும் 2009 இல் சொன்னது, உங்களுக்கு தேவையானதை நாங்கள் இனி சொல்கிறோம், சம்பந்தனின் பதில் சொல்லமுடியும், ஆனால் செய்தால் அவர்கள் கடவுள் என்ற கருத்து பட என்பதே நான் கேள்விப்பட்டது . சம்பந்தன் அப்படி சொன்னனரா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனல், பின்பு ந்டைபெற்றவை (மோடி 13 ஐ அமுல்படுத்துமாறு அதிகார தோரணையில் வற்புறுத்தியது), சம்பந்தன் ஏதோ ஒன்றை அவர்களை அதிகார மானத்தை சீண்டும் படி சொல்லி இருக்கிறார் என்பதே ஊகிக்க கூடியது. அனால் பெயர் அளவிலாவது, மோடியை 13 ஐ அமுல்படுத்துமாறு சிங்களத்திடம் பகிரங்க வற்புறுத்தலை முன்வைக்கும் நிலையை உருவாக்கியவர். (சும்மா மோடி வாயை திறந்து இருப்பாரா) இதில் சம்பந்தன் மட்டும் அல்ல, பல்வேறு பட்டவர்களின் பங்களிப்பும் இருக்கிறது. (இங்கே தலைவர்களின் தனிப்பட்ட திறமை, பலம் என்பது, இந்த நிலையில், தக்கவைத்து கொண்டு போவது தான், சிங்களம், கிந்தியம் என்ற அரசுக்களை எதிர்க்கும் போது.)
  18. கீழ நிண்ட நான் எப்பிடி கிடு கிடுவெண்டு உங்களுக்கு கிட்ட வந்தனான் பாத்தியள் தானே. ஏனெண்டால் கணிப்பு அந்தமாதிரி.....😎 அடுத்த போட்டியில அடி தூள் இடி மின்னல்.....அப்ப சந்திப்பம்.
  19. முள்ளிவாய்க்காலில் இறந்த தன் சொந்த மக்களின் துயரைக் கூட உள்வாங்க வக்கில்லாமல் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு இனக்கொலைஞன் சரத் பொன்சேக்காவுக்கு வாக்குக்கேட்டது முதல் சம்பந்தனை சராசரி மனிதனாகக் கூட காண முடியவில்லை. இன்று வரை ஒரு தடவை தானும்.. இந்த ஆள்.. முள்ளிவாய்க்காலுக்கு சென்றதும் இல்லை.. இறந்த சொந்தங்களுக்கு துக்கம் அனுஷ்டித்ததும் இல்லை. எம் மக்களின் துயருக்கு எதுவுமே இல்லை என்றாக்கிய மிக முட்டாள் அரசியல்வாதியும் சுயநலவாதியுமான சம்பந்தனின் மறைவு.. இரங்கலுக்கு அப்பாற்பட்ட உணர்வே எழுகிறது. அப்படியப்பட்ட ஆளுக்கு அழவோ.. இரங்கவோ முடியவில்லை. இயற்கை காலம் கடந்து தீர்ப்பை எழுதி இருக்கிறது. அவ்வளவும் தான்.
  20. தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந்த தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் மறைவினால் கவலையில் இருக்கும் அவரை நம்பியிருந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  21. மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு பழை மற்றும் புதிய உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி 😁 பழைய பெயரை தோண்டியெடுக்க முடியவில்லை 😞
  22. "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி என்காலும் தொடருது!" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே ஒளிரும் அவள் பல் அழகில் ஒடிந்து நானும் காதல் கொள்ள ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!" "வித்தை பல உடலால் காட்டி கத்தை கத்தையாக காதல் எறிந்து முத்தம் பல இதழால் தந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "ஒழிந்து ஓடி ஆடிப் பாடி ஒற்றை காலில் சலங்கை கட்டி ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "மெத்தை மேல் அவள் உறங்க சத்தம் இன்றி முத்தம் இட கொத்து கொத்தாய் மலர் கொடுக்க ஒத்தையடிப் பாதையில் தவம் கிடக்கிறேன்!" "ஒப்பனை செய்து பிரமனும் மயங்க ஒல்லிய இடைக்கு பட்டை சுற்றி ஒற்றைக் கொம்பன் அருள் வேண்டி ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகிறாள்!" "ஒத்தையடிப் பாதையில் ஒதுங்கிய என்னை நத்தை வேகத்தில் மெல்ல வந்து சித்தம் கலங்க கண்ஜாடை காட்டி சத்தம் வராமல் முட்டி போகிறாள்!" "ஒத்தையடிப் பாதையில் ஓரமாய் நிற்கையில் ஒளிரும் தளிர்மேனி அருகில் வந்து ஒதுங்கிய என்னை ஆரத் தழுவ ஒன்றாய் இருவரும் மகிழ்ந்து நின்றோம்! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  23. போத்துக்கல், சுலோவேலியா போட்டி சுவாரசியமாக நடந்து முடிந்தது. மேலதிக நேரம் கொடுக்கப்பட்டு இறுதியில் பெனால்டி உதை மூலம் முடிவு தீர்மானிக்கப்பட வேண்டி இருந்தது. போத்துக்கல் கோல் காப்பாளர் 3 பெனால்டி உதைகளையும் தடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு செல்கிறார்கள். வழமையான நேரத்தில் சுலோவேனியாவிற்கு எதிராக ஒரு பெனால்டி கிறிஸ்ரியானோ றொனால்டோவால் அடிக்கப்பட சுலோவேனியாவின் கோல் தடுப்பாளரால் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. போத்துக்கல் பிரான்சுடன் ஜூலை 6 ல் விளையாடவுள்ளது.
  24. அவரவர் தமது மன அழுத்தங்களை கொட்டுகின்றார்கள். நாம் இப்போது புதிய உலகில் வாழ்கின்றோம். தவிர இங்கு நாம் எழுதுபவற்றை தமிழ்மொழி அல்லாதவர்களும் பொழிபெயர்ப்பு செயலிகள் மூலம் வாசித்து விளங்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. இங்கும் பல்வேறுவிதமான கருத்துக்கள் உள்ளன. கருத்துக்கள் எழுதியவர்களில் எத்தனை பேருக்கு சம்மந்தரை நேரில் சந்தித்த/உரையாடிய/பணியாற்றிய அனுபவம் உள்ளதோ தெரியாது. அது எனக்கு இல்லை. அதற்காக தெரியாத விடயங்களை நேரில் பார்த்ததுபோல எழுத முடியாது. லங்கா வெப் எனும் ஒரு தளத்தில் சம்பந்தர் ஐயா பற்றி விலாவாரியாக எழுதி ஒரு கட்டுரை போட்டுள்ளார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னம் அது பதிப்பிக்கபட்டது என தெரியவில்லை. அதில் பிரிவினைவாதியாக, தமிழ் தனிநாட்டு வாதத்திற்கு கடும் ஆதரவு கொடுத்தவராகவே, தமிழ் இனவாதியாகவே சம்மந்தரை இனம் காட்டி உள்ளார்கள். இதன்படி பார்த்தால் சம்மந்தருக்கு மாமனிதர் பட்டம் கொடுக்கப்படுமோ?
  25. முத‌ல் ஜ‌பிஎல் போட்டி அதுக்க‌டுத்து உல‌க‌ கோப்பை போட்டி மூன்று மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரியாது . இப்ப‌ வீடு வெறிச்சோடி போய் இருக்கு ☹️........................ப‌ல‌ போட்டிக‌ள் ஜ‌ரோப்பிய‌ இரவு நேரத்தில் ந‌ட‌ந்த‌தால் இத‌ற்க்குள் உட‌னுக்கு உட‌ன் எழுத‌ முடிய‌ வில்லை....................ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை அதிக‌ம் எழுதின‌து என்றால் நீங்க‌ள் . ஈழ‌ப்பிரின் அண்ணா . ம‌ற்றும் நான் . உங்க‌ட‌ ந‌கைச்சுவை எழுத்துக்கு நான் ர‌சிக‌ன் 🥰👏🙏. அப்ப‌ அப்ப‌ சூழ் நிலைக்கு ஏற்ப்ப போல் எழுதுவிங்க‌ள் . அதாவ‌து நீங்க‌ள் தெரிவு செய்த‌ அணி தோத்தா அதுக்கு ஏதும் ந‌கைச்சுவை க‌ல‌ந்து அடிச்சு விடுவிங்க‌ள்😁.................. விளையாட்டு திரிக‌ளில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை சீண்டுவ‌து என்றால் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்......................... 1996ம் ஆண்டு தான் முத‌ல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கினேன் அப்ப‌ இருந்து இப்ப‌ வ‌ரை கிரிக்கேட் விளையாட்டுக்கு தான் அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்போன்..................................... அமெரிக்கா விளையாடுக‌ள் என்றால் . NBA . NHL . NFL . இந்த‌ மூன்று விளையாட்டையும் விரும்பி பார்ப்பேன் ஜ‌ரோப்பா விளையாட்டுக‌ளில் என‌க்கு அதிக‌ம் பிடிச்ச‌து . கைப‌ந்து.......................... நான் ஏற்க‌ன‌வே சொன்ன‌ மாதிரி Boston Celtics . Dallas Mavericks அ சிம்பிலா வென்று விட்டின‌ம்.......................boston celtics ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர் Jayson Tatum ஒலிம்பிக் போட்டிக்கும் தெரிவாகி இருக்கிறார்.......................மிக‌வும் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை இந்த‌ ஒலிம்பிக்குக்கு தெரிவு செய்து இருக்கின‌ம்..............................கூடைப‌ந்து அனைத்து ப‌த‌க்க‌ங்க‌ளை அமெரிக்கா ஆண்க‌ள் அணியும் பெண்க‌ள் அணியும் வென்று கொண்டு போக‌ போகின‌ம்😁......................................
  26. ஒரு தொகுதி பணக்கார தமிழர்கூட்டம் நாட்டை விட்டு வெளியேற இன்னொரு புறம் போராடி இன்றும் ஏழைகளாக வாழவழி இன்றி வாடும் முன்னால் போராளிகள் ஒரு புறம்... தமிழர் பகுதிகளில் கல்வி வேலை வாய்ப்புகள் இன்றி வாடும் ஏழைகள் ஒரு புறம்.. ஏழைகளுக்கு உதவி செய்ய இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒருபோதும் வருவதும் இல்லை அந்த மக்களின் துயரங்களை காது கொடுத்து கேட்பதும் இல்லை.. ஓட்டு கேட்டு வந்ததுக்கு அப்புறம் இவர்களை அந்த மக்கள் பார்த்ததும் இல்லை.. எங்காவது ஆமிக்கு எதிரா எதாவது போராட்டம் என்டால் உசுப்பேத்தல் கதை சொல்லிக்கொன்டு விறைப்பாய் போட்டோக்கு போஸ் குடுத்துகொன்டு நிப்பாங்கள்.. சரி இனப்பிரச்சினைக்காவது ஏதாவது தீர்வு வாங்கி கொடுத்தாங்களா என்றால் இன்று வரை ஒரு துரும்பைகூட செய்யவில்லை... தமிழர்களுக்கு இருப்பது இனப்பிரச்சினை "மட்டுமே" என்பதுபோல் அதைப்பற்றி மட்டுமே பேசி தமிழ்மக்களை உசுப்பேத்தி சுயலாப அரசியல் செய்யும் "அரசியல் மாஃபியா" குழு ஒன்றின் தலைவர் இறந்துபோயிருக்கிறார்... அவ்வளவுதான்... அதுக்கு பந்தி பந்தியா ரைட்டப்பெல்லாம் எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள் மக்களே.. இனிமேலாவது இனப்பிரச்சினை தாண்டி அன்றாட பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகளை பேசுபொருளாக்குங்கள்...
  27. சீ அப்படியெல்லாம் சொல்லமுடியுமா? ஜயா பெரிய ஜனநாயகவாதி நடுநிலையாளர் மற்றும் மனித உரிமைவாதி முக்கியமாக தமிழர்களின் தலைவர். இதையே அதே இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள அரசை நோக்கி அவர் ஏன் சொல்லவில்லை. ??? ஏனெனில் இங்கே தான் அவர் தன் சுய தேவைக்ககாக விலைபோனார். புலிகள் பற்றி அவர் சொன்னதில் எனக்கு வருத்தம் இல்லை. அதன் பின்னர் அவர் முக்கிய பதவியை தங்க வைத்தபடி மௌனமாகியது மறக்க மன்னிக்க முடியாத குற்றமாகும்.
  28. அப்ப இந்தியன் பற்றி நான் இலங்கையன் கதைக்ககூடாது எண்டு மூடிட்டு இருக்கவேணும் நீங்கள்..
  29. இந்த உரையில் சம்பந்தர் சொல்லியிருப்பவை நிகழ்ந்த சம்பவங்கள் தானே? இவையெல்லாம் நிகழ்ந்தை மறந்து, மன்னித்து விட்டார்களாமா? நடந்தவற்றை ஒலி வாங்கியின் முன்னால் சம்பந்தர் பேசியது தான் மன்னிக்க இயலாமல் இருக்கிறதாமா? யார் இந்த தமிழர் போராட்ட வரலாறு தெரியாது அரைவேக்காடு கேசுகள்😂? ஒரு மைக்கையும், 30 டொலர் கமெராவையும் தூக்கித் திரிபவரெல்லாம் ஊடகவியலாளர் என்று ஏற்றுக் கொண்டால் இப்படியான கீச்சுக்கள் தான் விளைவாகும்!
  30. இறுவட்டு அட்டைகள் விடுதலை போர் முரசு முதலாவது அட்டை: https://telibrary.com/albums/viduthalai-poor-murasu/ இரண்டாவது அட்டை: https://eelapparavaikal.com/ms_song/விடுதலை-போர்-முரசு/
  31. இறுவட்டு அட்டைகள் விடியலைத் தேடும் பறவைகள் இது முதலில் வெளியான அட்டை: இது இரண்டாவதாக வெளியான அட்டை:
  32. இறுவட்டு அட்டைகள் விடியலின் பாடல்கள் https://trfswiss.com/songs.php?album=158 ------------------------------------------ இந்த இறுவெட்டின் மேல் 2009இற்குப் பிறகு நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் வணிகம் செய்யும் இவ் வலைத்தளம் தன்னிடம் கிடைக்கப்பெற்ற இவ்விறுவட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் நிறுவனத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது. இருப்பினும் அவ்வொலியை நீக்க இயலும். இந்து போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது.
  33. யாழ்வரும்போது ஊர்புதினம் மட்டுமே அதிகமாய் பார்க்கும் வழக்கம் கொண்டவன், ஏனோ சம்பந்தர் போன செய்தியை கவனிக்கவேயில்லை, தற்செயலாக ஒரு இணையதளம் பார்த்தபோது அன்னாரின் இறுதி கிரியை ஏற்பாடு என்றிருந்தது , எப்போடா போனார் என்றிருந்தது, வேலை இடத்திலும் எவரும் இதுபற்றி பேசவில்லை சும்மா சொல்லகூடாது அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலில் ரொம்ப பிஸியாக இருந்துவிட்டு போயிருக்கிறார் மனிசன். சம்பந்தர் எதுவும் பெற்றுதரவில்லை என்ற மனதாங்கலில் பலர் திட்டினாலும் சிங்களவன் கொடுத்தால்தானே இவர் வாங்க என்ற பரிதாபமும் உண்டு. ஆனாலும் அவன் தரமாட்டான் என்று தெரிந்தும் வாங்கி தருவோம் என்று சொல்லி ஆறு தசாப்தங்களுக்குமேல் ரீல் விட்டுபோட்டு போனதுக்கு திட்டலாம் தவறில்லை. சம்பந்தர் மட்டுமல்ல இன்று ஜனநாயக வழியில் போராடி சிங்களத்திடம் தீர்வு பெற்று தருவோம் என்று பீலாவிடும் அப்பர் , சுந்தரர்,மாணிக்க வாசகர்கள் எல்லாம் காலம் முடியும்வரை சிங்கள பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்படித்தான் கிளம்பி போவார்கள் என்பதில் எந்த குழப்பமும் எப்போதுமே இல்லை.
  34. நான் இலங்கை பற்றி கதைக்கிறேன். இந்தியா பற்றி அல்ல சீமான் இந்தியன் என்பது அனைவரும் அறிந்தது
  35. பையன் தான் இந்த மீம்ஸ் செய்திருப்பாரோ?
  36. இந்த சம்பந்தன் சும் வாலுகள் தான் பெரும் தொல்லை ஒழுங்கா போன திரி அனுதாபம் தெரிவிக்கவில்லை என்ற கோதாவில் இறங்கியதால் வந்த வினை இந்த திரி இனி கொஞ்ச பக்கம் ஓடித்தான் அணையும் சில நேரம் இழுத்து பூட்டப்படும் சம்பந்தர் சுமத்திரன் கூட்டத்தால் தமிழர் அரசியல் பல ஆண்டுகள் பின்னோக்கி போயுள்ளது அதை ஒத்து கொண்டு நடக்க வேண்டிய விடயங்களில் கவனம் செலுத்துவது நல்லது ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால் வேலையிடத்து பிரசர் வீட்டு பிரசர் ஒப் லைசன்சில் பகல் பொழுது கை காசுக்கு வேலை பார்த்து முதலாளியின் பிரஸரை இரவு மூன்று மணி மட்டும் யாழில் கொட்ட கொட்ட முழித்து இருந்து இறக்குவது வாடிக்கையாகி போயிட்டுது . பிழையை பிழை என்று ஒத்து கொண்டு நடக்க வேண்டிய அலுவலை பார்க்க செல்வது நல்லது ஆனால் இங்கு நடப்பது என்ன? பிழை 1௦௦வீதம் என்று தெரிந்தும் அதற்க்கு வக்காலத்து வாங்குவது? என்ன ரகம் ?
  37. நான் கூறியதன் உண்மையான அர்த்தம் புரிந்த தாங்களுக்கு நான் விளக்கம் சொல்லவா வேண்டும்?
  38. சம்பந்தன். இரா. சம்பந்தன். இவர் அரசியல் காலங்களோடு பயணித்தவன் நான். தமிழீழ தலைநகர தலைவன் என்ற பட்டம்,மாநகர காவலன் என்ற பட்டங்களோடு பாராளுமன்றத்திற்குள் நுழைந்து இன்றுவரை ஈழத்தமிழினத்திற்கென எதுவுமே செய்யாத பூச்சிய தலைவன். ஒரு அரசியல் தலைவராக, ஒரு இன தலைவராக இவருக்கு வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்த தவறிய அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவர். இவருக்கு வந்த சந்தர்ப்பங்களை போல் உலகில் வேறு எந்த தலைவர்களுக்கும் வந்தது இல்லை. இனி வேறு வழியில்லை...ஈழ தமிழருக்கு தனி நாடுதான் வேண்டும் என்ற காலத்து அறிவும்... அதன் மூலம் வெற்றியீட்டி நாடாளுமன்றம் சென்று அங்கு பெற்ற அனுபவங்களும்.....அதன் பின் ஆயுத போராட்ட கிளர்ச்சிகள் ஏற்பட்டு நன்மை தீமைகள் பெற்ற அனுபவங்களும் உரித்தான ஒருவர் தன் இனத்திற்கென எதுவுமே செய்யாமல் மரணித்தது ஈழ தமிழரின் இன்னொரு துர்ப்பாக்கியம்.
  39. உங்கள் உணர்வுகளையும் கவலையையும் நான் நன்றாக புரிந்து கொண்டு உள்ளேன் ... அதேவேளை ஒரு தமிழ் தலைவர் நீங்கள் நினைப்பது போல் அல்லது வேறு எந்தவொரு வழியிலும். இலங்கை அரசிடமிருந்து தீர்வு பெற முடியாது இலங்கை தமிழருக்கு ஒருபோதும் தீர்வு தராது எப்படிப்பட்ட தமிழ் தலைவர் ஆகட்டும். தீர்வு பெற முடியாது பிரபாகரன் 30 ஆண்டுகள் போராடினார் கிடைத்தது முள்ளிவாய்க்கால் ஏன்???ஏன்??? இலங்கை ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை வரமாட்டாது இலங்கையை குறை. கூறுங்கள் எற்க்கலாம். இலங்கை தீர்வு தரவில்லை என்று சொல்லுங்கள் ...சரியானது ஆனால் ஒரு தமிழ் தலைவர் தீர்வு பெறவில்லை என்று கூற முடியாது 🙏
  40. ஒரு மசிரும் பிடுங்காத ஆட்கள்தான் பிறரைத் துரோகி என்று தற்போது கூறுகிறார்கள். துரோகி என்று பிறரைத் தூற்ருபவர்களை முச்சந்தியில் நிற்கவைத்து பச்சை மட்டையடி போட வேண்டும்.
  41. போட்டிகளை சிறப்பாகவும், உற்சாகமாகவும் நடத்திய @கிருபன் க்கு நன்றிகளும், வாழ்த்துகளும். வெற்றி பெற்ற @பிரபா, @ஈழப்பிரியன் அண்ணை, @கந்தப்பு மற்றும் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள். போட்டிக்கு என்னை வெருட்டி இழுத்துக் கொண்டு வந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு என் நன்றிகள். சாரே......... @வீரப் பையன்26 சாரே............ நாளைக்கு என்ன செய்யிறது........ எனக்கு கையும், காலும் ஓடாதே....... நீர் ஒரு அதிசயப் பிறவி ஐயா........🙏.....
  42. 91 வயது வரை அரசியலில் இருந்தும்…. தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத தோல்வியுற்ற அரசியல்வாதியாக காலமாகிவிட்டார்.
  43. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஜெர்மன் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சீகன் பால்குவிற்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என கடந்த வாரம் சட்டப் பேரவையில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. தரங்கம்பாடி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இதை வரவேற்றுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த ஒருவருக்கு சிலையும் அரங்கமும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது ஏன்? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கிறிஸ்தவத்தை பரப்ப வந்து தமிழ் அறிஞரான பாதிரியார் மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் உள்ள சீகன் பால்கு அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் சாமுவேல் மனுவேல் பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கினார். மத போதகரான ஜெர்மனியை சேர்ந்த பார்த்லோமேயு சீகன் பால்கு 10.7.1682 அன்று ஜெர்மனியில் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தார். டென்மார்க் அரசர் 4ஆம் ஃபிரெட்ரிக் சமயப் பணி செய்ய அவரை அனுப்பி வைத்தார். 11.11.1705 அன்று தனது நண்பர் ஹென்ரிக்புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டார். 222 நாட்கள் கப்பல் பயணத்திற்குப் பின் 9.7.1706 தரங்கம்பாடி வந்தடைந்தார். "மிஷினரிகளான இவர்களை வரவேற்பதற்காக யாரும் அங்கு காத்திருக்கவில்லை. கவர்னர் இவர்களை சந்தேகப்பட்டதுதான் அதற்குக் காரணம். ஜெர்மனியில் இருந்து வரும் இவர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக அனுப்பப்பட்டார்களா அல்லது தன்னை வேவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டார்களா என்ற சந்தேகம்தான் அதற்குக் காரணம்" என்று கூறிய இயக்குநர் சாமுவேல் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களையும் விவரித்தார். "கடல் வழியாக வந்த அவர்களை கவர்னர் மாலை வரை சந்திக்கவில்லை. ஆளுநர் மாலையில் தனது அதிகாரிகளுடன் வந்து டென்மார்க் மன்னரின் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களால் தனது பிரதேசத்தில் நற்செய்தியைப் பிரசங்கிக்க முடியாது என்றும், விரும்பினால் பள்ளியை நிறுவி ஆசிரியர்களாகப் பணியாற்றலாம் என்றும் கூறினார்." ஆனால் ஆளுநர் ஹேசியஸ், அவர்களுக்கான தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் பற்றி எதுவும் கூறாமலே அந்த இடத்தை விட்டு வெளியேறினார். கோட்டை அதிகாரி ஒருவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டு வெள்ளிப்பாளையம் அழைத்துச் சென்றார். இந்நிலையில், மாமனார் வீட்டில் இரவு தங்க ஏற்பாடு செய்ததாகவும் தொடர்ந்து சில இடையூறுகளைச் சந்தித்தாலும் சீகன் பால்கு தனது பணியில் கவனமுடன் தீவிரமாகச் செயல்பட்டதாகவும் விளக்கினார் இயக்குநர் சாமுவேல் மனுவேல். சீகன் பால்கு இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றார். அவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 8 மணிநேரம் செலவழித்து, தமிழை முழுமையாகக் கற்றுக்கொண்டார். கணவரை இழந்த பெண்களுக்கு ஆதரவு "சீகன் பால்கு எப்பொழுதுமே உண்மை மற்றும் நியாயத்தின் பக்கமே இருப்பார்" என்று கூறிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் சாமுவேல் அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் விவரித்தார். "சீகன் பால்குவிற்கு கவர்னர் ஹாசியஸிடமிருந்து நிறைய பிரச்னைகள் இருந்தன. ஒரு கத்தோலிக்க, கணவரை இழந்த பெண் உள்ளூர் மோசடி நபர் ஒருவரால் ஏமாற்றப்பட்டார், அவர் கவர்னர் ஹேசியஸிடம் புகார் செய்தார். ஆனால் கவர்னர் மோசடிப் பேர்வழியான உள்ளூர் ஆசாமிக்கு ஆதரவாக இருந்தார். பாதிக்கப்பட்ட பெண்மணி சீகன் பால்குகுவிடம் புகார் செய்தார். சீகன்பால்கு வழக்கை எடுத்துக் கொண்டார். அவர் ஆளுநரிடம் சென்று அப்பெண்ணுக்காக வாதிட்டார். இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் சீகன் பால்கு சிறையிலும் அடைக்கப்பட்டார். நான்கு மாதத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்." இருந்த போதிலும் "அவர் பணியில் கவனமாகவே செயல்பட்டு வந்தார். அவர் இந்தியாவுக்கு வந்தபோது தரங்கம்பாடி கிராமப் பகுதிகள், குறிப்பாக பட்டியலின மக்கள் வாழ்ந்த காலனி பகுதிகளில் மக்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்தனர். கல்வி அவர்களுக்கு வழங்கப்படவில்லை. கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகப் பல வழிகளில் முயயன்று அதில் வெற்றியும் பெற்றார். அதேபோல் கணவனை இழந்த பெண்களும் சமூகத்தில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு கற்பித்து அவர்களைக் கல்வியாளர்களாக மாற்றி அவர்களைக் கொண்டே கிராமப் பள்ளிகளையும் நடத்தினார்." கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக தரங்கம்பாடிக்கு வந்திருந்தபோதிலும், தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் கொண்டார். அவர் தமிழ் மொழிப் புத்தகங்களை மொழி பெயர்த்து பிற மொழிகளிலும் அச்சிட்டு வழங்கியதாகக் கூறுகிறார் இயக்குநர் சாமுவேல். சீகன் பால்கு வாழ்ந்த வீடுதான் அருங்காட்சியகம் படக்குறிப்பு,பேராசிரியர் மரிய லாஸர் மிக எளிமையாக வாழ்ந்த அவரின் வீடு தற்போது அருங்காட்சியமாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் பயன்படுத்திய மேசை, புத்தகங்களை அச்சிடப் பயன்படுத்திய அச்சு இயந்திரம், (அச்சு இயந்திரம் தற்பொழுது வரை பயன்பாட்டில்தான் உள்ளது, விளக்கமும் மக்களுக்காக அவ்வப்போது காண்பிக்கப்படுகிறது), அவர் எழுதிய கடிதங்கள் ஆகியவை இன்னமும் பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடியில் வாழ்ந்த ஜெர்மனிய கிறிஸ்தவர்களுக்கு ஜெர்மன் மொழியில் வழிபாடு நிகழ்த்துவது, சீகன் பால்குவின் தொடக்க காலப்பணியாக இருந்ததாகச் சொல்கிறார் பொறையாரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் மரிய லாசர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சீகன் பால்கு தொடர்ந்து புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கும் லட்சியத்தைக் கருத்தில் கொண்டு அப்பணியில் ஈடுபட்டார். அப்போது நிறைய இடர்பாடுகளையும் அவர் சந்தித்துள்ளார். பெரும்பாலும் அடித்தட்டு மக்களே கிறிஸ்தவ மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியிலேயே இவர் அதிக நேரம் செலவிட்டார்." தரங்கம்பாடி வந்த சீகன் பால்கு தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்டு விரைவாக எழுதவும், படிக்கவும் கற்று கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழில் அச்சு எழுத்துகளை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழைக் கொண்டுவரப் பெரும் முயற்சி மேற்கொண்டதாக விவரிக்கிறார் ஓய்வுபெற்ற பேராசிரியர் மரிய லாசர். தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் தரங்கம்பாடியில் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் மொழிக்கான அச்சுக் கூடத்தை 24.10.1712 அன்று அமைத்தார். அதன் மூலம் புதிய ஏற்பாடு, தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி இந்து சமய கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை ஓலைச் சுவடியிலிருந்து காகிதத்தில் அச்சேற்றி வெளியிட்டார். சீகன் பால்கு, ‘புதிய ஏற்பாட்டைத் தமிழில் அச்சடிக்கும்போது பைபிளில் சொல்லப்பட்ட பல வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகளைத் தேர்வு செய்வது அவருக்குக் கடும் சவாலாக இருந்ததாகக் கூறுகிறார் பேராசிரியர் மரியா லாசர். அவர், அச்சு எந்திரம் கொண்டு வருவதற்கும் எழுத்துகளைக் கோர்க்கவும் பலவித இன்னல்களைச் சந்தித்தார். முடிவில் கி.பி.1713ஆம் ஆண்டு பைபிள் புதிய ஏற்பாட்டுக்கான அச்சு கோர்க்கும் பணி தொடங்கியது. சுமார் 2 ஆண்டுக்காலம் இடைவிடாத முயற்சிக்குப் பிறகு, கி.பி.1715ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பணிகள் முடிவடைந்தன. புதிய ஏற்பாடு முழுவதும் தயாராகியிருந்தது. தமிழில் புத்தக வடிவில் முதன்முதலில் வெளிவந்த நூல் ‘புதிய ஏற்பாடு’தான். அதைத் தொடர்ந்து பல புத்தகங்களையும் அச்சிட்டு வழங்கினார். காகித தொழிற்சாலை தற்போது போன்று அக்காலத்தில் காகிதம் தொடர்ந்து கிடைப்பதில்லை, எனவே அந்தக் காகிதத்தைத் தயாரிப்பதற்காக கி.பி.1715ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முதலாக பொறையார் அருகே கடுதாசிப்பட்டறை என்ற கிராமத்தில் ஒரு காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சாலையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களில் தமிழ் எழுத்துகளை உருவாக்கும் எழுத்து தயாரிக்கும் கூடம் ஒன்றையும் ஏற்படுத்தினார். இதன்மூலம் அவர் தடையின்றி புத்தகங்களை அச்சிட்டார். அதோடு, மரியாடாரத்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு இருவருமாகச் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களை தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டா பகுதிகளில் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கிறார் பேராசிரியர் மரியா லாசர். இந்து மத நூல்களையும் அச்சிட்ட சீகன் பால்கு தரங்கம்பாடியில் ஆசியாவின் முதல் புராட்டஸ்டண்டு(சீர்திருத்த) தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தை கி.பி.1718இல் கட்டினார். அதுமட்டுமின்றி, ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையை நிறுவியதில் பெரும் பங்கு இவருக்கு உள்ளதாகவும் கூறுகிறார் பேராசிரியர் மரியா லாசர். "பெண்களுக்கான முதல் கல்வி நிலையம், கணவரை இழந்த பெண்களை ஆசிரியர்களாகக் கொண்டு பள்ளிக்கூடம், தையற்பயிற்சிப் பள்ளி, விடுதிகள் ஆகியவற்றை அமைத்து எளியவர்களின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்திருந்தாலும் மக்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு பல்வேறு வழிகளில் உதவி செய்தார்." 13 ஆண்டுகள் தரங்கம்பாடியில் வாழ்ந்த அவர் 23.3.1719இல் இயற்கை எய்தினார். "சீகன் பால்கு கட்டிய ஆலயத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். சர்வ சமய உரையாடல்களைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி மத நல்லிணக்கத்தைப் பேணிகாத்தவர். கிறிஸ்தவத்தை பரப்புகின்ற பணிக்கு வந்து அப்பணியைப் பின்னுக்குத் தள்ளி தமிழுக்காக உழைத்து தமிழ் நூல்களைக் காகிதத்தில் அச்சேற்றி பெரும் பணியைச் செய்ததோடு, தமிழர்கள், பெண்களின் உரிமைகளுக்காக அக்காலத்திலேயே போராட்டங்கள் பலவற்றைச் செய்தவர் சீகன்பால்கு," என்றார் பேராசிரியர் மரியா லாசர்.. திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் ஆகியவற்றை ஓலைச்சுவடியில் இருந்து காகிதத்தில் அச்சடித்துப் புத்தகமாக வெளியிட்டார். கிறிஸ்தவ மதம் தொடர்பான நூல்களை மட்டுமல்லாமல் இந்து மதம் தொடர்பான நூல்களையும் அவர் எழுதி, அச்சிட்டு வெளியிட்டார். 57 பார்வதி தேவி, 77 வகை பேய்கள் குறிப்பாக ஜெர்மனிய மொழியில் தென்னிந்திய தெய்வங்கள் குறித்து "தென்னிந்திய தெய்வங்களின் மரபு (ஜீனியாலஜி ஆப் சௌத் இந்தியன் டெய்டிஸ்)" என்ற நூலை அவர் எழுதியுள்ளார். இந்த நூலில் சைவ, வைணவ தெய்வங்கள் குறித்த புராண செய்திகளையும் எழுதியுள்ளார். அத்துடன் அய்யனார், எல்லம்மன், மாரியம்மன், அங்காளம்மன், பத்ரகாளி ஆகிய தெய்வங்கள் குறித்தும் எழுதியுள்ளார். பேய்களின் வகை குறித்தும் அவரது நூல் குறிப்பிடுகிறது. அதில் கலகப்பேய், காவல் பேய், பரிகாசப்பேய், நிர்மூலப் பேய் என 77 வகை பேய்கள் பற்றி அவர் எழுதியுள்ளார். அதேபோல் இந்து கடவுளான பார்வதியைக் குறிக்கும் 57 பெயர்களையும் தொகுத்து அளித்துள்ளார்," என்று விவரித்தார் மரியா லாசர். அதேபோல் "தென்னிந்தியாவில் மருத்துவர்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் குறிப்பெடுத்து அனுப்பியுள்ளார். ஜெர்மனியில் உள்ள ஹால்வே பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவுவதற்குப் பெரும்பங்காற்றினார். தரங்கம்பாடியில் சுமார் 300 நூல்கள் (பெரும்பகுதி ஓலைச்சுவடிகள்) அடங்கிய நூலகம் ஒன்றைத் தமது இறுதிக் காலத்தில் உருவாக்கினார்." விளிம்பு நிலை மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும் குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். சென்னை மற்றும் கடலூரில் பல பள்ளிக் கூடங்களை நிறுவினார். "இந்தியாவில் பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க 300 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கெனத் தனியாக முதல் பள்ளிக்கூடத்தை அமைத்து கணவரை இழந்த பெண்களை ஆசிரியர்களாக்கி சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர் சீகன் பால்கு" என்று கூறுகிறார் மரியா லாசர். தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சிதுறை மானிய கோரிக்கையில் தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சகத்தை அமைத்து பெருமை சேர்த்த சீகன் பால்குவுக்கு சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2gd84z73vo
  44. மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.